போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் பாடல்கள் (Post No.4294)

Written by London Swaminathan

 

Date:12 October 2017

 

Time uploaded in London- 11-26 AM

 

 

Post No. 4294

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Asaram Bapu, accused in several cases

 

அறநெறிச்சாரம் என்பது அருமையான கவிதை நூல்;

226 வெண்பாக்களைக் (வெண்பா= நான்கு அடிகள்) கொண்டது.

இதை இயற்றியவர் முனைப் பாடியார். இது 600, 700 ஆண்டுகளுக்கு முன்னர் சமண சமயத்தில் நம்பிக்கை உடையவரால் இயற்றப்பட்டத்து, அருகக் கடவுள் பற்றிய பாடல்களில் இருந்து தெரிகிறது.

 

நம் எல்லோருக்கும் எது நல்லது எது கெட்டது என்பது அனுபவ அறிவாலும் அப்பா, அம்மா, ஆசிரியர் சொற்களாலும் தெரியும். இருந்த போதிலும், போலீசும், ராணுவமும், கோர்ட்டுகளும், வக்கீல்களும் எதற்கு? ஏன் என்றால் பெரும்பாலோர் நல்லனவற்றைப் பின்பற்றுவதில்லை. இதனால் சிறைச் சாலைகள் நிரம்பி வழிகின்றன.

 

ஆகையால் நல்ல விஷயங்களை எத்தனை முறை படித்தாலும் நன்மையே; ‘எனைத்தானும் நல்லவை கேட்க’– என்பார் வள்ளுவப் பெருமான்; அடக் கடவுளே! கொஞ்சமாவது நல்லதைக் கேளுங்களென்பதே வள்ளுவன் வாக்கு.

 

கூடா ஒழுக்கம் என்னும் அதிகாரத்தில், போலி வேடம் போடும் ஆட்கள் பற்றி வள்ளுவன் மூன்று அருமையான விஷயங்களைச் சொல்கிறார்:-

 

  1. ஒருவன் பொய் ஒழுக்கத்தைக் கடைப் பிடிக்கையில் அவன் உடலில் உள்ள பஞ்ச பூதங்களும் தமக்குள்ளேயே சிரித்துக் கொள்ளுமாம் ( kural 271)

 

  1. ஒரு பசு மாடு புலித்தோலைப் போர்த்திக் கொண்டு மேய்கிறதாம். அதாவது, தவ வலிமை அற்றவன், சந்யாசி வேடம் போற்று நடிக்கிறானாம். (273)

 

3.சந்யாசி போல வேடம் போட்டுவிட்டு, இரவு நேரத்தில் அல்லது ரகசிய இடத்தில் பாவம் செய்பவன், புதர் மறைவில் நின்று பறவைகளைப் பிடிக்கும் வேடனாம் (274).

Premananda arrested

என்ன அற்புதமான உவமைகள்!

இது போல அறநெறிச்சாரம் நூலிலும் மனதில் பதிய வைக்கும் விதத்தில் பாக்கள் அமைந்துள்ளன. இதோ அந்தப் பாடல்கள்:

 

 

பாசண்டி (போலித் துறவி- புறச்சமயி) மூடம்

 

தோல் காவி சீரைத்துணிகீழ் விழவுடுத்தல்

கோல்காக் கரகம் குடை செருப்பு — வேலொடு

 

பல்லென்பு தாங்குதல் பாசண்டி மூடமாய்

நல்லவரால் நாட்டப்படும்

 

முனைப்பாடியாரின் அறநெறிச்சாரம்

 

பொருள்:-

தோல் காவி சீரைத் துணிகீழ் விழவுடுத்தல்= மான் தோல், கல்லாடை/காவிஉடை, மரவுரி இவைகளை கீழே புரளுமாறு அணிவதும்

 

கோல்காக் கரகம் குடை செருப்பு – வேலொடு பல்லென்பு தாங்குதல் = தண்டு, காவடி, கமண்டலம், குடை, செருப்பு, வேல், எலும்பு/கபாலம், புலிப் பல் ஆகிய இவற்றை அணிந்து கொள்ளுதலும்

 

பாசண்டி மூடமாய் நல்லவாரால் நாட்டப்படும் – போலி வேடதாரிகள் அல்லது புறச் சமயத்தைச் சார்ந்தோரது அறியாமை என்று பெரியோர்கள் சொல்லுவர்.

Gurmeet Ram Rahim

கழுதை மேல் உட்கார்ந்தவன் தலை மேல் மூட்டை!

 

ஆவரணமின்றி அடுவாளும் ஆனை தேர்

மாவரணமின்றி மலைவானும் — தாவில்

கழுதையி லண்டஞ் சுமந்தானும் போலப்

பழுதாகும் பாசண்டியார்க்கு

 

ஆவரணமின்றி அடுவாளும்= கேடயம் இல்லாமல் போரில் பகைவரைக் கொல்லும் வாளும்,

 

ஆனை தேர் மாவரணமின்றி மலைவானும் =  யானை, தேர், குதிரை, முதலிய படைகளும், அரணும் இல்லாமல் போர் செய்யும் வீரன் செயலும்

 

தாவில் கழுதையி லண்டஞ் சுமந்தானும் போலப்= கழுதையின் மேல் உட்கார்ந்துகொண்டு அவன் தலையில் சுமையைச் சுமப்பவன் செயலும் போல

 

பாசண்டியார்க்கு பழுதாகும் = போலித் துறவிகளுக்கு அவர்கொண்ட வேடமும் பயனற்றதாகும்

 

று

Amrita Chaitanya, accused in several cases

வேறு பொருள்:

கழுதை + இலண்டம் = கழுதை விட்டை

தா இல் கழுதை = கோவேறுக் கழுதை

 

நல்ல உவமை! இப்போதாவது இந்தச் செய்தி நம் மனதில் பதிந்தால் முனைப்பாடியார் சந்தோஷப்படுவார்.

 

–சுபம்–

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: