Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸுக்கு(Socrates) இந்து மத உபநிஷத்துக்கள் அத்துப்படி என்று பல ஆங்கில நூல்கள் வந்துவிட்டன. சாக்ரடீஸ் நேரடியாக நமக்கு எதையும் எழுதி வைக்க வில்லையாயினும் அவருடைய பிரதம சீடன் பிளாட்டோ(Plato) எழுதிய விஷயங்கள் மூலமாக நாம் முழு சித்திரத்தைப் பெறுகிறோம்.
சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க அறிஞர் அவருக்கு முந்தைய பித்தகோரஸ் (Pythagoras) முதலியோர் மூலம் இந்து மத நூல்களை அறிந்ததை நாம் ஊகிக்க முடிகிறது. பித்தகோரஸ் தியரம் (Pythagoras Theorem தேற்றம்) என்பது இந்துக்கள் முன்னரே வேத காலத்தில் சொன்னது என்பதை இப்பொழுது உலக அறிஞர்கள் ஒப்புக்கொள்ளுகின்றனர்.(கணித வரலாறு பற்றிய நூல்களைக் காண்க)
ஆக, பித்தகோரஸ், அவருக்குப் பின்னர் சாக்ரடீஸ், அவரது சிஷ்யன் பிளாட்டோ, அவரது சிஷ்யன் அரிஸ்டாட்டில் (Aristotle) , அவரது சிஷ்யன் மாமன்னன் (Alexander)அலக்ஸ்சாண்டர் என்று வரிசையாக இந்து மத ஆதரவாளர்களைக் காணமுடிகிறது. கிரேக்க அறிஞர்களே இவர்களுடைய இந்து மத தொடர்பு, சைவ உணவு ஆதரவு பற்றி எழுதிவிட்டனர்.
நான் செய்த ஆராய்ச்சியில் வள்ளுவருக்கு சாக்ரடீஸ் தெரியும் என்று கண்டுபிடித்தேன். 1990-களில் லண்டனிலிருந்து டாக்டர் இந்திரகுமார் வெளியிட்ட மேகம் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் இதை எழுதி அது 2015ல் விநாயகா பதிப்பக புஸ்தத்த்திலும் வந்துவிட்டது. (காண்க – தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்)
குறள் 580-ல் நண்பர்களே விஷம் கொடுத்தாலும் அதை நண்பர்கள் மனம் வருந்தாமல் இருக்க குடிப்பது நாகரீகம் என்று வள்ளுவர் பாடுவது சிவபெருமானை அல்ல; சாக்ரடீஸையே என்று நான் எழுதியுள்ளேன்.
சாக்ரடீஸ் போதித்த ‘உன்னையே நீ அறிவாய்’ (Know thyself) என்ற ஆத்ம விசாரம், உபநிஷத் வாக்கியம் என்பதை உலகமே அறியும். மேலும் சாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், நண்பன் கிரிட்டோ(Creto) வை அழைத்து “ஏய் , ஆத்தாளுக்கு கோழியை பலி கொடுக்க மறந்துவிடாதே ; நான் ஆத்தாளுக்கு நேர்த்திக் கடன் செய்ய வேண்டியுள்ளேன்” என்று சொன்னதும் அவர் ஒரு பக்கா ஹிந்து என்பதைக் காட்டுகிறது.
இப்பொழுது அதர்வண வேதத்தைப் படித்துக் கொண்டு இருக்கிறேன். அதில் சூரியனுக்கும் கண்ணுக்கும் உள்ள தொடர்பு பற்றிய பாடலில் வெள்ளைக்காரன் Ralph T H Griffith கிரிப்பித் கூட சாக்ரடீசும் இதைச் சொல்லியுள்ளார் என்று அடிக்குறிப்பில் சொல்கிறார்.
இதோ அதர்வண வேத மந்திரமும் Griffith கிரிப்பித் விமர்சனமும்
காண்டம் 5; துதி 9 (சூக்தம் எண் 151)
மந்திரம் 7
“சூரியன் என் கண் ; காற்று என் பிராணன்; வானம் என் ஆத்மா; பூமி என் உடம்பு; எனக்கு வெல்லப்படாதவன் என்ற பெயர் உண்டு ; அப்படிப்பட்ட நான் என் ஆத்மாவை பாதுகாப்பதற்காக பூமிக்கும் வானத்துக்கும் அளிக்கிறேன்”.
நம்முடைய ஆராய்ச்சிக்கு தேவையான வரி “சூரியன் என் கண்”; இது பல இடங்களில் வேதங்களில் வருகிறது ; ரிக் வேத மந்திரங்களில் மிகவும் பிரசித்தமானது புருஷ சூக்தம் (10-90) இதை கோவிலில் அபிஷேக காலத்தில் சொல்லுவதால் எல்லோருக்கும் தெரிந்த மந்திரம். அதில் கடவுளின் கண்களில் இருந்து சூரியன் பிறந்ததாக வருகிறது. மேலும் இறுதிச் சடங்கு மந்திரம் (10-16-3) ஒன்றிலும் கண்களை சூரியன் எடுத்துக்கொள்ளட்டும் என்றும் வருகிறது . இது தவிர ஏனைய வேதங்களில் ‘’சூரியன்- கண்’ தொடர்பு காணக்கிடக்கிறது
கிரிப்பித் Griffith Footnote அடிக்குறிப்பு
சாக்ரடீஸ் கூறுகிறார்:எல்லா புலன்களுக்கும் கண்களையே நான் சூரிய ன் போல ஒளி உள்ளதாகக் கருதுவேன் :
இது அக்காலத்திலேயே பிளாட்டோ எழுதிய Republic ரிபப்ளிக் என்ற நூலில் உளது
அக்காலத்திலேயே, வேதங்கள் பல இடங்களில் கூறும் விஷயத்தை சாக்ரடீசும் குறிப்பிடுவது அவருக்கு இந்துமத கருத்துக்களைப் பரப்புவதில் இருந்த ஆர்வத்தைக் காட்டுகிறது.
1 day ago — 13 Jun 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. Tiru Valluvar , author of Tamil Veda Tirukkural, says that man becomes god in two …
18 Sept 2011 — Lord Shiva is one of the Hindu Trinity, a great god worshipped by millions of Hindus. Socrates was a great Greek philosopher who lived …
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேதம் உலகத்திலேயே பழைய புஸ்தகம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமேயில்லை. தள்ளிப்போன, உதவாக்கரை வெள்ளைக்கார சுள்ளான்களும் இப்போது கி .மு.2000-ஐ ஒட்டி என்று பேசத் துவங்கி விட்டனர். அப்பேற்பட்ட ரிக்வேதத்தில் கண் பற்றிய அதிசயமான விஷயங்களை எகிப்தியர்களும், கிரேக்கர்களும் ‘கள்ளக் காப்பி’ copy அடித்துப் பாடியுள்ளனர்.
நம்ம ஊரு வள்ளுவர் ‘எண்ணும் எழுத்தும் கண்’ என்றார் . ஆனால் ரிக் வேத முனிவர்களோ கண் என்பது சூரியன் என்கின்றனர். இதை உருவக ரீதியில் பார்த்தால் சரி என்போம். அதாவது கண்ணும் எல்லாவற்றையும் பார்க்கிறது. சூரியனும் எல்லாவற்றையும் பார்க்கிறான். கண்ணை மூடினால் இருள்; சூரியன் அஸ்தமித்தால் இருள். கண்ணில் எதையும் காண ஒளி அவசியம்; அதை இயற்கையாகவே உமிழ்ப்பவன் சூரியன்;
இரண்டும் கிட்டத்தட்ட ஒரே வடிவம் உடையவை . கண் இமைகளைப் பார்க்கையில் அது சூரிய கிரணங்கள்/ கதிர்கள் போலத் தோன்றுகின்றன என்றெல்லாம் சிலர் தத்துவ விளக்கம் சொல்லக்கூடும். ஆனால் இந்துக்கள் அதைவிட முன்னேறிச் சென்று அதிசயமாக சில விஷயங்களை இயம்புகின்றனர் .
Xxx
RV 10-90
எல்லா கோவில்களிலும், சம்பிரதாயங்களைப் பின்பற்றும் பிராமணர் வீடுகளிலும் தினமும் ஒலிக்கும் புகழ்பெற்ற புருஷ சூக்த மந்திரம் ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் உள்ளது (10-90).
இதில் ‘கண் என்பது சூரியனிடமிருந்து பிறந்தது’ என்றும் ‘மனம் என்பது சந்திரனுடன் தொடர்பு உடையது’ என்றும் ஒரு மந்திரம் வருகிறது.
“சந்திரமா மனஸோ ஜாதக; சக்ஷ்ஓர் ஸூர்யோ அஜாயத”
பிரபஞ்சம் முழுதும் வியாபித்துள்ள புருஷனிடமிருந்து (கடவுளிடமிருந்து) – “கண்களிலிருந்து சூரியன் வந்தது. அவனுடைய மனதிலிருந்து சந்திரன் பிறந்தது” என்பது இந்த வரியி ன் பொருள் .
