நோபல் பரிசு வென்ற பிரெஞ்சு நாவல், நாடக ஆசிரியர் ஆல்பர்ட் காமு (Post.9975)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9975

Date uploaded in London – 14 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற எழுத்தாளர்களில் ஒருவர் பிரான்ஸைச் சேர்ந்த ஆல்பர்ட் காமு ALBERT CAMUS . அவருக்கு 1957-ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு கிடைத்தது .

வட ஆப்ரிக்காவிலுள்ள அல்ஜீரியா நாட்டில் ஒரு ஏழைத் தொழிலாளர் குடும்பத்தில் 1913-ல் காமு  CAMUS  பிறந்தார்.அக்காலத்தில் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் அல்ஜீரியா இருந்தது. இதுவே அவருடைய கதைகளுக்கும் அடிப்படையாக அமைந்தது.

காமூவின் தந்தை முதல் உலகப் போரில் கொல்லப்பட்டார்.அதற்குப் பின்னர் அவரை தாயார் வளர்த்தார். அப்போது அவர்கள் அல்ஜீரிய தலைநகரான அல்ஜீயர்ஸில் வசித்தனர். அவர் க்ஷயரோகம் என்னும் காசநோய் கண்டும் கூட, அல்ஜீயர்ஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவம் கற்று, அதில் பட்டம் பெற்றார் .

1942ல் பிரான்சுக்குச் சென்று நாஜி ஆட்சிக்கு எதிரான இயக்கத்தில் காமு சேர்ந்தார். பிரெஞ்சுப் படையில் சேர்ந்து இரண்டாவது உலகப்போரில் கலந்துகொண்டார்.பின்னர் பத்திரிகையாளராகி நாவலும் எழுதத் துவங்கினார்.

29 வயதில் STRANGER ஸ்ட்ரேஞ்சர்/ அந்நியன்/வெளியாள்   என்ற நாவலை எழுதி வெளியிட்டார்.மனித வாழ்வின் பொருளற்ற , அவலம் நிறைந்த வாழ்வு பற்றிய கதை அது.

1934 ல் அவர் PLAGUE பிளேக்/ கொள்ளைநோய் என்னும் கதையைப் பதிப்பித்தார். அநீதிகளை எதிர்த்துப் போராடும்படி மக்களுக்கு அறைகூவல் விடுக்கும் கதை  அது.

ஷான் பால் சாத்ர JEAN PAUL SATRE போன்ற இடதுசாரி எழுத்தாளர்களைப் போல அவர் புரட்சி செய்யச் சொல்லவில்லை. தார்மீகப் புரட்சி வேண்டும் என்று வாதாடினார். அரசியல் புரட்சியைவிட இது முக்கியமானது என்றார் . புரட்சிக்காரன் என்ற நாவலில் மக்கள் அவர்கள் செய்யும் செயல்களுக்கன தார்மீகப் பொறுப்பை ஈக்கவேண்டும் என்று சொன்னார்.

43 வயதில் அவர் கடைசி நாவலான தி ஃ பால் / வீழ்ச்சி என்ற நாவலை எழுதினார். முயற்சி செய்து, நடத்தை மூலமாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். தனி மனித முயற்சியின்போதும், சமுதாயத்தின் ஒரு அங்கம் என்ற நினைவு வேண்டும் என்கிறார்.

அவர் நாடகங்களை எழுதியபோதும் அவைகளுக்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆல்பர்ட் காமு ஒரு விபத்தில் சிக்கி இறந்தார்.

பிறந்த தேதி – நவம்பர் 7, 1913

இறந்த தேதி – ஜனவரி 4, 1960

வாழ்ந்த ஆண்டுகள் – 46

அவர் எழுதிய நூல்கள்,

1938- CALIGULA

1942- THE STRANGER

1942- THE MYTH OF SISYPHUS

1944 – CROSS PURPOSE

1947 – THE PLAGUE

1948- STATE OF SIEGE

1951- THE REBEL

1956- THE FALL

1958- EXILE AND THE KINGDOM

–SUBHAM–

tags- நோபல் பரிசு, பிரெஞ்சு நாவல், நாடக ஆசிரியர் ,ஆல்பர்ட் காமு, Albert Camus

விநாயக கவச அற்புதங்கள் ; கவசம் எழுதியது யார் ? (Post.9974)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9974

Date uploaded in London – 14 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹெல்த்கேர் ராஜா13 Aug 2021, 20:57 (8 hours ago) 
to me

அன்புடையீர், நமஸ்காரம்.

தங்களது கட்டுரையில் படித்த வரிகள்:

‘நான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தினமும் விநாயக கவசம் படித்து  வருகிறேன். இதில் மரீசி முனிவர் ஒரு அருமையான லிஸ்ட் list  கொடுக்கிறார்’.

விநாயக கவசம் காசிப முனிவர்

 எழுதியது தானே அவரது தகப்பனார் தானே மரீசி முனிவர். சிறிது சந்தேகம் விளக்கம் வேண்டி நிற்கிறேன் சுவாமி.

MY REPLY

நல்ல கேள்வி

திருநெல்வேலி ஹெல்த் கேர் HEALTH CARE பத்திரிகை ராஜா அவர்களின் கேள்விக்கு லண்டன் சுவாமிநாதன் பதில்.

கவசங்கள் அனைத்தையும் தொகுத்து 20-11-1962ல் முன்னுரை எழுதிய சு.அ இராமசாமிப் புலவர், தனது வாழ்வில் நடந்த அற்புதங்களை 6 பக்கங்களில் எழுதியுள்ளார். அதைத் தனியாக பின்னொரு சமயம் எழுதுகிறேன் 

முதலில் ஒரு அதிசய விஷயத்தைச் சொல்லிவிட்டு உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லுகிறேன்.

நான் வேலையிலிருந்து ஒய்வு பெற்று ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இப்பொழுது வயது 72-ஐத் தாண்டிவிட்டது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்திருக்கவேண்டும்.

நான் இரவு 9 மணி வாக்கில் பரடுக்கச் சென்றுவிட்டு காலை நாலு அல்லது நாலரை மணிக்கு எழுந்திருக்கும் பழக்கம் உடையவன் . நான் வசிக்கும் லண்டன் போன்ற மேலைநாட்டு நகரங்களில் படுக்கை அறைகள், மேல் மாடியிலிருக்கும். எனது படுக்கை அறையிலிருந்து காலை 4 மணிவாக்கில் கீழே காப்பி போட்டுக்குடிக்க இறங்கினேன். நமக்குத் தெரிந்த மாடிப்படிகள் தானே என்று, தினமும் மற்றவர்களைக் கஷ்டப்படுத்தாமல் இருப்பதாற்காக மின்சார விளக்குப் போடாமல் இறங்கினேன். ஒரு சின்னத்தப்பு செய்திருப்பேன். ‘தட தட’ என்று மாடிப்படியில் இருந்து உருண்டு விழுந்தேன். மாடியில் உறங்கிய எனது மனைவியும் மகனும் அலறிப்புடைத்துக்கொண்டு ஓடிவந்தனர். (லண்டனில் ஏதோ பூகம்பம் ஏற்பட்டுவிட்டது என்று எண்ணி!! பிரிட்டனிலும் அவ்வப்போது நில அதிர்வுகள் ஏற்படும். ஆனால் லண்டனில் எனக்குத் தெரிந்து 33 ஆண்டுகளில் ஏற்பட்டதில்லை ). நான் சிரித்துக்கொண்டே சமையல் அறைக்குள் புகுந்து காப்பி போடச் சென்றேன். விஷயத்தைக் கேட்டுவிட்டு  அவர்களும் சிரித்துவிட்டு, சுகமாகத் தூங்கப்போய்விட்டார்கள். பந்து போல மாடியில் உருண்ட எனக்கு ஒரு சிறிது காயமும் இல்லை. அந்த அதிர்ச்சியும் இல்லை. காலையில் அவர்கள் தூங்கி எழுந்து வந்தவுடன் நான் சொன்னது:  “நான் இவ்வளவு காலமும் படித்து வரும் விநாயக கவசம்தான் என்னைக் காப்பாற்றியிருக்கிறது” என்று.

இது போல சில சம்பவங்களை நூல் வெளியிட்ட ராமசாமிப்புலவரும் எழுதிவிட்டு இதை படிப்பவர்கள் ‘நகைக்கக்கூடும்’ என்றும் எழுதி இருக்கிறார்.

நகைப்பவர்கள் சிரிக்கட்டும்; கவசத்தைப் படிப்பவர்கள் சிறக்கட்டும்.

xxxxxxxx

இதோ உங்கள் கேள்விக்குப் பதில் :–

விநாயக கவசம் துவங்குவதற்கு முன்னர் அடைப்புக் குறிக்குள் உள்ள ஒரு பத்தியில் “முதலில் இக்கவசத்தை காசிப முனிவர் முற்கல முனிவருக்கு அருளிச் செய்தார். அவர் மாண்டவிய முனிவருக்கு அருளிச் செய்தார். அவர் மரீசி முனிவருக்கு அருளிச் செய்தார். அவர் பல முனிவர்கட்குத் திருவாய் மலர்ந்தருளினார் ………)

கவசம் முடிந்தவுடன் விநாயக கவசப் பலன் என்று மூன்று STANZAS பத்திகள் உள்ளன. பிற்கால கவச நூல்களில் இந்த 3 பாடல்களையும் வெளியிடவில்லை. அதில் கடைசி நான்கு வரிகள் கீழ்கண்டவாறு முடிகிறது .

“அன்புறுதி ஆசாரம் உடையார்க்கிக்

கவசத்தை அறைக அல்லார்க்கு

என்பெறினும் உரையற்க  எனக்கிளந்து

மரீசீதன திருக்கை யுற்றான்” .

ஆக நீங்கள் சொல்லுவது சரியே. காஸ்யப முனிவர்தான் இதை இயற்றியிருக்க வேண்டும். அது பின்னர் மரீசி முனிவருக்குக் கிடைத்து, அவர் வாய் வழியாகக் கேட்டு, நாம் சொல்லிவருகிறோம்.

இது போன்ற புதிர்கள் பல நூல்களில் உள்ளன. ஆயினும் நாம் மூல புருஷனின் பெயரையே பயன்படுத்துகிறோம். புராணங்கள் அனைத்தையும் சுதர் அல்லது சுத முனிவர் நமக்குச் சொல்லியதாகப் படிக்கிறோம்.ஆயினும் அவற்றை வியாசரே எழுதியதாக பின்னர் சொல்கிறோம். மநு தர்ம சாஸ்திரத்தில் பிருகு முனிவர் சொல்கிறார் என்று 2600 ஸ்லோகங்கள் வந்த போதும் அதை இன்றுவரை மநு சொன்னதாகவே எழுதுகிறோம். ஆராய்ச்சியாளர்கள் மட்டும் இது ‘ஒரிஜினல் மநு நூல் அல்ல’; பிற்காலத்தில் அது பிருகு முனிவரால் அப்டேட் UPDATE செய்யப்பட்டது என்று சொல்லுகிறார்கள் . இந்திய அரசியல் சாசனம் அம்பேத்கார் தலைமையிலுள்ள குழுவால் 1950ல் உருவாக்கப்பட்டது. அதில் நூற்றுக்கும் மேலான திருத்தங்கள் செய்யப்பட்டபோதிலும் அதை 1950ம் ஆண்டு அரசியல் சாசனம் என்றே நாம் அழைக்கிறோம்.

இவைகளைப் பார்க்கையில் மரீசி முனிவர் சொன்னதாக விநாயக கவசம் முடிந்தாலும் கவசத்தில் வராத முன்னுரை காசிப முனிவர் சொன்னதாகக் கூறுவதால் நீங்கள் சொல்லுவது சரி. இதையும் அந்தக்கட்டுரையின் பிற்பகுதியில் சேர்த்துவிடுகிறேன். நன்றி.

–SUBHAM–

 TAGS- விநாயக  கவசம் ,எழுதியது யார், கவச,  அற்புதங்கள் ,பலன்கள் 

மஹரிஷி அரவிந்தர் – 1 (Post No.9973)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9973

Date uploaded in London –  14 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 9-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம்.

மஹரிஷி அரவிந்தர் – 1

.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நம் கண் முன்னாலேயே வாழ்ந்து உலகை உயர்த்திய மகான்கள் ஏராளம்.  இவர்களில் அரவிந்தர் புதிய ஒரு பொன்னான உலகத்தை சிருஷ்டிக்கத் தன்னை அர்ப்பணித்த பெரும் மஹரிஷி!.

அரவிந்தப் புதிர்

சென்ற நூற்றாண்டு கண்ட பெரிய மஹரிஷி அரவிந்தர்.

ஆனால் அவரை உலகம் முழுதுமாக இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அல்லது புரிந்து கொள்ள முடியவில்லை.

அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதத் துடித்த ஒரு அன்பர் அவரை அணுகிய போது அவர் சொன்ன பதில்: என் வாழ்க்கை மக்கள் பார்க்கக் கூடிய அன்றாட வாழ்க்கை நிகழ்வில் இல்லை” என்று பதில் கூறினார்.

அது அகத்தின்  மூலம் அண்ட பிரபஞ்சத்தில் ஏற்படுத்திய மகத்தான முன்னேற்றம் என்பதாலும் பிரம்மாண்டமான சக்தியை யோகத்தின் மூல்ம் பூமியில் இறக்க முயன்ற மஹா யாகம் என்பதாலும் அநத வாழ்க்கையை மேற்பார்வையாகப் பார்த்து உணர முடியாது;அதை எழுதி விவரிக்க முடியாது. அரவிந்தர் விடுவிக்க முடியாத ஒரு புதிர்!

அவரது அணுக்கத் தொண்டராக வாழ்ந்தவர் நிரோத் பரன்.

சுமார் 4000 கடிதங்களை அரவிந்தரிடமிருந்து பதிலாகப் பெற்றவர்.

103 வயது என்ற அதிசயமான நிறை வாழ்வை வாழ்ந்தவர் அவர்.

அவரிடம் அரவிந்தர் ஒரு சமயம் நான் காலத்திற்கு முன்பாகத் தோன்றிப் பிறந்து விட்டவன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அரவிந்த ஞானம்

அவரது ஞானம் யாராலும் அளக்க முடியாத அளவு எல்லையற்றது. அவர் தொடாத நல்ல பொருளே இல்லை. விளக்காத விஷயமே இல்லை.

 அரவிந்த அன்னை ஒரு முறை இப்படிக் குறிப்பிட்டார்: “அவர் டைப்ரைட்டர் முன்னால் அமர வேண்டியது தான்; அனைத்து பிரம்மாண்டமான ஞானமும் தட தடவென அருவி போல அங்கு வந்து விழும்” என்றிருக்கிறார்.

     அன்னை அவர்களே தன்னாலும் அவரை முழுமையாகப் புரிந்து கொள்ள  முடியவில்லை என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.  சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக நான் அவருடன் ஆஸ்ரமத்தில் இருந்தாலும் அவரை முழுமையாகப் புரிந்து கொண்டவள் என்று சொல்ல முடியாது என்றிருக்கிறார்.

     இப்படிப்பட்ட ஒரு பெரும் மஹரிஷியைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து அவரது நூல்களைப் படிக்க வேண்டும்; அவரது உபதேச மொழிகளை ஓர்ந்து உணர்ந்து கடைப்பிடித்தல் வேண்டும்.

        அவரது அனுபவங்களும் அறிவுரைகளும் பொக்கிஷம் போல அப்படியே நமக்குக் கிடைத்துள்ளன என்பது இறைவனின் திருவருளாளும் நமது அதிர்ஷ்டத்தினாலும் என்றே கொள்ளலாம்.

      அரவிந்த கோஷ் என்ற இயற்பெயர் கொண்ட மஹரிஷி அரவிந்தர் 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மேற்கு வங்கத்தில் கல்கத்தாவில் கிருஷ்ண தன கோஷுக்கும் ஸ்வர்ணலதா அம்மையாருக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். தனது சகோதரர்களோடு டார்ஜிலிங் லோரெட்டோ கான்வெண்டில் சேர்ந்து படித்த அவர் 1879ஆம் ஆண்டு மேற்கல்வி கற்பதற்காக அவர்களுடன் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜில் சேர்ந்தார். 250 பேர் எழுதிய ICS தேர்வில் 11வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார். ஆனால் கிங்ஸ் காலேஜில் பயிற்சிக்காக சேர்ந்த அவர் அதில் ஆர்வம் இன்றி வேண்டுமென்றே தானாகவே தகுதியை இழந்தார்.   

      இந்தியாவின் சுதந்திர உத்வேகம் அவரை உந்தவே அங்குள்ள ரகசிய சங்கத்தில் உறுப்பினரானார். 1893இல் இந்தியா மீண்ட அவர் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடலானார். அவர் திரும்பிய கப்பல் விபத்துக்குள்ளாகி அவர் மறைந்தார் என்ற ஒரு தவறான தகவலைக் கேட்ட அவர் தாய் ஸ்வர்ணலதா தேவி மனம் பாதிக்கப்பட்டு நோயாளியானார்.

      இந்தியா திரும்பிய அரவிந்தர் பரோடா சம்ஸ்தானத்தில் பணியாற்ற ஆரம்பித்தார். ஏழு ஆண்டுகள் அங்கு பணி புரிந்த பின்னர் வங்காள தேசிய கல்லூரியில் முதல்வராகப் பணியாற்ற ஆரம்பித்தார். அப்போது கர்சான் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரிக்கவே ஒரு பெரும் எழுச்சி மக்களிடையே ஏற்பட்டது. இதனால் கொதித்த அரவிந்தர் இந்திய சுதந்திரப் போரில் தீவிரமாக ஈடுபடலானார். பல்மொழிகளில் வல்லுநர் என்பதாலும், ஏராளமான நூல்களைக் கற்றதனாலும் நுட்பமான அறிவைக் கொண்டிருந்ததாலும் தேசீய எழுச்சிக்கென பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தார். 1905ஆம் ஆண்டு வந்தே மாதரம் என்ற இதழை ஆரம்பித்தார். சந்திரபாலருடன் பல்வேறு கூட்டங்களிலும் பேசலானார். அவரது பேச்சாலும் எழுத்தாலும் மிரண்டு போன ஆங்கில அரசு அவரை 1907இல் கைது செய்தது. மீண்டும் 1908இல் அலிப்பூர் குண்டு வீச்சுக் கேஸில் அவர் கைது செய்யப்பட்டு ஒராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு கிருஷ்ண தரிசனம் கிடைத்தது. அத்துடன் சிறையிலேயே விவேகானந்தரின் குரலை அவர் கேட்டார். இனி என்ன செய்ய வேண்டும் என்ற ஆதர்சமும் அவருக்குச் சிறையில் கிடைத்தது. சிறையில் யோக சாதனையில் அவர் ஈடுபட்டார்.

     அரவிந்தர் எள்ளளவும் பயமின்றி கர்மயோகி என்ற ஆங்கிலப் பத்திரிகை மற்றும் தர்மா என்ற வங்கப் பத்திரிகை ஆகியவற்றின் வாயிலாக தேசீய உணர்வை எழுப்பலானார்.

     மீண்டும் பிரிட்டிஷ் அரசு அவரை கைது செய்ய முனைவதாக அவருக்குத் தகவல் கிடைத்தது. 1910இல் அவருக்கு அந்தராத்மாவின் குரல் தெளிவாகக் கேட்டது – “பாண்டிச்சேரிக்குப் போ என்ற அந்தக் குரலைக் கேட்டு அவர் புதுவை நோக்கிப் பயணமானார். பிரெஞ்சு காலனியாக இருந்த புதுவைக்கு அவர் வரவே அவர் மீதான கைது வாரண்டை பிரிட்டிஷ் அரசு ரத்து செய்தது.

    அரவிந்தர் 1910ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி புதுவை வந்து சேர்ந்தார். மஹாகவி பாரதியார் அவரை வரவேற்றார். எளிமையான ஒரு வீட்டில் முதலில் தங்கி இருந்த அரவிந்தர் தனது யோக சாதனையை ஆரம்பித்தார். பிரம்மாண்டமான இறைசக்தியை பூவுலகில் இறக்க முனையும் அந்த சாதனை மஹாயோகம் – Integral Yoga – எனப்பட்டது.

    நாளடைவில் அரவிந்தரின் யோக ஆற்றலால் ஈர்க்கப்பட்ட சாதகர்கள் ஏராளமாகப் பெருகவே ஒரு ஆசிரமம் அமைக்கப்பட்டது. பாரிஸில் பிறந்த மிரா அல்பாஸா என்ற பெயரைக் கொண்ட அன்னை தம் தியானத்தில் ஒரு மஹாபுருஷரைக் கண்டார். அவர் அரவிந்தரே என்பதை உணர்ந்த அன்னை புதுவையில் வந்து தங்க ஆரம்பித்தார். 1926இல் அரவிந்த ஆசிரமத்தையும் அவரே நிறுவியதோடு தான் சமாதியாகும் 1973ஆம் ஆண்டு வரை அதைத் திறம்பட நிர்வகித்தும் வந்தார். 1968ல் உலக சமாதானத்திற்காகவும் நலனுக்காகவும் ஆரோவில் என்ற ஒரு நகரையும் அன்னை உருவாக்கினார்.

        அரவிந்தர் தனது ஆன்மீக சிந்தனைகளை 1914 முதல் 1921ஆம் ஆண்டு முடிய ஆர்யா என்ற இதழில் எழுதி வரலானார். சாவித்திரி என்ற மஹா காவியத்தையும் படைக்க ஆரம்பித்தார்.

