Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
London University has its Asian and African wing called SOAS (School of Oriental and African Studies) where I taught Tamil for 20 years as Tamil Tutor. Ms Jayalalaitha Government in Tamil Nadu sent the Valluvar statue to London. High Commission of India contacted the University of London. They contacted Dr Stuart Blackburn, an American Professor fluent in Tamil, and Head of South Asia Department at SOAS. I and Stuart sat together and wrote the leaflet and prepared the invitation for the event . Installation of the statue was held on 13th May 1996 according to my diary. Strangely no one else has any details about this event except me. That too because Stuart gave me the photo saying ‘Swami, Here is your picture’.
The attached article was published in April 2015 by my friend Jacob Ravibalan who launched World Tamil Organisation in London to bring all the Tamil organisations under one umbrella.
Please see the attached article:-
tags- Valluvar Statue, London, SOAS, London Swaminathan, Tamil Tutor, லண்டன், வள்ளுவர் சிலை , பல்கலைக்கழகம்
லண்டன் பார்க்க வருகிறீர்களா ?- PART 2 (Post No.9369)
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.9369
Date uploaded in London – –11 MARCH 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
KOHINOOR DIAMONDகோஹினுர் வைரம் உள்ளிட்ட (Crown Jewels) கிரீடங்கள் அடங்கிய காட்சிக் கூடம் டவர் பிரிட்ஜ் (Tower Bridge Station) என்னும் இடத்தில் கோட்டைக்குள் இருக்கிறது. நுழைவுக் கட்டணம் அதிகம். அதற்குள் நுழையாமல் கோட்டையை வலம் வந்து டவர் பிரிட்ஜ் (Tower Bridge) என்னும் அற்புதமான , அழகான பாலத்தைக் காண்பது அவசியம். தமிழ் நாட்டின் பாம்பன் பாலம் போலவே கப்பல்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
1989-ல் எழுதிய கட்டுரை (with latest updates)உலகின் பெரிய நகரங்களில், முக்கிய நகரங்களில், ஒன்று லண்டன் . 1987 ஜனவரி மூன்றாம் தேதி முதல் வசித்து வருகிறேன். அந்தக்காலத்தில் – 1987ல்- முதல் ஆறு மாதங்களுக்கு இந்தியன் ஒய்.எம்.சி .ஏ .யில் தங்கி இருந்தேன் . அங்கு எங்களைப் போல நீண்ட காலம் தங்கிருந்தவர்களும் உண்டு ; அவ்வப்போது வந்து போகும் சுற்றுலா பயணிகளும் பெரிய இந்திய அதிகாரிகளும் உண்டு (Tourists from India and visiting Indian officials) . காலையில் பி.பி.ஸி. அலுவலகம் செல்லும் முன்பும் மாலையில் பி. பி. ஸி . (Bush House BBC, London) கட்டிடத்திலிருந்து வந்த பின்னரும் நிறைய நேரம் கிடைத்ததால் டைனிங் அறையில் (Dining Room) பல புது முகங்களைச் சந்திப்பேன். இது தவிர பிபிசி தமிழோசையில் நான் பேட்டி கண்டவர்களும் உண்டு. அவர்களுக்கு எல்லாம் பயன்படும் வகையில் ஒரு நூலை எழுத
உலகிலேயே மிகவும் செலவுமிக்க (Expensive City London) நகர ங்களில் ஒன்று என்ற அவப்பெயரும் இதற்கு இருக்கிறது.
Sherlockholms, BAKER STREETMAHATMA GANGHI OPP. PARLI BUILDING , LONDON
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனில் நாடி ஜோதிடம்
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நானும் என் மகனும் வாரம் தோறும் வேதம் கற்க ‘சிந்தி மந்திரு’ (Sindhi Mandir) க்குப் போவோம். அங்கு திருச்சி கல்யாண சுந்தர குருக்கள் எங்களுக்கு ருத்ரம், சமகம், சூக்தம் எல்லாம் சொல்லிக் கொடுப்பார். ஏர் இந்தியா Air India வெங்கடராமன் அல்லது இந்தியன் ரயில்வே India Railways ஏஜெண்ட் Mr.தண்ட பாணி எனக்கும் என் மகனுக்கும் காரில் லிப்ட் (Lift) கொடுப்பார்கள். ஒரு நாள் Mr.வெங்கட்ராமன் என்னிடம், ஒரு உதவி கேட்டார். அவருடைய நண்பருக்கு தமிழ் செய்யுள் சிலவற்றை மொழிபெயர்க்க வேண்டும் என்றார் . எனக்கோ தமிழ் என்றால் நெய் ஒழுகும் கோதுமை ஹல்வா சாப்பிட்டது போல. உடனே தயங்கமால் யெஸ் YES என்று சொன்னேன்.
குறிப்பிட்ட நாளும் வந்தது. வீட்டு வாசலில் கார் நின்றது. காரில் செல்லுகையில் வெங்கடராமனிடம் எங்கு போகிறோம், யாரைப் பார்க்கப் போகிறோம், என்ன செய்யுள்? அவர் இயற்றியதா? என்றெல்லாம் கேள்விக் கணைகளைத் தொடுத்தேன்.
திரு வெங்கடராமன் சொன்னார்: நாம் பார்க்கப்போகும் மனிதர் லண்டனில் ஹிந்தி பேசும் மக்களிடையே மிகவும் பிரபலமானவர். அவர் இராமாயண உபன்யாசம் செய்யும் ஒரு பிரவசனகர்த்தா என்றார் . அவர் மகனைப்பற்றி ஒரு நாடி ஜோதிடர் எழுதிக் கொடுத்த செய்யுட்களை மொழி பெயர்க்கத்தான் உங்களை அழைத்தார்.
இதைக் கேட்டவுடன் எனக்கும் மகிழ்ச்சி. அட ஒருவர் தன் குடும்ப ரஹசியங்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு வந்திருக்கிறாரே என்று நினைத்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவரது வீட்டில் அமர்ந்து நாடி ஜோதிடர் 40 பக்க நோட்டில் அழகான கையெழுத்தில் எழுதிக்கொடுத்த செய்யுட்களை மொழி பெயர்த்து முடித்தேன். அவர் காதால் கேட்டாரே தவிர ஒன்றும் குறித்துக் கொள்ளவில்லை. எனக்கும் வியப்பு.! என்னடா இது. இவ்வளவு கஷ்டப்பட்டு மொழி பெயர்க்கிறோம்; கவனமாகக் கேட்கிறார். ஆனால் ஒன்றும் எழுதிக் கொள்ளவில்லையே என்று நினைத்தேன்.
செய்யுட்களை மொழிபெயர்த்து முடித்ததுதான் தாமதம்.
EXACTLY SAME ! எக்ஸ்சாக்ட்லி சேம் ; ‘பில்குல் டீக் ஹை’ என்றார்
என்ன பொருள் என்று வினவினேன்.
ஏற்கனவே ஒருவர் அவ்வளவு செய்யுட்களையும் மொழிபெயர்த்துக் கொடுத்துவிட்டார் என்றும் நான் அப்படியே அதை மொழி பெயர்த்தேன் என்றும் பாராட்டி நன்றி சொன்னார்.
மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
அட! பாவி மனுஷா! இதை முன் கூட்டியே சொல்லி இருக்கக் கூடாதா ? நான் இன்னும் கவனமாக பயந்து கொண்டே — பய பக்தியுடன் — மொழி பெயர்த்து இருப்பேனே! என்று மனதில் பொருமினேன் .
போகட்டும்; அவரிடம் போனபோது ஒரு புதிய விஷயம் கிடைத்தது. காஞ்சிபுரத்தில் ஒரு பிரபல நாடி ஜோதிடர் இருக்கிறார். நிறைய வெளி நாட்டுக்காரர்கள் அவரை மொய்ப்பதால் அப்பாயிண்ட்மெண்ட் APPOINTMENT இல்லாமல் பார்க்க முடியாது ; இந்த ஹிந்திவாலாவும் ஒவ்வொரு முறையும் அவரைப் பார்த்து ஜோதிடம் கேட்பது வழக்கம். அவர் துல்லியமாக சொல்லுவார். அருகிலேயே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதிக் கொடுப்பார்கள் என்று.
நானும் நினைப்பேன்; அடுத்த முறை காஞ்சி செல்லும்போது இவரைப் பார்த்துவிடவேண்டும் என்று. ஆ னால் நான் ஒவ்வொரு முறை இந்தியாவுக்குச் செல்லும்போதும். காஞ்சி மடத்துக்கும் கோவில்களுக்கும் செல்லவே நேரம் சரியாகப் போய்விடுகிறது.
2018ல் இந்தியாவுக்குச் சென்ற போது நிறைய நேரம் மரத்துக்கு அடியில் காரை நிறுத்தி 5 மணி நேரம் வீணடித்தேன் . காலை ரவுண்டு கோவில்களை ஒன்னரை மணிக்கு (1-30 PM) முடித்தோம். அடுத்த ரவுண்டு 5 PM அல்லது 6 PM மணிக்குத்தான் கோவில்கள் திறக்கும் என்றார்கள் . சகுந்தலா நினைவு மியூசியத்தைச் சுற்றிப்பார்த்தேன்; சமண காஞ்சிக்குப் போய் கொதிக்கும் வெயிலில் பாதி மலை ஏறி வி ட்டு குரங்குகள் மட்டும் இருப்பதைப் பார்த்து பயந்து திரும்பிவிட்டேன்; ஜன நடமாட்டமே இல்லை. அப்போது கூட இந்த நாடி ஜோதிடர் நினைவுக்கு வரவில்லை.
உண்மைதான் ; நாடி ஜோதிடரைப் பார்க்கப்போவதும் விதிப்படிதான் நடக்குமாம். நாம் போகும் போது நம்மைப் பற்றிய நாடி அவர் தொகுப்பில் இருக்குமாம். அவரிடம் அந்த நாடி ஓலைகள் இல்லாவிடில் அவரிடம் செல்லாமல் நம்மை விதியே தடுக்குமாம்.
வாழ்க “நல்ல” நாடி ஜோதிடர்கள் !
TAGS — நாடி ஜோதிடம், பலித்தது, லண்டன், காஞ்சிபுரம்
CHINESE ASTROLOGY; I TOOK THESE PICTURES IN HONG AND AUSTRALIA
லண்டனுக்குப் போய்விட்டு வந்தேன் என்று யாராவது சொன்னால், உடனே அந்த நகரைப் பற்றி அறிந்தவர்கள், “ஓ! பக்கிங்ஹாம் பாலஸ் (அரண்மனை) பார்த்தீர்களா? பிக் பென் (BIG BEN), டவர் பிரிட்ஜ் பார்த்தீர்களா (TOWER BRIDGE), டவர் மியூசியத்துக்குப் போய் கோஹினூர் வைரம் உள்பட மஹாராணியாரின் நகைகளைப் பார்த்தீர்களா? மெழுகு பொம்மை (MADAM TUSSAUDS) மியூசியம், சயன்ஸ் மியூசியம், விக்டோரியா ஆல்பர்ட் மியூசியம், இயற்கை வரலாற்று மியூசியம் முதலிய மியூசியங்களுக்குப் போனீர்களா? லண்டன் ஐ- யில் ஏறினீர்களா? டிரஃபால்கர் (TRAFALGAR SQUARE) ஸ்கொயர், பிக்கடில்லி சர்கஸ் (PICCADILLY CIRCUS) வழியாகச் சென்றீர்களா? என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்.இங்குள்ள புகழ்பெற்ற, பெரிய ஐந்து பூங்காக்களைப் (Parks) பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.
அடுத்த முறை லண்டனுக்கு வந்தீர்களானால் இந்த 7 பூங்கா (PARKS) க்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள்.
லண்டனுக்கு வந்த எனது அமெரிக்க நண்பர் ஒருவர் விமானத்திலிருந்து லண்டனைப் பார்த்துவிட்டு அசந்தே போனார். நன் ஏதோ எங்கள் அமெரிக்க நகரங்கள் போல வானளாவிய கட்டிடங்களுடன் கான்க்ரீட் ஜங்கிள் (CONCRETE JUNGL)E போல இருக்கும் என்று நினைத்தேன். பச்சைப் பசேல் என்றல்லவா இருக்கிறது? என்றார்.
நான் சொன்னேன்: “நல்ல வேளையாக எங்கள் லண்டனில் திராவிட அரசியல்வாதிகள் இல்லை. எல்லா நிலங்களையும், பூங்காக்களையும் பினாமி பெயரில் முக்காத் துட்டுக்குப் பட்டா போட்டு, ஆட்டையைப் போடும் அசிங்கங்கள் இங்கு இல்லை. வெள்ளைக்காரன் கொள்ளை அடிப்பான்; உலகத்தையே; ஆனால் தனக்குத் தானே யானை தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வது போல புறச் சூழலைக் கெடுக்க மாட்டார்கள் என்றேன்.
உண்மையிலேயே இது வியப்பான விஷயம்தான். தெருப்பெயர்களை நூற்றாண்டுக் கணக்கில் மாற்றவில்லை. பூங்காக்களை அழிக்கவில்லை. லண்டனில் பூங்கா இல்லாத பேட்டையே இல்லை. புகழ்பெற்ற 7 பூங்காக்கள் அல்லது தோட்டங்களை மட்டும் வரிசைப் படுத்துகிறேன்:
Speakers’ Corner, Hyde Park
1.ஹைட் பார்க் (Hyde Park)
இதன் சிறப்பு என்ன? இங்கே சொற்பொழிவாளர் மூலை (Speakers’ Corner) என்று ஒரு பகுதி இருக்கிரது அங்கு நின்று கொண்டு மஹாராணி, மஹாராஜ உள்பட யாரையும் வசை பாடலாம், குறைகூறலாம் என்று ஒரு வழக்கம் இருக்கிறது. அதாவது யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள், மான நஷ்ட, அவதூறு வழக்குப் போட மாட்டார்கள் என்று ஒரு ஐதீகம் உளது. இதே பூங்காவில் இளவரசி (Dian, Princess of Wales Memorial) டயானா நினைவுச் சின்னத்தையும் காணலாம். 350 ஏக்கர் பரப்புள்ள இந்தப் பூங்கா லண்டனின் இதயப் பகுதியில் பல ரயில் நிலையங்களைத் தொட்டுக்கொண்டு நிற்கிறது. மூங்கில் பாதை (Bamboo Walkway) வழியாக சிறுவர்கள் ஓடி விளையாடலாம்.
நாட்டின் தலைவர்கள் பிறந்த நாள், நினைவு நாளில் 21 முறை பீரங்கிக் குண்டு (Royal Gun salutes) முழக்கம் அளிப்பதும் இவ்விடத்தில்தான். எடுத்துக்காட்டாக மஹாராணியாரின் பிறந்த நாள் (ஏப்ரல் 21), அவர் பட்டமேற்ற நாள் (ஜூன் 2) என்று பல தினங்கள்!
இந்தப் பூங்காவுக்குப் பக்கத்திலுள்ள ரயில் நிலையங்கள்:-
இதன் பரப்பு 40 ஏக்கர். மஹாராணியாரின் அரண்மனைக்கு எதிரே உள்ளது (Green Park) க்ரீன் பார்க் ஸ்டேஷனில் இறங்கினால், பூங்காவின் குறுக்கே நடந்து போய் ராணியாரைத் தரிசிக்கலாம். அல்லது அவரைப் பார்க்க வந்த கூட்டத்தை வேடிக்கை பார்க்கலாம். அவ்வப்பொழுது அணிவகுக்கும் சிப் பாய்களையும் பார்க்கலாம். உலகப் போர் தொடர்பான பல நினைவுச் சின்னங்களையும் காணலாம்.
Green Park
அருகிலுள்ள ரயில் நிலையம்: க்ரீன் பார்க் Green Park
3.கென்ஸிங்டன் தோட்டம் (Kensington Gardens)
சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் இங்கு உண்டு. பீட்டர் பானின் வெண்கலச் சிலை (Bronze Statue of Peter Pan), எல்பின் ஓக் (ELFIN OAK STUMP )மரத்தின் (அடிப்பகுதி, டயானா விளையாட்டுத் திடல், பெரிய கொள்ளையர்(PIRATE SHIP) கப்பலின் மாதிரி முதலியன சிறுவர்களைக் கவர்ந்திழுக்கும்.
அருகிலுள்ள ரயில் நிலயம்: குஃயீன்ஸ்வே Queensway
4.செயின்ட் ஜேம்ஸ் பூங்கா St Jame’s Park
இந்தப் பூங்காவைச் சுற்றித்தான் முக்கியமான இடங்களான பக்கிங்ஹாம் அரண்மனை, பிக் பென் கடிகாரக் கூண்டு முதலியன உள்ளன. முக்கியமான அணிவகுப்புகள் இங்கே நடைபெறும் 1664 ஆண்டு முதல் இங்கு பெலிகன் நாரைகள் வசிக்கின்றன. ஒவ்வொரு நாளும்cமதியம் இரண்டரை மணிக்கு அவைகளுக்கு மீன் இரை கொடுப்பதைக் காண ஒரு கூட்டம் காத்து நிற்கும்.
அருகிலுள்ள ரயில் நிலையம் –வெஸ்ட்மின்ஸ்டர் Westminster, செய்ன்ட் ஜேம்ஸ் பார்க் St Jame’s Park
St Jame’s Park
5.ரீஜெண்ட்ஸ் பூங்கா Regent’s Park
இங்குதான் லண்டன் மிருகக்காட்சி (London Zoo)சாலை இருக்கிறது. இதைத் தவிர ரோஜாத் (Rose Gardens) தோட்டம், பறவைகள் நடைப் பகுதி (Birds Walk) எனப் பல கவர்ச்சிகள் இருக்கின்றன. அன்னம், நாரை, வாத்து, குள்ள வாத்து என நீர்ப்பறவைகள் வாழும் இடம் இது. சிறுவர்களுக்கு மன மகிழ்ச்சி தரும் பூங்கா.
அருகிலுள்ள ரயில் நிலையம்—ரீஜென் ட் ஸ் பார்க்( Regent’s Park)
Regents Park
6.ரிச்மண்ட் பூங்கா (Richmond Park)
லண்டனின் தென் மேற்குப் பகுதியில் இருக்கும் இந்தப் பூங்கா மான்களுக்கு — குறிப்பாக சிவப்பு நிற கலை மான்களுக்குப் (Red and fallow deer) பெயர் பெற்ற இடம். எப்போதும் மான்கள் கூட்டம் கூட்டமாகத் திரியும். இங்குள்ள இசபெல்லா தோட்டத்தில் வெளிநாட்டுத் தாவரங்களை வளர்க்கின்றனர்.
அருகிலுள்ள ரயில் நிலையம் –ரிச்மண்ட் (Richmond)
Richmond Park
7.க்ரீனிச் பூங்கா (Greenwich Park)
அரச வம்சத்தினரின் பெயரிலுள்ள பூங்காக்களில் இதுவே பழமையானது 1427 ஆம் ஆண்டு முதல் இதன் வரலாறு எழுதப்பட்டுளது. தேசிய கடல் மியூசியம் (National Maritime Museum), க்ரீனிச் எல்லைக் கோடு மியூசியம், வானாராய்ச்சிக் (Royal Observatory) கூடம், உலகத்தைன் நேரத்தைக் கணக்கிட உருவாக்கப்பட்ட கற்பனைக் கோடு (Greenwich Meridian) முதலியவற்றைக் காண ஏராளமானோர் வருகை தரும் பூங்கா. மான்கள், ஆந்தை, வெவால்கள் என்று பலவகை உயிரினங்களின் அடைக்கலம் இது.
Greenwich Park
அருகிலுள்ள ரயில் நிலையம் –க்ரீனிச்; தேம்ஸ் நதிப் படகு மூலமும் செல்லலாம்.
இதுதவிர உலகப் புகழ் பெற்ற தாவரவியல் பூங்காவான கியூ (Royal Botanical Gardens at Kew) கார்ட ன் ஸ் இருக்கிறது. அது தாவரவியல் பூங்கா என்னும் வகையில் வந்துவிடும்.
ராயல்பார்க்ஸ் என்ற பெயரில் வெப்சைட் (www.royalparks.org.uk )இருக்கிறது. அதில் மேலும் பல தகவல்களை அறியலாம். பூங்காக்களுக்குள் நுழைய கட்டணம் கிடையாது. ஆனால் அவகளில் இடம்பெற்ற மியூசியங்களுக்குக் கட்டணம் கொடுக்கவேண்டும்.
லண்டனில் ஒரு பள்ளிக்கூடம் இருந்த இடத்தில் ஆடம்பர இந்திய ஹோட்டல் வருகிறது. ஒரு நாள் அறை வாடகை 350 பவுன் (35000 ரூபாய்)! இதில் 70 அறைகள் இருக்கும். வருவோருக்கு இந்து முறையில் நமஸ்தே கிடைக்கும்; ஆயுர்வேத சிகிச்சைப் பிரிவும் இருக்கும். யோகாவும் பயிற்றுவிக்கப்படும். ஹோட்டல் முழுதும் இந்தியப் பொருளாலேயே அலங்கரிக்கப்படும்.
இந்திய வந்தனோபசாரத்தை — விருந்தோம்பலை — மக்களுக்குக் காட்டுவது முக்கிய நோக்கமாகும். இது சவுத் பேங்கில் (South Bank) டவர் பிரிட்ஜ் (Tower Bridge) அருகே இருக்கிறது. ‘நான்’ , ரொட்டி, இந்திய தேநீர், சமோசா முதலியவற்றுடன் பல்வேறு வகை இந்திய உணவு பரிமாறப்படும். இது லலித் ஹோட்டல் குரூப்பைச் சேர்ந்தது. ஹோட்டலின் விலை ஐந்து கோடி பவுன் (500 கோடி ரூபாய்).லலித் சூரியின் மனைவி டாக்டர் ஜ்யோத்ஸ்னா சூரி இதன் மானேஜிங் டைரக்டர்.
கட்டிடத்தின் விலை 15 மில்லியன் பவுன்கள். அதற்குப்பின்னர் அதை ஹோட்டலாக மாற்ற 30 மில்லியன் செலவு!
லண்டனுக்குப் போனால் ஜாக்கிரதை!
லண்டனில் இந்தியர்கள், பாகிஸ்தானியர், கறுப்பர்கள் வசிக்கும் பகுதிகளுக்குப் போகாதீர்கள்; உங்கள் பாதுகாப்புக்காக இதைச் சொல்லுகிறோம் — என்று சீன விமான நிறுவனம் எச்சரித்திருக்கிறது. இது இனவெறி விளம்பரம் என்று லண்டனில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது
ஏர் சைனா Air China விமானத்தில் போடப்படும் பத்திரிக்கையில் In flight magazine இந்தக் கட்டுரை வெளியாகி இருக்கிறது. பெண்கள் தனியாக போகக்கூடாது யாரையாவது துணைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று எழுதியுள்ளனர்.
இது இனச் சிறுபானமையினருக்கு மட்டும் எதிரானதல்ல. லண்டனுக்கே எதிரான அறிவிப்பு என்று எம்.பி.க்களும் பொது மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
குளவிக்கூடு: ரயில சர்வீஸ் ரத்து!
அதிகாலை எழுந்து அவசரம் அவசரமாக ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடி வந்தால் ஒரு விநோத அறிவிப்பு?
“நார்பிடன் Norbiton வழியாக லண்டன் வா ட்டர்லூ London Waterloo ஸ்டேஷனுக்குச் செல்லும் காலை 5-51 ரயில் சர்வீஸ் ரத்து என்பதை வருத்தத்துடன் அறிவிக்கிறோம். ரயில் பெட்டிகளில் இரவோடு இரவாக குளவிகள் கூடு கட்டி இருந்தன என்பதே இதற்குக் காரணம்!”
