பிரமிட் மர்மம்! (PostNo.9085)

PYRAMID VALLEY IN BENGALURU
PYRAMID IN B’LORE

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9085

Date uploaded in London – –29 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் (SUNDAYS AND MONDAYS) மாலை இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் (GNANAMAYAM)  நிகழ்ச்சியில் 28-12-2020 அன்று ஒளிபரப்பான உரை. இதை www.facebook.com/gnanamayam தளத்திலும் youtubeலும் எப்போதும் காணலாம்.

பிரமிட் மர்மம்!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். இன்று நம் முன் இருக்கும் கேள்வி பிரமிடுக்கு உண்மையிலேயே அபூர்வ சக்தி உண்டா? அதனால் நமக்கு என்ன நன்மைகளை உண்டாக்கிக் கொள்ளலாம் என்பதுதான்.

மாபெரும் வீரனான நெப்போலியனின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை முதலில் பார்ப்போம்.

பிரமிடின் மஹிமையைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த அவன் க்ரேட் ப்ரமிட் எனப்படும் பெரிய பிரமிடை அடைந்தான். அதன் முக்கிய உள்ளறையில் (Main Chamber) பல வருடங்கள் பயிற்சி பெற்ற சீடர்களே அனுமதிக்கப்படுவர் என்றும் தியானம் மற்றும் ரகசிய சித்திகளில் பயிற்சி பெறுபவர் அந்த உள்ளறையில் ஒரு இரவு முழுவதும் தங்கி இருந்து உள்ளொளி பெறுவர் என்றும் அவன் கேள்விப் பட்டிருந்தான்.

அற்புதமான நுணுக்கமான கணிதம் மூலம், இடம், திசை, ஒழுங்கு, நேர்த்தி ஆகியவற்றைப் பரிசீலித்து அமைப்பட்டிருக்கும் அந்த அறை பிரமாதமான ‘சக்தி கேந்திரம்’ என்று அறிந்திருந்த அவன் அந்த அறையில் ஒரு நாள் இரவு முழுவதும் தங்கினான்.

   மறு நாள் காலை அதிசயம் மற்றும் ஆச்சரியத்தைக் காட்டும் முகத்துடன் வெளியே வந்த அவனை நோக்கி, “என்ன நடந்தது” என்று அனைவரும் கேட்டனர். தனது சக்தி மயமான அனுபவங்களை வெளியே சொல்லத் தயங்கிய அவன், நான் நடந்ததைச் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்’ – (You won’t believe me, if I tell you) என்றான்.

  நெப்போலியன் மட்டுமல்ல, அவனுக்கு முன்னாலும் பின்னாலும் இன்று வரையில் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் பிரமிட் தரும் பிரமிப்பூட்டும் பலன்களை அனுபவித்து வருகின்றனர்.

     ‘பைரா’ என்றால் நெருப்பு என்று பொருள். ‘மிட்’ என்றால் நடுவே என்று பொருள். ஆனால் சாதாரணமாக ஆங்கிலேயரால் செய்யப்பட்ட இந்த மொழிபெய்ரப்பு இதற்கான சரியான அர்த்தத்தைத் தரவிலை என்று ஜெரால்ட் மாசே (Gerald Massey) தனது ஏன்ஷியண்ட் ஈஜிப்ட்; தி லைட் ஆஃப் தி வோர்ல்ட் (Ancient Egypt: The light of the world’) என்ற புத்தகத்தில் கூறுகிறார். ‘பைர்’ என்றால் அக்னி என்றும் ‘மெட்’ என்று உச்சரிக்கப்பட வேண்டிய அடுத்த வார்த்தை பத்து மடங்கு என்ற பொருளைத் தரும் என்றும்  அவர் கூறுவதோடு, பிரமிடானது அக்னியின் பத்து வித அபூர்வ சக்திகளைத் தருகிறது என்கிறார். பிரமிட், ‘புனிதமான சக்திகளைத் தன்னுள்ளே தக்க வைக்கும் ஊற்று’ என்கிறார் அவர்.

   ‘க்ரேட் பிரமிட்’ என்று அழைக்கப்படும் பெரிய  பிரமிட் 13 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பரப்பின் மேல் மட்டம் அதிசயப்படும் அளவு சமதளமாக இருக்கிறது.

   23 லட்சம் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது பிரமிட்! அதன் ஒவ்வொரு கல்லின் எடையும் 2 டன்  முதல் 50 டன் வரை இருக்கிறது. இந்தக் கற்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட இடம் மயிரிழை அளவு கூட இடைவெளி இன்றி செய்யப்பட்டுள்ளது! இந்த பிரமிடில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள கற்களைக் கொண்டு அமெரிக்காவின் வானளாவிய கட்டிடமான எம்பயர் ஸ்டேட் கட்டிடம் போல 30 கட்டிடங்களைக் கட்டலாம்!

இது மட்டுமல்ல, பிரபஞ்சத்திற்கும் பிரமிடுக்கும் பெரிய அளவில் தொடர்பு உள்ளது.

   பிரமிட், பூமியின் ஸ்கேல் மாடலாக இருப்பது ஒரு வியப்பூட்டும் விஷயம்! அதனுடைய லாடிட்யூட் மற்றும் லாங்கிட்யூட் ஆகிய இரண்டும் வெட்டிக் கொள்ளும் இடம் 30 டிகிரி வடக்கு மற்றும் 31 டிகிரி கிழக்கு! இந்த ரேகை மற்ற எல்லா ரேகைகளையும் விட அதிகமான பூமிப் பரப்பின் வழியே செல்கிறது என்பது ஒரு அதிசயமான விஷயம்!

   பிரமிடின் மொத்தக் கற்களின் எடையான ஐம்பத்திமூன்று லட்சம் டன்னை 1,000,000,000,000,000 – Ten to the power of 15  என்ற எண்ணால் பெருக்கினால் வெவ்வேறு அளவுகளின் விகிதாசாரங்கள் ‘ பை’ எனப்படும் 3.142 என்ற அளவையும் ‘தங்க விகிதம்’ எனப்படும் 1.618 என்ற அளவையும் ஆங்காங்கே காண்பிக்கிறது.

   பிரமிடில் உள்ள கிங் சேம்பரின் தெற்கு மற்றும் வடக்கு முனைகள் முறையே ஜீடா ஒரியன் நட்சத்திரத்தையும் ஆல்ஃபா ட்ராகோனிஸ் நட்சத்திரத்தியும் காண்பிக்கின்றன. க்வீன் சேம்பரின் தெற்கு மற்றும் வடக்கு  முனைகள் சிரியஸ் நட்சத்திரத்தையும் ஓரியன் நட்சத்திரத்தையும் நோக்கி இருக்கின்றன. நமது புராணங்கள் பெரிதும் போற்றும் விஸ்வாமித்திர நட்சத்திரமே சிரியஸ்! இது பெரும் மர்மங்களைத் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் Robert Temple எழுதியுள்ள The Syrius Mystery என்ற புத்தகத்தைப் படிக்கலாம்.

   பிரமிடின் சரியான அளவுகளே அதற்குச் சக்தியைத் தருவதாக விஞ்ஞானிகள் தங்கள் சோதனைகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

   ஷீலா ஆஸ்ட்ராண்டர் என்ற கனடிய பெண்மணியும் Lynn Schroeder என்ற அமெரிக்கப் பெண்மணியும் இணைந்து எழுதிய ‘சைக்கிக் ரிஸர்ச் பிஹைண்ட் தி அயர்ன் கர்டன்’ என்ற நூல் உலகம் முழுவதும் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஒரு பகுதி பிரமிடின் மர்மங்களை விளக்குகிறது.

 போவிஸ் (BOVIS) என்ற பிரெஞ்சுக்காரர் பிரமிடைப் பார்க்கச் சென்ற போது பூனைகளும் மற்ற சிறு மிருகங்களும் வழி தவறி ஆங்காங்கே செத்துக் கிடப்பதைப் பார்த்தார். மீண்டும் பல மணி நேரம் கழித்து தான் வந்த வழியில் திரும்புகையில் அவை அழுகி நாற்றம் எடுக்காமல் இருந்ததைப் பார்த்து வியந்தார். உடனே பிரமிடின் ஸ்கேல் மாடலைத் தயார் செய்து அதில் பல்வேறு பதார்த்தங்களை வைத்துச் சோதனை செய்தார். அவை கெடவே இல்லை.

  தொடர்ந்து செக்கோஸ்லேவிகியாவைச் சேர்ந்த காரெல் ட்ரபெல் (Karel Drabal) என்ற ரேடியோ எஞ்ஜினியர்                                                                                                                                               பிரமிடின் சிறிய ஸ்கேல் மாடலில் ஒரு பிளேடைத் தெற்கு வடக்காக காம்பஸின் உதவி கொண்டு வைத்தார். பிளேடின் கூர்மையான பகுதிகள் கிழக்கு மேற்காக இருந்தன. இதை பிரமிடின் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு உயரம் இருக்குமாறு வைத்தார். ஆறு நாட்களுக்குப் பிறகு பிளேடின் மழுங்கிய முனைகள் கூர்மையுடையதாக ஆகியிருந்தன.

   கடைகளிலும் பிளாட்பார ஓரங்களிலும் விற்கும் பிரமிடுகளை வைத்து பிரமிட் சக்தியைப் பற்றிச் சந்தேகப்படுவோர் சரியான அளவுடன் பிரமிட் இருக்கிறதா என்பதை சோதனை செய்து பார்க்க வேண்டும். இந்த அளவுகளைக் கண்டுபிடிக்க ஒரு சிறிய ஃபார்முலா இருக்கிறது. பிரமிடின் ஒவ்வொரு அலகு அதாவது UNIT உயரத்திற்கும் அதன் அடிப்பக்கம் 1.5708 மடங்காக இருக்க வேண்டும். அதன் பக்க அளவு 1.4945 மடங்காக இருக்க வேண்டும். உதாரணமாக ஐந்து அங்குலம் உயரம் உள்ள பிரமிடின் அடிப்பக்கம் 7.85 அங்குலமாகவும் பக்கம் 7.47 அங்குலமாகவும் இருக்க வேண்டும்.

   பிரமிட் சக்தியை நீங்களே சோதனை செய்து பார்க்கலாம். நான்கு முக்கோணங்களை கார்ட்போர்டில் வெட்டிக் கொள்ளுங்கள். இதன் அடிப்பக்க அளவு 9 3/8 அங்குலமாகவும் இரு பக்கங்களின் அளவு 8 7/8 அங்குலமாகவும் இருக்க வேண்டும். நான்கு முக்கோணங்களை டேப் வைத்து ஒட்டிவிட்டால் பிரமிடின் உயரம் சரியாக ஆறு அங்குலம் இருக்கும். இதில் வடக்கு தெற்கு திசைகளை காம்பஸ் உதவியுடன் நிர்ணயித்து இரண்டு அங்குல உயரத்தில் ஒரு  கட்டையின் மீது பிளேடின் நுனிகளை தெற்கு வடக்காக வைக்க வேண்டும். இப்போது பிளேடின் கூர்மையான பகுதிகள் கிழக்கு மேற்காக இருக்கும். ஆறு முதல் பத்து நாட்கள் கழித்து பிளேடை எடுத்துப் பார்த்தால் மழுங்கிய முனைகள் கூர்மையாகி இருக்கும். குறைந்த பட்சம் 50 முறைகள் இதைக் கூர்மையாக்கி உபயோகிக்கலாம்.

   தலைவலி உள்ளவர்கள் பிரமிட் தொப்பியை மாட்டிக் கொண்டால் தலைவலி தீருவதாக ட்ரபெல் தன்னிடம் கூறியதாக ஷீலா குறிப்பிடுகிறார். இதை அணிந்து உலகில் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர். பிரமிடின் உள்ளே காய்கறிகள், முட்டை வைத்தால் அவை கெட்டுப் போகாது.

   இதன் உள்ளே வைக்கப்பட்ட பால் மற்றும் தண்ணீர், சக்தி ஊட்டப்பட்டதாக் ஆகிறது. பெரிய அளவில் கார்ட்போர்டில் கூட செய்து உருவாக்கப்பட்ட பிரமிடில்  அமர்ந்து படிக்கும் மாணவ மாணவியரின் அறிவுத் திறன் கூடுகிறது. ஞாபக சக்தி கூடுகிறது. பிரமிடில் தியானம் செய்தால் சாந்தி ஏற்படுகிறது. இப்படிப் பல்வேறு பயன்களைத் தருவதாக பல நூறு புத்தகங்கள் விளக்குகின்றன. பிரமிடாலஜி என்ற பிரமிட் பற்றி ஒரு தனி இயல் உருவாகி இருப்பதோடு பிரமிட் என்சைக்ளோபீடியாவும் புத்தக சந்தைக்கு இப்போது வந்து விட்டது.

   பில் ஷூல் மற்றும் எட் பெடிக் (Bill Schol & Ed Petit) இணைந்து எதியுள்ள தி சீக்ரட் பவர் ஆஃப் பிரமிட்ஸ் என்ற புத்தகம் பிரமிடின் அபூர்வ சக்திகளை விரிவாக விளக்குகிறது. மாக்ஸ் டாத் மற்றும் க்ரெக் நியல்ஸன் (Max Toth &  Greg Nielson) இணைந்து எழுதிய பிரமிட் பவர் என்ற புத்தகம் பிரமிடின் உள்ளே வைக்கப்படும் விதைகள் வீரிய விதைகளாக மாறுவதாகக் குறிப்பிடுகிறது.

  இது ஒருபுறமிருக்க, உலகையே தங்கத்திற்கு நிகராக ஆட்டிப் படைக்கும் அமெரிக்க டாலர் பெரும் மர்மங்களைத் தன்னுள்ளே அடக்கி, சக்தி வாய்ந்ததாகத் திகழ்கிறது. பதிமூன்று என்ற எண்ணையே வெறுக்கும் மேலை உலகம் ஹோட்டல்களில் கூட பன்னிரெண்டாம் நம்பருக்குப் பின்னர் 12A அல்லது பதிநான்கைத் தங்கள் அறைகளுக்கும் மாடிகளுக்கும் குடியிருப்புகளுக்கும் தந்து பதிமூன்றாம் எண்ணைத் தவிர்க்கிறது – அதை துரதிர்ஷ்டம் பிடித்த எண் என்று எண்ணி!

ஆனால் அமெரிக்க டாலரில் எல்லாமே பதிமூன்று மயம் தான்! இது வியப்பூட்டும் ஒரு விஷயம். 13 ஒரிஜினல் காலனிகள், சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டோர் 13 பேர், அமெரிக்க கொடியில் 13 கோடுகள், டாலர் நோட்டில் உள்ள பிரமிடில் 13 படிகள், மேலே லத்தீனில் 13 எழுத்துக்கள். ‘E pluribus unum’ என்பதில் 13 எழுத்துக்கள், கழுகுக்கு மேலாக 13 நட்சத்திரங்கள், கழுகின் இறக்கைகள் ஒவ்வொன்றிலும் 13 சிறகுகள், ஷீல்டில் 13 பட்டைகள், ஆலிவ் மரக்கிளையில் 13 இலைகள், 13 பழங்கள், 13 அம்புகள்! இப்படி அமெரிக்க டாலரில் எல்லாமே 13 தான்!

  டாலர் மறைமுக ஆற்றலைக் (அக்கல்ட் பவரை) கொண்டதாய் அமைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. அமெரிக்க டாலரின் செல்வாக்கிற்குக் காரணம் அதில் உள்ள பிரமிடே! அதில் உள்ள பூர்த்தியாகாத பிரமிட் எப்போதும் அமெரிக்கா வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதை உணர்த்துகிறது. பிரமிடின் மேலே உள்ள எதையும் ஊடுருவும் கண் அமெரிக்காவிற்கு தெய்வீக வழிகாட்டுதல் கிடைப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள ANNUIT COEPTIS என்ற எழுத்துக்கள் ‘இறைவன் அமெரிக்காவின் பணிகளுக்கு ஆதரவளிப்பதைக் குறிக்கிறது,

 அதில் உள்ள NOVUS ORD O SECLOREM என்பது ‘உலக ஏடுகளில் ஒரு புதிய அத்தியாயம்’ என்ற பொருளில் அமெரிக்க சகாப்தத்தைக் குறிக்கிறது. பிரமிடைத் தன் டாலரில் கொண்டுள்ள அமெரிக்கா பொருளாதாரத்தில் தலை சிறந்து விளங்கும். என்றும் செல்வச் செழிப்பில் திகழும்!

பிரமிடில் உள்ள முக்கோணங்கள் சக்தியைத் தருபவை. மறைமுகமான ஆற்றலைத் தரும் இது நமது ஸ்ரீசக்கரத்தை -ஸ்ரீயந்திரத்தை நினைவுபடுத்துகிறது, ஸ்ரீ சக்கரத்தின் மூலமான முக்கோணங்கள் 43. அதில் உள்ள கோடுகள் வெட்டிக் கொள்வதால் ஏற்படும் மற்ற கோணங்களையும் சேர்த்தால் மொத்தம் வருவது 108. ஆகவே ஸ்ரீசக்கரம் பிரமிடைப் போல 108 மடங்கு அதிக சக்தி தருவதாக உள்ளது. ஸ்ரீசக்கரத்திற்கும் பிரமிடிற்கும் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன!

