லண்டனில் திருவள்ளுவர் சிலை  நிறுவிய வரலாறு (Post No.11,745)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,745

Date uploaded in London – –  4 FEBRUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

TWO YEARS AGO, I WROTE IT IN ENGILSH FOR WORLD TAMIL ORGANISATION SOUVENIR. NOW I HAVE TRANSLATED IT FOR MY TAMIL BOOK.

லண்டன் பல்கலைக் கழகத்தின் கீழ்திசை, ஆப்பிரிக்க கல்விக் கழகப்  பிரிவில் (SCHOOL OF ORIENTAL AND AFRICAN STUDIES= SOAS) தமிழ்க் கல்வி புகட்டியவர் ( DR STUART BLACKBURN) டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன்; அவர் செந்தமிழ் பேசும் ஒருவர் தனக்கு உதவி ஆசிரியராகத் தேவைப்படுகிறது என்று கருதினார்; இதை அறிந்த திருமதி மைத்ரேயி கணேசன் எனக்கு அந்த தகவலைக் கொடுத்து நீங்கள்தான் பி பி ஸி ஒலிபரப்புப் பணியை விட்டுவிட்டீர்களே; ஏன் ஆசிரியர் ஆகக்கூடாது? என்று கேட்டார். நான் மதுரையில் தினமணி சீனியர் உதவி ஆசிரியராக வேலை பார்த்த காலத்திலேயே மதுரைப் பல்கலைக்கழக இதழியல் பிரிவில் மாலைக் கல்லூரியில் இதழியல் ஆசிரியராக( JOURNALISM LECTURER) இருந்ததும் நான் இதழியல் (JOURNALISM) நூல் எழுதியிருப்பதும் அவருக்குத் தெரியும்

நானும் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னுக்குப் போன் செய்தவுடன் Dr Stuart Blackburn, University of London

அவர் மழலைத் தமிழில் ஓரிரு கேள்விகள் கேட்டார். நான் மதுரைக்காரன் ஆயிற் றே ; செந்தமிழில் செப்பினேன். தஞ்சை மாவட்டத்தில் பிறந்தாலும் 30 ஆண்டுக்காலம் வாழ்ந்தது, படித்தது, வேலைபார்த்தது, தமிழ் அமைப்புகள் (இலக்கியப் பண்பாட்டுக் கழகம் ) நடத்தியது  எல்லாம் மதுரையில்தான் .

அப்போதிருந்து (FROM 1993) வாரத்தில் இரண்டு மணி நேரம் அவர் வகுப்புகளை நான் எடுத்தேன். பெரும்பாலும் வெளிநாட்டினர்தான் தமிழ் படித்தனர். உடனே பல்கலைக் கழக மாலை நேர கல்லூரியும் என்னைத் தமிழ் கற்பிக்க அமர்த்தியது

சுமார் 21 ஆண்டுகளுக்கு இவ்வாறு தமிழ் கற்பித்து விடைபெற்றேன் ;எனது பணியை அறிந்த கேம்பிரிட்ஜ் பழக்கிழகைக் கழக தமிழ்த் தேர்வுத்த துறையும் என்னை பணியில் அமர்த்தியது .

டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் வேறு ஒரு பொறுப்பை ஏற்று பணியிலிருந்து விடைபெற்றவுடன் முழுப் பொறுப்பும் என் தலையில் விழுந்தது ; 65 வயது வரை வேலை பார்த்துவிட்டு எல்லாப் பொறுப்புகளையும் உதறினேன்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் வேலைபார்த்தபோது தமிழ்நாடு அரசு, இந்திய தூதரகம் மூலம் அனுப்பிய கடிதத்தை டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் என்னிடம் காட்டி, “சுவாமிநாதன், திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் ஜெயலலிதா அனுப்புகிறார். அதை நாம் இங்கு நிறுவ வேண்டும்£ என்றார் ; எனக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடியது; பின்னர் அவரே ஒரு அழைப்பிதழை எழுதி என்னிடம் காண்பித்தார். எனக்குக் கொஞ்சம அதிர்ச்சி. அதில் வள்ளுவர் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக எழுதியிருந்தது.

ஸ்டூவர்ட், அடுத்த முறை நீங்கள் உலகத்த தமிழ் மாநாட்டில் பேசும்போது திராவிடர்கள் உங்கள் மீது கல்லைவிட்டு எறிவார்கள் ; ஏனெனில் அவர்கள் கணக்குப்படி வள்ளுவர் ஆண்டு கி.மு. என்றேன். அவர் சிரித்துக்கொண்டே நான் சரியான ஆண்டைத்தான் எழுதியுள்ளேன் என்றார்

( நான் எழுதிய கட்டுரைகளிலும் இதை ஆதரித்து மொழியியல் விதிகளின்படி அதிகாரம் என்ற சொல் வரும் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய மூன்றும் 1500 ஆண்டு பழமை உடையவைதான் என்று காட்டியுள்ளேன். இதை முதலில் சொன்னவர் பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை ஆவார். )

வள்ளுவர் சிலை லண்டன் SOAS வளாகத்தில் 1996 ம்- ஆண்டு மே 13-ம் தேதி நிறுவப்பட்டது; அது WORKING DAY ;வேலை நாள்; என்பதால் அதிகம் பேர் வரவில்லை; மேலும் டாக்டர் பிளாக்பர்ன், புகழை விரும்பாதவர்  ; அவருடைய துறை தமிழ் நாட்டுப்புறப் பாடல்- இலக்கியம். அது பற்றி நிறைய ஆராய்சசி நூல்களை எழுதியவர்.  ஆகையால் தமிழ் வாழ்க என்ற போலி கோஷக் கும்பலை அவர் நம்பியதில்லை.

நானும் பிளாக்பர்னும் பல்கலைக் கழக அதிகாரிகளும், சிலை திறக்க வந்த இந்திய ஹை கமிஷனர் டாக்டர் சிங்கவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். லண்டன் பல்கலைக்கழகம், லண்டனில் உள்ள 32 நகரசபைகளில் கேம்டன் பகுதியில் இருப்பதால் அந்த (MAYOR OF CAMDEN COUNCIL) நகரசபை மேயர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.. முன்னர் தமிழ்த் துறையில் பணியாற்றிய டாக்டர் மார் மற்றும் சிலர் வந்திருந்தனர். இப்போது ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத் தன்று தமிழ் அமைப்புகள், அந்த சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்கின்றன. அதில் எத்தனை பேருக்குத் திருக்குறள் தெரியும், அதில் எத்தனை பேர் ஒரு திருக்குறளையாவது பின்பற்றுகின்றனர் என்ற அதிகப் பிரசங்கித்து தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள். என்னால் பதில் சொல்ல முடியாது. .

XXXX

பிற்காலத்தில் நானும் பிளாக்பர்னும் உட்கார்ந்துகொண்டு பல ஆராய்ச்சி விஷயங்களைக் கதைப்போம். அவர் தமிழ் நாட்டுப்புற கதைகளை FOLK TALES மொழிபெயர்க்கையில் சில விஷயங்களுக்கு என்னிடம் விளக்கம் கேட்பார். நான் அதிகாரபூர்வ மேற்கோள்களை அவருக்கு எடுத்துக் காட்டுவேன்; ராஜம் அய்யரின் கமலாம்பாள் சரித்திரத்தை மொழிபெயர்த்தபோது அந்தக் கதையில் கடைசி பகுதியில் வரும் தத்துவ விஷயங்களை மொழி பெயர்ப்பதில் அவருக்கு திணறல் ஏற்பட்டது; அங்கெல்லாம் இந்துமத தத்துவப் பின்னனியை அவருக்கு எடுத்துரைத்தேன். அந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு முகவுரையிலேயே சுவாமிநாதனின் உதவியின்றி இந்த நூல் நிறைவு பெற்றிருக்காது என்று நன்றி தெரிவித்துள்ளார். அத்தோடு அந்த நூல் வெளியானவுடன் ,அவர் கையெழுத்திட்டு, எனக்கு அன்பளிப்பபாகக் கொடுத்தார் .

திருவள்ளுவர் சிலை நிறுவியபோது பல்கலைக்கழகப் புகைப்படக்காரர் எடுத்த புகைப்படம் SOAS மாதப் பத்திரிக்கையில் வெளியானது; சுவாமிநாதா , இதோ உன் புகைப்படம் என்று அந்தப் பத்திரிக்கையைக் கொடுத்தார். இன்று வரை அந்த நிகழ்சசி பற்றி கிடைத்த ஒரே பேப்பர் அதுதான்.. பலக்லைக்கழமும் இந்திய ஹைகமிஷனும் வள்ளுவர் சிலைத்  திறப்பு நிகழ்ச்சி பற்றிய எந்த காகிதங்களும் தங்களிடம் இல்லை என்று சொல்லிவிட்டன ; ஆக, வள்ளுவர் சிலைத் திறப்பின் முழுப்புகழும் டாக்டர் ஸ்டுவர்ட் பிளாக்பர்னையே சாரும் .

XXXX

டாக்டர் பிளாக்பர்ன் , சிறிதும் புகழை விரும்பாதவர். நான் அங்கு தமிழ் கற்பித்த காலத்தில், லண்டன் தமிச் சங்கத்திலும் பகுதி நேர மானேஜராக — மேலாளராகப் – பணியாற்றினேன். (PART TIME MANAGER, LONDON TAMIL SANGAM) அங்கு டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னையும் வெளிநாட்டு மாணவர்களையும் அழைத்தேன். அவர் மிகவும் தயங்கினார். எனக்கு இதிலெல்லாம் கொஞ்சமும் ஆசை கிடையாது; உனக்கு ஏதேனும் பெனிபிட் BENEFIT இருந்தால் வருகிறேன் என்றார். எனக்கும் பெனிபிட்/ பலன்கள் எதுவும் இல்லை; தமிழ் மொழி க்காக நீங்கள் வரவேண்டும் என்று அடம் பிடித்தேன் ; அவரும் மாணவர்களுடன் வந்தார்; விருந்துச் சாப்பாட்டையும் உண்டு மகிழ்ந்தனர் ;

ஆண்டுக்கு ஒரு முறையாவது வீட்டிற்கு அழைத்து எனக்கு விருந்து படைப்பார் ; அவர் மனைவியும் அன்பாக உபசரிப்பார். நான்தான் பதில் விருந்து கொடுக்கவில்லை என்பது மனதை உறுத்துகிறது. ஏனெனில் அவர் இந்தியாவின் வடகிழக்குப் பிராந்திய மொழிகளை ஆராய ஒரு அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் நிதி உதவி செய்ததால் திடீரென்று பல்கலைக்கழக வேலையை விட்டார். அவரது மாணவர்கள் பலர் பெரும் பதவிகளில் இப்போது இருப்பது அவருக்குப் பெருமை சேர்க்கும் .

STORY OF TIRU VALLUVAR STATUE IN LONDON …

https://tamilandvedas.com › story-of-…

11 Nov 2021 — Ms Jayalalaitha Government in Tamil Nadu sent the Valluvar statue to London. High Commission of India contacted the University of London.

You visited this page on 03/02/23.


London-Capital of the Tamil Speaking World (Post No.3907)

https://tamilandvedas.com › 2017/05/14 › london-capit…

14 May 2017 — Written by London Swaminathan Date: 14 May 2017 Time uploaded in London: 13-47 … Thiruvalluvar Statue on 13-5-2017 (Twenty years later).

You visited this page on 03/02/23.


Tiruvalluvar Statue in London – Tamil and Vedas

https://tamilandvedas.com › tiruvallu…

18 Jul 2012 — Statue of Great Tamil poet Thiruvalluvar, author of Tirukkural, was opened on 13th May, 1996. Myself and my professor Dr Stuart Blackburn …

–subham—

Tags- வள்ளுவர் சிலை, லண்டனில், பல்கலைக்கழகம் , நிறுவிய வரலாறு, டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் , சுவாமிநாதன் , சிங்க்வி , டாக்டர் மார்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: