பிரிட்டனின் பேய்க்கதை மன்னன் எம்.ஆர். ஜேம்ஸ் (Post No.9939)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9939

Date uploaded in London – 5 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பேய்க் கதைகள் (GHOST STORIES) , பயமுறுத்தும் ஆவிகள், துரத்தியடிக்கும் பிசாசுகள் பற்றி எழுதிப் புகழ்பெற்றவர்  பிரிட்டனின் அதி பயங்கர எழுத்தாளர் எம். ஆர். ஜேம்ஸ் M R JAMES . கல்யாணம் செய்துகொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே இறந்தார். பெண்களையும் பேய் என்று நினைத்தாரோ!?!?

அவர் எழுதிய கதைகளைப் படித்தால், யாரும்  அந்தப் பேய்களை  மறக்க முடியாது.

மாண்டேகு ரோட்ஸ் ஜேம்ஸ் MONTAGUE RHODES JAMES , ஒரு கிறிஸ்தவ மதப் பிரசராகரின் மகன். அவர் அரச வம்சத்தினரும் பணக்கார்களும் கல்வி பயிலும் ஈடனில் ETON COLLEGE பயின்றார்.அங்கே ஐரிஷ் பேய்க்கதை எழுத்தாளர் ஷெரிடன் லே பானு SHERIDAN LE FANU எழுதிய பேய்கள் பற்றிய கதைகளை விரும்பிப் படித்தார். வாழ்நாள் முழுதும் அவரை மறக்காமல் பாராட்டியும் வந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் படம் கற்றார். பழங்கால சுவடிகள் (ANCIENT MANUSCRIPTS), தஸ்தாவேஜுகளைப் படிப்பதில் தேர்ச்சியும் பெற்றார்.

கேம்பிரிட்ஜ்  நகரில் ஒரு கல்லூரிக்கும், ஈடன் கல்வி நிறுவனத்துக்கும் தலைமைப் பொறுப்பேற்று பணியாற்றினார்.ஆண்கள் சகவாசத்திலேயே வாழ்ந்த அவர் திருமணம் செய்துகொள்ளவே இல்லை.

பழகுதற்கு இனியர் ஆயினும் ஒரு பயங்கொள்ளி. இரவு நேரத்தில் பயங்கரக் கனவுகள் வருவது அவருக்கு சர்வ சாதாரண நிகழ்வு. சின்னப்பையனாக இருக்கும்போது பஞ்ச் அன்ட் ஜூடி PUNH AND JUDY  பொம்மலாட்ட வடிவங்களை அட்டையில் வெட்டித் தயாரித்து விளையாடுவார். இதில் ஒன்றை பேய் GHOST என்று சொல்லி விளையாடுவார் . இது அவர் வாழ்நாள் முழுதும் சொப்பனங்களிலும் கதைகளிலும் கதாநாயகன் ஆகிவிட்டது.

குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் விடுமுறைக்  காலத்திலும் ஒரு பேய், பிசாசுக் கதையை சொல்லுவது வழக்கம். இதை அவரே எழுதி உரத்த குரலில் படித்து நண்பர்ளை மகிழ்விப்பார் ; பயமுறுத்துவார் .ஒரு நடுத்தர வயது வரலாற்று அறிஞர் ஒரு வரலாற்றுப் புதியலைக் கண்டுபிடித்து தோண்டி எடுப்பதாகவும் அதில் ஒரு வரலாற்று கலைப்பொருளுடன் தொடர்புடைய பேயும் தோன்றுவதாகவும் அவர் கதைகளில் வரும். அந்தப் பேயை அதி பயங்கர உருவமாகக் காட்டி வருணிப்பார் . அதுமட்டுமல்ல. அது தோன்றும் நள்ளிரவு வேளை வருணனை, கேட்போரை புல்லரிக்கச் செய்யும்.

42 வயதில் அவர் முதல் பிசாசுக் கதைத் தொகுப்பை புஸ்தகமாக வெளியிட்டார். அது முதல் இவர் நன்றாக ‘கதை அடிப்பவர்’ என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இவர் அடித்த கதைகளில் ஒன்று:- ஒரு அறிஞர் பேய்களைப் பற்றிய சில காகிதங்கள், சுவடிகளைக் கண்டுபிடிக்கிறார். அதில் விசில்/ ஊதல்  பேய் சொல்கிறது. எப்போதாவது நீ விசில் அடித்தால் நான் வந்துவிடுவேன் என்று. கண்டுபிடித்த வரலாற்று அறிஞர் விசில் அடிக்கிறார். அவ்வளவுதான்! ஒரு பயங்கர ஆவி தோன்றி அவரைத் துரத்தித் துரத்தி அடிக்கிறது . முடிவு என்ன ஆயிற்று – வெள்ளித் திரையில் காண்க!!! அல்லது புஸ்தகத்தில் கடைசி பக்கங்களில் காண்க!!!.

பிறந்த தேதி – ஆகஸ்ட் 1, 1862

இறந்த தேதி – ஜூன் 12, 1936

வாழ்ந்த ஆண்டுகள் – 73

ஜேம்ஸ் எழுதிய கதைப் புஸ்தகங்கள் –

1904- GHOST STORIES OF AN ANTIQUARY

1911- MORE GHOST STORIES OF AN ANTIQUARY

1919- A THIN GHOST AND OTHERS

1922-  THE FIVE JARS

1922- MEDEVAL GHOST STORIES

1926 – A WARNING TO THE CURIOUS

1931- COLLECTED GHOST STORIES

அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும்  இருந்தார்; பல வரலாற்று நூல்களை எழுதினார். சுவடிகளின் அட்டவணை / கேட்டலாக் நூல்களை தொகுத்தார் . அவர் காலத்தில் அருங்காட்சியக ங்களுக்கு அரிய ஓவியங்களையும் கலைப் பொருட்களையும், சுவடிகளையும் சேகரித்துக் கொடுத்தார்.

ஜேம்ஸின் கதைகள் டெலிவிஷன் தொடராகவும், பிபிசி வானொலி ஒலி பரப்புகளாகவும் வந்தன.

–SUBHAM–

TAGS- பேய்க் கதைகள், எம்.ஆர்.ஜேம்ஸ், ஆவிகள், பிசாசுகள் , கதை, M R JAMES