      அவரது சாவித்திரி காவியம் 24000 வரிகள் கொண்ட, மரணத்தை வெல்ல வழி வகுக்கும் ஒரு மஹா காவியம்.

      தன் இறுதி வரை அவர் பலமுறை தன் அனுபவத்தில் ஏற்படும் மேம்பாடுகளுக்குத் தக அதை மாற்றி மெருகேற்றிக் கொண்டே இருந்தார்.

அந்தக் காவியம் படிப்பதற்கு சுவையானது; ஆனால் கஷ்டமானது. புரிந்து கொள்ளச் சற்று சிரமமானது. பலமுறை படித்தால் ஒரு சிறிது பொருள் புரியும்; ஆன்மீக முன்னேற்றம் அடைய வழி வகுக்கும்.

·                                                                           தொடரும்

tags — மஹரிஷி ,அரவிந்தர்,

கந்த சஷ்டிக் கவசத்தில் ரிக் வேத வரிகள் !! (Post No.9972)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9972

Date uploaded in London – 13 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கவசங்கள் பற்றிய ஒரு புஸ்தகத்தின்  முன்னுரையைப் படித்தபோது அதை வெளியிட்டவர் “காஞ்சி சுவாமிகள் கவசங்கள் வேதத்திலேயே உள்ளது” என்று கூறியிருக்கிறார் என்று எழுதி இருந்தது. இப்பொழுது ரிக்வேதத்தின் ஜம்புநாதன்  அச்சிட்ட தமிழ் மொழிபெயர்ப்பில் ஏழு பாகங்கள் முடித்துவிட்டேன்; இன்னும் மூன்று பாகங்களைப் படிக்கவேண்டும் ஆயினும் காஞ்சி சுவாமிகள் சொன்னதுபோல ஆங்காங்கே குறிப்புகள் வருகின்றன.

பிராமணர்கள் தினமும் சந்தியாவந்தனம் என்ற  வழிபாட்டை/ துதியை மூன்று முறை செய்யவேண்டும் . அதில் மத்தியானம் செய்யும் துதியில் ‘பஸ்யேம சரதஸ் சதம்’ என்ற மந்திரம் வருகிறது. அதில்  ‘சரதஸ் சதம்’ என்ற சொல் 100 ஆண்டுகள் நான் சரத் ருது எனப்படும் மழைக்காலத்தை அனுபவிப்பேன் ஆகுக என்று வேண்டுவதாகும் . நீர் இன்றி அமையாது உலகு என்று வள்ளுவரும் திருக்குறளில் வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் மழையைப் போற்றுகிறார். இதை பிராமணர்கள் தினமும் மந்திரமாகச் சொல்கின்றனர். அடுத்துவரும் மந்திரத்தில் நீரின் மந்திர சக்தியும் வருகிறது (ஆபோ ஹிஷ்டா மயோ …). இங்கே கவசம் பற்றி மட்டும் காண்போம்.

‘100 ஆண்டுக் காலம் வாழ்க நோய் நொடியில்லாமல் வாழ்க’ என்று வேண்டும் மத்தியான மந்திரத்தில் கண், காது ,மனம் புத்தி, உடல் வலு வேண்டும் என்ற கவசப் பகுதிகள் வந்து விடுகின்றன.

இன்னும் பல இடங்களில் எனக்கு எது வேண்டும் என்ற இடத்தில் கை , கால், பாதுகாப்பு பற்றிக் குறிப்பாக வேண்டும் மந்திரங்கள் வருகின்றன

நான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தினமும் விநாயக கவசம் படித்து  வருகிறேன். இதில் மரீசி முனிவர் ஒரு அருமையான லிஸ்ட் list  கொடுக்கிறார்.

அந்த LIST லிஸ்டில்

“மதி, ஞானம், தவம் ,தானம் , மானம் , ஒளி , புகழ் , குலம் , வண் சரீரம்

தானம், தான்யம், , மனைவி, மைந்தர்”  என்ற வரிகள் வருகின்றன.

இந்த லிஸ்ட் ரிக் வேதத்தில் தனித்தனி மந்திரங்களில் வருகிறது.

ஆனால் ,

கந்த சஷ்டிக் கவசத்தில் எதிரிகளை எப்படி அழிக்க வேண்டும் என்ற வரிகள் வருகின்றன. அதில் உள்ள விஷயம் அப்படியே ரிக்வேதத்தில் வசிஷ்டர் சொல்லும் ஏழாவது மண்டல மந்திரத்தில் வருகிறது.

இதோ ஒப்பிட்டுப் பாருங்கள் :–

முதலில் உடல் உறுப்புகளைக் காக்கும்படி வேண்டிவிட்டு பின்னர் காலை முதல் இரவுவரை எல்லா நேரங்களிலும் காக்கும்படி வேண்டிவிட்டு இந்த வரிகள் வருகின்றன.:-

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்

அல்லற் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட

இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்

தண்டியக் காரரும் சண்டாளர் களும்

என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்

பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்

காசும் பணமும் காவுடன் சோறும்

ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட

படியினில் முட்ட பாசக் கயிற்றால்

கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு

கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு

முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட

செக்கு செக்கு செதில் செதிலாக

சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி

தணலெரி தணலெரி தணலது வாக

விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட

தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க

ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்

வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்

சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி

பக்கப் பிளவை படர்தொடை வாழை

கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லா தோட நீஎனக் கருள்வாய்

…………………………………………………

இதில் எல்லா நோய்களிலிருந்து பாதுகாப்பும் பாவ மன்னிப்பும் வேண்டப்படுகிறது

XXXXXXXXX

இதோ வசிஷ்டர் சொல்லும் மந்திரம் :–

ரிக் வேதம் 7-104

மந்திரம் 1 (7-104-1)

இந்திர சோமர்களே! அரக்கர்களை அழியுங்கள் இருளுக்கு இருள் சேர்க்கும் கீழானவர்களை வீழ்த்துங்கள்.புல்லர்களை அகற்றுங்கள். கொல்லுங்கள் ; தீக்கிரையாக்குங்கள்.

மந்திரம் 2

இந்திர சோமர்களே!  தீமை செய்பவனை ஒழியுங்கள்; யாகத்தில் போடப்படும் அவிஸ் எரிந்து சாம்பல் ஆவதைப்போல உங்கள் கோபம் அவர்களை சாம்பலாக்கட்டும்.. கடவுளை எதிர்ப்போரையும், கோணல் பார்வையுடைவனையும் மனிதர் மாமிசத்தை உண்பவனையும் வெறுத்து ஒதுக்குங்கள்.

மந்திரம் 3

துஷ்டர்களை ஆழ்ந்த இருட் குகைக்குள் அமுக்கி வெளியே வரமுடியாதபடி செய்யுங்கள்

மந்திரம் 4

துஷ்டர்களை /கெட்டவர்களை அழிக்கும் ஆயுதத்தை வானத்திலிருந்து வீசுங்கள்; எரிக்கும் தீயை மேகத்திலிருந்து செலுத்துங்கள்

(அவன் தலையில் இடி விழுக என்று நாம் திட்டுவது போன்றது இந்த மந்திரம்)

6

இந்திரனே சோமனே , நீங்கள் இருவரும் ரதத்தில் கட்டப்பட்ட இரண்டு குதிரைகள் போன்றவர்கள்; என் துதியை இரண்டு அரசர்களைப் போல ஏற்றுக்கொள்ளுங்கள்.

7. துரோகிகளான அரக்கர் களைக் கொல்லுங்கள் அவர்களுக்கு சுகமே வரக்கூடாது

8.என் மனம் சுத்தமானது ; பொய் சொல்பவனை , பழி கூறுபவனை கையில் உள்ள நீர் போல  வழிந்தோடச் செய்க

9.நான் சத்தியத்தைக் கடைப் பிடிப்பவன் ; என்னைப் பழிச் சொற்களால் துன்புறுத்துபவனை பாம்பு கடிக்கட்டும்; நிருதி என்ற துஷ்ட தேவதையிடம் அவனை அனுப்புங்கள்

10. திருடர்களும் கொள்ளையர்களும் சந்ததியின்றி அழிவார்களாகுக

11. இரவிலும் பகலிலும் எங்கள் நாசத்தை நாடும் அவர்களின் புகழ் கெடுக.

12.பொய் எது, உண்மை எது என்று அறியும் பகுத்தறிவு மனிதனுக்கு உளது. சோம தேவன் சத்தியத்தைக் காப்பாற்றி பொய்மையை அழிக்கிறான் .

14.நான் அசத்திய தேவர்களைப் போற்றினால் என்னை தண்டிக்கவும்

15. நான் அரக்கனாக இருந்தாலோ யாரையாவது துன்புறுத்தி இருந்தாலோ இன்றே நான் மரிப்பேனாக . என் மீது பொய்ப்பழி சுமத்துபவன் பத்து புதல்வர்களையும் இழக்கட்டும்

16.என்னை அரக்கன் என்று சொல்வோன் மிருகங்களுக்கும் கீழான நிலையை அடையட்டும்.

17. இரவில் ஆந்தை போல அலையும் பெண்கள்/அரக்கிகள் எல்லையற்ற குகையில் தலை கீழாக விழட்டும்

18.மருத் தேவர்களே ! இரவில் வந்து வேள்வியை அழிப்போரை தேடிக் கண்டுபிடித்து பொடிப் பொடியாக்குங்கள்

19.இந்திரனே வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு திசைகளிலுள்ள தீயோரை உனது வஜ்ராயுதத்தால் அழி .

20.நாய்களோடு வரும் கபடர்களை இந்திரன் வஜ்ராயுதத்தினால் அழிக்கிறான்

21.வனத்தில் மரங்களை வெட்டும் கோடாரியைப் போல, மண் பானைகளை உடைப்பது போல எதிரிகளை இந்திரன் அழிக்கிறான்

7-104- 22

ஆந்தை போலும் ஆந்தைக் குஞ்சு போலவும் உள்ள அரக்கர்களை அழித்து விடு

 நாய் போலவும் சக்ரவாகப் பறவை போலவும் உள்ள அரக்கர்களை அழித்து விடு

பருந்தைப்போல, கழுதையைப் போல  உள்ள அரக்கர்களை அழித்து விடு

23. ஆணவம் பிடித்த தம்பதிகளை உஷா தேவி விலக்குவாளாகுக  பூமியிலும் வானத்திலும் எங்களுக்குத் துன்பம் நேரிடக் கூடாது.

24.

ஆண் வடிவம் எடுத்து வரும் அரக்கனைக் கொல்.

மாயையில் மகிழும் அரக்கியைக் கொல்

கபடத்தால் துன்புறுத்துவோரை அழி

கொலை செய்வோரின் தலைகள் வெட்டப்படட்டும் .

