ஹிந்தி படப் பாடல்கள் – 45 – பழையன கழிதலும்..! (Post No.8026)

      ஹிந்தி படப் பாடல்கள் – 45 – பழையன கழிதலும்..! (Post No.8026)       WRITTEN BY R. NANJAPPA               

  Post No. 8026   Date uploaded in London – – – 23 May 2020    Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.   commercial blog. Thanks for your great pictures.  

ஹிந்தி படப் பாடல்கள் – 45 – பழையன கழிதலும்..!                                  R. Nanjappa  



கிளப் பாடல்களுக்கு அடுத்த இடத்தைப் பெற்றவை ‘பார்ட்டி” பாடல்கள். இவையும் கதையுடன் தொடர்புடையதாகவே இருக்கும்-இவற்றினால் கதையில் ஒரு திருப்பம் வரும். ஒன்று, ஹீரோ/ ஹீரோயினுக்கு  யாராவது அறிவுரை சொல்வார்கள் அல்லது ஹீரோ/ஹீரோயின் பாடுவார்கள். அப்படி இரு பாடல்களைப் பார்க்கலாம்.  

முட் முட் கே ந தேக்  

मुड़-मुड़ के न देख, मुड़-मुड़ के
ज़िंदगानी के सफ़र में तू अकेला ही नहीं है
हम भी तेरे हमसफ़र हैं

आये गये मंज़िलों के निशाँ
लहरा के झूमा झुका आसमाँ
लेकिन रुकेगा न ये कारवाँ
मुड़-मुड़ के न देख…

नैनों से नैना जो मिला के देखे
मौसम के साथ मुस्कुरा के देखे
दुनिया उसी की है जो आगे देखे
मुड़-मुड़ के न देख…

दुनिया के साथ जो बदलता जाये
जो इसके साँचे में ही ढलता जाये
दुनिया उसी की है जो चलता जाये
मुड़-मुड़ के न देख…  
   

முட் முட் கே ந தேக் முட் முட் கே,  ஃஜிந்தகானீ கே ஸஃபர் மே தூ அகேலா ஹீ நஹீ ஹை  ஹம் பீ தேரே ஹம்ஸஃபர் ஹை    

திரும்பித் திரும்பிப் பார்க்காதே! வாழ்க்கை என்னும் பயணத்தில் நீ மட்டும் தனியாக இல்லை! நாங்களும் உன்னுடன் சக பயணிகள் தான்!  

ஆயே கயே மன்ஃஜிலோ(ன்) கே நிஷான் லேஹரா  கே  ஜூமா ஜுகா ஆஸ்மான் லேகின் ருகேகா ந ஏ கார்வான்.. முட் முட் கே ந தேக்.. .

சென்று அடையவேண்டிய இடத்தின் அடையாளம் வந்து போய்விட்டது!. வானமும் மகிழ்ச்சியில் பொங்கி பூமியைத் தொட்டு நிற்கிறது! ஆனாலும் இந்த பயணிகள் சாரிசாரியாகச் செல்வது நின்று விடாது!

(வாழ்க்கை, உலகம் என்னும் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கும்) திரும்பித் திரும்பிப் பார்க்காதே!  

நைனோ(ன்) ஸே நைனா ஜோ மிலாகே தேகே மௌஸம் கே ஸாத் முஸ்குரா கே தேகே துனியா உஸீ கீ ஹை ஜோ ஆகே தேகே முட் முட் கே ந தேக்  

வருவதை யார் உடன்பாட்டுடன் ஏற்றுக்கொள்கிறார்களோ, மாறும் காலத்தை யார் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார்களோ, யார் எதிர்காலத்தை நோக்கி இருக்கிறார்களோ- இந்த உலகம் அவர்களுக்கே சொந்தம்! திரும்பித் திரும்பிப் பார்க்காதே!  

துனியா கே ஸாத் ஜோ பதல்தா ஜாயே ஜோ இஸ்கே ஸாஞ்சே மே ஹீ டல்தா ஜாயே துனியா உஸீகீ ஹை ஜோ சல்தா ஜாயே முட் முட் கே ந தேக் முட் முட் கே   உலகத்தின் போக்கை ஒட்டி யார் மாறுகிறார்களோ, யார் அதன் வண்ணத்தில் தோய்கிறார்களோ, யார் நிற்காமல் சென்றுகொண்டே இருக்கிறார்களோ- இந்த உலகம் அவர்களுக்கே சொந்தம்! திரும்பித் திரும்பிப் பார்க்காதே!  

Song: Mud mud ke na dekh  Film: Shri 420, 1955 Lyrics: Shailendra Music: Shanker Jaikishan Singers: Asha Bhonsle, Manna Dey & chorus  

பார்ப்பதற்கு ஏதோ விளையாட்டாகச் சொன்னது போலிருக்கும்- ஆனால் ஒரு பெரிய உண்மையை இப்பாடலில் சொல்கிறார் ஷைலேந்த்ரா. கடந்த காலத்தையே, நடந்து போனதையே நினைத்திருக்காதே, எதிர்காலத்தை ஏற்றுக்கொள்ள முயற்சி செய் என்கிறார். Let bygones be bygones, look to the future.

‘ஆத்மீ ஜோ சல்தா ரஹே தோ மில் ஜாயே ஹர் கஃஜானா” என்று இதே கருத்தை வேறு சொற்களில் சொல்வார் மஜ்ரூஹ் ஸுல்தான்புரி- சல்தீ கா நாம் காடி (1958) என்ற படத்தில்! சினிமாவில் இந்தப் பாடல் இத்தகைய ஆழ்ந்த கருத்தில் வரவில்லை! ஹீரோவின் மனதை மாற்ற முயற்சி செய்கிறார்கள்- இது முதல் இரண்டு பத்திகளில் வருகிறது. கடைசி இரு பத்திகள் ஹீரோ பாடுவது- அது அவன் மனம் மாறிவிட்டது என்பதைக் காட்டுகிறது! ஆக, இப்பாடல் இப்படத்தில் ஒரு முக்கிய திருப்பத்தைக் காட்டுகிறது. இது ஹிந்தித் திரையுலகில் இதுவரை வந்த படங்களிலேயே மிகச்சிறந்த  பார்ட்டி பாடல் காட்சியாகக் கருதப்படுகிறது. இதில் நடித்த நாதிராவுக்கு நாட்டியம் தெரியாது! இதில் டான்ஸ் என்று எதுவும் பெரிதாக இல்லை! ஆனாலும் அந்த தோற்றத்தை அளித்து விட்டார்கள்! இந்தப் பாட்டிற்கு எத்தனை பெரிய ஆர்கெஸ்ட்ரா! இது அத்தனையும் நேரடியாகப் பதிவானது-

Live recording! இன்றுபோல் அன்று மின்சாதன உத்திகளோ, இசைக் கருவிகளோ இல்லை! அத்தனையும் அசல் வாத்தியங்கள்! இது ஒரு சாதனை தான்! எத்தனை இனிய மெட்டு! அதில் ஆஷா குரலுக்கும் மன்னா டே குரலுக்கும் ஏற்ற நுண்ணிய மாற்றங்கள்! ஷங்கர் ஜெய்கிஷன் அசத்தி இருக்கிறார்கள். இதே கருத்தை வைத்து இன்னொரு பாட்டு.   நைன்டீன் ஃபிஃப்டி சிக்ஸ்!


Nineteen fifty six nineteen fifty seven
Nineteen fifty eight nineteen fifty nine
Duniya ka dhaancha badla
Kismat ka saanchaa badla
Aankhen to kholo zaraa
Lala ho kahaan
Lalalalarala lalallalaliralala
Lalalalarala lalallalaliralala 
Ho ho he he  

உலகின் அமைப்பு மாறிவிட்டது! விதியின் நிறம் மாறிவிட்டது! சற்று கண்ணைத் தான் திறந்து பார்! எங்கே அந்தப் பழைய ஆள்?  

Taj niraale raaz niraale
Jeewan ke saare saaz niraale
Mehfil mehfil ghoom
Dharti se jaaye ambar pe chaaye
Phaila ke baahen chanda bulaaye
Aa taaron ko choom
 

இன்று தலையில் கிரீடம் வேறு மாதிரி, ரகசியம் அலாதி! வாழ்க்கை முழுவதின் நாதம் மாறிவிட்டது! ஜன சமூகம் சப்தம் எழுப்பவில்லை! பூமியை விட்டுக் கிளம்புவோம்! வானைத் தொடுவோம்! சந்திரனைக் கையால் அணைப்போம்! தாரகைகளுக்கு முத்தம் தருவோம்!  

Nineteen fifty nine
Nineteen fifty nine
Nineteen fifty nine
Nineteen fifty six nineteen fifty seven
Nineteen fifty eight nineteen fifty nine Hello o my Kal ki kahaani ho gayi puraani
Duniya pe phir se aayi jawaani
Bahki bahki chaal
Saadi se choli holi se boli
Milke machaa do rangon ki holi
Ye fashion ka saal
 

நேற்றைய கதை பழசாகி விட்டது! அதை விடு! உலகில் மீண்டும் இளமை திரும்பி விட்டது! இதன் நடை- சற்று ஏமாற்றும்! குட்டையான சோலி, கேலியான பேச்சு, எல்லோரும் கலந்து வண்ண ஹோலி கொண்டாடுவோம்! இது புது ஃபேஷனுக்கான ஆண்டு!  

Nineteen fifty nine
Nineteen fifty nine
Nineteen fifty nine
Nineteen fifty six………
Ho ho he he
Fashion badhenge
Kapde ghatengen
Maalik hi jaane kitne rahenge
Mausam kaa ye khel
Zulfen chantaao naakhoon badhaao
Chehre pe naqli chehra chadaao  Duniya saabun tel

  ஃபேஷன் முன்னேறும்! ஆடையின் அளவு குறையும்! எந்த அளவில் நிற்கும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்! இது காலத்தின் விளையாட்டு! தலைமுடியைக் குறைத்துவிடு! நகத்தை நீட்டிக்கொள்! பொய் முகத்தை அணிந்து அசல் முகத்தை மறைத்துக்கொள்!


Nineteen fifty nine
Nineteen fifty nine
Nineteen fifty nine
Nineteen fifty six……
Ho ho he he.
 

Song: nineteen fifty six  Film: Anari 1959 Lyrics: Shailendra Music: Shanker Jaikishan  Singers: Lata, Manna Dey & chorus
 

முட்முட் கே பாட்டு கொடுத்த அதே டீம்! இங்கு லதா பாடுகிறார்- குரல் சில இடத்தில் கிரிச் சென்று போகிறது! இந்த மாதிரி பாட்டைப் பாட லதா, ஆஷாவோ கீதா தத்தோ இல்லை! மன்னா டே மாஸ்டர்! எதையும் அனாயாஸமாகப் பாடுவார்! அருமையான ஆர்ச்செஸ்ட்ரேஷன், இனிய மெட்டு, ஷங்கர் ஜெய்கிஷனுக்கு மீண்டுமொரு ஷொட்டு! இங்கு டான்ஸ் ஆடுவது ஹெலன்! டான்ஸுக்கென்றே பிறந்தவர்! ரிஷிகேஷ் முகர்ஜி டைரக்டர்- விரசமில்லாத ஆட்டம்! இங்கும் முதல் இரண்டு பத்திகளைப் பிறர் பாட, ஹீரோ கடைசி பத்தியைப் பாடுகிறார்! ஆடையின் அளவு குறைகிறது, எங்குபோய் நிற்குமோ என்று பாடுகிறார். 60 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்னமும் குறைந்துகொண்டே வருகிறது! இந்தப் பாட்டு 1959 புது வருடத்தைக் கொண்டாடும் விதமாக வந்தது-இந்தப் படம் ஜனவரி 59ல் ரிலீசானது..

[கடைசி வரியில் “துனியா ஸாபுன் தேல்”என்பதன் பொருள் விளங்கவில்லை! சாபுன் என்றால் சோப்பு, தேல் என்றால் எண்ணெய்- இங்கு என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை. இந்தப் பாட்டின் அசல் ஹிந்தி வடிவம் கிடைக்கவில்லை]  

The geniuses of the golden age converted every situation into an occasion for beautiful songs. Solo, duet or chorus song, melody reigned. The lyrics were meaningful, and rose above the filmy situation – the reason why we still love to listen to them.   The relationship between the make-up man and the film actor is that of accomplices in crime. —  Marlen Dietrich, 1901-1992, German-American actress                               

***

பட்ட மரம் தழைக்கக் கவி பாடிய காழிப் புலவன்! (Post No.8025)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8025

Date uploaded in London – – – 23 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

கொங்கு மண்டல சதகம்

பட்ட மரம் தழைக்கக் கவி பாடிய காழிப் புலவன்!

ச.நாகராஜன்

தொண்டை மண்டலத்தில் வல்லம் என்று ஒரு சிற்றூர் உண்டு. அங்கு இடையர்களில் கல்வி, கேள்விகளில் வல்லவராக நம்பிகாளி என ஒரு புலவர் வாழ்ந்து வந்தார்.

ஒரு சமயம் நம்பிகாளி நெற்குன்றம் சென்று அங்கு பெருங் கொடைவள்ளலாக இருந்த களப்பாள ராஜன் என்ற நெற்குன்றவாண முதலி மீது ஒரு பிரபந்தம் பாடினார்.

தமிழ் அறிவில் சிறந்த அந்த முதலியார் நம்பிகாளி பாடிய பிரபந்தத்தின் உயர்வை உடனே உணர்ந்தார்.

இதற்கு என்ன கொடுப்பது என்று எண்ணி வியந்த அவர் தன் வீடு, ஊர் முதலிய அனைத்தையும் அவருக்குக் கொடுத்ததோடு தன்னையும் கொடுத்தார்; புலவருக்கு அடிமையானார்.

பரிசைப் பெற்றுக் கொண்ட புலவர், முதலியாரை அடிமையிலிருந்து விடுவித்தார்.

பின்பு திருப்புகலூரை அவர் அடைந்தார். அங்கு சிவபிரான் மீது அக்களப்பாளர் திருப்புகலூர் அந்தாதியைப் பாடினார் என வரலாறு கூறுகிறது.

நாவலர் சரிதை இதை இப்படி எடுத்துக் கூறுகிறது :-

பன்னுந் தமிழ்க்கவன் மாமணை யாதி பரிசளிப்ப

முன்னம்பி காளிக்கு நெற்குன்ற வாண முதலியென்போன்

பின்னுஞ் சிலபல பொன்னுங் கொடுத்துத் தன் பேர்நிறுத்த

மன்னுந் தமிழு முரைத்தா னவன்றொண்டை மண்டலமே

கற்குங் கவிவல்லை யாதவர்கோ னம்பி காளிக்கியாம்

விற்கும் பரிசன மாகிவிட் டோம்வட வேங்கடமும்

பொற்குன்ற மும்புகழ் கங்கா நதியும் பொதியமும்போ

னேற்குன் றமுநம் மரபுமெந் நாளு நிலைநிற்கவே  (நாவலர் சரிதை)

பின்பு யாதவர் கோனான நம்பி காளி தேச சஞ்சாரம் செய்து வந்த போது கொங்கு மண்டலத்தில் நெருவூர் என்னும் ஊரை அடைந்தார்.

கையேட்டுக்காரர்களால் நம்பி காளியின் நா வன்மையைக் கேட்டறிந்த  அங்கிருந்த விப்பிரர்கள் பொறாமை கொண்டனர். நம்பி காளியையும் அவரது தமிழையும் இகழ்ந்தனர். இதற்கு உடனடியாக நம்பி காளியின் மாணாக்கர்கள் மறுப்புரை கூறினர்.

“தமிழும் தமிழ்ப் பாக்களும் தெய்வ அருள் பெற்றது எனில், இதோ பட்டுப் போயிருக்கிறதே, இந்த மரத்தை தழையும் படி அவர் பாடுவரோ” என்று அவர்கள் சவால் விட்டனர்.

உடனே மாணாக்கர்கள் நம்பி காளியை நோக்கி, தெய்வத் தமிழின் தெய்வத் தன்மையை இங்கு நிலை பெறச் செய்யுங்கள் என்று வேண்டினர். உடனே அவரும் ஒரு வெண்பாவைப் பாடினார்.

தெய்வத் தமிழென்னுஞ் செம்மொழியு மம்மொழிநேர்

செய்விப்பர் தேவரெனல் தேறத் – தெய்வஞ்

சுரந்தளிக்கு மாநெரூர்ச் சோலையிலே பட்ட

மரந்தளிர்க்க வின்று வளர்ந்து

என்ன ஆச்சரியம், பட்ட மரம் துளிர்த்தது. அனைவரும் வியந்து தமிழின் தெய்வத் தன்மையையும் நம்பி காளியின் நாவன்மையையும் புகழ்ந்து போற்றினர்.

இந்த வரலாறைக் கொங்கு மண்டல சதகம் தனது 78ஆம் பாடலில் இப்படிப் பதிவு செய்கிறது :

பரந்த கடலுல கெல்லா மறியப் பரமசிவ

னிரந்தர மாயருள் சண்முக வேலனன் னேயத்தினாற்

புரந்தரன் போற்றும் நெருவூரிற் காழிப் புலவன்பட்ட

மரந்தழை யக்கவி பாடிய துங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : சுப்பிரமணியர் அருளைக் கொண்டு நெருவூரில் பட்ட மரத்தைத் துளிர் விட்டுத் தழைக்கும்படி தமிழ்க்கவி பாடிய காளிப் புலவனும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவனே என்பதாம்.

தமிழின் தெய்வத்தன்மையைப் பறை சாற்றும் வரலாறுகளில் இதுவும் ஒன்று!

tags — பட்ட மரம் , காழிப் புலவன்

***

கத்தரிக்காய் பற்றிய 3 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் (Post No.8024)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.8024

Date uploaded in London – 22 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கத்தரிக்காய் பற்றிய 3 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் ; விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது

விடை :–

1.கத் தரிக்காய் வாங் கப் பூசணிக்காய்  கொசுரா ?

2.கத்தரிக்காய் விரை சுரை யாய் முளை க்காது .

3.கத்தரிக்காய் சொத்தை என்றால் , அரி வாள்  மணை  குற் றம் என்கிறாள்.

BISHOP CALDWELL IS WRONG-TAMIL SANSKRIT RELATIONSHIP – PART 2 (Post No.8023)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8023

Date uploaded in London – 22 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

PS S SUBRAHMANYA SASTRI’S LECTURE CONTINUED FROM YESTERDAY.

BRIEFLY………………….

PAGES 10 AND 11 – BISHOP ROBERT CALDWELL IS WRONG ABOUT CONVERTIBILITY OF SURDS, BORRWING OF CEREBRALS .

PAGE 12 – HOW TAMIL CHANGES IN THE USE OF ‘VIYANGOL VINAI’

PAGE 13 – HOE ‘YAAN’ BECAME ‘NAAN’ IN APPAR TEVAARAM

MY COMMENTS – UP TO TIRUVALLUVAR PERIOD YOU CANT SEE ‘NAAN’ FOR ‘I.’ ONLY ‘YAAN’ WAS USED FOR ‘I’

PAGE 14- HOW ‘KAL’ SUFFIX FOR PLURAL CHANGED IN USE.

PAGE 15- HOW ‘NAATRAM’ CHANGED IN MEANING; ORIGINALLY SMELL, BUT NOW BAD SMELL

HOW ‘SEYYUM’ IN FUTURE TENSE CHANGED

PAGE 16- EXPLAINS AGGLUTINATIVE, ISOLATING AND INFLEXIONAL LANGUAGES

PAGE 18- WHAT IS GENEOLOGICAL RELATIONSHIP? EXPLAINED

PAGE 20 – USE OF CASE SUFFIXES IN TAMIL AND SANSKRIT

PAGE 21 – TAMIL USES GENDER DISCRIMINATING ELEMENTS; SANSKRIT DOE’ S NOT; EXAMPLES………………….

VANTHAAN – HE CAME

VANTHAAL – SHE CAME

VANTHAAR – BOTH SEX; RESPECTFUL

VANTHATHU – SINGULAR NEUTER

VANTHANA – NETER PLURAL …….. IN TAMIL

PAGE 22- VERBAL SYSTEM IN SANSKRIT IS COMPLICATED- TAMIL SIMPLE.

PAGE 22 AND 23 NEGATIVE VOICE







tags –Caldwell wrong, P S S Sastri-2, Tamil-Sanskrit- 2

to be continued………………………………

Saguna Upasana -SRI TYAGARAJA-13 (Post No.8022)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8022

Date uploaded in London – – – 22 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.


Saguna Upasana

God with form?

Worship of God is one of the five basic duties of every Hindu, one of the pancha maha yajnas. This is common to all sampradayas, though the deities, methods, mantras, etc may differ. 


There have always been people who have questioned whether God has a form, can be confined to a form, whether the worship of just an idol or symbol made up of some material does not amount to sheer idiocy. The monotheistic religions condemn ‘idol’ worship but their own Churches are full of the pictures of saints, angels, Madonna and Child, Sacred Heart of Jesus, etc.  And the church itself becomes a big idol!The Muslims do not have idols but the mere mosque becomes ‘sacred’ for them and they raise a storm over even a disused, dilapidated structure! They all simply miss the point that if God is omnipotent as they say, that power must include the power to take a form too!

Arjuna’s doubt

Arjuna had a doubt. After watching the Visvaroopa, he became frightened, and requested Krishna to resume his normal form, “kreetinam gadinam chakra hastam”! Then Bhagavan assumes this form and tells him:

Naham vedena tapasa 

na daanena na chejyaya

Sakyam evam vido drashtum 

drishtvaanasi maam yatha.          11.53

Neither by the Vedas, nor by tapas, nor by gifts, nor by yajna can I be seen as you have seen Me.

Bhaktya tvananyaya  sakya 

aham evam vida Arjuna

jaatum drashtum cha 

praveshtum  cha parantapa.        11.54

O Arjuna, scorcher of foes! Only by single-minded devotion  I may, in this form, be known, seen in reality and also entered into.

 Arjuna raises another doubt. Bhagavan had earlier spoken about himself as Unmanifested  ( avyaktam) and Imperishable (aksharam) . Now He has shown his usual form with Sankha, chakra, etc. Which is better to worship?

Yevam satata yukta ye 

Bhaktastvam  parupasate

Ye chapyaksharam avyaktam

Teshaam ke yogavittama:             12.1

There are devotees who worship You (in the form just shown). There are devotees who worship the Imperishable, the Unmanifsted. Which of them is better versed in Yoga?



Bhagavan gives a clear, unambiguous answer:

Bhaktyavesya  mano ye maam
Nitya yukta upaasate
Sraddhayaa paratopetaaste
Me yukta tamaa mataa:                     12.2



Those who fixing their mind on Me, worship Me, ever steadfast, and endowed with supreme sraddha, they in My opinion are the best of the Yogis.



Ye tvamakshara manisdesyam

Avyaktam paryupaasate
Sarvatragam achintyam cha
Kutastam achalam druvam

Sanniyamyendriyagramam

Sarvatra sama buddhaya:
Te prapnuvanti maam eva
Sarva bhuta hite rataa:                 12.3-4  


But those too, who worship the Imperishable, the Indefinable, the Unmanifested, the Omnipresent, the Unthinkable, the Unchangeable, the Immovable, the Eternal- having subdued all the senses, even-minded everywhere, engaged in the welfare of all beings- they too reach only Me.
 

Klesha: adhikatarastesham
Avyaktaasakta chetasaam
Avyaktaa hi gatir dukkham
Dehavadbhir avaapyate                 12.5


(But) Greater is the trouble of those whose minds are set on the Unmanifested; for the goal of the Unmanifested is very hard for the embodied being to reach.


Teshamaham samudhdarta 

Mrutyu samsara saagarat
Bhavaami nachirat Partha
Mayyavesita chetasam.           12.7

O Partha!  For those whose minds are set on Me, I become before long their Saviour out of the ocean of mortal samsara.


Mayyeva mana aadhatsva

Mayi buddhim nivesaya
Nivasishyasi mayyeva 
Ata urdhvam na samshaya:     12.8

(Therefore) Fix your mind on Me alone; place your intellect in Me; then you shall  no doubt live in Me hereafter.

These are the very words of Bhagavan Himself and we do not need any other authority on the importance and necessity of saguna upasana.

Sri Ramakrishna Answers

In modern times, this question was repeatedly raised by English-educated Bengalis, who were also under the influence of reform movements like the Brahmo samaj. Some of them also used to say that it should be made clear to the ‘idol’ worshippers that they were in fact worshipping the ‘spirit’ and not the mere image. Sri Ramakrishna used to answer them firmly.

You believe in God without form; that is quite all right. But never for a moment think that this alone is true and all else false. Remember that God with form is just as true as God without form.
“That is the only hobby of you Calcutta people- giving lectures and bringing others to the light! Who are you to teach others?

The Lord has done so many things- will he not show the people the way to worship Him?
Suppose there is an error in worshipping the clay image; doesn’t God know that through it He alone is being invoked? He will be pleased with that very worship. Why should you get a headache over it?”
                                           The Gospel, Feb, 1882

“God now and then assumes various forms for His lovers and reveals Himself to them as a Person.”
                                               October28, 1882

“Do you know what God with form is like? Like bubbles rising on an expanse of water,various divine forms are seen to rise out of the Great Akasa of Consciousness. The Incarnation of God is one of these forms.”
                                             December 14, 1882

“In a shoreless ocean visible blocks of ice are formed here and there by intense cold. Similarly, under the cooling influence, so to say,  of the deep love of Its worshipper, the Infinite reduces itself to the finite and appears before the worshipper as God with form. Again, as, on the rising of the sun, the ice melts away, so on the awakening of Knowledge, God with form melts away into the same Infinite and Formless.”
                                            July 13, 1885

This was a question raging among the newly educated Bengalis, fresh from the University ( Remember, Calcutta university had been started in 1856, English education having been introduced by Macaulay in 1836). But this question was also engaging our own Vedantins, who believed in a nameless Absolute! As if all have become Brahmajnanis! Tyagaraja (1767- 1847) was active about 50 years before Sri Ramakrishna  (1836-1886) and he addressed this question squarely.

No Jnana without Bhakti

Anuragamuleni manasuna
Sujnanamu raadu
Ghanulaina antarjnanula-

keruke gaani
Vagavaga ga bhujiyinche

vaariki truptau reeti
Saguna dhyanamu paini

Saukhyamu Tyagarajanuta………..anuragamuleni

Divine Wisdom will not come to people lacking in bhakti.
The great jnanis  ( Enlightened Ones) know this very well.

Only those who eat slowly (enjoying every morsel) will derive satisfaction from food. ( Or like the one who is served a variety of items) In the same manner, it is only those who take to saguna worship ( with dhyana on the auspicious qualities of Bhagavan) who will enjoy or attain happiness and peace (saukhyam).


Yellavaarivale bhavasaagaramunu

eeta mansu raadu
Vullamunanugani  neeve nenai
yanta teliya ledu.                ( Siggu maali)



I do not feel like swimming in this ocean of samsara, like every one else.

Even after much thinking, I do not understand the method (Advaitic idea) of treating You as me!

Vinda vinda matamulalo jorabadi
veda jendaga leda                     (Koniyade)

I cannot enter the different sects and suffer. ( ie away from devotion to Rama)

Kali cannot be crossed without Bhakti



Tappi bratiki pova tarama Rama kalilo
Muppuna vishaya tatakamuna munugaka

druta manasai
kanchu modalu loha dhana kanaka mulanu 

joochi visa
manchu mariyu bengulanuchu
nenjiyantani manasai          ……..Tappi bratiki

nangana chula maanagu 

yangavastramula bagagu
mungurulani gani

yantarangamunanu aasinchaka…….Tappi bratiki

Jaaji malle mandaara sarojamulanu manasaara
Rajapadamu che Tyagarajanutuni pujinchaka….Tappi



Is it possible for men in this Kali age to escape from great dangers and sense pleasures, with  a firm mind?
Taking the metals like bronze and gold to be just like poison and broken pottery pieces, and keeping the mind away from them,
Not getting attracted by the beautiful dresses and hairstyles  of wily women,


Is it possible to escape?

Without worshipping Rama , adored by Tyagaraja, in the straight royal path , with flowers like jaji, jasmine, lotus , with full heart, is it possible to escape the dangers of Kali?

So here Tyagaraja gives his firm advice that saguna worship is necessary in this Kali age. We may also recall here that Sri Ramakrishna always warned his devotees about ‘Kamini, kanchana’, the two dangers specially stated by Tyagaraja here.

Tyagaraja pursues the path shown in the Gita, and clears the way for Sri Ramakrishna later!

To be continued ………………………………..

tags — Saguna Upasana , SRI TYAGARAJA-13

யவன முண்டா ! பாணினி தகவல் (Post No.8021)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8021

Date uploaded in London – 22 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

உலக மஹா வியாகரண வித்தகன் பாணினி எழுதிய அஷ்டாத்யாயிக்குத் துணையாக நிற்கும் பகுதிகள் சில. வினைச் சொற்களின் பட்டியலைத் தரும் ‘தாது பாடம்’ , பெயர்ச் சொற்களின் பட்டியலைத் தரும் ‘கண பாடம்’ என்பன அவற்றுள் சில. இவையன்றி பாணினீயத்தைப் பயில முடியாதாகையால், இவையும் அவரே எழுதி இருக்க வேண்டும். அல்லது அதே காலத்தில் அவர்களுடைய மாணவர்கள் தொகுத்திருக்க வேண்டும் என்பது ஆய்ந்தவிந்தடங்கிய சான்றோர் கொள்கை.

2700 ஆண்டுப் பழமை உடைய கண பாடத்தில் — பெயர்ச் சொல் பட்டியலில் —  யவனர்களைப் பற்றி ஒரு குறிப்பு வருகிறது. அவர்கள் தலை மயிரை முழுக்கச் சிரைத்து மொட்டையாக இருப்பது பற்றியது . இதை முண்டம்  என்பர். வழுக்கைத் தலையன் என்றும் சொல்லலாம்.

“யவன முண்டா”

–பாணினி கண பாடம் 178, சூத்திரம் 2-1-72

கிரேக்க நாட்டில் வாழும் கிரேக்கர்களிடையே இவ்வழக்கம் எதுவும் இல்லை. ஆகவே யவனர்கள் என்பது கிரேக்கர் இல்லை; வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்த ஒரு ஜாதி என்பது தெளிவாகிறது. சங்கத் தமிழ் நூல்கள் பெரும்பாலும் ரோமானியர்களையே யவனர் என்று குறிப்பிடுகின்றன. ஐந்து நூற்றாண்டுக் கால ரோமானிய மன்னர்களின் காசுகள் இந்தியா எங்கும், குறிப்பாக தமிழ் நாடெங்கும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உலகம் போற்றும் காளிதாசனும் அவனது ரகு வம்ச மஹா காவியத்தில் பாரசீகப் பெண்களையும் வீரர்களையுமே யவனர் என்று குறிக்கிறான் . அவர்கள் கிரேக்கர்கள் அல்ல.  யவனர் என்று தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் வரும் இடங்களை எல்லாம் கிரேக்கர்கள் (Greeks) அல்லது அயோனியன்ஸ் (ionians) என்று ஆங்கிலத்தில் எழுதி மகா குழப்பம் செய்துவிட்டனர் வெளிநாட்டு வரலாற்று ஆசிரியர்கள்.

யவனர்கள் யார் ?

வசிஷ்டர் என்ற மஹரிஷி வைத்திருந்த தெய்வீகப் பசுவான காமதேனுவை , அரசனாக இருந்த விசுவாமித்திரர் பலவந்தமாகக் கைப்பற்ற முயன்ற போது வசிஷ்டர் தனது மந்திர சக்தியால் காமதேனுவின் உடலிலிருந்து உருவாக்கிய பல்வேறு ஜாதிகளில், இனங்களில் ஒன்றுதான் யவன ஜாதி என்பதை ராமாயணமும் மஹாபாரதமும் தெளிவாகச் சொல்லுகின்றன.

மஹாபாதத்தில் 40க்கும் மேலான இடங்களில் யவனர் பற்றி வருவதால் எவரும் இவைகளை இடைச் செருகல் (Interpolations) என்று ஒதுக்க முடியாது.

2000 ஆண்டுப் பழமை உடைய தமிழ் இலக்கியத்தில் ஆறு இடங்களில் வரும் ‘யவனர்’, மற்றும் சில இடங்களில் வரும் ‘மிலேச்சர்’ என்பனவெல்லாம் பெரும்பாலும் ரோமானியர்கள் என்பதை டாக்டர் இரா நாகசாமி எழுதிய ரோமன் கரூர் (Roman Karur by Dr R Nagasamy) புஸ்தகத்தில் காணலாம்.

துர்வாசு மன்னன் வம்சம்

யயாதி என்ற மன்னனின் மகனும் புரு என்பவரின் சகோதரனும் ஆன துர்வாசு என்பவனின் மகன்கள் தான் யவனர்கள் என்று மஹா பாரதமும் (1-80-26) மத்ஸ்ய புராணமும் (34-30) சொல்லுகின்றன. பாட்டனாரின் சாபத்தால் துர்வசுவின் மகன்கள் ‘மிலேச்சர்’ ஆனதாக மஹா பாரதம் மேலும் சொல்லும் (1-79-11). மநு ஸ்மிருதியும் இவர்கள் தாழ்த்தப்பட்ட க்ஷத்ரியர் என்று சொல்கிறது.

குறைந்தது இரண்டு யயாதி மன்னர்களை ஹிந்து மத நூல்கள் காட்டுகின்றன.

இங்கே வரும் துர்வாசு ‘முதல் யயாதி’யின் மகன்; நஹுஷனின் பேரன். அதாவது பஞ்ச பாண்டவர்களுக்கு குறைந்தது 15 தலைமுறைக்கு முந்தையவன். ஒரு தலைமுறைக்கு வெள்ளைக்காரர் போல 20 ஆண்டுக் கணக்கு வைத்தால் மஹாபாரதத்துக்கு 300 ஆண்டுக்கு முன்னாலும் இந்திய ஆடசி ஆண்டு சராசரிப்படி பார்த்தால் 500 ஆண்டு இடைவெளியும் வரும். அதாவது கி.மு. 3600. தற்போதைய குதிரை, இரும்பு ஆராய்ச்சிக்காரர்கள் சொல்லும் கி.மு.1500-தான் மஹாபாரத காலம் என்று கொண்டாலும் துர்வாசு-யவனர் காலம் கி..மு.2000 ஆகும். எப்படிப் பார்த்தாலும் அலெக்ஸ்சாண்டர் கால ‘உண்மை கிரேக்கர்’களும் மஹாபாரத யவனர்களுக்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது .

சரக சம்ஹிதை என்னும் மருத்துவ நூல் இவர்களை கோதுமை உணவு, மது, மாமிசப் பிரியர்கள் என்று பேசுகிறது 6-3-316

சுஸ்ருத சம்ஹிதை யவனர் ‘அட்டை’ (leeches) களை ரத்தம் உறிஞ்ச பயன்படுத்துவதை மட்டும் சொல்லும்.

இவை அனைத்தும் காட்டும் உண்மை என்னவென்றால் அலெக்சாண்டர் படையெடுப்புக்கு முன்னரே, ‘யவனர்’ என்ற சொல் பிரயோகம் இருந்தது; ஆனால் அவை கிரேக்கர்கள் என்று பொருள்படாது என்பதாகும். அலெக்ஸ்சாண்டர் திடீரென்று மரணம் அடைந்தவுடன் சிதறுண்ட அவரது வடமேற்கு இந்திய மாகாணங்களில் உண்மையிலேயே (Indo- Greeks) கிரேக்கர் தொடர்புடையோர் ஆண்டனர்.

சூத்ர பெண்களுக்கும் க்ஷத்ரிய ஆண் களுக்கும் பிறந்தவர்களே யவனர்கள் என்று கௌதம தர்ம சூத்திரம் 4-21 சொல்லும். ஆக எல்லாவற்றையும் கூ ட்டிக் கழித்துப் பார்த்தால் வேத தர்மத்தைப் பின்பற்றாத இந்துக்களே யவனர்கள், அவர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்பது தெளிவாகும். டேரியஸ் (Darius of Persia) என்னும் கி.மு.ஆறாம் நூற்றாண்டு மன்னர் படையிலேயே யவனர்கள் இருந்ததால் அலெக்ஸ்சாண்டருக்கு முன்னரே அவர்கள் இந்தியருடன் வாழ்ந்தது தெரிகிறது.

சமண மத புஸ்தகங்கள் யவனர்களைக் கொடூரமானவர்கள் , தீய எண்ணம் கொண்டவர்கள் என்று சித்தரிக்கின்றன.

மஹாபாரத யுத்தத்தில் யவனர் படைகளும் துரியோதனனுக்கு ஆதரவாகக் களம் இறங்கின. 7-95-20. போரில் ஈடுபட்ட மிலேச்சர்கள் அனைவரும் மொட்டைத் தலையர்கள் என்றும் மஹாபாரதம் சொல்கிறது.

பாகவதம் , ஹரி வம்சத்தில் பின்னர் வரும் கிருஷ்ணர் – கால யவனர் மோதல் கதைகளும் யவனரின் பழமையைக் காட்டும்.

புராணங்களும் அவர்கைளை ‘மீசை இல்லாதோர்’ அல்லது ‘மொட்டைத் தலையர்’ என்றே வருணிக்கின்றன.

திரவுபதியை அவமதித்த சிந்து தேச மன்னன் ஜெயத்ரதனின் தலை மயிரை பீமன் ஐந்து குடுமி மட்டும் நீட்டிக் கொண்டிருக்கும்படி சிரைத்ததை (ம.பா.3-256-9) -முன்னரே கொடுத்துள்ளேன்; மஹா வம்சம் என்னும் இலங்கை வரலாற்று நூலும் வங்காளத்தில் அட்டஹாஸம் செய்த விஜயனையும் அவனது சகோதரனையும் பாதிப்பகுதி தலை மயிரை  மட்டும் சிரைத்து கப்பலில் ஏற்றி அனுப்பியதையும் அவர்கள் கடைசியில் இலங்கையில் வந்து இறங்கி சிங்கள ஆடசி அமைத்ததையும் எழுதிவைத்துள்ளது.. ஆக தலை மயிரை மொட்டை அடிப்பது அவர்களை கீழ் மட்டத்தினர் என்று அடையாளம் காட்டவும் இன்ன இனத்தினர் என்று காட்டவும் பயன்படுத்தப்பட்டது.

tags- யவன முண்டா, பாணினி, துர்வாசு

–subham–

ஹிந்தி படப் பாடல்கள் – 44 – கிளப்பும் பாட்டும்! (Post No.8020)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8020

Date uploaded in London – – – 22 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

– commercial blog. Thanks for your great pictures.

 ஹிந்தி படப் பாடல்கள் – 44 – கிளப்பும் பாட்டும்!

                                  R. Nanjappa

கிளப்பும் பாட்டும்!

“கிளப்”- Club இந்த ஆங்கிலச் சொல்லிற்கு பல அர்த்தங்கள். 60 வருஷங்களுக்கு

முன்பெல்லாம் சாதாரண காஃபி ஹோட்டலை “காஃபி கிளப்” என்று சொல்வார்கள்.

அது தவிர லேடீஸ் கிளப், ரோடரி கிளப், லயன்ஸ் கிளப் என்றெல்லாம் இருக்கின்றன.

இந்த கிளப் சமாசாரத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் ஆங்கிலேயர். அவர்கள் ஆளும்

வர்க்கத்தினர்-அதனால் நம்மவருடன் சேரமாட்டார்கள். அவர்கள் சமூகம் சிறியது,

சிதறிக் கிடக்கும். அதனால் தங்களுக்குள் பரஸ்பர சமூகத் தொடர்புகொள்ள இந்த அமைப்பு

உருவானது. அதில் பல அரசு தொடர்பான விஷயங்கள் , ரகசியங்கள் அதிகாரிகளுக்குள்

பேச்சுவார்த்தை மூலமாகவே பரிமாறிக்கொள்ளப்படும், செயல் முடிவுகளும் எடுக்கப்படும். 

அதிகார வர்க்கத்தினரிடம் அணுகுமுறையில் ஒர் ஒற்றுமை இதனால் உருவானது.

நம்மவர்கள் இந்த கிளப் சமாசாரத்தை-அமைப்பை- எடுத்துக்கொண்டார்கள், ஆனால் அதன் 

நடைமுறை வேறாக இருந்தது. ஸர். எம் விஸ்வேஸ்வரய்யா கூட ‘சென்சுரி ‘ கிளப் என்று

ஒன்றை 1917ல் பெங்களூரில் தொடங்கினார்! இது ஆங்கிலேயரின் “பெங்களூர்” கிளப்பிற்குப்

போட்டியாக வந்தது! [நம்மவர்களுக்கு இந்த அடிமையின் மோகம் இன்னமும் முடியவில்லை!

இந்த பெங்களூர் கிளப்பில்சேரத் துடிக்கிறார்கள்! 30 வருஷம் காத்திருக்கவேண்டும்!]

நமது சினிமாவில் வேறுவிதமான கிளப் உதயமாயிற்று! இது “குடிமகன்கள்” கூடும் இடம்!

ஹீரோவுக்கு மனக்கஷ்டம், காதல் தோல்வி என்றால் இங்கு வந்துவிடுவார்! அவரைத் தேடி

வில்லன்களும் வருவார்கள்; அவரை மடக்கிப்போட வில்லிகளும் வருவார்கள்- என்றிப்படிப்

போகும்! 50களில் வந்த ஹிந்திப் படங்கள் பலவற்றில் கிளப் காட்சிகள் இடம் பெறும்!

இவற்றின் சிறப்பு அம்சம், கண்ணுக்கு விருந்தான டான்ஸ் காட்சிகள், காதிற்கினிமையான 

பாடல்கள்! இசைஞர்கள் ஒருவரை ஒருவர் மிஞ்சும் விதத்தில் இசையமைத்தார்கள். 

நடனத்தில் விரசமிருக்காது, இசையில் தொய்வு இருக்காது! தற்போது வரும் “அயிட்டம்”

நம்பர் போல் இல்லாது, கதையுடன் தொடர்புடையதாகவே இருக்கும்! கீதா தத்தும் ஆஷா 

போன்ஸ்லேயும் இத்தகைய பாடல்களில் ஜொலித்தார்கள். கீதா தத் பாடிய இரு பாடல்களைப்

பார்க்கலாம்.

தத் பீர் ஸே பிகடீஹுயீ


तदबीर से बिगड़ी हुई, तकदीर बना ले
अपने पे भरोसा है तो एक दाँव लगा ले

डरता है जमाने की निगाहों से भला क्यों
इन्साफ तेरे साथ है, इल्ज़ाम उठा ले
अपने पे भरोसा है

क्या ख़ाक वो जीना है, जो अपने ही लिए हो
खुद मिट के किसी और को मिटने से बचा ले
अपने पे भरोसा है

टूटे हुए पतवार है, कश्ती के तो हम क्या
हारी हुई बाहों को ही पतवार बना दे
अपने पे भरोसा है...  

தத்பீர் ஸே பிக்டீ ஹுயீ தக்தீர் பனா லே, தக்தீர் பனா லே

அப்னே பே பரோஸா ஹை தோ இக் தாவ்(ன்) லகாலே

கெட்டுப் போன உன் வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டுமா?

உன் மேலேயே உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அப்பொழுது நீ ஏன் ஒரு பணயம் வைக்கக்கூடாது?

டர்தா ஹை ஃஜமானே கே நிகாஹோ ஸே பலா க்யூ(ன்)

இன்ஸாஃப் தேரே ஸாத் ஹை, இல்ஃஜாம் உடாலே

அப்னே பே பரோஸா ஹை.

எதற்காக வீணில் இந்த உலகத்தைக் கண்டு அஞ்சுகிறாய்?

நியாயம் உன் பக்கம் இருக்கிறது, சாட்டிய குற்றத்தை ஏற்றுக்கொள்

(குற்றம் சாட்டியதற்கு ஏன் பயப்படவேண்டும்?)

உன் மேலேயே உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?

க்யா காக் வோ ஜீனா ஹை, ஜோ அப்னே ஹீ லியே ஹோ

குத் மிட்கே கிஸீ ஔர் கோ  மிட்னே ஸே பசாலே

அப்னே பே பரோஸா ஹை

ஒருவன் தனக்காகவே வாழ்வது ஒரு வாழ்க்கையா?

தன் உயிரே போனாலும் பிறர் உயிரைக் காப்பாற்று!

உன் மேலேயே உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?

டூடே ஹுயே பட்வார் ஹை, ்தீ கே தோ ஹம் க்யா

ஹாரீ ஹுயீ பாஹோ(ன்) கோ ஹீ படவார் பனா தே

அப்னே பே பரோஸா ஹை தோ

படகின் துடுப்பு உடைந்துபோய் விட்டதா? அதனால் என்ன?

நம் கைகளையே துடுப்பாகக் கொள்ளலாமே!.

உன்மேலேயே உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?

Song: Tadbir se bigdi huyi  Film: Baazi 1951 Lyrics: Sahir Ludhianvi

Music: S.D.Burman Singer: Geeta Dutt (then Geeta Roy)

கிளப் பாட்டுதான், ஆனால் கருத்தைப்  பாருங்கள்!

இந்தப் பாட்டை கஃஜல் ghazal  என்ற கவிதை வடிவில் எழுதியிருந்தார் ஸாஹீர் லுதியான்வி.

இரண்டிரண்டு வரிகளாக வரும் இத்தகைய கவிதையில், இயற்கையாகவே ஒரு

rhyme or metre இருக்கும்; குறிப்பிட்ட வடிவம் இருக்கும்; ஒரு குறிப்பிட்ட மன நிலையை

விவரிப்பதாக இருக்கும். பொதுவாக காதல் சம்பந்தப்பட்ட விஷயம்-அதனுடன் சிறிது

மனக் கஷ்டம் என்று இப்படி கஃஜலுக்கென்று இலக்கணம் உண்டு. 

இங்கு பர்மன் இது எதையும் பார்க்கவில்லை- மேலை பாணியில் ஒரு மெட்டு, அதற்கு கிதார்

பின்னணி என்று எல்லாவற்றையும் மாற்றினார்.. ஸாஹிருக்குக் கோபம் வந்து விட்டது!

பர்மன் விட்டுக்கொடுக்கவில்லை. கடைசியில் 8 பாடல்கள் உள்ள இப்படத்தில் இந்தப் பாடலே

மிகப் பெரிய ஹிட் ஆனது!.

“குத் மிட்கே கிஸீ ஔர் கோ மிட்னே ஸே பசா லே”  என்ற இந்தக் கருத்தை ஷைலேந்த்ரா

ஒரு பாட்டில் சொல்லுவார்: “குத் ஹீ மர் மிட்னே கீ, ஏ ஃஜித் ஹை ஹமாரி” என்று

“அனாரி” படத்தில் 1959 வரும்!

முதல் வரியில் வரும் ” தத்பீர்” என்ற சொல்லுக்கு, அதிகம் சிந்தித்தல்-

too much deliberation, planning என்று பொருள். அதனால் எதுவும் நன்மை விளையவில்லை.

தன்னம்பிக்கையுடன் ஏதாவது செய்- என்பது கருத்து. இது வில்லனின் ஆள் (mole) பாடுவதாக

வருகிறது.

கீதா தத் அப்போது கீதா ராய்தான்! இந்தப் படம் குரு தத் இயக்கியது. கீதா பாடியதைக் கேட்டு

அவரைக் காதலித்து மணந்தார், கீதாராய் கீதா தத் ஆனார்]

இப்போது, வேறொரு கிளப் பாட்டு பார்க்கலாம்

பாபூஜீ தீரே சல்னா

बाबूजी धीरे चलना
प्यार में, ज़रा सम्भलना
हाँ बड़े धोखे हैं
बड़े धोखे हैं इस राह में
बाबूजी धीरे चलना

क्यूँ हो खोये हुये सर झुकाये
जैसे जाते हो सब कुछ लुटाये
ये तो बाबूजी पहला कदम है
नज़र आते हैं अपने पराये
हाँ बड़े धोखे हैं

ये मुहब्बत है भोलेभाले
कर दिल को ग़मों के हवाले
काम उलफ़त का नाज़ुक बहुत है
के होंठों पे टूटेंगे प्याले
हाँ बड़े धोखे हैं

हो गयी है किसी से जो अनबन
थाम ले दूसरा कोई दामन
ज़िंदगानी की राहें अजब हैं
हो अकेला है तो लाखों हैं दुश्मन
हाँ बड़े धोखे हैं…  

பாபூஜி தீரே சல்னா,

ப்யார் மே ஃஜரா சம்பல்னா

ஹா(ன்), படே தோகே ஹை

படே தோகே ஹை இஸ் ராஹ் மே

பாபூஜீ தீரே சல்னா

மிஸ்டர், நிதானிக்கவும்!

அன்பெனும் பாதையில் கவனமாகப் போகவும்

இதில் ஏமாற்றுவேலைகள் அதிகம்!

கவனித்துப் போகவும்!

க்யூ(ன்) ஹோ கோயே ஹுயே ஸர் ஜுகாயே

ஜைஸே ஜாதே ஹோ ஸப்குச் லுடாயே

யேதோ பாபூஜி பஹலா கதம் ஹை

நஃஜர் ஆதே ஹை அப்னே பராயே

ஹா(ன்) படே தோகே ஹை

ஏன் இப்படித் தலையைத் தொங்கவிட்டு உட்கார்ந்திருக்கிறாய்?

எல்லவற்றையும் பறிகொடுத்துவிட்டது போல் ஏன் இருக்கிறாய்?

மிஸ்டர், இது தான் நீ வைக்கும் முதல் அடி

இப்போது நம்மைச் சேர்ந்தவர்களே வேறாகத் தெரிவார்கள்

ஆம், இந்தப் பாதையில் ஏமாற்று வேலைகள் அதிகம்!

யே முஹப்பத் ஹை போலேபாலே

கர் தில் கோ கமோ(ன்) கே ஹவாலே

காம் உல்ஃபத் கா  நாஃஜுக் பஹுத் ஹை

ஆகே ஹோடொ(ன்) மே டூடேங்கே ப்யாலே

ஹா(ன்) படே தோகே ஹை

இந்த காதல் விஷயத்தில் வெகுளியாக இருந்து

உன் மனது துக்கமயமாக இடம் தராதே

இந்தக் காதல் விவகாரம் நாசூக்கானது

கிண்ணம் உதடுவரை வந்து உடைந்து போகலாம்!

ஆம், இந்தப் பாதையில் ஏமாற்றுவேலைகள் அதிகம்

ஹோகயீ ஹை கிஸீ ஸே ஜோ அன்பன்

தாம் லே தூஸ்ரா கோயீ தாமன்

ஃஜிந்தகானீ கே ராஹே(ன்) அஜப் ஹை

ஹோ அகேலா  ஹை தோ லாகோ ஹை துஷ்மன்

ஹா(ன்) படே தோகே ஹை

யாருடனாவது உறவு முறிந்து விட்டதா?

வேறொரு துணையைத் தேடிக்கொள்!

வாழ்க்கையின் போக்கு விசித்திரமானது

நீ தனியாக இருந்தால் எதிரிகள் பலர் வருவர்

ஆம், இந்தப் பாதையில் ஏமாற்றுவேலைகள் அதிகம்

Song: Babuji dheere chalna Film: Aar Paar 1954 Lyrics: Majrooh Sultanpuri

Music: O.P.Nayyar  Singer: Geeta Dutt

This song is at a different level, compared to the previous one. There is no altruistic idea here,

only direct personal advice. This is probably to go with the story, where the villain’s mole is

singing. Nevertheless, the lyrics by Majrooh are just fine. .

The previous song was classy, this is more peppy, in typical early Nayyar fashion!

ஓ.பி.நய்யார் திரை இசையில் ஒரு புதிய பாணியை உருவாக்கினார்! இதைப் பிடி,

இல்லையேல் திரையிசைவிட்டு ஓடு என்ற நிலை உருவானது! நௌஷத், பர்மன், மதன்

மோஹன் ஆகிய சிலரே இந்த அலையை எதிர்த்து நின்றார்கள்!  நய்யார் கேட்ட அதிக

தொகையைக் கொடுக்க முடியாத தயாரிப்பாளர்கள், பிறரை அதேபாணியில் இசை அமைக்கத்

தூண்டினார்கள்! நய்யாருக்கே மார்கெட் சரிந்தது!

நய்யார் இசையில் ஒரு கவர்ச்சி இருக்கும், கேட்பவரை தாளம் போட வைக்கும், ஆடத்

தூண்டும்! ஆனால் அவர் இசையில் இனிமை இருக்கும். 

ஹிந்தித் திரைஇசையில் லதா மங்கேஷ்கர் ஒரு பாட்டுகூட நய்யாருக்காகப் பாடியதில்லை!

அப்படி இருந்தும் நய்யார் பிரபலமானார்! முதலில் கீதா தத், ஷம்ஷாத் பேகம் பிறகு ஆஷா

போன்ஸ்லே என்று இவர்களே நய்யாருக்குப் பாடினார்கள்.

This was Guru Dutt’s own film. 

When Guru Dutt married Geeta in 1953, she was already a well established singer. She was

noted for her extraordinary range- she could sing anything from bhajans to peppy club songs!

There was a lilt in her voice which was enchanting, which Lata lacked. Guru  Dutt was a

struggling director. Rumour mills were at work, saying that Guru had married Geeta only for

financial security! This deeply hurt him and he forbade her from singing except in his own

films. This totally wrecked her singing aspirations and career.

We enjoy the songs, but the field is full of blood, sweat, toil and tears

.

கிளப் பாடலாக இருந்தாலும் சொற்களில் அசிங்கம் இல்லை; நடன மணிகளின் உடை

கவுரவமாகவே இருக்கிறது; அசைவுகளில் விரசமில்லை!

குரு தத் உதய் சங்கரிடம் நடனம் முறையாகப் பயின்றவர். அப்போது இவருடன் பயின்றவர் 

இசைஞர் ஸர்தார் மாலிக்.

இது ஒரு மணியான பாடல், நல்ல வரவேற்பு பெற்றது.

Unfortunately, the quality of conversion from film to video is so poor in India: neither the

sound quality is good, nor are the pictures sharp. This song will make a great impact if

played and listened through quality audio system.

கிளப் பாடலாக இருந்தால் என்ன? நல்ல கருத்தும் இசையும் இருக்கலாமே!

tags- ஹிந்தி படப் பாடல்கள் – 44

                                       ***

ஞானம் பெற்று விட்டேனா, குருவே! (Post No.8019)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8019

Date uploaded in London – – – 22 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஞானம் பெற்று விட்டேனா, குருவே!

