பகவத்கீதை சொற்கள் INDEX-24; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -24 (Post.10,392)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,392

Date uploaded in London – –   29 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் INDEX-24; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -24

XXXX

சம்ஸ்க்ருத உயிர் எழுத்துக்கள்

ஸம்ஸ்க்ருத மொழியில் எ , ஒ என்ற இரண்டு குறில் எழுத்துக்கள் இல்லை

க்ரு – என்ற உயிர் எழுத்து உண்டு

: = இரண்டு புள்ளிகள் விசர்க்கம் எனப்படும்; இது முந்தைய உயிர் எழுத்துக்குத் தக்கவாறு

ஹ ஹா ; ஹி ஹீ , ஹு ,ஹூ என்றெல்லாம் ஒலிக்கும் /மாறும்.

XXXX

ஓ – வர்க்க சொற்கள்

ஓஜஸா  15-13  சக்தியால்

ஓஷதீஹி  15-13 பயிர்களை/தாவரங்களை

ஓம் 8-13  ஓம் என்னும் பிரணவ மந்திரம் ; அ  , உ, ம என்பது

விஷ்ணு , சிவன், பிரம்மாவைக் குறிக்கும்

ஓம்காரஹ 9-17 ஓம்காரம்

XXX

ஒள – வர்க்க சொற்கள்

ஒளஷதம் – 9-16 மருந்து

XXXX

க – வர்க்க சொற்கள்

கச்சித்  6-38 இல்லையா , அல்லவா

கட்வமல – லவணாத்யுஷ்ண –

தீஷ்ண – -ருக்ஷ -விதாஹினக 17-9 கசப்பு, புளிப்பு, உவர்ப்பு கடுஞ்சூடு உரைப்பு , எரிப்பு

கதரத் 2-6 எது

கதய 10-18 சொல், விவரி

கதயன்தஹ 10-9 அவன் விவரித்துச் சொல்லும்போது

கதயிஷ்யாந்தி  2-34 சொல்லுவான், பேசுவான்

கதயிஷ்யாமி  10-19  விவரிப்பேன்

கதம்  1-37 எப்படி, எவ்வாறு

கதாசன 2-47 ஒருபொழுதும்

கதாசித் 2-20 எந்த நேரத்திலும்

கபித்வஜஹ  1-20 குரங்குக் கொடி உடையவன் ; அர்ஜுனன்

கொடியில் அனுமன் சின்னம்

கபிலஹ 10-26 கபில ரிஷி/ முனிவர்

கமல பத்ராக்ஷ  11-2 தாமரை இதழ் வடிவ கண் உடையோன்

தாமரைக்கண்ணான் (திருக்குறள் 1103)

கமலாஸனஸ்சதம்  11-15 தாமரையில் அமர்ந்தவன்

கரணம் 18-18 கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள்

கரிஷ்யதி 3-33  செய்வான், செய்கிறான்

கரிஷ்யஸி  2-33 நீ செய்வாய்

கரிஷ்யே  18-73 செய்கிறேன்

கருணஹ  12-13 உயிர்களிடத்தில் கருணை/அன்பு உடையவன்

கரோதி  4-20 செய்கிறான்

கரோமி 5-8 செய்கிறேன்

கரோஷி 9-27 நீ செய்கிறாய்

கர்ணம்  11-34 கர்ணனை

கர்ணஹ  1-8 கர்ணன்

கர்தவ்யம்  3-22 கடமை

கர்தவ்யானி 18-6 செய்யவேண்டிய கடமை / கர்ம

கர்த்தா  3-24 செய்பவன், கர்த்தாவாய்  இருப்பினும்

கர்த்தாரம்  4-13 செய்பவனை

கருதும் 1-45 செய்வதற்கு

கர்த்ருத்வம் 5-14 கர்த்தாவாய் இருத்தலை

கர்ம  2-49 ஒருவனின் செய்கை, செயல்

36 WORDS ADDED FROM PART 24 OF GITA WORD INDEX

XXXX SUBHAM XXX

TAGS – பகவத், கீதை சொற்கள் -24, GITA INDEX 24