சூர்தாஸர் அவதரித்த கிராமம் உரிய பெயரைப் பெறுகிறது (Post.9767)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9767

Date uploaded in London – –  –23 JUNE   2021   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சூர்தாஸர் அவதரித்த கிராமம் உரிய பெயரைப் பெறுகிறது!

ச.நாகராஜன்

16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகான் சூர்தாஸர். இரு கண்களை இழந்த போதும் இடைவிடாமல் இறைவனைப் போற்றிப் பாடினார். ஊனக் கண்ணை இழந்த அவர் ஞானக் கண்ணைப் பெற்றார். இறைவன் அருளால் ஊனக் கண்களில் ஒளி பெற்று இறை தரிசனத்தையும் பெற்றார். 1478ஆம் ஆண்டு பிறந்த சூர்தாஸர் 1581ல் இறைவனுடன் ஒன்றினார். விரஜ மொழியில் பக்தி இலக்கியத்தைப் படைத்த இவர் மதுராவில் உள்ள பராசௌலி கிராமத்தில் இறுதிக் காலத்தில் வாழ்ந்து வந்தார். முகலாயப் படையெடுப்பை ஒட்டி இந்த கிராமம் மஹமத்பூர் என்று பெயரிடப்பட்டது.

இன்றைய உத்தரபிரதேசத்தை ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த முதல்வரான யோகி ஆதித்ய நாத் பண்டைய பழம் பெரும் பாரம்பரியத்தை கொண்ட ஊர்களை, அவை பெயர் மாற்றப்பட்டிருப்பின், மீண்டும் புகழோங்கிய பழைய பெயரைக் கொண்டு வருவதில் தீவிரமாக இருக்கிறார்.

அதையொட்டி அவர் அதிகாரபூர்வமாக கெஜட் வெளியீட்டில் மஹமத்பூரை பராசௌலியாக மாற்றியுள்ளார். பராசௌலி பராசர முனிவர் வாழ்ந்த இடம் என்று கூறப்படுகிறது.

பொதுமக்களின் நீண்டநாளைய வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டு விட்டதால் அங்கு ஒரே மகிழ்ச்சி. சூர்தாஸ் ப்ராஜ் ராஸ்தாலி விகாஸ் சமிதியின் செயலாளர் ஹரி பாபு கௌசிக், “ 1982ஆம் ஆண்டிலிருந்தே இந்த பெயர் மாற்றத்தை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் யோகி ஆட்சிக்கு வந்த பின்னரேயே இது செயல்படுத்தப்பட்டிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் கூறினார். பராசௌலி கோவர்தனில் உள்ள ஒரு கிராமம். இங்கு ஏராளமான பக்தர்கள் சூர்தாஸரின் சமாதிக்கு வந்து வணங்குகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள வீடுகளின் சுவர்களில் சூர்தாஸரின் பாடல்கள் எழுதப்பட்டிருப்பது சாதாரணமான காட்சியாகும்.

மாவட்ட மாஜிஸ்ட் ரேட் நவ்நீத் சிங் சஹால், “2019இல் பிரேரிக்கப்பட்ட இந்த வேண்டுகோள் உத்தரபிரதேச அரசினால் அங்கீகரிக்கப்பட்டு சென்ற மாதத்தில் ( மார்ச் 2021இல்) கெஜட் அறிவிப்பும் வெளியிடப்பட்டு விட்டது” என்றார்.

(செய்தியின் ஆங்கில வடிவத்தைக் கீழே காணலாம்.)

யோகி ஆதித்ய நாத் அரசுப் பொறுப்பை ஏற்றவுடன் அலஹாபாத் ப்ரயாக் ராஜ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதே போல ஃபஜியாபாத் அயோத்யா ஆனது;  முகல்சராய் தீன் தயாள் உபாத்யாயா நகர் ஆனது. ஆக்ராவில் உள்ள முகல் மியூஸியம், சத்ரபதி சிவாஜி மஹராஜின் பெயரைக் கொண்டு விளங்குகிறது!

இதே போல ஆக்ராவையும், வரலாற்றை நன்கு ஆய்வு செய்து அதன் பெயரை அக்ராவன் என மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெயர் மாற்றம் நடக்கும் என்றே நம்பலாம்!

ஜெய் சூர்தாஸ்!

Mathura, Apr 8, 2021 (PTI) The Uttar Pradesh government has renamed Mathura’s Mahmudpur village as Parasauli, an official said on Thursday.

Confirming it, District Magistrate Navneet Singh Chahal said a gazette notification has been issued, renaming the village in Goverdhan tehsil.

The village is associated with Bhakti saint Surdas, who had spent over seven decades here, an office-bearer of Surdas Braj Ras Sthali Vikas Samiti said here, adding that they have been demanding a change in the name since 1982.

Narrating the history of the village, another office-bearer of the Samiti said the village was named Parasauli as noted sage Parashar was born here.

Lord Krishna and his divine consort Radha took part in a ‘Raslila’ for uninterrupted six months in the Chandra Sarovar area of the village, the office-bearer added.

***

tags–  சூர்தாஸர், கிராமம் , parasauli, surdas village,