1.தென் கிழக்காசிய மொழிகளை எழுதப் பயன்படுத்தும் லிபியின் மூல எழுத்து எது ?
xxxx
2.ஸ்ரீமாறன் என்ற மன்னரின் கல்வெட்டு எந்த தென் கிழக்காசிய நாட்டில் உள்ளது ?
xxxx
3.மூலவர்மன் நிறுவிய யாகத் தூண்கள் எங்கே கண்டுபிடிக்கப்பட்டன ?
xxxxxx
4.தென் கிழக்காசிய நாடுகளில் இந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய 2 ரிஷிகள் யார் ?
Xxxxx
5.யசோவதீ என்பவர் யார்?
xxxx
6.இராமாயண மஹாபாரத நாடகங்கள் நடக்கும் நாடு எது ?
Xxxx
7.புத்த மத நாடு; ஆனால் அரசவையில் திருவெம்பாவை படும் நாடு எது?
xxxx
8.இந்தோனேஷியாவில் இன்றும் இந்து மதம் பின்பற்றப்படும் தீவு எது ?
xxxx
9.இந்தோனேஷியாவில் போரோபுதூரில் என்ன அதிசயம் இருக்கிறது?
xxxx
10. மா கங்கா (அன்னை கங்கை) என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் தென் கிழக்கு ஆசியாவில் ஓடும் ஒரு நதியின் பெயர். அது இப்போது எப்படி மாறியிருக்கிறது?
Xxxxx
விடைகள்
Largest Hindu Temple in the world- Angkor Vat in Cambodia
1.பிராமி,
2.சம்பா (தற்போதைய பெயர் வியட்நாம்)
3.இந்தோனேஷியா நாட்டின் போர்னியோ தீவின் அடர்ந்த காட்டுக்குள். கண்டுபிடிக்கப்பட்டன
4.அகஸ்தியர், கவுண்டின்யர்
5.அகத்தியர் மணந்த நாக கன்னிகை பெயர் (வியட்நாம் பெண்) யசோவதி.
6.இந்தோனேஷியா.
7.தாய்லாந்து
8.பாலி தீவு
9.ஸ்ரீ சக்ர வடிவில் அமைக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய புத்த கோவில் (ஸ்தூபி ) போரோபுதூரில் இருக்கிறது
10.ஐந்து நாடுகள் வழியாக ஓடும் கங்கை நதியை மீகாங் என்று அழைக்கின்றனர் . இந்துக்கள் குடியேறிய நாடுகளில் எல்லாம் நதியை ‘கங்கை’ என்ற புனிதப் பெயரால் அழைத்தனர்.இன்றும் இலங்கையில் கூட இதை க்காணலாம் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
24-6-23 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை – இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது
வண்ணங்கள் தரும் வளமான வாழ்வு!
(முதல் பகுதி)
ச.நாகராஜன்
வண்ணங்களின் பெருமை
வண்ணங்கள் வாழ்க்கை முழுவதும் நெருங்கிப் பரவி இருப்பதை நாம் நன்கு அறிவோம்.
வண்ணங்கள் இல்லாத வாழ்க்கையை ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் மனம் திடுக்கிடும்.
வாசலில் வண்ணமிகு கோலம் வரவேற்காது. பெண்கள் மற்றும் ஆண்களின் உடைகள் மனதைக் கவரும் வண்ணத்தில் இருக்காது.
வண்ணத்தில் ஜொலிக்கும் தீபாவளியும், ஹோலி பண்டிகையும், கிறிஸ்துமஸும் பொலிவிழந்து இருக்கும். வண்ணச் சிற்பங்கள், சித்திரங்கள், வண்ணத் திரைப்படங்கள் இருக்காது!
வாழ்க்கையே சலிப்புத் தட்டி விடும்.
நமது முன்னோர்கள் இதை உணர்ந்து தான் வண்ணங்களின் பெருமையை நமக்கு எல்லாவற்றின் மூலமாகவும் விளக்கி வந்துள்ளனர்.
ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு வடிவம், அமைப்பு என்பதோடு இன்ன வண்ணமும் உண்டு என்று குறிப்பிட்டிருக்கின்றனர். ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள நிறத்தை நரசிம்ம புராணம் விளக்குகிறது.
வண்ணம், வடிவம், அமைப்பு (Colour, Shape, Form) இந்த மூன்றிற்கும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு உண்டு.
இந்தத் தொடர்பை உணர்ந்து நமது வாழ்க்கையை நாம் அமைத்துக் கொண்டோமானால் வெற்றி தான் பெறுவோம்.