ச.நாகராஜன்

அதனால் யாருக்கு என்ன லாபம்?

பெரிய மகான் ஒருவர் நகர்ப்புறத்தில் குடில் ஒன்று அமைத்து தவம் செய்து கொண்டிருந்தார்.

தொலைதூரத்தில் வசித்து வந்த அவரது சீடன் ஒருவன் அவருடன் கடிதம் மூலம் தொடர்பு கொள்வது வழக்கம். தனது முன்னேற்றம் பற்றி அவ்வப்பொழுது அவன் தெரிவித்துக் கொண்டே இருந்தான்.

‘மாதம் ஒரு முறை கடிதம் எழுது’, என்றார் குரு.

முதல் கடிதம் வந்தது : “நான் சொர்க்கத்தை என் அகக் கண்ணில் தரிசனம் செய்கிறேன். என்னை தேவதைகள் தூக்கிச் சென்று பறப்பது போல ஒரு ஆனந்தம். மேலிருந்து அகில உலகத்தையும் பார்க்கிறேன்.”  

ஹூம் என்று முனகிய குரு அதைக் கசக்கித் தூக்கிப் போட்டார்.

அடுத்த மாதக் கடிதம் வந்தது : “பிரபஞ்சம் முழுவதையும் பார்க்கிறேன். நானே பல உலகங்களைப் படைக்கிறேன். எனது அகத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கிறேன்.”

ஹூம் என்று முனகிய குரு அந்தக் கடிதத்தைக் கிழித்துப் போட்டார்.

அடுத்த மாதம் கடிதம் வந்தது : “ஒரு மாதம் தியானத்தில் அமர்ந்தேன். சாப்பிடக்கூட இல்லை. எனது மனம் வெறும் கடல் போல இருக்கிறது. எவருடைய ஔராவையும் (Aura) என்னால் பார்க்க முடிகிறது. ஒரு க்ஷணத்தில் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் என்னால் பார்க்க முடிகிறது.”

குரு வருத்தமான முகத்துடன் அதைச் சுக்கல் நூறாகக் கிழித்துப் போட்டார்.

இதே போல பல சீடர்களிடமிருந்தும் அவருக்குக் கடிதம் வருவது வழக்கம்.

ஆறு மாதங்கள் உருண்டு ஓடின.

ஆனால் மாதாமாதம் தவறாமல் தன் முன்னேற்றத்தை எழுதி வந்த சீடரிடமிருந்து ஆறு மாதங்களாகக் கடிதமே வரவில்லை.

குரு உடனே அவருக்குக் கடிதம் எழுதினார்: ”ஏன் ஆறு மாதங்களாகக் கடிதமே எழுதவில்லை. உடனே என்ன நடக்கிறது என்று பதில் போடு” என்று!

பதில் கடிதம் வந்தது : ”அதனால் யாருக்கு என்ன லாபம்?”

குரு புன்முறுவல் பூத்தார்.

ஆஹா, ஞானம் வந்து விட்டது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.

*

நீர் போல இரு!

களரி தற்காப்புக்கலை கற்றுக் கொள்ள வந்த மாணவன் ஒருவன் மைதானத்தில் மாஸ்டர் சொன்னபடி பயிற்சி செய்ய முயன்று கொண்டிருந்தான்.

ஏராளமான மற்ற மாணவர்கள் ஆங்காங்கே மைதானத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். மற்ற மாணவர்கள் ஆங்காங்கே இருந்ததால் அந்த மாணவனால் உரிய முறையில் பயிற்சி  செய்ய முடியவில்லை.

அவன் விரக்தியுடன் சோகமாக இருந்தான். மாஸ்டர் அவன் அருகே சென்றார். தோளைத் தட்டி. “என்ன பிரச்சினை?” என்றார்.

“எனக்குத் தெரியவில்லை. எவ்வளவு முயன்றாலும் எதையும் சரியாகச் செய்ய முடியவில்லை” என்றான் அவன்.

 “பயிற்சியைக் கற்பதற்கு முன்னால் லயம் என்றால் என்ன என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடன் கூட வா” என்றார் மாஸ்டர்.

மைதானத்தை விட்டு வெளியே வந்த மாஸ்டர் அருகிலிருந்த பசுமையான மரங்கள் அடர்ந்த காட்டிற்கு அவனை அழைத்துச் சென்றார்.

அங்கு ஒரு அழகிய பெரிய நதி பாய்ந்து கொண்டிருந்தது. வெள்ளமெனத் தண்ணீர் அதில் வேகமாகப் பாய்ந்து சென்று கொண்டிருந்ததை மாஸ்டர் அந்த மாணவனுக்குச் சுட்டிக் காட்டினார்.

“அதோ, பார். நதி செல்லும் வழியில் சிறிதும் பெரிதுமாக எத்தனை பாறைகள் இருக்கின்றன! நதி சற்றேனும் சுணக்கப்படுகிறதா? அது தன்வழியே பாறைகளைச் சுற்றி வேகமாக முன்னேறிச் சென்று கொண்டே இருக்கிறது. அந்த நீர் போல இரு. அப்போது தான் உனக்கு லயம் என்றால் என்ன என்று தெரியும்.”

மாணவனுக்கு விஷயம் புரிந்தது. மாஸ்டரின் உபதேசத்தை மனதில் கிரஹித்துக் கொண்டான்.

மைதானத்திற்குச் சென்றான். தனது பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்தினான். ஏராளமான மாணவர்கள் இருப்பதையும் அவர்கள் கூச்சலுடன் பயிற்சி செய்வதையும் பற்றி அவன் அலட்டிக் கொள்ளவே இல்லை.

என்ன ஆச்சரியம், எல்லா உத்திகளும் தாமாக வந்தன! அனைத்தையும் அவன் சுலபமாகப் பயின்றான்.

மாஸ்டர் சிரித்தார்; அவனும் சிரித்தான்!

நீர் போல இரு என்பது ஒரு பெரும் மகத்தான உபதேசம். வெள்ளமெனச் சுழித்தோடும் பெரும் ஜீவ நதி தயங்குவதே இல்லை;  நெகிழ்வுடன் ஜிலுஜிலுவென அது தன் வழியே பாய்ந்தோடுகிறது!

அதற்குள்ள மகிழ்ச்சியும் செயல்திறனும் அந்த நீரோட்டத்தைப் பார்த்தவர்களுக்கும் பற்றிக் கொள்கிறது.

வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் நீர் போல இருக்க வேண்டும்!

tags — நீர் போல, ஞானம், குரு

தேன் பற்றிய 3 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் (Post No.8018)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.8018

Date uploaded in London – 21 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

தேன் பற்றிய 3 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள்.

விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விடைகள்

தேனு க்கு ஈ யைப் பிடி த்து விட வேண்  டுமா?

தேனை வழி க்கி றவன் புறங்  கை யை நக்க மாட் டா  னா?

தேனில் விழு ந்த ஈ போல  தவிக்கிறான்’

 tags —-  தேன் ,  பழமொழி

TAMIL -SANSKRIT RELATIONSHIP- PART 1 BY P S S SASTRI (Post No.8017)

compiled BY LONDON SWAMINATHAN

Post No. 8017

Date uploaded in London – 21 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

I have photocopied the lecture by P S SUBRAHMANYA SASTRI, Professor of Sanskrit , Annamalai University.

I have read it three times in the past 25 years. I wanted to upload it here in parts so that it would be useful to anyone involved in the language research

I have added just brief notes here as a guide-

1.Sastri says both Tamil and Sanskrit are morphologically related but they are NOT genealogically related

2.He has done research in this area for 25 years and delivered the lectures in 1946

3.In pages 1 to 9 he shows how a language changes in course of time. Up to page 9, he gives examples from English and Sanskrit.

Later he gives examples from Tamil literature which I will post  tomorrow.

Now see how English and Sanskrit changed: –




tags — Tamil-Sanskrit, Relationship, Part 1, P S S Sastri

to be continued…………………………………………..