Post No. 11,611
Date uploaded in London – – 1 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரு அருமையான தேவாரப் பாடல் அப்பர் பாடிய ஆறாம் திருமுறையில் உள்ளது. அதை D K ஜெயராமனின் குரலில், மோகன ராகத்தில் ,கேட்கையில் மேலும் சிறப்படைகிறது. அவர் பாடிய ஊரின் பேரைக் கேட்டாலோ தீராத நோய் எல்லாம் தீர்ந்து விடும்; வாராத செல்வம் எல்லாம் வந்து விடும் என்கிறார் அப்பர் பெருமான்.
பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
பொருள் :
ஆயிரம் நாமங்கள் பாடி தேவர்களாளல் போற்றப்பட்ட பெருமானை,
கிடைக்கப்பெறாத செல்வமாகிய வீடு பேறு இன்பத்தை தனது அடியவர்களுக்கு கிடைக்க செய்பவனை,
தீராத நோய்களையும் தீர்ப்பவனை, திரிபுரங்கள் திக்கெட்டும் எரிகையில் போரிட்டு அதனை வென்றவனை,
வைத்தீஸ்வரனை இத்தனை நாள் போற்றிப் பாடாமல் இருந்து விட்டேனே என்று புலம்புகிறார் அப்பர்.
(புள்ளிருக்கு வேளூரான்- வைத்தீஸ்வரன் கோவில் மூலவர் ; தாயார் : தையல் நாயகி)
XXX
இதில் தெரியவரும் அரிய செய்திகள் :
அப்பர் பெருமான் காலத்திலேயே சிவ பெருமானுக்கு ஸஹஸ்ரநாமம் இருந்திருக்கிறது.
திருமாலும் பன்றியாய்ச்
சென்றுணராத் திருவடியை
உருநாம் அறியஓர்
அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஓருருவம்
ஒன்றுமில்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ- என்று மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் பாடுகிறார்
Xxxx

இரண்டாவது அரிய செய்தி :–புள்ளிருக்கு வேளூர் என்பதற்கு தல புராணம் தரும் தகவலை திருஞான சம்பந்தரும் வேறு ஒரு பாடலில் உறுதி செய்கிறார் . புள்= ஜடாயு, சம்பாதி என்ற இரண்டு புள் (பறவைகள்), ருக்கு வேதம், வேள் /முருகன், ஊர்/ சூரியன் பூஜித்த தலம் என்பதால் புள்ளிருக்கு வேளூர் என்று பெயர் பெற்றது .
இதை சம்பந்தர் தேவாரத்தில் காண்கிறோம் :
கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானா ருறையுமிடந்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.
Xxx
மூன்றாவது அரிய செய்தி :– சிவபெருமான், நோய் தீர்க்கும் கடவுள் ஆகும். சம்ஸ்க்ருதத்தில் வைத்தீஸ் வரன் என்று பெயர். முன்காலத்தில் தமிழ்ப் பெயர்கள் மட்டுமே இருந்ததென்றும் பின்னர் சிலர் அதை ஸம்ஸ்க்ருத்திற்கு மாற்றிவிட்டனர் என்றும் பலரும் புலம்புவர். அதைத் தகர்த்து எறிகிறது அப்பரின் அருள்வாக்கு :
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்
இது பிறவிப்பிணியைத் தீர்க்கும் வரி என்றாலும் பொருந்தும். உடலில் வரும் நோய்களைப் போக்குவார் என்றாலும் பொருந்தும். ஏனெனில் இந்தக் கோவிலில் மட்டும் நோய் தீர்க்கும் மருந்து உருண்டை — புற்று மண் – பிரசாத மாகக் கிடைக்கிறது. அத்தோடு உப்பும் மிளகும் கிடைக்கிறது. ஆக அப்பர் பாட்டில் வரும் மருந்து என்பது இதையும் குறிக்கும்.
மருந்து என்ற சொல் பல் இடங்களில் அமிர்தத்தையும்– சாவா மருந்து — குறிக்கும். அதைத் தரும் தன்வந்திரி சந்நிதி, இந்தக் கோவிலில் இருப்பது நோய் தீர்க்கும் தலம் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
ருத்ரம் போன்ற யஜுர் வேத மந்திரங்களிலேயே இறைவனை பேஷஜம் /மெடிசின் MEDICINE , பிஷக் /டாக்டர் DOCTOR என்று ரிஷிகள் அழைத்துள்ளனர்
Xxx
நாலாவது அரிய செய்தி :–இந்தத் தலத்தின் புனித மரம் வேம்பு ஆகும். தீராத நோய்களை எல்லாம் தீர்க்கும் மரம் வேப்ப மரம் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை .
Xxx
ஐந்தாவது அரிய செய்தி :-இது அங்காரக க்ஷேத்திரமும் ஆகும்.. அந்த செவ்வாய்க்கு உரியவனான் முருகப்பெருமான் செல்வ முத்துக் குமாரசாமி என்ற பெயரில் இங்கு கொலு வீற்றிருப்பது குறிப்பிடத் தக்கது.
எங்கள் குல தெய்வமான வைத்தீஸ்வரனை வணங்கச் செல்லுகையில், நாங்கள் ஐந்து அர்ச்சனைத் தட்டுகள் வாங்கி வைத்யநாத சுவாமி, தையல் நாயகி என்னும் பாலாம்பிகை, அங்காரகன், செல்வ முத்துக் குமரன், தன்வந்திரி ஆகிய அனைவர்க்கும் அர்ச்சனை செய்வோம்.
Xxx
ஆறாவது அரிய செய்தி:-
வைத்தீஸ்வரன் கோவில் குளமும் மிகப்பெரியது; பார்ப்பதற்கு அழகானது; மீன்கள் .தவளைகள் வசிக்காத குளம் என்ற பெருமையுடைத்து. கோபுரமும் குளமும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாதது.
XXX
ஏழாவது அரிய செய்தி:-
ஊரின் பெயரும் கோவிலின் பெயரும் ஒன்று. இப்படி இருப்பது சில இடங்களில் மட்டுமே ; காண்க- வைத்தீஸ்வரன் கோவில்
பாலாம்பிகே ச வைத்யே ச பவரோக ஹரேதி ச
ஜபேந் நாம த்ரயம் நித்யம் மஹாரோக நிவாரணம்
என்ற ஸ்லோகத்தையும்
XXX

நோய்கள் விலக:
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வாமய வினாசாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமஹாவிஷ்ணவே நமஹ என்ற ஸ்லோகத்தையும் சொல்லி பயன் அடைவோமாக .
தன்வந்திரி அமிர்த கலசத்துடன் வந்து நம் உடலில் உள்ள ஸர்வ ஆமய = எல்லா நோய்களையும் தீர்த்துவிடுவார்.
பேராயிரம்பரவி – திருநாவுக்கரசர் தேவாரம் பாடியவர்
https://www.youtube.com › watch
6:36
… 6.54.8 தலம்: புள்ளிருக்கு வேளூர் பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் பெம்மானைப் …
YouTube · · 15 Nov 2020
XXX

ENGLISH TRANSLATION OF THEVRAM OF APPAR BY
SEKKIZAR ADIPPODI DR T N RAMACHANDRAN
Alas, alas I have wasted many, many days not hailing
Him of Pullirukkuvelur! He is the Lord whom Devas
Hail with a thousand names; unto the servitors who part not
From Him. He secures the wealth of salvation; becoming
Mantra, Tantra and Medicine too. He cured the malady
Well-nigh impossible to cure; He is the martial one who held
The strong bow with which He gutted with fire
The triple hostile towns.
xxx
following is from shaivam.com
Praising thousands of names hailed by celestials,
for the never separating devotees the One Who brings
the non-attainable wealth, Being the mantra, tantra
and medicine Capable of curing even the incurable
diseases, the Warrior Who held the mighty bow in hand
burning the three cities, that Lord, the One in
puLLirukku vELUr (vaiththIswaran kOvil),
without praising Him, oh I wasted so many days !
–subham—
tags-அப்பர் தேவாரம் , பேராயிரம் பரவி, வைத்தீஸ்வரன் கோவில், புள்ளிருக்குவேளூர் , தன்வந்திரி, நோய்கள் தீர