நினைத்தது நடக்கவில்லை, ஆனால் விபத்தில் சிக்காமல் உயிரைக் காத்தது! (Post No.8398)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8398

Date uploaded in London – – –25 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

நினைத்தது நடக்கவில்லை, ஆனால் விபத்தில் சிக்காமல் உயிரைக் காத்தது!

ச.நாகராஜன்

மிக பிரம்மாண்டமான டைட்டானிக் கப்பல் தனது முதல் கடல் பயணத்தை மேற்கொண்டது. இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டனிலிருந்து நியூயார்க் நோக்கிய நெடும் பயணம்; உல்லாசப் பயணம் அது!

ஆனால் துரதிர்ஷ்டவசமாக 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14-15 தேதிகளில் அது கடலில் மூழ்கியது. 1500 பயணிகள் கடலில் மூழ்கி இறந்தனர். இந்த விபத்தை மையமாக வைத்து ஏராளமான திரைப்படங்கள் வந்து விட்டன.

இது எதனால் மூழ்கியது என்ற நீண்ட நெடும் சர்ச்சையும் ஆராய்ச்சியும் இன்றளவும் தொடர்கிறது.

அந்தக் கப்பல் விபத்தில் சிக்காமல் பிழைத்தவரின் ஒரு உண்மை சம்பவம் இது:

ஸ்காட்லாந்தில் க்ளார்க் குடும்பத்திற்கு ஒரே ஒரு கனவு தான்! க்ளார்க்கும் க்ளார்க்கின் மனைவியும் தங்கள் ஒன்பது குழந்தைகளுடன் அமெரிக்கா சென்று செட்டில் ஆகி விட வேண்டும் என்று நினைத்தனர், அவர்களின் ஒரே கனவு அது தான்! கப்பல் பயணத்திற்காக ஆகும் செலவிற்காக வெகு சிரமப்பட்டு பணத்தை அவர்கள் சேமிக்கலாயினர். வருடங்கள் பல ஓடின. தேவையான பணமும் ஒரு வழியாகச் சேர்ந்தது. பாஸ்போர்ட் ரெடி. அமெரிக்கா செல்லும் கப்பலில் அனைவருக்கும் டிக்கட் ரிஸர்வும் செய்தாகி விட்டது.

குடும்பத்தினருக்கு ஒரே உற்சாகம்; பரபரப்பு. எப்போது கப்பலில் ஏறப் போகிறோம் என்ற தவிதவிப்புடன் அவர்கள் இருந்தனர். புதிய நாடு, புதிய இடம், புதிய வாழ்க்கை … நிறைய கனவுகள்!

கப்பல் கிளம்ப இன்னும் ஏழே தினங்கள் மட்டுமே இருந்தன. துரதிர்ஷ்டவசமாக க்ளார்க்கின் ஒரு மகனை நாய் ஒன்று கடித்து விட்டது. டாக்டர் நாய்க்கடிக்குத் தையல் போட்டார்; அத்துடன் வீட்டு வாசலில் ஒரு மஞ்சள் அட்டையையும் தொங்க விட்டார். ‘இது நாய் கடித்த பையன் உள்ள வீடு, ஜாக்கிரதை என்று அர்த்தம் அதற்கு!

யாருக்கும் ரேபிஸ் நோய் வந்து விடக்கூடாது என்று குடும்பத்தினருக்கு 14 நாள் தனிமை அடைப்பை – க்வாரண்டைனை அவர் அறிவித்தார்.

குடும்பத்தின் கனவு பொடிப்பொடியாக நொறுங்கிப் போனது. எவ்வளவு வருடங்கள் காத்திருந்தனர், ஒரு கணத்தில் அனைத்தும் கலைந்து போனது. க்ளார்க் மனமுடைந்து போனார். தன் இளைய குழந்தையின் மீது அடங்காத கோபம் கொண்டார்.

கப்பல் கிளம்பும் நாளன்று அது கிளம்புவதைப் பார்க்க க்ளார்க் துறைமுகம் சென்றார். என்ன ஒரு ஆர்ப்பாட்டம், கப்பல் கிளம்பியது. அங்கேயே அவர் கண்ணீர் சிந்தினார். தன் மகனைச் சபித்தார்; இறைவனிடம் முறையிட்டு நொந்து போனார்.

ஐந்து நாட்கள் கழிந்தன. திடீரென்று ஒரு நியூஸ். அமெரிக்காவிற்குப் பயணப்பட்ட பிரம்மாண்டமான அந்தக் கப்பல் கடலில் மூழ்கியது என்று வந்தது பரபரப்புச் செய்தி!

ஆயிரத்திற்கும் மேலானோர் கடலில் மூழ்கி மாண்டனர் என்ற செய்தி பரவி நாடே பரபரத்தது!

அந்தக் கப்பலின் பெயர் டைட்டானிக்! அதில் தான் அமெரிக்கா செல்ல க்ளார்க் தன் குடும்பத்தினர் அனைவருக்கும் ரிஸர்வ் செய்திருந்தார்.

சின்னப்பையனுக்கு நாய் கடித்ததால் அவர் ஸ்காட்லாந்திலேயே இருக்க வேண்டி வந்தது.

நியூஸைக் கேள்விப்பட்ட க்ளார்க் ஓடோடி வந்து தன் குழந்தையை அள்ளி அணைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டார். அவர்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயம் ஆரம்பித்தது போல குடும்பத்தினர் அனைவருமே மகிழ்ந்தனர்.

விதியா, மதியா எது எப்போதும் வெல்லும்?

‘மற்றொன்று சூழினும் தான் முந்துறும்’ விதி சில சமயம் விபத்தையும் கூட வேண்டத்தக்கதாக்கி விடுகிறது!

tags — நினைத்தது ,நடக்கவில்லை, டைட்டானிக்

INDEX 20 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -20 (Post No.8397)

SAIVAITE SAINT SUNDARAMURTHY SWAMIKAL IN COLOMBO MUSEUM

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8397

Date uploaded in London – – –24 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

நமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை March 2015 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

கர்ம பலன்கள் – சித்திரகுப்தன் கரன்ஸி! from tamilandvedas.com

கர்ம பலன்கள் – சித்திரகுப்தன் கரன்ஸி!      from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

SAIVAITE SAINT MANIKKAVASAGAR IN CENTRE

July 2016

 10-7-16    2957    சீனாவின் விண்கலம் விழப் போகும் அபாயம்!

   11-7-16    2960     உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் – 6 (பழைய கால

              நூல் தற்காலத்திற்கும் பொருந்துமா?)

 12-7-16    2963  கர்ம பலன்கள் : சித்திரகுப்தன் கணக்கு!  

 13-7-16    2967     வீடியோ விளையாட்டுக்கள் ஆபத்தானதா? (பாக்யா 15-7-16

              அ.து  )

  14-7-16     2969    கர்ம பலன்கள் – சித்திரகுப்தன் கரன்ஸி!

  15-7-16     2972    அவன் யார் தெரியுமா? – 1

  16-7-16     2975   அவன் யார் தெரியுமா? – 2

  18-7-16     2981     பாழ்பட்டு நின்றதாம் ஓர் தேசம்!    

  20-7-16      2987     உப்பு நீரில் ஓடும் கார்! (பாக்யா 22-7-16 கட்டுரை)  

  21-7-16      2990      அதிசய புத்த துறவி ஸூ யுன் – 8

  22-7-16      2993   சுகமான கல்யாணி – ராகங்களின் ராணி!

  23-7-16      2996      சுகமான கல்யாணி – ராகங்களின் ராணிக்கு வந்த ஒரு

               அற்புதமான கடிதம்!

23-7-16       3001      அரவிந்த ரகசியம் – கடவுளரின் அர்த்தங்கள்!    

25-7-16       3003      அதிசய புத்த துறவி ஸூ யுன் – 9

26-7-16       3006      மத சார்பற்ற கொள்கை சரியா – 1

27-7-16       3009      சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிகை ஆசிரியர், எனது

               தந்தையார்!

28-7-16       3013      மத சார்பற்ற கொள்கை சரியா – 2

29-7-16       3017  உங்கள் எண்ணங்களைத் திரையில் பார்க்கலாம் 

               (பாக்யா 29-7-16 கட்டுரை)

30-7-16      3020  மூன்று நாடுகளின் அரசியல் சாஸனங்கள்!

31-7-16      3022  அதிசய புத்த துறவி ஸூ யுன் – 10

August 2016

  1 -8-16    3025   கீதையின் மஹிமை : சிருங்கேரி ஆசார்யர்!(ஞான ஆலயம் 

 SAIVAITE SAINT APPAR IN CENTRE

              ஆகஸ்ட் 2016 கட்டுரை)

     3-8-16     3030     வேதம் விளக்கும் சந்தோஷம்!

     4 -8-16    3034    டர்பாவின் அதிசய ஆய்வுகள்!   (பாக்யா 5-8-16 அ.து.)

  6 -8-16    3039  அதிசய புத்த துறவி ஸூ யுன் – 11

  14-8-16      3059    டர்பா காண்பிக்கும் அடுத்த தலைமுறை (பாக்யா12-8-16 அ.து.)

 15 -8-16    3062    உத்வேகம் ஊட்டும் உத்தமருக்கு அஞ்சலி!        

  24-8-16       3087    எவரெஸ்ட் வெற்றியும் உயிர் தியாகங்களும்! (பாக்யா அ.து. 

               19-8-16 கட்டுரை)

September 2016

  3-9-16     3116     ஒருவிண்வெளியில் ஒரு சிறைச்சாலை1 (பாக்யா26-8-16 அ.து)

  5 -9-16    3123    பிள்ளையாரைத் தமிழர்கள் கும்பிடவில்லையா?

  6 -9-16    3126    மவிண்வெளியிலிருந்து விழுந்த வீரர்கள்! (பாக்யா2-9-16 அ.து.)

   11-9-16    3145     பாட்டிற்கோ பாரதியே தான்!

 12-9-16    3147  அற்புத அறிவியல் எழுத்தாளர் ஐஸக் அஸிமாவ் – 1

               (பாக்யா அ.து.)  

 13-9-16    3150      வாட் இஸ் யுவர் புரஃபஷன்? நோ ப்ராப்ளம்? – கம்பன் காட்டும் 

               தலைவனின் தத்துவம்!

  14-9-16     3152    எல்லோரும் அறிஞர்கள் ஆன காலம்!

  16-9-16      3157   ஒரு புதிய பென்சில்!

  17-9-16      3160    அதிசய புத்த துறவி ஸூ யுன் – 12

18-9-16        3164      மதர் தெரஸா மீடியா உருவாக்கிய செயிண்ட் – 1

19-9-16       3167      மதர் தெரஸா மீடியா உருவாக்கிய செயிண்ட் – 2

20-9-16       3170      நட்சத்திரங்களுக்கான ருத்ராக்ஷங்கள்!

21-9-16       3173      வேண்டிய பலன்களைத் தரும் ருத்ராக்ஷங்கள்!

22-9-16       3176   ஐந்து அத்தியாயங்களில் ஒரு சுய சரிதை!

23-9-16       3179      அற்புத அறிவியல் எழுத்தாளர் ஐஸக் அஸிமாவ் – 2

               (பாக்யா அ.து.)  

