FIVE THINGS MAKE AN INDIAN HAPPY (Post No.9121)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 9121

Date uploaded in London – – 8 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

AN AMERICAN ASKED AN INDIAN CHILD,

HOW OLD ARE YOU???

THE CHILD REPLIED,

IN MY HOUSE…………11

IN SCHOOL…………….12

IN BUS…………………….10

IN TRAIN………………….7

IN FACE BOOK ……….18!!!

xxxx

HOLDING A GRUDGE IS LETTING DOWN SOMEONE LIVING

“RENT FREE” ON YOUR HEAD…..

Xxxx

NEVER HATE PEOPLE WHO ARE JEALOUS OF YOU.

BUT RESPECT THEIR JEALOUSY BECAUSE

THEY ARE THE ONES WHO THINK THAT YOU ARE

BETTER THAN THEM,!!!

XXX

BEFORE YOU SPEAK, ‘THINK’

T………… IS IT TRUE???

H……….. IS IT HELFUL???

I…………..IS IT INSPIRING.???

N…………IS IT NECESSARY.???

K………….IS IT KIND???

XXXX

NEVER BLAME ANY ONE IN YOUR LIFE

GOOD PEOPLE GIVE YOU HAPPINESS

BAD PEOPLE GIVE YOU EXPERIENCE

WORST PEOPLE GIVE YOU LESSON

BEST PEOPLE GIVE YOU MEMORIES !!!

XXXX

BEST JOKE OF THIS CENTURY IS

“COMPUTER AND MOBILE WERE INVENTED

TO SAVE OUR TIME” !!!

XXXX

From  : SAINT NITHYANANDA

LOVE THE LADY

BUT DONT TOUCH THE BODY

IF YOU TOUCH THE BODY

SOME ONE WILL MAKE C. D………

அப்புறம் நீ நாட்டை விட்டு ஓடி………..

XXXX

CHANGE CANNOT BE GIVEN.

YOU ONLY MUST BRING THE CHANGE……..

GREAT LINE SAID BY MR. MADA SAMY, TOWN BUS CONDUCTOR…….

PL READ AGAIN,!!!

XXXX

AN APPLE A DAY IS ALMOST RS.1000/- MONTH.

BUT YOU SEE, SEEING A DOCTOR IS MUCH MORE CHEAPER!!!

XXXX

SON :DAD, THERE IS A SMALL GET TOGETHER IN THE SCHOOL TOMORROW. PLEASE COME

DAD : WHAT DO YOU MEAN BY “ SMALL”???

SON : ONLY YOU, ME , AND PRINCIPAL………

XXX

SPEAK IN SUCH A WAY THAT OTHERS LOVE TO

LISTEN TO YOU !!!

LISTEN IN SUCH A WAY THAT OTHERS LOVE TO

SPEAK TO YOU.!!!

XXXX

SOME PEOPLE COME IN YOUR LIFE AS BLESSINGS,!!!

OTHERS COMING IN YOUR LIFE AS LESSONS!!!!

XXX

WHO SAID THAT ENGLISH IS AN EASY LANGUAGE?

FILL IN THE BLANKS WITH “YES” OR “NO”

1)______I DONT HAVE BRAIN.

2)______ I DONT HAVE SENSE

3)______ I AM A STUPID.

XXX

BEAUTIFUL HAS NOTHING TO DO WITH LOOKS

IT HAS EVERYTHING TO DO HOW YOU ARE A PERSON

AND HOW YOU MOVE WITH OTHERS AND FEEL ABOUT THEMSELVES.

XXX

SUCCESSFUL PEOPLE ALWAYS CARRY TWO THINGS ON THEIR FACES.

SMILE AND SILENCE

SMILE TO SOLVE PROBLEMS !!!

SILENCE TO AVOID PROBLEMS!!!

XXX

FIVE THINGS MAKE AN INDIAN HAPPY

1) BUY ONE AND GET ONE FREE !!!

2) FLAT 50% OFF !!!

3) ‘TATKA’L TICKET CONFIRMATION!!!

4) INDIA WINNING IN CRICKET MATCH !!!

5) WIFE NOT AT HOME

XXXX

OUR LIFE BEGINS WITH OUR CRY, AND ENDS WITH OTHERS CRY.

TRY TO FILL THE GAP WITH LAUGHTER

AS MUCH AS POSSIBLE!!!!

XXXX SUBHAMXXXXX

tags – FIVE THINGS , INDIAN HAPPY

காற்றுள்ள போதே தூங்கிவிடு! கரண்ட் போனா தூக்கம் வராது!!(Post 9120)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 9120

Date uploaded in London – – 8 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவீன ஞான மொழிகள் – 16

                                                    Kattukutty

தடைகள் தோற்கட்டும், மடைகள் திறக்கட்டும்,

சோகம் போகட்டும், யோகம் பெருகட்டும்,

நன்மைகள் நடக்கட்டும், நாடு நலம் பெறட்டும்,

மண்ணில் மறைந்து மக்கிப் போன உறவுகள் மலரட்டும்,

மகிழ்ச்சி பெருகட்டும், வெற்றிப் பூ பூக்கட்டும்!!!

XXX

10 வருஷத்திற்கு முன்,

வடை ஒன்று………….ரூ 1/-

CALL CHARGE ……ரூ 10/-

AFTER THE TECHNOLOGY CHANGE

வடை ஒன்று ………….ரூ 10/-

CALL CHARGE……….ரூ 1/-

வடை போச்சே…………!!!

XXXX

ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும்போது

அவன் “புத்திசாலி”ஆகிறான்.

ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமை

கொள்ளும் போது “முட்டாள்” ஆகிறான்.

XXXXXX

தவறான பாதையில் வேகமாக ஓடும் மானை விட,

சரியான பாதையில் ஓடும் ஆமையாக இரு.

XXXX

இன்றைய புது மொழிகள்

ஒரு பனை சோத்துக்கு ஒரு குண்டா குழம்பு…….

தம்பி உடையார், அண்ணன் ரெட்டியார்,

ஊரான் புள்ளய ஊட்டி வளர்த்தா உன்பொண்டாட்டி

உன்ன சந்தேகப் படுவா…….

ஊரான் புள்ளய ஊட்டீல வளர்த்தா உன புள்ள

கொடைக்கானல்ல வளரும்!!!

XXXX

நல்ல மாட்டுக்கு 5 கிலோ புண்ணாக்கு……

தோல் கொடுப்பான் கறிக்கடை பாய் !!!

காற்றுள்ள போதே தூங்கிவிடு

கரண்ட் போனா தூக்கம் வராது!!!!

XXX

முகநக நட்பது நட்பன்று ரம்ஜானுக்கு பிரியாணி தரும்

அஹமது நட்பே நட்பு!!!

XXX

அஹிம்சை – காந்தியோடு எரித்து விட்ட ஒன்று.

இனஸ்யூரன்ஸ் – நவீன சீதக்காதி

உண்ணாவிரதம் – நாட்டில் பலர் நடித்துக் கொண்டிருக்கும் சினிமா!!!

வீடு – ஒரு கௌரவ சத்திரம்

கடவுள் – கஷ்டம் வரும்போது மட்டுமே நினைக்கப்படுபவர்

XXX

காதலிப்பதை விட திருமணம் செய்து கொள்ளலாம்.

எவன் மனைவிக்கோ செலவு செய்வதை விட நம்

மனைவிக்கே செலவு செய்து விட்டு போகலாம் !!!

போகும்போதே என்னை ரசித்துக் கொண்டே போ !!!

திரும்பி வர மாட்டேன்.

இப்படிக்கு உன் வாழ்க்கை.

tags –நவீன ஞான மொழிகள் – 16

புராணத்துளிகள்- யோக ரஹஸ்யம், பரமபதம் (Post No.9119)

PRIME MINISTER NARENDRA MODI DOING YOGA

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9119

Date uploaded in London – –8 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புராணத் துளிகள் இரு பாகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. மிகப் பரந்து விரிந்து கிடக்கும் 18 புராணங்களில் உள்ள சில சிறந்த பகுதிகளைத் தொகுத்துத் தருவதே நமது நோக்கம். அந்த வகையில் மூன்றாம் பாகத் தொகுப்பு இப்போது ஆரம்பிக்கப்படுகிறது.

புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 1

ச.நாகராஜன்

  1. யோக ரஹஸ்யம்

ஸ்ரீ தேவியானவள் பர்வதராஜனுக்கு யோக ரஹஸ்யங்களையும் மந்திர சித்தி பற்றியும் உபதேசித்து அருளுகிறாள்.

இது தேவி பாகவதம் ஏழாம் ஸ்கந்தம் 35ஆம் அத்தியாயத்தில் வரும் பகுதியாகும்.

தேவி : ஓ! யோகசீலனே! ஜீவாத்ம, ப்ரமாத்ம ஐக்கியமே யோகம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய ஆறு தடைகள் உள்ளன. இதைத் தடுப்பவர்களே ஜீவான்ம பரமான்ம ஐக்கிய யோகத்தை அடைவர். இந்த யோகத்திற்கு எட்டு அங்கங்கள் உண்டு. அவையாவன : இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்பவையாகும். இவையே யோகத்திற்கான சாதனங்களாகும்.

1. இயமமாவது :- அஹிம்சை, ஸத்தியம், களவில்லாமை, பிரம்மசரியம், தயை, சன்மார்க்கம், பொறுமை, தைரியம், மிதமான ஆகாரம், சௌசம் எனப் பத்தாகும்.

2. நியமமாவது :- தவம், சந்தோஷம், ஆஸ்திகம் அதாவது தெய்வம் உள்ளது என்ற நம்பிக்கை, தானம், தேவ பூஜை, சித்தாந்த சிரவணம், நாணம், புத்தி, ஜபம், ஹோமம் எனப் பத்தாகும்.

3. ஆசனமாவது : –  பத்மாசனம், ஸ்வஸ்திகாசனம், பத்ராசனம், வீராசனம் என ஐந்தாகும்.

பத்மாசனம் என்பது பாதங்களைத் தொடைகளின் மேல் வைத்து இரண்டு கைகளால் பெரிய விரல்களைப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்திருத்தலாகும்.

ஸ்வஸ்திகாசனம் என்பது இரண்டு பாதங்களையும் தொடைகளுக்கும் முழங்கால்களுக்கும் இடையிலுள்ள சந்தில் வைத்து நேராக இருத்தலாகும்.

அடுத்து பத்ராசனம் என்பது புறங்கால்களைப் பிருஷ்ட பாகத்தில் மடக்கி வைத்து, விருக்ஷணத்தின் அடியின் வழியாக அப்பாதங்களை பாத சந்திகளோடும் கைகளால் பிடித்திருத்தலாகும்.

வஜ்ராசனம் என்பது தொடைகளின் மேல் பாதங்களை முறையாக வைத்து, முழங்கால்களில் கை விரல்களை மேல் முகமாக அமைத்து நிமிர்ந்திருத்தலாகும்.

வீராசனம் என்பது ஒரு பாதத்தை பூமியிலும் இன்னொரு பாதத்தைத் தொடையிலும் வைத்து சரீரத்தை நேராக வைத்திருத்தலாகும்.

4. பிராணாயாமம் : பிராணாயாமமாவது வெளியே இருக்கிற வாயுவை இடகலையினால் உள் வாங்கி பதினாறு மாத்திரையளவு சுழிமுனை நடுவில் நிறுத்திப் பின்னர் முப்பத்தியிரண்டு மாத்திரையளவு பிங்கலை நாடியின் வழியாய் விடுவதே ஆகும்.

