பதஞ்சலி நூலில் கிஷ்கிந்தா மர்மம் !(Post No.8789)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8789

Date uploaded in London – –8 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகின் முதல் இலக்கண நூல் பாணினி எழுதிய ‘அஷ்டாத்யாயி’. இதன் பொருள் ‘எட்டு அத்தியாயம்’. இதை ‘அஷ்டகம்’ என்றும் அழைப்பர் . இதை பாணினி எழுதியதால் ‘பாணினீயம்’ என்றும் அழைப்பர். இந்த இரண்டு உத்திகளையும் தமிழர்கள் கடைப்பிடித்தனர். ஐங்குறு நூறு , பதிற்றுப்பத்து என்று சங்க நூல்களுக்கு ‘நம்பர்’ Numbers களை பயன்படுத்திப் பெயரிட்டனர். அஷ்டகம் போலவே எடுத்த தொகை என்ற தொகுப்பையும் உருவாக்கினார்கள் . பாணினீயம் போலவே தொல்காப்பியர் எழுதிய நூலுக்குத் தொல்காப்பியம் என்று பெயரிட்டனர்.

பாணினி எழுதியது வெறும் இலக்கண நூல்தான். அதிலுள்ள விஷயங்களையும் அதன் மீது எழுந்த வார்த்திகம் , மஹா  பாஷ்யம் , காசிகா ஆகிய உரைகளையும் படித்தால் இந்திய சரித்திரத்தையே அறியலாம். இலக்கணத்தில், மொழி இயலில், இவ்வளவு முன்னேற்றத்தை சம்ஸ்க்ருதம் தவிர வேறு எந்த மொழியிலும் காண முடியாது. பாணினி தோன்றி 2700 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது என்பது மாக்ஸ்முல்லரைப் புரட்டிப் புரட்டி அடித்த கோல்ட்ஸ்டக்கரின் (Goldstucker)  வாதம் .

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள கபிஸ்தலம் போலவே பஞ்சாப்-ஹரியானா எல்லையில் ஒரு கபிஸ்தலம் இருப்பது பற்றி சில தினங்களுக்கு முன்னர் எழுதினேன். இப்பொழுது இன்னும் ஒரு மர்மம் பற்றி துப்பு துலக்குவோம்.

ராமாயணத்தில் கிஷ்கிந்தா பெயரில் ஒரு காண்டமே இருப்பதால் உலகம் முழுதும் கிட்கிந்தையை அறியும். இந்தப் பெயரே ஒரு வினோதமான பெயர். சம்ஸ்க்ருதத்தில் இது போன்று ஒலிக்கும் பெயர்கள் அதிகம் இல்லை. .மேலும் கிஷ்கிந்தா என்பது கர்நாடகத்தில் ஹம்பி நகரம் இருந்த பகுதி என்பதே ஆராய்ச்சியாளர்களின் துணிபு.

பதஞ்சலி முனிவர் கி.மு 150-ல் வாழ்ந்ததை உலகமே ஒப்புக்கொள்கிறது . அவர் பாணினி நூலுக்கு உரை எழுதினார். அதன் பெயர் ‘பேருரை’  சம்ஸ்க்ருதத்தில் ‘மஹா பாஷ்யம்’ . பதஞ்சலியும் இந்த விநோதப் பெயரைக் குறிப்பிடுவதும் அதை நாட்டின் வடமேற்கு மூலையில் காட்டுவதும் வியப்பை ஏற்படுத்தும்.

அவர் சொல்கிறார்.

பல வகை சூத்திரர்கள் ஆர்யவர்த்தத்துக்கு வெளியே வசித்தனர் . அவர்களில் கிஷ்கிந்த -காப்திகம் , சக-யவனம், சவுர்ய- க்ரவுஞ்சம் ஆகியோரை எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம்.

இதை விளக்கும் அக்ரவாலா தனது புஸ்தகத்தில் சொல்கிறார் –

இவர்களில் கிஷ்கிந்தா என்பதை பாலி மொழியிலுள்ள குகுந்த்தோ என்று சொல்லலாம். அது கோரக்பூரில் உள்ளது. கோரக்பூர் என்பது தற்போதைய உத்தரபிரதேசத்தில் இருக்கிறது.அயோத்தி நகரிலிருந்து 135 கிலோமீட்டர்.

ராமாயண கிஷ்கிந்தையோ துங்கபத்ரா நதியின் வடகரையில் — கர்நாடகத்தில் இருக்கிறது. எப்படி தொ லை தூரத்தில் இப்படி அதிசய பெயர் வந்தது ? ராமாயணம், பாணினி காலத்திற்கு வெகு முன்னர் நடந்தது . பதஞ்சலியும் பிற்கால சமண சமய நூல்களும் செப்புவது போல வடக்கில் ஒரு கிஷ்கிந்தை இருந்ததா னால் அது வட-தென் நாட்டின் தொடர்பைக் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

சமண மத நூல்களிலும் கிஷ்கிந்தா இடம்பெறுகிறது ஒன்பதாவது தீர்த்தங்கரர் புஷ்பதந்த  ஆவார். அவர் பிறந்த ஊர் காகந்தி. ; இதன் மற்றோரு பெயர் கிஷ்கிந்தா. அவருடைய தந்தை பெயர் சுக்ரீவன் தாயார் பெயர் ராமா . இதிலும் ராமாயண கிஷ்கிந்தா தொடர்பு தெரிகிறது. சம்ஸ்க்ருதத்தில் ராம என்ற குறில் ஒலி இராம  பிரானைக் குறிக்கும்; ராமா என்று நெடில் ஒளி பெண்ணைக் குறிக்கும்.

இவையெல்லாம் ராமாயணத்துக்குப் பின்னர்தானே  ஏற்பட்டிருக்கவேண்டும்?

இதில் இன்னும் ஒரு சுவையான  விஷயமும் வருகிறது. காகந்திதான் கிஷ்கிந்தா என்று சமண நூல்கள் இயம்பும் தருணத்தில், அது பூம்புகார் நகரின் மற்றொரு பெயர் என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும்

இந்த மர்மத்துக்குச் சுலபமான விடை :–

மலைகள், ஆறுகள், நகரங்கள்  முதலிய பல இடங்கள் இந்தப் பெயரைக் கொண்டிருந்தன என்பதேயாம்.

Hampi

xxx

யவனர்கள் சூத்திரர்கள் !

யவனர்கள் என்பது எல்லா ‘வெள்ளைத்தோல் படைத்த’ வெளிநாட்டினரையும் குறிக்கும் என்பதை தமிழ் சம்ஸ்க்ருத இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன. இத்தாலி நாட்டின் தலைநர் ரோம். அங்கிருந்து கப்பலில் வந்தவர்களை சங்கத் தமிழ் இலக்கியம் ஆறு இடங்களில் குறிப்பிடுகிறது. அவர்களை வன்சொல் யவனர் என்றும் சாடுகிறது .அவர்கள் காமதேனுவின் ஆசன வாய்ப் பகுதியிருந்து வந்த பல இன  மக்களிலில் ஒரு இனம் என்று ராமாயண மஹாபாரத இதிகாசங்கள் வருணிக்கின்றன. இது பற்றி முன்னர் எல்லாக் குறிப்புகளையும் பல கட்டுரைகளில் தந்து விட்டேன். காளிதாசரோ பாரசீக ‘தாடிவாலா’க்களை யவனர்கள் என்று கூறுகிறார். சங்க காலத்துக்குப் பின்னர் எழுந்த தமிழ் நூல்கள் ‘யவனத் தச்சர்’ என்று இந்தியாவின் வடமேற்குப் பகுதியில்  வசித்த கலைத்திறன் வல்ல தச்சர்களைக் குறிப்பிடுகிறது. ‘யவன, தச்ச’ ஆகியன எல்லாம் சம்ஸ்க்ருதம் சொற்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள்.

அலெக்ஸ்சாண்டர் படையெடுப்புக் காலத்திலிருந்து யவனர்கள் என்பது ‘கிரேக்கர்’களைக் குறித்தது. குதிரை விற்ற அராபியர்களை சில இடங்களில் யவன என்றும் பெரும்பாலான இடங்களில் யோன/ ஜோன என்றும் குறிப்பிட்டனர்.

பதஞ்சலி, கிஷ்கிந்தா, மர்மம்,யவனர்கள், சூத்திரர்,

—subham—

விரத காலங்களில் ஏன் அசைவ உணவை உண்ணக் கூடாது? (Post.8788)

Uppuma Kozukkattai

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8788

Date uploaded in London – – 8 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

5-10-2020 அன்று ஞானமயம் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட கேள்வி-பதில்

YOU MAY LISTEN TO S NAGARAJAN ON FACEBOOK.COM / GNANAMAYAM

விரத காலங்களில் ஏன் அசைவ உணவை உண்ணக் கூடாது?

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும்?

 QUESTION ASKED BY MURUGADAS, CHENNAI.THANKS.

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

நமது முன்னோர்கள் இயற்கை மாறுதல் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து அதற்கேற்ப நம் வாழ்க்கை முறையை வகுத்தவர்கள்.

திருமணமான ஒரு மணப்பெண்ணை ஆடி மாதம் வந்தால் பெண் வீட்டார் அழைத்துச் சென்று ஒரு மாதம் வைத்துக் கொள்வர்; பின்னர் திருப்பி மணமகன் வீட்டிற்கு அனுப்புவர். ஆடி மாதம் கர்ப்பமுற்றால் தலைப் பிரசவன் கொடுமையான கோடைக் காலமான சித்திரையில் ஏற்படுவதைத் தடுக்கவே இப்படி ஒரு ஏற்பாடு.

இதே போல உணவுத் திட்டத்திலும் அதை உண்ணும் முறைகளிலும் பல விதிகளை நம் முன்னோர் ஏற்படுத்தியுள்ளனர்.

நம் மனதிற்கும் நாம் உண்ணும் உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை நம் அறநூல்களும் வைத்திய நூல்களும் கூறுகின்றன. இதை அப்படியே நவீன விஞ்ஞானமும் ஆமோதிக்கிறது.

விரத காலங்களில் ஒருமுனைப்பட்ட மனதுடன் நாம் ஏற்றுக் கொண்ட விரதத்தின்படி இறைவனை தியானிக்க சத்வ உணவு பெரிதும் உதவுகிறது. தியானத்தின் போது மேலாம் நிலையை அடைய சத்வ உணவு பெரிதும் உதவுகிறது. ஆகவே விரத காலங்களில் சத்வ குணத்தைத் தரும் சைவ உணவு பரிந்துரைக்கப்படுகிறது. ஊன்றிய மனதுடன் விரதத்தை அனுஷ்டித்து சிறப்பான பலனைப் பெற இது உதவும்.

குறிப்பாக புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கும் காரணங்கள் உண்டு.

Idli and Idli with Chilly Powder

12 ராசிகளில் ஆறாவது ராசியாக அமைவது கன்னி ராசி. அதாவது மேஷ, ரிஷப, மிதுன, கடகம், சிம்மம் கன்னி – இது ஆறாவது ராசி. கன்னி ராசி புரட்டாசி மாதத்திற்குரிய ராசி. இதுவே இதன் அதிபதியான புதனுக்குரிய ராசி. புதன் விஷ்ணுவின் சொரூபம் என்பதாலும் சைவ கிரகம் என்பதாலும் இந்த மாதத்தில் அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும் என நமது அற நூல்கள் கூறுகின்றன. மாதம் முழுவதும் பல விழாக்கள் வரும் மாதம் புரட்டாசி தான். ஆகவே புரட்டாசியில் அசைவ உணவைத் தவிர்த்தல் மரபாகு̀ம்.

பருவ மாறுதல்களால் புரட்டாசி மாதம் மழைக் கால ஆரம்ப மாதமாகும்.  இந்தக் காலத்தில் ஜீரண சக்தி குறைவாக இருக்கும் காரணத்தினால் நாம் உண்ணுகின்ற உணவானது லகு உணவாக அதாவது எளிதில் ஜீரண்மாகத் தக்க விதத்தில் இருக்க வேண்டும். ஆகவே அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும் என நமது நூல்கள் பரிந்துரைக்கின்றன.

எல்லாக் காலத்திலும் சைவ உணவு மேற்கொண்டிருப்பவனை எல்லா உயிரும் தொழும் என வள்ளுவர் கூறுவதும் இங்கு நோக்கத் தக்கது.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் என்று குறள் எண் 260 கூறுகிறது.  ஆகவே அவரவர் மனப் பக்குவத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப தம் தம் உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்ளலாம்; அசைவ உணவைத் தவிர்க்க முடியாதவர்கள் விரத காலத்திலும் புரட்டாசி மாதத்திலும் அதைத் தவிர்க்கலாம்!

Tamarind bath- Puliyodarai in Tamil

அடுத்து இன்னும் ஒரு கேள்வியில் உங்களைச் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்.

tags– சைவ உணவு, அசைவ, விரத காலம்

***

Arya means a Free man, Dasa means a Slave (Post No.8787)

Aborigines were dubbed as thieves and hunted in Australia

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8787

Date uploaded in London – –7 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘Arya’ meant a cultured or a civilised person in Vedic literature. Arya meant saints in the northern Himalayan region or those who speak Sanskrit in Sangam Tamil literature. In other words, those who speak a cultured language or a language by cultured people. Nowhere we find a racial connotation or a negative connotation. But Max Muller and Caldwell Company used it with a racial connotation because of their ‘barbarian knowledge’ in Greek.

in Greece

Kautilya who wrote Arthashastra 2400 years ago gives some interesting new definition.

Panini applies the epithet ‘Aarya’ to a Brahmana to denote the king’s chief counsellor-  Aarya brahmana and Aarya kumara to denote the crown prince 6-2-58

The use of the term Aarya in the expression  Aarya-krita in sutra 4-1-30 ( feminine Aarya-kriti , terms which were also Vedic words ) had a specific meaning in current speech. The meaning of these terms is best explained by Kautilya ( daasa kalpa chapter). Kautilya takes Aarya to mean a free man  as opposed to Daasa who had lost his freedom.

e.g. the offspring who has sold himself off as a slave shall be an Aarya on paying the value – for which one is enslaved. A slave shall regain his ‘Aaryahood’. The regulations contained in that chapter aims at humanising the institution of Daasya and restoring to the Daasas the privileges of an Aarya or free citizen.

The linguistic form of ‘aaryakrita ‘– i.e Aarya with root kri is also implied in Kautilya’s expression ,

 ‘daasamanurupena  nishryen – aaryamakurvato dvaadasa pano dandah ‘

Meaning is ‘12 panas is the fine for not making a slave a free man  (Aarya)  even after receiving the proper ransom ‘ .

The feminine form Aaryakritii would denote the woman similarly made free or her daughter who had obtained the status of an ‘adaasa’ or either through payment of ransom or birth.

Panini uses ‘dhaasi-bhaara’ in sutra 6-2-42 as a word with specific meaning.  The Kaasikaa explains it as daasya bhaarah i.e. the burden of a Dhaasi to be borne by her master.

Kautilya states , if a pregnant female slave is sold or pledged without any provision for her confinement ,  her master is punishable .  This probably explains the nature of the burden implied in the term daasi – dhaasi bhaara of Panini

Source book – India as known to Panini by V S Agrawala, 1953,University of Lucknow

xxx

in Rome

My comments: –

All the ancient cultures had slavery as an institution. In Greece they were treated as low class people. In Modern America, they were treated as animals. Abraham Lincoln and others had to fight for their freedom. In Egypt, Moses revolted against the slavery and led them out of Egypt. In Rome, they were thrown to animals and they had to fight them till one of them dies. Huge crowd watched the cruel gladiators. But in India even before 2400 years,  they were treated as humans. They can be liberated by paying back the amount to which the persons were bought.

***

In Tamil Nadu

Sundaramurthy Swamikal story in Periya Puranam and other literatures shows that  the slavery was in Tamil country 1200 years ago. A Brahmin came running saying that Sundarar cannot get married without his permission because he was the son of a slave. It shows that slavery existed even among high class Hindus in Tamil Nadu and they need permission from their masters to get married.

 tags – slavery, Arya, free man, Dasa, slave

in Egypt

—subham–

நாக்கு பற்றிய 7 பழமொழிகள் என்ன? (Post.8786)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8786

Date uploaded in London – –7 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நாக்கு பற்றிய 7 பழமொழிகளைக் கட்டத்தில் காணுங்கள்; விடைகள் இறுதி யில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், கட்டத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே காணப்படும் .

1.நா அசைய  நாடு அசையும்

2.நாக்காலே போட்ட முடி, பல்லாலே கடித்து இழுத்தாலும் வருமா

3.நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்

4.நாக்குக்கு எலும்பில்லை, எப்படிப் புரட்டினாலும் அப்படிப் புரளும்

5.நாக்குப்புரட்டர் போக்குப்  புகல்வர்

6.நாக்கை விற்று ஆக்கித் தின்கிறது

7.நீ என்ன நாக்கு வழிக்கப் போயிருந்தாயா

tags–நாக்கு

–subham–

SWAMI CROSSWORD 71020 (Post No.8785)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8785

Date uploaded in London – –7 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ACROSS

1—4 letters—monkey chief who was killed  by Rama

5.—6—great rishi of Tiruvannamalai

8.—7–  Son of Monkey chief killed by Rama

9.—6—a pot ; normally used in auspicious ceremonies

DOWN

1.—6  letters—two meanings- elephant;  cock

2.—3— Vedic goddess

3.—5— Venus;  also Asura guru,

4.—4—meaning of this number is 100

6.—6— a way

7. – another word for a kind of Natya

—SUBHAM–

மந்திரங்களைத் தவறாக உச்சரித்தால் பாதிப்பு வருமா? (Post.8784)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8784

Date uploaded in London – – 7 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

5-10-2020 அன்று ஞானமயம் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் ((Facebook.com/Gnanamayamஒளிபரப்பப்பட்ட கேள்வி – பதில்

மந்திரங்களைத் தவறாக உச்சரித்தால் பாதிப்பு வருமா?

ச.நாகராஜன்

QUESTION ASKED BY SENTHAMANGALAM GANESAN; THANKS

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

மந்திரங்களைத் தவறாக உச்சரித்தால் பாதிப்பு வருமா? என்ற கேள்வி வந்துள்ளது.

பதில் : தவறாக உச்சரிக்காமல் உரிய முறைப்படி ஓதினால் நிச்சயம் அதற்குரிய பலன் முழுமையாகக் கிடைக்கும் என்பது தான்.

விளக்கத்தைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மந்திரம் என்றால் என்ன?

மனனாத் த்ராயதே இதி மந்த்ர: மனத்தினால் மீண்டும் மீண்டும் சொல்லி அதாவது ஜபித்து உய்வைப் பெறுகின்ற ஒன்றே மந்திரம் ஆகும்.

சில மந்திரங்கள் பிரார்த்தனை மந்திரங்கள். சில பலன்களை எதிர்பார்த்து ஓதப்படும் மந்திரங்கள்.

இவற்றை குரு மூலமாகக் கற்று ஓதுவதே சிறப்பாகும்.

ஒவ்வொரு  மந்திரத்திற்கும் ஆறு பகுதிகள் உண்டு.

  1. மஹரிஷி – குறிப்பிட்ட ஒரு மந்திரத்தைக் கண்டவர்.
  2. ஸ்வரம் – அந்த மந்திரத்திற்கான குறிப்பிட்ட உச்சரிப்பு அல்லது இசை அமைப்பு
  3. தேவதா – அந்த மந்திரத்தின் அதி தேவதை
  4. பீஜம் – மந்திரத்தின் வித்து போன்ற ஜீவ ஒலி.
  5. சக்தி – மந்திரத்திற்கான திவ்ய சக்தி
  • கீலகம் – கீலகம் என்றால் தூண் என்று பொருள்படும். அதை ஓதுபவர் இடைவிடாது முயன்று மந்திரத்தை அப்யசிப்பதை இது குறிக்கிறது.

இவை அனைத்தையும் அறிந்தவரே குரு. குறிப்பிட்ட மந்திரத்தை அப்யசித்து சித்தி பெற்று, உரிய சீடர்களுக்கு அவர் வழங்குவார்.

உச்சரிப்பு என்பது மிக முக்கியம். வேதங்களை ஓதுவதற்கென்று குறிப்பிட்ட மரபு, வரைமுறை உள்ளது.

உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம், தீர்க்க ஸ்வரிதம் ஆகிய இந்த நான்கும் உச்சரிப்பில் கையாளப்படுகின்றன.

உதாத்தம் என்றால் சாதாரண ஸ்வரத்தில் உச்சரிப்பதாகும்

அனுதாத்தம் என்றால் சாதாரண ஸ்வரத்திலிருந்து ஒரு  மாத்திரை இறக்கி உச்சரிக்க வேண்டும்.

ஸ்வரிதம் என்றால் சாதாரண ஸ்வரத்திலிருந்து ஒரு மாத்திரை ஏற்றி உச்சரிக்க வேண்டும்.

தீர்க்க ஸ்வரிதம் என்றால் சாதாரண ஸ்வரத்திலிருந்து இரண்டு மாத்திரைகள் ஏற்றி உச்சரிக்க வேண்டும்.

மந்திரத்தில் ஒலி அதாவது உச்சரிப்பு மிக முக்கியமானது என்பதை உணர்த்த யஜூர் வேதத்தில் வரும் ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

ஒரு சமயம் இந்திரனைக் கொல்ல எண்ணிய விருத்ராஸுரன் என்னும் அசுரன் தவம் செய்து இறைவனின் தரிசனத்தைப் பெற்றான்.

‘இந்த்ர சத்ரு வர்தஸ்வ’ என்று இந்திரனைக் கொல்ல வேண்டி அவன் கோரியது, ஸ்வர பேதத்தால் – அதாவது ஒலியை மாறுபட்டு உச்சரித்ததால் – இந்திரன் கொல்லும்படியான சத்ரு என்று ஆகியது; அவன் இந்திரனால் கொல்லப்பட்டான்.

இன்னும் ஒரு சம்பவம்.

தேவர்களை இல்லாமல் செய்வதற்காக பிரம்மனை நோக்கி கும்பகர்ணன் ஒரு பெரும் யாகம் செய்தான். பிரம்மா தரிசனம் தந்தார். அவரிடம் அவன் கேட்க நினைத்தது நிர்தேவத்வம் – அதாவது தேவர்கள் இல்லாத நிலை. ஆனால் அவன் கேட்டதோ நித்ராவத்வம். எப்போதும் தூங்குவது என்பதை! பிரம்மா அவன் கேட்டதைத் தந்தார்.பின்னர் அவன் வேண்டுதலின் பேரில் எப்போதும் தூங்காமல் ஆறு மாத தூக்கம், ஆறு மாத விழிப்பு என்ற நிலையைப் பெற்றான்.

ஆகவே சொல்லுக்கு சொல் தனித் தனியே பொருள் உண்டு.

ஓம் என்ற பிரணவ மந்திரத்தை 170 விதமாக உச்சரிக்க முடியும் என்று மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்னிபெஸண்ட் அம்மையாரோ இந்த பிரணவ மந்திரத்தை 250 விதமாக உச்சரிக்க முடியும் என்று கூறுகிறார். ஒவ்வொரு உச்சரிப்பிற்கும் பலன் வெவ்வேறாக இருக்கும். அதாவது அடையக் கூடிய சித்திகள் வேறு வேறாக இருக்கும்.

மந்திரத்தில் பிரதானமாக இருப்பது ஒலி. ஒலிக்குச் சக்தி உண்டு என்பதை க்ளாட்னி என்ற விஞ்ஞானி நிரூபித்திருக்கிறார்.

ஒரு தகட்டின் மீது நுண்ணிய  மணலைப் பரப்பி அதன் ஓரத்தில் வில் ஒன்றை இணைத்து வில்லை அதிரச் செய்வதன் மூலம் மணல் துகள்கள் அசைந்து அதிர்விற்கு ஏற்பப் பல்வேறு வடிவங்கள் உருவாவதை அவர் நிரூபித்துக் காட்டினார். இந்த வடிவங்களுக்கு க்ளாட்னி சித்திரங்கள் என்று பெயர். Chladni Patterns என்று  youtubeஇல் பதிவிட்டால் இவற்றை நீங்கள் பார்க்க முடியும்.

சரி அப்படியானால் மந்திரங்களை உச்சரிக்கவே முடியாதோ என்று யாரும் பயப்படத் தேவை இல்லை. இறைவன் திருமுன்னர் மனமும் நம் உணர்ச்சியுமே முக்கியம். எளிய உச்சரிப்பை யார் வேண்டுமானாலும் சுலபமாகச் சொல்ல முடியும். ராம, நமசிவாய, நாராயணா, ஹரே கிருஷ்ணா போன்றவற்றை யார் வேண்டுமானாலும் உச்சரிக்க முடியும்.

 மந்திரத்தை ஒருமுனைப்பட்ட மனதுடனும் ஈடுபாட்டுடனும், பக்தியுடனும் சொல்ல வேண்டும் என்று பெரியோர் சொல்கின்றனர்.

மந்திர ஹீனம் கிரியா ஹீனம் என்று ஆரம்பிக்கும் ஸ்லோகம் ஒன்றை பூஜை முடிவில் சொல்வது மரபு.

 அதாவது மந்திரத்தைத் தவறாக உச்சரித்தல், அல்லது பூஜை கிரியைகளில் சிலவற்றை விட்டு விட்டிருப்பது ஆகியவற்றை மன்னித்து எனது பிரார்த்தனையை ஏற்று அருள்க என ஒவ்வொரு பூஜையும் முடிவிலும் நாம் சொல்வது பாரம்பரிய மரபாகும்.

ஆகவே குரு மூலமாக மந்திரத்தை உச்சரிப்புடன் கற்று மனதை ஈடுபடுத்தி ஓதுவதால் நல்ல பலன் ஏற்படும் என்பது உறுதி. அதே சமயம், இறைவனது நாமங்களை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். அவையும் நலம் தரும் மந்திரங்களே என்று கூறி வாய்ப்பளித்த ஞானமயம் குழுவினருக்கும் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

நன்றி,வணக்கம்!

tags – மந்திரம், சக்தி, உச்சரிப்பு

INDEX 29 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES (Post No.8783)

MORE RARE SIVA PURANA PICTURES FROM OLD BOOK

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8783

Date uploaded in London – –6 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 8700 PLUS POSTS.

APRIL 2015 INDEX OF TAMIL ARTICLES

நீங்கள் தமிழ்ப் புலியா , தமிழக கிளியா, தமிழ் எலியா ;  1838; ஏப்ரல் 2015

இலக்கியம் பற்றி 31 அற்புதப் பொன்மொழிகள்; 1835; 29/4

பங்குனி உத்திரத்தில் ராமன் சிவன் கல்யாணம் ஏன் ; 1833; 28/4

வேதத்தில் தமிழ் உணவுகள் : வடை, பாயசம், பிட்டு ;1830; 27/4

வேதத்தில் சிகை அலங்காரம்; 1826; 24/4

வேதத்தில்  தங்கமும் ரத்தினைக் கற்களும் 1822; 23/4

கருணைக்கு அருணகிரி ;1817; 21/4

இளங்கோ, பீஷ்மர், தேவாபி செய்த மாபெரும் தியாகம்; 1814; 20/4

சகுனமும் ஆருடமும் வேத கால நம்பிக்கைகள் ; 1811; 19/4

சித்து சமவெளியில் கந்தர்வர்கள்; 1807; 17/4

வேதத்தில் கடலும் கப்பலும் ;1804;16/4

யுதிஷ்டிரர் பதில் ஏற்படுத்தி ய பரபரப்பு ;1801; 15/4

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன

கண்டோம் ; 2 குட்டிக்கதைகள் 1798; 14/4

தள்ளிவைக்கப்பட்ட ஜாதிகள் யார், எவர் 1796; 13/4

அபூர்வ ராமாயண படங்கள் ; பா லகாண்ட ம் ; 1795;

மொழி அழகு- ருதம், ம்ருதம், அம்ரு தம், ப்ரம் ருதம், சன்யான் ருதம் ;1795; 12/4

கஞ்சக்  கோமுட்டி , பேராசை பிராமணன் கதை; 1793; 11/4

சாமியார் தேன்  சட்டி உடைத்த கதை 1791, 10/4

ஆன்மிக அறிவியல் ஆய்வாளர் ச.நாகராஜன் அறிமுகம் ;1791; 10/4

தொல்காப்பியத்தில் எட்டு வகை த் திருமணங்கள் ,1789, 9’4

இந்து மதத்தில் காதல் கடத்தல் கல்யாணங்கள் , 1786, 8/4

பாணினி மாஜிக் , 1783;   7 ஏப்ரல் ; 1783

நோகாது உண்பவர் கல்வியை நோற்பவர் -சுவையான கதை; 6/4

வேதத்தில் பாரத நாட்டியம்; 5/4, 1777

கலியுக அறிகுறி- குருமார்கள் குலிங்க பாட்ஸி போல திரிவர்;

எட்டு வயதில் குழந்தை பெறுவர் 1774; 4/4

மனு ஸ்ம்ருதியில் மிருகங்கள் , 1771, 3/4

வில்வம், துளசியின் மகிமை ,1768; 2/4

கோவில்கள் பற்றி அப்பர் தரும் அதிசயத் தகவல் , 1765, ஏப்ரல் 1, 2015

XXXXX

APRIL 2015 INDEX OF ENGLISH ARTICLES #

Vedic seers knew earlier what European s ‘discovered’ later, Post 1839,30 April 2015

Floating Stone: Ramayana Wonder,1837;30/4

Aranya Kanda Pictures from Valmiki Ramayana,1836;29/4

31 Beautiful Quotes on Virtue and Excellence, 1834: 28/4

1832 S.NAGARAJAN POST; ALREADY LISTED SEPARATELY

Humility of indian poets!Varahamihira, Kalidasa, Kamban & Purandaradasa;1831: 27/4

Nakshatra Purusa: Worship of the Stellar Deity,27/4, Post 1829

1828 S.NAGARAJAN POST; ALREADY LISTED SEPARATELY

Milk and the Yoghurt in the Vedas;1827;25/4

What did Vedic Hindus eat? 1825: 23/4

1824 S.NAGARAJAN POST; ALREADY LISTED SEPARATELY

Why did Rama marry Sita on Panguni uththiram Day? 123;23/4

Vedic Hindus Hair style, 1821:22/4

1820 S.NAGARAJAN POST; ALREADY LISTED SEPARATELY

Dheeran Chinnamalai, a fighter to the last! 1819; 22/4

Gold in the Vedas, 1818;21/4

1816 S.NAGARAJAN POST; ALREADY LISTED SEPARATELY

Ayodhya Kanda of Ramayana in pictures ;1815:20/4

1813 S.NAGARAJAN POST; ALREADY LISTED SEPARATELY

Advanced Grammar and Linguistics in Vedic India;1812:19/4

1810 S.NAGARAJAN POST; ALREADY LISTED SEPARATELY

Conspiracy of Foreign Scholars ;1809:18/4

1808 S.NAGARAJAN POST; ALREADY LISTED SEPARATELY

Three books on Deity with a Thousand names: Vishnu Sahasranama; 1806; 17/04

1805 S.NAGARAJAN POST; ALREADY LISTED SEPARATELY

Gandharvas in the Vedas;1803; 16/4

1802 S.NAGARAJAN POST; ALREADY LISTED SEPARATELY

1800 S.NAGARAJAN POST; ALREADY LISTED SEPARATELY

Ships in the Rigveda , 1799: 14-

Two Stories: Guru and Parrot; Guru and Birds 1797;13/4

Picture Ramayana, balakondom,:1794: 12/04

Who are Vratyas? ( outlaws) 1794; 11/4

Divination in the Vedas, Babylonian and Etruscan:1792:10/4

Do your Good Acts Now! Yuthisthira Story,1790: 9/4

1788 S.NAGARAJAN POST; ALREADY LISTED SEPARATELY

Poetess and Historian Gangadevi, 1787; 8/4

1785 S.NAGARAJAN POST; ALREADY LISTED SEPARATELY

Marriage by abducting Girls in AncienrxIndoa, 1784,7/4

1782 S.NAGARAJAN POST; ALREADY LISTED SEPARATELY

Sanskrit Inscription s in South east Asia!, 1781; 6/4

1779 S.NAGARAJAN POST; ALREADY LISTED SEPARATELY

Four Indian Kings who did not want to Rule, 1778:5/4

1776 S.NAGARAJAN POST; ALREADY LISTED SEPARATELY

Only religion where woman is worshipped,1775;4/4

1773 S.NAGARAJAN POST; ALREADY LISTED SEPARATELY

Fake Ascetics (Gurus)of Kaliyuga, 1772; ¾

1770 S.NAGARAJAN POST; ALREADY LISTED SEPARATELY

More about Bharatanatya in the Vedas , 1769;2/4

1767 S.NAGARAJAN POST; ALREADY LISTED SEPARATELY

Dance in the Vedas, 1766; First April 2015

1764 S.NAGARAJAN POST; ALREADY LISTED SEPARATELY

TAGS- Index 29, April 2015 swaminathan, Posts

—–  SUBHAM—

தஞ்சையிலும் பஞ்சாபிலும் கபிஸ்தலம்!! (Post No.8782)

KAPISTHALA IS IN FAR LEFT IN GREEN COLOUR
KAITHAL= KAPISTHALA IS UNDER KURUKSHETRA

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8782

Date uploaded in London – –6 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வடக்கில் கிருஷ்ண ஜன்ம பூமியான மதுரா உளது. அதனால் கடல்கொண்ட தமிழ்ச் சங்க மதுராவை ‘தென் மதுரை’ என்று அழைத்தனர் . வடக்கில் இந்துக்களின் மிகப் பழைய புனித ஸ்தலமான காசி உளது. அதனால் தமிழ் நாட்டிலுள்ள காசியை ‘தென் காசி’ என்று அழைக்கிறோம்.. அதே போல வடக்கில் பாடலிபுரம் உளது, தெற்கில் திருப்பாதிரிப்புலியூர் என்று மாற்றிக்கொண்டோம்.  இது போல நிறைய ஊர்கள் தமிழ் நாடு மட்டிலும் இன்றி பல்வேறு இடங்களில் ‘தக்ஷிண கைலாசம்’ முதலியவற்றைக் காண்கிறோம். ஆனால் பாணினி சொல்லும் ஒரு விஷயம் வியப்பானது.

பஞ்சாபிலும் ஒரு  கபிஸ்தலம் இருந்தது. இப்பொழுது அது ஹரியானா மாநில எல்லைக்குள் கைதால் என்ற பெயருடன் விளங்குகிறது!

கும்பகோணத்தின் அருகில் ஒரு கபிஸ்தலம் இருக்கிறது. அங்குள்ள கஜேந்திர வரதர் கோவில் மிகவும் புகழ் பெற்றது ; கஜேந்திர மோட்சம் கதையும் மிகவும் பிரபலமானதே. தமிழ் நாட்டில் திருமோகூர் உள்பட பல வைணவத் தலங்களுடன் இக்கதை தொடர்பு படுத்தப்படுகிறது. அதற்கெல்லாம் முன்னதாக குப்தர்கால சிற்பங்கள் 2000 ஆண்டுகளாக நமக்கு இதைக் காட்டி வருகின்றன.

பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார் என்பதை கோல்ட்ஸ்டக்கர்  (Goldstucker) ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கிறார். ‘பாணினி கால இந்தியா’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிய வி.எஸ்.அக்ரவாலா கி.மு.நாலாம் நூற்றாண்டு என்று சொன்னபோதிலும் அவர் எழுதிய ஒவ்வொரு அத்தியாயமும் அவர் சொல்லும் ஆண்டு ‘தப்பு’ என்று காட்டுகிறது. ஏனெனில்  நாணயம், நடை உடை  பாவனை , அளவுமுறைகள், இலக்கண வழக்குகள் ஆகிய அனைத்திலும் காத்யாயனர், கெளடில்யர் காலத்துக்கும் பாணினி காலத்துக்கும் மிகப்பல வேறுபாடுகளைக் காண்கிறோம். புத்தர், மஹாவீரர் போன்ற பெயர்களையே பாணினியத்தில் காணமுடியாது ஆக 2700 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கபிஸ்தலம் இருந்தது உறுதியாகிறது.

கபிஸ்தலம் என்பது ஸம்ஸ்க்ருதப் பெயர் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது . அது மட்டுமல்ல ‘கபி’ என்றால் குரங்கு என்பதும் தெரிந்ததே.

முந்தைய பஞ்சாபில் , தற்போதைய ஹரியானா எல்லைக்குள் இருக்கும் கபிஸ்தலம் 2700 ஆண்டுக்கும் முந்தையது என்பதற்கு பாணினி நூலில் சான்றுள்ளது. ஆனால் கும்பகோணம் அருகிலுள்ள கபிஸ்தலம் அவ்வளவு பழமையுடையது அல்ல. அதற்கு கபிஸ்தலம் என்ற பெயர் வந்ததற்கான காரணங்களும் வலுவாக இல்லை. உ’ப்புக்குச் சப்பாணி ஊருக்கு மாங்கொட்டை’ என்று ஏனோ தானோ என்று அனுமனையும், வாலியையும் சுக்ரீவனையும் வலிய இழுத்து வந்து தொடர்புபடுத்துகின்றனர் . ஆகையால் வாலி- சுக்ரீவன்- அனுமன் தொடர்புக்கு நல்ல ஆதாரம் கிடைக்கும் வரை பஞசாபுக்கும் இதற்கும் தொடர்பு உண்டா என்று ஆராய்தல் நலம் பயக்கும்.

இரண்டு கபிஸ்தலம் பற்றியும் காண்போம்; ஒப்பிட்டு ஆராய்வோம்.

கைதால்(Kaithal=Kapisthal)  என்பது இப்பொழுது பஞ்சாப் எல்லையில் ஹரியானா மாநிலத்துக்குள் இருக்கிறது. ஆனால் இதன் பழைய பெயர் கபிஸ்தலம் என்பதை எல்லோரும் எழுதுகின்றனர் யுதிஷ்டிரர் இந்த நகரை ஸ்தாபித்தார். அங்கே ஆஞ்சனேயரின் தாயாரான அஞ்சனி தேவிக்கு ஒரு கோவிலும் உளது. இந்த இடத்தில் மட்டுமே சிவனுக்கு 108 கோவில்கள் உண்டு என்றும் அதில் ஒன்று ஏகாதச லிங்கக்கோவில் என்றும் ஊர் மக்கள் பெருமையாகக் கூறுகின்றனர். குருக்ஷேத்திரத்தைச் சுற்றியுள்ள 48 புண்ய ஸ்தலங்களில் கபிஸ்தலம் முக்கியமானது. 48 கோவில்களையும் வல ம் வருவோர் — பரிக்ரமம் செய்வோர்- இங்கு வருவார்கள் . இதையெல்லாம்  பார்க்கும்போது இது மஹாபாரத காலம் முதல் புகழ் பெற்ற ஊர் என்பது தெளிவாகிறது. மேலும் அனுமனின் தாயார் கோவில் இருப்பதால் கபி (குரங்கு) என்ற பெயரையும் தொடர்புபடுத்துகிறது.

இதை கும்பகோணம் அருகிலுள்ள கபிஸ்தலத்துடன் ஒப்பிட்டால் இதில் எந்த ஒரு விஷயத்தையும் காணமுடியவில்லை. கஜேந்திர மோட்சக் கதைக்கு அடுத்தபடியாக, அதற்குச் சம்பந்தமில்லாத வாலி- சுக்ரீவன் – அனுமன் கதையைத்தான் வலுக் கட்டாயமாகச் சேர்க்கின்றனர். ஆகையால் பஞ்சாப்-ஹரியானா கபிஸ்தலம் பெயர், இங்கே எப்படி வந்தது என்பதை  ஆராய்தல் அவசியம். வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பதை துருவி ஆராய்வோம்.

கபிஸ்தலம் பற்றி  பாணினி  மற்றும் கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ்  கூறும் வியப்பான செய்திகள் இதோ :–

கபிஸ்தல என்பதை கோத்திரங்களில் ஒன்றாக பாணினி குறிப்பிடுகிறார்.சூத்திரம் 8-3-91

பொதுவாக ரிஷிகளின் பெயரிலேயே கோத்திரங்கள் பெயர்கள்  அமையும். ஆகையால் கபிஸ்தல என்பதும் ரிஷியின் பெயரே. மெகஸ்தனீஸ் பஞ்சாபிலுள்ள ஒரு மக்கள் குழுவை ‘கம்பிஸ்தலோய்’ என்று அழைக்கிறார். இது கபிஸ்தல என்பதன் மருவு. அலெக்சாண்டரின் படையெடுப்பை எதிர்த்த காடக இனத்தினரோடு அவர்கள் இருந்திருக்கலாம். ஊர்ப்பெயரான கபிஸ்தலத்துடன் தொடர்பில்லாமலும்  இருந்திருக்கலாம்..

பாணினி அலெக்ஸ்சாண்டருக்கும் அசோகருக்கும் பல நுறு ஆண்டுகள் முன்னால் வாழ்ந்தவர். ஒரு இனமோ, குழுவோ நகர்ந்து முன்னேற முன்னேற அவர்கள் வாழும் நாடோ , ஊரோ , பிரதேசமோ விரிவடைவதைக் காண்கிறோம்.

தமிழ் நாட்டின் கபிஸ்தலத்தோடு ரிஷி பெயரோ இனப் பெயரோ சம்பந்தப்படவில்லை .இரண்டு கபிஸ்தலங்களும் ஆராய்ச்சியாளருக்கு சவால் விடுகின்றன .

XXXX

பாணினியில் பிராமண அதிசயம்!

பிராமணர்கள் உலக மஹா அதிசயம் என்றும் அவர்கள் வாழும் படிம அச்சுக்கள் (Living Fossils) என்றும் பழமையைக் காக்கும் இனம் என்ற வரிசையில் கின்னஸ் புஸ்தகத்தில் அவர்களைச் சேர்க்க வேண்டும் என்றும் நான் நீண்ட கட்டுரைத் தொடர் எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நீண்ட காலம் பழமையான விஞ்ஞான விஷயங்களைக் கடைப்பிடிக்கும் இனம் என்பதைக் காட்டி இருந்தேன் .

சப்த ரிஷி மண்டலம் எனப்படும் பெருங்கரடி நட்சத்திரக் கூட்டத்தில் (Ursa Major= Great Bear)  7 நட்சத்திரங்கள் இருப்பதும் அதிலுள்ள அருந்ததி/வசிஷ்ட நட்சத்திரத்தை முதலிரவு அறைக்குள் நுழைவதற்கு முன்பாக புதுமணத் தம்பதிகள் ‘அருந்ததி காட்டல்’ என்ற சடங்கில் அருந்ததி நட்சத்திரத்தைக் காண்பது பற்றியும் அனைவரும் அறிவர். சங்க இலக்கிய நூல்களில் அருந்ததி வழிபாடு , சப்த ரிஷி வழிபாடு இரண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிராமணர்கள், தினசரி மூன்று முறை சூரிய வணக்கம் செய்வர். இதை ‘சந்தியா வந்தனம்’ என்பர். இதன் இரண்டாவது பகுதியில் நான்கு வேதங்கள் புகழும் காயத்ரி மந்திரம் உளது. அந்த காயத்ரீ தேவதையை இதயத்துக்குள் எழுந்தருளச் செய்ய ஒரு மந்திரம் சொல்லுவார்கள் .

அப்பொழுது தலையின் முன் பகுதியில் கையை வைத்துத் தொட்டு, ஏழு ரிஷிகளின் பெயர்களைச் சொல்லுவர். (இதை நானும் லண்டனில் தினமும்  செய்து வருகிறேன்.) அதில் நாங்கள் சொல்லும் ரிஷிகளின் பெயர்கள் ஏழும் அதே வரிசையில் 2700 ஆண்டுகளுக்கு முந்தைய பாணினியின்  வியா கரணத்தில் வரிசை மாறாமல்  உளது.

இதோ அந்த சூத்திரம்—

சூத்திரம் 2-4-65-ல் அவர் சில இலக்கண விதிகளை விளக்குகிறார்.

‘அத்ரி ப்ருகு குத்ஸ வசிஷ்ட  கோ த்தமாரங்கிரேப் ய ஸ் ச’

என்கிறார். அவர் விளக்கும் இலக்கண விதிகளை நாம் இப்போது அலச வேண்டியதில்லை.

இதே வரிசையில் தான் பிராமணர்கள் தினசரி மூன்று முறை 7 ரிஷிகளின் பெயர்களைச் சொல்கிறா ர்கள் —

அத்ரி, பிருகு, குத்ஸ, வசிஷ்ட, கெளதம, காஸ்யப, ஆங்கிரஸ என்பன அந்த 7 ரிஷிக்கள். சில பகுதிகளில் பெயர்கள் ஒன்றிரண்டு மாறுபட்டிருக்கும் . அதே கோத்திரத்தைச் சேர்ந்த ரிஷி என்பதால் பெயர் வரிசையில் மாறுதல் இல்லை.

ஆக 2700 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமணர்கள் சப்த ரிஷிக்களின் பெயர்களை ஒரே மாதிரியாகச் சொல்லி  வணங்கி வருகின்றனர்.

–சுபம்–

TAGS – பிராமணர்கள், அத்ரி ப்ருகு குத்ஸ, கபிஸ்தலம்,

கோயில், கோவில் இரண்டில் எது சரி? (Post 8780)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8780

Date uploaded in London – – 6 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

QUESTION ASKED BY AMBI IYER (IN OUR COMMENT BOX.)

5-10-2020 ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில்ஒளிபரப்பட்ட கேள்வி-பதில்

கோயில், கோவில் இரண்டில் எது சரி?

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

கோயில், கோவில் இரண்டில் எது சரி என்பது கேள்வி!

இந்தக் கேள்விக்கான பதில் இரு வார்த்தைகளும் சரியே என்பது தான். கோயில் என்ற வார்த்தையை சங்க இலக்கியத்திலும் சைவத் திருமுறைகளிலும் வைணவ இலக்கியத்திலும் காண்கிறோம்.       கோயில் என்பது கோ, இல் ஆகிய  இரு வார்த்தைகளின் சேர்க்கை. கோயில் என்பதற்கு இறைவன் உறைந்திருக்கும் இடம் என்று பொருள். கோ என்பதற்கு மன்னன் என்ற பொருளும் உண்டு என்பதால் மன்னன் வாழும் இல்லம் அதாவது அரண்மனை என்ற பொருளும் உண்டு.   

அரண்மனை என்ற பொருளில் கலித்தொகையில் வரும் வரிகள் இவை:

பேயும்பேயும் துள்ளல் உறுமெனக்                                        கோயிலுட் கண்டார் நகாமை வேண்டுவல் (கலி 94- வரிகள் 38, 39)

புறநானூறில்  127ஆம் பாடலில் சாயின் றென ஆஅய் கோயில் என்ற வரியைக் காணலாம் (வரி 6)

அதே புறநானூறில் 378ஆம் பாடல் ஐந்தாம் வரி நற்றார்க் கள்ளின் சோழன் கோயில் என்று  கூறுகிறது. அதாவது சோழனது அரண்மனை என்று பொருள்.

வெண்கோயில் மாசூட்டும் என்று பட்டினப்பாலையும் (வரி 50) திருக்கிளர் கோயில் ஒருசிறைத் தங்கி என்று பொருநர் ஆற்றுப்படையும் (வரி 90) இதே அரண்மனை என்ற பொருளைத் தரும் வரிகளாகும்.

கோயில் என்பது இறைவன் உறையும் இடம் என்ற பொருளில் வரும் சங்க இலக்கியப் பாடல்களும் நிறைய உண்டு. புறநானூறு 241ஆம் பாடல் மூன்றாம் வரி வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலும் என்கிறது. இங்கு நெடியோன் கோயில் என்றால் இந்திரன் கோயில் என்று பொருள்படும்.

BALAJI TEMPLE, TIRUPATI

பட்டினப்பாலை 286வது வரி கோயிலொடு குடிநிறீஇ என்று சொல்லும் போது இது தெய்வம் உறையும் கோயிலைக் குறிப்பிடுகிறது.புகார் நகரத்தில் சிவன்கோயில், பலராமனுக்கும் கண்ணனுக்கும் கோயில் இருந்ததைச் சிலப்பதிகாரம் இந்திர விழவு ஊர் எடுத்த காதையில், ‘பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்’ என்றும் வால்வளை  மேனி வாலியோன் கோயிலும் என்றும் நீலமேனி நெடியோன் கோயிலும் என்றும் குறிப்பிடுகிறது.

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்கிறது உலகநாத பண்டிதர் இயற்றிய உலக நீதி.

ஓகார ஈற்றைக் கொண்ட கோ என்னும் மொழியினை இல் என்னும் வருமொழியோடு சொல்லின் ஓகாரம் மிகாது இயல்பாய் முடியும் போது கோவில் என்று ஆகிறது.

இரு வார்த்தைகள் சேரும் போது இசைபட அவை சேர வேண்டும் என இலக்கண விதி கூறுகிறது. இசையின் திரிதல் நிலைஇய பண்பே என தொல்காப்பியம் கூறுகிறது. ஆகவே இசையொடு திரியும் போது வரும் கோவில் என்பதும் சரி தான்; கோயில் என்பதும் சரிதான்.

திருக்கோயில் என்றாலேயே அது சிதம்பரத்தைத் தான் குறிக்கும் என்பது வழக்கு. கோயில் என்று முடியும் தேவாரத் தலங்கள் பல உண்டு. அம்பர்ப் பெருந்திருக்கோயில், கண்ணார்கோயில், தில்லைக் கோயில், நன்னிலத்துப் பெருங்கோயில், மீயச்சூர் இளங்கோயில், வைகல் மாடக் கோயில் என்று இப்படிப் பல கோயிலில் முடியும் தலங்கள் உண்டு.

அதே சமயம் நாகர்கோவில், சங்கரன்கோவில், அழகர் கோவில் என்பதையும் வழக்கில் கூறப்படும் சொற்களாக நாம் கொண்டுள்ளோம்.ஆகவே இறைவன் உறையும் இடத்தை கோயில் என்றும் சொல்லலாம், கோவில் என்றும் சொல்லலாம்.

தொன்றுதொட்டு தமிழகத்தில் அனைவராலும் கூறப்படும் பழமொழிகளில் கோயிலும் உண்டு; கோவிலும் உண்டு. தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. படிக்கிறது திருவாய்மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்; ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி இப்படி ஏராளமான பழமொழிகளில் இரு சொற்களையும் காணலாம்.

இரண்டிற்கும் பொருள் ஒன்றே. வண்ணத்தை colour color என்று இருவிதமாக ஸ்பெல்லிங் குறிப்பிடுவது போல எல்லா  மொழிகளிலும் காலத்திற்கேற்ப மாற்றங்கள் உண்டு. கோவில், கோயில் இரண்டும் சரியே, ஒன்றே தான் என்று தெளிந்து கொள்ளலாம்!

நன்றி கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்

TAGS- கோயில், கோவில்

**

5-10-20 ஞானமயம் பங்களூர் செய்தி மடல் (Post 8779)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 8779

Date uploaded in London – –5 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ZOOM BROADCAST ON 5TH OCTOBER VIA FACEBOOK.COM/GNANAMAYAM

வணக்கம்.

ஞானமயம் வழங்கும் பங்களூர் செய்தி மடல்.

வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.

தலைப்புச் செய்திகள்

சிருங்கேரியில் நடக்கவுள்ள நவராத்திரி விழாவை தொலைக்காட்சியில் காணலாம்.

வாழும் கலை நிறுவனத்திடமிருந்து நவராத்திரி அழைப்பு

புகழ்பெற்ற புண்ய ஸ்தலமான சிருங்கேரி பற்றி ஒரு சிறு அறிமுகம்

விரிவான செய்திகள் :-

கோலாகலமாக வருடந்தோறும் நடைபெறும் நவராத்திரி திருவிழா, இந்த ஆண்டும் ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தில் வழக்கம் போல நடைபெறும்.  கோவிட் நோய் பற்றிய கட்டுப்பாடுகளின் காரணமாக, குறிப்பிட்டவர்கள் மட்டுமே உரிய முறைப்படி உற்சவத்திற்கு அழைக்கப்படுவர். என்றாலும் கூட, ஆங்காங்கு இருக்கும் பக்தர்கள் தாங்கள் இருந்த இடத்திலிருந்தே இந்த உற்சவ நிகழ்ச்சிகளை ஸ்ரீசங்கரா தொலைக்காட்சியில் காணலாம். அன்பர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அன்னை சாரதா தேவியின் அருளுக்குப் பாத்திரமாகுமாறு, கேட்டுக் கொள்கிறோம்.

அடுத்து, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் நிறுவப்பட்டு, பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமான வாழும் கலை – The Art of Living – நிறுவனம், அனைவருக்கும் விடுத்துள்ள நவராத்ரி அழைப்பு இது:-This Navratri, let’s strengthen our collective resolve for peace and health across the world.                                                                                                  The festival marks the time to go inwards, pray, chant, be grateful, and hopeful. Stay safe, in hope, and optimism. Stay in resolve.

அக்டோபர் 16ஆம் தேதி அன்று முதல் The Art of Living துவங்கும் பல நிகழ்ச்சிகளில் நிகழ்நிலையில் அதாவது ONLINE-இல் அனைவரும் கலந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு live.artofliving.org என்ற இணையதளத்தை அணுகலாம்.

நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது பங்களூர் செய்தி மடல்

அடுத்து திவ்ய ஸ்தலமான சிருங்கேரி பற்றி ஒரு சிறு அறிமுகம்.

தொன்றுதொட்டு இருந்துவரும் ஹிந்து தர்மத்திற்கு புத்துயிர் கொடுக்க அவதரித்த ஆதி சங்கரர், பூர்வ மீமாம்ஸகர்களின் கொள்கையை வலியுறுத்திய குமாரில பட்டரின் சீடரான மண்டனமிஸ்ரரை, வாதத்திற்கு அழைத்தார். வாதப் போரைத் தொடங்கிய போது அந்த வாதுப் போருக்கு நீதிபதியாக இருந்தவர் மண்டனமிஸ்ரரின் மனைவி உபயபாரதி. இருவர் கழுத்திலும் மாலையை அணிவித்துக் கொள்ளச் சொன்ன உபயபாரதி,  வாதத்தில் யார் கழுத்தில் உள்ள மாலை வாடுகிறதோ அவரே தோற்றவர், என்று அறிவித்தார். பதினேழு நாட்கள் நடந்த வாதத்தில், மண்டனமிஸ்ரரின் கழுத்தில் இருந்த மாலை வாடியது. சங்கரர் வெற்றி பெற்றார்.

பின்னர் உபயபாரதியுடனும் வாதம் செய்து, அவரையும் வென்றார் சங்கரர்.

போட்டி விதியின் படி மண்டனமிஸ்ரர் துறவு மேற்கொண்டார். அவருக்கு சுரேஸ்வரர் என்ற சந்யாச நாமம் அளிக்கப்பட்டது.

தனது சீடர்களுடன் தெற்கு நோக்கி வந்த சங்கரர் சிருங்க கிரியை வந்தடைந்தார்.

சிருங்க கிரி, மஹரிஷி ரிஷ்ய சிருங்கர் தவம் புரிந்த புண்ய ஸ்தலமாகும். பவித்ரமான துங்கா நதிக்கரையில் அமைந்துள்ள சிருங்க கிரியின் அற்புதமான இயற்கை வனப்பில் மூழ்கினார் சங்கரர். 

அவர் அங்கு ஓரிடத்தில் ஒரு அரிய காட்சியைக் கண்டு பிரமித்தார்.      

கர்ப்பமுற்ற தவளை ஒன்று வெயிலின் கொடுமை தாங்காமல் தவிக்க, நல்ல பாம்பு ஒன்று இரக்கம் கொண்டு அதன் மீது படம் எடுத்து நிழல் கொடுத்துக் கொண்டிருந்தது. இதுவே தவம் செய்ய சிறந்த இடம் என நிர்ணயித்த சங்கரர்  அங்கே ஸ்ரீ சக்ரத்தை ஸ்தாபித்து சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தை நிறுவினார். அந்த பீடத்திற்கு சுரேஸ்வரரை முதல் ஆசாரியராகச் செய்து வேத பிரசாரம் செய்யுமாறு ஆணையிட்டார். அதிலிருந்து அந்த ஆசாரிய பரம்பரை, தொடர் சங்கிலியாக இருந்து வருகிறது. 34வது பீடாதிபதியாக இருந்து அருள் புரிந்த ஸ்ரீ சந்திரசேகர பாரதி அவர்களின் சரித்திரம் அற்புதமான ஒன்று. அவரைத் தொடர்ந்து 35வது பீடாதிபதியாக ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்தர் வீற்றிருந்து அருள் பாலித்தார். இப்போது 36வது பீடாதிபதியாக அருளாட்சி புரியும் ஸ்ரீ பாரதி தீர்த்தர் பல்மொழி வல்லுநர். அவரது பெருமையும் புகழும் உலகெங்கும் பரவியுள்ளதை அனைவரும் அறிவர். சிருங்கேரி மடத்தின் உள்ளே இருக்கும் ஸ்ரீ சாரதை, சங்கர பகவத்பாதர், வித்யா சங்கரர், ஜனார்த்தனர், சக்தி கணபதி, வாகீஸ்வரி, ராமர் உள்ளிட்ட ஏராளமான கோவில்களை தரிசித்து அன்பர்கள் பக்தி பரவசம் அடைகின்றனர். சிருங்கேரி, கர்நாடகத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ளது. பங்களூரிலிருந்து சிருங்கேரி சுமார் 258 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  இதிலிருந்து 83 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஸ்தலம் உடுப்பியாகும். மக்கள் தொன்று தொட்டு பயபக்தியுடன் வணங்கி வரும் அன்னை ஸ்ரீ சாரதா தேவி அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

இதுவரை நீங்கள் கேட்டது பங்களூர் செய்தி  மடல்.

வழங்கியது ப்ரஹன் நாயகி சத்யநாராயணன்.

நன்றி!

tags- சிருங்கேரி