Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Kamsa killing Male children; Yoga Maya disapperas.
Bhutaki lst her life
Krishna fighting wit wrestlers
Butter Thief
என்றும் நீல உடை அணிபவன் – பலராமன் ( நீலாம்பரன் )
என்றும் மஞ்சள் உடை அணிபவன் – கிருஷ்ணன் ( பீதாம்பரன் )
மதுப் ப்ரியன் – பலராமன் ( மது அருந்துபவர் )
மாதுப் ப்ரியன் – கிருஷ்ணன் ( கோபியர் பின்னால் சென்றவர் )
வெள்ளைக் காரன் – பலராமன்
கருப்பன் – கிருஷ்ணன்
பனைக் கொடி ஏந்தியவன் – பலராமன்
கருடக் கொடி ஏந்தியவன் – கிருஷ்ணன்
***
ஆழ்வார் பாசுரங்களில் கண்ணனின் லீலைகள் (Krishna Leelas) முக்கிய இடத்தைப் பெறுகின்றன. குறிப்பாகப் பெரியாழ்வார் கண்ணனின் குழந்தைப் பருவ லீலைகளையும், நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் கோபியர் பாவத்திலும் பாடியுள்ளனர். வெண்ணெய் திருடுதல், கோவர்த்தன கிரியைத் தூக்குதல், கம்ச வதம் போன்ற கிருஷ்ண லீலைகள் ஆழ்வார்களால் பாடப்பட்டுள்ளன.
ஆழ்வார் பாசுரங்களில் விவரிக்கப்பட்டுள்ள முக்கிய கிருஷ்ண லீலைகள்:
குழல் ஊதும் கண்ணன்: கண்ணனின் குழலிசையைக் கேட்டு ஆயர்பாடிப் பெண்கள் மயங்குவதைப் பல ஆழ்வார்கள் பாடியுள்ளனர்.
வெண்ணெய் திருடுதல்: தமிழ் வேதம் குறிப்பிடுவது போல, வீடுகளில் வெண்ணெய் உண்டது மற்றும் கோபியர்களின் வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடிய லீலைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
ஆழ்வார்கள் கண்ணனின் லீலைகளை வெறும் கதைகளாகப் பார்க்காமல், அவனது கருணையின் வெளிப்பாடாகவும், பக்தியின் உச்சமாகவும் பாசுரங்களில் அனுபவித்துள்ளனர்.
***
கிருஷ்ணன் கொன்ற அசுரர்கள்
கிருஷ்ணர் அதர்மத்தை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் கம்சன் அனுப்பிய பல அசுரர்களைத் தனது சிறு வயதிலேயே வதம் செய்தார். பூதனை, சகடசுரன், திருணாவர்த்தன், பகாசுரன், அகாசுரன், தேனுகாசுரன், அரிஷ்டாசுரன், கேசி, வியோமாசுரன் மற்றும் நரகாசுரன் ஆகியோர் கிருஷ்ணரால் கொல்லப்பட்ட முக்கிய அசுரர்கள் ஆவர்.
கிருஷ்ணரால் கொல்லப்பட்ட முக்கிய அசுரர்கள்:
பூதனை: கிருஷ்ணனுக்கு விஷப்பால் கொடுக்க வந்த அரக்கி (இவர் அழிவின் அடையாளமாக கருதப்படுகிறார்) Wikipedia.
சகடசுரன்: கம்சனின் கட்டளைப்படி வண்டி வடிவில் வந்து கிருஷ்ணனை நசுக்க முயன்றவன்.
திருணாவர்த்தன்: சூறாவளி வடிவில் வந்து குழந்தையைத் தூக்கிச் சென்ற அசுரன்.
பகாசுரன்: கொக்கு வடிவில் வந்து கிருஷ்ணனை விழுங்க முயன்ற அசுரன் Wikipedia.
அகாசுரன்: மலைப்பாம்பு வடிவில் வந்து தோழர்களை விழுங்கியவன் Wikipedia.
தேனுகாசுரன்: கழுதை வடிவில் வந்து தாலவனத்தில் இருந்த அசுரன்.
அரிஷ்டாசுரன்: காளை வடிவில் வந்து கம்சனால் அனுப்பப்பட்டவன்.
கேசி: குதிரை வடிவில் வந்து வந்த அசுரன்.
வியோமாசுரன்: ஆகாயத்தில் மறைந்து அசுர சக்தி கொண்டவன்.
நரகாசுரன்: சத்யபாமாவின் உதவியுடன் கிருஷ்ணரால் கொல்லப்பட்டவன் (சுதர்சன சக்கரத்தால் இரு துண்டாக்கப்பட்டது)
கம்சன்: கிருஷ்ணனின் தாய்மாமன், இவன் மதுராவில் கொல்லப்பட்டான்.
இவர்கள் தவிர, கம்சன் அனுப்பிய பல அசுரர்களை கிருஷ்ணர் மற்றும் பலராமர் வதம் செய்தனர்
****
Krishna killing Bakasura- Crane Demon
Krishna killing Agasura- Python Demon
Krishna killing Dhenukasura a- Donkey
Demon
Krishna dancing on Kaliya Snake
பெரியாழ்வார் திருமொழி – முதற்பத்து
ஐந்தாம் திருமொழி – உய்யவுலகு
(செங்கீரைப்பருவம்)
பாடல் 4
வானவர் தாம்மகிழ வன் சகட முருள
வஞ்சமுலைப்பேயின் நஞ் சமுது உண்டவனே!*
கானக வல்விளவின் காயுதிரக் கருதிக்
கன்றது கொண்டெறியும் கருநிற என்கன்றே!*
தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்
என்பவர் தாம்மடியச் செருவதிரச் செல்லும்*
ஆனை! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
பொருள்:
விண்ணுலக தேவர்கள் மகிழும் வண்ணம், தீய எண்ணம் கொண்டு (1)சக்கரவடிவில் வந்த சகடாசுரனை தூள் தூளாக நொறுங்கிப் போகும் வண்ணம் உன் பிஞ்சுக் கால்களால் உதைத்தழித்தாய்; வஞ்சக எண்ணம் கொண்டு உனக்குத் தாயமுது கொடுப்பது போல் (2)நஞ்சமுது கொடுக்கத் துணிந்த பூதனை என்னும் அரக்கியின் உயிரைக் குடித்தவனே! காட்டிலிருந்த, வலிமையான விளா மரத்தின் காய்கள் உதிரக் கல்லெறிவது போல்,பசுங் கன்றின் உருவில் உருமாறி வந்த (3)வத்சாசுரன் என்னும் அசுரனை மரத்தில் எறிந்து கொன்ற மைவண்ண தேகங்கொண்ட என் இளங்கன்றே! (4)தேனுகாசுரன், நரகாசுரனின் அண்ணனான, ஐந்து தலைகளைக் கொண்ட (5)முராசுரன் மற்றும் வலிமையும் துணிவும் மிகுந்த சினமெனும் செந்தீயைத் தன்னிடத்தே கொண்ட (6)நரகாசுரன் மற்றும் பல அசுரர்களை எல்லாம் அவர்களுக்கு மரணபயத்தைத் தந்து நடுக்கங்கொள்ளச் செய்து, அழிக்கவல்ல வலிமை மிக்க ஆண் யானை போன்றவனே! ஆயர்கள் போரேறே எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடுக ஆடுகவே.
அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக நாம் கொண்டாடுகிறோம் ;பிரக்யோதிஷ்பூர் என்னும் கிழக்கு இந்திய பகுதியின் மன்னனாக இருந்தவன் நரகாசுரன். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். ஆண்கள் எவராலும் கொல்லப் படக்கூடாது என்ற வரத்தைப் பெறுகிறான் அதன் பிறகு நரகாசுரனின் அட்டகாசம் அதிகரிக்கிறது. 16 ஆயிரம் பெண்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன். தேவர்கள் எல்லோரும் கிருஷ்ணனை சந்தித்தனர். விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர்.
கிருஷ்ணர் களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை தொடங்குகிறது. அப்போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறி பார்த்து தாக்குகிறார். நகராசுகரன் வீழ்கிறான். பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.
***
கம்சனால் அனுபப்பட்ட வத்ஸாசுரன் என்பவன் கிருஷ்ணரைக் கொல்ல வந்தா ன். அவன் கன்றுக் குட்டியாக உருமாறி, கிருஷ் ணர் மேய்த்த கன்றுகளுடன் கலந்து நின்றான் கிருஷ்ணர் அதை அடையாளம் கண்டு கொண்டார். அதன்காலைப் பிடித்து தூக்கி விளா மரத்தில் அடித்தார். வத்ஸாசுரன் மடிந்தான்.
இன்னொரு முறை, ஒரு பெரிய கொக்கின் வடிவில் பகாசுரன் என்பவன் கிருஷ்ணரைக் கொல்ல வந்தான். அதன் அலகுகளைப் பிளந்து, கிருஷ்ணர் கொன்றார். ஒருமுறை, (7)அகாசுரன் என்பவன் விருந்தாவனத்திற்கு வந்தான். ஒரு பாம்பின் வடிவெடுத்து வாயைப் பிளந்தபடி படுத்துக் கொண்டான். கிருஷ்ணரும் அவனது சகாக்களும் பாம்பின் வாயில் புகுந்தனர் ; அதுவும் வாயை மூடியது ;கிருஷ்ணர் தனது உருவத்தை பெரிதாக்கிக் கொண்டே இருந்தார். அகாசுரப் பாம்பு வயிறு கிழிந்து இறந்தது..
Krishna lifting Govardhana Hill.
Krishna killing Horse and Elephant
குன்றினால் குடை கவித்ததும் கோலக்
குரவை கோத்ததுவும் குடமாட்டும்
கன்றினால் விளவு எறிந்ததும் காலால்
காளியன் தலை மிதித்ததும் முதலா
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம்
அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள்குளிர
ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன்
காணுமாறு இனி உண்டெனில் அருளே.
இவ்வடிகள் குலசேகராழ்வார் அருளிய பெருமாள் திருமொழியில் (7-ஆம் திருமொழி) இடம்பெற்றுள்ளன. கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணர் செய்த லீலைகளைப் பாடும் இப்பாசுரம், கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்ததையும், ஆயர்களுடன் குரவைக் கூத்து ஆடியதையும், கன்றைக் கொண்டு விளாமரத்தை வீழ்த்தியதையும், காளியன் தலையில் நடனமாடியதையும் குறிப்பிடுகிறது
ஒரு சமயம் கிருஷ்ணர், யமுனை நதிக்கரைக்கு தனித்துச் சென்றார். அந்த ஆற்றில் (8) காளிங்கன் என்ற நாகம் வசித்தது அதற்கு நூறு தலைகள். அந்தக் கொடிய நச்சுப்பாம்பு, தன் விஷத்தை தண்ணீரில் பரப்பியது. கிருஷ்ணர் தண்ணீரில் குதித்து அவனது தலையில் ஏறி நர்த்த னமாடினார். வலி தாளாமல் மரண ஓலமிடத் துவங்கினான். அப்போது, காளிங்கனின் பத்தினியர் ஓடி வந்தனர். எங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தர வேண்டும், என்றனர். கிருஷ்ணர் அதை ஏற்றார். காளிங்கன் அவரை தன் தலையில் உயர்த்தி நீர்மட்டத்துக்கு மேலே கொண்டு வந்து விட்டது. காளிங்கனின் பத்தினியர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். காளிங்கன் அந்த நதியிலிருந்து வேறு இடத்துக்குச் சென்றான் .
(9)தேனுகாசுரன் கதை
தாளவனம் என்ற காட்டில் ஈச்ச மரங்கள் (பனை மரங்கள்) மிகுதியாக இருந்தன, ஆனால் தேனுகாசுரன் என்னும் கழுதை வடிவிலான அசுரன் தன் அசுர நண்பர்களுடன் அக்காட்டை ஆக்கிரமித்து, அதன் பழங்களை யாரும் உண்ணாதபடி தடுத்து வந்தான் கிருஷ்ண பலராமரின் வருகை: கிருஷ்ணரும் பலராமரும் நண்பர்களுடன் அந்தக் காட்டிற்குச் சென்று, தேனுகாசுரனின் கழுதை வடிவ அரக்கர்களைக் கொன்று, பனைப் பழங்களை உண்டு மகிழ்ந்தனர்.
***
Peethambara Krishna, Neelaambhara Balarama
‘கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.’
ஆண்டாள் திருப்பாவை பாசுரம்- 8
மல்லர்களைக் கொன்ற கிருஷ்ணன்
” மல்யுத்த வீரர்களை த்வம்சம் செய்த கண்ணன்”
கம்சன் தனூர் யாகம் ஒன்று உடனே நடத்தப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து மல்யுத்தப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று ஆணையிட்டான். இந்த விழாவிற்கு கண்ணனுக்கும், பலராமனுக்கும் அழைப்பு விடுத்தான்.(10)சாணூரன், (11)சலன் முதலிய மல்லர்களை அழைத்து கண்ணன், பலராமன் அவர்களை அழைத்துள்ளேன். நீங்கள் அவர்களுடன் மல்யுத்தம்செய்து அவர்களை அழித்துவிட வேண்டும்’ என்று ஆணையிட்டான். அவர்களை கண்ணனும் பலராமனும் கொன்றனர்.
ஆனைகாத்து ஒர் ஆனைகொன்று* அதுஅன்றி ஆயர் பிள்ளையாய்,*
ஆனைமேய்த்தி ஆனெய் உண்டி* அன்று குன்றம் ஒன்றினால்,*
ஆனைகாத்து மைஅரிக்கண்* மாதரார் திறத்து, முன்*
ஆனைஅன்று சென்றுஅடர்த்த* மாயம் என்ன மாயமே?
“ஆனை காத்து ஓர் ஆனை கொன்று” என்பது திருமழிசையாழ்வார் அருளிய திருச்சந்த விருத்தத்தின் 40-வது பாசுர அடி (பாடல் 791). இது கஜேந்திரனைக் (யானை) காப்பாற்ற முதலை வாயிலிருந்து காத்து, கம்சனின் குவலயாபீடம் எனும் யானையைக் கொன்ற கிருஷ்ணனின் மாயாஜால லீலைகளை வியந்து கூறும் பாடல் வரிகளாகும்.
Venugopalan, Flute Master
பாசுரத்தின் விளக்கம்:
ஆனை காத்து: கஜேந்திர ஆழ்வானைக் காத்தது.
ஓர் ஆனை கொன்று: கம்சனின் குவலயாபீடம் என்ற யானையை கொன்றது.
இந்தச் செயல்கள் அனைத்தும் கிருஷ்ணன் செய்த “மாயம்” (அதிசயங்கள்) என்று ஆழ்வார் போற்றுகிறார்.
(12)‘குவலயாபீடம்’ என்னும் போர் யானையின் பாகனை அழைத்து ‘மல்யுத்தம் காணவரும் கிருஷ்ணனையும், பலராமனையும், மல்யுத்த அரங்கு வாசலிலேயே குவலயாபீடத்தினால், மிதித்துக் கொல்ல ஏற்பாடு செய்’ என்றும் கம்சன் கட்டளையிட்டான். கண்ணன் அந்த யானையின் தந்தங்களை உடைத்து அதனைக் கொன்றான். அதன் பின் தயாராக இருந்த மல்யுத்த வீரர்களுடன் போரிட்டு அவர்களையும் த்வம்சம் செய்தான் கண்ணன்.
(13)கம்சன் கதை
கம்சன் கிருஷ்ணரின் தாய்மாமன். கிருஷ்ணரின் தாயான தேவகியின் அண்ணன் தான் இந்த கம்சன். கம்சனின் விதி கிருஷ்ணரால் முடியும் என்ற அசரீரி ஒலித்தது. இதனால் கிருஷ்ணரைக் கொல்ல பல வழிகளில் முயற்சித்தான் கம்சன். கம்சனின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இறுதியாக சானுரா மற்றும் முஷ்டிகா என்னும் மல்யுத்த வீரர்களைக் கொண்டு கிருஷ்ணரைக் கொல்லத் திட்டமிட்டான் கம்சன்.அவர்களையும் வீழ்த்தினான் கண்ணன் .இரண்டு மல்யுத்த வீர்களும் மடிந்தவுடன், யாதவர்களைத் தாக்க படைகளுக்கு உத்தரவிட்டான் கம்சன். கிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சன் கையில் ஒரு வாளோடு கிருஷ்ணரை நோக்கி வந்தான். கிருஷ்ணர் சற்று குனிந்து, கம்சன் மீது குதித்து அவர் முடியை பற்றி இழுத்து பின்புறம் இழுத்தார். இதனால் கம்சன் கையில் இருந்த வாள் கீழே விழுந்தது. கிருஷ்ணர் உடனே அந்த வாளைப் பற்றி, தாமதிக்காமல் கம்சனின் தலையைக் கொய்தார்.
(14)அரிஷ்டாஸுரன் ஒரு க்ரூரமான பெரிய எருதின் வடிவில் கண்ணனையும் பலராமனையும் கொல்லலாம் என்கிற வெறியுடன் வந்தான். அவன் கண்ணனை நோக்கி வேகமாக வர, அவன் கால்களை பிடித்து உயரத்தில் தூக்கி வீசி அவனைக் கொன்றான்.
^^^
வாட மருது இடை போகி* மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு*
ஆடல் நல் மா உடைத்து* ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்*
கூடிய மா மழை காத்த* கூத்தன் என வருகின்றான்*
சேடு உயர் பூம் பொழில் தில்லைச்* சித்ரகூடத்துள்ளானே*3.3.1
உரலில் கட்டப்பட்ட குழந்தை கண்ணன் நெருக்கமான இரண்டு மருத மரங்களின் இடையே
போய் மரங்களை முறித்து இருவரின் சாபம் நீக்கியவனும், கம்சன் அனுப்பிய பயில்வான்களை
கொன்றவனும், நடை பழகுவது போல ஆடி கொண்டு நல்ல பிள்ளையை போல குதிரை
வடிவில் வந்த கேசி என்ற அரக்கனை கொன்றவனும்,
திரண்டு வந்த பலத்த மழையால் பசு மேய்ப்பவர்களுக்கும், பசுக்களுக்கும் ஏற்பட்ட
துன்பத்தை போக்குவதற்காக மலையை குடையாக எடுத்தவன் கூத்தன் என சொல்லும்படியாக
என் முன்னே நடனமாடி கொண்டே வருகின்றான். அப்பெருமான் ஓங்கிய பூஞ்சோலைகள்
சூழ்ந்த சிதம்பரம் எனப்படும் தில்லை சித்ரகூடத்துள்ளானே!.
(15)கேசி என்னும் அரக்கன் ஒரு பெரிய குதிரை வடிவிலே வந்தான். அவன் வாயைப் பிடித்து, இரண்டாகப் பிளந்து அவனைக் கொன்றான். இதை ஆழ்வார்கள் பலரும் அனுபவித்துள்ளார்கள். பொய்கை ஆழ்வார் தன் முதல் திருவந்தாதியில் “மா வாய் பிளந்து” என்றும் நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “துரங்கம் வாய் பிளந்தானுறை தொலைவில்லிமங்கலம்” என்றும் குலசேகர ஆழ்வார் தன் பெருமாள் திருமொழியில் “மாவினை வாய் பிளந்து உகந்த மாலை” என்றும் ஆண்டாள் தன் திருப்பாவையில் “மா வாய் பிளந்தானை” என்றும் , திருமங்கை ஆழ்வார் தன் திருநெடுந்தாண்டகத்தில் “மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா ” என்றும் பாடிப் போற்றினார்கள் துரங்கம் என்பதும் மா என்பதும் குதிரையைக் குறிக்கும் சொற்கள்.
Calf demon killed
(16) கம்ஸன் அனுப்பிய (16)வ்யோமாஸுரன் என்பவன் கண்ணன் இடைப்பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் தானும் ஒரு இடைப்பிள்ளை வேடத்தில் வந்து ஒவ்வொரு பிள்ளையாகக் கொண்டு போய் ஓரிடத்தில் மறைத்து வைத்துக் கடைசியைல் கண்ணனைக் கொல்லப் பார்த்தான். இதை உணர்ந்த கண்ணன் அந்த இடையன் வேடத்தில் இருந்த யோமாஸுரனையும் கொன்றான்.
***
தூசு போன்ற ரூபத்தில் செயல்படும் (17) திருணாவர்த்தன் என்ற அசுரனை கம்சன் அனுப்பினான். யசோதை கண்ணனை படுக்கையில் கிடத்திவிட்டு வேலை செய்தாள். அந்த நேரத்தில், பயங்கரமான புழுதியுடன் சூறாவளி காற்று ரூபத்தில் திருணாவர்த்தன் வந்து குழந்தையை எடுத்துச் சென்றான். திருணாவர்த்தன் ஆகாயத்தில் உயரே தூக்கிச் செல்லும்போது, கிருஷ்ணர் தனது எடையை அதிகமாக்கினார். எடையைத் தாங்க முடியாத அசுரன், இறுதியில் கீழே விழுந்து உயிர் துறந்தான். கிருஷ்ணர் பத்திரமாகக் கோகுலம் திரும்பினார்.
***
பாகவதத்தில் (18) ப்ராலாம்பாசுரன் கதை
கம்சன் அனுப்பிய ப்ராலாம்பாசுரன் இடையன் போல் வேடமிட்டு வந்தான்.கிருஷ்ணனும் பலராமனும் தோழர்களுடன் விளையாடும்போது, ப்ராலாம்பாசுரன் அவர்களுடன் சேர்ந்து, தானும் அவர்களோடு விளையாடினான்.
அவர்கள் ஒரு விளையாட்டை விளையாடினார்கள் – ஒருவரை ஒருவர் தூக்கிச் சுமக்க வேண்டும். தோற்றவர்கள் வென்றவர்களைத் தூக்கிச் சுமக்க வேண்டும்.இந்த விளையாட்டில், ப்ராலாம்பாசுரன் பலராமனைத் தூக்கிக் கொண்டு வெகுதூரம் ஓடினான்.
பலராமன், அவனுடைய உண்மையான அசுர வடிவத்தைக் கண்டு, தன் சக்தியால் அவனைக் கொன்றார். ப்ராலாம்பாசுரன் தலை பிளந்து, அந்த இடத்திலேயே மடிந்தான்.
***
சிசுபாலன் கதை –
(19).சிசுபாலன் சேதி நாட்டு மன்னன், கிருஷ்ணனின் அத்தை மகன் . பிறக்கும்போதே நான்கு கைகள், மூன்று கண்களுடன் பிறந்த இவன், இந்திரப்பிரஸ்தத்தில் யதிஷ்டிரரின் ராஜசூய யாகத்தின்போது கிருஷ்ணரை அவமதித்ததால், சக்ராயுதத்தால் வதம் செய்யப்பட்டான்.
சிசுபாலன் பிறந்தபோது விசித்திரமான தோற்றத்துடன் (4 கைகள், 3 கண்கள்) இருந்தான். எவனொருவன் இவன் மடியில் அமரும்போது இந்த கூடுதல் அம்சங்கள் மறைகின்றனவோ, அவனாலேயே இவன் இறப்பு நேரிடும் என்று அசரீரி கூறியது.
கிருஷ்ணர் சிசுபாலனை மடியில் எடுத்தவுடன், அவனது கூடுதல் கைகள் மற்றும் கண் மறைந்தன. சிசுபாலனின் தாய் (கிருஷ்ணனின் அத்தை) தன் மகனை கொல்லக்கூடாது என்று வேண்ட, கிருஷ்ணர் சிசுபாலனின் நூறு தவறுகளை மன்னிப்பதாக வாக்குறுதி அளித்தார்.
சிசுபாலன், கிருஷ்ணரை எப்போதும் வெறுத்து வந்தான். பாண்டவர்களின் ராஜசூய யாகத்தின்போது, கிருஷ்ணருக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாத சிசுபாலன், கிருஷ்ணரை அவதூறாகப் பேசினான்.அவனது நூறாவது அவதூறு முடிந்தவுடன் அடுத்த முறை கேலி செய்தபோது , கிருஷ்ணர் தனது சக்ராயுதத்தால் சிசுபாலனின் தலையை வெட்டினார்.
***
(20)தந்தவக்ரன் கதை
தந்தவக்ரன், ஜராசந்தனின் கூட்டாளியும், சிசுபாலனின் உறவினரும் ஆவான். கிருஷ்ணனின் பகைவன் ஆவான். தருமனின், இந்திரப்பிரஸ்த ராஜசூய யாகத்தில் கலந்து கொள்ள பலராமனுடன் கிருஷ்ணர் சென்ற நேரத்தில், தந்தவக்ரன், துவாரகையை முற்றுகையிட்டுத் தாக்கினான். மீண்டும் துவாரகையை தந்தவக்ரன் தாக்கிய போது கிருஷ்ணனின் சக்கராயுதத்தால் மாண்டான்.
***
(21). கால யவனன் ( கறுப்பு நிற யவனர் )
ஒரு அசுரர் மன்னன் ; கிருஷ்ணனுக்கு மிகவும் தொல்லை கொடுத்து அவரைத் துவாரகைக்கு விரட்டியவன் ; உத்தரப்பிரதேசத்திலுள்ள மதுராவிலிருந்து குஜராத்தில் உள்ள துவாரகைக்குப் போகச் செய்தவன் ; ஆயினும் அவனைக் கிருஷ்ணன் தந்திரமாகத் தீர்த்துக் கட்டினார்
மாந்தாதாவின் மகனான முசுகுந்தன் என்னும் சோழன் இந்திரனின் தலைநகரான அமராவதியைக் அசுரரிடமிருந்து காத்தான் .
இந்த முசுகுந்தனுக்கு ஒரு வரம் கிடைத்தது; நீண்ட தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் இவரை யாரவது எழுப்பினால், யார் முகத்தில் விழிக்கிறாரோ அவர் எரிந்து போவார் ; கிருஷ்ணனை கால யவனன் விரட்டிக்கொண்டு வரவே , முசுகுந்தன் தூங்கிய குகையில் கிருஷ்ணன் நுழைந்து ஒளிந்துகொள்கிறார் உள்ளே நுழைந்த காலயவனன் முசுகுந்தனை கிருஷ்ணன் என்று தவறாக எண்ணி எழுந்திரு என்று உதைக்கிறார். தூக்கத்தில் இருந்து எழுந்த முசுகுந்தன் , காலயவனனனைப் பார்க்கவே அவன் எரிந்து அழிகிறான்.
***
ஸ்வாகதம் க்ருஷ்ணா –ஊத்துக்காடு வேங்கட சுப்ப ஐயர் பாடல்
பல்லவி
ஸ்வாகதம் க்ருஷ்ணா – வரவேண்டும் க்ருஷ்ணா.
சரணாகதம் க்ருஷ்ணா – பணிகிறேன் க்ருஷ்ணா
இஹ. – இங்கு
அனுபல்லவி
போகதாப்த சுலபா – அன்பு ஆர்வம் அல்லது பக்தியினால் அவனை அடைவது சுலபம் .
ஊனத் தசை தோல்கள் சுமந்த காயப் பொதி … அழிந்து போகும் தன்மையுடைய மாமிசம், தோல்கள் (இவைகளைச்) சுமக்கும் உடற்சுமை,
மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை … மாயம் மிக்கதும், ஊசிப்போவதும், கடைசியில் சுடப்படுவதும், நாறுவதுமான சிறுகுடிலாகிய இந்த உடல்
மறை நாலும் ஓதப் படும் நாலு முகன் த(ன்)னால் உற்றிடும்கோலம் எழுந்து … நான்கு வேதங்களால் ஓதப்படுகின்ற நான்முகன் பிரமனால் ஏற்படுத்தப்பட்ட அழகுடன் உருப்பெற்று எழுந்து,
அடி வருடி மணந்துபுணர்ந்ததுவும் … அவளது திருவடியை வருடி,
மணம் செய்து, அவளைக் கலந்து நின்றதையும்,
பல விஜயமும் அன்பின்மொழிந்துமொழிந்து இயல்
மறவேனே … மேலும் பல வெற்றிச் செயல்களையும் அன்புடனே
பலமுறை சொல்லிச் சொல்லி போற்றி, உன் பெருமையை என்றும் நான் மறக்கமாட்டேன்.
* பறிதலை என்பது:
சமணர்களில் ஒருவர் குருவாக ஆகும்போது மற்ற குருமார், இப்போது துக்கம் பிற்பாடு சுகம் என்ற மந்திரத்தைச் சொல்லி, அவரது தலைமயிர்களை ஒவ்வொன்றாகப் பறிக்கும் வழக்கம்.
** சலிகை என்றால் செல்வாக்கு – முருகனின் சலிகை முதலிய 16 அருமையான லக்ஷணங்களை இங்கு தொடங்கி விஜயமும் வரை வெகு அழகாக அருணகிரிநாதர் வரிசைப் படுத்தியது மிக்க இன்பம் தருகிறது.
***
சிவனுக்குப் பிடித்த இலைகள் – வில்வம், விளா, நாவல் ; பூக்கள் கொன்றை, மாதுளம் பூ
முந்தைய திருப்புகழ் பாடல்களில் அருகம் புல் முதலியவற்றையும் சேர்த்துள்ளார்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம். ஓர் ஆய்வு – 7
(ஆர், சேஷாத்ரிநாதன்)
சிவஸ்துதி
அடுத்து சிவபெருமானைத் துதிக்கிறார் துளசிதாசர்.
मुक्ति जन्म महि जानि ग्यान खान अघ हानि कर।
जहँ बस संभु भवानि सो कासी सेइअ कस न ॥
எங்கு சிவபெருமானும், பார்வதியும் வசிக்கின்றனரோ, அந்தக் காசி என்ற க்ஷேத்ரம் முக்தியின் பிறப்பிடம். ஞானத்தின் சுரங்கம். பாபங்களை அழிப்பது. அதில் ஏன் வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடாது?. இங்கு காசியின் மகத்துவத்தைச் சொல்கிறார்.
जरत सकल सुर बृंद बिषम गरल जेहिं पान किय।
तेहि न भजसि मन मंद को कृपाल संकर सरिस॥
“எந்த ஆலகால விஷம் கண்டு தேவர்கள் கூட்டம் பொசுங்கிக் கொண்டிருந்ததோ, அதை எவர் அருந்தி விட்டாரோ, ஏ அசட்டு மனமே! அந்தச் சங்கர பகவானை ஏன் பற்ற மாட்டேன் என்கிறாய்? அவர் போல் கிருபை செய்பவர் யார்?” என்கிறார் துளசிதாசர்/
பாற்கடலைக் கடைந்தபோது கொடிய ஆலகால விஷம் வெளிவந்தது. அந்த விஷத்தின் சக்தியை தேவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். அந்த விஷத்தைச் சிவனே அருந்தினார் என்பது வரலாறு. ஸ்ரீமத் பாகவதம் எட்டாவது ஸ்கந்தம் ஏழாவது அத்யாயத்தில் கீழ்க்கண்ட ஸ்லோகங்கள் சிவனே சொல்வது போல வருகின்றன
आसां प्राणपरीप्सूनां विधेयमभयं हि मे ।
एतावान् हि प्रभोरर्थो यद्दीनपरिपालनम् ॥ ३८॥
तस्मादिदं गरं भुञ्जे प्रजानां स्वस्तिरस्तु मे
तद्विषं जग्धुमारेभे प्रभावज्ञान्वमोदत ॥ ४१
“இவர்கள் உயிர் பிழைக்க விரும்புகிறார்கள்; எனவே, அவர்களுக்கு அபயத்தை அளிப்பது என் கடமை. எனவே, இந்த விஷத்தை நான் குடிக்கிறேன். என் குடிமக்களுக்கு நன்மை உண்டாகட்டும்.அந்த விஷத்தைக் குடிக்க நான் முனைந்தேன்; என் சக்தியும் ஞானமும் அதில் மகிழ்ந்தன.” ஈசனின் (பரமாத்மாவின்) உண்மையான நோக்கம் இதுவே — துன்பத்தில் உள்ளவர்களை பாதுகாப்பது.
பக்தர்களுக்காக விஷத்தையே அருந்த முன்வந்த அந்த சிவபெருமானின் மீது ஏன் பற்று வைப்பதில்லை? என்று தன்னையே நொந்து கொள்கிறார் துளசிதாசர்.
சிவ பெருமான் தேவர்களுக்காக நஞ்சுண்ட விஷயம் மூன்றாம் திருமுறையில் திருஞானசம்பந்தரின் திருவுச் சாத்தனம் என்ற திருப்பதிகத்தில் வருகிறது. மேலும் இதில் இராமாயணம் பற்றிய செய்தியும் இடம் பெறுகிறது..
நீரிடைத் துயின்றவன்
தம்பிநீள் சாம்புவான்
போருடைச் சுக்கிரீ
வன்னநு மான்றொழக்
காருடை நஞ்சுண்டு
காத்தருள் செய்தஎம்
சீருடைச் சேடர்வாழ்
திருவுசாத் தானமே.
பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலின் அவதாரமான இராமனும் இலக்ஷ்மணனும் ஜாம்பவான், சுக்ரீவன் ஹனுமான் ஆகியோரும் தொழுது வணங்கக் கருநிறம் நஞ்சை உண்டி காத்தருள் செய்த எம் பெருமைக்குரிய, எங்களை ஏவல் கொள்ளும் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.
மீண்டும் துளசிதாசர்
சிவ பெருமானின் பெருமையைச் சொல்லிவிட்டு காசியைப் பற்றியும் பாடினார். காசியைப் பற்றி வினய பத்ரிக என்ற நூலில் ஒன்பது சுலோகங்களில் விரிவாகப் பாடியுள்ளார்.
सइअ सहित सनेेह देह भरि,कामधेनु कलि कासी।
समनि सोक संताप पाप रूज, सकल-सुमंगल-रासी।1।
मरजादा चहुँ ओर चरनबर, सेवत सुरपुर-बासी।
तीरथ सब सुभ अंग रोम सिवलिंग अमित अविनासी।2।
अंतरऐन ऐन भल, थन फल, बच्छ बेद-बिस्वासी।
गलकंबल बरूना बिभा िजनु, लूम लसति, सरिताऽसि।3।
दंड पानि भैरव बिषान,तलरूचि-खलगन-भयदा-सी।
लोलदिनेस त्रिलोचन लोचन, करनघंट घंटा-सी।4।
मनिकर्निका बदन-ससि सुंदर, सुसरि-सुख सुखमा-सी।
स्वारथ परमारथ परिपूरन,पंचकोसि महिमा-सी।5।
बिस्वनाथ पालक कृपालुचित7 लालति नित गिरजा-सी।
सिद्धि, सची, सारद पूजहिं मन जोगवति रहति रमा-सी।
पंचााच्छरी प्रान7 मुद माधव7 गब्य सुपंचनदा-सी।
ब्रह्म-जीव-सम रामनाम जुग, आखर बिस्व बिकासी।7।
चारितु चरिति करम कुकरम करि, मरत जीवगन घासी।
लहत परम पद प्य पावन, जेहि चहत प्रपंच- उदासी।8।
कहत पुरान रची केसव निज कर-करतूति कला -सी।
तुलसी बसि हरपुरी राम जपु, जो भयो चहै सुपासी।9।
காசி (வராணசி) என்பது ஞானமும்) அன்பும் (ஸ்நேஹ) நிறைந்த உடலாக உள்ளது. கலியுகத்தில் காமதேனு (எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும் பசு) போன்றது. இது துன்பம், வேதனை, பாபம், நோய் ஆகியவற்றை அழித்து, அனைத்து நன்மைகளின் குவியலாக உள்ளது.. காசியின் எல்லைகள் நான்கு திசைகளிலும் புனித எல்லைகளால் சூழப்பட்டுள்ளன. தேவர்கள் இதை வணங்குகின்றனர். காமதேனுவின் ஒவ்வொரு ரோமமும் சிறந்த தீர்த்தமாகவும், உடலின் அங்கங்கள் அளவில்லாத அழியாத சிவலிங்கங்களாகவும் உள்ளன.
காசி நகரம் — கலியின் காமதேனு!
பாவம் பறந்தது, புனிதம் பரந்தது,
சிவனும், பக்தனும் ஒன்றாய் வாழும்
தர்மத்தின் தீபம் — காசி!
———–
மணிகர்ணிகா — மோட்ச வாசல்,
விஸ்வநாதர் — பரம் பாதுகாவலர்,
பைரவர் — பயம் நீக்கும் வீரன்,
பஞ்சகோசி — பரமார்த்த யாத்திரை!
————-
வேதம் பேசும் ஒலி — ராம நாமம்,
பிரம்மம் வாழும் ஒளி — காசி நாமம்,
சந்திர முகம் போல சாந்தம்,
அக்னி போல சுத்தி — காசி!
———
துளசி சொன்னான் — “இங்கே வாழ்ந்தால்
மாயை நீங்கும், பரம் பதம் கிடைக்கும்!”
அந்த நகரம் — நாமத்தின் நிழல்,
அழிவற்ற ஆனந்தத்தின் நிலம்!
இங்கு ஒரு கேள்வி எழலாம் . கிஷ்கிந்தா காண்டத்தில் காசிக்கு என்ன வேலை? இரண்டிற்கும் இடையே வெளிப்படையான தொடர்பு இல்லை. காசி என்பது ஒரு நபருக்கு முக்தி வழங்குவது போன்ற ஆன்மீகத் தகுதியை வழங்கும் ஏழு புனிதத் தளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது., அந்தப் பட்டியலில் காசி நாலாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அயோத்தி உள்ளது. கிஷ்கிந்தா காண்டம் இராமாயணத்தில் நான்காவது இடம் என்பதலால் புனிதத்துவம் மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் காசி அதே நாலாவாது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த ஏழு புனிதத் தளங்களாவன
யுத்தகாண்டத்தில் ‘நராந்தக வதம்’ என்ற அறுபத்தொன்பதாவது அத்தியாயத்தில் அதிகாயன் உள்ளிட்ட ராவணனது மூன்று புதல்வர்களும் பிரம்மாவிடமிருந்து வரம் பெற்றது பற்றிய ஒரு குறிப்பைக் காண்கிறோம்.
யுத்தத்தில் கும்பகர்ணன் வதம் செய்யப்பட்டதைக் கண்ட ராவணன் பலவாறாகப் புலம்பித் தவித்தான். அப்போது ராவணனைப் பார்த்து திரிசிரஸ், “எங்களது நடுத்தந்தை இறந்து விட்டார். சாமான்யன் போல வருந்த வேண்டாம். தங்களுக்கு பிரம்மதேவரால் அளிக்கப்பட்ட சக்தியாயுதம் இருக்கிறது. கவசமும், பாணமும், வில்லும், ரதமும் உள்ளன. அதனால் ராமனைக் கொல்வீராக! மன்னா! தாங்கள் இருங்கள், நான் போருக்குச் சென்று வருகின்றேன். என்னால் ராமன் கொல்லப்படுவான்” என்று வீரமொழி புகன்றான்.
திரிசிரஸின் சொல்லைக் கேட்டு தேவாந்தகனும், நராந்தகனும், அதிகாயனும் உற்சாகம் அடைந்தனர்.
இவர்களைப் பற்றிய வால்மீகி முனிவரின் வர்ணனையில் பல விஷயங்களை அறிகிறோம்.
“ராவணனின் புதல்வர்களான அவர்கள் இந்திரனுக்கொப்ப வீரியம் படைத்தவர்கள். எல்லோரும் ஆகாயத்தில் சஞ்சரிப்பவர்கள். எல்லோரும் மாயா நிபுணர்கள். அனைவரும் தேவர்களின் செருக்கை அழித்தவர்கள். யாவரும் போரில் வெல்லுதற்கரியவர்கள். மேலான பலம் பெற்றவர்கள்.” இப்படி இன்னும் பலவாறாக அவர்கள் புகழப்படுகின்றனர்.
இதில் அதிகாயன் உள்ளிட்டோர் பல வரங்களைப் பெற்ற செய்தியைக் காண்கிறோம். யாரால் எப்போது எதற்காக அவர்கள் வரங்கள் பெற்றனர் என்ற விவரம் தரப்படவில்லை. ஆனால் இவர்கள் மூவரும் வரம் பெற்றவர்கள் என்பதை மட்டும் வால்மீகி முனிவர் குறிப்பிடுகிறார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Words beginning with letter K continues…………………………….Tamil Version கே என்னும் ஆங்கில எழுத்தில் துவங்கும் சொற்கள்
இதன் ஆங்கில வடிவம் நேற்று பதிவிடப்பட்டது.
***
கபந்தன்
கபந்தன் அல்லது கவந்தன் (Kabandha) (कबन्ध,) கால்கள், கழுத்து, தலையும் அற்ற முண்டமும், நீண்ட கைகளும், வயிற்றில் ஒற்றைக் கண்ணும், அகண்ட வாயுடன் கூடிய ஒரு இராட்சசன். இராமாயணக் காவியத்தில் ஆரண்யகாண்டத்தில் கூறப்படும் இந்த அரக்கனை ராமன் கொல்கிறான். அப்போது அவன் சாபம் ஒன்றிலிருந்து விடுதலை பெற்றதற்கு நன்றி தெரிவித்துவிட்டு சுக்ரீவனுடன் நட்பு கொள்ளுமாறு சொல்லிவிட்டு இறக்கிறான்;
போர்க்களத்தில், இந்திரனுடைய கோபத்தின் விளைவாக இந்த உருவத்தை அடைந்தேன்; பிரம்மாவைக் குறித்து கடுமையான தவத்தை மேற்கொண்டேன். அவர் எனக்கு வரமாக நீண்ட ஆயுளைத் தந்தார். இந்திரனைப் போருக்கு அழைத்தேன். “போரில் வஜ்ரா யுதத்தால், என் தலை, உடலின் நடுப்பகுதியை அடைந்தது; இரு முழங்கால்களும் உடலுக்குள் புதைந்து போயின!. ‘பிரம்ம தேவரின் வரம் உண்மையாக இருக்கட்டும்’ என்று கூறி என்னை விட்டு விட்டார் இந்திரன்.” என்றான் கபந்தன்.
வால்மீகி அப்போது அவன் ஆறு விஷயங்களையும் சொன்னதாக எழுதி இருக்கிறார் :
ஒன்றை அறியும் விஷயத்தில் ஆறு பிரமாணங்கள் உண்டு ; எவை?
பிரத்யக்ஷம் – நாமே நேரில் காண்பது
அனுமானம் – தெரிந்த விஷயங்களைக் கொண்டு இதர தீர்மானங்களை அல்லது முடிவை அடைதல்
உபமானம் – ஒன்றை உபமானமாகக் கொண்டு அதன் மூலம் தெளிதல்
சப்தம் – வேதம் முதலிய சப்தங்களைக் கொண்டு அறிதல்
அனுபலப்தி – காணாமையால் இல்லை என்று அறிதல்
அர்த்தாபத்தி – பார்த்தவைகள், கேட்டவைகளைக் கொண்டு மற்றவைகளை ஊகித்தல்
வானில் தோன்றும் வால் நட்சத்திரம், சூரிய சந்திரனில் தோன்றும் கரும் புள்ளிகளுக்கும் இதே பெயர்தான் என்று வராஹமிஹிரர் பிருஹத் சம்ஹிதையில் கூறியிருக்கிறார்.
***
கச்ச (தேவயானி )
தேவயானி என்ற தலைப்பில் முன்னரே விவரம் உள்ளது .
***
கத்ரு
நாகர்களின் தாய்;
காஸ்யப ரிஷிக்கு கத்ரு, வினதா என்று இரண்டு மனைவிகள்; பாம்புகளின் தாயார் கத்ரு; பாம்புகளின் எதிரியான கருடன் களுக்குத் தாயார் வினதா; இருவருக்கும் இடையே நிகழந்த பந்தயத்தில் வினதா தோற்று அடிமை ஆனாள்;
இதோ அந்தக் கதை:
காஸ்யப ரிஷிக்கும் வினதாவுக்கும் மகனாக கருடன் பிறந்தார். அவருடைய அண்ணன் பெயர் அருணன் அவளுக்கும் கத்ருவுக்கும் நடந்த போட்டியில் வினதா தோற்றுப்போகவே அடிமையானாள்;
இந்திரனின் உச்சைச்சிரவமென்னும் குதிரையின் நிறம் குறித்து, கத்ரு கேட்டதற்கு, அதன் நிறம் வெண்மை என வினதை சொன்னாள்; கத்ரு அதன் நிறம் கருமை என்றாள்.
குதிரையின் சரியான நிறம் குறித்த போட்டியில் தோற்றவர், வென்றவர்க்கு அடிமை ஆகவேண்டும் என்பது நிபந்தனை. கத்ரு போட்டியில் வெல்ல வேண்டி ஆயிரக்கணக்கான கருநாகங்களை அழைத்து, உச்சைச்சிரவம் எனும் இந்திரனின் தேவலோக குதிரையின் உடலைச் சுற்றிக் கொள்ளுங்கள் என ஆணையிட, அவ்வாறே கருநாகங்கள் உச்சைச்சிரவம் என்ற வெண் குதிரைச் சுற்றிக் கொண்டன ;குதிரை பார்ப்பதற்கு கருநிறமாக மாறியது.
போட்டியில் தோற்றுப்போன , வினதை தன் குழந்தைகளான கருடன் மற்றும் அருணன் உடன் நாகர்களின் தாயான கத்ருவுக்கு அடிமையானாள். அவளை விடுவிக்க அவளுடைய மகன் கருடன் அமிர்தத்தின் ஒரு பகுதியை சிறிய தாய்க்கு கொண்டுவந்து கொடுத்தான் ; அவள் விடுதலை ஆனாள்.
***
கைகேயி
கேகய நாட்டு மன்னன் யுதாஜித்தின் மகள் ; தசரதனின் நான்கு புதல்வர்களில் பரதனின் தாயார்; தசரதனின் மூன்று மனைவிகளில் இளையவள் ; தேவாசுர போரில் தசரதனுக்கு உதவியதால் அவர் மனம் மகிழ்ந்து இரண்டு வரங்களைக் கொடுத்தார் ; கூனி என்ற கூன் முதுகுக் காரி ராமனின் மீது கோபம் கொண்டு தீய அறிவுரைகளை வழங்கவே கைகேயி மனம் மாறுகிறாள்; ராமர் பாட்டாபிஷேக செய்தியைச் சொல்ல தசரதன் வருகிறார். கைகேயி கோபத்தோடு இருப்பதை பார்த்து அவளை சமாதானம் செய்ய, ‘ராமன் பேரில் ஆணையாக நீ எது கேட்டாலும் தருகிறேன்’ என்று வாக்களிக்கிறார்.
கைகேயி, தேவாசுர யுத்தத்தில் அவர் உயிரைக் காப்பாற்றிய போது, தனக்கு அவர் அளித்த இரண்டு வரங்களை நினைவூட்டி, ஒரு வரத்திற்கு ‘ராமனுக்கு பதிலாக பரதனுக்கு பட்டம் சூட்ட வேண்டும். இரண்டாவது வரத்திற்கு ராமன் பதினான்கு வருடங்கள் காட்டிற்கு போக வேண்டும்’ என்று கேட்கிறாள். இதைக் கேட்ட தசரதன் சிறிது நேரத்தில் இறந்துவிடுகிறார் . அவர் இறந்த பின்னரும் கைகேயி உயிர்வாழ்ந்து பின்னர் ராமனின் அன்பைப் பெறுகிறாள் .
***
கைலாஷ் , கயிலாயம்
இமயமலையில் உள்ள சிவ பெருமானின் உறைவிடம் ; இந்துக்களுக்கும் பெளத்தர்களுக்கும் புனிதமான மலைச் சிகரம் ; திபெத் என்னும் நாட்டினை சீனா கைப்பற்றியதால் இப்போது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் சென்று தரிசிக்கின்றனர் வெள்ளி மலையாகவும் சூரிய ஒளியில் தங்கம் போல ஜொலிக்கும் பொன் மலையாகவும் விளங்குகிறது அருகிலுள்ள மானஸ சரோவர் ஏரிப் பகுதியில் கங்கை, சிந்து பிரம்மபுத்ரா நதிகள் உற்பத்தியாகின்றன ; கயிலை மலையைத் தூக்க ராவணன் முயன்று, சிவனால் நசுக்கப்பட்டு கதறி அழுத செய்தியைத் தேவாரப் பாடல் முழுதும் காணலாம்.
21778 அடி உயரம் கொண்டது இந்த தெய்வீக சிகரம். இதைச் சுற்றி வரும் பாதை 52 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
இந்த தலத்திற்கு திருஞானசம்பந்தர் இரு பதிகங்களையும் திருநாவுக்கரசர் மூன்று பதிகங்களையும் சுந்தரர் ஒரு பதிகமும் அருளி உள்ளனர். அருணகிரிநாதர் ஆறு திருப்புகழ் பாடல்களைப் பாடிப் போற்றியுள்ளார் .
***
கால / ம்
நேரம் என்ற பொருளும் யமன் என்ற பொருளும் உண்டு
இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லினை சங்க இலக்கியம் மற்றும் திருக்குறள் முழுதும் காணலாம் . மகரிஷி, பெண்கள் பெயராகவும் வந்திருப்பதை புராண இதிகாசங்களில் காண முடிகிறது .
***
காலநேமி
திருமாலால் கொல்லப்பட்ட அரக்கன்; ‘காலச்சக்கரம்’ அல்லது ‘காலத்தை வென்றவன்’ என்றும் பொருள்.
இன்னும் ஒரு பொருள்:
மாரீசனின் மகன், ராவணனின் தந்திரமான மந்திரிகளில் ஒருவர். இராமாயண யுத்தகாண்டத்தில், இலட்சுமணனுக்குத் தேவையான சஞ்சீவினி மூலிகையை எடுத்துவர ஹனுமன் செல்லும்போது, அவரைத் தடுத்து நிறுத்த ராவணனால் அனுப்பப்படுகிறார். ஒரு முனிவர் போல வேடமிட்டு, ஆசிரமம் அமைத்து, ஹனுமனை ஆசீர்வதிப்பது போல் நடித்து, நேரத்தைக் கடத்த முயற்சித்தார். ஹனுமன் உண்மையை அறிந்து, காலநேமியின் சூழ்ச்சியை முறியடித்து, அவரை வதம் செய்தார்.
ஆரணிய காண்டத்தில் அகத்தியப் படலத்தில் வரும் ஒரு பாடலைக் காண்போம்:
சூர் அறுத்தவனும் சுடர் நேமியும்
ஊர் அறுத்த ஒருவனும் ஓம்பினும்
ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்
வேர் அறுப்பென் வெருவன்மின் நீர் என்றான்
பொருள்:-
சூர் அறுத்தவன் – முருகன்
சுடர் நேமி – திருமால்
ஊர் அறுத்தவன் – சிவன்
சூரபதுமனைக் கொன்ற முருகனும், காலநேமியைக் கொன்ற ஒளிமிகுந்த சக்ராயுதம் ஏந்திய திருமாலும், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான ருத்திரனும், அவ்வரக்கருக்குத் துணையாக வந்து காத்தாலும், எந்த அரக்கர் பாவம் செய்தவர்களோ, அவர்களை அடியோடு அழிப்பேன்; எனவே நீங்கள் அஞ்ச வேண்டாம் என்றான் ராமன்.
***
கால யவனன் ( கறுப்பு நிற யவனர் )
ஒரு அசுரர் மன்னன் ; கிருஷ்ணனுக்கு மிகவும் தொல்லை கொடுத்து அவரைத் துவாரகைக்கு விரட்டியவன் ; உத்தரப்பிரதேசத்திலுள்ள மதுராவிலிருந்து குஜராத்தில் உள்ள துவாரகைக்குப் போகச் செய்தவன் ; ஆயினும் அவனைக் கிருஷ்ணன் தந்திரமாகத் தீர்த்துக் கட்டினார்
மாந்தாதாவின் மகனான முசுகுந்தன் என்னும் சோழன் இந்திரனின் தலைநகரான அமராவதியைக் அசுரரிடமிருந்து காத்தான் என்றும் அதற்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் காவல் பூதமும் ஐவகை மன்றமும் அனுப்பிவைத்தான் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது (5-65/67; 6-7/17)
இந்த முசுகுந்தனுக்கு ஒரு வரம் கிடைத்தது; நீண்ட தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் இவரை யாரவது எழுப்பினால், யார் முகத்தில் விழிக்கிறாரோ அவர் எரிந்து போவார் ; கிருஷ்ணனை காலயவனன் விரட்டிக்கொண்டு வரவே , முசுகுந்தன் தூங்கிய குகையில் கிருஷ்ணன் நுழைந்து ஒளிந்துகொள்கிறார் உள்ளே நுழைந்த காலயவனன் முசுகுந்தனை கிருஷ்ணன் என்று தவறாக எண்ணி எழுந்திரு என்று உதைக்கிறார். தூக்கத்தில் இருந்து எழுந்த முசுகுந்தன் , காலயவனனனைப் பார்க்கவே அவன் எரிந்து அழிகிறான்.
புறநாநூறு சிலப்பதிகாரம் முழுதும் மாந்தாதா, முசுகுந்தன், சிபிச் சக்ரவர்த்தி ஆகியோரை சோழர்களின் முன்னோராக கூறுவதால் சோழர்கள் ஆதி காலத்தில் வடமேற்கு இந்தியாவிலிருந்து வந்ததும் உறுதியாகிறது; இந்தப் பெயர்கள் அனைத்தும் சம்ஸ்க்ருதத்தில் இருப்பதும் இதை உறுதி செய்கிறது ; இவ்வகையில் கால யவனர் – முசுகுந்தன் கதை முக்கியத்துவம் பெறுகிறது. இவன் கிருஷ்ணனின் எதிரியான ஜராசந்தனாக இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.
***
கல்ஹணர்
காஷ்மீரின் புகழ்பெற்ற ஸம்ஸ்க்ருத கவிஞர் கல்ஹணர்; இவரை வெள்ளைக்கார்கள் மெத்தப் புகழ்வர். புராணங்களில் 140 தலைமுறை மன்னர்களின் பெயர்கள் இருந்தாலும் வருஷம் குறிப்பிடவில்லை. கல்ஹணர்தான் முதல் முதலில் வருஷத்தைக் குறிப்பிட்டு வரலாறு எழுதினார் என வெளி நாட்டினர் விளம்புவர். ஆனால் கல்ஹணரின் கலியுகக் கணக்கு இந்துக்கள் பஞ்சாங்கத்தில் உள்ளது போல கி.மு 3102 துவங்குவது அல்ல, இவர் கி.மு 2600 வாக்கில் என்று செப்புவார். கல்ஹணர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்தவர்.
கல்ஹணர் என்னும் காஷ்மீரி பிராமணர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருதத்தில் எழுதிய ராஜதரங்கிணி என்ற காஷ்மீர் வரலாற்று நூலில் சுமார் 8000 ஸ்லோகங்கள் உள்ளன .
***
கல்கி அவதாரம்
விஷ்ணுவின் பத்தாவது மற்றும் இறுதி அவதாரமான கல்கி, கலியுகத்தின் முடிவில் மிலேச்சர்களை (தீயவர்களை) அழித்து தர்மத்தை நிலைநாட்ட வெள்ளை குதிரை மீது வாளுடன் தோன்றுவார். இது பாத்ரபத மாதம் (புரட்டாசி) சுக்ல பட்ச துவிதியை அன்று நிகழும் என்று பாரம்பரிய ஸ்லோகம் குறிப்பிடுகிறது, கலியுகம் முற்றும்போது தீயோர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார் என்று புராணங்கள் கூறுகின்றன.
மாசி பாத்ரபதே சுக்ல த்விதீயாயாம் ஜனார்தன:
ம்லேச்சாக்ராந்த கலாவந்தே கல்கிரூபோ பவிஷ்யதி
பொருள்:– கலியின் முடிவில் புரட்டாசி மாதத்தில் சுக்லபட்ச (இரண்டாம்) த்விதீயை திதியில் மிலேச்சர்களை ஒடுக்க கல்கி உருவத்தில் ஜனார்த்தனனாகிய விஷ்ணு அவதரிப்பார்.
மிலேச்சர்கள் யார்?
யவனர்களை அடியார்க்கு நல்லார், “மிலேச்சர்கள்” என்று சொல்லியது சரியே. தேசியகவி சுப்பிரமணிய பாரதியும் முஸ்லீம் மன்னர்களை ‘’வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்’’ —- என்று வசை பாடுவதைக் காண்க. சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், வெள்ளைக் காரனையும் ‘’மிலேச்சன்’’ என்று இகழ்ந்ததையும் கருத்திற் கொள்க.
தமிழ் கலைக்களஞ்சியமான ‘’அபிதான சிந்தாமணி’’ யவனர் பற்றிக் கூறுவது:
அ) அரேபியா நாட்டு மிலேச்சர்
ஆ )யயாதியின் மகனான துர்வாசு மரபினர். ஒழுக்கங் குன்றி இவ்விடம் சேர்ந்து இப்பெயர் பெற்றனர்
‘மிலேச்ச’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் முல்லைப் பாட்டில் வருகிறது. மகாபாரதம் முதல் பல சம்ஸ்கிருத நூல்களிலும் கல்வெட்டுகளிலும் வருகிறது. எல்லா இடங்களிலும் பாரத நாட்டைச் சாராத ‘அந்நியன்’ அல்லது ‘அந்நிய மொழி’ யைப் பேசுவோன் என்ற சொல்லிலேயே புழங்கியிருக்கிறது. யவனர்கள் எனப்படும் கிரேக்கர்கள் அல்லது ரோமானியர்களை இப்படி அழைத்தனர். படை எடுத்து வந்த முஸ்லீம்களையும் பிரிட்டிஷ்காரர்களையும் இப்படி அழைத்தனர்.
பலுச்சிஸ்தான் என்ற பகுதியில் வசித்தவர்களையும் இப்படி அழைத்தனர். பலுச்சி என்பது மிலேச்ச என்று மாறியது என்று சில மொழி இயல் அறிஞர்கள் வாதிடுவர்.
சிந்து சமவெளியை மிளக்கா என்று பாபிலோனியர்கள் அழைத்தனர் என்றும் களிமண் ஏடுகளில் மிளக்கா என்பது உள்ளது என்றும் சொல்லி சிந்து வெளி ஆய்வை திசை திருப்பிய அறிஞர்களும் உண்டு. இது பலுச்சிஸ்தான் என்னும் குறுகிய நிலப்பரப்பில் வாழ்ந்த ஒரு இனத்தை மட்டும் குறித்திருக்கலாம். மலக் (மாலிக்) என்ற ஒரு தெய்வத்துக்கு இஸ்ரேலியர்கள் குழந்தைகளைப் பலி கொடுத்ததை பைபிள் இரண்டு இடங்களில் குறிப்பிடுகிறது. அவர்களும் மிலேச்சர்கள் என்ற சப்தத்துள் அடங்குவர்.
முல்லைப் பாட்டில் ரோமானிய மக்களைக் குறிக்கையில் வாய் பேசாதோர், ஊமை போன்று சைகை மொழியில் பேசுவோர் என்று மிலேச்ச என்ற சொல்லுக்குப் பொருள் கூறப்பட்டிருக்கிறது. ரிக் வேதத்திலும் கூட சிலரை வாய் பேசாதோர், மொழியே இல்லாதோர் என்றும் கூறியிருக்கின்றனர். இதன் பொருள் ‘நம் மொழியைப் பேசாதவர்’ என்பதே.
ரிக் வேதம் (5-29-10), சதபத பிராமணம் ஆகியன மிலேச்ச பாஷை பற்றிச் சொன்னதை, சிந்துவெளியில் இருந்த திராவிடர்களைப் பற்றி சொன்னது என்று சில “அறிஞர்கள்’ அழகான கதை எட்டுக் கட்டினர்.
கிரேக்கர்கள், மற்ற எல்லோரையும் காட்டுமிராண்டிகள் (பார்பாரிக்) என்றழைத்தனர். முஸ்லீம்கள் மற்ற எல்லோரையும் ‘’காபிர்கள்’’ என்றும், கிறிஸ்தவர்கள் மற்ற எல்லோரையும் ‘’பேகன்கள்’’ என்றும் மட்டம் தட்டியது போலாகும் இது. ஆகையால் சிந்து சமவெளி ஆய்வாளர்கள் சொன்னதை ஒதுக்கி விடுதல் நலம் பயக்கும்.
***
காம்போஜ
வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்த ஒரு இனம்; பிற்காலத்தில் இவர்கள் குடியேறிய நாட்டினையோ பிரதேசத்தையோ இதே பேரில் அழைத்தனர் ; இப்போது கம்போடியா என்னும் நாட்டிற்கும் இதே பெயர்; ஆயினும் இந்தத் தொடர்பு பற்றி எந்தச் செய்தியும் இல்லை ; பாரத நாட்டில் வாழ்ந்த இளவரசிகளுக்கு நடந்த ஸ்வயம்வரத்தில் காம்போஜ மன்னர்களும் கலந்துகொண்டதாக நம்முமுடைய நூல்கள் கூறுகின்றன. குதிரைகளுக்கு மிகவும் புகழ்பெற்ற பிரதேசம் இது. காம்போஜ நாட்டுக் குதிரைகள் தங்களுடைய ரதங்களை இழுத்தன என்று புராண இதிஹாச மன்னர்கள் விளம்புவர் .
***
கம்சன்
கம்சன் என்பவன் கிருஷ்ணரின் தாயான தேவகியின் உடன் பிறந்தவன் ; மதுராவைத் தலைநகராகக் கொண்ட இராச்சியத்தின் மன்னன். இவனுடைய தந்தை உக்கிரசேனர், தாயார் பத்மாவதி. தந்தையையே சிறையில் போட்டுவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய கொடுங்கோல் மன்னன் ; தேவகிக்குப் பிறக்கும் மகனால் இவனுக்கு சாவு ஏற்படும் என்று ஆரூடம் இருந்ததால் அவளுக்குப் பிறந்த எல்லாக் குழந்தைகளையும் பலியிட்டான்; பலராமனும் எடடாவதாகப் பிறந்த கண்ணும் தப்பினர்; இதை அறிந்தவுடன் எல்லா ஆண்குழந்தைகளையும் கொல்ல உத்தரவிட்டான்; இவன் ஏவிய எந்த அசுரர்களும் கிருஷ்ணனையோ பலராமனையோ கொல்ல முடியவில்லை; இறுதியில் கிருஷ்ணன் இவனைக் கொன்றான் .
***
காஞ்சிபுரம்
“புஷ்பேஷு ஜாதி , புருஷேஷு விஷ்ணு ,
நாரீஷு ரம்பா , நகரேஷு காஞ்சி .” என்பது பிரபலமான ஸ்லோகம்.
பூக்களில் சிறந்தது ஜாதி மல்லிகை; புருஷர்களில் சிறந்ததவர் மஹா விஷ்ணு; பெண்களில் சிறந்தவள் ரம்பை; நகரங்களில் சிறந்தது காஞ்சிபுரம்!
பல்லவர்களின் தலை நகரமாகத் திகழ்ந்த நகரம்; சென்னைக்கு அருகில் உள்ளது; காஞ்சி சங்கராசார்ய சுவாமிகளின் காமகோடி பீடம் இருப்பதாலும் 108 கோயில்கள் இருப்பதாலும் புகழ் பெற்று விளங்குகிறது ; பட்டுச் சேலைகளுக்கு பெயர்பெற்ற இடம் இது.
இந்தியாவின் ஏழு புனித நகரங்களில் (சப்த புரி) ஒன்று; , சிவகாஞ்சி மற்றும் விஷ்ணுகாஞ்சி என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஜைன காஞ்சி என்ற பகுதியில் சமண சமய சின்னங்கள் இருக்கின்றன .
அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா
புரி த்வாராவதி சைவ சப்தைதே மோக்ஷதாயிகா:
—என்ற ஏழு நகரங்களில் காஞ்சியின் பெயரும் உள்ளது.
சாக்த வழிபாட்டின் முக்கிய கோயிலான காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் சிவன் கோவில் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் போன்றவை இங்கு சிறந்து விளங்குகின்றன. இது “நகரேஷு காஞ்சி” என்ற காளிதாசனின் புகழ்பெற்ற சுலோகத்தால் போற்றப்படும் தொன்மையான நகரம்.
பல்லவர்கள், சோழர்கள், விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்களால் ஆளப்பட்டது. காளிதாசர், சங்க இலக்கியங்கள் மற்றும் கருட புராணத்தில் காஞ்சிபுரம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
To be continued……………………
Tags- கபந்தன்,கல்கி, காம்போஜ, கண்ணன் , கம்சன், HINDU DICTIONARY, IN ENGLISH AND TAMIL 42; இந்து மத, கலைச்சொல் அகராதி-42, கபந்தன், காஞ்சிபுரம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
51திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 51
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 51
கிருஷ்ணனின் விஸ்வரூப தரிசனம்
வசை அற்று முடிவு அற்று வளர் பற்றின் அளவு அற்ற வடிவு
உற்ற முகில் கிட்ணன் மருகோனே … பழிப்புக்கு இடம் இல்லாமல்,
முடிவில்லாது வளர்ந்திருந்த (பாண்டவர் மீது இருந்த) நேசத்தின்
காரணமாக, கணக்கற்ற வடிவங்களைக் கொண்ட* மேக நிறக்
கண்ணனது மருகனே,
மதுரச் செம் மொழி செப்பி அருள் பெற்ற சிவ பத்தர் வளர் …
இனிமை தரும் செம்மையான புகழ் மொழிகளைச் சொல்லி உனது
திருவருளைப் பெற்ற சிவ பக்தர்கள் நிரம்பியுள்ள
விர்த்த கிரி உற்ற பெருமாளே. … முது குன்றம் எனப்படும்
விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* சகாதேவனின் அன்புக்குக் கட்டுப்பட்டு பாரதப் போருக்கு முன்பும், அர்ச்சுனனுக்கு கீதோபதேசத்தின் போதும், கண்ணன் விசுவரூப தரிசனம் தந்தது இங்கு குறிப்பிடப் பெறுகிறது.
***
நாரதரும் தும்புருவும்
நார (தர்) தும்பூர் கீதம் ஓத நின்றே ஆடு நாடகம் சேய்
தாளர் அருள் பாலா … நாரதர், தும்புரு ஆகியோர் இசை பாட, நின்று ஆடுகின்ற (ஊர்த்துவ) நடனத்தைச் செய்கின்ற திருவடியை உடைய சிவபெருமான் அருளிய குழந்தையே,
சூரர் அணங்கோடு ஆழி போய் கிடந்தே வாட சூரியன் தேர்
ஓட அயில் ஏவீ … சூரனும், அவன் வருத்தும் செயல்களும் கடலில் போய் (மாமரமாகக்) கிடந்தே அழியவும், சூரியனுடைய தேர் (பழைய முறைப்படி) ஓடவும் வேலைச் செலுத்தியவனே,
தூ நறும் காவேரி சேரும் ஒள் சீறாறு சூழ் கடம்பூர் தேவர்
பெருமாளே. … பரிசுத்தமான நறு மணம் வீசும் காவேரி நதியுடன்
யானைக் கொம்பு, பன்றிக்கொம்பு, முத்துச்சிப்பி, பாக்குமரம், வாழைமரம், நத்தை, சலஞ்சலம் (வலம்புரிச் சங்கு), மீ ன் தலை, கொடுக்குத் தலை, தாமரை, பெண்கள் கழுத்து, நெல், மூன்கில், கரும்பு, மாட்டுப்பல், பாம்பு, முகில், கர்ப்பூரம், முடலை, உடும்பு என்னும் இருபது இடங்களில் முத்து பிறக்கும்.
இந்த இருபது வகைகளில் கடலில் கிடைக்கும் முத்து ஒன்றுதான் அணிவரும் அணியும் முத்து.
1.தந்தி 2.வராகம் மருப்பு= யானை, பன்றி இவைகளின் கொம்புகள்
3.இப்பி = முத்துச் சிப்பிகளும்
4.பூகம் = கமுகங்காய் குல்லைகள்
5.தனி கதலி = ஒப்பற்ற வழைக்குலைகள்
6.நந்து = சங்கும்
7.சலஞ்சலம் = விசேஷ /அபூர்வ வலம்புரிர்ச்சங்கு
8.மீன்றலை = மீன் தலை
9.கொக்கு= கொக்கின் தலை
10.நளினம் = தாமரை
11.மின்னார் கந்தரம் = பெண்களின் கழுத்து
12.சாலி = செந்நெற் கதிர்க்குலை
13.கழை = மூங்கில்
14.கன்னல் = கரும்பு
15.ஆவின் பல் = பசுமாட்டின் பல்
16.கட்செவி = பாம்பு
17.கார் = மேகம்
18.இந்து = சந்திரன்
19.கரா =முதலை
20.உடும்பு= உடும்பின் தலை
***
காளிதாசன், பர்த்ருஹரி, வராக மிஹிரர் தரும் செய்திகள்
சுவாதி நட்சத்திரத்தன்று பெய்யும் மழை சிப்பியின் வாய்க்குள் புகுந்து முத்து ஆகிறது என்று பர்த்ருஹரி சொன்னது கருவூர் கதப்பிள்ளையின் புறம் 380 பாடலில் உள்ளது.
காளிதாசனின் மாளவிகாக்னிமித்ரத்தில் உள்ளது (1-6)
யானைத் தந்தத்திலுள்ள முத்து பற்றி காளிதாசன் குறிப்பிடும் இடங்கள்:_ குமாரசம்பவம் — 1-6; ரகுவம்சம் 9-65;
தமிழ் இலக்கியத்தில் யானை முத்து, மூங்கில் முத்து பற்றி வரும் இடங்கள்:-
காளிதாசனுக்குப் பிடித்த உவமைகளில் முத்து மாலையும் ஒன்று.
பறவைகள் குடியேறும் போது ( Bird Migration) பறந்து செல்லுவது முத்துமாலை போல உள்ளது என்றும் நதிகளை மலை உச்சியிலிருந்து பார்க்கையில் அவை முத்துமாலை போலத் தென்படும் என்றும் (ரகு.13-48; மேகதூதம் 49) கூறுகிறான்.
வராஹமிகிரர் எழுதிய பிருஹத் ஜாதகம் என்னும் அற்புத சம்ஸ்கிருத கலைக்களஞ்சியத்தில் முத்துக்கள் உற்பத்தியாகும் எட்டு இடங்கள்:
பொருள்: யானை, பாம்பு, முத்துச் சிப்பி, சங்கு, மேகம், மூங்கில், திமிங்கிலம், காட்டுப் பன்றி ஆகிய இடங்களில் முத்து கிடைக்கும்..
வராக மிகிரர் இப்படிச் சொன்னாலும் விஞ்ஞானிகள் அறிந்த முத்துக்கள் கடலிலும் சில இடங்களில் ஆறுகளிலும் கிடைக்கும் முத்துக்கள் மட்டுமே. மற்றவை எல்லாம் இதுவரை நிரூபிக்கப்படாதவையே. வராஹ மிகிரரும் தனக்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் கருத்துக்களைத் தான் தொகுத்திருப்பதாகவே கூறுகிறார். அதனால் தன் நூலுக்கே சம்ஹிதை=தொகுப்பு எனப் பெயரிட்டுள்ளார்.
—subham—
Tags- திருப்புகழில், அருணகிரிநாதர், அரிய செய்திகள், Part 51, விஸ்வரூப தரிசனம் ,முத்து பிறக்கும் இடங்கள், சீர்காழி, நாரதர், தும்புரு
தாய், தந்தை, வயதானவர்கள், மனைவி, மகன், குழந்தை, குரு, பிராமணர், உதவி வேண்டுவோர் ஆகியோருக்கு உதவி செய்யாமல் இருக்கும் ஒருவன் உயிரோடிருந்தாலும் செத்தவனுக்குச் சமம் தான்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Last post in this series was posted on 1/3/2026
HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 41; இந்து மத கலைச்சொல் அகராதி-41(Post.15,468) 1/3/26
Words beginning with letter K continues…………………………….Tamil Version will be posted tomorrow.
***
Kabandha
Name of a mighty demon mentioned in the Rāmāyana. [While Rāma and Lakṣmaṇa lived in the Dandkā forest, Kabandha attacked them and was slain by them. It is said that, though at first a heavenly being, he was cursed by Indra to assume the form of a demon and to be in that state till killed by Rāma and Laksmaṇa. He advised Rāma to form friendship with Sugrīva; see Rām.3.69.27 ff.; वधनिर्धूतशापस्य कबन्धस्योपदेशतः । मुमूर्छ सख्यं रामस्य समानव्यसने हरौ (vadhanirdhūtaśāpasya kabandhasyopadeśataḥ | mumūrcha sakhyaṃ rāmasya samānavyasane harau) || R.12.57].
In Hindu Astronomy
1) Kabandha (कबन्ध) refers to a “headless human body”, according to the Bṛhatsaṃhitā (chapter 3), an encyclopedic Sanskrit work written by Varāhamihira mainly focusing on the science of ancient Indian astronomy astronomy (Jyotiṣa).—Accordingly, “The dark spots, also known as ketus, the sons of Rāhu are Tāmasa, Kīlaka and the like, and are 33 in number. How they affect the earth depends upon their color, position and shape. If these spots should appear on the solar disc, mankind will suffer miseries; if on the lunar disc mankind will be happy; but if they take the shape of a crow, a headless human body [i.e., kabandha], or a weapon, mankind will suffer even though the spots should appear on the moon”.
2) Kabandha (कबन्ध) or Kabandhaketu refers to certain types of Ketus (i.e., luminous bodies such as comets and meteors), according to the Bṛhatsaṃhitā (chapter 11).—Accordingly, “The comets that resemble a headless trunk are named Kabandha Ketus
***
Kacha
Please go to Devayani in part 24.
***
Kadru
Kadru (कद्रु) and Vinatā, daughters of Dakṣa Prajāpati, are married to sage Kaśyapa. Once, Kaśyapa tells them to ask for a boon. Kadru asks for a thousand sons in the form of nāga, snakes, having equal extraordinary force. Vinatā asks for only two children whose parākrama “prowess” should be equal to that of the thousand snakes of Kadru. Kadru did not appreciate it.
Kadrū and Vinatā had a dispute in the course of a conversation which they were carrying on. The former said that the Sun’s horses were black, the latter that they were white, and they made an agreement that the one that was wrong should become a slave to the other”.
Kadrū, the mother of the snakes, conquered Vinatā, the mother of Garuḍa, in a treacherous wager, and made her a slave. Through enmity caused thereby, the mighty Garuḍa, though he had delivered his mother, began to eat the snakes of the sons of Kadrū”.
***
Kaikeyi
Kaikeyī (कैकेयी): She was the youngest of King Dasaratha’s three wives and a queen of Ayodhya. She was the mother of Bharata.
Daśaratha had three wives, Kausalyā, Kaikeyī and Sumitrā. It is mentioned in Vālmīki Rāmāyaṇa, Ayodhyā Kāṇḍa, Sarga 70, Stanza 28 that Kaikeyī was the sister of Yudhājit, the King of Kekaya. Kekaya was seven days’ journey away from Ayodhyā.
She carefully tended Daśaratha when he was wounded in a battle, and in gratitude he promised to give any two requests she might make. Urged by the malignant counsels of manthara, a hunch backed female attendant , she made use of this promise to send rama to the forest for 14 years and to promote his son Bharata as king of Ayodhya. As a result of this Daśaratha died of heart attack.
***
Kailash
Kailasa , a mountain in the Himalayas, south of the manasa sarovar lake. Siva is said to be on mount kailash with his family. It is the abode of Kubera , god of wealth. It is also called Rajataadri , the silver mountain.
Kailāsh (कैलास) is a peak in the Gangdisê mountains, the source of rivers in Asia—the Indus River, the Sutlej River, and the Brahmaputra River—and is considered as a sacred place in four religions—Hinduism, Buddhism, Jainism and Bön faith. The mountain lies near Lake Manasarowar and Lake Rakshastal in Tibet. It is under China’s control now.
In the Tamil Tevaram hymns, Ravana’s attempt to lift the mountain is described. He cried loudly when Lord Siva pressed it hard to crush his hands. Later he praised Lord Siva by reciting Sama Veda and pacified Siva.
***
Kala
Kaala – General meaning- Death or Time. Ancient Tamil literature use this Sanskrit word in the sense of Time.
Kāla (काल)—One of the eleven other names of Rudra, according to the Bhāgavata Purāṇa 3.12.12.
1) Kalā (कला).—A measure of time.
2) Kāla (काल).—(yama) * The god of Death. When the life span of each living being allotted by Brahmā is at an end Yama sends his agents and takes the soul to Yamapurī (the city of Yama). From there, the holy souls are sent to Vaikuṇṭha (Heaven, the abode of Viṣṇu) and the sinful souls to Hell. Genealogy and birth of Yama. From Mahāviṣṇu were descended in the following order—Brahmā, Marīci, Kaśyapa, Sūrya (Sun), Yama (Kāla).
3) Kāla (काल).—A Maharṣi. Mahābhārata, Sabhā Parva, Chapter 7, Verse 14, refers to this sage as offering worship to Indra, in Indra’s assembly.
4) Kālā (काला).—A daughter of Dakṣaprajāpati. (See under Kālikā).
***
Kalanemi
Kālanemi (कालनेमि).—A great Asura. In later years he was born as Kaṃsa, the son of Ugrasena.1) the rim of the wheel of time.
2) Name of a demon, uncle of Rāvaṇa, deputed by him to kill Hanūmat.
3) Name of a demon with 1 hands killed by Viṣṇu. °अरिः, रिपुः, हरः, हन् (ariḥ, ripuḥ, haraḥ, han) m. epithets of Kṛṣṇa.
***
Kalayavana- kaalayavana
Kālayavana (कालयवन).—a kind of yavanas and enemy of Kṛṣṇa and an invincible foe of the Yādavas. Kṛṣṇa, finding it impossible to vanquish him on the field of battle, cunningly decoyed him to the cave where Muchakunda was sleeping who burnt him down.
Lord Krishna was chased by a Kala yavana and Krishna entered the cave where Mucukunda was sleeping. When Mucukunda became tired he got a boon from God to sleep undisturbed for a long time in a cave. Kalayavana also entered the cave and slapped on Mucukundan thinking that it was Krishna pretending to sleep. When Mucukunda opened his eyes, Kalayavana was burnt to ashes. Tricky Krishna came out of his hiding and blessed Mucukunda. He advised him to go to Badrinath.
***
Kalhana
Kalhana was a 12th-century Kashmirian historian.
IKalhana was a 12th-century Sanskrit poet and historian, likely a Brahmin, who lived in Kashmir. He wrote the Rajatarangini (River of Kings) between 1148 and 1150 CE, an epic poem in Sanskrit consisting of nearly 8,000 verses over eight books. He is noted for using critical research methods, drawing on earlier sources like the Nilamata Purana, as well as epigraphy (inscriptions), coins, and sculpture to reconstruct history.
Kalhana mentions “Dravidian” magicians in his book in three places, specifically a story about a Dravidian magician during the reign of Jayapida in 751 CE.
Quotations and Wisdom: The blog features hundreds of quotations from the Rajatarangini that cover wisdom on fortune, fear, and fate, often comparing Kalhana’s insights with Tamil literature, such as the Tirukkural by Valluvar.
“Kalhana’s Blunder”: in his Kaliyuga calculations, he miscalculated the dates of some kings, creating a large, arguably inaccurate, “dark period” or kingless period. He is lauded for preserving the history of Kashmir from the legendary kings through the 12th century.
Kalhana recorded a fatal disease called Luta (meaning spider) in Kashmir.
***
Kalki avatar
Hindus believe that the last Avatar of Lord Vishnu will be Kalki Avatar, that is the incarnation of god. Kalki is expected to come on a white horse with a lightning sword. Many religions believe that their prophets will come back. Zoroastrian/ Parsi religion also believes in a or many future prophets.Great Sanskrit poet Jayadeva of tenth century in his Gita Govinda says,
“O Keshava, at the destruction of the multitude of the Mlechas, you will wield the dreadful sword, which is like a COMET.
O Hari, lord of the world, may you be successful having got the body of Kalki.”
Jayadeva used the Sanskrit words:
Dhumaketumiva ‘comet like sword’.
Now we see such sword fights in the imaginary Star War episodes. It looks like Lord Vishnu will also use modern weaponry like Laser swords. Probably you may not need Nuclear bombs or Hydrogen Bombs. With laser light you may be able to destabilise foreign military power.
Dhumaketu is Comet in Sanskrit. We may take it some sword like it. Lord Kalki is shown riding White Horse in Puranic descriptions.
***
Kamboja
Kaambojas- a race or tribe always associated with the tribes living to the north west ,and famous for their horses. They were among the tribes conquered by king sagara, king Krishna etc
1) Kāmboja (काम्बोज).—Sudakṣiṇa, the King of the country, Kāmboja. He was present at Draupadī’s svayaṃvara. In Mahābhārata, Karṇa Parva, Chapter 156 we read that his younger brother was killed by Arjuna. The Kings of Kāmboja were all known as Kāmbojas. Long ago, this country was ruled by a King named Kāmboja. In Mahābhārata, Śānti Parva, Chapter 166, Verse 77, we see that this Kāmboja was given a sword by the King Dhundhumāra. Perhaps it was from this King Kāmboja that the country came to be called ‘Kāmboja’.
2) Kāmboja (काम्बोज).—This kingdom was situated in the north western part of India. It is the modern Kabul. We get the following information from Mahābhārata.
From Mahābhārata, Sabhā Parva, Chapter 27, Verse 23, we see that Arjuna had subdued this Kingdom.
The horses which were tied to Yudhiṣṭhira’s chariot were brought from Kāmboja. (Mahābhārata Sabhā Parva, Chapter 52, Verse 5).
The Mlecchas (a tribe of low-class people) of Kāmboja will become Kings in Kaliyuga. (Mahābhārata Vana Parva, Chapter 188, Verse 36).
There were Kāmbojas in Duryodhana’s army. (Mahābhārata Udyoga Parva, Chapter 160, Verse 130).
At the time of Mahābhārata the King of Kāmboja was the brave and heroic Sudakṣiṇa. (Mahābhārata Udyoga Parva, Chapter 166, Verses 1-3).
In the battle between Kauravas and Pāṇḍavas, the Kāmbojas took their position in some places in the “Garuḍa Vyūha”, a phalanx in the shape of an eagle made by Bhīṣma. (Mahābhārata Bhīṣma parva, Chapter 56, Verse 7).
The horses of Kāmboja were beautiful in appearance and of the colour of parrots. The horses which were tied to Nakula’s chariot, were of this kind. (Mahābhārata Droṇa Parva, Chapter 23, Verse 7).
When the horses of Kāmboja ran, their tails and ears remained motionless. (Mahābhārata Droṇa Parva, Chapter 36, Verse 36).
***
Kamsa
A tyrannical king of Mathura. Maternal uncle of Krishna . son of ugrasena and father of Devaki, mother of krishna. He married twin daughters of Jarasandha named asti and prapti, king of Magadha. He deposed his father ugrasena. It was foretold that a son born of Devaki should kill him. So he killed all children born to her except two. Balarama, her seventh son was smuggled out to Gokula and was brought up by rohini. When krishna was born as the eight child his parents fled with him. The tyrant then gave orders to kill all vigorous male children . kamsa persecuted krishna and at the end krishna killed him. Because of this he earned the enmity of jarasandha. Kamsa was also called kalaankura, the crane.
***
Kanchipuram / Conjeevaram
Once Capital of Pallava Kings; now a Temple city in Tamil Nadu with 108 temples
Kāñcīpuram is one of the 108 Vaishnava Divya Desam located in the Toṇṭaināṭu (“Northern Tamil Nadu”).
Kāñcipuram or Kanchipuram, the Golden City, was the capital of the Pallava dynasty from the sixth to the eight century. Kāñcipuram was ruled subsequently by the Chola, Vijayanagara and Nayaka kings until the 17th century. The Kāmākṣī Amman Temple at Kāñcīpuram (the ancient city of temples) is one of the leading centers of Śakti-worship in Tamilnadu. It is situated to the south east of the Ekāmbaranāthar Temple. Kāñcīpuram is divided into two parts–the Big and the Small or the Śivakāñcī and the Viṣṇukāñcī respectively. Śivakāñci is dedicated to Ekāmbaranāthar and Viṣṇu Kāñci to Varadarāja Perumāl. Jain monuments are also in the city.
Kanchi Sankaracharya’s Kanchi Kamakoti Peetham attracts a huge crowd.
It is one of the Seven Sacre Cities of India:
The seven sacred cities in Hinduism (Sapta Puri) that bestow liberation (moksha) are mentioned in the Garuda Purana and other scriptures, notably: Ayodhyā Mathurā Māyā Kāśī Kāñcī Avantikā, Purī Dvārāvatī caiva saptaitā mokṣadāyikāḥ.
The “Nagareshu Kanchi” sloka is a famous Sanskrit verse attributed to the poet Kalidasa, praising Kanchipuram as the most magnificent city among all cities. It is often recited to highlight the spiritual and cultural importance of Kanchi, one of the seven holy cities (Sapta Puri).
“Pushpeshu Jati, Purusheshu Vishnu,
Nareeshu Rambha, Nagareshu Kanchi.”
To be continued……………………
Tags- Kalki Avatara, Kanchi, Kamsa, Kamboja, HINDU DICTIONARY, IN ENGLISH AND TAMIL 42; இந்து மத, கலைச்சொல் அகராதி-42, Kabandha, Kalhana
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என தமிழிசையில் முறையே வழங்கும்
ஸப்த ஸ்வரங்களான ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகும்.
** திருநெல்வாயில் சிதம்பரத்துக்குத் தென்கிழக்கில் 3 மைலில் உள்ள சிவபுரி என்ற தலம் ஆகும்.
***
துவார பாலகர் யார் ?
அடைத்தார் கடல் ஓர் வலி ராவண குலத்தோடு அரி ஓர்
சரனார் சினம் அழித்தார் முகில் ஏய் நிற ராகவர்
மருகோனே … கடலை அணையிட்டு அடைத்தவராய், ஒப்பற்ற வலிமை வாய்ந்த ராவணனை, அவன் குலத்தோடு அறுத்துத் தள்ளிய ஓர் அம்பைக் கொண்டவர், (அசுரர்களின்) கோபத்தை இவ்வாறு அழித்து ஒழித்தவர், மேகத்துக்கு ஒப்பான கருநிறம் கொண்ட ராமபிரானின் மருகனே,
பிரமனின் தலையை அறுத்துத் தள்ளியவர், திரிபுரத்தை எரித்தவர், அந்தத் திரிபுரத்தில் இருந்த அறிவுள்ள (மூன்று) அசுரத் தலைவர்களின் உயிரைக் காத்தருளியவர்* ஆகிய சிவபெருமானின் பாதி உடலில் உள்ள உமாதேவி அருளிய குழந்தையே,
விடத்தார் அசுரார் பதி வேர் அற அடித்தாய் கதிர் வேல் கொடு
சேவகம் விளைத்தாய் … விஷம் போன்ற கொடிய குணம் வாய்ந்த
அசுரர்களுடைய ஊர்கள் வேருடன் அற்று விழ சம்ஹாரம் செய்தாய், ஒளி வீசும் வேலாயுதத்தால் வீரச் செயல்களைப் புரிந்தாய்,
குடி வாழ அமரோர் சிறை மிடி தீர விழித் தாமரை போல்
அழகா குற மகட்கு ஆன வ(ண்)ணா … தேவர்கள் சிறையும்
வறுமையும் நீங்கவும், அவர்கள் பொன்னுலகுக்குக் குடி போகவும்
செய்வித்த தாமரை போன்ற கண்களை உடைய அழகனே, குறமகள் வள்ளிக்குப் பிரியமுள்ள அழகனே,
என(து) தாய் உறை விருத்தாசலம் வாழ் மயில் வாகன
பெருமாளே. … என்னுடைய தாயான விருத்தாம்பிகை அமர்ந்துள்ள விருத்தாசலத்தில் வாழும் மயில் வாகனப் பெருமாளே.
* வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு இவைகளால் ஆகிய திரிபுரங்கள் என்ற பறக்கும் பட்டணங்களைக் கொண்டு அனைவரின் மேலே விழுந்துத் துன்புறுத்தினர். ஆதலால் சிவபெருமான், அவர்களை எரித்தபோது, சிவ வழிபாட்டால் மாளாது பிழைத்த மூவரில், இருவர் கோயில் காவலாளர் ஆனார்கள். மற்றவர் முழவு முழக்கும் பேற்றினை அடைந்தார் – சுந்தரர் தேவாரம்.
–subham—
Tags- துவார பாலகர், ஏழிசை, ஆறு சாஸ்திரங்கள் (சட்-தரிசனம்), ஏழு மலை, குல கிரிகள், பெயர்கள் , Part 50, திலகவதியார் புகழ்