அவர்கள் இனி சூர்யோதயத்தையே காணாமற் போகட்டும்

7-104-25

இந்திரனே, சோமனே ! இருவரும் விழித்து இருங்கள்; சுற்றுமுற்றும் பாருங்கள் .

இம்சையே செய்யும் அரக்கர்கள் மீது\ ஆயுதத்தைச் செலுத்துங்கள்.

கந்த சஷ்டிக் கவசத்திலும் ரிக் வேதத்திலும் அகமும் புறமும் உள்ள எதிரிகள், பகைவர்கள், நம்மைத் துரத்தும் தீய குணங்கள் ஆகியன அழிந்து சுபீட்சம் பரவ வேண்டும் என்பதே. இரண்டு துதிகளுக்கும் இடையே 3000 ஆண்டு இடைவெளி இருந்தாலும்  உடல் நலம், மன நலம் வேண்டுவதிலும் நம் மனத்திலும் வெளியிலும் உள்ள பகைவர்கள் ஓடி ஒழிய வேண்டும் என்று கோருவதிலும் ஒற்றுமையைக் காண்கிறோம். அவர்களை நாம் அரக்கர் என்போம், பேய் பூதம் என்போம்.

கந்த சட்டிக் கவசத்தில் நீண்ட நோய்களின் பட்டியல் ஒன்று உளது. இது போல அருணகிரி நாதரின் திருப்புகழிலும் வியாதிகள் பட்டியல் உளது . இவைகளை சொல்லி அழியட்டும் என்று வேண்டும்போது நாம் நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பாசிட்டிவ் positive thoughts  எண்ணமும் மேம்படுகிறது.

கவசத்தைப் படியுங்கள், வேதத்தை ஓதுங்கள்

-சுபம்–

கந்த சஷ்டிக் கவசம், ரிக்வேதம், RV 7-104, 

பில்ஹனா- கள்வனின் சிருங்காரப் பாடல்கள் 50! (Post No.9971)

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 9971

Date uploaded in London – 13 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

                                                                                                                                                  B.KANNAN,Delhi 

ஞானமயம் தமிழ் முழக்கம் அன்பர்களுக்கு தில்லியிலிருந்து கண்ணன், வணக்கம் பல. இன்றைக்கு நாம் பார்க்கப் போவது காஷ்மீரக் கவி பில்ஹனனைப் பற்றி.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பல புகழ் பெற்றச் சம்ஸ்க்ருதக் கவிஞர்களான, கல்ஹனா, பில்ஹனா, க்ஷேமேந்திரா, ராஜசேகரா,ரத்னாகரா மாத்ருகுப்தா ஆகியோரை நமக்கு அளித்துள்ளது.வடமொழி இலக்கியத்துக்கு அவர்கள் ஆற்றியப் பங்கு அளப்பரியது. இன்றைக்கு நாம் பில்ஹனாவைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம். தமிழ்ப் புலவர்கள் தமிழ்மொழியை அழகாகக் கையாண்ட விதத்தைக் கண்டு மகிழ்ந்தோம். அதுமாதிரி பில்ஹனா சம்ஸ்க்ருத எழுத்து ‘ப’ வரிசையின் நான்காம் மெய்யெ ழுத்தை வைத்து வார்த்தை ஜாலம் காட்டி மன்ன னையே எப்படி மிரளச் செய்தார் என்பதையும், அதன் தொடர்ச்சியாக அவர் இயற் றியச் சிருங்கார ரசம் மிளிரும் கவிதைத் துளிகளையும் கண்டு களிக்கப் போகி றோம். கட்டுரைத் தலைப்பில் உள்ளக் கள்வனுக்கும், கவிதைக்கும் இடையே யுள்ளச் சம்பந்தம் போகப்போகத் தெரியும்! அது ஆயிரம் ஆண்டுகள் கடந்த ஒரு காவியச் சுனை!

11-வது பொ.ஆ.பின் பிரவரசேனபுரம் எனும் தற்போதைய ஶ்ரீநகரில் கோன்முஷா கிராமத்தில் ஜேஷ்டகலசா-நாகராதேவி தம்பதிக்குப் பிறந்தவன் பில்ஹணன். புக்குண்டன் என்ற பெயரும் இவனுக்குண்டு. சிறு வயதிலிருந்தே கல்வி-கேள் விகளில் சிறந்து விளங்கி, சம்ஸ்க்ருத மொழியில் பாண்டித்யம் பெற்றவனாகத் திகழ்ந்தான். தன் கவியாற்றலை வெளியுலகத்துக்குக் காட்டத் தேசமெங்கும் யாத்திரை மேற்கொண்டான். புகழ் பெற்றப் பல பண்டிதர்களை மதுரா, பிருந்தா வனம், காசி, சோமநாதம், ராமேஸ்வரம் ஆகியவிடங்களில் இலக்கிய வாதப் போரில் வெற்றிவாகைச் சூடினான். காசியின் மிகப் புகழ் பெற்ற வித்வான் கோவிந்தாச்சாரியாரை வென்றது குறிப்பிடத் தக்கது.

“பாக்யேஷு நாஸ்தி ப்ரதிஷேதமார்க:” என்றக் கூற்றின்படி விதியின் மேல் அபார நம்பிக்கை வைத்திருந்தான். அதன் வழியே மதியைச் செலுத்தி அனைத்திலும் வெற்றி கண்டான். அவனது உணர்ச்சிமிக்கக் கவிதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அக்காலத்தில் இதற்கு ஒரு சொல்லடையே உண்டு.

“கிராமம், நாட்டுப்புரம், நகரம், காடு, சோலையில் வசிப்போர், பள்ளிக்கூட மாணவர், படித்தவர்,  முட்டாள், இளைஞன், வயதானவர் என அவன் கவிதை களைப் படித்து இன்புறாதவர்களை ராஜ்ஜியத்தில் காண்பது அரிது!” எனக் கூறப்படுவதுண்டு. கர்ணசுந்தரி எனும் நாடகத்தில் தன்னைப் பற்றிக் குறிப்பிடுகையில், “பாரதத்தின் சொர்க்கம் எனும் பூஞ்சோலையிலுள்ள ஒரு மரம் நான். அதன் வேர்களான வால்மீகி, வியாசர், காளிதாசன் ஆகியோரால் வளர்ந்தவன். இப்போது துளிர் விட்டு, பூ மலர்ந்து, காய்-கனிகள் நிறைந்த விருட்சமாக நிற்கிறேன்” என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறான். நாடகக் கலைஞர் நாராயண சாஸ்திரியார் எழுதிய நாடகம் “பில்ஹானியம்” கவியின் மூல சரிதத்தை விவரிக்கிறது.

வெற்றிக் களிப்பில் நாட்டைச் சுற்றி வருகையில் ஒரு சமயம் அவன் சௌராஷ்டிரப் பிரதேசத்தின் லக்ஷ்மி மந்திரம் என்னுமிடத்தை அடைந்தான். அவ்விடத்தை அரசாட்சி செய்துக் கொண்டிருந்த மன்னனைப் பற்றி இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. கவியைப் பற்றிக் கூறும் 164 பாடல்கள் கொண்ட “பில்ஹானியா” எனும் சிறு காவியம் ராஜா வீரஸிம்மன் என்றும், இளவரசி சந்திரலேகா எனவும் சொல்கிறது. “ரஹஸ்ய சந்தர்பா” என்ற மற்றொரு நூல் மன்னன் மதனாபிராமன், இளவரசி யாமினி பூர்ண திலகா என்றும் கூறுகிறது. சர்ச்சைக்குள் புகாமல், ராஜா, இளவரசி என்றே இங்குக் குறிப்பிடுவோம். 

அரசனிடம் தன் புலமையைக் காட்டி,பரிசில்களையும், அபிமானத்தையும் பெறுகி றான். இளவரசியின் இலக்கிய ஆர்வத்தை மேம்படுத்த பில்ஹன னையே ஆசிரியராக நியமிக்கிறான். ஆனாலும் அவன் மனதில் ஒரு நெருடல்-பெண்ணும் அழகானவள், கவியும் வசீகரமான இளைஞன் இருவரும் காதல் வயப்பட்டால் என்ன செய்வது? இரும்பும், காந்தமும் அருகே இருப்பது நல்ல தல்ல என்று நினைத்தவன் ஒரு திட்டம் தீட்டினான். அதன்படி, ஆசிரியர் பார்வை இழந்தவர் என்று மகளிடமும், இளவரசி கொடிய நோயினால் பீடிக்கப்பட்டவள் என்று கவியிடமும் சொல்லி வைக்கிறான். அவர்களுக் கிடையே ஒரு திரை மறைப்பை நிறுவுகிறான். படிப்பு தொடர்கிறது.

குரல் இனிமையும், அறிவாற்றலும் இருவரையும் ஒன்றிணைக்க முயல்கிறது. சரத் ருதுவின் களங்கமில்லாச் சந்திரன் பட்டொளி வீசி பவனி வரும் இரவு.

நிலவொளி அவனைக் கிறங்கடித்து விடுகிறது.”பாலுங் கசந்தடி, சகியே, படுக்கை நொந்ததடி, கோலக்கிளி மொழியும் செவியில் குத்தலெடுத்ததடி” என்ற உள்ளக் குமுறல், சந்திரனைப் பற்றியக் கவிதையாய் வெளிவந்தது! அதைக் கேட்ட இளவரசி திடுக்கிட்டாள். ஒரு குருடன் சந்திர ஒளியைக் கண்டு இப்படி அபாரமாகப் பாட முடியுமா எனச் சந்தேகம் கொண்டுத் திரையை விலக்கிப் பார்க்கிறாள் மெதுவாக.

இதோ காவிய நயம் மிக்க அப்பாடல்…

 “

निरर्थकं जन्मगतं नलिन्या     

यया न दृष्टं तुहिनांशुबिम्बम् । அதாவது,

துணையின்றி விடப்பட்டு, உணர்ச்சிகளை அமைதிப் படுத்தும் சந்திரனின் ஒளிக் கதிர்கள் படாமல் 

வெட்டேர்த்தியாகக் காலம் தள்ளும் அல்லித் தாமரையின் (ஆம்பல்) வாழ்வும் ஒரு வாழ்வா? என்று மறுகுகிறான் பில்ஹனன்.

இதைக் கேட்ட இளவரசியின் மனமும் கலங்கியது. “தூண்டிற் புழுவினைப் போல், வெளியே சுடர் விளக்கினைப் போல், நீண்டபொழுதாக எனது நெஞ்சம் துடித்ததடி!” என மனதுக்குள் புலம்பினாள்.ஆனாலும் இந்தச் சிஷ்யையும்  நாவன்மையில் குறைந்தவள் இல்லை என நிரூபிக்க, திரையின் மறுபக்கத்தி லிருந்து அவள் குரல் ஒலிக்கிறது.

இதற்குப் பதில் அளிக்கும் விதமாகப் பின் இரு வரிகளைச் சமஸ்யா பூர்த்தி முறையில் கூறுகிறாள் இளவரசி.

उत्पत्तिरिन्दोरपि निष्फलैव

कृता विनिद्रा नलिनी न येन ॥ அதாவது,

சந்திரனுக்கும் இது ஒரு பயனற்ற, பிரியோஜனமில்லாத வாழ்வே,

தூங்கும் அல்லியைக் குளிர்ந்தக் கதிர்களால் மிருதுவாகத் தடவி எழுப்பி விடத் தவறிவிட்டான், அல்லவோ!

என்று கூறியவாறு வெளிப்படுகிறாள். அவளும் நோக்கினாள், அண்ணலும் நோக்கினான் என்ற நிலை! உண்மை விவரம் தெரியவர , தனக்கு இனி அங்கு என்ன வேலை என்று மன்மதன் விலகுகிறான்.

இரு உள்ளங்களும் இணைகின்றன…..

ஒரு சாதாரண அன்றாடங்காச்சியை இளவரசி விரும்புகிறாள் என்பதை அரசனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எதை நினைத்துப் பயந்தானோ அது நடந்து விட்டதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பில்ஹன னைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிடுகிறான். சிவப்பு ஆடை தரித்து, கழுத்தில் சிவப்பு மாலை சுற்றிக் கொலைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறான்.

போகும்போது துடிதுடிக்கும் மனதில் அன்புக்கினியவளுடன் (நேரில் பார்க்காவிட்டாலும்) மகிழ்ச்சியுடன் கழித்த நாட்களை, எண்ணிப் பார்க்கிறான். உயிர் பறிபோகப் போகிறது,நரம்பில்லா வாத்தியத்தில் இசை எழுமோ, வாசிக்கத்தான் இயலுமோ என்றுத் தன்னையேக் கேட்டுக் கொள்கி றான். உள்ளத்திலிருந்து மடைதிறந்த வெள்ளம் போல் ரசனையுடன் கூடியக் காதல் மற்றும் சோகம் தோய்ந்தப் பாடல்கள் வெளிவந்தன. அவை இளவரசியின் உள்ளம் கவர்ந்தக் கள்வனின், வசந்ததாலிகா கவிதைச் சீரில் அமைக்கப்பட்ட 50 பாடல்கள், சோரபஞ்சசிகா, என்று அழைக்கப்படுகின்றன. காலத்தை வென்ற கவிதைத் துளிகள்! அவை ப்ரத்ருஹரி, அமருகா வடிவமைத்தப் பாடல் கவிதை இலக்கணத்தை ஒட்டி அமைந்துள்ளது என்பது அறிஞர்களின் கருத்தாகும். அனைத்துப் பாடல்களும் “அத்யாபி தாம்”–அப்போதும் கூட– என்றே ஆரம்பிக் கிறது. மாதிரிக்குச் சில:

 6-வது பாடலில்……

 அப்போதும் பிரிவாற்றாமையால் அவள் முகம் வாடி, வதங்கி

 கண்கள் ஒளி இழந்துள்ளது நினைவில் ஓடுகிறது     

 விழிகள் மூடி,ஆறுதலாக, ஆரஅரவணைத்து, அவள் கருங்கூந்தலால்

. என்னை அவளுடன் பிணைத்துக் கொள்ள விழைகிறேன்!

38-வது பாடலில் இப்படியும்…….    

கொலைக்களத்துக்குப் போகும் இவ்வேளையிலும் அவள் நினைவே என்னைப் பரவசப்படுத்துகிறது.

அவள் நிஜப் பெயர் எதுவாக இருக்கும்? ரதியோ, (அ) ஒருவேளை கிருஷ்ணரின் ராணி ஶ்ரீதேவியோ?

அவளைப் படைக்கும் போது பிரம்மா இப்படி நினைத்திருப்பாரோ?             

மூவுலகோரையும் ஈர்க்கும் முழுநிறைவான அழகுத் தேவதையாக இருக்க வேண்டும், என்று!

புலம்பித் தவிக்கிறான். கொலைமேடை நெருங்கிவிட்டது….

தண்டனை நிறைவேற்றப்பட்டதா? இங்குதான் கதையில் ஒரு எதிர்பாராதத் திருப்பம்,ட்விஸ்ட், வருகிறது! சோகத்தில்ஒரு,புன்னகை.,புக்குண்டன்,கவிதையைக் கேட்க மன்னனும் அவ்விடம்,வந்துவிடுகிறான். நாட்டின் பூபதியைப் பார்த்து பில்ஹனன் கடைசியாக ஒரு கவிதை சொல்கிறான். அதுவே அவன் தலையைக் காக்கிறது என்றால் மிகையல்ல!

பட்டிர்நஷ்டோ பாரவி ச அபி நஷ்டோ

பிக்ஷுர்நஷ்டோ பீமசேனோபி நஷ்ட:|  

புக்குண்டோ அஹம் பூபதி த்வம் ஹி ராஜன்

பம்பாவல்யாம் அந்தக சந்நிவிஷ்ட:||

காலன் ‘ப’ எழுத்துத் தொகுப்பில் வந்து விட்டான்,(அதிலுள்ள)

மனிதர்கள் ஒருவர் பின் ஒருவராக மடிகின்றனர்                               

பட்டி, பாரவி, பிக்ஷு, பீமன்,இதோ இப்போது நான், புக்குண்டன்

அடுத்து, பூபதி எனும் நீயல்லவோ, மன்னா!                                                                                   

‘ப’ தொகுப்பில் நான்காவது எழுத்து ‘ப'(bh)வை வைத்து அவன் செய்தச் சொல்லாடல் வியக்க வைக்கிறது. “இலக்கண மேதை பட்டி, கிராட்டார்ஜுனீயம் இயற்றிய பாரவி, பிக்ஷு எனும் சித்தார்த்தர்,,பண்டவர் பீமன், இதோ இப்போது நான்,

 புக்குண்டன் எல்லோரையும் யமன் முறை வைத்து வரிசைக் கிரமமாக உயிரைப் பறிக்கிறான்.(ப, பா, பி, பீ, பு, பூ என்று) அடுத்து நிச்சயமாக பூபதி உன் முறைதான் வருகிறது. என்னைக் கொன்றாலும் (அ) கொல்லாமல் விட்டாலும் 

உன் தலைக்கு மேல் வாள் தொங்கிக் கொண்டே தான் இருக்கும் என்று பயமுறுத்துகிறான். இனி எல்லாம் உன் கையில்,என்று 

மறைமுகமாக எச்சரிக்கிறான். கொலைக்களத்திலும் சாதுரியமாகப் பேசி நிலைமையைச் சமாளித்தப் 

புத்திகூர்மையை என்னவென்பது! மன்னனும் பில்ஹனனைப் பாராட்டி, தண்டனையை ரத்து செய்து, மகளையும் அவனுக்கே மணம் 

செய்துக் கொடுத்தான்.

இக்கதையின் தென்னாட்டுப் பதிப்பு மங்கலகரமாக முடிகிறது. ஆனால் காஷ்மீரப் பதிப்பில் முடிவு அரைகுறையாகத் தெளிவில்லாமல் இருக்கிறது. பில்ஹனன் தன் மனைவியைப் பற்றிப் பின்னாளில் எதிலும் குறிப்பிடாமல் இருந்தது ஏன் என்பது ஒரு புதிர் தான்!

பிறகு தன் புலமையை வெளிப்படுத்தப் பல பிரதேசங்களுக்குச் சென்று முடிவில் 6வதுவிக்ரமாதித்யன்அரசாண்ட,கல்யாணி,நகரைஅடைந்துஅவன்,அரசவையை அலங்கரித்தான்.விக்ரமாங்கசரிதம் என்றப் புகழ் பெற்றக் காவியத்தையும் இயற்றினான்.

தன் கடைசி நாட்களை வாராணசி கங்கைக் கரையில் கழித்ததாகச் சொல்லப் படுகிறது.

காலத்தை வென்ற ஒரு கள்வனின் காதல் கவிதை இது!

கொசுறுத் தகவல் மூன்று……..

பில்ஹணன் (1948) டி.கே.எஸ். சகோதரர்கள், எம்.எஸ்.திரௌபதி நடிப்பில், கே.வி. சீனிவாசன் இயக்கத்தில் வெளியானத் திரைப்படம். சந்தர்ப்பத்துக்கு ஏற்றப் பாரதியாரின் “தூண்டிற் புழுவினைப் போல்” பாடலை

பத்ம விபூஷண் திருமதி டி.கே.பட்டம்மாள் உணர்ச்சிப் பொங்கப் பாடியுள்ளார்.

சிலமாத இடைவெளியில் இதன் அடுத்த பதிப்பு, பில்ஹணா அல்லது கவியின் காதல் (1948), கே.ஆர்.ராமசாமி, ஏ.ஆர்.சகுந்தலா நடிப்பில், பி.என்.ராவ் இயக்கத்தில், பாபநாசம் சிவன் இசையமைப்பில் வெளியானது. சிவன் சார் எழுதிய “என் சசிகலா” பாடலைக் கொலைக்களத்தில் தன் குரலில் கே.ஆர்.ஆர். பாடுகிறார். இப்பாடல் தற்சமயம் கிடைப்பது அரிதாய் இருக்கிறது.

இவை இரண்டுமே மக்களின் ரசனையை அவ்வளவாகக் கவரவில்லை.

SHABAB-இளமை-(1954), பாரத் பூஷன், நூதன் நடிப்பில், நௌஷத் இசையமைக்க, அமீர் குஸ்ருவின் தத்வார்த்தப் பாடல் வரிகள் இழையோடும் 18 சோகம்,சிருங்கார ரசம் மிகுந்தப் பாடல்களை ஷகீல் பதாயூனி எழுதியுள்ளார். அவ்வருடம் பினாகா கீத் மாலா தர வரிசையில் 7-ம் இடத்தைப் பிடித்துள்ளது இதன் ஒரு பாடல்.

 tags -பில்ஹனா, கள்வன், சிருங்காரப்  பாடல்கள், Bilhana

2000 ஆண்டுக்கு முன் பாடிய ரோமானிய நையாண்டிப் புலவன் ஜுவெனால் (Post.9970)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9970

Date uploaded in London – 13 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதாலியின் தலைநகரான ரோம் ROME நகரிலிருந்து பல கொடுங்கோல் மன்னர்கள் ஆட்சி புரிந்தனர் ; அதற்கு முன்னர் நல்லோரும் ஆண்டனர். ஆனால் கண்ணகி போல வெகுண்டெழுந்து பகிரங்கமாக மன்னர்களைக் குற்றம் சாட்டியோரும் உண்டு. பலர் கவிதைகளையும், சொற் பொழிவுகளையும், நாடகங்களையும் அரசுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தினர் இரண்டு கொடுங்கோல் மன்னர்களை எதிர்த்துப் பாடி , அவர்களின் கோபத்துக்கு உள்ளான ஜுவெனால் Juvenal என்ற கவிஞரின் வரலாற்றைக் காண்போம்.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பா முழுதும் செல்வாக்கு பெற்று விளங்கியது ரோமானிய சாம்ராஜ்யம் (ROMAN EMPIRE). அதற்கு முந்தைய 500 ஆண்டுகளில் கிரேக்க சாம்ராஜ்யம் எப்படி கிரேக்க மொழி இலக்கியம் மூலம் ஐரோப்பிய சிந்தனையை வழிநடத்தியதோ அது போல அடுத்த 500 ஆண்டுகளுக்கு லத்தீன் மொழி இலக்கியம் வாயிலாக ஐரோப்பாவை செம்மைப்படுத்தியது லத்தீன் மொழி படைப்புகள். அந்த வரிசையில் சமுதாயத்தின் குற்றம் குறைகளை அச்சமின்றி உரைத்தவர் Juvenal  ஜூவெனால் ; அதையும் அழகாக கேலி, பகடி, நக்கல், கிண்டல் , நையாண்டி மூலம் , நம்ம ஊர் சோ CHO ராமசாமி போல நையாண்டி செய்து பாடல்களாகப் பாடினார்.

புலவருடைய முழுப்பெயர் டெசிமஸ் ஜூனியஸ் ஜூவெனாலிஸ்DECIMUS JUNIUS JUVENALIS . அக்காலப் புலவர்களைப் போல அவரும் நல்ல பணக்கார குடும்பத்தில்  பிறந்தார் .அதனால் நல்ல கல்வி வசதிகள் கிடைத்தன. தென் இத்தாலிய நகரான அக்வினத்தில் பிறந்தார் பின்னர் ரோமாபுரிக்குச் சென்று ‘பேசும் கலை’ பற்றிச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் ஆனார்.ரோமானிய ராணுவத்தில் கொஞ்ச காலம் பணியாற்றியதாகவும் தெரிகிறது .அவருடைய இளமைக் காலத்தில் ரோமானிய சாம்ராஜ்யத்தை நீரோ NERO மன்னனும் டொமிடியன் DOMITIAN மன்னனும் ஆண்டனர்.

இருவரும் நல்லாட்சி புரியவில்லை. மக்கள் மீது கடுமையான சட்ட திட்டங்களைப் போட்டனர். இந்தக் கொடுங்கோல் ஆட்சி மக்களுக்குச் சொல்லொணாத் துயர் கொடுத்தது. டொமீடியன் ஆட்சிக் காலத்தில் புலவர் ஜுவெனலுக்கும் ஏதோ ஒரு குற்றத்துக்காக தண்டனை கிடைத்தது ஒருவேளை அவர் சொற்பொழிவு ஆற்றுகையில் மன்னரைக் கடிந்து பேசியிருக்கலாம். ஊழல் மலிந்த ஆட்சியும் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையும் புலவரின் சீற்றத்தைத் தூண்டிவிட்டன. எடுத்தார் பேனாவை; தொடுத்தார் கவிகளை. பழைய ரோமானிய பண்பாடு மறைந்து போய்விட்டது. பணக்கார ரோமானியர்கள் ஆடம்பர வாழ்க்கையில்தான் அக்கறை கொண்டுள்ளனர்; மக்களின் நலனில் அல்ல என்று சாடினார் ; கவி பாடினார்.

ஆயினும் மன்னர் டொமீடியன் இறக்கும்வரை அவர் தனது கவிதைகளை அச்சிடவில்லை. கி.பி 110 வாக்கில் ஐந்து கவிதைத் தொகுதிகள் வெளியாயின.அப்போது புலவருக்கு வயது 55.

அடுத்த 20 ஆண்டுகளில் ஜுவெனால் 16 அங்கதப் பாடல்களை இயற்றினார். பணக்கார ரோமானியர்கள், சொகுசு வாழ்க்கை நடத்திய உயர்குலப் பெண்கள், ரோமானிய ராணுவம் என்ற பல விஷயங்களை சாடினார் . அவருடைய பெரும்பாலான தாக்குதல் டொமீடியன் மன்னர் மற்றும் அவருடைய ஆதரவாளர் மேல்தான் பாய்ந்தது .

பிறந்த  ஆண்டு –  கிபி.65

இறந்த ஆண்டு – கி.பி.140

வாழ்ந்த ஆண்டுகள் 75

எழுதிய கவிதைகள் ( 5 நையாண்டிக் கவிதைத் தொகுப்புகள் )

CE 110 – BOOK I (SATIRES 1-5)

116- BOOK II (SATIRE 6)

120- BOOK III (SATIRES 7-9)

125 – BOOK IV (SATIRES 10-12)

127 – BOOK V (SATIRES 13-16)

-SUBHAM-

  tags-  ரோமானிய, நையாண்டி, புலவன், ஜுவெனால், Juvenal

தேனீக்கள் இல்லாத உலகில் வாழ முடியாது! (Post No.9969)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9969

Date uploaded in London –  13 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்தில் தினமும் காலையில் ஒலிபரப்பா காலைமலரில் சூழல் சிந்தனைகள் பகுதியில் சமீபத்தில் ஒலிபரப்பான உரை இது. உரை எண் 8.

தேனீக்கள் இல்லாத உலகில் வாழ முடியாது!                                

  ச.நாகராஜன்

அருகி வரும் இனமான தேனீக்கள் பற்றிய ஒரு ஆச்சரியமான ஆனால் மிகவும் முக்கியமான செய்தி ஒன்று உண்டு. தேனீக்கள் இல்லையேல் மனித குலம் வாழ முடியாது.  

                                                                     உலகில் தேனீக்கள் முழுவதுமாக மறைந்து விட்டால் அடுத்த நான்கு வருடங்களில் மனித குலம் மறைந்து விடும் என்று உலகின் மிகப் பெரும் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியது உண்மை தான் என்பதை தொடர்ந்து செய்யப்படும் அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. உலகின் மிக முக்கியமான 87 பயிர் வகைகளில் 28 தவிர மற்ற அனைத்து முக்கியப் பயிர்களுக்கும் தேனீக்களின் மகரந்தச் சேர்க்கை இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. தேனீக்கள் இல்லையேல் இந்தப் பயிர்கள் அனைத்தும் வளராது. இதை உணவுக்கென நம்பி இருக்கும் மனித குலமும் பிழைக்காது. தேனீக்கள் இல்லையேல் பாதாம் பருப்பு விளையவே விளையாது. காப்பி செடியின் பூக்கள் மூன்று நாட்களுக்கு மட்டுமே மகரந்த சேர்க்கைக்காக திறந்திருக்கும். தேனீக்கள் இல்லையேல்  மனித குலத்திற்கு காப்பியே கிடைக்காது. ஆப்பிள், வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பழம் மற்றும் காய்கறிகள் தேனீக்களாலேயே வளர்கின்றன; மனித குலத்திற்குப் பயன் தருகின்றன. உலகெங்குமுள்ள விவசாயிகள் பெரிதும் நம்பும் விவசாயத்தைக் காக்கும் தேனீக்கள் ஏன் அழிகின்றன?

இதற்கான காரணம் விளைநிலங்களில் போடப்படும் தவறான உரங்களே. நிகோடின் என்ற நச்சுப் பொருளுக்குச் சமமான நியோனிகோடினாய்ட்ஸ் (Neonicotinoids) என்ற உரம்தேனீக்களைக் கொல்லும் ஆற்றல் படைத்தது. இவை விளைநிலங்களிலும் தோட்டங்களிலும் பயன்படுத்தப்படும் போது தேனீக்கள் அழிகின்றன.                                   மலர்கள் இல்லையேல் தேனீக்கள் இல்லை; அது போலவே தேனீக்கள் இல்லையேல் மலர்கள் இல்லை.    

                                                      அன்றாடம் பல்லாயிரக்கணக்கானோர் தேனீரை அருந்தி விட்டுத் தூக்கி எறியும் பேப்பர் கப்களில் ஒட்டிக் கொள்ளும் தேனீக்கள் கொல்லப்படுகின்றன. இப்படிப் பல்வேறு காரணங்களால் அருகி வரும் தேனீ இனத்தைக் காக்க தீவிரமான ஒரு இயக்கம் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது வரவேற்க வேண்டிய ஒரு செய்தியாகும். நம்மை வாழ வைக்கும் தேனியை வாழ வைக்க வேண்டியது நமது கடமை அல்லவா?     அனைவருக்கும் குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு இந்தச் செய்தியைச் சொல்லி மலர்களைக் காக்கும் தேனீக்களை வாழ வைப்போம்.  

–SUBHAM–

 tags – தேனீக்கள், தேனீ

WHAT IS THE COLOUR OF DRAVIDAS? BHARATA MUNI REPLIES (Post.9968)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9968

Date uploaded in London – 12 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

List of ornaments in Natyasastra

Ornaments for Men, Slokas 15-20; Chapter 23, Natyasastra by Bharata

Crest jewel and crown for the head,

Ear ring, ear pendant and ear top for the ears,

Strings of pearls, stringed gold and Harsaka/snake shaped one for the neck,

Bracelet and signet rings for hands and fingers,

Armlets and armbands for above the elbow,

Three stringed necklace to hang on the chest ,

Suspended Pearl necklaces and Garlands etc

Talaka to be worn below the navel and

Golden thread for the waist.

This is how the male characters,viz.that is Gods and Kings should wear ornaments

My comments

This is not an exaggeration. If one looks at the statues and sculptures at Bharhut, Sanchi, Amaravati and at the paintings in Ajanta, Sittannavasal and Sigiria in Sri Lanka and other places, one will feel the ornaments mentioned by Bharata is only 50 percent. There is more to it.

Look at the pearls used for men and women. It shows South Indian, particularly, Tamil influence. Pearls are available in Gulf of Mannar in Tamil Nadu. In the olden days they were getting from the coast of Gujarat as well.

The word Pearl has link to Tamil PARAL.

xxx

Ornaments for women

Slokas 21-41, Bharata says,

“I shall now speak about the ornaments for females.

Sikhapasa, Sikhajala/ ornaments for tresses,

Pindi patra/ feather for the forehead, crest jewel,

Pearl net with large meshes,hair net are the ornaments for head.

Ear rings , peacock feathers, braids of hair stringed,

Karnika, Karna balayage, Patrakarnika, ring round the ears and ear lotus,

These made by various pearls and ivory for the ear.

The tilak Mark on the forehead in an artistic way.

On the eye brows, marks in the shape of a flower,

Tilaka and Patra lekha/ designs of leaves on cheeks

And the Triveni for the breast.

Collyrium is to be applied to the eyes and red to the lips,

Teeth must have various colours, but four of them to remain white,

So that the whiteness is emphasised by contrast .

For innocent and beautiful women, teeth white like pearls or teeth must be red like lotus petals.

(Pearly Teeth/ Muthup Pal is a Tamil Expression.)

With the colour of Asma/ a kind of stone, their lips would look like as beautiful as sprouts.

The Pearl necklace, the snake necklace, the Manjari, the jewel necklace and the jewel string are the ornaments for the neck. So also is the necklace with two or more strings of gold.

Garlands made of different jewels as well as one studded with pearls will be for breast.

xxx

Make up for Different Characters including Dravidas

Slokas 90-108

One should paint the body according to the region, custom, and age of the character.

Gods Yaksas, Apsaras and Rudras, Brahma and Skanda are to be painted in Gaura/ pale red colour.

Moon, Brhaspati , Venus, Varuna, the stars, ocean, Himalayas and Ganga are to be painted white.

Mars should be red , Mercury and fire yellow.

Narayana and Nara and Vasuki- blue.

Daityas, Danavas, Rakshasas, Guhyakas, mountains other than Himalayas, Pisascas, sky and Yama must be painted dark blue.

The Yaksas, Gandharvas,, the Bhutas, Pannagas,Vidhyadharas,Pitrs/ancestors and monkeys in various colours.

Gods and others, snakes and the other animals ,mountains, rivers, some weapons- all these are treated as living human beings for the sake of drama.

Human beings who dwell on seven continents ( except our own Jambudwipa) are to be painted in burnished gold.

When he comes to Bharata varsha,,Bharata says the following,

Following colours are used

Kings- pale red, dark blue or lotus colour

Happy people- pale red

Vile people, possessed, diseased, inferior births- a sita/ not fair

Sages- plum coloured,

Kirata, Barbara, Andhdra , Dravida, People of Kasi, Kohala, Pulindha and southerners- asi ta / not fair

Sakas,Yavanas,Pahlavas,Bahlikas – pale red complexion

Pancalas, surasenas, Mahisas, Odras, Maghadas, Angas, Vanga and

Kalingas – dark blue complexions

and

Bharata continued the chapter with the details of beards and moustaches.

xxxxx

My comments

Look at the variety of ornaments ancient Hindus used. 2300 year old sculptures and paintings prove what Bharata said is right.

As I mentioned earlier Greek did not influence us; we developed our own dance dramas independently. Colour plays a big role in makeups.

There is no Arya- Dravida racial division.

Cheras, Cholas and Pandyas are missing, because here geographical divisions only are given. More over the kingdoms mentioned here are very ancient, mostly found in Mahabharata.

I commented on the Dialogue poems of Rig Veda, about 20 hymns, as Proto Dance Dramas in one of my articles. One of the Dialogue poems is Dialogue with Rivers. Here Bharata says treat all the animals and inanimate objects in drama as human beings. So one man  or woman will come on stage to represent a river or a mountain. This shows that Rig Vedic dialogue poem with Rivers was also acted by Rishis at the end of or during the Yagas. According to Rig Vedic commentators, some Yagas were done for a whole year or more than a year.

— Subham —

tags — Colours Dance, Dramas, Dravida, Bharata, Men ,ornaments, Woman, ornament 

ஜேம்ஸ் பாண்ட் புகழ் நாவல் ஆசிரியர் இயன் பிளெமிங் (Post No.9967)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9967

Date uploaded in London – 12 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜேம்ஸ் பாண்ட் JAMES BOND திரைப் ப்டங்களைப் பார்க்காதோர் இருக்கலாம். ஆனால் அதுபற்றி அறியாதோரும் இல்லை; கேள்விப்படாதோரும் இல்லை. பிரிட்டிஷ் ரகசிய ஏஜண்ட் SECRET AGENT 007 JAMES BOND ஜேம்ஸ் பாண்டை உருவாக்கியவர் இயன் பிளெமிங் IAN FLEMING என்ற ஆசிரியர் ஆவார். அவர் எழுதிய  அத்தனை ஜேம்ஸ் பாண்ட் நாவல் களும்  திரைப்படங்கள் ஆகி வெற்றி நடையும் போட்டன. அடுத்த திரைப்படம் எப்போது வரும் என்று ரசிகர்களைக் காக்கவைக்கும் அளவுக்கு ருசிகரமானவை. இவற்றின் மூலம் புகழ்க்கொடி நாட்டிய நடிகர்கள் பலர் ஆவர்.

இதே ஆசிரியர் சிறுவர் சிறுமியருக்காக எழுதிய ‘சிட்டி சிட்டி பாங் பாங்’  CHITTY CHITTY BANG BANG  என்ற நவீன கால தேவதைக் கதையும் திரையுலகில் வெற்றி பெற்றது .

தென் கிழக்கு இங்கிலாந்திலுள்ள கான்டர்பரி CANTERBURY என்னும் ஊரில் பிளெமிங் பிறந்தார் . அவருடைய தந்தை,  முதல் உலகப் போரில் காலமானார். பிளெமிங் , பணக்காரப் பிரபுக்கள் பயின்ற ஈடன் ETON கல்லூரியில் படித்தார். அங்கு அவர் படிப்பு சுமார்தான். ஆயினும் விளையாட்டு விஷயங்களில் முதல் வரிசையில் நின்றார். பின்னர் புகழ் மிகு சாந்தர்ஸ்ட் ராணுவப் பள்ளியில் SANDHURST MILITARY ACADEMY படித்துவிட்டு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பல மொழிகளைக்  கற்றார் .

அவர் எடுத்துக் கொண்ட முதல் வேலை ராய்ட்டர்ஸ் REUTERS  செய்தி நிறுவனத்தின் மாஸ்கோ நிருபர் வேலை ஆகும். அங்கு தான் பிளெமிங்கிற்கு உளவாளிகளின்  ரகசிய உலகம் பற்றி பரிச்சயம் ஏற்பட்டது; இந்தத் தொடர்புகள் பிற்காலத்தில் அவருக்கு ரகசிய ஏஜண்டுகள் பற்றி எழுத உதவியது. லண்டனுக்குத் திரும்பி வந்தவுடன் பாங்குகளில் பணியாற்றினார். ஸ்டாக்ப்ரோக்கராகவும் STOCKBROKER இருந்தார். இரண்டாவது உலகப்போர் காலத்தில் கடற்படை உளவு அதிகாரியாக SENIOR NAVAL INTELLIGENCE OFFICER வேலை செய்தார். அப்போது  உளவு வேலைகளின் சூட்சுமம் முழுதையும் அறிந்தார். இவைகளை வைத்து ஏன் ஒரு நாவல் எழுத க் கூடாது என்ற எண்ணம் உதித்தது. இரண்டாவது உலக மகா யுத்தம் முடிந்து 9 ஆண்டுகள் ஆன தருவாயில், ‘காஸினோ ராயல்’ என்ற முதல் நாவலை எழுதினார் . அப்போது அவருக்கு வயது 46.

பிரிட்டிஷ் ரகசிய ஏஜெண்ட் தோன்றும் 12 நாவல்களையும், 7 சிறுகதைகளையும் படைத்தார். அவை அனைத்தும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப்  பெற்றன. ‘டாக்டர் நோ’ என்ற திரைப்படம் 1963-ல் வெளியானவுடன் ஜேம்ஸ்பாண்டின் புகழும் அவரை உருவாக்கிய இயன் பிளெமிங் புகழும் உலகம் முழுதும் பரவின.

இந்தக் கதைகளும் திரைப்படங்களும் பெரிய வெற்றி அடைய க் காரணங்கள் – ஜேம்ஸ்பாண்டின் சாகசச் செயல்கள்; இக்கட்டான நிலையில் தப்பிக்கக் கையாளும் சாதுர்ய வழிகள் , அவருடன் தொடர்பு கொள்ளும் அழகிகள், ஜேம்ஸ்பாண்ட் கையாளும் அதி நவீன உளவு சாதனங்கள்,  மற்றும் அந்தச் செயல்கள் நடைபெறும் கவர்ச்சியான இடங்கள்.

பிளெமிங் இறந்த பின்னரும் அவர் புகழைப் பரப்பிக்கொண்டிருக்கிறார் கற்பனைக் கதாநாயகன் ஜேம்ஸ் பாண்ட் .

பிறந்த தேதி  – மே 28, 1908

இறந்த தேதி –  ஆகஸ்ட் 12, 1964

வாழ்ந்த ஆண்டுகள் – 56

எழுதிய நாவல்கள், கதைகள் :–

1954 – CASINO ROYALE

1954 – LIVE AND LET DIE

1955 – MOONRAKER

1956 – DIAMONDS ARE FOR EVER

1957- FROM RUSSIA WITH LOVE

1958 – DR NO

1959 – GOLDFINGER

1961- THUNDERBALL

1964 – YOU ONLY LIVE TWICE

1964 – CHITTY CHITTY BANG BANG

சுபம்

TAGS- ஜேம்ஸ் பாண்ட் , நாவல் ஆசிரியர், இயன் பிளெமிங், IAN FLEMING, 007

சுந்தரர் வாழ்வில் அருளும் பொருளும் (Post No.9966)

WRITTEN BY DR M S SRI LAKSHMI, SINGAPORE

Post No. 9966

Date uploaded in London – 12 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுந்தரர் வாழ்வில் அருளும் பொருளும்

                    முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி

மூவர்தமிழ் எனப்போற்றப்படும் தேவாரத்தில் சுந்தரர் தேவாரத்தைத் “திருப்பாட்டு” என்று சொல்லும் வழக்கம் உண்டு. தேவாரம் பாடிய  இம்மூவரையும் ஒப்பிட்டுச் சொல்லும்போது “சம்பந்தர் தன்னைப் பாடினார்; அப்பர் என்னைப் பாடினார்; சுந்தரர் பொன்னைப் பாடினார்”  என்று இறைவனே  சொன்னதாகச் சொல்லப்படும் வழக்கும் உண்டு.  கைலாயத்தில் இறைவனின் அணுக்கத்தொண்டராய் விளங்கிய  ஆலாலசுந்தரர் பூவுலகில் சுந்தரமூர்த்தியாக அவதரித்தார்.சுந்தரம் என்பதற்கு அழகு என்று பொருள். சுந்தரர் போலவே சுந்தரர் அருளிய திருப்பதிகங்கள் அழகானவை;இசைநயம் மிக்கவை;இலக்கியச்செழுமை கொண்டவை. பொன்வேண்டிப் பாடியவை, வஞ்சப்புகழ்ச்சியாகப் பாடியவை என்பனவற்றைச் சுந்தரர் தேவாரத்தின் சிறப்பு இயல்புகளாகக் கூறினாலும் இவருடைய பக்திச்சிறப்பு வியக்கத்தக்கது. “மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்” எனச் சிவனடி மறவாச் சிந்தையும், “ “நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே” என்று ஐந்தெழுத்தை உச்சரிக்கும் நாவும் கொண்டவர் சுந்தரர். தன்முனைப்பு சிறிதும் இல்லாத காரணத்தால் சிவபெருமான் அவருக்கு எளிவந்த பிரான் ஆனார்; சுந்தரரோ தம்பிரான் தோழர் ஆனார். பொதுவாகச் சிவனடியார்கள் ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குபவர்கள். அப்படியிருக்க சுந்தரர் தேவாரத்தில் அருளும் பொருளும் என்ற தலைப்பில் நான் பேசத் துணிந்ததற்குத் “ திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன் சீருடைக் கழல்கள் “ என்று பாடிய  பக்திப்பெருநோக்கே காரணமாகும்.  

