PLEASE JOIN US TODAY SUNDAY 17-1-2021

THAMIZ MUZAKKAM / TAMIL THUNDER

17TH  JANUARY 2021 SUNDAY

Vaalka thamil mozi – signature tune

Prayer+ ANNOUCEMENT –

WORLD HINDU NEWS ROUNDUP in English and Tamil –

BY MRS SUJATHA RENGANATHAN &

MRS VAISHNAVI ANAND

Mrs Brhannayaki Sathyanarayanan  – Talk on Temples –

TIRUPPUGAZ  by Mrs Jayanthi Sundar and Group–

B Kannan from Delhi on Tiruvalluvar Temple, Mylapore –

INTRODUCED BY BENGALOR NAGARAJAN

TIRUPPAVAI- Netru swargam- BY LAKSHMI RAMASWAMY-

Pongal song by MRS DAYA NARAYANAN OF LONDON-

Vaazka Thamil Mozi  SONG

Appr. 60 mts

XXXXXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS– PUBLICITY 17121

குழந்தை பெறுவதைவிட 3 முறை போர்க்களம் செல்வேன் – கிரேக்க பெண் புலம்பல் (Post.9151)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9151

Date uploaded in London – –16 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கிரேக்க மொழி நாடகங்களில் பல சுவையான விஷயங்கள் வருகின்றன யூரிபிடிஸ் – கி.மு.431- என்பவர் சர்ச்சைக்குரிய பல செய்திகளை சொல்லுவார். அவர் எழுதிய ஒரு நாடகத்தின் பெயர் ‘மெடியா’ .

கொல்சிஸ் என்னும் இடத்திலிருந்து வந்த மெடியா (MEDEA) என்னும் சூன்யக்காரி கிரேக்க வீரன் ஜேசன் (JASON) மீது காதல் கொள்கிறாள். . பறக்கும் செம்மறி ஆட்டின் தங்கத் தோலை (GOLDEN FLEECE) கொண்டுவர அவனுக்கு உதவுகிறாள். கொரிந்த் (CORINTH) நகருக்கு வந்து குடும்ப வாழ்வு நடத்தி இரண்டு குழந்தைகளையும் பெறுகிறார்கள். இந்த கால கட்டத்தில் இருவரிடையே பிணக்கு ஏற்பட்டு விவாக ரத்தில் முடிகிறது.காரணம்

ஜேசன் கொரிந்தியன் மன்னன் க்ரினோனின்(CRENON)  மகள் கிளாஸைக் (GLAUCE) காதலித்து திருமணம் புரிகிறான்.

மெடியா விடுவாளா?

ஒரு திருமண ஆடை (WEDDING DRESS)  தைத்து அதை கிளாசுக்கு அனுப்புகிறாள். அது மணப்பெண்ணையும், காப்பாற்ற வந்த தந்தையையும் எரித்துக் கொன்று விடுகிறது ; ஜேசன் மூலம் இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு பறக்கும் ரதத்தில் (FLYING CHARIOT) சிட்டாகப் பறந்து போய்விடுகிறாள்.

கிரேக்க (GREECE)  நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் நாடகப் போட்டியில் ‘மெடியா’ நாடகத்துக்கு மூன்றாம் பரிசுதான் கிடைத்தது. நாடகத்துக்குப் பொருத்தமில்லாத, ஆனால் அக்காலத்தில் நிலவி வந்த சர்ச்சசைக்குரிய விஷயங்களை, அவர் கதாபாத்திரத்தின் வாயிலாக வெளிப்படுத்தினார் . இதோ மெடியாவின் திருமணம் பற்றிய சூளுரை

“உயிர்வாழும்,சிந்திக்கும் படைத்த பிராணிகளில் பெண்களாகிய நாங்கள்தான் பரிதாபத்துக்குரியவர்கள். முதலாவது, நாங்கள் பெருந்தொகை கொடுத்து கணவனை வாங்க வேண்டியிருக்கிறது”.

(அந்தக் கால இந்தியா போல பெண்கள்தான் வரதட்சிணை கொடுக்க வேண்டும். சங்கத் தமிழ் நூல்களிலும் சம்ஸ்க்ருத நாடகங்களிலும் இதைக் காண்கிறோம்.)

“எங்கள் உடல் மூலம்தான், கொடுங்கோல் மன்னன் போல, ஆண்களை ஆட்டிப் படைக்கமுடியும். மேலும் கிடைக்கும் ஆள்  நல்லவனா, கெட்டவனா என்றும் கண்டுபிடிக்க முடியாது.

விவாக ரத்தானது ஒரு பெண்ணுக்கு அவப் பெயரை ஈட்டித்தருகிறது. இதற்கிடையில் கணவனைப் புறக்கணிக்கவும் முடியாது. முன்பின் தெரியாத, அறியாத பழக்க வழக்கங்களுக்கு இடையே சிக்கும்போது, அவள் தீர்க்கதரிசியாக இருந்தால்தான் வரப்போகும் கணவன் எப்படிப்பட்டவன் என்று அறிய முடியும் . வீட்டில் கிடைத்த அனுபவம் இங்கே பயன்தராது. . இதில் வெற்றி கிடைத்தால் , மற்றவர் பொறாமைப்படும் அளவுக்கு எங்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும் .

வெற்றி பெறவில்லையானால், சாவதே மேல். மண வாழ்க்கையில் திருப்தி கிடைக்காத கணவமார்கள், வெளியே பொழுதைக் கழிப்பதன் மூலம் தங்கள் ஏமாற்ற உணர்வைக் காட்டுகிறார்கள். ஆனால் நாங்களோ ஒருத்திக்கு ஒருவனே என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதால் வேறு ஒன்றும் செய்யமுடியாது.

நாங்கள் வீட்டுக்குள் இருப்பதால், ஈட்டி வீசிப் போரிடும் ஆண்களைப் போல அவதிப்படுவதில்லை என்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஆண்கள் செப்புவர். அவர்கள் எவ்வளவு முட்டாள்கள் ! என்னைப் பொருத்த மட்டில், நான் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதைவிட மூன்று முறை போர்க்களம் சென்று பகைவரைச் சந்திப்பேன்”.

இது 2400 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டு நாடகத்தில் ஒரு பெண்மணி பேசிய பேச்சு !

நல்ல வேளையாக 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நம் இந்தியாவில் உருவான நாடகங்களில் இப்படிப்பட்ட அவல  நிலை இல்லை. எல்லாம் சுப விஷயங்களே .

—subham —

tags — குழந்தை , போர்க்களம் , செல்வேன்,  கிரேக்க பெண்,  புலம்பல்

WOMAN IS “A” PROBLEM; PLEASE , DON’T MAKE IT ‘A’ AND ‘B’!(Post No.9150)

Compiled   BY KATTUKKUTY

Post No. 9150

Date uploaded in London – – 16 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

SOME OF THE JOKES COLLECTED BY CHENNAI KATTUKUTY BEFORE 50 YEARS ARE POSTED HERE.

TAGS- COMEDY CARTOONS

நல்ல நல்ல ‘காமெடி’யை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி!(Post.9149)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9149

Date uploaded in London – – 16 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேர்த்து வைத்த , தமாஷ் கள் – ‘ஜோக்’ jokes குகளை எடுத்தபோது தூள்  தூளாக உதிர்ந்தது.  குப்பை டப்பாவுக்குள் போடுவதற்கு முன்னர் , கொஞ்சம் ‘பிளாக்’கிலும்  போட்டு விடுகிறேன்.

“அட , நீங்க ஒன்னு, குப்பைக் கூடையும் , ‘பிளாக்’குகளும் ஒண்ணுதான் சார்”– என்று சொல்லி விடாதீர்கள்.

நகைச் சுவைத் துணுக்குகளை பார்த்து ரசித்த பின்னர் உங்கள் எண்ணம் — தவறான எண்ணம்- பறந்தோடிப் போகும் .

நல்ல ‘காமெடி

நல்ல ஒரு ஆன்மீக ஆங்கில இதழ் இனி வராதா?(Post.9148)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9148

Date uploaded in London – –16 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நல்ல ஒரு ஆன்மீக ஆங்கில இதழ் இனி வராதா?

ச.நாகராஜன்

இன்று (12-1-2021) மணி ஆர்டர் மூலமாக ரூ 140/ ரூ வந்தது. பெற்றேன் – வருத்தத்துடன்!

நான் ஆங்கில மாத ஆன்மீக இதழான கல்யாண கல்பதருவுக்கு (Kalyana-Kalpataru) வருடாந்திர சந்தாவாக அனுப்பி இருந்த தொகை திரும்பி வந்தது.ஏன்?

அந்த அருமையான பத்திரிகை இனி வராது.

அதன் செப்டம்பர் 2020 இதழில் கீழ்க்கண்ட அறிவிப்பு கடைசிப் பக்கத்தில் வெளியாகி இருந்தது.

For Kind Information to Respected Readers

With respect we are informing that ‘Kalyana-Kalpataru’ Annual Visesanka ‘Upasana Number’ for October 2020 is not going to be printed due to unavoidable circumstances and this ‘Anka’ will be available on-line free of charge on our website www.gitapress.org.

We will return amount receive from our respected customers agains Annual subscription and we request all our customers to note:

Plesae ‘DO NOT SEND SUBSCRIPTION’ towards ‘Kalyana-Kalpataru’/

We are pleased to inform that we are planning for ‘KALYAN’ monthly magazine in English.

We shall inform about new publication in future.

(The Management)

Date of Publication 1.9.2020

ஆக அருமையான ஒரு ஆன்மீக இதழ் நின்று விட்டது; ஆனால் ஆறுதலூட்டும் செய்தி மிக்க தரம் வாய்ந்த ஹிந்தி இதழான கல்யாண் இனி ஆங்கிலத்தில் வரப் போகிறது.

வரவேற்கிறோம் – ஆங்கில கல்யாணை!

65 வருடங்கள் பயணத்தைக் கடந்து வந்த எனது அருமை இதழான கல்யாண-கல்பதரு இதழை இனி பார்க்க முடியாது. இதயம் கனக்கிறது. என்றாலும் கல்யாண் என்ற மறு உருவில் வருவது இனிக்கிறது!

தமிழ் இதழ்கள் பல பக்கங்களில் சுருங்கி விட்டன – கொரானாவால்.

பாக்யா மாதம் இரு முறை இதழ் ஏப்ரல் 2020  முதல் வரவில்லை.

இன்னொரு வருந்தத் தக்க செய்தியையும் பார்க்க நேர்ந்தது. இனி கல்கி வார இதழை அச்சுப் பதிப்பாகப் பார்க்க முடியாது என்று. ஆனால் கல்கி இதழை டிஜிடலாகப் பார்க்கலாம்; படிக்கலாம்.

பழைய காலத்தில் சிவகாமியின் சபதம் (திரு கல்கி அவர்கள் எழுதிய தொடர் சரித்திர நாவல்) தொடர் வரும் போது கல்கியை வீட்டில் உள்ளவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முதலில் படிக்க விரும்புவர்.

தில்லானா மோகனாம்பாள் (திரு கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதிய தொடர் நாவல்) ஆனந்த விகடன் வார இதழில் வந்த போது அதைப் படிக்க வீட்டில் கியூவரிசையில் நின்றதையும் நான் பார்த்திருக்கிறேன்.

இன்றோ யுகம் மாறி விட்டது; கணினிகள்; டிஜிடல் பதிப்புகள்; கிண்டில்.. இத்யாதி!

யூ டியூபில் YOU TUBE யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பதிவிடலாம் என்கின்ற காலம் இது!

உண்மை எது; தரமானது எது என்பதை நிர்ணயிக்கக் கஷ்டப்படும் காலம் இது!

கலி காலம் என்று சொல்லலாமா? கணினி காலம் என்று சொல்லலாமா?

TAGS- கல்யாண-கல்பதரு

***

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 25 (Post 9147)

Elephant Vahana

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9147

Date uploaded in London – –15 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -25

Sutra 3-2-62

Baj – take part பஜ்

Baj becomes Bhag in towns பாக் ; கரோல் பாக் , லால் பாக்

Baj becomes Part Page in English

Baj becomes Paku /divide in Tamil

Pakuthi, pakkam/page are cognates

பகு , பகிர் , பகுதி, பக்கம்

Xxx

3-2-64

Vaah – lifting, carrying

Vaah becomes Vehicle ,Vaahanam 

Vahanam is used in all south Indian Hindu temples even today.

Vahanam used for vandi in Tamil

ALSO WAGON

வாஹ் – சுமந்து செல்

வாஹனம் /கோவில்களில்; வண்டி வாகனங்கள் செல்லக்கூடாது

Xxx

3-2-66

Havyavahana is fire god agni  in vedas

Havis is cooked rice

Sangam tamils used it as Avi

ஹவ்ய வாஹனன் – அக்கினி தேவன் = ஹவிஸ் சுமந்து செல்பவன்

ஹவிஸ் = சாதம் = அவி /தமிழ் இலக்கியத்தில்

Xxx

3-2-67

This Sutra is interesting because it sounds like the first line of Indian

National Anthem Jana Gana Mana…………….

ஜன கண மன போன்ற சூத்திரம்

The Sutra is Jana sana gana krama gama……………….

Jana is be born which gives several English words—general, generate,genealogy etc

Janani, Janiththal, janana , jataka are used in modern Tamil

ஜன, ஜன ங்கள் , ஜனனி, ஜெனரேட்டர் , ஜாதக ,ஜனன- மரண

Xxx

3-2-68

Anna is food in Indian languages

Anna is used Manna in the bible

அன்ன = உணவு; அன்ன  தானம்

பைபிளில் மன்னா ; வானத்தில் இருந்து வந்த அன்னம்

Xxx

3-2-71

Sweta – S/ white

Swetavahaah – indra in rig veda

ஸ்வேதா = வெள்ளை

ஸ்வேதாம்பரர் – வெள்ளாடை உடுத்தும் சமணர்

Xxx

3-2-69

Kravyada- meat eater, kravyad – meat eating animals

It is gravy – meat juice, fat juice in English

க்ரவ்யத – சமைத்த மாமிசம் உண்பவன்

க்ரவ்யத் – பசசை மாமிசம் உண்ணும் விலங்கு

Xxx

3-2-74

Keelaalabaah- drinking Amrit

Keelaala is used as geer or keer in

Baadaamgeer etc

கீலால – அமிர்தம்

ல= ர; கீல = கீர்

Xxxx

3-2-79

Ushtra/CAMEL/ LIP – ottakam, uthadu  in Tamil

உஷ்ட்ர = உதடு; உதடு தடித்த மிருகம் = ஒட்டகம்

Xxx

3-2-80

Vrata – used in all religious rituals throughout India.

Vrata – following certain restrictions for a period to fulfil a vow

விரதம் – இன்று வரை எல்லா இந்திய மொழிகளிலும் பயன்படும் சொல்

Xxx

POLY/GREEK= PALA/TAMIL- BAHULA/SANSKRITLDEST  REFERENCE)

3-2-81

Bahula – pala in Tamil;

Polus, Poloi in Greek

 Poly is the prefix for many words – polytechnic, polygon,

பல /தமிழ் , பாலி /கிரேக்க

Xxxx

3-2-82

Manah – mind, think

Because of thinking power man is called man, manushya, manitha

Mind is used in all Indian languages from ancient period

Sangam Tamil literature, Tirukkural have innumerable references

Man is the only animal to think and decide what is good and what is bad

மனம் – தமிழ் உள்பட எல்லா மொழிகளிலும் உளது ; மேன் , மனிதன், மனுஷ்யன் என்பதே சிந்தித்து நல்லது, கெட்டதைப் பகுத்தறியும் திறத்தால் உண்டான சொல் தான்.

