RIDDLE POEM IN THE RIG VEDA (8-29)- Post No.7586

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7586

Date uploaded in London – 17 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

There are several poems in the Rig Veda addressed to Visve Devaas. ‘Visve Devaas’ mean ‘All Gods’. The seers make it a point to include all the important deities such as Mitra and Varuna, Indra and Agni. The verses of this hymn are in the form of riddles. None of these deities is mentioned by name in the following poem. Generally, Rig Vedic seers enjoy speaking in symbolic language or coded language. Visve Devas hymns always have challenges to scholars. Strange names are used leading to various interpretations by scholars.

This feature in the religious or mythological thought of many peoples is a significant factor in the invention and development of myths. This shows that the story telling tendency is not a mere blind impulse or a mis understood interpretation of natural phenomena , but that the poets could be deliberately invent and imagine, and just for that reason we cannot expect to trace myths back to a primitive  stock of ideas, any more  than we can derive all words from a primitive stock of roots.

xxx

Also note one Doctor is ready with medicines in one of the following Mantras!!!

Also note there is a god who knows hidden treasures!!

Here is a poem (RV. 8-29) from the eighth mandala of the Rig Veda:-

1.One is tawny, of changing form, bountiful, young; with golden ornament he decks himself .

2. One shining has taken his seat in the lap- the altar- a wise one among the gods.

3. One bears in his hand a bronze axe; constant among the gods.

4. One bears grasped in his hand a thunderbolt, wherewith he slays his enemies.

5. One bears in his hand a sharp weapon; a pure One, mighty, bearing healing medicines.

6. One makes the paths prosperous, like a thief; one knows of hidden treasures.

7. One, wide going, makes three steps; thither where the gods enjoy exhilaration.

8. With birds two go together with one woman; faring forth as on a journey.

9. Two highest ones made their seat in the sky; lords sipping ghee

10. Some singing hymns conceived a great Sama song ;ith it they made the sun to shine.

ANSWERS TO RIDDLE

1.SOMA, 2 AGNI, 3.TVASHTAR, 4.INDRA, 5.RUDRA, 6.PUUSHAN, 7.VISHNU, 8.ASVINS WITH SUURYAA, DAUGHTER OF SURYA, 9.MITRA, 10. THE ATRIS, FAMILY OF PRIESTS.

Xxx subham xxx

டாக்டர் கடவுள் யார்? புதையல் கடவுள் யார்? ரிக் வேதப் புலவர் புதிர் ! (Post No.7585)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7585

Date uploaded in London – 17 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ரிக் வேதப்  புலவர்கள் மகா மேதாவிகள்; அவர்கள் எதையும் நேரடியாகச் சொல்ல மாட்டார்கள். மறை பொருளில் பகர்வர். உலகிலேயே ரிக் வேதத்தை சரியாகப் புரிந்து கொண்டவன் தமிழன் ஒருவன்தான். வேதத்துக்கு மறை  (ரகசிய மொழி)  என்ற அழகான பெயரைக் கொடுத்தான். சங்கத் தமிழ் நூல்களில் இந்த அழகான சொல் பயிலப்படுகிறது. அது மட்டுமல்ல. ரிக் வேதத்தையே தமிழர்கள்தான் கண்டுபிடித்தார்களோ என்றும் எண்ண வேண்டி இருக்கிறது. ஏனனில் தமிழர்களின் கடல் தெய்வம் வருணன் என்றும், மருத நிலக் கடவுள் இந்திரன் என்றும் தொல்காப்பியர் செப்புகிறார். இவ்வளவு தெளிவாக, ரத்தினச்  சுருக்கமாக எந்த சம்ஸ்கிருத நூலிலும் இல்லை. ரிக் வேதத்திலுள்ள பத்தாயிரத்துக்கும் மேலான மந்திரங்களை படித்தால்  இந்திரனுக்கும் வருணனுக்கும் மாயோனுக்கும் (விஷ்ணு) 1008 அடை மொழிகள் கொடுத்து இருப்பர். அதைப்  படிக்கும் வெளிநாட்டினர் வருணன் வான் தெய்வமா, கடல் தெய்வமா, சந்திரனா, இருளைக் குறிக்கும் ராத்திரி தெய்வமா என்று காரசார விவாதம் நடத்தினர். இன்னும் கதைக்கின்றனர். தமிழனோ பொட்டில் அடித்தாற்போல புகன்று விட்டான்.

இதே போல யாக, யக்ஞ, ஹோம, ஹவனுக்கு ‘வேள்வி’ என்ற ஒரே சொல்லைப்  போட்டு அசத்திவிட்டான் தமிழன். இந்த ‘வேள்வி’ என்ற சொல், தமிழத்தில் வேத மதம், சங்க காலத்துக்கு வெகு காலம் முன்னரே தழைத்து ஓங்கி விட்டதற்குச்  சான்று என்று காஞ்சி முனிவரும், பரமாசார்யாருமான ஸ்ரீ சந்திர சேகர இந்திர சரஸ்வதி  (1894-1994)  சுவாமிகளும் விளம்புவார் .

ரிக் வேதப் புலவர்கள், மறை பொருளில் கவி படுவதை உலகோர்  அறிவர். சில கவிதைகள் முழுக்க முழுக்க விடுகதையாக அமைந்துள்ளன. குறிப்பாக எட்டாவது மண்டலத்திலுள்ள 29-ஆவது கவிதையைப் படித்து ரசிக்கலாம். ஒவ்வொரு கடவுளின் சிறப்பையும் சொல்லிவிட்டு கடவுளின் பெயரை நாமே கண்டுகொள்ளும்படி புதிர் போடுகிறார் புலவர் . இதோ இந்தக் கவிதையின் மொழி பெயர்ப்பைப் படியுங்கள்.. விடை கடைசியில் உளது. அதைப்  பார்க்காமலேயே எத்தனை கடவுளரை நீங்கள் கண்டுபிடிக்க முடிகிறது என்றும் பாருங்கள்:–

1.ஒருவன் பழுப்பு நிறமுள்ளவன் . எங்கும் பரவுபவன்; இரவுகளின் தலைவன், யுவன்; போன் ஆபரங்களால் தன்னை அலங்கரித்துக் கொள்பவன் (அவன் யார்?)

2.ஒருவன் அறிஞன்- தேவர்களின் நடுவே பிரகாசிப்பவன் – தன்னுடைய இடமான  வேதியிலே அமர்ந்துள்ளான் .

3.ஒருவன் தேவர்களிடையே இரும்புக் கோடாலியைச் சுழற்றிக் கொண்டிருக்கிறான்.

4.ஒருவன் தன கையில் இயங்கும் வஜ்ராயுதத்தை பற்றுகின்றான். அதனால் அவன் விருத்திரனைக் கொல்கிறான்.

5.ஒருவன் ஒளி வீசுகிறான்- உக்கிரமானவன் –  கையில் கூரிய ஆயுதத்தை வைத்து இருக்கிறான் . அவன் குணப் படுத்தும் மருந்துகளைத் தருகிறான்.

6.ஒருவன் கள்ளர்களைப் போல வழிகளை, பாதைகளைக் கவனிக்கிறான். அவனுக்கு மறைந்து கிடக்கும் புதையல் செல்வங்கள் தெரியும் .

7.ஒருவன் கம்பிர நடையுள்ளவன் மூவடியால் ஓங்கி உலகளந்தவன்

8.இருவர் சிட்டாகப் பறந்து செல்லும் குதிரைகளில் ஒரு பெண்ணோடு போகின்றனர். அவர்கள் அந்நிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகளைப் போல விரைகிறார்கள்.

9.இருவர் வானத்தின் உயரே அமர்ந்து இருக்கிறார்கள் ; வணங்கப்படும் அவர்கள் நெய் ஆகுதிகளை ஏற்கிறார்கள்.

10.சிலர் சாம கீதம் இசைத்து , புகழ் பாடி , சூரியனையே பிரகாசிக்க வைக்கிறார்கள் (யார் இவர்கள்)

புதிர்களுக்கு விடை –

1.சோமன்/சந்திரன் 2.அக்நி (தீ), 3.துவஷ்டா , 4.இந்திரன், 5.ருத்ரன் 6. பூ ஷன் , 7.விஷ்ணு , 8.அஸ்வினி தேவர்கள், சூரியை என்னும் பெண், 9. மித்திரன், வருணன், 10.அத்ரி ரிஷி குடும்பத்தினர்.

இது வைவஸ்வத மநு பாடியது அல்லது மரீசி காஸ்யபன் பாடியது என்று பாடலின் அடிக்குறிப்பு கூறுகிறது.

–subham–

மனிதர்களில் இந்திரன் , பிரம்மா, விஷ்ணு, சிவன் யார்? (Post No.7584)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7584

Date uploaded in London – 17 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மனிதர்களிலும் இந்திரன் , பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் இருக்கிறார்களாம். இதை 200 ஆண்டுகளுக்கு முன்னர் அறப்பளீஸ்வர சதகம் எழுதிய அம்பலவாண கவிராயர் கண்டுபிடித்துள்ளார். அவர் பாடலில் பகர்வதாவது,

பிறர் கைகளை எதிர் பாராது தன்னை மட்டும் காத்துக்கொள்பவன் சாமர்த்தியன் ஆவான்.

10 பேரை   காப்பாற்றுபவன் உலகம் புகழும் தேவன்  ஆவான்;

100 பேருக்கு தங்கக் காசுகள் கொடுத்து போற்றுபவன் ஒப்பற்ற இந்திரன் ஆவான் ;

1000 பேரை, இந்தப் பூவுலகில் காப்பாற்றும் புண்யவான் பிரம்மன் ஆவான்;

10,000 பேரை, அதாவது நன்மை செய்கின்ற பத்தாயிரம் பேரைக் காத்து ரக்ஷிப்பவன் செங்கண் மாலாகிய விஷ்ணு ஆவான்;

100000000 +++++  இவர்கள் போக மிச்சமுள்ள  எல்லா நல்லவர்களையும் காப்பாற்றும் மனிதன் இருக்கிறானே, அவன் சிவபெருமானுக்கே சமம் ஆவான்.தேன் ஒழுகும், இருள் போன்ற கூந்தலை உடைய தேவியை ஒரு பாகத்தில் வைத்திருக்கும், மன்மதனை மிஞ்சும் அழகுடைய சிவ பெருமானே ! அறப்பளிச்சுரனே ! (உன்னை வணங்குகிறேன்

அறப்பளீச்சுர சதகம்

அம்பலவாணக்  கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். நீதிகள் அறிவுரைகள் நிரம்பியது tamilandvedas.com, swamiindology.blogspot.com

அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு.

—subham —-

கையெழுத்து முதல் தலையெழுத்து வரை! (Post No.7583)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7583

Date uploaded in London – 17 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

கையெழுத்து முதல் தலையெழுத்து வரை!

ச.நாகராஜன்

சம்ஸ்கிருதத்தில் ஆயிரக்கணக்கான சுபாஷிதங்கள் உள்ளன.

இவற்றில் இல்லாதது எங்குமே இல்லை. அறவுரைகள், புதிர்கள், சமயோசித பதில்கள், காம சாஸ்திர நுட்பங்கள், பொருளாதார உண்மைகள், காதலர்களின் பரிபாஷைகள், போர்க்கள வீர தீரங்கள் என அனைத்து விஷயங்களையும் நூற்றுக் கணக்கான கவிஞர்கள் பாடியுள்ளனர்.

கையெழுத்து முதல் தலையெழுத்து வரை எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், நிச்சயம் ஒரு சுபாஷிதம் இருக்கிறது.

உதாரணத்திற்குச் சில:

கையெழுத்து எப்படி இருக்க வேண்டும்?

கையெழுத்து ஒரு பெண்ணின் மார்பகம் போல இருக்க வேண்டும்! எப்படிப் போகிறது பாருங்கள் கவிஞனின் மனம்!

அக்ஷராணி சமானானி வர்துலாலி தனானி ச |

பரஸ்பரவிலக்னானி தருகீகுசகும்பவத் ||

Closely related  (or : resembling) like breast of young ladies, or letters (handwriting) which are even and round, and wealth (coins) imperishable, even and round in shape.

(English translation by A.A.R)

ளம்பெண்களின் மார்பகம் போல எழுத்துக்கள் (கையெழுத்து எழுதும் போது) சமமாகவும் உருண்டையாகவும் அழியாத காசு போல சமமாக, உருண்டை வடிவத்தில் இருக்க வேண்டும்!

அனுபவிக்கும் வரை தான் உறவெல்லாம்!

காதிதும் ப்ராப்யதே யாவத் தாவதேவ ஹி பாந்தவா: |

ஷிஷிரே பத்மினீம் ப்ருங்கவ: கடாக்ஷேணாபி நேக்ஷதே ||

Relatives are there only so long as they receive something to enjoy with; in the winter season a black bee does not even deem worthy to cast a side-glance over a lotus.

(English translation by S.B.Nair)

ஏதேனும் ஒன்றை அனுபவிக்கும் வரை தான் உறவு எல்லாம்! குளிர்காலத்தில் கருவண்டானது தாமரை மலரின் மீது ஒரு ஓரப் பார்வையைக் கூடச் செலுத்தாது!

நண்பர்கள் ஒரே மனதுடையவர்கள் தான்!

க்ஷீரம் நீரம் ச மிஸ்ரன் சத் ஏகரூபம் யதா பவேத் |

மித்ரயோருபயோர்வ்ருத்திம் தத் தத் துல்யம் ப்ரகாஷதே ||

When milk is mixed with water, both are of the same colour. Likewise, the mood of two friends is the same.  (English translation by V.Krishnamacharya)

பாலானது நீருடன் கலக்கும் போது இரண்டும் ஒரே நிறத்தை உடையதாய் இருக்கிறது. அதே போல, இரு நண்பர்களும் மனமும் ஒன்றாகவே இருக்கும்.

விதியின்றி வெற்றி இல்லை!

க்ஷேத்ரே சுக்ருஷ்டே ஹத்யுபிதே ச பீஜே

     தேவே ச வர்ஷத்யுதுகாலயுக்தம் |

ந ஸ்யாத் பலம் தஸ்ய குத: ப்ரசித்திர்

     அன்யத்ர தேவாதிதி சிந்தயாமி ||

When the soil does not bear fruit despite that it was properly tilled and seeded, and despite that God Indra showered it with rain, I think, that without Fate nothing can succeed.

(English translation by S.B.Nair)

நிலத்தை நன்றாக உழுது விதை விதைத்து இந்திரன் மழை பொழிந்தும் கூட நிலத்தில் விளைச்சல் இல்லையெனில் விதியின்றி எதுவும் வெற்றி பெறாது என்றே நான் நினைக்கிறேன்.

மஹாபாரதத்தில் இடம் பெறும் ஸ்லோகம் இது.

விதியின்றி வெற்றி இல்லை

நீதி சதகத்தில் பர்த்ருஹரி விதி பற்றி விரிவாகப் பேசுகிறார்; அலசி ஆராய்கிறார்.

பக்காசஸ்ய கரண்ட பிண்டித தநோ:

   க்லாநேந்திரியஸ்யக்ஷுதா க்ருத்வர்கு:

விவரம் ஸ்வயம் நிபதிதோ

   நக்தம்முகே போகிந: |

த்ருப்த: தத் பிஸிதேந ஸத்வர

   ம்ஸௌ தேநைவ யா த:

ஸ்வஸதா திஷ்டத ஸ்தவ மேவ ஹி

   பரம்வ்ருத்தௌ க்ஷயே காரணம் ||

ஆகு:  – எலியானது

நக்தம் – இரவில்

விவரம் க்ருத்வா – பாம்புப் பெட்டியில் துவாரம் செய்து

பக்நாசஸ்ய – வெளியே வருவதில் நம்பிக்கை இழந்ததும்

கரண்டபிண்டிததநோ: – பாம்புப் பெட்டியில் சுருண்டு கிடக்கிறதும்

க்ஷுதா க்லாந்திரியஸ்ய – பசியால் வாடிய சரீரம் உள்ளதுமான

போகிந: – பாம்பினுடைய

முகே – வாயில்

ஸ்வயம் நிபதித: – தானாகவே விழுந்தது (ஒரு எலி)

அஸௌ – இந்த பாம்பானது

தத்பிசிதேந: – அந்த எலியின் மாமிசத்தால்

த்ருப்த:- திருப்தியடைந்து

தெநைவபதா – அந்த எலி ஏற்படுத்திய த்வாரத்தின் வழியாகவே

யாத : – வெளியே போய் விட்டது, ஆகையால்

வ்ருத்தௌ – க்ஷேமத்திற்கும்

க்ஷயே – நாசத்திற்கும்

தைவமே – தெய்வமே

பரம் காரணம் – முக்கியமான காரணம்

ஆகையால்

ஸ்வஸ்தா – அமைதியுடன்

திஷ்டத – இருங்கள்

பாம்புப் பெட்டியில் அடைக்கப்பட்ட பாம்பானது வெளியேற முடியாமல் மனமுடைந்து பசியால் வாடி சுருண்டு கிடக்கையில், ஒரு எலியானது இரவில் அந்தப் பாம்புப் பெட்டியைக் கடித்துத் துளை செய்து, அதன் மூலம் பெட்டிக்குள் சென்று பாம்பின் வாயில் அகப்பட்டுக் கொண்டு அதற்கு இரையாகி விட்டது. எலியின் மாமிசத்தால் பசியாறி திருப்தி அடைந்ததுடன் அந்தப் பாம்பானது எலி துளைத்த அந்த துவாரத்தின் வழியாகவே வெளியே தப்பி ஓடியும் விட்டது.

ஆகையால் க்ஷேமத்திற்கும் நாசத்திற்கும் தெய்வமே (அதாவது விதியே) காரணம் என்று அமைதியாக இருங்கள்.

பர்த்ருஹரியின் அறிவுரையை மனதில் ஏற்றி அமைதியாக இருக்க வேண்டியது தான்!

இப்படி சுபாஷிதங்களை எடுத்துக் கொண்டால், கையெழுத்திலிருந்து தலையெழுத்து வரை சகல விஷயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்

tags  —  விதி, கையெழுத்து, தலையெழுத்து, பர்த்ருஹரி

***

Four Tamil Folktales (Post No.7582)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No.7582

Date uploaded in London – 16 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

A spendthrift asked a miser for a loan.

How will you repay the loan? He asked.

I will save monthly from my pay and will pay it, he said.

Could you not save it so it before? He asked.

I was ignorant and neglected to do so, he said.

Then I will make you understand it now. I am not going to lend you money.

Start saving now. Think that you are repaying my loan.

Afterwards the spendthrift began to save money.

Xxx

A man saw a rich gentleman and said to him,

If you supply me with good food for six months,

after that I will carry a big mountain.

He accordingly gave him good food.

Afterwards called him and took him to a nearby mountain.

Carry this mountain, he ordered.

He said, if you put the mountain on my hand, I will carry it, he replied.

Xxx

A Guru was teaching his disciples.

While he was teaching, one of the pupils saw a rat entering into its hole.

He was distracted. Guru watched his pupil’s behaviour.

Immediately after finishing, he asked his pupil,

Has it all entered? Guru asked his disciple.

He meant has it all gone into his brain.

Pupil answered, it has all gone in, but the tail only remains.

This is the story behind a Tamil proverb.

Xxx

A priest went to one of his disciple’s house after he complained that his children were behaving strangely. Then the priest wanted to find out the level of wickedness in them.

My friend, which of your four children is well behaved one?

He replied, Sir, this one who is on the top of the thatched house and whirling a firebrand. He is trying to set fire to the house. He is the best behaved among them all.

The priest said,

What kind of persons must the other three be? and having put his finger on his nose he heaved a deep sigh and went away.

This is the story behind a Tamil proverb.

Placing a finger in one’s nose is a sign of exclamation or surprise in Indian culture.

Source book – Katha Manjari, R H James, Senthamiz, Munushi, Puduvai Rajagopala Mudaliyar, Bangalore, year 1850

—subham–

கடவுள் செய்த ஆறு தவறுகள்- அம்பலவாணர் பட்டியல் (Post No.7581)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7581

Date uploaded in London – 16 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

கொல்லிமலை சதுரகிரியில் வாழும் அறப்பளீச்சுரனே ! சிவ பெருமானே. நீ கீழ் கண்ட ஆறு செயல்களை ஏ ன் செய்தாய் ? (பதில் சொல்லாவிடில் என் தொகுதி எம்.எல்.ஏ. மூலம் சட்டசபையில் கேள் வி கேட்பேன். பார்லிமெண்டில் எங்கள் தொகுதி எம்.பி.யும் இதுபற்றிக் கதைப்பார். எச்சரிக்கை)

1.கொஞ்சம்  கூட ஈவு இரக்கம் இல்லாதவர்களினிடையே, ஏனப்பா, கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்தாய்? சொல், சொல்.

2.அது சரி, போகட்டும். நல்ல புண்ணிய ஆத்மாக்களைப் பார்த்தால் ஏழைகளாக இருக்கிறார்களே. அவர்களிடம் ஏனப்பா வறுமை என்னும் கொடுமையை வைத்தாய்?

3.கொஞ்சம் கூட நீதி நெறி தெரியாத மூடர்களுக்கு கற்பு நெறி தவறாத அருந்ததி போன்ற கற்புக்கரசிகளை மனைவியாக வைத்தாயே . இது என்னப்பா, நியாயம்?

4.நிதானமாகச் சிந்தித்துச் செயல்படும் உத்தமர்க்கு பாசாங்கு செய்யும் நீலி போன்ற பெண்களைக் கொடுத்த்தனை . ஏன் , ஏன் ?

5.கற்றோரும் மற்றோரும் , குணமற்ற கீழ்மட்ட மக்களிடையே கைகட்டி, வாய் புதைத்து, அடிமை வேலை செய்ய வைத்தனையே . அது நியாயமா?

6.அதையெல்லாம்கூட பொறுத்துக்கொள்வேன். தமிழின் பெருமையே தெரியாத ஆட்கள் மீது நல்ல புலவர்களைக் கவிபாட வைத்தனையே. என்ன கொடுமை இது? பதிலைச் சொல்லிவிடப்பா.

அறப்பளீச்சுர சதகம்

அம்பலவாணக்  கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு

பாம்புச் செடி உண்மையா? (Post No.7580)

பாம்புச் செடி உண்மையா ? (Post No.7580)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7580

Date uploaded in London – 16 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஞாயிறு தோறும் நான் நடத்தும் SKYPE ஸ்கைப் கிளாஸ்ஸில் கம்பராமாயணம் முடித்து அகநாநூற்றுக்கு  வந்துள்ளோம் . அகனானூற்றுப் பாடலில் பாம்புச் செடி பற்றி ஒரு குறிப்பு வருகிறது. அதுபற்றி எங்களிடையேயே விவாதம் எழுந்தது. உடனே நான் காளிதாசனும் தனது காவியத்தில் ஒளிவிடும் ஜோதிர்லதா மரம் பற்றி இரண்டு இடங்களில் கூறுகிறான். தமிழ் இலக்கியத்திலும் அது இருக்கிறது. பி.பி.சி. டீ.வி. யில் (David Attenborough) டேவிட் அட்டன்பரோவின் இயற்கை (Nature) பற்றிய டாகுமெண்டரிகளை பார்த்தபோது அதற்கு விளக்கம் கிடைத்தது. அவர் காட்டிய படம் இன்றுவரை மனதைவிட்டு அகலவில்லை tamilandvedas.com, swamiindology.blogspot.com

..

அதாவது நியூஜிலாந்தின் குகைகளில் பல லட்சம் மின்மினிப் பூச்சிகள் (Fire Flies)  வசிக்கின்றன. அவை ஒளிவிடும் போது அந்தக் குகைகள் முழுதும் ஜகஜ்ஜோதியாகக் காட்சி தரும். அடுத்த நிமிடம் இருள் சூழும் . அதாவது நாம் திருவிழாக்  காலங்களில் போடும் அலங்ககார விளக்குகள் போல எரிந்தும் (on and Off) அணைந்தும் மாறி மாறி வரும். இது போல அந்தக் காலத்தில் நம் இந்தியக் காடுகளிலும் சில இடங்களில் மரம் முழுதும் மின்மினிகள் வசித்து இருக்கலாம். அதைத்தான் காளிதாசன் ஜோதிர்லதா என்றும் தமிழ் இலக்கியம் ஒளிவிடும் மரங்கள் என்றும் சொல்லுகின்றன போலும் அந்தக் கோணத்தில் இந்த அகநானுற்றுப் பாடலையும் காண்போம் என்றேன். tamilandvedas.com, swamiindology.blogspot.com

உடனே ஸ்கைப் (Skype)  மாணவர்கள் புஸ்தகங்களில் இருந்து இரண்டு விளக்கங்களைப்  படித்தார்கள். ஆனால் நேற்று பிரிட்டிஷ் லைப்ரரியில் உட்கார்ந்து பழங்கால புஸ்தகங்களைப் படித்தபோது ஒரு அதிசயச்  செய்தி கிடைத்தது.

முதலில் அகநாநூற்றுப்  பாடல்

அன்னாய்  !  வாழி , வேண்டு அன்னை! நம் படப்பைத்

……………………

……………………

வெண்கோட்டு யானை விளிபடத்துழ வும்

அகல்வாய்ப் பாந்தட் படா அர் ப்

பகலும் அஞ்சும்  பனி க்கு கடுஞ் சுரனே

—அகநானூறு பாடல் 68

– என்று 21 வரிப் பாடல் முடிகிறது.

பாடியவர் ஊட்டியார் , திணை – குறிஞ்சி

இதில் ‘அகல்வாய் பாந்தள்’ என்பது யானையை விழுங்கும் மலைப் பாம்பா அல்லது பாம்புச்  செடியா ? (Python or Snake plant?) என்பதை யே ஆராய வேண்டியிருந்தது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

பாடலின் மொத்தக்க கருத்தும் மிகவும் சுவையானது. இரவு நேரத்தில் காதலியை ரகசியமாக சந்திப்பதற்கு காதலன் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறான். அப்போது தோழி போய், காதலியின் அம்மா அசந்து தூங்குகிறாளா அல்லது பாசாங்கு செய்கிறாளா என்பதற்கு மூன்று கேள்விகள் கேட்கிறாள். இறுதியில் அதற்கு அம்மா பதில் சொல்லாததால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள்; கஷ்டமான வழியைக் கடந்து வந்த காதலனை சந்திக்கலாம் என்று காதலிக்கு ‘க்ரீன் சிக்னல்’ Green Signal கொடுப்பது பாடலின் பொருள்.

காதலன் கடந்து வந்த கஷ்டமான பாதையை வருணிக்கும் போது ,

“யானைக் குட்டிகளை வெள்ளம் அடித்துச் செல்கிறது. அதைக் காப்பாற்ற வெண்மையான தந்தம் உடைய ஆண் யானையும் பெண் யானையும் ஆரவாரம் செய்கின்றன. . மேலும் அங்கே இடம் அகன்ற பாம்புச் செடிகள் வேறு  உள்ளன . இவைகளை எல்லாம் கடந்து வந்திருக்கிறான் உன் காதலன் என்கிறாள் தோழி.

‘ஸ்கைப்’ கிளாஸ் முடிந்தவுடன் பழைய உரைகளைத் தேடித் படித்தேன். அதில் ‘அகல் வாய்ப் பாந்தள்’ என்பதற்கு அகன்ற வாய் உடைய பாம்புச் செடிகள் என்று சொல்லிவிட்டு அகன்ற வாயுடன் யானையை விழுங்கும் மலைப் பாம்பு என்றும் சொல்லுவர் என்று கண்டேன் tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

முன்னரே யானையை விழுங்கும் மலைப் பாம்புகள் பற்றிய சங்க இலக்கியப்  பாடல்களை இதே ‘பிளாக்’கில் எழுதியுள்ளதாலும், நானே பி.எஸ்சி. பாட்டனி (தாவரவியல்) படித்ததாலும் பாம்புச் செடி தவறென நினைத்தேன்.

ஆனால்………………………………

ஆனால் வாரத்துக்கு மூன்று முறை லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரி போய் 100 ஆண்டுப் பழமையான புஸ்தகங்களை ஆராயும் ஒரு பகுதியாக நேற்று ஒரு புஸ் தகத்தை போட்டோ காப்பி எடுத்தேன் . புஸ்தகத்தின் தலைப்பு –

கொடைக்கானல் அருகில் பண்ணைக்காட்டில் கன்னியநாதசுவாமிகள் என்ற  மாம வுன தேசிகர் பற்றிய புஸ்தகம் 1924ல் வெளியிடப்பட்டது. இதை பெரியகுளம் கற்பூர திருவேங்கட சுவாமிகள் இயற்றியிருக்கிறார். இதில் பழனிக்கும் கொடைக்கானலுக்கும் இடையே உள்ள காட்டுப் பகுதி பற்றி வருணிக்கும் பகுதியில் ‘நாகதாளி’ என்னும் செடி பாம்புபோலச் சீறி தீப்பொறி கக்கும் என்கிறார். பின்னர் மலையில் எழும் வினோத ஒலிகளை வருணிக்கிறார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

எனது கருத்து

நாகதாளி என்பதற்கு ஒரு வகை மரம், சப்பாத்திக்கு கள்ளிச் செடி என்று ஆனந்த விகடனின் பழைய அகராதி கூறுகிறது . தாவரவியல் விலங்கியல் படித்த நான் (Phosphorescent)  ஒளி உமிழும் மீன் வகைகள், கடல் பிராணிகள், பிளாங்க்டன் (Planktons)  என்னும் நுண்ணுயிர்கள் , சில வகை  (Glow worms)புழுக்கள், மின்மினி பூச்சிகள்  முதலியவற்றை  அறிவேன். ஆ னால் பாம்பு போல சீறும் செடி வகைகளை அறியேன்; சில காலத்துக்கு முன்னர் மனிதர்களைக் கண்டால்  நிலத்துக்கு அடியில் ஒளிந்து கொள்ளும் ஒரு செடியின் வீ டியோவைக்  கண்டேன். ஆயினும் இதில் 99 சதவிகிதம் மோசடி வீடியோக்கள் தான் அதிகம். . யாரும் எதையும் எடிட் செய்து என்ன அற்புதத்தை வேண்டுமானாலும் யூ  டியூ ப்பில்  காட் டமுடியும் . ஆயினும் 1920களிலேயே இப்படி பழனி மலைக்காடுகளில் நாகதாளி என்னும் பாம்புச்  செடி இருந்ததாக மக்கள் நம்பியது தெரிகிறது. ஆகையால் அகநாநூறு பாடல்  விளக்கத்தில் நாகதாளி செடி என்றும் கொள்ளலாம் .

ஒரு வேளை உண்மையில் இப்படி பாம்புச் செடிகள் இருந்து அழிந்தும் போயிருக்கலாம். சங்க இலக்கியத்தில் சர்வ சாதாரணமாக வருணிக்கப்படும் நீர் நாய்களை (Otter) நாம் இப்போது எல்லா நதிகளிலும் காண முடியவில்லை. திருவள்ளுவர், கபிலர் வருணிக்கும் முகர்ந்தால் வாட்டும் அனிச்சம் பூவையும் காணமுடியவில்லை. அதுபோல நாகதாளி என்னும் பாம்புச் செடியும் அழிந்து இருக்கலாம். tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxxx

Snake Flowers of Himalayas and North America

ஆனால் பாம்பு போலத் தோன்றும் பலவகை பூக்கள்  உடைய செடி கொடிகள் உண்டு. கூகுள் (Google) செய்தால் நிறைய செடிகளைப்  பார்க்கலாம். நாம் சர்வ சாதாரணமாகப் பார்க்கும் நாகலிங்கப் பூக்கள் முதல் இமயமலை பாம்புப் பூ  வரை பல செடி கொ டிகள் இருக்கின்றன.

xxxx

From Wikipedia

டார்லிங்டோனியா என்பது ஓர் ஊனுண்ணித் தாவரம் ஆகும். இது சாரசீனியேசியீ என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இவற்றில் ஒரே ஒரு இனம் மட்டுமே உள்ளது; இதனை அமெரிக்க சாடிச் செடி அல்லது கலிபோர்னிய சாடிச் செடி எனவும் அழைப்பார்கள். இது ஈரமான மண் சேறு நிறைந்த சதுப்பு நிலப்பகுதியில் வளரும் ஒரு செடி ஆகும். ஆண்டுக்கு ஒரு முறை இதில் புதிய இலைகள் வளர்கின்றன. இது தரையில் வளரும் மிகச்சிறிய மட்டத்தண்டு கிழங்கைக் கொண்ட செடியாகும். மண்ணின் மேல் இலைகள் ரோஜாப்பூ இதழடுக்கு போல அமைந்திருக்கும். இந்த இலை போன்ற அமைப்பு குழாய்வடிவ ஜாடிகளாக நேராக நிமிர்ந்து செங்குத்தாக நிமிர்ந்து இருக்கும். சில நேரங்களில் இந்த இலை போன்ற அமைப்பு நுனியில் முறுக்கிக் கொண்டு, இரண்டாகப் பிளவுபட்டுக் காணப்படும். இது பாம்பு படமெடுத்து ஆடுவது போல தோற்றமளிக்கும் எனவே இதனை பாம்புச் செடி எனவும் கூறுவர்.(Wikipdia)

common name of this plant is Snake Plant.

TAGS — பாம்புச் செடி, நாகதாளி, சப்பாத்திக்கு கள்ளி, சங்க இலக்கியம்

–subham–

ஆதிசங்கரர் அருளிய பஜகோவிந்தம்!- Part 1(Post No.7579)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7579

Date uploaded in London – – 16 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஆதிசங்கரர் அருளிய ஸ்தோத்திரங்கள்,நூல்கள் – 1

பஜகோவிந்தம்!

ச.நாகராஜன்

1971ஆம் ஆண்டிலிருந்து 1972,73,74,75,76,77,78 என்று பல ஆண்டுகள் கல்கி வார இதழில் வாரந்தோறும் காஞ்சிபெரியவாளின் (ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கராச்சாரிய சுவாமிகள்) அருளுரைகள் வெளியாகி வந்தன. அதில் ஆதி சங்கரரின் நூல்களுக்கு அவர் அவ்வப்பொழுது அளித்து வந்த விளக்கம் பக்தர்களைப் பரவசப்படுத்தி வந்தது.

ஆதிசங்கரரின் நூல்களுக்குச் சரியான விளக்கம் அறிந்து கொள்ள விரும்புவோர் அவற்றைப் படித்தாலேயே போதும்.

இந்தப் பகுதியில் ஆதிசங்கரரின் ஸ்தோத்திரங்கள், நூல்கள் பற்றிய ஒரு அறிமுகம் மட்டும் செய்ய விழைகிறேன். (விளக்கங்களுக்கு ஜகத்குரு உள்ளிட்ட மகான்கள், அறிஞர்களின் புத்தகங்கள் ஏராளம் உள்ளன, அவற்றை வாங்கிப் படித்துப் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம்)

  1. பஜகோவிந்தம்

ஜகத்குரு காஞ்சி பெரியவாள்  ஆதி சங்கரரின் நூல்கள் பற்றிக் கூறுவது இது:

“ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர்கள் உலகத்திலுள்ள மேதைகள் எல்லாரும் ஆச்சரியப்படும்படியாக அத்வைத பாஷ்யங்கள் செய்திருக்கிறார். ஏற்கனவேயிருந்த ‘பிரம்மசூத்திரம்’, உபநிஷத்துக்கள், பகவத்கீதை முதலியவற்றை விளக்கி அவர் எழுதியதற்கு ‘பாஷ்யம்’ என்று பெயர்.

இது தவிர, தாமே (ஒரிஜினலாக) ‘விவேக சூடாமணி’, ‘உபதேச ஸாஹஸ் ரீ’ முதலான பல அத்வைத கிரந்தங்களைச் செய்திருக்கிறார்.

பாஷ்யத்திலிருந்து வித்தியாசம் தெரிவதற்காக  அவர் சொந்தமாகச் செய்த இது போன்ற நூல்களைப் ‘பிரகரண கிரந்தங்கள்’ என்பார்கள்.”

ஆக ஜகத்குரு பாஷ்யம் மற்றும் பிரகரண கிரந்தம் என்றால் என்ன என்பதை இப்படி விளக்கியுள்ளார். ஆதி சங்கரர் பக்தர்கள் ஓதி நலம் பெறுவதற்காக ஏராளமான ஸ்தோத்திரங்களையும் இயற்றியுள்ளார்.

இவை அற்புதமான லலிதமான தேர்ந்த சம்ஸ்கிருதச் சொற்களால் இயற்றப்பட்டிருப்பதால் சொல்லும்போதே ஆனந்தமாக இருக்கிறது; பொருளை உணரும் போது மனம் பண்படுகிறது. ஆன்மா உயர்கிறது.

1. பஜகோவிந்தம்

31 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் கொண்டது பஜகோவிந்தம். வேதாந்தக் கருத்துக்களை எளிய நடையில் தரும் இது எப்படிப் பிறந்தது என்பதற்கு ஒரு சுவையான கதை உண்டு.

ஒரு நாள் ஆதி சங்கரர் தனது சீடர்களுடன் வாரணாசியில் ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வயதான பண்டிதர் ஒருவர் இலக்கண சூத்திரங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதைக்  கண்டார். வயதான காலத்தில் மரணம் நெருங்கி வரும் சமயத்தில் இந்த இலக்கணம் அவரை எப்படிக் காப்பாற்றும் என்று மிகவும் இரக்கப்பட்டு  அவரைக் கடவுள் பால் மனதைச் செலுத்தும் படி அருளுரை புகன்றார்.

உடனேயே அவர் பஜகோவிந்தத்தைப் பாடியருளினார்.

இந்த ஸ்தோத்திரம் 12 ஸ்லோகங்களைக் கொண்டதாக் அமைந்தது. அதனால் இதை ‘த்வாதசமஞ்சரிகா ஸ்தோத்ரம்’ என்று சொல்வது வழக்கம்.

கூட வந்த சீடர்கள் 14 பேரும் ஆளுக்கு ஒரு ஸ்லோகத்தைப் பாடி இதில் சேர்க்கவே இதை (14 ஸ்லோகங்கள் கொண்டது என்ற அர்த்தத்தில்) ‘சதுர்தச மஞ்சரிகா ஸ்தோத்ரம்  என்று அழைக்க ஆரம்பித்தனர்.

இந்த இரண்டையும் தனித்தனியே பல சுவடிகளில் காண முடிகிறது. ஒவ்வொன்றிலும் இறுதியில் ஒரு ஸ்லோகம் சேர்க்கப்பட்டது.

காலப்போக்கில் இது 31ஆக வளர்ந்து இப்போதிருக்கும் உருவை அடைந்து விட்டது.

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்

பஜகோவிந்தம் மூடமதே |

சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே

நஹி நஹி டுக்ருஞ்கரணே ||

என்பது முதல் ஸ்லோகம்.

இதை ஏராளமானோர் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளனர்.

ஸ்ரீ காமாக்ஷிதாஸர் மொழிபெயர்த்துள்ள எளிய அழகிய இனிய மொழிபெயர்ப்பை எடுத்துக்காட்டாக இங்கு காணலாம்:

கோவிந்தனைத் துதி கோவிந்தனைத் துதி

கோவிந்தனைத் துதி மடநெஞ்சே!

காலத்திற்கெதிருன் காலத்தெல்லை

கசதப காத்திடல் இல்லை இல்லை.

இதை ஆங்கிலத்தில் அறிஞர் ஸ்ரீ T.M.P. மஹாதேவன் மொழிபெயர்த்துள்ளார்.

முதல் ஸ்லோகத்திற்கு அவர் மொழிபெயர்ப்பு இது:

Adore the Lord, Adore the Lord, Adore the Lord, O, Fool!

When the appointed time (for departure) comes,

The repetition of grammatical rules will not, indeed, save you.

புனரபி ஜனனம் புனரபி மரணம்

புனரபி ஜனனீ ஜடரே சயனம் |

இஹ சம்ஸாரே பஹுதுஸ்தாரே

க்ருபயாபாரே பாஹி முராரே || (ஸ்லோகம் 21)

பொருள் : மீளவும் பிறப்பு; மீளவும் இறப்பு, மீளவும் தாயின் குடரிடைப் படுப்பு

இந்த சம்சாரமானது தாண்டுவதற்கு அரிதாக இருக்கிறது. முராரீ! (முரனை சம்ஹாரம் செய்த ஹே! கிருஷ்ணா!) என் மீது கருணை கொண்டு என்னைக் காப்பாற்று!

இப்படி ஒவ்வொரு ஸ்லோகமும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் இருப்பதோடு  மிக நுட்பமான அதி ரகசியமான வேதாந்தக் கருத்துக்களையும் உபதேசிப்பதாக அமைந்திருக்கிறது.

பாரத ரத்னா ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி தனது இனிய குரலில் இதைப் பாடியுள்ளார். அதைக் கேட்டவர்கள் மனம் உருகி இதில் லயிப்பர்.

பக்திக்கு ஒரு கீதம் பஜகோவிந்தம்!

  (அடுத்து தொடர்வோம்)

****

மாதவையா குடும்பத்தினரின் மகத்தான தமிழ் சேவை (Post No.7578)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7578

Date uploaded in London – 15 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பழைய தமிழ் பெண் எழுத்தாளர்களை மறந்தது ஏன்? என்று 2016ல் ஒரு கட்டுரை எழுதினேன். முத்தமிழ் நாவல் முன்னோடிகளில் ஒருவரான அ. .மாதவையா பற்றியும் அவருடைய மகன், மகள்கள் பற்றியும் கிடைத்த செய்தியை பிரிட்டிஷ் லைப்ரரி நூல் ‘தில்லைக் கோவிந்தன்’ கதையிலிருந்து இங்கு இணைத்து இருக்கிறேன்.. பெண் எழுத்தாளர்கள் வரலாற்றை எழுதுவோருக்குப் பயன்படும். மாதவையாவின் வாழ்க்கைக்குறிப்பும் சுவையானது. அவருக்கு ‘பம்பா’ (PAMBA) என்ற புனைப்பெயர் எப்படி ஏற்பட்டது என்பதை படியுங்கள்.

Tags -மாதவையா, விசாலாக்ஷி அம்மாள், பம்பா

tamilandvedas.com › tag › எழுத்தாளர்க…

எழுத்தாளர்கள் | Tamil and Vedas

  1.  

6 Jun 2016 – தமிழ் பெண் எழுத்தாளர்களை மறந்தது ஏன்? … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … புரிந்த தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்களைப் பார்த்தால் பெண்கள் பெயர்களையே …

SUBHAM

இந்தியர்களை வியக்கவைத்த முஸ்லீம் ராணி! (Post No. 7577)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7577

Date uploaded in London – 15 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

இந்தியாவை ஆண்ட ஒரே முஸ்லீம் பெண்மணி நூர் ஜஹான் (Nur Jahan) . மொகலாய சக்ரவர்த்தி ஜஹாங்கிரின் மனைவி. முக அழகு, வசீகரம், ஆளும் திறமை, புதுமை விரும்பி, கண்டுபிடிப்பாளர் , அதிர்ஷ்டம் ஆகிய அத்தனையும் ஒட்டுமொத்தமாக உருவம் எடுத்து வந்தவர் புதுவகை உணவு, . பலவகை பாஷன்  ஆடைகள், ரோஜா மலர் அத்தர் ஆகியவற்றைக் கண்டுபிடித்த பெருமை உடையவள். ஏராளமான ஆங்கில புத்தகங்களின் கதாநாயகி. இவ்வளவுக்கும் இந்தியர் அல்ல. அவள் ஒரு பாரசீக ரோஜா.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதோ சுருக்கமான கதை –

பாரசீகம் என்ற நாட்டின் தற்கால பெயர் ஈரான் (Persia= Iran). உலகில் எவருக்கேனும் துன்பம் நேரிட்டால் அவர்கள் மன நிம்மதி பெறுவதற்கு அடைக்கலம் புகும் நாடு இந்தியா. பாரஸீகத்தில் மிர்ஜா கயாத் பேக் என்பவர் புகழ்மிகு குடும்பத்தில் பிறந்த செல்வந்தர். பாரசீகத்தில் முஸ்லிம்களின் கொடுமைகள் அதிகரிக்கவே குடும்பத்துடன் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். இவை எல்லாம் 400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. சம்ஸ்கிருத இலக்கியத்திலும் தமிழ் இலக்கியத்திலும் பெரிய வணிகர் கூட்டம், ஒரு சார்த்தவாகன் தலைமையில் ஊர் ஊராக , நாடு நாடாகச் செல்லும். சிலப்பதிகாரத்தில் கூட கோவலன் தந்தை மாசாத்துவானைப் பார்க்கலாம். நளனின் மனைவியான தமயந்தி கூட  ஒரு வணிகக் கும்பலுடன் சேர்ந்து கொண்டு காட்டுப்பாதையைக் கடந்து வந்ததை படிக்கிறோம். இதே போல மிர்ஜா பேக் தனது மகள் நூர் ஜஹான், மனைவி, பிள்ளைகள் ஆகியோருடன் பிரபல வணிகர் தலைவனான, மா சாத்துவன் ஆன, மாலிக் மசூத் வணிகர் குழுவுடன் பாதுகாப்பாக புறப்பட்டார். அந்தக் குழு இந்தியா வந்து சேர்ந்தது tamilandvedas.com, swamiindology.blogspot.com

 .

அப்போது இந்தியாவை மொகலாய மன்னர் அக்பர் ஆண்டு கொண்டிருந்தார். நூர் ஜஹானையும் மிர்ஜா பேக்கையும் அழைத்து வந்த மாலிக்கிற்கு அரண்மனையில் உள்ள பலரைத் தெரியும் . ஆகையால் நூர்ஜஹானின் தந்தையான மிர்ஜா பேக்கையும் சகோதரர்களையும் ஆக்ராவிற்கு அழைத்துச் சென்று அக்பர் முன்னிலையில் பிரசன்னமானார். உடனே அக்பரும் அவர்களுக்கு அரண்மனையில் சேவகம் செய்ய சில பணிகளைக் கொடுத்தார்.

அப்போதிலிருந்து நூர் ஜஹானின் வாழ்க்கை  பட்டம் போல உயர, உயர,மேலே சென்று, பட்டொளி வீசி பறக்கத் துவங்கியது. அவள்  அடிக்கடி அம்மாவுடன் அரண்மனைத் தோட்டத்தில் உலவ வருவாள் . அழ கா ளும் அறிவாலும் அனைவரையும் கவர்ந்தாள் . அக்பரின் மகன் இளவரசன் சலீம் அவளைக் கண்டவுடன் காதல்  கொண்டான் . சலீமின் பிற்காலப் பெயர் ஜஹாங்கிர். ஆயினும் விதி வசம் வேறு மாதிரி இருந்தது  17 வயதான போது,நூர் ஜஹான் , பர்த்வான் கவர்னரான ஷேர் ஆப்கான் கானுக்கு மனைவியானாள்.

அக்பர்  இறந்த பின்னர்,   இளவரசர்  சலீம், ஜஹாங்கிர் என்ற பெயரில் 1605ல் இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான மொகலாய சாம்ராஜ்யத்தின் மன்னர் ஆனார். தன்  தம்பியை அனுப்பி ராஜத் துரோகம் செய்ததாக குற்றம்சாட்டி  நூர்ஜஹானின் கணவரைக் கைது செய்ய அனுப்பினார். நூர்ஜஹானின் கணவரான ஷேர் ஆப்கான் கான் அவசரப்பட்டு கத்தியை  சுழற்றவே, ஜகாங்கீரின் ஆட்கள், அவர் மீது பயந்து,  அவனைக் கண்டம் துண்டமாக வெட்டிவிட்டு நூர்ஜஹானைப் பிடித்துவந்து ஜஹாங்கிர் முன்னிலையில் விட்டனர். இதற்கு 4 ஆண்டுகளுக்குப்  பின்னர், நூர்ஜஹானுக்கு 34 வயதானபோது, ஜஹாங்கிரின் மனைவி ஆனாள்.

நூர் ஜஹானுக்கு ஜஹாங்கீர், முதலில் ‘நூர் மஹால்’ – அரண்மனையின் ஒளி விளக்கு – பட்டம் அளித்தார். பின்னர் ‘நூர் ஜஹான்’–  உலகத்தின் ஒளி விளக்கு— என்ற பட்டங்களை அளித்தார். ஜஹாங்கீருக்கு குடிபோதை பழக்கம் இருந்ததால் சுகபோக வாழ்க்கையில் மூழ்கி முழுப் பொறுப்பையும் நூர் ஜஹானிடம் விட்டார். அவள் 11 ஆண்டுகளுக்கு அக்கால உலகின்  மிகப்பெரிய சாம்ராஜ்யமான மொகலாய சாம்ராஜ்யத்தைத் திறம்பட ஆண்டார். சகல கலா வல்லி  ஆனார் tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

ஒருகாலத்தில் ஜஹாங்கீர் வெளியிட்ட நாணயத்தில் பின்கண்ட வாசகம் காணப்படுகிறது-

ஜஹாங்கிரின் கட்டளையின் பேரில்

தங்கத்துக்கு நூறு மடங்கு மதிப்பு

அதிகரித்துவிட்டது . சக்ரவர்த்தியின் மனைவி

நூர்ஜஹானின் பெயர் அதில் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

அதாவது மனைவியின் பெயரால் தங்கத்துக்கு 100 மடங்கு மதிப்பு அதிகமாம் tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரோஜா மலரில் இருந்து அத்தர் எடுப்பதை  நூர்ஜஹான் கண்டுபிடித்தார். புதுவகை உணவு வகைகள், பாஷன் உடைகளைக் கண்டுபிடித்தார். துப்பாக்கி ஏந்தி ஒரே நேரத்தில் 4 புலிகளைச் சுட்டார் . இப்படி அவளுடைய வீர தீர செயல்கள் பற்றி பெரிய பட்டியலே இருக்கிறது . ஒரு முறை அரண்மனையிலிருந்து இவர் விட்ட அம்பு, ஆற்றங்கரை வண்ணானைக் கொல்லவே , வண்ணாத்தி ஓவென்று கதறிக்கொண்டு அரண்மனைக்கு வந்தாள் . நூர்ஜஹான், சாதாரணக் குற்றவாளி போல ராஜ சபைக்கு இழுத்து வரப்பட்டாள் . பின்னர் என்ன? மஹாராணி ஆயிற்றே , மன்னிப்பு, நஷ்ட ஈடு என்று கதை முடிந்தது. முஸ்லீம் மன்னர்கள், மனு நீதிச் சோழர்கள் அல்லவே tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

நூர்ஜஹான் 4 புலிகளைச் சுட்டுக்கொண்றதைக் கேள்விப்பட்டவுடன் அவளுக்கு ஜஹாங்கிர் ஒரு லட்ச ரூபாய்  மதிப்பில்  வைர மோதிரம்  பரிசளித்தார். இன்றைய விலையில் பத்து கோடி இருக்கலாம். ஆயிரம் ஏழைகளுக்குத் தங்கக் காசுகளையும் விநியோகித்தார். நூர்ஜஹானுக்கும் தர்ம கைங்கர்யங்களில் பிரியம் உண்டு

காலம் செல்லச் செல்ல நுரஜஹானுக்கு கஷ்டகாலம் துவங்கியது ஜஹாங்கிரின் மூத்த மகன் பெயர் இளவரசன் (Prince Khurram) குர்ரம் . இவனுடைய பிற்காலப் பெயர் சக்ரவர்த்தி ஷாஜஹான். இவனுக்குப் பேரழகி மும்தாஜ்மஹாலைக் கல்யாணம் செய்துவைத்த ஆசப்கான் ஷாஜஹானுக்கு முழு ஆதரவு தந்து தனது மருமகன் அரசுக்கட்டில் ஏறும் நாளைக் கனக்குப் போட்டுக்கொண்டிருந்தான். நூர்ஜஹான் வேறு  கணக்குப்போட்டாள் . தனது முதல் கணவர் மூலம் பிறந்த பெண்ணை மணந்த, ஜஹாங்கிரின் இளைய மகன் ஷாரியார் சிம்மாதனம் ஏற திட்டம் தீட்டினாள் . புரட்சி tamilandvedas.com, swamiindology.blogspot.com வெடித்தது.

போரும் தொடர்ந்தது. காபூல் நகர கவர்நர் பதவி வகித்த மஹாபாத் கான் உதவியுடன் புரட்சியை ஒடுக்கினாள் நூர்ஜஹான்.

காலப் போக்கில் நடந்த கசமுசாவில் அதே மஹாபத் கான், அரசுக்கு எதிராகத் திரும்பி, ஜஹாங்கிரையும் நூர்ஜஹானையும் சிறைப்பிடித்தான் . நூர் ஜஹான் தப்பிச் சென்று பெரும்படை திரட்டி வந்தாள் . வில்லாதி வில்லியான அவள் யானை மீது ஏறி, பிரவாஹம் எடுத்து வந்த நதியில் இறங்கி அக்கரை சேர்ந்தாள் . ஆனால் அவளைத் தொடர்ந்து வந்த படைகள் பின்தங்கின. மஹா பாத் கான் அவளை மீண்டும் சிறைப்பிடித்தான். பின்ர் அவள் பெண்களுக்கே உரித்தான சாதுர்யங்களைப் பயன்படுத்தி தன்னையும் கணவர ஜஹாங்கிரையும் tamilandvedas.com, swamiindology.blogspot.com

விடுவித்துக் கொண்டார்.

குடிப்பழக்கத்தால் உடலைப் பலவீனமாக்கிக் கொண்ட ஜஹாங்கிர் காஸ்மீரிலிருந்து லாகூருக்குச் செல்லும் வழியில் 1627ல் மரணம் அடைந்தார். குர்ரம் என்ற ஷா ஜஹான்  பதவி ஏற்றார். ஆயினும் நூர்ஜஹானை அன்போடு நடத்தினார் . அவளுக்கோ வாழ்க்கை வெறுத்துவிட்டது. தனிமையில் வாடினார் .பழங்காலத்தில் நடந்த  புகழ்மிகு நிகழ்வுகள் மனதில் நிழல் ஆட வாழ்க்கைச் சக்கரம் உருண்டோடியது .,கணவன் இறந்த 19 ஆண்டுகளுக்குப் பின்னர், 1646ல் , அவளுடைய 72ஆவது வயதில் உயிர்நீத்தாள் . லாகூரில் தனது கணவருக்காக மிக அழகான பூந்தோட்ட சமாதியை அமைத்திருந்தார் . அதற்குச் சற்று தொலைவில் இவளது உடலும் அடக்கம் செய்யப்பட்டது..

அதில் எழுதப்பட்டுள்ள சோகமயமான  வாசகம் செப்புவது யாதெனில் tamilandvedas.com, swamiindology.blogspot.com

 ,தனிமையான எனது கல்லறையில் ரோஜாக்கள் மலராது;

இசை பாடும் குயில்கள் சங்கிதம் இசைக்காது;

இருள் அகற்றும் நட்புறவு  ஒளிவீசும் விளக்குகளும் ஒளிராது;

அதில் சிறகு எரித்து விழுவதற்காக  விட்டில் பூச்சிகள் கூட வாராது..

முடி சார்ந்த மன்னரும் பின்னர்ப்  பிடி சாம்பராய்ப் போவார்கள் என்றாலும், இந்திய வரலாற்றில் அழியாத சுவடுகளை பதித்து விட்டாள் ‘பாரசீக ரோஜா’ –ராணி.நூர் ஜஹான்

Tags —  நூர் ஜஹான், முஸ்லீம் ராணி, மொகலாய, ஜஹாங்கிர் , ஷா ஜஹான்

–subham—