மாதொருபாகனாம் சிவபெருமானுக்கு வழிவழி அடிமை செய்யும் வேதியர் குலவிளக்கான சடையனார்க்கும் இசைஞானியார்க்கும்  தமிழ்நாடு செய்த தவப்பயனாய்த் தோன்றியவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சுந்தரரின் அவதார நோக்கத்தை “ தீதகன்று உலகம் உய்யத் திருவவதாரம் செய்தார் “ என்று பாடுகிறார். திருத்தொண்டத்தொகை என்னும் சீரிய நூலைப் பெறுவதற்காக “ மாதவம் செய்த  தென்திசை  வாழ்ந்திடத் தீதிலாத் திருத்தொண்டத்தொகை தர” நம்பியாரூரர் அவதரித்தார் என்கிறது பெரியபுராணம்.சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பக்திமேம்பாடு காரணமாக  அவர் ‘வன்தொண்டர்’ என்னும் சிறப்புப்பெயரால் அழைக்கப்பட்டவர். இவர் சகமார்க்கம் தோழமை நெறியால் இறைவனை வழிபட்டவர். சைவசமயக்குரவர் நால்வருள்ளும் ஒப்பீட்டு முறையில் நோக்கும்போது இவர் மற்ற மூவரை விடவும் உலகவாழ்வின் இன்பங்களைப் பெற்று மகிழ்ந்து  சிவனைப் பாடி மகிழ்ந்தவர். பெரியபுராணத்தின் பெருந்தலைவராய் விளங்கும்   இப்பெருமானின் பாடல்களில் மற்ற மூவரின் பாடல்களைப்போலப் பேரளவில்   உலகவெறுப்பையோ, துறவையோ காணமுடியாது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். சுந்தரர் அறக்கருத்துகளாகக் கூறியுள்ளார்.

 “ பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா !

        எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை

        வைத்தாய்பெண்ணைத்தென்பால்வெண்ணெய்நல்லூர்

                                               (அருள்துறையுள்

        அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே”

எனப் பாடிச் சிவபெருமானுக்கு மீளா அடிமை ஆனவர். “அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்னும் மணிவாசகர் மணிவாக்கை உள்ளத்தில் நினைந்து சுந்தரரின் பித்தா பிறைசூடி என்னும் பதிகத்தை நோக்கினால் சுந்தரரின் பக்திச்சிறப்பும்  அவர் பெற்ற அருள்திறமும் நமக்குப் புலப்படும். சுந்தரரின் உள்ளத்தில் இறைவன் பேரருளோடு தன்னை வைத்து  ஆட்கொண்டதால் இப்பதிகம் “பேரருள் பேசும் பதிகம்” என்று சமயச்சான்றோர்களால் போற்றப்படுகிறது.

திருத்தலப்பயணங்களை  மேற்கொண்டு பல தலங்களுக்கும் சென்ற நம்பியாரூரர் திருத்துறையூர்ப் பதியில் எழுந்தருளி உள்ள  சிட்டகுருநாதப் பெருமானிடம் “ உன்னை வேண்டிக்கொள்வேன் தவநெறியே “என வேண்டுகிறார்.நம்பியாரூரர் இறைவனைவழிபட்டு  நமக்கெல்லாம் வழிகாட்டுகிறார். சுந்தரரின் வழிபாட்டு நெறியை நமக்குக் கண்முன்னே சித்திரமாக வடித்துக்காட்டுகிறார் சேக்கிழார் பெருமான்.

   “ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள

      அளப்பரும் கரணங்கள் நான்கும்

   சிந்தையே  ஆகக் குணமொரு மூன்றும்

      திருச்சாத்  துவிகமே  யாக

   இந்துவாழ் சடையான்  ஆடும்

     எல்லையில் தனிப்பெருங் கூத்தின்

   வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து

      மாறிலா  மகிழ்ச்சியில் மலர்ந்தார் “

இறைவனின் அருட்கருணையைப்   பெற ஐம்புலன்களும் அந்தக் கரணங்களும்  பேரின்பவெள்ளத்துள்  திளைத்து மகிழ்ந்திருக்கவேண்டும். “ஆரூரில் அம்மானுக்கு ஆளாகிய ஆரூரன் அடியவர்க்கெல்லாம் அடியவன்” என்று இறையடியார்களை வழிபடும் சங்கமவழிபாட்டிலேயும் தலைநின்றவர். மிகுந்த தன்னடக்கத்துடன் ஆண்டவனின் பெருமையை அறியாதது போலவே அடியார்களின் பெருமையையும் அறியாத எளியேன் என் சொல்லிப் பாடுவேன் என்றபோது தியாகேசப்பெருமான் அவருக்கு “தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்”என்று  அடிஎடுத்துக் கொடுக்கிறார். திருவாரூரில் இறைவன் தன்னைச் சுந்தரருக்குத் தோழனாகக் கொடுத்தான். இது எப்பேர்ப்பட்ட பேறு! சாமான்யமாகக் கிடைக்கக்கூடிய பேறா?  உலகுக்கே  தலைவனாய்  இலங்கும் ஒப்பற்ற பரம்பொருள் சுந்தரரின் தோழர் ஆகிறார். சுந்தரருக்கு இறைவன் அருளிய  திறத்தை “ முத்திநெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்,சித்தமெலாம் அறிவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன் எனக்கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே “ என மணிவாசகர் வியப்பதுபோல நாமும் வியக்கிறோம். இறைவனே தோழனாகிவிட்டார்.அப்புறம் என்ன !  சுந்தரர் பொருட்டுப் பரவையாரிடம் காதல் தூது செல்கிறார்.ஆகவேதான் சுந்தரர் ”பரவை என்னும் என் காதலிக்கும் எனக்கும் பற்றாக உள்ள பெருமானே” என்று பாடுகிறார். நட்பின் உரிமையால் சிவபெருமானிடம் பொருளை வேண்டிப்பெறுகிறார். இன்று விருத்தாசலம் என்று வழங்கப்படுகின்ற திருமுதுகுன்றத்தில்  “நஞ்சியிடை” என்று தொடங்கும் பதிகம் பாடிப் பொருள் வேண்டுகிறார்.  உன்னுடைய  அருள் இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என்று காத்துக்கிடக்கும்  உன் அடியார்கள் இறந்துபோய்விட்டால் நீ வழங்கும் அருள் பயன் இல்லாமல் போய்விடும்.பஞ்சியிடைப் புட்டில் கீறுமோ?ஆகவே இன்றே இப்போதே அருள்செய் என்று பன்னீராயிரம் பொன்னை வேண்டிப்பெற்றார்.அதுவும் அந்தப் பொன் எல்லாம் பரவையார் வீட்டில் இருக்கவேண்டும் என்று வேண்டுகிறார். பரம்பொருளும் அசரீரியாக இங்குள்ள மணிமுத்தா ஆற்றி  ல்போட்டுத் திருவாரூர்க் கமலாலயத்தில்  பெற்றுக்கொள்க  என்கிறார். இந்தத் திருவிளையாடலைக் குறிக்கும் வகையில் “ ஆற்றிலே போட்டுவிட்டுக் குளத்திலே தேடுவதுபோல்” என்ற சொலவடையே மக்களிடம் வழங்கப்பெறுகிறது.

பங்குனி உத்திரப் பெருவிழாச் செலவுக்காகப் பொருள் வேண்டும்  சுந்தரர் பெருமானுக்கு. அவர் திருப்புகலூர்த் தலத்திலே இறைவனை  வழிபட்ட பின் அங்குள்ள மண்டபத்தில்     தலைக்குச் செங்கற்களை வைத்தபடி உறங்கிவிடுகிறார். அவர் நித்திரை கலைந்து விழித்துப் பார்க்கும்போது செங்கற்கள் தங்கக் கற்களாக மாறிவிடுகின்றன. உடனே பரம்பொருளின் அருள்திறம் வியந்து  பொன்செய்த புனிதனைப் பாடுகிறார்.

   “தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்

      சார்வினும் தொண்டர் தருகிலாப்

   பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை

       புகலூர் பாடுமின் புலவீர்காள்

   இம்மையே தரும் சோறும் கூறையும்

      ஏத்தலாம் இடர்கெடலுமாம்

   அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு

       யாதும் ஐயுறவு இல்லையே “ 

என்று பாடுகிறார்.  சுந்தரர் வாழ்வில் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் அல்லது அவர் வாயிலாக இறைவன் நிகழ்த்திய அற்புதங்கள் பற்பல. பொன்னும் பொருளும் பெறுவதற்கு  மட்டும் இறைவனைப் பாடியதாக இளையர்கள் எண்ணிவிடக் கூடாது. இரு கண்பார்வையையும் இழந்தபோது ஒரு கண் பார்வையைத் திருவாரூரிலும் மற்றொரு கண்பார்வையைக் காஞ்சிபுரத்திலும் பெற்றார். இவர் அவினாசியில் முதலை உண்ட பாலனை எழுப்பினார். இவருக்காகக் காவிரி ஆறு இரு கூறாகி நின்றது. வெள்ளை யானை மீது அமர்ந்து சேரமான் பெருமாள் நாயனாரோடு கைலாயம் சென்றது போன்ற அற்புதங்கள் சுந்தரர் வாழ்வில் நிகழ்ந்ததற்கு இறையருளே காரணம் என்பதைச்சொல்லவும் வேண்டுமோ?. இந்த அற்புதங்கள் எல்லாம் சிவபக்தியாலும் சிவனருளாலுமே சுந்தரர்க்கு வாய்த்தன.வீரத்தின் மிடுக்கு இல்லாதவனை வீமன் என்றும் அர்ஜுனன் என்றும் புகழ்வதால் பயன் என்ன? கொடுக்கிலாதானைப் பாரி என்று புகழ்வதால் பயன் என்ன? இப்படிப் பல கேள்விக்கணைகளைத் தொடுத்து “மன்னா மனிசரைப் பாடாமல்” பரம்பொருளைப் பாடி உய்திபெறுங்கள் என்பதே சுந்தரர் வாழ்வு நமக்குச் சொல்லும் பாடமாகும்.

                         முற்றும்

tags- சுந்தரர் வாழ்வு