வேதங்களில் எண் 17 ஒரு ரஹசிய எண்! (Post No.3919)

Research article Written by London Swaminathan

 

Date: 18 May 2017

 

Time uploaded in London: 16-43

 

Post No. 3919

 

Pictures are taken from various sources such as Face book, google and Wikipedia; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

(I have already posted the English version of this article yesterday)

 

வேதங்களை சங்க காலத் தமிழர்கள் மறை என்று அழகாக மொழி பெயர்த்தனர். ஏனெனில் நிறைய ரஹசியங்கள் நிறைந்தவை. மறை என்றால் மறைவான பொருளுடைத்து. அதனால்தான் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் போன்றோர் வேதத்தின் அர்த்ததைப் பற்றிக் கவலைப்படாமல் அதை சொல்லி வாருங்கள்; அந்த மந்திர சப்தமே பலன் தரும் என்பர்; அது மட்டுமல்ல ஒரு அழகான கதையும் சொல்லுவார்.

 

ஒரு கண் தெரியாத குருடன் விளக்கை எடுத்துச் சென்றதைப் பார்த்து எதிரே வந்தவர்கள் பரிகசித்தனராம். அவன் அவர்களைப் பார்த்து,எனக்கு கண் தெரியாதது உண்மையே; உங்களைப் போன்றோர் இருட்டு நேரத்தில் என் மீது மோதி விடக் கூடாதல்லவா? என்றானாம்.

 

இதே போல நாம் வேதத்தின் பொருள் விளங்காத, அந்தகர்களாக இருந்தாலும், வேதம் என்னும் விளக்கை- ஞான தீபத்தைக் கையில் ஏந்திச் சென்றால் — எதிர்காலத்தில் ஆதி சங்கரர் போன்ற ஒரு தீர்க்கதரிசி தோன்றி உலக மக்களை உய்விப்பர் என்னும் கருத்து வரும்படி காஞ்சி சங்கராசார்ய சுவாமிகள் 91894-1994) அருள்மொழி வழங்கியுள்ளார்.

 

வேதத்தின் பொருளை விளக்க முற்பட்ட, மொழிபெயர்க்க முன்வந்த வெளிநாட்டுக்காரகள் வரிக்கு வரி இந்துக்களைக் குறை கூறுவர். அந்தப் புத்தகங்களைப் படிக்கும் போது ஒரே சிரிப்பாக வரும். அவர்களுடைய மொழிபெயர்ப்புகளை உளறுவாயன் உளறல் என்று சொல்லுவதா அல்லது தமாஷ் என்று சொல்லுவதா என்று தெரியவில்லை. இதை நீங்களே கண்டு பிடிக்கலாம்.

 

ஒரு குறிப்பிட்ட மந்திரத்துக்கு ஒவ்வொரு ஐரோப்பியரும் என்ன பொருள் சொல்லுகின்றனர் என்று அருகருகே வைத்துப் பார்த்தால் குபீரென்று சிரித்து விடுவீர்கள். புத்தரும் ஆரிய என்ற பதத்தைப் பிரயோகித்தார்; சங்க இலக்கியப் புலவர்களும் ஆரிய என்ற சொல்லைப் பயன்படுத்தினர். பாரதியாரும் ஆரிய என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இவர்கள் அனவரும் கனவான்கள், பண்பாடுடையோர், முனிவர்கள், இமயமலை வாழ் மக்கள் என்ற பொருளில் பயன்படுத்தினர். ஆனால் வெள்ளைக்கார்கள் மொழி பெயர்ப்பு முழுவதிலும் ஆரியர் என்பது ஒரு இனம் என்று மொழிபெயர்த்து அதற்கு அடுத்தவரியில் இது திராவிடர்களுக்கு எதிரானது என்று சேர்த்து இருப்பர். இந்தப் பொருள் எந்த இந்திய இலக்கியத்திலும் இல்லாதது.

எங்கெல்லாம் அவர்களுக்குப் பொருள் தெரியவில்லையோ அங்கெல்லாம் இது ஆரியர்களின் உளறல் (gibberish) என்றும் ஒரு வரி சேர்ப்பர்; சில இடங்களில் இது யாருக்கும் பொருள் விளங்காத விஷயம் (obscure) என்பர். உண்மையில் வேதம் முழுதும் அடையாள பூர்வமாக, சங்கேத (symbolism) மொழியில் பல விஷயங்களைச் சொல்ல வந்த நூல். பிற்காலத்தில் தமிழில் அப்பர், திருமூலர், சிவ வாக்கியர் போன்ற பெரியோரின் பாடல்களில் இப்படி எண்களைப் பயன்படுத்துவதைக் காண லாம். அறிஞர் பெருமக்களின் வியாக்கியானத்தால்தான் அவைகளின் உட்பொருளை நாம் அறிய முடியும்..

வேதத்தில் உள்ள எவ்வளவோ ரஹசியங்கள் பற்றி பல கட்டுரைகள் எழுதிவிட்டேன். இன்று 17 என்ற மாய எண்ணின் குறிப்புகளைக் காண்போம்.

 

யஜூர் வேதத்தில் ருத்ரம் சமகம் என்ற பகுதியில் சமகத்தில் இப்படி எண்களை அடுக்கிக் கொண்டே போவர். உலகின் மிகப் பெரிய எண்கள் பிராமண நூல்களில் உள்ளன. அதற்குப் பின்னர் அதை சமண பௌத்த நூல்கள் செப்பின. தசாம்ச (Decimal, Binary) முறையை உலகிற்குக் கற்பித்து பூஜ்யம் என்ற எண்ணை உருவாக்கி உலகில் கம்யூட்டர் மொழியை உருவாக்க உதவினர். ஆனால் எண் 17 என்று எதற்காக ஒரு விநோத எண்ணைத் திரும்பத் திரும்ப குறிப்பிடுகின்றனர் என்று தெரியவில்லை. இதுபற்றி யஜூர் வேத தைத்ரீய சம்ஹிதையில் குறைந்தது ஆறு ஏழு இடங்களில் வருகிறது

 

பிரஜாபதியின் எண் 17 என்று ஒரு இடத்தில் சொல்லுவர்.

 

ஆறு, குளம், ஏரி, கடல், மழை நீர் முதலிய இடங்களில் இருந்து யாகத்துக்கு நீர் கொண்டு வரவேண்டும் என்ற பட்டியலில் 17 நீர்நிலைகள் என்று முடிப்பர்.

 

 

யாகங்களுடன் இணைந்தது குதிரை பூட்டிய தேர் பந்தயம் ஆகும் . இதில் ஒரு வீரன் 17 அம்புகள் எய்தி இடத்தைக் குறிப்பான் என்று வருகிறது

அப்பொழுது 17 டமாரங்கள் முழங்க வேண்டுமாம்.

 

இன்னும் ஒரு மந்திரம்:

 

ஒரு அசைச் சொல்லுடன் அக்னி வாக் (பேச்சு)கை வென்றான்

இரு அசைச் சொற்களுடன் அஸ்வினி தேவர்கள் உற்சாகத்தை வென்றனர்

விஷ்ணு மூன்று அசைச் சொற்களுடன் மூவுலகத்தை வென்றார்

சோமா நான்கு அசைச் சொற்களுடன் காலநடைகளை வென்றார்

பூசன் ஐந்து பங்க்தியை வென்றார்

பிரஜாபதி 17  சொற்களுடன் 17 மடங்கு ஸ்தோமாவை வென்றார்.

 

இப்படிப் பல மந்திரங்கள்!

 

யாகத்தில் 4 முக்கிய புரோகிதர்கள், அவர்களுக்கு உறுதுணையானோர் நால்வர், அவர்களுக்குப் பல வகைகளில் எடுபிடி வேலை செய்வோர்– என்று 17 பேரைச் சொல்லுவர்.

17 என்பது ஒரு மர்மமான எண்!

 

“தமிழில் பழ மறையைப் பாடுவோம்” என்று பாரதி முரசு கொட்டினான். “வேதம் என்று வாழ்க வென்று கொட்டு முரசே” என்றான் பாரதி.

 

நாமும் முடிந்தவரை வேதத்தை வாழ்த்துவோம். அது நம்மை வாழ்த்தும்; வாழ்விக்கும்.

-சுபம்-

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: