சிந்து சமவெளியில் கந்தர்வர்கள்!!

பிராணியின் கழுத்துக்குக் கீழே உள்ளது சோமரச வடிகட்டி

Research Paper No.1807; Date: 17th April 2015

Written by London swaminathan

Uploaded from London at 19-47

I have already published the English Version of this article.

கட்டுரைச் சுருக்கம்:

1.சிந்து சமவெளிக்கும் கந்தர்வர்களுக்கும் தொடர்பு உண்டு

.2.அங்கே அவர்கள் மற்ற இனத்துடன் வாழ்ந்தாலும் முக்கியப் பங்கு வகித்தனர்.

3.அவர்கள் சோமக் கொடி பயிர் செய்வதில் வல்லவர்கள். மலைகளில் வசித்ததால் அதை இந்து யாக யக்ஞாதிகளுக்கு சப்ளை செய்தனர். சிந்து வெளியில் சோமரச வடிகட்டி காட்டும் முத்திரைகள் கந்தர்வர்களுடையவை.

4.லவன், குசன், துர்யோதனன் நாகர்கள், இந்திரன் ஆகியோருடன் அவர்கள் சண்டை போட்டது பற்றி இதிஹாச புராணங்கள் கூறுவதால் சிந்து வெளியில் பலதரப்பட்ட மக்கள்– இன்றைய இந்து மதம் போலவே– கூடி வாழ்ந்தனர்.

5.அவர்கள் காதல் திருமணம் ஆடம்பர/செண்ட் போட்ட உடை, நாட்டியம், சங்கீதம் ஆகியவற்றில் விருப்பம் உடையவர்கள். சங்கீதத்துக்கு மறு பெயர் கந்தர்வ சாஸ்திரம்

6.இவர்களுக்கு தாவரம் பற்றிய அறிவு, கட்டிடக் கலை அறிவு மிகுதி. இந்த விஷயங்கள் எல்லாம் இந்துமத நூல்களில் உள்ளவை. வேதத்தில் எந்த இடங்களில் இவர்கள் பற்றி வருகின்றன என்பதை எனது ஆங்கிலக் கட்டுரையில் காணவும்.

கந்தர்வர்கள் பற்றி ராமாயணம் மஹாபாரதம், புராணங்கள், வேதங்கள் ஆகியவற்றில் சொல்லிய விஷயங்களை இன்னும் யாரும் முழுக்க ஆராயவில்லை. சிந்து சமவெளிக்கும் கந்தர்வர்களுக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு உண்டு. இது பற்றி நான் எழுதிய நீண்ட ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கத்தை மட்டும் இங்கே தருகிறேன்.

soma filter

சிந்து சமவெளி சோமரச வடிகட்டி

1.கந்தர்வ மணம் என்பது காதல் கல்யாணம். இது மனு ஸ்ம்ருதி எனும் சட்டப் புத்தகம் கூறும், இந்துக்களின் எட்டு வகைத் திருமணங்களில் ஒன்று. மனு ஸ்ம்ருதி கூறியதை தொல்காப்பியரும் அப்படியே கூறுகிறார். இதன் விவரங்களை “இந்துக்களின் எட்டு வகைத் திருமணங்கள்” என்ற எனது கட்டுரையில் கொடுத்திருக்கிறேன்.

2.வேதங்களில் சோம ரசத்துக்குப் பாதுகாவலர்கள் கந்தர்வர்கள் என்றும் அவர்கள் வானத்தில் (உயரமான மலைகளில்) வசிப்பவர்கள் என்றும் அவர்கள் சோம ரச உற்பத்திக்குப் பெயர் எடுத்தவர்கள் என்றும் பல துதிகள் வருகின்றன.

3.சிந்து சமவெளி முத்திரைகளில் பிராணிகளுக்குக் கீழே ஒரு மர்ம சின்னம் இருக்கிறது. இதுவரை அது என்ன என்பதற்கு உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை. அது போலவே ஒற்றைக் கொம்பு மிருகத்துக்கும் விளக்கம் கிடைக்கவில்லை. சிலர் இது குதிரை என்பர். அது போலவே அந்த மர்ம வடிவம் சோம ரசத்தை வடிகட்டும் பாத்திரம் என்பர். இந்த குறிப்பிட்ட வகை முத்திரைகள் எல்லாம் கந்தர்வர்களுடையவை என்று நாம் கொண்டால் அந்த மர்ம பாத்திரம் சோம ரச வடிகட்டியாக இருக்கலாம். ஏனைய முத்திரைகளில் இவை இல்லாததற்குக் காரணம் அவை கந்தர்வர் இல்லாத வேறு குழுவினருடையவை என்று கொள்ளலாம். சிந்து நாகரீகத்தில் ஆரிய திராவிட இனவெறியைப் புகுத்தி அந்த ஆராய்ச்சியைக் குட்டிச் சுவராக்கிய மார்ட்டிமர் வீலர் போன்றவர்களை மறந்து விட்டு, அது பல இன குழுக்கள் நாகரீகம் என்று கொண்டால் எளிதில் அந்த எழுத்துக்களைப் படிக்கலாம்.

4.கந்தர்வர்கள் என்போர் — மனிதர், நாகர்கள், தேவர்கள், அசுரர்கள் எல்லோருடனும் வசித்ததை வேத துதிகள் உறுதி செய்கின்றன. அவர்கள் நாகர்களுடனும் சண்டை போட்டனர். இறுதியில் புருகுத்சர் என்பவர் விஷ்ணு அமசத்துடன் தோன்றியதாகவும் நாக குல பெண் நர்மதா புருகுத்சனுக்கு கந்தர்வர் ஒளிந்து கொண்டிருக்கும் பகுதியைக் காட்டி அவர்களை அழித்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

5.கந்தர்வர்கள் 27 பேர் என்று யஜுர் வேதமும் 6333 பேர் என்று அதர்வ வேதமும் கூறும். அந்தந்த இடத்தில் இந்த எண்களை வைக்கையில் சரியான பொருள் கொள்ள முடியும். ரோகிணி நட்சத்துடன் கந்த்ர்வர்களை தொடர்புபடுத்துவர். தமிழர்களும் வடக்கே இருந்தவர்களும் பழங்காலத்தில் ரோகிணியில் கல்யாணம் செய்துகொண்டதை அகநானூற்றில் காணலாம்.

6.வானவில், கானல் நீர் ஆகியவற்றுடன் கந்தர்வர்களைத் தொடர்புபடுத்தும் துதிகளும் உள.

தாய்லாந்து மியூசிய கின்னரர் சிலை

7.கந்தர்வர்களுக்கு தாவரங்கள் பற்றி நன்கு தெரியும் என்றும் விஸ்வவசு ஒரு முறை சோமக் கொடியைத் திருடியதாகவும் பின்னர் அது மீட்கப்பட்டது என்றும் அதர்வ வேதம் கூறும்

8.ஒரு இந்துப் பெண் கல்யாணம் முடிப்பதற்கு முன், அவள் அக்னி, சோம, கந்தர்வருக்கு சொந்தமாக இருந்தாள் என்றும் கூறப்படுகிறது

.9.கந்தர்வருடைய தோற்றம் பற்றியும் வேத மந்திரங்கள் வருணிக்கின்றன.

10.வராஹமிகிரர் எழுதிய ப்ருஹத் சம்ஹிதையில் கந்தர்வர்கள், ஆப்கனிஸ்தான-பாகிஸ்தானம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார். இது சிந்து சமவெளிப்பகுதிக்குள் வந்து விடுகிறது. அவர் சிந்து நதியின் இரு கரைகளில் உள்ள புஸ்கலவதியையும், தக்ஷசீலத்தையும் குறிப்பிடுகிறார்.

11.கந்தர்வரின் நகரங்களை மிகவும் அழகான நகரங்கள் என்று புராணங்கள் வருணிக்கின்றன இந்து சிந்துவெளி நகரங்களைப் பற்றியதாக இருக்கலாம்.

12.கந்தர்வர் பெயர்களில் “சித்ர” என்ற பெயர் மிகவும் அடிபடுகிறது. இந்த மூன்று எழுத்துக்களை சிந்துவெளி முத்திரைகளில் கண்டுபிடித்துவிட்டால அதைப் படிப்பது எளிதாக இருக்கும்.

13.சங்கத் தமிழ் இலக்கியத்தில் கங்கை, இமயம் பற்றி பல குறிப்புகள் உண்டு. ஆனால் சிந்து நதி அல்லது அந்தப் பிரதேசம் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆகவே “தமிழர்-சிந்துவெளி தொடர்பை” ஒதுக்கி வைத்துவிட்டு ஆராய்வது நலம் பயக்கும்.

14.கந்தர்வர்களை சுகந்த மணம் வீசும் ஆடைகளை அணிபவர்களாகவும் வேதங்கள் பாடுகின்றன.

15.சரஸ்வதி நதிதீரத்தில் 12 ஆண்டு வறட்சி ஏற்பட்டபோது பிராமணர்கள் எல்லோரும் வெளியேறிவிட்டனர் என்றும் 12 ஆண்டுகளில் அவர்கள் வேதங்களைக்க்கூட மறந்து விட்டனர் என்றும் மஹாபாரதம் கூறும். அதில் ததீசி முனிவரின் மகன் மட்டும்  அங்கேயே தங்கியதால் அவர் பெயர் சரஸ்வத என்றும் அவர் திரும்பிவந்த பிராமணர்களுக்கு வேதம் கற்பித்ததாகவும் கூறும். வெளியேறிய சாரஸ்வத பிராமணர்கள் இப்போது இந்தியாவில மேற்குக் கடற்கரையோர மாநிலங்களில் வசிக்கின்றனர். சிந்துவெளி-சரஸ்வதி தீர நாகரீகம் வறட்சி முதலிய இயற்கைக் காரணங்களால் அழிந்ததற்கு மஹாபாரதத்தில் தடயம் உள்ளது.

நான் முன்னரே ஆங்கிலக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதை மீண்டும் நினைவு படுத்துகிறேன். சிந்துவெளியில் இன்றைய இந்தியாவைப் போலவே பல்வேறு தரப்பினர் ஒரே நேரத்தில் இருந்திருக்கலாம். ராமனின் மகன்கள் லவனும் குசனும் கந்தர்வர்களிடம் இருந்து சிந்துவெளி நகரங்களைக் கைப்பற்றியதை நான் ராமாயண ஆதாரங்களோடு எழுதினேன். இதை மகாபாரதமும் உறுதி செய்கிறது.

சந்தனுவுக்கும் சத்யவதிக்கும் சித்ராங்கதன் என்று ஒரு மகன் இருந்ததாகவும் அவன் அகந்தையால் அழிந்தான் என்றும் சரஸ்வதி நதிதீரத்தில் கந்தர்வர்களுக்கும் அவனுக்கும் நடந்த யுத்தத்தில் அவனுடைய பெயர் உடைய ஒருவனே அவனைக் கொன்றான் என்றும் மகாபாரத ஆதி பர்வம் கூறும் (1-101). ஆக சிந்துவெளியை கந்தர்வர்கள் ஆட்சிபுரிந்ததை இரு இதிஹாசங்களும் உறுதி செய்கின்றன. மகா பாரதம் ஜெயத்ரதன் என்ற மன்னனையும் சிந்து தேச அரசன் என்றே குறிப்பிடுகிறது.

celestials.jpg (400×300)

மாமல்லபுரத்தில் கந்தர்வர்கள்

சித்ரரதன் யார்?

மஹாபாரதத்தில் சித்ரரதன் பற்றி இரண்டு விஷயங்கள் வருகின்றன. இவன் கந்தர்வ இனத் தலைவன். இவன் தலைமையில் இருந்த படைகள் கௌரவர் படையைத் தாக்கவே கர்ணன் போன்ற பெருந் தலைவர்கள் உயிருக்குப் பயந்து ஓடி விட்டனர். துரியோதனனை கந்தர்வர்கள் கைது செய்தனர். அர்ஜுனன் போய் சமாதானம் பேசி மீட்டு வந்தான். ஏனெனில் சித்ரரதன் அர்ஜுனனின் நண்பன்.