அறிவியல் ஆய்வில் வண்ணங்கள்
வண்ணங்களைப் பற்றி அறிவியல் நெடுங்காலமாக ஆராய்ந்து வந்துள்ளது.
சாலைச் சந்திப்புகளில் ஏன் சிவப்பு விளக்கு நிற்கவும் பச்சை விளக்கு போவதற்கான அனுமதி தரவும் நிறுவப்பட்டிருக்கிறது?
அறிவியல் சோதனை இந்த வண்ணங்களை வைத்து நடத்தப்பட்டது.
சோதனைக்கு உட்பட்டோரின் கண்களைக் கட்டி விட்டு அவர்களுக்கு இரு புறமும் சமதூரத்தில் சிவப்பு வண்ண அட்டை ஒரு புறமும் பச்சை வண்ண அட்டை மறு புறமும் வைக்கப்பட்டன.
தங்களது உள்ளுணர்வு சக்தி மூலம் சோதனைக்கு உட்பட்டோர் எந்த அட்டை அருகில் இருக்கிறது என்று கூறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
வண்ண அட்டைகள் இரண்டுமே சம தூரத்தில் வைக்கப்பட்டிருந்த போதிலும் சிவப்பு அட்டை அருகில் இருப்பதாகவும் பச்சை அட்டை தூரத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆகவே தான் உடனே நிற்க உத்தரவிட சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகிறது.
இன்னொரு சோதனையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டோர் ஒரு குளிர் அறையில் உட்கார வைக்கப்பட்டனர். அவர்கள் அருகில் ஒரு பட்டன் வைக்கப்பட்டது.
அறையின் உஷ்ணநிலை அதிகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையில் உடலுக்கு இதமான உஷ்ணநிலை வந்தவுடன் பட்டனை அமுக்கி வெப்பம் அதிகரிப்பதை நிறுத்துமாறு கூறப்பட்டது.
வெவ்வேறு சோதனையில் வெவ்வேறு வண்ணம் சோதனை அறையில் பூசப்பட்டது.
சோதனை முடிவில் ஆரஞ்சு அல்லது சிவப்பு வண்ணம் பூசப்பட்ட அறையில் மனதிற்கு இதமான உஷ்ணம் வந்ததாக அறிவிக்கப்பட்டது. இது நீல நிற வண்ணம் பூசப்பட்ட அறையை விட 15 டிகிரி செல்ஸியஸ் முன்பாகவே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இன்னொரு உளவியல் சோதனையில் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு ஆகியவற்றைச் சாதாரண வெளிச்சத்தில் பார்ப்பதற்கும் சிவப்பு வண்ண ஒளியில் பார்ப்பதற்கும் வேறுபாடு இருப்பது தெரிய வந்தது.
சிவப்பு வண்ணத்தில் நாடித்துடிப்பும் ரத்த அழுத்தமும் அதிகரித்திருந்தன!
இந்த சோதனைகள் அனைத்தையும் நடத்தியவர் புடாபெஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்டல் நெமிஸிஸ் என்பவர்.
இதே போல வண்ணங்கள் குறித்த சோதனைகளை மேற்கொண்ட பில்டன், ராபர்ட் மெட்ஸ்கார், ஜோ ரெஜெரேர் ஆகிய விஞ்ஞானிகளும் வண்ணங்கள் பற்றிய தங்கள் ஆய்வு முடிவுகளை அறிவித்தனர். இவை அனைத்துமே வண்ணங்கள் வாழ்க்கைப் போக்கை நிர்ணயிக்கின்றன; மாற்றுகின்றன என்பதைப் புரிய வைத்தது.
உளவியலில் வண்ணம்
மிகவும் பிரபலமான விஞ்ஞானியான கார்ல் ஜங் தன்னிடம் வந்த நோயாளிகள் அனைவரையும் வண்ணங்களைப் பயன்படுத்துமாறு அறிவுரை கூறுவார். ஏனெனில் அவர்களின் உள்ளார்ந்த உளவியல் அடிப்படையில் அவர்களைப் பற்றிய பல தகவல்களை அந்த வண்ணங்கள் தருமாம். ஒருவரின் ஆளுமையையும் குணாதிசயங்களையும் அவர் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தும் வண்ணங்கள் தெளிவாகக் காட்டும்.
உள்ளுக்குள்ளேயே எதையும் வைத்திருக்கும் மனப்பாங்கு கொண்டவர் நீலத்தைத் தேர்ந்தெடுப்பார். வெளிப்படையாக எதையும் பேசும் ஒருவர் சிவப்பைத் தேர்ந்தெடுப்பார்.
நீங்கள் அணிந்திருக்கும் ஆடையில் உள்ள நிறங்கள் உங்களைப் பற்றிய பல தகவல்களைத் தருகிறது. அது அந்தச் சமயத்தில் நீங்கள் கொண்டிருக்கும் உணர்வுகளையும் சுட்டிக் காட்டுகிறது,
வண்ண மயமான மார்கெடிங்
இப்போது பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் பாக்கிங்கிலும் விளம்பரங்களிலும் வண்ண ஆராய்ச்சி முடிவுகள் தந்த அறிவுரைகளைப் பின்பற்றி வருகின்றன. வாடிக்கையாளர்களை வண்ணங்கள் ஊக்குவித்து தயாரிப்புகளை வாங்க வைத்து விற்பனையை அதிகரிக்க வைக்குமாம்!
அதே போல பிரபலமான உணவு விடுதிகளில் மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணம் அடித்திருப்பதைப் பார்க்கலாம். அது பசி உணர்வைத் தூண்டி அதிகம் சாப்பிட வைக்கும். வாடிக்கையாளர் வேகமாகச் செயல்பட்டு உணவை முடித்துக் கொண்டு அவர்களை உடனே வெளியே போகவும் வைக்குமாம்.
உலகப் பெரும் உணவு நிறுவனமான மக்டொனால்டின் அடையாளச் சின்னம் சிவப்பு நிற பின்னணியில் மஞ்சள் நிற எழுத்தைக் கொண்டிருப்பது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சிவப்பு வண்ணம் அடிக்கப்பட்ட ஒரு அறை அதன் அளவை விட மிகச் சிறியதாகத் தோற்றம் அளிக்கிறது! ஆனால் நீல நிற அறையோ அதன் அளவை விடப் பெரியதாகத் தோற்றம் அளிக்கிறது.
நீல நிறத்தை மேற்புறம் கொண்ட ஒரு அறை மன சாந்தியைத் தரும். ஆகவே நோயாளிகள் மற்றும் மன அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்ற வண்ணம் இதுவே.
நீலம், பச்சை, இளஞ்சிவப்பு அடிக்கப்பட்ட அறைகள் பச்சிளங் குழந்தைகளுக்கு உகந்தவை.
In the past two days we looked at the importance of Ganapathi Homam and Navagraha Homam. The third important Homam is Ayush Homam. It means Homam for Longevity.
No one wishes to die. Even old people want to live longer. All of us ,young or old, want live a healthy and active life.
Benefits of Ayush Homa
Hindu approach to healthy life is very different from other cultures. Our ancient books advise us to follow Ayur Veda (Long Life Medical System). This helps one to prevent diseases. Westerners worry about or treat the diseases when they get it. But Hindus believe in Prevention is better than cure. Ayush Homam is also part of this approach.
Ayush Homam is also meant for everyone. It is not only for old people ; it is not only for sick people. In the olden days every birth day of a child was celebrated not with Cutting Birth Day Cakes, but with doing Ayush Homa. If they don’t have the facilities they simply go to temples and do some Archana or worship.
xxx
How do we do it?
It is not done on English birthday, but on Janma Nakshatra day (the birth star of a boy/girl or man/woman)
As I mentioned in the Ganapathi Homam, no work is done without worshipping Ganesh.
So, the priest starts with simple Ganapathi puja. Then he invokes God Varuna in the decorated, sanctified metal pot (Kumbha) with the mantras.
Then the Ayur Devata (life giving deity ) is invoked.
Sixteen types of Honours or Courtesy things follow. It is almost similar to receiving gusts in our hose. We welcome them, give them seats, give them something to drink, swich on the fan, praise them, serve them tiffin or dinner, salute them and send them with a Good Bye. Hindus have done it in 16 steps.
Then specially prepared/cooked rice is offered in fire with ghee. For this ceremony special mantra are there including Ayur Suktam. Priest recites those suktas. At the end the water in the metal pot is sprinkled on every one. Little water is given for taking in.
In between, there is a small Jayaathi Homam done.( I will deal with it soon)
As prasad Payasam (sweet liquid) is offered.
(the list of required Puja things is given already. Please see yesterday post).
1.சங்க காலத்தில் கேள்விப்படாத இரண்டு பெயர்களை முதல் தட வையாக இளங்கோ சொல்கிறார் : ஒன்று வாத்தியத்தின் பெயர்; இன்னொன்று முனிவரின் பெயர் ; சொல்லுங்கள் பார்ப்போம் .
2.இளங்கோ அடிகள் அறிமுகப்படுத்தும் ஒரு பிராமணன்தான் கதைக்கு பாலம் போன்றவர். அவர் இல்லாவிடில் தொடர்ச்சி இராது. யார் அவர்?
3.சிலம்பில் என்னென்ன நாட்டுப்புற, தமிழ் பாடல் பகுதிகள் உள்ளன ?
4.ஐ.நா. சபையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி, உலகம் முழுதும் ஒலித்த சிலப்பதிகாரப் பாடல் எது ?
5.எண் 18-ன் சிறப்பை இளங்கோ எப்படிப் புகழ்கிறார் ?
6.சிலப்பதிகாரம், திருக்குறள், தொல்காப்பியம்- மூன்றும் சங்ககாலத்துக்குப் பிற்பட்டவை என்பதைக்காட்டும் ஸம்ஸ்க்ருதச் சொல் எது?
7.பாரதியார் இந்த நூலை எப்படிப் புகழ்கிறார் ?
8.மாதவி எத்தனை வகையான ஆடல்களை ஆடினாள் ?
9.இந்தக் காவியத்தில் காலத்தைக் காட்டும் இரண்டு மன்னர்கள் வருகின்றனர். அவர்கள் யார்?
10.சிலப்பதிகாரம் அறிவுறுத்தும் பாடங்கள்/ நீதிகள் மூன்று என்று இளங்கோ எப்படிச் சொல்கிறார் ?
xxxxx
answers
1.வீணை, நாரதர் (இரண்டும் சங்க இலக்கியத்தில் இல்லை).
2.மாடல மறையோன்
3.கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை , குன்றக் குரவை, ஊசல் வரி முதலியன
பாண்டவர் – கெளரவர்கள் யுத்தம் நடந்த காலம் – 18 நாட்கள்
செங்குட்டுவன் – கனக விஜயர் யுத்தம் நடந்த காலம் – 18 நாழிகைகள்
Xxx
6.அதிகாரம் என்னும் சொல்; (தொல்காப்பியத்தில் உள்ள காவியம்/காப்பியம் என்பதையும் சொல்லலாம் ).
7.நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர்
மணி ஆரம் படைத்த தமிழ் நாடு (வேறு ஒரு இடத்தில் சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் என்றும் இன்னொரு இடத்தில் இளங்கோ பெயரையும் பாடுகிறார் .
8.பதினோரு வகை ஆடல்கள்
9.கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் (கஜபாகு); நூற்றுவர் கன்னர் (சதகர்ணி ); இதனால் சிலம்பில் வரும் நிகழ்வுகள் இரண்டாம் நூற்றா ண்டு நடந்தது உறுதியாகிறது .
10. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏற்றலும்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.என்பதும்
1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
2. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.
3. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.
–சுபம்–
Tags- சிலப்பதிகாரம் , இளங்கோ ,Quiz, அரசியல் பிழைத்தோர்க்கு
ஜான் பில்பாட் கரன் அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு பிரபலமான வக்கீல், பேச்சாளர். – John Philpot Curran (தோற்றம் 24 ஜூலை 1750 மறைவு 14 அக்டோபர் 1817)
ஒரு நாள் அவரிடம் ஒரு விவசாயி வந்தார்.
“நான் இந்த நகருக்கு வருவது இது தான் முதல் தடவை. நான் தங்கி இருந்த சத்திரத்தின் காப்பாளரிடம் நூறு பவுண்டை கொடுத்து பத்திரமாக வைத்திருக்குமாறு கூறினேன். அவரும் வாங்கிக் கொண்டார். ஆனால் திருப்பிக் கேட்கும் போது நீ கொடுக்கவே இல்லை என்கிறார். தயவு செய்து நீங்கள் தான் அதை எனக்குப் பெற்றுத் தர வேண்டும்” என்றார் அவர்.
அவர் கூறியதைக் கேட்ட கரன் யோசித்தார். பின்னர் கூறினார்: “நீங்கள் அவரிடம் சென்று இன்னொரு நூறு பவுண்டைக் கொடுங்கள். ஆனால் இந்த முறை சாட்சியாக ஒரு பாதிரியாரை அழைத்துச் சென்று அவர் முன்னால் அதைக் கொடுங்கள்” என்றார்.
விவசாயியும் அப்படியே செய்தார். கரனிடம் வந்து அவர் சொன்னபடியே இன்னும் ஒரு நூறு பவுண்டைக் கொடுத்ததாகச் சொன்னார்.
கரன் கூறினார் : “இப்போது நீங்கள் தனியே சென்று ஒரு நூறு பவுண்டைக் கேளுங்கள்” என்றார்.
விவசாயி சத்திரக் காப்பாளரிடம் சென்றார். நூறு பவுண்டை மட்டும் கேட்டார்.
சத்திரக் காப்பாளரும் உடனே நூறு பவுண்ட் நோட்டைக் கொடுத்தார் – அது பாதிரியார் முன்னால் வாங்கிய நூறு பவுண்டு ஆயிற்றே.
சந்தோஷத்துடன் கரனிடம் வந்த விவசாயி, “நூறு பவுண்டைப் பெற்று விட்டேன். ஆனால் முதலில் கொடுத்த நூறு பவுண்ட் வரவில்லையே” என்றார்.
கரன் கூறினார் : “இப்போது பாதிரியாருடன் சென்று நான் இவர் முன்னால் கொடுத்த நூறு பவுண்டைத் தாருங்கள் என்று கேளுங்கள்” என்றார்.
விவசாயி பாதிரியாரை அழைத்துக் கொண்டு சத்திரக் காப்பாளரிடம் சென்று, “இவருடன் வந்து கொடுத்தேனே, அந்த நூறு பவுண்டைத் தாருங்கள்” என்றார்.
இப்போது சத்திரக் காப்பாளர் சங்கடத்தில் மாட்டிக் கொண்டார்.
விவசாயிக்கு நூறு பவுண்ட் தந்து விட்டேன் என்று அவர் சொன்னால் சாட்சி எங்கே என்று விவசாயி கேட்பார்.
ஆகவே பேசாமல் நூறு பவுண்டை எடுத்துக் கொடுத்தார்.
விவசாயி மகிழ்ச்சியுடன் கரனைச் சந்தித்து தன் நன்றியைத் தெரிவித்தார்.
கரனைப் பற்றிய ஏராளமான சுவையான சம்பவங்கள் உள்ளன.
குதிரைக்கு சொந்தக்காரன் யார்?
அக்பரின் அரசவையில் ஒரு மனிதன் வந்து தன் குதிரையை இன்னொருவன் திருடி விட்டதாக புகார் செய்தான்.
அந்த நபரைக் கூட்டி வரச் சொல்லி விசாரித்த போது தான் எந்தக் குதிரையையும் திருடவில்லை என்றும் தன்னிடம் இருக்கும் ஒரே குதிரை தன்னுடையது தான் என்றும் அவன் சாதித்தான்.
அக்பர் பீர்பலிடம், “இதை எப்படித் தீர்த்து வைப்பது?” என்று கேட்டார்.
அக்பரிடம் பீர்பல் இதைத் தான் பார்த்துக் கொள்வதாகச் சொன்னார்.
குதிரை வைத்திருந்தவனை நோக்கிய பீர்பல் குதிரையை அரசுக்குச் சொந்தமான குதிரை லாயத்தில் கொண்டு விடுமாறு கூறினார்.
குதிரையும் வந்து சேர்ந்தது.
பின்னர் இருவரையும் ஒரு வாரம் கழித்து தன்னைப் பார்க்குமாறு கூறினார்.
ஒரு வாரம் கழிந்தது. இருவரும் வந்தனர்.
“இப்போது உங்கள் குதிரை லாயம் சென்று உங்கள் குதிரையை அடையாளம் கண்டு பிடித்துப் பாருங்கள்” என்றார் பீர்பல்.
முதலில் குதிரையைத் திருடியன் குதிரை லாயம் சென்றான்.
அங்கு நூற்றுக் கணக்கான குதிரைகள் இருந்தன.
விரைவாக ஒவ்வொரு குதிரையாகப் பார்த்த அவன், “ஒரு குதிரையைக் காட்டி இது தான் என் குதிரை” என்றான்.
பிறகு குதிரைக்குச் சொந்தக்காரன் குதிரை லாயம் வந்தான்.
அவனும் தனது குதிரையைப் பார்த்து விட்டு, “இது தான் எனது குதிரை” என்று அடையாளம் காட்டினான் தன் குதிரையை.
பீர்பல் இருவருடன் கூடவே சென்றார்.
பின்னர் குதிரையை அதன் நிஜமான சொந்தக்காரரிடம் தர ஏற்பாடு செய்தார்.
குதிரையைத் திருடியவன், “நான் தானே முதலில் குதிரையை அடையாளம் காட்டியவன். என்னை எப்படிப் புறக்கணிக்கலாம்” என்று வாதிட்டான்.
பீர்பல் கூறினார் : “நான் உங்களை குதிரையை அடையாளம் காண்பிக்கச் சொன்னது நீங்கள் குதிரையைக் கண்டுபிடிக்கிறீர்களா என்று பார்க்க அல்ல; நீங்கள் குதிரையைப் பார்க்கும் போது அது எப்படி உங்களைப் பார்க்கிறது என்பதைப் பார்க்கத் தான். நீ பார்த்த போது குதிரை ஒரு வித உணர்ச்சியையும் காண்பிக்கவில்லை. ஆனால் நிஜமான சொந்தக்காரனைப் பார்த்த போது உற்சாகமாக கனைத்து குதித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தது. ஆகவே தான் அவனிடம் குதிரையைக் கொடுக்கச் சொன்னேன்” என்றார்.
அக்பர் பீர்பலின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டினார்.
I gave a brief description about Ganapathi Homam yesterday. Let us look at Nava Graha Homam today.
Hindus were more scientific than any other ancient community. They named the heavenly bodies Graha ( now wrongly translated in English as Planets). The real meaning of Graha is ‘heavenly bodies with Gravity’. Issac Newton did not discover gravity. Hindus discovered it and named them ‘Grahas’ thousands of years ago. We use that word today in Grahanam (eclipse), Pani Grahanam/holding hand= i.e. wedding etc. Real meaning is that which attracts, grips, holds, grabs.
English words Grab, Grip, Gravity are all derived from Sanskrit Graha. Hindus knew Guru/Jupiter is the largest planet and named it Guru= heavy.
xxxx
Now to the Nava Braha Homam
Next to Ganapathi Homam, Nava Graha Homam (havan) is the important one. All new ventures begin with Ganapathi Homam and Nava Graha Homam.
xxxx
What is the benefit?
Some people may have certain Grahas in weaker positions in their birth charts knowns as Jaataka or horoscope and they may cause evil effects; to avoid such evil influence of grahas we do this Havan . Those grahas in favourable places in the horoscope will be boosted and encouraged to give the performer more benefits. When one does it for the family, the whole family gets the benefits.
xxxx
What is it?
In this fire ceremony, Nine Planets (actually heavenly bodies) are worshiped. They use Nine different diagrams, nine colour cloths, nine different grains, nine different wooden sticks, Nine Prasads etc. Priests recite hymns praising Nine Grahas: Sun, Moon, Mars, Mercury , Venus, Jupiter, Saturn Rahu, and Ketu.
It will take more time than Ganapathi Homam. Both can be finished within three hours. Advance preparations will reduce this time.
xxxx
Navagrahas in Ashmoleon Museum, Oxford.
How do they do it?
The priests invoke Varuna/God of Water and Nine Grahas in the metal pot filled with water in which spices like cardamom and cloves are put. All the deities who control the nava/nine grahas are also invoked. Coconut with Mango leaves are placed on the mouth of the pot. It is placed on Banana leaves spread with rice. On top of banana leaves two measures of rice is spread then the Purna Kumbha (metal pot usually made up of silver or brass ) is placed. After finishing the mantra the holy water is sprinkled on everyone present there.
xxx
Following are required for the Navagraha Homam
I am giving nine grahas and their favourite things below; the priest will put the grains and the sticks along with ghee.
So ghee (clarified butter is required along with the things mentioned below. Certain Hindu shops sell them as a pack; if one says ‘it is for Navagraha homa’, they will give the pack; Havan Samagri is sold on line too)
Xxxx
Priest offer the wooden sticks reciting the mantras eight times.
In the following, please focus on FOUR things only: Grains, Colour cloths, particular wooden sticks/twigs and Prasad. Rest is only for information.
(Please note Hindu zodiac signs are different from western)
Gem stone – Gomedaka/hessonite garnet
Grain – black gram whole/ urad dhal
Samittu / wood stick – Arukam pul/ dhurva grass
Naivedya / prasad – rice mixed with urad dhal
Cloth or blouse piece required –gray/ smoky
Devata in charge of sun – God Mrtyu
Xxxx
Ketu / shadows/ Chaayaa graha
Diagram –flag
Vahana – chitra kapotha/ pigeon
Zodiac sign ruled by moon – mesham / aries
(Please note Hindu zodiac signs are different from western)
Gem stone – vaidurya / cat’s eye gem
Grain – horse gram
Samittu / wood stick – dharba grass
Naivedya / prasad – chitrannam/ colour rices
Cloth or blouse piece required –multi colour
Devata in charge of sun – God Chitra gupta
Xxxxxx
If nine different sticks are not available priests use Peepal/ Pipal (Ficus religiosa) sticks/ twigs
General list
Please make sure the following are available :
We need fire sticks (Samith), Ghee (clarified Butter) for burning the offered things.
Flowers, Coconuts, Fruits, Kunmum/vermillion powder, Chandan/sandal, Vibhuti/holy ash, Incense sticks, Lamps with oil and wick, plates, metal pots (Kumbha, Kalasa) ,fresh coconuts, mango leaves, Turmeric, Payasam/sweet liquid, Sugar candy, nuts and dry fruits , metal plates, Bell, rose water, saffron, cardamom, cloves are needed for all Pujas. South Indians add Betel leaves and Betel nuts (Paan/Supaari) , in the plate. Banana leaves if available.
Priests will ask for some rice, paddy and turmeric powder.
Turmeric powder is used to make Ganesh, just one inch high.
Most of the times priests bring the Havan Vessel (Homa Gundam). But it is better to keep Foil paper, some sand or bricks to use as base for the Havan Vessel. It will keep the floor safe.
In places where the Fire Alarm cannot be switched off, priest will do simple fire ceremony symbolically with Dharba grass. Priests always carry Dharba grass, Pavitram (ring made up of Dharba), Sacred thread etc
Better talk to the priest in advance about the preparations.
5.உலகிலேயே ஒரு நாட்டின் தலைவருக்குள்ள பெரிய வீடு எது ?
6.சந்திர குப்தனின் சம்ஸ்க்ருதக் கல்வெட்டு உள்ள உலக அதிசயம் எது ?
7.செங்கோட்டையில் ஆண்டுதோறும் என்ன நடைபெறும் ?
8.கடும் குளிரில் கம்பளிப் போர்வையுடன் ஜனவரி 26-ம் தேதி லட்சக் கணக்கானோர் டில்லி சாலைகளில் சந்திப்பது ஏன்?
9.ஆக்ராவிலுள்ள தாஜ் மஹால் வடிவம் போலுள்ள டில்லிக் கட்டிடம் எது?
10.டில்லியிலுள்ள அக்ஷர்தாம், ராஜ்கட், சாந்தினி செளக்,லோட்டஸ் டெம்பிள் ஆகிய இ டங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வது ஏன் ?
XXXXX
விடைகள்
1.ஹிந்து அரசார்கள் கட்டிய வானாராய்ச்சி நிலையயம் . டில்லி, ஜெய்ப்பூர் , உஜ்ஜைனி , மதுரா, காசி ஆகிய இடங்களில் ஜந்தர் மந்தர் உள்ளது
2.இந்திரப்பிரஸ்தம் ;பாண்டவர்களின் தலைநகர்
3.1911-ம் ஆண்டு டிசம்பரில் பிரிட்டிஷ்காரர்கள் டில்லியை மீண்டும் தலைநகர் ஆக்கினர். அதுவரை கல்கத்தா , பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக இருந்தது .
4.பிரதமந்திரியின் முகவரி 7. லோக கல்யாண் மார்க், டில்லி
xxxxxxx
5.ராஷ்ட்ரபதி பவன். உலகில் வேறு எந்த நாட்டுத் தலைவருக்கும் இவ்வளவு பெரிய வீடு இல்லை . இந்திய ஜனாதிபதி அதிர்ஷ்டசாலி
XXXX
6.டில்லியில் குதுப்மினார் கோபுரத்துக்கு எதிரேயுள்ள 2000 ஆண்டுப் பழமையான இரும்புக் கம்பம் துருப்பிடிக்கவில்லை. இந்துக்களின் ரசாயன அறிவுக்கு சான்று பகரும் இதில் இரண்டாவது சந்திர குப்தனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு இருக்கிறது .
XXXX
7. செங்கோட்டையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பிரதமந்திரி கொடிஏற்றுவார். பின்னர் சொற்பொழிவு ஆற்றுவார்
XXXX
8.ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி காலையில் குடியரசுதின அணிவகுப்பு நடைபெறும்; உலகின் முக்கியப்பிரமுகர்கள் விருந்தினராக அழைக்கப்படுவார்கள் ; அவர்களுக்கு ராஷ்டிராபதி விருந்து கொடுப்பார் குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார வண்டிகள் பவனி வரும். முப்படைகளும் அதி நவீன ஆயு தங்களுடன் .அணிவகுத்துச் செல்லுவார்கள்
XXXX
9.ஹூமாயூன் கல்லறை தாஜ்மஹாலின் முன்னோடி. அதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டது .
XXX
அக்ஷர்தாமில் அண்மைக்காலத்தில் கட்டிய பிரம்மாண்டமான குஜராத்தி சுவாமிநாராயன் கோவிலும், ராஜ் காட்டில் காந்தி சமாதியும், சாந்தினி செளக்கில் மொத்த வியாபார மார்க்கெட்டும் ,
லோட்டஸ் டெம்பிள் என்ற பெயரில் தாமரை வடிவிலுள்ள கட்டிடத்தில் பஹாய் முஸ்லீம்களின் வழிபாட்டுத் தலமு ம் உள்ளன டில்லிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இவைகளைக் காணச் செல்கின்றனர் .
–SUBHAM—Tags- டில்லி, ஜந்தர் மந்தர் , குதுப்மினார், இரும்புத் தூண், பிரதமர் வீட்டு முகவரி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
சுபாஷித செல்வம்
இளமையும் கவிதையும்!
ச.நாகராஜன்
இளமையும், கவிதையும்!
நெருங்கி வரும் நெருக்கம் இருக்கிறது – நட்பு போல
மிக நல்ல அலங்காரமும் இருக்கிறது
கவர்ந்திழுக்கும் நடையும் உண்டு
நண்பரே, யாரைப் பற்றி இங்கு நாம் பேசுகிறோம்?
இள்மையைப் பற்றிப் பேசுகிறோமோ?
இல்லை, இல்லை நண்பரே, நாம் பேசுவது இங்கு கவிதையைப் பற்றி!
நெருங்கி வரும் நெருக்கம் – நல்ல அக்ஷரங்கள்!
நல்ல அலங்காரம் – Figures of Speech- பல்வேறு அணிகள்
கவர்ந்திழுக்கும் நடை – நல்ல சந்தம், நடை
இவை அனைத்தும் கவிதைக்கு உண்டு அல்லவா!
அதைப் பற்றித் தான் சொல்கிறோம்!
சுபாஷிதம் இதோ:
அக்ஷரமைத்ரீபாஜ: சாலங்காரஸ்ய சாருவ்ருத்தஸ்ய |
கிம் ப்ரபோ சகி யூநோ ந ஹி ந ஹி சகி பத்யபந்தஸ்யா ||
*
இரண்டு எழுத்துக்கள்!
அக்ஷரத்வயமம்யஸ்தம் நாஸ்தி நாஸ்தீதி யத் புரா |
ததிதம் தேஹி தேஹிதி விபரீதமுபஸ்திதம் ||
என்னிடம் ஒன்றும் இல்லை (நாஸ்தி), என்னிடம் ஒன்றும் இல்லை (நாஸ்தி), என்ற இரு வார்த்தைகளை விட்டு விட்டால் பின்னர் அதற்கு எதிராக இருக்கும் கொடுக்க வேண்டியது தானே, கொடுக்க வேண்டியது தானே (தேஹி, தேஹி) என்ற வார்த்தைகள் அருகே இருக்கும்.
(இரண்டு வார்த்தைகள் என்பது இரண்டு எழுத்துக்களையே இங்கு குறிக்கிறது)
*
அரசன் அழியக் காரணங்கள்!
அக்ஷேஷு ம்ருகயாயாம் ச ஸ்தீரிஷு பானே வ்ருதாடனே |
நித்ராயாம் ச நிபந்தேன க்ஷிப்ரம் நஷ்யதி பூபதி ||
சூதாடுதல், வேட்டையாடுதல், பெண்கள் மோகம், குடித்தல், வாழ்க்கை இன்பங்களை அனுபவித்தல், தூக்கம் – ஆகிய இவற்றில் ஈடுபட்டிருக்கும் ஒரு அரசன் நாசமடைவான் – சாணக்யரது கூற்று இது.
*
ஓ, கிளியே, உனது இனிய குரலின் பரிசு உனக்கு சிறை ஆயிற்றே!
மற்ற எல்லா பறவைகளும் சுதந்திரமாக இருக்கும் போது, ஓ, கிளியே, உனது இனிய குரலுக்குப் பரிசாக நீ கூண்டில் சிறை வைக்கப்பட்டிருக்கிறாயே!
சமுத்திரத்தில் ஏராளமான நீர் இருக்கிறது. ஆனால் அவ்வளவும் உப்பு நீர்.
தாகத்துடன் இருக்கும் ஒருவனுக்கு அவ்வளவு நீர் இருந்தும் பயன் என்ன?
ஒன்றுமில்லை.
ஆனால் அதே சமயம் கேணி ஒன்றில் முழங்கால் அளவு நீர் தான் இருக்கிறது. அளவு குறைந்து இருக்கிறது என்றாலும் கூட தாகத்தைத் தணிக்கும் (இனிய) நீராக அது இருக்கிறதே!