24-9-16       3183     அதிசய புத்த துறவி ஸூ யுன் – 12

25-9-16       3187      இரண்டு கூழாங்கற்கள்!

26-9-16       3190     பருப்பை நான்காம் தமிழுக்கு ரிஸர்வ் செய்த தீர்க்கதரிசி

               ஔவையார்!

27-9-16      3193      ப்ளாக் ஹோல் மர்மம் (பாக்யா அ.து. கட்டுரை)

28-9-16      3196      இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே

                நடக்கப் போகும் கோரமான மூன்றாம் உலக மகா யுத்தம் – 1

29-9-16      3199  இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே

                நடக்கப் போகும் கோரமான மூன்றாம் உலக மகா யுத்தம் – 2

30-9-16      3202  இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே

                நடக்கப் போகும் கோரமான மூன்றாம் உலக மகா யுத்தம் – 3

TAGS – INDEX 20, எஸ்.நாகராஜன், கட்டுரை இன்டெக்ஸ் -20,

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

                     

CONTROVERSIAL CHRISTIAN OATH (Post No.8396)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 8396

Date uploaded in London – 24 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

I HAVE KEPT THIS PAPER CUTTING FOR 17 YEARS. JUST BEFORE BINNING IT , I AM POSTING IT. IF IT IS STILL NOT CHANGED,

UNITED NATIONS MUST TAKE ACTION AGAINST SJ.

THEY MUST BE BANNED FROM ALL PUBLIC PLACES AD DECLARED TERRORISTS.

tags — SJ, Christian Oath, Controversy, Violent, Society of Jesus

விளக்கு பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8395)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8395

Date uploaded in London – 24 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில்

இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க .

விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை

காண உதவலாம்.

விடை

1.தூண்டா விளக்கு போல

2.விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுகிறதா

3.விளக்கை வைத்துக்கொண்டு நெருப்புக்கு அலைகிறது போல

4.குன்றுமேலிட்ட விளக்கு போல;

5.குடத்திலிட்ட விளக்கு போல

‘யான்’ எப்படி ‘நான்’ ஆகியது?’ பாண்டில்’ எப்போது ‘வண்டி’ ஆகியது ? (Post No.8394)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8394

Date uploaded in London – 24 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பரிபாடலில் நான் :–

பரி  6-87, 20-82

சங்க இலக்கியத்தின் சுமார் 30,000 வரிகளில் , சுமார் ஒரு லட்சம் சொற்களில் இரண்டே இடங்களில் அபூர்வமாக நான் வருகிறது ;பரி . 6-87, 20-82

உலகம் முழுதும் மாறிக்கொண்டே இருக்கும் என்பது இயற்கை விதி.

அணு என்னும் நுண்ணிய துகளுக்குள்ளும்  புரோட்டான்களும் எலெட்ரான்களும் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. ஆகையால் மாற்றம் என்பது இயற்கை நியதி. திருவள்ளுவர் இன்று வந்தால் தமிழ் எழுத்துக்களைப் பார்த்து வியப்பார்  நான் ‘பிராமி’ எழுத்தில் அல்லவா எழுதினேன். இது என்ன எழுத்து? என்று கேட்பார்.

இதே போல மொழியும்  மாறிக்கொண்டே வரும். பழைய ஆங்கில நூலை ஒரு ஆங்கிலச் சிறுவனிடம் கொடுத்தால் ; அவன் படிக்கவும் இயலாது. அர்த்தமும் சொல்லத்  தெரியாது. தமிழுக்கும் இது பொருந்தும்.

சொற்களின் ஒலியும் மாறும்; பொருளும் மாறும்; எழுத்தும் மாறும். இது உலகிலுள்ள எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்  . ஆயினும் வெளிநாட்டு அரைவேக்காடுகள் வேண்டும் என்றே ஆரிய- திராவிட இன  பேத  விஷத்தை மொழி மாற்றத்திலும் புகுத்தினார்கள் . இன்று ஆங்கிலம் 39 விதமாகப் பேசப்படுகிறது என்று ஆங்கில மொழி ஆராய்ச்ச்சியாளர்களே சொல்லுகிறார்கள் . இங்கிலாந்திலிருந்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா , தென் ஆப்பிரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு குடியேறினவர்களே வெவ்வேறு  விதமாக ஆங்கிலம் பேசுவார்கள். பிரிட்டனுக்குள் வேல்ஸ் , ஸ்காட்லாந்து , அயர்லாந்து, இங்கிலாந்தில் வெவ்வேறு விதமாக ஆங்கிலம் பேசுவார்கள்.

இது தெரிந்தும் இந்தியாவில் யார் இருவர் சண்டை போட்டாலும் எந்த இரண்டு சொல் மாறினாலும் ஒன்றை ஆரியர் என்பர் மறறொன்றை திராவிடர் என்பார்கள்  வெளிநாட்டு விஷமிகள். தமிழ் நாட்டில் மட்டும் இதை புகுத்தவில்லை. ஏனெனில் உலகிலேயே இளிச்சவாயர்கள் தமிழர்கள் அவர்களை மதம் மாற்றினால் இந்தியா எப்போதும் ஆங்கிலேயர் வசமாகும் என்று கனவு கண்டனர். உண்மையில் சோழர்கள் வடமேற்கு இந்தியாவிலிருந்து வந்த சம்ஸ்கிருதம் மொழி பேசும் மக்கள். அவர்களே புறநானுற்றிலும் சிபி என்னும் ரிக் வேத இனத்தில் உதித்தவர் என்று சொல்லுவர். மாந்தாதா , நாபாகன். முதலிய சூரிய குல மன்னர்களை முன்னோர்களாகக் கூறுவர்; பாண்டியர்களோ பாண்டவர் பரம்பரை என்பர் . மதுரை மீனாட்சி, சூரசேனன் மகளான காஞ்சன மாலையின்  புதல்வி. அவளை கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மெகஸ்தனிஸும்  “பண்டேயா” ராணி என்று குறிப்பிடுவான் . சோழர்களையும் பாண்டியர்களையும் அக்கினி குல சேரர்களையும் ஆரிய- திராவிட வலைக்குள் எளிதில் வீழ்த்தலாம். ஆனால் அவர்களைத் திராவிடர்கள் என்று பிரித்து சிண்டு முடிய ஆசைப்பட்டதால் வெள்ளைக்கார கயவர்கள் தமிழர்கள் மீது கை வைக்கவில்லை.

சுருங்கச் சொன்னால் உலகம் முழுதும் மொழி மாற்றம் இருக்கிறது இரு அணிகள் இடையே சண்டை நடக்கிறது. பிரித்தாளும் வெள்ளைத்தோல் கயவர்கள் இன பேத வாதத்தை அங்கெல்லாம் புகுத்தவில்லை; இந்து மதத்தின் ஆணி வேரை அசைத்து இந்து மதத்தை விழுததாட்டுவேன் என்று எழுதிவிட்டு, வேதத்தை மொழி பெயர்க்கத் துவங்கிய மாக்ஸ்முல்லர் முழி பிதுங்கிப் போனார். இந்தியாவுக்கு வர பயந்து, சாகும் வரை இந்தியா வுக்குள் வரவே இல்லை. அவர் மூலம் ஹிட்லர் உருவானார். “நான் ஜெர்மன் ; நான் ஒரு ஆரியன்” என்று மாக்ஸ்முல்லர் எழுதியதை ஹிட்லர் பிடித்துக் கொண்டு அப்படியே தன சுய சரிதையில் எழுதி, இந்து சுவஸ்திகாவைக் கொடியில் பொறித்து , மிலிட்டரி யுனிபார்மில் பொறித்து ஆட்டம் போட்டார். ஆக அவர் கனவும் பலிக்கவில்லை.

“யான்” என்று சங்க கால மனிதர்கள் எழுதி வந்தனர். தேவார திவ்வியப் பிரபந்த காலத்தில் அது “நான்” ஆகியது. இன்று நாம் யாரிடமாவது போய் “யான், யாம்” என்றால் ஏற  இறங்கப் பார்ப்பார்கள் . ஒருவேளை மலையாளியோ என்று சந்தேகிப்பர். மலையாளமோ நேற்று வந்த மொழி. கன்னடம், தெலுங்கு போல பழைய மொழியும் அல்ல.

இது போல சங்க கால மக்கள் “பாண்டில், பண்டி” என்று சொன்னதை இன்று நாம் “வண்டி” என்கிறோம். இன்றோ இந்த “வ, ப,”  மாற்றம் வங்கா ளத்திலும் ஒரிஸ்ஸாவிலும் மட்டுமே உண்டு.

நான், வண்டி முதலியன சங்க காலத்தில் ஏன் இல்லை?

ஏன் சங்கத் தமிழில் , திருக்குறளில் “ஒள” என்னும் எழுத்தில் துவங்கும் சொல்லே இல்லை?

ஒளவை என்பதைக் கூட அவ்வையார் என்று எழுதியது ஏன் ?

“ச , ஞ , ய” எழுத்துக்களுக்கு ஏன் தொல்காப்பியர் தடை விதித்தார் ?

உலகில் “ச” – வில் துவங்கும் சொல் இல்லாத பழைய மொழி இல்லையே !

“ ர , ல” எழுத்துக்களில் தமிழ் சொல் ஏன் துவங்கக் கூடாது?

இவை எதற்கும், எங்கும் விஞ்ஞான விளக்கம் கிடையாத!!!!. ஒவ்வொரு மொழிக்கும், ஒவ்வொரு பேட்டை மக்களுக்கும் , ஒவ்வொரு கால மக்களுக்கும் சில பழக்க வழக்கங்கள் உண்டு. சிலவற்றுக்கு வேற்று மொழி  காரணம் இருக்கலாம். இன்னும் சில இயற்கையான மாற்றங்களாக இருக்கலாம்.

திருநெல்வேலி “ஏலே” ஆரியமா, திராவிடமா என்று ஆராய்ந்து பிரித்தாள வேண்டிய அவசியமில்லை

சங்க காலத்தில் விழா, புறா என்று சொல்லாமல் விழவு , புறவு என்ற குறில் ஓலியுடன் பேசினர் .

இப்போது ஒருவரிடம் போய் எங்கள் ஊரில் ‘விழவு’ என்றால், அட எழவே ! எவன் செத்தான், முதலில் அதைச் சொல்லித் தொலை என்பர்!!

பாணினியும் காத்யாயனரும் சமகாலத்தவர் என்று மாக்ஸ்முல்லர் உளறிவைத்தார். ஆனால் 10,000 இடங்களில் மாற்றங்களைக் காட்டுகின்றார் காத்யாயனார் என்பதைச் சுட்டிக்காட்டி இது கால இடைவெளியினால் ஏற்பட்டதேயன்றி பாணினியின் பிழையன்று என்று கோல்ட்ஸ்டக்கர் மாக்ஸ்முல்லரின் முகத்திரையைக் கிழிக்கிறார் . 10, 000 மாற்றங்களுக்கு பாணினி இடம் கொடுத்தால்  அவரை இன்று உலகம் புகழாது. மொழி மாறியதால் இவ்வளவு வேறுபாடு . அந்த அளவுக்கு இருவரிடையே கால இடைவெளி என்றும் கோல்ட்ஸ்டக்கர் எடுத்துக் காட்டுகிறார். உலகில் மொழிகள், எவர் தலையீடு இன்றியும் மாறுபடும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

சோழ என்பதை வடக்கத்திய கல்வெட்டுகளிலும் சம்ஸ்கிருத நூல்களிலும் (அசோகர் கல்வெட்டு, காத்யாயனரின் வார்த்திகா , சோட- கங்க மன்னர்கள்) ஏன் 1500 ஆண்டுகளுக்கு “சோட”  என்று எழுதினார்கள்?

எந்த இலக்கண விதியைப் பின்பற்றி கருடனை, ஆழ்வார்களும் கம்பனும் “கெலுழன்” , “கலுழன்” என்று சொன்னார்கள்?

இவைகளை எல்லாம் ஆராய்ந்தால் வெள்ளைத் தோல் மொழிக் கொள்கையினர் “ஜோக்” JOKES அடித்து இருக்கிறார்கள். இந்துக்களின் காதில் பூவைச் சுற்றி இருக்கிறார்கள் என்பது புரியும்

ரிக் வேத பிராதிசாக்யத்திலிருந்து சிவஞான முனிவர் வரையான, பட்டோஜி தீட்சிதர் வரையான சம்ஸ்க்ருத, தமிழ் இலக்கண நூல்களைக்கற்றால் வெள்ளைத்தோல் அடித்த “தமாஷாக்கள்”  JOKES புரியும்.

உலகில் எல்லாம் மாறும்; எப்போதும் மாறும் ; CHANGE IS INEVITABLE; IT IS NATURE’S LAW.இது இயற்கையின் மாறாத நியதி.

RAMANA: LESSONS FOR DAILY LIVING – 4 (Post No.8393)

    R. Nanjappa

Obedience to Authority

Bhagavan implicitly obeyed authority. Though it was in his name, the Asramam was a separate entity, run by different people, who had their own views and ways. Bhagavan had nothing to do with the administration. When they made a rule, Bhagavan would also obey it, however personally inconvenient.  It was the rule for instance that when anyone brought a book for Bhagavan, it must be submitted to the ‘office’. When someone brought something to him directly, he would have it sent to the office.

It is the practice in the Asramam for sadhus to be given food before serving food in the dining hall. Once they said that all sadhus should only receive their food outside. When they started serving food in the hall, they found Bhagavan missing. Then they saw him standing in the queue along with the other sadhus. He asked whether he was not a sadhu! He had his own subtle, but strong way to make his point!


Once, a foreign lady was found sitting with her leg stretched out in front, as they were not used to sitting cross legged on the floor.  The attendants asked her to bend her knees. The lady struggled to bend them!  Bhagavan noticed that and he too bent his knees and sat cross-legged. The attendants were shocked, as Bhagavan was suffering from rheumatism and bending the knee must have caused severe pain! They asked him to stretch his legs. He told them: ‘It is your rule here that no one should sit with legs stretched. If others stretching legs before me is disrespect to me, my stretching legs before them is disrespect to them! I would not break the rule’. It took lot of persuasion to make Bhagavan resume his normal position, along with the reversal of that rule! It was how things were done in the name of Bhagavan! Bhagavan would say that before anyone prostrated before him, he had already done his mental namaskar!  

Treat Everyone Alike


Bhagavan was very particular that every one should be treated alike. But this is something his attendants never learned willingly, or followed sincerely. In the early days, whatever eatable was brought into the hall, would be distributed then and there. Fruits like plantain would be distributed but by the end there would not be enough, and so only pieces would be given to some. Others like mango or guava would be cut into pieces but as the plate reached the end of the hall, the pieces would become smaller! In the dining hall, some items would be served in greater quantity on Bhagavan’s leaf, and smaller amount on others’! Or if it was buttermilk, it would be thick for Bhagavan, and get thinner as it went along! Bhagavan was an uncompromising enemy of such practices and totally detested such discrimination. He would repeatedly admonish them but people had their own ways! In the dining hall, the server was the king! Finally, Bhagavan decided that he would start eating only after everyone else had been served, ensuring equal treatment for everyone! When the monkey ‘king’ was served food, he was served on his own full leaf plate! 

Problem with Administration

When there is an Asramam, where people of all tastes and temperaments gather, some administrative arrangements become necessary, and their nature will depend upon the persons in charge – this is unavoidable. There would always be people to criticise whatever was done, and spread stories and carry tales. Ramanasramam was no exception. No one would dare to talk such things in the presence of Bhagavan, but if someone carried a grievance against the manager, Bhagavan would say: ‘who knows what kind of stories had been carried to the manager!’ Things would immediately fall into perspective! But it is also a fact that once something was mentioned to Bhagavan, correction or relief followed!


Punctuality

Bhagavan’s punctuality was phenomenal. His movements were regular, orderly. One could set the clock by his movements. His handwriting was like print. Some devotees would contrive something to have something written by him so that they could keep them. Some devotees like K.K.Nambiar were lucky to have entire notebooks written in the hand of Bhagavan!

People generally say that Bhagavan’s spiritual teaching is difficult to follow. If we look closely at the way he lived his external life, we would find that too is difficult for us to follow! His simplicity, frugality, avoidance of waste, equality in treatment for all, non-interference in others’ work or views, not being   judgemental,  love for all forms of life, obedience to authority, maintenance of order- what an array of civic or human virtues are there for us to learn and follow!  What high standards He has set! All taught by example!

***

CONCLUDED

உலகப் புகழ் பெற்ற ஒரு போட்டோ! (Post No.8392)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8392

Date uploaded in London – – –24 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

உலகப் புகழ் பெற்ற ஒரு போட்டோ!

ச.நாகராஜன்

கொரானா காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இன்னொரு மாநிலத்திற்கு வேலை தேடி வந்தோர் தவிக்கும் பாட்டைப் பார்த்தால் மனம் கசிகிறது.

அன்றாடம் வேலை செய்து பெரும் சம்பளத்தால் வாழும் இவர்களுக்கு வேலை இல்லை எனில் ஏது சம்பளம்? எப்படிச் சாப்பிடுவர்? யாரையும் பார்க்கக் கூடாது, வெளியில் வரக் கூடாது, சொந்த ஊருக்கும் போக முடியாது.

இப்படி ஒரு நிலையைத் தந்த கொரானாவை எப்படித் தான் விவரிப்பது?

இதே போல ஒரு நிலை அமெரிக்காவில் 1932இல் ஏற்பட்டது.

இன்றைய கொரானாவைப் போல அவ்வளவு  மோசமில்லை என்றாலும் அதிலும் ஏராளமானோர் படாத பாடு பட்டனர்.

அதில் ஒரு பெண்மணி தான் Migrant Mother!

1929ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி அமெரிக்க ஸ்டாக் மார்க்கெட் சரிந்து வீழ்ந்து அதல பாதாளத்திற்குப் போனது. இது பொருளாதார வீழ்ச்சியை உருவாக்க மக்கள் தவித்தனர். இந்த நிலையை வரலாறு Great Depression என்று பெயரிட்டு அழைக்கிறது.

டொராதா லாங்கே (Doratha Lange) என்ற ஒரு பெண்மணி சிறந்த போட்டோகிராபர். (தோற்றம் 1895- மறைவு 1965) ஸ்டுடியோவிலிருந்து வெளியேறி, அவர் தனது வண்டியில் ஏறிக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றலானார். ஒரு நாள் கலிபோர்னியோவில் நிபோமோ என்ற இடத்தில் ஒரு வேதனை முகத்தில் ததும்ப இருக்கும் ஒரு தாயைக் குழந்தைகளுடன் கண்டார்.

பட்டாணிகளைப் பொறுக்கி எடுக்கும் வேலை அவருடையது. கடுமையான மழையால் பட்டாணிகள் அழிந்து போக அவருக்கு அதை எடுப்பதற்கான வேலையே இல்லாமல் போனது.

லாங்கே வேலையின்றி ஒரு கூடாரத்தில் உட்கார்ந்திருந்த பலரைப் பார்த்தார். அவர்களுள் ஒருவர் ஏழு குழந்தைகளுடன் வருத்தம் தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்திருந்தார். இரு குழந்தைகள் அவரை அரவணைத்திருக்க அவர் சோகமாக அவர் அமர்ந்திருந்தார்.

லாங்கே அவரை அணுகி அவரை போட்டோ எடுக்கலாமா எனக் கேட்டார்.

“ஏதோ இருக்கிறொம். உயிர் பிழைத்து விட்டோம். அப்படித்தான் சொல்ல வேண்டும்” என்று வருத்தத்துடன் அவர் சொன்னார்.  (We just existed. We survived. Let’s put it that way)

அவருக்கு வயது 32. சுற்றியுள்ள வயல்வெளிகளில் உறைந்து கிடக்கும் கறிகாய்களைப் பொறுக்கி எடுத்து அதில் உயிர் வாழ்வதாக அவர் கூறினார். குழந்தைகள் அடித்துக் கொன்று கொண்டு வரும் பறவைகளும் அவர்களுக்கு உணவாகிறது.

ஒரு வண்டியில் அமர்ந்தவாறே ஆங்காங்கு சென்று வேலை தேடும் அவர் கடைசி கடைசியாக தன் வண்டியின் டயர்களை விற்று உணவு வாங்கி வந்ததாகக் குறிப்பிட்டார்.

லாங்கே ஆறு போட்டோக்களை எடுத்தார். அதில் இரு படங்களை சான்பிரான்ஸிஸ்கோ நியூஸ் இதழ் வெளியிட்டது. அதில் ஒன்று உலகப் புகழ் பெற்று விட்டது.

Depression எப்படி அனைவரையும் பாதித்திருக்கிறது என்பதை அமெரிக்க மக்களின் மனதை உருக்கும் விதமாக அந்த 1936ஆம் வருடத்திய போட்டோ விளக்கியது. மைக்ரண்ட் மதர் (Migrant Mother) என்று அந்த போட்டோ தலைப்பிடப்பட்டிருந்தது.முகத்தைக் காட்டாமல் மறைத்து அம்மாவை அணைத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை அணைத்தவாறு அந்தத் தாய் வெறிச்சோடி எதையோ பார்த்த வண்ணம் இருக்கிறார்.

அவர் பெயரைச் சொல்ல மாட்டேன் என்று லாங்கே உறுதி கூறியிருந்தார்.

பிற்காலத்தில் அவரது பெயர் ஃப்ளோரென்ஸ் ஓவன்ஸ் தாம்ஸன் (Florence Owens Thompson) என்பது தெரிய வந்தது.

குழந்தைகளின் தந்தை யார்? அவர் எங்கே? அவர் இல்லை. அந்தக் குழந்தைகளுக்கு அம்மா தான் எல்லாம். வயல்வெளிகளுக்குச் செல்லும் போது குழந்தைகளை மூட்டையாகக் கட்டிக் கொண்டு அவர் செல்வது வழக்கம்.

அமெரிக்க மக்களின் அடிமன உணர்வைத் தூண்டி விட்ட படம் இது என வரலாறு சொல்கிறது. போட்டோவின் விளைவாக 20000 பவுண்ட் மதிப்பிற்கான உணவு வகைகளை அரசு அந்த புலம் பெயர் தொழிலாளிகள் இருந்த இடத்திற்கு அனுப்பியது.

போட்டோ வெளியான போது அந்தத் தாய் வேறொரு இடத்திற்குச் சென்று விட்டார். அவரைப் பற்றிய ஆராய்ச்சியில் பத்திரிகை நிருபர்கள் உள்ளிட்ட பலரும் இறங்கினர்; ஒரு வழியாக அவரைக் கண்டுபிடித்தனர். அவரது வரலாற்றைக் கேட்டனர். அவரது பெயரும் அப்போது தான் தெரிந்தது.

இந்தப் படத்தால் தனக்கு ஒரு பைசா கூட வரவில்லை என்று அவர் பல வருடங்களுக்குப் பின்னர் அவரைக் கண்டுபிடித்த போது கூறினார்.

அவரது குடும்பத்தின் எண்ணிக்கை பத்தாக அப்போது உயர்ந்திருந்தது.

1983இல் தாம்ப்ஸன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.

அவரது புதல்விகள் மருத்துவச் செலவிற்காக மக்களை அணுகினர். உடனடியாக 15000 டாலர் நிதி சேர்ந்தது.

படத்தை எடுத்த லாங்கே அமெரிக்காவின் சிறந்த போட்டோகிராபர்களுள் ஒருவராக மதிக்கப்பட்டார். அவருக்கு விருதும் கிடைத்தது.

மக்கள் மறக்க முடியாத உலகப் புகழ் பெற்ற போட்டோ மைக்ரண்ட் மதர்!

tags -உலகப் புகழ் பெற்ற , போட்டோ

***

SWAMI’S CROSSWORD 2372020 (Post No.8391)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8391

Date uploaded in London – 23 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

across

1.—11— he was  hanged for opposing the British rule in India along with two other people. He was more popular than the other two revolutionaries.

8.—10— long stomached Ganesh

10. –5 – classes of consonants ka, sa, ta,pa; division in astrology

11.– 4—man; in animal world cougars, mountain lions

12. –6—protector; guard; bracelet; protective thread

14.—4—these 8 gods are part of 33 Vedic Gods

15.—5—important Rishi of 8th Mandala of the Rig Veda; Foster father of Sakuntala

16. – 7— incarnation; Vishnu has ten of these.

down

1–8— Elder brother of Krishna

2. -6— country on the bank of Godavari

3. – going up; particularly hoisting flag

4.—4—Tribes of  Nilgris

5.—7—Headman of a village from Rig Vedic days until now

6.—8— Mahayana and this branch are two important sects of Buddhism

7.—5—Monkey in Sanskrit

9.—5— brother of Rukmini

13. – Himalayan Valley, now in Pakistan; known as Switzerland of Pakistan

INDEX 19 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -19 (Post No.8390)

INDEX 19 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -19 (Post No.8390)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8390

Date uploaded in London – – –23 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

நமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை March 2015 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

மோடி ஜி! தட்டிப் பார்த்தால் தங்கம்!!     from tamilandvedas.com

மோடி ஜி! தட்டிப் பார்த்தால் தங்கம்!!     from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

April 2016

  1-4-16    2685      மாசுகள் உருவாகும் வகைகள்! 

  3-4-16    2689  அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாப்போம்!

  4-4-16    2692     நவக்கிரகங்கள் பூஜித்த தலங்கள்! – 1 (ஞான ஆலயம்

             ஏப்ரல் 2016 இதழ் கட்டுரை)

 5-4-16    2695     சுப்புடுவுக்கே சுப்புடு!

   6-4-16   2698     நல்ல பதில்கள்!

 7-4-16    2701     ஏப்ரல் 22 – பூமி தினம்!

  8-4-16    2704     கோடிக்கணக்கான டன் கழிவுப் பொருள்கள்!

  9-4-16    2707      எமனைக் கை தட்டி அழைக்காதே!

10-4-16    2710     அளவறிந்து வாழ்க!

 11-4-16    2713     அனக்ராம் – 1

 12-4-16    2716   அனக்ராம் – 2

 13-4-16    2719     பெருமாள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்ட

              முஸ்லீம் பெண்கள்!

 14-4-16    2723    அனக்ராம் – 3

15-4-16     2725    பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! – 4 யோகி ஸ்ரீ

              திருமலை கிருஷ்ணமாசார்யா

16-4-16     2729     சூரிய கிரகணமும், மன்னர்கள் மரணமும் (பாக்யா 8-4-16

              கட்டுரை)    

17-4-16     2732    பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! – 5 நிரோத் பரன், 

              அரவிந்த ஆசிரமம்

19-4-16     2737    சந்திரன் உலகை அழிப்பானா? (பாக்யா 15-4-16 அ.து.  )

20-4-16     2740   Life is Worth Living!

21-4-16     2743     கவிதைச் சித்தன் கும்மாளம்!

22-4-16    2747      அதிசய புத்த துறவி ஸூ யுன் – 1     

22-4-16    2751      அதிசய புத்த துறவி ஸூ யுன் – 2

24-4-16    2754      2900 ஆண்டுகளுக்கு முன் இந்தியர் செய்த மூளை அறுவை

              சிகிச்சை! (பாக்யா 22-4-16 கட்டுரை)

25-4-16    2755      பொன்னியின் செல்வனில் எத்தனை எழுத்துக்கள்?

27-4-16    2759      உப்பே உத்தமம்! ((சம்ஸ்கிருதச் செல்வம்)                 

28-4-16    2762      அதிசய புத்த துறவி ஸூ யுன் – 3

29-4-16    2765      அறிவியல் மாநாட்டில் சிவபெருமான்! (பாக்யா 29-4-16 அ.து.)

30-4-16    2768      படிப்பது எப்படி?      (சம்ஸ்கிருதச் செல்வம்)   

    

May 2016

  3-5-16    2775  Don’t Postpone!       (Rotarian July 1981)

  4-5-16    2779     நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள்! – 1 (ஞான ஆலயம்

             மே 2016 இலவச இணைப்பு)

 5-5-16    2782     நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள்! – 2 (ஞான ஆலயம்

             மே 2016 இலவச இணைப்பு)

   6-5-16   2785     நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள்! – 3 (ஞான ஆலயம்

             மே 2016 இலவச இணைப்பு)

  7-5-16    2788     நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள்! – 4 (ஞான ஆலயம்

             மே 2016 இலவச இணைப்பு)

  8-5-16    2791     நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள்! – 5 (ஞான ஆலயம்

             மே 2016 இலவச இணைப்பு)

  9-5-16    2794     அதிசய புத்த துறவி ஸூ யுன் – 4

10-5-16    2797     விமானத்தில் பறக்கும் போது நோபல் பரிசு கிடைத்தது!ஞ

             (பாக்யா 6-5-16 அ.து.  )

 11-5-16    2800     அதிசய புத்த துறவி ஸூ யுன் – 5

 12-5-16    2803  எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் -1

 12-5-16    2806     எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் -2

 14-5-16    2809    எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் -3

15-5-16     2812    சந்திரனில் ஒரு கிராமம்! (பாக்யா 13-5-16 அ.து.  )

16-5-16     2815   காளிதாஸன் மீது போஜனின் நட்பு!-சம்ஸ்கிருதச் செல்வம்

17-5-16     2818     என் கணவர் – ராஜலக்ஷ்மி சந்தானம்

 21-5-16    2827      அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப் – 1 (பாக்யா 20-5-16 அ.து.)

21-5-16    2828      சிதையும் சிந்தையும் – சுவையான பாடல்! (சுபாஷிதம்)

24-5-16    2834      பலன் தரும் நவக்ரஹ யந்திரங்கள்!

25-5-16    2837      கீதையைப் படிக்காத வாழ்வு வீணே!

26-5-16    2840      அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப் – 2 (பாக்யா 27-5-16 அ.து. )

27-5-16    2843      அதிசய புத்த துறவி ஸூ யுன் – 6

28-5-16    2846      கீதத்தின் பெருமை! (சம்ஸ்கிருதச் செல்வம்)

29-5-16    2849      பாரதத்தின் பெருமை (சம்ஸ்கிருதச் செல்வம்)

30-5-16    2852      பலன் தரும் பரிஹார யந்திரங்கள்!                   

31-5-16    2855  தமிழகத்தில் உள்ள மஹாபாரதத் தலங்கள்! (ஞான ஆலயம்

             ஜுன் 2016 கட்டுரை)


June 2016

 1-6-16    2858  எனது மூன்றாவது மனைவி! – சம்ஸ்கிருதச் செல்வம்

  2-6-16    2861     அதிசய மலர் மருந்துகள் (பாக்யா 3-6-16 அ.து.)    

  5-6-16    2868     Efficacy of Vishnu Sahasranama

   6-6-16   2871     வெற்றிக்கு வழி!

  7-6-16    2874     உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் – 1

  9-6-16    2880     உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் – 2

10-6-16    2883     விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் செவ்வாய் சிறுவன்!

             (பாக்யா 10-6-16 அ.து.  )

 11-6-16    2886     அதிசய புத்த துறவி ஸூ யுன் – 7

 12-6-16    2888  வாழ்க்கையையே நஷ்டமாக்கிக் கொள்பவர்கள்!(சம்ஸ்கிருத 

             செல்வம்)

 13-6-16    2890     உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் – 3

 14-6-16    2893    உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் – 4

15-6-16     2896    விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் அதிசய மனிதர்கள்!

              (பாக்யா 17-6-16 அ.து.  )

 17-6-16     2901  மறுபிறப்பு உண்டா என்ன? சரகர் தரும் பதில்! (ஹெல்த்கேர் 

              மே 2016 இதழ் கட்டுரை)

 18-6-16     2904     புண்ய காரியங்களைச் செய்து நீண்ட நாள் வாழ

              ஆசைப்படுங்கள் (ஹெல்த்கேர் ஏப்ரல் 2016 இதழ் கட்டுரை)

 27-6-16      2924      மனித குலத்தையே மாற்றப் போகும் மாத்திரை

               (பாக்யா 24-6-16 அ.து.   )

30-6-16      2930  சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க இக்நோபல் பரிசு!

           (பாக்யா 1-7-16 அ.து.   )

TO BE CONTINUED…………………………………………………..

5 சந்தனப் பழமொழிகள் கண்டு பிடியுங்கள் (Post No.8389)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8389

Date uploaded in London – 23 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

1.சந் தனக்கட்டை தேய்ந்து கந்தம் குறைபடுமா ?

2.சந்தனக்குறடு  தேய்ந்தாலும்  மணம்  குறையாது

3.சந்தனம் அரைக்கின்றவன் குடுமி அலைகிறாற்போல

4.சந்தன விருட்சமிருக்கிற காட்டிலே சருப்பம் இருக்கிறது போல

5.சந்தனம் தெளித்த கையாலே சாணி தெளித்தது போல

Tags—சந்தனம், பழமொழிகள்