கந்தர்வர்கள், ஒரு குறிப்பிட்டவகை போர்ப் பயிற்சியில் வல்லவர்கள். இசைக் கலையிலும் மன்னர்கள். அவர்களுடைய மனைவியரான அப்சரஸ் என்னும் அழகிகள் நாட்டியக் கலையில் வல்லவர்கள் ஆகவே இந்தியாவில் இசை-நடனக் கலைக்குப் பெயர் கந்தர்வ வேதம். இது ஆய கலைகள் 64-இல் ஒன்று. சிந்து சமவெளியில் கிடைத்த நாட்டியப் பெண்ணின் சிலை, கந்தர்வர் தொடர்பை உறுதி செய்கிறது.

இப்போது ஒரு சந்தேகம் எழும். தேவ லோக கந்தர்வர்களுக்கும் பூலோக கந்தர்வர்களுக்கும் என்ன தொடர்பு? இதற்கு விடை என்னவென்றால் கந்தர்வர் என்னும் சொல்லும் கின்னரர் என்ற சொல்லும் பூவுலகில் வேறு பொருள் உடைத்து. இந்தியாவில் உள்ள எல்லா ஜாதிகளும், தாங்கள் கடவுள் அல்லது தேவர்களிடம் தோன்றியதாகக் கூறும். அதாவது தேவலோகம் வேறு, அவர்களுடன் தங்களை அடையாளம் காண விழையும் பூலோக வாசிகள் வேறு. இதனைப் புரிந்து கொண்டு இரு மட்டங்களில் – இரு வேறு தளங்களில் இந்தச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைத் தெளிதல் வேண்டும். தமிழ் மன்னர்கள் கூட சூரியகுலம், சந்திர குலம் என்று சொல்லி தங்களை தேவலோகத்துடன் தொடர்பு படுத்துகின்றனர்.

சிந்து சமவெளி பற்றிய என்னுடைய முந்தைய 30 கட்டுரைகள்: Read my other 30 posts on Indus:

சிந்து சமவெளி பாடகர்கள்: ஹாஹா, ஹூஹூ!!  28-10-2014

சிந்து சமவெளி: பிராமணர் தொடர்பு, 10 மே 2014

சிந்து சமவெளியில் பேய் முத்திரை

சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண்  Aug.23, 2012

கொடிகள்: சிந்து சமவெளி- எகிப்து இடையே அதிசய ஒற்றுமை

‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13

தேள்— ஒரு மர்ம தெய்வம்!
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012

சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை(15/10/12)

‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.
சிந்து சமவெளியில் அரசமரம்

சிந்து சமவெளி நாகரீகம் பெயரை மாற்றுக! march 29, 2014

1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14

Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu (posted 21/1/12)
Human Sacrifice in Indus Valley and Egypt (posted on 31/10/12)
Ghosts in Indus Seals and Indian Literature

Flags: Indus Valley- Egypt Similarity

Tiger Goddess of Indus Valley: Aryan or Dravidian?

Indra on Elephant Vahana in Indus Valley

Indus Script Deciphered

Human sacrifice in Indus Valley and Egypt 0ct.31, 2012

Indus Valley Cities in Ramayana Dec.18, 2012

Open Sesame’: Password to Heaven Post No 756 dated 23rd December 2013

Change ‘’Indus’’ valley civilization to ‘’Ganges’’ valley civilization! Ulta! 29-3-2014

Indus Valley Case: Lord Indra Acquitted Post No 764 dated 28th Dec. 2013

‘Sex Worship’ in Indus Valley
Flags: Indus Valley – Egypt Similarity (15/1012)

The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvaku Dynasty
Vishnu in Indus Valley Civilization (posted on 19-10-11)
Serpent Queen: Indus Valley to Sabarimalai 18 June 2012

Fall of Brahmin Kingdoms in Pakistan and Afghanistan 23-3-14

Leave a comment

3 Comments

 1. Hi, may I know where can I find the English version of this article? Thank you.

 2. Gandharvas | Tamil and Vedas
  tamilandvedas.com/tag/gandharvas
  Other seals belong to other sects of the Indus valley 7.The dancer statue of Indus valley belongs to the Gandharvas 8.Scholars who were misled by the Aryan .

 3. draathigaa

   /  June 29, 2020

  கந்தர்வர்கள் என்றாலே பாணர்கள் . அவர்களைத்தான் உரு மாற்றி இப்படி சமசுகிருதம் பேசுகிறது.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: