
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,290
Date uploaded in London – – 24 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சக்தி பெற 48 விதிகள் : ராபர்ட் க்ரீன் எழுதியுள்ள நூல்! ஒரு அறிமுகம்! – 1
The 48 laws of power by Robert Greene
உலகெங்குமுள்ள பல்லாயிரக்கணக்கானோர் விரும்பிப் படித்துள்ள
புத்தகம் ராபர்ட் க்ரீன் எழுதியுள்ள The 48 laws of power! (by Robert Greene)
மற்றவர்கள் உங்களைத் தவறாகப் பயன்படுத்தாமல் காத்துக் கொள்ளும் வழிகளைக் கூறுகிறது இந்த நூல்.
காலத்திற்கேற்ற நூல் இது.
அமெரிக்க சிறைகளில் கைதிகள் விரும்பிப் படிக்கும் நூல் இது.
ஆனால் சிறையில் இது தடை செய்யப்பட்ட புத்தகமாகவும் ஆகி விட்டது.
சில பள்ளிகளில் இது பாட புத்தகமாகவும் இப்போது வைக்கப்பட்டுள்ளது.
அப்படி என்ன 48 விதிகள்?
இதோ பார்ப்போம்!
விதி 1 : எஜமானனை மிஞ்சி அடி எடுத்து வைக்காதே!
Law 1: Never outshine the master
விதி 2 : நண்பர்களிடம் அதிக நம்பிக்கை வைக்காதே! எதிரிகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைக் கற்றுக் கொள்!
Law 2: Never put too much trust in friends, learn how to use enemies
விதி 3 : உனது நோக்கங்களை மறைத்து வைத்துக் கொள்.
Law 3: Conceal Your Intentions
விதி 4 : தேவையை விட குறைவாகவே சொல்.
Law 4: Always say less than necessary
விதி 5 : மரியாதையைப் பொறுத்துத் தான் எல்லாமே. ஆகவே அதை உயிரைக் கொடுத்துக் காத்துக் கொள்.
Law 5: So much depends on reputation, guard it with your life
விதி 6 : எப்பாடுபட்டேனும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டே இரு.
Law 6: Court attention at all costs
விதி 7 : மற்றவரை உனக்காக வேலை செய்ய விடு! புகழை உனக்கு வரச் செய்!
Law 7: Get others to do the work for you, but always take the credit
விதி 8 : மற்றவர்களை உன்னிடம் வரச் செய். அவசியம் என்றால் தூண்டிலும் போடு.
Law 8: Make other people come to you, use bait if necessary
விதி 9 : உனது செயல்களால் வெற்றி பெறு ; வீண் விவாதத்தினால் அல்ல!
Law 9: Win through your actions, never through argument
விதி 10 : தொற்று வேண்டாம் : சந்தோஷமற்றவரையும் துரதிர்ஷ்டசாலிகளையும் தவிர்த்து விடு.
Law 10: Infection: Avoid the unhappy or the unlucky
விதி 11 : மற்றவர்களை உன்னை நம்பியே இருக்குமாறு செய்யக் கற்றுக் கொள்.
Law 11: Learn to keep people dependent on you
விதி 12 : உனது எதிரியை வீழ்த்த தேவைப்படும் போது மட்டும் நேர்மையையும் தாராள மனப்பான்மையையும் கடைப்பிடி.
Law 12: Use selective honesty and generosity to disarm your victim
விதி 13 : உதவியைப் பெறும் போது, மற்றவரின் சுயநல ஆதாயத்தைச் சுட்டிக் காட்டு, அவர்களது கருணையையோ நன்றியையோ அல்ல.
Law 13: When asking for help, appeal to people’s self interest, never their mercy or gratitude
விதி 14 : நண்பனாக போஸ் கொடு, ஆனால் ஒற்றனைப் போல வேலை பார்.
Law 14: Pose as a friend, work as a spy
விதி 15 : உனது எதிரியை முற்றிலுமாக அழித்து ஒழி.
Law 15: Crush your enemy totally
விதி 16 : வலிமையையும் கௌரவத்தையும் பெற நீ ஒரு இடத்தில் இல்லாமல் இருப்பதைக் கடைப்பிடி.
Law 16: Use absence to increase strength and honor
விதி 17 : மற்றவர்களை என்ன நடக்குமோ என்ற பயத்தில் இருக்கச் செய்; இப்படித் தான் நடக்கும் என்று மற்றவர்களை நிச்சயிக்க விடாமல் செய்!
Law 17: Keep others in suspended terror, cultivate an air of unpredictability
விதி 18 : உன்னைப் பாதுக்காக ஒரு கோட்டையைக் கட்டாதே, தனிமை மிகவும் ஆபத்தானது.
Law 18: Do not build a fortress to protect yourself, isolation is dangerous
விதி 19 : யாரிடம் தொடர்பு கொள்கிறோம் என்பதை அறி; தவறானவரின் கோபத்திற்கு ஆளாகாதே!
Law 19: Know who you’re dealing with, do not offend the wrong person
விதி 20 : யாரிடமும் உறுதி அளிக்காதே.
Law 20: Do not commit to anyone
விதி 21 : எளிதில் ஏமாறுபவனைப் பிடிக்க ஏமாளியாக உன்னைக் காட்டு; உன்னிடம் இருப்பதை விட கொஞ்சம் குறைவான புத்தி இருப்பதாகக் காட்டு!
Law 21: Play a sucker to catch a sucker, seem dumber than your mark
விதி 22 : சரணாகதி உத்தியைக் கையாள்: பலவீனத்தைச் சக்தியாக மாற்று.
Law 22: Use the surrender tactic: transform weakness into power
விதி 23 : உனது சக்திகள் அனைத்தின் மீதும் கவனத்தைக் கொள்.
Law 23: Concentrate your forces
விதி 24 : அரசவையில் ஜால்ரா அடிப்பவரைப் போல நேர்த்தியாக விளையாடு
Law 24: Play the perfect courtier
முதல் 24 விதிகளைப் பார்த்தோம்; அடுத்த 24 விதிகள் தொடரும்!
**
புத்தக அறிமுகம் – 66
அதிரடி மன்னன் ஜாக்கிசான்

நூலில் உள்ள அத்தியாயங்கள்
1.ஏழையின் எழுச்சி
2.இளமையும் வறுமையும்
3.திரை உலகின் முதல் வெற்றி
4.1962 முதல் 1976 முடிய
5.ப்ரூஸ்லீயுடன் ஜாக்கிசான்
6.அனுபவம் பெறும் படங்கள்
7.திருப்பு முனை
8.கவர்ச்சி நடிகர்!
9.ஜாக்கிசானும் லோ வீயும்
10.ஜாக்கிசானும் வில்லிசானும்
11.தாயின் பாசம்
12.மூன்று வெற்றிப்படங்கள்
13.பெரிய அண்ணன் சாமோ ஹங்
14.புகழ் தந்த போலீஸ் ஸ்டோரி
15.ஆர்மர் ஆ·ப் காட் (1986)
16.மிராக்கிள்ஸ் போலீஸ் ஸ்டோரி II (1988)
17.சூப்பர் காப்
18.கிரைம் ஸ்டோரி (1993)
19.விபத்துக்கள்
20.நைஸ் கை (1997)
21.வெற்றிக்கான விலை
22.குடும்ப வாழ்க்கை
23.தொடரும் சரித்திரம்
**
மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இன்று உலகமே வியக்கும் ஆசிய சூப்பர் ஸ்டாராகத் திகழும் ஜாக்கிசானின், போராட்டம் நிறைந்த வாழ்க்கையைக் கூறும் நூல்.
ஜாக்கிசான் 1962இல் நடித்த முதல் படத்தில் தொடங்கி 1997இல் வெளியான ‘நைஸ் கை’ படம் வரை ஒவ்வொன்றாக விவரிக்கிறது. மயிர்க் கூச்செரியும் சண்டைக் காட்சிகளில் உயிரைப் பொருட்படுத்தாது நடிப்பவர். அவர் உடலில் அடிபடாத பாகமே இல்லை. ஹாலிவுட்டையே வெற்றி கொண்ட ஜாக்கிசானின் வரலாறு இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டும் ஒன்று! இதன் அணிந்துரையில் திரு.அபஸ்வரம் ராம்ஜி அவர்கள், “அதிசயிக்க வைக்கும் முயற்சியுடன் எளிய நடையில் அரிய இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்” என்று நூலாசிரியரைப் பாராட்டுகிறார்.
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். அதிரடி மன்னன் ஜாக்கிசான் நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
**