இதை உணர்ந்து தான் ஆலயங்களில் பிரமிட் அமைப்பினை கோபுரங்களிலும், கலசங்களிலும் ஆங்காங்கே தேவையான முறையில் நம் முன்னோர்கள் அமைத்துள்ளனர். பலன் தரும் யாக குண்டங்கள் கூட பிரமிட் வடிவத்தில் அமைக்கப்படுகின்றன. மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோவில் பிரமிட் அமைப்பில் உள்ளது. கோவையில் உள்ள பிரமிட் செண்டர், பங்களூரு அருகில் உள்ள பிரம்மாண்டமான பிரமிட் தியான மண்டபம், அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில்  வடக்கு தெற்கு அச்சில் 9206 சதுர அடி பரப்பில் 89 அடியை அடிப்பக்கத்திலும் 63 அடியை உயத்திலும் கொண்டு

அமைக்கப்பட்டுள்ள பிரமிட் சர்ச் முடிய உலகத்தில் ஏராளமான பிரமிட் கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு மக்களுக்குப் பலன் அளித்து வருகின்றன.

உங்களுக்கு என்ன பிரச்சினை என்பதை இனம் கண்டால் அதற்கு பிரமிட் மூலமாகத் தீர்வு காணலாம் என்பதே நிதர்சனமான உண்மை!

பிரமிடின் ஆற்றலை உணருங்கள்; உபயோகியுங்கள்! பலன் பெறுங்கள்! நன்றி வணக்கம்!

***

TAGS- பிரமிட் மர்மம்

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 15 (Post No.9084)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9084

Date uploaded in London – –28 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -15

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .

XXX

2-4-27

ASVA – MALE HORSE அஸ்வ – ஆண் குதிரை

BADAVA/MARE – FEMALE HORSE  படவா பெண் குதிரை

BADAVA– SUBMARINE FIRE IN THE SHAPE OF HORSE/MARE

வடவைத் தீ – குதிரை முக கடல் தீ

IN TAMIL LITERATURE IT IS VADAVAI OR VADA MUKHAGNI, VADAVAI THEE

B= V ப=வ

XXX

2-4-28, 2-4-29

AHORATRI – DAY/NIGHT

AHAS – PAHAL IN TAMIL- DAY அஹஸ் – பகல்

RATRI – IRAVU IN TAMIL- NIGHT ராத்ரி – இரவு

IT IS INTERESTING TO NOTE THAT ALL THE TAMILS ARE USIG IT IN EVERYDAY SPEECH

இரவும் பகலும் சம்ஸ்கிருத சொற்கள் !!

XXX

2-4-30

MUUTAH – MUTTAAL  IN TAMIL மூட – முட்டாள்

ALSO MADAIYAN; COOK மடையன் (சமையல்காரன் )

XXX

2-4-31

BHUTA – GHOST, GOBLIN பூத (பேய்)

LIKE IN SANSKRIT IT IS USED FOR FIVE ELEMENTS IN PANCHA BHUTA

தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் பஞ்ச பூதம் என்னும் பொருளிலும் பேய் பிசாசு என்ற பொருளிலும்  பூதம் வருகிறது.

PRABHUTAM- PROPERTY= BOOTY= WEALTH ப்ரபூதம் – செல்வம்

பூதி – விபூதி

VI BHUTI –

XXX

2-4-32

KAMBALAM – KAMBALI/BLANKET/ carpet

கம்பளம் – கம்பளி

Xxx

2-4-41

Uvaaya – weave

v/w=p

paavu is related to weaving

உவாய – நெசவு நெய்

வீவ் /ஆங்கிலம் = பாவு/ தமிழ்

xxx

2-4-54

From Varttika – Pundit – pandithah

வார்த்திகத்தில் ‘பண்டித’ என்ற சொல் வருகிறது

இன்று ஆங்கில அகராதியில் கூட Pundit வந்து

விட்டது .

Ghatra – udal, body  காத்ர = உடல்

Dida gaathram திடகாத்ரம்

Xxx

2-4-56

Samaaja – society, community

சமாஜ – சமூக

Samaaja – community

Xxx

2-4-70

Agastya – Kaundinya

Agastya is the guru of Tamil grammarian Tolkaappiyar.

Agastya was the first person to codify a grammar for Tamil language.

Agastya – Pandya connection was first written by Kalidasa in Raghuvamsa. So we have evidence from first century BCE (Kalidasa’s date according to Sanskrit scholars and according to the literary proof from Sangam literature (See my early20 + research articles on this topic)

Kaundinya gotra becomes important because of 2000 year old Sangam Tamil literature. Many Tamil poets have gotra as their  prefix and Kavuniyan / Kaundinyan is one of them. In the post Sangam age, Tiru Jnana Sambandar, the Boy Wonder of devotional period boasts hat he belongs to Kaundinya Gotra. The boy who lived 1400 years ago, was responsible for restoring Sanatana Dharma in Tamil Nadu.

அகஸ்த்ய, கவுண்டின்ய என்ற கோத்திரங்கள் இரண்டையும் ஒரே சூத்திரத்தில் பாணினி (2700 ஆண்டுகளுக்கு முன்னரே) குறிப்பிடுகிறார்.

தமிழுக்கு முதலாவது இலக்கணத்தை வகுத்தவர் அகஸ்தியர். முதல் முதலில் பாண்டியரையும், அகஸ்திய ரையும் இணைத்துப் பாடியவர் காளிதாசன். ரகு வம்சத்தில் வரும் இக்குறிப்பு 2200 பழமையானது பல சம்ஸ்க்ருத அறிஞர்கள் சொல்லுவது போல காளிதாசர் கி.மு.முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பதற்கு சங்கத் தமிழ் இலக்கியத்திலும் நிறைய சான்றுகள் உள (எனது 20க்கும் மேலான ஆராய்சசிக் கட்டுரைகளில் மேல்விவரம் காண்க)

சங்க காலத்தில் கவுண்டின்ய கோத்ர புலவர்கள் சிலர் இருந்தனர். அவர்கள் அனைவரும் கவுணியர் என்ற அடை  மொழியை சேர்த்துக் கொண்டு பெயர் அமைக்கிறார்கள், சங்க இலக்கியப்  புலவர் வரிசையில் மட்டுமின்றி பக்திப் பாடகர் வரிசையிலும் திரு ஞான சம்பந்தர்,  தன்னைக் கவுணியர் என பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்.

To be continued…………………………………

 tags- Agastya, Panini Tamil word-15

திருநள்ளாறு — ஆலயம் அறிவோம்! (Post 9083)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9083

Date uploaded in London – –28 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 27-12-2020 அன்று ஒளிபரப்பான உரை. இதை www.facebook.com/gnanamayam தளத்திலும் youtubeலும் எப்போதும் காணலாம்.

ஆலயம் அறிவோம்!     வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

நீலாஞ்சன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் |

ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைஸ்வரம் ||

மை போன்று கருத்தவன். சூரியனின் குமாரன். யமனின் தமயன். சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்தவன். மெதுவாகச் செல்பவன். அந்த சனீஸ்வரனை நமஸ்கரிக்கிறேன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது  சப்த விடங்க தலங்களுள் ஒன்றானதும், சனீஸ்வர வழிபாட்டுக்குச் சிறந்த தலமுமான திருநள்ளாறு ஆகும். சென்னையிலிருந்து 247 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது. காரைக்காலுக்கு மேற்கே 3 மைல் தூரத்தில் உள்ள தலம் இது. அரிசிலாற்றங்கரையின் மேல் அமைந்துள்ள இந்த தலத்தின் ஈஸ்வரர் – தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பாள் – பூண்முலைநாயகி.

ரதி தன் மணாளன் காமனை அடைந்த தலம் இதுவே.

இங்கு தான் நளச் சக்கரவர்த்தி சனீசுவர பகவானின் தோஷம் நீங்கப் பெற்றார்.

சனீஸ்வரர், முசுகுந்தன், நளச்சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏராளமானோரால் பூஜிக்கப்பட்ட தலம் இது.

நிடத நாட்டு மன்னனான நளன் சனீச்வரனின் பார்வை பட்டதால் தன் நாட்டை இழந்தான். மனைவி தமயந்தியையும் தன் மக்களையும் பிரிந்தான். கானகத்தில் கார்க்கோடகன் என்ற பாம்பு தீண்ட தன் அழகிய உருவத்தையும் இழந்து அயோத்தி மன்னனிடம் தேரோட்டியாகப் பணி புரியும் நிலையை அடைந்தான்.

பிறகு சனீஸ்வரனின் அருளால் தன் நாட்டை மீண்டும் அடைந்தான். சுய உருவை அடைந்து மனைவி குழந்தைகளுடன் க்ஷேமமுற வாழ்ந்தான். என்றாலும் எப்போதும் சித்தபிரமை பிடித்தது போல அவன் இருக்கவே, நாரத முனிவர் அவனிடம் தீர்த்த யாத்திரை செல்லுமாறு கூறினார்.

அதன்படியே பல புண்ணிய தலங்கள் சென்று வழிபட்டு தர்ப்பாரணயம் என்னும் தலத்தை அடைந்து அங்கு எழுந்தருளியுள்ள தர்பாரண்யேஸ்வரர் என்ற ஈஸ்வரனை வணங்கியதும் சனி அவனை விட்டு முற்றிலுமாக நீங்கினார். அங்கே ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதற்கு நள தீர்த்தம் என்று பெயரிட்டு இறைவனுக்கு வைகாசி மாதம் புனர்பூச நாளில் விழா நடத்தி முக்தி பெற்றான். இந்தத் தலமே இன்று திருநள்ளாறு என்று அழைக்கப்படுகின்றது.

இங்குள்ள நள தீர்த்தத்தில் நள்ளிரவு வரை பக்தர்கள் தீர்த்தமாடி சனி சம்பந்தமான அனைத்து தோஷங்களுக்கும் நிவர்த்தியைப் பெறுகின்றனர்.

ஈஸ்வரன் தனக்கு நிகரான பெருமையை இங்கு சனீஸ்வரனுக்கு அளித்துள்ளார். இங்கு சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டுத் தினமாகிறது. சனி பகவானுக்கு உகந்த எள்ளுப் பொட்டலத்தை சமர்ப்பித்து நல்லெண்ணெய விட்டு விளக்கேற்றி வைத்து சனி பகவானின் அருளை பக்தர்கள் தொன்று தொட்டு இங்கு பெற்று வருகின்றனர்.

சனிப் பெயர்ச்சி பெரிய திருவிழாவாக இத்தலத்தில் நடைபெறுகிறது. சனிப் பெயர்ச்சி தினத்தன்று ஆயிரக் கணக்கில் பக்தர்கள் இங்கு கூடுவது வழக்கம்.

திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்களையும் திருநாவுக்கரசர் இரு பதிகங்களையும் சுந்தரர் ஒரு பதிகத்தையும் இந்தத் தலத்தில் பாடி இறைவனை வழிபட்டுள்ளனர்.

‘நட்டுறு செறிவயல் நள்ளாறு’, ‘நண்ணிய குளிர் புனல் புகுதும் நள்ளாறு’ என்று சம்பந்தராலும் ‘செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாறு’ என்று சுந்தரராலும் பாடிப் புகழப் பெற்றதால் இந்த தலத்தின் அற்புதமான இயற்கை வனப்பை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இந்தத் தலத்தில் தான், சமணருடன் வாது புரிந்த திருஞானசம்பந்தர், தனது பதிகத்தைத் தீயில் இட, அது கருகாது பச்சைப் பதிகமாக இருந்தது. ஆக பச்சைப் பதிகம் பெற்ற சிறப்பைக் கொண்ட தலமும் இதுவே.

திருநள்ளாற்றுத் திருக்கோவில் நான்கு பக்கமும் தேரோடும் வீதிகள் கொண்டு விளங்குகிறது. இங்குள்ள இராஜ கோபுரம் ஐந்து நிலைகளை உடையது.

அறுபத்து மூன்று நாயன்மாருடன் தர்ப்பாரண்யர் இங்கு எழுந்தருளி இருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். அடுத்து தனி ஒரு மண்டபத்தில் நளனது திருவுருவமும் சிவலிங்கத் திருமேனியும் காட்சி அளிக்கின்றன.

சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கி விளங்க, அம்பிகை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்து விளங்குகின்றது.

சனீஸ்வர பகவான் உகந்து உறையும் தலம் இது என்பதால் சனி தோஷம் நீங்கவும், பாவம் போகவும், தீராப் பிணிகள் தீரவும், எடுத்த காரியம் எளிதில் நிறைவேறவும் சிவஞானம் பெறவும், வாக்கு வன்மை பெருகவும், பல சித்திகள் பெறவும் அனைவரும் நாட வேண்டிய தலம் திருநள்ளாறே என்பது சொல்லாமலேயே விளங்கும்.

ஏராளமான புராண வரலாறுகளைக் கொண்ட இந்தத் தலத்திற்கு திருத்தல புராணம் ஒன்று தனியே உண்டு. ஆதி புரி என்றும், தர்ப்பாரண்யம், நகவிடங்கபுரம், நளேஸ்வரம் என்றும் பல சிறப்புப் பெயர்களைக் கொண்ட திருநள்ளாறு அன்னதானம் செய்ய உகந்த தலமும் ஆகும்.

நள்ளாற்றுப் பெருமானை வணங்கி விட்டு வந்தவுடன் வடபால் எழுந்தருளியுள்ள சண்டேஸ்வரை வணங்கி வெளியே வந்தால் சுவாமி சந்நிதிக்கு வலது பக்கத்தில் இந்தத் தலத்தின் சிறப்புத் தெய்வமான சனீஸ்வரர் கட்டைக் கோபுரச் சுவரில் உள்ள சிறிய மண்டபத்தில் காட்சி தருகிறார். இந்த தலத்தின் அனுக்ரஹ மூர்த்தி சனி பகவான் என்பதால் இங்கு எப்போதும் வழிபாடுகளும் தில தீபங்கள் ஏற்றுவதும் நிகழ்ந்த வண்ணம் இருக்கும்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி தோஷ நிவர்த்தி பெறும் சனீஸ்வர பகவான் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.   

அப்பர் பிரானின் அருள் வாக்கு – “நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே” – நன்றி. வணக்கம்.

tags- திருநள்ளாறு ,ஆலயம் அறிவோம்

–subham–

ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 2 (Post.9082)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9082

Date uploaded in London – –28 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 2

ச.நாகராஜன்

ஹிந்து மதம் பூகோள ரீதியாக ஒரு குறிப்பிட்ட எல்லையில் பிரதானமாக இருப்பதற்கு இரு காரணங்கள் உள்ளன.

முதலாவது காரணம் : பாரம்பரியமாகவே ஹிந்துமதம் பிறரை  மதம் மாற்றும் ஒரு மதமல்ல. ஹிந்துக்கள் மற்ற மதத்தைப் பின்பற்றுபவரை தங்கள் மதத்திற்கு சாதாரணமாக மாற்றுவதே இல்லை. கட்டாய மத மாற்றம் என்பது ஹிந்துக்களிடம் அறவே இல்லை. ஏன், அமைதியான முறையில் கூட அவர்கள் பிறமதத்தினரை தங்கள் மதத்திற்கு வருமாறு குறிப்பிடத்தக்க பெரிய அளவில் கூப்பிட்டதும் இல்லை. இதற்கு நேர் மாறாக செமிடிக் மதங்களான கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் செயல்படுகின்றன.

இரண்டாவது காரணம் :  சென்ற சில நூற்றாண்டுகளில் பிற நாடுகளில் வாழும் ஹிந்துக்கள் மதமாற்றத்தினாலோ அல்லது படுகொலைகளினாலோ அல்லது கொடுமைப்படுத்தப்பட்டதால் இந்தியாவுக்கு குடியிருக்க இடம் பெயர்வினலோ அல்லது அடுத்த மதத்தில் நிர்பந்தமாக சேர வேண்டிய காரணத்தினாலோ  பெரிய பின்னடைவை அடைந்து விட்டனர்.

என்றாலும் கூட ஹிந்து மதத்தின் சில அடிப்படையான கொள்கைகள் ஹிந்து அல்லாதோரால முழு மனதுடன் உலகெங்கும் ஏற்கப்பட்டுள்ளன என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் வாழ்பவர்களில் நான்கில் ஒருவர் மறு ஜென்மம் என்பதை நம்புகின்றனர். ஹிந்து- புத்தமதத்தின் ஆன்மீக வழியான யோகா கடந்த பல காலமாகவே மேலை நாடுகளில் பிரசித்தம் அடைந்து வந்திருக்கிறது. சில சர்ச்சுகளினால் இதற்கு அங்கீகாரமும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹிந்து சமூகத்தின் வரலாறு ரீதியான இறக்கம்

முன்பே கூறியது போல ஹிந்து மதம் கடந்த பல நூற்றாண்டுகளில் மிகவும் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்ததது. இதன் காரணமாக ஏராளமான ஹிந்து சமூகங்கள் இடம் பெயர்தலுக்கு உள்ளாயின, சில அழிந்தே போயின. கீழே உலகின் பல பாகங்களில் உள்ள ஹிந்து சமூகத்தினர் பற்றிய ஒரு தொகுப்பு தரப்படுகிறது. (சுரிநாம், பிஜி போன்ற இடங்களில்  ஹிந்து சமூகங்கள் சந்திக்க நேர்ந்த அவலங்கள் இந்த ஆய்வுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்பதால் இதில் தரப்படவில்லை)

  1. சிங்கியாங் (சீனா) (Sinkiang, China)

ஹிந்து நூல்களில் இந்த பிரதேசம் ‘உத்தர குரு’ என்று குறிப்பிடப்படுகிறது. மிகப் பழங்காலத்தில் தோச்சாரியர் (Tocharians)

      என்று அழைக்கப்பட்ட ஆரியர் இங்கு வசித்து வந்தனர். கிழக்கிலிருந்து முதலில் மங்கோலியர்களின் தாக்குதலுக்கும் பின்னர் அராபியரின் தாக்குதலுக்கும் ஆளாகும்

முன்னர்,தோச்சாரியர்கள் அபிதம்ம புத்தமதத்தையும் ஹிந்துக்களின் சைவப் பிரிவையும் பின்பற்றி வந்தனர். இந்த தாக்குதலின் விளைவாக படையெடுத்து வந்தோர் அவர்களைத் தங்களுடன் சேர்த்து கொண்டதால் தோச்சாரியர்களே இல்லாமல் போய்விட்டனர். இந்திய பாரம்பரிய பழக்கத்தின் படி சாக த்வீபமும் காம்போஜ பிராமணர்களும் பிகானீர், காஜியாபாத் மற்றும் வட இந்தியாவின் இதர பகுதிகள் உள்ளிட்டவற்றில் வசித்து வந்தனர். இந்தியாவிற்கு வந்த தோச்சாரியர்களின் வழித்தோன்றல்களே இவர்கள்.

  • மத்திய கிழக்கு (The Middle East)

பண்டைய ஹிந்து நூல்கள் காஸ்பியன் கடலை கஷ்யப சாகர் எனக் குறிப்பிடுகின்றன. முஸ்லீம்களால் பெரிதும் மதிக்கப்படும் மெக்காவில், காபாவில் உள்ள கருங்கல் ஒரு சிவலிங்கம் எனக் குறிப்பிடப்படுகிறது. (சிவனைக் குறிக்கும் உருவம் சிவலிங்கம் என பவிஷ்ய புராணம் குறிப்பிடுகிறது). ஹிந்து வியாபாரிகள் அந்தப் பகுதிகளுக்கு வியாபார நிமித்தமாக அடிக்கடி சென்றதை இது எடுத்துக் காட்டுகிறது. இரானின் கடற்கரை பகுதி, பாகு (அஜர்பைஜன்- Baku – Azebaizan), இராக் ஆகிய இடங்களில் சிதிலமடைந்த ஹிந்து கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புனிதர் க்ரெகாரி (St Gregory) யின் தலைமையில் ஒரு வெறி பிடித்த கும்பல் இப்போது இராக் என்று சொல்லப்படும் இடத்தில் வாழ்ந்த சிறிய அளவில் இருந்த ஹிந்து வணிகக் கூட்டத்தினரை படுகொலை செய்ததையும் கோவில்களை இடித்து அங்கிருந்த சிலைகளை நொறுக்கியதையும் வரலாற்று பதிவேடுகள் குறிப்பிடுகினறன.

                                 ***               தொடரும்

ஆதாரம்,  : Critical Podium Dewanand writes on March, 25,2009 under the caption ‘Preserving Hinduisam – Sanatan Dharma’ – Preserving Hinduism as a world Religion down the ages. Hindus around the World, as follows (http://www.shopumust.com/hindus)

Truth, Kolkata Weekly Vol 88 No 20 Dated 4-12-2020

hindu census-2

PLEASE JOIN US TODAY MONDAY 28-12-2020 TO LISTEN TO KARTIKEYA SIVAM ON ARUDRA DARSHAN

PLEASE JOIN US TODAY MONDAY 28-12-2020 TO LISTEN TO KARTIKEYA SIVAM ON ARUDRA DARSHAN

TODAY’S MENU ON ‘GNANAMAYAM TABLE

DECEMBER 28, 2020

PRAYER- TIRUVEMPAVAI

WORLD HINDU NEWS ROUNDUP………..

IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN

IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

TALK ON ARUDRA DARSHAN BY SRI KARTIKEYA SIVAM, SAIVITE SCHOLAR

LAKSHMI RAMESH-5 OR TIRUPPAVAI —-thuumani maadathu

BENGALURU NAGARAJAN TALKS ON MYSTRIOUS POWERS OF PYRAMIDS

MRS RANJANI DASARATHY SINGING —-sabaapathikku keertani

Chennai KATTUKUTY SRINIVASAN TALKS ON PLANET BUDHAN/MERCURY IN NAVAGRAHA SERIES

MRS DEEPTHA MAHADEV SINGING FROM U S A

MISS LAYASHRI KALYANASUNDARAM READING AN  ARTICLE

DR NARAYANAN KANNAN FROM CHENNAI CONTINUES HIS TALK ON ALWARS

STAY WITH US FOR AROUND 70 MINUTES

PRODUCER – LONDON SWAMINATHAN

XXX

EVERY SUNDAY FOR TAMIL

EVERY MONDAY FOR HINDUISM

XXX

SAME TIME ONE PM LONDON TIME.

6-30 PM INDIAN TIME

XXX

WHERE ?  AT FACEBOOK.COM/GNANAMAYAM

Facebook.com/gnanamayam AND Via Zoom

XXX

V R HERE EVERY SUNDAY, EVERY MONDAY; PLEASE JOIN US LIVE VIA FACEBOOK AND ZOOM

IF U MISS OUR LIVE BROADCAST, VISIT OUR SITE AFTER ONE OR TWO HOURS ON THE SAME DAY, U CAN WATCH US.

SAME PLACE, SAME TIME ; EVERY SUNDAY, EVERY MONDAY

THANKS FOR UR GREAT SUPPORT.

XXX

WHAT IS NEW?

INTERNATIONAL BHARATI  CENTENARY MEMORIAL COMMITTEE IS BEING FORMED; PLEASE JOIN US.

54 BHARATI SONGS RELEASED IN NEW RAGAS DURING BHARATI MEMORIAL CENTENARY YEAR 2020- 2021.

XXXX

JANUARY 2, 3, 2021

GLOBAL RUDRA MANTRA CHANTING

FOR THE WELFARE OF HUMANITY

STARTING FROM NEW ZEALAND AND FINISHING IN U S A

PLEASE DON’T MISS SWAMI OMKARANANDA’S BEAUTIFUL SPEECH (13 MINUTES-RECORDED) AND KANCHI SHANKARACHARYA’S LIVE TALK ON THE DAYS.

WISH YOU ALL A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR.

–SUBHAM–

TAGS – publicity281220

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO – Part 14 (Post.9081)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9081

Date uploaded in London – –27 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON  NINTH DECEMBER 2020.

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -14

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .

XXX

LIKE I MENTIONED IN THE VERY FIRST PART, THESE WORDS ARE IN PATANJALI’S ‘MAHA BHASHYA’ COMMENTARY OR, NOTES OR GLOSS OF KAATYAAYANA VARARUCHIS ‘VAARTTIKA’. SO, THEY MAY BE FROM 2200- 2700 YEAR OLD PERIOD.

BUT PATANJALI COULDN’T HAVE USED THEM SUDDENLY IN SECOND CENTURY BCE. SO, THEY MUST HAVE EXISTED AT LEAST 200 OR 300 YEARS BEFORE HIM.

XXX

PANINI’S SUTRA CONTINUED……………

2-4-12

VRIHI OR VREEHE – RICE

BOTANICAL NAME ORYZA SATIVA

THIS ORYZA IN ANCIENT GREEK WRITINGS . It went to them from Latin writings

AS USUAL HALF BAKED SCHOLARS JUMPED TO THE CONCLUSION IT WENT FROM TAMIL.

BUT ALL FOREIGNERS ARGUE THAT TAMIL -GREEKS CONTACT HAPPENED ONLY AFTER  ALEXANDER’S INVASION.

WE HAVE 6 REFERENCES IN SANGAM TAMIL LITERATURE FOR ‘YAVANA’ AND ALL THOSE words REFER TO ROMANS AND NOT GREEKS.

SO, WHAT IS MY OPINION?

VREEHE/SANSKRIT – ARISI/TAMIL AND ORYZA/LATIN-GREEK ARE COMING FROM THE SAME ROOT.

V =A, REE-RI, HE= SI

வ்ரீஹி / சம்ஸ்க்ருதம்

ரைஸ் /ஆங்கிலம்

ஒரைசா – லத்தின்/கிரேக்கம்

வ் =அ , ரீ =ரி , ஹி =சி = அ ரி சி

‘சி’ந்து என்பது மேலை தேசத்தில் ‘ஹி’ந்து ஆனது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்

H IS FROM S IS SEEN IN SO MANY WORDS INCLUDING HINDU= FROM SINDHU.

SO ARISI IS PRONOUNCED VREEHE OR VICEVERSA

ORYZA IS FROM ARISI OR VREEEHE NEED NOT BE EXPLAINED.

xxx

DADHI – THAYIR IN TAMIL

TITTIRI – THATHTHAI FOR KILI/PARROT IN TAMIL

THATHTHI THATHTHI- HOP AND HOP

TAITTIRIYA SAMHITA , UPNISHAD ARE ALL SEEN FROM YAJUR VEDIC DAYS, I.E.BEFORE 1000 BCE

ததி = தயிர் ;

தித்திரி – தத்தை/ கிளி

தத்தி தத்திப் போகும் கிளி

தைத்ரிய சம்ஹிதை, தைத்ரிய உபநிஷத் என்பன 3000 ஆண்டு பழமையான சொற்கள்

xxx

ADHAROTTARAM – DOWN AND UP

IT IS A VERY INTERESTING WORD; IT GIVES LOT OF INFORMATION . UTTARA  IS UP AND UTTARA IS NORTH.

IF YOU LOOK  AT ANY MAP, THE TOP IS NORTH!

SO, DOWN IS SOUTH. IN THE OLDEN DAYS PEOPLE WHO TRAVELLED TOWARDS SOUTH IN SHIPS SAID THEY GO TO PAATAALA LOKA. ATALA, PATALA ARE TWO OF THE SEVEN WORLDS UNDER. THIS ACTUALLY MEANT TRAVEL TOWARDS ANY OCATION LYING DOWN FOR INDIANS. WHEN THEY SAID MAAHA BALI WAS PUSHED DOWNWARDS AND HE WENT TO PATAALA LOKA, BUT ALLOWED TO COME TO INDIA ONCE DURING ONAM/SRAVANA FESTIVAL  ACTUALLY MEANT—MAHA BALI WAS ASKED TO LEAVE HIS KINGDOM AND WAS BANISHED TO BALI IN INDONESIA OR SOME PLACE BEYOND.

FOR TAMILS, DOWN AND UP MEANT EAST AND WEST.

NORTHERNERS CANT TRAVEL BEYOND HIMALAYAS IN THE NORTH. SOUTHERNERS CANT TRAVEL WEST BEYOND WESTERN GHATS WICH WAS EXTENDED FOR 1000 MILES.

SO UP = NORTH, WEST AND DOWN= SOUTH AND EAST.

THIS IS VERY TRUE EVEN TODAY. ENGLISH PEOPLE CALLED CERTAIN COUNTRIES FAR EAST AND CERTAIN OTHERS AS MIDDLE EAST AND SOME OTHERS AS NEAR EAST. FOR WHOM? FOR THE HALF BAKED WRITERS. FOR A JAPANESE JAPAN IS NOT FAR EAST. THEY MEASURED EVERYTHING WITH THEIR JAUNDICED EYES AND CALLED SOME AS THIRD WORLD

அதரோத்தரம் = கீழும் மேலும்

உத்தர – வடக்கு. எல்லா மேப்புகளிலும் வடக்கு என்பது மேல் பகுதி

தமிழர்களுக்கு

கீழும் மேலும் என்பது கிழக்கு, மேற்கு!

மேல் திசை என்பது மலையாள மேற்குத் தொடர்ச்ச்சி மழைப் பிரதேசம்.

வெள்ளைக்கார ர்களும் தங்களுடைய நாட்டை மையமாக வைத்து தீர்க்கரேகை, அட்சரேகை என்று பூமியைப்  பிரித்தனர் . தூரக்கிழக்கு, மையக்கிழக்கு எபிரெல்லாம் பெயர் சூட்டினர் .

ஆயினும் உத்தர என்பது மேலேயுள்ள  திசை என்று சொன்ன வழக்கை எல்லா தேசப்  படங்களிலும் காணலாம்

மஹா பலி  பாதாள உலகம் சென்றார் என்றால் கடலில் கீழ்திசைப் பயணம் செய்து பாலி (Bali in Indonesia) முதலிய தீவுக்குச் சென்றார் என்றே பொருள். ஆண்டுதோறும் ஒணத்தின் போது திரும்பி வருவார்.

XXX

Sutra 2-4-13

Jivita – Marana

Maranam is used in many Indian languages including Tamil

Jeeva – live

Marana – mrtyu, Mortal ஜீவ , மரண

Kaama – used in lots of Tirukkural and Sangam poems

Kaama – amorous காம,

Xxx

Sutra 2-4-14

Uluukala – ulakkai in Tamil உலூகல – உலக்கை

Aadhi – first even in Kural 1, we come across it ஆதி

Xxx

Sutra 2-4-15

Ushtra – uthadu in tamil; lip

Danta /tooth – dental, dentist

உஷ்ட்ர= உதடு, தந்த/பல் – டென்டல், டென்டிஸ்ட்

Xxxx

2-4-18

Dina – day,

Most of the newspapers, particularly in Tamil nadu has this prefix Dina to say daily

Dina mani, Dina malar, Dinakaran, Dina thanthi

தின மணி, தின மலர், தின கரன் , தினத் தந்தி

Xxx

2-4-22

Chaayaa – shadow சாயா /நிழல்

Xxx

2-4-23

Raajaa – royal, regal, regent, regnal (Raagna in skt.) , ராஜ ராயல் ராக்ஞ , ராணி

J = y

Sabhaa – Avai in tamil because Tolkaappiam banned ‘Sa’ as initial letter.

Sabha – where people have gathered. So even orphanage is  called Anaadha sabhaa ஸபா = அவை

Xxx

2-4-26

Mayura kukkuda

Mayura – Mayil in tamil

Kukkuda – cock

Kuk kuu enrathu koli (Kuruntokai)- tamils identified cock with the sound kukkuu(cock)

குக்கூ = காக்/ஆங்கிலம்

மயூர = மயில்

To be continued……………………………

 tags- Panini Tamil words-14

ஹிந்துக்களின் எண்ணிக்கை! -1 (Post No.9080)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9080

Date uploaded in London – –27 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 1

ச.நாகராஜன்

உலகெங்கிலும் உள்ள ஹிந்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

ஹிந்துக்களின் எண்ணிக்கை இன்று 85 கோடி என்ற அளவை எட்டியுள்ளது. இதன்படி உலகில் உள்ள ஜனத்தொகையில் ஒவ்வொரு ஏழாவது மனிதனும் ஹிந்து! இது உலகில் ஹிந்து மதத்தை மூன்றாவது பெரிய மதம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. கிறிஸ்தவ மதம் முதலிடத்தை வகிக்கிறது  – கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை  200 கோடி. அடுத்து இரண்டாவது இடத்தை வகிக்கும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 130 கோடி. இது ஹிந்து மதம் உலகளாவிய மதம் என்பதைக் காட்டுகிறது.

என்றாலும் கூட பூகோள ரீதியாகப் பார்த்தால் ஹிந்து மதம் பரவியிருப்பது  ஒரு போலித் தோற்றத்தை அளிக்கிறது (ஆதாரம் : என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா)

நாடும் அதில் ஹிந்துக்களின் ஜனத்தொகை கீழே தரப்பட்டுள்ளது.

இந்தியா : 828 லட்சம்

நேபாளம் : 89.19 லட்சம்

ஸ்ரீ லங்கா : 152.67 லட்சம்

பங்களா தேஷ் : 111.6 லட்சம்

பூடான் : 20 லட்சம்

பாகிஸ்தான் : 13.22 லட்சம்

மலாசியா : 71.12 லட்சம்

இந்தோனேஷியா : 23.38 லட்சம்

சிங்கப்பூர் : 60.09 லட்சம்

வியட்நாம் : 0.5 லட்சம்

ஹாங்காங் : 10.004 லட்சத்திற்கும் குறைவு

பர்மா : 20.024 லட்சம்

தென்னாப்பிரிக்கா : 207 லட்சம்

மரிஷியஸ் : 50.60 லட்சம்

குவைத், ஓமன், யுனைடட் அராப் எமிரேட்ஸ் : 150.17 லட்சம்

கென்யா, உகாண்டா : 10.02 லட்சத்திற்கும் குறைவு

பிஜி : 41.03 லட்சம்

டிரினிடாட் அண்ட் டுபாகோ : 30.26 லட்சம்

கயானா : 29.38 லட்சம்

சுரினாம் : 30.31 லட்சம்

ஜமைக்கா : 30.3 லட்சம்

கனடா : 5.022 லட்சம்

அமெரிக்கா : 4.1 லட்சம்

இங்கிலாந்து : 5.04 லட்சம்

நெதர்லாந்து : 10.16 லட்சம்

இதிலிருந்து 90 சதவிகித ஹிந்துக்கள் இந்தியாவிலும் சுமார் 9.8% ஹிந்துக்கள் தென்னாசியாவிலும் வசிப்பது தெளிவாகிறது. மேலும், தென்னாசியாவை விட்டு வெளியில் உள்ள நாடுகளில் வசிப்போர் இந்தியாவிலிருந்தும் மற்ற நாடுகளிலிருந்து வெளியேறியோர் என்பதும் தெரிகிறது.

 தென்னாசியா, வியட்நாம். இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் உள்ள ஹிந்துக்களே உண்மையில் தங்கள் இடத்தை பூர்விகமாகச் சேர்ந்தவர்களாகும்.

மாறாக, கிறிஸ்தவம் பூமியின் மேலைப் பகுதியையும், ஐரோப்பா, ஓசியானியா, ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் அரை பாகம் ஆகிய பகுதிகளில் பரவியுள்ளது. இஸ்லாமோ வட ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா ஆகியவற்றோடு ஐரோப்பாவில் உள்ள அல்பேனியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், மாலத்தீவுகள், தென்னாசியாவில் பங்களாதேஷ், மலேசியா,ப்ரூனி,  மற்றும் தூரக்கிழக்கில் இந்தோனேஷியா ஆகிய இடங்களில் பரவியுள்ளது.

ஹிந்து மதம் பூகோள ரீதியாக ஒரு குறிப்பிட்ட எல்லையில் பிரதானமாக இருப்பதற்கு இரு காரணங்கள் உள்ளன.

அவை என்ன?

அடுத்த கட்டுரையில் பார்ப்போம்!

                     ***               தொடரும்

ஆதாரம் : Critical Podium Dewanand writes on March, 25,2009 under the caption ‘Preserving Hinduisam – Sanatan Dharma’ – Preserving Hinduism as a world Religion down the ages. Hindus around the World, as follows (http://www.shopumust.com/hindus)

Truth, Kolkata Weekly Vol 88 No 20 Dated 4-12-2020

tags– ஹிந்து,  எண்ணிக்கை, Hindu Census

PLEASE JOIN US TODAY SUNDAY 27-12-2020 TO LISTEN TO VIOLINIST SHREYA DEVANATH

PLEASE JOIN US TODAY SUNDAY 27-12-2020 TO LISTEN TO VIOLINIST SHREYA DEVANATH

TODAY’S MENU ON ‘THAMIL MUZAKKAM’ (Tamil Thunder) BROADCAST FROM LONDON (PART OF GNANAMAYAM CHANNEL)

DECEMBER  27,2020

PRAYER-  MISS LAYASHRI KALYANA SUNDARAM

MRS BRHANNAYAKI SATHYNARAYANAN REPORTS ON A NEW TEMPLE

THIRUPPUGAZ  RECITATION BY MRS JAYANTHI SUNDAR AND GROUP

VIOLINIST SHREYA DEVANATH’S  INTERVIEW- FROM CHENNAI

INTRODUCED BY MRS HARINI RAGHU OF LONDON

MRS RANJANI DASARATHY SINGING  – Eppatip Paadinaro

MISS BHANUKA LAMBODARAN,  READING A TAMIL ARTICLE –

MRS LAKSHMI RAMESH  SINGING  BHARATI SONG , vellaith thamarai

FROM DUBAI, SRI  VIDHYA – TELLING SECOND STORY  (episode 2)  FROM BHARATIYAR

STAY WITH US FOR AROUND 70 MINUTES

PRODUCER – LONDON SWAMINATHAN

XXX

— CO PRODUCED BY MRS VAISHNAVI ANAND AND SRI KALYANASUNDARA SIVACHARYA

EVERY SUNDAY FOR TAMIL

EVERY MONDAY FOR HINDUISM

XXX

SAME TIME ONE PM LONDON TIME.

6-30 PM INDIAN TIME

XXX

WHERE ?  AT FACEBOOK.COM/GNANAMAYAM

Facebook.com/gnanamayam AND Via Zoom

XXX

V R HERE EVERY SUNDAY, EVERY MONDAY; PLEASE JOIN US LIVE VIA FACEBOOK AND ZOOM

IF U MISS OUR LIVE BROADCAST, VISIT OUR SITE AFTER ONE OR TWO HOURS ON THE SAME DAY, U CAN WATCH US.

SAME PLACE, SAME TIME ; EVERY SUNDAY, EVERY MONDAY

THANKS FOR UR GREAT SUPPORT.

XXX

WHAT IS NEW?

INTERNATIONAL BHARATI  CENTENARY MEMORIAL COMMITTEE IS BEING FORMED; PLEASE JOIN US.

54 BHARATI SONGS RELEASED IN NEW RAGAS DURING BHARATI MEMORIAL CENTENARY YEAR 2020- 2021.

XXXX

JANUARY 2, 3, 2021

GLOBAL RUDRA MANTRA CHANTING

FOR THE WELFARE OF HUMANITY

STARTING FROM NEW ZEALAND AND FINISHING IN U S A

PLEASE DON’T MISS SWAMI OMKARANANDA’S BEAUTIFUL SPEECH (13 MINUTES-RECORDED) AND KANCHI SHANKARACHARYA’S LIVE TALK ON THE DAYS.

WISH YOU ALL A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR.

–SUBHAM–

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO – 13 (Post No.9079)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9079

Date uploaded in London – –26 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON  NINTH DECEMBER 2020.

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -13

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .

XXX

LIKE I MENTIONED IN THE VERY FIRST PART, THESE WORDS ARE IN PATANJALI’S ‘MAHA BHASHYA’ COMMENTARY OR, NOTES OR GLOSS OF KAATYAAYANA VARARUCHIS ‘VAARTTIKA’. SO, THEY MAY BE FROM 2200- 2700 YEAR OLD PERIOD.

BUT PATANJALI COULDN’T HAVE USED THEM SUDDENLY IN SECOND CENTURY BCE. SO, THEY MUST HAVE EXISTED AT LEAST 200 OR 300 YEARS BEFORE HIM.

XXX

PANINI’S SUTRA CONTINUED……………

2-3-56

UJJASAYATI- UTHAI உஜ்ஜசயதி = உதை

PINASHTI – PODI AAKKU பினஷ்ட்டி = பொடி செய்

PINASHTI – ALSO MEANS- THIEVES ARE  ‘PUNISHED/THRASHED/FINISHED’ நசுக்கப்பட்டனர்

BEATEN BLUE AND BLACK

KRAADHA- CRUSH க்ராத- க்ரஷ்

XXXX

2-3-57

PANATHI – PANAYAM VAI IN TAMIL; BET, GAMBLE

பணதி – பணயம் வை

PANATHI- BOUGHT WITH MONEY பணத்துக்கு வாங்கியது

PANA= MONEY; P=M

பண – ஆங்கிலத்தில் மணி ; ப=ம

PANAAYATE- PRAISED போற்று, புகழ்பாடு

IN TAMIL ALSO PAANAR PRAISE KINGS, PHILANTHROPHISTS AND LORDS TO GET MONEY

பாணர் இசைப்பது பண் =பாட்டு= புகழ்ச்சி = ராகம்

PAN/ VERB IN TAMIL – DO, COMPOSE POEMS, SING, RAGA/TUNE

பண் = பாணர் = பாட்டு=ராகம்= புகழ் துதி ; பண்ணு = செய்

XXX

2-3-64

PURAH PINATHI புரஹ  பிணதி

PURAS FINISHED OR DESTROYED

கோட்டை உள்ள ஊர்கள் நொறுக்கப்பட்டன

PINATHI- FINISHED

PURA – PUR, UUR புர – ஊர் ; ஜெய்ப்பூர் , நாக்பூர் , பண்டரி புரம்

XXX

2-3-66

ROCHATE- LIKE

ரோசதே – பிடிக்கிறது

ருசி

R=L

RUCHI – TASTE

XXX

2-3-66

ODHANA- FOOD ஓதன

XXX

2-3-67

MAYUURA – MAYIL மயில்

XXX

2-3-69

KRTAM – CREATED.DONE க்ருதம்

செய்யப்பட்டது

XXX

2-3-72

UPAMAAA= UVAMAI IN TOLKAAPPIAM

P=V

TULYA – TULAA RAASI; THULYAMAAKA

TULAI – BALANCE

உபமா-  உவமை

ப=வ

XXX

2-3-73

MADRAM- BADRAM – HAPPINESS

மத்ரம் = பத்ரம்

M=B

HITA – ITHAMAANA இதமான

SUKAM – USED IN ALL INDUAN LANGUAGES சுகம்

AYUSH= AGE ஆயுஸ் – வயஸ்

XXX

2-4-2

SENA – ARMY

SENA= TAANAI IN TAMIL சேனை= தானை

SI MILAR TO SION=TION IN ENGLISH

ஷன்

TAMIL AND ENGLISH ARE SIMILAR IN T=S

சேன

SEN ENDING NAME ARE FOUND IN THE KINGS OF

SUMERIAN KINGS WHO RULED 4500 YEARS AGO

NARAM SIN  MAY BE NARAM SENA, NARAM SIMHA, NARAM CHANDRA

நரம் சின் , சுமேரிய மன்னன் , 4500 ஆண்டுக்கு முந்தைய மன்னன் .

நரம் சேன  அல்லது நர சிம்ம, அல்லது  நர சந்திர

PLEASE SEE PART 12 FOR THE SUMERIAN KING LIST

PANAVAM, MIRUTHANGAM – PABAVAM IS IN TAMIL WITHOUT CHANGE

XXX

2-4-7

NAGAR- NAGARAM, NAAGAREEKAM IN TAMIL

நகர், கிராமம்

GRAMAM – IN TAMIL

IN THE WEST, HAM, GHAM, HAMLET , EASTHAMஈஸ்ட் ஹேம் /லண்டன், பர்மிங்ஹாம் BIRMINGHAM, NOTTINGHAM

ஹேம்லெட் ; சாலே (ட் )= சிறு  குடிசை , அவை உள்ள சிற்றுர் /ஆங்கிலத்தில்

XXX

2-4-8

MASAKA – MOSQUITO மஸக – மஸ் கிட்டோ/ஆங்கிலத்தில் = கொசு

XX

2-4-9

MUUSAKA= MOUSE முஸக /ஆங்கிலத்தில் = மவுஸ் = எலி

VIRODHAM USED IN TAMIL விரோதம் ; இன்று வரை தமிழர்கள் பயன்படுத்தும் சொல்.

KAKA – USED IN INDIAN LANGUAGES காகம்

உலூக – அவ்ல் OWL  /ஆங்கிலத்தில்

OWL- ULUUKA

2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி எழுதிய மாணவர் , விரோதம், காகம் , நகர், கிராமம், மனது  முதலிய நுற்றுக்கணக்கான சொற்களை நாம் இன்னும் அன்றாடத் தமிழில் புழங்கி வருகிறோம்.!

இதே போல உலகின் மிகப்பழைய நூலான  ரிக் வேதத்திலுள்ள நுற்றுக்கணக்கான சொற்களையும்  நாம் இன்னும் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம்.!

XXX

2-4-10

TAKSHA – THACHCHAN தச்சன் , TECH NOLOGY , TECHNITIAN டெக்னீஷியன்

தச் சன் – கல் தச்சன்  மரத் தச்சன்

XXX

2-4-11

ASVA – HORSE, ASS அஸ்வ , ஆஸ் /கழுதை / ஆங்கிலத்தில்

GO – COW கோ – கவ்  / ஆங்கிலத்தில்

TO BE CONTINUED…………………………………..

TAMIL WORDS-13, PANINI,

உமாபதி சிவம் இயற்றிய தமிழ், சம்ஸ்கிருத நூல்கள்! (Post.9078)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9078

Date uploaded in London – –26 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உமாபதி சிவம் – 4

இயற்றியுள்ள தமிழ் மட்டும் சம்ஸ்கிருத நூல்கள்!

ச.நாகராஜன்

ஸ்ரீ உமாபதி சிவாசாரியர் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் சிறந்த விற்பன்னர்.

தமிழ் நூல்கள்

சைவ சித்தாந்தத்தை விளக்கும் மெய்கண்ட சாத்திர நூல்கள் மொத்தம் 14.

அவற்றில் உமாபதி சிவாசாரியர் அருளிய நூல்கள் 8.

அவையாவன :-

சிவப்பிரகாசம்

திருவருட்பயன்

வினாவெண்பா

போற்றிப் பஃறொடை

உண்மை நெறி விளக்கம்

கொடிக்கவி

நெஞ்சு விடு தூது

சங்கற்ப நிராகரணம்

மெய்கண்ட சாத்திர நூல்கள் தவிர பல்வேறு நூல்களையும் இவர் இயற்றியுள்ளார்.

சேக்கிழார் பெருமான் அருளிச் செய்த பெரிய புராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணத்தைச் சுருக்கி திருத்தொண்டர் புராணசாரம் என்ற நூலை இவர் யாத்துள்ளார்.

அடுத்து சேக்கிழாரின் வரலாற்றை சேக்கிழார் புராணம் என்ற நூலில் கூறியுள்ளார்.

அடுத்து சிதம்பரம் கோயிலின் வரலாற்றை அற்புதமாக கோயிற் புராணம் என்று எழுதியுள்ளார். இதில் மொத்தம் 100 பாடல்கள் உள்ளன.

மேலும் திருமுறை கண்ட புராணம்,திருத்தொண்டர் புராண வரலாறு, திருப்பதிகக் கோவை, தேவார அருள்முறைத் திரட்டு, ஞான ஆசார சாத்திர பஞ்சகம் உள்ளிட்ட நூல்களையும் இவர் இயற்றி அருளியுள்ளார்.

சம்ஸ்கிருத நூல்கள்

சம்ஸ்கிருத விற்பன்னர் என்பதால் இவரது சம்ஸ்கிருத நூல்களும் பெரும் புகழைப் பெற்றுள்ளன.

பௌஷ்கராகமத்திக்குப் பௌஷ்கர சங்கிதா பாஷ்யம் என்ற பெயரில் விளக்கவுரையை இவர் எழுதியுள்ளார்.

தில்லையில் நடனமாடும் நடராஜரின் தாண்டவத்தைக் கண்டு பிரமித்து அவர் நடராஜ த்வனி மந்த்ர ஸ்தவம் என்ற நூலையும் குஞ்சிதாக்ரி ஸ்தவம் என்ற நூலையும் படைத்துள்ளார்.

ஸ்ரீ உமாபதி சிவாசாரியார்  காலம்

சங்கற்ப நிராகரணம் என்ற இவரது நூலின் அடிப்படையில் இவரது காலம் பதினான்காம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிறதி.

ஸ்ரீ உமாபதி சிவாசாரியார் ஸ்துதி

இவ்வளவு பெருமை வாய்ந்த உமாபதி சிவாசாரியரைப் போற்றித் துதி செய்யும் துதிப்பாடல் இது:-

அடியார்க் கெளியன் எனத்தில்லை

    யண்ணல் அருளுந் திருமுகத்தின்

படியே பெற்றான் சாம்பாற்குப்

    பரம முத்தி அப்பொழுதே

உடலுங் கரைவுற் றடைந்திடுவான்

   உயர்தீக் கையினை அருள் நோக்காற்

கடிதிற் புரிகொற் றங்குடியார்

    கமல மலரின் கழல் போற்றி.

லண்டன் ஸ்ரீ கல்யாணசுந்தர சிவாசாரியாரின் அரும் பணி!

லண்டனில் இன்று வேத அடிப்படையிலான அனைத்து நல்ல காரியங்களையும் முன்னிட்டு நடத்துபவர் லண்டன் ஸ்ரீ கல்யாணசுந்தர சிவாசாரியார்.

கந்தபுராண பாராயணம், அதைப் பதித்தல் உள்ளிட்ட அரும் பணியை அவர் ஆற்றி அனைவராலும் மதிக்கப்படுபவர் அவர்.

உமாபதி சிவாசாரியாரின் நூல்களை ஆழக் கற்று அவற்றின் பால் தீராக் காதல் கொண்ட அவர் பல பழம் பெரும் ஓலைச் சுவடிகளை ஒப்பு நோக்கி வருகையில்  ஒரு அரிய செல்வத்தைக் கண்டார். satatatnasangraham நூலில் 100 பாடல்கள் இருக்க வேண்டிய சத சங்க்ரஹத்தில் இதுவரை கிடைக்கப் பெற்றவை 93 மட்டும் தான். ஸ்ரீ கல்யாணசுந்தர சிவாசாரியார் இது வரை கிடைக்காதிருந்த 7 ஸ்லோகங்களையும் ஒரு ஓலைச் சுவடியில் கண்டு அவற்றின் மூலம் நூலை முழுமையாக்கியுள்ளார்.

இவர் செய்யும் அனைத்துப் பணிகளும் பிரம்மாண்டமானவை; பொருளுதவி தேவைப்படுபவை. இந்த அரும் பணியில் தங்கள் பங்கையும் செய்ய விழைவோர் இவரைத் தொடர்பு கொள்ளலாம்.

tags– உமாபதி சிவம், தமிழ், சம்ஸ்கிருத நூல்கள்

***