இது சகர்ப்பம், விகர்ப்பம் என இருவகைப்படும். சகர்ப்பம் என்பது அடிக்கடி வெளியே செல்லும் வாயுவை பன்னிரண்டு மாத்திரை அல்லது பதினாறு மாத்திரை காலம் ஜபம் மற்றும் தியானிதிகளால் உள்ளே கிரஹித்து ஜபதியானிதிகளைச் செய்தல் ஆகும்.

விகர்ப்பம் என்பது ஜபம் மற்றும் தியானம் இல்லாமல் மேலே கூறியபடி பிராணாயாமம் செய்தலாகும். இப்படி முறையாக பிராணாயாமத்தைச் செய்யும் காலத்தில் சரீரம் வியர்க்குமானால் அதமம் என்றும், நடுங்குமானால் மத்திமம் என்றும் பூமியை விட்டு மேலெழும்புமானால் உத்தமம் என்றும் சொல்லப்படும்.

5. பிரத்யாஹாரம் : பிரத்யாஹாரமாவது இயம, நியமாதிகளால் கொள்ளப்பட்ட உத்தம குணங்கள் நிறைந்து, தான் எண்ணிய அபீஷ்டங்களைப் பெறுமளவும் இந்திரியங்களை விஷயங்களில் போக விடாமல் தடுத்து ஸ்வாதீனம் செய்து கொள்ளலாகும்.

6. தாரணை : தாரணையாவது காலில் உள்ள பெருவிரல்கள், முழங்கால்கள், தொடைகள், மூலாதாரம், ஆண்குறி, நாபி, இருதயம், கண்டம், கன்னம், நாசி, நடுப்புருவம், நெற்றி, தலை, துவாதசாந்தம் இவ்விடங்களில் பிராணவாயுவை விதிமுறையாக நிறுத்துவதாகும்.

7. தியானம் : தியானமாவது தன்னால் விரும்பப்பட்ட தேவதையோடு தனது அசைவற்ற மனதை லய்ப்பித்தல் ஆகும்.

8. சமாதி : சமாதியாவது ஜீவாத்மாவாகிய தான் பரமாத்மாவினின்று வேறாகாது, சமத்துவ பாவனை செய்து கொண்டு எப்போதும் இருப்பதாகும்.

இவையே அஷ்டாங்க யோக லக்ஷணம் என்று யோக விசாரம்  உடையவர் கூறுவர்.

*

2. பரமபதம் அடைவது எப்படி?

ஸ்ரீமத் பாகவதத்தில் சதுர்த்த ஸ்கந்தத்தில் எட்டாம் அத்தியாயம் துருவ சரித்திரத்தை விவரிக்கிறது.

அதில் நாரத  மஹரிஷி துருவனுக்கு பரமபதம் அடைவது எப்படி என்பதை விவரிக்கிறார். அதைக் கீழே காணலாம்.

நாரதர் துருவனிடம் கூறுகிறார் :-

எந்த ஒருவனுக்கு சுகமோ அல்லது துக்கமோ தெய்வாதீனமாய் விளையுமோ அவன் அங்ஙனம் நேர்ந்த சுக, துக்கங்கள் இரண்டினாலும் மனக் களிப்புற்றவனாகவே இருப்பானாகில் அவன் கடைசியில் பிரகிருதி மண்டலத்திற்கு வெளிப்பட்டதாகிய விஷ்ணுவின் ஸ்தானத்தைப் பெறுவான். தெய்வாதீனமாக சுகம் நேரும் போது மனக் களிப்புறலாம். ஆனால் துக்கம் நேரும் போது எப்படி மனக்களிப்பு அடைய முடியும் என்று கேட்பாய் ஆகில், சொல்லுகிறென் கேள்.

தெய்வாதீனமாய் வரும் சுகம் மற்றும் துக்கம் ஆகிய இரண்டிலும் மனம் கலக்கம் அடையக் கூடாது. இரண்டிலும் மனக்களிப்பு மாறாமல் இருப்பதே யுக்தம். சுகம் நேரில் புண்ணியமானது நசித்துப் போகின்றது. துக்கம் நேரில் பாவம் நசித்துப் போகிறது. எப்படி பாவம் துக்கத்தை அனுபவிப்பதாகி மென்மேலும் சரீர சம்பந்தத்தை விளைவித்து சம்சாரத்தை வளர்க்குமோ, அதே போலவே புண்ணியமும் சுகத்தை அனுபவிப்பதாகி மென்மேலும் சரீர சம்பந்தத்தை விளைவித்து சம்சாரத்தை வளர்க்கும்.

ஆனால் பாவத்தினால் விளையும் சரீரம் துக்கானுபவத்திற்கும், புண்ணியத்தினால் விளையும் சரீரம் சுகானுபவத்திற்கும் இடமாகும் என்பதால் அனுபவம் மாத்திரமே வித்தியாசமாக இருக்கும். ஆயின் சம்சாரத்தை வளர்ப்பதில் புண்ய பாவங்கள் இரண்டுமே சமமானவையே.

சம்சார வர்த்தகங்களான புண்ய, பாவம் இரண்டும் சுகம் மற்றும் துக்க அனுபவங்களால் கழிந்து விடும் என்றால் உடனே சம்சாரத்திலிருந்து ஜீவன் விடுபடுவான் ஆகையால் அந்த இரண்டைப் பற்றியும் விவேகம் உள்ளவன் சந்தோஷம் அடைய வேண்டுமேயன்றி வருத்தப்படலாகாது. சுகானுபவத்தில் சுகம் அனுபவிக்கப் பெற்றோம் என்று அதில் மனப்பற்றுடன் சந்தோஷிக்கக் கூடாது.  சரீர சம்பந்தத்தை விளைவிக்கக் கூடிய புண்ணியம் நசித்துப் போகப் பெற்றோம் என்று சந்தோஷமே அடைய வேண்டும். அதே போல துக்க அனுபவத்தில் பாவம் நசிக்கப் பெற்றோம் என்று சந்தோஷிக்க வேண்டுமேயன்றி வருத்தப்படக் கூடாது.