இதைக் கேட்ட அதிகாலை பயணிகளுக்கு ஒரே கோபம். குளவி கூடு கட்டினால் அதை விலக்கிவிட்டு ரயிலைக் கொண்டுவரக்கூடாதா? அல்லது குளவிகள் உள்ளே போகாமல் கதவுகளை மூடி வைத்திருக்கக்கூடாதா? என்று மக்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்புகின்றனர்.
கோடை காலம் வந்துவிட்டால் ரயில்கள் மெதுவாக வேறு ஓடும்! ரயில் பாதை வெப்பத்தால் விரரிவடைவதால் வேகக் கட்டுப்பாடு அமலுக்கு வரும். குளிர் காலம் வந்துவிட்டாலோ, பனி பெய்து ரயிலகள் ரத்தாகும். ஒரு நாள் லண்டன் யுனிவர்சிட்டியில் தமிழ் பாடம் நடத்திவிட்டு, ” பையன்களே , பெண்களே! வெளியே பனி பெய்வதை ஜன்னல் வழியாகப் பாருங்கள். எல்லோரும் தாமதமின்றி வீடு போய்ச் சேருங்கள் என்று சொல்லிவிட்டு ஓடி வந்து ரயிலில் ஏறினேன். ‘இந்தப் பக்கம் ரயில்கள்’ போகாது’ ‘அந்தப் பக்கம் ரயில்கள் போகாது’ என்று அறிவிப்பு வந்துகொண்டே இருந்தன. பல லைன் Lineகளுக்கு மாறி மாறி பாதி தூரம் வந்தேன். “மிக பயங்கரமாக பனி பெய்வதால் எல்லா பஸ்களும் எல்லா ரயில்களும் ரத்து; ரயிலை விட்டு இறங்குங்கள்” என்று ஒரு ஸ்டேஷனி ல் அறிவித்தார்கள். இரவு முழுவதும் கெண்டகி ப்ரைடு சிக்கன் Kentucky Fried Chicken கடையில் ஒரு மூலையில் குந்தி இருந்தேன். நானோ வெ ஜிட்டேரியன் Vegetarian . காப்பிகூட வாங்கப் பிடிக்கவில்லை. அதிகாலையில் பக்கத்தில் வசித்த ஒருவரை அழைத்தேன். அவரும் எனக்கும் காரை ஓட்ட பயமாக இருக்கிரது உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் என் கார் உங்கள் ஸ்டேஷன் வரை வரும் என்று சொல்லி வந்தார். தப்பித்தேன் பிழைத்தேன் என்று காரில் ஏறிச் சென்றேன் அடுத்த சில மணி நேரத்தில் பஸ்கள் ஓடத் துவங்கின. அதிகாலையில் வீடு வந்து சேர்ந்தேன். உண்மையில் ஒருவருடைய முட்டாள்தனமான முடிவால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பஸ்கள் ஓடக்கூடிய அளவுக்குதான் பனி பெய்திருந்தது.
ஆகையால் குளவி மட்டுமில்லை; கொசுவுக்குக் கூட லண்டன் போக்குவரத்து நின்றாலும் நிற்கும்!
xxx
லண்டன் திருடன் பலே திருடன்!
சில நாட்களுக்கு முன் லண்டனில் கற்பழிப்புகள் அதிகரிக்கின்றன. மிகவும் பாதுகாப்பாற்ற நகரம் லண்டன் என்று பத்திரிக்கைகள் கொட்டை எழுத்தில் செய்திகள் போட்டன. இன்று மாலையில் உலகம் முழுதும் சுற்றிய ஒருவரின் மோட்டார் சைக்கிள் லண்டனில் தொலைந்து போயிற்று.
லண்டன் கென்சிங்டனைச் Kensington சேர்ந்த எலி கூரி Eli Coory படத் தயாரிப்பாளர். அறக்கட்டளைகளுக்கு நிதி திரட்டுவதற்காக மூன்றாண்டுகளாக மோட்டார் சைக்கிளில் உலக வலம் வருகிறார். அவர் சொன்னார்: “அலாஸ்காவில் கரடிகளுக்குப் பயப்படாமல் அதன் நடுவே ஓட்டி வந்தேன். சிலி நாட்டில் எரிமலை பொங்கும் போதும் மலைக் கணவாய்களைக் கடக்கையில் காட்டு நாய்கள் விரட்டும் போதும் ஓட்டி வந்தேன். உலகில் பாதுகாப்பற்ற இடங்கள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் இடையூறின்றி ஓட்டி வந்தேன். இளம் வயது புற்று நோயாளிகளுக்கு நிதி திரட்ட இதைச் செய்தேன். இறுதியில் லண்டனில் ஓட்டல் வாசலில் நிறுத்தியிருந்த வண்டியை யாரோ களவாடிவிட்டார்கள்”.
(அவருடைய பைக்கின் விலை 18,000 பவுன்கள்).
“இதயமில்லாத் திருடர்கள் இப்படிச் செய்துவிட்டார்களே. அதுவும் உலகப் புகழ் பெற்ற லண்டனில் இப்படித் திருட்டு நடந்தது மிகவும் வெட்கக்கேடு” என்றார்.
Research Article No. 1679; Dated 27 February 2015.
காகம் என்னும் பறவை குறித்து இதற்கு முன் பல கட்டுரைகள் எழுதிவிட்டேன். பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பாடிய கா….கா…. பாடல் முதல் சங்க இலக்கியத்தில் காகத்துக்கு ஏழு பிண்டம் வைத்தல் வரை, வள்ளுவன் குறள் முதல் பாரதி பாடிய காக்கை, குருவி எங்கள் ஜாதி…………… பாடல் வரை பலவற்றையும் நாலு ஐந்து கட்டுரைகளில் எழுதிவிட்டேன். இருந்த போதிலும் வராஹமிகிரரின் அற்புதமான சம்ஸ்கிருத கலைக் களஞ்சி யத்தில் (பிருஹத் சம்ஹிதா) காகமும் சகுனமும் என்ற அத்தியாயத்தைப் படித்தபோது மேலும் ஒரு அதிசய விஷயம் கிடைத்தது! “தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு” என்று எங்கள் ஐயன் திருவள்ளுவன் சும்மாவா சொன்னான்? படிக்கப் படிக்கப் புது விஷயங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
காக்கைக்கும் ஆட்சி மாற்றத்துக்கும் தொடர்பு உண்டு — என்று வராஹமிகிரரும் இரண்டாவது சார்லஸ் மன்னரும் நம்பினர்!
லண்டனில் டவர் மியூசியம் என்று ஒரு பெரிய கோட்டை – 980 ஆண்டுகள் பழமையான கோட்டை- இருப்பதும் அதில் இந்தியாவில் இருந்து கொண்டுவந்த (தப்புத் தப்பு…. கொள்ளை அடித்த) கோஹினூர் வைரம் உள்பட மஹாராணியாரின் விலைமதிக்கவொண்ணாத நகைகள், மணிமுடிகள் இருப்பதும் உங்களுக்குத் தெரிந்த விஷயமே!
லண்டனில் அந்தக் கோட்டையில் ஆறு அண்டங்காக்கைப் பறவைகள் இருப்பதும் அவைகளைப் பாதுகாக்க ரேவன்ஸ் மாஸ்டர் (ஆங்கிலத்தில் அண்டங்காக்கைக்குக் ரேவன் என்று பெயர்) என்று ஒருவர் அதிக சம்பளத்தில் ஊழியத்தில் இருப்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த ஆறு காக்கைகளும் அந்தக் கோட்டையில் இருந்து போய்விட்டால் பிரிட்டிஷ் முடியாட்சி முடிந்துவிடும் என்றும் அத்தோடு பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அஸ்தமித்துவிடும் என்றும் பலத்த நம்பிக்கை இருக்கிறது.
லண்டன் டவர் மியூசிய அண்டங்காக்கை
இதற்காக ஒவ்வொரு நாளும் அதை இரவில் ஒரு இடத்தில் ஜாக்கிரதையாகத் தூங்க வைப்பது ரேவன்ஸ் மாஸ்டரின் பொறுப்பு அவர் ஒவ்வொரு பறவைக்கும் 170 கிராம் மாமிசமும் ‘ரத்தம் தோய்ந்த பறவைகள் பிஸ்கட்’டும் கொடுத்து அதைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். இது இரண்டாவது சார்ல்ஸ் மன்னர் காலத்தில் துவங்கியது. இரண்டாவது உலக மஹா யுத்தத்தின்போது ஹிட்லரின் அதி பயங்கர குண்டுவீச்சில் லண்டன் என்ற ஒரு நகரமே இல்லை என்று ஆகிவிடுமோ என்று அஞ்சிய அப்போதைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மேலும் பல அண்டங் காக்கைகளைக் கொண்டுவர உத்தரவிட்டார். ஏனெனில் ஒரு குண்டு, கோட்டையில் விழுந்தாலும் ஆறு காக்கைகளும் அவுட். ஆனால் பிக் பென் கடிகார கோபுரம் பிழைத்தது போல அப்போதைய குண்டு வீச்சில் ஆறு காக்கைகளுல் தப்பின.
இப்படி இருக்கையில் 2013 அக்டோபரில் எல்லா பிரிட்டிஷ் பத்திரிக்கைகளும் ஒரு பரபரப்பான செய்தியை புகைப்படங்களுடன் வெளியிட்டன. அதாவது இரண்டு அண்டங் காக்கைப் பறவைகளை அதிகாலையில் வந்த ஒரு நரி கொன்றுபோட்டு விட்டது. உடனே பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அழிந்து விடுமோ என்றும் மஹாராணிக்கு ஊறு நேருமோ என்றும் வதந்திகள் பறந்தன. ஆனால் புத்திசாலி ரேவ்ன்ஸ் மாஸ்டர் கவலைப் படாதீர்கள், நான் இரண்டு ‘ஸ்பேர்’ (உதிரி) காக்கைக் குஞ்சுகளையும் வளர்த்து வருகிறேன் என்று காட்டினார். பிரிட்டானிய பெருமக்களும் பத்திரிக்கைகளும் ‘அப்பாடா’ என்று பெருமூச்சுவிட்டன!! இப்போது எட்டு அண்டங்காக்கைகள் அங்கே இருக்கின்றன. இதில் ஆறு எப்போதும் இருக்கவேண்டும். இல்லாவிடில் பிரிட்டிஷ் முடியாட்சி கவிழும் என்பது மக்களின் மகத்தான நம்பிக்கை.
ரேவன்ஸ் மாஸ்டர் – டெய்லி மெயில் புகைப் படங்கள்
நம்பிக்கை – மூட நம்பிக்கை – என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இது பெரிய டூரிஸ்ட் அட்ராக்சன்- சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் அம்சம். ரஷிய அதிபர் புடின் முதற்கொண்டு இதைப் பாதுக்காக்கும் பக்குவம் பற்றிப் பாராட்டிப் பேசிவிட்டுப் போய்விட்டார்!!.
ஆட்சி மாற்றம்: வராஹமிகிரர் ஏது செப்பினார்?
பிருஹத் சம்ஹிதாவில்— 1500 ஆண்டுகளுக்கு முன் — காக்கைகள் பற்றி நூற்றுக் கணக்கில் சம்ஸ்கிருத ஸ்லோகங்களை எழுதி வைத்திருக்கிறார்— அத்தியாயம் 95 — அவர் பகர்வதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:
1.வைகாசி மாதத்தில் நல்ல ஒரு மரத்தில் காகம் கூடு கட்டினால் அமோக தானிய விளைச்சல் இருக்கும். ஒரு பட்டுப்போன—பாடாவதி மரத்தில்கூடு கட்டினால் பஞ்சம் அழிவு ஏற்படும்.
2.இந்தியாவின் கிழக்கில் உள்ள பிரதேசங்களில் காக்கை வலது பக்கம் பறந்து வந்தாலும் கராயிகா (ஒருவகைக் கொக்கு) இடது பக்கம் பறந்தாலும் நல்லது என்று நம்புகிறார்கள். ஆனால் மற்ற பகுதிகளில் இதற்கு நேர்மாறாக நம்பிக்கை உளது.
(வராஹமிகிரர் இன்னும் ஒரு அத்தியாயத்தில் இந்தியாவின் ‘ஜியாக்ரபி’யை – புவியியலை – அக்குவேறு ஆணிவேராக அலசி இருக்கிறார்)
3.ஒரு மரத்தில் காக்கையின் கூடு எந்தக் கிளையில் இருக்கிறது- அதற்கும் மழைக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது பற்றி வராஹமிகிரர் செப்புவது யாதெனில்:
மரத்தின் கிழக்குப் புற கிளை= இலையுதிர் (காற்றடிக்கும்) காலத்தில் மழை பெய்யும்.
மேற்குக் கிளை= மழைக்காலத்தில் மட்டும் மழை
தெற்கு/வடக்கு கிழக்கு கிளைகள்= மழைக்காலத்துக்கும் காற்றடி காலத்துக்கும் இடையே மழை
மரத்தின் உச்சியில்= 4 மாதங்களுக்கு மழை கொட்டும் (ஆவணி,புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை)
தென்கிழக்கு = அவ்வப்போது மழை
தென்மேற்கு = காற்றடிக் கால பயிர்கள் தழைக்கும்
ஏனைய திசைகள் = நல்ல பயிர் விளைச்சல் வடகிழக்கில்= எலிகள் பெருகும்
பஞ்ச தந்திரக் கதையில் காகம்
கோவில்கள், வீடுகள், முட்புதர்கள் முதலிய இடங்களில் கூடு கட்டினால் = பசி, பட்டினி, பஞ்சம்
என் கருத்து: வராஹமிகிரர் சொல்லுவது சரியா தவறா என்று ஆராயக்கூட நமக்கு பல ஆண்டுகள் பிடிக்கும். அந்தக் காலத்தில் சி.சி.டி.வி. காமெரா, பைனாகுலர், வீடியோ காமெராக்கள் எதுவுமின்றி ஒரு சில ‘ஆர்னிதாலஜிஸ்ட்’கள் (பறவை இயல் வல்லுனர்) இயற்கையை நூற்றாண்டுக கணக்கில் உன்னிப்பாகக் கவனித்து, எழுதிவைத்து, ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே சகுன சாத்திரம் உருவாயிருக்கும். சகுனம் என்றால் பறவை எனப் பொருள்.
1500 ஆண்டுகளுக்கு முன்னர் வரஹமிகிரர் இவ்வளவு எழுத வேண்டுமானால் அதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பாவது யாரோ ஒருவர் இதை டாகுமெண்டு செய்து எதிர்கால சந்ததியினருக்கு அளித்திருக்க வேண்டும். ஆகவே அவர்கள் சொல்லுவதை நாமும் ஆராய வேண்டும். சில விடயங்கள் காலப் போக்கில் மாறத்தான் செய்யும். கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளுவது நம் கடமை.
ஒரு காக்கை 3 அல்லது 4 குஞ்சு பொறித்தால் அமோக உணவு விளைச்சல். ஐந்து குஞ்சுகள் பொறித்தால் ஆட்சி மாற்றம்!!! (எதிர்க் கட்சிகள் கவனத்தில் கொள்க!!!). முட்டைகளை உதைத்து தள்ளினாலோ, ஒரே முட்டை இட்டாலோ, முட்டையே இடாமல் இருந்தாலோ நல்லதல்ல—அமங்களம்.
5.ஒரு கிராமத்தின் நடுவில் காரணம் இன்றி காக்கைகள் மகாநாடு (கூடிக் கரைந்தால்) நடத்தினால் பஞ்சம் வரும். ஊரைச் சுற்றிச்சுற்றி வந்தால் எதிரிகள் முற்றுகை இடுவர். பல குழுக்களாகப் பிரிந்து கரைந்தால் அழிவு!
(என் கருத்து: சுனாமி, பூகம்பம், திடீர் வெள்ளம் ஆகியவற்றுக்கு முன், பறவைகள் என்ன செய்தன என்பதை ஆராய வேண்டும்)
6.காகங்கள் துணிச்சலாக மக்களைத் தாக்கினால் எதிரிகள் பெருகுவர். இரவில் வலம் வந்தால் ஊருக்கு அழிவு!
7.ஒரு தனி மனிதனை காகம் வலம் வந்தால் அவனுக்கு சொந்தக்காரர்கள் இடமிருந்து தொல்லை; அப்பிரதக்ஷிணம் செய்தால் (கடிகார திசைக்கு எதிராக – இடம் வந்தால்) எதிரிகள் இடமிருந்து தொல்லை. தாறு மாறாகப் பறந்தால் சூறாவளி வீசும்.
9.காகங்கள் ஒருவருடைய குடைகள், செருப்புகள், வண்டிகள், கருவிகளைத் தாக்கினால் அந்த ஆளுக்கு ஆபத்து. மாறாக ஒருவரை ‘பூஜித்தால்’ (சம்ஸ்கிருத ஸ்லோகத்திலும் பூஜயந்தி என்றே உளது!) அவருக்கு பட்டம் பதவிகள் கிடைக்கும். மேற்கூறிய பொருட்கள் மீது மலஜலம் கழித்தால் உணவு கிடைக்கும்!
காலம் மாறும் — பறவைகளும் மாறும்
காகம் சில பொருட்களை எடுத்துச் சென்றால் அதை ஒருவர் இழப்பார். கொண்டுவந்தால் அதை ஒருவர் பெறுவர். எடுத்து காட்டாக மஞ்சள் நிற பொருட்களை உங்களிடம் இருந்து பறித்துச் சென்றால் நீங்கள் தங்க நகைகளை இழப்பீர்கள். அது மஞ்சள் நிறத்தைக் கொண்டுவந்தால் உங்களுக்கு தங்கம் கிடைக்கும் (பெண்கள் கவனத்தில் கொள்க!!)
துணிமணி = உங்களுக்கு புத்தாடை யோகம்
வெள்ளி நிற வஸ்துக்கள் = வெள்ளி கிடைக்கும்.
இப்படி வராஹமிகிரர் அடுக்கிக் கொண்டே போகிறார். அடுத்த கட்டுரையில் சில சுவையான விஷயங்களை மட்டும் சொல்லுகிறேன்.
