நன்கொடை/ தானம் பற்றிய பழமொழிகள், பாடல்கள் (Post No.2584)

donation new 2

Date: 29 February 2016

 

Post No. 2584

 

Time uploaded in London :– 7-57 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Please go to swamiindology.blogspot.com

OR

tamilandvedas.com

for more articles and pictures.

 

 

donate

“தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடுங்கிப் பார்க்கக்கூடாது” – என்பது தமிழ்ப் பழமொழி.

ஒருவர் தானமாகக் கொடுத்த பொருளை மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்து, விலை மதிப்பு போடக்கூடாது. அதை தானம் என்றே கருத வேண்டும். இது போல ஒரு போட்டியில் வெற்றிபெற்றபோது பரிசின் விலை மதிப்பைப் பார்க்கக்கூடாது. முதல் பரிசு, இரண்டாம் பரிசு என்பதுதான் முக்கியம். அதற்குப் பரிசாகக் கொடுத்த பேனா, பென்சில் ஆகியவற்றின் விலைமதிப்பைப் பார்ப்பது தவறு.

இந்தப் பழமொழியின் அறிவியல் பின்னணி என்ன?

பல்லும், மாடும்

ஒரு மாட்டை விலைக்கு வாங்குவோர் முதலின் அதன் வயதையும், உடல் ஆரோக்கியத்தைப் பார்க்க, அதன் பல்லைப் பிடித்துப் பார்ப்பர்.

 

மொத்தம் (மாடுகளில்) 32 நிரந்தர பற்கள் இருக்கின்றன.

வயது நிர்ணயம்

மாடுகளில் மேற்கண்டவாறு எண்ணிக்கையில் பற்கள் இருந்தாலும், அவற்றின் கீழ்த்தாடையில் உள்ள 4 ஜோடி முன் வெட்டு பற்களை வைத்து தான் அதன் வயது நிர்ணயிக்கப்படுகிறது. மாடுகளின் வயதை கண்டுபிடிக்க, அவற்றின் கீழ்த்தாடையின் உதடுகளை சிறிது விலக்கினால் கீழ்த்தாடை பற்கள் தெளிவாக தெரியும். இந்த பற்களின் எண்ணிக்கையை கொண்டு வயதை நிர்ணயிக்கலாம்.

டாக்டர்.இரா.உமாராணி, இணை பேராசிரியர், தமிழ்நாடு கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை.

-தினமணி

 

இந்தச் செய்தி பழமொழியின் உண்மைப் பொருளை விளக்குகிறது!

donation

தனக்கும் மிஞ்சித்தான் தான தர்மம்

இந்தப் பழமொழிக்கு இரண்டு விதமாகப் பொருள் சொல்லுவர். தனக்குப் போக எஞ்சியதைத்தான், தானமாகக் கொடுக்க வேண்டும் என்பது ஒரு விளக்கம். தன்னுடைய சக்திக்கும் மீறி ஒருவர் அளிப்பதே தான, தர்மம்; வெறும் ஒப்புக்குக் கொஞ்சம் கொடுப்பது தானம், தர்மம் – என்னும் பெரிய சொற்களின் பொருளுடன் பொருந்தா- என்பது மற்றொரு விளக்கம்.

 

தானம் பற்றிய 2 ஸ்லோகங்கள்

தானதூஷணம்

அநாதரோ விலம்பஸ்ச வைமுயம் சாப்ரியம் வச:

பஸ்சாத் பவதி ஸந்தாபோ தான தூஷண பஞ்சகம்.

 

 

ஐந்து வகைத் தானங்கள் குறையுடைய தானம்; அவையாவன:

அநாதர- மரியாதை இல்லாமல் வழங்கும் தானம்

விலம்ப: – தமதமாகக் கொடுக்கும் தானம்

வைமுக – முக்கியம் கொடுக்காமல் இருப்பது

அப்ரியம்வச: – திட்டிக் கொண்டே கொடுப்பது

பஸ்சாத் சந்தாப- கொடுத்த பின்னர் வருந்துவது

 

தானபூஷணம்

தானத்தின் இலக்கணம்

 

அநந்தஸ்ரூணி ரோமானி பஹுமானம் ப்ரியம் வச:

கிஞ்சானுமோதனம் தானம் தான் பூஷண பஞ்சகம்.

 

 

ஆநந்தஸ்ரூணி – தானம் கொடுத்தபின் ஆநந்தக் கண்ணீர்

ரோமாணி – மயிர்க்கூச்சம் எடுத்தல்

பஹுமானம் – மரியாதை காட்டல்

ப்ரியம் வச: – பிரியமான சொற்களைச் செப்பல்

அனுமோதனம் – தானத்தை மறுக்காமல் ஏற்றல்

new donation

திருவள்ளுவரின் பத்து கட்டளைகள்!

தானம் பற்றி திருவள்ளுவர் பத்து கட்டளைகள் இடுகிறார். வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் – என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் அவர் கீதை, ராமாயணம் முதலிய நூல்களில் வரும் “தானம்-தவம்”  என்ற அடுக்குத் தொடரை அப்படியே சில குறள்களில் பயன்படுத்துவதைக் காட்டினேன். அதாவது இமயம் முதல் குமரி வரை பாரதீய சிந்தனை ஒன்றே! அது ஈகை என்னும் அதிகாரத்தில் வரும் பத்து குறட்பாக்களிலும் எதிரொலிப்பதைக் காணலாம்:-

1.ஏழைகளுக்குக் கொடுப்பதே தானம் (வறியார்க்கொன்றீவதே ஈகை)

2.சொர்க்கம் கிடைக்காவிட்டாலும் கொடு (மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று)

3.நல்ல குடிப் பிறந்தவன் முகக் குறிப்பைப் பார்த்தே தானம் கொடுப்பான் (ஈதல், குலனுடையான் கண்ணே உள)

4.இரந்தவர் இன்முகம் காணும் அளவு (கேட்டவன் முகம் மலரும்வரை) கொடு!

5.பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்:—பசியைப் பொறுக்கும் துறவிகள் கூட, பசியை ஆற்றும் இல்லறத்தானுக்குப் பின்னரே இடம்பெறுவர்.

6.அழிபசி தீர்த்தல் பொருள் வைப்புழி; ஒருவனுடைய பசியைத் தீர்த்தல், வருக்காலத்துக்குப் பணத்தை சேமிப்பதை ஒக்கும்.

7.பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது:- பகுத்துண்டு பல்லுயிரைக் கவனிப்போனை, பசி எண்ணும் நோய் அண்டாது.

8.ஈத்துவக்கும் இன்பம் அறியார் கொல்:–ஏழைகளுக்குக் கொடுக்கும் இன்பம், கஞ்சர்களுக்குத் தெரியாது

9.தாமே தமியர் உணல்:- ஒருவன் தான் மட்டுமே உண்பானாகில் அது பிச்சை எடுப்பதைவிடக் கொடியது.

  1. இனிது அதுவும் ஈதல் இயையாக் கடை:— இறப்பது கொடிது! தானம் செய்யமுடியாவிட்டால், இறப்பதும் இனிது.

-சுபம்–

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: