Pictures
are taken from various sources; beware of copyright rules; don’t use them
without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 12,000
உடனிருந்தனர். அவர்கள் வேள்விக் கிழத்தி என்று அழைக்கப்பட்டனர். இந்து மத விதிகளின் படி மனைவி இல்லாமல் எந்த சடங்கும் செய்ய முடியாது. இராம பிரான் கூட, சீதா தேவி நிலத்தில் புகுந்த பின்னர், சீதையின் தங்கச் சிலையை செய்துவைத்துக் கொண்டு ராஜ்ய பாரம் சுமந்தார்.
27.பொதுவான அடை மொழிகள்–
சோழ மாதேவி
பாண்டி மாதேவி
காடவன் மாதேவி (பல்லவ ராணி
லோகமகாதேவி
சோழ ராணிகளின் அடை மொழிகள்–
அவனி முழுதுடையாள்
புவன முழுதுடையாள்
உத்தம சோழரின் தாயார் பெயர் செம்பியன் மாதேவி. அவர் பிறந்தது சித்திரை மாதம் கேட்டை நக்ஷத்திரம்- அன்றைய தினம் மாமியாரின் நீண்ட ஆயுளுக்காக உத்தம சோழனின் ஐந்து மனைவியரும் சிறப்பு வழிபாடு நடத்தியதை கல்வெட்டு செப்பும்.
மேலே கண்ட தகவல் – வரலாற்றுப் பேரறிஞரும் , தொல்பொருட்துறை அறிஞருமான டாக்டர் இரா.நாகசாமி எழுதிய `யாவரும் கேளிர்` என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது. அவர் மேலும் பல அரிய விஷயங்களை அதே கட்டுரையில் எழுதியுள்ளார். தலைப்புகளையும் சில விஷயங்களையும் நான் சேர்த்துள்ளேன்.
Pictures
are taken from various sources; beware of copyright rules; don’t use them
without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 12,000
நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம்.
அவரை வழிபட்டுத் துதிப்போம்!
ஸ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையம், புட்டபர்த்தியில் பிறந்த நாளையொட்டி 23-11-2002 அன்று ஆற்றிய அருளுரை.
உரையின் முற்பகுதி சுருக்கமாகத் தரப்படுகிறது.
யார் சூரியனை தினமும் காலையில் உதிக்கச் செய்கிறார்?
யார் தினமும் சூரியனை மாலையில் அஸ்தமிக்க வைக்கிறார்?
இரவில் மட்டும் தாரகைகள் ஏன் கண்ணைச் சிமிட்டுகின்றன?
பகலில் ஏன்
அவைகள் ஒளிந்து கொள்கின்றன?
ஒரு கணமும் ஓய்வெடுக்காமல் இடைவிடாது காற்று ஏன் வீசிக்
கொண்டே இருக்கிறது, உயிர்களை வாழ வைக்கிறது!
யார் நதியை இடைவிடாது இன்பம் தரும் ஓசைகளுடனும், குமிழ்களுடனும்,
சலசலப்புடனும் ஓட வைக்கிறார்?
மாயையையும், படைப்பையும் உருவாக்கியது யார்?
பணம், மதம், சமூகம், தேசம் ஆகியவற்றின் அடிப்படையில்
எப்படி நீங்கள் வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்?
யார் இதற்கெல்லாம் எஜமானன்? யாருடைய ஆளுகையில் இந்த அற்புதங்களெல்லாம் நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது?
அவரது வார்த்தைகளைக் கேளுங்கள்!
அவரது ஆணைக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்வீராக!
(தெலுங்குக் கவிதையைப் பாபா பாடி தன் உரையைத் தொடங்குகிறார்)
அன்புத் திருவுருவங்களே!
ஒவ்வொரு மனிதனும் சந்தோஷமாக இருக்கவே நினைக்கிறான்.
ஒவ்வொருவரும் வாழ்க்கையின் லட்சியத்தை அறியவே விரும்புகிறார்.
பத்து லட்சத்தில் ஒருவரே தன் குறிக்கோளை விடாமல் தொடர்ந்து
கடைப்பிடித்து தன் லட்சியம் அடையும் வரை செல்கின்றார்.
சாமான்யரோ இந்த வழியில் தீவிரமாக முயற்சி எடுப்பதில்லை;
தங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம் இது என்று அவர்கள் நினைக்கின்றனர். அவர்கள் உடல் ரீதியான
இன்பங்களை அனுபவிப்பதிலேயே தங்கள் வாழ்க்கையைச் செலவிடுகின்றனர். உணவு, உடை, இருப்பிடம்
ஆகிய மூன்று மட்டுமே வாழ்க்கையின் அம்சங்கள் என்று அவர்கள் நினைக்கின்றனர். இதை விட
உயரிய குறிக்கோள் பற்றி அறிய அவர்கள் தவறி விடுகின்றனர்.
அத்வைத அனுபவமே ஞானம்
என்றும் உள்ள ஆனந்தத்தை அடைய மக்கள் பல்வேறு பாதைகளைக்
கடைப்பிடிக்கின்றனர். தைத்திரீய உபநிடதம் இது பற்றி பறவையை உவமையாகக் கொண்டு கூறுகிறது.
பறவையின் தலையே சிரத்தை.
இடது மற்றும் வலது பக்க இறக்கைகளே ரிதம் மற்றும் சத்யம்
ஆகும்.
உடலே மஹாதத்வத்தைக் குறிக்கிறது. வால் யோகத்தைக் குறிக்கிறது. ரிதம் என்றால் என்ன?
த்ரிகாலபத்யம் ரிதம்!
நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களிலும்
மாறாதிருப்பதுவே ரிதம்.
சிரத்தை மிகவும் முக்கியமானது.
ச்ரத்தாவான் லபதே ஞானம்!
பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர், “சிரத்தையுடன் இருக்கும்
ஒருவர் என்னை என்னை அடைய முடியும் என்கிறார். மேலும் அவர், “நான் சிரத்தையின் உருவமாக
இருக்கிறேன்” என்கிறார்.
சிரத்தை இல்லாமல் இருக்கும் ஒருவன் ஒரு சிறிய விஷ்யத்தைக்
கூட அடைய முடியாது.
முக்கியமாக ஆன்மீகத்தில் சிரத்தை என்பது மிகவும் முக்கியமானது.
சஞ்சலமில்லாத வலிமையான நம்பிக்கையே சிரத்தையை அடையச் செய்கிறது.
உபநிடதங்கள் சிரத்தை பற்றிய கொள்கையைப் பலவிதமாக விளக்குகின்றன.
சிரத்தை மூலமாக அடையும் ஞானமே தாரகம். (முக்தி)
சிரத்தை இல்லையேல் அது மாரகம். (தளை)
என்றுமுள்ள கொள்கையான தாரகம் பற்றி அறிந்து கொள்ள
வேண்டும், பயிற்சியில் கொண்டு வரவேண்டும், பரப்பப்பட வேண்டும்.
இதுவே தைத்திரீய உபநிடதத்தின் அடிப்படை உபதேசம்.
அன்புத் திருவுருவங்களே!
தைத்திரீய உபநிடதம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும்
சிரத்தை கைக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
ஆன்மீகத்தில் சிரத்தையே தாரக மந்திரம்.
அது சிரஞ்சீவித்வம் கொண்டது; அழியாதது.
மனிதன் ஐந்து அம்சங்களான சிரத்தா, சத்யம், ரிதம்,
யோகம், மஹாதத்வம் ஆகியவற்றின் மூலமாக இதயத்தைச் சுத்தப்படுத்தினால் மட்டுமே ஞானத்தை
அடைய முடியும்.
ஞானம் என்பது புத்தகப் படிப்பல்ல.
அத்வைத தர்சனம் ஞானம்.
பார்க்கின்றபோது (உலகில்) இரண்டாக இருக்கின்றவற்றில்
அத்வைதம் அடிநாதமாக இருக்கிறது.
இந்த அடிப்படை உண்மையைத் தான் தைத்திரீய உபநிடதம்
போதிக்கிறது.
ஆதிசங்கரர்
ஜய யாத்திரை செய்த போது வட இந்தியாவில் மண்டனமிஸரர் என்ற பெரும் அறிவாளியைக் கண்டார்.
அவருடன் சங்கரர் ஒரு அறிவுபூர்வமான விவாதத்தை
மேற்கொண்டார்.
மண்டனமிஸ்ரரின் மனைவி உபயபாரதியும் கூட சிறந்த பண்டிதை.
ரிதம், சத்யம், மஹாதத்வம் பற்றி அவர் நன்கு அறிந்தவர்.
மண்டனமிஸ்ரர் வாதத்தில் தோற்றுவிட்டால் சந்யாசியாக
வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. சங்கரர் உபயபாரதியையே மத்தியஸ்தராக இருக்கும்
படி கேட்டுக்கொண்டார்.
வாதம் நடைபெறும்போது உபயபாரதி வாதத்தையும் பிரதிவாதத்தையும்
நன்கு உன்னிப்பாகக் கேட்டு வந்தார். நீதியில் ஒரு தலைப்பட்சமாக இராத அவர், சங்கரர்
வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
தனது கணவர் வாதத்தில் தோற்றதைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை.
மண்டனமிஸ்ரர் சந்யாசத்தை மேற்கொண்டார். மனைவியானதால்
அவரில் பாதி என்பதற்கேற்ப – அர்தாங்கியாக இருப்பதால் – அவரும் சந்யாசத்தை மேற்கொண்டார்.
இருவரும் உலகத்தைத் துறந்து ஞானப் பாதையை போதிக்கலாயினர்.
Pictures are taken from various sources; beware of copyright rules;
don’t use them without permission; this is a non- commercial, educational blog;
posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
Average hits per day for both the blogs 12,000
Yatra naryastu pujyante ramante tatra Devata,
yatraitaastu na pujyante sarvaastatrafalaah kriyaah
“Where Women are honoured, divinity blossoms there, and where ever women are
dishonoured, all action no matter how noble it may be, remains unfruitful.”
Manu smrti 3-56 and Mahabharata 13-45-5
We always
read about kings and their victories or defeats in the history books. But
behind every successful man there is a woman, they say. It is true with our
ancient Hindu kings. We know that Veera Shivaji was inspired his mother
Jijabhai who told him heroic Hindu tales. The inscriptions and copper plates
give lot of information about the donations the queens and princesses made to
the temples, to brahmin scholars, to hospitals and educational institutions. So
let us recall their names and then find out their contributions. We already
know the great queens who ruled certain parts of India. But there is a silent
majority who are found only in inscriptions.
Here is the
list –
1.Abbakka
Chowta of Ullal, Tuluva Queen – 1525-
1570- who fought with the Portuguese.
2.Vijaya
bhattarika , chalukya queen – 650 ce, ruled after her husband’s death
3.Sugandha
and
4.Didda –
both Kashmiri queens administered extensive kingdoms – 10th and 11th
centuries.
5.Akka devi,
a sister of Jayasimha iii – 1025 ce
6.Mailadevi,
queen of someswara 1050 ce-
7.Lakshmi
devi, chief queen of vikramaditya vi
–1100 ce
Rajasthan
8.Kurma devi
– widow of king samarsi- organised forces against qutbuddin – 1195 ce
9.Karnavati,
widow of rana sangha , rekindled patriotism by her inspiring speeches.
10.Jawahirbhai
, another widow of rs fought and died in the battle, defending the fort.
Maharashtra
11.Tarabhai
of Kolhapur and
12.Ahalyabhai of Indore played prominent part in administration.
Andhra
Pradesh
13.Ganga Devi
– Queen of Kumara Kampanna; who accompanied her husband in battles up to
Madurai; written Madura Vijayam in Sanskrit like a war correspondent reporting
battle scenes.
14.Tirumalamba
, wife of Emperor Sri Krishnadeva Raya
Pictures
are taken from various sources; beware of copyright rules; don’t use them
without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 12,000
வந்திருந்த மன்னர் அனைவர்க்கும் ஆலமரத்தடி தட்சிணா மூர்த்தி போல முகம் தேஜோமயமாகியது. புளியமரத்தடி நம்மாழ்வார், அரச மரத்தடி புத்த பகவான் போல ஞான உதயம் ஏற்பட்டது. அனவவரும் அவளை வணங்கினர். அவரவர் நாட்டிற்குச் சிட்டாகப் பறந்து சென்றனர். ராஜ்ய பாரத்தை அவரவர் மகன், மகள்கள் மீது சுமத்தினர்; காடேகி துறவி ஆகி நல் வழியில் நடை போட்டனர்.
Pictures
are taken from various sources; beware of copyright rules; don’t use them
without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 12,000
`அணுக்கதிரியக்க ஆபத்து` என்ற தலைப்பில் 16-2-1992 தினமணியில்
நான் எழுதினேன். இதிலுள்ள அணு உலைகள் பற்றிய
புள்ளி விவரம் மாறி விட்டது. ஆனால் கதியக்கக் கழிவுப் பிரச்சனை, புற்று நோய் ஆபத்து முதலியன நீடிக்கவே செய்கிறது.
யுரேனியம், ப்ளூட்டோனியம், தோரியம் முதலிய மூலகங்கள் பற்றி நான் எழுதிய கட்டுரைகளில் மேலும் விவரம் உள்ளது. அவைகளையும் வாசிக்கவும்.
3 Dec 2018 – யுரேனிய அதிசயம்-
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை (Post No.5728). Written by London
Swaminathan swami_48@yahoo.com. Date: 3 December 2018. GMT Time
uploaded …
16 Dec 2018 – 5783. Pictures shown here are taken from various
sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a
non- commercial blog. அதிசய க்யூரியம், அதிசய அமெரிஷியம்; …
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t
use them without permission; this is a non- commercial, educational blog;
posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
Average hits per day for both the blogs 12,000
ச.நாகராஜன்
ஸ்வாமி விவேகானந்தர் தனது வாழ்நாள்
முழுவதும் புகழோங்கிய பாரதத்தின் முன்னாள் பெருமையையும் இந்நாள் சிறுமையையும் எண்ணி
எண்ணி வருந்தினார்.
ஒரு முறை அவர், ‘எத்தனை நாள்
தான் இப்படி வறுமையில் இந்தியா இருக்க முடியும்? அவள் மெலிதாகச் சுவாசித்துக் கொண்டிருப்பது
ஒன்றால் மட்டுமே அவள் உயிருடன் இருக்கிறாள் என்பதை அறிய முடிகிறது” என்றார்.
வறுமை ஒழிந்த, ஆன்மீக சிகரத்தில்
ஏறிய, அற்புத இந்தியாவை அவர் மக்கள் முன் உருவகப்படுத்தி வந்தார்.
இந்திய மக்கள் அனைவருக்காகவும்
அவர் ஹிருதயம் உருகியது. அவர் ஹிருதயம் பூவைப் போன்று மென்மையானது.
ஸ்வாமி சதாசிவானந்தா அவரைப்
பற்றிய தனது நினைவலைகளில்
கூறும் இரு சம்பவங்களைப் பார்ப்போம்.
ஸ்வாமிஜி அபாரமான ஆளுமை உடையவர்.
அநீதியைக் கண்டால் பொங்கி எழுந்து தன் முழு வலிமையுடன் அதைத் தாக்கிப் பேசுவார். அந்த
அநீதியை வேருடன் களைய வேண்டும் என ஆவேசப் படுவார்.
அதே சமயம் அவர் ஹிருதயம் மலரினும்
மெல்லிது.
ஒரு முறை அவர் கூறினார்:” அப்போது தான் கறந்த பாலில்
உள்ள குமிழிகளைத் தொடுவதால் உன் விரலில் காயம் ஏற்படுமா? நான் சொல்கிறேன், ஒரு வேளை
இது சாத்தியமாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால் ஸ்ரீ ராதையின் ஹிருதயம் இதை விட மென்மையானது!
அதே மென்மையான ஹிருதயம் தான் ஸ்வாமிஜியினுடையதும்!
இன்னொரு நாள் நடந்த சம்பவம் இது:
ஒரு நாள் காலை டார்ஜிலிங்கில் தனது காலை உணவை முடித்துக்
கொண்ட ஸ்வாமிஜி சில பேருடன் இயற்கை அழகை ரஸித்தவாறே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென்று
அவர் தன் மனக்கண்ணில் ஒரு வயதான பெண்மணி பெருஞ்சுமையைத் தனது முதுகில் சுமந்து செல்வதைக்
கண்டார். அந்தச் சுமை விழ, அவர் அதை எடுக்க காயம் வேறு அவருக்கு ஏற்பட்டு விட்டது.
அவருடன் கூடச் சென்றவர்களில் யாரும் இதைப் பார்க்கவே இல்லை. அவரது உதவியாளர்கள் இளைஞர்கள்;
அனுபவம் இல்லாதவர்கள்; ஸ்வாமிஜியின் அபாரமான உயர்ந்த பிரபஞ்ச பிரக்ஞை நிலையை அறியாதவர்கள்.
ஸ்வாமிஜி தனது கண்களைத் வெகு தூரத்தில் இருந்த ஏதோ
ஒன்றின் மீது தன் பார்வையைப் பதித்தார். அவரால் ஒரு அங்குலம் கூட நகர முடியவில்லை.
அவர் முகம் வெளுத்தது. வலியால் அவர் கத்தினார்;” ஆ! இங்கே ரொம்ப வலிக்கிறதே! என்னால் இனிமேல் நடக்கவே முடியாது” என்று அவர் அலறினார்.
ஒருவர் கேட்டார்: “ஸ்வாமிஜி! எந்த இடத்தில் உங்களுக்கு
வலிக்கிறது?”
ஸ்வாமிஜி, “ இதோ இந்த இடத்தில்! அந்தப் பெண் விழுவதை
நீ பார்க்கவில்லையா?” என்றார்.
கேட்ட இளைஞருக்கு ஒன்றுமே புரியவில்லை -ஸ்வாமிஜி வலியால்
துடிக்கிறார் என்பது மட்டும் அவருக்குத் தெரிந்தது. அவருக்கு மேல் கொண்டு என்ன பேசுவது
என்று தெரியவில்லை. பேசாமல் இருந்து விட்டார்.
காலம் செல்லச் செல்லத் தான் ஸ்வாமிஜியின் உண்மை நிலையை
அவர்கள் அறிந்து கொண்டனர். மனிதனுக்கு மனிதன் ஒரு இரக்க சுபாவம் நிலவுகின்றது என்பதையும்
பெரும் மகான்களுக்கோ தொலை தூரத்தில் இருந்தவர்களின் உணர்ச்சிகளையும் பார்க்கும் சக்தியும்
அனுபவிக்கும் சக்தியும் இருக்கிறது என்பதையும் இந்தச் சம்பவத்தால் அவர்கள் பின்னால்
புரிந்து கொண்டனர்.
மற்றவர் துன்பத்தைப் பார்க்கச் சகிக்காத மென்மையான
ஹிருதயம் ஸ்வாமிஜியின் ஹிருதயம். அது மெழுகு போல உருகி விடும் அடுத்தவரின் துன்பத்தைப்
பார்த்து!
அற்புதமான அப்படிப்பட்ட பெரும் ஸ்வாமிஜி தான் நம்முடன்
சமீப காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்!
Pictures
are taken from various sources; beware of copyright rules; don’t use them
without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
1.- (5) letters meaning in Sanskrit ‘all’; also name of Rudra
5 – (4) number,
figure, sign, mark in in Sanskrit
8. – (8) three
eyes; epithet to Lord Siva
9. – (4) end
10. (10) education
based on holy texts
11. – (8) Vishnu’s
popular name ; one who is in water
12.– 9) (right
to left)-lead me to good
Xxx
1. (6 letters) equal to Mr in Sanskrit ; one who is
with virtues, with wealth
2. –(5)
flow, stream, current
3. – (5)colour,
caste
4. – (6)boundless
splendour
5. – (8) king
of mountains
6. – (5) Kunti’s
first son by Surya
7. ……………(8)
lead me from unreal to ….
10a.- (4) debt; one has 5 debts according to Hindu
scriptures
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t
use them without permission; this is a non- commercial, educational blog;
posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
Average hits per day for both the blogs 12,000