32 அறங்கள், 16 பேறுகள், 8 மங்களச் சின்னங்கள் (Post No. 3507)

Written by London swaminathan

 

Date: 2 January 2017

 

Time uploaded in London:-  9-27 am

 

Post No.3507

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

பூங்கா வைத்து மலர்ச் செடிகளை வளர்த்தல், கோவிலில் நந்தவனம் அமைத்து பூஜைக்கு வேண்டிய மரம் செடி கொடிகளை வளர்த்தல். தல மரங்கள் என்ற பெயரில் பல்வேறு மரங்களுக்கு சிறப்பான இடம் தருதல், ஏழைகளுக்கு சத்திரம் அமைத்து உணவு கொடுத்தல், மருந்து கொடுத்தல், பிராணிகளுக்கு உணவும் நீரும் கிடைக்க ஏற்பாடு செய்தல் முதலிய ஏராளமான அறப் பணிகள் அந்தக் காலத்திலேயே நடைபெற்றன.

 

சிறைச்சாலைக் கைதிகளுக்கு உணவு கொடுத்தல் மேலை நாட்டிலும் இல்லாத ஒரு நூதன விஷயம். மன்னர்களின் பட்டாபிஷேகம், இளவரசர் பிறப்பு, திருமணம் ஆகிய காலங்களில் கைதிகளை மன்னித்து விடுதலை செய்தல் போன்ற பல அறப்பணிகள் நடந்துள்ளன. அறப்பணிகளுக்கான ஆதாரபூர்வ கல்வெட்டு அசோகர் சாசன காலத்திருந்து கிடைக்கின்றன. மஹாபாரத, ராமாயணம், அர்த்த சாத்திரம் முதலிய நூல்களிலும் கிடைக்கின்றன. மிகவும் நாகரீக முன்னேற்றம் உடைய ஒரு நாட்டில் மட்டுமே இத்தகைய சிந்தனைகள் எழும். சமூக சேவையில் பாரதம் உலகிற்கு வழிகாட்டியது என்று சொன்னால் மிகையில்லை

 

உவமான சங்ரகம் என்ற நூலில் எட்டு மங்கலச் சின்னங்கள் (அஷ்ட மங்கலம்), 16 பேறுகள், 32 அறங்கள் செய்யுள் வடிவில் உள்ளன.

செய்யுள் வடிவில் இருப்பதால் இரண்டு நன்மைகள்:- ஒன்று மனப்பாடம் செய்து நினைவில் வைப்பது எளிது. இரண்டாவது  இடைச்செருகலுக்கோ, மாற்றங்களுக்கோ வாய்ப்புகள் குறைவு.

 

 

1).வண்ணான் புன்னாவிதன் காதோலை சோலை மடந்தடம் வெண்

சுண்ணாம் பறவைப் பிணஞ்சுடற் றூரியஞ் சோறளித்தல்

கண்ணாடி யாவிற்குரிஞ்சுதல் வாயுறை கண்மருந்து

தண்ணீர் பந்தற் றலைக்கெண்ணை பெண்போகந் தரலையமே

 

2).மேதகுமாதுலர்க்குசாலை யேறுவிடுத்தல் கலை

யோதுவார்க் குண்டி விலங்கிற் குணவோடுயர்பிணிநோய்க்

கிதன் மருந்து சிறைச் சோறளித்தலியல் பிறரின்

மதுயற்காத்தநற்கந்நியர் தானம் வழங்கலுமே

 

3).கற்றவறுசமயத்தார்க் குணவு கருதும் விலை

உற்றதளித்துயிர் மீட்டல் சிறார்க்குதவனற்பான்

மற்று மகப்பெறுவித்தல் சிறாரை வளர்த்த்லெனப்

பெற்றவிவற்றினையெண்ணான்கறமெனப் பேசுவாரே

-உபமானசங்கிரஹம், இரத்தினச் சுருக்கம்

 

32 அறச் செயல்களின் பட்டியல்:-

1.ஆதுலர்க்குச் சாலை (ஏழைகள்=ஆதுலர்)

2.ஓதுவார்க்கு உணவு (மாணவர்களுக்கு)

3.அறுசமயத்தோர்க்கு உண்டி (உணவு)

4.பசுவிற்கு வாயுரை (உணவு)

5.சிறைக் கைதிகளுக்கு உணவு

6.ஐயமிட்டு உண் (பிச்சை போடுதல்)

7.திண்பண்டம் நல்கல் (விழாக் காலங்களில் பொங்கல், வடை)

8.அறவைச் சோறு (அன்னதானம்)

9.மகப்பெறுவித்தல் (பிள்ளை பெறுதல்)

10.மகவு வளர்த்தல் (பிள்ளைகளை வளர்த்தல்)

11.மகப்பால் வார்த்தல் (அவர்களுக்கு பால் வழங்கல்)

 

12.அறவைப் பிணஞ்சுடல் (அனாதைகள் இறுதிச் சடங்கு)

13.அறவைத் தூரியம் ( தூரியம்=மேள வாத்தியம்

அளித்தல்)

14.சுண்ணம் அளித்தல்

15.நோய்க்கு மருந்து வழங்கல்

16.வண்ணார்

17.நாவிதர்

18.காதோலை

19.கண்ணாடி

20.கண்மருத்து

21.தலைக்கு எண்ணெய்

 

22.பெண்போகம்

23.பிறர்துயர் காத்தல்

24.தண்ணீர் பந்தல்

  1. மடம் அமைத்தல்

26.குளம் வெட்டல்

27.பூங்கா வைத்தல்

28.ஆவுறுஞ்சுதறி (பசு முதலிய பிராணிகளுக்கு நீர்)

29.விலங்கிற்குணவு

30.ஏறுவிடுத்தல் (இனப்பெருக்கத்த்துக்கு காளைகள்)

31.விலைகொடுத்துயிர்காத்தல்

32.கன்னிகாதானம்

 

எட்டு மங்களச் சின்னங்கள்

 

சாற்றுங்கவரி நிறைகுடந்தோட்டிமுன் றர்ப்பணமா

மேற்றிய தீபம் முர்சம் பதாகை யிணைக்கயலே

நாற்றிசை சூழ்புவி மீதஅட்ட நன்குழையின்

மேற்றிதழ் வேற்றடங்கட்செய்ய வாய்ப்பைம்பொன்ந்த் மெய்த்திருவே

 

கவரி, நிறைகுடம் (பூர்ணகும்பம்),  தோட்டி(அங்குசம்),  தர்ப்பணம் (கண்ணாடி), தீபம், முரசம், பதாகை (கொடி), இணைக்கயல் ( இரட்டை மீன்)– ஆகியன அட்டமங்கலம் எனப்படும்.

 

 

வேண்டுநற்சுற்ற மிராசாங்க மக்கள்மேவு பொன்ம ணி

யாண்டிடுந்தொண்டு நெல்வாகன மாமிவை யட்டசெல்வங்

காண்டவி சீதல் கால்கெழு நீரொடு முக்குடி

நீராண்டளித்  தேபுனலாட்டனல் லாடை யணிதல்பினே

 

நல் சுற்றம், ராஜாங்கம், பிள்ளைகள் தங்கம், அணிவதற்குரிய ஆடை, ஆளுதர்க்குரிய அடிமை, நெல் முதலிய தானியம், வாஹனம் – இவையே அட்ட ஐஸ்வர்யம் (எட்டு செல்வங்கள் ) எனப்படும்.

 

16 பேறுகள்

 

பதினாறு பேறுகள் பற்றிய ஐந்து பாடல்களை ஏற்கனவே கொடுத்துள்ளேன். 16 பேறுகள்;

 

அழகு, வலிமை, இளமை, நன் மக்கள், நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், நிலம், பெண், தங்கம், அறிவு, உற்சாகம்,கல்வி, வெற்றி, புகழ், மரியாதை, தானியம் (உணவுப் பொருட்கள்).

 

ஐந்து கவிஞர்கள் பாடிய “பதினாறும் பெற்றுப் பெறுவாழ்வு வாழ்க”! –Posted on 2nd July 2014.

 

–subham–