ஆரூடம் கேட்பது, குறி சொல்லுவது உண்மையே! பிரிட்டிஷ் பத்திரிகைகள் ஒப்புதல் (Post.11,872)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,872

Date uploaded in London – –  5 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

கடந்த சில தினங்களாக பிரிட்டிஷ் பத்திரிகைகள் ஒவ்வொன்றாக  ஜோதிடத்தின் பெருமையைப்  பறை சாற்றி வருகின்றன ; செய்திச்  சுருக்கம் இதோ : ஒரு பெண்மணி தொடர்ந்து லாட்டரி டிக்கெட் வாங்கிவந்தார் ; பரிசே விழவில்லை; இந்த சனியனை ஒழித்துக்கட்டுகிறேன் பார், என்று பரிசுத் தொகை பிடிக்கும் பாங்குக் கட்டளையை (Direct Debit Instruction to Bank)  மாற்றினார். அவர் கான்ஸல் cancel செய்துவிட்டு குறி சொல்லும் (Clairvoyant) ஒருவரைச் சந்தித்தார்.

ஓம் சூம், மந்திரக்காளி ; உனக்கு மிகப்பெரிய பரிசுத்தொகை விழுவதை , என் தேவதை காட்டுகிறாள் ; ஓடிப்போ !!என்றார் குறி சொல்லுபவர் .

அந்தப் பெண் மணி  வீட்டுக்கு ஓடிவந்தாள் ; மீண்டும் பாங்கிற்கு புது உத்தரவு அனுப்பி லாட்டரிக்கு பணம் எடுத்துக்கொள்ளுங்கள் என்றாள் . டிக்கெட்டும் வந்தது. அடித்தது லக்கி பிரைஸ் ; எவ்வளவு தெரியுமா? 12,050 பிரிட்டிஷ் பவுன் ( 12,050X 100 ரூபாய்)

அந்தப் பெண்ணின் பெயர் எலைன் தாமஸ் Elaine Thompson; நல்ல வேளையாக குறி பார்த்தேன்; ஆரூடம் சொன்னது அப்படியே பலித்தது. நான் மட்டும் அன்று, ஜோதிடம் கேட்டிராவிடில் பெரிய தொகையை இழந்திருப்பேனே என்று பத்திரிக்கரையாளரின் சொல்லி போஸும் கொடுத்தார் ( புகைப்படத்துக்கு ) ஆ னால் அவர் பேட்டையில் இவரை விட  7 பேருக்கு பெருந் தொகை பரிசு கிடைத்தது ஆளுக்கு £ 379,418. (ரூபாய் கணக்குக்கு 100 ஆல் பெருக்குங்கள் )

xxxx

பிரிட்டனில் ஏராளமான வகை பரிசுத்  திட்டங்கள் உள்ளன. நீங்கள் 21 வயதுக்கு மேற்பட்டவர் என்றால், எ ந்தக் கடைக்குள்ளும் நுழைந்து, வித விதமான பரிசுச்  சீட்டுகளை வாங்கி சுரண்டிப்பார்க்கலாம். அதிர்ஷ்ட எண் இருந்தால் பலவகை பரிசுத்தொகை கிடைக்கும் மற் றொரு வகை நேஷனல் லாட்டரி; ஐரோப்பிய லாட்டரி. வாரம் தோறும் பலமுறை குலுக்கல்  நடக்கும். நம் எண்  வந்தால் மில்லியன், பில்லியன் பவுன் கூட கிடைக்கும் .

மற்றொரு வகை லாட்டரி POSTCODE LOTTERY போஸ்ட்கோட் லாட்டரி; இதில் டிக்கெட் வாங்கி, உங்கள் பேட்டை போஸ்ட் கோட் (AREA POSTCODE) வந்தால் அதில் முதல், இரண்டு, மூன்று, நான்காவது என்று பரிசுகள் கிடைக்கும் . இந்தியாவில் ஊருக்கு ஊர் பின் கோட் PIN CODE உண்டு; பிரிட்டனில் ஊருக்கு ஊர் போஸ்டகோட் இருக்கும். இந்த முறை இங்கிலாந்தின் ஒருபகுதியான postcode, TS5 7AT பேட்டைக்கு அடித்தது யோகம். அங்கு டிக்கெட் வாங்கிய ஆட்களில் 7 பேருக்கு முதல் பரிசு £379,418. (ரூபாய் கணக்குக்கு 100 ஆல் பெருக்குங்கள் )

அந்த பேட்டையின் பெயர் Teesside டீ சைட் .அது Middlesbrough மிடில்ஸ் ப்ரோ வட்டாரத்தில் இருக்கிறது

Seven people living on Britain Avenue have scooped  each, a total of £2,6million, thanks to playing with the full winning postcode, TS5 7AT.

A total of 572 neighbours shared a £10.2 million prize pot at a special event at Centre Square in Middlesbrough on Saturday, April 1, 2023.

XXXX

நாமும் அந்த ஆரூடக் காரனைப் பார்க்கலாமே என்று நினைத்தேன். அப்போது ஒரு அசரீரி கேட்டது: உன் லக் LUCK தான் உனக்கே தெரியுமே. நீ போன முஹூர்த்தம் அவன் உனக்கு பெரிய நஷ்டம் வரப்போகிறது; ஓம், சூம், மந்திரக் காளி ; ஓடிப் போ என்று சொன்னால் என்னாவது !

வேண்டாண்டா , சாமி; இருப்பதே போதும்;  உடும்பு வேண்டாம்; ஆளை விட்டால் போதும்; நரி இடம்  போனா என்ன, வலம் போனா என்ன, ஆள் மேல் விழுந்து குதறாமல் இருந்தாலே  போதும் என்று பயந்து கொண்டே வந்துவிட்டேன் .

—subham—

TAGS- ஆரூடம், குறி சொல்லுதல், லாட்டரி பரிசு, போஸ்ட் கோட் லாட்டரி , பெண்மணி , பிரிட்டனில்,

Leave a comment

Leave a Reply