இப்படி தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு விட்டு சுக துக்கம் ஆகிய இரண்டிலும் எவன் ஒருவன் மனக்களிப்பு மாறாது இருப்பானோ அவன் ப்ரக்ருதி மண்டலத்தைக் கடந்து பரம பதம் போய்ச் சேர்வான்.

TAGS – புராணத்துளிகள் 3/1, பரமபதம்,அஷ்டாங்க யோகம்

*

INDEX 42 FOR LONDON SWAMINATHAN’S MAY 2016 ENGLISH & TAMIL ARTICLES (Post.9118)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9118

Date uploaded in London – –7 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9100 PLUS POSTS.

INDEX 42- MAY 2016

List of Tamil Posts

தினகர, ருசிகர, சஸிகர, கடகர, ரதகர, மதுகர: –சம்ஸ்கிருத மொழி அழகு (Post No.2856); 31 MAY 2016

சூரியனுக்கு 37 பெயர்கள்! (Post No. 2850)

நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே! (Post No.2847)

புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே (Post No. 2844)

விஷம் எத்தனை வகை? எது விஷம்? (2842)26/5

கம்ப ராமாயணத்தில் பஞ்ச மா பாதகம்- 5 பாவங்கள்(Post No.2838);

மனது இரண்டு வகைப்படும்! (Post No.2835);24/5

மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது! (கட்டுரை எண்.2832);23/5

கடலுக்கடியில் சக்ரவாள மலை:கம்பன் தரும் தகவல் (Post No. 2830);22/5

சிதையும், சிந்தையும்; சுவையான பாடல் (Post No.2828);21/5

தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் மங்கலச் சொற்கள் (Post No.2826);20/5

தமிழர்களின் கோழிச் சண்டை, ஆட்டுக் கிடாச் சண்டை!! (Post No.2823);19/5

சமயோசித புத்தி! நறுக்கென பதில்கள்!! (Post No 2821);18/5

தமிழ் மொழி பற்றி கம்பன் (Post No.2819);17/5

என் கணவர்: ராஜலக்ஷ்மி சந்தானம் (Post No 2819);17/5

வாதக்கோன், வையக்கோன், ஏதக்கோன்: யார் நல்லவர்? (கட்டுரை எண்.2816);16/5

ஆனந்த ராமாயணத்தில் ஒரு புதுக்கதை (கட்டுரை எண். 2814);15/5

தமிழ் முட்டாளும் சம்ஸ்கிருத முட்டாளும் (Post No.2810);14/5

அஃகமும் காசும் சிக்கெனத் தேடு! (Post No.2807);13/5

கருமிகள் பெரும் கொடையாளிகள்! ஒரு கவிஞரின் கிண்டல்!! (Post No.2804);12/5

நிறைகுடம் தழும்பாது, குறைகூடம் கூத்தாடும் ( Post No.2801);11/5

ஆட்டிடையன் ராஜாவான கதை! (Post No.2798);10/5

அறவிலை வணிகன் ஆய் அல்லன்! (Post No.2795);9/5

அம்மா! அம்மா!! அம்மா!!! (Post No.2792);8/5

திருடர்கள் இரண்டு வகை! ஞானம் இரண்டு வகை (Post No.2790);7/5

எது அழகு? நான்கு கவிஞர்கள் கருத்து (Post No.2787);6/5

வள்ளுவர் சொன்ன ‘செக்ஸி’ உவமை! (Post No 2783);5/5

அரிது, அரிது, ‘அநாயாச மரணம்’ அரிது! (Post No 2780);4/5

கந்தபுராணத்திருந்து ‘ரஸவாதி ஏமாற்றிய கதை’ (Post No 2777);3/5

கருமிகளை கடலில் தள்ளுக! மஹாபாரதம் அறிவுரை!! (Post No.2774);2/5

உள்ளத்தனையது உயர்வு; உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்! (Post No 2772);1/5

S NAGARAJAN’S TAMIL ARTICLES ARE ALREADY INDEXED AND BLOGGED HERE; THE NUMBERS OF HIS POSTS ARE 2855, 2852,2849,2846,2843,2840, 2837, 2834,2827,2815,2812, 2809, 2806,2803, 2800, 2797, 2794,2791,2788, 2785,2782,2779,2775,

LIST OF ENGLISH ARTICLES IN MAY 2016

The Choice of Four Friends (Post No.2857), 31  MAY 2016

Chinese and Indian Parables of the Turtles and Frogs (Post No.2854);30/5

Animals in Buddha’s Dhammapada (Post No 2851);28/5

No Bees no Honey, No Work no Money (Post No.2848);28/5

Minus X Minus = Plus: Hindu Science of Poisons (Toxicolo-gy)—Post No 2845;27/5

A Good Face is a Letter of Recommendation (Post No.2841);26/5

Conquer Evil Doers by Saintliness, Anger by peacefulness (Post No. 2839);25/5

Two Types of Mind -Pure Mind and Impure Mind (Post No.2836)24/5

Men are NOT to be measured by Inches!!! (Post No.2833); 23/5

‘Madura, Most Celebrated City of the Kingdom of Regio Pan-dionis’ (Post No.2831);22/5

How Hindu Lahore became Muslim Lahore: A.H. Hallam Murray, Year 1905 (Post No 2829);21/5

Auspicious Words in Sanskrit and Tamil Books (Post No.2825);20/5

Lateness Anecdotes (Post No. 2824);18/5

Melancholy Anecdotes (Post No. 2822);18/5

Three Tamil Kings fast unto Death! (Post No 2820);17/5

A New Anecdote from Ananda Ramayana (Post No.2817);16/5

Mahabharata–about Women! (Post No.2813);15/5

Children and Fools have merry lives (Post No 2811);14/5

Bernier’s Description of Peacock Throne (Post No.2808);13/5

Quick Thinking Anecdotes! (Post No.2805);12/5

Misers are the Best Philanthropists! (Post No 2802);11/5

Secret Box of a Shepherd! Persian Story!! (Post No.2799);11/5

Two Types of Thieves! Two Types of Knowledge! (Post No.2796);9/5

An Ounce of Mother is worth a Ton of Priest! (Post No.2793);8/5

Interesting Salesman Anecdotes (Post No.2789);7/5

Boy and the House Hunter: Evidence Anecdotes (Post No.2786);6/5

What is Rare? Views of Three Great Poets! (Post No.2784);5/5

Art of Bargaining! How to bargain? (Post No.2781);4/5

IGNORANCE: Sexy Simile of Tamil Poet Valluvan! (Post No.2778);3/5

DROWN MISERS IN THE SEA: MAHABHARATA (Post No 2773);2/5

‘Hitch your wagon to a star’ – Ralph Waldo Emerson (Post No 2771); 1ST MAY 2016.

