Panini’s Interesting Titbits on 27 Stars (Post No.7900)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7900

Date uploaded in London – 29 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Panini in his grammatical treatise ‘Ashtadhyayi’ gives very interesting information about the 27 stars in Hindu astrology/ astronomy.

He gives some rules regarding naming people after stars.

During epic period we see many star names. Arjuna’s son Abhimanyu married Uttara, a star name . Rohini was Balarama’s mother and Revati was his wife. Both star names. Revati may be derived from her father Raivat’s name as well. But even before this, Revati was one of the 27 stars.

In the Sapta Rishi mandala/ constellation we see the seven names of Rishis and a woman Arundhati and there is Pole star named after the boy Dhruva.

Sangam Tamil Literature

In Sangam Tamil literature we read about the marriages celebrated 2000 years ago. The marriages were celebrated on Rohini star day according to Aka Nanuru verses 86 and 136. One Tamil verse says the Seven Stars were worshiped by the Tamils. We have got many references to Arundhati in the Ursa Major constellation in Tamil. We have Agastya star, Canopus, Trisanku, the Southern Stars, in our Puranas. Karthikai is a woman’s name in Tamil epic Silapaadikaram. Six Krittika women who raised Kartikeya (Skanda/Murugan) are also found in Tamil literature.

A person is named after the star under which he is born.

Apastamba  gives information about secret star name. in Egypt and India, kings had three names. What we know is the Abisheka nama, name given on the coronation day. That is why Egypt has 13 Ramesses and India has scores of Vikramadityas and Bhojas.

Panini deals at length with names derived from stars in sutras 4-3-34 to 37. The Grihya sutras refers to the Nakshatra/name (star name) in addition to the personal name. According to Apastamba the star name was kept a secret; Gobhila says that the teacher was to give his pupil a Nakshatra name which he used in bowing to him (in the Abhivadaye Mantra which is recited when one bows to elders). Four other Grihya sutras also agree with him. Some used Gotra and star names together (E.g) ‘mogallana tissa’.

In Panini’s time, stars were regarded as deities to whom regular worship was shown. Stars are known to Vedic people but names with stars were unknown in Vedic literature.

Panini gives a long list of star names from Asvini to Abhijit and their various derivations.

Xxx

IN MAHA BHARATA

A man was asked both his personal name and gotra name. in Virata Parva of Mahbharata, Virata was asking Yudhisthira his gotra and nama/name. Buddha bikshus also used both gotra and personal names.

In Sangam Tamil literature scores of poets have both gotra and personal names. Most famous Tamil commentator Nacchinarkiniyar boasts that he belongs to Madurai and Bharadwaja gotra .

Some names typical in Panini but rare in Vedic literature had the endings Mitra, Sena, Datta, Sruta, Karna, Sringa or were prefixed by Upa.

In Mahabharata, my rough counting sows 24 names have SENA as suffix. Other suffixes-

Datta -6,Ketu – 9,Pati/ Vati- 11+3’Varman – 13,

Vasu – 5,Dyumnan – 6, Deva -8,Ratha -5,Mana – 3,Ayudha/yuddha – 3,Ashva – 6,Jaya – 6,Wana – 2

If we compare these names with names in Ramayana and the Vedas we may know the names used in different periods.

Panini shows also Nakshatra names are used with

Sena suffix.

XXX

What is a Nakshatra ?

Panini analyses Nakshatra into na- kshatra 6-3-75, a derivation also found in Satapata Brahmana , 2-1-2-18, ‘no light’ , explained with a legend.  The

Nirukta , although cites Brahmana derivation, prefers to derive from ‘naksha’ – to come near – . Panini followed Satapata Brahmana.

ORDER OF NAKSHATRAS / STARS

The Vedic List of stars egins with Krittikaa

According to Hopkins as late as Yajnavalkya’s law book 1-267, the Pleiades / Krittika hold this position as opposed to the still later scheme – 490 CE – beginning with Asvini .

Upto Patanjali’s time Krittika headed the list.

In mentioning a list of about ten stars Panini opens the list with Sravishta / Avittam in Tamil

Sravishta – Phalguny- Anuradha – Svati – Tishya – Punarvasu – Hasta – Vishaka = Ashada – Bahula – luk 4-3-34

What does it indicate ?

Now the list of Vedanga Jyotisa also commences with Sravishtha and Garga says that Krittikas are the first asterism for the ritual, while Sravishtha is the first for ordinary reckoning.

Hopkins points out in Mahabharata there are two beginnings-

1.With Dhanishta/ Sravishta/ Avittam in Tamil as in the Vana Parva 230-10

2.with Sravana as in the Asvamedha Parva

Fleet shows another passage in Adi Parva

‘Pratisravana purvani nakshatrani – Adi Parva 71-34

So two passages of Mahabharata show that Sravana is the first star.

This shows that the winter solstice had travelled westwards from the first point of Sravishtha , which was preserved by Vedanga Jyotisha (1400 BCE).

Panini’s mention of Sravishtha at the head of his list is evidently in conformity with the Vedanga Jyotisha. This is important to find out the time of Panini.

XXX

Single name Devadatta could appear in 11 forms-

Devadattaka, Devika, Devila, Deviya, according to Panini.

Devaka,Dattika,Dattila,Dattiya,Dattaka,Deva,

Datta according to the later rules in the Bhasya.

Source – India as known to Panini , V S Agrawala, University of Lucknow . 1953.

With my inputs from Mahabharata and Tamil Literature

–SUBHAM–

tags — 27 Stars, Panini, order of stars, 27 Nakshatras, personal names

27 நட்சத்திரங்களில், எது முதல் நட்சத்திரம்?- Part 1 (Post No.7899)

RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7899

Date uploaded in London – 29 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

(Arudra, Mrgasirsha stars in Orion Constellation)

சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகத்தில் முதல் இலக்கண புஸ்தகம் எழுதப்பட்டது. அதை எழுதியவர் பாணினி. இப்படியும் ஒருவர் சுருக்கமாக எழுத முடியுமா என்று உலகமே வியக்கும் வண்ணம் சுருக்கி வரைந்தார். பாரதியார் பாட்டிலும்

நம்பரும் திறலோடு ஒரு பாணினி

ஞால மீதில் இலக்கணம் கண்டதும்

என்று பாடுகிறார்

பாணினி சொன்ன விஷயங்களை  எதிர்காலத்தில் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக பேருரை இயற்றினார் பதஞ்சலி முனிவர். பாணினியின் இலக்கண நூலுக்குப் பெயர் அஷ்டாத்யாயீ – ‘எட்டு அத்தியாயம்’. அதன் மீது பதஞ்சலி எழுதிய பாஷ்யத்துக்கு ‘மஹா பாஷ்யம்’ என்று பெயர்.

2700 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன இருந்தது, எப்படி இருந்தது என்று இவர்கள் அபூர்வமான விஷயங்களைச் சொல்கின்றனர் . நாணயங்கள் பற்றி பாணினி சொல்லும் விஷயங்கள் அவரை புத்தர், மஹாவீரர் காலத்துக்கு முந்தையவர் என்று காட்டுகிறது. இது போல நட்சத்திரங்களைப் பெயரில் சூட்டும் விஷயங்களையும் பாணினி பட்டியலிடுகிறார்.

இப்படிப்பட்டவை, பழங்கால உலகில் வேறு எங்குமில்லாததால் நாம் மண்ணின் மைந்தர்கள்; வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் இல்லை  என்பது தெளிவாகிறது. அது மட்டுமல்ல. இன்று வரை நாம் நம்முடைய குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த நட்சத்திரத்தை வைத்து ரோகிணி, விசாகா , அஸ்வினி, கார்த்திகை , உத்ரா, சித்ரா , ரேவதி என்றெல்லாம் பெயர் வைக்கிறோம். இப்படி பல்லாயிரம் ஆண்டுகளாக நட்சத்திரங்களை மதிக்கும் உலக மஹா அதிசயத்தை பாரதத்தில் மட்டுமே காண முடியும்.

அதைவிட அதிசயம் தமிழர்களுக்கு நட்சத்திரம் மீதிருந்த அதிசய நம்பிகையை,  2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கிய நூல்களில் காண்கிறோம். ரோகிணி நட்சத்திரத்தில் கல்யாணம் செய்ததை அக நானுற்றில் படிக்கிறோம் (பாடல் 86, 136). சப்தரிஷி மண்டலத்தை — அதாவது ஏழு நட்சத்திர கூட்டத்தை– மக்கள் வணங்குவது  , அருந்ததி நட்சத்திரத்தைப் போற்றுவது ஆகியவற்றைக் காண்கிறோம். சிலப்பதிகாரத்தில் கார்த்திகை என்ற பெயருள்ள பெண்ணைச் சந்திக்கிறோம். ஆக உலகில் பழமையான ஒரு நாகரீகமுள்ள , வாழும் நாகரீகமுள்ள ஒரே நாடு இந்தியா.

மற்ற இடங்களில் எல்லாம் இஸ்லாமும் கிறிஸ்தவமும் பரவியதால் பழைய நாகரீகம் மியூசியங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

xxx

மஹாபாரதத்தில் ரோகிணி, ரேவதி பெயர்களை பார்க்கிறோம்-

பலராமனின் அம்மா பெயர் ரோஹிணி . அதாவது வசுதேவரின் மனைவி. பலராமனின் மனைவி பெயர் ரேவதி. ரைவதனின் மகளாகப் பிறந்ததால் ரேவதி என்று சொல்லுவோருக்கும் அந்தப் பெயர் நட்சத்திரங்களில் ஏற்கனவே இருப்பதைக் காட்டலாம். அர்ஜுனன் மகன் அபிமன்யுவின் மனைவி பெயர் உத்தரா . இது தவிர உத்தர என்ற ஆண்மகனையும் சந்திக்கலாம்.

பாணினி சொல்லும் நட்சத்திரப்  ப ட்டியலைக் காண்போம் :–

பாணினி சூத்திரம் 4-3-34 முதல் 37 வரை ; 8-3-10

ஒருவருடைய இயற்பெயருடன் நட்சத்திரப் பெயரையும் வைத்துக் கொள்ளலாம் என்று கிருஹ்ய சூத்ர  நூல்கள் இயம்பும் . ஆபஸ்தம்பர் நூல் ஒரு அதிசய விஷயத்தைப் பகரும். அதாவது நட்சத்திரப் பெயர் ரகசிய பெயர்! வெளியே சொல்லமாட்டார்கள் .

எகிப்திலும் இப்படி ரகசியப் பெயர், முடி சூட்டும்போது அபிஷேக நாமா , இயற் பெயர் என்று மூன்று பெயர்கள் இருந்தன. அவர்களுக்கும் இந்தியர்களுக்கும் உள்ள தொடர்புகளைக் காட்டும் நூற்றுக்கணக்கான விஷயங்களில் இதுவும் ஒன்று.

கோபில (Ghobila) க்ருஹ்ய சூத்திர நூல், வேறு ஒரு விஷயத்தையும் சேர்க்கிறது . பையனுக்கு ஆசிரியர் நட்சத்திரப் பெயர் சூட்டுவார் என்றும் அவரை மாணவர்கள் ‘அபிவாதயே மந்திரம்’ சொல்லி வணங்கும் போது நட்சத்திரப் பெயரை மாணவன் பயன் படுத்துவான் என்றும் சொல்கிறது . ஏன் என்பது நமக்கே புரியும். ஒரே பெயருடைய பல மாணவர்கள் உள்ள குரு  குலத்தில் ஒரு மாணவனை எளிதில் அடையாளம் காணலாம். இதை சாங்க்யாயன , காடிர , மானவ , ஹிரண்யகேசி க்ருஹ்ய சூத்திர நூல்களும் ஆதரிக்கின்றன. பிற்காலத்தில் இத்துடன் கோத்திரங்களையும் சேர்த்ததை ‘மொக்கலான திஷ்ய’ என்ற பெயரில் பார்க்கிறோம். திஷ்ய என்பது புஷ்ய நட்சத்திரம்.

பாணினியின் காலத்தில் நட்சத்திரங்கள் வணங்கப்பட்டன . அதுமட்டுமல்ல; ஒவ்வொன்றுக்கும் ஒரு அதி தேவதையும் இருந்தது. ரோஹிணி என்பது ரோஹண என்றும் சொல்லப்பட்டது. ச்ரவிஷ்டா / தனிஷ்டா நட்சத்திரப் பெயர்களை ஆண் , பெண் ஆகிய இரு பாலரும் பயன்படுத்தினர்.

பல்குனி , அனுராதா, ஸ்வாதி , திஷ்ய, புனர்வஸு , ஹஸ்த, விசாகா, ஆஷாடா , பஹுல /கிருத்திகா ஆகியன அப்படியே பெயர்களாக பயன்பட்டன. சில பெயர்கள் அபிஜித், ஆபிஜித என்றும் பயன்படுத்தப்பட்டன.

வேத காலத்தில் இவை இருந்ததாகத் தெரியவில்லை. பாணிணிக்குப் பின்னர் வந்த புத்த ஜாதகக் கதைகளில் இவை பாலி மொழிக்கேற்ப கொச்சையாக வழங்கப்பட்டன :-

(உ.ம்.) ரோஹிணி -ரோஹ ; புஷ்ய – பூச, பூசிணி, பூசக நட்சத்திரப்

இன்னும் ஒரு சூத்திரத்தில் – பாணினி  .8-3-100- ‘சேன’ என்பதற்கு முன்னர் ரோஹிணி , பரணி, சதபிஷக் ஆகியவற்றைச் சேர்க்கமுடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

27 நட்சத்திரங்களில் அஸ்வினியை முதல் நட்சத்திரமாக வைத்து இன்று பஞ்சாங்கம் அச்சிடப்படுகிறது . ஆனால் முன்காலத்தில் கிருத்திகா அல்லது  ச்ரவிஷ்டா/தனிஷ்டா (அவிட்டம்) நட்சத்திரம் முதலில் இருந்ததன . ஏன் இப்படி மூன்று முறைகள் என்பதை இரண்டாவது பகுதியில் காண்போம்.

tags — முதல் நட்சத்திரம், பாணினி, தமிழர்,அஸ்வினி

to be continued…………………………………..

ஹிந்தி படப் பாடல்கள் – 21, நான்கு பாடல்கள்-(2) (Post No.7898)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7898

Date uploaded in London – – 29 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 21 – ஒரு கரு, ஒரு கவி, நான்கு பாடல்கள்-(2)

R.Nanjappa

ஒரு கரு, ஒரு கவி, நான்கு பாடல்கள்!

(மூன்று மற்றும் நான்காம் பாடல்களை இங்கு பார்ப்போம்)

“சோகத்திலிருந்து ஸ்லோகம் பிறந்ததுஎன்பார்கள். வால்மீகி ராமாயணம் எழுதத் தூண்டுகோலாயிருந்தது அவர் கண்ட ஒரு துயர நிகழ்ச்சி. அதற்குக் காரணமான வேடனை வையத் துவங்கினார்கவிதையாக மலர்ந்தது. அதே ரீதியில் இதிஹாசம் முழுவதும் பாடி முடித்தார்.

காவியம் என்று அவ்வளவு நீண்டு பாடாவிட்டாலும், நம் திரைக் கவிஞர்கள் சோகத்திலிருந்து தத்துவத்திற்குத் தாவுகிறார்கள். ஏமாற்றத்தை  இரண்டு கவிதைகளில் விவரித்த ஸாஹிர், அடுத்து என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறார்.

3. மனமே, மயக்கத்தை விடு!

Song: Man re tu kaahe na

Film: Chitralekha 1964

Music: Roshan

Singer: Mohammad Rafi

मन रे तू काहे ना धीर धरे
निर्मोही मोह ना जाने जिनका मोह करे
मन रे तू काहे ना धीर धरे  

மன் ரே தூ காஹே  நா தீர் தரே 

நிர்மோஹீ மோஹ ஜானே ஜின்கா மோஹ் கரே

மன்ரே தூ காஹே நா தீர் தரே 

மனமே, நீ ஏன் அமைதியாக, தைரியத்துடன் இருக்கக்கூடாது?

நீ யாரிடம் அன்பு வைத்தாயோ அவள்  மனதில் அன்பில்லாதவள்

அன்பைப் பற்றி அறியமாட்டாள்.

நீ ஏன் அமைதியாக இருக்கக் கூடாது?

इस जीवन की चढ़ती ढलती 
धुप को किस ने बांधा
रंग पे किस ने पहरे डाले
रूप को किस ने बांधा
काहे ये जत्न करे
मन रे तू काहे ना धीर धरे  

இஸ் ஜீவன் கீ சட்தீ  டல்தீ

தூப் கோ கிஸ் நே பாந்தா

ரங்க் பே கிஸ்  நே பஹரே டாலே

ரூப் கோ கிஸ்  நேபாந்தா

காஹே யே  ஜத்ன் கரே

மன் ரே….

நம் வாழ்க்கையில் (இந்த உலகில்) படரும்  சூரிய ஒளி

அதை எவராவது கட்டிப்போட்டிருக்கின்றனரா?

வண்ணத்தை எவராவது கட்டுப்படுத்தினரா?

அழகை எவராவது கட்டி வைத்தனரா?

ஏன் இந்த வீண் முயற்சியில் ஈடுபடுகிறாய்?

அமைதியாக இருக்க இயலாதா?

उतना ही उपकार समझ कोई
जितना साथ निभा दे
जनम मरण का मेल है सपना
ये सपना बिसरा दे
कोई ना संग मरे  

உத்னா ஹீ உபகார் ஸமஜ் கோயீ

ஜித்னா ஸாத் நிபா  தே

ஜனம் மரண் கா மேல் ஹை ஸப்னா

யே ஸப்னா பிஸ்ரா தே

கோயீ நா ஸங்க் மரே

மன் ரே தூ காஹே தீர் தரே

உன்னுடன் யார் எத்தனை காலம் இருக்கின்றனரோ– 

அதையே அவர்கள் உனக்குச் செய்த உபகாரம் என்று நினைத்துக்கொள்.

பிறப்பிலும் மரணத்திலும் உடன் இருப்பது என்பது கனவுதான்.

அந்தக் கனவை விட்டுவிடு.

மரணத்தில் உன்னுடன் யார் வருவார்கள்?

மனமே, அமைதியாக இரு.

இங்கே கவிஞர் தத்துவவாதியாக மாறுகிறார்! உலகில் மனித உறவுகள் ஒரே சீராக என்றும் இருப்பதில்லை, நிலைத்திருப்பதும் இல்லை. பிறப்பு, இறப்புஇரண்டிலும் மனிதன் தனித்தே இருக்கிறான். இடையில் வரும் உறவுகள் எத்தனை காலம் நிலைக்கும் எனச் சொல்லமுடியாது. “உயிர்த் தோழன்என்று சொல்கிறோம். உயிர் பிரியும் போது அவனும் கூட வருவானா?

அப்பர் சொல்கிறார்:


எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்      எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார் செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா

நிற்பர்

இதையே நம் கவிஞர் சினிமா பாஷையில் சொல்கிறார். ‘உத்னா ஹீ உபகார் ஸ்மஜ் கோயீ ஜித்னா ஸாத்  நிபாதே‘- என்ன அருமையான வரி! நினைவில் வைக்கத் தக்கது.

இந்தப் பாடல் யமன் ராகத்தில் அமைந்த மிகச்சிறந்த பாடல்.ரோஷனின் அருமையான இசை.

சரி, மனம் அமைதியாகிவிட்டது. தைரியம் வந்து விட்டது. அடுத்து என்ன ஆகும்? கடந்த காலத்தை நன்கு சிந்தித்து, எதிர்காலத்திற்கான புதிய வழியை வகுக்கவேண்டும். இதை அடுத்துச் சொல்கிறார்  ஸாஹீர்.

4. புதிய தொடக்கம்

Song: Chalo ek baar phir se

Film:  Gumrah 1963

Music: Ravi

Singer: Mahendra Kapoor

चलो एक बार फिर से, अजनबी बन जाये हम दोनों

சலோ ஏக் பார் ஃபிர்ஸே, அஜ்னபீ ப்ன் ஜாயே ஹம் தோனோ(ன்)

வா, நாம் இருவரும் மீண்டும் அறிமுகமற்றவர்களாக ஆகி விடுவோம்!

ना मैं तुम से कोई उम्मीद रखू दिलनवाज़ी की न तुम मेरी तरफ देखो, ग़लत अंदाज़ नज़रों से न मेरे दिल की धड़कन लड़खड़ाये मेरी बातों में ना जाहीर हो तुम्हारी कश्मकश का राज़ नज़रों से

நா மை தும் ஸே கோயீ உம்மீத் ரக்கூ(ன்) தில்னவாஃஜீ கீ

தும் மேரீ தரஃப் தேகோ, கலத் அந்தாஃஜ் நஃஜ்ரோ(ன்) ஸே

மேரே தில் கீ தட்கன் லட்கடாயே மேரீ பாதோ(ன்) மே

நா ஜாஹீர் ஹோ தும்ஹாரீ ்மக கா ராஃஜ் நஃஜ்ரோ(ன்) ஸே

நான் உன்னிடம் எந்த விதமான சலுகையையும் எதிர்பார்க்கவில்லை

நீயும் என்னிடம் தவறான பார்வையை வைக்காதே!

நான் பேசும்போது என் மனது படபடக்காது!

நீயும் உன் மனதில் இருப்பதை பார்வையால் வெளிப்படுத்த வேண்டாம்!

तुम्हें भी कोई उलझन रोकती है पेशकदमी से मुझे भी लोग कहते हैं की ये जलवे पराये हैं मेरे हमराह भी रुसवाईयाँ हैं मेरे माज़ी की तुम्हारे साथ अभी गुज़री हुई रातों के साये हैं

தும்ஹே பீ கோயீ உல்ஜன் ரோக்தீ ஹை பேஷ்கத்மீ ஸே

முஜே பீ லோக் கஹதே ஹை கீ யே ஜல்வே பராயே ஹை

மேரே ஹம்ராஹ் பீ ருஸுவாயியா(ன்) ஹை மரே மாஃஜீ கீ

தும்ஹாரே ஸாத் அபீ குஜ்ரீ ஹுயீ ராதோ(ன்) கே ஸாயே ஹை

உனக்கும் சில கஷ்டங்கள்உன்னால் மேல்செல்ல முடியவில்லை!

நானும் மாறிவிட்டேன் என்று சொல்கிறார்கள்.

கடந்த காலத்தின் அவமானங்கள் என்னில் மறைந்திருக்கின்றன.

கடந்த காலத்தின் நிழல்கள் உன்னிடமும் படிந்திருக்கின்றன!

तारूफ रोग हो जाये, तो उसको भूलना बेहतर ताल्लूक बोझ बन जाये तो उसको तोड़ना अच्छा वो अफ़साना जिसे अंजाम तक लाना हो मुमकिन उसे एक खूबसूरत मोड़ दे कर छोड़ना अच्छा

தாரூஃப் ரோக் ஹோ ஜாயே , தோ உஸ்கோ பூல்னா பேஹ்தர்

தால்லூக் போஜ் பன் ஜாயே தோ உஸ்கோ தோட்னா அச்சா

வோ அஃப்ஸானா ஜிஸே அஞ்சாம் தக் லானா ஹோ மும்கின்

உஸே ஏக் கூப்ஸூரத் மோட் தே கர் சோட்னா அச்சா

ஒருவரின் அறிமுகம் நோயாக மாறிவிட்டால், அதை மறந்து விடுவதே நல்லது!

ஒரு தொடர்பு சுமையாக மாறிவிட்டால், அதை முறித்து விடுவதே நல்லது!

எந்த உறவை முழுமையான இலக்கு நோக்கிக் கொண்டுசெல்ல இயலவில்லையோ

அதற்கு ஒரு நல்ல திருப்பம் தந்து, அத்துடன் விட்டுவிடுவதே நல்லது!

Oh, what fantastic poetry, music and singing!

இந்தக் கவிதையின் அழகையும் ஆழத்தையும் ஒரு கவிஞன் தான் சொல்ல முடியும்.

மிகச் சங்கடமான விஷயங்களை மிக நளினமாகச் சொல்லியிருக்கிறார். நாகரீகமாகச் சொல்லியிருக்கிறார். எவர் மனதையும் நோக வைக்க வில்லை. கடந்த காலத்தை இகழவில்லை. நல்ல எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறார்.

இதில் முதல் மூன்று பத்திகள் கதை சம்பந்தப்பட்டவை. நான்காவது பத்தியில் அபாரமான கருத்துக்களைச் சொல்கிறார். ஒரு உறவு, தொடர்பு சரியான வழியில் போகவில்லை எனில் அதை நல்ல முறையில் விட்டுவிடுவதே நல்லது என்கிறார்.

இந்தப் பாடல் கடினமான கருத்துக்களைச் சொல்வது. இதற்கு அமைந்த மெட்டும் கடினமானது. இசைஞர் ரவி, எழுதிய பாட்டிற்கு மெட்டமைப்பதில் வல்லவர். பாட்டில்லாமல் இந்த மெட்டு அமைந்திருக்குமா என்பது சந்தேகமே.

பாடிய மஹேந்த்ர கபூரோ, அசத்தி இருக்கிறார்.

1957ல் மர்ஃபி ரேடியோ கம்பெனியும் மெட்ரோ நிறுவனமும் சேர்ந்து புதுப் பாடகர்களைத் தேர்ந்தெடுக்க போட்டி வைத்தார்கள். தேர்வு செய்ய அமர்ந்தவர்கள் அனில் பிஸ்வாஸ்,, நௌஷத், சி.ராம்சந்த்ரா, மதன் மோஹன் ஆகிய பெரிய தலைகள்! அப்போட்டியில் முதலில் வந்தார் மஹேந்த்ர கபூர். ஆனால் அவருக்கு வாய்ப்புக்கள் அதிகம் வரவில்லை. அவரை அதிகம் பாடவைத்தவர்களில் ரவி முக்கியமானவர். கபூர் பாடிய இந்தப் பாடல் அவருக்குக் கிரீடம் போன்றது.

சினிமாவைப் பாருங்கள்! அது ஒரு மாயா ஜால உலகம். இருப்பது கதை, எடுப்பது படம்! பாத்திரங்கள், நடப்புக்கள் எல்லாமே போலி! ஆனாலும் சில பாடல்கள், இசை மனதில் பதிகிறது. படம் போகிறது, நல்ல இசை நிலைத்து நிற்கிறது. திரையில் ஓடுவது ஒரு துன்பக் காட்சியே என்றாலும் அந்த இசையை ரசிக்கிறோம்! இப்படி நல்ல இசை நம்மோடு ஒன்றிவிடுகிறது!

பண்டைய கிரீஸ் Greece நாட்டில் துன்பவியல் நாடகங்கள் Tragedies திருவிழா போலவே அரசின் செலவில் நடத்தப்பட்டன! ஒவ்வொரு குடிமகனும் இதில் கலந்துகொள்வது சமூக, குடியுரிமைக் கடமையாகக் Social and civic duty கருதப்பட்டது. இது ஏன்?

துன்பவியல் நாடகங்களின் கதா பாத்திரங்கள் ராஜ குடும்பத்தினர், பிரபுக்கள், தேவதைகள் ஆகியோர். இவர்கள் படும் பாட்டைக் கண்டால் எல்லோருக்கும் மனதில் ஒருவித உயர்ந்த மன நிலை உருவாகும். “, இந்தப் பெரிய இடத்து ஆசாமிகளுக்கே இந்தக் கதி என்றால், விதி இவர்களையும் விட்டு வைக்கவில்லை என்றால் நம் போன்றவர்களுக்கு என்ன ஆகும்என்று ஒவ்வொருவருக்கும் எண்ணம் உதிக்கும். இது நற் சிந்தனைகளுக்கும் நல்ல நடத்தைக்கும் வழிவகுக்கும். இந்த மாற்றத்தை Catharsis கதார்ஸிஸ் என்றனர். இன்று அத்தகைய நாடகங்கள் நடப்பதில்லை. ஆனால் இத்தகைய கவிதைகள் நம்மை சிந்திக்கவே வைக்கின்றன.

And the night shall be filled with music,
And the cares that infest the day
Shall fold their tents like the Arabs
And as silently steal away.

~Henry Wadsworth Longfellow, The Day Is Done

இன்று சினிமா என்று இருக்கும் குட்டையில் இத்தகைய கவிதையையோ, இசையையோ எதிர்பார்க்க முடியுமா?

***

உதவிக் குறிப்புகள்! – 10 -HELPFUL HINTS – 10 (Post No.7897)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7897

Date uploaded in London – – 29 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

உதவிக் குறிப்புகள்! – 10 –HELPFUL HINTS – 10 (91 to 110)

 Don’t Argue!

ச.நாகராஜன்

எனது பழைய நோட்புக்கில் எழுதி வைத்துள்ள, நான் படித்து வந்த, பல நல்ல புத்தகங்களின் சில முக்கிய பகுதிகளின் தொடர்ச்சி இதோ:

HELPFUL HINTS

குறிப்பு எண் 91 : Think Good! (குறிப்பு எண் 91 முதல் 93 முடிய : From the book ‘The Power of Your Subconscious Mind by Joshep Murphy)

Think good, And good follows. Think evil, And evil follows. You are what you think all day long.

குறிப்பு எண் 92 : Only Power is your Own Thought!

The suggestions and statements of others have no power to hurt you. The only power is the movement of your own thought. You can choose to reject the thoughts or statements of otheres and affirm the good. You have the power to choose how you will react.

குறிப்பு எண் 93 : Watch What You Say!

Watch what you say! You have to account for every idle word. Never say, “ I will fail; I will lose my job; I can’t pay the rent”. Your subconscious can not take a joke. It brings all these things to pass.

குறிப்பு எண் 94 : Help Others!

(குறிப்பு எண் 94 முதல் 100 முடிய : From the book ‘Mental Tension and its cure by Dr O.P. Jagg)

Let people feel you are their well-wisher. Helping others will help you in the long run as when you think of others, they will think of you.

குறிப்பு எண் 95 : Don’t try to show off yourself!

Do not try to show off yourself! If you try to show off your intellignece or cleverness it would be tolerated by none whosoever!

குறிப்பு எண் 96 : Speak in low tone!

Speak in low or moderate tone and try to avoid word or terms which are indicative of excessive emotionalism.

குறிப்பு எண் 97 ; Being yourself is important!

Being yourself is important. Do not imitate!

குறிப்பு எண் 98 : Efforts!

Put your soul in your Efforts!

குறிப்பு எண் 99 : Pray!

Simple Prayer, singing of Bhajans and Kirtans provide peace of mind and solace.

குறிப்பு எண் 100 : Neighbour’s Love!

Earn thy neighbour’s Love!

குறிப்பு எண் 101 : 3 Phrases!

(குறிப்பு எண் 101 முதல் 110 முடிய : From the book ‘The Success System That Never Fails by W.Clement Stone)

All success swings over the three phrases listed below:

  1. Inspiration to Action 2) Know-how 3) Activity Knowledge

குறிப்பு எண் 102 : Control Your Environment!

In the end your environment will control you; therefore make sure that you control your environment. Avoid situations, acquaintances, associates who tend to hold you back.

குறிப்பு எண் 103 : Try!

Success is achieved by those who try! When there is a lot to gain and little to lose try!

குறிப்பு எண் 104 : Action will overcome Fear!

Thinking will not overcome fear, but action will!

குறிப்பு எண் 105 : Never Forget this!

Never forget …. The system will work… If you work the system!

குறிப்பு எண் 106 : Take Inventory Yourself!

Take inventory yourself! To know where you are going and how to get there, you must first know yourself!

குறிப்பு எண் 107 : Work!

To develop good character …. Work!

To have good health … Work!

To win over yourself … Work!

குறிப்பு எண் 108 : Work!

To do the right thing because it is right work.

To rise from rags to riches to work.

To fight your way back work.

குறிப்பு எண் 109 : Work!

To acquire knowledge work.

To acquire know-how work.

குறிப்பு எண் 110 : Inspiration!

Inspirational dissatisfaction is the strongest single force in your success system that never fails!

****

tags – உதவிக் குறிப்புகள்! – 10, HELPFUL HINTS – 10

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி2842020 (Post No.7896)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7896

Date uploaded in London – 28 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறுக்கே

1.– 7 எழுத்துக்கள் – சிறந்த பாடகி; எம்.எல்.வி. என்று அழைப்பர்

3.––3–பாடசாலை

5 — –5– எட்டுத் தொகை நூலில் ஒன்று ; ஜல்லிக்கட்டு பற்றி வருணிக்கும் ஒரு பகுதியும் உண்டு

7.  –4– வலமிருந்து இடம் செல்க- விபூதி பூஷன் வந்தோபாத்யாயா ஆரண்யக் என்ற பெயரில் எழுதிய காட்டு மக்கள் பற்றிய நாவல்; தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட புதினம்.

8.  –6– காஷ்மீருக்கு பெயர்கொடுத்த முனிவர்.

10. –3– வலமிருந்து இடம் செல்க- துக்கம் போனால் இது கிடைக்கும்.

11.—6– வலமிருந்து இடம் செல்க- தை மாத நீராடல்; பரிபாடல் என்னும் சங்க நூலில் வருகிறது

xxxx

கீழே

1. –7 எழுத்துக்கள்–இதை மாதவனும் கேசவனும் கடைந்ததாக திருப்பாவையில் ஆண்டாள் பாடுகிறார்

2. –3– இது இருந்தால் நீண்ட காலம் வாழலாம்; புதையலைக் கண்டுபிடிக்கலாம்.

3. –5– நோய் வந்தால், சாப்பிடும் உணவில் கடைப்பிடிப்பது

4. –2– கீழிருந்து மேல் செல்க– முல்லைக்குத் தேர் கொடுத்தவன்

4.—5– கிருஷ்ணரின் வாழ்க்கை சரிதமுள்ள புராணம்

6. –3– மன்னனின் மூத்த மகன் அவனுடைய —- ஆவார்

9.–2– கீழிருந்து மேல் செல்க – இது வந்தால் பத்தும் பறந்து போகு ம்.

Faith Story and Mahatma Gandhi (Post No.7895)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No.7895

Date uploaded in London – 28 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

‘One who has indomitable faith and controls his senses attains divine knowledge. Having obtained the knowledge, he quickly attains the supreme peace’.

Bagavad Gita 4-39

Let me tell you how powerful faith is. A man was about to cross the sea from Ceylon to India. Vibhishana, the saintly brother of demon Ravana, said to him,

“Tie this in a corner of your wearing cloth and you will cross the sea safely . You will be able to walk on the water. But be sure not to examine it, or you will sink”.

The man was easily walking on the water of the sea – such is the strength of faith. When having gone part of the way, he thought, what is this wonderful thing, Vibhishana has given me , that I can even walk on the water?

He untied the cloth and found nothing, but a leaf with the name Rama written on it.

“Oh, only this”, he thought and immediately sank.

Xxx

Mahatma Gandhi on Faith

A disciple may not make rapid progress because of lack of faith in the goal. We must have faith.

As Mahatma Gandhi has said,

“Faith is not a delicate which would whither under stormy weather. Faith is like the Himalaya mountains which cannot possibly change. No storm can possibly remove the Himalayas from their foundations . And I want everyone of you to cultivate that faith in God and Religion. For the development of spiritual knowledge it is essential to cleanse one’s heart of all material dirt and control the senses. The time taken to gain knowledge varies from person to person. One must realise that nothing can be mastered overnight. Through practice and perseverance, the apparently can be accomplished”.

The Essential Teachings of Hinduism, Kerry Brown, London

Xxx

Swami Vivekananda on Faith

Faith is not belief, it is the grasp on the Ultimate an illumination.

**

He who has no faith in himself can never have faith in god.

**

A man must not only have faith but intellectual faith too.

**

Faith is one of the potent factors of humanity and of all religions.

**

Faith, faith, faith in ourselves, faith, faith, faith in god— this is the secret of greatness.

**

It is faith that makes a lion out of a man .

**

The essence of our Faith consists simply in the freedom of the ‘Ishta’.

**

So long you have faith in your Guru , nothing will be obstruct your way.

**

The ‘Shraddha’ must enter into you.

tags – Faith, quotes, Vivekananda, Gandhi, Vibhishana

–SUBHAM–

வெள்ளைக்காரன் விளக்கங்களை நம்பாதே – குமாரில பட்டர் (Post No.7894)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7894

Date uploaded in London – 28 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வட இந்தியாவில் வாழ்ந்த மாபெரும் தத்துவ மேதை குமாரில பட்டர் . முதல் முதலில் தமிழ் மொழியை திராவிட பாஷை என்று குறிப்பிட்டவர். ஆதி சங்கரர் விவாதத்துக்கு வந்த போது , அவரை தனக்கு வயதாகி விட்டதால் மண்டன மிஸ்ரருடன் விவாதியுங்கள் என்று நர்மதை நதிக்கரையில் உள்ள மஹிஷமதி நதி தீர  நகரத்துக்கு அனுப்பியவர். இவர் மிலேச்சர்களாகிய வெளிநாட்டுக்காரன் சொல்லும் விளக்கங்களை ஏற்காதே என்று  1300 வருஷங்களுக்கு முன்னரே செப்பியவர். பல தமிழ் சொற்களை தனது சம்ஸ்கிருத நூலில் குறிப்பிட்டவர்.

குமாரில பட்டர் பற்றிய அதிசயமான விஷயங்களை முன்னரே பல கட்டுரைகளில் எழுதிவிட்டேன். அதை படிக்காதோருக்கு இதோ அதிசயப் பட்டியல்:-

முதல் அதிசயம்

புத்த மதத்தினர் போல நடித்து நாளந்தா பல்கலைக்கழகத்தில் (Nalanda University)  படித்தபோது ஒருநாள் புத்தமத தலைவருடன் கடுமையான வாக்குவாதாத்தில் இறங்கியபோது இவரது குட்டு வெளிப்பட்டது . உடனே பலகலைக் கழகத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்தார் . அப்படிக் குதிக்கையில் நான் சொல்லும் வேதங்கள் உண்மையென்றால் எனக்கு ஒரு காயமும் ஏற்படக்கூடாதென்று சொல்லி குதித்தார் . ஐயருக்கு செமை அடி. குருவிடம் போனார்.

“என்ன சுவாமிகளே; நம்முடைய தத்துவமே வேதத்தில் உள்ள சடங்குகள்தான் பிரமாணம்; வேதாந்தம் எல்லாம் பின்னார்தான் என்னும் பூர்வ மீமாம்சை தத்துவாமயிற்றே. அதன் மீது சத்தியம் செய்து குதித்த என் கதியைப் பார்த்தீர்களா?” என்று ஐயப்பாடு கிளப்பினார். குரு சிரித்துக் கொண்டே சொன்னார்– நீதான் வேதத்தின் மீதே  சந்தேகப்பட்டாயே ; அதான் உனக்கு இந்த அடி- என்றார் . வேதங்கள் உண்மையானால் — என்று ஒரு ‘ஆல்’ (If)  சேர்த்தாயே ; ஏன் ? உனக்கே முழு நம்பிக்கை இல்லையா?” என்று வினவ குமாரில பட்டர் தன் தவற்றை உணர்ந்தார்.

இரண்டாவது அதிசயம்

‘‘காலா ! உனை சிறு புல்லென நான் மதிக்கிறேன் என்றன்  காலருகே வாடா ! சற்றே  உனை மிதிக்கிறேன்’ என்று பாடினார் பாரதி. இப்படி சாவையும் துச்சமென மதித்தவர் குமாரில பட்டர். சங்கரர் வாதம் செய்ய வந்தபோது இவர் உமிக்கரி குவியலுக்கு  இடையில் உட்கார்ந்து கொண்டு தனது உடலை அணு அணுவாக எரித்துக்கொண்டு இறந்தார் . புத்த மதத்தினரிடம் பொய் சொன்ன பாவத்தைக் கழுவ இப்படி செய்தார். ஆனால் ஞானத்தீ யில் மூழ்கியவரை உண்மைத் தீ வாட்டாது. ‘மிதிலை எரிந்திட வேதப் பொருளை வினவிய ஜனக’ மன்னனை பாரதியார் பாடியதை நாம் அறிவோம்.

மூன்றாவது அதிசயம்

குமாரில பட்டரை வென்றால் உமது அத்வைத சாஸ்திரம் வட இந்தியாமுழுதும் பட்டொளி வீசிப் பறக்கும் என்று சொன்னதால் ஆதி சங்கரர் இவரை நாடி வந்தார். அவரோ இவரை மண்டன மிஸ்ரர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். கையிலோ ‘மொபைல் போன்’ கிடையாது. வண்டியிலோ ‘கூகிள் மேப் , சாட்டலைட் நேவிகேஷன்’ (Google Map, Satellite Navigation) இல்லை. எப்படி மிஸ்ரர் வீட்டை அடையாளம் கண்டுபிடிப்பது ? நர்மதைக் கரையில் குளித்துக் கொண்டிருந்த பெண்களிடம் கேட்டார். அவர்களுக்கு ஒரே சிரிப்பு; ஒரு சின்னப்பையன் நம்ம ஊர் அய்யரோட வாதம் செய்ய வந்திருக்கிறானே என்று நகைத்து ‘சம்ஸ்கிருத மொழியில் விடுகதை வடிவில்’ வழி சொன்னார்கள். அவர்களுக்கு ஆதி சங்கரர் பரமசிவன் அவதாரம் என்பது தெரியாது. சங்கரர் வழி கண்டு பிடித்தார். வீட்டின் கதவு ‘திதி’ என்பதால் தாளிடப்பட்டிருந்தது . ஒரு மரத்தை வளையும்படி சங்கரர் கட்டளை இட்டார்; மரமும் யானை, மன்னரை ஏற்றிக்கொள்ள குனிவது போல குனிய அதன் மேல் ஏறி வீட்டுக்குள் குதித்தார்.

நாலாவது அதிசயம்

மண்டன மிஸ்ரருடன்  வாதம் செய்யும் போது , பட்டிமன்ற நடுவர் வேண்டுமே. ‘வேதத்தின் சடங்குதான் முக்கியம்; இறைவனைப் பற்றி கவலை இல்லை’  என்று சொல்லும் பூர்வ மீமாம்சை தத்துவம் மிஸ்ரர் தத்துவம். வேதாந்தமே முக்கியம்; இறைவன் உண்டு; அவனுடன் ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்று ஐக்கியமாவதே லட்ச்சியம் என்பது உத்தர மீமாம்சை. அதை ஆதரிப்பவர் சங்கர்; இருவரும் உலக மஹா மேதாவிகள்; இந்த மேதாவிகளுக்கு ஈடு கொடுக்கும் ஒரே ஆள்தான் அந்த ஊரில் உண்டு. அவள்தான் மிஸ்ரரின் மனைவி சரசவாணி ; சரஸ்வதி தேவியின் மறு  அவதாரம். அவர் பட்டிமன்ற நடுவராக இருக்க சம்மத்தித்தார். அவள் சைக்காலஜி  (Doctorate in Psychology)

படிப்பில் டாக்டரேட் வாங்கியவள். ஆகையால் சொன்னாள் – ‘நான் தீர்ப்பு சொல்கையில் என் கணவர் என்பதால் அவருக்கு சாதமாகத் தீர்ப்பு சொல்லிவிட்டேன் என்ற அபவாதம் எனக்கு வரக்கூடாது. ஆகையால் இருவர் கழுத்திலும் மாலை போட்டுக் கொள்ளுங்கள். யார் மாலை முதலில் வாடுகிறதோ அவர்தான் தோற்றவர்’ என்றாள் . அவள் பெரிய சைன்டிஸ்ட்; சைக்காலஜிஸ்ட்; நிறை குடம் தளும்பாது குறை குடம் கூத்தாடும் ; சொல்லுவதற்கு பசையான வாதம் இல்லாமல் வசை மொழி பாடுவோர் உடலில் வெப்பம் அதிகமாகி மாலை முதலில் வாடும் என்று அவளுக்கு தெரியும்.

கணவர் மாலை முதலில் வாடியது ; பின்னர் செக்ஸ் sex பற்றி கேள்வி கேட்டு பிரம்மச்சாரி சங்கரரை அவள் மடக்கப் பார்த்தது, பின்னர் அனைவரும் தோல்வியை ஒப்புக்கொண்டு சங்கரின் சீடர்களானது முதலியவற்றை முன்னரே எழுதிவிட்டேன்

XXXX

யவனர் பற்றி குமாரில பட்டர்

சபர ஸ்வாமின் எழுதியது சபர பாஷ்யம்;  இது ஜைமினியின் பூர்வ மீமாம்ச சூத்திரங்கள் மீதான உரை.. இதன் மீது குமாரில பட்டர் எழுதிய உரை ‘தந்த்ர வார்த்திகம்’. அதில் காணும் விஷயம் (1-3-6-10)-

சோடிதம் து ப்ரதியே தா விரோதாத் பிரமானேன — சூத்திரம் 10

வேதத்தில் வரும் ஒரு சொல்லுக்கு மிலேச்சர்கள் சொல்லும் வியாக்கியானத்தை ஏற்க வேண்டுமா அல்லது சொற்பிறப்பு இயல் (etymology) எனப்படும் நிருக்தத்தையோ அல்லது சம்ஸ்க்ருத இலக்கண விளக்கத்த்தையோ ஏற்க வேண்டுமா என்ற விவாதத்தைத் தொடர்ந்து இந்த சூத்திரம் வருகிறது .

பூர்வ பக்ஷ :-

பூர்வ பக்ஷ என்பது பொதுவான கருத்து அல்லது எதிரியின் கருத்து ;இதைச் சொல்லிவிட்டு உரை எழுதுவோர் தம் கருத்தை முன் வைப்பர்

“ஒரு உதாரணத்துக்கு திராவிட பாஷையை எடுத்துக்கொள்வோம். அவர்கள் ‘சோறு’ என்று சொல்லுவார்கள். அதை  வடக்கிலுள்ளோர் சோர (திருடன்) என்று அர்த்தம் செய்யலாம்  இன்னும் பல சொற்கள் உள . ‘பாப’ என்பது பாம்பு, பாவம் என்று பொருள் படும். ஒரு பாம்பு தீமையே செய்யும் என்பதால் இப்படிப்பொருள்.

வேதங்களை பொறுத்த மட்டில் மிலேச்சர்களுக்கு கருத்து சொல்லும் அதிகாரமின்மையால் இலக்கண விளக்கமும், சொற்பிறப்பியல்/ நிருக்த விளக்கமுமே  ஏற்கப்படும் .

இந்த விளக்கத்துக்கு நேர் மாறான கருத்தைச் சொல்லாவிடின் மிலேச்சர் விளக்கத்தை அங்கிகரிக்கலாம்” .

(மிலேச்சர் = சங்க இலக்கியத்தில் வெளிநாட்டு மொழி பேசிய ரோமானியர்களைக் குறிக்கும். சம்ஸ்க்ருத இலக்கியத்தில் இந்தியாவுக்கு வெளியே உள்ள எல்லா வெளிநாட்டினரையும் குறிக்கும். பாரதியார் பாடல் முதலிய பிற்கால நூல்களில் துலுக்கர்களைக் குறிக்கும்)

அனந்தம் மிலேச்ச தேஷாம்ஸ்ச  கஹ சர்வோநூபலப்ஸ்யதே

“மிலேச்சர் நாடுகள் அதிகமாக இருக்கின்றனவே. அவர்களின் சொற் பிரயோகத்தை எல்லாம் எப்படி ஒருவர் அறியமுடியும் ?

மிலேச்சர்களிடமிருந்து புதிய விளக்கம் வந்தால் நம்முடைய விளக்கமும் மாறும்.  அவர்களுடைய கருத்துக்களை நாம் புறக்கணிக்கும்போது ஆர்யாவர்த்த்தில் உள்ள அர்த்தங்களை பார்க்கலாம். நமது தர்மத்தைப் பின்பற்றாதவர்கள்  சொல்லின் உருவத்தை சிதைத்தது போல அர்த்தத்தையும் சிதைக்கலாம்.

திராவிட பாஷைகளின் விஷயத்திலேயே இவ்வளவு வேறுபாடு இருக்கையில் நாம் எப்படி தொலை தூரத்திலுள்ள பாரசிகர், பார்ப ர்கள், யவனர்கள், ரோமானியர்கள் இடையே புழங்கும் சொற்களிலிருந்து நம் சொற்களுக்கு அர்த்தம் கற்பிக்க இயலும்?”

குமாரில பட்டரின் இந்த வாதத்தை ஒரே வரியில் சொல்லவேண்டுமானால், “வேதத்தின் கொள்கைகளுக்கு எதிரான வியாக்கியானங்களை  வேறு மொழி பேசுவோர் சொன்னால் ஏற்காதே. நமது கருத்தை  ஏற்கும் வாதத்தங்களை ஒப்புக்கொள்வோம்”.

இந்த வாதத்துக்கு முடிவுரை  எழுதுகையில் மிலேச்சர்களின் அர்த்தங்களை ‘ஓரளவு’ ஏற்கலாம் என்கிறார். ஆனால் உள்நாட்டுக்குள்ளேயே திராவிட பாஷையில் உள்ள ‘சோறு’ என்ற சொல்  வடக்கிலுள்ளவர்களுக்கு தவறான பொருள் தரக்கூடும் என்பதால் வேதத்தை எதிர்க்காத அர்த்தங்களை ஒப்புக்கொள்ளலாம்.

1300 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் இப்படி எழுதியது நம்மை வியப்புக்கு உள்ளாக்கும். ஏனெனில் அவர் சொல்லும் மிலேச்சர்கள் “யவனர்/கிரேக்கர்களும் ரோமானியர்களும் பார்ப்பரர்களும்” ஆகும். அப்போதே கால்டுவெல்களும் மாக்ஸ்முல்லர்களும் இருந்திருக்கின்றனர்!!

குமாரில பட்டர் மிகவும் பரந்த அறிவுள்ளவர் என்பதும், நாளந்தா பல்கலைக் கழகத்துக்கு வந்த உலகின் பல நாட்டு அறிஞர்களை சந்தித்து அளவளாவியர் என்பதும் தெரிகிறது.

TAGS — மிலேச்சர் , குமாரில பட்டர் , யவனர், திராவிட பாஷா, சோறு , வெள்ளைக்காரன்

–SUBHAM–

ஹிந்தி படப் பாடல்கள் – 20 – ஒரு கரு, ஒரு கவி, நான்கு பாடல்கள்!-(Post No.7893)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7893

Date uploaded in London – – 28 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 20 – ஒரு கரு, ஒரு கவி, நான்கு பாடல்கள்!-(1)

R. Nanjappa

ஒரு கரு, ஒரு கவி, நான்கு பாடல்கள்!

ஒரு சிறந்த கவிஞன் ஒரே விஷயம் அல்லது எண்ணம் அல்லது உணர்ச்சி பற்றி பல நிலைகளில், பல வழிகளில் சிந்தித்து  எழுதவேண்டும். இதற்கு சினிமாவில் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.கதை அடிப்படையில் ஒன்றாக இருந்தாலும் , சந்தர்ப்பச் சூழ்நிலைகள் வேறுபடும். இதுவே கவிக்குக் கிடைக்கும் வாய்ப்பு. நம் திரைக்கவிகள் அனைவருமே இந்தக் கலையில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

காதலில் தோல்வி அல்லது  ஏமாற்றம்  என்பது சினிமாவில் முக்கியமான ஒரு “தீம்”. இதை இசை, சாஹித்யம் கலந்து தரும்போது, “சோகம்’ என்ற உணர்ச்சி பாவம்  மனதில் எழும். இதைச் சிறந்த முறையில் தரும்போது,  இந்த பாவம் “ரஸமாக” மாறுகிறது. ‘உணர்ச்சிவசப்படுதல்’ என்று சொல்கிறோம். நாட்டியக் கலையில், அபிநயம் சங்கீதம் சாஹித்யம் மூன்றும் இணைந்து இந்த பாவத்தை உச்ச நிலைக்குக் கொண்டு செல்லும், சினிமாவில் இதை நடிப்பில் காட்டுகின்றனர்


 இந்த ஏமாற்றத்தையும் அதன் விளைவுகளையும் கவிகள் பலவிதமாகக் கவிதையில் வடித்திருக்கின்றனர். நல்ல கவிதைக்கு நல்ல இசையும் அமையும் போல! இப்படி கவிஞர் ஸாஹிர் லுதியான்வி எழுதிய நான்கு கவிதைகளைப் பார்ப்போம். ஏமாற்றம் அல்லது தோல்வி என்பதுதான் கரு. அதை எப்படி வெளிப்படுத்துகிறார் என்று பார்ப்போம்.

1. ஜானே கைஸே லோக் தே

Song: Jaane Woh kaise

Film: Pyaasa 1957

Music: S.D.Burman

Singer: Hemant Kumar

जाने वो कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला
हमने तो जब कलियाँ माँगी काँटों का हार मिला 

ஜானே கைஸே லோக் தே ஜின்கே ப்யார் கோ ப்யார் மிலா

ஹம்னே தோ ஜப் கலியா(ன்) மாங்கீ கா(ன்)டோ கா ஹார் மிலா

இந்த உலகில் தங்கள் காதல் நிறைவேறப் பெற்றவர்கள் எப்படி இருப்பார்கள்?

எனக்குத் தெரியவில்லையே!

நான் மலர்களை நாடியபோது எனக்கு முட்களின் மாலை தானே கிடைத்தது!

खुशियों की मंज़िल ढूँढी तो ग़म की गर्द मिली
चाहत के नग़मे चाहे तो आहें सर्द मिली

दिल के बोझ को दूना कर गया जो ग़मखार मिला

हमने तो जब

குஷியோ(ன்) கீ மன்ஃஜில் டூன்டீ தோ கம் கீ கர்த் மிலீ

சாஹத் கே நகுமே சாஹே தோ ஆஹே(ன்ஸர்த் மிலீ

தில் கே போஜ் கோ தூனா கர் கயா ஜோ கம்கார் மிலா

நான் சந்தோஷம் நிறைந்த லட்சிய இடத்தைத் தேடினேன்

ஆனால் துக்கத்தால் வளைக்கப்பட்டேன்

நான் நல்ல காதற் சொற்களைக் கேட்க விரும்பினேன்

துக்கம் கலந்த பெருமூச்சு தான் கிடைத்தது

என்னுடைய துக்கம் விலகும் என்று யாரையாவது நெருங்கினால்

என் வருத்தம் இரு மடங்கானது!

बिछड़ गया हर साथी देकर पल दो पल का साथ
किसको फ़ुरसत है जो थामे दीवानों का हाथ
हमको अपना साया तक अक्सर बेज़ार मिला

हमने तो जब

பிசட் கயா ஹர் ஸாதீ தேகர் பல் தோ பல் கா ஸாத்

கிஸ்கோ ஃபுர்ஸத் ஹை ஜோ தாமே தீவானோ(ன்) கா ஹாத்

ஹம் கோ அப்னா ஸாயா தக் அக்ஸர் பேஃஜார் மிலா

கூட இருந்தவர்கள் எல்லாம் சில காலத்திலேயே என்னை விட்டுப் பிரிந்தனர்

ஆம், ஒரு பைத்தியத்தின் கையைப் பிடித்து நிற்க யாருக்கு நேரம் இருக்கிறது!

என்னுடைய நிழலுக்கே கூட  என்னைக் கண்டு பேஜாராகிவிட்டது போலும்!

इसको ही जीना कहते हैं तो यूँ ही जी लेंगे
उफ़ करेंगे लब सी लेंगे आँसू पी लेंगे
ग़म से अब घबराना कैसा, ग़म सौ बार मिला
हमने तो जब

இஸ்கோ ஹீ ஜீனா கஹதே ஹை தோ யூ(ன்) ஹீ ஜீலேங்கே

உஃப் கரேங்கே லப் ஸீ லேங்கே ஆன்ஸூ பீலேங்கே

கம் ஸே அப் கப்ரானா கைஸா, கம் ஸௌ பார் மிலா

இதுதான் வாழ்க்கை என்று சொல்கிறீர்களா?

சரி, அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்!

பெருமூச்சு விடமாட்டேன், குற்றம் குறை சொல்லமாட்டேன்,

கண்ணீரைச் சகித்துக் கொள்வேன்!

துக்கத்தைக் கண்டு இப்போது எப்படி பயப்படுவது

அதுதான் நூறுமுறை வந்துவிட்டதே!

எத்தனை உருக்கமான பாடல்! இதை ஹேமந்த்குமார் மிகவும் உருக்கமாகவே  பாடியிருக்கிறார்.

இந்த உணர்ச்சிக்கு இலக்கணம் வகுக்கும் பாடல். பர்மனின் இசை பற்றிச் சொல்ல தகுந்த சொற்கள் இல்லை!

 2.நிலவுக்கும் தாரகைகளுக்கும் ஆசை!

Song: Maine Chaand  aur sitaro(n) ki tamanna

Film: Chandrakantha 1956

Music: N.Dutta

Singer: Mohammad Rafi

मैंने चाँद और सितारों की तमन्ना की थी
मुझको रातों की सियाही के सिवा कुछ ना मिला
मैंने चाँद और सितारों की 

மைனே சாந்த் ஔர் ஸிதாரோ(ன்) கீ தமன்னா கீ தீ

முஜ்கோ ராதோ(ன்) கீ ஸியாஹீ கே ஸிவா குச்  நா மிலா

சந்திரனையும் தாரகைகளையும் அடையவேண்டும் என விரும்பினேன்

இரவின் இருளைத் தவிர வேறெதுவும் எனக்குக் கிட்டவில்லை!

मैं वो नग़मा हूँ जिसे प्यार की महफ़िल ना मिली
वो मुसाफ़िर हूँ जिसे कोई भी मंज़िल ना मिली
ज़ख़्म पाएँ हैं, बहारों की तमन्ना की थी
मैंने चाँद और सितारों की  

மை நக்மா ஹூ(ன்) ஜிஸே ப்யார் கீ மஹஃபில் மிலீ

வோ முஸாஃபிர் ஹீ(ன்) ஜிஸே  கோயீ பீ மன்ஃஜில் நா மிலீ

ஜக்ம் பாயே(ன்) ஹை, பஹாரோ(ன்) கீ தமன்னா கீ தீ

நான் ஒரு பாடல்என்னை ஆசையோடு கேட்கும்  ரசிகர்கள் கிடைக்கவில்லை

எந்த லட்சியத்தையும் எட்டமுடியாத பயணத்தில் ஈடுபட்ட வழிப்போக்கன் நான்

வஸந்த காலத்தின் இன்பங்களுக்கு  ஆசைப்பட்டேன்காயமே கிட்டியது!

நான் சந்திரனுக்கும் தாரகைகளுக்கும் ஆசைப்பட்டேன்……

किसी गेसू, किसी आँचल का सहारा भी नहीं
रास्ते में कोई धुँधला सा सितारा भी नहीं
मेरी नज़रों ने नज़ारों की तमन्ना की थी
मैंने चाँद और सितारों की  

கிஸீகேஸூ, கிஸீ ஆன்சல்  கா ஸஹாரா பீ  நஹீ 

ராஸ்தே  மே கோயீ துந்தலா ஸா ஸிதாரா பீ நஹீ

மேரீ நஃஜ்ரோ(ன்) நே  நஃஜாரோ கீ தமன்னா கீ தீ

எந்தக் கூந்தலோ, முந்தானையின் உதவியோ கூட கிடைக்கவில்லை

மறைந்துவரும் ஒரு  நட்சத்திரம் கூட வழியில் இல்லை

நல்ல காட்சிகளைக் காண கண்கள் ஏங்கின

நான் சந்திரனுக்கும் நிலவுக்கும் ஆசைப்பட்டேன்…….

मेरी राहों से जुदा हो गई राहें उनकी
आज बदली नज़र आती हैं निगाहें उनकी
जिनसे इस दिल ने सहारों की तमन्ना की थी
मैंने चाँद और सितारों की

மேரீ ராஹோ(ன்ஸே  ஜுதா ஹோ கயீ ராஹே(ன்உன்கீ

ஆஜ் பதலீ நஃஜர் ஆதீ ஹைய் நிகாஹேன்) உன்கீ

ஜின்ஸே இஸ் தில் நே ஸஹாரோ(ன்கீ தமன்னா கீ தீ

அவள் பாதை என் பாதையிலிருந்து பிரிந்து விட்டது

இன்று அவள் கருத்து மாறிவிட்டது

நான் அவள் துணையை நாடினேன்

நான் நிலவுக்கும் நட்சத்திரத்திற்கும் ஆசைப்பட்டேன்……..

प्यार माँगा तो सिसकते हुए अरमान  मिले
चैन चाहा तो उमड़ते हुए तूफ़ान मिले
डूबते दिल ने किनारों की तमन्ना की थी
मैंने चाँद और सितारों की...

ப்யார் மாங்கா தோ ஸிஸ்கதே  ஹுயே அர்மான் மிலே

சைன் சாஹா தோ உமட்தே ஹுயே  தூஃபான் மிலே

டூப்தே தில் நே  கினாரோ(ன்) கீ தமன்னா கீ தீ

அன்பைத் தேடினேன், அழுகையே கிடைத்தது

சாந்தியைத் தேடினேன், வீசும் புயல் கிடைத்தது

மூழ்கும் இந்த மனது கரையைத் தேடியது

நான் நிலவுக்கும் நட்சத்திரத்திற்கும் ஆசைப்பட்டேன்…….

dil men naakaam ummidon ke basere paaye
roshani lene ko nikala to andhere paaye
rang aur noor ke dhaaron ki tamanna ki thi
main ne chaand aur sitaaron ki…………

பயனில்லாத ஆசைகள் மனதில் குடிகொண்டு விட்டன

வெளிச்சத்தைத் தேடினேன்இருள் கிடைத்தது

சொர்க்கத்தின் ஒளியும் நிறமும் நிறைந்த அந்தப் பெருக்கைத் தேடினேன்

நான் நிலவையும் தாரகைகளையும் தேடினேன், இரவின் இருளே கிடைத்தது.

இதுவும் முதல் பாடலைப் போன்ற அதே மன நிலையை விவரிக்கிறது, சொற்கள் தான் வேறு.

முதல் பாடலில் மலர்முள் என்றார்; இங்கு ஓளிஇருள் என்கிறார். மனதை வருடும் இசை, ரஃபியின் இனிய குரல்.

என்.தத்தா  நல்ல இசைஞர். அவருக்கு உரிய இடமோ, அங்கீகாரமோ கிடைக்கவில்லை. ஸாஹீரை பெரிய இசைஞர்கள்  ஏற்க மறுத்தபோது, என்.தத்தா போன்ற இசைஞர்களுடன் சேர்ந்தார்.

இந்த இரண்டு பாடல்களும் படத்தில் கதையை ஒட்டி எழுந்தவை. சோக மயம் தான்ஆனால் மனதைத் தொடும்படி இல்லை! புத்தியில் பதிகிறதுமனதில் அவ்வளவு பாதிப்பில்லை.ஏன்?

நாம் தமிழில் இதைவிடவும் மனதைத் தொடும் பாடலைக் கேட்டிருக்கிறோம்! பழையதேவதாஸ்படத்தில் சி.ஆர். சுப்பராமன் இசையமைத்து, கண்டசாலாவும், ராணியும் பாடிய பாடல்கள் இவற்றை விட உருக்கமானவை. “சீறும் புயலும் மழையும் சேர்ந்தால், சின்னக்குடை தாங்காதே” –அப்பா, இந்த வரிகளை கண்டசாலாவின் குரலில் கேட்டவர்களுக்கு, இதற்கு நிகராக வேறு ஒரு வரியைச் சொல்வது கஷ்டம். “எல்லாம் மாயைதானா..” என்று கே.ராணி எடுக்கும்போதே மனம் திடுக்கிடுகிறது. ‘பயனில்லாத ஆசைகள் மனதில் குடிகொண்டுவிட்டனஎன்று இங்கு வருவது  ‘நிறைவேறாத ஆசை வளர்வதும் ஏனோஎன்ற தேவதாஸ் பாடலின் வரியை நினைவுபடுத்துகிறது. [இந்தப் பாடலை எழுதியது யார்? எஸ்.டி சுந்தரம் என்று நினைவு. சிலர் உடுமலை நாராயண கவி என்பர்.]

நான் ஸாஹிரின் கவிதையில் குற்றம் சொல்லவில்லை! இதே உணர்ச்சிகளை இன்னும் ஆழமாகத் தமிழ்ப்பாடலில் பார்த்திருக்கிறோம் என்று சொல்ல வந்தேன்!

சரி, இப்படி நடந்ததையே நினைத்து வருந்துவதால் ஆவதென்ன?  இதற்கு மாற்று என்ன? இதை வேறு கவிதைகளில்  சொல்கிறார். அடுத்துப் பார்ப்போம்.

tags —  ஹிந்தி படப் பாடல்கள் – 20 

***

லட்சம் புதிர்கள் – 10 (Post No.7892)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7892

Date uploaded in London – – 28 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

லட்சம் புதிர்கள் – 9 கட்டுரை எண் 7492 வெளியான தேதி 25-1-2020

லட்சம் புதிர்கள் – 10 (101 முதல் 150 முடிய)

ச.நாகராஜன்

கேள்விகள் :

ராமாயணம்

101) ராமாயணத்தை இயற்றியவர் யார்?

102) ராமாயணத்தில் மொத்தம் எத்தனை ஸ்லோகங்கள்?

103) புத்திரர்களைப் பெற தசரதன் செய்த யாகம் எது?

104) ராமாயண காலத்தில் சரயு நதி – அதன் இன்றைய பெயர் என்ன?

105) கைகேயியுடன் அவர் அரண்மனையிலிருந்து கூடவே வந்த பணிப்பெண்ணின் பெயர் என்ன?

106)மஹரிஷி வால்மீகியின் பூர்வ பெயர் என்ன?

107) வேடனாக இருந்து ரிஷியாக மாறியவர் யார்?

108) ராமாயணம் எந்த யுகத்தில் நடந்தது

109) வாலி, சுக்ரீவரின் தந்தை பெயர் என்ன?

110) ராமாயணம் எந்த சந்தத்தில் இயற்றப்பட்டுள்ளது?

111) வசிஷ்டர் ஆஸ்ரமத்தில் இருந்த பசுவின் பெயர் என்ன?

112) ஜனக மன்னரின் இயற் பெயர் என்ன?

113) அசோகவனத்தின் இன்னொரு பெயர் என்ன?

114) லக்ஷ்மணனைக் காப்பாற்ற அனுமன் கொண்டு வந்த மருந்தின் பெயர் என்ன?

115) ராமாயணத்தின் இன்னொரு பெயர் என்ன?

116) இன்று வியாச நதி என்று அழைக்கப்படும் நதி ராமாயண் காலத்தில் என்ன பெயரில் அழைக்கப்பட்டது?

117) லங்கையில் ராவணனின் குல தெய்வம் எங்கு வைக்கப்பட்டிருந்தது?

118) ராமாயண காலத்தில் லவபுரம் என்று அழைக்கப்பட்ட நகரத்தின் இன்றைய பெயர் என்ன?

119) ராவணன் சுக்ரீவனுக்கு அனுப்பிய தூதனின் பெயர் என்ன?

120) எட்டாவது வசுவின் பெயர் என்ன?

121) தசரத மன்னரை அழைக்க அயோத்திக்கு ஜனகர் அனுப்பிய மந்திரியின் பெயர் என்ன?

122) ராமாயணம் மொத்தம் எத்தனை காண்டங்கள்?

123) ராமாயணத்தில் பெரிய காண்டம் எது?

124) ராமாயணத்தில் சிறிய காண்டம் எது?

125) அமராவதி நகரின் அரசன் யார்?

126) இந்திரனின் யானையின் பெயர் என்ன?

127) அஸ்வமேத யாகத்தில் குதிரையின் நெற்றியில் கட்டப்பட்டிருக்கும் பத்ரத்தின் பெயர் என்ன?

128) சமுத்திரம் கடையப்பட்ட போது வெளி வந்த மணி எது?

129) குபேரனின் யானையின் பெயர் என்ன?

130) சமுத்திரத்தைக் கடைந்த போது வெளி வந்த விஷத்தின் பெயர் என்ன?

131) வருணனின் யானையின் பெயர் என்ன?

132) யமனின் யானையின் பெயர் என்ன?

133) ராமரின் கதையை கருடனுக்குச் சொன்ன காகத்தின் பெயர் என்ன?

134) கலஹப்ரியர் என்று எந்த மஹரிஷிக்குப் பெயர்?

135) சஞ்ஜீவினி மூலிகையை அனுமார் எடுத்து வந்த போது தூக்கி வந்த மலையின் பெயர் என்ன?

136) மஹரிஷி விஸ்வாமித்திரர் உடலுடன் சொர்க்கத்திற்கு அனுப்பிய மன்னனின் பெயர் என்ன?

137) கல்லாகப் போகக் கடவது என்று மனைவியை சபித்த முனிவரின் பெயர் என்ன?

138) சூரியனை பழம் என்று நினைத்து உண்ணச் சென்றவர் யார்?

139) யமனுடன் போர் புரிந்த ராக்ஷஸன் யார்?

140) ராம பட்டாபிஷேகத்தின் போது ஐந்து புனித நதிகளிலிருந்து நீர் கொண்டு வந்தவர் யார்?

141) ராவணனை தன் அக்குளில் ஆறு மாதங்கள் வைத்திருந்த வீரன் யார்?

142) விஸ்வாமித்திரர் ராமனை அழைக்க வந்த போது அவரிடம் தசரதன் தன் வயது எவ்வளவு என்று சொன்னார்?

143) பத்தாயிரம் வீரர்களை ஒரே சமயத்தில் எதிர் கொள்ள வல்ல வீரனின் பெயர் என்ன?

144) ராமாயணத்தில் மொத்தம் எத்தனை காண்டங்கள் உள்ளன?

145) ராமாயணத்தில் மொத்தம் எத்தனை ஸர்க்கங்கள் உள்ளன?

146) ஒரே சமயத்தில் லக்ஷ்மணன் எத்தனை அம்புகளை விட வல்லவ்ன்?

147) வால்மீகிக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது?

148) இந்திரஜித்தின் இயற்பெயர் என்ன?

149) இந்திரஜித்திற்கு அந்தப் பெயர் ஏன் வந்தது?

150) சீதைக்கு ஜானகி என்ற பெயர் எப்படி வந்தது?

விடைகள் :

101) வால்மீகி மஹரிஷி 102) 24000 103) புத்ரகாமேஷ்டி 104) ககரா (Ghagara) 105) மந்தரை 106) ரத்னாகரர் 107) வால்மீகி 108) த்ரேதா யுகம் 109) ரிக்ஷராஜன் 110) அனுஷ்டுப் 111) சுரபி 112) ஷீரத்வஜன் 113) ப்ரமத வனம் 114) சஞ்சீவினி மூலிகை 115) புலஸ்த்ய வதம் அல்லது தசானனன் வ்தம் 116) விபாஷா 117) அசோக வனம் 118) லாகூர் 119) ஷுக் 120) சவித்ரா 121) சுதாமன் 122) ஏழு 123) யுத்த காண்டம் 124) ஆரண்ய காண்டம் 125) இந்திரன்

126) ஐராவதம் 127) ஜய பத்ரம் 128) கௌஸ்துப மணி 129) ஹிம்பந்த்ர 130) ஆலகாலம் 131) சௌமனஸ் 132) மஹாபத்மம் 133) காகபுஷுண்டி 134) நாரதர் 135) த்ரோண கிரி 136) திரிசங்கு 137) கௌதமர் 138) ஹனுமான் 139) ராவணன் 140) ஜாம்பவான் 141) வாலி 142) 60000 வருடங்கள் 143) அதிரதி

144) 7 145) 500 146) 500 147) அவர் தவம் செய்த போது அவர் புற்றினால் மூடப்பட்டதால் 148) மேகநாதன் 149)  இந்திரனை ஜெயித்ததால் 150) ஜனகரின் புதல்வி என்பதால்.

tags — லட்சம் புதிர்கள் – 10

***

SWAMI CROSSWORD 2742020 (Post No.7891)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7891

Date uploaded in London – 27 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ACROSS

1.– 8 letters – author of the world’s proper Economics book

8. – 9–a Himalayan Shiva temple, closed during winter months

11. – 5- with long sound it means religious discipline; with short sound which is not moving

12. – 4- cart, vehicle, wagon

13.– 4–crow

15. – 5– 28 books giving rules for temples and priests in South India

16 – English words axle, axis are derived from this Sanskrit word

17. – 4– beautiful pink colour flower that came from Persia

19. – 7—change, modification, alteration; also used with the meaning of Selling

20. – 4—ray of light, small particle, fibre, end of fibre in Sanskrit.

X XX

DOWN

1. – 6 letters –  land of Kaikeyi of Ramayana

2. – 5–betel nut ; Malayalam word is used in English

3. – 6–moisture, wet in Sanskrit

4. – 5–Ravana’s island

5. –5– it has two meanings- wealth and meaning

9. – 5–garden, park in Sanskrit

6. -4– illusion, passion

7. – 6–10th sign in  zodiac.

10. –6– Vedic Goddess

14. – 4–hand,

18.–2–– sound used before every mantra

—subham–