இன்னொரு மந்திரத்தில் யமனுடைய மகன் ரிஷி தமனன் பாடுகிறார்:-
10-16-3
(இறந்த) உன்னுடைய கண் சூரியனுக்குச் செல்க ; மூச்சுக் காற்று, காற்றுடன் கலக்கட்டும்; நீ எவ்வளவு புண்ணியம் செய்தனையோ அதற்குத்தக பூமிக்கோ சொர்க்கத்துக்கோ செல்க;உன் கரும பலனுக்கு ஏற்ப தாவரமாகவோ நீர்வாழ் பிராணியாகவோ போ .
இதை மாணிக்க வாசகரும் திருவாசகத்தில் சிவபுராணத்தில் சொல்லிவிட்டார்.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் – 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
—சிவபுராணம் – திருவாசகம்
xxx
இந்துக்கள் சொன்ன 3 அதிசயங்கள்
மனது , கண் பற்றி விஞ்ஞானிகளுக்கும் இதுவரை தெரியாத மூன்று விஷயங்களை முதலில் காண்போம்.
1. சந்திரனையும் தாவரங்களையும் தொடர்புபடுத்தி இந்து மத நூல்கள் அனைத்தும் பேசுகின்றன. ஆனால் விஞ்ஞானிகள் இதுபற்றி ஒன்றுமே சொல்லவில்லை. சூரிய ஒளி மூலம் நடக்கும் போட்டோசிந்தசிஸ் photosynthesis என்னும் ஒளிச் சேர்க்கை மூலம் மட்டுமே தாவரங்கள் உணவு தயாரிக்கின்றன என்று மட்டும் சொல்கிறார்கள். ஆனால் ஒரு காலத்தில் நாம் சொன்ன உண்மையை அறிவியலும் ஒப்புக்கொள்ளும்.
.2.இரண்டாவது விஷயம் மனதுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பை ரிக்வேத மந்திரம் (10-90) வெளிப்படையாகவே பேசுகிறது. இதையும் விஞ்ஞானிகள் ஏற்பதில்லை. ஆயினும் கடல் பொங்கக் கூடிய அமாவாசை, பெளர்ணமி தினங்களில் பைத்தியங்களின் மனமும் கொந்தளிப்பதை மருத்துவ மனை ரிகார்டுகள்/ பதிவேடுகள் hospital records காட்டுகின்றன. பூமியில் 70 சதம் நீரால் மூடப்பட்டுள்ளது. மனித உடலிலும் 70 சதம் நீர் உள்ளது. ஆகையால் இப்படி ரத்தத்திலும் பாதிப்பு இருக்கலாமே என்பது நம்புவோர் வாதம்; ஆனால் அப்படியெல்லாம் நாங்கள் ஒன்றும் அந்த நாட்களில் மன நோயாளிகளுக்குக் கூடுதல் மருந்து கொடுக்கவில்லையே என்பது சைக்கியாட்ரிஸ்ட் PSYCHIATRISTS மருத்துவர்களின் பிடிவாதம் !
3.கண்ணுக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்பினை மேலே இரண்டு ரிக் வேத மந்திரங்களில் கண்டோம். இதையும் விஞ்ஞானிகள் ஏற்பதில்லை ; ஆனால் இக்கருத்து எகிப்து, கிரீஸ் வரை சென்றுவிட்டது.அவர்களும் இதைப் பாடி வைத்துள்ளனர் . இன்றும்கூட லட்சக் கணக்கானோர் அதிகாலையில் , குறிப்பாக R S S ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர், சூரிய நமஸ்காரம் செய்கின்றனர். ஜோதிடத்திலும் சூரியனே ஆரோக்கியகாரகன். கண்ணுக்கும் பகலவனுக்கும் உள்ள தொடர்பினை ஏற்காத விஞ்ஞானிகள், சூரிய ஒளியிடமிருந்து vitamin D வைட்டமின் டி கிடைக்கிறது என்று ஒப்புக்கொள்ளத் துவங்கியுள்ளனர். அத்தோடு மேலை நாடுகளில் சூரிய ஒளி குறைவானதால் இப்போது வைட்டமின் டி சாப்பிடுங்கள் என்று ஆலோசனை வழங்கத் துவங்கிவிட்டனர். வருங்காலத்தில் இந்துக்கள் சொன்னதை அவர்கள் 100 சதம் ஏற்பார்கள் என்பதில் ஐயப்பாட்டுக்கு இடமில்லை.
xxx
கிரீஸ்
கிரீஸ் எனப்படும் கிரேக்க Greece நாட்டில், எல்லா கலைகளும் நமக்கு பின்னர் தோன்றின. ஆனால் வெள்ளைக்கார சுள்ளான்களுக்கு இந்திய இலக்கியம் தெரியாது. ஆகையால் உலகத்திலுள்ள எல்லாவற்றுக்கும் கிரேக்க நாடுதான் ஆதாரம் என்று உளறிவிட்டார்கள். சாக்ரடீசும், அவர் சிஷ்யர் , பிளாட்டோவும், அவர் சிஷ்யர் அரிஸ்டாட்டிலும், அவர் சிஷ்யர் அலெக்ஸ்சாண்டரும் இந்து மத தத்துவங்களையே சொன்னார்கள் என்று கிரேக்கர்களே எழுதிவைத்துள்ளனர். இவர்களுக்கு எல்லாம் மூத்த பிதகோரஸ் Pythagoras Theorem தியரம் முதலியன இந்தியாவில் இருந்து சென்றதே. அவரும் ஒரு வெஜிட்டேரியன் என்றெல்லாம் இப்போது தெரிகிறது; சாக்ரடீஸ் விஷம் குடித்து சாவதற்கு முன்னர், கிரீட்டோ என்ற சிஷ்யனை அழைத்து ‘காளி ஆத்தாவுக்கு கோழி அடிச்சு கும்பிட மறந்துடாதே’ என்று சொல்லிட்டு செத்துப்போனார். அந்த அளவுக்கு இந்து மதத்தில் நம்பிக்கை.
ஒரு கிரேக்க புலவர் Theia தேவியை நோக்கி பாடுகிறார்
There is a Greek prayer referring to the goddess Theia in terms of sun:-
“Thou beam of the sun
Far seeing mother of the eyes”.
தேவி என்பதை அவர்கள் தெய்யா , தேவி , தெய்வி என்று அழைப்பர்
அம்மா நீயே சூரியனின் ஒளி
தொலை நோக்கு பார்வை உன்னுடையது.
பிராமணர்கள் தினமும் சொல்லும் காயத்ரீ மந்திரத்தில் இது உள்ளது. அதை விட அவர்கள் மூன்று நேரங்களிலும் சூரியனைப் பார்த்து சொல்லும் மந்திரங்கள் ஏராளம். என்ன அதிசயம்!! உலகில் உள்ள பழங்க்கால கடவுளர் எல்லாம் மியூசியக் கடவுளாகவும் படிம அச்சுக் கடவுளாகவும் Museum Gods and Fossil Gods போய்விட்டார்கள் ; பிராமணர்களும் காயத்ரீ சொல்லும் இந்துக்களும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கங்கை-சிந்து-சரஸ்வதி நதிக்கரையில் கற்ற மந்திரங்களை இன்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்! அதுவும் எழுத்தில் இல்லாமல் வாய் மொழியாகவே பரப்பி வருகிறார்கள்.
பின்வரும் மந்திரத்தை பார்ப்பனர்கள் தினமும் மதியவேளையில் சொல்லுவார்கள். அதுவும் சூரியனை இரண்டு கைகளின் விரல்களையும் கோர்த்து அதில் ஒரு இடைவெளி விட்டு அதன் வழியாக சூரியனைப் பார்த்துச் சொல்லுவார்கள். கடுமையான சூரிய ஒளி கண்களைப் பாதிக்கும் என்ற உண்மை, ஐயர்களுக்குத் தெரியும். அதனால் அவர்களாக கண்டுபிடித்த Hand Telescope கை டெலஸ்க்கோப் மூலம் பார்த்து இந்த மந்திரத்தைச் சொல்லுவார்கள்
பஸ்யேம சரதஸ் சதம்
ஜீவேம சரதஸ் சதம்
நந்தாம சரதஸ் சதம்
மோதாம சரதஸ் சதம்
பவாம சரதஸ் சதம்
ஸ்ருணவாம சரதஸ் சதம்
ப்ரப்ரவாம சரதஸ் சதம்
அஜீதாஸ்யாம சரதஸ் சதம்
பொருள்
சூரிய தேவனை நூறாண்டுக் காலம் காண்போமாக
(அவ்வாறே) நூறாண்டுக் காலம் வாழ்வோமாக
நூறாண்டுக் காலம் உற்றார் உறவினருன் கூடிக்குலவுவோமாக
நூறாண்டுக் காலம் மகிழ்வோமாக
நூறாண்டுக் காலம் புகழுடன் விளங்குவோமாக
நூறாண்டுக் காலம் இனியதைக் கேட்போமாக
நூறாண்டுக் காலம் இனியதைப் பேசுவோமாக
நூறாண்டுக் காலம் தீமைகளால் வெல்லப்படாமல் வாழ்வோமாக.
(இதை எல்லோருமே தினமும் சொல்லலாம் என்பது என் சொந்தக் கருத்து) .
இதிலும் முதல் மந்திரமே 100 ஆண்டுக் காலம் சூரியனைப் ‘பார்க்க’ வேண்டும் என்ற கருத்து வந்து விடுகிறது.
2400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க அறிஞர் சோபோக்ளீஸ் Sophocles எழுதிய நாடக ம் ‘ஈடிபஸ் கலோனஸ் ; Oedipus Colonus; அதில் அவரும் இதையே சொல்கிறார் ‘ உலகம் முழுதையும் பார்த்துக் கொண்டிருக்கும் சூரியதேவன் என்னைப் போலவே நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும் ‘
இதே போல அரிஸ்டோபனிஸ் Aristophanes என்ற அறிஞர் ‘உருண்டோடும் சூரிய தேவன் சக்கரம்’ பற்றி பேசுகிறார். சூரியனை ஒரு சக்கரமுடைய 7 குதிரை பூட்டிய ரதத்தில் செல்வதாகவே வேதங்களும் சங்கத் தமிழ் நூல்களும் பாடுகின்றன.
xxx
ரிக் வேதம் 10-37-1 மந்திரத்தைக் காண்போம்
சூரியனை நோக்கிச் சொல்லும் துதி இது .
“மித்திரனுக்கும் வருணனுக்கும் கண்களாகத் திகழும் தேவனுக்கு வணக்கத்தைத் தெரிவியுங்கள் .அவன் தொலை நோக்குடையோன். வானத்தில் கொடி (போலப் பட்டொளி வீசிப் பறக்கிறான்). அவன் தேவர்களிடையே பிறந்தவன். மகத்தான அந்த கடவுளுக்கு இந்த வேள்வியைப் படைப்போமாகுக. வானத்தின் மகனான சூரியனின் புகழ் பாடுவோம்”
இவ்வாறு துவங்கி இன்னும் 11 மந்திரங்களில் சூரியனைப் பாடிப் பரவுகின்றார் ரிஷி அபித பவன்
அதில் எட்டாவது மந்திரம் (10-37-8) – கடலின் மீது எழும் உன்னை நாங்கள் தினமும் கண்டு வாழ்த்த நீடுழிக் காலம் வாழ்வோமாகுக. நீதான் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறாய்
.xxxxx
எகிப்தில்
எகிப்தில் உட் ஜட் கண் Udjat Eye என்று அழைக்கும் தாயத்து உள்ளது. இதை அதிர்ஷடம் அளிக்கும் தாயத்தாகக் கருதி பழங்கால எகிப்தியர்கள் அணிந்தனர்.
ஹோரஸ் Horus என்பது சம்ஸ்க்ருத கருடன் என்பதன் மரூஉ இந்தக் கருடனுக்கும் சேத Seth என்னும் தேவதைக்கும் நடந்த சண்டை கருடர்- நா கர் சண்டையின் வேறு படைப்பாகும். இந்தக் கருடனின் கண்களை உட்ஜட் கண் என்று அழைப்பர். இதற்கு மூன்று குணங்கள் உண்டு ;
1.பாதுகாப்பு 2.குணப்படுத்தும் ஆற்றல் 3. பொதுவான ஆரோக்கியம்.
அதாவது நாம் கருட மந்திரம், கருடன் தாயத்து, கருடன் கிழங்கு ஆகியவற்றுக்கு என்ன என்ன எல்லாம் சொல்கிறோமோ அவை அனைத்தையும் உட்ஜட் கண் தாயத்தில் காணலாம். இவை அனைத்தும் வேத காலத்துக்குப் பின்னர் வளர்ந்த கதைகள். இந்துக்களைப் போலவே எகிப்திலும் நூற்றுக் கணக்கில் தெய்வங்கள் இருக்கின்றன. காலப்போக்கில் அவைகளைப்ப பற்றிய கதைகள் நம்முடைய 18 புராணங்கள் போல் வளர்ந்தன. நம்முடைய இலக்கிய அளவைப் பார்க்கையில் எகிப்தின் பழைய இலக்கியம் மிகக்குறைவு. அதில் மகா குழப்பம். காரணம் என்னவெனில் பல தெய்வங்களுக்குப் பல பகுதிகளில் பல கதைகள் உண்டு.
எகிப்தில் இந்த வளர்ச்சிக்கு மாக்ஸ் முல்லர் கும்பலும் திகிடுதத்த மார்க்சீய கும்பல்களும் இனவாதப் பூச்சு பூசவில்லை. ஆரிய-திராவிடம் பற்றி எதுவும் பேசவில்லை. இந்தியாவில் ஏதேனும் இரண்டு முரணான விஷயங்களைப் பார்த்தால் உடனே அதற்கு ஆரிய -திராவிட பிரிவினை முத்திரைகளைக் குத்தி விடுகின்றனர் . சிந்து சமவெளி முத்திரைகளைத் தோண்டி எடுத்த மார்ஷல், மகே , மார் டிமர் வீலர் போன்றோர் ஆரம்பத்தில் இருந்தே இந்த அயோக்கியத் தனத்தில் இறங்கியதால் இன்றுவரை சிந்துவெளி முத்திரைகளைப் படிக்க முடியவில்லை உட் ஜட் கண்பற்றிய கதைகளிலும் இது போல குழப்பம் உள்ளது. காலப்போக்கில் எந்த ஒரு விஷயத்துக்கும் பத்து, பதினைந்து விளக்கங்கள் சொல்ல முடியும். திருக்குறளுக்கே நாம் பத்து உரைகள் கண்டோம். ஏன் ? கருத்து சுதந்திரம். ஆயினும் உரை எழுதியோர் பாரதீய மரபுகளை மீறாமல் எழுதினார்கள்,; நேற்று வந்த வெள்ளை-சிவப்பு விஷமிகள் விஷம் கக்கி வைத்துள்ளனர். அவற்றை அகற்றுவது நம் கடமை..
சுவாமி விவேகானந்தர் சொன்னது போல, இந்து மஹா சமுத்திரத்தின் அடியிலுள்ள அத்தனை சக்தியையும் இவர்கள் மீது வீசி எறிந்தாலும் அது சரியான, உரிய தணடனை ஆகாது. பாரதியார் சொன்னது போல ‘ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி’யில் எழுதப்பட்ட விஷமத்தை , விஷத்தை அகற்ற வேண்டும்
–சுபம்–
tags-
உட்ஜட் கண், எகிப்து, கிரேக்கம், ரிக் வேதம், கண், மந்திரம் , பஸ்யேம
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
வள்ளுவன் பாடிய முப்பாலில், அதாவது தமிழ் வேதமான திருக்குறளில், கடைசி பாலான காமத்துப் பாலை மொழிபெயர்க்க கிறிஸ்தவ பாதிரிகள் மறுத்து விட்டனர். இதென்னடா! அபசாரம், அபசாரம்; ஹராம், ஹராம்! இதெல்லாம் மக்களுக்குச் சொல்லக் கூடாது என்று மறைத்து விட்டனர். இதெல்லாம் சுமார் 100 அல்லது 150 ஆண்டுகளுக்கு முன்னர். ஆனால் இந்துக்களோவெனில் வேத காலம் முதல் ‘செக்ஸ்’ SEX உவமைகளை, சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தியுள்ளனர். ரிக் வேதத்தில் உள்ள சில மந்திரங்களை மிகவும் செக்ஸியானது SEXY– குறிப்பாக பிராமண நூல்களில் உள்ள சில விஷயங்கள் “அசிங்கமானவை” என்று வெள்ளைக்காரர்கள் மொழிபெயர்க்காமல் விட்டதை பழைய புத்தகங்களைப் படிப்போர் அறிவர்.
உலகில் இந்துக்கள் எல்லா விஷயங்களிலும் முதன்மை என்பதைப் பல கட்டுரைகளில் காட்டியுள்ளேன். அது போல காம நூல் விஷயத்திலும் 2000 ஆண்டுக்கு முன்னர் வாத்ஸ்யாயனர் எழுதிய காமசாஸ்திரம்தான் அவ்வகையில் முதன்மையானது.
இதோ வள்ளுவன் குறளும் ஒரு ஆங்கில சம்பவமும்:
வள்ளுவன் அதிசயப் படுகிறான் ‘ஏ பெண்ணே! நான் இப்படி ஒரு தீயைக் கண்டதே இல்லை. நீ அருகில் வந்தால் குளிர்ச்சியாக இருக்கிறது. தூரத்தில் போய்விட்டாலோ உடம்பே உன்னை நினைத்து நினைத்து பற்றி எரிகிறது (காமத் தீயால்)’ என்கிறான்.
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள் ( குறள் 1104)
பொருள்
இவளை விட்டு நீங்கினால் சுடுகிறது; அருகில் வந்தால்
குளிர்கிறது: இந்த புதுவகைத் தீயை இவள் எங்கிருந்து பெற்றாள்?
கண்களில் தீ
இங்கிலாந்தில் டெவன்ஷைர் என்னும் பகுதியின் பிரபுவுடைய மனைவி (Duchess of Devonshire) பேரழகி. ஒரு நாள் அவள் தான் சென்ற வாஹனத்தில் இருந்து இறங்கினாள். அந்த நேரம் பார்த்து குப்பை வண்டிக்காரன் (Dustman) தெருவிலுள்ள குப்பைகளை அள்ள நின்று கொண்டிருந்தான்; வழக்கம்போல சிகரெட்டைப் பற்ற வைப்பதற்காக தீப்பெட்டியை எடுக்கத் திரும்பினான்.
அந்த நேரத்தில் அவன் இந்த பேரழகியைக் கண்டான். அவனோ குப்பை அள்ளுபவன்; இவளோ பிரபுவின் மனைவி. I Love You ‘ஐ லவ் யூ’ என்றா சொல்ல முடியும்?
அவன் சொன்னான்,
“அடக் கடவுளே! எத்தனை அழகு! கடவுள் காப்பாற்றட்டும்; கொஞ்சம் நில்லுங்கள்; கண்களில் இருந்து சிகரெட்டுக்கு நெருப்பு மட்டும் எடுத்துக் கொள்கிறேன்!”
அவள் கண்களில் அத்தனை ஒளியாம்; இதைக் கேட்டதி ,,,ருந்து இந்தச் சொற்கள் அவள் காதில் ரீங்காரம் செய்துகொண்டே இருந்தது. யார் அவளை என்ன புகழ்ந்தாலும் அவளுக்கு ருசிக்கவில்லை; “இதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அந்தக் குப்பைக்காரன் நெஞ்சைத் திறந்து சொன்னானே அதுதான் உண்மையான வருணனை” என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.
xxxx
ஆண்களின் புகழ்ச்சிக்கு பெண்கள் அடிமை!
பிரெஞ்சு மொழியில் கதைகள் எழுதும் ஆசிரியரும் மூன்று கல்விக் கழகங்களின் தலைவருமான ஃபாண்டநெல் (Fontenelle), ஒரு அழகியை எப்பொழுதும் புகழ்ந்து கொண்டே இருப்பார். அந்த அழகியும் , அவருடைய காதல் மொழிகளை ரசித்துக் கேட்பாள்.
ஃபாண்டநெல்லுக்கு வயது 97; ஒரு நாள் ஒரு பொது இடத்தில் வேகமாகச் சென்று — அதாவது அழகியையும் பார்க்காமல்– வேறொரு இடத்தில் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தார்.
இந்த அழகிக்குக் கோபம் வந்துவிட்டது; “அடச்சீ! இவ்வளவுதானா? உங்கள் காதல் வசனங்கள். பாராமுகமாகப் போகிறீர்களே? இதற்கு என்ன அர்த்தமாம்! என்றாள்
அவர் சொன்னார், “அன்பே உண்மைதான்; உன்னைப் பார்த்துவிட்டால் — பார்த்திருந்தால் அச்சுப்போல நின்றிருப்பேனே! நகரவா முடியும்?” – என்றார்.
அந்தப் பெண்ணும் உச்சிகுளிர்ந்து போய் அப்படியே சிலை போல நின்றுவிட்டாள்.
ஆப்ரஹாம் லிங்கனுக்கு குழந்தைகள் மீது அலாதிப் பிரியம்; இதை ஊரே அறியும்; ஆகையால் பலரும் வாய்ப்புக் கிடைத்தால் குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்வர்.
ஆப்ரஹாம் லிங்கன், குணத்தில் உயர் குன்று; அழகிலோ சிறு மணல் மேடு.
இதுபற்றி வீட்டில் அங்க்கலாய்க்கும் ஒருவர் தனது மகளை–பள்ளிக்கூடச் சிறுமியை– ஆப்ரஹாம் லிங்கனைக் காண அழைத்துச் சென்றார்.
லிங்கனும் அந்தச் சிறுமியை மடியில் வைத்துக் கொண்டு, ஒரு தந்தை கொஞ்சுவது போலக் கொஞ்சிப் பேசினார். அவள் லிங்கனின் முகத்தைப் பார்த்து விட்டு படீரெனச் சொன்னாள்:
அப்பா! ஆப்ரஹாம் லிங்கன் ஒன்றும் அவலட்சணமாக இல்லையே!
பிறகு என்ன? திருடனுக்குத் தேள் கொட்டிய கதைதான்; சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது.
xxxx
டேய்!போண்டா மூக்கு!
ஒருவருக்கு அதி பயங்கர கோபம்! அவர் மூக்கினை யாரோ நக்கல் அடித்தாராம்.
அந்த ஆளும் எதிரில் தென்பாட்டான்.
“ஏய் என்ன தைரியம் உனக்கு; நான் இல்லாதபோது என்னை ‘போண்டா’ மூக்கன் என்று கிண்டல் செய்தாயாமே!
நானா! அப்படிச் சொல்லவே இல்லையே! ஆனால்………….. ஆனால்………… இப்பொழுது உங்கள் மூக்கைப் பார்த்தால், உண்மையில் அது ‘போண்டா’ மூக்குதான்! என்றான்.
பின்னர் நடந்ததை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்!!!
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பதிலிருந்தும், குழந்தைகள்ளைக் “கண்ணே! கண்மணியே!” என்று கொஞ்சுவதிலிருந்தும் கண்ணின் முக்கியத்துவத்தைத் த்மிழர்கள் நன்கு அறிவர். வள்ளுவன் என்ன சலைளைத்தவனா?
கல்லாதவர் அனைவரும் குருடர்களுக்குச் சமம் என்று சொல்லிக் கல்வி அறிவைக் கண்ணுக்கு நிகராக்கினார்:
கண்ணுடையவர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாதவர் (குறள் 393)
திருக்குறளிலும் சங்க இலக்கியத்திலும் ஏராளமான இடங்களில் கண் என்ற சொல் கையாளப்பட்டாலும் பெரும்பாலும் பெண்களின் கண், பார்வை என்று காமப் பகுதிப் பாடல்களில் போய்விடுகின்றன.
காளிதாசனின் சில அருமையான கண் உவமைகளைப் பார்ப்போம்:-
சிவனை நோக்கி பார்வதி கடுமையான தவம் நோற்கிறாள். அதை குமார சம்பவத்தில் வருணிக்கும் காளிதாசன் சொல்கிறான்:-
இரவும் பகலும் பாராது பாறை மீது நின்று, பார்வதி தவம் செய்கிறாள்; அப்பொழுது மின்னல் ‘பளிச் பளிச்’ என்று அடிக்கிறது. அது பார்வதியின் தவத்தைப் பார்க்க விண்ணுலகமே கண் திறந்து பார்ப்பது போல இருந்ததாம். இயற்கையில் நடக்கும் மின்னல் வெட்டை காளிதாசன் அழகாகப் பயன்படுத்தும் போது அவள் இரவு பகல் பாராது, இடி மின்னல் பாராது கடும் தவம் இயற்றிய காட்சி நம் கண்ணுக்கு முன்னே வந்துவிடுகிறது!
இன்னொரு இடத்தில் இரவு நேரத்தில் இதழ் மூடிய தாமரையைநிலவின் கண் என்றும் அவை இரவு நேரத்தை முத்தமிடுகின்றன என்றும் வருணிக்கிறான். இரவு என்னும் காதலியை நிலவு என்னும் காதலன் முத்தமிடுகிறான் என்று சொல்லுவதோடு மேலும் சில காட்சிகளையும் புகுத்துகிறான். நிலவின் கிரணங்கள் இருளில் ஊடுருவிப் பாய்ந்தது, பெண்ணின் தலை முடியைக் கோதி விடுவது போலும் அங்கே இருந்த இதழ் மூடிய தாமரை, இக்காட்சியைக் கண்டு ரசிக்கும் கண் என்றும் சொல்லுவான்.
மேகமே! நீ செல்லும் வழியில் கம்பீரா என்ற நதி வரும். அவள் உன் காதலி. அவளிடம் ஜம்பத்தைக் காட்டாதே. அவள் காதலை பகிரங்கமாக புலப்படுத்த மாட்டாள். ஆனால் அதில் துள்ளி ஓடும் சபரம் என்ற வெள்ளி நிற மீன்கள்தான் அவளுடைய கண்கள். அவற்றின் மூலம் உன்னைப் பார்ப்பாள்; அவள் மிகவும் தெளிவான நதி. ஆகையால் நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உன் நிழல் அந்த நதியில் விழும். அத்ன் மூலம் நீ அவள் மனதை ஊடுருவிச் செல்லலாம். வாய்ப்பை நழுவ விடாதே (மேகதூதம் 40)