–SUBHAM–

tags– Index 42, swaminathan posts, May 2016

நகை பிறக்கின்ற வாயன்,பொறி பிறக்கின்ற கண்ணன் ! (Post.9117)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9117

Date uploaded in London – –7 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நகை பிறக்கின்ற வாயன்,பொறி பிறக்கின்ற கண்ணன் !

கம்ப ராமாயணம் யுத்த கண்டத்தில் ராவணனின் தோற்றம் பற்றிய ஒரு பாடல் மிகவும் ரசித்துப் படிக்க வேண்டிய பாடல் . அதை  யாராவது வரைந்து ஓவியம் தீட்டினால் இன்னும் நன்றாக இருக்கும் . இருந்த போதிலும் நம் மனதில் அதை ஓவியமாக வரைந்து ரசிப்போம்.

இராவணன் களம் காண்படலத்தின் கடைசி பாடல் இது.

அரக்கர் படைகளை எல்லாம் இராம பிரானின் அம்புகள் அழித்ததை ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து கண்டான் . பின்னர் கீழே இறங்கி வந்தான்.

கோபத்தால் ‘ஹ ஹா  ஹா’ என்று சிரித்தான்.

நாக்கை வெளியே நீட்டி மீசையை நக்கிக் கொண்டான்.

கண்களில் தீப்பொறி பறந்தது.

மூக்கிலிருந்து சூடான கோபக்  காற்று அனல் கக்கியது .

நெஞ்சில் மேலும் குற்றம் செய்யும் எண்ணம் பிறந்தது.

தீக்கொழுந்து விட்டெரியும் சொற்கள் வாயி லிருந்து வந்தன

இந்தக் கோலத்தில்  அரசவைக்குச் சென்றான்

சுருக்கமாக ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் முகத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பும் தீயைக் கக்கியது.

அப்படிச் சொல்லிவிட்டால் கம்பனுக்கும் நமக்கும் வித்தியாசமே இராது. இதையே கம்பன் எப்படிச் சொல்கிறான் என்று பாருங்கள்

நகை பிறக்கின்ற வாயன் நாக்கொடு கடை வாய்நக்கப்

புகை பிறக்கின்ற மூக்கன் பொறி பிறக்கின்ற கண்ணன்

மிகை பிறக்கின்ற நெஞ்சன்  வெஞ்சினத் தீ  மேல் வீங்கி

சிகை பிறக்கின்ற சொல்லன்  அரசியலிருக்கை சேர்ந்தான்

–இராவணன் களம் காண் படலம், யுத்த காண்டம் , கம்ப ராமாயணம்

இப்படி ஒவ்வொரு பாடலையும் ரசித்துப் படித்தால் வாழ்நாள் முழுதும் ராமாயணம் படிக்கலாம்.  ஏன் என்றால், இரண்டாம் முறை படிக்கும் பொழுது புதிய பொருள் தோன்றும்!!!

–SUBHAM—

tags—நகை பிறக்கின்ற வாயன்,இராவணன்

PICTURES AND PROVERBS பழமொழியும் படங்களும்! A FRIEND INDEED IS A …… ! (Post.9116)

Compiled  BY KATTUKKUTY

Post No. 9116

Date uploaded in London – – 7 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

NEWTON’S NEW LAW

 Loose motion never comes in Slow motion 

XXXX

HELL IS COSTLY; HEAVEN IS FREE! WHY DO PEOPLE CHOOSE HELL?

XXXX

இடுக்கண் களைவதாம் நட்பு – குறள்  788

A FRIEND INDEED IS A FRIEND IN NEED

உடுக்கை இழந்தவன் காய் போல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு – குறள்  788

GENUINE FRIENDSHIP HASTENS TO REDRESS DISTRESS  LIKE THE  HAND THAT PICKS UP QUICKLY THE  GARMENT THAT SLIPS – TIRUKKURAL 788

XXXX

No road is too long in the company of a friend. . ஆங்கிலப் பழமொழி

நல்ல நண்பன் கிடைத்தால் எந்த  சாலையில் எவ்வளவு தூரம் செல்வதும் இனிதே

XXXX

கூந்தல் கருப்பு , குங்குமம் சிவப்பு – ஆஹா!!!– தமிழ் திரைப்படப் பாடல்

XXXX  SUBHAM XXXX

tags – pictures and proverbs, பழமொழியும் படங்களும்,

காயத்ரி தேவியின் அருள் பெற்ற கோபால்தாஸர்! (Post No.9115)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9115

Date uploaded in London – –7 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

காயத்ரி தேவியின் அருள் பெற்ற கோபால்தாஸர்!

ச.நாகராஜன்

ஸ்ரீ விஜயதாஸரின் சீடராக இருந்து கோபால்தாஸர் என்று புகழ் பெற்ற  ஜோதிடரின் இயற் பெயர் பாகாண்ட். (Bhagannd).

கர்நாடகாவில் ராய்சூர் மாவட்டத்தில் உத்தனூர் என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார் பாகாண்ட். அங்கேயே அவர் கி.பி. 1740 முதல் 1780 முடிய வாழ்ந்தார்.

