ISKCON’s Rath
Yatra was celebrated this morning (16th
June 2019)in London . As usual devotees came in thousands from different parts
of the country and some from Europe. I have been attending Rath Yatra for over a quarter of a century in
London. The crowd is swelling year by year. I saw the same devotion and
dedication among the volunteers. Women came with their children in Prams. Since
it was an orderly crowd I saw less police personnel.
Thousands of
people had free feast at the Trafalgar square where the Rath Yatra ended. It
took two hours to reach the destination
from Hyde Park Corner. Since three Rathas (Chariots of Lord Jagannath,
Balabhadra and Subhadra) passed through heart of London, millions of pictures
were taken by devotees and tourists. In the beginning I saw more tourists in
the free food queue than the devotees. Water stalls, Bhonji (salted lemon juice
drink) stalls and food stalls were in different places in the Square. Book
stalls and other stalls were available for general public to browse through.
Hinduja Foundation gave the free feast to all those came to see the Rath Yatra.
Devotees
took turns to sweep the roads to clean the path of God’s procession. Hare
Krishna and Hare Rama Bhajan accompanied by instrumental musicians was heard
continuously for two hours. Men and women were dancing for two hours while they
passed trough the entire route. Women came in their traditional sarees and
added colour to the procession. It was a memorable event. I went with the
procession for one hour and took some pictures:-
இந்தப்
பிரபஞ்சத்தைக் கட்டுவதற்கு இறைவன் 118
விதமான செங்கற்களைப் பயன்படுத்தினான். அவைகளை நாம் மூலகம் என்றும் தனிமம் (ELEMENT) என்றும் அழைக்கிறோம். நாம்
சுவாசிக்கும் ஆக்ஸிஜன் ஒரு மூலகம். நாம் பயன்படுத்தும் இரும்பு, வெள்ளி, தங்கம், வைரம்,பிளாட்டினம் தாமிரம் ஆகியனவும் மூலகங்களே. அணுகுண்டு
தயாரிக்கப்பயன்படும் யுரேனியம், ப்ளூட்டோனியம்
ஆகியவையும் மூலககங்களே.
இவ்வகையில்
பிஸ்மத் (BISMUTH)
என்னும் மூலகம் ஒரு உலோகம் ஆகும். வெள்ளை நிறக்கட்டி(WEISSE MASSE= WISMUTH= BISMUTH) என்ற ஜெர்மன் சொல்லிலிருந்து வந்தது இந்த
பிஸ்மத். நமது உடலில் இது மிக மிக மிகக் குறைந்த அளவே உள்ளதால் இது உடலுக்குத்
தேவை இல்லை என்று சொல்லலாம். ஆயினும் ஆரோக்கியமாக வாழவும், அழகுடன் வாழவும் பிஸ்மத் உதவுகிறது.
பெண்களின் நகங்களில் போடும் நெயில் பாலிஷ் பள,பள (PEARL EFFECT) என்று பிரகாசிக்கும். இதற்கு அதிலுள்ள பிஸ்மத் ஆக்ஸி க்ளோரைட் உதவுகிறது இது போல அவர்கள் பூசும் உதட்டுச் சாயமும் பள பள என்று இருக்க வேண்டுமானால் அதில் பிஸ்மத் இருக்கும்!
வயிற்று
வலிக்கு பிஸ்மத் மருந்து
வயிற்றில்
புண் ஏற்படுவதை அல்சர் (PEPTIC ULCER & GASTRIC ULCER) என்போம். இப்படிப் புண் ஏற்பட்டால் வயிற்று வலி இருக்கும்; காரமான பொருட்களைச் சாப்பிட்டால் வலி
அதிகமாகும். இதை வயிற்று எரிச்சல் என்றும் சொல்வர். இது குடலின் முன்பகுதி வரையும்
பரவ வாய்ப்பு உண்டு. ஒரு காலத்தில் இதைத் தீர்க்க பிஸ்மத் மிக்ஸர் (BISMUTH MIXTURE) கொடுத்தனர். இப்போது மில்க் ஆப்
மக்னீஷியா, மற்றும்
சோடியம், கால்சியம்
கார்பனேட் கலந்த மருந்துகள் பிரபலமாகிவிட்டன. ஆயினும் இப்போதும் பிஸ்மத்
பயன்படுத்தப்படுகிறது.
வயிற்றில் அமிலத்தன்மை (ACIDIC) உடைய திரவங்கள் சுரந்து பொருட்களை
ஜீரணம் செய்ய உதவுகின்றன. இந்த அமிலம், புண்களுள்ள பகுதிகள் மீது படும்போது
வலியோ எரிச்சலோ ஏற்படும். பிஸ்மத் சப்சிட் ரேட் (BISMUTH SUBCITRATE) கலந்த கரைசல் இதற்கு தீர்வு தரும்.
அதாவது வயிற்றுச் சுவரில் பதிந்து, புண்கள் ஏற்பட்ட பகுதி மீது அமிலம்
படாதபடி பார்த்துக்கொள்ளும்.
மேலும்
வயிற்றில் சுரக்கும் பெப்டிக் என்ஸம் (PEPTIC ENZYME) எனப்படும் திரவத்தைச் செயல்பட விடமல் தடுக்கிறது
தற்போதைய ஆராய்ச்சிகள் குடலில் வரும் புண்ணுக்கு —அல்சருக்கு—ஹெலிகோபாக்டர் பைலோரி (HELICO BACTER PYLORI) என்னும் பாக்டீரியா காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது . நமது உடலுக்குள் நன்மை செய்யும், தீமை செய்யும் – இரண்டு வகை பாக்டீரியாக்களும் இருக்கின்றன. தீமை செய்யும் — வயிற்றில் புண் ஏற்படுத்தும் –ஹெலிகோ பாக்டர் பைலோரி எளிதில் போகாது. இவைகளை அகற்ற பிஸ்மத் பொருளுடன் வேறு சில சக்திவாய்ந்த ஆண்ட்டிபயாடிக்ஸ் (பாக்டீரியா கொல்லி) உடன் அளிப்பர்.
இந்த
பிஸ்மத்துக்கு வேறு ஏதேனும் உபயோகம் உண்டா?
உண்டு.
இந்த உலோகத்துக்கு உருகு நிலை (271 டிகிரி
சி) குறைவு. ஆகையால் மற்ற உலோகங்களுடன் இதைச் சேர்க்கையில் அவைகளையும் எளிதில்
பயன்படுத்த முடிகிறது. எலெக் ட் ரி க் ப்யூஸ், தீயை அணைக்கும் தண்ணீர் தெளிப்பான் (AUTOMATIC SPRINKLE
SYSTEM) , ரப்பர் பொருட்கள் ஆகியவற்றில் பிஸ்மத் பயன்படுகிறது..
கண்டுபிடித்தவர்
யார்?
1400ம் ஆண்டில் பெயர் தெரியாத ஒருவர் இதைக் கண்டு பிடித்தார். அதற்குப் பின்னர் இதையும் ஈயத்தையும் ஒன்றோ
என்று எண்ணிக் குழம்பினர். பின்னர் ஜார்ஜியஸ் அக்ரிகோலா, காஸ்பர் நியூமான், கிளாட் பிரான்ஸ்வா ஜெப்ப்ராய் ஆகியோர்
வெவ்வேறு காலத்தில் இது ஒரு மூலகம் என்றனர்.
அமெரிக்கா, பொலிவியா, பெரு, ஜப்பான், மெக்ஸிகோ, கனடா முதலிய நாடுகளில் நிக்கல், கோபால்ட், வெள்ளி, தகரம் ஆகியவற்றை எடுக்கும் போது பிஸ்மத்தும் கிடைக்கிறது.
ரசாயனத்
தகவல்கள்
இதனால்
புறச் சூழலுக்கு ஆபத்து இல்லை.
இது கனமான, வெள்ளி போன்றநி றம் உடைய உலோகம். கொஞ்சம் இளம் சிவப்பு சாயல் இழை ஓடும்.
இதன்
மூலக அட்டவணை எண்- 83
குறியீடு-
பி ஐ — Bi
கொதி
நிலை- 1560 டிகிரி C ஸி
உருகு
நிலை 271 டிகிரி C
இதன்
ஐஸ்டோப்புகளுக்கு கதிரியக்கம் கிடையது.
இது
எளிதில் உடையக்கூடிய உலோகம் என்பதால் பிற உலோகங்களுடன் சேர்ந்து கலப்பு உலோகமாகவே
பயன்படுகிறது.
இதை
யுரேனியத்துக்கு மேல்வைசையில் வரும் உலோகங்களுடன் சேர்ந்து பயன்படுத்தியபோது போஹ்ரியம் (BOHRIUM)
, மெய்ட்நே ரியம்
(MEITNERIUM) முதலிய புதிய தனிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
அதாவது திரைப்படத்தில் புதுமுகங்களை
அறிமுகப்படுத்தும்
டைரக்டர் போலச் செயல்பட்டது.
கோகுலம் கதிர் ஜூன் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
சிகரத்தில் ஏறும் இயற்கை
ஆர்வலர்களின் வாகனம்!
ச.நாகராஜன்
அதிசயம் ஆனால் உண்மை!
ஏழைகளின் வாகனம் எனப் போற்றப்படும் சைக்கிள் அதன் பெருமையை நிலை
நாட்டுவதோடு அனைத்து நாடுகளின் பேராதரவையும் அதிகமாகப் பெற ஆரம்பித்து விட்டது.
காரணங்கள் பல.
மக்கள் இயற்கையை நேசிக்க ஆரம்பித்து பூமி வெப்பமயமாதலை நிறுத்த
பெரிதும் ஆர்வம் கொண்டுள்ளனர். வளி மண்டலத்தை நச்சு மயமாக்கும் வாகனப் புகையைக் கட்டுப்படுத்த
ஒரே வழி சைக்கிள் தான் என்பது ஒரு காரணம். உடல் நலத்தைப் பேணிக் காக்க உதவும் உடல்
பயிற்சிக்கு உறுதுணையாக இருப்பதும் சைக்கிளே என்பது இன்னொரு காரணம்.
இன்றைய வேக மயமான வாழ்க்கையில் தேவைப்படும் பல நலன்களைத் தருவதும் சைக்கிளே.
1817ஆம் ஆண்டு ஜெர்மனியில் முதன் முதலாக சைக்கிள் வடிவமைக்கப்பட்டது.
ஆனால் அதன் இன்றைய வடிவத்தைத் தந்தவர் பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ்
ஸ்டார்லி (James
Starley) என்பவரே.
அவர் இங்கிலாந்தில் வெஸ்ட் சசெக்ஸில் உள்ள அல்போர்ன் என்ற இடத்தில் 1831ஆம் ஆண்டு பிறந்தார். இயற்கையிலேயே புதிய வடிவமைப்பில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தையல் மெஷினைத் தயார் செய்தார்.
ஒரு நாள் தனது பையனுடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவர்
தனது மகனுக்கு சுலபமாக ஓட்டும்படி தனது சைக்கிள் இல்லை என்பது புரிந்தது. அந்தக் காலத்திய
சைக்கிளின் முன் சக்கரம் பெரிதாகவும் பின் சக்கரம் மிகச் சிறிதாகவும் இருக்கும். காரணம்
அப்போது தான் வண்டியை வேகத்துடன் ஓட்ட முடியும் என்பது தான். அதில் ஏறி உட்காருவதும்
எளிதல்ல; நீண்ட ஸ்கர்ட் உடை அணிந்திருந்த பெண்களால் அதில் ஏறி அமரவே முடியாது; ஆகவே
பெண்கள் சைக்கிளை உபயோகிக்க முடியாமல் இருந்தது.
ஆனால் வேகத்தைக் கொள்வதோடு, எளிதில் ஏறி அமர்ந்து, சுலபமாக அனைவரும்
ஓட்டும் வண்ணம் உள்ள சைக்கிளை ஸ்போக்குகளுடனும் கியருடனும் (Spokes and gear) அவர் அமைக்க
எண்ணினார். அதைச் செய்தும் பார்த்தார். வெற்றி கிடைத்தது. உடனே அதற்கு பேடண்டையும் (காப்புரிமை) எடுத்தார்.
பின்னர் இன்னும் சில திருத்தங்களுடன் அது வடிவமைப்பைப் பெற அது
இன்றளவும் தொடர்ந்து உலக மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது.
2019 ஜனவரியில் 8 முதல் 11ஆம் தேதி வரை லாஸ்வேகாஸில் நடந்து
முடிந்த, உலகில் இனி வரும் மாற்றத்தைச் சுட்டிக்
காட்டும் கண்காட்சியில், பறக்கும் காரை பிரபல நிறுவனமான ஊபர் அறிமுகப்படுத்தியுள்ளது.
2020 முதல் அனைத்து உலக நகரங்களிலும் இனி கார்கள் பறக்கும்!
கலிபோர்னியாவில் உள்ள சான்பிரான்ஸிஸ்கோ நகரிலோ இன்று டிரைவர் இல்லாமல் தானே இயங்கும் தனது காரை பிரபல்
கூகிள் நிறுவனம் பல மாதங்களாகச் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளது.
ஆனால் அப்படிப்பட்ட சான்பிரான்ஸிஸ்கோ நகரிலேயே வேகமாகச் செல்லும்
கார்களுக்கான பிரதான சாலைகளில் ஒரத்தில் சைக்கிளுக்கான தனிப் பாதைப் பிரிவு உண்டு.
அதில் ஏராளமானோர் சைக்கிளை ஓட்டிச் செல்வதை இன்றும் பார்க்கலாம். அத்துடன் மட்டுமல்ல,
வீட்டிலிருந்து பஸ் ஸ்டாப்பிற்கு சைக்கிளில் செல்வோர் பஸ்ஸின் முன் புறம் இதற்கென இருக்கும்
இடத்தில் சைக்கிளை மாட்டி விட்டுக் கொண்டு செல்வர்.
ஆக பறக்கும் கார் யுகத்திலும் தன் செல்வாக்கை இழக்காமல் சைக்கிள்
இருக்கிறது.
உலகின் இயற்கை ஆர்வலர்கள் சைக்கிளைப் பெரிதும் நேசிக்கின்றனர்;
அதிகம் அதிகமாகப் பயன்படுத்த முன் வருகின்றனர்!
ஏனெனில் பூமியை வெப்பமயமாக்கும் காரின் நச்சுப் புகை சைக்கிளில்
கிடையாது.
ஒரு கார் தனது ஆயுள் காலத்தில் வெளிப்படுத்தும் நச்சுப் புகை 1.3 பில்லியன் அதாவது 130 கோடி கியூபிக் கஜம் (1.3 billion cubic yards of pollutants) அளவு மாசுப் பொருளை வளி மண்டலத்தில் விடுகிறது. உலகெங்கும் உள்ள பல கோடிக் கார்கள் விடும் நச்சுப் புகையை எளிதில் நாமே மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்தித் திகைத்து பிரமிக்க முடியும்! அத்துடன் ஒரு காரை பெயிண்ட் அடிப்பதில் மட்டும் 400 லட்சம் பவுண்ட் மாசுப் பொருள்கள் காற்றில் கலக்கிறது. இப்படிப் பல கோடி கார்களின் வண்ணத்தால் ஏற்படும் மாசை நினைத்துப் பார்த்தால் பகீரென்று மனம் நோகும்.
Desert Cycling
இது ஒரு புறமிருக்க கார் போன்ற வாகனங்களால் ஏற்படும் செலவைக்
கணக்கிட்டு ஒப்பிட்டுப் பார்த்தால், ஒரு ஆண்டுக்கு காருக்கு ஆகும் மலைக்க வைக்கும்
தொகையான சுமார் 4,20,000 ரூபாயிலிருந்து சைக்கிளுக்கு ஆகும் செலவு வெறும் 10, 500 ரூபாய்
தான் என்பது எவ்வளவு பெரிய ஆறுதல்! அமெரிக்க அய்வு தரும் தகவல் இது!
அனைவருக்குமான வாகனம் சைக்கிளே என்று ஆகிறது.
சைக்கிளைப் பராமரிப்பதில் செலவே இல்லை; காற்று அடிப்பதும் சில
சில்லறை வேலைகளும் நமது பட்ஜெட்டுக்குள் அடங்கக் கூடியது. ஆனால் காருக்கோ ஒரு கிலோ
மீட்டருக்கு சுமார் 700 ரூபாய் ஆகிறது (முதலீடு, எரிபொருள், பராமரிப்புச் செலவு உள்ளிட்ட
அனைத்தையும் கணக்கில் எடுத்தால்)
நடந்து செல்வதைப் போல சைக்கிளும் கூடச் செலவில்லாதது; அல்லது
மிகக் குறைந்த செலவு உடையது.
உடல் நலம் பேண இன்று அனைத்து மருத்துவர்களும் சைக்கிள் ஓட்டுமாறு
பரிந்துரைக்கின்றனர்.
ஏன்?
அது உடல் பருமனை வெகுவாகக் குறைத்து உடலைச் சரியான எடையுடன்
இருக்கச் செய்கிறது.
உடலின் பாலன்ஸை – சமச்சீர் தன்மையை நிலை நிறுத்தி உடலில் மிடுக்கான
தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
இரத்த அழுத்தத்தைக் குறைத்து சரியான அளவில் அதை நிலை நிறுத்துகிறது.
உடல் சக்தியை அதிகரிக்கிறது.
உடலில் நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்துவதோடு தசைகளை வலுவுள்ளதாக
ஆக்குகிறது.
மன அழுத்தத்தைக் குறைத்து சீரான மனநிலையை உறுதி செய்கிறது. மனம்
இலேசாக ஆவதால் படைப்பாற்றல் திறன் கூடுகிறது!
தினமும் 30 நிமிடம் சைக்கிளை ஓட்டுவது சிறந்த உடல் பயிற்சியாக
அமைகிறது என்பது மருத்துவர்களின் அறிவுரை.
இயற்கையின் உற்ற துணைவனாக இருக்கும் சைக்கிள் பசுமை வாயுக்கள்
எனப்படும் நச்சு வாயுவை வெளியிடுவதில்லை.
கார்பன் டை ஆக்ஸைடால் வளி மண்டலத்தில் ஏற்படும் மாசை அறவே நீக்குகிறது
சைக்கிள்.
வீதியில் கார், லாரிகளால் ஏற்படும் இரைச்சல் சைக்கிளில் இல்லை.
அதாவது சைக்கிள் ஒலி மாசை அறவே இல்லாமல் செய்கிறது.
மேலை நாடுகளிலும் ஏன் இந்தியாவிலும் கூட இன்று வாகனங்களை நிறுத்தும்
பார்க்கிங் ப்ளேஸ் (வாகனம் நிறுத்துமிடம்) ஒரு பெரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது.
மேலை நாடுகளில் இதற்காக
வசூலிக்கப்படும் கட்டணம் ஒரு மணிக்கு சுமார் 350 ரூபாய்கள்! சில இடங்களில் இது 900
ரூபாய்! (இந்தியாவில் 5 முதல் 50 ரூபாய் தான் என்று ஆறுதல் கொள்ளலாம்!)
சைக்கிள் நிறுத்துவதில் பிரச்சினையே இல்லை. குறைந்த இடம், நிறைந்த
மகிழ்ச்சி.
உலகெங்கும் சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் வெவ்வேறு விழாக்களை
நடத்தி மகிழ்கின்றனர். சமீபத்தில் 2019ஆம் ஆண்டில் நமது 70வது குடியரசு தினத்தை ஒட்டி
கர்நாடகாவில் ஹூப்ளியில் ஹூப்ளி பை-சைக்கிள் சங்கம் ஒரு பெரிய சைக்கிள் விழாவை நடத்தியது.
1235 சைக்கிள் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஒரே வரிசையில் சைக்கிளை அணி வகுக்க அது
சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் நீண்டு அருகிலிருந்த கிராமம் வரை சென்றது.இவர்கள்
அனைவரும் இந்தியாவின் பல இடங்களிலிருந்து வந்து இந்த அணியில் கலந்து கொண்டனர் என்பது
ஒரு சுவையான செய்தி.
கின்னஸ் ரிகார்டை வழங்கும் நிபுணர்கள் இதைப் பார்த்து மகிழ,
புதிய கின்னஸ் ரிகார்டு உருவாகியது.
இதற்கு முன்னர் பங்களா தேஷில் 2016ஆம் ஆண்டு 1186 சைக்கிள்கள்
இதே போல அணிவகுத்து ஏற்படுத்தி இருந்த கின்னஸ் ரிகார்டை நமது இந்திய சைக்கிள் வீரர்கள்
முறியடித்து புதிய கின்னஸ் சாதனையை ஏற்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.
சைக்கிளில் ஸ்பீடாக ஓட்ட முடியாதே என்று ஒரு குறையை யாரும் முன்
வைக்க முடியாது.
டெனிஸ் ம்யூலர் கொரினெக் (Denise Mueller Korenek) என்பவர்
16-9-2018 அன்று ஒரு வேக ரிகார்டை ஏற்படுத்தி உள்ளார். மலைக்க வைக்கும் அவரது சைக்கிள்
ஓட்டத்தின் ஸ்பீட் எவ்வளவு தெரியுமா?
மணிக்கு 296.009 கிலோமீட்டர். அதாவது மணிக்கு 183.93 மைல்.
என்ன மலைப்பு வருகிறதா?
இயற்கை ஆர்வலர்கள் சைக்கிளை சிகரத்தில் ஏற்றி விட்டார்கள் இப்படி!
அட,சைக்கிளை எடுக்க கிளம்பீட்டிங்களா?
நல்லது – நமக்கும் நல்லது, நமது வாரிசுகளுக்கும் நல்லது, அவர்கள்
வாழ இருக்கும் எதிர்கால உலகிற்கும் நல்லது.