நாஸ்தீகர் இல்லாத நகரம்: அயோத்தி !!

rama10

Written by London Swaminathan
Post No. 1163; Dated 10th July 2014.

வடநாட்டில் இருந்த கோசல நாட்டின் தலை நகரம் அயோத்தி. இங்கே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அரசாட்சி செய்தவன் தசரத மாமன்னன். அவனுடைய மகன் ராமனின் புகழை வால்மீகி, கம்பன், துளசிதாஸ், எழுத்தச்சன் உள்பட பல நூறு புலவர்கள் பாடி இருக்கின்றனர். 300 வகையான ராமாயணங்கள் இருப்பதை நாம் அறிவோம். அவைகளுடன் புறநானூற்றுப் புலவர்கள், சிலப்பதிகார இளங்கோ, பன்னிரு ஆழ்வார்கள், திருப்புகழ் பாடிய அருணகிரி, தேவாரம் பாடிய மூவர் ஆகியோரும் அவரவர் பக்திப் பாடல்கள் இடையே ராமன் புகழ் பாடி இருப்பதை சிலரே அறிவர்.

ராமன் புகழ் இப்படிப் பரவக் காரணம் ரகு குல மன்னர்களின் நல்லாட்சி. அதைக் கேட்டுவிட்டுத்தான் ‘’ராமராஜ்யம்’’ அமைய வேண்டும் என்று காந்திஜி போன்ற தலைவர்கள் பரப்புரை செய்தனர்.

கட்டிட, பொதுப்பணித் துறை, விவசாயத் துறை, இசை நடனத் துறை, போக்குவரத்துத் துறை, நிர்வாகத் துறை, கல்வித் துறை, பாதுகாப்புத் துறை, சமயத்துறை, சமூக நலத் துறை, வணிகத் துறை, அறநிலையத் துறை, மகளிர் நலத் துறை ஆகிய அத்தனை விஷயங்களையும் வால்மீகி சிந்தித்துக் கவி புனைந்திருப்பதைப் படிக்கும் போது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா நன்றாக முன்னேறி இருந்ததை அறிய முடிகிறது. எந்த ஒரு நாட்டு இலக்கியத்திலாவது இப்படி ஒரு முன்னேறிய சிந்தனை இருக்குமா என்பது ஐயப்பாடே.

இதைப் பார்த்துதான் கம்பன்
வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, நேர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
ஒண்மை இல்லை,பல் கேள்வி ஒங்கலால். –(பால. 85)
என்று வால்மீகிக்கும் மேலாக ஒரு படி முன்னே சென்று பாடினான்.

இதோ அந்த நல்லாட்சியின் சில அம்சங்கள்:

1.மநுநா மாநவேந்த்ரேண யா புரீ நிர்மிதா ஸ்வயம்:—-
மனிதர்களில் தலைவனான ( மானவ இந்திரன் ) மநு, தான் நினைத்த மாத்திரத்தில் நிறுவிய நகரம் அயோத்தி!

2.ஆயதா தஸ ச த்வே ச யோஜனானி மஹா புரீ:—
12 காத நீளம் (அறுபது மைல்) 3 காத அகலம் உடையது. இரு புறமும் மரங்கள் நிறைந்த நகரம்.

3.ராஜ மார்கேன மஹதா—
பல நகரங்களுக்குச் செல்ல பெரிய ராஜ பாட்டைகள் (பெரிய ரோடுகள்) இருந்தன. பூச்செடிகளுக்கு எப்போதும் தண்ணிர் கிடைத்தது. அரணமனையில் இருந்து ராஜ வீதிகள் சென்றன.

4.கவாட தோரணவதீம்:–
சிறந்த அலன்கரிக்கப்பட்ட வாயிற் கதவுகள் இருந்தன. பல கடைத் தெருக்கள் இருந்தன. சகல விதமான இயந்திரங்களும் ஆயுதங்களும் இருந்தன

5.சூத மாகத சம்பாதாம் ஸ்ரீமதீ மதுல ப்ரபாம்:–
அரசனின் குலம், வீரதீரச் செயல்களைப் பாடும் சூதர்கள், மாகதர்கள் — (யாழ்ப் பாணர்கள்), தன தான்யம்— கொடிகள் பறக்கும் உயர்ந்த மாளிகைகள் — பலரைக் கொல்லும் மதில் சுவர் ஆயதங்கள் ஆகியனவும் அங்கே உண்டு.

6. வதூ நாடக சங்கை ஸ்ச சம்யுக்தாம் சர்வதாம் புரீம்:–
நகரத்தின் நான்கு புறங்களிலும் நடன மாதர்களும் நட்டுவாங்கர் கூட்டமும் காணப்பட்டனர். தோட்டங்களும், மாந்தோப்புகளும் உள்ளன. பெரிய கோட்டை வாயில்கள் பெண்களின் இடுப்பை அலங்கரிக்கும் ஒட்டியாணமாக அலங்கரித்தன.

7.துர்க கம்பீர பரிகாம் துர்கா ம் அந்யைர்து ராஸதாம்:—
எதிரிகள் நுழைய முடியாத ஆழமான அகழிகள் உடைய துர்கங்கள் (கோட்டைகள்), குதிரைகள், யானைகள், பசுக்கள், ஒட்டகங்கள் நிறைந்திருந்தன.

8. ஸாமந்த ராஜ சங்கைஸ்ச பலை கர்மபி ராவ்ருதாம்:–
கப்பம் கட்டவந்த அரசர்கள் கூட்டமாக நின்ற (வரி செலுத்த ‘க்யூ’!!) கூட்டம் ஒரு புறம் — பல தேச வைஸ்யர்கள் (வெளி நாட்டு வணிகர்கள்) மற்றொரு புறம்.

9.ப்ராஸாதை ரத்ன விக்ருதை: பர்வதை ரூப ஸோபிதாம்:–
நவரத்னக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனைகள், —விளையாடுவதற்கான பர்வதங்கள்— அதாவது—- விளையாட்டு மலைகள், மேல் மாடிக் காட்டிடங்கள் இருந்ததால் இந்திரனின் அமராவதிக்கு நிகராக விள்ங்கியது.

ram profile

10.சித்ராம் அஷ்டபதாகாராம் வர நாரீகணைர்யுதாம்:–
நடுவில் அரண்மனை, நாற்புறமும் ராஜவீதிகள் ( சொக்கட்டான, பல்லாங்குழி போல நடுவில் தோற்றம்), பெண் ‘மணி’ கள், நவமணிகள், விமாநம் உடைய வீடுகள் (விமாந குஹ சோபிதாம்) இருந்தன.

11.குருஹாடாமவிச்சித்ராம் சம பூமௌ நிவேசிதாம்:–
வீடுகள் நெருக்கமாக இருந்தன. குற்றமில்லாத சம தளத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அவைகள் — மற்றும் சம்பா, சிறுமணி நெல் அரிசி (ஸாலி தண்டுல ஸம்பூர்ணாம்) குறைவில்லாமல் இருந்தன.

12.துந்துபீர் முதங்கை ஸ்ச வீணாபி பணவைஸ் ததா:–
பேரிகை, மிருதங்கம், வீணைகள், உடுக்கைகள் ஆகிய முழக்கம் கேட்டவண்ணம் இருந்தன. பூவுலகில் இதைவிடச் சிறந்த நகரம் இல்லை என்று விளங்கியது.

13.விமாநமிவ சித்தானாம் தஸாதி கதம் திவி:–
சித்தர்களும் தவ வலிமை மிக்கோரும், சுவர்க்கவாசிகள் போல காணப்பட்டனர். அவர்கள் எங்கும் செல்லத்தக்க விமானங்கள் உடையவர்கள்
14.சிம்ம, வ்யாக்ர, வராஹானாம் மத்தானாம் நர்ததாம் வநே:–
சுறு சுறுப்பனவர்கள்; கைத்தொழில் வல்லவர்கள்; தந்தையின் பாதுகாப்போடு சேர்ந்தே புதல்விகள் வசித்தனர்; பயந்து ஓடுபவர்கள் யாரும் இல்லை; சிங்கம் புலி, காட்டுப் பன்றிகளை கூரான அம்புகளாலும், வெறும் கைகளாலும் கொல்லக் கூடிய வீரர்கள் வசித்தனர்.

15.ஸஹஸ்ரதை: ஸத்யபரதைர் மஹாத்மபிர் மஹர்ஷி கல்பைர் ருஷிபிஸ்ச கேவலை: :—–
வேதங்கள், அதன் ஆறு அங்கங்கள் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள்—ஆயிரம் ஆயிரமாகத் தானம் செய்பவர்கள், ஸத்தியத்தில் நாட்டம் உடையவர்கள் – சிறந்த புத்தி உள்ளவர்கள்—ஸாதாரண ரிஷிகள், மஹரிஷிகள் ஆகியோருக்குச் சமமானவர்கள், இது போன்ற பிராமணர்கள் ஆகியோர் அயோத்தியில் இருந்தனர்.

((ஆதாரம்:—வால்மீகி ராமாயணம், பாலகாண்டம், ஐந்தாம் சர்கம்))

16.தஸ்மின் புரவரே ஹ்ருஷ்டா தர்மாத்மாநோ பஹுஸ்ருதா: :—-
மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அறச் சிந்தனை மிளிர்ந்தது; சாத்திரங்களில் தேர்ச்சி பெற்று இருந்தனர்; பேராசை இல்லை; அயோத்தி மக்கள் போதும் என்ற பொன் மனம் படைத்தவர்கள்,; உண்மை விளம்பிகள் (ஸத்யவாதீ)

17. ந அல்பஸம்நிசய: கஸ்சித் ஆஸீத்தஸ்மின் புரோத்தமே:–
அல்ப (கொஞ்சம்) செல்வம் படைத்தவர் என்று யாரும் இல்லை; குதிரை பசுக்கள் இல்லாதவர் கிடையாது. பணம் இல்லாத காரணத்தால் கண்டதை வேண்டும் குடும்பத் தலைவன் இல்லை.
ram gem

18.காமி வா ந கதர்யோ வா ந்ருஸம்ஸ: புருஷக் வசித்
த்ரஷ்டும் ஸக்யமயோத்யாயாம் நாவித்வாந்ந ச நாஸ்திக:
பேராசை, கருமித்தனம் ஆகியவற்றால் பிறரைக் கொடுமைப் படுத்துவோர் அயோத்தியில் இல்லை, சாஸ்திர நம்பிக்கையற்ற நாத்திகர் இல்லை. ஏனெனில் எல்லோரும் சாஸ்திரம் அறிந்தவர்.

19.ஸர்வே நராஸ்ச நார்யஸ்ச தர்மஸீலா: ஸுஸம்யதா: :–
ஆண்களும் பெண்களும் ஒழுக்கசீலர்கள்; புலனடக்கம் உடையவர்கள் பிறந்தது முதல் இறுதிவரை பண்பாடு உடையவர்கள் மஹரிஷிகள் போல வாழ்க்கை நடாத்தினர்.

20. நாகுண்டலீ நாமகுடீ நாஸ்ரக்வீ ந அல்ப போகவான் :—
காதில் குண்டலம் அணியாதோர் கிடையாது; தலையில் மகுடம் (கிரீடம்) இல்லாதவர் இல்லை (எல்லோரும் இந்நாட்டு மன்னர்)— மாலை தரிக்காதவன் இல்லை; எண்ணை தேய்த்து குளிக்காதவனோ, உடலுக்கு வாசனைத் தைலங்கள், பூச்சுகள் (அத்தர், புனுகு) உபயோகிக்காதவர்களோ ஒருவரும் இல்லை — எல்லோரும் சுகபோகத்தில் மிதந்தனர்.

atheism-poster-rsr-org

21.நாம்ருஷ்டபோஜீ நாதாதாநாப்யநங்கத நிஷ்கத்ருக்:–
சிறந்த உணவை வயிறு புடைக்கத் தின்னாதவர் இல்லை; பிறருக்குத் தானம் செய்யாவனும் (அயோத்தியில்) இல்லை. தோள் வளையமோ மார்பில் பதக்கமோ அணியாதனோ இல்லை கையில் காப்பு அணியாதவனோ, புலன் டக்கம் இல்லதவனையோ பார்க்கமுடியாது.

22.ந தஸ்கர:—
அயோத்தியில் திருடர்கள் கிடையாது. கொஞ்சம் படித்தவன் (அரை வேக்காடுகள்), கொஞ்சம் செல்ம் உடையவன், யாக, யக்ஞங்கள் செய்யாதோர், ஜாதிக் கலப்புடையோர் இல்லை.

23.ஸர்வ கர்ம நிரதா நித்யம் ப்ராஹ்மணா விஜிதேந்த்ரியா: :—
அந்தணர்கள் ஜிதேந்த்ரியர்கள் — (புலனழுக்கற்ற அந்தணாளர்: புறநானூறு); —-கர்மங்களில் கண்ணுடையோர் (அந்தணர் என்போர் அறவோர்: திருக்குறள்)— விருந்தினருக்கு வேண்டியதைக் கொடுத்து மகிழ்வித்தனர்- வேதம் ஓதிக் காலத்தைக் கழித்தனர். பேராசை இன்றி தட்சிணை வாங்கினர்- பிறன் மனை நோக்காத பேராண்மையோடு வாழ்ந்தனர்.

24.ந நாஸ்திகோ நாந்ருதகோ ந கஸ்சித பஹுஸ்ருத:
நாஸ்தீகன் இல்லை—கொஞ்சமாவது பொய் பேசும் வகை கூட இல்லை- படிக்காதவன் இல்லை- பொறாமை உள்ளவன், முட்டாள்கள் கிடையாது

25.நா ஷட் அங்கவ்தத்ராஸ்தி நாவ்ரதோ நாசஹஸ்ரத: :—
ஆறு அங்கங்களை (சடங்கு) கற்காதவ்ன் இல்லை; பட்டினி கிடந்து விரதம் அனுஷ்டிக்காதவன் கிடையாது. ஆயிரம் பேருக்கு உணவு கொடுக்காத சத்திரங்களே இல்லை. தானியம் குறைந்து போயிற்றே என்று கவலைப் பட்டோர் இல்லை. நல்ல பிள்ளைகளைப் பெறாதோரும் இல்லை; நோயாளிகளும் கிடையாது

26. குஹா கேஸரிணாம் இவ: —
குஹைகளில் ஆண் சிங்கம் இருந்தால் எப்படி நெருங்க முடியாதோ அது போன்றவீரகள் உடைய அயோத்தியை யாரும் நெருங்கமுடியாது, வீர வித்தைகளைக் கற்று இருந்தனர். அவமதிப்பைப் பொறுக்கமாட்டார்கள்; கோணல் புத்தி கிடையாது.
ram green

27. காம்போஜ விஷயே தாஜைர் பாஹ்லீக ஸ்ச ஹயோத்தமை: :–
காம்போஜம், பாலீகம், வநாயு, சிந்து தேசம் ஆகியவற்றில் பிறந்த சிறந்த குதிரைகள், மலை போன்ற விந்திய மலை, இமய மலையில் பிறந்த யானைகளும் அயோத்தியில் பவனி வந்தன.
((ஆதாரம்:—வால்மீகி ராமாயணம், பாலகாண்டம், ஆறாம் சர்கம்))

-subham–
contact swami_48@yahoo.com