இரண்டு ராஜா ராணி கதைகள் (Post No.7761)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7761

Date uploaded in London – 30 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரு தேசத்தை  ஒரு  ராஜா ஆண்டு வந்தார். அவருக்கு கிளிகள் என்றால் ரொம்பப் பிரியம். கிளிகளில் மிகவும் இனிமையாகப்  பேசும் ஒரு அழகிய கிளியை அரண்மனையிலேயே தங்கள் கூண்டில் வளர்த்து வந்தார்.

ஒரு நாள் அந்தக் கிளியின் அழகில் மயங்கிய தேவ லோகக் கிளிகள் அதை தேவ லோகத்துக்கு அழைத்துச சென்றன. கிளியைக் காணாததால் ராஜாவுக்கு ஒரே வருத்தம். ஒரு நாள் திரும்பி வந்த கிளி ராஜாவிடம் ஒரு மாங்கொட்டையைக் கொடுத்து ராஜாவே, இதை கண்ணும் கருத்துமாக வளர்த்து வா. இது பழங்களைக் கொடுக்கும்போது அந்தப் பழத்தைச் சாப்பிடு . உன் இளமை திரும்பிவிடும் உனக்குப் பிடித்த பெண்ணுக்குக் கொடு. அவள் இளம் அழகியாகிவிடுவாள் என்று சொன்னது.

கிளியின் பேச்சைக் கேட்டு அதிசயித்துப் போன ராஜா, அந்த மாங்கொட்டையை நட்டு  அதைத் தன் மகன் போல வளர்த்தார். அது பூத்துக்  காய்த்து பழம் உண்டா னபோது மகிழ்ந்தார். கிளி சொன்னது எவ்வளவு உண்மை என்பதை அறிவ த ற்காக ஒரு பழ த்தைப் ப றி த்து வரும்படி  ஒருவரை அனுப்பினார். அதை சோதனை முறையில் ஒரு கிழவனுக்கு  கொடுத்துப் பார்த்தார். அவன் அதைச் சாப்பிட்ட மாத்திரத்தில் சுருண்டு விழுந்து tamilandvedas.com, swamiindology.blogspot.comஇறந்தான்.

ராஜாவுக்கு மஹா கோபம். ஓஹோ, எதிரி நாட்டு மன்னனோடு சதி செய்து என்னைத் தீர்த்துக்கட்ட இந்தக் கிளி திட்டம் போ ட்டுள்ளது என்று கருதி கிளியைக் கூ ண்டில் இருந்து எடுத்து கழுத்தை  நெறி த்துக் கொன்றான்.

கிளி பரிதாபமாகச் செத்துப் போனது. விஷ மரம் என்ற பெயர் ஊர் முழுவதும் பரவியவுடன் யாரும் மரத்துக்கு அருகில் வரவே பயந்தனர்.

என்ன நடந்ததென்றால் ராஜாவின் ஆள் கொண்டு வந்த மாம்பழத்தில் ஒரு பாம்பு விஷத்தைக் கக்கி இருந்தது. அ ந்தப்  பாம்பை அடுத்த நிமிடமே ஒரு கழு கு கொத்திக்கொண்டு போனதால் விஷம் எறிய பழம் என்பது tamilandvedas.com, swamiindology.blogspot.com

தெரியாமல் போயிற்று.

காலம்  உருண்டோடியது ஒரு வண்ணான் , அவன் மனைவியின் பேச்சைக் கேட்டுத் தாயாரை நன்கு அடித்துவிட்டான். அவளுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தோடு இரவு நேரத்தில் வந்து விஷ மாமரத்தில் மாங்கனியை உண்டாள் . காலையில் அவள் தேன் கனியாக மாறிவிட்டாள் 16 வயதுக் குமரியாக பவனி வந்தாள் . செய்தி காட்டுத் தீ போல பரவியது; மன்னனும் அவளை அழைத்து உண்மையை அறிந்தான். பின்னர் அதைச் சிலருக்குக் கொடுத்தவுடன் அவர்கள் வாலிபர்களாக மாறினர். மன்னனும் அதை உண்டு குமரன் ஆனான். தன்னுடைய ஆசை நாயகிக்கும் கொடுத்து வாலை இளங் குமரியாக்கி அரசுக்கு கட்டிலில் அமர்த்தினான்.

அவசரப்பட்டு அறிவிழந்தேனே என்று வாழ்நாள் முழுதும் வருந்தினான்.

நீதி

எந்த ஒரு செயலையும் ஆராயாமல் செய்யாதே.

பதறிய காரியம் சிதறிவிடும்.

அதனால்தான் தமிழ் வேதமாகிய திருக்குறளில் திருவள்ளுவரும்

செல்லா இடத்துச்  சினந் தீது  செல்லிடத்தும்

இல் அதனின் தீய பிற – குறள் 302

என்றார். இதன் tamilandvedas.com, swamiindology.blogspot.comபொருளாவது-

வலியார் மீது கோபம் கொள்வது  தீமை பயக்கும். வலிமையற்றவரிடம் கோபம் கொள்வது போலத்  தீமை தரு வது போல வேறு ஒன்றும் இல்லை .

Xxxxx

குதிரைக்கு குர்ரம் என்றால்  ஆனைக்கு அர்ரம் !

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் வேட்டை ஆடக்  காட்டுக்குப் போனார். அங்கே ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார். ஒரு வேடனின் மனைவிக்கு  பிரசவ வலி எடுத்தது. அவள் கொஞ்ச மேனும் தயங்காமல் பிள்ளையைப் பெற்றெடுத்து அருகிலுள்ள ஓடையில் குழந்தையை ஸ்நானம் செய்வித்து, இரண்டு மூலிகையைப் பறித்து வாயில் போட்டுக்கொண்டு குழந்தையுடன் நடந்து சென்றாள் !

ராஜா நினைத்தார்- அடிப் பாவி மகள்களே ; அரண்மனையில் என் மனைவியர் கர்ப்பவதி ஆகிவிட்டால் என்ன ஆட்டம் போடுகிறார்கள். இந்த வேடுவச்சியோ யார் உதவியும் இல்லாமல் பிரசவித்து வீட்டுக்கும் போய்விட்டாளே. இப்போதே ஸ்பெஷல் ஆர்டர் (Special order) போடுகிறேன் என்று அரண்மனைக்கு tamilandvedas.com, swamiindology.blogspot.com  விரைந்தார்.

ஹலோ டாக்டர்ஸ் ! ஹலோ நர்சஸ் ! (Doctors and Nurses) எனக்குத் தெரியும் என் மனைவி நிறை மாத கர்ப்பிணி என்று. ஆயினும் நீங்கள் ஒருவரும் எந்த உதவியும் செய்யத் தேவையில்லை. மருந்தும்  கொடாதீர்கள் ; பீம புஷ்டி அல்வாவும் சப் ளை செய்யாதிர்கள் என்றார். .இது நான் காட்டில் கற்றுக் கொண்ட புதிய பாடம் என்றார்.

அனைவரும் “உத்தரவு மஹாராசா” என்று ஏகோபித்துக் குரல் கொடுத்தனர். அரசனின் ஆணையை சிரம் மேல் கொண்டு அடி பிறழாமல் நடந்தனர். மஹாராணிக்கும் செய்தி போனது.

உடனே அவளும் நியூ ஆர்டர்ஸ் (New Orders) போட்டாள் —

ஏய்! யாரங்கே ? செர்வண்ட்ஸ் ! கார்டனர்ஸ்! (Servants and Gardeners) தோட்டத்துக்கு ஒரு பொட்டுத்  தண்ணீர் விடக்கூடாது ; உரமும் இடக்கூடாது ; இது நான் என் கணவனிடம் கற்றுக் கொண்ட பாடம் என்றாள் . அவர்களும் “உத்தரவு மஹாராணி” என்று கோரஸ் (Chorus) இசைத்தனர்.

ராஜாவுக்கோ தோட்டம் என்றால் உயிர். தினமும் மாலையில் உலா வருவார். செடிகள் வாடியதைப் பார்த்து , “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று வள்ளலார் பாட்டைப் பாடினார் tamilandvedas.com, swamiindology.blogspot.com. விஷயத்தை விசாரித்தபோது மஹாராணியின் ஆணை என்பது தெரிந்தது.

அந்தப் புரத்துக்கு ஓடினார்.

“அன்பே, ஆருயிரே, கற்கண்டே, மானே !

இன்று நீ ஏன் பாகற்காயாகவும் வேப்பங்காயாகவும் மாறினாய் ?

எனதருமைத் தோட்டத்துக்கு தண்ணீர் மறுத்தது  ஏன் ? ஏன் ?” என்று வினவினார்.

“அன்பரே ! நீவிர் காட்டுக்குச் சென்று புதிய பாடம் கற்றதை யாமும் அறிந்தோம். நாமும் உம்மிடம் பாடம் கற்றோம். காட்டில் ஒரு வேட்டுவச்சியைப் பார்த்திரே ! அந்தக் காட்டுக்கு யார் தண்ணீர் விட்டார்கள்? யார் உரம் போட்டார்கள்? யார் உதவியுமின்றி அவை தானாக வளரவில்லையா? ஆகையால்தான் யாமும் உத்தரவிட்டோம்” என்றார் .

“அன்பே! இந்த மண்ணாங்கட்டிக்கு விளங்கிவிட்டது. இதோ உனக்கு மருந் தும் லேஹியமும் அனுப்புகிறேன்”. என்று புதிய உத்தரவு பிறப்பித்தவுடன் ராணிக்கு ஒரு கிலோ ஹல்வா போய்ச்  சேர்ந்தது. தோட்டத்துக்கு tamilandvedas.com, swamiindology.blogspot.comதண்ணீரும்  கிடைத்தது!.

குதிரைக்கு குர்ரம் என்றவுடன் ஒருவன் ஆனைக்கு அர்ரம் என்றானாம்

இது ஒரு பழமொழி.

வேட்டுவச்சியும் மஹாராணியும் ஒன்றாக முடியுமா?

(குதிரை= குர்ரம்)

Tags – ராஜா ராணி கதை கிளி விஷம், மாம்பழம், குதிரைக்கு குர்ரம்

—- subham —–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: