கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவுகள் திருக்குறளைப் படிக்கலாமா? – 2 (Post.9434)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9434

Date uploaded in London – –  29 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவுகள் திருக்குறளைப் படிக்கலாமா? – 2

ச.நாகராஜன்

திரு எனப்படும் லக்ஷ்மி தேவி

குறள் எண்கள் 179, 519, 617, 920

அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்ச் செரும்

திறன் அறிந்தாங்கே திரு   (குறள் 179)

அற நெறி இதுவே என்று அறிந்து பிறர் பொருளை கவர நினைக்காதவர்களிடம் தானே சென்று சேர்வாள் திரு என்னும் லக்ஷ்மி தேவி.

வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக

நினைப்பானை நீங்கும் திரு  (குறள் 519)

தான் மேற்கொண்ட வினையைக் கண்ணும் கருத்துமாகச் செய்யும் ஒருவனது நட்பை மதிக்காது வெறு விதமாக நினைக்கும் தலைவனை விட்டுத் தாமாகவே திருமகள் நீங்கி விடுவாள்.

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளாள் தாமரையினாள்  (குறள் 617)

தாமரையினாள் என்று அழகுற திருமகளைக் குறிக்கிறார் வள்ளுவர். அவளது அக்காவான முகடி என்னும் மூதேவியையும் இக்குறளில் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

ஒருவனது சோம்பலிலே தான் மூதேவி (மாமுகடி – கரிய மூதேவி) வாழ்கிறாள். முயற்சி உடையவனிடத்தில் தாமரை உறையும் திருமகள் வாழ்கிறாள்.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திரு நீக்கப் பட்டார் தொடர்பு (குறள் 920)

இருமனப் பெண்டிர் என்றால்  பொது மகளிர் – வேசிகள்!  பொது மகளிர், கள், சூது ஆகிய இந்த  மூன்றும் திருமகளால் கைவிடப்பட்டாரின்  தொடர்பு ஆகும்.

மூதேவி

குறள் எண்கள் 617, 936

குறள் 617ஐ மேலே கண்டோம்.

அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூதென்னும்

முகடியால்  மூடப் பட்டார்

சூது என்னும் மூதேவியால் விழுங்கப்பட்டவர்கள் வயிறு நிறைய உண்ண உணவு இல்லாமல் பல வகைத் துன்பம் அடைந்து வருந்துவர்.

செய்யவளும் தவ்வையும்!

லக்ஷ்மி தேவியியும் மூதேவியையும் சேர்த்து இன்னொரு குறளிலும் வள்ளுவர் குறிப்பிடுகிறார். குறள் எண் 167இல் திருமகளை செய்யவன் என்றும் மூதேவியை திருமகளின் அக்கா எனப் பொருள்படும் தவ்வை என்ற சொல்லாலும் குறிப்பிடுகிறார். இங்கு வள்ளுவரின் நகைச்சுவையையும் நாம் காண்கிறோம். தான் வராமல் தன் அக்காளுக்கு வழி விடுகிறாளாம் இலக்குமி!

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்.

பொறாமை கொண்ட ஒருவனைத் திருமகளுக்குப் பிடிக்காது. அவள் தனது அக்கா மூதேவியைக் (தவ்வையை) காட்டி விட்டு விலகி விடுவாள்.

இப்படி பல்வேறு குறள்களில் லக்ஷ்மியையும் மூதேவியையும் வள்ளுவர் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

யமன்

குறள் எண்கள் 269, 326, 765, 1083, 1085

யமனை மிகத் தெளிவாகக் கூற்றம் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட்டவர்க்கு   (குறள் 269)

தவ வலிமை பெற்றவருக்கு எமனிடமிருந்து தப்புதலும் கை கூடும்.

உதாரணம் : மார்க்கண்டேயன் கதை

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான்  வாழ்நாள் மேல்

செல்லாது உயிர் உண்ணும் கூற்று  (குறள் 326)

உயிரை உண்ணுபவன் எமன் (கூற்று). கொல்லாமை என்ற பெரும் நோன்பினை மேற்கொண்டவர் மீது அவர் தம் வாழ்நாளை உயிரைக் கவரும்

எமன் கவர்ந்து செல்ல மாட்டான்.

கூற்றுடன் மேல் வரினும் கூடி எதிர் நிற்கும்

ஆற்றல் அதுவே படை    (குறள் 765)

படையின் இலக்கணம் பற்றிச் சொல்லப் புகுந்த வள்ளுவர் எமனே சினந்து வந்து எதிர் நிற்பினும் பயப்படாமல் எதிர் கொள்ளும் ஆற்றல் கொண்டதே படை என்று படைக்கான இலக்கணத்தைக் கூறுகிறார்.

அடுத்து இன்ப இயல் பேச வந்த வள்ளுவர் பிரான் காமத்துப் பாலில் இரு குறள்களில் எமனைக் குறிப்பிடுகிறார்.

பண்டறியேன் கூற்றென்பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கெட்டு (குறள் 1083)

முன்னால் எமனைப் பற்றிச் சொன்ன போதெல்லாம் அவன் யார் என்று அறிய மாட்டேன், அடடா, இப்போது இதோ அறிந்து கொண்டேன், என் முன்னால் நிற்கும் இந்தப் பெண் தகையின்

பொருத்தமான கண்களைக் கண்டு! அவள் பார்வையால் வீழ்ந்தேன் என்கிறான் தலைவன்.

தகை என்பதால் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களை உடைய மங்கைநல்லாள் என்கிறார் வள்ளுவர்.

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கம் இம் மூன்றும் உடைத்து   (குறள் 1085)

உயிர் உண்ண வரும் கூற்றமோ – எமன் தானோ?

கூர்மையாகப் பார்ப்பதால் கண்களோ?

மருண்டு பார்ப்பதால் மான் பிணை தானோ?

இந்த மூன்றின் தன்மையையும் இந்தப் பெண்ணின் கண்கள் கொண்டிருக்கின்றனவே!

இப்படி இந்து மத புராண இதிஹாஸங்கள் கூறும் தெய்வங்களைச் சிறப்புற அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பாலிலும் கையாள்வதோடு கடவுள் வாழ்த்தை முகப்பு அதிகாரமாக வைத்துள்ளார் தெய்வப் புலவர் வள்ளுவர்.

இப்போது சொல்லுங்கள், கடவுள் இல்லை என்று சொல்வோருக்கு திருவள்ளுவரின் திருக்குறள் பற்றிப் பேச உரிமை இல்லை அல்லவா!

கடவுளை ஒப்புக் கொண்டால் மட்டுமே ‘அகர முதல என்று ஆரம்பித்து  வள்ளுவரைப் பயில ஆரம்பிக்கலாம். இல்லையேல் ஆத்திகவாதிகளிடம் வள்ளுவரை பத்திரமாக விட்டு விட்டு பகுத்தறிவுகள் செல்லலாம்!

                         ***                     முற்றும்

tags–கடவுள் இல்லை,  திருக்குறள்,     பகுத்தறிவு,

பகுத்தறிவாளர்களுக்கு சவால்! (Post No.3966)

Written by S NAGARAJAN

 

Date: 3 June 2017

 

Time uploaded in London:-  6-29  am

 

 

Post No.3966

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

திருக்குறள் மர்மம்

பகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள்பாக்கள்!

 

ச.நாகராஜன்

 

 

வள்ளுவர் தமிழ் சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கையாளும் மஹாகவி. மஹரிஷி.

 

அவரது குறளில் பகுத்தறிவு என்ற ஒரு அறிவைப் பற்றிச் சொல்லவே இல்லை.

பகுத்து என்ற வார்த்தை,

 

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (குறள் 322)

 

என்ற ஒரே ஒரு குறளில் மட்டுமே வருகிறது. பகுத்து உண் என்பதில் மட்டுமே பகுத்து என்ற வார்த்தை வருகிறது.

பகுத்தறிவு என்பதைச் சொல்லாத வள்ளுவர் அறிவை அற்புதமாக மூன்று விதமாகச் சுட்டிக் காட்டுகிறார்.

கார் அறிவு (குறள் 287)

களவென்னும் காரறிவாண்மை அளவென்னும்

ஆற்றல் புரிந்தார் கண் இல்

 

இங்கு கார் அறிவு என்பது குறுமதி அல்லது இருண்ட அறிவு என்பதைக் குறிப்பிடுகிறது.

ஆக அறிவில் கீழ்த்தரமான கீழ் மக்களது அறிவு கார் அறிவு.

அடுத்து பேரறிவு (குறள் 215)

 

ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்

பேரறிவாளன் திரு

 

பொது சேவையில் ஈடுபடும் ஒருவனது பேரறிவை இக்குறள் சுட்டிக் காட்டுகிறது.

 

ஆக கார் அறிவு மற்றும் பேரறிவைச் சொல்லிய வள்ளுவர் இன்னொரு அறிவைச் சொல்கிறார்.

வால் அறிவு (குறள் 2)

 

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

 

வால் அறிவு இறைவனது அறிவு. தூய அறிவு.

ஆக இப்படி கார் அறிவு, பேரறிவு, வாலறிவு ஆக மூன்று விதமாக நுண்ணறிவைப் பிரிக்கிறார் வள்ளுவர்.

பகுத்தறிவாளர்கள் என்ற ஒரு புது வித இனத்தைச் சேர்ந்தவர்கள் வள்ளுவரைப் படிக்க ஆர்வப்படலாமா?

 

பகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள்கள் ஏராளமாக திருக்குறளில் உள்ளன.

 

எடுத்துக்காட்டிற்காக சில குறள்களை மட்டும் கீழே காணலாம்:

  • தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

தெய்வத்தைத் தொழாமல் தன் கணவனைத் தொழுது எழுகின்ற ஒரு பெண் பெய் என்றால் மழை பெய்யும்.

கேள்வி: பெண்ணியத்திற்குத் துணை போகும் ஒருவரா வள்ளுவர். அது எப்படி பெய் என்று ஒரு பெண்மணி சொன்னால் மழை பெய்யும்? உலகத்தில் வாழ்கின்ற தாய்க்குலத்தில் பத்தினிகளே இல்லையா? யாருமே பெய் என்று சொல்லி மழை பெய்ததைப் பார்க்க முடியவில்லையே!

  • வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீ ர் என்று (குறள் 1317)

3) தும்முச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்

எம்மை மறைத்தீரோ என்று (குறள் 1318)

 

தும்மல் என்பது இயற்கையில் மனிதருக்கு ஏற்படும் ஒன்று. இதற்கும் காதலி நினைப்பதற்கு என்ன, ஐயா சம்பந்தம்? காதலனை நோக்கிக் காதலி யாரை நினைத்து தும்மினாய் என்று கேட்பது பகுத்தறிவுக்கு ஒத்ததா?

 

  • அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொற்த்தானோடு ஊர்ந்தான் இடை (குறள் 37)

சிவிகையை ஒருவன் சுமக்கிறான். அதனுள் ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். ஆயிரக்கணக்கில் கார்கள் போகின்றன. டிரைவர் ஓட்டுகிறார். முதலாளி அமர்கிறான்.

இது உலகியல்பு. இதையும் வினையையும் எப்படி முடிச்சு போடலாம். எங்கள் பகுத்தறிவுக்கு இது ஒத்ததல்ல.

  • மலர்மிசை மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார் (குறள் 3) நீண்ட ஆயுளுக்கும் இறைவனுக்கும் என்ன சம்ப்ந்தம்?
  • கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும் (குறள் 260)

கொலை செய்யப்பட உள்ள உயிர் வேண்டுமானால் ஒரு வேளை மனதிற்குள் தப்பித்தேன் என்று நினைக்கலாம். ஆனால் எல்லா உயிரும் எப்படித் தொழும்?

  • மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை

எந்நோற்றான் கொல் எனும் சொல்

தந்தை நோன்புக்கும் மகனுக்கும் என்ன தொடர்பு? அவனவன் வாய்ப்பு, அறிவு, பணம் போன்றவற்றிற்குத் தக முன்னேறுகிறான். தந்தை உதவி செய்யாவிட்டாலும் கூட பலர் முன்னேறவில்லையா, என்ன?

  • ஊழிற் பெருவலி யா உள? மற்றொன்று

சூழினும் தான் முந்துறும் (குறள் 380)

விதி எப்படியும் தான் செய்வதைச் செய்தே தீரும் என்பது பொருந்தாத ஒன்று.

விதியின் மீதே பகுத்தறிவாளருக்கு நம்பிக்கை இல்லை. ஆக வள்ளுவரின் இந்தக் குறள் பகுத்தறிவுக்குப் பொருந்துமா?

  • ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து (குறள் 398)

இந்தப் பிறவியில் தான் கற்ற கல்வி ஒருவனுக்கு ஏழு பிறவிகளில் பயன் தரும்.

மனிதனுக்கு ஒரு பிறவி மட்டுமே உண்டு. அதில் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க வேண்டியது தான். எங்கிருந்து வந்தது ஏழு பிறவி? இது இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தாதே. அவர்கள் ஒரு பிறவி நம்பிக்கை உடையவர்கள் அல்லவா? ஹிந்துக்கள், புத்த மதத்தினர், ஜைன மதத்தினருக்கு மட்டுமே இது பொருந்தும்.

 

 

இப்படிப் பல குறள்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஐயன் வள்ளுவனுக்கு விழா எடுப்பதாகச் சொல்லிக் கொண்டு தனக்கு விழாவைத் தவறாமல் எடுத்துக் கொள்ளும் பகுத்தறிவுத் தலைவருக்கும் அவரது அன்புத் தம்பிகளுக்கும் இந்த வள்ளுவர் சரிப்பட்டு வருவாரா?

ஒன்று தங்கத் தம்பிகள் தவறாக வழி சொல்லும் தலைவனைக் கைவிட வேண்டும். அல்லது வள்ளுவரைக் கைவிட வேண்டும்.

 

 

சற்று சிந்தித்தால் ஒரே ஒரு விஷயம் புலப்படும்.

வள்ளுவரின் குறள்கள் ஆழ்ந்த தத்துவங்களின் அடிப்படையில் எழுந்தவை. காலம் காலமாக நிற்பவை. காலத்தை வென்றும் நிலைப்பவை.

 

எளிதில் மேலெழுந்தவாரியாகச் சொல்லப்படும் பொருளுக்கும் அப்பாற்பட்டு ஆழ்ந்த உட்கருத்தைக் கொண்டவை.

 

அதனால் தான் வேதங்களுக்குச் சொல்லப்படும் புகழ்மொழியான மறை என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது தமிழில் இருப்பதால் தமிழ் மறை.

 

 

அதி மானுடவியல் என்னும் சைக்கிக், அதற்கும அப்பாற்ப்ட்ட வால் அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே இவற்றின் உட்பொருளை ஒருவர் அறிய முடியும்.

புண்ணிய பாவங்கள் பிறப்பைத் தரும்.

 

அதற்கேற்ப இன்றைய வாழ்வு அமையும்.

நல்லதைச் செய்து நல்ல பிறவியை எடு.

பின்னர் பிறவிச் சுழலிலிருந்து இறைவனை வேண்டி அவன் அருள் பெற்று விடுபடு.

 

கற்பில் சிறந்தவள் கடவுளே. அவள் ஆணைக்கு பஞ்ச பூதங்களும் அடி பணியும்.

 

நோன்பு அல்லது தவம் செய்தால் நன் மக்களைப் பெறலாம்.

எண்ணம் என்பது சக்தி வாய்ந்தது. ஒருவர் நினைக்கும் போது அதே லயத்தைக் கொண்டவர்க்கு எண்ண சக்தியின் ஓட்டம் தெரியும்.

 

இப்படி அதிமானுடவியல், ஹிந்து தத்துவம், சாஸ்திரங்கள் அல்லது அறநூல்களின் அடிப்படையில் மட்டுமே வள்ளுவரைப் புரிந்து கொள்ள முடியும்.

இன்றைய பகுத்தறிவின் அடிப்படைக்கு அப்பாற்பட்டவர் வள்ளுவர்.

 

 

தமிழ் மக்கள் செய்த தவத்தால் வந்தவர் வள்ளுவ.ர்

கார் அறிவை (இன்றைய பகுத்தறிவு) விட்டு விட்டு பேரறிவை ஈட்டி, அடைந்து, வாலறிவனை அறியும் முயற்சியில் ஈடுபடும் போது வள்ளுவம் புரியும்; வாழ்க்கையும் சிறக்கும்!

****

 

 

 

 

சூரிய கிரகணம் தந்த அறிவியல் வெற்றிகள்! (Post No.2679)

china-sequence_1559762b

Written by S NAGARAJAN

Date: 31 March 2016

 

Post No. 2679

 

Time uploaded in London :–  6-09 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாக்யா 1-4-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

சூரிய கிரகணம் தந்த அறிவியல் வெற்றிகள்!

 

ச.நாகராஜன்

 

(This article is written for Bhagya Magazineby my brother S NAGARAJAN- londonswaminathan)

 eclipse solar

“கிரகணத்தின்போது சூரியனைப் பார்க்காமல் இருப்பது நல்லது”. – ஜெஃப் கோல்ட்ப்ளம்

 

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து சூரிய ஒளி மறைக்கப்படுவதை சூரிய கிரகணம் என்கிறோம். 2016ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 9ஆம் தேதி இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இதை ஒரு சில பகுதிகளில் மட்டுமே பார்க்க முடிந்தது.

 

 

சூரிய கிரகணம் பற்றி அறிவியலும் ஆன்மீகமும் ஒரு சேர ஆர்வம் கொண்டிருப்பது வியப்பான செய்தி.

சூரிய கிரகண காலத்தில் பொதுவாக பாரதம் முழுவதும் யாரும் உணவு உண்பதில்லை; பிரார்த்தனைக்கான நேரம் கிரகண காலம் என்பர்.

பொதுவாக சூரிய கிரகண காலத்தில் ஆளும் மன்னருக்கு ஆகாது என்பது உலக நாடுகள் பலவற்றிலும் நிலவி வரும் நம்பிக்கை.

கிரகணம் பற்றிய சில சுவையான அறிவியல், சமூக மற்றும் ஆன்மீகத் தகவல்களைப் பார்ப்போம்:

 

 

1919ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி உலகில் மிக முக்கியமான கிரகணம் ஒன்று ஏற்பட்டது. உலகின் மிக பிரபலமான மேதை ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி தத்துவப் படி புவி ஈர்ப்பு விசை ஒளியை வளைக்க வேண்டும். முதல் உலக மகாயுத்தத்திற்குப் பிறகு பிரிட்டன் இந்த சூரிய ஒளி பற்றிய ஆய்வுக்கு இரு இடங்களைத் தேர்ந்தெடுத்தது. அங்கு பார்வையாளர்களை அனுப்பியது. சூரியனின் ஒளி தற்காலிகமாகத் தடைப்பட்ட போது வானவியல் விஞ்ஞானியான சர் ஆர்தர் எடிங்டனும் அவரது குழுவினரும் தொலைதூரத்திலுள்ள நட்சத்திரங்களிலிருந்து கிளம்பும் ஒளி சூரியனின் ஈர்ப்பு விசையால் வளைந்ததைக் கண்டனர், வியந்தனர். இதன் மூலம் ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி கொள்கை சரியே என்பது நிரூபிக்கப்பட்டது.

 

 

இந்த கிரகணம் உலகின் மிக பிரம்மாண்டமான அறிவியல் கொள்கையை மெய்ப்பித்தது. ஒரே நாளில் உலகமே ஐன்ஸ்டீனைக் கொண்டாடியது.

 

 

1868ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதியன்று இந்தியாவில் ஒரு சூரிய கிரகணம் ஏற்பட்டது. வானவியல் நிபுணர் ஜூல்ஸ் ஜன்ஸென் (Jules Janssen) அப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டிருந்த ஸ்பெக்ட்ரோகிராப் கருவியைச் சூரியனை நோக்கித் திருப்பிப் பார்த்தார். சூரியனின் க்ரோமோஸ்பியரில் ஒரு அசாதாரண சிறப்பு அலைமாலையைக் (spectral signature) கண்டார். இது கிரகணத்தின் போது மட்டுமே காணப்பட்ட ஒரு நிகழ்வு. இதில் ஒரு புதிய மூலகத்தை அவர் கண்டு  பிடித்தார். ஆனால் இந்தக் கண்டுபிடிப்பை உலகம் லேசில் ஏற்கவில்லை. இது மிக மிக இலேசான வாயு. இதன் பெயர் தான் ஹீலியம். கிரேக்க புராணங்களில் வரும் சூரியனுக்கான பெயர் ஹீலியோஸ். அதிலிருந்து இந்தப் பெயர் இந்த வாயுவுக்குச் சூட்டப்பட்டது.

annular-eclipse

 

கிரகணத்தினால் அறிவியலுக்குக் கிடைத்த ஆதாயங்கள் இவை என்றால் பல சரித்திர சம்பவங்கள் கிரகணத்தின் பாதகமான விளைவுகளைச் சுட்டிக் காட்டுகின்றன!

 

 

முதலில் மஹாபாரதத்தை எடுத்துக் கொள்வோம். பீஷ்ம பர்வத்திலும் உத்யோக பர்வத்திலும் ஏராளமான வானவியல் குறிப்புகள் வருகின்றன.

 

 

மஹாபாரத யுத்தம் வருவதைச் சுட்டிக் காட்டும் மோசமான வானியல் நிகழ்வுகளில் முக்கியமான ஒன்று பதின்மூன்றாம் நாளே அமாவாசை வருவது.

 

 

ஒரு சந்திர கிரகணமும் அதைத் தொடர்ந்து ஒரு சூரிய கிரகணமும் வருவது உலகில் நடைபெறாத ஒரு சம்பவம். அத்தோடு கிரகங்கள் வக்கிர நிலையை அடைகின்றன. இவை அனைத்தும் உலகில் இதுவரை நிகழாத ஒரு மாபெரும் போர் நிகழ இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டும் நிகழ்வுகள்.

இதைத் தொடர்ந்து இன்னும் பல துர் சகுனங்களை மஹாபாரதம் விளக்குகிறது. ஆக, அசாதாரணமான இரு கிரகணங்கள் பெரும் போரை உலகில் விளைவித்ததை மஹாபாரதம் தெளிவாக்குகிறது.

 

 

அடுத்து மிகவும் சிக்கலான ஒரு கிரகணத்தை புனிதர்கள் மார்க், மாத்யூ, ல்யூக் ஆகியோர் பூடகமாக சுட்டிக் காட்டுகின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தன்று உலகம் இருளில் மூழ்கியது என அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது சூரிய கிரகண நிகழ்வா என்ற விவாதம் இன்றளவும் தொடர்கிறது. ஆனால் புனிதர் ஜான் இதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. வானியல் வல்லுநர்கள் கி.பி. 29ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி மத்திய கிழக்கில் ஒரு சூரிய கிரகணம் நிகழ்ந்ததையும் கி.பி. 33ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி ஒரு சந்திர கிரகணம் நிகழ்ந்ததையும் கணக்கிட்டுள்ளனர். இந்த நிகழ்வுகள் சிலுவையில் அறையப்படும் தினத்துடன் பொருந்தவில்லையே என்ற விவாதம் தொடர்வதால் சிலுவையில் ஏசு அறையுண்டதற்கும் கிரகணத்திற்கும் தொடர்பு உண்டா இல்லையா என்ற முடிவுக்கு வர முடியவில்லை.

total-solar-eclipse-2015-svalbard-totality

அடுத்து கொலம்பஸை கிரகணத்துடன் தொடர்பு படுத்தும் சுவையான நிகழ்வு ஒன்று உண்டு. புது நாடு காணப் புறப்பட்ட கொலம்பஸுக்கு வானியல் அறிவு நிறையவே உண்டு. வானில் உள்ள கிரக சஞ்சாரம், நட்சத்திர இயக்கம் ஆகியவற்றை வைத்தே அவர் தன் பயணத்தைத் தைரியமாக மேற்கொண்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது கப்பல் 1509 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி  ஜமைக்கா அருகே விபத்திற்குள்ளாக சுமார் எட்டு மாதங்கள் தன் குழுவினருடன் ஒரு தீவில் அவர் தங்க வேண்டி நேர்ந்தது. சாப்பாட்டிற்கு வழி?

 

 

அங்கிருந்த பூர்வகுடிகள் அவரது குழுவினருக்கு உதவ முன் வந்தனர். இதற்குக் காரணம் அவரது வானியல் அறிவு தான். அதன் மூலம் பூர்வ குடிகளின் தலைவனை அவர் மிகவும் கவர்ந்தார். ஆனால் இந்த இலவச சாப்பாடு தொடர்ந்து நடக்கவில்லை. ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள் அவர்கள் உணவு கொடுப்பதை நிறுத்திக் கொண்டனர். தனது வானியல் அறிவால் கொலம்பஸ் அன்று சந்திர கிரகணம் ஏற்படுவதைக் கணக்கிட்டார்.பூர்வ குடியினரின் தலைவனை அழைத்த கொலம்பஸ் அவர்கள் தனது குழுவினருக்கு உணவு அளிப்பதை நிறுத்தி விட்டதால் கடவுளின் சாபம் அவர்கள் மீது ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அன்று சந்திரன் மறைந்தே போவான் என்றும் கூறினா. சற்று நேரத்தில் சந்திரனை முழுவதுமாகக் காணோம்!

