Research Paper written by London swaminathan
Research Article No.1653; Dated 16th February 2015.
சிந்து சமவெளி நாகரீகம்- சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் 25 கட்டுரைகளுக்கு மேல் எழுதிவிட்டேன். நான் வலியுறுத்துவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆரிய-திராவிடம் என்னும் பிரிவினைக் கண்ணோட்டத்தில் பார்க்காது புதிய கோணத்தில் பார்க்க வேண்டும். அப்போதாவது அந்த சிந்து வெளி எழுத்தின் மர்மத்தைத் துலக்க முடியுமா, புதிரை விடுவிக்க முடியுமா என்று பார்ப்போம் என்பதே.
50 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் –பின்னிஷ் ஆராய்ச்சியா ளர்கள், அதற்கு முன்னால் அதைத் தோண்டி எடுத்தவர்கள் என்ன சொன்னார்களோ அதையே சொல்லி ஆராய்ச்சி உலகத்தையே திசை திருப்பிவிட்டார்கள். இதனால் இன்று வரை அந்த எழுத்துக்களைப் படிக்க இயலவில்லை– சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.
இந்தக் கட்டுரையின் நோக்கம் அந்த முத்திரையில் இருப்பது — தனி நபர்களின் பெயர்களாக இருந்தால் — அதை எப்படிப் படிப்பது என்ற ஒரு யோஜனைதான்.
மக் டொனால்ட் (Mac Donald) என்ற பெயர் எல்லோருக்கும் தெரியும். இதற்கு ஐரிஷ் மொழியில், டொனால்ட் மகன் என்று பொருள். இதே போல ஓ’ஷானஸ்ஸி (o’ Shaughnessy) என்ற பெயரும் அயர்லாந்தில் அதிகம் காணப்படும். ‘ஓ’ என்பது பேரன் என்ற பொருளில் வரும். அதாவது ஷானஸ்ஸியின் பேரன். இதை சிந்து சமவெளியிலும் பார்க்க முடியுமா? முடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது.
சிந்து சமவெளியில் பல முத்திரைகள் ஒரு வட்ட வடிவ எழுத்துடன் துவங்கும். அதற்கு அடுத்தாற் போல், ஆங்கிலத்தில் ‘அபாஸ்ட்ரோபி’ (apostrophe) குறி போடுவது போல இரண்டு கோடுகள் வரும். படத்தில் காண்க. இதுவும் அயர்லாந்தில் உள்ளது போல இன்னாரது மகன் அல்லது பேரன் என்பதைக் குறிக்கும் குறி ஈடாக இருக்கலாம்.
சிந்துவெளி முத்திரைகளில் உள்ள விஷயம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. சிலர் அது, உப்பு, புளி, மிளகு கணக்கு என்று எண்ணுகின்றனர். அதாவது இன்ன அளவு இன்ன பொருள்களை ஏற்றி அனுப்புகிறோம் என்ற (ஏற்றுமதி) விஷயம் என்பர். மற்றும் சிலரோ, இது தனி நபர்களின் பெயர்கள் பொறித்த டோக்கன் (Token) வில்லைகள், ஜப்பானில் இப்படி குடும்பத்திற்குக் குடும்பம் உண்டு என்பர். அது உண்மையானால், நான் எண்ணுவது போல மகன் அல்லது பேரன் என்பதைக் குறிக்க கோடுகள் பயன்பட்டிருக்கலாம். அல்லது என்ன ஊர் என்பதைச் சொல்லும் குறியாக இருக்கலாம்.
இதை உறுதிப் படுத்த சில எடுத்துக் காட்டுகளைத் தருவேன். புறநானூற்றில் “மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்” என்று அப்பா பெயருடன் மகன் பெயர் வரும்.
இப்படிப் பல தலைமுறைகளின் பெயர்களைச் சொல்லும் வழக்கம் இந்தியாவில்தான் முதலில் இருந்தது. விஷ்ணு சஹஸ்ரநாமம் என்னும் புகழ் பெற்ற துதியில் ஐந்து தலை முறைகளின் பெயர்கள், ஒரே ஸ்லோகத்தில் வந்து விடுகிறது!
வியாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரம் அகல்மஷம்
பரசராத்மஜம் வந்தே சுகதாதம் தபோநிதிம்
இதில் வசிஷ்டர், அவருடைய மகன் சக்தி, அவருடைய மகன் பராசரர், அவருடைய மகன் வியாசர், அவருடைய மகன் சுகர் ஆகிய ஐந்து தலைமுறைகளைச் சொல்லி வணங்குகின்றனர்.
இதே போல பிராமணர்கள் மாதப் பிறப்பிலும் அமாவாசையிலும் செய்யும் தர்ப்பணத்தில் தந்தை, தாத்தா (தந்தைக்கு தந்தை), கொள்ளுத் தாத்தா (பிதா, பிதாமஹான், ப்ரபிதா மஹான்) என்ற மூன்று தலை முறைக்கு நீர்க்கடன் செலுத்துவர்.
இந்த வழக்கம் உலகம் முழுவதும் இருந்தது. அஸ்ஸீரீயாவில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதத்தில் “பாலாவின் மகனான ஆடா”வின் அம்பு (Arrow of Ada, Son of Bala) என்று எழுதப்பட்டுள்ளது. இது கி.மு.1100 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. எட்டாம் நூற்றாண்டு மன்னர் ஒருவர் உருவத்தில் அந்த மன்னர், அவருடைய தந்தை மற்றும் தாத்தா பெயர் எழுதப் பட்டுள்ளது.
பெயர் வைக்கும் முறை உலகம் முழுதும் இந்திய முறையை ஒட்டியே இருந்தது. சம்ஸ்கிருதத்தில் ‘சு’மதி, ‘சு’கந்தி, ‘சு’கர்ணன் என்றெல்லாம் பெயர்கள் இருக்கும் இந்த “சு” என்பது நல்ல என்று பொருள்படும். இதையே தமிழ்ப் புலவர்களும் ‘நக்’கீரன், ‘நன்’னாகன், ‘நச்’செள்ளை, ‘நப்’பின்னை என்று வைத்துக் கொண்டனர். அதாவது முன் ஒட்டு Pre fix (நல்/ நற்) மூலம் பெயர் பெற்றனர். இதே போல வர்மன், சேன என்பதற்கு இணையாக மாறன், சேரன் என்று பின் ஒட்டுகளையும் (Suffix) பயன்படுத்தினர். வட மொழியில் சு= தமிழில் நல்.
அயர்லாந்தில் பெண்கள் “மக்”, “ஓ” என்ற எழுத்துக்களுக்குப் பதிலாக “நி” அல்லது “நிக்” (Ni or Nic) எனப் பயன்படுத்தினர். சுமேரியாவிலும் “என்” என்ற முன் ஒட்டு ஆண்களுக்கும் “நின்” (En and Nin) என்ற முன்னொட்டு பெண்ளுக்கும் பெயர்களில் வரும்.
அயர்லாந்தில் “மோர்” என்றால் பெரிய, “ஓக்” என்றால் (Mor and Og) இளைய (ஜூனியர்) என்பது பெயர்களில் ஒட்டிக் கொண்டுவரும். இதுவும் சம்ஸ்கிருத வழக்கே. தமிழில் இதை “முது”கண்ணன், “முது”கூத்தன் என்றும் “இள”நாகன், “இள”ங்கீரன் என்றும் பயன்படுதுவதைக் காணலாம். சம்ஸ்கிருதத்தில் மஹா மூலன், மஹா சாஸ்தா என்பர். இது சங்க இலக்கியத்தில் தமிழில் “மா”மூலன், “மா”சாத்தன் என (புறநானூற்றில்) வரும். சுருங்கச் சொல்லின் சம்ஸ்கிருதப் பெயர்களில் உள்ள முன் ஒட்டுகளை (Prefix) சுமேரியா, அயர்லாந்து, சங்கத் தமிழில் காணாலாம். உலகில் மிகப் பழைய இலக்கியமான வேதங்களில் இப்படிப் பெயர்கள் காண ப்படுவதால் நாமே உலகிற்கு இதைக் கற்றுத தந்தோம் என்றால் அது மிகையாகாது.
உலக மொழிகள் எல்லாம் தமிழில் இருந்தும் சம்ஸ்கிருதத்தில் இருந்தும் சென்றனவே என்றும், அவ்விரு மொழிகளும் பாரத மண்ணில், பாரத சிந்தனையில் பிறந்தவை என்றும் நான் இதே பிளாக்-கில் ஆய்வுக் கட்டுரை எழுதிவிட்டேன். நான் சொல்லும் மறுக்க முடியாத ஆதாரம் “சந்தி (புணர்ச்சி)” விதிகள் ஆகும். உலகில் இரண்டே மொழிகளில்தான் அது நடை முறையில் உள்ளது- இலக்கண விதிகளில் உள்ளது. சம்ஸ்கிருதமும் தமிழும் ஒரே மூலத்தில் உதித்தவை என்ற நம் முன்னோர் கருத்து மேல் நாட்டாரின் மொழிக் கொள்கைகளைத் தகர்த்து எறியும். இதற்கு சந்தி விதிகள் ஒன்றே போதும். உலகில் வேறு எங்காவது கொஞ்சம் மிச்சம் சொச்சம் சந்தி விதிகள் இருக்கிறதென்றால் அவைகள் எல்லாம் சம்ஸ்கிருத மொழியில் இருந்து தோன்றிய மொழிகளாக இருக்கும் (பிரெஞ்ச், லத்தீன், ஆங்கிலம் முதலிய மொழிகளில் கொஞ்சம் உண்டு. அவை எல்லாம் சம்ஸ்கிருத குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளே என்பதை எல்லோரும் ஏற்பர்).
ஆகவே இந்த மொழிக் கொள்கைகளின் பின்னணியில் சிந்து வெளி முத்திரைகளை அணுகினால், ரோஸட்டா கல்வெட்டு (Rosetta Stone) இல்லாமலேயே சிந்துவெளி முத்திரைகளைப் படித்து விடலாம்.
லண்டனுக்கு வரும் சொந்தக் காரர்களையும் நண்பர்களையும் பிரிட்டிஷ் மியூசியத்துக்கு அழைத்துச் செல்லும்போதெல்லாம் நான் ரோஸட்டா கல்வெட்டு (Rosetta Stone) பக்கத்தில் போய் ஒருமுறை பெருமூச்சுவிட்டு வருவேன். “இறைவா! எகிப்திய ஹைரோகிளிபிக்ஸைப் படிக்க இப்படி ஒரு மும்மொழிக் கல்வெட்டைக் கொடுத்தாயே! எங்கள் சிந்துவெளி முத்திரைகளைப் படிக்க ஒரு இருமொழிக் கல்வெட்டையாவது கொடுக்கக்கூடாதா! அதையும் என் கைகளில் கொடுத்தால் இலக்கிய நோபல் பரிசையே வாங்கிவிடுவேனே! என்று ஏங்குவேன்.
Rosetta Stone in Ancient Greek, Demotic and Hieroglyphs, displayed in British Museum,London.
முடிவுரை: சிந்துவெளி முத்திரைகளில் Personal Name பெர்ஸனல் நேம்- கள் இருந்தால் ஐரிஷ் மொழி Formula பார்மூலாவை apply ளை செய்யுங்கள். உலகின் பழைய மொழிகள் எல்லாம்,ஆண்-பெண் பெயர்களில் முன் ஒட்டைப் பயன்படுத்டுவது சம்ஸ்கிருதத்தில் உள்ளது போலவே உள்ளது. சங்கத் தமிழ் புலவர் பெயர்களும் அப்படியே உள்ளன. ஆகவே சிந்துவெளி முத்திரைகளில் மனிதர்கள் பெயர்கள் என்று ஒன்று இருக்குமானால் அதற்கும் இதே பார்முலாவை Formula பயன்படுத்துங்கள்.
வாழ்க தமிழ் (வலக் கண்)! வளர்க சம்ஸ்கிருதம் (இடக் கண்)!!
You must be logged in to post a comment.