அதிசயஒற்றுமைகள்! 3(Post No.11220)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,220

Date uploaded in London – –    25 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதிசய ஒற்றுமைகள்! – 3

.நாகராஜன்

மேலும் சில அதிசய ஒற்றுமைகளைப் பார்ப்போம்.

போவின் நாவல் தந்த ஆச்சரியம்

ஆங்கில நாவலாசிரியரான எட்கர் ஆலன் போ 19ஆம் நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர்.

அவர் ‘தி நேரேடிவி ஆஃப் ஆர்தர் கார்டன் பிம்’ (The Narrative of Arthur Gordon Pym – Edgar Allan Poe) என்ற புத்தகத்தை எழுதினார்.

 ஒரு கப்பல் விபத்துக்குள்ளாகிறது. அதில் நான்கு பேர் தப்பிப் பிழைக்கின்றனர். ஒரு படகில் ஏறி பல நாட்கள் அவர்கள் பயணம் செய்கின்றனர். ரிச்சர்ட் பார்கர் என்ற காபின் பையனைக் கொன்று திங்க  மற்ற மூவரும் முடிவு செய்கின்றனர்.

கதை வெளியாகி பல வருடங்கள் கழிந்தன.

1884ஆம் ஆண்டும். மிக்னோனெட் என்ற கப்பல் விபத்துக்குள்ளானது. அதில் நான்கு பேர் பிழைத்து ஒரு படகில் பல நாட்கள் பயணம் செய்தனர்.

அதில் மூன்று பேர் காபின் பையனைக் கொன்று உயிர் வாழ நினைத்து அவனைக் கொன்றனர். அந்த காபின் பையன் பெயர் ரிச்சர்ட் பார்கர்! 

இரு மரணங்கள் தந்த ஆச்சரியம்

2002ஆம் ஆண்டு.

72 வயதான ஒரு இரட்டை சகோதரர்களில் ஒருவர் இறந்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே அடுத்தவர் இறந்தார்.

 வட ஃபின்லாந்தில் சாலை விபத்தில் ஒருவர் இறந்தார். அதே சாலையில் தான் அடுத்தவரும் அதே போல இறந்தார்.

முதலாமவரை அவர் ராஹே என்னுமிடத்தில் ஒரு பைக்கில் சென்று கொண்டிருந்த போது ஒரு லாரி வந்து மோதவே அவர் இறந்தார். ஹெல்சிங்கி என்ற தலை நகரத்தினிலிருந்து வடக்கே 600 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நடந்தது. இன்னொரு தனது சகோதரர் இறந்த ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலேயே இறந்தார்.

இது ஒரு வரலாற்று அதிசயம்.

“இந்த சாலை போக்குவரத்து மிகுதியாக உள்ள சாலை என்றாலும் கூட இங்கு விபத்துக்கள் ஒவ்வொரு நாளும் நடைபெறாது” என்றார் மரிய லீனா ஹுஹ்தலா என்ற பெண் போலீஸ் அதிகாரி ராய்டர் செய்தி நிறுவனத்திடம்.

“என் ரோமம் குத்திட்டு நின்றது – இவர்கள் இருவரும் இரட்டை சகோதரர்கள் என்பதை அறிந்த போது. மேலே இருக்கின்ற ஒருவன் ஏதோ செய்கிறான்” என்றே உணர்ந்தேன் என்றார் அவர்.

போகர் ஆச்சரியம்!

1858ஆம் ஆண்டு. போகர் விளையாட்டு ஒன்றில் ராபர்ட் ஃபாலன் என்பவர் போகர் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்த போது பழிவாங்கத் துடித்த ஒருவரால்  சுட்டுக் கொல்லப்பட்டார். 600 டாலரை அவர் ஏமாற்றி வென்றார் என்று கூறப்பட்டது.

போகரின் இருக்கை காலியானது. ஆனால் அதில் அமர யாரும் முன் வரவில்லை. ஏனெனில் அது துரதிர்ஷ்டம் பிடித்த இடம் என்று அனைவரும் கருதினர். அந்த 600 டாலரையும் யாரும் தொடவில்லை.

அப்போது அங்கு புதிதாக வந்த ஒருவர் ஃபாலனின் இடத்தில் அமர்ந்தார். அந்த 600 டாலரையும் எடுத்துக் கொண்டார்.

கொலை பற்றிய புலன் விசாரணைக்காக போலீசார் வந்த போது அந்த 600 டாலர் தொகை விளையாட்டில் ஜெயித்த வகையில் 2200 டாலராக உயர்ந்திருந்தது.

போலீசார் முதலில் இருந்த 600 டாலரைக் கேட்டனர். அதை ஃபாலனின் உறவினருக்குத் தர வேண்டும் என்பது அவர்கள் எண்ணம்.

விசாரித்த போது அங்கு புதிதாக வந்து அமர்ந்தவர் ஃபாலனின் மகனே தான் என்பது தெரிய வந்தது.

அவர் தன் தந்தையை கடந்த ஏழு வருடங்களாகப் பார்க்கவே இல்லையாம்!

புத்தக ஆச்சரியம்!

1920ஆம் ஆண்டு.

அன்னி பார்ஷி என்ற பெண்மணி ஒரு அமெரிக்க எழுத்தாளர். அவர் பாரிஸுக்குச் சென்றிருந்த போது ஒரு புத்தகக் கடையில் புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு புத்தகம் அவரைக் கவர்ந்தது. அது அவர் குழந்தையாக இருந்த போது அவருக்கு மிகவும் பிடித்த புத்தகம். ‘ஜாக் ஃப்ராஸ்ட் அண்ட் அதர் ஸ்டோரீஸ்’ என்பது அதன் பெயர்.

அந்த புத்தகத்தை ஆசையுடன் எடுத்த அவர் அதைத் தன் கணவருக்குக் காண்பித்து அந்த புத்தகமானது தான் குழந்தையாக இருந்த போது மிகவும் விரும்பிய ஒன்று என்று கூறினார்.

அவரது கணவர் அதை வாங்கி முதல் பக்கத்தைத் திறந்து பார்த்தார்.

அதில் ‘அன்னி பாரிஷ் , 209, என். வெபர் ஸ்ட்ரீட், கொலொரோடோ ஸ்ப்ரிங்ஸ்’ என்று எழுதி இருந்தது.

அந்தப் புத்தகம் குழந்தையாக இருந்த போது அன்னி பாரிஷ் வைத்திருந்த புத்தகமே தான்!

இவை சில எடுத்துக்காட்டுகளே.  தொகுக்கப் போனால் ஆயிரக் கணக்கில் இப்படி உண்மைச் சம்பவங்களைத் தொகுக்கலாம்.

இதற்கு என்ன அர்த்தம்? தற்செயல் ஒற்றுமையா? இறைவனின் திருவிளையாடலா?

முற்றும்

புத்தக அறிமுகம் – 39

மஹாபாரத மர்மம்!

 பாகம் 2

பொருளடக்கம்

என்னுரை

1. நாரத மஹரிஷியும் மஹாபாரதப் போரும்!

2. போர் போர், மஹாபாரதப் பெரும் போர் – துரியோதனனின் கேள்வி!

3. மஹாபாரதப் பெரும்போர்! எத்தனை பேர் போரிட்டனர்? எத்தனை பேர் போருக்குப் பின் உயிருடன் இருந்தனர்?

4. ஆக்னேயாஸ்திரம், பிரம்மசிரஸ் ஆகியவற்றை துரோணர் யாரிடமிருந்து பெற்றார்?

5. அறிவியல் விஞ்ஞானிகள் வியக்கும் அஸ்திரங்கள்!

6. மரணம் உண்டா, இல்லையா? – திருதராஷ்டிரனின் கேள்வி!

7. மெழுகாலயம் கண்ட பாண்டவரின் புத்திகூர்மை!

8. பாவச் செயல்களைப் பரப்பாதே!

9. பேர் படைத்த விஜயனுக்கும் பார் படைத்த துரியோதனனுக்கும் போர்! போரை நிறுத்த தூது சென்ற கண்ணன்!!

10. சிவ பக்தன் அர்ஜுனன்!

11.மரகதஜோதி வீரன் அர்ஜுனன், இராமனே!

12. வில்லி பாரதத்தில் விராட பர்வத்தில் கடவுள் வாழ்த்துக்கள்!

13. 3 ராமர்கள், 3 பரதர்கள், 6 கர்ணர்கள்!

14. மஹாபாரதத்தில் ஜோதிடம்!

15. ஜோதிடம் பற்றியும் துர்நிமித்தம் பற்றியும் நாரதர் யுதிஷ்டிரருக்குக் கூறியது என்ன?

16. விதுரர் கூறும் விதுர நீதி – 1

17. விதுரர் கூறும் விதுர நீதி – 2

18. விதுரர் கூறும் விதுர நீதி – 3

19. விதுரர் கூறும் விதுர நீதி – 4

20. விதுரர் கூறும் விதுர நீதி – 5

21. விதுரர் கூறும் விதுர நீதி – 6

22. கிருஷ்ண தியானம் ஏன்? தியானத்தின் மகிமையை இந்தியாவில் உணர்ந்த எழுத்தாளர் ஈ.எம்.பார்ஸ்டர்!

23. கண்ணன் இதழ் குழலே, காட்டும் வெற்றி ஒளியே!

24. கண்ணன் எத்தனை கண்ணனடி!

*

நூலில் நான் வழங்கிய என்னுரையில் ஒரு பகுதி இது :

என்னுரை

உலகில் தோன்றிய இதிஹாஸங்களுள் மிகப் பெரிய இதிஹாஸம் மஹாபாரதம்.

இதன் பெருமையை வார்த்தைகளால் சொல்ல இயலாது.

இதைப் படிக்க ஒரு ஆயுள் போதாது.

இதில் இல்லாதது வேறெங்கும் இல்லை.

இதற்கான விளக்கங்கள், இதைப் பற்றிய நூல்கள், கட்டுரைகள் லக்ஷக்கணக்கில் இந்த நூல் தோன்றிய நாள் முதல் எழுந்துள்ளன.

விநாயகரே இதன் பொருளை சற்று சிந்தித்துச் சிந்தித்து தான் புரிந்து கொண்டார் என்று அறிகிறோம்.

அப்படியானால் சாமான்ய மனிதனின் நிலை என்ன என்பதை உணரலாம்.

வாழ்வாங்கு வாழ வேண்டிய நெறிகள், கர்ம பலன் விளக்கம் இதில் உள்ளன.

இதற்கு பாஷ்யம் எழுதிய ஆசாரியர்கள், மேதைகள் பலர் உண்டு.

இதை ஒவ்வொரு கோணத்தில் ஆராய்ந்த அறிஞர்கள் உண்டு.