 

 

 

பூர்வ குடிகளின் தலைவன் தன்னை மன்னிக்குமாறு கூறவே அதை கொலம்பஸ் கடவுளிடம் “எடுத்துச் சொல்லி” சந்திரனை சற்று நேரத்தில் மீட்டுக் கொண்டு வரவே தீவே ஒரே உற்சாகமயமாக ஆனது! கொலம்பஸ் குழுவினருக்கு உணவும் பூர்வ குடிகளுக்கு சந்திரனும் கிடைத்தன! இந்த உண்மை நிகழ்ச்சியை பல்வேறு எழுத்தாளர்கள் தங்கள் கதையில் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பிடத்தக்க ஒரு பிரபலமான நாவல் மார்க் ட்வெய்ன் எழுதிய ‘எ கனெக்டிகட் யாங்கி இன் கிங் ஆர்தர்ஸ் கோர்ட் (A Connecticut Yankee in King Arthur’s Court) என்ற நாவலாகும்!

 

 

இனி கிரகணத்தால் மன்னர்களுக்கு ஏற்பட்ட அபாயங்களைப் பார்ப்போம்.

 

Basic RGB

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்

மைக்கேல் ஷெர்மர் உலகப் பகுத்தறிவுக் கழகத்தின் தலைவர். விஞ்ஞானபூர்வமாக இல்லாத எதையும் நம்பக் கூடாது என்று வலியுறுத்தி வருபவர். இவரது கழகத்தில் சுமார் 55000 உறுப்பினர்கள் உள்ளனர். ஸயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிகையில் 2001 ஏப்ரல் மாத இதழிலிருந்து பகுத்தறிவுப் பகுதியை எழுதி வருபவர் இவர்.இவரது பகுத்தறிவை ஆட்டுவிக்கும் ஒரு சம்பவம் இவரது திருமண தினமான 2014 ஜூன் 25ஆம் தேதியன்று நிகழ்ந்தது. அதை இவரே தனது ஸயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிகை பகுதியில் பகிர்ந்து கொண்டது தான் சுவாரசியமான விஷயம்!

 

 

ஜெர்மனியைச் சேர்ந்த ஜென்னிபர் க்ராபை அவர் மணமுடிக்க முடிவு செய்தார். ஜென்னிபருக்கு அவரது தாத்தா என்றால் உயிர். ஆனால் அவரது 16ஆம் வயதில் அவரது தாத்தா மரணமடைந்தார்.  தாத்தா பயன்படுத்திய 1978ஆம் வருட பிலிப்ஸ் டிரான்ஸிஸ்டரை அவர் போற்றிப் பாதுகாத்து வந்தார்.

அது இயங்கவில்லை. எவ்வளவோ முயன்ற போதும் கூட அதை ரிப்பேர் செய்ய முடியவில்லை.

 

கல்யாண நாளன்று திடீரென்று அந்த ரேடியோ பாட ஆரம்பித்தது!

பகுத்தறிவுக் கழகத் தலைவர் அசந்து போனார். ஜென்னிபரும் அதே அளவு பகுத்தறிவுவாதி தான்!! அவரும் திகைத்தார். கூடியிருந்தோர் குதூகலப்பட்டனர்.

 

மணநாளன்று மட்டும் ஒலித்த அந்த ரேடியோ மறு நாளிலிருந்து இயங்கவில்லை.

தன் தாத்தா தன்னுடன் எப்போதும் இருக்கிறார் என்பதற்கான அடையாளம் அது என்கிறார் பகுத்தறிவுக் கொள்கையைக் கழட்டி  விட்ட ஜென்னிபர். ஆமாம் ஆமாம் அது உண்மையே என்கிறார் ஷெர்மரும்.

 

“என் பகுத்தறிவுக் கொள்கைக்குப் பலத்த அடி அது. எப்படி அந்த ரேடியோ ஒரே ஒரு நாளன்று மட்டும் அதுவும் ஜென்னிபரின் திருமண தினத்தன்று மட்டும் இயங்க முடியும். என்னால் நம்பவும் முடியவில்லை; விளக்கமும் கொடுக்க முடியவில்லை” என்று ஸயிண்டிபிக் அமெரிக்கன் இதழில் பகிரங்கமாக தன் நிலையை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்!

அற்புதங்கள் என்றும் நிகழும்!

*********