மூன்று கிரகம் உச்சம் – மந்திரி பதவி நிச்ச(ய)ம் – PART 2 (Post.8625)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8625

Date uploaded in London – –4 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மூன்று கிரகம் உச்சம் – மந்திரி பதவி நிச்ச(ய)ம்  – 2

என்கண்ணில் அவர் இருந்தால்

அவர் கண்ணில் நான் இருந்தால்……பிரச்சினை ஏதுமில்லை!!!!


நான் பயந்து போய் என் சேரை பின்னால் இழுத்துக்
கொண்டேன். அவர் கைக்கு எட்டாதபடி பார்த்துக்கொண்டேன்
அன்று ஆடி வெள்ளிக்கிழமை.பால்பாயசம் கொடுத்தேன்.


மலே பேச ஆரம்பித்தார் மெதுவாக…….
என்ஜாதகத்தை பாருங்கள் சார் 3 கிரகம்  உச்சம்
மற்றவை பரவாயில்லை.நீங்களே சொல்லுங்கள்………

உங்களுக்கு ஜோதிடம் தெரியுமா??? 


கொஞ்சம் கொஞ்சம்…..பக்கத்துவீட்டு மாமாவும் பார்ப்பார்
சூரியன் எங்கே…மேஷத்தில்…. எந்த நடசத்திரத்தில்???


கார்த்திகையில்…..

இதோ பாருங்கள் இது மிகப்பெரிய ஜோதிட புத்தகம்

இதன்பெயர் “உத்திர கலாம்ருதம்”
இதிகிரக உச்ச நீச அட்டவணை.இதில் பாருங்கள்


சூரியன்—10 டிகிரி உச்சம் என்று போட்டிருக்கிறதா?????
ஆகையினால் உங்கள் சூரியன் உச்சத்தில் இல்லை….
வாருங்கள் குருவுக்கு போவோம்.அது பார்க்க 5 டிகிரி….
புனர்பூசம் , பூசம் 1 ம்பாதம்மட்டுமே…..உங்கள் உச்ச குரு
உச்சத்தில் இல்லை…… சரி அடுத்த கிரகம் எது???


ஜாதகத்தை பாய்ந்து எடுத்துக்கொண்டார்…….என்னதான்
சொல்கிறீர்? கடைசியாக….
உங்களுக்கு மந்திரி பதவி மட்டுமில்லை, உங்க ஜாதக
விசேஷத்திற்கு முந்திரி பருப்பு கூட கிடைக்காது…..!!!!



நிறையப்பேர் ஜாதகத்தை மேலுழுந்தவாரியாக பார்த்து விட்டு
பலன் சொல்லிவிடுகிறார்கள். இப்போது நேரமே யாருக்கும்
போதவில்லை…..எல்லாம் ஜூம் ZOOM ,டெலிக்ராம் , டீம் , போடிம்
யாகூ சேட் என்று அவசரம் அவசரமாக பாரத்து “கத்துக்குட்டிகள்”
( நான் இல்லை) புதிதாக கற்றுக்கொள்கிறவர்கள் சொல்லிவிடுகிறர்கள்!!!


இத்துடன் இருக்கும் அட்டவணையைப் பாருங்கள்
உச்சம்எந்தந்த டிகிரிகளில் நீசம்  எந்தந்த டிகிரிகளில் என்று
கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்தால்  நீங்களே தெரிந்து
கொள்ளலாம்.டிகிரி, பாதம் பார்த்து பலன் சொல்லவும்.
அவர் பாடிக்கொண்டே போனது என் காதில் விழுந்தது

போனால்போகட்டும் போடா……இந்த உலகத்தில்
நிலைத்த மந்திரியாரடா…….??


THANKS வணக்கம்

tags- கிரகம் உச்சம் – 2, மந்திரி பதவி,



1947: INDEPENDENCE OR TRANSFER OF POWER ? -1 (Post No.8624)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8624

Date uploaded in London – – – –4 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

1947: INDEPENDENCE OR TRANSFER OF POWER ? -1

By R.Nanjappa

Introduction :- This is a summary statement, in the light of Dharampal’s observations about how Gandhiji’s ideals were discarded in free India. I have put it in historical perspective: tracing briefly how the idea of Independence got transformed during the freedom struggle. Everything we now have -civil and criminal justice, administrative system, education, law and order- is as formulated by the British! The average Indian today is not aware of these facts.

And hence this article – R.Nanjappa


India attained Independence on 15 August 1947- so are we all taught. What really happened?
To know that, we should know what we really wanted, what we meant by Independence, and what finally came to be on or after that day. 

 INDIAN NATIONAL CONGRESS: MODERATES AND CONCESSIONS

A.O Hume, Dadabhai Naoroji, William Wedderburn



Popular mind associates Indian National Congress with the freedom movement. But the Congress did not start as an outfit to demand freedom for the country. [Nor did the Congress, even under Gandhiji, demand complete freedom, till December,1929.] It was started by some Englishmen and   English educated Indians  to voice their grievances and extract concessions..  They belonged to professions such as lawyers, teachers and government service- ie those that depended on government for a living, and those that served the colonial power. They were in fact the instruments of colonial control. They believed that the British rule was a boon, and they believed in the sense of its justice and fair play. They met, prayed and petitioned the government. The British govt treated them with due contempt. Thus the Congress then did not demand freedom, but a greater share in the spoils, seeking minor constitutional and administrative concessions.

However, gradually they focused on economic issues and development. Some members like Dadabhai Naoroji, Gopal Krishna Gokhale did have a vision of self-government (within the empire) achieved by following existing law. [That is, they wanted to administer colonial rules instead of the colonists themselves.] Dadabhai Naoroji even wrote a book , “Poverty and Un-British Rule in India” (1902) exposing how Britain was draining the wealth of India. They came to be called ‘Moderates’. They did really raise the idea of modern nationalism, though it was confined to the English educated middle classes. In its time, it did serve the cause of nationalism in its own limited way.This phase of the Congress effectively ended in 1905. 



RISE OF TRUE NATIONALISTS

LAL-BAL-PAL

The main problem with the moderate group was that it had no idea of Independence. It relied on British benevolence, rather than national strength, and failed to gauge the true nature and intentions of imperialism and its ruthlessness, behind the facade of law and justice. Its method was too slow even for the younger elements of the day. The younger elements also resented the efforts at complete Westernisation of India. 

The partition of Bengal in 1905 provided the spark and immediate platform for these young elements to assert themselves. Thus was the true Nationalist group, called Extremists by some, was born. They demanded nothing less than “Swaraj”, complete Independence. Lala Lajpat Rai. Bepin Chandra Pal and Bal Gangadhar Tilak were the three top leaders, affectionately called Lal-Pal-Bal.

 But the real brain behind the theory of true Nationalism was Sri Aurobindo. His writings on the theme, collected under the head Bande Mataram , provide even today the best statement of nationalism in all its aspects. His advocacy was so strong, his language so clear and effective, the British had to sit up and  take serious notice. He did not write like other Indians, but wrote even  better than most Englishmen. These Nationalists asserted themselves in the Surat congress in 1907, where a split in the organization occurred.. These leaders were so successful in rousing the nation that the British govt took strong repressive measures.. Tilak was imprisoned at Mandalay for 6 years from 1908. Viceroy Lord Minto (correctly) identified Sri Aurobindo as  the most dangerous person, and the authorities were determined to get rid of him somehow. Their efforts to charge him for sedition failed. He was implicated in a false case and put in solitary confinement in Alipore jail from May, 1908. He was released a year later by the court as no evidence had been found against him. He had a mystical experience in jail and abandoned active politics in 1910.

But before leaving active politics, Sri Aurobindo had done substantial work- which no one else had- before or after.

While Tilak had talked of Swaraj as birthright, it was Sri Aurobindo who gave it substance as complete Independence from Britain ( full 25 years before Gandhiji adopted it), adoption of Swadeshi and boycott of foreign goods, promotion of national education, settlement of disputes outside British courts, and the improvement of the condition of the downtrodden. The method he advocated was Passive Resistance.


Sri Aurobindo in 1909
[It may be noted that Gandhiji adopted these ideas later., but without acknowledgement to Sri Aurobindo ].

These formed the basic framework of the agitation against Bengal Partition in 1905 and completely electrified the people, especially the youth.The Bengal partition was annulled!

 Sri Aurobindo also taught us that the country was not a mere geographical entity but a Sacred Power, and that India was rising to fulfill its mission in the world. Thus with Sri Aurobindo , Swaraj was not a mere political slogan. “Vande Mataram” became the anthem of the Nationalists.

However with the arrest of the leaders, and the annulling of the Partition, the national spirit did receive a set back. The First World War complicated matters. Tilak’s health broke down during imprisonment, and he mellowed down on release. He founded the Home Rule movement with   Annie Besant, which only demanded self rule under the British empire. But this failed to sufficiently enthuse the nation.

     *      to be continued

tags – independence or transfer-1

தீபாவளி பண்டிகை பற்றி பாரதியார்-Part 2(Post .8623)

Sculpture of Poet Bharati with his wife Chellamma

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8623

Date uploaded in London – – 4 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பாரதியார் தீபாவளி பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளைப் பற்றி கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளாரா? – 2

ச.நாகராஜன்

ஒவ்வொரு திங்களன்றும் இந்திய நேரம் மாலை 6-30க்கு – லண்டன் நேரம் பகல் 1.30க்கு ஒளிபரப்பாகும் ஹிந்து மதம் பற்றிய கேள்வி- பதில் நிகழ்ச்சி மற்றும் ஹிந்து ஆலயச் சிறப்புச் செய்திகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதை www.tamilandvedas.com நேயர்கள் நன்கு அறிவர். இதற்கு உலகெங்குமுள்ள அன்பர்கள் கேள்விகளை அனுப்பி வருகின்றனர்.

31-8-2020 அன்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் வந்த கேள்வி ஒன்று இது:

பாரதியார் தீபாவளி பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளைப் பற்றி கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளாரா?

இதற்கு பதில் அளிக்கும் பொறுப்பு எனக்கு வந்தது.

அந்தப் பதிலின் (உரையின்) சாரத்தின் தொடர்ச்சி இதோ:-

மகர சங்கராந்தி எனக் கொண்டாடும் சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் முக்கியமான ஒன்று. சூரிய ஸ்தோத்திரம் என்ற தலைப்பில் கவிதை ஒன்றை பாரதியார் இயற்றியுள்ளார்.

அவர் மஹாசக்தி பஞ்சகத்தைப் பாடியுள்ளார்.

ஜென்மாஷ்டமி அல்லது கண்ணனது பிறப்பைப் பற்றிக் ‘கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்’ என்று துவங்கும் பாடலைப் படைத்துள்ளார். அவரது கண்ணன் பாட்டுக்கள் குறிப்பிடத் தகுந்தவை.

நவராத்திரி பண்டிகையின் உட்பொருளை விளக்கும் விதமாக இரு கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். இரு கவிதைகளையும் படைத்துள்ளார்.

அவரது கட்டுரையின் சில பகுதிகளை இங்கு பார்ப்போம்:

“ஒன்பதிரவு பராசக்தியைப் பூஜை செய்கிறோம். லக்ஷ்மி என்றும் ஸரஸ்வதி என்றும் பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என மூன்று தொழில் நடத்துவது.

 ஹிமாசலந் தொடங்கிக் குமரி முனை வரை, வேதத்தை நம்பும் கூட்டத்தார் எல்லாம் இந்தப் பூஜை செய்கிறோம்.”

“சக்தி : நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி.”

“ஒவ்வொருவருக்கும் மூன்று விதச் சக்தி வேண்டும்,  1.அறிவு. 2. செல்வம். 3. தைரியம். இந்த மூன்றும் நமக்கு இஹலோகத்திலே கிடைக்கும் படியாகவும், இதனால் பரலோக இன்பங்களும் சாத்தியமாகும்படியாகவும் நாம் தெய்வத்தை வழிபடுகிறோம்.”

“விக்ரமாதித்யன் வணங்கிய தெய்வம். காளிதாஸனுக்குக் கவிதை காட்டிய தெய்வம்; பாரத நாட்டு மஹாஜனங்கள் இன்னும் தலைமையாகக் கொண்டாடும் தெய்வம்;  ஸ்ரீமந் நாராயண மூர்த்தியின் சக்தியாக விளங்கும் லக்ஷ்மி தேவதை; சிவபிரானுடைய வலிமையாகத் திகழும் பார்வதி; பிரமதேவன் தலைவியாகிய சரஸ்வதி. மூன்று மூர்த்திகள், மூன்று வடிவங்கள், பொருள் ஒன்று, அதன் சக்தி ஒன்று.”

நவராத்திரிப் பாட்டு என்ற தலைப்பில்,

“மாதா பராசக்தி வையம் எலாம் நீ நிறைந்தாய்!

ஆதாரம் உன்னை அல்லால் ஆர் எமக்குப் பாரினிலே”

என்று தொடங்கும் பாடலையும்,

“உஜ்ஜயினீ! நித்ய கல்யாணீ!” என்று துவங்கும் பாடலையும் அவர் படைத்துள்ளார்.

இன்னொரு முக்கியமான சம்பவத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

இந்தியா பத்திரிகை நடத்த ஆக்கமும் ஊக்கமும் பொருளுதவியும் தந்த மண்டயம்  ஸ்ரீநிவாஸாரியார் பாரதியார் புதுவை வந்ததைத் தொடர்ந்து அவரும் சென்னையிலிருந்து புதுவைக்கு வந்தார்.

அவருக்கு யதுகிரி என்ற புதல்வி உண்டு. அவர் அப்போது சிறுமி. பாரதியார் தனது கவிதைகளை எல்லாம அவரிடம் பாடிக் காண்பிப்பார்.

யதுகிரி அம்மாள், பாரதியார் பற்றிய தனது நினைவுகளை, “பாரதி நினைவுகள்” என்ற நூலாக எழுதி வெளியிட்டுள்ளார்.

அதில் வரும் சம்பவம் இது.

ஒரு முறை சிவராத்திரி கொண்டாடும் சிவபக்தர்கள் பாரதியாரை அணுகி, சிவராத்திரி அன்று பஜனை செய்தவாறே ஊர்வலமாகச் செல்லும் எங்களுக்காக ஒரு கவிதை எழுதித் தாருங்கள் என்று கேட்டனர்.

உடனே பாரதியார் தந்த கவிதை தான் ‘முருகா முருகா முருகா’ என்ற அற்புதமான கவிதை.

‘முருகா முருகா முருகா

வருவாய் மயில் மீதினிலே

வடிவேலுடனே வருவாய்

தருவாய் நலமும் தகவும் புகழும்

தவமும் திறனும் தனமும் கனமும்’

என்ற பாடலைப் பாடிய பாரதியார், ‘20 பேர் கூட்டாகச் சேர்ந்து இதைப் பாடினால் பெரும் சக்தி பிறக்கும்’ என்றார்.

யதுகிரி அம்மாள் கூறும் இன்னொரு சம்பவம் மூன்று காதல் பாடல் பிறந்தது எப்படி என்பதை விவரிக்கிறது.

ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் புதுவை கடற்கரையில் பேண்ட் வாத்தியக்காரர்கள் பேண்ட் வாசிப்பது வழக்கம். ஒரு மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் அவர்களைச் சுற்றி அனைவரும் கூடுவர். குழந்தைகள் கும்மாளம் போடும்.

ஒரு வியாழக்கிழமை பாரதியார், அவரது புதல்வி தங்கம்மாள் பாரதி, அவர் மனைவி செல்லம்மாள் பாரதி, யதுகிரி ஆகிய நால்வரும் கடற்கரைக்குச் சென்றனர்.

அந்த பேண்ட் வாத்திய சத்தம் பெரிதாக இருக்கவே பாரதியார், ‘சற்று அந்தப் பக்கம் போவோம்’ என்றார்.

உடனே தங்கம்மாள் பாரதி, “இந்த இசை எனக்குப் பிடித்திருக்கிறது, இது  போல் நம்மால் பாட முடியுமா?” என்றார்.

பாரதியார், “ஏன் முடியாது, இதை நமக்குத் தக பாடிக் கொள்ளலாம்!” என்றார்.

உடனே தங்கம்மாள், “அப்படியானால் இந்த  மெட்டில் எனக்கு சரஸ்வதி மேல் ஒரு பாட்டுப் பாடித் தாருங்கள்” என்றார்.

அப்போது உச்ச ஸ்தாயி முடிந்து இசை சற்று கீழ் ஸ்தாயிக்கு வந்தது.

உடனே, யதுகிரி, “இது எனக்குப் பிடித்திருக்கிறது. இது போல எனக்கு லக்ஷ்மி மீது ஒரு பாடல் பாடித் தாருங்கள்” என்றார்.

பாரதியார் உடனே, ‘லக்ஷ்மி மீது பாடல் தருகிறேன்’ என்றார்.

இதைக் கேட்ட செல்லம்மாள் பாரதி, “காசி, கல்கத்தாவில் எல்லாம் துர்க்கையை வலிமைக்காக வழி படுவது வழக்கம். நமது சங்கடங்கள் எல்லாம் தீரும். எனக்கு ஒரு பாடலை துர்க்கை  மீது பாடுங்கள்” என்றார்.

பாரதியார் உடனே ‘சரி’ என்றார்.

மறுநாள் மாலை கொலுவில் யதுகிரி ஆரத்தி எடுக்கும் சமயம் உள்ளே நுழைந்த பாரதியார், “நீங்கள் கேட்ட பாடலை கொண்டு வந்திருக்கிறேன். பாடலாமா?” என்றார்.

பின்னர் பாட ஆரம்பித்த்தார்.

ஸரஸ்வதி மீது,

“பிள்ளைப் பிராயத்திலே -அவள்

பெண்மையைக் கண்டு மயங்கி விட்டேன்”

என்று தொடங்கும் பாடலையும்,

லக்ஷ்மி மீது

“இந்த நிலையினிலே- அங்கோர்

இன்பப் பொழிலின் இடையில் வேறொரு

சுந்தரி வந்து நின்றாள்”

என்ற பாடலையும்,

காளி மீது,

“பின்னோர் இராவினிலே – கரும்

பெண்மை அழகொன்று வந்தது கண் முன்பு”

என்ற பாடலையும் பாடினார்.

ஸரஸ்வதி மீதான பாடலை ஸரஸ்வதி மனோஹரி ராகத்திலும், லக்ஷ்மி மீதான பாடலை ஸ்ரீ ராகத்திலும் காளி மீதான பாடலை புன்னாகவராளி ராகத்திலும் அவர் அமைத்திருந்தார். பாடலைக் கேட்டோர் மெய் சிலிர்த்தனர்.

இப்படி பாரதியார் தொடாத பொருள் இல்லை;பாடாத தெய்வம் இல்லை.

அவர் பாடல்களையும் கட்டுரைகளையும் படித்தால் ஹிந்து பண்டிகைகளின் உட்பொருளை அறிந்து கொள்ளலாம்.

 “வீரக் கனல் பொங்கும் வெற்றி மணிச் சிங்கம்

     விண்ணாடு மண்ணாடு வியந்து பணி தங்கம்

கோரப் பகை அடிக்கும் கொடிய மணிக் கதிர்வேல்

     கொடியவர்கள் கொட்டமழி நெடிய மணி நேமி

ஆருக்கும் அஞ்சாத ஆரமர் செல்வன்

     அன்புக்கு என்பு தரும் அருளாளன் அண்ணல்

போருக்கு ரகுராமன் புலமைக்கு வாணி

    பொற்புக்கும் நட்புக்கும் புண்ணியக் கண்ணன்

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்

 சுப்ரமண்ய பாரதியின் பெருமையை

என்னென்று சொல்வேன்” என்று ஹா.கி.வாலம் அம்மையார் பாரதியைப் போற்றிப் புகழ்கிறார்.

பாரதியார் நாமம் வாழ்க!

 ஹிந்து தர்மம் வாழ்க!

என்று கூறி வாய்ப்பினை நல்கிய அனைவருக்கும் நன்றி கூறி,

அடுத்து இன்னுமொரு உரையில் உங்களைச் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்!

*

இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி வாரந்தோறும் திங்களன்று இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும். தமிழ் நெஞ்சங்கள் மகிழ்ச்சியுடன் இதில் பங்கேற்க வேண்டுகிறேன்.

உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் பதிவு செய்யவும் வேண்டுகிறேன்.

tags — தீபாவளி-Part 2 ,பண்டிகை, பாரதியார்

***

வரலாற்றுப் புதிரும் 2 புதிய கல்வெட்டுகளும் (Post No.8622)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8622

Date uploaded in London – –3 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்த மாபெரும் பாரத பூமியில் இன்னும் புதிய கல்வெட்டுகளும், பழங்கால நாணயங்களும் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. இந்த 2020 ஆகஸ்ட்- செப்டம்பரில் இரண்டு புதிய கல்வெட்டுகள் கிடைத்ததை பத்திரிகைகள் வெளியிட்டன . இதில் ஒன்று பாடல் கல்வெட்டு.

இதற்கிடையில் தேவாரம் திருவாசகப் பாடல்பெற்ற தலங்கள் தோறும் விஜயம் செய்து , சுவாமி தரிசனம் செய்வதோடு , நம்மைப் போன்றோருக்காக புகைப்படங்களையும் ஊடகங்களில் வெளியிடும் லால்குடி வேதா குன்னாண்டார்கோவிலில் சந்நிதிக்கு இருபுறமும் வெவ்வேறு நிலையில் துவார பாலகர் இருப்பதை வெளியிட்டு இந்தப் புதிருக்கு விடை என்ன? என்று வினவியுள்ளார். விடை    தெரிந்தால் பகருங்கள் ; எல்லோருக்கும் பகிருங்கள்

துவார பாலகர் சிலைகள் இரு புறமும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் குன்னாண்டார் கோவிலில் வெவ்வேறு பாணியில் அமைந்துள்ளது

லண்டனில் பணி யாற்றிய  லால்குடி திரு. வேத நாராயணன் இப்பொழுது தமிழ் நாட்டில் உள்ளார்.

******

2 புதிய கல்வெட்டுகள்

1.சடையவர்மன் சுந்தர பாண்டியனின் 13ஆவது ஆட்சியாண்டுக்  கல்வெட்டு வந்தவாசிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது,   இது கி.பி.1266ம் ஆண்டுக்கு கல்வெட்டு . இது வரி விலக்கு முதலிய செய்திகளைத் தந்தபோதும் , சுவையான விஷயம் என்ன வென்றால் இது குறிப்பிடும், திருவானைக்காவும் ஆதித்த மங்கலமும் சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஊர்களாகும்.

2. இரண்டாவது கல்வெட்டு பாடல் பெற்ற தலமான காளையார் கோவிலில் கிடைத்த பாடல் கல்வெட்டு ஆகும். கல்வெட்டுச் செய்தி தமிழில் இருப்பதால் வாசகர்களே படித்து அறிய முடியும்

Tags-  புதிய கல்வெட்டு, பாடல் கல்வெட்டு, துவாரபாலகர், சுந்தர பாண்டியன், குன்னாண்டார் கோவில்.

–SUBHAM—-

கள், குடி, சாராயம் பற்றி 6 பழமொழிகள்- கட்டத்தில் கண்டுபிடி (Post. 8621)-

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8621

Date uploaded in London – –3 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.குடி மதம் அடிபடத் தீரும்

2.குடியனும் வெறியனும் சரி

3.கள்   குடித்தவனுக்கு கள் ஏப்பம், பால் குடித்தவனுக்கு பால்  ஏப்பம்

4.கள் விற்ற கால்(ற் ) காசிலும் அமிர்தம் விற்ற அரைக்கால்(ற் ) காசு நேர்த்தி

5.குடிகாரன் பேச்சு , விடிஞ்சாப் போச்சு

6.சாராயத்தை  வார்த்துப் பூராயத்தைக் கேளு

—-கள் , குடி , சாராயம் , பழமொழிகள்.

வைரஸ் கிருமியைக் கொல்ல மணத்தக்காளி; விஞ்ஞானிகள் அறிவிப்பு (8620)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8620

Date uploaded in London – –3 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வைரஸ் கிருமியைக் கொல்ல மணத்தக்காளி; விஞ்ஞானிகள் அறிவிப்பு (Post No.8620)

இரண்டு சுவையான, பயனுள்ள செய்திகள் செப்டம்பர் முதல் இரண்டு தேதிகளில் வந்துள்ளன.

சீன வைரஸ் எனப்படும் கொரோல்லா (COVID-19) வைரஸை ஒழிக்க  மணத் தக்காளி, மணித் தக்காளி , மிளகுத் தக்காளி என்று அழைக்கப்படும் தாவரம் உதவுமாம். இதை விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். மணத் தக்காளி பழத்தையும், காயவைத்த வற்றலையும் நாம் உபயோகப் படுத்துகிறோம். ஆயினும் இந்துக்கள் கண்ட இந்த அரிய தாவரத்தின் மஹிமை இப்போதுதான் தெரியவந்துள்ளது. ஆயுர்வேத, சித்த வைத்திய முறைகளில் நாம் தாவரத்தையே பயன்படுத்துவோம். ஆனால் இன்றைய விஞ்ஞானத்தில் அதிலுள்ள தேவையான ரசாயனத்தை மட்டும் எடுத்து மருந்தாக விற்கின்றனர் .

மணத் தக்காளி தாவரத்தை இந்தியில் ‘மகோய்’ (MAKOI) என்று அழைப்பர். இதிலுள்ள ஒரு ரசாயனம் , வைரஸ் கிருமிகள் இரட்டிப்பாவதைத் (duplication) தடுக்கிறது. பாக்ட்டீரியா, வைரஸ் கிருமிகள் 2 நான்காகும், 4 எட்டு ஆகும்,  8 பதினாறு ஆகும். இது மிக வேகத்தில் நடைபெறுவதால் நோய் பரவும். இதை மணத் தக்காளி/ மணித் தக்காளி கட்டுப்படுத்துகிறது.

இது பற்றிய முழு விவரமாவது–

டில்லி பார்மகியூட்டிகல் (மருந்தியல்), ரிஸர்ச் (ஆராய்ச்சி ) பல்கலைக் கழகம் (DELHI ) PHARMACEUTICAL AND RESEARCH UNIVERSITY  இதை அறிவித்துள்ளது. இந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் டில்லியிலுள்ள ஆரவல்லி தாவர, மூலிகைப் பூங்காவுக்குப் (ARAVALLI BIO DIVERSITY PARK) போய் ஒவ்வொரு தாவரத்தையும் எடுத்து ஆராய்ந்தனர். மணத்தக்காளி அவர்களுக்கு நற்செய்தியைக் கொடுத்தது. எட்டு மூலிகைகளை மூலிகைப் பூங்கா அதிகாரி பேராசிரியர் பாபு எங்களுக்கு காட்டினார். அதில் மணத்தக்காளியிலுள்ள ரசாயனப் பொருட்கள் வைரஸ் கிருமியில் உள்ள ஏ ஸி ஈ (ACE) என்னும் என்ஸைமுடன் ஒட்டிக்கொண்டு அதைக் கட்டுப்படுத்துவதைக் கண்டோம். அந்த வைரஸ் இரட்டிப்பாவதையும் நோயை உண்டாக்குவதையும் தடுக்கிறது என்று பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் ரமேஷ் கோயல் கூறினார்.

இதே நேரத்தில் தாவர ரசாயனப் (PHYTOCHEMICALS) பொருட்களைக் கொண்டு சீன வைரஸ் கிருமியை ஒழிக்கும் ஆராய்ச்சியில் சி.எஸ்.ஐ.ஆர் (CSIR) எனப்படும் அமைப்பும் ஈடுபட்டுள்ளதை அதன் டைரக்டர் சேகர் மான்டி அறிவித்தார்.

மணத்தக்காளியை தாவர இயல் கற்போர் SOLANUM NIGRUM ‘சொலானம் நைக்ரம் என்று அழைப்பர்.

******

தும்பங்காய் , பழுவக்காய்

மற்றொரு நற் செய்தி தும்பங்காய் , பழுவக்காய் , பழுப்பக் காய் (MOMORDICA DIOICA) என்று அழைக்கப்படும் காய்கறியாகும். இது கர்நாடகத்தில் பிராமணர்கள் அதிகம் உபயோகிக்கும் காய். குறிப்பாக சமயச் சடங்குகள், பண்டிகைகளில் பயன்படுத்துவர் . கர்நாடகத்தில் மழநாட்டுக்குப்பகுதியில் நிலம் உடைய ஒரு தம்பதியினர் பாக்கு மரம் வளர்த்துப் பொருளீட்டி வந்தனர். பாக்கு மரம் ஆண்டுக்கு ஒரு முறையே பலன் தரும். அதுவும் நோயால் தாக்கப்படலாம். ஆகையால் தும்பங்காய் (பழுவக்காய்) விவசாயத்தில் இறங்கினோம் . ஐந்தே மாதங்களில் 200 கிலோ விளைந்தது. ஏனெனில் இது இரண்டே மாதங்களில் பலன் தரும் கொடி வகை ஆகும். ஒவ்வொரு கிலோ காயும் 200 ரூபாய் வரை விலை போயிற்று என்று சங்கர மூர்த்தி என்ற விவசாயி சொன்னார்.

அது மட்டுமல்ல. இது திருப்பதி பாலாஜிக்கு மிகவும் பிடித்த காய். திருப்பதி உண்டியலில் காசு போட்டால் அது இறைவனுக்குப் போய்ச்  சேராது என்று கருதும் மக்கள் தும்பங்காய் , பழுவக்காய்  விதைகளை திருமலை வெங்கடாசலபதி உண்டியலில் போடுவார்கள்; அதை அங்குள்ள பட்டர்கள் அரைத்து பெருமாளுக்கு அதைத் திலகமாக இடுவர் என்றும் சங்கரமூர்த்தி செப்பினார் . இது போல தும்பங்காய் , பழுவக்காய் பற்றி கொங்கணி மக்களிடையே நிறைய நம்பிக்கைகள் உள .

இந்துமதம் இயற்கையோடு இயைந்த மதம் .

இந்தக் காய் பற்றி விக்கிபீடியா கூறும் தாவரவியல் செய்திகளையும் இணைத்துள்ளேன்:—

தும்பை (Momordica dioica) எனப்படுவது இந்தியாவிலும் இலங்கையிலும் மரக்கறியாகப் பயன்படுத்தப்படும் தாவர இனமொன்றாகும். தும்பங்காய் என்று இலங்கையில் அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள சிவகிரி வட்டத்திற்குட்பட்ட ஆத்துவழி மலைபிரதேசங்களிலும் காணப்படுகிறது. [1] இக்காய்களை தமிழகத்தில் பழுப்பக்காய், அல்லது பழுவக்காய் என்று அழைக்கின்றனர். இதன் காய்கள் பொரிக்கவும், கறியாக்கவும் படுவதுடன் இறைச்சி அல்லது மீனுடன் சேர்த்தும் உணவாகக் கொள்ளப்படுகின்றன. இது துவர்ப்புச் சுவையுடன் இருக்கும். இக்காய் நீரிழிவு நோய் நோய்க்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

வேறு மொழி பெயர்கள்[தொகு]

tags — வைரஸ் கிருமி, மணத்தக்காளி,தும்பங்காய் , பழுவக்காய்

—— SUBHAM ——

மூன்று கிரகம் உச்சம்! மந்திரி பதவி நிச்ச(ய)ம் !! – பகுதி 1 (Post.8619)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8619

Date uploaded in London – –3 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நான் பார்த்த பார்வை
நான்பார்த்த பார்வை அவர் பார்க்கவில்லை
அவர்சொன்ன வார்த்தை நான் கேட்கவில்லை
உன் கண்ணில் அவர் இருந்தால்
அவர்கண்ணில் நான் இருந்தால்….. பிரச்சினை ஏதுமில்லை



புயல்வேகத்தில் ஓடிவந்தார் அவர்.
நான் சொல்லாமலே நாற்காலியை இழுத்து போட்டுக்கொண்டார்.
அவர்முகத்தில்  வெடித்த எள்ளையும் கொள்ளையும் பார்த்த
மாத்திரத்தில் நானே ஐயா வணக்கம்! என்று சொல்லி விட்டேன்
அவரே ஆரம்பித்தார்.


சார் மூன்று கிரகங்கள்,அதுவும் முக்கிய கிரகங்களான குரு,
சுக்கிரன் சூரியன் உச்சமாக இருந்தால் மந்திரி பதவி கிடைக்குமாமே?.?.
நான்-ஜாதகத்தை பார்க்கணுமே????


அவர் ரொம்ப அவசரப்பட்டார் அவரிடம் போயிருந்தேன்
கண்டிப்பா நீ மந்திரிதான் என்று அடித்து சொல்றார்!!!!
நான்- இதற்கு ஏன் இங்கு வருகிறீர்கள ??? நேராக நம்ம
சீ எம். (C M ) யே போய் பார்த்துற வேண்டயதுதானே……


எனக்கு 3 கிரகம் உச்சம் என்று சொல்லி கேட்க வேண்டியதுதானே
என்று நக்கலாக சொன்னேன்.


போய்கேட்டேனே………ஆபீஸ் பக்கமே விடமாட்டேனுட்டானுன்க


பெரிதாக சத்தம் போட்டேன்…. போலீஸ் அதிகாரி வந்து சத்தம்
போட்டார்

எனக்கு 3 கிரகம் உச்சம் …வருங்கால மந்திரி ….. இப்படி தடுக்கலாமா .??

என்னை ஏற இறங்க பார்த்தார் உள்ளே போனார்
ஒரு கவருடன் வந்தார்.


ஓஹோ ஓகே ஓகே என்னை பார்க்காமலே பதவி அடித்து கொடுத்துட்டார் போல……
பின்னால் மாலையுடன் வந்து சந்திபபோம்.


கவருடன்வந்த அவர போலீஸ அல்ல, செக்யூரிடி என்ற வெளியே வந்து டிரஸை பார்த்த பின்தெரிந்தது.
வாங்க சார் உங்களுக்கு வண்டி அரேன்ஞ் (arrange) செஞசிருக்கோம்
சீ எம் ன்னா சி எம். (CM = Chief Minister) தான்…….. எல்லாம்; அந்த 3 கிரகம் செய்யற
வேலை………
அங்கே ஒரு ஆம்புலன்ஸ் காத்திருந்தது. ஓஹோ கார் இல்லை
என்றவுடன்பதவி ஏற்புக்காக அவசரமாக ஆம்புலனஸே ஏற்பாடு
பண்ணியிருக்கார் நம்ம சி எம்……


ஆம்புலன்னஸில் நம்பி ஏறி  உட்கார்ந்தேன். அது நேராக
கீழ்பாக்கத்திலுள்ள மன நல காப்பகத்திற்கு சென்றது.


ஓஹோ பதவி ஏற்பு விழாவை எனக்காக அவசரமாக இங்கே
மாற்றியிருக்கிறார்கள் போலிருக்கிறது. எல்லோரும் சல்யூட்
அடித்தனர்என்ஐப பார்த்து……வருங்கால மந்திதிரியை
முனபே தெறிந்து கொண்டார்கள் போலிருக்கிறது
கையைப்பிடித்துக் கொண்டு சென்றார் அவர்…
நேரே டாக்டர் ரூமுக்கு அழைத்து சன்றார்.ஓஹோ மெடிகல் 
செக்கப் பண்ணுவதற்கு…..


இரண்டு ஆண் அட்டெண்டர்கள என இரண்டு பக்கமும் என்னை
அழுத்தி பிடித்துக் கொண்டார்கள்……..
அவ்வளவுதான் ஓரு வாரமாகிவிட்டத் நான் தப்பிப்பதற்கு!,,,,

தொடரும்
……………………………………….

tags- மூன்று கிரகம் உச்சம், மந்திரி பதவி,

BOOKS INDIANS SHOULD READ – 35 (Post No.8618)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8618

Date uploaded in London – – – –3 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.


                             BOOKS INDIANS SHOULD READ – 35

                                            R.Nanjappa

                                       Chapter 13 Part 2

             THE COLLECTED WRITINGS OF DHARAMPAL-8

GANDHIJI’S  SCHEME

So for Gadhiji, Swaraj meant a direct reversal of the prevailing pattern of exploitation and

exchange, in favour of the urban areas, and against the villages. This would be possible

only if the Polity of free India restored to the village its dignity and economic strength

and autonomy in local affairs. The village had to be made the basic unit of administration,

and economic and political life. He said:

There are seven hundred thousand villages in India each of which would be

organised according to the will of the citizens, all of them voting. Then there

would be seven hundred thousand votes. Each village…. will have one vote.

The villagers would elect the district administration; the district administrations

would elect the provincial administration and these in turn would elect the

President who is the head of the executive….


Gandhiji’s ideas were the base of Congress policies. His ideas on the reorganaistion of

village  life and restoration of its powers were widely shared by Congressmen, many of

whom had taken part in the Constructive Programme. 

However, Nehru did not have much love for the villages. He wrote to Gandhiji in 1945: 

” I do not understand why a village should necessarily embody truth and non-violence. A

village, normally speaking, is backward intellectually and culturally, and no progress can

be made from a backward environment.”  

[Nehru also had strong Socialist views, running counter to Gandhi’s ideas. It is strange

that Gandhiji still chose Nehru as his heir!]


HUMBUG BY THE DRAFTING COMMITTEE 

When the Constituent Assembly was formed to draft the Constitution, B.N.Rau, a pucca

bureaucrat, was given the job of making the initial draft. He did this by studying  and

borrowing from the Constitutions of the countries of Europe, Americas and USSR. He

submitted the draft just after Independence. The Assembly then appointed a committee to

scrutinise the draft and suggest  amendments. 

The members of the Committee were:

  • Alladi Krishnaswamy Ayyar
    – N.Gopalaswami Ayyangar
    – Dr.B.R.Ambedkar
    – K.M.Munshi
    – Saiyed Mohd.Saadulla
    – B.L.Mitter
    – D.P.Khaitan

    When the draft of the constitution was read and discussed in the Assembly, the

omission of any place of importance to the villages was noticed and seriously

discussed.

  • Member after member expressed support for recognising the village and the

overwhelming opinion was in favour of it. But it did not finally happen.

The problem was with the composition of the Committee itself. Of the seven members,

only K.M. Munshi had taken part in the freedom struggle under Gandhiji. Dr.Ambedkar

had been a supporter of the British and worked against Gandhiji. Saadulla had been

a British supporter. The others had no concern with the

freedom movement. None of them could therefore enter into the spirit of the freedom

struggle and the ideals that had motivated them. 

Three members made strong points.


T.T.Krishnamachari: on 5 November 1948:

….the amount of attention that was necessary for  the purpose of drafting a Constitution …

has not been given to it by the Drafting Committee. ….of the seven members nominated…

one has resigned… and was replaced. One died and was not replaced. One was away in

America and his place was not filled up..another person was engaged in State affairs and

there was a void to that extent. One or two were far away from Delhi and perhaps reasons

of health did not permit them to attend… the burden of drafting this Constitution fell on

Dr.Ambedkar…attention that was due to a matter like this has not been given to it by the

Committee as a whole. …certain aspects of our Constitution have not had the amount of

expert attention that was necessary.

[He also pointed out a legal lacuna in the status of the Committee’]

                                                                  *

தீபாவளி பற்றி பாரதியார் (Post No. 8617)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8617

Date uploaded in London – – 3 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பாரதியார் தீபாவளி பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளைப் பற்றி கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளாரா?

ச.நாகராஜன்

ஒவ்வொரு திங்களன்றும் இந்திய நேரம் மாலை 6-30க்கு – லண்டன் நேரம் பகல் 1.30க்கு ஒளிபரப்பாகும் ஹிந்து மதம் பற்றிய கேள்வி- பதில் நிகழ்ச்சி மற்றும் ஹிந்து ஆலயச் சிறப்புச் செய்திகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதை www.tamilandvedas.com நேயர்கள் நன்கு அறிவர். இதற்கு உலகெங்குமுள்ள அன்பர்கள் கேள்விகளை அனுப்பி வருகின்றனர்.

31-8-2020 அன்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் வந்த கேள்வி ஒன்று இது:

பாரதியார் தீபாவளி பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளைப் பற்றி கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளாரா?

இதற்கு பதில் அளிக்கும் பொறுப்பு எனக்கு வந்தது.

அந்தப் பதிலின் (உரையின்) சாரம் இதோ:-

பாரதியார் தீபாவளி பண்டிகை பற்றியும் இதர ஹிந்து பண்டிகைகளைப் பற்றியும் நிறைய கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். அநேகமாக ஒவ்வொரு சிறப்புப் பண்டிகைக்கும் உரிய கவிதையை அவரிடமிருந்து கற்கலாம்; உட்பொருளை விளக்கும் கட்டுரைகளையும் காணலாம்.

சில பண்டிகைகளைப் பற்றி மட்டும் இங்கு நாம் காணலாம்.

உலகில் பல்வேறு பழைய நாகரிகங்கள் தோன்றிய காலமும் அவை மறைந்த காலத்தையும் துல்லியமாக வரலாற்று அறிஞர்கள் சொல்கின்றனர். இப்படி பாபிலோனிய நாகரிகம், அஸிரிய நாகரிகம், எகிப்திய நாகரிகம், ரோமானிய நாகரிகம் தோன்றிய காலமும் மறைந்த காலமும் நமக்குத் தெரியும். ஆனால் ஹிந்து நாகரிகம் என்று பிறந்தது என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய நாகரிகம் இது.

மஹாகவி பாரதியார் மிக அழகுற இதைச் சொல்கிறார்:

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு

    சூழ்கலை வாணர்களும் இவள்

என்று பிறந்தவள் என்று ணராத

   இயல்பினளாம் எங்கள் தாய்.

இப்படி இந்தியத் தாயை – ஹிந்துத் தாயை – அவள் என்று பிறந்தவள் என்று யாராலும் கணிக்க முடியாத சிறப்பைக் கூறுகிறார்.

ஹிந்து மதம் ஒரு மதம் மட்டுமல்ல, ஒரு தத்துவமும் கூட, மதமும் தத்துவமும் மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என சாமர்செட்மாம் என்னும் மேலை நாட்டு எழுத்தாளர் தனது ‘Points of View” என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

(The Hindu Religion is not only a Religion but also a Philosophy, not only a religion and philosopy but it is a Way of Life.)

உண்மை. இதை மஹாகவி பாரதியார் வலியுறுத்தியதோடு அந்த வாழ்க்கை முறையைப் பண்டிகைகளின் வாயிலாகப் படம் பிடித்துக் காண்பித்தார்.

தீபாவளி பற்றிய அவரது கட்டுரை முக்கியமான ஒன்று.

பாரதியார் நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகையில், 1906-இல் அக்டோபர் 20-ஆம் தேதி இதழில் தலையங்கமாக வெளிவந்தது இந்தக் கட்டுரை. பின் ‘கலைமகள்’ பத்திரிகையில் 1941-இல் அக்டோபர் மாதம் வெளியாயிற்று.

கட்டுரை இது தான்:-

“நம் நேயர்களுக்கெல்லாம் கங்கா ஸ்நான பலன் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அறிவிக்கின்றோம்.
சரீர சுத்தியுடன் மனோசுத்தியும் ஆத்மசுத்தியும் அவர்களுக்குப் பிராப்தியாக வேண்டுமென்று விரும்புகிறோம்

தற்காலத்திலே இந்து ஜனங்களின் ஆத்மாவைப் பற்றியிருக்கும் அழுக்குகளாகிய பயம், அதைரியம் முதலியவையெல்லாம் அகன்று போய், அவர்கள் ஒளி மிகுந்த உள்ளத்தவர்களாகி விளங்க வேண்டுமென்பதே நமது கோரிக்கை.

நமது நாட்டைப் பற்றிய நரகாசுரன் இறந்து போய்விட்டான்.
பகவானுடைய சக்தியும் எல்லா ஐசுவரியங்களுக்கும் ஆதாரமும் ஆகிய லட்சுமிதேவி நம்மீது கருணை
கொண்டவளாகி நரகாசுரனை வதைத்துவிட்டாள்.

நாமெல்லோரும் அது பற்றிச் சந்தோஷமடைந்து மங்கள ஸ்நானம் செய்து, நல்லாடைகள் புனைந்து ஆனந்தவசமாகி இருக்கின்றோம்.

ஆனால் சிறுகுழந்தைகளைப் போல் விளையாட்டுக்கு ஸ்நானம் செய்தும், தீபங்கள் கொளுத்தியும் சும்மா இருந்துவிடாமல் நாம் செய்யும் செய்கையினது பொருளை நன்றாக அறிந்து காரியங்கள் செய்ய வேண்டும்.

எத்தனை தரம் கொன்றபோதிலும் மறுபடியும் மறுபடியும் உயிர் தளிர்ப்பது ராட்சதர்களுடைய சுபாவம். அவர்களுடைய மர்ம ஸ்தலத்தை அழித்த பிறகுதான் மடிவார்கள்.

அதுபோலவே லட்சுமிதேவி நரகாசுரனை வதைத்தவுடனேயே நாம் அவனுடைய மர்ம ஸ்தானத்தை அழித்து விடாமையால் அவன் மறுபடியும் தளிர்க்கத் தொடங்குகிறான். ஆதலால் நாம் இனியேனும் நரகாசுரனுடைய மர்ம ஸ்தலத்தை நன்றாக அறிந்து அதைத் தாக்காமல் இருப்போமானால் யாதொரு பிரயோஜனமும் கிடையாது.

தீபாவளி தினத்திலேகூட அந்நிய தேசத் துணிகள் வாங்கும் ஈசுவரத் துரோகிகள் நமது நாட்டிலே இருப்பார்களானால் நரகாசுரன் எவ்வாறு ஒழிவான்? லட்சுமிதேவி எப்படி ஜயமடைவாள்?

ஆரிய குமாரர்களே! ராட்சதர், அசுரர், பிசாசர் முதலான துர்க்குணங்களுடைய ஜன்ம விரோதிகளே! உங்களுடைய உண்மையான சுபாவத்தை அறிந்து கொள்ளுங்கள்.

மஹா வீரத்தன்மை பெற்று அஷ்ட லட்சுமிகளுக்கும் இருப்பிடமாகி விளங்குதற்குரிய வழிகளைத் தேடுங்கள். உங்களுக்கெல்லாம் பரிபூர்ணமான ஆரியத்தன்மையும் சர்வாபீஷ்டங்களும் சித்தியடைவதாக. ஓம் தத் ஸத். வந்தேமாதரம்.”

வந்தேமாதரத்துடன் கட்டுரை முடிவடைகிறது.

பழம்பெரும் பண்டிகையான தீபாவளியின் சிறப்பைக் கூறிய பாரதியார் காலத்திற்குத் தக அந்நிய தேசத் துணிகளை வாங்கி அணிவோரை ஈஸ்வர துரோகிகள் என்கிறார்.

இப்படி தேசபக்தியை தெய்வப் பண்டிகை மூலம் அவர் ஊட்டினார்.

1908ஆம் ஆண்டிலிருந்து 1918ஆம் ஆண்டு வரை பாரதியார் புதுவையில் வாசம் செய்தார்.

புதுவையில் உள்ள மணக்குள விநாயகர் மீது 40 பாடல்கள் கொண்ட விநாயகர் நான்மணி மாலை -யை அவர் பாடியுள்ளார்.

                    *** (உரை தொடர்கிறது, அடுத்த கட்டுரையுடன் முடியும்)

tags- பாரதியார், தீபாவளி , பண்டிகை,

INDEX 20 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES (Post No.8616)

 LORD SKANDA’S PICTURES ARE FROM THIRUVAVADUTHURAI ADHEENAM SOUVENIR

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8616

Date uploaded in London – –2 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

JULY 2014 ARTICLES

THIS IS AN OLD LIST PREPARED IN 2015.

MISSING NUMBERS MEAN  S. NAGARAJAN’S ARTICLES WHICH ARE POSTED SEPARATELY

NUMBERS DENOTE POST NUMBER. DATE AT THE END SHOWS DATE OF POSTING IN MY TWO BLOGS AND OTHER BLOGS.

1141.மஹாபாரதத்தில் ஒரு அதிசயப் பறவை 1-7-2014

1142.Herbs and Diseases in the Vedas 1-7-14

1143.ஐந்து கவிஞர்கள் பாடிய பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க 2/7

1144.Priest who changed New Moon Day to Full Moon Day 2/7

1146.Sanskrit: Deva Bhasa or Pundit Bhasa 3/7

1148.Caste Divisions in Ancient Tamil Nadu 4/7

1149.இழி பிறப்பாளன் கருங்கை சிவப்ப 5/7

1151.Vedic Origins of Thousand Pillar Hall 5/7

1152.உலக அதிசயம்: ஆயிரம் கால் மண்டபம் 6/7

1153.Mystery about Swan: Can it separate milk from water 6/7

1155.அன்னப் பறவை பற்றிய அதிசய செய்திகள் 7-7

1156.When did Buddha become an avatar of Vishnu 7/7

1158.புத்தர் எப்படி, எப்போது இந்துவானார்? 8/7

1159.Miracles of Asvins in the Vedas8/7

1161.No Atheists in Ayodhya 9/7

1163.நாஸ்திகர் இல்லாத நகரம் அயோத்தி10/7 (missing in swamiindology)

1164.Doubting Thomas Perishes:samsayatma vinasyati 10/7

1166.The sleepless Four: Garuda Purana List 11/7

1168.Five ascetics who entered Fire: Vedavati,sabari,sarabanga..12/7

1171. Do you know Indra? 14/7

1173.Baisc questions about Tamils and Hinduism (15/7)

1175.இந்திரனைத் தெரியுமா உங்களுக்கு??16/7

1176.Tamil or Sanskrit: which is older?16/7

1177.தமிழ் தலைவன் யார்? கம்பன் பதில் 17/7

1178.How many people did Indra Kill? 17/7

1179. தமிழனுக்கு வானவியல் தெரியுமா?? 18/7

1180.Nine Planets in Hindu Astronomy 18/7

1181.லண்டன் புறாவும் கம்பன் புறாவும் 19/7

1182.Be a Guest in India 19/7

1183.ஆசை பற்றி அறையலுற்றேன் 20-7-14

1184.Hindu’s Amazing Knowledge in Botany (20/7/14)

1185.அரசனின் குணநலன்கள்: கம்பனும் காளிதாசனும்

1186. Six Seasons: Same for South and North Indians (21/7/14)

1187. ஆறு பருவங்கள்: ஆரிய திராவிட வாதத்துக்கு அடி(21/7/14)

1188. Those who Struggle win (22/7/14)

1189. தமிழ் பக்தர்களின் அபார தாவரவியல் அறிவு 23-7-14

1190.Why did 102 dancers accompany a Tamil king? 23-7-14

1191.முயற்சி திருவினை ஆக்கும் 24-7-14

1192.Tolkappian on Women in Business Trips 24-7-14

1193.சேரன் செங்குட்டுவனுடன் சென்ற 102 நாட்டியப் பெண்கள்l 25-7-14

1194. Interesting story about an Unknown Tamil King 25-7-14

1195. முக்கிய சிலப்பதிகாரப் பாடல்கள் 31 (26-7-14)  ஆகஸ்ட் காலண்டர்

1196. A Jain story in Tamil Epic 26-7-14

1197. சிலப்பதிகாரப் பொன்மொழிகள்–Part 2 (27-7-14)

1198.Quotations from Tamil Epic Silappadikaram 27-714

1199.இளங்கோ அடிகள்: பிராமணரா, ஸ்ரமணரா?Part 1 (28-7-14)

1200.Let Madurai burn; but Don’t Harm Brahmins 28-7-14

1201. இளங்கோ அடிகள்: பிராமணரா, ஸ்ரமணரா? Part 2 (29-7-14)

1202. Was Ilango a Brahmana or a Sramana? 29-7-14

1203.பாண்டிய ராணி  வந்தாள்………….. கூடவே…… 30-7-14

1204. 31 Quotations from Valmiki Ramayana 30-7-14

1205.சேர நாட்டு ராஜா வந்தார் ………….. கூடவே 31-7-14

1206.Yavana (Mlecha) mystery in Tamil Literature 31-7-14

XXXXX

INTRODUCTION

I started blogging in tamilandvedas.wordpress.com and swamiindology.blogspot.com from June 2011, I am giving above the INDEX for JULY,  2014

 I did not give the date of loading or number for the article in the beginning. But all articles are available in both the blogs in the name of

 ‘London Swaminathan’.

Like you did with S Nagarajan’s articles INDEX, get the articles by googling.

Following  is the method:-

Paste the title of the article in the google (space)and add ‘from tamilandedas.com or ‘from swamiindology.blogspot.com’

 Here is an example :

Is Brahmastra a Nuclear Weapon? from tamilandvedas.com

Or

Is Brahmastra a Nuclear Weapon? From swamiindology.blogspot.com

Since I am going to give nearly 6000 titles, you may not find time to read all the articles/ posts at once.

So, please take a printout of the Index or note down the titles and dates of your favourite posts.

Thanks for all your support. We are reaching two million hits now.

If you have any difficulty in getting the articles, please let us know.

Be careful about the spelling of the title. Even a small mistake will take you somewhere and waste your precious time.

***

IN THE BEGINNING I UPLOADED MY ARTICLES IN

1.THE SPEAKING TREE OF TIMES OFINDIA

2.TAMIL HERITAGE FOUNDATION SITE

3.TAMIL BRAHMINS.COM etc.

So you may find the same articles on different days on different blogs

*****

To be continued…………………….

Tags- சுவாமிநாதன், கட்டுரை இன்டெக்ஸ் 20, INDEX 20,   LONDON SWAMINATHAN,  2014 ,POSTS