அரிசிச் சோறு ஜிந்தாபாத் (வாழ்க)- ராஜாஜி (Post No.11,629)

Gandhiji and Rajaji

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,629

Date uploaded in London – –  5 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

அவரவர்க்கு சிறு வயது முதலே அம்மா கையால் சாப்பிட்ட உணவே அமிர்தமாகும். நம்முடைய மனமும் உடலும் அதற்குத்தக அமைந்து விடுகிறது. தமிழனுக்கு இட்லி சாம்பார், ரசம் வடை, பொங்கல் , தோசை, உப்புமா வேண்டும். ஆந்திராக்காரர்களுக்கு கோங்கூரா சட்னி, ஊறுகாய் வேண்டும். மலையாளிகளுக்கு தேங்காய் இல்லாத சமையல் பிடிக்காது . இதுபோல இலங்கையர், வங்காளிகளுக்கு  மீ ன்  இல்லாத உணவு, உணவே இல்லை.. வெளிநாட்டோருக்கோ, முஸ்லீம்களுக்கோ  மாமிசம் இல்லாத உணவைக் கற்பனையும் செய்து பார்க்க முடியாது.ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் பிராணிகளின் எண்ணிக்கை கோடி கோடியாகும் .நிற்க. இரண்டு சுவையான சம்பவங்களில் அரிசிச் சோற்றுக்கு ஏற்பட்ட கெளரவத்தையும் அவமானத்தையும் காண்போம்..

ராஜாஜி , மனித வர்க்கத்தின் தூதராக அமெரிக்காவுக்குச்  சென்றபொழுது , அமெரிக்க அரசாங்க  உயரதிகாரி ஒருவர் ராஜாஜிகுத் தம் வீட்டில் இட்லியும் சட்னியும் வழங்கினார்.. நன்றாக இருக்கிறது என்று கூறி அதனைச் சுவைத்த ராஜாஜி, உலகம் சுருங்கிவிட்டது (The world has become  smaller ) என்று கூறினார்.

xxx

சுவீடனுக்குச் சென்ற உணவு மந்திரி சி.சுப்ரமணியம் , நான் சென்ற சில நாடுகள் என்ற புஸ்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: “அன்றிரவு சாப்பிட்டபொழுது எனக்கு நம் ஊரில் இருப்பதாகவே தோன்றியது. எல்லாம் நம் ஊர் சமையல்;  ரசம், சாம்பார் வகையறாக்கள்.அதைவிட மகிழ்ச்சிகரமான விஷயம் , மறுநாள் காலை சிற்றுண்டிக்கு இட்லி கிடைத்ததுதான் அடேயப்பா ! ஒரு மாதம் இட்லியே காணாமல் இருந்துவிட்டு, அன்று அதை ருசித்தது எப்படி இருந்தது தெரியுமா ? தேவாமிருதம் போங்கள் !

Xxx

சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பது தமிழ்ப் பழமொழி (சோற்றுக்குப் பின்னர்தான் சொக்கனும் மீனாட்சியும் என்பது மதுரைப் பழமொழி )

 xxx

Patel and Gandhi

 அரிசிச் சோறு மர்தாபாத் (ஒழிக)- மஹாத்மா காந்தி

அரிசி உணவு சம்பந்தமாக காந்தியடிகளுக்கும் வல்லபாய் பட்டேலுக்குமிடையே நடந்த சம்பாஷணையை மகாதேவ தேசாய் எழுதியுள்ளார். .ஏரவாடாச் சிறைச்சாலையில் அரிசியின் மேன்மை குறித்து குஜராத்தி பத்திரிகை ஒன்றில் வந்த கட்டுரையை படேல்  படித்தார் . அதற்கு காந்தி  அடிகள் ‘அரிசி  உணவை அதிகம் உண்ணக்கூடாது . அதில் ஊட்டச் சத்து குறைவு’ என்று  கூறினார் .

அரிசி உண்ணும் ஜப்பானியர் , மாமிசம் உண்ணும் அமெரிக்கர், ஆங்கிலேயரைவிட வலிமை உள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்ற வாதத்தை வல்லபாய் படேல் படித்தார்.

உடனே காந்தி  அடிகள், ஜப்பானியர்கள் அரிசியை மட்டும் உண்பவர்கள் அல்லர். அவர்களுடைய முக்கிய உணவு மீன், மாமிசம் முதலியவை. அரிசி , இரண்டாவதுதான். அதைப்போலவே தான் வங்காளத்திலும் மலபாரிலும் உள்ளவர்கள்  மீனை முக்கிய உணவாகவும் அரிசியை இரண்டாவது உணவாகவும் கொள்கிறார்கள் . அரிசி ஒன்றையே சாப்பிடுபவர்கள் பீஹாரிகள்தான். அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று நீங்களே பாருங்கள்’ என்று கூறினார் .

பாஞ்சாலத்தைத் தவிர இந்தியா முழுவதும் சாதாரண மக்கள் முக்கியமாக எந்தப் பொருட்களைக் கொண்டு உயிர் வாழ்கிறார்களோ , அவை ஊட்டச் சத்து போதாதவை என்பது காந்தியடிகள் கருத்து .

Xxx

காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகள் (1894-1994) கருத்து

பண்டைக் காலத்தில் நீர்ப்பாசனம் இல்லாத இடங்களில் நிம்மதியோடு கர்மாநுஷ்டானம் செய்து வந்தவர்கள் கூட ‘வைச்வதேவம் ‘ என்னும் அனுஷ்டானத்திற்கு மாத்திரம் , சிறிதளவு பச்சரிசியை வைத்துக்கொண்டு, ஆகாரத்திற்கு புஞ்சை தானியங்களால் ஆகிய களி , கூழ் , கஞ்சி முதலியவற்றை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார்கள் . மீண்டும்

எல்லோரும்  புழுங்கல் அரிசியையும் அத்துடன் நவதானியங்களையும்  அதிகம்  சேர்த்து சாப்பிட ஆரம்பிப்பது நலம் . இது புஷ்டியான ஆகாரம். அரிசி விளையும் இடங்களில் உள்ளவர்களும், நவதானியங்களைச் சேர்த்து சாப்பிடவேண்டும்  என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஆசார்ய சுவாமிகள் கூறியுள்ளார்..

xxxx

வடக்கே  கோதுமை சாப்பிடு பவர்களைக் காட்டிலும் தென்னிந்தியாவில் அரிசி உண்பவர்களிடையே ஊட்டச் சத்து அபாயமான அளவுக்குக் குறைந்திருக்கிறது என்று ஜோஷுவா டி  காஸ்ட்ரோ என்ற பிரபல நிபுணர்  ஜியாக்ரபி ஆப் ஹங்கர் GEOGRAPHY OF HUNGER  என்னும் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார் .

Xxxx

தொழிலதிபரின் இரட்டை வேடம் !

கேரளாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் , சமீபத்தில் ஜப்பானுக்குச் சென்று திரும்பினார். அவர் சென்னைக்கு வந்த பொழுது , அவருடைய நபர்கள் சிலர் , சென்னையில் உள்ள சிறந்த சைவ உணவுச் சாலை ஒன்றில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

தொழிலதிபர், ஜப்பானில் தாம் கண்ட அதிசயங்களை எல்லாம் தன் நண்பர்களுக்குக் கூறினார்.. ஜப்பானியர் இப்பொழுது திமிங்கிலத்தின் எண்ணெயை உபயோகிக்கின்றனர் . அது பன்றியின் இறைச்சியைப் போலவே சுவையாக இருக்கிறது .ஜப்பானியர் தம் உணவுப்  பழக்கத்தை உடனடியாக மாற்றிக்கொண்டது அதிசயமானது. நம் நாட்டிலும் நாம் உணவுப்  பழக்கங்களை  உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினார் . அப்பொழுது பரிமாறுபவர் சப்பாத்திகள் கொண்டு வந்தார்.

“சப்பாத்தி வேண்டாம்; சாதம் கொண்டுவாருங்கள்” என்று பரிமாறுபவரிடம் கூறிவிட்டு , உடனடியாக உணவுப்  பழக்கங்களை மாற்றவேண்டும்  என்ற தம் கருத்தை தொடர்ந்து வலியுறுத்தினார்

(ஊருக்குத் தாண்டி உபதேசம் , உனக்கில்லை என்ற பழமொழிக்கதை நினைவுக்கு வருகிறது )

உணவு பற்றி ஏ கே செட்டியார் தொகுத்துடிவிஎஸ் நிறுவனத்தார் 1967ம் ஆண்டில் வெளியிட்,ட, புஸ்தகத்திருந்து எடுக்கப்பட்ட விஷயம் இது WITH MY  INPUTS )

–SUBHAM—

Tags-அரிசி உணவு, மஹாதேவ தேசாய், வல்லபபாய் படேல், காந்தி, விவாதம், ராஜாஜி, சோறு, ஜிந்தாபாத்

மருத்துவ விஷயங்கள் பற்றி அம்பலவாணர் அறிவுரை (Post.11,628)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,628

Date uploaded in London – –  5 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

எந்த எந்த நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம் என்றும் குளிக்கக்கூடாத நாட்களில் , முழுக நேரிட்டால் அதில் என்ன சேர்த்து குளிக்க வேண்டும் என்றும் ஒரு பாடலில் அம்பலவாணர் சொல்கிறார். அடுத்த பாடலில் நல்ல கைதேர்ந்த மருத்துவனுக்கு என்ன என்ன தெரிந்திருக்க வேண்டும் என்று அம்பலவாணர் பட்டியலிடுகிறார்.

சனி நீராடு என்பது அவ்வையாரின் ஆத்திச் சூடி.

சனிக்கிழமைகளில் தலை முழுகலாம் என்பதே ஒப்புக்கொள்ளப்பட்ட அர்த்தம். ஏனையன, வலியச்  சென்று பொருள் உரைப்பதாம்.

15.BATHE ON SATURDAY (WITH OIL)’

BATHE THE BODY IN SPRING WATER,

FIRST BATHE THE DEFILED MIND IN TRUTH.

 xxxxx

அறப்பளீசுர சதகம் 50. முழுக்குநாள்

வரும் ஆதி வாரம் தலைக் கெண்ணெய் ஆகாது

     வடிவமிகும் அழகு போகும்;

  வளர்திங் ளுக்கதிக பொருள்சேரும்; அங்கார

     வாரம் தனக்கி டர்வரும்

திருமேவு புதனுக்கு மிகுபுத்தி வந்திடும்;

     செம்பொனுக் குயர் அறிவுபோம்;

  தேடிய பொருட்சேதம் ஆம்வெள்ளி; சனியெண்ணெய்

     செல்வம்உண் டாயு ளுண்டாம்;

பரிகாரம் உளதாதி வாரம் தனக்கலரி;

     பௌமனுக் கான செழுமண்

  பச்சறுகு பொன்னவற் காம்; எருத் தூளொளிப்

     பார்க்கவற் காகும் எனவே;

அரிதா அறிந்தபேர் எண்ணெய்சேர்த் தேமுழுக்

     காடுவார்; அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அருமை …… தேவனே! வரும் ஆதிவாரம் தலைக்கு

எண்ணெய் ஆகாது – வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று தலைக்கு

எண்ணெய் கூடாது, (அவ்வாறு முழுகினால்) வடிவம் மிகும் அழகுபோகும் –

உருவத்தில் மிகுந்து அழகு நீங்கும், வளர் திங்களுக்கு அதிகபொருள்

சேரும் – வளர்ந்துவரும் திங்கட்கிழமைகளில் (முழுகினால்) மிகுந்த

பொருள் கிடைக்கும்அங்காரவாரம் தனக்கு இடர்வரும் –

செவ்வாய்க்கிழமைகளில் (முழுகினால்) துன்பம் உண்டாகும், திருமேவு

புதனுக்கு மிகுபுத்தி வந்திடும் – அழகு மிகுந்த புதன்கிழமைகளில்

(முழுகினால்) சிறந்த அறிவு வரும், செம்பொனுக்கு உயர் அறிவு போம் –

நல்ல வியாழக்கிழமைகளில் (முழுகினால்) சிறந்த அறிவு கெடும், வெள்ளி

தேடிய பொருள் சேதம்ஆம் – வெள்ளிக்கிழமைகளில்(முழுகினால்) சேர்த்துவைத்த பொருள் அழியும், சனி எண்ணெய்

செல்வம் உண்டு ஆயுள் உண்டாம் – சனிக்கிழமைகளில் எண்ணெய்

(தேய்த்து முழுகினால்) செல்வமும் ஆயுள் வளர்ச்சியும் உண்டாகும்,

பரிகாரம் உளது – (தகாத கிழமைகளில் முழுக நேர்ந்தால்) மாற்று உண்டு,

(அந்த மாற்று,) ஆதிவாரம் தனக்கு அலரி – முதல் வாரமான

ஞாயிற்றுக்கிழமையில் அலரிமலராம், பௌமனுக்கு ஆன செழுமண் –

செவ்வாய்க்கு நல்ல மண் ஆகும், பொன்னவற்குப் பசு அறுகு ஆம் –

வியாழனுக்குப் பசிய அறுகம்புல் ஆகும், ஒளி பார்க்கவற்கு எருத்தூள்

ஆகும் – ஒளியுடைய வெள்ளிக்கு எருப்பொடி ஆகும். அரிது ஆஅறிந்த

பேர் எண்ணெய் சேர்த்து முழுக்கு ஆடுவார் – அருமையாக

உணர்ந்தவர்கள் எண்ணெயுடன் (இவற்றைச்) சேர்த்து முழுகுவர்.

XXXX

      அறப்பளீசுர சதகம்    51. மருத்துவன்

தாதுப் பரீட்சைவரு காலதே சத்தோடு

     சரீரலட் சணம்அ றிந்து,

  தன்வந்த்ரி கும்பமுனி தேரர்கொங் கணர்சித்தர்

     தமதுவா கடம்அ றிந்து

பேதப் பெருங்குளிகை சுத்திவகை மாத்திரைப்

     பிரயோக மோடு பஸ்மம்

  பிழையாது மண்டூர செந்தூர லட்சணம்

     பேர்பெறுங் குணவா கடம்

சோதித்து, மூலிகா விதநிகண் டுங்கண்டு

     தூயதை லம்லே கியம்

  சொல்பக்கு வம்கண்டு வருரோக நிண்ணயம்

     தோற்றியே அமிர்த கரனாய்,

ஆதிப் பெருங்கேள்வி யுடையன் ஆ யுர்வேதன்

     ஆகும்; எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) எமது – எம்முடைய, அருமை ……. தேவனே!, தாதுப்

பரீட்சை வரு கால தேசத்தோடு சரீர லட்சணம் அறிந்து – நாடித்

தேர்வையும் காலத்தையும் இடத்தையும் உடலின் இயல்பையும் உணர்ந்து,

தன்வந்திரி கும்பமுனி கொங்கணர் சித்தர் தமது வாகடம் அறிந்து –

தன்வந்திரியும் அகத்தியரும் கொங்கணரும் சித்தர்களும் எழுதிய மருத்துவ

நூலைக் கற்றுணர்ந்து, பேதம்பெருங் குளிகை சுத்திவகை மாத்திரை பஸ்மம்

பிரயோகமோடு பிழையாது – பலவகைப்பட்ட பெருமைமிக்க

குளிகைகளையும் (மருந்துச் சரக்குகளைத்) தூய்மை செய்யும் முறைகளையும்

மாத்திரைகளையும் பஸ்மத்தையும் கொடுக்கும் தன்மையையும் தவறாது கற்று,

மண்டூர செந்தூர லட்சணம் பேர் பெறும் குணவாகடம் சோதித்து –

மண்டூரம் செந்தூரம் இவற்றின் இயல்புகளைப் புகழ்பெற்ற பண்புடைய

மருத்துவ நூலின் வாயிலாகத் தேர்ந்து, மூலிகாவித நிகண்டும் கண்டு – பல

வேர்வகைகளின் நிகண்டையும் அறிந்து, தூய தைலம் லேகியம்

சொல்பக்குவம் கண்டு – தூய எண்ணெயும் இலேகியமும் செய்யும்

முறையைச் சொல்லியவாறு அறிந்து, வருரோக நிண்ணயம் தோற்றி – வரும்

நோய்களின் முடிவை வெளிப்பட உணர்ந்து, அமிர்தகரனாய் – கைநலம்

உடையவனாய், ஆதிப் பெருங்கேள்வி உடையன் – முற்காலத்திலிருந்து

வழிவழியாக வரும் கேள்வியறிவையும் உடையவனே, ஆயுர்வேதன் ஆகும்- மருத்துவன் ஆவான்.

xxxx

நம்நாட்டு மருத்துவங்கள் ஆயுர்வேதம், சித்தம் என இருவகைப்படும். ‘

வாகடம், மருத்துவநூல். மண்டூரம் என்பது செங்கல்லிற் சிட்டம் பிடித்த கல்லைக்கொண்டு பிற மருந்துச்சரக்குகளையும் சேர்த்துச் செய்யும் ஒருவகைப் பொடி;  செந்தூரம் என்பது இரும்பு கலந்த மருந்துப் பொடி. இவற்றைச் செய்யும் முறையை மருத்துவர் வாயிலாக உணர்க.

ஏட்டுப் படிப்பைவிடக் கேள்வியே சிறந்தது என்பதை விளக்க,

‘ஆதிப் பெருங்கேள்வி யுடையன்’ ஆக வேண்டும் என்றார். எந்நலம்

இருப்பினும் கைந்நலம் ஒன்றே மருத்துவர்க்குப் புகழ்தரும் என்பதைத் தெரிவிக்க ‘அமிர்தகரனாய்’ என்றார்.

Xxx

கீழேயுள்ள சம்ஸ்க்ருத சுபாஷிதங்களை ஒப்பிடலாம்

இந்து மதத்தில் கடவுளை டாக்டர் (பிஷக்) என்றே அழைப்பர்ஏனெனில் அவர் பிறவிப் பிணிக்கு மருந்து தருபவர்! யஜுர் வேதத்தில் பிஷக் என்றே சிவபெருமானை அழைப்பர். 

உலகப் புகழ் பெற்ற நூல்கள் எழுதிய சரகரும் சுஸ்ருதரும் சம்ஸ்கிருதத்தில் டாக்டர் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதையும் காண்போம்:- 

ஒரு சர்ஜனின் (சஸ்த்ர சிகிச்சை செய்யும் டாக்டர்) குண நலன்கள் சுஸ்ருத (சூத்ர) 5-10:-

சௌர்யம் = பயப்படாமல் ஆபரேஷன் செய்க;

ஆசுக்ரியா= லாவகமாக, டென்ஷன் ஆகாமல் ஆபரேஷன் செய்க;

அஸ்வதேவேபது= கை நடுங்கக் கூடாது; வியர்த்து ஒழுகக் கூடாது;

அசம்மோஹக = மனதில் குழப்பம் இருக்கக் கூடாது (என்ன செய்யப் போகிறோம் என்பதை தெளிவாக நினைவில் வைத்துக்கொள்க)

சௌர்யமாசுக்ரியா சஸ்த்ரதைக்ஷயமஸ்வேதபது

அசம்மோஹஸ்ச வைத்யஸ்ய சஸ்த்ர கர்மணி சஸ்யதே

–சுஸ்ருத (சூத்ர) 5-10

xxxx  

சிறந்த வைத்யனின் குணாதிசயங்கள் (பிஷக்தமஸ்ய ஞானம்):-

ஹேது= நோய்க்கான காரணத்தை அறிபவன்;

லிங்க = நோயின் தன்மையை அறிவான்;

ப்ரசமன = என்ன சிகிச்சை தரவேண்டும் என்பதைத் துணிவான்

ரோகாணாம் அபுனர்பவ = அந்த நோய் மீண்டும் வராதபடி தடுப்பான்.

இந்த நான்கையும் அறிந்தவனே சிறந்த டாக்டர்!

ஹேதௌ லிங்கே ரோகாணாமபுனர்பவே

ஞானம் சதுர்விதம் யஸ்ய ச ராஜார்ஹோ பிஷ்க்தமஹ

–சரக (சூத்ரம்) 9-19

 xxxx

நல்ல டாக்டரின் நாலு தகுதிகள்:–

 ச்ருதே பர்யவதாதத்வம் = மருத்துவ நூல்களில் பேரறிவு;

பஹுசோ த்ருஷ்டகர்மதா = நல்ல அனுபவ அறிவு;

தாக்ஷ்யம் = திறமை;

சௌசம் = கை சுத்தம், உடல் சுத்தம் , மன சுத்தம், கிளினிக் CLINIC/SURGERY சுத்தம்

ஸ்ருதே பர்யவதாதத்வம் பஹுசோ த்ருஷ்டகர்மதா

தாக்ஷ்யம் சௌசமிதி ஞேயம் வைத்யே குணசதுஷ்டயம்

–சரக சூத்ரம் 9-6

xxx 

நோயாளியை கவனிக்கும் முறை:-

மைத்ரீ = நோயாளியை நண்பனாகப் பார்;

காருண்யா = அவனிடம் இரக்கம் காட்டு ( எவ்வளவு கட்டணம் வைத்து ஆளிடம் கறக்கலாம் என்று திட்டம் போடாதே)

ப்ரீதி = அவனுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் செய்திகளைக் கொடு;

உபேக்ஷணம் = அவனிடம் அனுதாபம் காட்டு ( நோய் வந்ததற்காக அவனைக் குற்றவளிக் கூண்டில் நிறுத்தாதே)

மைத்ரீ காருண்யமார்தேஷு சக்யே ப்ரீதிருபேக்ஷணம்

ப்ரக்ருதிஸ்தேஷு பூதேஷு வைத்யவ்ருத்திஸ்சதுர்விதா

–சரக சூத்ர 9-26 

Xxx

திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உள்ள பத்து குறட் பாக்களை பெரும்பாலோர் அறிவர்.

–subham–

Old articles in our blog

ஒரு நல்ல மருத்துவ நூல் அறிமுகம் (Post No.11315)

https://tamilandvedas.com › ஒரு-…

·

2 Oct 2022 — யாழ்ப்பாண பல்கலைக் கழக தகைசார் வாழ்நாட் பேராசிரியர் முதுமுனைவர் அ .

ஆயுர்வேத நூல் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஆ…

சிகிச்சை முறையில் மந்திர பிரயோகத்தையும் அவர் கூறியிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும்.

டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

https://tamilandvedas.com › டாக…

15 Jan 2013 — பிறவிப் பிணிக்கு மட்டும் இன்றி வாழும் போது உடலில் ஏற்படும் உபாதைகளுக்கும் …

Tamil and Vedas | Page 560

https://tamilandvedas.com › author

14 Oct 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … அதன் கீழ் அர்த்தத்தையும் தரும் ஒரு நல்ல நூல்.

xxxx subham xxxx

tags- எண்ணை , குளியல், ஸ்னாநம் , தலை முழுகுதல், வாகடம், மருத்துவன், செந்தூரம் சதகம், அம்பலவாணர் 

அருள்வாயே! – 9 (Post No.11,627)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,627

Date uploaded in London –  5 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருள்வாயே! – 9

(75 முதல் 84 முடிய)

ச.நாகராஜன்

அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.

அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:

படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!

75) திருவருணை

கனக மியற்றித் திரிந்து துவளு மெனைச்சற் றறிந்து

    கவலை யொழித்தற் கிரங்கி யருள்வாயே

பாடல் எண் 428 –   ‘தலையை மழித்து‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  பொன் வேண்டி இரச வாதத்தால் பொன்னை ஆக்கித் திரிந்து சோர்வடையும் என்னைக் கொஞ்சம் கவனித்து என் கவலையை ஒழிக்க வேண்டி என் மேல் இரக்கம் கொண்டு அருள்வாயாக.

76) திருவருணை

நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல்

  நினையு மாறு நீமேவி யருள்வாயே

பாடல் எண் 435 –   ‘புலையனான‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  உன் திருவடிகளையே தினமும் மனதில் ஆசை அழியாமல் நினைக்கும் வண்ணம் நீ என் உள்ளத்திலிருந்து அருள்வாயாக

77) திருவருணை

சிவமார்தி ருப்புகழை எனுநாவி னிற்புகழ

  சிவஞான சித்திதனை யருள்வாயே

பாடல் எண் 441 –   ‘வலி வாத பித்தமொடு‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  மங்கலம் நிறைந்த உனது திருப்புகழை என் நாவாறப் புகழ்வதற்கு சிவஞான சித்தியைத் தந்தருள்வாயாக

78) திருவருணை

 முறைமை யாகநி னடிகள் மேவவே

   முனிவு தீரவந் தருள்வாயே

பாடல் எண் 443 –   ‘விதி அதாகவே‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  முறைமைப் படி உனது திருவடிகளை அடையுமாறு, உனது கோபம் தீர்ந்து வந்து அருள்வாயாக

79) திருவருணை

உறவாடி

  நாடியது வேகதியெ னாசுழலு மோடனைநின்

   ஞானசிவ மானபத மருள்வாயே

பாடல் எண் 445 –   ‘வீறு புகழான பனி‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : (அந்த வேசையர்களுடன்) உறவாடி அவர்களுடன் ஆடுவதே கதி என்று சுழல்கின்ற மூடனாகிய எனக்கு உனது சிவஞான மயமான திருவடியைத் தந்தருள்வாயாக

80) திருவருணை

 கூறுமடி யார்கள்வினை நீறுபட வே அரிய

   கோலமயி லானபத மருள்வோனே

பாடல் எண் 445 –   ‘வீறு புகழான பனி‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : உன்னைப் போற்றும் அடியார்களின் வினை தூளாகிப் போக, அருமையான அழகிய மயிலான பதவியை அருள்பவனே!

81) சிதம்பரம்

பரமகுரு அருள்நி னைந்திட் டுணர்வாலே

   பரவுதரி சனையை யென்றெற் கருள்வாயே

பாடல் எண் 428 –   ‘இருவினையின் மதி‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  சிறந்த குருவாகிய உன் அருளை நினைவில் வைத்து, ஞானத் தெளிவு பெற்று, போற்றுதற்குரிய உன் தரிசனக் காட்சியை என்றைக்கு எனக்கு அருளப் போகிறாய்?

82) சிதம்பரம்

தொடைசிந்திட மொழிகொஞ்சிச அளகஞ்சுழ லாட

   விழிதுஞ்சிட இடைதொய்ஞ்சிட மயல்கொண்டணை கீனும்

     சுகசந்திர முகமும்பத அழகுந்தமி யேனுக் கருள்வாயே

பாடல் எண் 467 –   ‘முகசந்திர புருவம்‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :- மாலை சிதறவும், பேச்சு கொஞ்சவும், கூந்தல் சுழன்று அசையவும், கண்கள் சோர்வு அடையவும், இடை தளரவும், காம மயக்கம் கொண்டு நான் விலைமாதர்களைத் தழுவிய போதிலும், அழகிய சந்திரன் போன்ற உனது முக தரிசனத்தையும், திருவாயால் கூறும் உபதேச மொழியையும் அடியேனுக்குத் தந்தருள்வாயாக!

83) சிதம்பரம்

அங்கமிக மெலியாதே

   அன்புருக அருள்வாயே

பாடல் எண் 473 –   ‘செம் கலச‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : என்னுடல் மிகவும் மெலிவு அடையாமல், உன் அன்பால் என் உள்ளம் உருகும் படி அருள்வாயாக

84) சிதம்பரம்

துக்கத் தேபர வாமல்ச தாசிவ

   முத்திக் கேசுக மாகப ராபர

      சொர்க்கப் பூமியில் லேறிட வேபத மருள்வாயே

பாடல் எண் 480 –   ‘அக்குப் பீளை‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் ; துக்கம் பெருகி வேதனைப்படாமல், எப்பொழுதும் மங்களகரமாயுள்ள முக்தி நிலையில் சுகமாக எவற்றிலும் மேம்பட்ட சொர்க்க நாட்டில் நான் கரை ஏறும்படி உன் திருவடியைத் தந்தருள்வாயாக!

 குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இதில் காணலாம்.

***

பசி பற்றி உபநிஷத், அவ்வையார், வள்ளலார்  கூறும் உண்மைகள் (Post.11,626)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,626

Date uploaded in London – –  4 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

சாந்தோக்ய உபநிஷத் முக்கியமான ஒரு உபநிஷத். மொத்தம் 108 முதல் 120 வரை  உபநிஷத்துக்களின் பட்டியல் நீண்டாலும் காலத்தால் பழமையான பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷத்துக்கு அடுத்த நிலையில் நிற்பது சாந்தோக்யம்தான் ; சந்தஸ் என்றால் செய்யுள்; அந்த நடையில் இருப்பதாலும் சாமவேதத்தில் சந்தோகா என்ற பாடல் பாடப்படுவதாலும் பெயர் கிடைத்த  நூல் இது. ஆதி சங்கரரால் உரை எழுதப்பட்ட முக்கிய உபநிஷத்துகளில் இதுவும் ஒன்று.

பசி வந்தால் பத்தும் போம் என்ற பாடலை நாம் அனைவரும் அறிவோம் . பல அவ்வையார்களில் , தற்கால அவ்வையார் பாடிய பாட்டு அது . சில நூறு ஆண்டுகளே பழமை உடைத்து. ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இந்த உபநிஷத்தில் பட்டினியால் உடலில் ஏற்படும் மாறுதலை வருணித்திருப்பது நமக்கு வியப்பை ஏற்படுத்தும்

உபநிஷத் முழுவதும் விஞ்ஞான வகுப்பில் நடக்கும் பரிசோதனைகள் (Practical Experiments in Science Lab.s) போல பல விஷயங்கள் வரும். ஆலம் விதையைக் கொண்டுவரச் சொல்லி. இந்த கடுகுக்கும் மேல் சிறிதான விதையிலிருந்து எப்படி பிரம்மாண்டமான மரம் வந்தது என்று ஒரு ரிஷி வினவுவார். அதன் மூலம்  பிரம்மத்தின் பெருமையை விளக்குவார். மற்றும் ஒரு ரிஷி மகனே ஒரு கோப்பையில் தண்ணீர் கொண்டுவா; இன்னொரு கையில் ஒரு பிடி உப்பையும் கொண்டு வா என்பார். அதை நீரில் போடச்சொல்லி நீர் என் வழியவில்லை, அந்த உப்பு எங்கே சென்றது என்று வினவி  இறைவன் பற்றிய உணமையைச் சொல்லுவார். பிற்கலத்தில் சாக்ரடீஸ் இதே முறையைப் பின்பற்றினார். இந்து மதம் பற்றி அறியாத வெள்ளைக்காரர்கள், அதற்கு சாக்ரடீஸ் முறை SOCRATIC METHOD என்று நாமகரணம் செய்தனர்.

அது போல சுவேத கேது என்ற ரிஷி ஒரு எக்ஸ்பெரிமெண்ட் / Experiment பரிசோதனை செய்கிறார். மகனுக்கு உணவே கொடுக்காமல் தண்ணீர் மட்டும் 15 நாட்களுக்குக் கொடுத்துவந்தார் . உணவு இல்லாவிடில் எல்லா அறிவும் ஒடுங்கிவிடும் என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கே அப்படிச் செய்தார் என்று சாந்தோக்ய உபநிஷத் கூறுகிறது .

15 நாட்களுக்கு தண்ணீர் மட்டுமே சாப்பிட்டு வந்த மகன் உத்தாலகனை, வேதத்தை ஓதும்படி சுவேதகேது கூறுகிறார் . அவனால் முடியவில்லை.. பின்னர் சாப்பிட்டுவரும்படி சொல்கிறார். அப்போது அவனால் வேதத்தை ஒப்புவிக்க முடிந்தது. பசி வந்தால் பத்தும் பறந்தும் போம் என்பதை பிராக்டிகல் எக்ஸ்பெரிமென்ட Practical Experiment  மூலம் 3000 ஆண்டுகளுக்கு முன்னமே காட்டியது சாந்தோக்ய உபநிஷத்.

Xxxx

வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்

அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், பசியின் கொடுமையை அழகாக விரித்துரைக்கிறார்:-

சீவர்களுக்குப் பசி அதிகரித்த காலத்தில்,

சீவஅறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது –

அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது –

அது மறையவே புருடதத்துவம் சோர்ந்து விடுகின்றது –

அது சோரவே பிரகிருதிதத்துவம் மழுங்குகின்றது –

அது மழுங்கவே, குணங்களெல்லாம் பேதப்படுகின்றன –

மனம் தடுமாறிச் சிதறுகின்றது –

புத்தி கெடுகின்றது –

சித்தம் கலங்குகின்றது –

அகங்காரம் அழிகின்றது –

பிராணன் சுழல்கின்றது –

பூதங்களெல்லாம் புழுங்குகின்றன –

வாத பித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றன –

கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது –

காது கும்மென்று செவிடுபடுகின்றது –

நா உலர்ந்து வறளுகின்றது –

நாசி குழைந்து அழல்கின்றது –

தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது –

கை கால் சோர்ந்து துவளுகின்றன –

வாக்குத் தொனிமாறிக் குளறுகின்றது –

பற்கள் தளருகின்றன –

மலசலவழி வெதும்புகின்றது –

மேனி கருகுகின்றது –

ரோமம் வெறிக்கின்றது –

நரம்புகள் குழைந்து நைகின்றன –

 நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன –

எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன –

இருதயம் வேகின்றது – மூளை சுருங்குகின்றது –

சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது –

ஈரல் கரைகின்றது –

இரத்தமும் சலமும் சுவறுகின்றன –

மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது –

வயிறு பகீரென்றெரிகின்றது –

தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன –

உயிரிழந்து விடுவதற்கு மிகவுஞ் சமீபித்த அடையாளங்களும் அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன.

பசியினால் இவ்வளவு அவத்தைகளும் தோன்றுவது சீவர்களுக்கெல்லாம் பொதுவாகவேயிருக்கின்றது.

இவ்வளவு அவத்தைகளும் ஆகாரங் கிடைத்தபோது உண்டு பசி நீங்க நீங்குகின்றன. அப்போது தத்துவங்களெல்லாம் தழைத்து உள்ளங் குளிர்ந்து அறிவு விளங்கி அகத்திலும் முகத்திலும் சீவர்களையும் கடவுள்களையுந் துளும்பி ஒப்பில்லாத திருப்தியின்பம் உண்டாகின்றது. இப்படிப்பட்ட இன்பத்தை உண்டுபண்ணுகின்ற புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்? இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று சொல்லலாம்? எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும். இதனால் நரக வேதனை சனனவேதனை மரண வேதனை என்கின்ற மூன்று வேதனைகளுங் கூடி முடிந்த வேதனையே பசிவேதனை என்றும், அகம் புறம் நடு கீழ் மேல் பக்கம் என்கிற எவ்விடத்தும் நிறைந்து எக்காலத்தும் வேறுபடாத மோக்ஷ இன்பமே ஆகாரத்தினாலுண்டாகும் திருப்தியின்பம் என்றும் அறியப்படும்.

உணவு பற்றி ஏ கே செட்டியார் தொகுத்துடிவிஎஸ் நிறுவனத்தார் 1967ம் ஆண்டில் வெளியிட்,ட புஸ்தகத்திருந்து எடுக்கப்பட்ட விஷயம் இது 

Xxx

பசி வந்திடப் பத்தும் பறந்து போம்:

இதை பசி வந்திட பத்தும் பறந்து போம் என்ற அவ்வையாரின் நல்வழிப் பாடலுடம் ஒப்பிடுவோம்:

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை 

தானம் தவர் உயர்ச்சி தாளாண்மை – தேனின் 

கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் 

பசி வந்திடப் பத்தும்பறந்து போம் — நல் வழி

மானம், குலம், கல்வி, வலிமை, அறிவு, தானம், தவம், உயர்வு, தாளாண்மை/முயற்சி, காமம்– பறந்து போகும்

Starvation destroys these ten: honour, dignity,learning, honesty, knowledge liberality, nobility, penance, application to business, and the love of women, whose tongue utters words as sweet as honey.

NAL VAZI- PART 2 – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › nal…

29 Nov 2018 — மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை – தேனின்

Xxx subham xxxx

 TAGS-பசி , உபநிஷத், அவ்வையார், வள்ளலார் பசி வந்திடப் பத்தும்பறந்து போம் , நல்வழி

ஆண் குழந்தை பெற திருமூலர் காட்டும் வழி (Post No.11,625)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,625

Date uploaded in London – –  4 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஆண்மி கினாணாம் பெண்மிகிற் பெண்ணும்

பூணு மிரண் டொன்றிப் பொருந்திலலியாகும்

தான் மிகவாகிற்றரணி  முழுதாளும்

பான்மை மிகுந்திடிற்  பாய்ந்ததுமில்லையே

பொழிப்புரை

சுக்கிலம் மிகுதியானால் ஆணாகவும் , சுரோணிதம் மிகுதியானால் பெண் ணாகவும்,

சுக்கில சுரோணிதம் சமமாகக் கலந்து பொருந்தினால் அலியாகவும் , சுக்கிலம் அளவுமீறி அதிகமானால்

பூமண்டலம் முழுதும் ஆளுகின்ற சக்ரவர்த்தியாகவும் ஆகும்; சுக்கிலம் மிகக்குறைந்து சுரோணிதம் அதிகமானால் கரு உற்பத்தியாகமாட்டாது.

Xxxx

I have found the following from another book-

(வேறு ஒரு பொழிப்புரையை கீழே காண்க:–

திருநெல்வேலி சைவ  சித்தாந்த நூற் பதிப்புக் கழகம்  வெளியிட்ட திருமந்திர உரையில் காணப்படும் பொழிப்புரை :

காதலரிருவரும் மருவிப் பொருந்துங்கால் ஆண் ஆகிய வலப்பால் மூச்சு மிகுந்து சென்றால் கருவுற்றுப் பிறக்குமுயிர் ஆணாகப் பிறக்கும். இடப்பால் மூச்சு மிகுந்து சென்றால் பிறக்குமுயிர் பெண் ணாகப் பிறக்கும்.இரண்டு மூக்கின் வழியாகவும் வரும் மூச்சு ஒத்திருந்தால்  பிறக்குமுயிர் அலியாகப் பிறக்கும். ஆள்வினை முயற்சியில் கருத்து மிகுதியாகவிருந்தால்  பிறக்குமுயிர் சிறப்பாகப் பிறக்கும். அச்சிறப்புடன் பிறந்த உயிர் ‘உழையார் புவனம் ஒரு மூன்று’மொருங்குடன் ஆளும் அகப்பயிற்சியால் விந்து கட்டுப்பட்டு திண்மை ஏற்படின் மருவி இன்புறினும் விந்து வெளிச் செல்லு வதில்லை ஆதலால் பாய்ந்ததும் இல்லை  என்றனர். பண்ணவம் (திண்மை) என்பதன் திரிபு பாணவம்) இந்தப்பதிப்பில் கடைசி வரி – பாணவமிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே என்று உள்ளது.

Xxxx

 ஸ்த்ரீகள் ஒவ்வொரு முறையும் ருதுவாகும்போது (மாதவிலக்கு), அவர்களுக்கு ஆர்தவம் வெளியானது முதல் பனிரெண்டு நாட்களும் ருது காலமாம்.. அவற்றுள்  முதலி ல் மூன்று நாட்களும் , பிறகு பதினோராவது தினமும் அதற்குப் பிறகும் கூட்டுவதற்குத் தகாதவைகள்.ஏனைய நாட்களில் சேருவதால் பயனுண்டாகும்

5,7, 9, 11 இந்த ஒற்றைப்பட்ட நாட்களில் கூடுவதால் அவர்கட்கு இயற்கையிலேயே சுரோணிதம் , அந்த நாட்களில் அதிகரித்திருக்கிறது ஆதலால் பெண் குழந்தையும் 4,6,8,10, 12 இந்த நாட்களில் சுரோணிதம் குறைவதால்  சுக்கிலாதிக்கியத்தால் ஆண் குழந்தையும் பிறக்கும்- —-அஷ்டாங்க ஹிருதயம்.

மேற்கூறிய தகவல் உள்ள புஸ்தகம்:

(திருப்புகழ் தா.ப. வேங்கட சுப்பிரமணியன் உரை, திருமந்திரம் வைத்தியப் பகுதி, திருவாவடுதுறை ஆதீனம், 1957)

XXXX

மனு நீதி நூல் என்னும் மானவ தர்ம சாஸ்திரம் சொன்னதையே திருமூலரும் செப்பியுள்ளார்.

(எனது பழைய கட்டுரைகளில் மனு ஸ்ம்ருதி ரகசியங்களைக் காண்க)

ஆண் குழந்தை பெற வழி | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஆ…

14 Jun 2018 — ஆண் குழந்தை பெற வழி! SEX செக்ஸ் பற்றி மநு (Post No.5109). மூன்றாம் அத்யாயத் தொடர்ச்சி.

ஆண்களுக்கும் குழந்தை – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஆ…

23 May 2017 — ஆண்கள் குழந்தை பெற முடியுமா? ஆமாம், பெற முடியும் என்று மஹாபாரதமும் …

ஆண்களுக்கு குழந்தை | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஆ…

26 Mar 2014 — ஆண்கள் குழந்தை பெற்றதாக மஹாபாரதத்தில் இரண்டு மூன்று கதைகளில் வருகிறது.

குழந்தை பிறக்காதது ஏன்? (Post No7472)

https://tamilandvedas.com › குழந…

·

19 Jan 2020 — அத்தகைய ஒரு கட்டுரை குழந்தை பிறக்காமல் இருக்க என்ன காரணங்கள் என்பதை புல்லட் …

குழந்தை பிறக்க செலீனீயம் வேண்டும்! (Post No.5374)

https://tamilandvedas.com › குழந…

29 Aug 2018 — ஆண்கள் விந்துக்களின் வீரியம் குறைவது ஏன்? உடலும் வாயும் உள்ளிப்பூண்டு (GARLIC) …

ஆண் குழந்தை மதிப்பு | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஆ…

26 Oct 2019 — மநு நீதிச் சோழன். Written by LONDON SWAMINATHAN. swami_48@yahoo.com. Date: 26 OCTOBER 2019. British Summer Time uploaded in …

Missing: பெற ‎| Must include: பெற

Medicine | Tamil and Vedas | Page 2

https://tamilandvedas.com › category

22 Jan 2020 — ஆனால் ஆண் விந்து உற்பத்தி 40 வயதுக்குப் … சிலர் குழந்தை பெற முயற்சிக்கும் …

–subham—

Tags-  ஆண் குழந்தை, பெற ,திருமூலர், ,வழி,

நல்ல நகரம் எது? கெட்ட நகரம் எது? அம்பலவாணர் வருணனை (Post.11624)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,624

Date uploaded in London – –  4 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

அறப்பளீசுர சதகம் 48. நன்னகர்

வாவிபல கூபமுடன் ஆறருகு சேர்வதாய்,

     மலைகாத வழியில் உளதாய்

  வாழைகமு கொடுதெங்கு பயிராவ தாய்ச், செந்நெல்

     வயல்கள் வாய்க் கால்க ளுளதாய்,

காவிகம லம்குவளை சேரேரி யுள்ள தாய்க்,

     கனவர் த்த கர்கள்ம றைவலோர்

  காணரிய பலகுடிகள் நிறைவுள்ள தாய், நல்ல

     காவலன் இருக்கை யுளதாய்த்,

தேவரா லயம் ஆடல் பாடல் அணி மாளிகை

     சிறக்கவுள தாய்ச்சற் சனர்

  சேருமிடம் ஆகுமோர் ஊர்கிடைத் ததில் அதிக

     சீவனமு மேகி டைத்தால்

ஆவலொ டிருந்திடுவ தேசொர்க்க வாசமென்

     றறையலாம்! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அருமை ….. தேவனே!, பல வாவி கூபமுடன் அருகுஆறு

சேர்வதாய் – பல பொய்கைகளும் கிணறுகளும் அருகில் ஆறும்

இருப்பதாய், காதவழியில் மலைஉளதாய் – காதவழித் தொலைவில் மலையை உடையதாய், வாழை கமுகொடு தெங்கு பயிராவதாய் – வாழையும் கமுகும் தென்னையும் பயிராகும் வளமுடையதாய், செந்நெல் வயல்கள்

வாய்க்கால்களும் உளதாய் – நல்ல நெல்விளையும் வயல்களும்

வாய்க்கால்களும் உடையதாய்; காவி கமலம் குவளைசேர் ஏரி உள்ளதாய் – நீலமும் தாமரையும் குவளையும் மலர்ந்த ஏரியை உடையதாய்கனவர்த்தகர்கள் மறைவலோர் காண்அரிய பலகுடிகள் நிறைவு உள்ளதாய் –

பெரிய வணிகரும் மறையவரும் மற்றும் காண்பதற்கு இனிய பலவகைக் குடிகளும் நிறைந்ததாய், நல்ல காவலன் இருக்கை உளதாய் – நல்ல அரசன் அரண்மனை உடையதாய்

(தலைநகரமாய்), தேவர் ஆலயம் ஆடல்பாடல் அணிமாளிகை சிறக்க

உளதாய் – வானவர் கோயிலும் ஆடலாலும் பாடலாலும் அழகுறும்

மாளிகைகள் சிறந்துள்ளதாய், சற்சனர் சேரும் இடம் ஆகும் ஓர் ஊர்

கிடைத்து – நல்லோர் உறையும் இடமுடைய ஒரு நகரம் வாய்த்து, அதில்

அதிக சீவனமும் கிடைத்தால் – அங்கு நன்றாக வாழ்க்கைக்கு வழியும் பொருந்திவிட்டால் ஆவலோடு இருந்திடுவதே சொர்க்கவாசம் என்று அறியலாம் – விருப்பத்துடன் இருப்பதே சுவர்க்க வாழ்வு என்று இயம்பலாம்.

xxxx

ஒப்பிடுக

நாடு என்ற தலைப்பில் திருக்குறளிலும் நல்ல தேசம் எப்படி இருக்கும் என்று வள்ளுவன் காட்டுகிறான்

4. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு

It is country which is free from

Fierce famine, plague and foemen’s harm.        734

பசி, நோய், பகை இல்லாமல் ஆளப்படும் இடமே நல்ல நாடு

8. பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்

அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.

Rich yield, delight, defence and wealth

Are jewels of lands with blooming health.        738

நோயின்மை, நல்ல செல்வம், விளைச்சல், மக்களின் மகிழ்ச்சி, நல்ல பாதுகாப்பு ஆகிய ஐந்தும் இருந்தால் அது நல்ல நாடு.

Xxx

மகாகவி பாரதியார்,

காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும், – அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்கு
கேணியருகினிலே – தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும், – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.— : மகாகவி பாரதியார்.

Xxxx

வந்தே மாதரம்!

வங்காள மொழியில் ,பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தேமாதரம் கீதத்தை பாரதியார் இரு முறை தமிழில் மொழிபெயர்த்தார். அதில் பாரதத்தின் இயற்கை வளம் அருமையாக வருணிக்கப்பட்டுள்ளது

ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ ஸீதளாம்

ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம்!

வந்தே மாதரம்!

1.இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!

தனி நறு மலயத் தண் காற் சிறப்பினை!

பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை!

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

1.நளிர்மணி நீரும்நயம்படு கனிகளும்

குளிர்பூந்தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்

வாய்ந்து நன்கிலகுவை வாழிய அன்னை!

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

***

ஸுப்ர ஜ்யோத்ஸ்னாம் புலகித யாமினீம்

புல்லகுஸுமித த்ருமதள சோபினீம்

ஸுஹாசினீம் ஸுமதுர பாஷினீம்

ஸுகதாம் வரதாம் மாதரம்!

வந்தே மாதரம்!

2.வெண்ணிலாக் கதிர் மகிழ் விரித்திடும் இரவினை!

மலர்மணிப் பூத் திகழ் மரன் பல செறிந்தனை!

குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை!

நல்குவை இன்பம்வரம் பல நல்குவை!

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

2.தெண்ணிலவதனில் சிலிர்த்திடும் இரவும்

தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்

புன்னகை ஒளிரும் தேமொழிப் பொலிவும்

வாய்ந்தனைஇன்பமும் வரங்களும் நல்குவை.

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

xxx

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

கோவில் இல்லாவூரில் குடியிருக்க வேண்டாம்

xxxxxxxxxxxxxxxxxxxxxx

           அறப்பளீசுர சதகம்   49. தீநகர்

ஈனசா திகள்குடி யிருப்பதாய், முள்வேலி

     இல்லில் லினுக்கு முளதாய்,

  இணைமுலை திறந்துதம் தலைவிரித் திடுமாதர்

     எங்கும்நட மாட்டம் உளதாய்க்,

கானமொடு பக்கமாய் மலையோர மாய் முறைக்

     காய்ச்சல்தப் பாத இடமாய்,

  கள்ளர்பயமாய், நெடிய கயிறிட் டிறைக்கின்ற

     கற்கேணி நீருண் பதாய்.

மானமில் லாக்கொடிய துர்ச்சனர் தமக்கேற்ற

     மணியம்ஒன் றுண்டா னதாய்,

  மாநிலத் தோர்தலம் இருந்ததனில் வெகுவாழ்வு

     வாழ்வதிலும், அருக ரகிலே

ஆனநெடு நாள்கிடந்தமிழ்தலே சுகமாகும்

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அமலனே – குற்றம் அற்றவனே!, அருமை ………. தேவனே!,

ஈன சாதிகள் குடியிருப்பதாய் – இழிந்த சாதியினர் வாழ்வதாய்,

இல்இல்லினுக்கு முள்வேலி உள்ளதாய் – வீடுதோறும் முள்ளால் வேலியிருப்பதாய், இணைமுலை திறந்தும் தலைவிரித்திடும் மாதர் எங்கும்

நடமாட்டம் உளதாய் – மார்பிலே துணி விலகியவாறு தலைவிரித்துத் திரியும் பெண்கள் எங்கும் உலாவும் நிலையினதாய், ஒருபக்கம் கானமாய் –

ஒருபக்கம் காடுடையதாய், மலைஓரமாய் – மலையோரமானதாய்,

முறைக்காய்ச்சல் தப்பாத இடமாய் – முறைக்காய்ச்சல் எப்போதும்

வருமிடமாய், கள்ளர் பயமாய் – திருடரால் அச்சமாய், நெடிய கயிறு இட்டுஇறைக்கின்ற கல்கேணி நீர் உண்பதாய் – நீண்ட கயிற்றைக் கட்டி

இறைக்கப்படும் கல்லால் அமைந்த கிணற்றுநீர் உண்ணு மிடமாய், மானம்இலாக் கொடிய துர்ச்சனர் தமக்கு ஏற்றம் மணியம் ஒன்று உண்டானதாய் –

மானம் அற்ற மிகக் கொடியவருக்குத் தக்க தலைவனையுடையதாய், ஓர்தலம் மாநிலத்து இருந்து அதனில் வெகுவாழ்வு வாழ்வதினும் – ஓர் ஊர்

இப் பெரிய உலகில் இருந்துஅவ்வூரிலே பெருக வாழ்வதினும்,

அருநரகிலே ஆன நெடுநாள் கிடந்து அமிழ்தலே சுகம் ஆகும் – கொடிய

நரகத்தில் உண்டான நீண்டகாலம் கிடந்து அதனில் முழுகிப்போதலே இன்பம் ஆகும்.

     (வி-ரை.) ஒருபக்கம் கானும் தீய விலங்குகளும் திருடர்களும்

வாழ்வதால் ஊரில் வாழ்வோர்க்குக் கலக்கமுண்டாகும். மலைஓரம்,

வெப்பமும் முறைக்காய்ச்சலும் தரும். ‘கொடுங்கோல்’ மன்னர் வாழும்

நாட்டின் – கடும்புலி வாழும் காடு நன்றே’ என்பதால், ‘துர்ச்சனர் தமக்கு

ஏற்ற மணியம்’ உடைய நகர் நரகத்தினுங் கொடியது ஆயிற்று.

நெடிய……..கற்கேணி – நீர்வளம் அற்றதைக் குறிக்கும். முள்வேலியும்

தலைவிரித்திடும் மாதர் நடமாட்டமும் நகரின் அழகைக் கெடுப்பன.

     (க-து.) இத்தகைய நகரில் வாழ்வு கூடாது.

இதற்கு மும்பை நகரிலுள்ள தாராவி சேரிப்பகுதி , இத்தாலிய மபியா நகரங்கள் முதலியவற்றை ஒப்பிடலாம்.

ஆயினும் மொத்தத்தில் இந்தியாவை சொர்க்கபூமியாக — குறிப்பாக குப்தர் கால இந்தியாவை சொர்க்க பூமியாகவே பாஹியான் போன்ற யாத்ரீகர்கள் வருணித்துள்ளனர். தேவர்களும் பாரத போமியில் பிறக்க ஆசைப்படுவதாக புராணங்கள் புகலும் ; புகழும் . அதை பாரதியார் அழகாக மொழி பெயர்த்துள்ளார் :

பாரத நாடு பார்க்கெலாம் திலகம்;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
வானக முட்டும் இமயமால் வரையும்
ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்
காத்திடு நாடு! கங்கையும் சிந்துவும் 30



தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும்
இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும்
உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு!
பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க
மைந்நிற முகில்கள் வழங்கும் பொன்னாடு! 35



தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர்
ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு!
ஊனமொன்றறியா ஞானமெய் பூமி,
வானவர் விழையும் மாட்சியார் தேயம்!
பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ? 40

மொகலாயர்கள் வெள்ளைக்காரர்கள் கீழிருந்த கெட்ட நாட்டையும் வருணிக்கிறார்

நீரதன் புதல்வர் நினைவகற் றாதீர்!

தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்

பேய்த்தகை கொண்டோர் பெருமையும் வன்மையும்

ஞானமும் அறியா நவைபுரி பகைவர்

வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல் 45

இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய் கின்றார்!

ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்

பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்

மாதர்கற் பழித்தலும் மறைவர் வேள்விக்கு

ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்! 50

சாத்திரத் தொகுதியைத் தாழ்த்துவைக் கங்ன்றார்

கோத்திர மங்கையர் குலங்கெடுக் கின்றார்

எண்ணில துணைவர்காள்! எமக்கிவர் செயுந்துயர்

கண்ணியம் மறுத்தனர், ஆண்மையுங் கடிந்தனர்,

பொருளினைச் சிதைத்தனர், மருளினை விதைத்தனர்; 55

திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர்,

பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்,

சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்,

வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்

ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்—- பாரதியார்

—subham—

Tags–நல்ல நகரம், கெட்ட நகரம், பாரதியார், அம்பலவாணர் , வருணனை

ராமாயணத்தில் வரும் வரங்களும் சாபங்களும் – 1 (Post.11,623)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,623

Date uploaded in London –  4 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராமாயண வழிகாட்டி

ராமாயணத்தில் வரும் வரங்களும் சாபங்களும் – 1

ச.நாகராஜன்

இந்திய இதிஹாஸ புராணங்களில் கதையோட்டத்திற்கு முக்கியமாக அமைவதாக நாம் காண்பவற்றுள் முக்கியமானவை வரங்களும் சாபங்களுமே!

கதையோட்டத்தில் திருப்பமாக அமைவதாக நாம் பார்க்கும் இன்னொன்று, ஒரு முக்கிய மஹரிஷி வந்து அடுத்து என்ன செய்யவேண்டும் என்று வழி காட்டுவார்.

கதையோட்டத்திற்கு இன்னொரு முக்கிய காரணமாக அமைவது ஆகாயவாணி மற்றும் அசரீரி ஆகும்.

கர்மபலன், புனர்ஜென்மம், இறைவனின் திருவருள், பிரபஞ்ச இயக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றிய ரகசியங்களை அறிய ராமாயண, மஹாபாரதம் நல்ல துணை.

இவற்றைத் தொகுத்துப் பார்த்தால் விதி, மதி, பெரியோர்களின் ஆசி, மஹரிஷிகளின் வழி காட்டுதல், இறைவனின் அருள் உள்ளிட்ட பல விஷயங்கள் நமக்குப் புலனாகும்.

வால்மீகி ராமாயணத்தில்

82 வரங்கள்

 7 சபதங்கள்

61 சாபங்கள்

 7 ஆசீர்வாதங்களைப் பார்க்கிறோம்.

இவை ஏராளமான உண்மைகளை நமக்குத் தெரிவிக்கின்றன.

சாபம் கொடுக்கப்பட்ட போது சாபத்தை வாங்கியவர் வருந்தும் போது அது எப்போது எப்படி தீரும் என்பதும் தெரிவிக்கப்படுகிறது.

ராமாயணத்தில் வரும் முக்கிய வரங்களையும், சாபங்களையும் இந்த நீண்ட தொடரில் பார்க்கப் போகிறோம்.

1. தசரத மஹாராஜன் – கைகேயி

இராமாயணத்தின் முக்கிய ஆரம்பமே கைகேயி, தசரதன் தந்த இரண்டு வரங்களைக் கேட்டதால் தான்!

சம்பராசுரன் என்ற அசுரனுடன் போர் தொடுத்த தசரதனுக்கு கைகேயி மிக லாகவமாக சாரத்தியம் செய்து அவனது உயிரைக் காப்பாற்றியதோடு அசுரனை வதைக்கவும் உதவினாள்.

இதனால் அசுரன் போரில் மடிந்தவுடன் தசரதன் கைகேயிக்கு இரு வரங்களைத் தந்தான்.  அவற்றை அவள் உடனே கேட்கவில்லை.

தசரதன் ராமனுக்கு முடிசூட்ட எண்ணியதும் மந்தரைக்குக் கோபம் பொங்கியது. சூழ்ச்சி ஒன்றை மேற்கொண்டு கைகேயிக்கு துர்போதனை செய்தாள். ‘பரதனுக்கு ஆட்சி, ராமனுக்கு வனம்’ என்ற திட்டத்துடன் அவள் கைகேயியைப் பார்த்துக் கூறினாள்:

இரு வரத்தினில் ஒன்றினால் அரசு  கொண்டு இராமன்

பெரு வனத்திடை ஏழ் இரு பருவங்கள் பெயர்ந்து

திரிதரச் செய்வதொன்றினால் செழு நிலம் எல்லாம்

ஒருவழிப்படும் உன் மகற்கு உபாயம் ஈது என்றாள்

                       (மந்தரை சூழ்ச்சிப் படலம் பாடல் 82)

“ஒரு வரத்தினால் பரதனுக்கு அரசைக் கேள்; இன்னொரு வரத்தினால் ராமனை 14 ஆண்டுகள் வனம் ஏகச் செய்”.

மந்தரையின் இந்த துர்போதனையை மனத்தில் ஏற்றிக் கொண்ட கைகேயி அப்படியே இரு வரங்களை தசரதனிடம் கேட்டாள்:

“ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்

சேய் உலகாள்வது சீதை கேள்வன் ஒன்றால்

போய் வனம் ஆள்வது எனப் புகன்று நின்றாள்

தீயவை யாவையினும் சிறந்த தீயாள்

                    கைகேசி சூழ்வினைப்படலம் பாடல் 10

வால்மீகி ராமாயணத்தில் வால்மீகி நாரதரைப் பார்த்து சிறந்த உத்தம புருஷன் யார் என்று பல கேள்விகள் கேட்க நாரதர் ராமரைப் பற்றிக் கூற ஆரம்பிக்கிறார்.

பால காண்டத்தில் முதல் சர்க்கத்தில் 21ஆம் ஸ்லோகத்தில் இந்த வரங்கள் பற்றிய தகவலை நாரதர் தருகிறார்.

தஸ்யாபிஷேகம்சபாராந்தத்ருஷ்ட்வா பார்யார்த கைகேயி |

பூர்வ தத்தவரா தேவி வரமேனமயாசத ||

விவாசனம் ச ராமஸ்ய பரதஸ்யாபிஷேசனம் ||

அப்போது அபிஷேகத்திற்குரிய உபகரணங்களைப் பார்த்து முன்னமே கொடுக்கப்பட்ட வரமுடையவளான அவரது மனைவியான கைகேயி தேவி, தசரதரை, ஶ்ரீராமருக்கு சுயதேசத்தை விட்டு நீங்கலையும் பரதருக்கு பட்டாபிஷெகத்தையும் வரமாகக் கேட்டாள்.

தசரதன் அழுது புரண்டதும், ஒரு வரம் தருகிறேன் – பரதனுக்கு அரசாட்சி, ஆனால் அடுத்த வரத்தைக் கேட்காதே என்று மன்றாடியதும், பின்னர் வருத்தத்தால் உயிர் நீத்ததும் விரிவாக வால்மீகி மற்றும் கம்ப ராமாயணத்தில் காணலாம்.

ஆக ராமாயணத்தின் முக்கிய நிகழ்வு கைகேயி தனது இரு வரங்களைத் தருமாறு தசரதனிடம் கேட்டதே என்பது தெளிவாகிறது.

இனி அடுத்து இன்னும் பல வரங்களைப் பார்ப்போம்.

– தொடரும்

***

Don’t Eat Too Much or Too Little (Post No.11,622)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,622

Date uploaded in London – –  3 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Bhagavad Gita, Tamil Veda Tirukkural, Saint Tirumular’s Tirumanthiram and Adi Shankaras Bhagavad Gita Bhashyam (Commentary) – all advise us to avoid the extremes in Food consumption. It is not only to keep your body healthy but also to keep your mind pure. If anyone wants to succeed in spiritual matters whether it is Yoga or Dhyana/meditation t is essential that they avoid the excesses.

Here is the Bhagavad-Gita Sloka 6-16

नात्यश्नतस्तु योगोऽस्ति न चैकान्तमनश्नत: |

न चाति स्वप्नशीलस्य जाग्रतो नैव चार्जुन || 6-16||

nātyaśhnatastu yogo ’sti na chaikāntam anaśhnataḥ

na chāti-svapna-śhīlasya jāgrato naiva chārjuna

BG 6.16: O Arjun, those who eat too much or too little, sleep too much or too little, cannot attain success in Yoga .

Commenting  on it,  Dr Radhakrishnan (previously President of India and world renowned Philosopher) says,

“We must be free from animal cravings. We must avoid excess in all things. Compare with this the middle path of the Buddhists and the golden mean of Aristotle “.

MIDDLE WAY OF BUDDHISTS:

 The Middle Way as well as “teaching the Dharma by the middle” are common Buddhist terms used to refer to two major aspects of the Dharma, that is, the teaching of the Buddha. The first phrasing, refers to a spiritual practice that steers clear of both extreme asceticism and sensual indulgence

Xxx

GOLDEN MEAN OF ARISTOTLE

Moral behaviour is the mean between two extremes – at one end is excess, at the other deficiency. Find a moderate position between those two extremes, and you will be acting morally.

Xxx

Adi Shankara quotes a similar saying from the Satapata Brahmana and adds one more Subhasita from the Yoga Shastra, “ one must eat to fill in half of one’s stomach and drink water to fill in quarter and leave the rest of space for air.”

Xxx

Sri Ramakrishna Paramahamsa says

That food alone should be taken by the devotee which does not heat the system or unsettle the mind.

Swami Chidbhavananda adds,

The body is like Venna. If you tighten the strings too much while tuning it, it would not give good Svara. If you let them very loose, music would not come. It is similar to taking too much or too little food.

Xxx

Tiru manthiram also repeated what is said in Bhagavad Gita. Tiru valluvar who wrote Tamil Veda known as Tirukkural says,

If one’s food and work are excessive or deficient, the three things enumerated by those learned in medical science, flatulence, biliousness and phlegm will cause one disease–Kural couplet 941

Another translation of the above couplet  is as follows,

Authorities on medicine hold that undue strain, and food , excessive or deficient , upset the three humours – flatulence, bile and phlegm of the body and bring about disease.

—Subham—

Tags – too much, too little, food, Bhagavad Gita, Tirukkural, Tirumanthiram,

அதிகம் உண்ணாதே,  குறைத்தும் உண்ணாதே; கிருஷ்ணன், வள்ளுவர், திருமூலர் அறிவுரை (11,621)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,621

Date uploaded in London – –  3 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

ஒரே கருத்தினை மூன்று பெரியார்கள் அழகாகச் சொல்லி இருக்கின்றனர் .

முதலில் காலத்தால் முந்திய கிருஷ்ண பரமாத்மா , பகவத் கீதையில் (6-16) சொன்னதைக் காண்போம் :

नात्यश्नतस्तु योगोऽस्ति न चैकान्तमनश्नतः।

न चातिस्वप्नशीलस्य जाग्रतो नैव चार्जुन॥१६॥

நாத்யஸ்²நதஸ்து யோகோ³ऽஸ்தி ந சைகாந்தமநஸ்²நத​:|

ந சாதிஸ்வப்நஸீ²லஸ்ய ஜாக்³ரதோ நைவ சார்ஜுந ||6-16||

அர்ஜுந! = அர்ஜுனா!

அத்யஸ்²நத து யோக³: ந அஸ்தி = மிகைபட உண்போனுக்கு யோகமில்லை.

அநஸ்²நத​: ச ஏகாந்தம் ந = உணவற்றோனுக்கும் ஏகாந்த நிலை எய்தாது.

ந ச அதிஸ்வப்நஸீ²லஸ்ய = மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை.

ஜாக்³ரத: ஏவ ந = மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை.

(Gita sloka taken from sangatham.com; thanks.)

அதிகமாகச் சாப்பிடுவோனுக்கும் மிகவும் குறைவாகச் சாப்பிடுவோனுக்கும் மனத்தை ஒருமைப்படுத்தி தியானம் (யோகம்) செய்வது இயலாது . இதே போலத்தான் உறக்கமும். அதிக நேரம் தூங்காதே; குறைந்த நேரம் தூங்காதே.

இது பற்றி ஆதி சங்கரர், ராம கிருஷ்ண பரமஹம்சர் ,டாக்டர் ராதா  கிருஷ்ணன், சுவாமி சித்பவாநந்தர் ஆகியோர் சொல்வதைக் காண்பதற்கு முன்னர் வள்ளுவர், திருமூலர் ஆகியோர் செப்பியதை மனதிற்கொள்வோம்..

xxx

மேவிய அன்னத்தால் விளங்கியது இச்சடம்

பாவியே கொன்று பழியுறும் அன்னத்தான்

ஆவின் மிதந் தப்பிலை யுற்று நோயாகும்

காவில்லிவையெல்லாங் கண்டுகொளன்னமே

–திருமந்திரம் , திருமூலர் இயற்றியது

பொழிப்புரை

அன்னத்தினாலே இச்சரீரம் நிலை பெற்றிருக்கிறது பழியைச் செய்கின்ற அன்னமானது , அளவு மீறினால் பாவியைப் போல சரீரத்தில் நோய்களை உண்டாக்கிக் கொல்லும்.  அளவுக்கு மீறி அதிகமாகச்  சாப்பிட்டால் கபநீர் முதலிய பல   நோய்களை உண்டாக்கும் . அன்னத்தால் ரக்ஷிப்பும் பக்ஷிப்பும் உண்டாகும் என்று தெரிந்து கொள்வாயாக.

(திருப்புகழ் தா. ப. வேங்கட சுப்பிரமணியன் உரை, திரு மந்திரம் வைத்தியப் பகுதி, திருவாவடுதுறை ஆதீனம், 1957)

Xxxx

வள்ளுவர் மருந்து என்னும் அதிகாரத்தில் பத்து குறள்களில்  பத்து கட்டளைகள் இடுகிறார் . மேற்கூறிய விஷயத்தைச் சுருக்கமாக விளம்புகிறார்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று –குறள் 941

மணக்குடவர் உரை

உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன்னுடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும், நூலோரால் எண்ணப்பட்ட வாதமும் பித்தமும் சீதமுமாகிய மூன்றும் நோயைச் செய்யும்.

இதற்கு இரண்டுவித விளக்கங்களை உரைகாரர்கள் தருகின்றனர்.

ஆயுர்வேத நூல்களில் சொல்லப்பட்ட வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றில் எது கூடினாலும் குறைந்தாலும் நோய்களை உண்டாக்கும்.

மற்றோர்  விளக்கம்  : உணவு அதிகமாகச் சாப்பிட்டாலும் குறைவாகச் சாப்பிட்டாலும் வாதம் , பித்தம், கபம் சம நிலை தவறி உடலில் நோய்களை உண்டாக்கும் .

இதை நாம் கண்கூடாகவும் காண்கிறோம். ஐஸ்க்ரீமையோ, குளிர்ந்த பானங்களையோ தவறான காலத்தில், தவறான அளவில் சாப்பிட்டால் தடுமன் பிடிக்கும்; இருமல் வரலாம் . எதை அதிகம் சாப்பிட்டாலும் அஜீரணம் வரும் ; அதுவே பல நோய்களுக்கு அஸ்திவாரம் போடும்.

Xxx

பகவத் கீதைக்கு (6-16) ஆதிசங்கரர் பாஷ்யம் :

“உணவைத் தன் அளவிற்கு ஏற்ற அளவைக் கடந்து உண்பவனுக்கு , எது தன் அளவிற்கு ஏற்றதோ அந்த அன்னம் காப்பாற்றுகிறது அது கெடுப்பதில்லை அதிகமானது கெடுக்கின்றது குறைந்தது காப்பாற்றுவதில்லை” (சதபத பிராஹ்மணம்) என்னும் சுருதியினால் உணவின் ஒழுங்கைக் கண்டுகொள்க. ஆதலால் யோகியானவன் தன் அளவிற்கேற்ற அன்னத்தைக் காட்டினும் அதிகமாக, குறைவாக உண்ணக்கூடாது ; அல்லது வேறு விதமாக உரையிடலாம் . யோகியானவன் யோக சாஸ்திரத்தத்திற் கூறிய அந்த அளவைக் காட்டிலும் அதிகமாக உண்பவனுக்கு யோகம் இல்லை.

அன்னத்திற்கும் கறி முதலானவற்றுக்கும் பாதி (வயிறு);

ஜலத்திற்கு மூன்றாவது (கால்பாகம்);

காற்று ஸஞ்சரிப்ப தற்காக நான்காவதை மிச்சப்படுத்தி  வைக்கவேண்டும் (யோக சாஸ்திரம் )என்று கூறப்பட்டுள்ளது.

(1905ம் ஆண்டில் பெரியகுளம் த .சுந்தரராஜ சர்மா எழுதிய சங்கர பாஷ்ய மொழிபெயர்ப்பை 1977ம் ஆண்டில், திருக்கோவிலூர் ஞானாநந்த தபோவன சந்நியாசிகள் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டுள்ளனர் )

மேற் கூறிய சங்கர பாஷ்யத்தில் நமக்கு இரண்டு அற்புதமான விஷயங்கள், ஆதிசங்கரர் வாய்மூலம் கிடைக்கிறது.

(1). கீதையும், குறளும் திருமந்திரமும் சொன்ன கருத்து அதற்கு முன்னரே சதபத பிராஹ்மண நூலில் உள்ளது என்பது ஆதிசங்கரர் சொன்னதால் நமக்குத் தெரிகிறது.

(2).”சாப்பிடும்போது வயிற்றில் பாதி அளவு சாப்பிட்டுவிட்டு கால் பகுதியை தண்ணீருக்கும் மீதி பகுதியை வெற்றிடமாகவும் விட வேண்டும்” என்ற யோக சாஸ்திர கருத்து,  ஆதிசங்கரர் காலத்துக்கும் முன்னரே இருந்துள்ளதையும் சங்கரர் நமக்கு காட்டுகிறார்..

xxx

வீணையும் உடலும்

ராமகிருஷ்ண பரமஹம்சர் பகர்ந்த விஷயத்தை சித்பவானந்த சுவாமிகள் பகவத் கீதைப் பேருரையில் தருகிறார் :

அர்ஜுனா ! அளவு கடந்துண்பவனுக்கு யோகம் இல்லை. அறவே உண்ணாதவனுக்கும் அஃதில்லை . மிகைபட உறங்குபவனுக்கும் மிகைபட விழித்திருப்பவனுக்கும் யோகம் இல்லை.(6-16)

வீணையின் தந்தியை அளவுக்கு மீறி இறுக்கினால் அது உடைந்து போம். மிக இளக்கினால் அதில் ஓசை வராது . உடலோ வீணை போன்றது . உணவு, உறக்கம் இவைகளில் மிகைப்படுதலும் குறைபடுதலும் கூடாது அந்தந்த சரீரத்துக்கேற்ற உணவு எது , அளவு எது என்பதை அவரவரே தீர்மானிக்கவேண்டும்

பகற்பொழுதில் திருப்தியாக போஜனம் செய். ஆனால் இரவில் உட்கொள்ளும் உணவு குறைவாகவும் இலேசாயுமிருக்கட்டும்.

சரீரத்துக்கு உஷ்ணத்தையும் மனதுக்கு ஸஞ்சலத்தையும் எந்த உணவு கொடுக்காதோ அந்த உணவைத்தான் சாதகன் உட்கொள்ள வேண்டும் – ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் .

என்று ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் 6-16 ஸ்லோகத்துக்கான உரையை முடிக்கிறார்.

Xxx

டாக்டர் ராதாகிருஷ்ணன், இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தவர். அவர் இந்த 6-16 சுலோகத்துக்கு எழுதிய உரையில் புகல்வது யாதெனில்,

” மிருக உணர்வுகளிலிருந்து நாம் விலகி இருக்கவேண்டும்; எல்லா விஷயங்களிலும் மிக அதிகம் , மிகக் குறைவு என்பதைத் தவிர்க்க வேண்டும். பெளத்தர்களின் மத்திய வழிமுறையையும் அரிஸ்டாட்டில் சொன்ன தங்கம்போன்ற வழி முறையையும் இங்கே ஒப்பிட்டுப்பார்க்கலாம்”.

MIDDLE WAY OF BUDDHISTS:

 The Middle Way as well as “teaching the Dharma by the middle” are common Buddhist terms used to refer to two major aspects of the Dharma, that is, the teaching of the Buddha. The first phrasing, refers to a spiritual practice that steers clear of both extreme asceticism and sensual indulgence

Xxx

GOLDEN MEAN OF ARISTOTLE

Moral behaviour is the mean between two extremes – at one end is excess, at the other deficiency. Find a moderate position between those two extremes, and you will be acting morally.

 Xxx Subham xxxx

Tags- மித உணவு, அதிகஉணவு, யோகம், தியானம், கீதை 6-16, திருமந்திரம், குறள்

நல்வினை,தீவினை செய்தோர் அம்பலவாணர்   தரும் பட்டியல் (Post No.11,620)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,620

Date uploaded in London – –  3 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

END JUSTIFIES MEANS

அறப்பளீசுர சதகம் பாடல் 46ம் 47-ம் புராணக் கதைகளின் பட்டியல் .நல்லது நடக்க, எந்த வழியையும் கடைப்பிடிக்கலாம். தீய செயலைச் செய்வோர் எவ்வளவு வலிமை பெற்றாலும் இறுதியில் அழிவர் என்பது இந்த பாடல்களின் கருத்து.

ரஷ்யப் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சிகளில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அப்படியும் அந்தப் புரட்சிகள் பாராட்டப்படுகின்றன. ஜப்பானிலுள்ள அப்பாவி மக்கள் தலையில் 2 அணுகுண்டுகளைப் போட்டு பல லட்சம் மக்களை ஒரு நொடியில் கொன்றுகுவித்தது அமெரிக்கா. ஆனால் ஹிட்லர் ஒழிந்தான் என்ற சந்தோஷத்தில் அமெரிக்காவை யாரும் இதுவரை கண்டிக்கவில்லை. பாகிஸ்தானில் ஒசாமா பின் லாடனை சட்டவிரோதமாக அமெரிக்கா கொன்றது அவன் 3000 பேர் சாவுக்குக் காரணமானதால் அதையும் உலகம் கண்டிக்கவில்லை . இறுதி லட்சியம் நல்லதாக இருந்தால் எந்த அதிரடி வேலையையும் செய்யலாம் என்பது உலகம் ஏற்றுக்கொண்ட நடை முறை. பெரிய புராணத்தில் பல வன்முறைக் காட்சிகள் வருகின்றன. அதன் பின்னாலுள்ள சிவ பக்தி– குருட்டுத் தனமான பக்தியால் அவை பாராட்டப்படுகின்றன. மேலும் அவர்கள் அனைவரும் சிவபதம் அடைவதாகவே கதை முடிகிறது. இதை ஆங்கிலத்தில் END JUSTIFIES MEANS  என்று சொல்லுவார்கள்.

Xxx

நல்வினை செய்தோர் பட்டியல்

1.அடைக்கலம் என்ற புறாவைச் சிபி காப்பாற்றத்

தன்னையே எடையாக நிறுத்தினான்.

2.அரிச்சந்திரன் உண்மையைக் கடைப்பிடிக்க மனைவியையும் மகனையுங்கூட விற்றான்; தானும் தோட்டிக்கு விலையானான்.

3.மாபலி தன்னையேற்பவர் மாயையில் வல்ல திருமாலென்றறிந்தும் பொருட்படுத்தாமல் வேண்டிய மூன்றடி மண்ணைக் கொடுத்தான்.

4.பரசுராமன் தந்தை சொற்படி தாயைக் கொன்றான்.

5.இலக்குமணன் தமயனான இராமனொடு காட்டிற்குச் சென்றான்.

6.கருடன்,தன் தாயான வினதையின் அடிமைத் தன்மையை மாற்றத் தன் மாற்றாந் தாயான கத்துருவை மக்களை (பாம்புகளை) வேண்டுமிடங்களுக்குக்கொண்டு போய்க் காட்சிகளைக் காட்டினான்.

7.பகீரதன் தன் முன்னோரான சகரர்கள் நிற்கதியடையத் கங்கையைப் பூவுலகிற் கொணர்ந்து சகரரின் சாம்பற் குவியலிற் பாய்ச்சினான்.

8.சிறுத்தொண்டர் அடியார்கோலத்துடன்

வந்த சிவபிரான் அமுது செய்ய மைந்தனைக் கொன்று சமைத்தார்.

9.பிரகலாதன் தன் தந்தைக்குமாறாக நின்று நரசிங்க மூர்த்தியால் தன்

தந்தையையே கொல்வித்தான்.

10.வீடணன் தன் தமையனான இராவணனுக்கு

மாறாக நின்று இராமனைக்கொண்டு கொல்வித்தான்.

இவர்கள் நன்னெறியிலே சென்றதனால் தகாத செயல்களான இவற்றைச்

செய்தும் புகழ்பெற்றனர் என்று கூறுவர்.

     (க-து.) உலகியலுக்கு மாறாயினும் நன்னெறியிலே (End justifies means) செல்வதே நலந்தரும்.

xxxx

தீவினை செய்தோர் பட்டியல்

1.நகுடன் (Nahusa) நூறு பரிவேள்வி செய்து இந்திரபதவி பெற்றான்.

ஏழுமுனிவர் சுமக்கும் சிவிகையிலே இந்திராணியை நாடிச் செல்கையில்

‘சர்ப்ப! சர்ப்ப’ என விரைந்து செல்லும்படி பெரியோர்களை (மதியாமல்)

ஏவியதால் மலைப் பாம்பாக அகத்தியராற் சபிக்கப்பெற்றான்.

2.தக்கன் சிவனை இகழ்ந்து பேசி, அவரை நீக்கி வேள்வி செய்ததனால் வீரபத்திரரால்தலையை இழந்து ஆட்டுத்தலை பெற்றான்.

3.இந்திரன் கௌதமர் மனைவியான அகலிகையை விரும்பியதால் உடலெங்கும் பெண்குறியைப் பெற்றான்.

4.துரியோதனன் தன் பங்காளிகளான பாண்டவரின் உரிமையைக்

கொடாததால் அவர்களாற் போரில் இறந்தான்.

5.சிசுபாலன் எப்போதும் கண்ணனை யிகழ்ந்து கூறி வந்ததனால் அவராற் போர்க்களத்தில் இறந்தான்.     (க-து.) தீயவழியிலே செல்வோர் தீமையடைவது உறுதி.

xxx

அறப்பளீசுர சதகம்          46. நல்வினை செய்தோர்

சாண்எனக் காத்தவன், மெய்யினால் வென்றவன்,

     தானம்இளை யாது தவினோன்,

  தந்தைசொல்மறாதவன், முன்னவற் கானவன்

     தாழ்பழி துடைத்த நெடியோன்,

வருபிதிர்க் குதவினோன், தெய்வமே துணையென்று

     மைந்தன்மனை வியைவ தைத்தோர்,

  மாறான தந்தையைத் தமையனைப் பிழைகண்டு

     மாய்த்துலகில் மகிமை பெற்றோர்

கருதரிய சிபிஅரிச் சந்திரன், மாபலி,

     கணிச்சியோன் சுமித்தி ரைசுதன்,

  கருடன், பகீரத னுடன்சிறுத் தொண்டனொடு

     கானவன், பிரக லாதன்,

அரியவல் விபீடணன் எனும்மகா புருடராம்

     அத்தனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அத்தனே – தலைவனே!, அருமை ……… தேவனே!,

சரண்எனக் காத்தவன்-அடைக்கலம் (என்ற புறாவைக்) காப்பாற்றியவன்,

மெய்யினால் வென்றவன் – உண்மையேபேசி வெற்றியுற்றவன், இளையாது

தானம் உதவினோன் – சோர்வின்றிக் கொடை கொடுத்தவன்! தந்தை

சொல் மறாதவன் – தந்தையின் மொழியைத் தட்டாதவன்,

முன்னவற்கு ஆனவன் – தமையனுக்கு உற்ற துணையானவன், தாய்

பழிதுடைத்த நெடியோன் – அன்னைக்கு உற்ற நிந்தையைப் போக்கிய

பெரியோன், வருபிதிர்க்கு உதவினோன் – தலைமுறையில் வந்த

தென்புலத்தார்க்கு நலம் புரிந்தோன். தெய்வமேதுணையென்று

மைந்தன்மனைவியை வதைத்தோர் – கடவுளைத் துணையாக நம்பி மகனை

வதைத்தவனும் மனைவியை வதைத்தவனும், மாறான தந்தையைத்

தமையனைப் பழிகண்டு மாய்த்து உலகில் மகிமைபெற்றோர் – (நன்னெறிக்கு)

மாறுபட்ட தந்தையைக் கொன்றும், தமயனைக் கொன்றும் உலகிற்

புகழ்பெற்றோர், (ஆகிய இவர்கள் முறையே) கருதரிய சிபி – நினைத்தற்கரிய

சிபிச் சக்கரவர்த்தியும், அரிச்சந்திரன் – அரிச்சந்திரனும், மாபலி-மாபலியும்,

கணிச்சியோன் – பரசுராமனும், சுமித்திரை – சுதன் – சுமித்திரை மகனான

இலக்குவனும், கருடன் – கருடனும், பகீரதனுடன் – பகீரதனும்,

சிறுத்தொண்டனொடு – சிறுத்தொண்டனும், கானதன் – வேடனும்,

பிரகலாதன் – பிரகலாதனும், அரியவல் விபீடணன் – அரிய வலிய

விபீடணனும், எனும்மகா புருடராம் – எனக் கூறும் பெருமக்கள் ஆகும்.

xxxx

         47. தீவினை செய்தோர்

வாயிகழ்வு பேசிமிகு வாழ்விழந் தோன், சிவனை

     வைதுதன் தலைபோ யினோன்,

  மற்றொருவர் தாரத்தில் இச்சைவைத்து உடலெலாம்

     மாறாத வடுவா யினோன்,

தாயத்தி னோர்க்குள்ள பங்கைக் கொடாமலே

     சம்பத் திகழ்ந்து மாய்ந்தோன்,

  தக்கபெரி யோர்தமை வணங்கா மதத்தினால்

     தந்திவடி வாய்அ லைந்தோன்,

மாயனைச் சபையதனில் நிந்தைசெய் தொளிகொள்நவ

     மணிமுடி துணிந்து மாய்ந்தோன்,

  வருநகுட னொடுதக்கன் குருடன்

     மகன், வழுதி, சிசுபா லனாம்!

ஆயும்அறி வாளரொடு தேவர்பணி தாளனே!

     அவனிபுகழ் அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆயும் அறிவாளரொடு தேவர்பணி தாளனே – ஆராய்கின்ற

அறிஞரும் அமரரும் பணியுந் திருவடியை உடையவனே!, அவனிபுகழ் –

உலகம் புகழும், அருமை ….. தேவனே!, வாய்இகழ்வு பேசிமிகு வாழ்வு

இழந்தோன் – வாயினாற் பிறரை இகழ்ந்துபேசித் தன் சிறந்த வாழ்வைப்

பறிகொடுத்தவன், சிவனை வைது தன் தலை போயினான் – சிவபிரானைப்

பழித்துத் தன் தலையை இழந்தவன், மற்றொருவர் தாரத்தில்

இச்சைவைத்து உடல் எலாம் மாறாத வடு ஆயினோன் – பிறர் மனைவியிடம் ஆசை கொண்டு

தன் மெய்யெலாம் நீங்காத வடுவைக் கொண்டவன், தாயத்தினோர்க்கு

உள்ள பங்கைக் கொடாமலே சம்பத்து இழந்து மாய்ந்தோன் – பங்காளிக்கு

உரிய பங்கைக் கொடாததால் (தனக்குரிய) செல்வத்தையும் போக்கிவிட்டு

மடிந்தவன், தக்க பெரியோர் தமை வணங்கா மதத்தினால் தந்திவடியாய்

அலைந்தோன் – தகுதியான சான்றோரை வணங்காத செருக்கினால்

யானைவடிவாக அலைந்தவன், மாயனைச் சபையதனில் நிந்தனைசெய்து

ஒளிகொள் நவமணி முடிதுணிந்து மாய்ந்தோன் – கண்ணனை அவையிலே

பழித்துக் கூறியதனால் கதிர்விடும் நவமணி முடியை இழந்து இறந்தவன்

(முறையே,) வரு நகுடனோடு – (இந்திர பதவிக்கு) வந்த நகுடனும்,

தக்கன் – தக்கனும், அயிராவதன் – இந்திரனும்; குருடன் மகன் –

துரியோதனனும், வழுதி – பாண்டியனும், சிசுபாலன் ஆம் – சிசு பாலனும்

ஆவார்.

Xxxxx subham xxxxx

TAGS_  நல்வினை, தீவினை செய்தோர் அறப்பளீசுர சதகம், அம்பலவாணர்