அண்டார்டிகா ஐஸ் பாறை பிளக்கிறது! (Post No.3685)

Written by S NAGARAJAN

 

Date: 3 March 2017

 

Time uploaded in London:-  5-56 am

 

 

Post No.3685

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

24-2-2017 பாக்யா இதழுடன் அறிவியல் துளிகள் தொடரின் ஆறாம் ஆண்டு நிறைவுறுகிறது. அதையொட்டிய கட்டுரை ஆசிரியரின் குறிப்பையும் பாக்யா ஆசிரியர் குழுவின் குறிப்பையும் கட்டுரையின் இறுதியில் காண்லாம். இந்தத் தொடரைப் படித்து ஆதரவு தரும் அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி – ச.நாகராஜன்

எட்கர் கேஸின் ஆரூடப்படி பிரம்மாண்டமான அண்டார்டிகா ஐஸ் பாறை பிளக்கிறது!

ச.நாகராஜன்

 

 

“எண்ணமும் உணர்ச்சிகளுமே பிரபஞ்சத்தை வழி நடத்திச் செல்கிறது, செயல்கள் அல்ல” – எட்கர் கேஸ்

 

உலகில் தோன்றிய விந்தை மனிதர்களுள் ஒருவரான எட்கர் கேஸ் (Edgar Cayce – தோற்றம் 18-3-1937 மறைவு 3-1-1945) ஏராளமானோரின் பூர்வ ஜென்ம விவரங்களை விண்டுரைத்தவர். பலரது தீராத வியாதிகளின் காரணத்தை அதீத உளவியல் ரீதியாக ஆராய்ந்து தீர்த்தவர். (இவரைப் பற்றி 15 ஆண்டுகளுக்கு முன்னர் விந்தை மனிதர்கள் தொடரில் பாக்யா 1-2-2002 மற்றும் 8-2-2002 இதழ்களில் இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரைகளை வாசகர்கள் நினைவு கூரலாம்; பழைய இதழ்களை பாதுகாத்து வைத்திருப்போர் மீண்டும் படிக்கலாம்). உலகில் நடக்கப் போகும் பல்வேறு நிகழ்வுகளைப் பற்றி இவர் பல ஆரூடங்களைக் கூறியுள்ளார்.

 

 

அவற்றுள் ஒன்று அண்டார்டிகாவில் உள்ள மிக பிரம்மாண்டமான ஐஸ் பாறைகள் (பனிப்பாறைகள்) பற்றியதாகும். .இந்த பிரம்மாண்டமான ஐஸ்பாறைகள் உருகாமல் இருப்பதாலேயே கடல் மட்டம் ஒரு அளவுக்குள் கட்டுப்பட்டு இருக்கிறது. கடலோர நகரங்கள் கடல்நீர் மட்டம் உயர்ந்து நீரில் மூழ்காமல் இருக்க் இந்த அற்புதமான் ஐஸ்பாறைகளே காரணம்!

இந்த பனிப்பாறைகளைப் பற்றி எட்கர் கேஸ் அன்றே கூறியதைப் பார்ப்போம்:

 

 

“பூமியானது பல இடங்களில் பிளவு படும். அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரம் பௌதிக ரீதியில் மாற்றம் ஏற்படும். கிரீன்லாந்தின் வடக்குப் பகுதிகளில் நீர்ப் பெருக்கு ஏற்படும். கரிபியன் கடலில் புதிய நிலப் பிரதேசம் தோன்றும். தென்னமெரிக்காவின் உச்சியில் உள்ள பகுதி ஆட்டம் காணும், அண்டார்டிகாவில் டியரா டெல் ப்யூகோ பகுதியில் பாய்ந்து வரும் பெரும் வெள்ளப் பெருக்கு ஒன்று ஏற்படும். தென் பகுதியில் உடைபட்டு நிற்கும் ஒரு நிலை தோன்றும். அப்போது பெரும் மோசமான நிலை ஒன்று உருவாகப் போவதன் ஆரம்பம் இதுவே என்று  கொள்ளலாம்.”

 

 

இந்த அவரது கூற்றை மெய்ப்பிப்பது போல, இன்று விஞ்ஞானிகள் அண்டார்டிகாவில் லார்ஸன் சி என்ற இடத்தில் ஏற்படும் பிரம்மாண்டமான பனிப் பாறைகளின் நிலையைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர். லார்ஸன் சி என்பது ஸ்காட்லந்தை விட பரப்பளவில் சிறியது. அங்குள்ள பிரம்மாண்டமான பனிப் படலத்தில் ஒரு விரிசல் சிறிதாக ஏற்பட்டது.

 

இன்று அது 70 மைல் நீள விரிசலாக ஆகியதோடு 300 அடி அகலமாக ஆகி விட்டது. இது பெரிதானால் மிக பிரம்மாண்டமான விளைவு ஏற்படும். முதலில் 2015இல் 20 மைல் நீளமே இருந்த விரிசல் 2016இல் இன்னும் 15 மைல் அதிகமானது.  இப்போதோ பிரம்மாண்டமான பிளவாக 70 மைல் நீளத்திற்கு விரிந்து விட்டது. இதனால் நீர் மட்டம் உயரும். அண்டார்டிகாவில் இப்படி ஒரு பெரிய பரப்பு பிளந்து நீர் உருக ஆரம்பித்தால் உலகிற்கே வந்து விடும் அபாயம்!

 

 

மிக மோசமான நிலையில் 7 மீட்டர் அளவு கடலில் நீர் மட்ட அளவு உயரும். ஒரு மீட்டர் உயர்ந்தாலேயே ஏராளமான நாடுகளில் கடல் ஓர நகரங்கள் மூழ்கி விடும் என்ற விஞ்ஞானிகளின் எச்சரிக்கையை யாரும் மறந்திருக்க முடியாது.பத்து நாடுகள் முற்றிலுமாகவோ அல்லது அவற்றின் பல முக்கியப் பகுதிகளோ அழியும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.

 

 

இந்தப் பத்து நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வீடியோ வாயிலாக அனைவரும் பார்க்கும்படி கூறி விளக்குகின்றனர்.

பத்து நாடுகளின் பட்டியல் 1) சீனா 2) வியட்நாம் 3) இந்தியா 4) இந்தோனேஷியா 5) பங்களாதேஷ் 6) ஜப்பான் 7) அமெரிக்கா 8) எகிபது 9)பிரேஜில் 10) நெதர்லாந்து

 

அருமையான பல கடற்கரை நகரங்கள் அழியும் அபாயத்தைச் சுட்டிக் காட்டும் வீடியோ ஒரு ஆறுதலான செய்தியையும் தருகிறது. இன்னும் நிலைமை மோசமாகவில்லை. உடனடியாக மேலே சொல்லப்பட்ட நாடுகள் கார்பன் டை ஆக்ஸைடு புகையைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து பூமி வெப்பமயமாதலைத் தடுத்தால் ஐஸ் படலம் உருகாமல் பனிப்பாறையாகவே நிலைத்திருக்க வாய்ப்பு உண்டு. விரைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

அழிவதும் நீடித்து வாழ்வதும் நமது கையில் என்று முடிகிறது வீடியோ.

 

 

எட்கர் கேஸ் கூறிய ஆரூடத்தின் முதல் பகுதி ஆரம்பித்த நிலையில் உடனடிக் கட்டுப்பாட்டை உலக நாடுகள் எடுக்குமா அல்லது ஆருடம் முற்றிலுமாக பலிக்கும் அளவு அலட்சியமாக இருக்குமா என்பதற்கான பதில் காலத்தின் கையில் உள்ளது.

 

 

மக்கள் விழித்தெழ வேண்டும்; தங்களால் இயன்ற வழியில் எல்லாம் பூமியின் சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் அனைத்து மாசையும் தடுக்க வேண்டும். இது ஒன்றே அழிவைத் தடுக்க வழி!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

 

இங்கிலாந்தில் பிறந்த பிரப்ல விஞ்ஞானியான ஜான் டால்டன் (தோற்றம் 6-9-1766 மறைவு 27-7-1844) அணு பற்றிய கொள்கையால் பிரப்லமானவர். ‘கலர் ப்ளைண்ட்னெஸ்’ என்று சொல்லப்படும் வண்ணங்களைப் பார்க்க இயலாமையை முதன் முதலில் கண்டு பிடித்தவரும் இவரே.

 

‘நீங்கள் சிவப்பு என்று கூறும் வண்ணம் எனக்குத் தெரியவில்லை. இதர வண்ணங்கள் சற்று மஞ்சளாகத் தோன்றுகிறது’ என்று கூறிய அவர் ஏன் தனக்கு வண்ணங்கள் தெரியவில்லை என்பதை கூர்ந்து ஆராய ஆர்மபித்தார். அவரது ச்கோதரருக்கும் க்லர் ப்ளைண்ட்நெஸ் இருந்தது. இதை டால்டனிஸம் (Daltonism) என்றே அனைவரும் கூற ஆரம்பித்தனர்.

 

 

இறந்தபின்னர் தன் கண்களை எடுத்து ஆராய வேண்டும் என்று அவர் விருப்பம்ம் தெரிவித்தார். அதன்படி அவர் கண்களை ஆராய்ந்ததில் நிபுணர்களுக்கு காரணம் ஒன்றும் புலப்படவில்லை. என்றாலும் அவரது கண்களில் ஒன்று அப்படியே பத்திரமாய் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டது.

 

 

1990இல் மீண்டும் அவர் கண்களள டிஎன்ஏ சோதனைப்படி ஆராய்ந்ததில் பச்சை வர்ணத்தை இனம் காண்பிக்கும் ஒரு வண்ணப் பொருள் அவரிடம் இல்லை என்பது தெரிய வந்தது.

பல வித ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்ட டால்டன் கலர் ப்ளைண்ட்னெஸால் பாதிக்கப்பட்டவர் என்பது ஒரு ஆச்சரியகரமான விஷயம்!

 

****

 

அறிவியல் துளிகள் தொடரில் ஆறு ஆண்டுகள் முடிந்தன!

 

    தமிழ் இதழ்களில் முற்றிலும் வித்தியாசமாக ‘கமர்ஷியல் சிந்தனை’ இன்றி அறிவு பூர்வமாக வெளி வரும் பாக்யா இதழ் தமிழர்களின் சிறப்பு இதழ். கடந்த பதினெட்டு ஆண்டுகளாக பாக்யாவில் எழுதி வரும் எனது அனுபவம் சுகமான அனுபவம்.. பல தொடர்களை அடுத்து, 4-3-2011 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடர் ஆரம்பமானது. 24-2-2017 இதழுடன் ஆறு ஆண்டுகள் முடிகின்றன. தொடரை தொடர்ந்து படித்து உற்சாகமூட்டிய வாசகப் பெருமக்களுக்கும் தொடரைத் தொடர தொடர்ந்து ஊக்கமூட்டி வரும் பாக்யா ஆசிரியர் டைரக்டர் திரு பாக்யராஜ் அவர்களுக்கும், பாக்யா இதழ் தயாரிப்பில் அர்ப்பண மனோபாவத்துடன் ஈடுபட்டிருக்கும் அனைத்துக் குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

   அன்றாடம் நிகழும்  அறிவியல் நிகழ்வுகள் கணக்கிலடங்கா. நவீன கண்டுபிடிப்புகளும் ஏராளம். அறிவியல் அறிஞர் வாழ்வில் நிகழ்ந்த சுவை நிரம்பிய சம்பவத் தொகுப்புகளின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை. இவற்றில் சுவையான சில துளிகளைத் தொகுத்து வாரந்தோறும் வழங்கும் பணி இனிமையானது. இந்தப் பயணத்தில் ஏழாம் ஆண்டு அடி எடுத்து வைத்துத் தொடர்வோம். நன்றி!

****

 

வேதக் கழுகும், எகிப்தியக் கழுகும்- எகிப்திய அதிசயங்கள்-12 (Post No.3684)

லண்டனில் கிடைத்த ரோமானிய கழுகு சிலை

 

Written by London swaminathan

 

Date: 2 March 2017

 

Time uploaded in London:-10-35 am

 

Post No. 3684

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்திலும் ரிக்வேதத்திலும் கழுகு, பருந்து, கருடன், ராஜாளி என்ற பறவைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் சில அதிசய விஷயங்கள் — அதிசய ஒற்றுமைகள் — தெரிய வருகின்றன.

 

அவை என்ன?

1.இரண்டு கலாசாரத்திலும் இந்த வகைப் பறவைகள், இறைவனுடனும் அரசனுடனும் சம்பந்தப் பட்டுள்ளன.

2.இரண்டு கலாசாரங்களிலும் மரணம், மரணமிலாப் பெருவாழ்வு ஆகியவற்றுடன் இப்பறவைகள் சம்பந்தப் பட்டுள்ளன.

3.இரண்டு கலாசாரங்களிலும், சூரியனுடன் உடனுள்ள தொடர்பு காட்டப் பட்டுள்ளன.

4.மிகப்பழைய குறிப்புகள் உள்ளன.

கருட வாஹனம்

முதலில் ரிக் வேதத்தைக் காண்போம்:

ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் (பிரிவுகள்) இருக்கின்றன

 

கீழ்கண்ட இடங்களில் ஸ்யேன, சுபர்ணா முதலிய சொற்களால் இப்பறவைகள் குறிப்பிடப்படுகின்றன. இந்திரன், வருணன் போல பருந்தையும் ஒரு தேவதையாக வைத்து ஒரு துதி உள்ளது (4-27).

ஏன் இப்படி பருந்து அல்லது கருடன் மீது பாடினார்கள் என்பது ஒரு புதிராகவே இருக்கிறது!

 

மஹா சுபர்ண என்று சதபத பிராமணத்தில் சொல்ல்ப்படுகிறது (12-2,3,7)

சகன் என்று ஒரு பறவை குறிப்பிடப்படுகிறது; இது பற்றி யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை; பருந்தோ, கழுகோ என்று சந்தேகத்துடன் எழுதுவர்! (தைத்ரீய சம்ஹிதை 3-2,1,1)

 

சுபர்ண

இதற்கு இரண்டு பொருள் உண்டு; நல்ல இறக்கை உடைய; நல்ல இலை உடைய.

 

இது கழுகு அல்லது கருடன் அல்லது பருந்து போன்ற பறவை என்று ரிக்வேத உரைகாரர் எழுதுவர்.(1-164-20; 2-42-2; 4-26-4;8-100-8;9-48-3

 

ஸ்யேன என்ற சொல்லாலும் இப்பறவையை வேதம் குறிப்பிடும். சுபர்ணாவின் அரசனே கருடன் என்று அதர்வண வேதம் சொல்லும்; புராணங்களில் கருடனே விஷ்ணுவின் வாஹனமாக அமைந்தது.

கழுகு  வடிவ யாக குண்டம்

விநோதச் செய்தி

 

அன்னப் பறவை பாலையும் தண்ணீரையும் தனித்தனியே பிரிக்கும் சக்தி படைத்தது என்று காளிதாசன் சொன்னதை தமிழ்ப் புலவர்களும் சொல்லுவது பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன். ஜைமினீய பிராமணம் என்னும் நூலில், கிரவுஞ்சப் பறவை போல கழுகும் தண்ணீரையும் பாலையும் பிரிக்கும் சக்தி படைத்தது என்று எழுதியுள்ளதாக (2-438) கீத்தும் மக்டொனால்டும் எழுதிய வேத இன்டெக்ஸ் கூறுகிறது

 

இது தவறான மொழிபெயர்ப்பு என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் சுபர்ண என்ற சொல்லுக்கு அன்னம் என்ற பொருளும் உண்டு என்று விஷ்ணு சஹஸ்ரநாம உரை சொல்லும் (பக்கம் 88, சஹஸ்ரநாம உரை, எழுதியவர் அண்ணா, ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4).

விஷ்ணுவின் பெயர்களில் ஒன்று “சுபர்ண” என்று சஹஸ்ரநாமத்தில்  வருகிறது.

 

 

பேரறிவு பேரின்பம் ஆகிய இரண்டு அழகிய இறக்கைகளை உடையவர் என்று பட்ட பாஸ்கரர் உரையில் இருக்கிறது. அவர் இது விஷ்ணுவின் ஹம்சாவதாரம் பற்றிய குறிப்பு என்பார்.

த்வா ஸுபர்ணா ஸயுஜா, ஸகாயா ஸமானம் வ்ருக்ஷம் பரிஷ்வஜாதே- முண்டகோபநிஷத் 3-1-1.

 

இதிலிருந்து பறவை என்ற பொதுப் பொருளிலும் கழுகு, கருடன், அன்னம் (ஹம்சம்) என்ற சிறப்புப் பொருளிலும் இச்சொல் கையாளப்ப ட்டது தெரிகிறது.

 

விட்டுணு சஹஸ்ரநாமத்தில் இரண்டு இடங்களில் சுபர்ணா என்ற சொல் விட்டுணுவைக் குறிக்கிறது. மற்றொரு இடத்தில் “வேதமாகிய இலைகளோடு கூடிய சம்சார மரத்தின்” என்று ஆதி சங்கரர் உரை சொல்லும். இதற்கு அவர் கீதையை மேற்கோள் காட்டுவார் (கீதை 15-1)

கழுகு  வடிவ யாக குண்டம்

சிந்து சமவெளியில்

 

சிந்து சமவெளியில் கருடன் போல முத்திரை கிடைத்தது.

 

இறந்துபோனவர் வீட்டில் அந்த ஆன்மா கடைத் தேறுவதற்காக 13 நாட்களுக்குள் ஒரு நாள் கருட புராணத்தைப் படிக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. கருடன் அமிர்தம் எடுத்து வந்த கதை, மரகதம், மாணிக்கத்தை எடுக்கும் முறை, கரிகால் சோழன் முதலிய அரசர்கள் பருந்து வடிவில் யாக குண்டம் வைத்து, ராஜசூய யக்ஞம் முதலியன செய்ததை முன்னரே எழுதிவிட்டேன்.

 

ரோமானிய மன்னர்களின் சடலத்தைத் தகனம் செய்யும்போது சிதைத்தீக்கு மேலே ஒரு கழுகைப் பறக்கவிடுவர். மன்னரின் ஆவி சொர்க்கத்துக்கு/ வானுலகத்துக்குச் செல்லுகிறது என்பது இதன் பொருள். இது இந்துக்களின் நம்பிக்கை. மனித உடலில் உள்ள ஆன்மா கூட்டைவிட்டுச் செல்லும் பறவை போல மேலே பறதுவிடும் என்பது இந்துமத நூல்களில் காணப்படுகிறது. தமிழ் வேதமாகிய திருக்குறளிலும் சங்க இலக்கியத்திலும் இதே கருத்தைக் காண்க:-

 

குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்றே

உடம்போடு உயிரிடை நட்பு (338)

 

அழாஅம் உறைதலும் உரியம் – பராரை

அலங்கல் அம் சினைக் குடம்பைப் புல்லெனப்

புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு (கல்லாடனார், அகம்.113)

கீதை 2-22 இதே கருத்தை வேறு உவமையுடன் (நைந்த உடை) சொல்லும்

 

எகிப்தில் கழுகு/பருந்து

 

1.ஹோரஸ் HORUS (சூரிய என்பதன் திரிபுச் சொல்) என்ற இறைவனின் வடிவம்தாம் மன்னன் என்று சொல்லும் எகிப்திய கல்வெட்டுகளும் காகிதங்களும் அந்த ஹோரஸை ஒரு பருந்தாகவே FALCON காட்டியுள்ளன.

2.கி.மு.3000 முதல் வழிபடப்படும் ஹோரஸ் என்னும் சூரிய தெய்வத்தை இந்துக்கள் கருட வாஹனத்தைச் சித்தரிப்பதுபோல, பருந்து முகத்துடனும் , மனித உடலுடனுமே வரைவர்.

3.சில நேரங்களில் சூரியன் நடுவிலும் இரண்டு (SUN DISC WITH WINGS ) இறக்கைகள் பக்கவாட்டிலும் உள்ளது போலும் வரைவர்.

4.இந்தப் பறவையின் கண்கள் நல்ல தாயத்து என்று வரைந்து அதையும் அணிந்தார்கள். இந்துக்கள் கருடனைக் கண்டால் சுப சகுனம் என்பது போல!

உலகிலுள்ள பல பண்பாடுகளில் கழுகு, கருடன் பற்றியுள்ள நம்பிக்கைகள் (மாயன் Mayan, காதிக், Gothic, மெக்ஸிகோ Mexican ) இந்துமத நம்பிக்கைகளின் பிரதிபலிப்பே!

 

முடிவுரை:-

 

ரிக் வேதத்தின் காலம் கி.மு 4500 முதல் 6000 வரை என்று ஜெ ர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும், இந்திய அறிஞர் பாலகங்காதர திலகரும் ரிக் வேதத்திலுள்ள வானியல் குறிப்புக்ளைக் கொண்டு கணக்கிட்டுள்ளனர். இதுவரை யாரும் அது தவறு என்று சொல்ல முடியவில்லை. நாமும் அந்த தேதியை ஒப்புக் கொண்டால் உலகில் கருடன்/கழுகு பற்றிப் பாடியவர்களில் நாமே முதல்வர் என்பதில் ஐயமில்லை.

 

அஸீரிய கழுகு தேவதை

கண்டபேரண்ட பட்சி (இரட்டைக் கழுகு) துருக்கி

 

–subam–

More Dictator Anecdotes (Post No.3683)

Compiled by London swaminathan

 

Date: 2 March 2017

 

Time uploaded in London:-6-46 am

 

Post No. 3683

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

In the days of Mussolini’s higher prestige, it is said that he was once stranded in a small town due to the breaking down of his automobile. He went into a local cinema. When his picture appeared on the screen every one rose but he remains seated. The manager of the theatre came forward, tapped him on the shoulder, whispering in his ear, I feel the same way but you would better stand up. It is safer.

 

Xxx

 

Calamy, the celebrated Presbyterian minister, on one occasion objected to Cromwell assuming supreme power as Protector, as being in his opinion, both unlawful and Impracticable. Cromwell observed, he cared little about the lawfulness; but why may I ask you is it impracticable?

OH! Observed the divine. It is Impracticable inasmuch as it is against the voice of the people; you will have nine in ten against you.

Very well, sir, replied Cromwell, but what if I should disarm the nine and put the sword into the tenth man’s hand; would that not do the business, think you?

The events which succeeded proved that Cromwell not only entertained the, opinion he thus expressed, but that he also acted upon it.

 

Xxx

Frank Gannet, American newspaper publisher, spent three hours one afternoon in No.10, Downing Street, where prime minister Stanley Baldwin cocked his feet on an old fashioned roll top desk, smoked pipe after pipe, and opened his mind to Gannet. Baldwin had already announced in the House of Commons that the frontier of Britain was on the Rhine.

What do you intend to do about that man across the Rhine? Gannet asked.

 

  • If a python gets out of a cage, replied Baldwin, one man would be a fool to try alone in to get him back. But several men can get him back without much trouble No, we are not going to tackle him alone.

Xxx

 

In Italy the underground wiseacres are asking

What is the difference between Christianity and fascism?

The answer is,

In Christianity one man sacrifice s himself for all. Under Fascism all men sacrifice themselves for one.

 

Xxx

Mussolini dies and went to Heaven. He received a tremendous ovation. Millions of angels sang and praised him. He was given a crown and put on a great throne. Looking around he was surprised to notice that his crown and his throne were bigger than those of God the Father. Even he was unprepared for this. How is it?he asked of God .

You are greater than I, said God respectfully.

I gave your people one day of fasting a week. You have given them seven. I gave them faith. You have taken it away.

Xxx

 

In the year when the 20th anniversary of Fascism was celebrated; a stranger was riding through the streets of Naples in a carriage.

They passed a bakery and he saw a great mob of people storming place. He asked the driver about it, and the cabby, afraid to speak, said that it was a film being made. Not much farther along another mob of people was seen outside a grocery.

What is that? Asked the stranger

The second scene, said the driver.

Further along a similar mob was besieging a butcher.

Without waiting to be asked, the cab driver said,

This is the third scene.

What the name of the picture, anyway? asked the passenger.

Twenty years after, said the driver.

xxx

When that late and noble statesman Neville Chamberlain, was about to start from the fatal Munich conference, Herr Hitler said to him

Mr chamberlain, would you be so kind as to give me your umbrella for a keepsake?

No, no, said chamberlain, I can’t do that.

But Mr chamberlain, it would mean so much to me. I request it of you, please!

I am sorry. I can’t oblige you, said chamberlain

Hitter flew into a rage. I insist, he screamed stamping on the prime minister’s foot.

No, said, chamberlain firmly, it is impossible. You see, the umbrella is mine.

 

adolf-hitler

–Subham–

அறிவு – ஆணுக்கு அதிகமா, பெண்ணுக்கு அதிகமா? (Post No.3682)

Written by S NAGARAJAN

 

Date: 2 March 2017

 

Time uploaded in London:-  5-53 am

 

 

Post No.3682

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

24-2-2017  பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

அறிவு – ஆணுக்கு அதிகமா, பெண்ணுக்கு அதிகமா?

 

ச.நாகராஜன்

 

தமிழ் நாட்டுப் பெண்கள் அறிவில் சிறந்தவர்கள். அதிலும் கொங்கு நாட்டுப் பெண்க்ள் அறிவில் சிறந்திருப்பதோடு தாங்கள் சிறந்திருப்பதை தக்க விதமாக எடுத்துக் காட்டுவதிலும் சிறந்தவர்கள். எளிதில் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வி ஆணுக்கு அறிவு அதிகமா அல்லது பெண்ணுக்கு அதிகமா என்பது.

 

 

இதற்கு தக்க விதமாக விடையளித்த கொங்கு நாட்டுப் பூங்கோதையின் சரித்திரம் சுவையானது.

தக்கையிசை ராமாயணம் என்ற நூலை இயற்றிய சிறந்த கவிஞரான எம்பிரான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சங்ககிரியில் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி பூங்கோதை அறிவில் சிறந்தவர். கவி பாட வல்லவர். அடக்கத்திற்கும் பெயர் பெற்றவர்.

 

 

ஒரு நாள் கவிஞர் வெளியில் சென்றிருந்த போது அவ்ருடன் அளவளாவி மகிழ சில வித்துவான்கள் அவர் வீட்டிற்கு வந்தனர்.

பூங்கோதையார் அவர்களை வரவேற்று உபசரித்து கவிராயர் வெளியில் சென்றிருப்பதையும் சற்று நேரத்தில் வந்து விடுவார் என்பதையும் கூறினார்.

 

திண்ணையில் அமர்ந்த வித்துவான்கள் தங்களுக்குள் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

அவர்களுள் ஒருவர் எவ்வளவு தான் கற்றாலும் ஆணுக்கு முன்னால் பெண்ணின் அறிவு குறைவு தான் என்ற தன் கருத்தை முன் வைத்தார். அதை அனைவரும் சந்தோஷமாக ஆதரித்து பெண்களை இழித்துச் பேச ஆரம்பித்தனர்.

 

 

வீட்டின் உள்ளேயிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த பூங்கோதையாரால் ஒரு அளவுக்கு மேல் பொறுக்க முடியவில்லை.

 

ஒரு சிறிய துண்டுச் சீட்டில் ஒரு பாடலை எழுதி ஒரு சிறுமி மூலம் புலவர்களிடம் அனுப்பினார். அந்தப் பாடல்:

 

 

அறிவில் இளைஞரே ஆண்மக்கள்; மாதர்

அறிவில்  முதிஞரே ஆவர் – அறிகரியோ

தான் கொண்ட சூல் அறிவர் தத்தையர்; ஆண்மக்கள்

தான் கொண்ட சூல் அறியார் தான்

 

 

இதைப் படித்துப் பார்த்த புலவர்கள் திகைத்துப் போனார்கள். அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த கவிராயர் திரும்பி வந்தார். பேச முடியாமல் திகைத்திருந்த புலவர்களைப் பார்த்து என்ன விஷயம் என்று கேட்டு நடந்ததை அறிந்தார் எம்பிரான் கவிராயர்.

புலவர்கள் அவரது மனைவியார் எழுதிய பாடலை கவிராயரிடம் கொடுக்கவே அதைப் படித்துப் பார்த்துச் சிரித்த அவர் தன் மனைவியாரிடம் விளக்கம் கேட்டார்.

 

 

ஆண்மக்களை இழித்துக் கூறலாமா என்ற அவர் கேள்விக்கு அம்மையார், “நான் இழித்துக் கூறவில்லையே  ஆண், பெண் இருவரும் அறிவைக் கொண்டிருந்தாலும் அறிவில் சிறந்தவ்ர்கள் பெண் மக்களே என்றல்லவா கூறி இருக்கிறேன். ஆன்மாவானது நீர்த்துளி வழியே பூமியில் சேர்ந்து உணவு வழியாக புருஷ கர்ப்பத்தில் தங்கி பின்னர் பெண்ணின் கருப்பையை அடைந்து கற்பமுற்றி சிசு பிறக்கிறது. இதை உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் போன்ற நூல்கள் விளக்கவில்லையா, என்ன? ஆகவே தங்கள் கர்ப்பதைத் தெரிந்து கொள்ளாத ஆண்களை விட அதை அறிந்திருக்கும் பெண்களே அறிவில் சிறந்தவர்கள் என்கிறேன்” என்றார்.

 

உயிர்கள் பிறத்தலைப் பற்றி பிரம்மசூத்திரம் மூன்றாம் அத்தியாயம் முதல் பாதம் முதல் சூத்திரத்திற்கு நீலகண்ட சிவாசாரிய சுவாமிகள் அருளிய விளக்கவுரையையும் சிவஞான போதம் இரண்டாம் சூத்திரத்தில் உள்ள விளக்கவுரையையும் பூங்கோதை வீட்டின் உள்ளிருந்தபடியே நன்கு விளக்கினார்.

 

மேல் உலகம் சென்ற ஒரு உயிரானது, பூமிக்குத் திரும்பும் போது முறையே துறக்கம், மேக மண்டலம், நிலம், தந்தை, தாய் ஆகிய ஐந்து இடத்துப் புகுந்து வருவதை தியானித்தலே பஞ்சாக்கினி வித்தை என்று அறநூல்கள் கூறுகின்றன.

சொர்க்கம் சென்ற ஆன்மா,  மேகத்தை அடைந்து மழைத்துளி மூலம் நிலைத்தை அடைந்து உணவுப் பொருளாய் புருஷ தேகத்தை அடைந்து பின்னர் இந்திரிய மயமாக பெண்ணின் கருப்பையை அடைந்து சிசுவாகப் பிறக்கிறது. புருஷ கர்ப்பத்தில் இரண்டு மாதம் தங்கி இருப்பதை ஆண்கள் அறிவதில்லை. ஆனால் கருவுற்ற உடனேயே பெண் மக்கள் அதை அறிந்து போற்றிப் பாதுகாத்து குழந்தையைப் பிரசவிக்கின்றனர்.

அறிவில் சிறந்தவர் ஆணா, பெண்ணா? பெண்ணே தான் என்று அடித்துக் கூறினார் பூங்கோதையார்.

 

 

விக்கித்துப் போன புலவர்கள் அதை ஒப்புக் கொண்டனர்.

விஷயம் கொங்கு  மண்டலம் வழியே தமிழகமெங்கும் பரவியது. அனைவரும் பூங்கோதையாரைப் பாராட்டி மகிழ்ந்தனர். தாய்க்குலத்தின் மகிழ்ச்சியைச் சொல்லவும் வேண்டுமோ!

 

 

இந்த் சிக்கலான கேள்விக்கு சரியான பதிலை அளித்த அறிவில் சிறந்த பெண்மணியான பூங்கோதையைப் பெற்ற மணியான பூமி கொங்கு மண்டலமே என்று கொங்கு மண்டல சதகத்தில் கார்மேகக் கவிஞர் பாடியுள்ளார்.

கொங்கு மண்டல சதகத்தில் 45வது பாடலாக மலர்ந்துள்ள பாடலைப் பார்ப்போம்:

 

 

குறுமுனி நேர்  தமிழ் ஆழி உண் வாணர் குழாம் வியப்ப

அறிவில் இளைஞரே ஆண் மக்கள் என்ன அறுதியிட்ட
சிறிய விடைச்சி எம்பெருமான் மனைவி சிறந்து வளர்

மறுவறு சங்ககிரி சேர்வது கொங்கு மண்டலமே

 

பொருள்: தமிழ்க் கடலை உண்ட அகத்திய முனி போன்ற பல புலவர்கள் வியக்குமாறு, அறிவில் இளைஞர் ஆண் மக்களே என்று முடிவு கூறிய எம்பெருமான் கவிராயரது மனையாட்டியார் வாழும் சங்க கிரியும் கொங்கு மண்டலமே!

****

 

 

 

Cabinet Ministers Anecdotes (Post No.3681)

Written by London swaminathan

 

Date: 1 March 2017

 

Time uploaded in London:- 19-57

 

Post No. 3681

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

Twelve Apostles and Lincoln

When Attorney General Bates resigned in 1864, the Cabinet was left without a Southern member. A few days before the meeting of the Supreme Court, which then met in December, Mr Abraham Lincoln sent for Titian G Coffey , and said,

“My cabinet has shrunk up North, and I must find a Southern man . I suppose if the Twelve Apostles were to be chosen nowadays, the interests of locality would have to be heeded.”

Xxx

How to control a Christian Preacher and Minister?

Lincoln received many complaints because of the stern dictatorial methods employed by the Secretary of War, Stanton. He finally silenced them by saying,

“We may have to treat Stanton as they are sometimes obliged to treat a Methodist minister I know out West . He gets wrought up to so high a pitch of excitement in his prayers and exhortations that they put bricks in his pockets to keep him down. But I guess we will let him jump awhile first.”

X xx

Keep my wife out of it—Oz PM

When former prime minister Menzies of Australia was sworn into office, various representatives of the press were on hand to interview him. The reporter from the radical press said, somewhat bluntly,

“I suppose Mr Prime Minister, that you will consult the powerful interests that control you in choosing your cabinet?”

 

“Young man, snapped the Prime Minister, keep my wife’s name out of it”.

 

Xxxx

 

Mayor anecdote

A mayor of a city in southern Italy, in an address of welcome to King of Italy, said

“We welcome you in the name of five thousand inhabitants, three thousands of whom are in America.”

 

மண்டோதரி பற்றி இரண்டு விசித்திரக் கதைகள் (Post No.3680)

0e629-mandodari-in-siya-ke-ram-piyali-munsi

Written by London swaminathan

 

Date: 1 March 2017

 

Time uploaded in London:- 8-27 am

 

Post No. 3680

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

ராவணனின் மனைவியான மண்டோதரியை இந்துப் பெண்கள் தினமும் காலையில் வணங்குகின்றனர்சீதை.அஹல்யா,திரவுபதி, குந்தி, தாரா, மண்டோதரி என்ற பஞ்சகன்யைகளை (5 பெண்களை) யார் தினமும் நினைக்கிறார்களோ அவர்களுடைய பாபங்கள் அகன்று அவர்கள் புண்ணியம் அடைவார்கள் என்பது இந்துக்களின் வௌவான நம்பிக்கை.

ராமகிருஷ்ண பரமஹம்சரும் , மாணிக்கவாசகரும் மண்டோதரி பற்றி சொல்லும் கதைகள் விநோதமானவை.

 

மண்டோதரி மயன் என்னும் அசுரனின் மகள்; இந்திரஜித்தின் தாய்; ராவணன் உயிர் துறந்தவுடன் உயிர் நீத்த பத்தினி; சீதையை விட்டுவிடும்படி ராவணனுக்கு புத்திமதி சொன்ன வீராங்கனை!

 

 

“ஸீதையைத் தங்கள் நாயகியாக்கிக் கொள்வது கருத்தானால், தங்களுடைய மாயா சக்தியால் ராமனுடைய உருவத்தை எடுத்துக்கொண்டு அந்த ஸீதையைத் தாங்கள் ஏன் ஏமாற்றிவிடக் கூடாது? என்று மண்டோதரி தன் கணவனான ராவணனைக் கேட்டாள்.

 

அதற்கு ராவணன் “சீ! போ, ராமனை நினைத்த மாத்திரத்தில் எனக்குச் சொல்லவொண்ணாத ஆனந்தமும் இன்பமும் உண்டாகின்றன. பரமபதமான சொர்கமும்கூட வெறுப்பாகிவிடும் போலத் தோன்றுகிறது. அப்படியிருக்க அவனுடைய திவ்விய ரூபத்தை எடுத்துக்கொண்டால் எனக்குச் சிற்றின்பத்தில் எப்படி மனம் செல்லும்?” என்று பதில் சொன்னான்.

 

ஆதாரம்:— ராமகிருஷ்ண பரம்ஹம்சரின் உபதேச மொழிகள், பக்கம் 152 (ராமகிருஷ்ணமடம், மயிலாப்பூர், சென்னை)

 

மாணிக்க வாசகர், திருவாசகத்தில் இரண்டு இடங்களில் மண்டோதரி பெயரைக் குறிப்பிடுகிறார்.

 

உந்து திரைக்கடலைக் கடந்தன்

றோங்கு மதிலிலங்கையதனில்

பந்தணை மெல்விரலாட்கருளும்

பரிசறி வாரெம்பிரானவாரே

–திருவார்த்தை, திருவாசகம்

 

 

இதற்கு வியாக்கியானக்காரர்கள் சொல்லும் விளக்க உரை:-

 

மண்டோதரி ராவணன் மாளிகையில் இருந்து இறைவனைத் தியானித்தாளாக, இறைவன் குருமேனி தாங்கியிருந்த  கோலத்துடன், அங்குச் சென்று அவளுக்குக் காட்சியளிக்க, இறைவனுடைய பேரழகில் ஈடுபட்டுப் பேரின்பத்தைக் கேட்கவிருந்த அவள் மயங்கிச் சிற்றின்பத்தில் தன்னுடைய சிந்தையைச் செலுத்தினாள். அவளுடைய அறியாமையைக் கண்ட இறைவன், அவள் கற்பொழுக்கம் கெடாதிருக்க, உடனே அந்த இடத்தை விட்டு மறைந்தார். அவள் வருந்தினாள். அவள் கொண்டது ஒருதலைக் காமம் ஆதலின் பெண் குழந்தை ஒன்று அவளுக்குப் பிறந்தது. அதனைப் பெட்டியுள் வைத்துக் கடலில் விட்டாள். அதுவே மிதிலையில் வந்து ஒதுங்கிப் புதையுண்டு ஜனகனுடைய உழுகால் நுனியில் வெளிவந்தது என்பது வரலாறு.

 

ஆதாரம்:–பக்கம் 1168,  திருவாசகம் ,திருவாவடுதுறை ஆதீனம், 1964

3510a-mandodari-stopping-ravan

ராவணனைத் தடுத்து நிறுத்தும் மண்டோதரி

 

இன்னொரு இடம்:

 

ஏர்தரு மேழுல கேத்த எவ்வுரு வுந்தன் நுருவாய்

ஆர்கலி சூழ்தென்னி லங்கை யழகமர் வண்டோதரிக்குப்

பேரரு ளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச்

சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவுவாய்

–குயில்பத்து, திருவாசகம்

 

 

பொருள்:

 

கடல் சூழ்ந்த அழகிய இலங்கையில் வண்டோதரிக்கு எழுச்சியை விளைவிக்கும் ஏழுலகத்தவர்களும் போற்றக் காணப்பெறும் எல்லா வடிவங்களும் தன் வடிவேயாய்ப் போந்து பேரருளால் பேரின்பத்தையளித்த பெருந்துறைக்கண் விரும்பி எழுந்தருளியுள்ள பெருமானை, தென்பாண்டி நாட்டானை உனது புகழமைந்த வாயால் வரக்கூவுவாயாக குயிலே என்றவாறு.

 

ஆதாரம்:–பக்கம் 748,  திருவாசகம் ,திருவாவடுதுறை ஆதீனம், 1964

 

அசுரப் பெண்களையும் இந்துக்கள் தினமும் கொண்டாடுவது ஆரிய-திராவிட மாயையைப் பரப்பும் அறிவிலிகளுக்கு செமையடி கொடுக்கும்; எல்லா அசுரர்களும், இராக்கதர்களும் சிவனையும், பிரம்மாவையும், விஷ்ணுவையும் பிரார்த்தித்து வரம் வாங்கியது அவர்களும் இந்துக்களே; ஆனால் சக்தியைத் தீய வழியில் பயன்படுத்தியவர்கள் என்பதை காட்டுகின்றன. ‘அசுரர்களும் இராக்கதர்களும் திராவிடர்கள்’ என்று அங்கலாய்க்கும் பொந்தெலிகளுக்கும் பேதிலிகளுக்கும், ஆரிய-திராவிட இனவாதம் பேசும் அசிங்கங்களுக்கும் இது செமையடி தரும்.

 

–subaham–

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 31 (Post No.3679)

Buddha in Dambulla, Sri Lanka; picture by Dr Devaraj of London.

 

Written by S NAGARAJAN

 

Date: 1 March 2017

 

Time uploaded in London:-  5-24 am

 

 

Post No.3679

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 31

by ச.நாகராஜன்

 

 

107ஆம் வயது (1946-1947)

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 107. ஒரு வழியாக இரண்டாம் உலக மகா யுத்தம் ஒரு முடிவுக்கு வந்திருந்ததால்,. அனைத்து அரசு அலுவலகங்களும் தங்கள் பழைய இடங்களுக்குத் திரும்பின. வசந்த காலத்தில் உரிய சூத்திரங்கள் இசைக்கப்பட்டன.  யுத்தத்தில் இறந்த்வர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை புரியுமாறு அனைத்து ம்டாலயங்களுக்கும் அரசு உத்தரவிட்டது.  ஆகவே காண்டனில் உள்ள ஜின் ஹுயி ஆலயத்திற்கு  அது போன்ற ஒரு பிரார்த்தனைக்கு வருமாறு அதிகாரிகளும் உயரிய பிரபுக்களும் ஸு யுன்னுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

 

 

நவம்பர் மாதம் அங்கு ஆலயத்திற்குச் சென்றார் ஸு யுன். அங்குள்ள பீச் மரங்கள் பிரார்த்தனை புரியும் போது திடீரென்று மலர்ந்தன. பிரமாதமாக நறு மணம் வீசியது. ஒரு லட்சம் பேர் ஆலயத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் சீஸனே இல்லாத போது மலர்கள் மலர்ந்த  இந்த மாபெரும் அதிசயத்தைப் பார்த்து வியந்தனர். உபாசிகா ஜெங் பி-ஷான் பழைய கால புத்தரை எம்ப்ராய்டரியில் செய்து பீச் மலர்களால் அலங்கரித்தார். உபாசகர் ஹூ யி-ஷெங் புனித மலர்களை ஒரு ஓவியமாகத் தீட்டினார்.

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் அனைத்து அதிகாரிகளும் பிரபுக்களும் கை யுயான் மடாலயத்திற்கு வந்து புத்த தர்மத்தைப் போதிக்குமாறு வேண்டினர். ஏராளமான பேர்கள் அங்கு குழுமினர். குளிர்காலத்தில் ஸு யுன்னின் மூத்த சீடரான குவான் பென் காலமானார்.

 

 

108ஆம் வயது (1947-1948)

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 108. வசந்த காலத்தில் நான் ஹூவா மடாலயத்திற்கு ஸு யுன் சென்று சூத்ரங்களை இசைத்தார். ஹாங்காங்கில் உள்ள டோன்ஹுவா ஆஸ்பத்திரிகளின் குழுமம் ஸு யுன்னை  அழைத்து க்ரவுன் காலனி மக்களின் நலனுக்காக பிரார்த்தனை புரியுமாறு வேண்டியது. சோங்-லான் பள்ளியில் நட்ந்த பிரார்த்தனை கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குழுமினர்; ஸு யுன்னின் சீடர்களாயினர். உபாசிகா ஜெங் பி-ஷான் ஸு யுன்னுக்கு அனைத்து உதவிகளையும் செய்தார்

அடுத்து மக்காவோவில் உள்ளவர்கள் அழைக்கவே அங்கு ஒரு வார கால தியானம் அனுஷ்டிக்கப்பட்டது. அங்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் ஸு யுன்னின் சீடர்களாயினர்.

 

உபாசகர் மா ஷி சுவான் அழைப்பை ஏற்று மவுண்ட் ஜோங் சென்ற ஸு யுன் அங்கு ம்ஹா கருணை கூட்டத்தை நடத்தினார். அங்கும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்; அவர்களும் சீடர்களாக ஆயினர். பின்னர் யுவான் மென் மடாலயம் திரும்பிய ஸு யுன் அங்கு புனருத்தாரண வேலையை துரிதப்படுத்தினார்.

வருடம முடிவுக்கு வந்தது.

 

 

109ஆம் வயது (1948-1949)

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 109.. வசந்த காலத்தில் நான் ஹுவா மடாலயத்தில் சூத்ரங்கள் இசைக்கப்பட்டன.  ஸு யுன் காண்டனில் உள்ள  ஜி டே மருத்துவமனையைத் திறப்பதற்காக அழைக்கப்பட அங்கு சென்றார். அந்த விழாவை முடித்து விட்டு ஹாங்காங்கில் சி ஹாங் ஆலயத்தில் சூத்ரங்களை இசைத்தார்.

அங்கு ஒரு வார காலம் ப்யூர் லேண்ட் தியானத்தை நடத்தி சரணாகதி சூத்ரத்தையும் ஐந்து சூத்ரங்களையும் கற்பித்தார்.  பின்னர் யுன்  மென் மடாலயத்திற்குத் திரும்பினார்.

யூனானில் ஐந்தாம்  மாதம் தர்ம குரு ஜியா சென்  மறைந்தார்.

 

 

இலையுதிர்காலத்தில் அமெரிக்கப் பெண்மணியான ஆனந்தா ஜென்னிங்ஸ் அங்கு வந்து உபதேசம் செய்தார். ஒருவார காலம் சான் தியானம் நடைபெற்றது. அவருக்கு ஒரே மகிழ்ச்சி.

.ஆனந்தா ஜென்னிங்ஸ் புத்த தர்மத்தை ந்னகு கற்றுத் தேர்ந்த வல்லுநர். அவரை ஸு யுன்னின் சீடரான மாஸ்டர் குவி ஷி சோதனை நிமித்தம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.

சரித்திர பிரசித்தி பெற்ற இந்த உரையாடலின் போது ஆனந்தா ஜென்னிங்ஸ் உடனுக்குடன் கேள்விகளுக்கு பளீர் பளீரென்று பதில் அளித்தார்.

 

இதனால் அனைவரும் மகிழ்ந்தனர். ஸு யுன்னும் குவி ஷியும் அவரை ஆசீர்வதிக்க அவர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் அமெரிக்கா திரும்பினார்.

 

 

110ஆம் வயது (1949-1950)

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 110.. நான் ஹுவா மடாலயத்தில் போதனைகள் முடிந்த பிறகு யுன் மென் திரும்பிய ஸு யுன் எண்பது சிலைகளுக்கான பூச்சு வேலையையும் அதன் பீடங்கள் உருவாக்கப்படுவதையும் மேற்பார்வையிட்டார்.

இது முடிய ஒரு வருட காலம் ஆனது.

இப்படியாக ம்டாலயம் தொண்ணூறு சதவிகிதம் புதுப்பிக்கப்பட்டது.

 

ஹாங்காங்கில் புத்தர் கோவில் ஒன்றைத் திறக்க வருமாறு உபாசகர் பாங் யாங் கியூ அழைக்கவே அங்கு விரைந்த ஸு யுன் பிரக்ஞா விஹாரத்தில் சூத்ரங்களை போதித்தார்.

ஒரு மாதம் அங்கு கழிந்தது. பின்னர் அவர் யுன் மென் திரும்பினார்.

 

யுன் மென் மடாலயத்தின் ஆவணங்களைத் திருத்துமாறு ஸு யுன், உபாசகர் சென்ஸியூ லு-ஐக் கேட்டுக் கொண்டார்.

வருடம் முடிவுக்கு வந்தது.

 

-தொடரும்