
Post No. 11,818
Date uploaded in London – – 18 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

இந்தியா முழுதும் சூரியன் கோவில்கள் இருக்கின்றன. குமரி முதல் இமயம் வரை சூரியனை இந்துக்கள் வழிபட்டதற்கு இவை சான்றாகத் திகழ்கின்றன. தமிழில் சிப்பதிகாரத்தில் உச்சிக்கிழான் கோவில் குறிப்பிடப்படுகிறது. ஆயினும் தமிழ் நாட்டிலுள்ள சூரியனார் கோவில் தலத்தைவிட காஷ்மீரில் உள்ள மார்தாண்ட் , குஜராத்திலுள்ள மதேரா , ஒடிஸாவிலுள்ள கொனார்க் ஆகிய கோவில்கள் பமைவாய்ந்தது ஆகும்.
டில்லியிலுள்ள விமானநிலையத்தில் பிரம்மாண்டமான சூரியன் சிலை உள்ளது. முதலில் இந்தியாவில் உள்ள சிறப்பு மிகு சூரியன் கோவில்களைப் பட்டியல் இடுகிறேன்
ஆந்திரப்பிரதேசம் – அரசவல்லி சூரியன் கோவில்
பீஹார் – தக்ஷிணார்க்க சூரியன் கோவில் (கயா அருகில்)
கர்நாடகம் – தோல்மூர்/பெங்களூர் சூரியன் கோவில்
அஸ்ஸாம்- சூர்ய பஹர் கோவில்
ஜார்கண்ட் – ராஞ்சி சூரியன் கோவில்
மத்திய பிரதேசம்- உணாவோ பாலாஜி-சூரியன் கோவில்
மத்திய பிரதேசம்- குவாலியர் சூரியன் கோவில்
ஜம்மு காஷ்மீர் — மார்த்தாண்ட சூரியன் கோவில்
குஜராத் – மதேரா சூரியன் கோவில்
உத்தர கண்ட் — கதர்மால் சூரியன் கோவில்
ஒரிஸ்ஸா (ஒடிசா)- கொனாரக் சூரியன் கோவில்
தமிழ் நாடு -சூரியனார் கோவில்
பழைய கோவில்களில் பூஜைகள் கிடையாது. அவைகள் வரலாற்றுச் சின்னங்களே ; பெங்களூர் (தோல்பூர்) முதலியன இடங்களில் உள்ள புதிய கோவில்களில் வழிபாடு உண்டு .
கும்பகோணத்தைச் சுற்றி ஒன்பது கிரகங்களுக்கும் கோவில்கள் உள்ளன. சிலர் இவைகளை மட்டும் தரிசித்து வருவதற்காக செல்லுவார்கள். உடம்பை வருத்திக்கொண்டு ஒரே நாளில் செல்லுவர் அல்லது இரண்டு நாட்களில் செல்லுவார்கள். நான் பிப்ரவரி 2023 இந்திய விஜயத்தின்போது ஆர , அமர வைத்தீஸ்வரன் கோவில், (செவ்வாய்) சூரியனார் கோவில், சுக்கிரன் கோவிலான கஞ்சனூர் கோவில், திருப்பாம்புரம் (ராகு கேது) திருநாகேச்வரம் (ராகு) முதலிய கோவில்களுக்குச் சென்றுவந்தேன். இன்னும் போகாத கோவில்கள் திருநள்ளாறு (சனைச்சரன்); ஆலங்குடி (குரு ). புதன் தலமான திருவெண்காட்டுக்கு முன்னரே (2022) சென்று வந்தேன் . இன்று சூரியனார் கோவிலை தரிசிப்போம்.
xxxxx
சூரியனார் கோவில் தலத்தின் சிறப்பு
கும்பகோணத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் திருமங்கலக்குடிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தியாவில் சூரியபகவானுக்கு சிறப்பு மிகு தலங்கள் நிறைய உள்ளன. ஆயினும் தென்னிந்திய சம்பிரதாயப்படி பூஜை புனஸ்காரங்கள் நடைபெறுவது இதன் சிறப்பு. அதுமட்டுமல்ல சூரியன் தவிர ஏனைய கிரக தேவதைகளுக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளது
இங்குள்ள சூரிய பகவானுக்கு எதிரில் அவருடைய வாகனமான குதிரையைக் காணலாம்.
சூரிய பகவான் தனது இரண்டு மனைவிகளான (இடது புறத்தில்) உஷா , (வலது புறத்தில்) பிரத்யுஷா தேவிகளுடன் காட்சி தருகிறார்.
உஷா என்பது காலைச் சூரிய ஒளி; அதாவது சூரியன் உதிக்கும் முன் தோன்றும் ஒளி.
பிரத்யுஷா என்பதை பிரதிபலிப்பு, நிழல் (சாயா ) என்று சொல்லலாம்
மேற்கு திசை பார்த்து இருப்பதால் அவரை காலையில் கிழக்கில் உதித்த சூரியன் என்றும் கருதலாம். அவருடைய உக்கிரத்தைத் தனிக்க எதிரே குரு என்னும் வியாழ பகவான் சந்நிதி இருக்கிறது
ரத சப்தமி போன்ற காலங்களில் பெரிய விழா நடைபெறும். ஜாதகத்தில் சூரிய தோஷம் உடையோருக்கு பரிகாரத் தலமாக இருப்பதால் எப்போதும் கூட்டம் இருக்கிறது. மேலும் நகைக்கிரகங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பும் கிட்டுகிறது.
பிற்கால சோழர் காலம் முதல் , இந்தக் கோவில் இருந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்த நாள் என்பதால் சிறப்பு அபிஷேகங்கள் நடக்கின்றன . இந்தக் கோவிலின் மஹிமை பற்றி ஒரு கதையும் உண்டு. காலவ முனிவர் என்பவருக்கு குஷ்ட நோய் ஏற்பட்டதாகவும் அது தீரவேண்டுமென்று பிரார்த்தனை செய்தவுடன் இங்கு நோய் அகன்ற தாகவும் சொல்லப்படுகிறது..
எல்லாக் கோவில்களிலும் நவக்கிரஹ சந்நிதிகள் உள்ளன. இங்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனி சந்னகிதி இருப்பது சிறப்பாகும்
அருகிலுள்ள திருமங்கலக்குடி பாடல் பெற்ற சிவன் தலம் என்பது குறிப்பிடத்தக்கது.
—subham—-

TAGS–இந்தியா முழுதும், சூரியன் கோவில்கள், பட்டியல், சூரியனார் கோவில் , சந்நிதிகள், நவக்கிரகங்கள்,