வேத,உபநிஷத்துகளில் கனவுகள்

Sleep-training

Article No. 2047

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 6  August  2015

Time uploaded in London : –10- 41

(I am giving below the summary of my English article already published here)

முன் காலத்தில் கனவுகள், உறக்கம் ஆகிய இரண்டின் முக்கியத்துவத்தை அறிந்தது இந்துக்கள் மட்டுமே. தினமும் சிவன் கோவிலில் சிவனுக்குக் காலையில் அபிஷேகம் செய்கையில் ருத்ரம்-சமகம் என்ற யஜூர் வேத மந்திரத்தைச் சொல்லி அபிஷேகம் செய்வார்கள். இதில்தான் சைவர்களின் தாரக மந்திரமான ஓம் நமசிவாய – என்ற சம்ஸ்கிருத மந்திரம் முதல் முதலில் வருகிறது. சமகம் என்னும் பகுதியில் மனிதனுக்கு வேண்டிய எல்லாப் பொருட்களையும் பட்டியலிட்டுள்ளனர் வேத கால ரிஷி முனிவர்கள். அதில் ‘சயனம் ச மே’, ‘சுதினம் ச மே’ என்று வேண்டுவர். நல்ல தூக்கமும் விடிந்தவுடன் நல்ல நாளும் எனக்குக் கொடு — என்று இதன் பொருள்.

இந்த “சுதினம்” ச மே என்பதை ஆஸ்திரேலியர்கள் இன்றும் ஒருவரை ஒருவர் பார்க்கையில் Good Day “குட் டே” என்று வாழ்த்துகின்றனர். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக ஐயர்கள் சொல்லும் மந்திரத்தில் உள்ள குட் நைட் Good Night, குட் ஸ்லீப் Good Sleep/Sweet Dreams, குட் டே Good Day – என்பன இன்றும் பயன்படுகின்றன!!!

உலகின் பழைய புத்தகமான ரிக் வேதத்தில் தூக்கம், கனவுகள் பற்றி நிறைய குறிப்புகள் உண்டு. கனவுகளின் பொருள் என்ன (Dream Interpretation) என்ற ஆராய்ச்சியும் வேத காலத்திலேயே  துவங்கிவிட்டது. ரிக் வேத காலத்துக்குப் பின்னர் வந்த எகிப்திய, சுமேரிய ஹைரோகிளிபிக்ஸ், க்யூனிfஆர்ம் எழுத்துக்களிலும் கனவுகள் பற்றி எழுதி வைத்துள்ளனர். அவர்களும் நம்மைப் போன்றே பல விஷயங்களை நம்பினர்.

(படங்கள் : தூங்கும்  அழகி என்ற  கதையின் படங்கள்)

ரிக் வேதத்தில் மரணத்தை முன் அறிவிக்கும் கனவுகள் பற்றிச் சொல்லப் பட்டிருப்பதாவது (2-28-10; 10-162-6):

கழுத்தைச் சுற்றி துணி/ ஆடை கட்டுவதைப் போலவோ, மாலை போடுவது போலவோ கனவு காண்பது தீய நிமித்தம் ஆகும்

ரிக் வேத ஆரண்யகப் பகுதியான ஐதரேய ஆரண்யகத்தில் (3-2-4) ஒரு நீண்ட பட்டியல் உள்ளது:

1.கறுப்பு நிற மனிதன் கறுப்புப் பற்களால் கடித்துக் கொல்லுவது போல வரும் கனவு

2.காட்டுப் பன்றி நம்மைக் கொல்வது போல

3.காட்டுப் பூனை நம் மீது பாய்வது போல

4.தங்கத்தை சாப்பிட்டுவிட்டு துப்புவது போல

  1. தேனைக் குடித்துவிட்டு தாமரைக் கிழங்கைச் சாப்பிடுவது போல

6.தெற்கு நோக்கி கருப்புப் பசுவை ஓட்டிக் கொண்டுபோவது போல

7.வெட்டிவேர், இலாமிச்சைச் செடி மாலை போடுவது போல கனவு காணக் கூடாது

(ஏசு கிறிஸ்து இறப்பதற்கு முன்னரும் இத்தகைய மாலையை ஒருவர் அவருக்கு வலியச் சென்று சூட்டியதாக பைபிள் கூறும்)

மேற்கூறிய விஷயங்கள் உண்மையா, பொய்யா, அல்லது அதன்மூலம் வேறு ஏதாவது சொல்ல விரும்பினரா என்ற ஆராய்ச்சியில் புகாமல், கனவுகளை அவர்கள் எவ்வளவு முக்கியமாகக் கருதினர் என்று தெரிந்து கொண்டால் போதும்.

மாண்டூக்ய உபநிஷத்தில் கனவுகள் பற்றி வருகிறது. ஆதி சங்கரர் தனது விவேக சூடாமணி முதலிய நூல்களில் கனவு நிலை, விழிப்பு நிலை, தூங்கும் நிலை, துரீய நிலை (நாலாவது நிலை) என்பன பற்றி விளக்குகிறார். ஆனால் இங்கெல்லாம் தத்துவ விஷயங்களை விளக்க கனவுகளைப் பயன்படுத்துகின்றனர்; அறிவியல் விளக்கத்துக்கு அல்ல.

அதர்வண வேதம், சதபத பிராமணம், வாஜசநேயி சம்ஹிதை ஆகியவற்றிலும் பல குறிப்புகள் உள.

பிற்கால சம்ஸ்கிருத இலக்கியங்களில் சுப கனவுகள் பற்றி விளக்கப்படுகின்றன. புத்தரையும் மஹாவீரரையும் பெற்றெடுக்கு முன் அவர்களுடைய தாய்மார்கள் கண்ட கனவுகள், வடமொழி நாடக கதாநாயகிகள் கண்ட கனவுகள் இதற்கு எடுத்துக் காட்டுகள்.

கனவு விளக்க நூல் ஒன்றை பிருஹஸ்பதி (வியாழ பகவான் எழுதினார். தமிழ் கலைக் களஞ்சியமான அபிதான சிந்தாமணியில் ஏழு பக்கங்களுக்கு இவற்றின் சுருக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தீய கனவுகளைத் தவிர்ப்பதற்கான ஸ்லோகங்களும் இருக்கின்றன. பிராமணர்கள் தினமும் மும்முறை செய்யும் சந்தியா வந்தனத்தின் கடைசி மந்திரம் தீய கனவுகள் வர்க்கூடாது என்று வேண்டும் மந்திரமாகும்.

வெளிநாட்டுக்காரர்கள் தற்காத்தில்தான், ‘ஒருவரும் கனவு காணாமல் தூங்க முடியாது’ (ராபிட் ஐ மூவ்மென் ட்) என்றெல்லாம்    எழுதிவைத்தனர். நாமோ இதை அபோழுதே அறிந்து தினமும் மூன்று முறை துஸ்வப்பனத்தை அகற்ற வேண்டும் என்ற மந்திரத்தை தினசரிச் சடங்கில் சேர்த்து வைத்திருக்கிறோம்!

Sleeping-Beauty

My previous Research Articles on Dreams:

Role of Dreams in Tamil Saivite Literature (posted on July 4, 2013)

Do our Dreams have Meaning? (Posted on December 29, 2011)

God’s Note Book (posted on March 16, 2014)

Strange Dreams, posted on 27 July 2015Inauspicious Dreams: Dreams in Vedas and Upanishads, Posted on 28th July 2015

Vedic Echo in Sumerian and Egyptian Concept of Dreams, Posted 31 July 2015

விநோதக் கனவுகள், ஆகஸ்ட் 4, 2015

சிவனை நோக்கி கனவில் நடந்த கிருஷ்ணார்ஜுனப் பயணம் (பிப்ரவரி 4, 2015)

வித்தியாசமான விஞ்ஞானி யுங்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: