Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனில் நாடி ஜோதிடம்
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நானும் என் மகனும் வாரம் தோறும் வேதம் கற்க ‘சிந்தி மந்திரு’ (Sindhi Mandir) க்குப் போவோம். அங்கு திருச்சி கல்யாண சுந்தர குருக்கள் எங்களுக்கு ருத்ரம், சமகம், சூக்தம் எல்லாம் சொல்லிக் கொடுப்பார். ஏர் இந்தியா Air India வெங்கடராமன் அல்லது இந்தியன் ரயில்வே India Railways ஏஜெண்ட் Mr.தண்ட பாணி எனக்கும் என் மகனுக்கும் காரில் லிப்ட் (Lift) கொடுப்பார்கள். ஒரு நாள் Mr.வெங்கட்ராமன் என்னிடம், ஒரு உதவி கேட்டார். அவருடைய நண்பருக்கு தமிழ் செய்யுள் சிலவற்றை மொழிபெயர்க்க வேண்டும் என்றார் . எனக்கோ தமிழ் என்றால் நெய் ஒழுகும் கோதுமை ஹல்வா சாப்பிட்டது போல. உடனே தயங்கமால் யெஸ் YES என்று சொன்னேன்.
குறிப்பிட்ட நாளும் வந்தது. வீட்டு வாசலில் கார் நின்றது. காரில் செல்லுகையில் வெங்கடராமனிடம் எங்கு போகிறோம், யாரைப் பார்க்கப் போகிறோம், என்ன செய்யுள்? அவர் இயற்றியதா? என்றெல்லாம் கேள்விக் கணைகளைத் தொடுத்தேன்.
திரு வெங்கடராமன் சொன்னார்: நாம் பார்க்கப்போகும் மனிதர் லண்டனில் ஹிந்தி பேசும் மக்களிடையே மிகவும் பிரபலமானவர். அவர் இராமாயண உபன்யாசம் செய்யும் ஒரு பிரவசனகர்த்தா என்றார் . அவர் மகனைப்பற்றி ஒரு நாடி ஜோதிடர் எழுதிக் கொடுத்த செய்யுட்களை மொழி பெயர்க்கத்தான் உங்களை அழைத்தார்.
இதைக் கேட்டவுடன் எனக்கும் மகிழ்ச்சி. அட ஒருவர் தன் குடும்ப ரஹசியங்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு வந்திருக்கிறாரே என்று நினைத்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவரது வீட்டில் அமர்ந்து நாடி ஜோதிடர் 40 பக்க நோட்டில் அழகான கையெழுத்தில் எழுதிக்கொடுத்த செய்யுட்களை மொழி பெயர்த்து முடித்தேன். அவர் காதால் கேட்டாரே தவிர ஒன்றும் குறித்துக் கொள்ளவில்லை. எனக்கும் வியப்பு.! என்னடா இது. இவ்வளவு கஷ்டப்பட்டு மொழி பெயர்க்கிறோம்; கவனமாகக் கேட்கிறார். ஆனால் ஒன்றும் எழுதிக் கொள்ளவில்லையே என்று நினைத்தேன்.
செய்யுட்களை மொழிபெயர்த்து முடித்ததுதான் தாமதம்.
EXACTLY SAME ! எக்ஸ்சாக்ட்லி சேம் ; ‘பில்குல் டீக் ஹை’ என்றார்
என்ன பொருள் என்று வினவினேன்.
ஏற்கனவே ஒருவர் அவ்வளவு செய்யுட்களையும் மொழிபெயர்த்துக் கொடுத்துவிட்டார் என்றும் நான் அப்படியே அதை மொழி பெயர்த்தேன் என்றும் பாராட்டி நன்றி சொன்னார்.
மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
அட! பாவி மனுஷா! இதை முன் கூட்டியே சொல்லி இருக்கக் கூடாதா ? நான் இன்னும் கவனமாக பயந்து கொண்டே — பய பக்தியுடன் — மொழி பெயர்த்து இருப்பேனே! என்று மனதில் பொருமினேன் .
போகட்டும்; அவரிடம் போனபோது ஒரு புதிய விஷயம் கிடைத்தது. காஞ்சிபுரத்தில் ஒரு பிரபல நாடி ஜோதிடர் இருக்கிறார். நிறைய வெளி நாட்டுக்காரர்கள் அவரை மொய்ப்பதால் அப்பாயிண்ட்மெண்ட் APPOINTMENT இல்லாமல் பார்க்க முடியாது ; இந்த ஹிந்திவாலாவும் ஒவ்வொரு முறையும் அவரைப் பார்த்து ஜோதிடம் கேட்பது வழக்கம். அவர் துல்லியமாக சொல்லுவார். அருகிலேயே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதிக் கொடுப்பார்கள் என்று.
நானும் நினைப்பேன்; அடுத்த முறை காஞ்சி செல்லும்போது இவரைப் பார்த்துவிடவேண்டும் என்று. ஆ னால் நான் ஒவ்வொரு முறை இந்தியாவுக்குச் செல்லும்போதும். காஞ்சி மடத்துக்கும் கோவில்களுக்கும் செல்லவே நேரம் சரியாகப் போய்விடுகிறது.
2018ல் இந்தியாவுக்குச் சென்ற போது நிறைய நேரம் மரத்துக்கு அடியில் காரை நிறுத்தி 5 மணி நேரம் வீணடித்தேன் . காலை ரவுண்டு கோவில்களை ஒன்னரை மணிக்கு (1-30 PM) முடித்தோம். அடுத்த ரவுண்டு 5 PM அல்லது 6 PM மணிக்குத்தான் கோவில்கள் திறக்கும் என்றார்கள் . சகுந்தலா நினைவு மியூசியத்தைச் சுற்றிப்பார்த்தேன்; சமண காஞ்சிக்குப் போய் கொதிக்கும் வெயிலில் பாதி மலை ஏறி வி ட்டு குரங்குகள் மட்டும் இருப்பதைப் பார்த்து பயந்து திரும்பிவிட்டேன்; ஜன நடமாட்டமே இல்லை. அப்போது கூட இந்த நாடி ஜோதிடர் நினைவுக்கு வரவில்லை.
உண்மைதான் ; நாடி ஜோதிடரைப் பார்க்கப்போவதும் விதிப்படிதான் நடக்குமாம். நாம் போகும் போது நம்மைப் பற்றிய நாடி அவர் தொகுப்பில் இருக்குமாம். அவரிடம் அந்த நாடி ஓலைகள் இல்லாவிடில் அவரிடம் செல்லாமல் நம்மை விதியே தடுக்குமாம்.
வாழ்க “நல்ல” நாடி ஜோதிடர்கள் !
TAGS — நாடி ஜோதிடம், பலித்தது, லண்டன், காஞ்சிபுரம்
CHINESE ASTROLOGY; I TOOK THESE PICTURES IN HONG AND AUSTRALIA
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
BOOKS INDIANS SHOULD READ – 26
Chapter – 10
THE COLLECTED WRITINGS OF DHARAMPAL-5
Indian Science and Technology-1 Dismal knowledge of Indians about Indian Science
Indians who have been through the Indian school and college mills now take some pride about the state of science and technology in India. Few however reflect on the fact that all this is transplanted, borrowed or imitated from abroad. Most Indians believe that for science and technology we have to look to the West. Most have been fed on the colonial lie that India was backward and barbarous when the British came, and all our science and technology date from then and came with them. A few might have heard of an Aryabhata, Varahamihira, Bhaskara, Brahmagupta,Susruta and Charaka but know pretty little beyond the names. Why, for that matter, most educated Indians, including so called science students who have heard of Ramanujam, C.V.Raman, J.C.Bose cannot tell what they discovered or are famous for.
Even those Indians who might concede our achievements in languages & literature, arts and philosophy would hesitate to claim anything in the matter of science and technology. It is now generally known among top economists that India, together with China, was a leading economic power in the world till the mid-18th century. [See the work of Dr. Angus Maddison, British Economist] And that this strength was derived through our performance in manufactures ( what would be called industries today). However, this knowledge is yet to percolate though our idiotic state-controlled education system and enter the public domain. Few people then pause to enquire whether such economic performance would have been possible without an adequate base in appropriate science and technology.
Accounts of Foreign Visitors Foreign visitors to India were of various types. They were interested in the goods for trade, , gold, diamond, spices, etc and did not bother much about the state of our science and technology. However, in the 18th century many visitors came with a curious mind, and competence to make observations. They have left behind papers which throw light on the scene.
During his researches in the Archives in Britain, Dharampal was able to identify a number of such papers. These have been brought together in Vol.1 of his Collected Writings. These papers do not just record what they saw, but also attempt to raise questions and controversies. As the colonial power consolidated its stranglehold on India, the general approach was to belittle Indian achievements. There was the sense of white-superiority, religious bigotry, and fundamentalist Christian foolishness. But today we can show them in their proper place.. The truth could not be fully hidden, nor credit denied.
ASTRONOMY: Observatory in Benares.
Four of the papers presented in the volume concern the astronomical Observatory at Benares. It was visited by Sir Robert Barker (Commander in Chief of British Indian Army) in 1772. (along with Col.Pearse) He said that it had been erected 200 years previously. This account appeared in the journal of the Royal Society, London. Later, in 1793 another account appeared which said that it had been raised just 35 years prior to Barker’s visit! Other accounts too appeared, disputing Barker’s view, but giving no documentary evidence or solid proof.
Yet we know from the writings of Jean-Baptiste Tavernier the French merchant who visited the place in 1655-6 that the observatory existed then! This is what Tavernier wrote:
” Near to this great Pagod, upon the summer- west, stands a kind of a college which the Raja Jessing the most potent of all the idolaters in the Mogul’s empire, built for the education of the youth of the better sort.”
“ASTRONOMY OF THE BRAHMINS “ Next we have the curious case of the ‘Astronomy of the Brahmins’. The British received some tables of astronomical calculations from Siam. These related to the Siam epoch of 21 March 638 AD. But the curious fact was that the ‘meridian’ of these tables was not Siam, but Benares!
They also received some tables from south India which uniformly corresponded to the beginning of Kali Yuga, 3102 BC. Immediately, the question arose: whether the Hindus could calculate so far back? whether the theory was real or fictitious?
in a review, Prof.John Playfair, Prof. of Mathematics in the University of Edinburgh said in 1789 that calculations based on modern calculus and theory of gravitation did show the planetary positions indicated in the tables to be very close to the correct position. The position of planets as of 3102 BC shown in the tables was correct according to every conceivable test. This implied good knowledge of arithmetic and geometry, as also calculus and trigonometry.
Then the question arose whether the Indians had arrived at it by some sophisticated theoretical calculations or direct observations! His white pride stood in the way of his granting this ability for sophisticated calculations to Indians, but he conceded that they arrived at it by direct observation! Yet how could they observe without a theory or method to back it? We have seen in the previous post on education that Astronomy was widely taught and studied in different parts of India. Obviously, those who looked at these things did not know about our educational system! This is how vested interests or plain idiots tried to belittle Indian science.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
மஹாபாரதத் துளிகள்!
துரியோதனா! எங்கு தர்மமோ அங்கே ஜயம்! : காந்தாரி!
ச.நாகராஜன்
மஹாபாரதப் போரில் துரியோதனன் ஏன் வெற்றி பெறவில்லை?
படைபலமும் அவனுக்கு அதிகம். பீஷ்மர், துரோணர், க்ருபர், கர்ணன் உள்ளிட்ட ஏராளமான அஸ்திர சஸ்திர வித்தைகள் தெரிந்தவர்களும் அவன் பக்கமே.
பதினோரு அக்ஷௌஹிணி சேனை கொண்ட அவனால் ஏழு அக்ஷௌஹிணி சேனை கொண்ட பாண்டவர்களை ஏன் வெல்ல முடியவில்லை?
இதற்கான காரணத்தை ஒரு அழகிய சம்பவம் விவரிக்கிறது.
யுத்தம் வரப்போகிறது, வரப்போகிறது, வந்தே விட்டது.
உடனே துரியோதனன் அவனது தாயான மஹாபதிவிரதையான காந்தாரியிடம் ஆசீர்வாதம் பெறச் செல்கிறான்.
அன்னையிடம் வந்த அவன் கைகளைக் குவித்துக் கொண்டு, “ அம்மா, இந்த ஞாதிகளுடைய சண்டையில் எனக்கு ஜயத்தைக் கூற வேண்டும்” என்று வேண்டினான்.
ஒரு அம்மாவாக உடனே ‘தந்தேன் ஆசீர்வாதம், நீ ஜயிப்பாயாக’ என்று காந்தாரி சொன்னாளா? சொல்லவில்லை.
காந்தாரி கூறினாள் : “எங்கு தர்மமோ அங்கு ஜயம்”
தர்மம் வென்றது.
காட்சி மாறுகிறது.
போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்த துரியோதனனின் உடலைப் பார்த்துக் கதறுகின்ற போது காந்தாரி இப்படிக் கூறி புலம்புகிறாள்:
“பெரிய வில்லை உடையவன்.மஹா பலசாலி. அப்படிப்பட்ட இந்த துரியோதனன் சிங்கத்தினால் புலி தள்ளப்படுவது போல பீமசேனனால் தள்ளப்பட்டுக் கிடக்கிறான்.
சிறுவனும் மந்தர்களை அடைந்தவனும், மந்தனுமான இவன் விதுரரையும் பிதாவையும் அவமதித்து விருத்தர்களுடைய அவமானத்தினால் இப்படி மரணத்தை அடைந்து விட்டான்.”
பல்வேறு விதமாகப் புலம்பும் காந்தாரி, கிருஷ்ணனை நோக்கி, “நான் எதற்காகப் பிழைத்திருக்கிறேன்?” என்று கேட்கிறாள்.
தன் துக்கத்தை விட இன்னும் பெரிதான ஒரு துக்கத்தை அவள் கிருஷ்ணரிடம் கூறுகிறாள் :
“கிருஷ்ணா, இதோ பார்! அழகிய இடையை உடையவள். பொன்னாலாகிய வேதிக்கு ஒப்பானவள். இவள் இப்போது விரித்த கூந்தலை உடையவளாக இருக்கிறாள். துரியோதனனுடைய தோள் நடுவை அடைந்த லக்ஷ்மணனின் இந்தத் தாயைப் பார். நல்ல மனமுள்ளவளான இந்தச் சிறு பெண் துரியோதனன் உயிரோடிருந்த காலத்தில் துரியோதனனுடைய இரு கைகளையும் அடைந்து சுகித்தாள்.
யுத்தத்தில் என் பேரனும் புத்திரனும் கொல்லப்பட்டதைக் காணும் என் உள்ளம் ஏன் இன்னும் நூறு சுக்கலாகச் சிதறிப் போகவில்லை?!
நல்ல மனமுள்ள இந்தப் பெண் தன் கணவனுக்காக அழுவாளா, அல்லது தன் மகனுக்காக அழுவாளா?
ஹே கிருஷ்ணா, நீண்ட கண்களை உடைய இவள் இரு கைகளாலும் தன் தலையில் அடித்துக் கொண்டு அவன் மார்பில் விழுந்து அழுகிறாளே!
சாஸ்திரங்கள் மட்டும் உண்மையாக இருக்குமாகில், அதே போல வேதங்களும் ஸத்தியமாக இருக்குமாகில் இந்த துரியோதனன் தோள்வன்மையால் அடையப்பட்ட உலகங்களை அடைந்தான் என்பது மட்டும் நிச்சயம்!”
இப்படி ஆரம்பிக்கும் காந்தாரி கிருஷ்ணரிடம் போர்க்களத்தில் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்ததையும் அவர்களின் மனைவிமார்கள் கதறுவதையும் காண்பிக்கிறாள்.
துச்சாதனன் திரௌபதியை சபையில் இழுத்து வந்த போது அவளை விட்டு விடு என்று துச்சாதனனிடம் சொன்னதை நினைவு கூர்கிறாள்.
விகர்ணன், துர்முகன் ஆகிய ஒவ்வொரு புத்திரனையும் பார்த்துப் பார்த்து அவள் அழுது புலம்புகிறாள்.
பின்னார் காந்தாரி கர்ணனின் மனைவியரைக் காட்டுகிறாள். பீஷ்மர் உள்ளிட்டோரின் குணங்களைக் கூறி அழுகிறாள்.
அவள் மனம் ஆறவில்லை.
இந்தப் போரின் வெற்றி தோல்விக்கு கிருஷ்ணனே காரணம் என்பதைத் தெளிந்து தெரிந்து கொண்ட அவள் கிருஷ்ணனை நோக்கிக் கூறுகிறாள்;
“ஹே! மதுசூதன! நீ கௌரவர்களது சேனை அழிவை விரும்பி இருக்கிறாய்! ஆகவே கூறுகிறேன் கேள். நான் கணவனுக்குச் செய்த பணிவிடையினால் சிறிது சம்பாதித்ததும் பிறரால் அடைய முடியாததுமான தவத்தின் பெயரால் சக்கரத்தையும் கதையையும் தரித்திருக்கிற உன்னைச் சபிக்கிறேன். இது முதல் முப்பத்தாறாவது வருடம் நீ நாசத்தை அடையப் போகிறாய். இதே போல உன்னைச் சேர்ந்த பெண்களும் கதறி அழப் போகிறார்கள்”
கோரமான இந்த சாபத்தைக் கேட்ட கிருஷ்ண பரமாத்மா புன்முறுவல் பூத்தார்!
“க்ஷத்திரியப் பெண்ணே! நானும் இப்படி ஆகப் போகிறேன் என்பதை அறிவேன். என்னால் அநுஷ்டிக்கப்பட்டதையே நீ அனுஷ்டிக்கிறாய்! யாதவர்கள் யாராலும் கொல்லப்பட முடியாதவர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு நாசமடைவர்”
அனைவரும் இதைக் கேட்டுத் திடுக்கிட்டனர்.
போரின் முடிவு தான் உச்சகட்டம் என்று நினைத்திருந்தவர்களுக்கு அடுத்த கிளைமாக்ஸை இப்படி கண்ணன் முன் வைக்கிறார்.
யுத்தத்தின் விளைவையும், அறம் வெல்லுவதையும், இதையெல்லாம் நடத்தும் சூத்ரதாரியான கிருஷ்ணன் தன் முடிவையும் புன்சிரிப்புடன் ஏற்றுக் கொள்வதையும் வியாசரைத் தவிர வேறு யாரால் இப்படித் திறம்பட அழகுறச் சொல்ல முடியும்?
ஸ்திரீ பர்வத்தில் பதினேழாவது அத்தியாயம் முதல் இருபத்தைந்து அத்தியாயம் வரை விளக்கப்படும் இந்தச் சம்பவங்கள் போரில் துரியனின் அழிவுக்கான காரணத்தை அறிய முடிகிறது.
சூத்ரதாரியான கண்ணன் அறத்தைக் காக்கவும் மறத்தை வீழ்த்தவும் யுகம் தோறும் அவதரிக்கும் பரமாத்மா தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
*
வ்யாஸாய விஷ்ணு ரூபாய! உமக்கு ஒரு நமஸ்காரம்!
வியாசர் உள்ளிட்டோராலும் அறிய முடியாத அற்புத கிருஷ்ணரே! உமக்கு கோடி நமஸ்காரம்!!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகம் அழியுமா? புதிய புஸ்தகம், புதிய செய்தி!(Post No.8565)
“கலியுகம் பற்றிய விஞ்ஞான உண்மை : உலகம் அழியுமா? “என்று ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ‘பிளாக்’ (Blog)கில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் . ஒருவர் கேள்வி ஒன்றை அனுப்பியிருக்கிறார்;
“பூமியின் காந்த துருவங்கள் மாறி விட்டதா? இதை இந்து மதத்தில் சொல்லப்படும் சதுர் யுகங்களுடன் தொடர்புபடுத்தி எழுதியுள்ளீர்கள் ; யுகங்களுக்கு இடையேயான யுக சந்தி என்னும் 1000 ஆண்டு நிகழ்வு பற்றியும் எழுதினீர்கள். இது நிகழ்ந்து கொண்டு இருக்கிறதா? இதை எப்படி அறிய முடியும்? பிரம்மாவின் புதிய கல்பம் துவங்கிவிட்டதா?”
இதற்கு சில புதிய விடைகள் கிடைத்துள்ளன. 2018-ம் ஆண்டில் “சுழலும் காந்தம்” THE SPINNING MAGNET என்னும் புஸ்தகத்தை ஆலன்னா மிட்ஷெல் (ALANNA MITCHELL) என்பவர் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்படும் செய்திகள் முந்தைய அச்சங்களை அகற்றுகின்றன. அவர் சொல்கிறார் பூமியின் காந்த மண்டலம் கடைசியாகத் தலை கீழாக மாறியது 780000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது தெளிவாகத் தெரிகிறது. அதனால் ஒன்றும் குடிமுழுகிப் போகவில்லை. இந்தப் பூமியும் அழியவில்லை என்று காட்டுகிறார். ஆயினும் காந்த மண்டலம் நகர்வது உண்மைதான் அடுத்த முறை இது (தலை கீழாக) எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாது என்கிறார்.
முதலில் நமக்குள் ஒரு கேள்வி எழும்.
சரி, காந்த மண்டலம் தலை கீழாக மாறினால் என்ன நடக்கும்?
நமது காம்பஸில் (compass) வட துருவத்தைத் தென் துருவமென்று காட்டும் .
காந்த மண்டலத்தைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் பல்லாயிரம் மைல்களுக்குக் குடியேறிச் செல்லும் (Migratory whales, birds, Monrach Butterflies and Salmon fish) திமிங்கிலங்களும் , பல வகைப் பறவைகளும் சிலவகை பட்டுப்பூச்சி ,மீன் வகைகளும் குழம்பிப் போகும் ; அவை அழிந்துபோகவும் வாய்ப்பு உண்டு.
நாம் பயன்படுத்தும் மின்சார, மின் அணு உபகரணங்கள் பாதிக்கப்பட்டு பூமியில் மஹா குழப்பம் (Utter chaos) ஏற்படும்
நம் பூமி ஒரு பெரிய காந்தம். அது உண்டாக்கும் காந்த மண்டலம்தான் நம்மை கேடயம் போல் காத்து வருகிறது. அது பலவீனமானால் விண்வெளியிலிருந்து சதாசர்வ காலமும் வரும் தீய கிரணங்கள் நம்மைத் தாக்கி அழித்துவிடும். காந்த மண்டலம் பலவீனம் ஆக ஆக வட துருவத்தில் மட்டும் காணப்படும் அதிசய வான மண்டல ஒளி வெளிச்சம் (Aurora borealis) , வர்ண ஜாலம் இந்தியா போன்ற நாடுகளில்கூட தெரிய ஆரம்பிக்கும்.
நம்முடைய டி .வி.க்களும் கம்ப்யூ ட்டர்களும் மின்சாரத்தால் இயங்குகின்றன. காந்த துருவம் மாறினால் இவை எல்லாம் பாதிக்கப்படும்
ஆகவே இது குறித்து நாம் கவலைப்படுவதும் ஆராய்வதும் அவசியம்தான். பூமி என்னும் உருண்டையின் வயிற்றில் அதி பயங்கர வெப்பத்தில் இரும்பு, நிக்கல் ஆகியன கொதித்துக் கொண்டு இருக்கின்றன. அத்தோடு பூமி தன்னைத் தானே தட்டாமாலை சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது. பூமியின் காந்த மண்டலத்துக்குக் காரணம் அதன் வயிற்றில் உள்ள கொதிக்கும் உலோக திரவமும் தட்டாமாலையும்தான். சைக்கிளில் உள்ள விளக்குக்கு டைனமோ உதவுவது போல இது செயல்படுகிறது..
அமெரிக்காவில் மேரிலாண்டில் 30 டன் எடை யுள்ள செயற்கை பூமி காந்தத்தை உருவாக்கி ஆராய்கின்றனர். அதற்குள் உருகிய நிலையில் சோடியம் திரவம் உள்ளது. இது போல ரஷ்யா, ஜெர்மனி முதலிய நாடுகளில் செயற்கை டைனமோ செய்து காந்த மண்டல ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். விண்வெளியிலிருந்து விண்கலங்கள் நம்முடைய காந்த மண்டலத்தைக் கண்காணித்து வருகின்றன .
புதிய புஸ்தகம் எழுதிய மிட்ஷெல் என்னும் பெண்மணியைப் பேட்டி கண்ட போது துருவங்கள் நகர்வது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது . ஆனால் எப்போது முழு பல்டி அடிக்கும், குட்டிக்கரணம் போடும் என்று சொல்லமுடியாது. ஆண்டுக்கு 55 கிலோமீட்டர் வீதம் துருவம் நகர்வதை விண்வெளிக் கலங்கள் காட்டுகின்றன. தென் துருவத்தில் கூடுதலாகவே பாதிப்பு இருக்கிறது என்று மட்டும் சொல்ல முடியும் என்று பதில் தந்தார்.
இவ்வளவு சொன்னாலும் புதிய புஸ்தகம் இப்படி அழிவு ஏற்பட்ட சான்று எதுவும் இல்லை என்கிறது.
அமெரிக்காவில் கொலராடோ பல்கலைக்கழகத்தில் டேனியல் பேக்கர் என்பவர் விண்வெளிக் கதிரியக்க கிரணங்கள் பற்றி ஆராயும் பிரபல விஞ்ஞானி ஆவார். .அவரிடம் துருவங்கள் மாறினால் என்ன ஆகும் என்று கேட்டபோது , கட்டாயம் பூமியிலுள்ள ஒருபகுதி மக்களின் திசுக்களை இது பாதிக்கும். மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் தீய கிராணங்கள் விழுந்தால் எல்லா வகை உயிரினங்களும் பாதிக்கப்படும் என்றார்.
பூமியின் தென்துருவ காந்த மண்டலத்தில் ஏற்படும் மாற்றம் பூமியின் ஐந்தில் ஒரு பகுதி பரப்பை வியாபித்து விட்டதால் ஆராய்சசியாளர்கள் கவலையுடன் கவனித்து வருகின்றனர்
இதை முந்தைய கட்டுரையில் கலியுகம் முதலிய யுகக் கணக்குகளுடன் சாப்பிட்டேன். 2018ம் ஆண்டு புஸ்தகமோ சுமார் எட்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்த துருவ பல்டி, குட்டிக் கரணம் ஏற்பட்டதாகச் சொல்கிறது.
கட்டுரையின் முதற்பகுதி நேஷனல் ஜியோகிராஃபிக் மகசின் (National Geographic Magazine Interview with Alanna Mitchell) கட்டுரை நடத்திய இன்டெர்வியூவில் கண்ட செய்திகளாகும்
நம்மிடையேயும் யுகம் பற்றி பலவித தியரிக்கள் உள்ளன. இது பற்றி நடிகர் ரஜினி காந்த் அவருடைய குருக்களான பரமஹம்ச யோகானந்தா அவருடைய குருவான யுக்தேஸ்வர் சொல்லும் புதிய யுகக் கொள்கையை அடுத்த கட்டுரையில் காண்போம். அவருடைய கூற்றுப்படி இப்போது துவாபர யுகம் நடக்கிறது; கலியுகம் அல்ல.
Xxxxx
MY OLD ARTICLE
கலியுகம் பற்றிய விஞ்ஞான உண்மை : உலகம் அழியுமா??
Research paper written by London Swaminathan Research article No.1462; Dated 6th December 2014.
2030-ஆம் ஆண்டில் காந்த துருவங்கள் இடம் மாறும் என்று ஜே.எம்.ஹார்வுட் என்பவர் 1970 ஆம் ஆண்டிலேயே கூறிவிட்டார். இப்படி மாறுவதால் உலகில் பேரழிவுகள் ஏற்படும் என்று சிலர் கூறுகின்றனர். இதிலலென்ன உண்மை உளது என்று காண்போம்.
இந்துக்கள் உலகத்தின் வயதை நான்காகப் பிரித்துள்ளனர்: கிருத யுகம்(4), த்ரேதா யுக (3), த்வாபர யுகம் (2), கலியுகம் (1). ஏன் இப்படி தலைகீழ் வரிசையில் 4,3,2,1 என்று யுகத்திற்குப் பெயரிட்டார்கள்?
ஏன் என்றால் சத்திய யுகமான கிருத யுகத்தில் தர்மம் என்னும் பசு மாடு நான்கு கால்களில் நிற்குமாம். த்ரேதா யுகத்தில் அதற்கு மூன்று கால்கள்தான். அதவது தர்மம் 25 விழுக்காட்டை இழந்துவீட்டது. அப்போது ராம பிரான் தோன்றினார். த்வாபர யுகத்தில் தர்மம் என்னும் மாடு இரண்டு கால்களை – அதவது 50 விழுக்காட்டை இழந்து விட்டது. அப்போதுதான் கிருஷ்ணன் தோன்றினார். யுகத்தின் முடிவில் மஹாபாரத யுத்தம் நடந்தது. கலியுகத்தில் தர்மப் பசுவுக்கு இன்னும் ஒரு காலும் போய், ஒற்றைக் காலில் 25 சதவிகித புண்ய கர்மாவுடன் தள்ளாடிக் க்ண்டிருக்கும். கலியுக முடிவில் அந்தக் காலும் போய் உலகமே அழியும். பிறகு மீண்டும் கிருத யுகம் பிறக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இப்படி மாறிமாறி வரும் யுகங்களுக்கு காலம் எவ்வளவு என்றும் இந்துக்கள் கணக்கிட்டனர். உலகில் மற்ற நாகரீகங்கள் எல்லாம் 20-ன் மடங்குகளிலும் (மாயா நாகரீகம்), 40-ன் மடங்குகளிலும் (செமிட்டிக் மதங்கள்) சிறிய எண்களுடன் நின்றுவிட்டன. இந்துக்களோவெனில் பல லட்சம் வருடங்களைச் சொன்னதோடு இதற்கு முடிவு என்பதே இல்லை. இந்து வட்டச் சுழல்—மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும் என்றும் மனித ஆண்டு, தேவ ஆண்டு, பிரம்மாவின் ஆண்டுகள் என்பன வெவ்வேறு என்றும் சொன்னார்கள். இது ஏதோ கற்பனையில் பிறந்த வருடங்கள் என்று 200 ஆண்டுகளுக்கு முன் வரை நினைத்தார்கள். இப்பொழுது பல்வேறு உலகங்கள் பல்வேறு வேகத்தில் சுற்றும்போது இவை எல்லாம் சாத்யம் என்று தெரிகிறது.
இதற்கு என்ன விஞ்ஞான விளக்கம் என்று எண்ணிப் பார்த்தால் விடை கிடைக்கவில்லை. இப்பொழுது விஞ்ஞானம் முன்னேற, முன்னேற புதுப்புது விளக்கங்கள் கிடைக்கின்றன. இந்துக்கள் சொன்ன காலக் கணக்கீடு:–
கிருத யுகம் – 1728 ,000, 000 ஆண்டுகள் த்ரேதாயுகம் – 1296, 000, 000 ஆண்டுகள் த்வாபரயுகம் – 864,000 ஆண்டுகள் கலியுகம் – 432, 000 ஆண்டுகள்
இந்த நாலு யுகங்களையும் சேர்த்து சதுர்யுகம் என்பார்கள். 8,640,000,000 ஆண்டுகள் ஒரு கல்பம் எனப்படும். அதுதான் பிரம்மாவின் ஒரு நாள். அதுபோல அவர் நூறு ஆண்டுகள் வாழ்வார். அவருக்குப் பின்னால் வேறு ஒரு பிரம்மா வருவார். இந்தக் காலச் சுழற்சிக்கு முடிவே இல்லை.
கலியுகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் ஓரளவு விஞ்ஞான விளக்கம் சொல்லலாம். நம்முடைய பூமி ஒரு காந்த உருண்டை. எப்பொழுதும் காந்த மண்டலத்தை உருவாக்கிய வண்ணம் இருக்கும். ஏன் இப்படி நடக்கிறது. நாம் வாழும் பூமியின் மேல் ஓடு வெறும் எட்டு மைல்கள்தான். அதன்மீதுதான் நாம் வசிக்கிறோம். அதற்குக் கீழே அதள பாதாளத்துக்குப் போனால் பூமியின் வயிற்றில் அது நெருப்பைக் கட்டிக்கொண்டு தன்னைத் தானே சுற்றுகிறது. அது மட்டுமா? தான் தட்டாமாலை சுற்றுவதோடு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமியானது சந்திரனையும் தன்னோடு இழுத்துக் கொண்டு சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனோவெனில் நவக் கிரஹங்களுடன் பால்வெளி மண்டலத்தைச் சுற்றிவருகிறது. இப்படி பூமி சுற்றுவதால், கடலைக் கடைந்தது போல பூமியின் வயிற்றைக் கடையும் போது பூமியே காந்த சக்தி உருவாக்கும் ‘டைனமோ’ ஆகிவிடும்.
இந்த பூமியில் வட துருவம், தென் துருவம் என இரு துருவங்கள் உண்டு. அதே போல காந்தத்திலும் – அதாவது பூமி என்னும் கிரஹத்தைச் சுற்றி இருக்கும் – காந்த இரு துருவங்கள் உண்டு. வானத்தில் பூமியைச் சுற்றிவரும் பல விண்கலங்கள் மூலம் இவற்றை ஆராய்ந்து வருகின்றனர். அதன்படி பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவது தெரிகிறது. பூமியின் காந்த மண்டலம்தான் நம்மை சூரியனிடமிருந்து வரும் தீய கதிர்களிl இருந்து காத்துவருகிறது. இப்படி காந்த மண்டலம் இல்லாவிடில் நமது பூமியும் சந்திரன், செவ்வாய் போல வறண்ட இடங்களாகக் காட்சி தரும். உயிரினங்களே இரா.
மாக்னெட்டொகெட்டொன் காந்த மண்டல வட துருவம் மெதுவாக நகர்ந்து தென் துருவத்துக்குப் போய்விடும். அதே போல தென் துருவம் மெதுவாக நகர்ந்து வட துருவத்துக்குப் போய்விடும். அதாவது இரண்டும் இடத்தை மாற்றிக் கொள்ளூம். இது ஓரிரவில் நடந்து விடாது ஆயிரம் ஆண்டுகூட ஆகலாம்.
இது நடைபெறும் காலம் பக்கத்தில் வந்துவிட்டது விண்கல ஆய்வில் தெரிய வந்ததால் விஞ்ஞானிகள் கவலை அடந்துள்ளனர். 2030-ல் இது நடைபெறும் என்று ஏற்கனவே பல விஞ்ஞானிகள் கூறியது உண்மையாகி வருகிறது. இப்படி துருவம் மாறுவது நாலு லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடைபெறும் என்றும் இதற்குக் காரணம் காந்தப் புலன் பலவீனம் அடைவதுதான் என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுவர். கடந்த சில நூறு ஆண்டுகளில் பூமி அதன் காந்த சக்தியில் பத்து சதவிகிதத்தை இழந்துவிட்டது.
துருவங்கள் மாறும் நாலு லட்சம் அண்டுகள் என்பது கிட்டத்தட்ட கலியுகத்தின் காலத்தை (432,000) ஒட்டிவருகிறது. நாம் கலியுகம் முடிவில் பெரிய மாறுதல் வரும் என்று நம்புவது போல விஞ்ஞானிகளும் காந்தப் புலன்கள் மாறும் போது பெரிய மாறுதல்கள் ஏற்படக்கூடும் என்பர். தகவல் போக்குவரத்து சீர் குலையும், விண்வெளியில் பறக்கும் விண்கலங்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்பர். இதை மாக்னெட்டோகெடான் என்று அழைப்பர். கடந்த காலத்தில் இப்படி மாறிய போது உலகம் அழியவில்லை என்று கல் படிம அச்சுகள் காட்டுகின்றன.ஆனால் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டன என்பது அவர்கள் தரப்பு வாதம். மற்றவர்களோவெனில் டைனோசர் போன்ற ராட்சத மிருகங்கள் அழிந்தது இதனால்தான் என்பர்.
ஒரு சுனாமி வந்த பின்னர்தான் அதன் பேரழிவுச் சக்தியை நாம் உணர்ந்தோம். அது போல ஒரு காந்த துருவ மாற்றம் ஏற்பட்ட பின்னர்தான் நமக்கு அது பற்றி விளங்கும் என்றும் அவர்கள் கூறுவர்.
காந்த துருவ மாற்றம் மெதுவாகத்தான் நடைபெறும்; அது நடக்க 1000 ஆண்டு ஆகும் என்பது போல நாமும் யுகங்களுக்கு இடையே துருவ சந்தி என்று இடைக்கால, இன்டர்வல் – வைத்திருக்கிறோம். இதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கையில்தான் கலியுகம் என்பது காந்தப் புலன் மாற்றம் அடையும் காலம் என்று எண்ணத் தோன்றுகிறது. பெரிய இடைவெளி, சின்ன இடைவெளி என்று இருக்கும் என்றும் அதற்குப் பின்னரே யுகங்கள் முழுதும் மாறுபட்டிருக்கும் என்றும் புராணங்கள் பகரும். இவைகளை எல்லாம் எண்ணிப் பார்க்கையில் விஞ்ஞானம் வளர, வளர நமக்குப் புராணங்கள் சொன்னது உண்மையே என்ற உணர்வு பலப்படுகிறது.
சந்திரனில், விண்கலம் இறங்கிவிட்டது, செவ்வாய்க்கு விண்கலம் போய்ச் சேர்ந்துவிட்டது, வாயேஜர் என்னும் விண்கலம் சூரிய மண்டலத்தையே தாண்டிப் போய்விட்டது என்றெல்லாம் பத்திரிக்கையில் வரும் செய்திகளைக் கேள்வியே கேட்காமல் நம்பும் நம்மவர், நமது முன்னோர்கள் —– நம்மிடம் தேர்தலில் வோட்டோ, கையில் பணமோ கேட்காமல்—— நமது நன்மைக்காக எழுதிவைத்ததை நாம் நம்ப வேண்டாமா? அதுதான் அறிவுடைமை அன்றோ!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
QUIZ முடிஞ்சா கண்டு பிடி! இல்லேன்னா ‘காப்பி’யடி !!!!
ஏதாவது 4 கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்தால் புத்திசாலி!!! எங்கே ஆரம்பியுங்கள் பார்க்கலாம். கத்துக்குட்டியின் விடைகள் கீழே உள்ளன
1.இப்போது நடக்கும் காலத்தின் பெயரென்ன??? இது கூட தெரியாமலா??? என்ன முட்டாள்தனமான கேள்வி “நிகழ்காலம்”இது கூட தெரியாதா….. என்ன கல்பம்??? (காலத்தை அளக்கும் நேரம் இது) விட்டுத்தள்ளு இன்னம் 9 கேள்விகள் இருக்கே….
2)உயிரினம்தோன்றி எவ்வளவு வருடங்களாகின்றன???
3)ஒரு மன்வந்திரத்திற்கும் இன்னோரு மன்வந்திரத்திற்கும் உள்ள இடை வெளியின் பேரென்ன???
சரி சரி இவன் கேட்கிற கேள்விக்கெல்லாம்’ கூகுள்’ (GOOGLE) தான் பதில் சொல்லும்!
சரி ,அதைத்தான் பாருங்களேன், பதில் எழுதுங்களேன்
4)கணவனை இழந்த பெண்ணை விதவை என்கிறோம் மனைவியை இழந்த ஆணுக்கு என்ன பெயர்???
5)ஒரு வருடம் என்பது எவ்வளவு நாள் சரியாக???? இது கூட தெரியாதா??? சும்மா 5 ம்கிளாஸ் பாடத்தையெல்லாம் கேட்டுகிட்டு…….365 1/4 என்றால் 2 மார்க் தான் கேள்வியை கவனியுங்கள் துல்லியமாக…… என்ன தலையுல குத்திகிறீங்களா???
6)சுவானம் என்றால் என்ன???அதுயாருடைய வாகனம்???
7)தர்பையிலிரந்து பிறந்தவர் யார் யார்?? சரி சரி கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு உங்க மூஞ்சிய பார்க்க…….ஒண்ணே ஒண்ண நான் சொல்லிடறேன் இன்னொண்ண நீங்க சொல்லுங்க பார்போம் தர்ப்பையிலிருந்து வந்த ஒருவன் லவன்,குசன் (TWINS) . இன்னொருத்தர் யார்??? உங்க வீட்ல பெரிய வயதானவர் யாராவது இருந்தா கேட்டு பாருங்களேன்…….
8)வானத்தில் பெருங்கரடி கூட்டம் (GREAT BEAR- URSA MAJOR) என்று ஒன்று,7 முனிவர்கள் சேர்ந்தது….அவர்கள் யார் யார்…????
9)கிருஷ்ணரின் 8 பட்ட மகிஷிகளின் பெயர்கள் என்னென்ன ?
10)ஒரு மண்டலம் இந்த மருந்தைச் சாப்பிட வேண்டும். ஓரு மண்டலம் விரதம் இருந்து சபரி மலைக்குச் சென்று சுவாமி அய்யப்பனைக் காண வேண்டும்…… ஓரு மண்டலம் எனபது எவ்வளவு நாள்??? எப்படி கணக்கிடப் படுகிறது????
11)சிவனுக்கு எத்தனை பிள்ளைகள்??? அதான் ஊருக்கே தெரியுமே…….வினாயகர்,முருகன்….தப்பு
12)(பாற் )கடலின் மேல் உள்ள தெய்வம்- நாராயணன் மலை மேல் உள்ள தெய்வம் சிவன்,முருகன். பாதாளத்தில் உள்ள பாம்பின் பெயெரென்ன???
13)உலகில் தோன்றிய முதல் மொழி எது??? உடனே ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தில்வாளொடு முன்தோன்றிய மூத்த குடி…தமிழ்’!!! இது இல்லை விடை- உடனே நீ ஒரு தமிழ் விரோதி பார்ப்பன கைக்கூலி…சரியப்பா சமஸ்கிருதமும் இல்லை ஓஹோ நீ கிருஸ்துவனா இயேசு பேசிய அராமியமா??? இல்லை தெரிந்து விட்டது ஹீப்ரூ??? இல்லை பாலி! இல்லை; இலத்தீன்;இல்லை , கிரேக்கம்….பின்னெ என்னதாய்யா அது??? கண்டுபிடி கண்டுபிடி……
14)”கண்ணாடி முன் நின்று நீ உனது வலது கரத்தை தூக்கினால் அது இடது கரத்தை தூக்கும்” இந்த ஸ்டேட்மெண்ட் (STATEMENT) சரியா???? சரி என்றால் எப்படி ??? இல்லை என்றால் எப்படி???
15)மொத்த எண்கள் எத்தனை 1, 2, 3, ??? அப்பாடா செத்தான்டா சேகரு….சிலர் மற்றவனை மாட்டி விட்டு சிரிப்பது, அல்லது கண்டு பிடித்து விட்டோம்; அவன் வாயில மண் என்று சந்தோஷப்படுவது!!
சரி, கடைசீ கேள்விக்கு வருவோம்
கடவுளே, கடவுளே இந்த கேள்வியாவது ஈஸியாக இருக்க வேண்டுமே…..
16)அக்னி நடசத்திரம் எப்போது ஆரம்பிக்கும் எப்போது முடியும்? உடனே பஞ்சாங்கத்தை தேடி போகாதீங்க ஒவ்வொரு வருஷமும் எப்படி கணக்கிடப்படுகிறது???
*****
சரி,ஓவ்வொன்றுக்கும் 10 மார்க் போட்டுக் கொள்ளுங்கள் 150 க்கு 40 வாங்கினாலே நீ ங்க இன்டலிஜென்ட் தான்!!! இந்த tamilandvedas -ஐ அடமின் செய்கிற திரு .சாமி நாதன் லண்டன் B.B.C யில் இருக்கும் போது இது மாதிரி நிறைய கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அவர் 30 வருடங்களுக்கு
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்து விரோதிகள் ஜாக்கிரதை!
ச.நாகராஜன்
அப்பாவி ஒருவன் கிடைத்தால் போகிறவன் வருகிறவன் எல்லாம்
அவன் தலையில் ஒரு ‘போடு போட்டு விட்டுப்’ போவார்கள்!
ஹிந்து மதமும் அதைப் பின்பற்றும் ஹிந்துக்களும் அஹிம்ஸாவாதிகள்.
அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், இது தான் வெறி பிடித்த கிறிஸ்தவ பாதிரிமார்களும், தீவிர வாதிகளும், கம்யூனிஸ்டுகளும், தேச, ஹிந்து துரோகிகளும் துணிந்து எடுத்த முடிவு.
இவர்கள் எந்த ரூபத்தில் எப்படி வருவார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது.
நகரத்தின் நடுவில் பிரமாதமாக கண்காட்சி நடத்துவார்கள். அதில் நடுவில் ஒரு ஸ்டாலில் ஹிந்து தெய்வங்களை இழிவு படுத்துவார்கள்.
சரஸ்வதி தேவி நிர்வாணமாக இருப்பாள். சிவன் சூலாயுதத்தால் யாரையோ குத்துவான்.
திடீரென்று ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகும். அதில் ஹிந்துக்கள் முட்டாள்கள் என்று ‘அபூர்வ முடிவு’ தெரிவிக்கப்படும்.
திடீர் திடீரென்று அபூர்வமான ஆய்வு முடிவுகள் சோஷியல் மீடியாக்களின் வாயிலாக ‘அறிஞர்கள்’ மூலமாக ‘தெரிவிக்கப்படும்’!
அதில் கிருஷ்ணன் ஒரு உதவாக்கரை, ராமர் ஒரு பத்தாம்பசலி என்றெல்லாம் ‘ஆதாரபூர்வமாக’ அறிவிக்கப்படும்!
இதற்கு கணினியில் உள்ள டிசைன் உத்திகள் அனைத்தும் உதவிக்கு வரும்.
இன் டிஸைன், போட்டோ ஷாப், கோரல் ட்ரா – இத்யாதிகள் அனைத்தும் பயன்படுத்தப்படும்!
அசந்து போவோம்.
அடடா, கிருஷ்ணன் பிறந்த தேதி விநாடி சுத்தமாக துல்லியமாக சொல்லப்படும்.
ராமர் அயோத்தியை விட்டு வெளியேறிய நேரம், திரும்பி உள்ளே வந்த நேரம் எல்லாம் அந்த சார்ட்டில் அத்துபடியாகத் தெரிந்த இவர்களால் சித்தரிக்கப்படும்.
பிரமிப்போம்.
அந்த சார்ட், அட்டவணை ஊடே விஷக் கிருமிகளை – விஷக் கருத்துக்களை இவர்கள் ‘தூவி’ விட்டிருப்பார்கள்.
நல்ல ஆய்வு மனப்பான்மை கொண்ட சிறந்த ஹிந்துக்கள் கூட ஏமாந்து போவார்கள்.
அந்த சோஷியல் மீடியா செய்திகளைப் பரப்புவார்கள்.
சமீபத்தில் எனக்கு கிருஷ்ணரைப் பற்றிய 44 செய்திகள் இப்படித்தான் அபூர்வமான ஒரு ‘அயோக்கிய புத்திசாலியால்’ பரப்பப்பட்டு வந்து சேர்ந்தது.
அதில் கிருஷ்ணரைப் புகழ்வது போலவும் அவரது அத்யந்த பக்தர் தொகுத்தது போலவும் அலங்காரங்கள் இருந்தன! கீழே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா என்று செய்தித் தொகுப்பு முடிந்தது!
அடடா, என்ன கிருஷ்ண பக்தி!
இவர் சொல்வது அனைத்தும் உண்மையாகத் தான் இருக்கும் என்று எண்ணி அதை நம் குழந்தைகளுக்கும் சொல்லித் தந்து விடுவோம்.
நச்சுக் கருத்துக்கள் விஷம் போல ஹிந்து சமுதாயத்திற்குள் ஊடுருவி விடும்.
இது ஒரு புது டெக்னிக்!
சமீபத்தில் வந்த 44 ‘அபூர்வமான ஆய்வுக் கருத்துக்களில்’ 41 வது கருத்து இது:-
41) He never did any miracles. His life was not a successful one. There was not a single moment when he was at peace throughout his life. At every turn, he had challenges and even more bigger challenges.
41) அவன் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. அவனது வாழ்வு வெற்றிகரமான ஒன்று அல்ல. அவனது வாழ்வில் ஒரு கணம் கூட அவன் நிம்மதியாக இல்லை. ஒவ்வொரு கணமும் அவனுக்கு ஏராளமான சவால்கள் இருந்தன, இன்னும் அதிகமதிகம் பெரிய சவால்கள் இருந்தன.
கிருஷ்ணர் வெற்றிகரமான புருஷர் இல்லையா?!
கிருஷ்ணர் அவதார புருஷர்!
அவரது கீதையை உலகமே போற்றி வியக்கிறது.
வாரன் ஹேஸ்டிங்ஸ் சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஒருவேளை ஓர் நாள் அழியக் கூடும்! ஆனால் கீதை ஒரு நாளும் அழியாது என்றார்.
தோரோ கீதை படிக்காமல் இருந்ததே இல்லை.
ஐன்ஸ்டீன் அலமாரியில் கீதை இருந்தது.
நேதாஜி விபத்துக்குள்ளான விமானத்தில் ஏறும் போது கூட கீதையை எடுத்து வைத்துக் கொண்டார்.
விவேகானந்தர் கீதையைத் தான் தன்னுடன் அமெரிக்கா கொண்டு சென்றார்.
ஸ்வாமி ராமதீர்த்தர் கையில் காசில்லாமல், அமெரிக்காவில் அறிமுகம் செய்யக் கூட ஒருவரும் இல்லாத நிலையில் கப்பலில் செல்லும் போது அவர் கையில் இருந்த ஒரே துணை கீதை தான்!
ஸ்வாமி துரியானந்தர் – ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சீடர் – கீதையை தினமும் முழுதும் படிக்காமல் உணவு அருந்த மாட்டார்.
மஹாத்மா காந்திஜி தனக்கு பிரச்சினை வரும் போதெல்லாம் அதற்குத் தீர்வு காண கீதையை நாடி அதிலிருந்து தீர்வு கண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
வினோபா பாவே கீதையை உயிர்நாடியாகப் போற்றினார்.
தேசபக்தர் சத்தியமூர்த்தி தினமும் கீதையைப் படிப்பார்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கு ஒரு முடிவே இருக்காது.
எங்கு கிருஷ்ணன் இருக்கிறாரோ அங்கே ஜயம்! வெற்றி!
யதோ கிருஷ்ண ததோ ஜய:
ஆனால் ‘ஆராய்ச்சி தடியனின்’ ஆய்வு முடிவின் படி – His life was not a successful one! அடடா, என்ன முடிவு!
நச்சுக் கருத்தை நைஸாக உள்ளே நுழைக்கிறான் பாருங்கள்.
அது மட்டுமல்ல இந்த தடியனின் ஆய்வுக் கருத்துக்களில் திரு சுவாமிநாதன் கண்டு பிடிக்கும் பிழைகள் ஏராளம்!
உதாரணத்திற்குச் சில :
lot of factual errors.
LOT OF CONTRADICTIONS
KRISHNA’S NAVAL ATTACK,, KRISHNA’S CAPITAL SHIFTING 800 MILES AWAY FROM MATHURA,
JAYADRATHA’S DEATH ON SOLAR ECLIPSE DAY ARE FROM MY THREE ARTICLES.
BUT SOLAR ECLIPSE DATE IS WRONG. IF EKADASI FALLS ON 8TH DECEMBER THERE CAN’T BE AN ECLIPSE ON 21ST DECEMBER.
SOLAR ECLIPSE CAN HAPPEN ONLY ON AMAVASYA DAY. IT CANT BE 21 DEC.
HE KILLED ONLY FOUR PEOPLE IS ALSO ABSURD. EVEN CHILDREN’S BOOKS AND BHAJAN SONGS HAVE ALL THE ASURA NAMES.
MATTER ABOUT HIS SCHOOLING AGE, DATE OF TSUNAMI ATTACK ON DWARAKA AND SO MANY OTHERS HAVE NO BASIS.
HE HAS CLOTHED ALL WRONG INFORMATION IN A FACT LOOKING FAKE CAPSULE.
எல்லா தப்புத் தகவல்களையும் தந்த ‘தடியன்’ இறுதியாக கிருஷ்ணரை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று சொல்லி ‘நல்ல பெயரை’ – சரியான ஆய்வாளராகத் தன்னை – காப்பாற்றிக் கொள்கிறான்.