ராகங்களும் சிவபிரானும்; ராகங்களும் மலர்களும் (Post No.9441)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9441

Date uploaded in London – –  31 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ராகங்களும் சிவபிரானும்; ராகங்களும் மலர்களும்; ராகங்களும் ஊர்ப் பெயர்களும்!

ச.நாகராஜன்

ராகங்களும் சிவபிரானும்!

சிவ பெருமானின் ஐந்து முகங்களிலிருந்து ஐந்து ராகங்கள் எழுந்தன என்று நமது புராணங்கள் கூறுகின்றன.

ஸ்ரீ ராகம் – ஸத்யோஜாதம்                                               வசந்தா – வாமதேயம்            

tags- சிவ பெருமான்  ,   ராகங்கள், மலர்

ராகங்கள் கொண்ட துறைப் பாடல், திரைப்படப் பாடல்கள்! (Post 9318)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9318

Date uploaded in London – –28 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராகங்கள் கொண்ட துறைப் பாடல், திரைப்படப் பாடல்கள்!

ச.நாகராஜன்

1

மாம்பழக்கவிச்சிங்க நாவலர் புகழ் பெற்ற கவிஞர். பழனியில் கி.பி. 1836ஆம் ஆண்டு முத்தையாசாரியாரின் மகனாகப் பிறந்த இவர் 1884ஆம் ஆண்டு சிவபதம் அடைந்தார். எந்தப் பொருளைக் கொடுத்தாலும் உடனுக்குடன் பாடுவதில் வல்லவர் இவர்.

அவர் ஒரு சமயம் வண்ட பொம்மைய நாயக்கர் என்னும் பெரு வள்ளலைச் சந்தித்தார்.

அவரிடம் ராகங்களால் அமைந்த ஒரு துறைக்கவி பாடலை உடனே பாடிக் காட்டினார்.

பாடல் இதோ:-

பூரிகன காம்பரியி னோடுபட மஞ்சரிகாம் போதி தோடி

யாரபிநா மக்கிரியை மோகனம நோகரிகல் யாணி தேசி

சீரியமு காரிமத்தி மாபதிஸ்திரீ ராகவகை தெரிதல் வேண்டுங்

கூரிய பன்னாட்டையுங் கைக்கொண்டவண்ட பொம்மேந்த்ர குணபூமானே

இதில் பூரி, கனகாம்பரி, மஞ்சரி, காம்போதி, தோடி, ஆரபி, நாமக்கிரியை, மோகனம், மனோகரி, கல்யாணி, தேஷ், முகாரி, மத்யமாவதி உள்ளிட்ட ராகங்களின் பெயர்கள் ஒரே பாடலில் இடம் பெற்றதைக் காணலாம்.

2

1958ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழகமெங்கும் திரையிடப்பட்டு மக்கள் மனதைக் கொள்ளை கொண்ட வெற்றிப் படம் சம்பூர்ண ராமாயணம். எம்.ஏ.வேணு தயாரித்த திரைப்படம் இது. கே.வி.மஹாதேவன் இசை அமைத்திருந்தார்.

அதில் ராவணனை அறிமுகப்படுத்தும் காட்சியே அமர்க்களமாக இருக்கும்.

இசையில் வல்லவனான ராவணனை அறிமுகப்படுத்தும் காட்சியில் பலரும் ராகங்களைப் பற்றிக் கேட்கும் ஒரு காட்சி இடம் பெற்றது.

‘நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நா’ என்று கம்பரால் புகழப்பட்ட ராவணன் வீணை வாசிப்பதில் வல்லவன். எல்லா ராகங்களிலும் தேர்ந்தவன். இசை நுணுக்கம் அறிந்தவன்.

சபையில் பலரும் ராகங்களைப் பற்றிக் கேட்க அதைப் பாடியே காண்பிக்கிறான் ராவணன்.

கவிஞர் ஏ. மருதகாசி அவர்கள் எழுதிய ‘சங்கீத சௌபாக்யமே என்றும் குன்றாத பெரும் பாக்யமே’ என்ற பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடலாக அமைந்து படத்திற்கு மெருகூட்டியது.