சங்க காலம் முதல் தமிழர் பயன்படுத்தும் சம்ஸ்கிருதத் சொல்; மைண்ட் /ஆங்கிலம்

xxx

3-2-86, 3-2-87

Maan and Vaan are used in sangam tamil literature

Eg. Athiyamaan; actually it is the tamil form of Sathyavaan.

Tolkappiyan bans sa as initial letter in words.

Vaan and maan mean one who possess, one who upholds

Asoka’s inscription says sathyaputrah

மான், வான் என்ற ஒட்டு தமிழிலும் உண்டு. அதியமான் என்பதே சத்தியவான் என்பதன் தமிழ் வடிவம்தான்

Xxx

3-2-89

Panini uses the words Paapa, Mantra, Punya is this  Sutra

All religious literature in all Indian languages retained these words until today and use them in today conversation Papa, Punya, Mantra etc.

For thousands of years Hindu religion has the same foundation.

பாப , புண்ய, மந்திர என்ற சொற்களை இன்றும் நாம் பேச்சிலும் எழுத்திலும் உபயோகப்படுத்துகிறோம். இந்தச் சொற்களை பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் சூத்திரத்தில் பயன்படுத்துகிறார்.

இந்து மதம் சநாதன மதம்; ஆ தி அந்தமற்றது

Xxx

3-2-90

Suu – juice ; squeeze to extract juice

ஸு – சூஸ் = சாறு

ஸ்க்விஸ் = பிழி

Soma means juice

சோம = ரசம்

Ja becomes sa in tamil

சூஸ் = ஜூஸ்

தமிழிலும் ஜ=ச மாற்றம் உண்டு.

ராஜேந்திரன்- ராசேந் திரன்

Rajendran = rasendran

Tamils invented Grantha lipi later

தமிழில் ஜ , ஷ முதலிய எழுத்து வரி வடிவங்கள் பிற்காலத்தில் வந்தவை .

Xxx

3-2-91

Agni – fire= vanni in tamil

Ignite, ignition key, igneous rocks

அக்கினி = தீ = வன்னி

Xxx

3-2-92

Kanka – kokku

கங்க = கொக்கு

Crane – kank

Xxxx

3-2- 93

Vikree – sell = virkiraan in tamil

Vil= vir

Soma vikrayee – seller of soma plant

Rasa vikrayee – seller of toddy

விக்ரியதே = விற்கிறான்

–subham—

tags- – Panini Tamil words-25

இது காமெடி டைம்! வாங்க , சிரிக்கலாம்! (Post No.9146)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9146

Date uploaded in London – – 15 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நான் 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேர்த்துவைத்த, நோட்டுகளில் ஒட்டிவைத்த  ஜோக்குகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு பழுப்பேறி வருகின்றன.  அவை முழுதும்  அழிவதற்கு முன்பாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசை

“யான்பெற்ற இன்பம்/ சிரிப்பு பெறுக இவ்வையகம் “– ஜோக்மூலர்  முனிவர், ஜோக் மந்திர புஸ்தக ஆசிரியர்

DAY DREAMING
EFFECT OF TAT RUPA PAINTING
COME ON BLUE BOY, COME ON BLUE BOY, 
WHALE GOLFING 

TAGS – காமெடி டைம்,  சிரிக்கலாம்

நடந்தவை தான் நம்புங்கள்! – 3(Post No.9145)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9145

Date uploaded in London – –15 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள்! – 1 வெளியான தேதி 2-12-2020 கட்டுரை எண் 8989

நடந்தவை தான் நம்புங்கள்! – 2 வெளியான தேதி 3-12-2020 கட்டுரை எண் 8992

நடந்தவை தான் நம்புங்கள்! – 3

ச.நாகராஜன்

இடி அமீன் உகாண்டாவின் ஜனாதிபதியாக இருந்த சமயம் அவரது அலுவலகம் உலக வங்கியை அணுகியது. இடி அமீனுக்காக பணி செய்ய ஒரு தக்க அதிகாரியைத் தருமாறு அது கேட்டது. அந்த அதிகாரியின் பணிப் பொறுப்பு என்ன என்பதையும் அது விளக்கவில்லை.

உலக வங்கியும் அப்படிப் பணியாற்ற தக்க ஒரு ஆங்கிலேயரை இனம் கண்டது.

“நீங்கள் 24 எழுத்துக்களில் தந்தி மூலம் பதில் அளிக்க முன் கட்டணம் செலுத்தப்பட்டிருக்கிறது. உடனே பதில் அளிக்கவும்” என்று ஒரு தந்தியை அவருக்கு அனுப்பியது.

24 எழுத்துக்கள் அடங்கிய அவரது பதிலும் ஆங்கிலத்தில் உடனேயே வந்தது. பதில் இது தான் ! :-

HA HA HA HA HA HA HA HA HA HA HA HA

2

மிகப் பெரிய பாடகரும் இசை அமைப்பாளருமான ஸ்டீவ் வொண்டர் (Stevie Wonder) கண் பார்வையற்றவர். ஆனால் அவர் ஒரு போதும் தனது கண்பார்வையற்ற தன்மையை ஒரு குறையாக நினைத்ததே கிடையாது.

அவரது ஆசிரியர்களுள் ஒருவர் அவரிடம், “உனக்கு மூன்று குறைகள் இருக்கின்றன, நீ ஒரு ஏழை, கண்பார்வை இல்லாதவன், ஒரு கறுப்பன். கல்வி அறிவில்லாத ஒரு குருடன் பானையைத் தான் செய்ய முடியும்”  என்று அவரிடம் ஒரு முறை கூறினார். ஆனால் அவர் இதைப் பொருட்படுத்தவே இல்லை.

இரண்டே வருடங்களில் அவரது ரிகார்ட் கம்பெனி ‘12 வயது கண்பார்வையற்ற மேதை’ என்று அவரைப் பற்றி பெரிய விளம்பரங்களைச் செய்தது.

“குருடாக இருப்பதால் நீங்கள் புத்தகத்தை அதன் மேலட்டையைப் பார்த்து எடை போடுவதில்லை” என்று கூறிய அவர், “தேவையற்ற விஷயங்களைப் பார்த்தாலும் அவற்றை ஒதுக்கி விட்டு மிக முக்கியமானவற்றையே எடுத்துக் கொள்வீர்கள். கண் பார்வை இருந்தும் பார்க்காமல் இருக்கிறார்களே அவர்களுக்காகத் தான் நான் வருத்தப்படுகிறேன்” என்றார்.

3

பிரபல ஓவியரான பிகாஸோ, போலியாகத் தனது ஓவியங்களைப் போலவே போட்டு விற்பவர்களைப் பற்றி அலட்டிக் கொண்டதே இல்லை. பெரும்பாலும் அவர் சட்டப்படியான நடவடிக்கையை அவர்கள் மீது எடுப்பதே இல்லை. மிகக் கடுமையான அவரது நடவடிக்கை அப்படிப்பட்ட போலி சித்திரங்களில் தன்னைப் போலவே கையெழுத்துப் போட்டிருப்பதை அடித்து அழிப்பது தான்!

“இதை ஏன் நான் பெரிது படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.

“ஒன்று அப்படிப் போலி ஓவியங்களை வரைவோர் மிகவும் ஏழைகளாக இருக்க வேண்டும்; அவர்களுக்காக நான் வருத்தம் தான் பட வேண்டும்; இல்லையேல் அவர்கள் எனது பழைய நண்பர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்காக நான் இன்னும் அதிகம் வருத்தப்பட வேண்டும். அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காத அளவு நான் ஒரு உண்மையான ஸ்பானிஷ்காரன். அதை விட அது உண்மையா இல்லையா என்று கூறும் நிபுணர்களும் தங்கள் வயிறை நிரப்ப வேண்டும் இல்லையா?!” என்றார் அவர்!

ஆகவே பிகாஸோ ஓவியங்கள் போல போலி பிகாஸோ ஓவியங்களை வரைந்து ஏராளமானோர் பிழைத்தனர்; அவர்களுக்குத் தான் எந்த வித ஆபத்தும் வரப் போவதில்லையே!

*

குறிப்பு : – ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ்களில் படித்தவை இவை!

tags- இடி அமீன், பிகாஸோ, ஸ்டீவ் வொண்டர் (Stevie Wonder)

INDEX 44 FOR LONDON SWAMINATHAN’S JULY 2016 ENGLISH & TAMIL ARTICLES (Post No.9144)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9144

Date uploaded in London – –14 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9100 PLUS POSTS.

INDEX 44- JULY 2016

List of Tamil Posts

ஆகஸ்ட் 2016 காலண்டர் (Post 3023);31/7

பானை உடைத்தவன் பாக்கியசாலி! (Post No.3018);28/7

உருக்கமான உண்மைக்கதை; யாதும் ஊரே யாவரும் கேளிர்! (POST No.3016);28/7

காமத்தின் ஆற்றல் பற்றி கம்ப ராமாயணம் (Post No.3014);28/7

இதயச் சிறையில் காதலி: கம்ப ராமாயண இன்பம் (Post No. 3010);27/7

இலக்கியமின்றி இலக்கணமின்றே! இந்திய அதிசயம்!! (Post No.3007);26/7

அருந்தவத்து அரசி’ சபரி – ராமாயண இன்பம் (Post No.3004);25/7

ஏரிக்கடியில் அரண்மனை: காளிதாசன், வால்மீகி தரும் அதிசய தகவல் (Post No. 3000);24/7

மனைவிக்கு ‘ஜாயா’ என்று பெயர் ஏன் ? (Post No.2997);23/7

பிராமணப் பிறவி ஏன் மேலானது? (Post No.2994);22/7

பணம் பற்றி பவிஷ்ய புராணம் (Post No.2991);21/7

உலகை வலம் வருவதற்கு எளிய வழி! (Post No.2989);20/7

பெண்ணுக்கு புதிய இலக்கணம்: பெண் – உரிச் சொல்;

ஆண் -பெயர்ச் சொல் (Post No.2986);19/7

கணக்கு வரவில்லை! கவிதை வந்தது! நான் கவிஞனாக மாறிய கதை (Post No.2983);18/7

யமன் பயன்படுத்தும் அளவுகோல்! தமிழன் கண்டுபிடிப்பு!! (Post No 2979);17/7

பழங்குடி மக்களின் மரபுச் சின்னங்கள் (Post No.2974);15/7

கடல் ஓய்ந்து சமுத்திர ஸ்நானமா? (Post No.2969);14/7

மனைவி சொத்தில் வாழலாமா? (Post No. 2965);12/7

குருவைப் போற்றினால், தூற்றினால் என்ன கிடைக்கும்? (Post No.2964);12/7

புஸ்தகம், வனிதா, வித்தம் -கதம்!கதம்!! (Post No.2961)

மர்மம் நிறைந்த இந்தியப் பழங்குடி மக்கள் – பகுதி 1 (Post No.2958);10/7

தமிழா! மரம் நடு! குளம் தொடு!! (Post No.2955);9/7

முள்ளை முள்ளால் எடு; வைரத்தை வைரத்தால் அறு!!(2954);9/7

யாழ்ப்பாண ஐயர் பழமொழிகள்! (Post No. 2953);8/7

கோபக்காரர்கள் நான்கு வகை! (Post No.2951);;8/7

கர்ப்பிணிப் பெண்களைப் பார்க்கப் போகும்போது……….. (Post No. 2949)7/7

பிராமணர்களில் குருடன் யார்? (Post No.2947);6/7

பெண்கள், ரத்தினம், கல்வி: எங்கிந்தாலும் பெறுக! (Post No.2945);5/7

அருணகிரிநாதர் சொன்ன பெண் பூதம் பற்றிய கதை (Post No 2944);5/7

மறைந்திருந்தே பார்க்கும் மருமம் என்ன? ஒரு யாழ்ப்பாணக் கதை (Post No 2943);4/7

மாப்பிள்ளை உள்பட 5 பேருக்கு பணத்தின் அருமை தெரியாது ! (Post No.2942);4/7

நாஸ்தீகருக்கு மனுவும் வள்ளுவரும் தரும் சவுக்கடி! (Post No.2940);3/7

எச்சரிக்கை! ஒன்பது பேர் உங்களை கண்காணிக்கிறார்கள்! (Post No 2938);3/7

கலியுகத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!! (Post No 2936);2/7

கருணையுள்ள வேலைக்காரி! (Post No.2935);1/7

என்னதான் உனக்குத் தெரியும்? சொல்லித் தொலை!!(Post No.2934);1 ஜூலை 2016

காதல் பைத்தியமும் பக்திப் பைத்தியமும் (Post No. 2933 );1 ஜூலை 2016

ஆப்ரஹாம் லிங்கன் ஏமாந்த குதிரை வியாபாரம் (Post No.2932); 1 ஜூலை 2016

S NAGARAJAN ARTICLES INDEXED ALREADY –3022, 3020,3017,3013,3009,3006,3003, 3001,2996, 2987,2975,2981,2972,

2993,2990,2984,2963,2967,2960,2957.

Xxxx

ENGLISH ARTICLES

Efficiency Anecdotes (Post No. 3024);31/7

31 Quotations on Worldly Wisdom from Sanskrit Literature (Post No.3921);30/7

Salaries Anecdotes (Post No.3019);29/7

Partnership and Employment Anecdotes (Post No.3015);28/7

Hare Krishna Rath Yatra, 17th July 2016: Best Pictures of Chariot Festival (Post No.3012);27/7

Bosses and Executives Anecdotes (Post No.3011);27/7

Indian Grammar Wonder! (Post No.3008);26/7

Tribes in the Rig Veda; Mystery of Hill Tribes of India – Part 9 (Post No.3005);25/7

Mystery of the Indian Hill Tribes – Part 8 (Post No.3002);25/7

BRAHMINS ZINDABAD! (Post No.2999);23/7

POMPOUSNESS (I am a V.I.P. attitude) ANECDOTE

S! (Post No.2998);23/7

Politeness Anecdotes (Post No.2995);22/7

Pessimism Anecdote (Post No.2992);2/7

Hindu and Muslim Wedding (Post No.2988);20/7

More PREJUDICE Anecdotes (Post No.2985);19/7

Woman is an Adjective; Man is a Noun! (Post No.2982);18/7

Algebra led to English Poetry (Post No.2980);19/7

Nature in Indian Villages (Post No.2978);17/7

Hindu Fakir: Muslim Article (Post No. 2977);16/7

Ugly English Word ‘Lie’! Liar Anecdotes (Post No.2976);16/7

No Full Stop! Speaking, Speaking, Speaking ……………(Post No.2973);15/7

Sheridan, Voltaire, Wordsworth: New Anecdotes about Longwindedness (Post No.2971);14/7

Hindu Baby Names and Astrology! (Post No.2968);13/7

Don’t Live on Wife’s Money or Woman’s Income! (Post No. 2966);12/7

How Whiteman fooled the Hindus!! Mystery of the Indian Hill Tribes – Part 7;11/7

Don’t lend Books, Money and Woman! (Post No.2959);10/7

Are Dravidians Habitual Thieves? Mystery of Hill Tribes- Part- 6 (Post No.2956);9/7

Four Types of Angry People! (Post No.2952);8/7

Don’t go to the Temples empty handed! (Post No. 2950);7/7

Mystery of Hill Tribes of India – Part 5 (Post No.2948);6/7

Manu Smrti on Low Caste Women (Post No.2946)5/7

The Story of a Demoness and a Tamil Poet (Post No 2941);4/7

WARNING: Nine People Are Watching You! (Post No. 2939);3/7

Buy One Get 3650 Free!! Hindus’ Advertisement!! (Post No.2937);2/7

SEXUAL LOVE and BHAKTI/devotion are same!;(2932) 1 July  2016

—subham—

TAGS — JULY 2016, , INDEX 44, 

பூசையா? பூனையா ? ஓதையா? ஓசையா?, பாடையா? பாஷையா? (Post N0.9143)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9143

Date uploaded in London – –14 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கம்ப ராமாயணப் பாடல்களைக் கொண்டு சில சுவையான வி’ஷ’யங்களைக் காண்போம். இந்த வரியையே கொஞ்சம் மாற்றி வி’ட’யங்களைக் காண்போம் என்றும் எழுதலாம்.

வி’ஷ’யம் எப்படி வி’ட’யமாயிற்று?

அந்த வி’ட’யத்துக்கு முன்னர் பூனையைக் கவனிப்போம்.

2000 வரு’ஷ’த்துக்கு முன்னால் – வரு’ட’த்துக்கு — முன்னால் தமிழ் நாட்டுக்குப் போய் எனக்கு ஒரு பூனை வேண்டும்; வீட்டில் எலித்தொல்லை அதிகமாகப் போய்விட்டது என்று சொன்னால்,

நக்கீரன், உங்கள் முன்னர் தோன்றி, ‘தமிழைத் தப்புத் தப்பாகப் பேசாதே பூனை இல்லை. பூசை என்று சொல்லி’ உங்களுக்கு வார்த்தைகளால் பூசை போடுவார்.

இப்போது யாரிடமாவது போய் எலித்தொல்லை அதிகமாகிவிட்டது பூசை வளர்க்கப் போகிறேன் என்றால், என்ன உளறுகிறாய்? குடித்துவிட்டு வந்து விட்டாயா? சனியனே, பூனை என்று சொல் என்பர்.

2000 ஆண்டுகளுக்குள் எவ்வளவு மாற்றம்?

இதே கதைதான் ‘வண்டி’ (cart) கதையும் !

சங்க காலத்துக்கு ‘டைம் மிஷினில்’ ‘ட்ராவல்’ (TRAVEL BY TIME MACHINE BACK IN TIME) செய்து நக்கீரனைச் சந்தித்து ‘ஐயா, இங்கு மாட்டு வண்டியாவது, குதிரை வண்டியாவது கிடைக்குமா? மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போக வேண்டும்; கால் வலிக்கிறது; ஒரு வண்டி வேண்டும்’ என்று சொன்னால் நக்கீரனாருக்கு படா கோபம் வந்து விடும்.

நீவிர் ‘பாண்டில்’ அல்லது, ‘பண்டி’ என்று தூய தமிழில் பேசும்! என்பார்.

ஏனெனில் சங்க காலத்தில் ‘வண்டி’ என்ற சொல் புழக்கத்தில் இல்லை. ‘பாண்டில்’ அல்லது ‘பண்டி’-தான் வழக்கில் இருந்தது. இப்போது ‘பண்டி’ என்றால் பன்றியா ? அது சேரியில் இருக்கும் என்பர்.

எப்படி ‘பண்டி’ 2000 ஆண்டுக்குள் ‘வண்டி’ ஆயிற்று?

இன்று நாம் வங்கம் என்று சொன்னால் வங்காளிகள்- பெங்காலிகள் – பெங்கால் என்று சொல்லுவர்

 இன்று நாம் ‘பிரணவ’ குமார முகர்ஜி  என்று சொன்னால் வங்காளிகள்- BENGALESE பெங்காலிகள் –  ‘பிரணாப்’ என்று சொல்லுவர்

‘வ – ப’ இடம் மாற்றம் அவ்வளவுதான் .

இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் இப்படி ஏதேனும் ஒரு மாற்றத்தைப் பார்த்துவிட்டால் கால்ட்டுவெல் , மாக்ஸ்முல்லர் கும்பல்கள் அதில் ஆரிய – திராவிட வாதத்தைப் புகுத்துவர். ஆனால் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட உலகின் முதல் இலக்கண நூலான பாணினியின் ‘அஷ்டாத்யாயி’ அதன் மீது எழுந்த ‘வார்த்திக’ , ‘மஹாபாஷ்ய’ உரைகளைப் படிப்போருக்கு இந்த மாற்றங்கள் அக்காலத்திலேயே இந்தியாவில் இருந்தது என்பது விளங்கும். அதுமட்டுமல்ல. நம்முடைய தமிழ் சம்ஸ்கிருதத் சொற்களை கடன் வாங்கியோர் இப்படி மாற்றிப் பேசி இருப்பதையும் அறிவர்.

பாணினி இலக்கணத்துக்கு முன்னர்  64 இலக்கண வித்தகர் இருந்தனர். அவர்கள் பெயர்ப் பட்டியல் இருக்கிறது. அதில் 3, 4 பேரைச் சொல்லி தனது கருத்து வேறுபாட்டையும் பாணினி விளக்குகிறார்.

வேதகால உச்சரிப்பு இலக்கணத்துக்கு ‘பிராதிசாக்யம்’ என்று பெயர். அதில் என்ன எழுத்து, எப்படி மாறும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழ் மாதங்கள் என்று நமது காலண்டரில் பொறிக்கப்படும் சித்திரை முதல்- பங்குனி வரையான 12 மாதங்களும் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள். இதை எப்படி தமிழ்ப் படுத்தினர் என்பதை இலக்கண வாயிலாக காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) விளக்குகிறார். அதைச் சொல்லிவிட்டு ஒரு அபூர்வமான விஷயத்தையும் சொல்கிறார். தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் ஒரு மூல மொழி இருந்திருக்க வேண்டும் என்று!! அதையே நானும் இதுவரை 100 கட்டுரைகளில் குறிப்பிட்டுவிட்டேன். உலக மொழிகள் அனைத்தும் தமிழ், சம்ஸ்கிருதத்தில் இருந்து கிளை விட்டுப் பிரிந்த மொழிகளே என்றும் எழுதி வருகிறேன்.

TION  = SION

கம்பன் பா’ஷை’ என்பதை பா’டை’ என்பான் . அதை ஒட்டியே நாமும் வி’ஷ’யம் என்பதை வி ‘ட’ய ம் , வரு’ஷ’ம் என்பதை வரு’ட’ம் என்று எழுதி வருகிறோம். கம்பன் ஓ’சை’/ ஒலி என்பதை ஓ’தை’ என்று பாடுகிறான்.

இப்படி ‘ஷ’ என்பது ‘த’ அல்லது ‘ட’ ஆக மாறுவது இன்று நூற்றுக்கணக்கான ஆங்கிலச் சொற்களில் உளது.  டியன் TION  என்று எழுதிவிட்டு SION ஷன் என்று படிக்கிறோம்.

ஆகையால் மாக்ஸ்முல்லர் கால்டுவெல் கும்பல்களோ அதைப் பின்பற்றும் திரா விடக் கும்பல்களோ ஏதேனும் ஆரிய- திராவிட என்ற இன பேதத்தைப் புகுத்தினால் உடனே பழைய பாடல்களைப் படியுங்கள். அவர்கள் குட்டு வெளிப்பட்டுவிடும். உலகம் எங்கும் இப்படி சொற்கள், எழுத்துக்கள் பிறழ்வதற்கு நமது உடலில் இயற்கையாக ஏற்படும் மாற்றங்களே காரணம். சில மொழிகளில் சில எழுத்துக்கள் இராது. சில மொழிகளில் கூடுதலாக எழுத்துக்களைச் சேர்ப்பர்.

கம்பன், பூசை (CAT), பாடை (LANGUAGE) பற்றிப் பாடிய பாடல்கள்

தேவ பாடையின் இக்கதை செய்தவர்

                     மூவர் ஆனவர் தம்முளும் முந்திய

                     நாவினான் உரையின்படி நான் தமிழ்ப்

                     பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ

தேவ பாடை என்பது தேவ பாஷை எனும் வடமொழியைக் குறிக்கும். அம்மொழியில் இந்த இராமகாதையை மூன்று பேர் பாடியுள்ளார்கள். அம்மூவர் –வால்மீகி, வசிட்டர், போதாயனர் ஆவர். ”அவர்களில் முதன்மையான நாவன்மை நிரம்பப்பெற்றவரான வால்மீகி உரைத்த முறையே நான் இக்காப்பியத்தைச் செய்த முறையாகும்.” என்று கம்பன் கூறுகிறான்.

 பூனையும் பாற்கடலும் 

வால்மீகி முனிவன் வடமொழியில் எழுதிய இராமகாதையைக் கம்பன் தமிழ் மரபிக்கேற்ப எழுதத் தொடங்குகிறான். எந்தப் புலவனும் நூல் தொடங்குமுன் அவையடக்கம் பாடுவது மரபு. கம்பனும் அவையடக்கம் பாடுகிறான்.

       ”ஓசை பெற்று உயர்பாற்கடல் உற்று ஒரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென

       ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்

       காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ”            [4]

[ஓசை= ஒலி; பூசை=பூனை; அறைதல்=சொல்லுதல்; காசு=குற்றம்]

xxxx

கருடன் – கலுழன் ஆன கதை R=L, D=L

இதைவிட சுவையான கதை ‘கருடன்’ ‘கலுழன்’ ஆன கதை. ஆழ்வார்களும் கம்பனும் கருடனை (FALCON/ EAGLE)  ‘கலுழன்’ என்பர்.

‘ட’ – ஒலி ‘ல /ழ’ – ஒலியாக மாறியது ஆரிய- திராவிட தொடர்பால் என்று மார்கசீய சிகாமணிகளும் மாக்ஸ்முல்லர் கும்பல்களும் எழுதி வைத்துள்ளன. ஆனால் இது அசோகர் கல்வெட்டிலும், பாணினீய வார்த்திக உரையிலும், சோழர் கல்வெட்டிலும் கூட உள்ளன. அதாவது 2000 ஆண்டுகளாக “சோழ – சோட- சோர” (CODA, COLA, COROMONDAL COAST) என்ற மூன்று வடிவங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால் எவராவது ஆரிய- திராவிட என்று பேசப் புகுந்தால் ‘அரை வேக்காடுகள்’ என்று சொல்லி காதை பொத்திக்கொள்ளுங்கள். முடிந்தால் பேசுவோரின் வாயையும் பொத்திவிடுங்கள்.

–SUBHAM–

tags– பூசை, பூனை, ஓதை,  பாடை , கருடன், கலுழன்,