சுமார் 8000 கூட ஸ்லோகங்கள் என்னும் புதிர் ஸ்லோகங்களுக்கு விரிவான விளக்கம் இன்றும் கூடக் காணப்படவில்லை.

முதல் ஸ்லோகத்திலிருந்து கடைசி ஸ்லோகம் வரை ஒன்றுக்கொன்று முரண்படாது ஏராளமான அறிவியல் கலைகளையும், நுட்பமான சாஸ்திரங்களையும் கொண்டுள்ள இது போன்ற இன்னொரு நூல் இதுவரை எழவில்லை.

இந்தக் கருத்துக்கள் அனைத்தையும் உள்வாங்கி இதைப் படிக்க ஆரம்பித்தோமானால் ஆனந்தம் தரும் இன்னொரு நூல் இருக்காது.

அவ்வப்பொழுது ஞான ஆலயம் குழும பத்திரிகைகள், http://www.tamilandvedas.com ப்ளாக் ஆகியவற்றில் மஹாபாரத மர்மங்களை விளக்கி அவ்வப்பொழுது எழுதி வந்தேன்.

முதல் பாகம் வெளிவந்ததைத் தொடர்ந்து இப்போது இரண்டாம் பாகம் வெளி வருகிறது..

இந்த பாகத்தில் போர் பற்றிய அதிசய விவரங்கள், விஞ்ஞானிகளும் வியக்கும் மஹாபாரதப் போரின் அஸ்திரங்கள், மஹாபாரதம் தரும் ஜோதிட உண்மைகள், வில்லிபுத்தூராரின் பாரதத்தில் அவர் அழகிய தமிழில் வழங்கும் அற்புதச் செய்திகள், கண்ணனைப் பற்றிய சுவையான செய்திகள் ஆகியவை கட்டுரைகளின் வாயிலாகத் தரப்படுகின்றன.

இந்தக் கட்டுரைகளை அவ்வப்பொழுது வெளியிட்ட ஞான ஆலயம், சினேகிதி, ஶ்ரீ ஜோஸியம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் மற்றும் www.tamilandvedas.com ப்ளாக் லண்டன் திரு ச. சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது நன்றி உரித்தாகுக.

கட்டுரைகளாக வெளி வந்த போது பாராட்டி என்னை ஊக்குவித்த வாசக அன்பர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி உரித்தாகுக!

இதை அழகுற நூலாக வெளியிட முன் வந்த முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!

ஐந்தாம் வேதம் எனப்படும் மஹாபாரதத்தைக் கற்போம்; உயர்வோம்!

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ                                 ச.நாகராஜன்


7-8-2022 

*

 நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Verse with one Consonant -‘Nuunam nunnaani naanena naananenaananaani nah’(Post.11219)

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,219

Date uploaded in London – 24 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Sanskrit Verse with one Consonant -‘Nuunam nunnaani naanena naananenaananaani nah’(Post.11219)

Poet Dandin of seventh century CE discusses Citra bandhas ( ingenious arrangementS of letters) under the section on Sabdaalamkaaras. In this context he refers to three varieties of compositions each having restrictions or limitations with regard to Svara/vowels and Varna/consonants respectively.

Yah svarasthaana varnaanaam niyamo duskaresvasau

Istascatuhpra bhrtyesa darsyate sukarah parah

Kaavyaadarsa 3-83 (KD)

The purport of this verse is as follows:

There may be compositions having only a limited number of vowels or letters, belonging only to a limited number of places of articulation, or only having a limited number of consonants. Such compositions were desirable for the earlier theorists as varieties of what is called Duskara Yamaka. Such compositions become more and more difficult if they have only four Svaras, for instance, or only three or only two or only one Svara.

Dandin proposes to illustrate compositions having four or three or two or one only of either vowel or consonant or place of articulation. Such compositions are difficult. Those having more than four of vowels etc are said to be easier to compose. An example of a verse having only one Svara, as given by Dandin is as follows:

Saamaayaamaa maayaa maasaa

Maaraanaayaa naayaa yaanaa raamaa

Yaanaavaaraaraavaanaayaa

Maayaaraamaa maaraayaamaa

KD 3-87

An example of the use of only one consonant, as given by Dandin, is as follows

Nuunam nunnaani naanena naananenaananaani nah

Naanena nanu naanuunenaine naanaanino niniih

KD 3-95

An example of composition containing letters belonging to one place of articulation, as given by Dandin is as follows:

Aga gangaan gakaakaa kagaa hakaa ghakaa kakahaa

Ahaahaanka khagaan kaaga kankaa gakha gakaa kaka

KD3-91

It may be noted here that the whole conception of a composition with a limited number of vowel etc. presupposes a knowledge of grammar in respect of the vowels and consonants and more particularly in respect of the places of articulation ( uccaarana sthaanaani). For instance for composing and also appreciating the beauty of the verse

Agaa gangaa…………. one must have the idea of the dictum

Akuhavisarjaniiyaanaam kanthah

As incorporated into their works by the grammarians from the siksaa works of Panini and other such authorities.

Source: Paninian influence on Sanskrit Poetics, Shrutidhara Chakravarty ,Pratibha Prakashan, 2008

–SUBHAM-

TAGS- Dandin, poetics, citrabandhas, consonant verse, articulation, vowel,

Eleven Dramas of Jain Sanskrit Scholar Ramachandra Suri (Post.11218)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,218

Date uploaded in London – 24 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Eleven Dramas of Jain Sanskrit Scholar Ramachandra Suri

Rama chandra soori was a disciple of the well known Jain scholar Hemachandra Soori. He composed the Dholka stone inscription in Northern Gujarat. The ‘prasasti’ is dated to 12th century CE. The inscription written in beautiful characters is found in a fragment only and contains verses from 71 to 103, the last one reading as

Prabandha sata nirmati pratita kiirtikaa myodayah

Prasasti mathulaami maamakrta raamachandro munih

The two stone slabs containing the first seventy verses have not yet been discovered. Out of the hundred prabandhas said to have been composed by him only 35 have been traced. Out of his other literary works at least eleven dramas namely,

Nala vilaasa

Yadu vilaasa

Sathya harischandra

Nirbhaya bheema vyaayoga

Mallikaa  makaranda

Raagava abyudhaya

Rohinii mrkaanka

Vanamaalaa naatikaa

Kaumudee mithraananda

Yaadhava abhyudhaya

Raghu vilaasa have been found.

His work Kumaara vihaara sataka is also found. He is also the author of a collection of verses called Sudhaakalasa.

A treatise named Naatya darpana also composed by him in collaboration with Gunachandra soori and a work on Jain logic have been found.

The poet lived from 1110 to 1173 and was a court poet of the Gujarat Chalukya kings,

Siddharaaja Jayasimha and

Kumaarapaala.

For his high literary attainments, king Siddharaaja had honoured him with the title Kavikataaramalla.

According to Prabhaavaakaachaara, Devasuri was the court poet of Jayasimha and had defeated the Digambara scholar Kumudachandraachaarya in a dispute held in the presence of the king.

–subham—

Tags- Eleven Dramas,  Jain Scholar, Ramachandra Suri, Sanskrit

அதிசய ஒற்றுமைகள்! 2 (Post no.11,217)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,217

Date uploaded in London – –    24 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதிசய ஒற்றுமைகள்! – 2

ச.நாகராஜன்

மேலும் சில அதிசய ஒற்றுமைகளைப் பார்ப்போம்.

வண்டு வந்த ஆச்சரியம் 

எந்த ஒருவரையும் அனாவசியமாக விமரிசனம் செய்யும் சில குதர்க்கவாதிகளும் அல்பமான தர்க்கவாதிகளும், அரைகுறை விஞ்ஞானிகளும் கார்ல் ஜங்கிடம் வாலாட்ட முடியாது.

அப்படிப்பட்ட அற்புத விஞ்ஞானி அவர்.

அவரை ஒரு சமயம் ஒரு இளம் பெண்மணி சந்தித்து தான் கண்ட கனவை விவரித்தார். அந்த பெண்ணின் கனவில் ஒரு தங்க நிற வண்டு ஒரு சிக்கலான நேரத்தில் தோன்றியது. அதை அவர் விவரிக்க, அதை ஜங் மூடிய தனது ஜன்னலுக்கு முன்னால் இருந்தவாறு கேட்டுக் கொண்டிருந்தார். 

திடீரென்று அவருக்கு ஒரு சப்தம் கேட்டது. யாரோ மெதுவாக தட்டுவது போல இருந்தது அந்த சப்தம்.

ஜங் திரும்பிப் பார்த்தார். என்ன ஆச்சரியம்!

ஒரு அபூர்வமான வண்டு ஜன்னல் தகடைத் தட்டிக் கொண்டிருந்தது!

ஜங் அவசரமாக ஜன்னலைத் திறந்தார். ஒரு பூச்சி பறந்து வந்தது. உள்ளே வந்த அந்தப் பறக்கும் பூச்சியை அவர் பிடித்தார்.

அது அபூர்வமான ஒரு வகை வண்டு.

இது போன்ற ஒரு சம்பவம் அவர் வாழ்வில் என்றுமே நிகழ்ந்ததில்லை என்பதை வியப்பின் உச்சிக்கே சென்ற ஜங் தனது The Structure and Dynamics of the Psyche இல் விவரித்துள்ளார்.

அதைக் கீழே காணலாம்.


From The Structure and Dynamics of the Psyche: “A young woman I was treating had, at a critical moment, a dream in which she was given a golden scarab. While she was telling me this dream I sat with my back to the closed window. Suddenly I heard a noise behind me, like a gentle tapping. I turned round and saw a flying insect knocking against the windowpane from outside. I opened the window and caught the creature in the air as it flew in. It was the nearest analogy to the golden scarab that one finds in our latitudes, a scarabaeid beetle, the common rose-chafer (Cetonia aurata) which contrary to its usual habits had evidently felt an urge to get into a dark room at this particular moment. I must admit that nothing like it ever happened to me before or since, and that the dream of the patient has remained unique in my experience.” – Carl Jung

புத்தகம் தந்த ஆச்சரியம்!

1973ஆம் ஆண்டு. பிரபல நடிகரான அந்தோணி ஹாப்கின்ஸ் ‘தி கேர்ள் ஃப்ரம் பெட்ரோவ்கா’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார். இதை எழுதியவர்  ஜார்ஜ் ஃபெய்ஃபர். ஆனால் இந்த நாவலை லண்டனில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் அவர் ஒரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் உட்கார்ந்த போது அங்கு ஒரு புத்தகம் கேட்பாரற்றுக் கிடந்ததைப் பார்த்தார்.

என்ன ஆச்சரியம்!

அது அவர் தேடிக் கொண்டிருந்த அதே புத்தகம் தான்! அது மட்டுமல்ல, அது அந்த எழுத்தாளரின் சொந்த பிரதி. அதில் அவர் குறிப்புகளையும் எழுதி வைத்திருந்தார். அந்த எழுத்தாளர் அதை ஒரு நண்பரிடம் கொடுத்திருந்தார். அந்த பிரதி அவரது காரிலிருந்து திருடப்பட்டிருந்தது.

அது தான் அந்த ரயில்வே பிளாட்பாரத்தில் ஹாப்கின்ஸுக்குக் கிடைத்தது!

போட்டோ தந்த ஆச்சரியம்!

ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பெண்மணி தனது ஆண் குழந்தையை 1914இல் போட்டோ எடுத்தார். அதை ஸ்ட்ராஸ்பர்க்கில் டெவலப் செய்தார். அந்தக் காலத்தில் ஃபிலிம் ப்ளேட்டுகள் தனித் தனியாகத் தரப்பட்டு வந்தது.


முதலாம் உலகப் போர் வெடித்தது. அந்தப் பெண்மணியால் ஸ்ட்ராஸ்பர்க்கிற்குச் செல்ல முடியவில்லை. போனது போனது தான் என்று அவர் அந்த பிலிமை வாங்காது விட்டு விட்டார்.

இரண்டு வருடங்கள் ஓடின.

அவர் நூறு மைல் தள்ளி இருந்த ப்ராங்க்ஃபர்ட்டில் ஒரு பிலிம் ப்ளேட்டை தனது புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்காக வாங்கினார்.

அந்த பிலிம் டெவலப் செய்யப்பட்டது.

என்ன ஆச்சரியம்!

அந்தக் குழந்தையின் போட்டோ அதற்கு முன்னால் பிறந்திருந்த குழந்தையின் படத்தின் மீது சூப்பர் இம்போஸ் செய்யப்பட்டு பதிவிடப்பட்டிருந்தது!

முதல் பிலிம் டெவலப் செய்யப்படாத நிலையில் அதே பிலிம் இரு குழந்தைகளையும் காட்டிய போது அவர் பிரமித்தார்.

டெவலப் செய்யப்படாத பிலிம் விற்பனைக்குத் தரப்பட அதை இவர் வாங்க இவருக்கு அவரது இரு குழந்தைகளின் படமும் ஒன்றின் மீது ஒன்றாகக் கிடைத்தது. 

 இதையெல்லாம் என்னவென்று சொல்வது? விஞ்ஞானம் இதற்கு ஒரு விளக்கத்தை அளிக்க முடியுமா என்ன?

***

புத்தக அறிமுகம் – 38

மஹாபாரத மர்மம்!

 பாகம் 1

பொருளடக்கம்

என்னுரை

1.ஒரு லட்சம் ஸ்லோகங்கள், 2314 அத்தியாயங்கள் கொண்ட உலகின் மிகப் பெரும் நூல் மஹாபாரதம்

2. மஹாபாரதம் எத்தனை வருடங்களில் இயற்றப்பட்டது? மஹாபாரதம் படிப்பதால் என்ன பயன்?

3. மஹாபாரதத்தில் புதிர் ஸ்லோகங்கள்!

4. பலராமனும் கிருஷ்ணனும் கற்ற கலைகளும், கற்ற நாட்களும்!

5. ஒரே ஒரு ஸ்லோகத்தில் மஹாபாரதம்!

6. சிவனை நோக்கி கனவில் நடந்த கிருஷ்ணார்ஜுன பயணம்!

7.துரியோதனா! எங்கு தர்மமோ அங்கே ஜயம் : காந்தாரி!

8.ஸவ்யஸாசியே எழுந்திரு!

9.கிருஷ்ணரின் வருகையும் மறைவும்!

10. பிரபஞ்ச நாயகன் போரின் நாயகனாகிப் புரிந்த லீலைகள்!

11.பாண்டவர் வெல்லத் தடைகள் ஆயிரம்! தர்மம்

12. அஸ்வத்தாமனை துரியோதனன் நம்பாமலிருக்க மாயக் கண்ணன் செய்த ஜாலம்!

13. பதினெட்டாம் நாள் போர்: சல்ய பர்வம் தரும் துர்நிமித்தங்கள்!

14. மஹா வீரனான கர்ணனின் மரணத்திற்கான காரணங்கள் என்னென்ன?

15. பாஞ்சாலி சொன்ன தாம்பத்ய ரகசியம்!

16. கிருஷ்ண சபதம்!

17. “சூதாட்டப் போரை நடக்க விடாமல் நீ தடுத்திருக்கலாமே கிருஷ்ணா!” – உதங்கரின் கேள்வி!

18. மஹாபாரதம் தெரிவிக்கும் அஸ்திரங்களின் மர்மம்!

19. விஷ்ணு சஹஸ்ரநாமத்தை ரிகார்ட் செய்தது யார்?

20. மஹாபாரத ரகசியம் – கடவுளின் அருளைப் பெற என்ன செய்ய வேண்டும்?

21. தமிழகத்தில் உள்ள மஹாபாரதத் தலங்கள்!

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

உலகில் தோன்றிய இதிஹாஸங்களுள் மிகப் பெரிய இதிஹாஸம் மஹாபாரதம்.

இதன் பெருமையை வார்த்தைகளால் சொல்ல இயலாது.

இதைப் படிக்க ஒரு ஆயுள் போதாது.

இதில் இல்லாதது வேறெங்கும் இல்லை.

இதற்கான விளக்கங்கள், இதைப் பற்றிய நூல்கள், கட்டுரைகள் லக்ஷக்கணக்கில் இந்த நூல் தோன்றிய நாள் முதல் எழுந்துள்ளன.

விநாயகரே இதன் பொருளை சற்று சிந்தித்துச் சிந்தித்து தான் புரிந்து கொண்டார் என்று அறிகிறோம்.

அப்படியானால் சாமான்ய மனிதனின் நிலை என்ன என்பதை உணரலாம்.

வாழ்வாங்கு வாழ வேண்டிய நெறிகள், கர்ம பலன் விளக்கம் இதில் உள்ளன.

அது மட்டுமல்ல, பகவான் கிருஷ்ணர் தனது திருவுள்ளத்தினால் அருளிய பகவத் கீதையும் இதில் தான் அமைந்துள்ளது.

இன்னும் ஏராளமான பகுதிகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.

விஷ்ணு சஹஸ்ர நாமம், யக்ஷ ப்ரஸ்னம், விதுர நீதி, சத ருத்ரீயம் போன்ற பல அபூர்வமான பகுதிகள் இதில் உள்ளன.

புராண விளக்கங்களை இதில் காணலாம். ரிஷிகளின் சரித்திரங்களும் இதில் உண்டு.

அஸ்திரங்களைப் பற்றிய விவரணம் இதில் உண்டு.

தர்ம, அர்த்த, காம, மோக்ஷ சம்பந்தமான எந்தக் கேள்விக்கும் இதில் பதில் உண்டு.

ஆன்மீக பூமியான பாரத தேசம் பற்றிய பிரமிக்க வைக்கும் செய்திகள் இதில் உண்டு.

ஆங்காங்கே உள்ள சம்வாதங்கள் என்னும் அர்த்தமுள்ள உரையாடல்கள் மனித குலத்திற்கு என்றும் துணை நிற்கும் வழிகாட்டும் நெறிகளைத் தருபவை.

இதற்கு பாஷ்யம் எழுதிய ஆசாரியர்கள், மேதைகள் பலர் உண்டு.

இதை ஒவ்வொரு கோணத்தில் ஆராய்ந்த அறிஞர்கள் உண்டு.

சுமார் 8000 கூட ஸ்லோகங்கள் என்னும் புதிர் ஸ்லோகங்களுக்கு விரிவான விளக்கம் இன்றும் கூடக் காணப்படவில்லை.

முதல் ஸ்லோகத்திலிருந்து கடைசி ஸ்லோகம் வரை ஒன்றுக்கொன்று முரண்படாது ஏராளமான அறிவியல் கலைகளையும், நுட்பமான சாஸ்திரங்களையும் கொண்டுள்ள இது போன்ற இன்னொரு நூல் இதுவரை எழவில்லை.

இந்தக் கருத்துக்கள் அனைத்தையும் உள்வாங்கி இதைப் படிக்க ஆரம்பித்தோமானால் ஆனந்தம் தரும் இன்னொரு நூல் இருக்காது.

அவ்வப்பொழுது ஞான ஆலயம், www.tamilandvedas.com ப்ளாக் உள்ளிட்ட பத்திரிகைகள் மற்றும் ப்ளாக் வழியே மஹாபாரத மர்மங்களை விளக்கிக் கொஞ்சம் எழுதி வந்திருக்கிறேன்.

இந்தக் கட்டுரைகளையும் கீதை காட்டும் பாதை பற்றிய எனது கட்டுரைகளையும் ஒவ்வொரு பாகமாக வெளியிட எண்ணம் கொண்டு இந்த முதல் பாகத்தை முதலில் வெளியிடுகிறேன்.

இதை அழகுற நூலாக வெளியிட முன் வந்த முன்வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ
27-7-2022

ச.நாகராஜன்

சமண சமய அறிஞரின் 70 பாடல் கல்வெட்டு காணவில்லை (Post No.11,216)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,216

Date uploaded in London – 23 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

குஜராத்தின் புகழ்பெற்ற சமண முனிவர் ஹேமசந்திர சூரியின் சீடர் ராமசந்திர சூரி.இவரைப் பற்றிய  அரிய தகவல்களைத் தருகிறது தோல்கா (Dholka வட குஜராத்) கல்வெட்டு. இது 12-ம் நூற்றாண்டுக் கல்வெட்டு.

அச்சுப் பொறித்த்தாற்போல அழகிய எழுத்துக்களில் உள்ள கல்வெட்டுத் துண்டில் எண் 71 முதல் 103 வரையுள்ள பாடல்கள் மட்டும் கிடைத்துள்ளன. முதல் 70 பாடல்களைக் கொண்ட கல்வெட்டுகள் கிடைக்கவில்லை .

கடைசி பாடலை மட்டும் காண்போம்

ப்ரபந்த சத நிர்மிதிப்ரதித கீர்த்திகாம்யோதயஹ

ப்ரசஸ்திமதுலாமிமாமக்ருத  ராமசந்த்ரோ முனிஹி

இதிலிருந்து அவர் 100 பாடல்களைக் கொண்ட பிரபந்தம் எழுதியது தெரிகிறது. ஆனால் முதல் 70 பாடல்களைக் கொண்ட கல்வெட்டுகள் இதுவரை கிடைக்கவில்லை. 35 செய்யட்கள் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கின்றன.

அவர் எழுதிய நாடகங்கள்

நள விலாஸ  யது விலாஸஸத்ய ஹரிச்சந்திரநிர்பய பீம வ்யாயோயக மல்லிகா மகரந்த ராகவாப்யுதய ரோஹிணி ம்ருகாங்க வனமாலா நாடிகா  கெளமுதீ மித்ரானந்தயாதவாப்யுதய ரகு விலாஸகுமார ரவி ஹாரா சதக .

இவை அனைத்தும் கிடைத்துவிட்டன. சுதா கலச என்ற பாடல் தொகுப்பையும் இவர் இயற்றினார் குண சந்த்ர சூரி என்பவருட இணைந்து அவர் எழுதிய நாட்யதர்பண என்ற நூலும் கிடைத்திருக்கிறது . அவர் கி.பி (பொ .ஆ.) 1110 முதல் 1173 வரை வாழ்ந்தார்  குஜராத் சாளுக்கிய வம்ச அரசர்கள் சித்தராஜ ஜெயசிம்ஹ, மற்றும் குமாரபால ஆகியோரின் ஆஸ்தான புலவராகவும் இருந்தார்..அவருடைய இலக்கிய படைப்புகளைக் கண்டு வியந்த மன்னன் சித்தராஜ ஜெயசிம்மன், புலவருக்கு ‘கவி கடார மல்ல’ என்ற சிறப்பு விருது வழங்கினார் .மன்னருக்கு முன்னர் நடந்த வாக்குவாதத்தில் அவர் திகம்பர சமணப் பிரிவினைச் சார்ந்த ஒரு அறிஞரை வென்றார். அவருக்கு ஒரு கண் தெரியாது என்பதும் வரலாற்றுக்குறிப்பில் காணப்படுகிறது..

Xxx

யசோதர்மன் புகழ் பாடிய கவி வாஸுல

ஹூண மன்னன் மிஹிரகுலனைத் தோற்கடித்த மன்னன் யசோதர்மன் ஆவார் . கல்வெட்டின் காலம் பொது ஆண்டு (கி.பி.) 532. கக்க என்பவரின் மகனான வாஸுல இயற்றிய கவிதைகள் மாண்டசோர் தூண் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது. ஒன்பதே செய்யுட்களானாலும் நல்ல தரமான கவிதைகள் அவை.

நல்ல கற்பனைத் திறனைக்கொண்ட அவரது பாடலின் ஒரு பகுதி இதோ :

காமேவோண்மாதுமூர்த்வம்  விகணயிதுமிவ  ஜ்யோதிஷாம் சக்ரவாளம்

நிர்தேஷ்ட்டும் மார்கமுச்சைர்திவ இவ ஸுக்ருதோ பார்ஜிதாயாஹா  ஸ்வ கீர்த்தே …….

இதே போல எட்டாவது பாடலின் பிற்பகுதியும் இவர் கற்பனை சிறகடித்துப் ப றப்பதைக் காட்டும்:

இத்யுத்கர்ஷம் குணானாம் லிகிதுமிவ யசோதர்மண ஸ் சந்த்ரபிம்பே

ராகாதுத் க்ஷிப்த உச்சைர் புஜ  இவ ருசிமான்யஹ  ப்ரு திவ்யாம் விபாதி

மேலும் 28 கவிகளைக் கொண்ட மற்றும் ஒரு மாண்டசோர் கல்வெட்டையும் இவரே செய்ததாகத் தெரிகிறது . மன்னர்கள் யசோதர்மன் மற்றும் விஷ்ணுவர்தனனின் (பொ .ஆ.532) புகழ்பாடும் பிரசஸ்தி இது.

புலவர் பெயர் இல்லாவிடினும் ஒரே ஆண்டு மூலமாகவும் கல்வெட்டைச் செதுக்கிய சிற்பி கோவிந்தன் என்ற பெயர் மூலமாகவும் ஒரே புலவர் யாத்தவை  என்பதை அறிய முடிகிறது.

Xxx

அரிய ஸம்ஸ்க்ருத நாடகம்

சம்ஸ்க்ருத மொழியில் உள்ள நாடங்கள் எண்ணிலடங்கா. தமிழில் 2000 ஆண்டுகளில் எழுதப்பட்ட ஒரு நாடகமும் நமக்குக் கிடைக்காதது தமிழர்களின் துர்பாக்கியமே.

சம்ஸ்க்ருத மொழியில் உள்ள நாடகங்களின் பெயர்களையும் ஆசிரியர் பெயர்களையும்  மட்டும் எழுதினாலேயே ஒரு புஸ்தகம் அளவுக்குப் பெரிதாகிவிடும் !

நாலாம் விக்ரஹ ராஜதேவ என்பவர் அருணாராஜனின் புதல்வர். இவர் ஆஜ்மீர்-சாகம்பரியை (Rajasthan) ஆண்ட சிற்றரசர். ஆண்டு; 1153-1164. அவர் இயற்றிய நாடகத்தின் பெயர் ஹரகேளி  நாடகம். இது ஒரு அருமையான நாடகம். இவருக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கி.மு. முதல் நூற்றாண்டில் காளிதாசன் நாடகம் இயற்றினான். அவருக்கு முன்னர் பாஷா எழுதிய நாடகங்களும் கிடைத்து இருக்கின்றன. ஆயினும் 1000 ஆண்டுக்குப் பின்னரும் அதே போல ஒரு சுவை குன்றாத நாடகம் எழுதியவர் விக்ரஹ ராஜ தேவ ஆவார். அர்ஜுனனும் சிவ பிரானும் போட்ட சண்டை பற்றியது இது.

ஆஜ்மீர் (Rajasthan) ஸம்ஸ்க்ருதக் கல்லூரியில் கல்வெட்டு இருந்தது . ஸம்ஸ்க்ருத கல்லூரியாக இருந்த இடத்தைப் பின்னர் முஸ்லீம்கள் மசூதி ஆக்கிவிட்டனர்

போஜ மன்னனின் நண்பனும் ஹுன வம்சத்தில் தோன்றியவனுமான பாஸ்கர என்பவன் இதைப் படி எடுத்துள்ளான். ஆயினும் முழு நாடகம் கிடைக்கவில்லை.

 புலவரும் மன்னருமான  விக்ரஹாராஜதேவ இறந்த பின்னர் , உலகம்  புலவர்களின் நண்பர்கள் இல்லாத அளவுக்கு வறியதாகிவிட்டதாம் !!

-சுபம்-

 TAGS- விக்ரஹாராஜதேவ, ஆஜ்மீர் , கல்லூரி, சம்ஸ்க்ருத,, நாடங்கள், ராமசந்திர சூரி.,தோல்கா, யசோதர்மன் , வாஸுல

அதிசய ஒற்றுமைகள்! – 1 (Post No,11215)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,215

Date uploaded in London – –    23 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதிசய ஒற்றுமைகள்! – 1

ச.நாகராஜன்

உலகில் நடைபெறும் நிகழ்வுகளில் பல நம்மை பிரமிக்க வைக்கும்.

இந்த பிரமிக்க வைக்கும் நிகழ்வுகளில் ஒன்று கோஇன்சிடென்ஸ் எனப்படும் தற்செயல் ஒற்றுமை.

ஆனால் இவை தற்செயலாக ஏற்பட்டவையா அல்லது இறைவனின் ஒரு திருவிளையாடலா?

இதோ சிலவற்றைப் படித்துப் பாருங்கள்; பின்னர் உங்கள் முடிவுக்கு வாருங்கள்!

அமெரிக்க ஆச்சரியம்!

 அமெரிக்காவை நிறுவிய ஸ்தாபகர்களான தாமஸ் ஜெஃபர்ஸனும் ஜான் ஆடம்ஸும் (Thoman Jefferson and John Adams)  சுதந்திர பிரகடனத்தைத் (Declaration of Independence) தயாரிக்க ஆரம்பித்தனர். ஜெஃபர்ஸன் பிரகடனத்தைத் தயார் செய்து ஆடம்ஸிடம் காண்பித்தார். பெஞ்சமின் ஃப்ராங்க்ளினுடன் சேர்ந்து ஜான் ஆடம்ஸ் அதை சீராக்கி மெருகூட்டித் தந்தார்.  1776ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி காண்டினெண்டல் காங்கிரஸ் (Continental Congress) அதை அங்கீகரித்தது. இது நடந்த 50 ஆண்டுகளுக்குப் பின்னர் 1826, ஜூலை 4ஆம் தேதி ஜெஃபர்ஸனும் ஆடம்ஸும் – இருவரும் – ஒரே தேதியில் இறந்தனர். அது அமெரிக்க சுதந்திர தினமாக அமைந்தது குறிப்பிடத் தகுந்தது!

ஹோட்டலில் ஆச்சரியம்!

 1953ஆம் ஆண்டு. தொலைக்காட்சி ரிபோர்ட்டரான இர்வ் குப்சினெட் (Irv Kupcinet)இரண்டாம் எலிஸபத்தின் முடிசூட்டு விழாவை நேரில் பார்த்து நிகழ்ச்சியைத் தயாரிக்க லண்டன் சென்றார். சவாய் ஹோட்டலில் அவர் தங்கி இருந்த அறையில் ஒரு டிராயரில் அவர் சில பொருள்களைப் பார்த்தார். அவையெல்லாம் ஹாரி ஹானின் (Harry Hannin) என்பவருடையது என்பதை அதிலிருந்த அடையாளங்கள் மூலம் அவர் கண்டுபிடித்தார். ஹாரி ஹானின் பிரபலமான ஒரு பேஸ்கட் பால் விளையாட்டு வீரர். அவர் ஹார்லெம் க்ளோபெட்ராட்டர்ஸின் நண்பர். ஹார்லெம் குப்சினெட்டுக்கு நண்பர். இதை நினைத்து ஆச்சரியப்பட்டார் குப்சினெட். இரண்டு நாட்கள் கழித்து ஒரு கடிதம் ஹானினிடமிருந்து அவருக்கு வந்தது. அதில் அவர் தான் பாரிஸில் ஹோட்டல் மெரிஸில் தங்கியிருந்த போது குப்செனெட்டின் ஒரு ‘டை’யைக் கண்டதாகத் தெரிவித்திருந்தார்!

டாக்ஸி ஆச்சரியம்!

 1975ஆம் ஆண்டு. பெர்முடா மொபெடை ஒரு மனிதர் ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது அவர் மீது ஒரு டாக்ஸி மோத அந்த விபத்தில் அவர் உயிரிழந்தார். ஒரு வருடம் கழித்து அவரது சகோதரரும் அதே போலவே உயிர் இழந்தார். அவர் ஓட்டியது அதே பெர்முடா மொபெட் தான்! இன்னும் ஆச்சரியம் என்னவெனில் அவர் மீது மோதியது அதே டாக்ஸி தான், அதை ஓட்டியவரும் அதே டிரைவர் தான், அவர் ஏற்றி வந்த பயணியும் முன்பு ஏற்றி வந்த அதே பயணிதான்!

மர ஆச்சரியம்!

 1883ஆம் ஆண்டு. ஹென்றி ஜைக்லேண்ட் என்பவர் தனது காதலியுடன் நட்பை முறித்துக் கொண்டார்.  மனமுடைந்த காதலி மனம் வெதும்பி தற்கொலை செய்து கொண்டார். இதனால் கோபமடைந்த அந்தப் பெண்ணின் சகோதரர் ஜைக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து அவரைச் சுட்டார். தான் சுட்டதில் ஜைக்லேண்ட் இறந்து விட்டார் என்று நினைத்துக் கொண்ட அவர் தன்னையும் சுட்டுக் கொண்டார். ஆனால் ஜைக்லேண்ட் சாகவில்லை. குண்டு அவர் முகத்தை உராய்ந்து கொண்டு மட்டுமே சென்று ஒரு மரத்தைத் துளைத்தது. க்ஷண நேரத்தில் அவர் பிழைத்தார். சில வருடங்கள் கழித்த பின்னர் ஜைக்லேண்ட் அந்த மரத்தை வெட்ட ஆரம்பித்தார். அந்த குண்டு அதனுள்ளேயே இருந்தது. மரம் பிரம்மாண்டமானதாக இருந்ததால் வெட்டி முறிப்பது என்பது சாத்தியப்படாது என உணர்ந்த ஜைக்லேண்ட் அதை டைனமைட் வைத்து தகர்க்க முயன்றார். டைனமைட் வெடித்தது.

அது வெடித்து மரம் சிதற அதன் உள்ளிருந்த குண்டு சீறிப் பாய்ந்து ஜைக்லேண்டின் மண்டையைத் துளைத்து அவரைக் கொன்றது!

ராஜ ஆச்சரியம்!

இத்தாலியில் மொன்ஸா என்ற இடத்தில் மன்னர் அம்பர்டோ I (Kinf Umberto I) தனது தளகர்த்தரான ஜெனரல் எமிலியோ போஞ்சியா வாடியா (General Emilio Ponzia- Vadia) என்பவருடன் ஒரு சிறிய உணவு விடுதியில் உணவருந்தச் சென்றார்.

அவரது ஆர்டரை எடுக்க வந்தவர் உணவு விடுதியின் உரிமையாளர்.

அவரைப் பார்த்த மன்னர் அசந்து போனார். ஏனெனில் அவர் அச்சு அசலாகத் தன்னைப் போல இருந்தது தான் அவரை அப்படி பிரமிக்க வைத்தது!

இருவரும் இந்த உருவ ஒற்றுமை பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

பேச்சில் அவர்கள் கண்டு பிடித்த சுவையான ஒற்றுமைகள் இவை:

இருவரும் ஒரே வருடம் ஒரே மாதம் ஒரே தேதியில் பிறந்தவர்கள்!

(மார்ச் 14, 1844)

இருவரும் பிறந்த இடம் ஒரே நகரம் தான்!

இருவரும் மணந்த பெண்ணின் பெயர் ஒன்றே தான். மார்கெரிடா (Margherita) என்பது தான் அந்தப் பெயர்.

இத்தாலியின் மன்னராக அம்பர்டோ என்று முடி சூட்டப்பட்டாரோ அதே தேதியில் தான் உணவு விடுதியை அதன் உரிமையாளர் திறந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து 1900ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி மன்னருக்கு ஒரு செய்தி வந்தது. அந்த உணவு விடுதி உரிமையாளர் மர்மமான முறையில் ஒரு துப்பாக்கிச் சூடில் இறந்து விட்டார் என்பது தான் அந்தச் செய்தி. உடனே மன்னர் தனது துக்கச் செய்தியை அனுப்பினார். அங்கு கூட்டத்தில் இருந்த ஒருவன் அவரைக் கொலை செய்தான். மன்னரும் அதே தேதி மாண்டு போனார்!

இவையெல்லாம் விளக்கம் சொல்ல முடியாத தற்செயல் ஒற்றுமைகளா, அல்லது இறைவனின் திருவிளையாடலா?!

***

புத்தக அறிமுகம் – 37

கொங்கு மண்டல சித்தர்கள்புலவர்கள்,

தலங்கள்! – பாகம் 2

பொருளடக்கம்

என்னுரை

முதல் பகுதி – கொங்குமண்டல சதகம் தரும் சித்தர்கள், திருத்தலங்கள் வரலாறுகள்!

1. தலையில் குட்டிக் கொண்டு விநாயகரை வணங்குவது ஏன்?

2. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்!

3.மன்மதைனையும் மயங்க வைக்கும் கொல்லிப்பாவை!

4. கல் ரிஷபம் எழுந்து கடலையை உண்ண வைத்த சிவப்பிரகாசர்!

5. பயறு மிளகானது: சிவபிரான் திருவிளையாடல்!

6. முட்டை என்று தன் பெயரைச் சொன்ன முருகனின் அருள் விளையாடல்!

இரண்டாம் பகுதி – கொங்குமண்டல சதகம் தரும் அரசர்கள், வள்ளல்கள், புலவர்கள்

7. செங்குன்றூர் கிழார் பாடிய திருவள்ளுவ மாலை வெண்பா!

8. வில்லிபுத்தூராரை பாரதம் பாடச் செய்த ஆட்கொண்டான்!

9. யானை அரியணையில் அமர்த்திய கரிகாலன்!

10. பெரும் புகழ் படைத்த முத்தரையர் ஆண்ட இடம் எது?

11. கோசர்கள் ஆண்ட கொங்கு மண்டலம்!

12. தம்பிக்குத் தலை கொடுக்க முன் வந்த அண்ணன்!

13. சடையப்ப முதலியாரின் விருந்தோம்பும் பண்பும் திருவாவடுதுறை மட வரலாறும்!

14. ராஜ ராஜ சோழன் ஆதரித்த வீர சைவர்கள்!

15. பூந்துறை குப்பிச்சி!

16. சுரிகை ஆயுதப்போரில் வல்ல தித்தன் என்னும் அகளங்க சோழன்!

17. ஆணுக்கு அறிவு அதிகமா, பெண்ணுக்கு அதிகமா?

18. தமிழுக்காகத் தாலியை ஈந்த கொங்கு நாட்டுத் தமிழன்!

19. தொண்டைமான் வரலாறு!

20. மும்முடிப் பல்லவராயன் என்ற விருதைப் பெற்ற லிங்கயன்!

21. புலவருக்குக் குழந்தை அளித்த பொன் வண்டி!

22. வெண்மைப் பெண்மணி தமிழ்ச் சங்கம் அமைத்தது!

23. பாண்டியனின் சேனைக்கு அன்னம் தந்து உதவிய அன்னத்தியாகி!

24. காவிரியைக் கொங்கு நாட்டிற்குக் கொண்டு வந்த அல்லாளன் இளையான்!

25. புலவரின் பல்லக்கைச் சுமந்த உலகுடையான்!

26. பெற்ற மகளைப் பலி கொடுத்து அணையை நிலைத்திருக்கச் செய்த இம்முடிச் சோழியாண்டான்!

27. கொங்கக் குயவன் ராஜகுமாரியின் வலிப்பு நோய் தீர்த்த வரலாறு!

28. விசுவகன்மியருக்கான ஒரு சாசனம்!

29. வயிற்றைப் பீறி, குழந்தையை எடுத்த மருத்துவி!

30. பல்லவராயன் பட்டம் பெற்ற செய்யான்!

31. தேர் ஓடத் தன் தலைமகனைப் பலி கொடுத்த வேணாடன்!

32. வீட்டின் முகப்பில் பனையேடும் எழுத்தாணியும் மாட்டிய பண்பாளன்!

33. புலவனுக்குப் பரிசு கொடுக்க முடியவில்லை எனில் புலிக்கு இரையாவதே சிறந்தது!

34. கொங்கு வேளிர் இயற்றிய பெருங்கதை!

பாடல் முதல் குறிப்பும், பாடல் எண்ணும், வரலாறும்

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

தமிழகத்தின் தலை சிறந்த மண்டலங்களுள் ஒன்று கொங்கு மண்டலம்.

தங்கம் நிகர் கொங்குமண்டலத்தின் புகழ் வாய்ந்த சரித்திரம், பல நூறு வரலாறுகளைக் கொண்டது. இதை இயற்றியவர் கார்மேகக் கவிஞர் என்பவர்.

கொங்குமண்டலத்தில் குறும்பு நாட்டில் விஜயமங்கலம் என்னும் ஊரில் ஸ்ரீ வத்ஸ கோத்திரத்தில் ஔபாக்கிய சூத்திரம் விருத்தானிய யோகசாகை காசிபப் பிரவரணம் ஜைன பிராமண குலத்தில் பத்மநாப ஐயர் என்பாருக்கு இவர் மகனாகப் பிறந்தார். மேகம் பொழிவது போல் கவிதை மழை பொழிவதால் இவர் கார்மேகக் கவிஞர் என்று அழைக்கப்பட்டார். இவரது வரலாறு சிறப்பான ஒன்று. இவர் இயற்றிய அரும் நூலே கொங்குமண்டல சதகம்.

கொங்குமண்டல சதகம் என்னும் நூறு பாக்கள் அடங்கிய நூலில் கொங்குமண்டலத்தின் பெருமை அனைத்தும் அடக்கிய இவரது புலமை வியக்க வைக்கும் ஒன்று. கொங்குமண்டலம் பற்றி அறிய விரும்புவோரும் தமிழகத்தின் தலையாய வளர்ச்சியையும் பண்பாட்டையும் அறிய விரும்புவோரும் தமிழ்ச் சுவையைச் சுவைக்க விரும்புவோரும் படிக்க வேண்டிய அரிய நூல் இது.

இதில் கூறும் வரலாறுகளைக் கட்டுரைகளாகத் தொகுத்தேன்.

இந்தக் கட்டுரைகள் www.tamilandvedas.com ல் அவ்வப்பொழுது வெளியிடப்பட்டு வந்தன.

இந்த வரலாறுகளில் 32 வரலாறுகள் முதல் பாகமாக வெளியிடப் பட்டது. அதைத் தொடர்ந்து இன்னும் 34 வரலாறுகள் இப்போது இரண்டாவது பாகமாக வெளியிடப்படுகிறது.

இதைத் தொடராக வெளியிட்ட லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.

இந்த நூலை டிஜிடல் வடிவமாக வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மீது ஆர்வம் கொண்ட அனைத்து மக்களும் இதைப் படித்து உத்வேகம் பெற்றுத் தமிழைப் போற்றி வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இதைத் தமிழ் அன்பர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். அனைவருக்கும் எனது நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ                            ச.நாகராஜன்
3-8-2022

* 

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Sanskrit Verses in Bihar, Gujarat , Karnataka Inscriptions (Post No.11,214)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,214

Date uploaded in London – 22 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Ravikirti (ravikeerti), a Jain poet composed the well known Aihoe (aykola) inscription of Chalukya king Pulikesin II alias Sathyaasraya dated 634 CE. It is in Karnataka. The poet built a Jain temple. The inscription is of great importance from the historical as well as from the literary point of view. He has mentioned both Kalidasa and Bharavi (kaalidaasa, bhaaravi), from which we come to know that these two great Sanskrit poets were very popular even in the South at that time.

Ravikirti tried to emulate them. He is thoroughly well versed in the rules of Alankaara saastra (poetics). He has freely used in the Prasasti many phrases and ideas which are parallel to those found in Kalidasa’s Raghuvamsa and Bharavi’s Kratarjuniyam (Kiraataarjuniiyam).

Xxx

Two Madhavas

We come across two poets by name Maadhava in Bihar and Gujarat inscriptions. Both of them are good poets.

Madhava composed Bhagirathpur stone inscription of Anumati Devi. It is in Mithila area of Bihar.

Anumati Devi, was daughter in law of Harinarayana, wife of Ramabhadra and mother of Kamsanarayana of the Oinsvaaraa dynasty of Mithila in Bihar. It is dated Lakshmana sena samvatsara 394 or 403 corresponding to 1512 CE. It records a temple built by Anumati Devi.

The poet belonged to the same family as Siva Jha , father of Makhadevi and is mentioned in the anthology Rasikajeevana of Gadhaadhara Bhatta of Mithila. The panegyric consists of nine verses. Here is verse no.2

“Through her gifts, she destroyed the extraordinary poverty of the world; through her glory she rendered tens of thousands of people more beautiful (delighted) than the autumn moon; through her modesty and prudence, she brought relatives under her control. Such a repository of bright virtues unique in the world got this temple built.”

Daanairyaa dalayaam babhoova jagathaam daaritrachamatyutkatam

Keertyaa yaa saradindusundarataraa lokaamschakaaraayuthaan

Kinchochchairvinayaannayaacha vasataam neetaa yayaa bhaandavaah

Seyam visvavilakshanojwalagunagraamaa matam nirmame

The record refers to another poet named Kuladhara who also seems to have composed a eulogy of the queen.

Xxx

Naagara Braahmana Maadhava

He was a Brahmin of Chamatkarapura, son of Munjiga. He composed a Saptasloki (seven verses) which is inscribed on a stone slab in Vanthali  in Saurashtra (Gujarat). The record refers to the time of Gujarat Chalukya king Sarngadeva and is dated 1290 CE.

The poet calls himself Visvamaadhava. He seems to be a good poet. The following verse is one from the Saptasloki:

Srngaara bhangisubagaah subagaana veechivaachaalakandakuharaa muhuraattaveenaah

Gaayanti …………… giraanagaraajasrngamaaruhya guhyachakoradrso yasosya

The same poet seems to have also composed the incomplete, but highly poetical, inscription preserved in the Rajkot Museum. The first half of verse 31 of the Rajkot inscription is identical with the first half of verse 3 of the Vanthalli inscription.

It is our duty to collect and publish all the verses from thousands of inscriptions spread all over India. If they are translated into English and vernacular languages, all can appreciate the beauty of those verses.

Source – Sanskrit and Prakrit Poets known from Inscriptions, Prof.D.B.Diskalkar, Pune, 1993 (with my inputs)

–subham–tags- Aihole, Mithila, Anumati Devi, Madhava, Ravikirti, Inscriptions, Sanskrit

அனுமதி தேவி புகழ்பாடும் பீஹார்  கல்வெட்டு (Post No.11,213)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,213

Date uploaded in London – 22 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மாதவ என்ற புலவர் இயற்றிய ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு பீஹார் மாநில பகீரதபுரியில் (பகிரத்பூர் ) உள்ளது. இது அனுமதி தேவி என்ற ராணியின் புகழை அழகிய ஸம்ஸ்க்ருதத்தில் வடித்துள்ளது .

அனுமதி தேவி என்பவர் ராமபத்ராவின் மனைவி; ஹரிநாராயணனின் மருமகள்; கம்ச நாராயணனின் தாயார் .

கம்சநாராயண, மிதிலா நகர ஒயின்வாரா வம்ச சிற்றரசர்.. கி.பி.1500 ஐ ஒட்டி வாழ்ந்தவர்.லட்சுமண சேன சம்வத்சரம் 403.

இந்தக் கல்வெட்டு, அனுமதி தேவி கட்டிய தேவி கோவில் பற்றிப் பேசுகிறது. ஒன்பது செய்யுட்களைக் கொண்டது.

புலவர் மாதவ, தன்னுடைய வம்சாவளியையும் சொல்கிறார். மஹாதேவியின் தந்தை சிவா ஜா தனது வம்சத்தைச் சேர்ந்தவர்என்கிறார்.. மிதிலா நகரைச் சேர்ந்த கதாதர பட்டர் இயற்றிய ரசிகஜீவன பாடல் தொகுப்பில் இது குறிப்பிடப்பட்டதாகவும் புகழ்ந்து கொள்கிறார்.

அனுமதி தேவி தனது தானங்களால் உலகிலுள்ள கொடிய வறுமையை ஒழித்தாள் ;

தன்னுடைய புகழ் ஒளி மூலம் சரத் கால சந்திரனின் ஒளியைவிட பல்லாயிரம் பேரின் ஒளியை மேலும் பிரகாசமாக்கினாள் ;தனது அடக்கத்தாலும், விவேகத்தாலும் உறவினர்களைக் கவர்ந்தாள் ;

ஒப்பற்ற குணங்கள் அடங்கிய இத்தகையவரே இந்தக் கோவிலை நிர்மாணித்தார்.

இதை சம்ஸ்க்ருத மொழியில் காணும்போது இதன் அழகு தெரியும். இது கல்வெட்டின் இரண்டாவது செய்யுளாக அமைந்துள்ளது . இதோ அந்தப் பாடல் :

தானைர்யா தலயாம் பபூவ ஜகதாம்  தாரித்ர்ய மத்யுத்கடம்

கீர்த்யா யா சரத்திந்துசுந்தரதரா லோகாம்ஸ் சகாராயுதான்

கிஞ்சோச்சைர் விநயான்யாச்ச  வசதாம் நீதா யயா  பாந்தவாஹா

ஸேயம்  விஸ்வவிலக்ஷணோஜ்வல  குண க்ராமா  மடம் நிர்மமமே 

ராணியின் புகழ்பாடும் குலதரா என்னும் புலவரின் பெயரையும் கல்வெட்டில் காண முடிகிறது.

xxx

வந்தலி கல்வெட்டு

குஜராத் மாநில செளராஷ்டிர பிரதேசத்தைச் சேர்ந்த இன்னும் ஒரு மாதவ என்ற புலவரையும் காண்போம்.இவர் சமத்காரபுர நாகர பிராஹ்மணர். தந்தை பெயர் முஞ்ஜீக  . குஜராத் சாளுக்கிய மன்னர் சாரங்கதேவரின் கி.பி. (பொ .ஆ) 1290 காலத்தியவர்

கல்வெட்டில் ஒரு ஸப்தஸ்லோகி ( ஏழு செய்யுட்கள்) இருக்கிறது.வந்தலி என்னும் இடத்தில் உள்ள இக்கல்வெட்டு ராஜ்கோட் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு கல்வெட்டைப் போல இருப்பதால் அதையும் இவர்தான் பாடி யிருக்க வேண்டும் என்று ஊகிக்கமுடிகிறது

வந்தலியில் நமக்குக் கிடைக்கும் ஏழு செய்யுட்களில் ஒன்று இதோ :

ச்ருங்கார பங்கிசஸு பகாஹா  சுபகானவீ சிவாசாலகண்டகுஹரா முஹராத்த வீணாஹா

காயந்தி ………… கிரா நகராஜச்ருங்கமாருஹ்ய  குஹ்யக சகோர த்ருசோ யசோ ஸ்ய

கல்வெட்டுகளில் காணப்படும் அத்தனை கவிதைகளையும் படி எடுத்து மொழிபெயர்ப்புடன் வெளியிடுவது நமது கடமை.

Xxx

காளிதாசனைப் பின்பற்றும் சமணமதப் புலவர்

கர்நாடக மாநில ஐஹோலவில் (அய்கொள) உள்ள சமண சமய ஸம்ஸ்க்ருதப் புலவர் ரவிகீர்த்தியின் கல்வெட்டு மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது . ஸத்யாஸ்ரய என்னும் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியின் காலத்தைச் சேர் ந்தது . கிபி. 634.

புலவரும் துறவியூமான ரவி கீர்த்தி கட்டிய சமணர் கோவில் பற்றி அவரே பாடிய செய்யுட்களில் காளிதாசன், பாரவி ஆகியோரின் பெயர்கள் வருவதால் அக்காலத்திலேயே காளிதாசன் புகழ் கர்நாடகம் வரை பரவி இருந்தது உறுதி ஆகிறது அவர் அலங்கார சாஸ்திரம் என்னும் செய்யுள் இயலையும் நன்கு அறிந்தவர் என்பது இவர் இயற்றிய கவிகளில் இருந்து தெரிகிறது பாரவியின் கிரார்த்தஜூனியம், காளிதாசனின் ரகு வம்சம் நூல்களில் உள்ள சொல்லோவியங்களை ரவி கீர்த்தி கையாளுவதால் அவர் சம்ஸ்க்ருத இலக்கியத்தை நன்கு கற்றவர் என்பதையும் அறிய முடிகிறது  வரலாறு , இலக்கியம் இரண்டையும் காட்டுவதால் இந்தக் கல்வெட்டு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது .

–சுபம் –tags- அனுமதி தேவி, மாதவ, சப்தஸ்லோகி , செளராஷ்டிர , பீஹார் 

மூளை ஆற்றலைக் கூட்ட 10 திரைப்படங்களைப் பாருங்கள்! (Post No.11212)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,212

Date uploaded in London – –    22 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மூளை ஆற்றலைக் கூட்ட 10 திரைப்படங்களைப் பாருங்கள்!

ச.நாகராஜன்

பிரபல மூளை இயல் நிபுணரான டேவிட் டிசால்வோ மூளை ஆற்றலை முழுதுமாகப் புரிந்து கொள்வதையும் அதை எப்படிக்  கூட்டுவது என்பது பற்றியும் அருமையான ஒரு நூலை எழுதி இருக்கிறார்.

What Makes Your Brain Happy and Why You Should do the opposite என்ற இவரது புத்தகம் 15 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பல்லாயிரம் பேர்களால் படிக்கப்பட்டது. ஃபோர்பஸ், சைக்காலஜி டு டே போன்ற பத்திரிகைகளில் எழுதி வருபவர் இவர்.

அவரது இன்னொரு புத்தகம் Brain Changer – How Harnessing Your Brain’s Power To Adapt Can Change Your Life.

இதில் ஏராளமான பயனுள்ள தகவல்களை அவர் தந்துள்ளார்.

அவற்றில் ஒன்று  – அவர் பரிந்துரைக்கும் பத்து திரைப்படங்களைப் பாருங்கள் என்பது தான்.

படங்களைப் பற்றிய சுருக்கமான தகவல்கள் இதோ:

1) Adaptation (2002) Director Spike Jonze

Narration narrating narrated narrative – தலை சுற்றுகிறதா? விவரிக்கப்பட்ட ஒரு விவரணத்தை விவரிக்கும் விவரணம்! அது தான் அருமையான இந்தப் படம். பிரக்ஞை (Consciousness) எப்படி விவரணத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது என்பதைச் சித்தரிக்கிறது இது.

2) Barcelona (1994) Director and Writer : Whit Stillman

பார்த்தால் பிரமிக்க வைக்கும் படம் இது. இதே இயக்குநர் The Last days of Disco என்ற படத்தை எடுத்துள்ளார். இவரது வசனம் தான் பிரமிக்க வைக்கும் நம்மை.

3) The Diving Bell and the Butterfly (2007) Director : Julian Schnabel

 பிரபலமான ஒருவருக்கு திடீரென்று பேச முடியவில்லை; நகர முடியவில்லை. இடது கண்ணை சிமிட்ட மட்டும் முடிகிறது. அவர் எப்படி உலகத்துடன் தன்னை இணைத்துக் கொள்கிறார். அவருடன் சேர்ந்து செய்யும் ஒரு பயணம் தான் இந்தப் படம்.

4) Rectorum (2005) Director : Bent hamer

சார்லஸ் புகோவ்ஸ்கி என்ற எழுத்தாளரின் எழுத்தின் அடிப்படையில் உருவானது இது. குழப்பம், ஏமாற்றம்! இதிலிருந்து மீண்டு சுயமாக தன்னைக் கண்டுபிடிப்பதைக் காட்டும் படம் இது.

5) The Grey (2011) Director L Joe Carnahan

கதையின் பிரதானமான பாத்திரம் ஃப்ளாஷ்பேக்கில் தனது கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறார். அவர் எதிர்கொள்ளும் சவால்களை அவரோடு பயணித்து இந்தப் படத்தில் பார்க்கலாம்.

6) The Insider (1999) Director : Michael Mann

ஒரு மனிதர் தனது குடும்பத்தை இழக்கிறார்; தனது தொழிலை இழக்கிறார்.எப்படி அவர் மாறுகிறார் – இந்தப் படத்தில் காணலாம்.

7) The Salton Sea (2002) Director : D.J.Caruso

தான் யார் என்பதை நிஜமாக உணர்ந்த ஒருவர் ஒரு புது வாழ்க்கையைத் தொடங்குகிறார். அதைச் சித்தரிக்கும் படம் இது.

8) The Spanish Prisoner (1997) ) Director (and Writer) : David Mamet

கண்ணால் பார்ப்பதைப் போலத் தான் ஒருவர் நிஜமாக இருக்கிறாரா? படத்தின் ஹீரோ எப்படி மாறுகிறார் என்பதை அருமையாக விவரிக்கிறது இந்தப் படம்.

9) There Will be Blodd (2007) ) Director : Paul Thomas Anderson

எண்ணெய் நிறுவனத்தில் பெரும் புள்ளி. எப்படி வெற்றி பெறுகிறார்? இந்தப் படம் சித்தரிக்கிறது.

10) Vanilla Sky (2001) ) Director : Cameron Crowe

ஆழ்மனம் சக்தி வாய்ந்தது, அது வாழ்க்கையை புனரமைக்க வல்லது. நீங்கள் விரும்பும் வகையில் சிறிது சிறிதாக முன்னேற முடியும். இதைச் சொல்கிறது இந்தப் படம்.

நினைத்தபடி வாழ முடியுமா? உங்கள் ஆழ்மனம் இதற்கு உதவுமா? இந்த இரு கேள்விகளுக்கு விடை இந்தப் படத்தைப் பார்க்கும் போது கிடைக்கும்!

ஆக பத்து படங்களைப் பார்த்து விட்டு ஆஹா என்று சொல்பவருக்கு அவர் இன்னும் முப்பது படங்களைப் பரிந்துரைக்கிறார்.

அதைப் பின்னர் பார்ப்போம்.

***

புத்தக அறிமுகம் – 36

கொங்கு மண்டல சித்தர்கள்புலவர்கள், தலங்கள்!

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

முதல் பகுதி : கொங்குமண்டல சதகம் தரும் சித்தர் வரலாறுகள்

1. அகத்தியர் சிவலிங்க பூஜை செய்த இடம்!

2. கருவூர்ச் சித்தர் வரலாறு!

3. கஞ்சமலைச் சித்தர்!

4. அதிசயம் அநேகமுற்ற பழனி மலையில் வசித்த போகர்!

5. செம்பைப் பொன்னாக்கி அனைவருக்கும் தந்த கொங்கண சித்தர்!

6. இடைஞானியார் வரலாறு!

இரண்டாம் பகுதி : கொங்குமண்டல சதகம் தரும் புலவர் வரலாறுகள்

7. சுந்தர மூர்த்தி நாயனாருக்கு சிவபிரான் பொன் கொடுத்த வரலாறு!

8. கம்பர் தமிழுக்குத் தந்த கலியாண வரி!

9. ஔவையாருக்குத் தங்க இலையில் அன்னமிட்டவன் யார்?

10. பவணந்தி மாமுனிவர்!

11. இது நாகமலை என்றால் நாகம் ஏன் படம் எடுத்து ஆடவில்லை? – பிரதிவாதி பயங்கரனின் இந்தக் கேள்விக்குப் பதில் என்ன?!

12. கவிதார்க்கிக சிங்கம் வேதாந்த தேசிகர் பரமத பங்கம் எங்கு இயற்றினார்?

13. கபிலதேவ நாயனார் போற்றிய செங்குன்றூர்!

14. இராமானுஜரை ஆதரித்த கொங்கு பிராட்டியார்!

15. பட்ட மரம் தழைக்கக் கவி பாடிய காழிப் புலவன்!

16. சாமிநாதப் புலவன் நெற்போர்கள் எரியப் பாடிய வசை வெண்பா!

17. உரிச்சொல் நிகண்டு எனும் வெண்பா நூலை இயற்றியவர்!

18. அடியார்க்கு நல்லார் பிறந்த ஊர் எது?

மூன்றாம் பகுதி – கொங்குமண்டல சதகம் தரும் தலங்கள் பற்றிய வரலாறுகள்

19. அகத்தியரின் கைப்பிடியில் அடங்கிய சிவபெருமான்!

20. பொன்னுலகம் தரும் வாலிப காசி எந்த ஊர் தெரியுமா?

21. திருத்தலங்களில் வேடுபறி நிகழ்ச்சி நடக்கக் காரணம் என்ன?

22. பேரூர் நந்தியின் முகம் வெட்டப்பட்டு பின் மீண்டும் வளர்ந்தது ஏன்?

23. பழம் நீ அப்பா!

24. இடும்பாசுரன் காவடியாகத் தூக்கி வந்த மலைகள்!

25. மொக்கணீசுரர் என்ற திருநாமம் சிவனுக்கு ஏன் உண்டாயிற்று?

26. இறந்த யானை எழுந்த கதை!

27. சிதம்பரம் கோவிலுக்குப் பொன் வேய்ந்தது எப்படி?

28. இளங்கோவடிகள் சொல்லி அருளிய வேலனின் தலம் எது?

29. சித்தன் வாழ்வைப் புகழ்ந்து பாடிய ஔவை!

30. வயோதிகன் குமரன் ஆன விந்தைச் சம்பவம்!

31. கற்பணிக் கோவிலும் எண்கோணமான குளமும் அமைத்த கட்டி முதலி!

32. மலையைக் குடைந்து அரங்கநாதன் ஆலயம் அமைத்த அதியன்!

பாடல் முதல் குறிப்பும், பாடல் எண்ணும், வரலாறும்

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

தமிழகத்தின் தலை சிறந்த மண்டலங்களுள் ஒன்று கொங்கு மண்டலம்.

தங்கம் நிகர் கொங்குமண்டலத்தின் புகழ் பல நூறு வரலாறுகளைக் கொண்டது.

அவற்றில் அருமையான நூறு வரலாறுகளைத் தொகுத்தார் கார்மேகக் கவிஞர் என்னும் பெரும் புலவர்.

கொங்குமண்டலத்தில் குறும்பு நாட்டில் விஜயமங்கலம் என்னும் ஊரில் ஸ்ரீ வத்ஸ கோத்திரத்தில் ஔபாக்கிய சூத்திரம் விருத்தானிய யோகசாகை காசிபப் பிரவரணம் ஜைன பிராமண குலத்தில் பத்மநாப ஐயர் என்பாருக்கு இவர் மகனாகப் பிறந்தார். மேகம் பொழிவது போல் கவிதை மழை பொழிவதால் இவர் கார்மேகக் கவிஞர் என்று அழைக்கப்பட்டார். இவரது வரலாறு சிறப்பான ஒன்று. இவர் இயற்றிய அரும் நூலே கொங்குமண்டல சதகம்.

கொங்குமண்டல சதகம் என்னும் நூறு பாக்கள் அடங்கிய நூலில் கொங்குமண்டலத்தின் பெருமை அனைத்தும் அடக்கிய இவரது புலமை வியக்க வைக்கும் ஒன்று. கொங்குமண்டலம் பற்றி அறிய விரும்புவோரும் தமிழகத்தின் தலையாய வளர்ச்சியையும் பண்பாட்டையும் அறிய விரும்புவோரும் தமிழ்ச் சுவையைச் சுவைக்க விரும்புவோரும் படிக்க வேண்டிய அரிய நூல் இது.

இதில் கூறும் வரலாறுகளைக் கட்டுரைகளாகத் தொகுத்தேன்.

இந்தக் கட்டுரைகள் www.tamilandvedas.com-ல் அவ்வப்பொழுது வெளியிடப்பட்டு வந்தன.

இந்த வரலாறுகளில் 32 வரலாறுகள் முதல் பாகமாக இப்போது வெளியிடப் படுகிறது.

இதைத் தொடராக வெளியிட்ட லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.

இந்த நூலை டிஜிடல் வடிவமாக வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மீது ஆர்வம் கொண்ட அனைத்து மக்களும் இதைப் படித்து உத்வேகம் பெற்றுத் தமிழைப் போற்றி வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இதைத் தமிழ் அன்பர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். அனைவருக்கும் எனது நன்றி.

பங்களூர்
10-3-2022

ச.நாகராஜன்

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

கணவனுக்காகப் போராடிய தமயந்தி, சாவித்திரி (Post No.11,211)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,211

Date uploaded in London – 21 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்’ ,’கணவனே கண்கண்ட தெய்வம்’ , ‘அடுத்த பிறவியிலும் நீயே கணவன்’ என்று சங்கத் தமிழ் நூல்களிலும் சம்ஸ்க்ருத நூல்களிலும் மீண்டும் மீண்டும் வரும் கருத்துக்களை 3, 4 கட்டுரைகளில் எழுதிவிட்டேன் (கீழே இணைப்புகள் உள்ளன)

கணவர்களுக்காக தமயந்தியும் சாவித்ரிரியும் எப்படிப் புலம்பினார்கள் என்பது மஹாபாரதத்தில் உள்ளது

எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.

நள-தமயந்தி காதல் கதை மிகவும் பிரசித்தமானது  ஆயினும் நளன் , தமயந்தியைக் காட்டில் தவிக்கவிட்டுப் போய்விடுகிறான். அப்போது அவள் கதறிய கதறலை வியாசர் நமக்கு அப்படியே கண்முன் கொண்டுவருகிறார்.

அதே போல சத்யவான்- சாவித்திரி கதையையும் அறியாத இந்துப் பெண்கள் இருக்க முடியாது. சத்தியவானின் உயிரை, விதிப்படி யமன் பறித்துச் சென்றபோதிலும், தன்னுடைய பேச்சுத் திறமையாலும், பதிவிரதா குணத்தாலும் மீட்டு வருகிறாள் .

இரண்டு கதைகளையும் சற்று விரிவாகக் காண்போம்.

இதோ காட்டில் தனித்து விடப்பட்ட தமயந்தியின் புலம்பல்

ஹா நாத ஹா மஹாராஜ ஹா ஸ்வாமின் . கிம் ஜஹாமி மாம்

ஹா ஹதாஸ்மி விநஷ்டாஸ்மி பீதாஸ்மி விஜனே வனே

நனு  நாம மஹாராஜ  தர்மக்ஞஹ ஸத்ய வாகஸி

கதமுக்த்வா ததா  ஸத்யம் ஸுப்தாமுத் ச்ருஜ்ய  மாம் கதஹ

பர்யாப்தஹ  பரிஹாஸோ அயமேதாவான் புருஷஷர்ப 

பீதாஹமதி துர்கர்ஷ  தர்சயாத்மான மீஸ்வர

த்ருஸ்யஸே த்ருஸ்யஸே ராஜன்னேஷ த்ருஷ்டாஸி நைஷத

ஆவார்ய குல்மைராத்மானம்  கிம் மாம் ந ப்ரதிபாஷஸே

ந்ரும்ஸ பத ராஜேந்த்ர யன்மாமேவங்கதாமிஹ

விலபந்தீம் ஸமாகம்ய  நாசவாஸயஸி  பார்த்திவ

ந சோசா ம்யஹமாத்மானம் ந சான்யதபி கிஞ்சன

கதம் து பவிதாஸ்யேக  இதி த்வாம் ந்ருப ரோதிமி

கதம் நு ராஜம்ஸ் தூஷிதஹ  க்ஷு திதஹ ஸ்ரம கர்ஷிதஹ

ஸாயாஹ்னே வ்ருக்ஷ மூலேஷு மாம பச்யன் பவிஷ்யஸி

வன பர்வம் , மஹாபாரதம்

பொருள்

“ஆ, என் தெய்வமே ! ஆ என் அரசனே! ஆ என் கணவா ! ஏன் என்னைக் கைவிட்டீர்கள்? நான் செத்தேன் .என் முடிவு வந்துவிட்டது; இந்தத் தனிக்காட்டில்  பயந்து நடுங்குகிறேன். மஹாராஜனே  எனக்கு நல்லவராகவும் விசுவாசமாகவும் இருந்தீரே ! இப்படித் தூங்கும்போது என்னைத் தவிக்கவிட்டு ஓடுவது நியாயமா? ஒருவேளை தமாஷுக்காக இப்படிச் செய்தாலும் இவ்வளவு நேரம் தவிக்கவிடலாமா ?

ஆண் சிங்கமே ! எனக்குப் பயமாக இருக்கிறது எவராலும் வெல்லமுடியாத வீரனே! உங்கள் முகத்தைக் காட்டுங்கள் . அரசனே, என் தெய்வமே ! இதோ நான் கண்டுபிடித்துவிட்டேன், கண்டுபிடித்துவிட்டேன், புதருக்குப் பின்னே ஒளிந்து இருப்பதைப் பார்த்துவிட்டேன்; ஏன் என்னிடம் பேசவில்லை ? என்ன கொடுமை! பயந்துகொண்டும் கதறிக்கொண்டும் இருக்கும் எனக்கு ஆறுதல் சொல்ல வரமாட்டீர்களா ? எனக்காக நான் துக்கப்படவில்லை; வேறு எவருக்காகவும் இல்லை. நீங்கள் தனிமையில் என்ன  பாடு படுவீர்களோ என்று அஞ்சுகிறேன் . நான் இல்லாதபடி ஒரு மரத்தின் கீழ் பசியுடனும், தாகத்துடனும் , களைப்புடனும் எப்படி காலம் தள்ளுவீர்கள், அரசே?”

XXX

திடீரென்று விஷயம் தெரிந்த ஒருவர் நடுக்காட்டில் மறைந்தவுடன் முதலில் பயம் வருகிறது. பின்னர் ஒருவேளை இது ஜோக் Joke – ஆக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. பின்னர் அப்படி இராது  என்று பயம் பற்றுகிறது. இறுதியில் அன்புள்ள மனைவிக்கு, எந்தத் தாய்க்கும் உள்ள பாசம் பீறிட்டெழுகிறது. நான் எப்படி வேண்டுமானாலும் சாவேன். நீங்கள் எப்படி பசியால், தாகத்தால் தவிப்பீர்களோ என்று எண்ணி அழுகிறேன்  என்கிறாள் தமயந்தி.

வியாசர்  ஒரு பெரிய PSYCHOLOGIST சைக்காலஜிஸ்ட். உள்ள இயல்/ மன இயல் நிபுணர். நடுக்காட்டில் திடீரென்று தொலைந்துபோன ஒருவரின் உணர்ச்சிகளை அற்புதமாக வடித்ததோடு பெண்ணுக்கே உள்ள உயரிய குணங்களையும் படம்பிடித்துக் காட்டிவிட்டார்.

இதே மஹாபாரதத்தில் நளோபாக்யானம் போல விரிவாக இல்லாவிடினும் ஸாவித்ரீ உபாக்யானமும் நமக்கு ஒரு  நல்ல காட்சியைத் தருகிறது மஹாபாரத்திலேயே ஸாவித்ரீ கதை மிகவும் பழையது என்று வியாஸர் சொல்லுவதால் அவருக்கும் முந்தைய காலக்  கதை என்பது புலப்படுகிறது. இன்றும் இந்து மதப் பெண்கள் ஸாவித்ரீ விரதம் அனுஷ்டிப்பதைக் காண்கிறோம்.

ஸாவித்ரீ விரதம் கடைப்பிடிப்போர் சொல்லும் ஸ்லோகத்தில் அவளை, கன்யா தேஜஸ்வினீ , தேவ கன்யா, ஜ்வலந்தீமிவ தேஜஸா , பதிவ்ரதா , த்யானயோக பராயணா என்று போற்றுவர். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் ‘ஒளி மயமாகப் பிரகாசிப்பவள் , பத்தினி’

.

மத்ர தேசத்தின் அரசன் அஸ்வபதி. அவன் மனைவி பெயர் மாளவிகா. புத்திரப் பேறு இல்லாமல் நீண்ட காலம் தவித்த அவர்களுக்கு சவிதா என்னும் சூரிய தேவனை வழிபடும்படி நாரதர் உபதேசித்தார். பெண் குழந்தை பிறந்தவுடன் சூரியனைப் போற்றும் வகையில் ஸாவித்ரீ என்று பெயர் சூட்டினார். பேரழகியாக  வளர்ந்த ஸாவித்ரீயிடம் உனக்குப் பிடித்த இளைஞனை நீயே தேர்ந்தெடு என்று சொன்னார் . ஒரு முறை அவள் காட்டுக்குச் சென்றபோது சாளுவ தேச இளவரசன் சத்தியவான் என்பவன், அவனுடைய கண் தெரியாத, வயதான தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்வதைக் கண்டு அவனிடம் மனதை பறிகொடுத்தாள் . ஆனால் நாரதர் மீண்டும் தோன்றி  எச்சரிக்கை விடுக்கிறார். சத்தியவான்  ஜாதகப்படி அவன் ஒரே வருடம்தான் உயிர்வாழ்வான் என்கிறார். ஸாவித்ரீயின் மனதை மாற்ற தாய் தந்தையர் செய்த முயற்சி பலிக்கவில்லை. அப்போது அவள் சொல்கிறாள் கல்லானாலும் கணவன், புல்லானாலும் அவனே என் புருஷன் என்று .

இதோ அந்த மஹாபாரத ஸ்லோகம்

தீர்காயுரதவால்பாயுஹு  சகுணோ நிர்குணோபி வா

ஸக்ருத் துவ்ருத்தோ மயாபர்த்தா ந த்விதீயம் வ்ருணோ அம்யஹம்

பொருள்

“அவருக்கு குறைவான ஆயுளோ, அல்லது நீண்ட ஆயுளோ, அவர் நல்ல குணம் உடையவரோ  கெட்ட குணங்கள் உடையவரோ, ஒரு முறை கணவன் என்று நான் தேர்ந்தெடுத்துவிட்டால் , வேறு எவரையும் நான் நாடமாட்டேன்” .

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த சக்திமிகு வரிகள்தான் இன்றும் பெண்களை ஸாவித்ரீ விரதம் இருக்கச் செய்கிறது!

பின்னர் தன்னுடைய திறமை மிகு பேச்சினாலும் தவத்தினாலும் யமனையே ஸாவித்ரீ வெல்லுவதால், பெண்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஸாவித்ரீ திகழ்கிறாள் .

கணவன் தெய்வம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

· 

13 Mar 2017 — Pictures are taken from various sources; thanks. contact; swami_48@yahoo.com. கணவனே கண்கண்ட தெய்வம்; சாமியைக் …

கணவனே கண்கண்ட | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

· 

13 Apr 2016 — (for old articles go to tamilandvedas.com OR … கணவனே கண்கண்ட தெய்வம்; உறவுகள் அல்ல.

விவாதம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › வ…

11 Feb 2020 — … ‘கல்லானாலும் கணவன்புல்லானாலும் புருஷன்‘ என்று படிக்கிறோம்.

–சுபம்—

Tags- தமயந்தி, சாவித்திரி, புலம்பல், விரதம், பெண்கள் குணம், கல்லானாலும், கணவன், புருஷன்