பல கேள்விகளுக்கும் ராவணன் அளித்த பதில்களில் இடம் பெறும் ராகங்கள் இவை:-

காலையில் பாடும் ராகம் பூபாளம்                                                                                          உச்சியில் பாடும் ராகம் சாரங்கா                                                                                                  மாலையில் பாடும் ராகம் வசந்தா                                                                                 இரக்கத்திற்கான ராகம் நீலாம்பரி                                                     மகிழ்ச்சிக்கான ராகம் தன்யாசி                                                        யுத்தத்திற்கான ராகம் கம்பீர நாட்டை                                                      வெண்பா பாட சங்கராபரணம்                                              அகவல் இசைக்க தோடி                                               தாழிசைக்கு கல்யாணி                                                                 இறுதியில் கயிலை நாதனைக் கானத்தால் கவர்ந்த ராகம் எது என்று மண்டோதரி கேட்க ராவணன் காம்போதி என்று பாடி முடிக்கிறான்.

3                                 

1965ஆம் ஆண்டு வெளியான படம் திருவிளையாடல். ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் வந்த இந்தப் படம் பெரு வெற்றியைப் பெற்றது. அதில் ஹேமநாத பாகவதாரக நடித்த டி.எஸ். பாலையா தன் இசைப் பெருமையை விளக்குவதாக ஒரு பாட்டு அமைந்திருந்தது. பாடலை இயற்றியவர் கவியரசர் கண்ணதாசன். பாடலைப் பாடியவர் பிரபல பாடகரான பாலமுரளிகிருஷ்ணா. இசை அமைத்தவர் கே.வி. மஹாதேவன்.

பாடல் இது தான்:-

ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா


நான் பாட இன்றொரு நாள்
போதுமா

நாதமா கீதமா
அதை நான் பாட இன்றொரு
நாள் போதுமா

புது ராகமா
சங்கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமாராகமா சுக
ராகமா கானமா தேவ
கானமா ராகமா சுக
ராகமா கானமா தேவ
கானமாஎன் கலைக்கிந்த
திரு நாடு சமமாகுமா என்
கலைக்கிந்த சிறு நாடு
சமமாகுமா நாதமா கீதமா
அதை நான் பாட இன்றொரு
நாள் போதுமாகுழல் என்றும் யாழ்
என்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே
அவர் மாறுவார்

அழியாத கலை
என்று என்னை பாடுவார்


அழியாத
கலை என்று என்னை பாடுவார்


என்னை அறியாமல் எதிர்ப்போர்கள்
எழுந்தோடுவார்

என்னை அறியாமல்
எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்இசை கேட்க எழுந்தோடி
வருவார் அன்றோ எழுந்தோடி
வருவார் அன்றோ எழுந்தோடி
தோடி ஆஆ ஆஆ ஆஆ இசை
கேட்க எழுந்தோடி வருவார்
அன்றோஎனக்கு இணையாக
தர்பாரில் எவரும் உண்டோ


தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் ஆஆ

எனக்கு
இணையாக தர்பாரில்
எவரும் உண்டோகலையாத மோகன
சுவை நான் அன்றோ

மோகன
சுவை நான் அன்றோ மோகனம்
ஆஆ ஆஆ

கலையாத மோகன
சுவை நான் அன்றோகானடா ஆஆ
ஆஆ ஆஆ என் பாட்டு
தேன் அடா

இசை
தெய்வம் நான் அடா!

இந்தப் பாட்டில் தோடி, தர்பார், மோகனம், கானடா ஆகிய ராகங்களின் பெயர்கள் (இருபொருள் பட) இடத்திற்கேற்ற படி வருவதையும் அந்த ராகங்களிலேயே அவை இசைக்கப்படுவதையும் மக்கள் பெரிதும் ரசித்தனர்.

இப்படி ராகப் பாடல்கள் பல உண்டு.

அனைவரையும் மகிழ்விக்கும் இசை இப்படி புது விதத்தில் தரப்படும் போது ஏற்படுவது, இரட்டிப்பு மகிழ்ச்சி அல்லவா?!

***

tags- ராகங்கள்

பாரதியாரின் ராகங்கள்! – 1 (Post No.9020)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9020

Date uploaded in London – – 11 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

டிசம்பர் 11. பாரதியாரின் பிறந்த தினம். அதையொட்டிய சிறப்புக் கட்டுரை இது!

பாரதியாரின் ராகங்கள்! – 1

ச.நாகராஜன்

மஹாகவி பாரதியாரின் இசை ஞானம் மிக அற்புதமானது.

கவி பாட வல்லவராக இருந்த அவர் தனது பாடல்களுக்கு உரிய ராகங்களைக் கண்டு இசை அமைப்பவராகவும் திகழ்ந்தார்.

பாஞ்சாலி சபதம் நூலுக்கு அவர் எழுதிய முகவுரையில்,

“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிது கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்” என்று குறிப்பிடுகிறார்.

புகழ் பெற்ற ஒரு கவிதை அல்லது பாடல் எப்படி இருக்க வேண்டும், அதன் சந்தம், மெட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய அவரது கண்ணோட்டம் இதிலிருந்து புலப்படுகிறது.

இதை ஒரு வரையறுப்பு (Definition) வாக்கியமாகவே கொள்ளலாம்.

அவரது பாடல்களுக்கு அவர் தேர்ந்தெடுத்த ராகங்கள் அவரை ஒரு இசை மேதை என்பதைச் சுட்டிக் காட்டும்.

இங்கு சில பாடல்களுக்கு அவர் தந்துள்ள ராகங்களைக் காணலாம்.

1)வந்தே மாதரம் என்போம் என்ற பாடல்

தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு

ராகம் – நாதநாமக்கிரியை தாளம் – ஆதி

2)வந்தே – மாதரம் – ஜய

வந்தே மாதரம் என்ற பாடல்

ராகம் – ஹிந்துஸ்தானி பியாக் தாளம் – ஆதி

3) சுதேச வந்தனம் – எந்தையுந் தாயும் பாடல்

ராகம் – காம்போதி தாளம்  – ஆதி

4) பாரத நாடு – பாருக்குள்ளே நல்ல நாடு பாடல்

ராகம் – ஹிந்துஸ்தானி தோடி தாளம் – ஆதி

5) பாரத தேசம் – பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்

ராகம் – புன்னாகவராளி பியாக்

6) எங்கள் நாடு

ராகம் – பூபாளம்

7) பாரத மாதா – முன்னை யிலங்கை

சந்தம் – தான தனதந்தன தான தனதந்தன

         தானனத் தானானே

8) பாரத தேவியின் திருத்தசாங்கம்

நாமம் – காம்போதி

நாடு – வஸந்தம்

நகர் – மணிரங்கு

ஆறு – சுருட்டி

மலை – கானடா

ஊர்தி – தன்யாசி

படை – முகாரி

முரசு – செஞ்சுருட்டி

தார் – பிலகரி

கொடி – கேதாரம்

9) மாதாவின் துவஜம் – தாயின் மணிக்கொடி பாரீர்!

தாயுமானவர் ஆனந்தக் களிப்பு வர்ணமெட்டு

10) எங்கள் காவடிச் சிந்து – தொன்று நிகழ்ந்த தனைத்தும்

காவடிச்சிந்தில் ஆறுமுக வேலவனே என்ற வர்ணமெட்டு

11) தொண்டு செய்யும் அடிமை – தொண்டு செய்யும் அடிமை

நந்தனார் சரித்திரத்திலுள்ள “மாடு தின்னும் புலையா – உனக்கு மார்கழித் திருநாளா” என்ற பாட்டின் வர்ணமெட்டு

12) மேத்தா திலகருக்குச் சொல்வது – ஓய் திலகரே நம்ம ஜாதிக்கடுக்குமோ

சிதம்பர பதவியாகிய முக்தியிலே, நந்தனார் அடங்காத தாகம் கொண்டிருந்தார். அது அவரை அடிமை கொண்டிருந்த ஆண்டைக்கும் மனமில்லை. அவன் நந்தனாரைப் பலவித இம்சைகளுக்கு உட்படுத்தினார்; அதுவுமின்றிச் சேரியிலிருந்த நிதானப் பறையர்கள் பலர் நந்தனார் சிதம்பரத்தைப் பற்றி நினைக்கலாகாதென்று போதனை செய்தார்கள். அந்த நிதானஸ்தர்களிலே ஒருவர் பாடிய பாட்டின் கருத்தையும் வர்ணமெட்டையும் தழுவிப் பின்வரும் பாடல் செய்யப்பட்டிருக்கிறது. (ஓய் நந்தனாரே, நம்ம ஜாதிக்கடுக்குமோ, நியாயந்தானோ, நீர் சொல்லும்” என்ற வர்ணமெட்டு

13) நிதானக்கட்சியார் சுதேசியத்தைப் பழித்தல் – நாமென்ன செய்வோம், தலைவரே

ராகம் – புன்னாகவராளி தாளம் – ரூபகம்

14) ஆங்கிலேயன் ஒரு தேசபக்தனுக்குக் கூறுவது – நாட்டிலெங்கும் சுதந்திர வாஞ்சையை ஊட்டினாய்

தண்டகம் – ஆதி தாளம்

15) பாரத தேவியின் அடிமை – அன்னியர் தமக்கடிமை யல்லவே

நந்தன் சரித்திரத்திலுள்ள “ஆண்டைக் கடிமைக் காரனல்லவே” என்ற பாட்டின் வர்ணமெட்டையும் கருத்தையும் பின்பற்றி எழுதப்பட்டது.

16) சுதந்திரப் பள்ளு (பள்ளர் களியாட்டம்) – ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

ராகம் – வராளி தாளம் – ஆதி

17) ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம் – என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

ராகம் – கமால் தாளம் – ஆதி

18) விடுதலை – விடுதலை! விடுதலை! விடுதலை!

ராகம் – பிலஹரி

19) பாரத ஸமுதாயம் – பாரத ஸமுதாயம் வாழ்கவே!

ராகம் – பியாக் தாளம் – திஸ்ர ஏகதாளம்

20) பாரத ஜனங்களின் தற்கால நிலைமை – நெஞ்சு பொறுக்குதிலையே

நொண்டிச்சிந்து

21) பிஜித்தீவிலே ஹிந்து ஸ்திரீகள் – கரும்புத் தோட்டத்திலே

ஹரிகாம்போதிஜன்யம்

ராகம் – ஸைந்தவி  திஸ்ரசாப்பு தாளம்

22) பெண்கள் விடுதலைக் கும்மி – பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்

கும்மிப் பாட்டு

23) தமிழ்த் தாய்  ஆதிசிவன் பெற்று விட்டான்

தாயுமானவர் ஆனந்தக் களிப்பு சந்தம்

24) தமிழ் மொழி வாழ்த்து – வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொடி

தான தனத்தன தான தனத்தன்

தான தந்தன

மேற்கண்ட பாடல்களிந்ன் ராகங்கள், சந்தம், வர்ண மெட்டு ஆகியவை தேசீய கீதங்கள் (பகுதி 1) என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த நூலில் 58 பாடல்கள் உள்ளன. இது 1936ஆம் ஆண்டு ஐந்தாம் பதிப்பைக் கண்டது. முதல் நான்கு பதிப்புகளில் 9000 பிரதிகளும் ஐந்தாம் பதிப்பில் 1000 பிரதிகளும் அடிக்கப்பட்டன.

மிகத் தெளிவாக ராகம், தாளம், வர்ணமெட்டு, சந்தம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளதை இதில் காணலாம்.

பல ராகங்களும் மெட்டுகளும் பாரதியாரிந்ன் இசைத் திறமையை நன்கு உணர்த்துகின்றன.

இனி அடுத்த பகுதியைப் பார்ப்போம்.

        ***       தொடரும்

tags – பாரதி, ராகங்கள், 

இசை தரும் நோயற்ற வாழ்வு! – 6

25FR-TYAGARAJA2_1340661g

பாக்யா 12-10-2012 இதழில் 86ஆம் அத்தியாயமாக வெளியாகிய இசை தரும் நோயற்ற வாழ்வு கட்டுரையின் இறுதிப் பகுதியை மகிழ்வுடன் அளிக்கிறோம்

                                                                  ச.நாகராஜன்

மேளகர்த்தா ராகங்கள் எனப்படும் அடிப்படை ராகங்கள் 72.

“அவை உடலில் உள்ள 72 முக்கிய நாடிகளைக் கட்டுப்படுத்துகிறது. குறிப்பிட்ட ராகத்தின் லக்ஷணத்தை உணர்ந்து அனுபவித்துப் பாடுபவர் அதற்குரிய நாடியைக் கட்டுப்படுத்துவார்” என்று பழைய இசை நூல்கள் தெரிவிக்கின்றன. சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜ ஸ்வாமிகள், முத்துசாமி தீக்ஷிதர் சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் வாழ்வில் நடந்த ஏராளமான சம்பவங்கள் இசையின் ஆற்றலை உணர்த்துபவை.

 

ஜோதிஸ்வரூபிணி என்ற ராகத்தை இசைத்து குத்துவிளக்கை நெருப்புக்குச்சியின் உதவியின்றி தியாகராஜ ஸ்வாமிகள் ஏற்றி அருகிலிருந்தோரை வியக்க வைத்தார். ராகத்தின் ஸ்வரங்களுக்கு ஏற்ப எரியும் சுடர் ஓங்கியும்  மங்கியும் எரிந்ததையும் அனைவரும் பார்த்து அதிசயித்தனராம். பிலஹரி ராகத்தில் அமைந்த அவரது நா ஜீவ தாரா என்ற கீர்த்தனை இறந்தவனை எழுப்பிய சம்பவமும் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. முத்துசாமி தீக்ஷிதரின் நவகிரக கீர்த்தனைகளைப் பாடினால் வயிற்று வலி நீங்கும் (குறிப்பாக ப்ருஹஸ்பதே என்று தொடங்கும் குரு பகவானைப் பற்றிய கீர்த்தனை) என்பதும் சியாமா சாஸ்திரிகளின்  துரு சுகு கீர்த்தனை ஆரோக்கியத்தை மேம்படச் செய்யும் என்பதும் இசை விற்பன்னர்களின் நம்பிக்கை.

 

ரத்தக் கொதிப்பை நீக்க அசாவேரி, தலைவலி போக சாரங்கா, தர்பாரி

மற்றும் ஜய்ஜயவந்தி காச நோய் போக மேகமல்ஹார் நெஞ்சு வலி நீங்க தர்பாரி, கோபமும் படபடப்பும் போக ஜய்ஜயவந்தி புன்னாகவராளி, ஸஹானா, மனச்சோர்வை நீக்க நடநாராயணி, தோல் சம்பந்தமான வியாதிகள் நீங்க அசாவேரி, வயிற்று வாயு நீங்க ஜோன்புரி பக்கவாதம் நீங்க பைரவி மற்றும் ஆஹிர்பைரவி பசியுணர்வு இல்லாமல் இருப்பதைப் போக்க தீபக் இதய சம்பந்தமான நோய்களைத் தீர்க்க கல்யாணி., சங்கராபரணம் மற்றும் சாருகேசி என்று நோய் தீர்க்கும் ராகங்களின் பட்டியல் நீளுகிறது.

 

குறிப்பிட்ட ஒரு இசையைக் கேட்டவுன் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. எண்டார்பின், கார்டிஸால் ஏசிடிஹெச்  இண்டர்ல்யூகின்-1 இம்யூனோக்ளோபிலுன்-ஏ போன்ற பயோகெமிக்கல்கள் இசையைக் கேட்டவுடன் பெரும் மாறுதலை அடைகின்றனவாம். எண்டார்பின்கள் சிக்கலான  மூளை அமைப்பில் உணர்வுகளைத் தூண்டுகின்றனவாம். நல்லதொரு இசையைக் கேட்டால் இவை நமது நரம்பு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் விளைவாக ரத்த அழுத்தம் உள்ளிட்ட பலவற்றை சீராக ஆக்குகின்றனவாம்.இவை அறிவியல் ஆராய்ச்சிகள் தரும் தகவல்கள்!

 

அமெரிக்க மருத்துவமனைகளில் சிலவற்றில் கோரக் கல்யாண் ராகம் ஹைபர்டென்ஷன் நோயைத் தீர்ப்பதற்கு இசைக்கப்படுகிறது! ராக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஓஜே.ஷ்லெர் எலும்பு மஜ்ஜை பதியம் செய்து கொண்ட நோயாளிகளுக்கு வலியைக் குறைக்கவும் புதிய மஜ்ஜைகள் ரத்த செல்களை உருவாக்கவும் இசையின் உதவியை நாடுகிறார்.

 

மேளகர்த்தா ராகங்களான 72ஐத் தவிர்த்து ஜன்ய ராகங்கள் எனப்படும் ராகங்கள்  எண்ணிக்கையில் அடங்காதவை. ஆக ராகங்கள் சங்கீதத்தை ஒரு சாகரமாக ஆக்குகின்றன.

 

சென்ற நூற்றாண்டில் திரைப்படத் துறை உருவானவுடன் புதிய இசைப் புரட்சி ஒன்று உருவானது. ராக சாகரத்தில் முத்துக் குளித்து நூற்றுக்கணக்கான திரைப்பட இசையமைப்பாளர்கள் பல்லாயிரக்கணகான பாடல்களுக்கு இசையை அமைக்க ஆரம்பித்தனர். திரைப்படங்கள்  ஜன ரஞ்சகமாய் ஆகவே திரைப்படப் பாடல்கள் மெல்லிசையாக மலர்ந்து கோடிக் கணக்கானோரைப் பரவசப்படுத்த ஆரம்பித்தன.இவற்றில் அநேகமாக பிரபலமான ராகங்கள் அனைத்தும் கையாளப்பட்டு விட்டன!

 

தமக்குப் பிடித்த ராகங்களையும் அவற்றில் அமைக்கப்பட்ட

பாடல்களையும் அட்டவணைப்படுத்திக் கொண்டு அவற்றைக் கேட்டு மகிழ்ந்து உடல்நலத்தை யார் வேண்டுமானாலும் மேம்படுத்திக் கொள்ளலாம். அத்தோடு உரிய நிபுணர்களை அணுகி வியாதியைப் போக்கிக் கொள்ள அறிவுரைகளைக் கேட்டு சிகிச்சை பெற்று பூரண குணத்தையும் அடையலாம்.

 

இந்த வகையில் உதாரண முயற்சியாக சில ராகங்களும் அவற்றில் அமைக்கப்பட்ட சில திரைப்படப் பாடல்களும் கீழே தரப்பட்டுள்ளன. இது சிறிய “மாதிரி அட்டவணை” தான் என்பதால் இதைப் பார்த்து ஏராளமான ராகங்களையும் அவற்றில் அமைக்கப்பட்ட பாடல்களையும் வாசகர்களே அமைத்துக் கொள்ளலாம்; இசை தரும் நோயற்ற வாழ்வைப் பெற்று மகிழலாம்!

========================================================================

ராகம்                   பாடல்                            படம்

========================================================================

மோஹனம்         ஆஹா இன்ப நிலாவினிலே       மாயாபஜார்

சுபபந்துவராளி      ஆயிரம் தாமரை மொட்டுக்களே      அலைகள்

ஓய்வதில்லை

சிந்துபைரவி       அன்னக்கிளி உன்னைத் தேடுதே     அன்னக்கிளி

ப்ருந்தாவன சாரங்கா சிங்காரக் கண்ணே  வீரபாண்டிய கட்டபொம்மன்

சுத்த தன்யாசி     சிறு பொன்மணி                 கல்லுக்குள் ஈரம்

கமாஸ்            சித்திரம் பேசுதடி                    சபாஷ் மீனா

ஹிந்தோளம்     அழைக்காதே    மணாளனே மங்கையின் பாக்கியம்

கௌரி மனோஹரி கவிதை அரங்கேறும் நேரம்     அந்த 7 நாட்கள்

புன்னாகவராளி     நாதர் முடி மேலிருக்கும்      திருவருட்செல்வர்

கானடா            பொன் என்பேன்            போலீஸ்காரன் மகள்

—————————————————————————————————————————–

 

அறிவியலும் பாரம்பரிய அனுபவமும் ஒன்று சேர்ந்து  அபூர்வமான பலன்களை ஒரேமனதாக அறிவிக்கும் துறை இசை தான் என்பது எவ்வளவு வியப்பான விஷயம்!! இசை மூலம் ஆல்பா நிலையை அனைவரும் எய்தலாமே!

 Last in the series written by Santanam nagarajan; for 600 more English and Tamil articles, please browse through the blog; swami_48@yahoo.com

*********