யாராவது தமிழ், வடமொழி இலக்கியங்களில் வரும் குறிப்புகளை ஆராய்ந்து, ஆர்னிதாலஜிஸ்ட்கள் (பறவை இயல் நிபுணர்கள்) எழுதிய உயிர் இயல் செய்திகளோடு ஒப்பிட்டு டாக்டர் பட்டம் வாங்கலாம். அணி மற்றும் காகம் எவ்வள்வு புத்த்சாலி என்பதை காட்ட நிறைய யூ ட்யூப் வீடியோகள் உள்ளன. நாமோ சின்ன வயதிலேயே புத்தி சாலிக் காகம் எப்படி பானையின் கீழிருந்த தண்ணீரை மேலே கொண்டு வந்தது என்று படித்திருக்கிறோம்.
கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:– 1181; தேதி:– 19 July 2014.
கம்பராமாயணப் பாடலைப் படிதவுடன் லண்டன் காட்சி ஒன்று நினைவுக்கு வந்தது. இங்கெல்லாம் ஒவ்வொரு சுரங்க ரயில் பாதை ஷ்டேஷனிலும் வீடுகளிலும் புறாக்கள் உட்காரக் கூடாது என்பதற்காக மேல் கூரையில் கூரான கம்பிகளைப் பொருத்தி வைத்திருக்கிறார்கள். காலையில் அலுவலகத்துக்குச் செல்லும் ஆட்களின் ‘கோட்டு- சூட்’டுகள் மீது புறாக்கள் எச்சம் போட்டுவிடக்கூடாது என்பதற்காக! லண்டனின் மத்தியப் பகுதியில் உள்ள டிரபால்கர் சதுக்கத்தில் புறாக்களுக்கு பொறி வாங்கிப்போடுவதை யும் தடுத்துவிட்டனர்.
லண்டன் முதலிய மேலைநாடுகளில் ஆடு, மாடு, நாய், பூனை, கோழி, சேவல் எல்லாவற்றையும் வளர்ப்பார்கள்; “மானே, தேனே, முத்தே, மணியே, கரும்பே, கற்கண்டே” என்று கொஞ்சுவார்கள். விருந்தினர் வரும் அன்று எல்லாம் “டைனிங் டேபிளில்” சாப்பாடாக மாறிவிடும். குழந்தைகள் கொஞ்சம் வருத்தப்பட்டால், அடுத்த விருந்து நடக்கும் வரை மரணத்தை ஒத்திப் போடுவார்கள். வெளிநாடு போகும்போது நாய் பூனைகளைக் கொலைக்களத்துக்கு அனுப்பிவிடுவார்கள். இதற்கான அறநிறுவனங்கள் அவற்றை வேறு யாரும் ஏற்காவிடில், ஒருவாரத்தில் எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து ‘’கருணையோடு’’ கொன்று விடுவார்கள்.
இதைத் தவிர ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் ஆடு மாடுகளின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில்!! லண்டனில் மட்டும்!!
கம்பன் பாடலில் அயோத்தி நகர மாளிகையில் புறவுக்கு மாடம் வைத்திருப்பதை ஒரு அழகு, ஒரு சிறப்பு என்று வருணித்ததைப் படித்தவுடன் இத்தனையும் நினைவுக்கு வந்தது!!!
புள்ளி அம் புறவு இறை பொருந்தும் மாளிகை
தள்ள அருந் தமனியத் தகடு வேய்ந்தன
எள்ள அருங் கதிரவன் இள வெயிற் குழாம்
வெள்ளி வெண் கிரிமிசை விரிந்த போலுமே
-பால காண்டம், பாடல் 121, கம்ப ராமாயணம்.
பொருள்: மாளிகைகளில் தங்கத் தகடுகள் வேயப்பட்டன. அவைகளை எளிதில் அகற்ற முடியாது. புள்ளிகளை உடைய மாடப் புறாக்கள் தங்குவதற்கு உரிய இடங்கள் இருந்தன. வெள்ளியிலான மலையில் காலை இளம் கதிரவனின் கிரணங்கள் பரவினால் எப்படி இருக்குமோ அப்படி அந்த மாளிகைகள் பிரகாசித்தன.
இதில் மாடப்புறாக்கள் தங்குவதற்கு இடம் இருந்தது என்பதைப் பெருமையாகக் கூறுகிறான் கம்பன். அதாவது மாடப் புறாக்கள் தங்குவதும் ஒரு அழகு. மாடங்களில் தங்குவதால்தான் அவைகளுக்கு மாடப்புறாக்கள் என்று பெயர். பறவைகளின் மீதுள்ள அன்புக்கு இதுவும் ஒரு சான்று.
இந்தியப் புலவர்கள் இயற்கையின் மீது பற்று உடையவர்கள். காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதி சுயம்வரக் காட்சியில் ஒரு பாடல் வருகிறது. சூரசேன மஹாராஜாவை இளவரசி இந்துமதிக்கு தோழி சுநந்தை அறிமுகப்படுத்துகிறாள் —- ஒவ்வொரு அரசனையும் அறிமுகப்படுத்தும் போதும் ஒவ்வொரு இயற்கைக் காட்சியும் வருகிறது. சூரசேன மன்னனை நீ மணந்துகொண்டால் கோவர்த்தன மலையில் உள்ள பாறைகளில் அமர்ந்துகொண்டு மயில்கள் ஆடுவதைப் பார்த்து ரசிக்கலாம் என்று கூறுகிறான் காளிதாசன்.
மேலை நாட்டு, கீழை நாட்டு அணுகுமுறைக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
Trafalgar Square in London. Now feeding pigeons is not allowed.
காக்கை குருவி எங்கள் ஜாதி நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்-
நோக்கும் திசை எல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம் — (பாரதி)
புறவுக்காக உயிர் கொடுக்க முன்வந்த சிபிச்சக்ரவர்த்தியின் புகழைப் பாடும் பாடல்கள் புறநானூற்றில் உண்டு. சோழநாட்டுக் கண்ணகியும் இதைக் குறிப்பிட்டு பாண்டிய மன்னனை வசைபாடுகிறாள்.
You must be logged in to post a comment.