Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்லோகமும் சோகமும்!
ச.நாகராஜன்
ஸ்லோகம் சோகமாவது எப்போது?
ஒரு ஸ்லோகம் எப்போது சோபிக்கிறது? அதைச் சொல்பவர் அழகாகச் சொல்ல வேண்டும்; அவர் சொல்லும் போது ஒருவர் அதைக் கேட்க வேண்டும்.
ரசித்துக் கேட்டு அவரைப் பாராட்டவும் வேண்டும்.
இப்படி இல்லையெனில் ஸ்லோகம் என்ற சம்ஸ்கிரத வார்த்தையில் இருக்கும் ‘ல’ என்ற எழுத்தை நீக்கி விட வேண்டியது தான்.
இந்த ‘ல’ எழுத்தை நீக்கி விட்டால் ஸ்லோகம் சோகம் என்ற வார்த்தையாக ஆகி விடும்.
இப்படிக் கூறும் சுபாஷிதத்தைப் பார்ப்போம்:
ஸ்லோக: சுஸ்லோகானாம் யாதி சதி ச்ரோதரி வக்தரி |
யதி ச்ரோதா ந வக்தா வா லகாரஸ்தத்ர லுப்யதே ||
பொருள் : ஒரு ஸ்லோகமானது அதைச் சொல்பவரும் கேட்பவரும் இருக்கும் போது நன்றாக இருக்கிறது. அதைச் சொல்ல ஒருவர் இல்லை, கேட்கவும் ஒருவர் இல்லை என்னும் போது ஸ்லோகத்தில் உள்ள ல என்ற எழுத்தை நீக்கி விட்டு அதைச் சொல்ல வேண்டியது தான்.
ஸ்லோகம் சம்ஸ்க்ருத விதிப்படி சோகம் ஆகி விடும்!
கவிஞனின் புலம்பல்!
“அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்”
என்று வருந்திப் புலம்பினான் மாபெரும் கவிஞன் பாரதி.
கவிஞனின் உளத்தை அறிந்து கவிதையை ரசிப்பவே உண்மையான கவிதா ரஸிகன்.
நான்கு முகம் படைத்த பிரம்மாவே, நீ விரும்புகின்றபடி எனக்கு நூற்றுக் கணக்கான கவலைகளைக் கொடு, அரஸிகனாக இருப்பவனுக்கு கவிதை சொல்லித் தருவதைத் தவிர! இந்த சாபத்தை மட்டும் என் தலையில் எழுதி விடாதே!
இது தான் பிரம்மாவிடம் ஒரு கவிஞனின் வேண்டுதல்.
சுபாஷித கவிதையைப் பார்ப்போம்:
இதரதாபஷதாநி யதேச்சயா விதர தானி சஹே சதுரானன |
அரஸிகேஷு கவித்வநிவேதனம் சிரஸி மா லிக மா லிக ||
இதை மட்டும் எழுதி விடாதே, எழுதி விடாதே – மா லிக, மா லிக, என்று புலம்பும் கவிஞன் எத்தனை வேதனைப் பட்டிருக்க வேண்டும் கவிதையை உண்மையாக ரஸிக்கத் தெரியாதவரிடம் நல்ல கவிதையைச் சொல்லியதால்.
செயலில்லாத அறிவால் என்ன பயன்?
செயலில்லாத அறிவு ஒரு நொண்டியின் இயக்கம் போலத் தான். அவனால் எங்கும் செல்லவும் முடியாது எதையும் சாதிக்கவும் முடியாது. ஆகவே அறிந்தவன் அறிந்ததை நல்ல செயலில் காட்ட வேண்டும்.
ஞானமானது கர்மம் – செயல் -இல்லாமல் இருக்கக் கூடாது. அறிந்ததை நல்ல விதமாக செயலில் காட்ட வேண்டும்.
செயலும் செய்பவனும் பிரிக்க முடியாத ஜோடி
ஒரு செயலைச் செய்பவனையும் அவனது செயலையும் எவராலும் பிரிக்க முடியாது. செய்ததை செய்பவன் – நல்ல கர்மமாக இருந்தாலும், தீய கர்மமாக இருந்தாலும் – அனுபவித்தே ஆக வேண்டும்.
இதோ ஒரு சுபாஷிதம்:
யதா சாயாதபௌ நித்யம் சம்பத்தௌ ச பரஸ்பரம் |
த்த்தத் கர்ம ச கர்த்தா ச சுசம்ப்பத்தௌ பரஸ்பரம் ||
சூரியனின் ஒளியையும் நிழலையும் பிரிக்கவே முடியாது.
அதை இங்கு கவிஞர் உதாரணமாகக் காட்டுகிறார்.
எப்படி ஒரு நிழலும் சூரிய ஒளியும் பரஸ்பரம் நிரந்தரமாக தொடர்பைக் கொண்டிருக்கிறதோ அதே போல செயலும் அதைச் செய்பவனும் பரஸ்பரம் தொடர்பைக் கொண்டுள்ளவராவர்.
a person who claims to have a supernatural ability to perceive events in the future or beyond normal sensory contact.
xxxx
How much is postcode lottery per month?
£12 per month
Players sign up with their postcode and pay £12 per month. They are automatically entered into every draw and prizes are announced every day of the month. As 33% of the ticket price goes to charities, our players know that they are helping amazing causes every single day.
xxxx
Miracles do happen everyday; here is a news item that was flashed by almost all British newspapers
Xxx
A clairvoyant predicted that a Postcode Lottery winner would win, according to a woman from Middlesbrough.
Neighbours were over the moon when they found out they’d won a sizeable fortune on the Postcode Lottery.
Seven people living on Britain Avenue have scooped £379,418 each, a total of £2,6million, thanks to playing with the full winning postcode, TS5 7AT.
A total of 572 Teesside neighbours shared a £10.2 million prize pot at a special event at Centre Square in Middlesbrough on Saturday, April 1.
The lottery winners with the postcode TS5 7 were all invited and had been told they’d won at least £4,000.
One lucky winner was Elaine Thompson, who thanks her clairvoyant for predicting the win.
In a spooky prediction, Elaine was told she was due to win money, just weeks after she’d cancelled her subscription to the lottery.
The superstitious 58-year-old quickly signed up again and bagged a £12,050 prize.
Elaine, a former foster parent, said: “The fortune teller predicted I was going to come into a significant amount of money.
“I’d just cancelled the Postcode Lottery. A few days later I reinstated the ticket.
“I can’t thank the clairvoyant enough, without her I would have missed out.
“I will be spoiling my family and taking my daughters to Fuerteventura.”
Another of these lucky people was Mark Baker who first thought he had won £12,050, which he was very happy with. He later realised though that the real sum he had won was a huge £379,418.
The local truck driver said: “You only dream of money like this, it doesn’t actually happen to working people but I guess it’s happened to us. It’s life changing.
From Aja Dodd, yahoo life website
This news item appeared in almost all England newspapers.
கடந்த சில தினங்களாக பிரிட்டிஷ் பத்திரிகைகள் ஒவ்வொன்றாக ஜோதிடத்தின் பெருமையைப் பறை சாற்றி வருகின்றன ; செய்திச் சுருக்கம் இதோ : ஒரு பெண்மணி தொடர்ந்து லாட்டரி டிக்கெட் வாங்கிவந்தார் ; பரிசே விழவில்லை; இந்த சனியனை ஒழித்துக்கட்டுகிறேன் பார், என்று பரிசுத் தொகை பிடிக்கும் பாங்குக் கட்டளையை (Direct Debit Instruction to Bank) மாற்றினார். அவர் கான்ஸல் cancel செய்துவிட்டு குறி சொல்லும் (Clairvoyant) ஒருவரைச் சந்தித்தார்.
ஓம் சூம், மந்திரக்காளி ; உனக்கு மிகப்பெரிய பரிசுத்தொகை விழுவதை , என் தேவதை காட்டுகிறாள் ; ஓடிப்போ !!என்றார் குறி சொல்லுபவர் .
அந்தப் பெண் மணி வீட்டுக்கு ஓடிவந்தாள் ; மீண்டும் பாங்கிற்கு புது உத்தரவு அனுப்பி லாட்டரிக்கு பணம் எடுத்துக்கொள்ளுங்கள் என்றாள் . டிக்கெட்டும் வந்தது. அடித்தது லக்கி பிரைஸ் ; எவ்வளவு தெரியுமா? 12,050 பிரிட்டிஷ் பவுன் ( 12,050X 100 ரூபாய்)
அந்தப் பெண்ணின் பெயர் எலைன் தாமஸ் Elaine Thompson; நல்ல வேளையாக குறி பார்த்தேன்; ஆரூடம் சொன்னது அப்படியே பலித்தது. நான் மட்டும் அன்று, ஜோதிடம் கேட்டிராவிடில் பெரிய தொகையை இழந்திருப்பேனே என்று பத்திரிக்கரையாளரின் சொல்லி போஸும் கொடுத்தார் ( புகைப்படத்துக்கு ) ஆ னால் அவர் பேட்டையில் இவரை விட 7 பேருக்கு பெருந் தொகை பரிசு கிடைத்தது ஆளுக்கு £ 379,418. (ரூபாய் கணக்குக்கு 100 ஆல் பெருக்குங்கள் )
xxxx
பிரிட்டனில் ஏராளமான வகை பரிசுத் திட்டங்கள் உள்ளன. நீங்கள் 21 வயதுக்கு மேற்பட்டவர் என்றால், எ ந்தக் கடைக்குள்ளும் நுழைந்து, வித விதமான பரிசுச் சீட்டுகளை வாங்கி சுரண்டிப்பார்க்கலாம். அதிர்ஷ்ட எண் இருந்தால் பலவகை பரிசுத்தொகை கிடைக்கும் மற் றொரு வகை நேஷனல் லாட்டரி; ஐரோப்பிய லாட்டரி. வாரம் தோறும் பலமுறை குலுக்கல் நடக்கும். நம் எண் வந்தால் மில்லியன், பில்லியன் பவுன் கூட கிடைக்கும் .
மற்றொரு வகை லாட்டரி POSTCODE LOTTERY போஸ்ட்கோட் லாட்டரி; இதில் டிக்கெட் வாங்கி, உங்கள் பேட்டை போஸ்ட் கோட் (AREA POSTCODE) வந்தால் அதில் முதல், இரண்டு, மூன்று, நான்காவது என்று பரிசுகள் கிடைக்கும் . இந்தியாவில் ஊருக்கு ஊர் பின் கோட் PIN CODE உண்டு; பிரிட்டனில் ஊருக்கு ஊர் போஸ்டகோட் இருக்கும். இந்த முறை இங்கிலாந்தின் ஒருபகுதியான postcode, TS5 7AT பேட்டைக்கு அடித்தது யோகம். அங்கு டிக்கெட் வாங்கிய ஆட்களில் 7 பேருக்கு முதல் பரிசு £379,418. (ரூபாய் கணக்குக்கு 100 ஆல் பெருக்குங்கள் )
அந்த பேட்டையின் பெயர் Teesside டீ சைட் .அது Middlesbrough மிடில்ஸ் ப்ரோ வட்டாரத்தில் இருக்கிறது
Seven people living on Britain Avenue have scooped each, a total of £2,6million, thanks to playing with the full winning postcode, TS5 7AT.
A total of 572 neighbours shared a £10.2 million prize pot at a special event at Centre Square in Middlesbrough on Saturday, April 1, 2023.
XXXX
நாமும் அந்த ஆரூடக் காரனைப் பார்க்கலாமே என்று நினைத்தேன். அப்போது ஒரு அசரீரி கேட்டது: உன் லக் LUCK தான் உனக்கே தெரியுமே. நீ போன முஹூர்த்தம் அவன் உனக்கு பெரிய நஷ்டம் வரப்போகிறது; ஓம், சூம், மந்திரக் காளி ; ஓடிப் போ என்று சொன்னால் என்னாவது !
வேண்டாண்டா , சாமி; இருப்பதே போதும்; உடும்பு வேண்டாம்; ஆளை விட்டால் போதும்; நரி இடம் போனா என்ன, வலம் போனா என்ன, ஆள் மேல் விழுந்து குதறாமல் இருந்தாலே போதும் என்று பயந்து கொண்டே வந்துவிட்டேன் .
சேலையூர் சென்றால் ஒரே கல்லில் 20 மாங்காய்களை / மாம் பழங்களை அடிக்கலாம். அதாவது எல்லா இஷ்ட தெய்வங்களையும் கும்பிட்ட பலன் கிடைக்கும் இதில் சைவ, வைணவ, சாக்த தெய்வங்கள் மட்டுமல்ல. அதர்மத்தை அழிக்கும் , எதிரிகளை ஒழிக்கும் , பில்லி, சூனிய, செய்வினைகளை அகற்றும் உக்கிர தெய்வங்களும் அடக்கம். அதுமட்டுமல்ல இந்துக்கள் வழிபடும் பசுவையும் வணங்கலாம். மேலும் அன்னதானமும் செய்யலாம்; தினசரி யாகத்திலும் பங்கு கொள்ளலாம்
சில ஆண்டுகளுக்கு முன்னர் சேலையூர் ஸ்கந்தாஸ்ரமம் கோவிலுக்குச் சென்றபோது, பெண்கள் பூஜை செய்து கொண்டிருந்ததால் ஸ்ரீ சாந்தானந்தா ஸ்தாபித்த மிகப்பெரிய மகா மேருவைக் காண அருகில் செல்ல முடியவில்லை. ஆகையால் பிப்ரவரி 2023 இந்தியப்பயணத்தின் போது மீண்டும் சென்று தரிசித்தேன். காலை நேரம் எங்களைத் தவிர யாருமே இல்லை..
எனக்கு ஸ்ரீ சாந்தானந்தா ஒரு சிறிய புவனேஸ்வரி மந்திரத்தை, நான் சின்னப் பையனாக இருந்த பொழுது சொல்லிக்கொடுத்ததால் எப்போதும் குரு காணிக்கை செலுத்துவேன். நல்ல வேளை , அலுவலகம் திறந்து இருந்ததால் ஒரு அன்னதான டொனேஷன் கொடுத்து வந்தேன்.
எல்லாக் கடவுளரையும் வலம் வருகையில் ஒரு சில புரோகிதர்கள் பிரமாண்டமான யாக குண்டத்தின் முன்னர் அமர்ந்து ஒரு பெரிய மரத்துண்டை பதம் பார்த்துக்கொண்டு இருந்தனர். புத்தகத்தை படித்தபோதுதான் அது என்ன என்று விளங்கியது
கோவில் இருப்பிடம்
சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம்
எண் 1, கம்பர் தெரு, மஹாலக்ஷ்மி நகர், சேலையூர் , சென்னை 600 073
போன் 22290134; 22293388
xxxx
சென்னை குரோம்பேட்டை- தாம்பரம் திசையில் ராஜ கீழ் பாக்கம் பகுதியில் சேலையூர் இருக்கிறது. அங்குள்ள ஸ்கந்தாஸ்ரமம், பிரத்யங்கரா தேவி, சரபேஸ்வர் போன்ற பெரிய, மிகப்பெரிய, விக்ரகங்களை உடைய கோவில் ஆகும்.
புதுக்கோட்டை ஸ்ரீ சாந்தானந்தா கட்டிய கோவில்.
புவனேஸ்வரி அம்மனுடன் அமைந்த பெரிய மஹா மேரு முக்கியமாக தரிசிக்க வேண்டிய சந்நிதி. அதற்கு அருகிலேயே ஸ்ரீசாந்தானந்தாவின் சிலையும் உள்ளது.
xxx
நீங்கள் தரிசிக்கவேண்டிய சந்நிதிகள் :
பஞ்ச ஹேரம்ப கணபதி,
ஸ்ரீ மாதா புவனேஸ்வரி ,
ஸ்ரீ மஹா மேரு – 4 அடி உயரமுள்ள பஞ்சலோக மேரு
சரபேஸ்வரர்
சுவாமிநாத சுவாமி (முருகன்)
உக்ர பிரத்யங்கரா தேவி
பஞ்சமுக ஆஞ்சநேயர்
சுதர்சன மூர்த்தி
தர்ம சாஸ்தா ஐயப்பன்
அஷ்டா தச புஜ மஹாலஷ்மி
சஹஸ்ரலிங்கம்
சனைச் சரன்
தத்தாத்ரேயர்
சங்கடஹர கணபதி
தன்வந்திரி
ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
கோசாலை
யாக குண்டம்/ யாகம்
ஸ்ரீசாந்தானந்தா
மேற்கண்ட தெய்வங்களில் பிரத்யங்கரா தேவி, சரபேச்வரர் , தன்வந்திரி ஆகியோருக்கு வெகு சில கோவில்களிலேயே சந்நிதிகள் உண்டு.
Xxxx
ஸ்கந்தாஸ்ரம புஸ்தகம் சொல்லும் தகவல் இதோ :-
நித்திய ஸ்ரீ பிரத்யங்கரா – ஸரப– சூலினி ஹோமம்
“நெல்லிக்கனி அளவு அன்னத்தையும் நெய்யையும் ஹவிர்ப்பாகமாகக் கொடுத்தாலும் அக்னி, அதைப் பெரியதாக்கி , தெய்வங்களுக்குக் கொடுப்பதாக யஜுர் வேதம் கூறுகிறது.
ஸ்ரீ சரபேஸ்வரர் ஆலயம் ஒன்று, இரண்டுக்கு மேல் இல்லை. ஸ்ரீ பிரத்யங்கரா தேவிக்கும் ஸ்ரீ சூலினி துர்காதேவிக்கும் ஆலயங்கள் இல்லை என்றே சொல்லலாம் . இந்த நிலையில் கலியுகத்திற்கு தற்சமயம் அவசியமான மேற்படி தேவதைகளை நமது குருநாதர் ஸத்குரு ஸ்ரீமத் சாந்தானந்த சுவாமிகள் அவர்கள் சென்னை ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் பிரும்மாண்டமாக பஞ்ச லோகத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார்கள். ஆஸ்ரமத்தில் பூஜை, ஹோமம் முதலியன 25-6-1999 முதல் உலக க்ஷேமத்துக்காக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ பிரத்யங்கரா தேவிக்கும் ஸரப சூலினி தேவதைகளுக்கும் சக்தி அதிகரிக்கவும், தெய்வ சாந்நித்யம் ஏற்படவும் பிரத்யங்கரா , ஸரப சூலினி மஹா மூல மந்திரங்களை பல கோடி தடவை வேள்வியாகச் செய்வதாக சுவாமிகள் ஸத்ய சங்கல்பம் எடுத்துக் கொண்டார்கள் பக்தர்கள், நாம நட்சத்திரங்களுடன் உபயதாரர்களாக பங்கு கொள்ள வேண்டும். தொலைதூரத்தில் உள்ளவர்களும் இதைச் செய்யலாம். கோவிலில் விவரங்களைப் பெறலாம்” .
xxx
எனது கருத்து My Comments
சுவாமிகள் ஸ்தாபித்த விக்ரகங்கள், சிலைகள் எல்லாம் அளவில் பெரியவை. அதற்குத் தக பிரசாதம், பூஜை, அபிஷேகம் நடைபெற் றால்தான் அவற்றின் ஆற்றல் அதிகரிக்கும் . அந்த வகையில் பார்த்தாலும் நாம் உதவி செய்வது அவசியம்.
இந்தக் கலியுகத்தில் தினமும் அக்நி காரியம் செய்யவேண்டிய பிராமணர்கள் கூட அதைச் செய்வதில்லை; ஆகையால் சுவாமிகளின் ஸத்ய சங்கல்பத்தை நிறைவேற்ற நாமும் உதவலாமே .
மேலும் சுவாமிகள் எதையுமே மிகப்பெரிய அளவில் சிந்த்தித்து நிறைவேற்றியும் காட்டியுள்ளார். 1960-களில் அவர் புதுக்கோட்டையில் சஹஸ்ரசண்டி ஹோமம் ஏற்பாடு செய்தபோது எனது தந்தை வெ . சந்தானம், தினமணிப் பத்திரிகையில் தினமும் செய்தி வெளியிட்டு அது வெற்றி அடைய உதவினார். அதுமட்டுமல்ல. அப்போது மதுரை மீனாட்சி கோவில் ஆடிவீதியில் நடந்த அனந்த ராம தீட்சிதர் உபன்யாசத்துக்கு நாள் தோறும் பல்லாயிரக் கணக்கானோர் வந்தனர் . நிதியெழுப்ப ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சியில் நாங்கள் நாள் தோறும் தொண்டர்களாகப் பணியாற்றினோம்.
மேலும் எங்கள் வீட்டுக்கு பலமுறை வந்து ஸ்ரீ சாந்தாந்னதா ஆசீர்வதித்ததாலும் , எங்களுக்கு மந்திர உபதேசம் செய்த ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணா, இவர் பற்றிச் சொல்கையில் , தானே காடுகளில் அவர் தவம் செய்வதைக் கண்டதாகச் சொன்னதாலும் சாந்தானந்தா மீது கூடுதல் மரியாதை உண்டு.
ஸாந்தானந்த சுவாமிகள் மதுரையில் அவதரித்து, சுதந்திர போரட்டத்தில் அலிப்பூர் சிறை சென்று, குஜராத், ராஜஸ்தான் ரிஷிகேஷ் சிவாநந்தாஸ்ரமம் வரை சென்று , குற்றாலம், மேற்கு மலைத் தொடர்ச்சி காடுகளில் தவம் செய்து, சேலம், புதுக்கோட்டை , சேலையூர் கோவில்களை ஸ்தாபித்து, சமாதி அடைந்த கதையை தனியாகக் காண்போம்.
xxxx
18-2-23 சிவராத்திரி
18-2-23 சிவராத்திரி அன்று இரவில் சென்னை கே கே நகர் பிள்ளையார் கோவிலில் சிவனுக்கு பால், தேன் அபிஷேகம் நடந்ததையும் கண்டு களித்தேன். என் அண்ணன் குடும்பத்தினர், லிட்டர் லிட்டராக பாலையும் தேனையும் வாங்கிக் கொடுத்தனர். மறுநாள் குடந்தை வட்டாரக் கோவில் பயணம் இருந்ததால் அரை மணி நேர தரிசனத்துடன் திரும்பி வந்தேன். ஓம் நம சிவாய.
இந்த ஆய்வுக்கென எடுத்துக் கொள்ளப்பட்ட ஆங்கில நூலை எழுதியவர் :கிஷோரி மோஹன் கங்கூலி (1883-1896)
This is a translation by Kisari Mohan Ganguli done between 1883-1896.
இதில் மஹாபாரதம் 15175 K bytes கொண்டிருப்பது தெரிகிறது.
விமரிசனப் பகுதிகளை நீக்கி விட்டால், ஆங்கில மொழிபெயர்ப்பின் படி மீதி இருப்பது 13947 K bytes
மஹாபாரதத்தில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை : 28,58,609
மஹாபாரதத்தில் உள்ள வரிகளின் எண்ணிக்கை 1,18,087
தனித்தன்மை வாய்ந்த வார்த்தைகளின் எண்ணிக்கை 32,506
பர்வங்களின் எண்ணிக்கை 18
முக்கியமான கதாபாத்திரங்கள் 210 பேர்கள் (பத்து முறையாவது இதிஹாஸத்தில் வந்திருப்பவர்கள்)
Table 1:
Key Attributes of Mahabharata Text
Attributes Value Remarks
Size in bytes 15,175 K English translation
Size in bytes 13,947 K After removing comments
Number of words 28,58,609 Using NLTK
Number of unique words 32,506 Using NLTK
Number of sentences 1,18,087 Using NLTK
Number of chapters 18 “parva”
Number of characters 210 appearing at least 10 times
மஹாபாரதம் உலகின் பெரும் காவியங்களான இலியட் மற்றும் ஒடிஸியை விட, இரண்டையும் சேர்த்து வைத்துப் பார்த்தாலும் மிக மிகப் பெரியது. இதில் 18 பர்வங்கள் உள்ளன. நூறு உப பர்வங்கள் உள்ளன.
Mahabharata is larger than Iliad and Odyssey together, compiled many years ago.
This has 18 “parva”s or chapters and each “parva” has many sections.
இவர்களின் ஆய்வறிக்கை முழுதுமாகப் படிக்க வேண்டிய ஒன்று.
இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த மூன்று அறிஞர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.
மேலும் பல ஆய்வுகளை இவர்கள் செய்து கொண்டிருப்பதாக அறிகிறோம்.
முடிவுகள் நம்மை வியக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.
Etymology is the study of the origin of words. The history of a word or phrase is shown by tracing its development and relationships.
Yaska was the oldest etymologist known to history. He found the roots of Vedic words. His writing known in Sanskrit as Nirukta, is not only available to us but also studied by Vedic students today. Nirukta is one of the six ancillary subjects, that all the Vedic students must study and pass.
Nirukta is the oldest treatise on etymology, philology and semantics.
He lived before the time of Greeks, Tamil and Latin authors writing books or poems. The wonder is that he mentioned his predecessors. The list of names that he provides us show that India, that is Bharat, was the most literate country in the ancient world. That also proved that Vedic civilization was far ahead of other civilizations. That proved that Sanskrit was the oldest and well developed language.
Though we have older writings in Egyptian, Babylonian cultures, they don’t deal with grammar or linguistics in detail. We have only gibberish and primitive Gilgamesh poems as part of Middle East literature.
Here is what Yaska, the author of Nirukta (etymology) says:-
His 17 predecessors or his contemporaries:
1.Aagraayana
2.Audumbaraayana
3.Aupamanyava
4.Aurnavaabha
5.Kaaththakya
6.Kautsa
7.Krautuuki
8.Gaarrgya
9.Gaalava
10.Carmaciras
11.Yaitiki
12.Vaarsyaayani
13.Satabalaaksa
14.Saakataayan,
15.Saakapuuni
16.Saakalya
17.Sthaulaasthivi
Xxx
Apart from these individual names, he mentioned many subjects and professions:
Aithihaasikaahaa= historians
Duhitr- daayaadaah= a school of lawgivers who allow a daughter to inherit property of father just like a son.
Nairuktaahaa – etymologists
Parivraajakaahaa – ascetics or theologians
Yajnikaahaa – the ritualists
Vaiyaakarnaahaa = grammarians
Xxx
The existence of such schools of thought shows that specialisation in different subjects must have been prevalent for a considerable time to enable such schools to arise.
This was India before or around 1000 BCE.
We don’t see such a development anywhere in the world around that time.
Text books on these subjects must have existed at the time of Yaska.
Xxx
Six Limbs of Veda Maathaa
According to orthodox tradition, the Nirukta of Yaska is an auxillary treatise which is indispensable for a deep, full and proper knowledge of Vedic stanzas. It is technically called a Vedanga, a limb of the Veda. There are six limbs, Vedangas. The six limbs are
Grammar , phonetics, Ritualistic aphorisms,Metrics, Astronomy and Etymology
Metre is indeed the feet of the Veda, Ritual texts the hands, astronomy the eye, etymology the ear, phonetics the nose and grammar the mouth of the Veda. Therefore, a scholar who has studied the Veda with its limbs becomes great in the world of Brahma.
Chandah paadau tu vedasya hastau kalpo atha padyate
Jyotishaamayanam chakshurniruktam srotramuchyate
Sikshaagnaanam tu vedasya mukham vyaakaram smrutam
Tasmaat saangamadheetyaiva brahmaloke mahiiyate
Xxx
Yaska is mentioned and quoted by many scholars in the later days,
சோளப் பொரியை பாப்கார்ன் POPCORN என்கிறோம். உலகம் முழுதும் திரைப்படக் கொட்டகைகளில் விளையாட்டுத் திடல்களிலும். சூப்பர் மார்க்கெட்டுகளிலும் POP CORN விற்கப்படுகிறது . தமிழில் உள்ள இரண்டு பழமொழிகள் நமக்கு ஒரு முக்கிய உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது
ஆனைப் பசிக்கு சோளப்பொரி IT IS LIKE GIVING POPCORN TO HUNGRY ELEPHANT OR TO ONE WITH HUNGER LIKE AN ELEPANT
சோளக்காட்டு பொம்மை SCARECROW IN A CORNFIELD (FAKE THREAT)
இது போன்ற பழைய மொழிகள் வேறு மொழிகளில் இல்லை.
மக்காச் சோளத்தின் MAIZE தாவர இயல் பெயர் – Zea mays,
சோளத்தின் SORGHUM/ JOWAR தாவர இயல் பெயர் – HOLCUS SORGHUM, SORGHUM BICOLOR
இரண்டும் ஒரே குடும்பத்தைச் (belongs to the Poaceae)
சேர்ந்தவை. மேலும் இரண்டும் 10,000 ஆண்டுகளாக உணவாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்பட் டு வருகிறது ; இரண்டிலும் பொரி செய்யலாம் . ஆனால் இன்றைய பாப் கார்ன் மக்காச் சோளத்திலிருந்துதான் கிடைக்கிறது. பாப்கார்ன் சாப்பிடுவது ஏன் ?
அதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொரிக்கலாம் . பெரிய பாக்கெட். ஆனால் உடலுக்குக் கொடுக்கும் கலோரி (எரிபொருள் சக்தி) மிகக்குறைவு . மேலும் கோதுமையில் உள்ள க்ளூட்டன் என்னும் பொருள் பலருக்குஒவ்வாது. ஈந்த க்ளூட்டன் சோளத்தில் இல்லாததால் சோளத்தை க்ளூட்டன் ஒவ்வாமை உடையோர் பயன்படுத்துகின்றனர்
இரண்டு விஷயங்களை ஆராய்ந்த பின்னரே இது பற்றி முடிவு செய்ய வேண்டும் .
முதல் விஷயம்
இந்துக்களுக்கு சோளப்பொரி பற்றியோ சோளம் என்னும் தானியம் பற்றியோ தெரியுமா?
சோளம் என்பது இந்திய தாவரமா ?
சோளம் பற்றி சங்க இலக்கியத்தில் அல்லது சம்ஸ்க்ருத இலக்கியத்தில் குறிப்புகள் இருக்கின்றனவா ?
இரண்டாவது விஷயம்
இந்துக்களுக்கு முன்னர், வேறு யாராவது சோளம் பற்றிக் கதைத்து இருக்கிறார்களா ?
மொழியியல் ரீதியில் சோளம்- ஜோவர் – சோர்கம் SOLAM- JOWAR- SORGHUM என்பதில் எது முதலில் வந்தது ?
மேற்கூறிய இரண்டில் மொழியியல் ஆராய்ச்சிகள் (LINGUISTIC REEARCH) இந்துக்களுக்கும் குறிப்பாகத் தமிழ் இந்துக்களுக்கும் பெருமை தருகிறது .
பழமொழிகளுக்கு காலமே சொல்லமுடியாது. அவற்றை “பழ” என்ற அடைமொழியுடன் வழங்குவதால் அவை மிகப் பழங்கால அனுபவ மொழிகள் என்று அறியலாம் ;
ஒவ்வொரு கேள்வியாக எடுத்துக்கொள்ளுவோம்
சங்க இலக்கியத்தில் சோளம் இருக்கிறதா ? இல்லை
தமிழில் சோளம் இருக்கிறதா? இருக்கிறது. சீவக சிந்தாமணியில் இறுங்கு என்பதை சோளம் என்று உரை ஆசிரியர்கள் சொல்லுகின்றனர் .
இது தவிர பழமொழிகளில் உள்ளது
XXXX
சம்ஸ்க்ருத இலக்கியத்தில் சோளம் இருக்கிறதா ? இருக்கிறது; ஆனால் பிற்கால இலக்கியங்களில்தான். தமிழுக்கு சற்றுமுன்னர்.
வேறு யாருக்காவது சோளம் பற்றித் தெரியுமா ?
சோளம் (CORN) என்பதை மக்காச் சோளத்துக்கும் (MAIZE) கம்பு (MILLETS) வகை தானியத்துக்கும் பொதுப்பெயராகப் பயன்படுத்துகின்றனர். இந்தக் குழப்பம் ஆங்கில மொழியிலும் உள்ளது. POP CORN பாப் கார்ன் பெயரிலுள்ள கார்ன் CORN என்னும் ஆங்கிலச் சொல் சில நாடுகளில் தானியம் (GRAIN) என்ற பொருளிலும் இன்னும் பல நாடுகளில் மக்காச் சோளத்துக்கும்(MAIZE) இன்றுவரை பயன்படுகிறது. மேலும் மக்காச் சோளம் இல்லாத சோளத்துக்கு சொர்கம் அல்லது சோர்கம் (SORGHUM) என்ற பெயர் தமிழ்ப் பெயர் ஆகும்.
XXX
Picture of Sorghum Crop
LINGUISTIC SUPPORT
R= L என்பது உலகம் முழுதும் காணப்பாடுகிறது. இந்து மொழியியலில் – சம்ஸ்க்ருதத்தில் — இதற்கான சூத்திரமே உளது ஆக சோளம் என்பதே சோ ர்/ள் கம் ஆகியது
இன்னொரு விநோதத்தையும் காணலாம். எந்த வயலில் பறவைகளை விரட்ட மனித உரு போன்ற பொம்மைகளை (SCARECROW) வைத்தாலும் அதைத் தமிழில் சோளக்காட்டு பொம்மை என்றுதான் சொல்லுகிறோம். இதைப் பார்க்கையில் தமிழிலும் சோளம் என்பதற்கு தானியம் என்ற பெயர் தொனிக்கிறது (SOLAM= GRAIN)
இன்று பாப்கார்ன் (சோளப் பொரி ) செய்வதற்கு மக்காச் சோளம்தான் பயன்படுகிறது. அதிசயமான விஷயம் என்னவன்றால் உலகில் அதிகமாக விளையும் தானியம் அரிசி அல்ல; கோதுமை அல்ல; மக்காச் சோளம்தான்!
இது மத்திய அமெரிக்காவிலுள்ள மெக்சிகோவில் 10, 000 ஆண்டுகளுக்கு முன்னரே (MAIZE) உணவுக்காகப் பயன்படுத்தத்தப்பட்டது தொல்பொருள் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது . பின்னர் தென், வட அமெரிக்காவில் பரவி, உலகெங்கிலும்ம் பயிரானது.
சோளப் பொரியைக் கண்டுபிடிக்க பெரிய ஆராய்ச்சியே தேவை இல்லை. திடீரென்று சோளக்காடோ தானியக் கிடங்கோ தீப்பிடித்து எரிந்து இருந்தால், தானாக பொரி கிடைத்திருக்கும். அதைச் சாப்பிட்டவர்கள் மற்றவர்களுக்கும் சொல்லி இருப்பர்; உடனே இது வழக்கத்தில் வந்திருக்கும் .. ஆனால் தமிழில்தான் பொரியை உணவாகப் பயன்படுத்திய குறிப்புகள் உள்ளன. இன்று நாங்கள் லண்டனில் காலை உணவாகச் சாப்பிடும் ரைஸ் கிரிஸ்பீஸ் RICE CRISPIES (BREAKFAST CEREAL) என்னும் அரிசிப்பொரியை பாலில் கலந்து உண்ட செய்தி 2000 ஆண்டுப் பழமையான நற்றிணையில் உளது . 1990களில் நான் லண்டன் மேகம் பத்திரிகையில் இதை எழுதினேன். அவை 2009-ல் தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள் என்ற புஸ்தகமாக வெளியானது .
சோர்கம் பற்றி எதியோப்பியா-எகிப்தில்தான் பழைய தொல்பொருட் துறை தடயம் – அதாவது 10,000 (8000 BCE) ஆண்டுகளுக்கு முந்தைய தடயம் உள்ளது .
அப்படி இருக்கும்போது தமிழ் இந்துக்களுக்கு எப்படி இந்த கண்டுபிடிப்புப் பட்டத்தைக் கொடுக்க முடியும்? இது மிகைப்படுத்தப்பட்ட கூற்று ஆகாதா ?
இங்குதான் பழமொழியும், மொழியியலும் (PROVERBS AND LINGUISTIC S)நமக்குத் துணைக்கு வருகின்றன .
ஆனைப் பசிக்கு சோளப் பொரி என்ற பழமொழியில் சோளப் பொரியை உணவாகச் சாப்பிடும் செய்தி வருகிறது. அதிக பசியுள்ளவனுக்கு அது பசியாற்றாது என்ற செய்தியும் அந்தப் பழமொழியில் இருக்கிறது . ஆக பொரி என்பதை உணவாகக் கண்டவர்கள் தமிழர்களே
ஆயினும் இப்போது பாப்கார்ன் செய்யப் பயன்படும் மக்காச் சோளம் மிகவும் பிற்காலத்தில்தான் இந்தியாவுக்கு வந்தது. அதற்கு முன்னரே ஒன்பதாம் நூற்றாண்டு சீவக சிந்தாமணியில் சோளம் இருப்பதால், நாம் சொல்லும் பொரி , சொர்கம் SORGHUM என்ற தானியம் ஆகும். இது 8000 ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தில் இருந்த தடயங்கள் கிடைத்திருப்பதால் இது ஆப்பிரிக்காவிலிருந்து வந்ததாக உணவுப்பண்ட ஆய்வாளர்கள் செப்புவர். ஆக இதில் பொரி செய்து உணவாகப் பயன்படுத்தியத்தைத் தமிழ்ப் பழ மொழி காட்டுவதால் பாப்கார்ன் உணவுப் பண்டத்தை நாம்தான் கண்டுபிடித்தோம் என்று சொன்னால் என்ன தவறு?
Xxxxx
picture of Maize
கி.பி AD.= பொ .ஆ (Common Era)
ஆயுர் வேத நூல்களில் சோளத்தின் வரலாற்றைக் காண்போம்.
2200 ஆண்டுகளுக்கு முந்திய சரக சம்ஹிதை நூலில் ஜுர் ணா என்ற பெயரில் சோளம் உள்ளது ; இதுவே ஜோவர் ,சோர்கம் – சோளம் என்று உருமாறியது.
கி.பி.400- சமண நூல் திலோய பண்ணத்தியில் யவ நால அல்லது ஜம நால என்ற பெயரில் உளது.
XXX
தமிழ் நூல் சீவக சிந்தாமணி – ஒன்பதாம் நூற்றாண்டு – இறுங்கு (சோளம் )
XXX
கி.பி.1060 – சரக சம்ஹிதையின் வங்காளி மொழி உரையில் ஜுர்ணா = ஜோனார்
XXX
கி.பி.940- கன்னட மொழி நூல் பம்ம பாரத — ஜோள
பின்னர் பிராகிருத மொழி நூல்களில் ஜோவ்ரி , ஜோவாரி
தற்காலத்தில் இந்தி முதலிய மொழிகளில் ஜோவார் ,ஜவார்
சோளம் என்ற தமிழ்ச் சொல் பழமொழியில் மட்டுமே காணப்படுகிறது .
ஆதி காவியமான வால்மீகி ராமாயணத்தில் பல அபூர்வமான வாகனங்களின் வகைகளை மஹரிஷி வால்மீகி கூறுகிறார்.
அதைப் பற்றிய ஒரு சிறிய பார்வை இதோ:
அஸ்வ கோடகா – பழைய காலத்தில் குதிரைகள் (அஸ்வம் – குதிரை) ரதங்களில் பூட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டன.
யுத்தங்களிலும் இந்த ரதங்கள் வீரர்களை ஏற்றிச் செல்லும்.
கஜ அல்லது ஹஸ்தி : கஜ என்றால் யானை. ஹஸ்தி என்றாலும் யானை என்றே பொருள்.
அரசர்களாலும், அரச குடும்பத்தினராலும் மந்திரிகளாலும், மாபெரும் போர் வீரர்களும் யானை மீது ஏறிச் செல்வர்.
ரதம் : இரு சக்கரங்களை உடைய ஒரு வாகனம். சாதாரணப் போக்குவரத்திற்கும் போர்க்காலங்களில் போர்க்களங்களிலும் ரதம் பயன்படுத்தப்படும்.
மிகப் பெரும் ஓட்டப் பந்தயப் போட்டிகளிலும் ரதங்கள் எடுத்துச் செல்லப்படுவதுண்டு.
ஒரு குதிரையோ அல்லது பல குதிரைகளோ பூட்டப்பட்டு ரதங்கள் செல்லும்.
ரதத்தை மிக விரைவாக ஓட்டத் தனித் திறமை வேண்டும்.
இப்படிப்பட்ட ரத வீரர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்களை ராமாயணத்திலும் காணலாம். மஹாபாரதம் மற்றும் 18 புராணங்களிலும் காணலாம்.
பல சக்கரங்களைக் கொண்ட ரதங்களுமுண்டு.
சிபிகன் – சிவிகை என்று தமிழில் சொல்லப்படும் பல்லக்கு இது.
ராணிகளும், மிகப் பெரும் மகான்களும் உயர் அதிகாரிகளும் போக்குவரத்து வாகனமாக சிவிகையைப் பயன்படுத்துவது வழக்கம்.
ஸ்வஸ்திகா : – மிக்க அலங்காரத்துடன் பிரம்மாண்டமாக அமைக்கப்படும் படகு இது. அரசர்களும் அரச குடும்பத்தினரும் உயர் அதிகாரிகளும் நதிகளிலும் கடலிலும் செல்லப் பயன்படுத்தப்படும் நீர்ப் போக்குவரத்து வாகனம் இது.
ஸ்வஸ்திகா என்பது குகனது பெரிய படகு. உயர் அரச வம்சத்தினரை ஏற்றிச் செல்வதற்கானது. இதில் தான் பரதன் உள்ளிட்டோரை ஆற்றின் மறு கரைக்கு – சித்ரகூடத்திற்கு குகன் ஏற்றிச் சென்றான்.
புஷ்பகம் : இது ஒரு வான ஊர்தி. (ஏரோபிளேன் – ஆகாய விமானம்)
பல அபூர்வமான அம்சங்களைக் கொண்டது இது.
சுந்தர காண்டம் எட்டு மற்றும் ஒன்பதாம் ஸர்க்கத்தில் இது பற்றி விரிவாகக் காணலாம்.
மணி, இரத்தினம் இவைகளால் அலங்கரிக்கப்பட்டதும் உருக்கின தங்கத்தால் செய்யப்பட்ட பலகணிகளின் வேலைத்திறமைகளையும் உடைய பெரிய விமானம் இது.
இத்தன்மையது என்று சொல்ல முடியாதது. பிறரால் அழிக்க முடியாதது. வேலைத் திறமை கொண்டது. விஸ்வகர்மாவினால் செய்யப்பட்டது.
மனதின் எண்ணப்படி பலவிதமான கதிகளுடனும் அது செல்லும்.
பற்பல விசித்திர மாளிகைகள் அதற்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஒருவராலும் தடுக்க முடியாதது.
அதில் செல்பவரின் அபிப்ராயப்படி அது செல்லும்.
அழகிய தோற்றத்தை உடையது.
ஆயிரக் கணக்கானோரால் அது எப்போதும் பாதுகாக்கப்படும்.
தேவ லோகத்தில் பிரம்மாவுக்காக விஸ்வகர்மா அதைச் செய்தார்.
பிரம்மாவிடமிருந்து தன் தவத்தால் குபேரன் அதை அடைந்தான்.
குபேரனிடமிருந்து வென்று ராவணன் அதைக் கைப்பற்றினான்.
மான் முதலிய சித்திர வேலைப்பாடுகள் அதில் உண்டு. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தூண்கள் ஒளியால் ஜ்வலிப்பது போல அது கட்டப்பட்டது.
ஆகாயத்தை உராய்ந்து கொண்டிருப்பது போல மங்களகரமான கோபுரங்கள் அதன் நாற்புறங்களையும் அலங்கரித்தன.
பொன்னாலான படிகள் கொண்டது; அழகிய மேடைகள் கொண்டது.
ஸ்வர்ணங்களாலும் ஸ்படிகங்களாலும் ஜன்னல்களுடனும் காற்றோட்ட வசதியுடனும் அது அமைக்கப்பட்டிருக்கும் ஒன்று. (அதாவது ஏர்கண்டிஷன் என்று இப்போது சொல்லப்படும் குளிர்சாதன வசதி கொண்டது அது)
இந்திர நீலம், மஹா நீலம், பவளம், முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்ட அது பல அடுக்குகளைக் கொண்டது.
அதில் பானம், பக்ஷணம் என உணவு வகைகள் நறுமணத்துடன் இருக்கும்.
இப்படி வர்ணிக்கப்பட்ட புஷ்பக விமானத்தை அனுமன் பார்த்தான்.
இதில் ஏறியே சீதை, ராமர், லக்ஷ்மணர் இலங்கையிலிருந்து அயோத்திக்குத் திரும்பினர்.
ஆக வால்மீகி மஹரிஷி இப்படிப் பல வாகனங்களைத் தனது இராமாயண காவியத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
Mighty Magadha Empire is known from the times of Buddha. That means it was one of the 16 empires known at the time of Buddha, i.e. Sixth Century BCE. Before it was known as Kikata desa. Rig Veda not only named it, but also gave the king’s name as Pramaganda.
Famous philosopher king Janaka and his daughter Sita Devi were also from Bihar, known as Videha desa. Yaska of eighth century BCE also mentioned it and said it was at the outskirts of Aryavarta. But from Ramayana and Upanishadic sources we come to know they were high class Hindus. We also come to know the names who participated in the All India Philosophical Conference convened by Janaka. A woman philosopher by name Gargi Vachaknavi, challenged a great Rishi Yajnavalkya. Brhad Aranyaka Upanishad lists all the philosophers and their localities.
During the Mauryan period, it was known as Maghada. Among the 30 kingdoms mentioned in the Mahabharata, we see Magdha and its king.
In short, we see a continuous history from Rig Vedic times to the time of Buddha. Now we call it Bihar from Buddha ‘Viharas’. This shows that the place name changes according to the ruler’s location or his name or other factors
xxxx
Rig Vedic Reference
The Rig Veda refers this place with reference to Visvamitra Rishi, who was a key player in the world’s first big war. It is called Dasarajna Yuddha, the war of Ten Kings. For the first time in history, we come to know that Ten Kings formed a front and attacked Sudas, a king who was a friend of Vasishta, but later changed his loyalty to Visvamitra.
‘Ten kings War’ also show that there were ten kingdoms at that time apart from Sudas’ kingdom.
Western mischief makers labelled them as ‘tribal chiefs ‘ to minimise the importance. But Rig Veda clearly called them ‘Raja.’
This passage in Rig Veda shows that Vedic civilisation was even in Bihar at the remotest time. The Sanskrit name of the king is another evidence.
Pandavas also belong to Bharata vamsa.
xxx
Here is the Vedic context:
Rig Veda 3-53-14 refers to the land of Kikata, which is identified with Magadha in Bhagavata Purana 1-3-24
Rig Vedic hymns 3-33 and 3-53 in the third Mandala show Visvamitra’s support for the Bharatas and its king Sudas. From hymn 18 of the Seventh Mandala we know a league of Ten Kings attacked Sudas, which was foiled . this famous battle was fought on the banks of Ravi in Punjab.
Enmity between the two great Rishis Vasistha and Visvamitra is known from other hymns.
Hymn 33 of the Third Mandala contains a dialogue between Visvamitra and the rivers Vipas and Sutudri (Beas and Sutlej), which they want to cross. The sage requests the rivers to stop their course (ramadhvam), to bend low (ni namadhvam) so that the Bharats amy safely cross them with their carts and chariots. The rivers readily agree, but stipulate that the bard will commemorate their kind gesture in hymns. They safely crossed the river. Then Visvamitra told the rivers to swell again and follow its course.
(apart from geography, this is the first River water Miracle which we see in Bhagavata as well where River Yamuna parted away for the baby Krishna to cross. Bible also copied it in Moses episode of Red Sea crossing)
xxx
Banyan tree in the Rig Veda
In the hymn 3-53 we get additional information about the Kikatas. They did not follow the same customs of Vedic Hindus. “what purpose of thine is served by the cows in the land of the Kikatas? They neither milk them for the aasiira nor heat the gharma. O bounteous one, bring to us the wealth of Pramaganda, subject to us the Naicasakha (mantra 3-53-14).
Naicasakha is explained by Yaska as a banyan tree.
Niica- saakha= having down reaching branches bahuvrihi compound (Nirukta 6-32).
Later banyan tree was called nyag-rodha= growing downward;
Aitareya Brahmana (35-4) mentions that the banyan trees of Kurukshetra were the first born of the species.
Based on this, Ksetracandra Chattobhahyaya of Allahabad, identified Kikata with Kurukshetra; but it was not accepted by many scholars.
Banyan tree of Kurukshetra is famous, but banyan trees are found throughout India.
Xxx
Other evidence
Apart from Vedic literary evidence, we come to know about excavations of Indus type of culture in a very wide area up to river Yamuna. Westerners deliberately labelled them ‘Pre Aryan’. But until today no one was able to decipher Indus script and show whether it was pre Aryan. The West mislead the world from the very beginning.
xxx
40,000 year old Bhimbetka
We have found Bhimbetka cave paintings older than 40,000 years in the middle of the thick forests in Madhya Pradesh. Hindu civilisation is at least 40,000 years old. Westerners divided the Hindus by putting racial elements.
So, I will conclude that Kikata is Bihar which is known from the oldest part of Rig Veda.
Shrikant G Talageri who has done detailed research in the Vedas, also identified Rig Vedic Mandalas 6, 3, 7 and early part of First Mandala as the oldest hymns. And Kikata (Bihar) of third Mandala is also part of this oldest part of the Rig Veda.
xxx
Source books- Woolner commemoration Volume, 1940;
The Rigveda, A Historical Analysis by Shrikant G Talageri,2000
Rig Veda translation by R H Griffith (with my inputs)
—subham—
tags- Kikata, Magadha, Bihar, Rig Veda, Geography
Amazing Geographical Knowledge of the Vedic Hindus!!
18 May 2015 — But foreign “Scholars” described them as tribes! The Great War was described in detail in several hymns in the Rig Veda, but not mentioned in …
Rivers in the Rigveda and Panini’s Ashtadhyayi-1 (Post No. …
28 Jun 2021 — A geographical feature of the Indus descending from the defiles of Dardistan is expressed in the grammatical formation ‘Daaraadi Sindhuh‘, …
Rivers in the Rigveda and Panini’s Ashtadhyayi-2 (Post No. …
25 Jul 2016 — The oldest religious book in the world is the Rig Veda which is in Sanskrit. It covers a huge geographical area—from Iran to Gangetic plains …
It can now be proved even by geographical evidence, that Zoroastrians had been settled in India before they immigrated into Persia ……….. That the Zoroastrians …—subham—
கிறிஸ்தவ நாடுகளில் பேட்டைக்குப் பேட்டை பெரிய சர்ச் இருக்கும்; அவரவர் பேட்டையில் உள்ள சர்ச்சுக்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டு காணிக்கை செலுத்துவர். அந்தந்த Parish Priest பாரிஷ் குருவுக்கு வரும்படி கிடைத்துவிடும். இன்னும் சில நாடுகளில் வரிப் பிடித்தம் போல சம்பளத்திலேயே சர்ச்சுக்குப் பணம் போய்விடும்.
இந்துக்களும் இதே முறையை வேறு வழியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றி வருகின்றனர் . பெரிய மன்னர்கள் கோவில்களைக் கட்டி கொஞ்சம் மானியமும் விட்டுச் சென்றனர். ஆனால் அதை சேதமடையாமல் பாதுகாக்கும் பணியை ஊர் மக்களிடம் விட்டுச் சென்றனர். அந்தந்த ஊர் மக்கள், உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் முதலில் பணம் கொடுக்க வேண்டியது குல தெய்வத்துக்குத்தான் .
பல குடும்பங்களில் பல தடைகளும், குறைகளும், சண்டை சச்சரவுகளும் முளைப்பதற்குக் காரணம் குல தெய்வத்தை மறப்பதுதான்.
இது எனது கற்பனை அல்ல. நான் தரிசித்த சுவாமிஜிக்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். நல்ல ஜோதிடர்கள் ஒருவருடைய ஜாதகத்தைப் பார்த்தவுடனேயே அவர்களுக்கு அருள் தரும் குல தெய்வத்தின் பெயரைச் சொல்லிவிடுவார்கள் .
கோமதி என்றால் சங்கரன் கோவில்,சுவாமிநாதன் என்றால் சுவாமி மலை , வைத்திய நாதன் என்றால் வைத்தீஸ்வரன் கோவில், அரங்கநாதன் என்றால் ஸ்ரீரங்கம் என்று குத்துமதிப்பாகச் சொல்லுவது அல்ல. அதை யாருமே செய்யமுடியும்.. ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளே அவரவர் தெய்வங்களைக் காட்டிவிடும்.
என்னுடைய அண்ணன் சீனிவாசன், லண்டனுக்கு (August 1990) வந்தபோது நான் வேலை பார்த்த பிபிசி அலுவலத்துக்கு அழைத்துச் சென்றேன். ஒலி பரப்பு முடிந்தவுடன் ஒவ்வொருவருக்காக ஜோதிடம் சொன்னார். பேஸ் ரீடிங் FACE READING முறையில்; ஆளையோ போட்டோவையோ பார்த்துச் சொல்லிவிடுவார் . ஒரு கிறிஸ்தவ ஒலி பரப்பாளரைப்பார்த்து உங்களுக்கு முருகன் குல தெய்வம் என்றார் . அவருக்குக்ச் சிரிப்பு தாங்கவில்லை. மிகவும் மரியாதையாக, என்ன ஸார் நானோ கிறிஸ்தவன்; சரியாக இல்லையே எனறார் . பின்னர் ஒரு பெரிய தீ விபத்தில் நீங்கள் சிக்குவீர்கள் என்றார் என்னுடைய அண்ணன் ; அவருக்கு ஆச்சரியம் .
சார் , நான் நைஜீரியாவில் வேலை பார்த்த காலத்தில் பெரிய தீ விபத்திலிருந்து தப்பித்ததே கடவுள் புண்ணியம் ஸார் , என்று சொல்லி சட்டையின் கைப்பகுதியை உயர்த்திக்காட்டினார் . கை வெந்துபோன வெள்ளைத் தழும்புகள் இருந்தன ஆனால் முன்னரே நடந்ததை என் அண்ணன் நடக்கப்போவதாகக் கண்டார். அது ஒன்றே பிழை.
சில மாதங்களுக்குப் பின்னர் இலங்கை சென்றுவிட்டுத் திரும்பி வந்தார் . சுவாமிநாதன், உங்கள் அண்ணன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை . யாழ்ப்பாணத்தில் அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு ஊர் முருகன் கோவில் பெயரைச் சொல்லி அங்கே போக வேண்டும் என்றார் . என்ன, அம்மா, நாம் கிறிஸ்தவர் ஆயிற்றே முருகன் எதற்கு என்று கேட்டதற்கு, குடும்பம் கிறிஸ்தவ மதத்தைத் தழுவுவதற்கு முன்னர் அந்தக் கடவுள்தான் குல தெய்வம் என்று குறிப்பிட்டாராம் . இதை அவரே என்னிடம் சொன்னவுடன் , சென்னைக்குச் சென்ற என் அண்ணனுக்கு போன் செய்து சொன்னேன் .
அதே விஜயத்தின்போது, என் பரம எதிரி யைப் பார்த்து உங்களை யாராலும் அசைக்க முடியாது. முருகன் அருள் உண்டு என்று சொன்னார். வெளியே வந்தவுடன் நான் என்னுடைய அண்ணனைக் கோபித்துக் கொண்டேன் ; பரம எதிரி என்று தெரிந்தும் இப்படி ஆசீர்வாதம் கொடுத்துவிட்டாயே என்றேன்.
நானாக ஆசீர்வாதம் செய்யவில்லை. அவர் என் முன்னே நின்றவுடன் அவருடைய அம்மா சொன்ன கந்த சஷ்டிக் கவசம்தான் தெரிகிறது என்றார்
ஆகவே உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் செய்யும் பிரார்த்தனைகளும் வீண் போகாது. கவசம் போல அவர்களை சுற்றி நின்று காக்கும்.
எங்கிருந்தாலும் குல தெய்வக் கோவிலுக்கு வந்து தரிசியுங்கள் ; குல வழ க்கப்படி பொங்கல் வையங்கள்; முடி இறக்குங்கள் ; ஆடு வேண்டுமானாலும் வெட்டுங்கள்; அந்தக் கோவில் சீரும்சிறப்புடனும் விளங்க உதவுங்கள்..
Xxx
1400 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பர் பெருமான் பாடிய தேவாரப்பாடல் இதோ:
பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
பொருள் :
ஆயிரம் நாமங்கள் பாடி தேவர்களாளல் போற்றப்பட்ட பெருமானை,
கிடைக்கப்பெறாத செல்வமாகிய வீடு பேறு இன்பத்தை தனது அடியவர்களுக்கு கிடைக்க செய்பவனை,
தீராத நோய்களையும் தீர்ப்பவனை, திரிபுரங்கள் திக்கெட்டும் எரிகையில் போரிட்டு அதனை வென்றவனை,
வைத்தீஸ்வரனை இத்தனை நாள் போற்றிப் பாடாமல் இருந்து விட்டேனே என்று புலம்புகிறார் அப்பர்.
(புள்ளிருக்கு வேளூரான்- வைத்தீஸ்வரன் கோவில் மூலவர் ; தாயார் : தையல் நாயகி)
எங்கள் குல தெய்வமான பாலாம்பிகா சமேத வைத்யநாத சுவாமி எழுந்தருளிய வைதீஸ்வரன் கோயில் திருத்தலம் பற்றி இதே பிளாக்கில் பல முறை எழுதிவிட்டேன். மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளியான கட்டுரை இணைப்பையும் கீழே கொடுத்துள்ளேன் .
சென்ற 2023 பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் வைத்தீஸ்வரன் கோவிலில் தங்கி பேரக்குழந்தைக்கு முடியெடுத்தோம் . எங்கள் குடும்ப முதல் மொட்டை வைத்திய நாதனுக்கு; இரண்டாம் மொட்டை திருப்பதி வெங்கடாசலபதிக்கு ..ஹரியும் சிவனும் ஒன்னு ; அறியாதவன் வாயில மண்ணு!
எங்கே உள்ளது?
தமிழ் நாட்டில் மாயூரம் அருகில் உள்ளது.
என்ன கோவில் ?
சிவன் கோவில்
வேறு என்ன சிறப்பு?
அன்னை பாலாம்பிகா சந்நிதியைத் தவிர, செல்வ முத்து குமார சுவாமி என்னும் முருகன் சந்நிதி, அங்காரகன் சந்நிதி, தன்வந்திரி சந்நிதி ஆகியன முக்கியமானவை .
நாங்கள் ஒவ்வொருமுறை இந்தியாவுக்குச் செல்லும்போதும், தமிழ்நாட்டில் நுழைந்தால் வைத்யநாதன் தரிசனம் இல்லாமல் வருவதில்லை ; காரணம் எங்கள் குல தெய்வம்!!!
கணபதி அர்ச்சனை துவங்கி அருகிலுள்ள அங்காரகன் (செவ்வாய் கிரகம்), பின்னர் வைத்தியநாதன், பாலாம்பிகா, செல்வமுத்துகுமார சாமி, தன்வந்திரி முடிய ஆறு அர்ச்சனைகள் செய்வோம்.
முன்னதாக, புகழ்பெற்ற குளத்தில், வழுக்கி விழாமல், மிக ஜாக்கிரதையாக கால் கழுவி , தலையில் நீரைத் தெளித்துக்கொண்டு பின்னர் கோவில் வழிபாட்டுக்கு வருவோம்
அதற்கு சற்று முன்னர் உப்பு, மிளகு வாங்கி காணிக்கையாக செலுத்துவோம். ஒரு சாந்து உருண்டை பிரசாதம் கொடுப்பார்கள். அது நோயை எல்லாம் தீர்க்கும்.
நேர்த்திக் கடன் உள்ளவர்கள் வெள்ளியில் ஆன உடல் உறுப்புகளை காணிக்கையாக உண்டியலில் செலுத்துவார்கள். உண்டியலில் பணம் போடுவது அவரவர் நம்பிக்கையின் அளவைப் பொறுத்தது ; அதே போலத்தான் அய்யர் தட்டில் தட்சிணை போடுவதும்.