
Post No. 10,009
Date uploaded in London – 23 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

புக்கர் டி வாஷிங்டன் ஒரு அமெரிக்க எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் வாழ்க்கை வரலாறு எழுதிப் புகழ் பெற்றவர் ஆவார்.
அவருடைய முழுப்பெயர் BOOKER TALIAFERRO WASHINGTON புக்கர் டாலியபெர்ரோ வாஷிங்டன் .
பிறந்த தேதி – ஏப்ரல் 5, 1856
இறந்த தேதி- நவம்பர் 14, 1915
வாழ்ந்த ஆண்டுகள் 59
இருபதாம் நூற்றாண்டின் முக்கிய AFRO-AMERICAN ஆப்ரோ- அமெரிக்க எழுத்தாளர். அவருடைய பூர்வீகம் ஆப்ரிக்க கண்டம். அவருக்கு 45 வயதானபோது அவர் சுயவரலாற்றை AUTOBIOGRAPHY எழுதி வெளியிட்டார். அடிமைத் தனத்திலிருந்து மீட்சி UP FROM SLAVERY என்பது அவருடைய நூலின் தலைப்பு.
அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் ரோனோக் என்னும் ஊரில் அடிமைக் குடும்பத்தில் அவர் பிறந்தார். அவருடைய தாயார் ஒரு சமையல்காரி. பெரிய தோட்டம் வைத்திருந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அவருடைய தந்தையாக இருக்கலாம் என்று தெரிகிறது . அமெரிக்க உள்நாட்டு யுத்தம் முடிந்த பின்னர் வாஷிங்டனும் அவருடைய அன்னையும் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் அந்தக் குடும்பம் வேறு இடத்திற்குப் போய் தங்கியது. அவருடைய அன்னை வேறு ஒருவரைக் கல்யாணம் கட்டினார். அப்போது வாஷிங்டன் ஒரு சிறுவன்தான். குடும்பத்திற்கு உதவுவதற்காக நிலக்கரிச் சுரங்கம், உப்பளம் ஆகியவற்றில் வேலை செய்தார் .
அவருக்குக் கல்வி கற்கும் ஆர்வம் பிறந்தவுடன் இரவு நேரத்தில் உள்ளூர் ஆசிரியரிடம் எழுதவும் படிக்கவும் தெரிந்து கொண்டார். 500 மைல் தொலைவில் வர்ஜீனியாவில் ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுவர்களுக்காக ஒரு விஷேச பள்ளிக்கூடம் திறக்கப்பட்டவுடன் அங்கு சென்றார். 16 வயதுதான். பெரும்பாலான தூரத்தை நடந்தே கடந்தார்.
பட்டப்படிப்பில் தேறியவுடன் அலபாமா மாநிலத்தில் (TUSKEGEE IN ALABAMA) தலைமை ஆசிரியர் வேலை கிடைத்தது. பள்ளிக்கூடத்துக்கு சரியான கட்டிடம் இல்லை; கட்டிடம் கட்டுவதற்கு யாரிடமும் பண வசதியும் கிடையாது . ஒரு பந்தல் திடலில் பள்ளிக்கூடத்தை நடத்தினார். 34 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், அவருடைய உழைப்பின் மூலம், அது சிறந்த பள்ளி என்ற பெயரை ஈட்டியது . அவர் சிறந்த பேச்சாளரும் கூட. அமெரிக்க ஜனாதிபதிகளான ரூஸ் வெல்ட் , டாப்ட் ROOSVELT, TAFT ஆகியோருக்கு ஆலோசகராகவும் திகழ்ந்தார். கறுப்பின மக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய பாடுபட்டார். பொருளாதார சமத்துவமே சமூக சமத்துவத்தைக் கொணரும் என்பது அவர் கொள்கை.
புக்கர் வாஷிங்டன் எழுதிய நூல்கள்:–
1899- THE FUTURE OF THE AMERICAN NEGRO
1900- THE STOTY OF MY LIFE – WITH EDGAR WEBBER
1901 – UP FROM SLAVERY- WITH MAX BENNETT THRASHER
1904- WORKING WITH HANDS
1913- THE STORY OF SLAVERY



–SUBHAM—

tags — அமெரிக்க எழுத்தாளர், கட்டுரையாளர்,புக்கர் டி வாஷிங்டன், Booker T.Washington