Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புராணத் துளிகள் இரு பாகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. மிகப் பரந்து விரிந்து கிடக்கும் 18 புராணங்களில் உள்ள சில சிறந்த பகுதிகளைத் தொகுத்துத் தருவதே நமது நோக்கம். அந்த வகையில் மூன்றாம் பாகத் தொகுப்பு இப்போது ஆரம்பிக்கப்படுகிறது.
புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 1
ச.நாகராஜன்
யோக ரஹஸ்யம்
ஸ்ரீ தேவியானவள் பர்வதராஜனுக்கு யோக ரஹஸ்யங்களையும் மந்திர சித்தி பற்றியும் உபதேசித்து அருளுகிறாள்.
இது தேவி பாகவதம் ஏழாம் ஸ்கந்தம் 35ஆம் அத்தியாயத்தில் வரும் பகுதியாகும்.
தேவி : ஓ! யோகசீலனே! ஜீவாத்ம, ப்ரமாத்ம ஐக்கியமே யோகம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய ஆறு தடைகள் உள்ளன. இதைத் தடுப்பவர்களே ஜீவான்ம பரமான்ம ஐக்கிய யோகத்தை அடைவர். இந்த யோகத்திற்கு எட்டு அங்கங்கள் உண்டு. அவையாவன : இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்பவையாகும். இவையே யோகத்திற்கான சாதனங்களாகும்.
1. இயமமாவது :- அஹிம்சை, ஸத்தியம், களவில்லாமை, பிரம்மசரியம், தயை, சன்மார்க்கம், பொறுமை, தைரியம், மிதமான ஆகாரம், சௌசம் எனப் பத்தாகும்.
2. நியமமாவது :- தவம், சந்தோஷம், ஆஸ்திகம் அதாவது தெய்வம் உள்ளது என்ற நம்பிக்கை, தானம், தேவ பூஜை, சித்தாந்த சிரவணம், நாணம், புத்தி, ஜபம், ஹோமம் எனப் பத்தாகும்.
3. ஆசனமாவது : – பத்மாசனம், ஸ்வஸ்திகாசனம், பத்ராசனம், வீராசனம் என ஐந்தாகும்.
பத்மாசனம் என்பது பாதங்களைத் தொடைகளின் மேல் வைத்து இரண்டு கைகளால் பெரிய விரல்களைப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்திருத்தலாகும்.
ஸ்வஸ்திகாசனம் என்பது இரண்டு பாதங்களையும் தொடைகளுக்கும் முழங்கால்களுக்கும் இடையிலுள்ள சந்தில் வைத்து நேராக இருத்தலாகும்.
அடுத்து பத்ராசனம் என்பது புறங்கால்களைப் பிருஷ்ட பாகத்தில் மடக்கி வைத்து, விருக்ஷணத்தின் அடியின் வழியாக அப்பாதங்களை பாத சந்திகளோடும் கைகளால் பிடித்திருத்தலாகும்.
வஜ்ராசனம் என்பது தொடைகளின் மேல் பாதங்களை முறையாக வைத்து, முழங்கால்களில் கை விரல்களை மேல் முகமாக அமைத்து நிமிர்ந்திருத்தலாகும்.
வீராசனம் என்பது ஒரு பாதத்தை பூமியிலும் இன்னொரு பாதத்தைத் தொடையிலும் வைத்து சரீரத்தை நேராக வைத்திருத்தலாகும்.
4. பிராணாயாமம் : பிராணாயாமமாவது வெளியே இருக்கிற வாயுவை இடகலையினால் உள் வாங்கி பதினாறு மாத்திரையளவு சுழிமுனை நடுவில் நிறுத்திப் பின்னர் முப்பத்தியிரண்டு மாத்திரையளவு பிங்கலை நாடியின் வழியாய் விடுவதே ஆகும்.
இது சகர்ப்பம், விகர்ப்பம் என இருவகைப்படும். சகர்ப்பம் என்பது அடிக்கடி வெளியே செல்லும் வாயுவை பன்னிரண்டு மாத்திரை அல்லது பதினாறு மாத்திரை காலம் ஜபம் மற்றும் தியானிதிகளால் உள்ளே கிரஹித்து ஜபதியானிதிகளைச் செய்தல் ஆகும்.
விகர்ப்பம் என்பது ஜபம் மற்றும் தியானம் இல்லாமல் மேலே கூறியபடி பிராணாயாமம் செய்தலாகும். இப்படி முறையாக பிராணாயாமத்தைச் செய்யும் காலத்தில் சரீரம் வியர்க்குமானால் அதமம் என்றும், நடுங்குமானால் மத்திமம் என்றும் பூமியை விட்டு மேலெழும்புமானால் உத்தமம் என்றும் சொல்லப்படும்.
5. பிரத்யாஹாரம் : பிரத்யாஹாரமாவது இயம, நியமாதிகளால் கொள்ளப்பட்ட உத்தம குணங்கள் நிறைந்து, தான் எண்ணிய அபீஷ்டங்களைப் பெறுமளவும் இந்திரியங்களை விஷயங்களில் போக விடாமல் தடுத்து ஸ்வாதீனம் செய்து கொள்ளலாகும்.
7. தியானம் : தியானமாவது தன்னால் விரும்பப்பட்ட தேவதையோடு தனது அசைவற்ற மனதை லய்ப்பித்தல் ஆகும்.
8. சமாதி : சமாதியாவது ஜீவாத்மாவாகிய தான் பரமாத்மாவினின்று வேறாகாது, சமத்துவ பாவனை செய்து கொண்டு எப்போதும் இருப்பதாகும்.
இவையே அஷ்டாங்க யோக லக்ஷணம் என்று யோக விசாரம் உடையவர் கூறுவர்.
*
2. பரமபதம் அடைவது எப்படி?
ஸ்ரீமத் பாகவதத்தில் சதுர்த்த ஸ்கந்தத்தில் எட்டாம் அத்தியாயம் துருவ சரித்திரத்தை விவரிக்கிறது.
அதில் நாரத மஹரிஷி துருவனுக்கு பரமபதம் அடைவது எப்படி என்பதை விவரிக்கிறார். அதைக் கீழே காணலாம்.
நாரதர் துருவனிடம் கூறுகிறார் :-
எந்த ஒருவனுக்கு சுகமோ அல்லது துக்கமோ தெய்வாதீனமாய் விளையுமோ அவன் அங்ஙனம் நேர்ந்த சுக, துக்கங்கள் இரண்டினாலும் மனக் களிப்புற்றவனாகவே இருப்பானாகில் அவன் கடைசியில் பிரகிருதி மண்டலத்திற்கு வெளிப்பட்டதாகிய விஷ்ணுவின் ஸ்தானத்தைப் பெறுவான். தெய்வாதீனமாக சுகம் நேரும் போது மனக் களிப்புறலாம். ஆனால் துக்கம் நேரும் போது எப்படி மனக்களிப்பு அடைய முடியும் என்று கேட்பாய் ஆகில், சொல்லுகிறென் கேள்.
தெய்வாதீனமாய் வரும் சுகம் மற்றும் துக்கம் ஆகிய இரண்டிலும் மனம் கலக்கம் அடையக் கூடாது. இரண்டிலும் மனக்களிப்பு மாறாமல் இருப்பதே யுக்தம். சுகம் நேரில் புண்ணியமானது நசித்துப் போகின்றது. துக்கம் நேரில் பாவம் நசித்துப் போகிறது. எப்படி பாவம் துக்கத்தை அனுபவிப்பதாகி மென்மேலும் சரீர சம்பந்தத்தை விளைவித்து சம்சாரத்தை வளர்க்குமோ, அதே போலவே புண்ணியமும் சுகத்தை அனுபவிப்பதாகி மென்மேலும் சரீர சம்பந்தத்தை விளைவித்து சம்சாரத்தை வளர்க்கும்.
ஆனால் பாவத்தினால் விளையும் சரீரம் துக்கானுபவத்திற்கும், புண்ணியத்தினால் விளையும் சரீரம் சுகானுபவத்திற்கும் இடமாகும் என்பதால் அனுபவம் மாத்திரமே வித்தியாசமாக இருக்கும். ஆயின் சம்சாரத்தை வளர்ப்பதில் புண்ய பாவங்கள் இரண்டுமே சமமானவையே.
சம்சார வர்த்தகங்களான புண்ய, பாவம் இரண்டும் சுகம் மற்றும் துக்க அனுபவங்களால் கழிந்து விடும் என்றால் உடனே சம்சாரத்திலிருந்து ஜீவன் விடுபடுவான் ஆகையால் அந்த இரண்டைப் பற்றியும் விவேகம் உள்ளவன் சந்தோஷம் அடைய வேண்டுமேயன்றி வருத்தப்படலாகாது. சுகானுபவத்தில் சுகம் அனுபவிக்கப் பெற்றோம் என்று அதில் மனப்பற்றுடன் சந்தோஷிக்கக் கூடாது. சரீர சம்பந்தத்தை விளைவிக்கக் கூடிய புண்ணியம் நசித்துப் போகப் பெற்றோம் என்று சந்தோஷமே அடைய வேண்டும். அதே போல துக்க அனுபவத்தில் பாவம் நசிக்கப் பெற்றோம் என்று சந்தோஷிக்க வேண்டுமேயன்றி வருத்தப்படக் கூடாது.
இப்படி தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு விட்டு சுக துக்கம் ஆகிய இரண்டிலும் எவன் ஒருவன் மனக்களிப்பு மாறாது இருப்பானோ அவன் ப்ரக்ருதி மண்டலத்தைக் கடந்து பரம பதம் போய்ச் சேர்வான்.
கருமிகள் பெரும் கொடையாளிகள்! ஒரு கவிஞரின் கிண்டல்!! (Post No.2804);12/5
நிறைகுடம் தழும்பாது, குறைகூடம் கூத்தாடும் ( Post No.2801);11/5
ஆட்டிடையன் ராஜாவான கதை! (Post No.2798);10/5
அறவிலை வணிகன் ஆய் அல்லன்! (Post No.2795);9/5
அம்மா! அம்மா!! அம்மா!!! (Post No.2792);8/5
திருடர்கள் இரண்டு வகை! ஞானம் இரண்டு வகை (Post No.2790);7/5
எது அழகு? நான்கு கவிஞர்கள் கருத்து (Post No.2787);6/5
வள்ளுவர் சொன்ன ‘செக்ஸி’ உவமை! (Post No 2783);5/5
அரிது, அரிது, ‘அநாயாச மரணம்’ அரிது! (Post No 2780);4/5
கந்தபுராணத்திருந்து ‘ரஸவாதி ஏமாற்றிய கதை’ (Post No 2777);3/5
கருமிகளை கடலில் தள்ளுக! மஹாபாரதம் அறிவுரை!! (Post No.2774);2/5
உள்ளத்தனையது உயர்வு; உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்! (Post No 2772);1/5
S NAGARAJAN’S TAMIL ARTICLES ARE ALREADY INDEXED AND BLOGGED HERE; THE NUMBERS OF HIS POSTS ARE 2855, 2852,2849,2846,2843,2840, 2837, 2834,2827,2815,2812, 2809, 2806,2803, 2800, 2797, 2794,2791,2788, 2785,2782,2779,2775,
LIST OF ENGLISH ARTICLES IN MAY 2016
The Choice of Four Friends (Post No.2857), 31 MAY 2016
Chinese and Indian Parables of the Turtles and Frogs (Post No.2854);30/5
Animals in Buddha’s Dhammapada (Post No 2851);28/5
No Bees no Honey, No Work no Money (Post No.2848);28/5
Minus X Minus = Plus: Hindu Science of Poisons (Toxicolo-gy)—Post No 2845;27/5
A Good Face is a Letter of Recommendation (Post No.2841);26/5
Conquer Evil Doers by Saintliness, Anger by peacefulness (Post No. 2839);25/5
Two Types of Mind -Pure Mind and Impure Mind (Post No.2836)24/5
Men are NOT to be measured by Inches!!! (Post No.2833); 23/5
‘Madura, Most Celebrated City of the Kingdom of Regio Pan-dionis’ (Post No.2831);22/5
How Hindu Lahore became Muslim Lahore: A.H. Hallam Murray, Year 1905 (Post No 2829);21/5
Auspicious Words in Sanskrit and Tamil Books (Post No.2825);20/5
Lateness Anecdotes (Post No. 2824);18/5
Melancholy Anecdotes (Post No. 2822);18/5
Three Tamil Kings fast unto Death! (Post No 2820);17/5
A New Anecdote from Ananda Ramayana (Post No.2817);16/5
Mahabharata–about Women! (Post No.2813);15/5
Children and Fools have merry lives (Post No 2811);14/5
Bernier’s Description of Peacock Throne (Post No.2808);13/5
Quick Thinking Anecdotes! (Post No.2805);12/5
Misers are the Best Philanthropists! (Post No 2802);11/5
Secret Box of a Shepherd! Persian Story!! (Post No.2799);11/5
Two Types of Thieves! Two Types of Knowledge! (Post No.2796);9/5
An Ounce of Mother is worth a Ton of Priest! (Post No.2793);8/5
Interesting Salesman Anecdotes (Post No.2789);7/5
Boy and the House Hunter: Evidence Anecdotes (Post No.2786);6/5
What is Rare? Views of Three Great Poets! (Post No.2784);5/5
Art of Bargaining! How to bargain? (Post No.2781);4/5
IGNORANCE: Sexy Simile of Tamil Poet Valluvan! (Post No.2778);3/5
DROWN MISERS IN THE SEA: MAHABHARATA (Post No 2773);2/5
‘Hitch your wagon to a star’ – Ralph Waldo Emerson (Post No 2771); 1ST MAY 2016.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நகை பிறக்கின்ற வாயன்,பொறி பிறக்கின்ற கண்ணன் !
கம்ப ராமாயணம் யுத்த கண்டத்தில் ராவணனின் தோற்றம் பற்றிய ஒரு பாடல் மிகவும் ரசித்துப் படிக்க வேண்டிய பாடல் . அதை யாராவது வரைந்து ஓவியம் தீட்டினால் இன்னும் நன்றாக இருக்கும் . இருந்த போதிலும் நம் மனதில் அதை ஓவியமாக வரைந்து ரசிப்போம்.
இராவணன் களம் காண்படலத்தின் கடைசி பாடல் இது.
அரக்கர் படைகளை எல்லாம் இராம பிரானின் அம்புகள் அழித்ததை ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து கண்டான் . பின்னர் கீழே இறங்கி வந்தான்.
கோபத்தால் ‘ஹ ஹா ஹா’ என்று சிரித்தான்.
நாக்கை வெளியே நீட்டி மீசையை நக்கிக் கொண்டான்.
கண்களில் தீப்பொறி பறந்தது.
மூக்கிலிருந்து சூடான கோபக் காற்று அனல் கக்கியது .
நெஞ்சில் மேலும் குற்றம் செய்யும் எண்ணம் பிறந்தது.
தீக்கொழுந்து விட்டெரியும் சொற்கள் வாயி லிருந்து வந்தன
இந்தக் கோலத்தில் அரசவைக்குச் சென்றான்
சுருக்கமாக ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் முகத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பும் தீயைக் கக்கியது.
–இராவணன் களம் காண் படலம், யுத்த காண்டம் , கம்ப ராமாயணம்
இப்படி ஒவ்வொரு பாடலையும் ரசித்துப் படித்தால் வாழ்நாள் முழுதும் ராமாயணம் படிக்கலாம். ஏன் என்றால், இரண்டாம் முறை படிக்கும் பொழுது புதிய பொருள் தோன்றும்!!!
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காயத்ரி தேவியின் அருள் பெற்ற கோபால்தாஸர்!
ச.நாகராஜன்
ஸ்ரீ விஜயதாஸரின் சீடராக இருந்து கோபால்தாஸர் என்று புகழ் பெற்ற ஜோதிடரின் இயற் பெயர் பாகாண்ட். (Bhagannd).
கர்நாடகாவில் ராய்சூர் மாவட்டத்தில் உத்தனூர் என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார் பாகாண்ட். அங்கேயே அவர் கி.பி. 1740 முதல் 1780 முடிய வாழ்ந்தார்.
அவருக்கு மூன்று சகோதரர்கள். அவரது இளம் வயதிலேயே அவர் தந்தை இறந்து விட்டார். தாயின் வளர்ப்பிலும் வழிகாட்டுதலிலும் அவர் வளர்ந்து வந்தார். அவரது உறவினர்கள் அவர் மீது வெறுப்பை உமிழ்ந்தனர். அதனால் மிகுந்த ஏழ்மை நிலையில் அவர் கஷ்டப்பட்டார்.
என்றாலும் கூட அவரது எட்டாம் வயதில் அவருக்கு உபநயனம் செய்து வைக்கப்பட்டது. காயத்ரி மந்திர உபதேசம் அதன் மூலம் தரப்பட்டது.
தன்னை எல்லோரும் அலட்சியப்படுத்தியதையோ அல்லது வெறுத்ததையோ பற்றி பாகாண்ட் வருத்தப்படவில்லை.
கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் இருந்து காயத்ரி மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தார். நாள் செல்லச் செல்ல ஜபம் அதிகரித்தது; தீவிரமானது.
ஒரு ஆறு வருடங்கள் ஓடின.அவருக்கு தெய்வீக அருள் கிட்டியது. அதன் பயனாக பிரம்மஞானத்தையும் ஜோதிட அறிவையும் பெற்றார்.
அவரது பிரகாசமான முகத்தைக் கண்ட அனைவரும் அவரை மதிக்க ஆரம்பித்தனர்.
அனைவருக்கும் அவர் ஜோதிடத்தைச் சொல்ல ஆரம்பித்தார். யார் ஜோதிடம் கேட்க வந்தாலும் அவரது கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என முக்காலத்தையும் துல்லியமாகக் கூற ஆரம்பித்தார். அவர் புகழ் பரவ ஆரம்பித்தது
யார் வந்தாலும் அவரது முந்தைய மூன்று பிறப்புகளைப் பற்றி அவரால் அறிந்து கொள்ள முடிந்தது. எதிர்காலத்தில் அவருக்கு என்ன நடக்கும் என்பதும் அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது.
எல்லோரும் பிரமிப்புடன் அவரை மதித்து காணிக்கையும் செலுத்த ஆரம்பித்தனர். அவரது ஏழ்மையும் அகன்றது. குடும்பத்தின் நிலை சீரானதோடு வளமாகவும் ஆனது.
சில வருடங்கள் கழிந்தன. பிருகு முனிவரின் அவதாரமாகக் கருதப்பட்ட விஜயதாஸர் அப்போது பிரபலமாக இருந்தார். அவரிடம் அடைக்கலம் புகுந்த பாகாண்ட் அவரது சீடரானார். அவரது உபதேசப்படி நடக்கவே, விஷ்ணுவின் தரிசனம் அவருக்குக் கிடைத்தது.
அவருக்கும் நாளடைவில் சீடர்கள் உருவாயினர். அவர் கோபால்தாஸ் என அனைவராலும் அறியப்பட்டார். அவரது முக்கிய சீடர்களுள் புகழ் பெற்றவரே ஜகந்நாத தாஸர்.
ஸ்தல யாத்திரை செய்ய ஆரம்பித்த கோபால்தாஸர் அனைவருக்கும் அன்னதானம் செய்ய ஆரம்பித்தார். தேவையானோருக்கு இதர பொருள்களையும் கொடுத்து உதவ ஆரம்பித்தார்.
இறைவன் புகழைச் சொல்லும் ஏராளமான கீதங்களைப் புனைய ஆரம்பித்த அவர் விட்டலைப் போற்றி நிறைய கீதங்களைப் படைத்தார். அவை பெரும் புகழ் பெற்றன. இன்றும் பாடப்படுகின்றன.
காயத்ரி மந்திரத்தால் அரும் பெரும் சக்தி பெற்ற ஒருவராக அவரை உலகம் அறிந்தது.
காயத்ரி மந்திரத்தின் சக்திக்கு ஒரு அளவே இல்லை என்பது உண்மையே.
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
வேகத்தை கட்டுப் படுத்தாதீர்கள்!!! Kattukutty
நமது உடல் விசித்திரமானது!!! தேவையில்லாத பொருள்களை வெளியேற்ற நவ துவாரங்களையும், வியர்வை சுரப்பிகளையும் வைத்திருக்கிறான் ஆண்டவன்!!! அவற்றின் மூலமாக அசுத்த பொருள்களை வெளியேற்றி நமது உடலை ஆரோக்கியமாக வைக்கிறது இயற்கை!!! அவை என்னன்ன என்று பார்ப்போமா???
பிராண வாயுவான மூச்சை அடக்கினால் என்ன ஆகும் என்று உங்களுக்கே தெரியும்!!! அடிக்கடி மூச்சை அடக்கினால், தவறான முறையில், பிராணாயாம ம் செய்தால் இருமல்,வயிற்றுப் பொருமல் சுவை தெரியாமலிருத்தல், காய்ச்சல் உண்டாகும்.
கண்ணிலிருந்து வரும் நீரை அடக்க முடியாது!!! அதையும் மீறி அடக்கினால், கண்வலி, கண்மங்கல், களைப்பு, மனதில் கனம் தோன்றும் கவலையினால்……….
அபான வாயு
இயற்கையினால் வெளியேற்றப்படும் இக்காற்றை தடை செய்தால் வாயுத் தொல்லை, மலச்சிக்கல்,உடல் முழுவதும் குத்தல் குடைச்சல் பசி மந்தம் உண்டாகும்.
தும்மல்
இதை அடக்கினால் மூச்சு திணறும், மூச்சு மேலுக்கு கிளம்பி தலை முழுவதும் நோகும். முகம் முழுவதும் காற்றினால் உப்பி வலிக்கும்.
இருமல்
மூச்சில் ஒரு கெட்ட மணம், நெஞ்சில் காற்று அடைத்த மாதிரி உணர்வும் உண்டாகும்
பசி/ தாகம்
உங்களுக்கே தெரியும் உடலிலுள்ள எந்த அவயவங்களும் ஒழுங்காக வேலை செய்யாது. பசியை அடக்கி உண்ணாமலிருந்தால்,உடலில் களைப்பு, இளைப்பு முக வாட்டம் மூட்டுக்களில் வலி……….தலை சுற்றல், காது கேளாமை…….. எல்லாம் உண்டாகும் …….உடலுக்கு ஆதாரமே உணவுதான்!!! தாகத்தை அடக்கினால், களைப்பு,முகம், நாக்கு உலர்தல்,மயக்கம், காது கேளாமை…….பேச்சு வராமலிருத்தல் எல்லாம் உண்டாகும்.
தூக்கம்
இயற்கை நமக்கு அளித்த பரிசு!!!! அதை அலட்சியப்படுத்தி தூக்கத்தை அடக்கினால், தலை கனத்தல்,களைப்பு, கண்சிவத்தல், கண்ணீர் வருதல்,பேச்சு திணறுதல்……அதிகமானால் மயங்கி கீழே விழுதல்……….
இளைப்பு என்னும் வேகத்தை அடக்கினால் உடல் சோர்தல், பெப்டிக் அல்ஸர், உடலில் மிகுந்த வெப்பம் உண்டாகுதல் திடீரென்று மூர்சையடைதல், நீர் வேட்கை எல்லாம் உண்டாகும்.
சிறு நீர்/ வியர்வை
இதை அடக்கினால் உடலின் வேகம் குறைதல்,நீ ர் போகும்பு ழையில புண்,வயிற்றில் பாரம், குறியில் ஒரு எரிச்சல் உண்டாகும். வியர்வையை அவ்வப்போது துடைக்காவிட்டால் வியர்க்குரு, உடலில் ஒரு துர் நாற்றம் உண்டாகும். ஏ.சி ரூமில் வேலை செய்பவர்களுக்கு அடிக்கடி சிறு நீர்கழிக்க வேண்டி வரும். அடக்கக் கூடாது.
மலம்
மலத்தையும், சிறு நீரையும் அடக்கினால் முழங்கால் மூட்டு வலி, வயற்றில் கனம், எந்தக் காரியத்திலும் கவனமின்மை, முக்கியமாக தலை வலி, உடல் பலம் குறைதலும் உண்டாகும்.
கொட்டாவி
முகம் கோணல், உணவு செரிமானம் ஆகாமை, நீர்நோய்கள், அறிவு மங்குதல், களைப்பு, வயிறு சம்பந்தமான நோய்களும் உண்டாகும்.
கடவுளால் கொடுக்கப்பட்ட இந்த 14 வித வேகங்களைத் தடுத்தால் உண்டாகும் விபரீதங்கள் நம் வழக்கமான வாழ்வைத் தடுத்து அடிக்கடி வைத்திய செலவுகளை அதிகரிக்கும்.
பிரம்மாவின் புத்திரர் குசர் என்பவர். அவர் தவ மஹிமை உடைய பெரிய ரிஷி. அவருக்கு வைதர்ப்பி என்பவளிடத்தில் குசாம்பர், குசநாபர், அதூர்த்தரஜஸ், வசு ஆகிய நான்கு புத்திரர்கள் பிறந்தனர். இவர்கள் அனைவரும் பற்பல நகரங்களை ஸ்தாபித்து அரசாண்டு வந்தனர். இவர்களில் குசநாபருக்கு ஒப்பற்ற அழகுடைய நூறு புத்திரிகள் பிறந்தனர். அவர்கள் இளமைப் பருவம், அழகு ஆகியவற்றுடன் மாரிக்காலத்து மின்னல் போல பிரகாசித்துக் கொண்டும், உயர்ந்த ஆடை ஆபரணங்களை அணிந்து கொண்டும் தங்களுடைய சிங்காரத் தோட்டத்திற்கு வந்து ஆடியும் பாடியும் உல்லாசமாக நடனம் செய்து கொண்டும், வீணை முதலிய வாத்தியங்களை வாசித்துக் கொண்டும் இன்பமாகக் காலம் கழித்து வந்தனர். குற்றமற்ற சிறந்த அங்கங்கள், நல்ல குணங்கள், மங்கைப் பருவம், கம்பீரம் ஆகியவற்றுடன் அவர்கள் மேகங்களின் மத்தியில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களைப் போல அந்தத் தோட்டத்தின் மத்தியில் பிரகாசித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது வாயு பகவான் அவர்களைக் கண்டு மோகம் கொண்டான்.
அவர்களை அணுகி அவர்களை நோக்கி, “ஓ, பெண்களே, நான் உங்களை நாடி வந்திருக்கிறேன். நீங்கள் அனைவரும் எனக்கு மனைவி ஆகுங்கள். இந்த மனித ரூபத்தை விட்டு விட்டு தேவ சரீரத்தைப் பெறலாம். நெடுங்காலம் வாழலாம். இளமை நீர்க்குமிழி போல் நிலையில்லாதது. அதிலும் மனிதர்களுக்கோ அது இன்னும் குறைவு. நீங்கள் அழியாத இளமைப் பருவம் பெற்று இறவாத தெய்வத் தன்மையை அடையலாம்” என்றான்.
இதைக் கேட்ட அந்த பருவ மங்கையர் நகைத்தனர்.
அவர்கள் வாயு பகவானை நோக்கி, “ நீரோ எல்லோருடைய சரீரங்களிலும் அலைகிறவர். ஓ, வாயு பகவானே! உம்முடைய சக்தி பற்றி நாங்கள் நன்கு அறிவோம். நீர் ஏன் எங்களை அவமானம் செய்கின்றீர்? நாங்கள் குசநாபருடைய குமாரத்திகள். நீர் தேவனாக இருந்தாலும் நாங்கள் உம்முடைய பதவியை இழக்கும்படி செய்வோம். ஆனால் எங்கள் தவப்பயன் வீணாகாமல் இருக்கும் பொருட்டு நாங்கள் பொறுத்துக் கொண்டிருக்கிறோம். மூட புத்தி உடையவரே! சத்தியவானான எங்கள் தந்தையை மதிக்காமல் நாங்களே சுயமாக ஒரு புருஷனை எக்காலத்திலும் தேடிக் கொள்ள மாட்டோம். எங்கள் தகப்பனாரே எங்களுக்கு நாதன். அவரே எங்களுக்கு மூல தெய்வம். அவர் பார்த்து யாருக்கு எங்களைக் கொடுக்கின்றாரோ அவரே எங்களுக்குரிய கணவன் ஆவார்” என்றனர்.
இதைக் கேட்டு வாயு பகவான் மிகுந்த கோபம் கொண்டார்.
அவர்களுடைய உடல்களில் பிரவேசித்து அவர்களுடைய அங்கங்களை ஒடித்தார். வாயுதேவனால் அவர்களது அங்கங்கள் ஒடிக்கப்பட்டதால் அவர்கள் அழுது கண்ணீர் விட்டனர். வெட்கம் அடைந்தனர். நேராக தன் தந்தையாரான அரசனிடம் சென்றனர். மிகுந்த பேரழகிகளான தனது பெண்கள் இப்படி அங்கம் ஒடிந்த நிலையில் வரக் கண்ட அவன் பதறிப் போனான். அவர்களை நோக்கி, : ஓ! பெண்களே! என்ன இது? இவ்வாறு தர்ம விரோதமாய் நடந்தது யார்? இந்தக் கோணலான உருவம் உங்களுக்கு எப்படி யாரால் நேர்ந்தது? நீங்கள் ஏன் துக்கத்துடன் இருக்கிறீர்கள்? ஏன் பதில் பேசாமல் இருக்கிறீர்கள்?” என்றான்.
அவனது பெண்கள் அவனது காலில் விழுந்து வணங்கி நடந்ததைக் கூறினர்.
அதைக் கேட்ட அரசன், “ஓ, பெண்களே! சாந்தமுடையவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய பொறுமையை நீங்கள் வாயு பகவானிடத்தில் அனுஷ்டித்திருக்கிறீர்கள். இது நமது வம்சத்திற்கு பெருமை தருவதாகும். மனிதர்கள், பெண்மணிகள் ஆகியோருக்கு பொறுமையே சிறந்த ஆபரணம். உங்களைப் போலவே என் வமிசத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் இப்படி பொறுமை உடையவராக இருக்கக் கடவது. பொறுமையே தர்மம். பொறுமையே சத்யம். பொறுமையே யாகம். பொறுமையே கீர்த்தி. பொறுமையினால் தான் உலகமே நிலை பெற்றிருக்கிறது” என்று சொல்லி விட்டு தன் குமாரத்திகளை நல்ல குலத்தில் பிறந்த ஒருவனுக்கு மணம் முடிப்பது பற்றி தனது மந்திரிமார்களுடன் ஆலோசிக்க ஆரம்பித்தான்.
இந்தச் சமயத்தில் மிகுந்த தேஜஸுடன் சூளி என்ற மஹரிஷி
இந்திரியங்களை முற்றிலும் அடக்கியவராய் பிரம்மத்தைக் குறித்துத் தவம் செய்து கொண்டிருந்தார்.
அப்பொழுது ஊர்மிளை என்பவளது புத்திரியான சேரமதை என்ற ஒரு கந்தர்வப் பெண் அவருக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருந்தாள். பக்தி சிரத்தையுடன் தனது பணிவிடையைப் பல காலம் அவள் செய்து வந்தாள். அதனால் அந்த முனிவருக்கு அவளிடத்தில் மிகுந்த திருப்தி உண்டாயிற்று. அவர், அவளை நோக்கி, “உன்னிடத்தில் நான் மிகவும் திருப்தி அடைந்திருக்கிறேன். உனக்கு என்னால் செய்ய வேண்டியது ஏதாவது இருக்குமாகில் அதை உடனே சொல்” என்றார்.
அதைக் கேட்ட சேரமதை மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். அவரை நோக்கி, “ நீங்கள் பிரம்மாவைப் போன்றவர். பிரம்ம தேஜஸ் கொண்டவராக விளங்குகிறீர்கள். மிகுந்த தவ சக்தி உடைய ஒரு உத்தம புத்திரனை எனக்கு அருள வேண்டும். நான் இதுவரை ஒருவருக்கும் மனைவியாகவில்லை” என்றாள்.
அப்படியே அந்த முனிவரும் பிரமதத்தன் என்ற பெயருடைய ஒரு புத்திரனை அவளுக்கு அளித்தார்.
அந்த பிரமதத்தன் க்ஷத்திரிய வமிசத்தினவளானான சேரமதைக்கு பிறந்த காரணத்தால் அரசனாகி தேவேந்திரன் தேவ லோகத்தை ஆள்வது போல காம்பிலி என்ற பெயரை உடைய வனம் பொருந்திய ஒரு நகரத்தை உருவாக்கி அதை மிகுந்த சிறப்புடன் அரசு புரிந்து வந்தான்.
குசநாபன் பிரமதத்தனைப் பற்றிக் கேள்விப்பட்டு அவனுக்கு தனது நூறு குமாரத்திகளையும் விவாகம் செய்து கொடுக்க முன் வந்தான்.
பிரமதத்தன் அந்த மங்கையரை ஒவ்வொருவராகப் பாணிக்ரஹணம் செய்து கொண்டான்.
அவனால் தொடப்பட்டவுடனேயே அந்த மங்கையர் ஒவ்வொருவரும் தமது கோணல் உருவம் நீங்கி சுய உருவத்தை அடைந்து முன்னிலும் பொலிவு பெற்று விளங்கினர். வாயு பகவானின் தீய செயலிலிருந்து விடுபட்டு அவர்கள் சுகமாக இருப்பதைக் கண்ட குசநாபன் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தான்.
சேரமதை என்ற கந்தர்வ பெண்ணும் தனது மகனையும் நூறு மருமகள்களையும் கட்டித் தழுவிக் கொண்டு அளவிட முடியாத மகிழ்ச்சியை அடைந்தாள்.