அவருக்கு மூன்று சகோதரர்கள். அவரது இளம் வயதிலேயே அவர் தந்தை இறந்து விட்டார். தாயின்  வளர்ப்பிலும் வழிகாட்டுதலிலும் அவர் வளர்ந்து வந்தார். அவரது உறவினர்கள் அவர் மீது வெறுப்பை உமிழ்ந்தனர். அதனால் மிகுந்த ஏழ்மை நிலையில் அவர் கஷ்டப்பட்டார்.

என்றாலும் கூட அவரது எட்டாம் வயதில் அவருக்கு உபநயனம் செய்து வைக்கப்பட்டது. காயத்ரி மந்திர உபதேசம் அதன் மூலம் தரப்பட்டது.

தன்னை எல்லோரும் அலட்சியப்படுத்தியதையோ அல்லது வெறுத்ததையோ பற்றி பாகாண்ட் வருத்தப்படவில்லை.

கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் இருந்து காயத்ரி மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தார். நாள் செல்லச் செல்ல ஜபம் அதிகரித்தது; தீவிரமானது.

ஒரு ஆறு வருடங்கள் ஓடின.அவருக்கு தெய்வீக அருள் கிட்டியது. அதன் பயனாக பிரம்மஞானத்தையும் ஜோதிட அறிவையும் பெற்றார்.

அவரது பிரகாசமான முகத்தைக் கண்ட அனைவரும் அவரை மதிக்க ஆரம்பித்தனர்.

அனைவருக்கும் அவர் ஜோதிடத்தைச் சொல்ல ஆரம்பித்தார். யார் ஜோதிடம் கேட்க வந்தாலும் அவரது கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என முக்காலத்தையும் துல்லியமாகக் கூற ஆரம்பித்தார். அவர் புகழ் பரவ ஆரம்பித்தது

யார் வந்தாலும் அவரது முந்தைய மூன்று பிறப்புகளைப் பற்றி அவரால் அறிந்து கொள்ள முடிந்தது. எதிர்காலத்தில் அவருக்கு என்ன நடக்கும் என்பதும் அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது.

எல்லோரும் பிரமிப்புடன் அவரை மதித்து காணிக்கையும் செலுத்த ஆரம்பித்தனர். அவரது ஏழ்மையும் அகன்றது. குடும்பத்தின் நிலை சீரானதோடு வளமாகவும் ஆனது.

சில வருடங்கள் கழிந்தன. பிருகு முனிவரின் அவதாரமாகக் கருதப்பட்ட விஜயதாஸர் அப்போது பிரபலமாக இருந்தார். அவரிடம் அடைக்கலம் புகுந்த பாகாண்ட் அவரது சீடரானார். அவரது உபதேசப்படி நடக்கவே, விஷ்ணுவின் தரிசனம் அவருக்குக் கிடைத்தது.

அவருக்கும் நாளடைவில் சீடர்கள் உருவாயினர். அவர் கோபால்தாஸ் என அனைவராலும் அறியப்பட்டார். அவரது முக்கிய சீடர்களுள் புகழ் பெற்றவரே ஜகந்நாத தாஸர்.

ஸ்தல யாத்திரை செய்ய ஆரம்பித்த கோபால்தாஸர் அனைவருக்கும் அன்னதானம் செய்ய ஆரம்பித்தார். தேவையானோருக்கு இதர பொருள்களையும் கொடுத்து உதவ ஆரம்பித்தார்.

இறைவன் புகழைச் சொல்லும் ஏராளமான கீதங்களைப் புனைய ஆரம்பித்த அவர் விட்டலைப் போற்றி நிறைய கீதங்களைப் படைத்தார். அவை பெரும் புகழ் பெற்றன. இன்றும் பாடப்படுகின்றன.

காயத்ரி மந்திரத்தால் அரும் பெரும் சக்தி பெற்ற ஒருவராக அவரை உலகம் அறிந்தது.

காயத்ரி மந்திரத்தின் சக்திக்கு ஒரு அளவே இல்லை என்பது உண்மையே.

***

tags– கோபால்தாஸ், காயத்ரி மந்திரம்

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 20 (Post No.9114)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9114

Date uploaded in London – –6 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -20

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

3-1-105

AJARYAM SANGATHAM – INDESTRUCIBLE / PERPETUAL ,UNASSAILABLE FRIENDSHIP

அஜர்யம் சங்கதம் = அழியாத தோழமை

நமது நட்பு அழியாததாக இருக்கட்டும்

உன்னுடைய ‘சங்காத்தமே’(FRIENDSHIP) வேண்டாம் போ – என்று தமிழர்கள் பேச்சில் வருவதைக் கவனிக்கவும் .

XXX

3-1-106

வத – பேசு SAY, SPEAK

RUMOUR IS ‘VADANTHI’ IN TAMIL; LITERAL MEANING , ‘THEY SAY IT’ OR ‘IT IS SAID THAT’…………………….

வதந்தி – அவர்கள் சொல்கின்றனர் – கிசுகிசுப் பேச்சு

தமிழர்கள் இன்றும் ‘வதந்தி’ என்பதைப் பயன்படுத்துகின்றனர்.

வாத்யம் – இசைக் கருவி  – VAADHYAM = MUSICAL INSTRUMENT

XXXX

3-1-109

JUSHYA – TO MAKE SOMEONE HAPPY – JOY

STUTHYA – THUTHI —  A HYMN  PRAISING GOD

துதி, ஸ்தோத்ர , தோத்திரம்

XXX

3-1-109

ANJ – SMEAR, APPLY= OINTMENT

அஞ்ச் = பூசு , தடவு

ANJ – PUUSU, THADAVU

ANJANAM – COLLYRIUM, அஞ்சனம்= மை

AAJYAM – GHEE, CLARIFIED BUTTER; NEY IN TAMIL

ஆஜ்யம் – நெய்

I SEE AA= PASU/COW + NEY A(N) JYAM ஆ = பசு +நெய்

XXX

3-1-110 

PAANI SARKYAA   RAJJU

TWIST/SCREW FIBRES BY HAND

SARKYAA – SCREW

கையால் முறுக்கப்பட்ட கயிறு

சர்க்கியா= ஸ்க்ரூ

XXX

3-1-111

GAN – TO DIG

கன் – தோண்டு

KINARU IN TAMIL IS WELL DUG OUT IN GROUND

கிணறு?????

XXX

3-1-114

RAJASUYA YAGA

RAJASUYA WAS PERFORMED BY A CHOZA KING ACCORDING TO SANGAM LITERATURE/ SEE PURANANURU

ராஜசூய யாகம் – சோழ மன்னன் செய்த யாகம்- புற  நானுற்றில்  உளது.

CUPYAM/KUPYAM – LOW COST METAL

COPPER WHICH IS CUPRUM MAY BE CUPYAM??

குப்யம் – மலிவு உலோகம்

காப்பர், குப்ரம் என்பது தமிழில் செம்பு எனப்படும்

இதைத்தான் குப் யம் என்று செப்பினரோ???

XXX

3-1-118

GRAH – CATCH, GRIP, GRAB

GRAHANA FOR ECLIPSE IS USED IN ALL INDIAN LANGUAGES

கிரஹணம்

XXX

3-1-122

AMAVASYA

NEW MOON DAY- ALL INDIAN LANGUAGES THIS DAY

அமாவாசை

XXXX

3-1-126

AASAAVYAM – TO BE FILTERED – SIEVE

சல்லடை

SIEVE – SALLATAI IN TAMIL

XX

3-1-128

சம்மதமா , நான் உந்தன் கூட வர சம்மதமா / தமிழ் சினிமாப்  பாட்டு

SAMMATAM – CONSENT= SAMSENT BECOMES CONSENT

SAMMATAM IS USED IBYTAMILS AS WELL

SAMMATAMAA, NAAN UNTHAN KUUDA VARA SAMMATAMAA,– TAMIL FILM SONG

XXX

3-1-131

AGNI- INGNITE, IGNITION, IGNEOUS

AGNI – VANNI

அக்கினி – வன்னி

XXX

3-1-132 CHIDHYAAGNI

SITHAI THII =  FUNERAL PYRE

சிதைத் தீ

XXX

3-1-137

VYAAGRA – VENGAI  N

வியாக்ர= வேங்கை

VYAGRA / TIGER

XXX

3-1-138

LIMPA – ONE WHO SMEARS, APPLIES

KALIMBU IN TAMIL IS OINTMENT

களிம்பு கோவிந்த, அரவிந்த (names in 2400 year old Varttika)

VARTTIKA GIVES NAMES – GOVINDA, ARAVINDA ETC

XXX

3-1-139

THAA – GIVE IN TAMIL

DAANAM – GIVING

தா= கொடு, தானம்

XX

3-1-140

JVALATI – SHINING, BRIGHT

JEWEL ஜொலிக்கிறது

TO BE CONTINUED……………………………..

tags-  Panini Tamil Words-20

GALAXY OF INDIAN ASTRONOMERS (Post No.9113)

GALAXY OF INDIAN ASTRONOMERS (Post No.9113)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9113

Date uploaded in London – –6 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FOLLOWING IS THE LST OF INDIAN ASTRONOMERS FROM FIFTH CENTURY CE.

VEDAS HAVE LOT F ASTRONOMICAL REFERENCES AND WE KNOW THE RISHIS OF THOSE VEDIC MANTRAS WHERE SUCH REMARKS APPEAR. I WILL LIST THEM SEPARATELY.

1.ARYABHATA  – 5TH OR 6TH CENTURY CE

2.VARAHAMIHIRA – 6TH CENTURY CE

3.BRAHMAGUPTA – 6TH OR 7TH CENTURY CE

4.HARIDATTA – 5TH OR 6TH CENTURY CE- PROFOUNDED PARAHITA SYSTEM OF ASTRONOMY

5.LALLA – 8TH OR 9TH CENTURY CE

6.GOVINDASWAMIN – 8TH OR 9TH CENTURY CE- WROTE A SUPER COMMENTARY ON MAHABHASKARIYA

7.SANKARANARAYANA – 8TH OR 9TH CENTURY CE- COMMENTED ON LAGHUBHASKARIYA

8.VATESWARA – 9TH CENTURY CE

9.MUNJALA – 10TH CENTURY CE

10.SRIPATI- 10TH CENTURY CE

11.ARYABHATA II-  10TH CENTURY CE

12. BHASKARA -12TH CENTURY CE

XXXX

KERALA SCHOOL OF ASTRONOMERS

VARARUCI – 4TH CENTURY CE- AUTHOR OF CANDRA VAKYAS

SURYADEVAYAJWAN – WROTE A COMMENTARY ON ARYABHATIYA

MADHAVA OF SANGAMAGRAMA – GAVE THE INFINITE SERIES OF  R SINE, R COSINE- WROTE VENVAROHA

PARAMESWARA OF VATASRENI – 1360-1455- INTRODUCED DRK SYSTEM

NILAKANTHA SOMAYAJIN- 1444- 1545- WROTE TANTRA SANGRAHA, GOLASARA- CONJECTURED HELIO CENTRIC MOTION OF PLANETS.

JYESTA DEVA – 1500-1610 – WROTE YUKTIBHASA

ACHYUTA PISARATHI – 1550-1621

PUTUMANA SOMAYAJIN -1668- 1749- AUTHOR OF KARANA PADDATI.

SANKARAVARMAN OF KATATTANAD – WROTE SADRATNAMALA

Source- Sadratnamala by Sankararaman, Chennai KSRI publication, 2011.

tags – list, Indian Astronomers, 

வேகத்தை கட்டுப் படுத்தாதீர்கள்!!! (Post No.9112)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 9112

Date uploaded in London – – 6 January 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

வேகத்தை கட்டுப் படுத்தாதீர்கள்!!!
Kattukutty

நமது உடல் விசித்திரமானது!!! தேவையில்லாத பொருள்களை வெளியேற்ற
நவ துவாரங்களையும், வியர்வை சுரப்பிகளையும்
வைத்திருக்கிறான் ஆண்டவன்!!!
அவற்றின் மூலமாக அசுத்த பொருள்களை வெளியேற்றி நமது
உடலை ஆரோக்கியமாக வைக்கிறது இயற்கை!!!
அவை என்னன்ன என்று பார்ப்போமா???

