
Post No. 9528
Date uploaded in London – – –25 APRIL 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நாக்கே செல்வத்தைத் தரும் அல்லது சிறைக்கும் இட்டுச் செல்லும்!
ச.நாகராஜன்

லக்ஷ்மீர்வஸதி ஜிஹ்வாக்ரே ஜிஹ்வாக்ரே மித்ரபாந்தவா: |
ஜிஹ்வாஹ்ரே பந்தனம் ப்ராப்தம் ஜிஹ்வாக்ரே மரணம் த்ருவம் |
உனது நாக்கு நுனியில் தான் லக்ஷ்மி வசிக்கிறாள். உனது நாக்கு நுனியில் தான் நண்பர்களும் உறவினர்களும் உள்ளனர் – (இனிமையான வார்த்தைகளைப் பேசும் போது!) அதே நாக்கு தான் உன்னைச் சிறைக்கும் கொண்டு செல்லும், ஏன் மரணத்திற்கே கூட இட்டுச் செல்லும் கடினமான வார்த்தைகளைப் பேசினால்!
At the tip of your tongue reside riches and also friends and relatives (when it utters sweet words). The same tongue can lead to prison or even death if it utters harsh words.
Translation by : Kalyana- Kalpataru August 2017 issue
*
சர்வநாஷே சமுத்பன்னே ஹ்ரார்தம் த்யஜதி பண்டித: |
அர்தேன குருதே கார்யம் சர்வநாஷோ ந ஜாயதே ||
சர்வ நாசம் ஏற்படும் ஒரு நிலையில் புத்திசாலியானவன் பாதி நாசமடைவதை தன் விருப்பத்துடனேயே அனுமதிக்கிறான். இப்படியாக, மீதி இருக்கும் பாதியுடன் சர்வ நாசத்திலிருந்து அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறான்.
When a situation arises of total ruination, a wise person willfully allows destruction of half. Thus, he is able to pull along with remaining half and saves himself from total ruination.
Translation by : Kalyana- Kalpataru September 2017 issue
*
லுப்தமர்தேன க்ருஹ்னியாத்க்ருத்தமஞ்ஜலிகர்மணா |
மூர்கம் சந்தானுவ்ருத்தயா ச தத்த்வார்தேன ச பண்டிதம் ||
பேராசை பிடித்த ஒருவனை புத்திசாலியானவன் பணத்தைக் கொடுத்து வெல்ல வேண்டும். கோபம் கொண்டவனையோ உடனடி சரணாகதி மூலம் வெற்றி பெற வேண்டும். முட்டாளையோ அவன் சொன்னதை ஆமோதித்து வெல்ல வேண்டும். பண்டிதனான ஒருவனையோ தத்வார்த்தம் (உண்மையைச்) சொல்லி வெல்ல வேண்டும்.
*
A wise man should win over a greedy person by offering money, an angry person by instant surrendering, a fooling person by supporting his viewpoint and a learned by merely stating truth.
Translation by : Kalyana- Kalpataru November 2017 issue
தூரஸ்தம் ஜலமத்யஸ்தம் தாவந்தம் தனகார்விதம் |
க்ரோதவந்தம் மதோன்மத்தம் நமஸ்காரேபி வர்ஜயேத் |
தூரத்தில் நின்று கொண்டிருக்கும் ஒருவனுக்கோ அல்லது ஆற்றில் இருக்கும் ஒருவனுக்கோ அல்லது ஓடிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கோ அல்லது கோபத்துடன் இருக்கும் ஒருவனுக்கோ அல்லது தனது செல்வாக்கினால் கர்வம் பிடித்த ஒருவனுக்கோ நமஸ்காரம் செய்யக் கூடாது.
One should avoid doing pleasantries to a person standing far away or in a river or who is running or is proud of his own affluence or full of anger and pride.
Translation by : Kalyana- Kalpataru December 2017 issue
*
சலம் சித்தம் சலம் பித்தம் சலே ஜீவிதயௌவநே |
சலாசலமிதம் சர்வம் கீர்திர்யஸ்ய ச ஜீவதி ||
மனம் சஞ்சலமானது. செல்வம் மாறும் இயல்புடையது, நிலையற்றது. அதே போலத் தான் ஜீவிதமும் (வாழ்க்கையும்), இளமையும் கூட! சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்த உலகில் அனைத்துமே நிலையற்றவை தாம்! ஆனால் எவன் ஒருவன் தனது புண்ணியச் செயல்களால் அழியாத கீர்த்தியைப் பெறுகிறானோ அவனே நிலையாக வாழ்பவன் ஆவான்.
The mind is fickle, wealth is transient and so is life as well as youth: in short, all in the world is transitory, but he only lives for ever who has earned everlasting fame through his meritorious deeds.
Translation by : Kalyana- Kalpataru August 2018 issue

***
tags- நாக்கு , லக்ஷ்மி , சிறை