1)மூச்சு
2)சுக்கிலம்/ சுரோணிதம்
3)கண்ணீர்
4)அபான வாயு
5)தும்மல்
6)இருமல்
7)தாகம்
8)இளைப்பு
9)தூக்கம்
10)வாந்தி
11)பசி
12)கொட்டாவி
13)சிறு நீர்/வியர்வை
14)மலம்

மூச்சு

பிராண வாயுவான மூச்சை அடக்கினால் என்ன ஆகும் என்று
உங்களுக்கே தெரியும்!!! அடிக்கடி மூச்சை அடக்கினால், தவறான
முறையில், பிராணாயாம ம் செய்தால் இருமல்,வயிற்றுப் பொருமல்
சுவை தெரியாமலிருத்தல், காய்ச்சல் உண்டாகும்.

சுக்கிலம்

சுக்கிலம் எனப்படுடம் விந்துவை அடக்கினால் (முறை தெரியாமல்)
சுரம், நீர்கட்டு, கை,கால் வலி,ஏற்படும். விந்து தானாக நீர்தாரையில்
இறங்கும்.

கண்ணீர்

கண்ணிலிருந்து வரும் நீரை அடக்க முடியாது!!! அதையும் மீறி அடக்கினால், கண்வலி,
கண்மங்கல், களைப்பு, மனதில் கனம்
தோன்றும் கவலையினால்……….

அபான வாயு

இயற்கையினால் வெளியேற்றப்படும் இக்காற்றை தடை செய்தால்
வாயுத் தொல்லை, மலச்சிக்கல்,உடல் முழுவதும் குத்தல் குடைச்சல்
பசி மந்தம் உண்டாகும்.

தும்மல்

இதை அடக்கினால் மூச்சு திணறும், மூச்சு மேலுக்கு கிளம்பி தலை
முழுவதும் நோகும். முகம் முழுவதும் காற்றினால் உப்பி வலிக்கும்.

இருமல்

மூச்சில் ஒரு கெட்ட மணம், நெஞ்சில் காற்று அடைத்த மாதிரி
உணர்வும் உண்டாகும்

பசி/ தாகம்

உங்களுக்கே தெரியும் உடலிலுள்ள எந்த அவயவங்களும்
ஒழுங்காக வேலை செய்யாது.
பசியை அடக்கி உண்ணாமலிருந்தால்,உடலில் களைப்பு, இளைப்பு
முக வாட்டம் மூட்டுக்களில் வலி……….தலை சுற்றல், காது கேளாமை……..
எல்லாம் உண்டாகும் …….உடலுக்கு ஆதாரமே உணவுதான்!!!
தாகத்தை அடக்கினால், களைப்பு,முகம், நாக்கு உலர்தல்,மயக்கம்,
காது கேளாமை…….பேச்சு வராமலிருத்தல் எல்லாம் உண்டாகும்.

தூக்கம்

இயற்கை நமக்கு அளித்த பரிசு!!!!
அதை அலட்சியப்படுத்தி தூக்கத்தை அடக்கினால், தலை கனத்தல்,களைப்பு, கண்சிவத்தல்,
கண்ணீர் வருதல்,பேச்சு திணறுதல்……அதிகமானால் மயங்கி கீழே விழுதல்……….

வாந்தி

வாந்தியை அடக்கினால் வயிற்றில் இடமில்லாமை, ஒவ்வாத பொருளை உண்ணுதல்,
பித்தம் அதிகமாகும்போது உண்டாகும்.பித்த மிகுதியால் மயக்கம்,பித்த வியாதிகள் உண்டாகும்.

இளைப்பு

இளைப்பு என்னும் வேகத்தை அடக்கினால் உடல் சோர்தல், பெப்டிக்
அல்ஸர், உடலில் மிகுந்த வெப்பம் உண்டாகுதல் திடீரென்று
மூர்சையடைதல், நீர் வேட்கை எல்லாம் உண்டாகும்.

சிறு நீர்/ வியர்வை

இதை அடக்கினால் உடலின் வேகம் குறைதல்,நீ ர் போகும்பு ழையில
புண்,வயிற்றில் பாரம், குறியில் ஒரு எரிச்சல் உண்டாகும்.
வியர்வையை அவ்வப்போது துடைக்காவிட்டால் வியர்க்குரு,
உடலில் ஒரு துர் நாற்றம் உண்டாகும்.
ஏ.சி ரூமில் வேலை செய்பவர்களுக்கு அடிக்கடி சிறு நீர்கழிக்க
வேண்டி வரும். அடக்கக் கூடாது.

மலம்

மலத்தையும், சிறு நீரையும் அடக்கினால் முழங்கால் மூட்டு வலி, வயற்றில் கனம்,
எந்தக் காரியத்திலும் கவனமின்மை, முக்கியமாக
தலை வலி, உடல் பலம் குறைதலும் உண்டாகும்.

கொட்டாவி

முகம் கோணல், உணவு செரிமானம் ஆகாமை, நீர்நோய்கள், அறிவு
மங்குதல், களைப்பு, வயிறு சம்பந்தமான நோய்களும் உண்டாகும்.

கடவுளால் கொடுக்கப்பட்ட இந்த 14 வித வேகங்களைத் தடுத்தால்
உண்டாகும் விபரீதங்கள் நம் வழக்கமான வாழ்வைத் தடுத்து அடிக்கடி
வைத்திய செலவுகளை அதிகரிக்கும்.

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்!!!!

–subham–

tags – கொட்டாவி, தூக்கம், மூச்சு