பெண்கள் பருவமடைதல் பற்றி அறப்பளீசுர சதகம் (Post.11,664)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,664

Date uploaded in London – –  13 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

இரண்டு பாடல்களில் கவிராயர் Adults Only ‘அடல்ட்ஸ் ஒன்லி’ விஷயம் பற்றிக் கதைக்கிறார். இது பற்றி சம்ஸ்க்ருத நூல்களில் படித்த நினைவு இல்லை; ஒருவேளை தமிழர்கள் மட்டுமே Specialise ‘ஸ்பெஷலைஸ்’ செய்த விஷயமாக இது இருக்கலாம்.

பெண்கள் ஞாயிறு, செவ்வாய், சனிக்கிழமைகளில் பூப்படைதல்

தீமை; மற்றக் கிழமைகள் நலம்.

பெண்கள் மேடம், இடபம், கடகம், சிங்கம், விருச்சிகம், தனுசு,

மகரம் ஆகிய இராசிகளிற் பூப்படைதல் தீது : மற்றவை நலம்.

இப்படி அவர் சொன்னாலும் யாரும் இது சரியா, தவறா என்று ஆராய்ந்து புள்ளிவிவரம் சமர்ப்பிக்கவில்லை. அப்படி விவரம் கிடைக்கும் வரை இதை அதிகமாகப் பொருட்படுத்த வேண்டியது இல்லை என்பது என் சொந்தக்கருத்து.

பிராமணரல்லாத ஜாதிகளில் பெண் (daughter)  பிறந்த நேரத்தைவிட பூ ப்படையும் நேரம் முக்கியமாகக் கருதப்படுகிறது. மேலும் இந்து மதத்தில் எல்லாவற்றிலிருந்தும் விடுபட ஒரு சுறுக்கு வழி  கண்டு பிடித்திருக்கிறார்கள்.அதாவது தவறான நேரத்தில் ஒன்று நடந்தால் அதன் தீய விளைவுகளைத் தவிர்க்க பரிகாரம் (atonement) என்று ஒன்று இருக்கிறது.

இப்படி ஐயருக்கு தட்சிணையோ அல்லது பொருள் தானமோ கொடுப்பதில் தெய்வீக பலன்கள் இருக்கிறதோ இல்லையோ, Psychological சைக்கலாஜிக்கல் — உள்ள இயல் ரீதியாக- பலன் உண்டு. கெட்ட கிழமைகள் என்று சொல்லப்பட்ட நாட்களில் பருவம் எய்திய பெண்களும் பயப்படமாட்டார்கள் அவர்கள் கவலை  கொஞ்சமாவது அகலும்.

எடுத்துக் காட்டாக நான் விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் BOOK ‘புக்’ செய்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். விமானம் புறப்படும் நேரமோ, அல்லது நான் வீட்டிலிருந்து டாக்சியில் ஏறும் நேரமோ, அல்லது ஒரு மணி நேரம் பயணம் செய்து ஏர்போர்ட்டுக்குள் நுழையும் நேரமோ அல்லது முதல் முதலில் ஒரு மாதத்துக்கு முன்னர் டிக்கெட் ‘புக்’ செய்த நேரமோ ஏதாவது ஒன்று ராகு காலம், எம கண்டம் நேரமாக இருக்கலாம். அல்லது புறப்படும் நாள் நல்லதாக இல்லாமல் இருக்கலாம். இதையெல்லாம் பார்த்தால் , எல்லாவற்றையும் பற்றிக் கவலைப்பட்டால் , பழைய கால கிராமீய வாழ்வு வாழ வேண்டியிருக்கும். ஒரு கிராமத்தை விட்டு அடுத்த ஊருக்குப்போக அந்தக் காலத்தில் இப்படி பார்த்திருப்பார்கள் போலும்.

Xxx

அம்பலவாணக் கவிராயர் இயற்றிய அறப்பளீசுர சதகம்

69. பூப்பு வாரம்

அருக்கனுக் கதிரோகி யாவள்;நற் சோமனுக்

     கானகற் புடைய ளாவாள்;

  அங்கார கற்குவெகு துக்கியா வாள்;புந்தி

     அளவில்பைங் குழவி பெறுவாள்;

திருத்தகு வியாழத்தின் மிக்கசம் பத்தினொடு

     சிறுவரைப் பெற்றெ டுப்பாள்;

  சீருடைய பார்க்கவற் கதிபோக வதியுமாம்;

     திருவுமுண் டாயி ருப்பாள்;

கருத்தழிந்து எழில்குன்றி வறுமைகொண்டு அலைகுவாள்

     காரிவா ரத்தி லாகில்;

  களபமுலை மடமாதர் புட்பவதி யாம்வார

     காலபலன் என்று ரைசெய்வார்;

அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே!

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே –

அன்புடன் எளிய என்னை அடிமையாக ஏற்ற பேரொளியே!; அருக்கனுக்கு

அதிரோகி ஆவாள் – ஞாயிற்றுக் கிழமையில் மிகுநோயுடையவள் ஆவள்,

நல்சோமனுக்கு ஆனகற்பு உடையவள் ஆவாள் – நல்ல திங்களில்

மிகுதியான கற்புடையவள் ஆவாள், அங்காரகற்கு வெகு துக்கி ஆவாள் –

செவ்வாயில் மிகுந்த வருத்தமுடையவள் ஆவாள்,புந்தியில் அளவுஇல் பைங்குழவி பெறுவாள் – புதனில் மிகுதியான

குழந்தைகளைப் பெறுவாள், திருத்தகு வியாழத்தில் மிக்க சம்பத்தினொடு

சிறுவரைப் பெற்றெடுப்பாள் – சிறப்புற்ற வியாழனில் அளவற்ற செல்வத்துடன் மக்கட்பேறும் உடையவளாயிருப்பாள், சீருடைய பார்க்கவற்கு அதிபோகவதியும்ஆம்; திருவும் உண்டாயிருப்பாள் – புகழ்மிக்க வெள்ளியில் மிகவும் இன்பமுடையவளும் செல்வமுடையவளும் ஆவாள், காரிவாரத்தில் ஆகில்கருத்து அழிந்து எழில்குன்றி வறுமைகொண்டு அலைகுவாள் – சனிக்கிழமையில் ஆனால் மனங்கெட்டுஅழகிழந்து, வறுமையுடன் திரிவாள்,

களபமுலை மாதர் புட்பவதிஆம் வார காலபலன் என்று உரைசெய்வார் –

கலவைச் சந்தனம் பூசிய கொங்கையையுடைய பெண்கள் பூப்படைகிற

வாரகால பலன் (இவை) எனக் (கற்றவர்) கூறுவர்.

Xxxxxx

பெண்கள் மேடம், இடபம், கடகம், சிங்கம், விருச்சிகம், தனுசு,

மகரம் ஆகிய இராசிகளிற் பூப்படைதல் தீது : மற்றவை நலம்என்பது அடுத்த பாடலின் கருத்து  அதாவது 12 லக்னப்படி பலன்.. மேலேயுள்ள பாடலுக்கு நான் சொன்ன கருத்து இதற்கும் பொருந்தும்

           70. பூப்பு இலக்கினம்

வறுமைதப் பாதுவரும் மேடத்தில்; இடபத்தில்

     மாறாது விபசா ரிஆம்;

  வாழ்வுண்டு போகமுண் டாகும்மிது னம்; கடகம்

     வலிதினிற் பிறரை அணைவாள்;

சிறுமைசெயும் மிடிசேர்வள் மிருகேந் திரற்கெனில்

     சீர்பெறுவள் கன்னி யென்னில்;

  செட்டுடையள் துலையெனில்; பிணியால் மெலிந்திடுவள்

     தேளினுக் குத்; தனுசுஎனில்

நெறிசிதைவள், பூருவத் தபரநெறி உடையளாம்;

     நீள்மகரம் மான மிலளாம்;

  நிறைபோக வதிகும்பம் எனில்; மீனம் என்னிலோ

     நெடியபே ரறிவு டையளாம்;

அறிவாளர் மடமாதர் தமையறி இராசிபலன்

     அதுவென்பர்; அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அருமை ……. தேவனே!, மேடத்தில் வறுமை தப்பாது வரும்

– மேடஇராசியில் (பூப்படைந்தால்) தவறாமல் வறுமை உண்டாகும், இடபத்தில் மாறாது விபசாரி ஆம் – இடபராசியில் தவறாமல் தீய ஒழுக்கமுடையளாவள்,

மிதுனம் வாழ்வு உண்டு, போகம் உண்டாகும் – மிதுனத்தில் வாழ்வும்

இன்பமும் அடைவாள்; கடகம் வலிதினில் பிறரை அணைவாள் – கடகத்தில்தானே (கணவன் அல்லாத) மற்றவரைத் தழுவுவாள், மிருகேந்திரற்கு எனில்

சிறுமை செயும் மிடிசேர்வாள் – சிங்கத்தில் இழிவுதரும் வறுமையுடையளாவள்,

கன்னி என்னில் சீர்பெறுவள் – கன்னியில் ஆயின் புகழ்பெறுவாள்,

துலையெனில் செட்டுடையள் – துலையாயின் சிக்கனம் உடையளாயிருப்பாள்,

தேளினுக்குப் பிணியால் மெலிந்திடுவள் – விருச்சிகத்தில் நோயால்

இளைத்திடுவாள், தனுசுஎனில் நெறி சிதைவள், பூருவத்து அபரநெறி

உடையள்ஆம் – தனுசில் ஆனால் ஒழுக்கம் கெடுவாள்முன்னும் பின்னுந் தீயஒழுக்கம் உடையவளாகவே யிருப்பாள், நீள்மகரம் மானம்இலள்ஆம் – பெரிய மகரத்தில் பெருமை இழந்தவள் ஆவாள், கும்பம் எனில்

நிறைபோகவதி – கும்பத்தில் நிறைந்த இன்பம் உடையவள் ஆவாள், மீனம்

என்னிலோ நெடிய பேரறிவு உடையள்ஆம் – மீனத்தில் ஆனால் மிகுந்த

பேரறிவு உடையவள் ஆவாள், மடமாதர் தமை அறிவாளர் அறி இராசிபலன்

அதுஎன்பர் – இளமங்கையரை அறிவாளர் அறிவதற்குரிய இலக்கின பலன் இது என்று கூறுவர்.

     (க-து) பெண்கள் மேடம், இடபம், கடகம், சிங்கம், விருச்சிகம், தனுசு,

மகரம் ஆகிய இராசிகளிற் பூப்படைதல் தீது : மற்றவை நலம்

xxxx

tags– பெண்கள் , பூப்படைதல், பருவமடைதல், அறப்பளீசுர சதகம்

பட்டாடையைக் கிழித்த வெண்ணெய்நல்லூர் சடையப்ப  முதலியார்! (Post 11663)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,663

Date uploaded in London –  13 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 தொண்டைமண்டல சதகம் பாடல் 51 

பட்டாடையைக் கிழித்துக் காட்டிய வெண்ணெய்நல்லூர் சடையப்ப  முதலியார்!

ச.நாகராஜன் 

திருவெண்ணெய்நல்லூரிலே வாழ்ந்து வந்த சடையப்ப முதலியார் பெரும் செல்வர். வந்தோருக்கெல்லாம் இல்லை என்று சொல்லாமல் வேண்டுவதைக் கொடுத்து வந்த வள்ளல். அவர் புகழ் சோழ நாடெங்கும் பரவி இருந்தது.

அப்போது புதிதாகப் பட்டம் ஏறிய சோழ ராஜன் சடையப்ப வள்ளலின் புகழைக் கேட்டு ஆச்சரியப்பட்டான். தன்னை ஏன் அவர் வந்து காணவில்லை என்று அவன் எண்ணினான். தனது அதிகாரத்தை வைத்து அவரது பொருளையெல்லாம் சோழன் கவர்ந்து கொண்டான்.

என்றாலும் கூட சடையப்பர் அவனை வந்து காணவில்லை.

அந்தக் காலத்தில் சீனாவிலிருந்து வர்த்தகன் ஒருவன் சோழ தேசம் வந்தான். அவன் தன்னுடன் இழை ஆயிரம் பொன் பெற்ற விசேஷ பட்டாடை ஒன்றைக் கொண்டு வந்திருந்தான்.

அந்தப் பட்டாடையை சோழ மன்னனிடம் அவன் காட்டவே, அதைப் பார்த்து பிரமித்த சோழ மன்னன் அதன் விலையைக் கேட்டான்.

 சீன வணிகனும் அதன் விலையைச் சொன்னான்.

விலையைக் கேட்ட சோழன் திகைத்து விட்டான்.

தன்னிடம் அவ்வளவு செல்வம் இல்லையே என்று எண்ணிய அவன் வணிகனிடம் அது வேண்டாம் என்று சொல்லி விட்டான்.

வணிகன் நேராக வெண்ணெய்நல்லூர் வந்தான். சடையப்பரிடம் பட்டாடையைக் காட்டினான்.

அதன் நேர்த்தியைக் கண்டு மகிழ்ந்த சடையப்பர் அந்தப் பட்டாடையை வாங்கிக் கொண்டார். தரித்துக் கொண்டார்.

இப்படி, தன்னால் வாங்க முடியாத பட்டாடையை சடையப்பர் வாங்கி அணிந்திருக்கிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட சோழ மன்னன் பொறாமையால் மனம் புழுங்கினான். அவரைக் கூப்பிட்டனுப்பினான். ஆனால் அவரோ வரவில்லை.

கோபமுற்ற அவன், உடனடியாக சடையப்பரை தன்னை வந்து காணுமாறு ஆணையிட்டான்.

அவரும் வந்தார்.

“நாம் முன்பு கூப்பிட்ட போது நீர் ஏன் வரவில்லை” என்று கோபத்துடன் கேட்டான் சோழ மன்னன்.

“துடையில் சிலந்தி. ஆகவே தான் வர முடியவில்லை” என்று பதிலளித்தார் சடையப்பர். ஆனால் அதை அரசன் நம்பவில்லை.

இதைப் புரிந்து கொண்டார் சடையப்பர்.

உடனே, தான் அணிந்திருந்த பட்டாடையைக் கீறிக் கிழித்து தன் துடைப்பக்கத்த்தில் சிலந்தியைக் காட்டிய சடையப்பர், “இதனால் தான் வர முடியவில்லை” என்றார்.

 செல்வத்தையெல்லாம் சிறுகச் சிறுகப் பறித்து சடையப்பரை வறுமை நிலைக்குக் கொண்டு வந்து விட்ட போதிலும், அவர் விலை உயர்ந்த இந்தப் பட்டாடையை வாங்கியதை எண்ணிய சோழன் அதையும் கூட கொஞ்சமும் லக்ஷியம் செய்யாமல் கிழித்து விட்டு தனக்கு துடைப் புண்ணைக் காட்டியதைக் கண்டு வியந்து போனான்.

 இப்படிப்பட்ட செய்கையை ஒரு தெய்வீகப் பிரபுவினால் மட்டுமே செய்ய முடியும் என்று எண்ணிய அவன் சடையப்பரை வெகுவாக மதித்து, அவரைத் தானே சென்று காண்பது தான் முறை என்று தேறினான்.

அவரை நன்கு உபசரித்து அனுப்பினான்.

இந்த வரலாறு பெரிதும் பேசப்பட்டது. இதை தொண்டைமண்டல சதகம் தனது 51வது பாடலில் புகழ்ந்து கூறுகிறது.

பாடல் இதோ:

தெள்ளந்தெளிந்தவர் செய்தக்கதோர்முறை செய்யிலையா

எள்ளத்தனை மலையத்தனையாமென்ப தின்றறிந்தோ

முள்ளற்கரிய துடையாடைகீறிய தொன்றுமொரு

வள்ளற்றகைமையோ டொத்துளதாற்றொண்டை மண்டலமே

பொருள் :  நூல்களைக் கற்றுத் தெளிந்த அறிவுடையோர் தாம் செய்யத் தகுந்த செயல்களில் ஒன்றை அவ்வளவாக நிரம்பச் செய்யாமல் ஒரு வகையாகச் சிறிது செய்தாலும் கூட, அது எள்ளத்தனை சிறியதாக இருந்தாலும் கூட, பிறருக்கு அது மலையத்தனை அளவு பெரிதாகும் என்று சொல்வதற்கு உதாரணமாக வெண்ணெய்நல்லூர் சடையப்ப முதலியார் அரசன் சமூகத்தின் முன் தனது துடை ஆடையைக் கிழித்த சிறு செயலினாலேயே கண்டோம். எவ்வாறெனில் அவர் செய்த அந்த சிறு செயலானது அரசனுக்கு பிரமிக்கத் தக்க பெரும் செயலாக இருந்தது. இத்தகைய வேளாண் குடிமையரைக் கொண்டது தொண்டை மண்டலமே.

***

மனு நீதி நூலை எரிக்கலாமா? புதைக்கலாமா? (Post No.11,662)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,662

Date uploaded in London – –  12 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 மனு நீதி நூலை எரிக்கலாமா? புதைக்கலாமா ? என்று ஒரு பட்டிமன் றம்  நடந்தது. அதற்கு நான்தான் நடுவர். எல்லோரும் காரசாரமாக விவாதித்தனர். எல்லோரும் பெண்களைப் பாராட்டும் 4 ஸ்லோககங்களில் ஒற்றை மட்டும் காட்டிவிட்டு மற்ற மூன்றையும் மறைத்துப் பேசினார்கள் . பிராமணாள், சூத்திராள் என்ற 40 ஸ்லோகங்களைக் கதைத்து விட்டு இப்போதே எரிப்போம் ; புதைப்போம் என்றனர் . மனு நீதியில் எவ்வளவு ஸ்லோகங்கள் என்று நான் கேட்டேன் விடை தெரியாமல் எல்லோரும் பேந்தப் பேந்த முழித்தனர் . அவர் சூத்திராள் , பிராமணாள் தவிர வேறு என்ன விஷ்யங்களைக் கதைக்கிறார் என்றேன். அதற்கும் பதில் இல்லை. பிராமணர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் என்ன சொல்கிறார் என்றேன் அதுவும் தெரியவில்லை.

ஏதேனும் அவர் நல்ல விஷயங்களைச் சொல்லி இருக்கிறாரா என்றேன் அவர் அப்படிச் சொல்லக்கூடியவர் இல்லை; ஆகையால் இருக்கவே முடியாது என்றனர்.

நான் சொன்னேன் 40 ஸ்லோககங்களைத் தவிர உங்களுக்கு எதுவுமே தெரியவில்லை . மேலும் அதைப் பின்பற்றியதால் எத்தனை பேர் கொல்ல ப்பட்டார்கள் என்றும் சொல்ல முடியவில்லை. ஆகையால் படித்துவிட்டு  மனு நீதியைப்பின்பற்றியதால் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்று புள்ளி விவரத்தோடு வாருங்கள் என்றேன் . ஏமாற்றத்துடன் திரும்பிப் போனார்கள் . ((இது எல்லாம் என்னுடைய கனவில் நடந்தது. உடனே நானும் மனு நீதி நூலை முழுக்கப் படித்துவிட்டு இரண்டு புஸ்தகங்கள் எழுதினேன்)).

கீழேயுள்ள இரண்டு புஸ்தகங்களைப் படித்துவிட்டு நீங்களும் அடுத்த பட்டிமன்றத்துக்கு வாருங்கள். மனு ஸ்ம்ருதியை எரிக்கலாமா புதைக்கலாமா என்று முடிவு செய்வோம். எனக்குத் தெரிந்து, மனு நீதி நூலைப் பின்பற்றிய ஒரே ஆள் மனு நீதிச் சோழன்தான். அவருக்கோ நாம் சென்னை ஹை கோர்ட்டிலும் திருவாரூரிலும் சிலை வைத்து ‘ஜே’ போட்டுக்கொண்டு இருக்கிறோம்..

இதோ என்னுடைய இரண்டு தமிழ் நூல்கள்; இவை விரைவில் ஆங்கிலத்திலும் வரும். மனு நீதி வேண்டும் என்று நான் எழுதவில்லை. அதில் என்ன இருக்கிறது என்று விமர்சனம் மட்டுமே செய்துள்ளேன்.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph. D அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***** 

BOOK 59

மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் (முதல் பாகம்)

பொருளடக்கம்

1.மனு ஸ்மிருதியில் அதிசயச் செய்திகள்! -Part 1

2.வானத்தில்அதிசய கருந்துளைகள்! கீதை, மனு தரும் தகவல்!!

3.மனு ஸ்மிருதியில் மூன்று மர்மங்கள் – பகுதி 3

4.பூர்வ ஜன்மத்தை அறிய முடியும்: மனு சொல்லும் செய்தி

5. பெண்கள், ரத்தினம், கல்வி: எங்கிந்தாலும் பெறுக!

6.மாபாரதத்தில் 250 மநு நீதிப் பாடல்கள்!- டாக்டர் இராதாகிருஷ்ணன்

7.மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் வழிவிடுங்கள்: மனு கட்டளை

8.மநுவும் ஹமுராபியும்- யார் முதல்வர்?

9.மனுவுக்கு நோபல் பரிசு தரலாமே!

10.மனு நீதியைக் கம்பன் புகழ்வது ஏன்?

11.கல்வி கற்பது பற்றி மனு, நெடுஞ்செழியன்,

சாணக்கியன், வள்ளுவன் ஒரே கருத்து!

12.ஐயர்களுக்கு வரி விதிக்காதே! மனு தடாலடி!!

13.புகழ் பெற்ற லண்டன் சர்ச்சில் மநு நீதி நூல்!

14.பிலிப்பைன்ஸ் நாட்டில் மநுவின் சிலை

15.நூறு வயதானவர்களின் மகிமை!

16.திருடர்கள் இரண்டு வகை! ஜோதிடர்கள் மீது மனு தாக்குதல்!

 17.நாஸ்தீகருக்கு மனுவும் வள்ளுவரும் தரும் சவுக்கடி!

18.மனு நீதி நூல்- உலகின் முதல் சட்டப் புத்தகம்- Part 1

19.சுவர்க்கமும் பூமியும் உருவான வரலாறு; மனு நீதி நூல் – பகுதி 2

20.கிரஹங்கள் நட்சத்திரங்கள் படைப்பு மனு நீதி நூல்-பகுதி 3

21.மனு தர்மத்தில் விலங்கியல் தாவரவியல் விஞ்ஞானம் மனு நீதி நூல்-4

22.காலக் கணக்கு: 30 முகூர்த்தம்= ஒரு நாள், மநு நீதி நூல்-5

23.கிருத யுகத்தில் மனிதனுக்கு 400 வயது! மநு நீதி நூல்-6

24.பிராமணர்களுக்கு ஜே! மநு நீதி நூல்-7

25.தர்மத்தின் நான்கு அடையாளங்கள்; மநு நீதி நூல்-8

26.கறுப்பு மான், ஸரஸ்வதி நதி மர்மங்கள்! ஆயுர்வேத ரஹசியங்கள்!

27.பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்ரர் பெயரிடும் முறை

28.எந்த திசை நோக்கி அமர்ந்து உண்டால் என்ன கிடைக்கும்? மநு தரும் அதிசய தகவல்!

29.காயத்ரீ மந்திரம் ஒன்றே போதும்- மநு அடித்துச் சொல்கிறார்!

30. வேதம் பிராஹ்மணனிடம் என்ன சொன்னது?

(நூலின் இரண்டாம் பகுதி தனி நூலாக வெளியிடப்பட்டுள்ளது.)

*******************

மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் ( இரண்டாம் பாகம் )

பொருளடக்கம்

மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் ( இரண்டாம் பாகம் )

1.பெரியோருக்கு வந்தனம் சொன்னால் என்ன கிடைக்கும்? மநு பதில்

2.மாணவர்களை அடிக்காதே, திட்டாதே- மநு நீதி நூல்

3.கழுதை, நாய், புழு, பூச்சி– ஆகப் பிறக்கும் மாணவர் யார்? மநு பதில்

4.செக்ஸ் தாக்குதல் பற்றி மநு முன் எச்சரிக்கை

5..வேதம் படிக்க 36 ஆண்டு! யாரைக் கல்யாணம் கட்டலாம்?

6.தொல்காப்பியரும் மநுவும் சொல்லும் எட்டு வகைத் திருமணங்கள்

7.ஆண் குழந்தை பெற வழி! SEX செக்ஸ் பற்றி மநு

8.ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் மட்டுமே உள்ள கருத்து விருந்தோம்பல்!

9.அமாவாஸை சிரார்த்தம் பற்றி மநு

10.டாக்டர்கள், ஜோதிடர்கள், நடிகர்களுக்கு மநு தடை!

11.இறந்துபோன முன்னோருக்கு சூடான உணவும்,

நதிக்கரை சாப்பாடும் பிடிக்குமாம்

12.மநுவின் 4 கேள்விகளும் 4 அதிசயப் பிரார்த்தனைகளும்!

13.பிராமணர்கள் என்ன செய்யக்கூடாது? மநுவின் தடாலடி!

14. இருபத்தியோரு  வகை நரகங்கள் – மனு எச்சரிக்கை

15.வார விடுமுறையைக் கண்டுபிடித்த இந்துக்கள்!

16.அதர்மம் செய்பவன் குடும்பதோடு அழிவான்-

மநு பயங்கர எச்சரிக்கை!

 17.எறும்பு போல சிறுகச் சிறுகச் சேர்- மநு புத்திமதி

18.வெங்காயம் சாப்பிடுபவன் பிராமணன் இல்லை- மநு சவுக்கடி

19.பிறப்பு, இறப்பு தீட்டு யார் யாருக்கு? எவ்வளவு காலம்?

20.கலைஞரின் கை எப்போதும் சுத்தமானது-மநு சர்ட்டிபிகேட்

21.வள்ளுவனும் ஏசுவும் மநு நூலைக் ‘காப்பி’ அடித்தார்களா?

22.இல்லறமே நல்லறம்- பத்து கட்டளைகள்

23.ஆளும் கட்சியின் 18 கெட்ட செயல்கள்

24.வாழ்க்கையில் முன்னேற மநு தரும் 4 டிப்ஸ்!

25.விஷ முறிவுக்கு ரத்னங்கள், மூலிகைகள்

26.பிராமணன் எப்போது சூத்திரன் ஆகிறான்? நீதிபதிகளுக்கு மநு அறிவுரை

27.மநு சொல்லும் இரண்டு அதிசயக் கதைகள்!

28.மநு சொல்லும் அதிசய சிவப்பு ஆடை உறுதி மொழி

29. பெண்களுக்கு சுதந்திரம் உண்டா? மநு சொன்னது பற்றி சர்ச்சை

30.மநு நீதி நூலில் சினிமாப் பாட்டு, பாரதியார் பாட்டு வரிகள்!

31.ஆண் குழந்தைக்கு ஏன் மதிப்பு அதிகம்?

32.மநுவை வள்ளுவர் ‘காப்பி’ அடித்தாரா?

33.பிராமணர், க்ஷத்ரியர், வைசியர் வேதம்

படிக்க வேண்டும் – மநு கட்டளை

34.மாமிசம் சாப்பிட்ட பிராமணர்கள்- மநு தரும் ‘லிஸ்ட்’

35.எதிரிகளை ஒழிக்க அதர்வண வேதத்தை பயன்படுத்து- மநு

36.பிராமணர்களுக்கு மரண தண்டனை பற்றி மநு !

37.பிராணிகளும் தவம் செய்து சொர்க்கத்துக்குப் போகின்றன-மனு

38.பாம்பு, பல்லி, பன்றி, நாய், கழுதையாக யார் பிறப்பர் ?- மநு தரும் பட்டியல்

39.வேதமே கடவுள், மனிதர் ஆகியோரின் கண்கள்- மநுநீதி நூல் நிறைவு

******************** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

 tags-   எரிக்கலாமா ,புதைக்கலாமா,மனு நீதி நூல்,  அதிசயச் செய்திகள்

புது வீட்டுக்குக் குடி போகக் கூடாத மாதங்கள்: அம்பலவாணர் கூறும் அதிசயக் காரணங்கள் (11,661)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,661

Date uploaded in London – –  12 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

(எச்சரிக்கை : இந்தக் கட்டுரையில் நைசாக , நாசூக்காக என் சுய சரிதையையும் கொடுத்துள்ளேன் ; அடைப்புக்குறிக்குள் நான் நுழைத்திருக்கும் விஷயங்களை படிப்பதும் படிக்காததும் உங்கள் இஷ்டம்)

xxxx

அறப்பளீசுர சதகம் இயற்றிய அம்பலவாணக் கவிராயர் , புகழ் பெற்ற அருணாசலக் கவிராயரின் புதல்வர் ஆவார். அவர் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த தமிழ்ப் புலவர் . அவர் சொல்லும் புராண நிகழ்ச்சிகளின் காலம் (மாதங்கள்) இதுவரை பாரும் அறியாத விஷயம் ஆகும். சித்திரைவைகாசிஆவணிஐப்பசிகார்த்திகைதை மாதங்களில் புது வீட்டுக்குக் குடிபோகலாம் என்று செப்புகிறார்.

Xxxx

   அடுத்த பாடலில் விருந்து உண்ணவும் செய்யவும் ஞாயிறுசெவ்வாய், வியாழன் தகாதவை; மற்றவை நலமானவை என்கிறார்.

நான் பிராமண குடும்பத்தில் பிறந்தாலும் இந்த விஷயத்தை அறியேன். குடிபோகக்கூடாத மாதங்கள் தெரியும். ஆனால் அதற்குப் புலவர் சொல்லும் கரணங்கள் எனக்குப் புதுமையானவை..

xxxx

என் சுய சரிதை

((ஒரு முறை ஒரு இலங்கைத் தமிழ் டாக்டர் என் வீட்டுக்கு வந்து என்னைச் சந்திக்க விரும்பினார். நான் ஒவ்வொரு நாளாகச்  சொல்ல அவர் அந்த நாட்களில் வேலை இருக்கிறதே என்று தட்டிக்கொண்டே வந்தார். அதற்கென்ன வியாக்கிழமை வாருங்கள் என்றேன். அவர் பதறிப்போய், “முடியவே முடியாது; எந்தக் கிழமை போனாலும் நாங்கள் வியாழக்கிழமை முதல் சந்திப்பை வைக்க மாட்டோம்” என்றார். அப்போதுதான் எனக்கு வியாக்கிழமை பற்றித் தெரிந்தது. பொதுவாகப்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று பலரும் பாராட்டுவார்கள். மனித குலம் முழுதும் இப்படி எவ்வளவோ வினோதமான நம்பிக்கைகள்! மேலை நாடுகளில் 13-ம் ஆம் எண் அறை  கிடையாது . 666 என்ற எண் பேயின் எண் என்பார்கள்.

xxxx

நான் லண்டனில் உலக இந்து மஹாசங்கத்தின் செயலாளர்.

ஒரு நிகழ்ச்சிக்கு நான் தயாரித்த இந்து மஹா சங்க அழைப்பிதழில் பார்டர் border  முழுதும் ஸ்வஸ்திகா Swastika  Symbol சின்னம் போட்டு அலங்கரித்து இருந்தேன். மேற்கூறிய  டாக்டர் எனக்கு போன் செய்து அவருடைய வெள்ளைக்கார (டாக்டர்) நண்பர்கள் அந்த அழைப்பிதழைப் பார்த்து அதிர்ச்சியுற்றதாகவும், அது பயங்கரமான சின்னம் என்றும் கூறினார்.

ஆரியன் என்ற சொல்லையும், ஸ்வஸ்திகாவையும் ஹிட்லர் (Hitler) பயன்படுத்தியதால் வந்த வம்பு அது. நான் சொன்னேன்  ; இந்துக்களுக்கு அது மிகவும் புனிதமான சின்னம். இந்தியன் எக்ஸ்பிரஸ் குரூப் பத்திரிக்கைகளின் அதிபர் ராம்நாத் கோயங்காவின் குடும்ப கல்யாண அழைப்பிதழ் எங்கள் வீட்டுக்கு வந்தபோது அதில் பெரிய ஸ்வஸ்திகா சின்னம்தான் இருந்தது என்று குறிப்பிட்டேன். இந்தியாவில் வடக்கத்தியர் வீடுகளிலும் கடைகளிலும் ஸ்வஸ்திகா சின்னம் சுவற்றில் வரையப்பட்டிருக்கும் .

கார்த்திகை நட்சத்திரம், செவ்வாய்க் கிழமைகளில் எங்கள் குடும்பத்தினர் எந்த புது விஷயங்களையும் செய்ய மாட்டோம்.

இந்திய அமைதிப்படை இலங்கைக்குள் நுழைந்ததும் கார்த்திகை நட்சத்திரத்தன்றுதான். அது எனக்குத் தெரியாது. காஞ்சி சங்கராசார்யார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் , “அடாடா ! கார்த்திகை நட்சத்திரத்தன்று போகிறார்களே” என்று வருத்தப்பட்டதாக பின்னர் ஒருவர் கூறினார்.

அவரவர் நம்பிக்கை, அனுபவத்தின் பேரிலும், காலாகாலமாக இருந்துவரும் நம்பிக்கைகளின் அடிப்படையிலும் எழுகின்றன தமிழ் சம்ஸ்க்ருத இலக்கி யம் முழுவதிலும் தும்மல், கண்துடிப்பு (Sneezing, Eye Twitching) பற்றி ஒரே மாதிரியான நம்பிக்கைகள் இருக்கின்றன. ஆனால் மேலை நாட்டில் அப்படி இல்லை.

இதே போல, அம்பலவாணர், சில விஷயங்களுக்குக் காரணம் சொல்கிறார். சில விஷயங்களுக்கு சொல்லுவதில்லை.

திருமூலரும் சம்ஸ்க்ருத நூல்களும் பயணம் செய்யக்கூடாத திசைகளை வார சூலை என்று குறிப்பிட்டுள்ளனர்.. எதையும் பின்பற்றுவதும் புறக்கணிப்பதும் அவரவர் இஷ்டம்.

Xxxx

எனக்கு அடிக்கடி போன் செய்து பல்வேறு விஷயங்களைக் கதைக்கும் ஐயங்கார் இளைஞன்,  ஒரு நாள் போன் செய்து நாம் எல்லோரும் X Y Z செய்கிறோமே; என் நண்பன் சொல்கிறான் ; அப்படிச்செய்தால்  நாம் பிராமணர் இல்லையாமே என்றான்.

எனக்கு ஒரே சிரிப்பு !

நான் கேட்டேன்- உன் நண்பரும் அவரது மனைவியும் லண்டனில் இருக்கிறார்களா ? என்று

ஆமாம், ஆமாம் இங்கேதான் இருக்கிறார்கள் என்றார். நாளைக் காலையில் இரண்டு பேரும் இந்தியாவுக்கு டிக்கெட் வாங்கிச் செல்ல வேண்டும் என்று ஒரு பெரிய பிராமண அறிஞர் சொன்னார் என்று சொல் என்றேன்.

அவர் பதறிப்போய் What? What? வாட், வாட், என்றார் .

திருப்பியும் அதையே அழுத்தம் திருத்தமாக சொல்லி பிராமணர்கள் கடல்கடந்து போகக்கூடாது என்று மனு நீதி நூல் சொல்கிறது. பெண்கள் கடல் கடந்து போகக்கூடாது என்று தொல்காப்பியம் சொல்கிறது. அவர் சாஸ்திர விதிகளில் நம்பிக்கை உடையவர் என்பதால் நாளைக் காலையே இந்தியாவுக்குப் போக வேண்டும் என்றேன். அவர் நைஸாக பேச்சை வேறு திசைக்குத் திருப்பினார். நானும் விட்டுவிட்டேன் .ஆக வேண்டுமென்றால் சாஸ்திரம்; வேண்டாமென்றால் அது தெரியாது போல நடிப்பது என்பது பலருக்கும் வாடிக்கை ஆகிவிட்டது

இன்னும் இரண்டு சுவையான விஷயங்களை பின்னர் எழுதுகிறேன்

என்னுடைய பிராமண உறவினர் லண்டனில் சனிக்கிழமை காலை உண்ணாவிரதம் முடிந்து மலையில் என்னுடன் சுற்றிப்பார்க்க வந்தபோது மக் டொனால்டில் (Chicken  in Mc Donald) சிக்கன் ஆர்ட்டர் கொடுத்தார் ; அதற்குப்பின்னர் என்ன நடந்தது என்பதை பின்னர் எழுதுகிறேன் !

மற்றோரு சம்பவம் மதுரையில் செளராஷ்டிர பிராமணன் மாமிசம் சாப்பிட்ட கதை. என் தம்பியிடம் அந்தப் பையன் சொன்னான் : நாங்களும் ஐயர் Iyer தான் ; எங்க அப்பா ஒரு டையர் Dyer  (சாயம் ஏற்றும் தொழிலாளி) ஆனால்  நாங்கள் கறி (மாமிசம்) மட்டும்  சாப்பிடுவோம் என்று சொல்ல , என் தம்பி அதை வீட்டில் வந்து சொல்ல , அன்று முழுதும் ஒரே தமாஷ்தான் ; பின்னர் விரிவாகக் காண்போம்.))

xxxx

  67. மனை கோலுவதற்கு மாதம்

சித்திரைத் திங்கள்தனில் மனைகோல மனைபுகச்

     செல்வம்உண் டதினும் நலமே

  சேரும்வை காசிக்கு; மேனாள் அரன்புரம்

     தீயிட்ட தானி யாகா;

வெற்றிகொள் இராகவன் தேவிசிறை சேர்கடகம்

     வீறல்ல; ஆவ ணிசுகம்;

  மேவிடுங் கன்னியிர ணியன் மாண்ட தாகாது;

     மேன்மையுண் டைப்ப சிக்கே;

உத்தமம் கார்த்திகைக் காகாது மார்கழியில்

     ஓங்குபா ரதம்வந் தநாள்;

  உயர்வுண்டு மகரத்தில்; மாசிமா தத்தில்விடம்

     உம்பர்கோன் உண்ட தாகாது;

அத்தநீ! மாரனை எரித்தபங் குனிதானும்

     ஆகுமோ! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அத்த – தலைவனே!, அருமை …… தேவனே!, சித்திரைத்

திங்கள்தனில் மனைகோல மனைபுகச் செல்வம் உண்டு – சித்திரைத்

திங்களில் வீடுகோலினாலும் வீடு குடி புகுந்தாலும் செல்வம் உண்டாகும், அதினும் வைகாசிக்கு நலமே சேரும் –

சித்திரையிலும் வைகாசித் திங்களில் நன்மையே உண்டாகும், மேனாள் ஆனி அரன்புரம் தீ இட்டது; ஆகா – முற்காலத்தில் ஆனித்திங்களிலேதான் சிவபெருமான் முப்புரத்திற்கு நெருப்பிட்டது ஆகையால் ஆனி ஆகாது,

வெற்றிகொள் இராகவன் தேவி சிறைசேர் கடகம் வீறு அல்ல –

வெற்றியைக்கொண்ட இராமன் மனைவி சிறைசென்ற ஆடித்திங்கள்

சிறப்புடையது அன்று, ஆவணி சுகம் மேவிடும் – ஆவணித்திங்கள் நலம் பொருந்தும், கன்னி இரணியன் மாண்டது; ஆகாது – புரட்டாசித்திங்கள் இரணியன் இறந்ததுஆகையால்தகாதது, ஐப்பசிக்கு மேன்மை உண்டு –

ஐப்பசித் திங்களில் உயர்வு ஆண்டுகார்த்திகைக்கு உத்தமம் –

கார்த்திகைத்திங்களில் நன்மை, ஓங்கு பாரதம் வந்தநாள் மார்கழியில்

ஆகாது – பெரிய பாரதச் சண்டை வந்த காலமான மார்கழித்திங்களில் தகாது, மகரத்தில் உயர்வு உண்டு – தைத்திங்களில் மேன்மை உண்டாகும்,

உம்பர்கோன் விடம் உண்டது மாசி மாதத்தில் ஆகாது – வானவர்

தலைவனான சிவபிரான் நஞ்சுண்டதாகிய மாசித்திங்களில் தகாது, நீ மாரனை எரித்த பங்குனிதானும் ஆகுமோ – நீ காமனை எரித்த பங்குனித்திங்களும் தகுமோ? (தகாது)

xxxxx

             68. விருந்து வாரம்

செங்கதிர்க் குறவுபோம், பகைவரும், விருந்தொருவர்

     செய்யொணா துண்ணொ ணாது;

  திங்களுக் குறவுண்டு; நன்மையாம்; பகைவரும்

     செவ்வாய் விருந்த ருந்தார்;

பொங்குபுதன் நன்மையுண் டுறவாம்; விருந்துணப்

     பொன்னவற் கதிக பகைஆம்;

  புகரவற் காகிலோ நெடுநாள் விரோதமாய்ப்

     போனவுற வுந்தி ரும்பும்;

மங்குல்நிகர் சனிவாரம் நல்லதாம்; இதனினும்

     மனமொத் திருந்த இடமே

  வாலாய மாய்ப்போய் விருந்துண விருந்துதவ

     வாய்த்தநாள் என்ற றியலாம்;

அங்கையில் விளங்கிவளர் துங்கமழு வாளனே!

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அம்கையில் விளங்கி வளர்துங்கம் மழுவாளனே –

அகங்கையில் விளக்கமுற்று ஒளிரும் தூய மழுவையுடையவனே!,

அண்ணலே – பெரியோனே!, அருமை …… தேவனே!, செங்கதிர்க்கு

விருந்து ஒருவர் செய்ய ஒணாது; உண்ண ஒணாது; உறவு போம், பகை

வரும் – ஞாயிற்றுக்கிழமையில் ஒருவர் விருந்துசெய்யவும் உண்ணவும் ஒவ்வாது, (செய்தால்) உறவு நீங்கிப் பகை உண்டாகும், திங்களுக்கு உறவு

உண்டு; நன்மைஆம் – திங்கட் கிழமையில் (விருந்துண்டால்) உறவு வரும்;வேறு நன்மையும் உண்டாகும், செவ்வாய் விருந்து அருந்தார், பகை வரும்- செவ்வாய்க்கிழமையில் விருந்துண்ணமாட்டார், (உண்டாற்) பகையுண்டாகும்,

பொங்கு புதன் நன்மை உண்டு; உறவுஆம் – நலம்மிகு புதன்கிழமையில்

நலமுண்டாகும்உறவும் உண்டாகும், பொன்னவற்கு விருந்து உண அதிக

பகைஆம் – வியாழனில் விருந்துஉண்டால் மிகு பகைவரும், புகரவற்கு ஆகிலோ நெடுநாள் விரோதமாய்ப் போன உறவும் திரும்பும் –

வெள்ளிக்கிழமையானால் நீண்ட நாட்களாகப் பகையான உறவினரும் திரும்புவர், மங்குல் நிகர் சனிவாரம் நல்லது ஆம் – முகில் அனைய

சனிக்கிழமை நலம் உண்டாகும், இதனினும் மனம் ஒத்து இருந்த இடம்

வாலாயமாய்ப்போய் விருந்துஉண விருந்துஉதவ வாய்த்தநாள் என்று

அறியலாம் – மேலும் இந்த நாளே உளம் ஒத்தும் உள்ள இடத்தில்

வழக்கமாகச்சென்று விருந்து உண்ணவும் செய்யவும் பொருந்திய நாள் என

உணரலாம். (வி-ரை.) சனியின் நிறம் கருமையாகையால், ‘மங்குல் நிகர் சனி’

என்றார். அகம் + கை – அங்கை. 

To be continued………………………………..

Tags–குடி போக, விருந்துக்கு அழைக்க, போக, நல்ல நாட்கள், மாதங்கள் , சதகம், என் சுய சரிதை

ஒளவையாருக்குப் பிடித்த கத்தரிக்காய் கறி (Post No.11,660)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,660

Date uploaded in London – –  12 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

தனிப்பாடல்  திரட்டிலிருந்து ஒளவையாருக்குப் பிடித்த உணவு வகைகள் என்ன என்ற தகவல் நமக்குக்  கிடைக்கிறது . அவருக்குக் கத்தரிக்காய் கறி  மிகவும் பிடிக்கும். அவர் பாடிய தெய்வீகப்  பாடல்களிலிருந்து அவர் சுத்த சைவம் – வெஜிட்டேரியன் Vegetarian — என்ற தகவலும் கிடைக்கிறது. அவ்வை என்ற சொல்லிலேயே  வயதான மூதாட்டி , இறைவனை நாடும் மாது , திருமணமாகாத பெண் அல்லது கணவனை இழந்த பெண் என்ற பொருள் எல்லாம் வந்து விடுகிறது. தமிழ் நாட்டில் சங்க காலம் முதல் சமீப காலம் அவரை ஆறு ஒளவையார்கள் இருந்ததாக ஒரு புஸ்தகமும் வெளியாகி  இருக்கிறது.

“ஒள” என்ற எழுத்தில் துவங்கும் சொல் திருக்குறளிலோ அதற்கு முந்திய சங்க இலக்கியத்தின் 18 நூல்களிலோ கிடையாது . தொல்காப்பியர் , “ஒள” என்ற எழுத்தை மட்டும் குறிப்பிடுகிறார் .

ஆகையால் ஒளவையார் என்றும் எழுதலாம் அவ்வையார் என்றும் எழுதலாம் .

XXX

இனி உணவு வகைகளுக்கு வருவோம்

வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்

முரமுரெனவே புளித்த மோரும்- திரமுடனே

புல்வேளூர்ப்பூதன் புகழ்ந்து பரிந்திட்ட சோறு

எல்லா உலகும் பெறும்”

புல் வேளூர்ப் பூதன் என்பவன் போட்ட சாப்பாட்டைப் புகழ்ந்து அவ்வையார் பாடிய பாடல் இது .

பூதன் என்பவன் பரிமாறிய  வரகரிசிச் சாதம், கத்தரிக்காய் வதக்கல்,  நுரை பொங்கும்  புளித்த மோர் ஆகியனவை மிகவும் சுவையாக இருந்தன . அதை அவன் அன்போடு உபசரித்து படைத்தான். இதற்கு உலகம் முழுவதையும் அவனுக்குக் கொடுத்தாலும் போதாது. அவ்வளவு சுவையானது என்கிறார்.

சாப்பாட்டுப் பட்டியலைப் பார்த்தால் அது ஒரு ஏழை வீட்டுச் சாப்பாடு என்று தெரிகிறது. ஆயினும் பரிவுடன் இட்டதால் அதன் சுவை ஆயிரம் மடங்கு பெருகிவிடுகிறது .

Xxx

அவர் பாடியதாகக் காணப்படும் இன்னொரு தனிப்பாடலும் ,சோற்றின் சுவையை விட அதைப் பரிமாறுவோரின் அன்புதான் முக்கியம் என்று காட்டுகிறது .

(இந்தப்பாடல் 1960ம் ஆண்டுகளில் வெளியான இரண்டு தனிப்பாடல் நூல்களில் இல்லை. ஆனால் 1897-ம் ஆண்டு நூலில் இருக்கிறது .என்னிடம் லண்டனில் மூன்று தனிப்பாடல் நூல்கள் உள்ளன. ஒன்று மிகப்பழைய நூல் ;சந்தி பிரிக்காமல் எழுதப்பட்ட, பழுப்பு நிறம் கண்ட, தூள் தூளாக உடையும் நூல் ; வெளியான ஆண்டு 1897. இராமநாதபுரம் ஸமஸ்தானம் மகாராஜ ஸ்ரீ பொன்னுசாமித்தேவர் அவர்கள் அனுமதியினால், முன்பதிப்பித்த  பல பிரதிகளைக்கொண்டும், இன்னும் சில பாடல்களும் நூதனமாக சேர்த்து ,சரவணபுரம் முதலியாரவர்களால் பார்வையிடப் பட்டு, பு. ஏ.  இராகவப்பிள்ளை அவர்களது விவேக விளக்க அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது; 1897 வரு.(க்ஷம்)..

xxxx

கீழ்கண்ட இரண்டு நூல்களில் இல்லை

அதற்குப் பின்னர் 1960ம் ஆண்டு நூல். அது கலைச்செல்வி தொகுத்தது ; அகிலன் எழுதிய முன்னுரையுடன் கூடியது. வெளியீடு — மீனாட்சி பதிப்பகம், கீழ இராச வீதி, புதுக்கோட்டை , ஆண்டு 1960

இரண்டாவது புஸ்தகம் :தமிழ் தந்த கவியமுதம் — கு.அழகிரிசாமி,  தமிழ்ப் புத்தகாலயம் , சென்னை-14, ஆண்டு 1962.

xxxx

கடை எழு வள்ளல்களில் ஒருவர் முல்லைக்குத் தேரீந்த பாரி . அவருக்கு சங்கவை அங்கவை என்று இரண்டு மகள்கள் உண்டு. அவர்கள் படைத்த உணவு என்று சிலரும் ‘இல்லை, இல்லை’ அதே பெயரில் வாழ்ந்த இடையன் பாரியும் அவனது மகள்கள் இருவரும் போட்ட உணவு என்று பலரும் கற்பனைக்கு ஏற்றபடி எழுதுவார்கள். ஆயினும் பாடலின் பொருள்தான் நமக்கு முக்கியம்

வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்

நெய்தான் அளாவி நிறம்பசந்து – பொய்யா

அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார் கடகஞ்

செறியாதோ கைக்கு.

பழைய நூல்களில் உள்ள கருத்து:-

அவ்வையார் மழையில்  நனைந்து போய், மிகவும் நடுங்கிக்கொண்டே வந்தார். அவரைக் கண்ட பாரி என்ற இடையன் அவரைக் குடிசைக்கு அழைத்துச் சென்றான் . அவர்கள் கருப்பு நிற சிற்றாடையை அவருக்குப் போர்த்திக்கொள்ள கொடுத்தனர்; குளிர் காய நெருப்பு மூட்டினர்.முருங்கைக் கீரையை நெய்விட்டுச் சமைத்து கேழ்வரகுக் களியுடன்  இலையில் இட்டனர் ; அதுமட்டுமா ‘போதும் போதும்’ என்று மன்றாடும் அளவுக்கு பரி மாறிக்கொண்டே இருந்தனர். அதுதான் இந்திர லோக அமுதம் .

கடைசி வரிக்கு இரண்டு பொருள் உண்டு. சிறிது எழுத்துக்களை மாற்றினால் (கடகஞ் செறியாதோ கைக்கு)  (கடகம்) வளையல் அணிந்த கைகளென்பதை அந்தக் கைகளுக்கு தங்க வளையல் போட வேண்டும் (கடகஞ் செறியாதோ கைக்கு) ; அவ்வளவு தகுதி உண்டு என்றும் கொள்ளலாம்.

அதையெல்லாம் விட்டுவிட்டு பாடலின் பொருளுக்குத் திரும்பினோமானால், எளிய கிராமீய சத்துணவு, அன்புடன் பரிமாறப்பட்டது ‘போதும் போதும்’ என்று சொல்லுமளவுக்கு படைக்கப்பட்டது  என்பது தெளிவாகும்.

XXX

ஆறு அவ்வையார்கள்

 MY OLD ARTICLES ON AVVAIYAR

ஆறு அவ்வையார்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஆ…

4 Aug 2020 — 10 Jul 2015 – அவ்வையார் புகழ்பெற்ற தமிழ் கவிஞர், அறிஞர், இறையன்பர். சங்க காலம் முதல் …

தமிழில் ஆறு அவ்வையார்கள் !!! (Post No.8326)

https://tamilandvedas.com › தமிழ…

11 Jul 2020 — 31 Jan 2020 – … (Protestant) பிரிவை. உருவாக்கினார் போப்பாண்டவர் ‘பாவ மன்னிப்புச் சீட்டு’.

அவ்வையாரும் சாணக்கியனும் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

14 Feb 2018 — ஆனால் எனது மொழியியல் ஆராய்ச்சியின் படி குறைந்தது மூன்று ஔவையார் …

ஔவை – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

11 Oct 2019 — ஆனால் கபிலர், அவ்வையார் என்ற பெயர்களில் பல புலவர்கள் உண்டு. ஆறு அவ்வையார்கள் …

அவ்வையாரும் பேயும் – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

19 Dec 2013 — குறைந்தது மூன்று முதல் ஆறு ஔவையார்கள் வரை வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர் …

அவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்!

https://tamilandvedas.com › அவ்…

·

14 Nov 2015 — ஆனால் கபிலர், அவ்வையார் என்ற பெயர்களில் பல புலவர்கள் உண்டு. ஆறு அவ்வையார்கள் …

அவ்வையார் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

21 Nov 2018 — திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532) | Tamil and … tamilandvedas.com/2016/02/12… –subham—. October 27 …

சாக்ரடீசும் அவ்வையாரும்! – Tamil and Vedas

https://tamilandvedas.com › சாக்…

10 Jul 2015 — அவ்வையார் புகழ்பெற்ற தமிழ் கவிஞர்,… … வரை ஆறு அவ்வையார்கள் இருந்தனர்; …

Tags- ஆறு ,அவ்வையார்கள், வரகரிசிச் சோறும், கத்தரிக்காய் கறி, தனிப்பாடல், ஔவை

விவேகானந்தர் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் (Post.11,659)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,659

Date uploaded in London –  12 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 ஜனவரி 12 – ஸ்வாமி விவேகானந்தர் ஜெயந்தி தினம்! 

ஸ்வாமிஜி தோற்றம் :- ஜனவரி 12, 1863

ஸ்வாமிஜி சமாதி தினம் :- ஜூலை 4, 1902

ஸ்வாமி விவேகானந்தர் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள்!

ச.நாகராஜன்

1

ஸ்வாமி விவேகானந்தர் இமயமலையில் நடைப்பயணமாக வெகு தூரம் நடந்து கொண்டிருந்தார்.

வழியில் ஒரு வயதான மனிதர் ஸ்வாமிஜியைப் பார்த்தார்.

‘ஓ ஸ்வாமிஜி! நான் நடந்து நடந்து  மிகவும் களைத்து விட்டேன்.

இந்த மலைப் பாதையில் பாதி தூரம் வந்து விட்டேன்.

இனி மீதி தூரத்தை எப்படி ஏறிக் கடப்பது?” என்று அவர் ஸ்வாமிஜியைக் கேட்டார்.

ஸ்வாமிஜி புன்சிரிப்புடன் அவரைப் பார்த்தார், பேசலானார்: “ஒன்றும் கவலைப்பட வேண்டாம். உங்கள் காலடிக்குக் கீழே பாருங்கள். நீங்கள் கடந்து வந்த பாதை தெரிகிறதா? இதை இவ்வளவு தூரம் கடந்தது யார்? நீங்களே தான்! இதே சாலை தான் உங்கள் முன் இருக்கிறது. இதுவரை எப்படி நீங்களே இதைக் கடந்து வந்து சாதித்தீர்களோ அதை இன்னும் உங்களால் செய்ய முடியுமே! நடந்து முன்னேறுங்கள். வெற்றி தான்!”

என்றார்.

ஸ்வாமிஜியின் பேச்சால் உத்வேகம் பெற்ற அவர் புத்துணர்ச்சி பெற்று அவரை வணங்கி விட்டு மலை மீது ஏறலானார்.

2

ஸ்வாமிஜி ஒரு முறை மேலை நாட்டில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் அதே பெட்டியில் அவருக்கு எதிரில் இருவர் உட்கார்ந்திருந்தனர். அவரது உடையைப் பார்த்த அந்த இருவரும் அவரைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

ஒருவன் தனது நண்பனைப் பார்த்துச் சொன்னான்: “ இந்த ஆளைப் பார்! இவரை ‘ஃபூல்’ என்று நான் நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய்?”

அதற்கு அவனது நண்பன் பதில் சொன்னான்; “இல்லை இல்லை, நீ சொல்வது தப்பு. இவர் ஒரு இடியட். அது தான் சரியாக இருக்கும்.”

இருவரும் மாறி மாறித் தான் சொல்வதே சரி என்று ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு இப்படிப்பட்ட காவி உடை அணிந்த ஒருவருக்கு ஆங்கிலமே தெரியாது என்ற எண்ணம்.

நடுவில் டிக்கட் பரிசோதகர் வந்த போது ஸ்வாமிஜி, “எனக்கு குடிக்க தண்ணீர் வேண்டுமே? எங்கே கிடைக்கும்?” என்று தெளிவான உச்சரிப்பில் ஆங்கிலத்தில் கேட்டார்.

அவரும் தக்க பதிலைச் சொல்லி விட்டு அகன்றார்.

இவரது பேச்சைக் கேட்ட எதிரிலிருந்த இருவரும் அசந்து போனார்கள்.

பிரமிப்புடன். “என்ன உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? நாங்கள் இவ்வளவு நேரம் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டே தானே இருந்தீர்கள்?” என்று கூறினர்.

ஸ்வாமிஜி புன்முறுவல் பூத்தார்.

பிறகு அவர்கள் வியப்புடன், “ நீங்கள் யார்?” என்று கேட்டனர்.

ஸ்வாமிஜி அவர்கள் இருவரையும் தன் பக்கத்தில் தன் தோளுக்கு அருகே இழுத்துக் கொண்டார். நடுவில் ஸ்வாமிஜி இருக்க ஆளுக்கு ஒரு பக்கமாக அவர்கள் இருந்தனர்.

“ஓ! நான் யார் என்றா கேட்கிறீர்கள்! நான் ஃபூலுக்கும் இடியட்டுக்கும் நடுவில் இருப்பவன்” என்றார்.

அவர்கள் வெட்கித் தலை குனிந்தனர்.

3

ஸ்வாமிஜி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர் வந்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

நரேந்திரன் (பின்னால் விவேகானந்தர் என்ற பெயரைப் பெற்ற ஸ்வாமிஜி) தன் நண்பர்களிடம் ஒரு கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர் கதை சொன்ன விதம் நண்பர்களை ஈர்த்தது. பாடத்தை யாரும் கவனிக்கவில்லை. கதையையே கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஆசிரியர் யாரோ முணுமுணுத்த குரலில் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்தார்.

“யார் அங்கே பேசுவது?” என்று கேட்டார். பதிலே வரவில்லை.

முணுமுணுப்பு சப்தம் வந்த இடத்தை நோக்கிய அவர் அங்கிருந்தவர்களிடம், “இது வரை நான் என்ன நடத்திக் கொண்டிருந்தேன் சொல்லுங்கள்” என்றார்.

யாரும் ஒன்றும் பேசவில்லை.

நரேந்திரன் மட்டும் அவர் நடத்திய பாடத்தைச் சொன்னார்.

தான் நடத்திய பாடத்திலிருந்து ஆசிரியர் கேள்விகள் கேட்கவே அனைத்திற்கும் அவர் பதிலைச் சொன்னார்.

ஆசிரியர் வியந்து போனார்.

அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரையும் பெஞ்சின் மீது நிற்கச் சொன்னார். அனைவரும் ஏறி நின்றனர்.

விவேகானந்தர் தானும் ஏறி நின்றார்.

“நீ ஏற வேண்டாம். இறங்கு” என்றார் ஆசிரியர்.

“ஸார்! நான் தான் இவ்வளவு நேரம் பேசியது. அவர்கள் கேட்கத் தான் செய்தனர். நான் தான் பெஞ்சின் மீது நிற்க வேண்டும்” என்றார் நரேந்திரன்.

அனைவரும் வியந்தனர்.

ஒரே சமயத்தில் பல விஷயங்களைக் கவனிக்கும் அவதான சக்தியை அவர் அப்போதே கொண்டிருந்தார்.

அது அனைவரையும் வியக்க வைத்தது!

இப்படி நூற்றுக் கணக்கான சம்பவங்கள் ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் உண்டு.

அனைத்தும் சுவையானவையே!

***Tags– ஸ்வாமி, விவேகானந்தர்

Learn Tamil Verbs– Part 38 (New Verbs)—Post.11,658

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,658

Date uploaded in London – –  11 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 LET US LEARN MORE SENTENCES AND PRACTISE WITH OLD VERBS

 I would like to see a temple = நான் ஒரு கோவில் பார்க்க வேண்டும்; எனக்கு ஒரு கோவிலைப் பார்க்க ஆசை

xxxxxxx

What time does it open? அது எப்போது திறக்கும்?/ என்ன நேரம் அது திறக்கும்?

xxxxxxxx

What time does it close?அது எப்போது மூடும் / என்ன நேரம் அது மூடும் ?

xxxxxxx

Do I have to pay? நான் காசு கொடுக்க வேண்டுமா ?

xxxxx

How much is the entrance fee? நுழைவுக்  கட்டணம் எவ்வளவு ?

xxxxxx

How much is the fare? பயணக் கட்டணம் அல்லது டிக்கெட் எவ்வளவு

xxxxx

I am going to sleep/eat/bathe/read/write/talk/get up/sit/stand

நான் தூங்க/ சாப்பிடப் / குளிக்கப் / படிக்கப் / எழுதப் / பேசப் /எழுந்திருக்க / உட்காரப் நிற்கப் போகிறேன்

Going to = போகிறேன் (You place it after the infinitive of a verb)

xxxxx 

Important verbs முக்கிய வினைச் சொற்கள்

Come வா ; go போ ;   read  படி;   write எழுது;

XXXXXX

Stand நில்; sit உட்கார்; run ஓடு; climb ஏறு ;

XXXXXXXXX

Cook சமை ;    bathe குளி; washகழுவு; clean சுத்தம் செய் ;

XXXXXXXX

Ask   கேள்; sing பாடு;      speakபேசு ;     talkபேசு;

XXXXXX

Listenகேள்        walk நட    cry அழு     laugh சிரி  

XXXXXXXXX

Do                        be                        look                      eat

செய்                 இரு                      பார்  சாப்பிடு / உண்

XXXXXXXXXX

Buy                      sell                       push                    pull

வாங்கு           வில்                   தள்ளு                 இழு

XXXXXXXXXX

Like                      learn                    teach                   love

பிடிக்கும்  கற்றுக்கொள் சொல்லிக்கொடு காதலி

XXXX

Hate                     start                     reach                   marry

வெறு —-புறப்படு ———அடை  ———-கல்யாணம் செய்

XXXXXXX

Sleep                   getup                   play                      stop

தூங்கு  —–எழுந்திரு  ——— விளையாடு  ——-நில்

XXXXXX

Use                      pray                     finish                    start

உபயோகி ——-பிரார்த்தனைசெய் —-முடி —–புறப்படு

XXXXXX

Live                      dwell                    rent                      hire

வாழ்  —-வசி ———-வாடகைக்கு விடு  —–வாடகைக்கு எடு

XXXX

Lend                    borrow                 give                      take

கடன் கொடு  கடன் வாங்கு  கொடு ———–எடு

XXXXX

Act                       put                       leave                   want

நடி ————வை —————–விட்டுவிடு——- வேண்டும்

XXXXXX

Show                   happen                gather                  drink

காட்டு ————நடக்கிறது ——–சேகரி ————குடி

XXXXXX

Smoke                 say                       fight                     enjoy

புகைபிடி /சிகரெட் குடி சொல் சண்டை போடு அனுபவி

XXXXXXX

Draw                    jump                    throw                   catch

இழு —————குதி ——————–எறி —————பிடி

XXXXXX

Greet                   fly                         crawl                    swim

வாழ்த்து ——–பற — ஊர்ந்து போ /செல் ——  —நீந்து

XXXXXX

TO BE CONTINUED…………………………

Tamil Hindu Encyclopaedia- 46; சூரர மகளிர்‌ Dance by the Possessed woman (Post No.11,657)

Nymph Images from England

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,657

Date uploaded in London – –  11 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

Dance by Possessed women is also described in Sangam Tamil literature. If one is possessed by a nymph or a divine spirit, then the person jumps up and down and dance. Tamils describe it as Saami Aadal சாமி ஆடல் (Divine dance). Poets compare it to the running and jumping cows ; Puram.259 composed by Kodai Paadiya Bhutanaar, compares the cows gambolling, bouncing and jumping to a low caste woman possessed by Muruga.

‘முருகுமெய்ப்பட்ட புலைத்தி போல, தாவுபு தெறிக்கும்‌.

ஆன்‌! (புற. 259:5-6)

We see it also in Kurunthokai 52-2 . ‘சூர்‌ நசைந்தனையைய: நடுங்கல்‌-கண்டே’ (குறுந்‌:52:2)

Any one possessed by Suur will shiver and shake. Not only humans but also animals are possessed by divine spirits. The peacocks had eaten the offerings given to Gods by mistake and they started dancing like a possessed woman according to a verse in Kurunthokai

“சூர்‌ உறு மஞ்ஞை யின்‌ நடுங்க! (Kurinji குறிஞ்சி.169)

‘புனவன்‌ துடவைப்‌ பொன்போல்‌ சிறுதினைக்‌

கடி உண்‌ கடவுட்கு இட்ட செழு ங்குரல்‌.

அறியாது உண்ட  மஞ்ஞை  ஆடுமகள்‌

வெறிஉறு வனப்பின்‌ வெய்துற்று, நடுங்கும்‌

சூர்மலை நாடன்‌’ (Kurun. குறுந்‌.105: 1-5)

Xxxx

Gods in Musical Instruments and Breasts of Women

Tamils believed that nymphs live in the breasts of women, Lyre or Yaaz, Drums etc.

In general nymphs are feminine; but in a few places Tamils use it for male spirits as well. In Sanskrit we see Apsaras and Yakshas- female and male. Yakshi woman is also there. Poru. Poet says the nymph is in Yaaz- Lyre

மணம்‌ கமழ்‌ மாதரை மண்ணியன்ன

அணங்கு மெய் ந்‌ நின்ற அமைவரு காட்சி,

ஆறு அலை கள்வர்‌ படை விட அருளின்‌.

மாறு தலை பெயர்க்கும்‌ மருவு இன்‌ மாலை’ (Poruபொருந.19-22)

Nachchinarkiniyar, the most famous commentator of Sangam Tamil literature gives more information in his commentary on Post Sangam Tamil epic Seevaka Chintamani. Such Gods or Nymphs are known as Maathangi (another name of Sarasvati).

In fact, Tamils worship all musical instruments and books as Divine. They place all such things in front of Goddess Sarasvati during Navaratri and worship them.  They never touch the books or musical instruments with their feet. It is considered disrespect or contempt to God.

Xxx

Nymph on Breast

The strangest thing about Tamil Hindus is that they see nymphs on woman’s breast. Poems in Akam and Natrinai  refer to it.

சுணங்கு சூழ்‌ ஆகத்து அணங்கு என உருத்த

நல்வரல்‌ இளமுலை. (அகம்‌.161:12-13 Akam)

,பொரிப்‌ பூம்‌ புன்கின்‌ அழற்தகை ஒண்முறி,

சுணங்கு அணி வனமுலை அணங்கு கொளத்‌ திமிரி. (Natri.நற்‌.9.5-6),

Xxxx

Swords given by  Goddess Bhavani

We know from Hindu history that several great heroes of India such as Veera Shivaji, Kumara Kampanna received their Victorious Sword from Goddess Bhavani. Hindus consider even weapons as Gods. They do Ayudha Puja (Weapon Worship)  on Sarasvati Puja day or Vijaya Dasami day. We see such ceremonies today in Mysore Dasara. Chamundeeswary is worshipped with all paraphernalia before the Great Dasara/ Vijaya Dasami procession.

Kali.verse refers to nymphs in weapons:–

அரவின்‌ பொறியும்‌ அணங்கும்‌ புணர்ந்த

உரவு வில்மேல்‌ அசைத்த கையை’ (Kali கலி.50:6-7)

Tamils showed the same respect to weapons and poets praise nymph residing weapons . A king’s drum was also given great respect. It was decorated like Gods and Goddesses. It was given a special raised seat. On the days of Expedition, they were taken first at an auspicious time. And not all the people can possess drums. Only the three great Tamil Kings Chera, Choza, Pandya can have it.

Here are some references to War Drums and the Puja done to it.

“மாசு அற விசித்த வார்புறு வள்பின்‌

மை படு மருங்குப்‌ பொலிய. மஞ்ஞை

ஒலி நெடும்‌ பீலி ஒண்‌ பொறி மணித்தார்‌,

பொலங்குழை உழிஞையெகடு பொலியச்‌ சூட்டி

குருதி வேட்கை உருகெழு  முரசம் 

மண்ணிவாரா அளவை . (Puramபுற 50. 1- 6 )

Greatest poet of modern Tamil Literature Bharatiyar’s poem on Shivaji begins with hail Bhavani, Hail Bhavani; it shows that weapons should be used against the bad people.

சிலைத்‌ தார்  முரசம்‌ கறங்க.

மலைத்தனை! (புறம்‌ 50 1.6 Puram)

பலி பெ று முரசம்‌ பாசறைச்  சிலைப் ப’ (புறம்‌ 362 Puram)

வாள் மின்  ஆக. வயங்கு கடிப்பு அமைந்த

குருதிப்‌ பலிய முரசு முழக்கு ஆக” (புற 369 4-5 Puram)

Xxxx

Following Pathitrupathu passage gives detailed description of Puja done to Drum in the Palace of a Chera King

பணைகெழு வேந்தரும்‌ வேளிரும்‌, ஒன்று மொழிந்து,

கடலவும்‌ காட்டவும்‌ அரண்‌ வலியார்‌ நடுங்க.

முரண்  மிகு கடுங்குரல்‌ விசு ம்பு அடைபு அதிர,

சடுஞ்சினம்‌ கடாஅய்‌. முழங்கும்‌ மந்திரத்து

அருந்திறல்‌ மரபின்‌ கடவுட்‌ பேணியர்‌,

உயர்ந் தோள்‌ ஏந்திய அரும்பெறற்‌ பிண்டம்‌.

கருங்கட்‌ பேய்மகள்‌ கைபுடையூ நடுங்க…

நெய்த்தோஈ தூ உ ய நிறைமகிழ்‌ இரும்பலி,

எறும்பும்‌ மூசா இறும்பூது மரபின்‌;

கருங்கட்  காக்கையொடு பருத்து இருந்து ஆர.

ஓடாப்‌ பூட்கை, ஒண்‌ பொறிக்‌ கழற்‌ கால்‌.

பெருஞ்‌ சமம்‌ ததைந்த, செருப்புகல்‌, மறவர்‌

உருமு  நிலன்‌ அதிர்ககும்‌ குரலொடு, கொளைபுணர்ந்து,

பெருஞ்சோறு உகுத்தற்கு எறியும்

கடுஞ்சின வேந்தே !- நின் தழங்கு குரல் முரசே

–பதிற்றுப்பத்து 30-30 – 44

As soon as the sound from the Palace Drum is heard, the enemy kings were scared. The person who is doing Drum Worship utter the Mantras in harsh tone. He offered blood and wine to the god of the drum. Even the female ghosts and ants were afraid to come to eat such offering. Crows and falcons only ate them. The drum is played to celebrate the Big Feast offered to victorious soldiers.

Xxxx

There’s another interesting Anecdote in Purananuru verse 50 . One poet by name Mosi Keeranar reached the palace of the Chera/Kerala  King Thagadur Erintha Peruncheral Irumporai. The poet was dead tired after a long walk. So he thought that he should take some rest before getting audience with the king. He saw a beautiful cot with silk cloth spread over it. That was the base for the drum. The officials took the drum outside for bathing/washing and cleaning it. Without realising it the poet lied on it and slept.  It was reported to the king. He rushed out with his  drawn sword to kill the enemy of the country who insulted his drum. When he realised  that it was a tired poet, he calmed down started fanning him with royal fans so that the poet feels more comfortable. When the port suddenly woke up, he was shocked and surprised to see the king fanning him. Later he realised his mistake and praised the king with a poem. He says that he escaped the death sentence due to the love and affection of the king.

குருதி வேட்கை உருகெழு முரசம்‌

மன்னி வாரா அளவை , எணணெய் 

நுரை முகந்தன்ன மென் பூஞ்சேக்கை

அறியாது ஏறிய என்னைத்‌ தெறுவர

இருபாற்  படுக்கும்‌ நின்‌ வாள்வாய்‌ ஒழித்ததை.

அதூ உம்‌ சாலும்‌. நல்‌ தமிழ்‌ முழுது அறிதல்‌,

அதனொடும்‌ அமையாது, அணுக வந்து, நின்‌:

மதனுடை முழவுத தோள்‌ ஓச்சி, தண்ணென

வீசியோயே  (புற Puram 50 5-13)

To be continued……………………………..

Tags- Tamil Drums, Tamil breast, Nymphs, Musical instruments, Possessed, dance, women of low caste, Drum anecdote, Mosi Keeranar, Chera king

லண்டன் டாக்டர் நாராயணனின் மார்கழிக் கவிதைகள்- 7 (Post.11,543-part7)  


WRITTEN BY Dr A. Narayanan Ph.D., London

Post No. 11,543- Part 7

Date uploaded in London – 11 January 2023              

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மார்கழித்திங்கள் 23 

மாரிகாலத்தில் மலைக்குகையில் நிலையாய் துயின்ற

சீரிய சிங்கம் தீப்பொறி தெறித்த கண்கள் திறக்க

சுற்றும் முற்றும் சிலுப்பி உலுக்கிய உடலும் பிடரியுமாய்

குகைவாயிலில் கர்சித்து வெளித்தோன்றியது போல்

காயாம்பூவையொத்த நிறத்தோனே! நின் கோயில்

வாய் மணிமண்டத்தில் அரிதான அரியணை அமர்ந்த

நீர்! நிர்கதியாய் குழுமியோர்கள் வந்த காரியம்

கேட்டருள ஆயருக்காக வேண்டிய ஆயிழை வாழியே

தேனினுமினிய சொல்லில் வல்லாள்

தெளி நீர் தாமரை முகத்தாள்

விழியிலும் மொழியிலும் வைத்தாள்

ஊழி முதல்வனை தன்னுள்ளும் வைத்தாள்

எழிலோன் மகிழ்ந்தானோ இம்மங்கையின்

மொழி வளமும் பொருளும் பொருந்திய

பாசுரங்கள் வேதத்திற்கிணையாக, பாரோர்

போற்றுவரே கோதையின் இந்த கீதையை

திருப்பாவையென 

நாராயணன்

Xxx

மார்கழித்திங்கள் 24

முன்னொரு காலம் மூன்றடி நிலமிரந்து

மூவுலகமளந்தானைப் போற்றி

முந்திய அவதாரத்தில் தென்னிலங்கைக்

கோமானை வதைத்தோனைப் போற்றி

பொய்யுருவில் சகடமாய் வந்த பகட

அசுரனை வதைத்த பாதத்தைப் போற்றி

கன்று வடிவில் வந்த அசுரனைக்

கைத்தடியாகப் பற்றி தரு உருவாய்

நின்ற மாற்றான் மீதெரிந்திருவரையும்

கொன்றவன் தாள் போற்றிக்  குடையாய்

குன்றைப் பிடித்து குலத்தோரைக் காத்த

குணசீலனைப் போற்றிப் பகைவர் கை

வேல் பறித்து வென்றோனைப் போற்றி

என்றுமே  தங்கள் வீர,சூர,தீர ரூபத்தை

நின்று துதித்தனுபவிக்க கூடிய குலத்தோர்

கோரிக்கையை கோவிந்தன் முன் வைத்த

கோதை வாழியே.

பாடிய பாசுரமெல்லாம் பரமன் பல பேராக

மூடிய கண்கள் முன் தேடிய முகுந்தன் தோன்றி

நாடியவன் அவள் நாடியிலும் நாரணன் நாமம்

துடிக்கக் கேட்டுப் பல கோடி நூராயிரம் ஆண்டு

கூடி அடியாளிவளுடன் குடும்பம் ஓம்பிட அவள்

சூடிய மாலை வாடிடினும் எம் தோளிணைந்திட

பீடுடைய பெருமாளாவேனே!

 நாராயணன்

xxx

மார்கழித்திங்கள் 25

ஒருத்தி மடியினின்று விழுந்த இரவே வேறு

ஒருத்தி மார்பு தழுவி ஒளிந்து வளர உற்ற

பகையோன் பெற்ற தாய் மாமனேயாகி

விடுத்த எதிரிகளை அடுத்தடுத்து வீழ்த்திட

எஞ்சிய மாமன் கஞ்சன் வயிற்றில் தீயாய்

எரிந்த அஞ்சனவண்ணனே! தேடியுமதடி கூடிய

அடியார்கள் திருவுடையாள் ஓம்பும் செல்வமும்

உன் வீர சரிதங்களைப்பாடி வருத்தம் நீங்கி

ஆனந்த நிலையடைய விரும்புவதாக

முறையிட்ட தரை மங்கை வாழியே

மறையுள்ளுறையும் மாயவனே

சிறையுள் பிறந்தும் தூயவனே

குறையொன்றில்லாத கோவிந்தனே

நிறைவாய் எதிலும் நிற்பவனே

முறையான முதல்வனான முகுந்தனே

தரை சேர்ந்து தரணியோரைக் காத்தவனே

அன்று ஆய்ச்சியரோடு உறவாடியவனே

கன்றோட்டி அவரோடு கூடிக் களித்தவனே

குன்றைக் குடையாய் ஏந்தியவனே

குலத்தாரை கோகுலத்தில் காத்தவனே

எப்பொழுதும் ஓரிள நங்கையுன் நினவினிலே

முப்பொழுதும் உன் திரு நாமமவள் மூச்சினிலே

முப்பதுப் பாசுரமாய் தொகுத்தப் பாமாலையிலே

முகில் வண்ணனின் பூ மாலையாய் மார்கழியினிலே

பாவையின் பக்திக்கு பரமனடிமையானதாலே

பாரோர் போற்றிப் பணியும் ஆண்டளானாளே   

நாராயணன்

xxxx

மார்கழித்திங்கள் 26

ஆலிலையில் பள்ளிக்கிட ந்து பிரளய காலத்தில்

அகிலம் காத்த அன்பே வடிவான நீல மணிவண்ணனே!

அதிகாலை நீராடி மார்கழி நோன்பு காக்க அறவோர்

அனுட்டித்த முறை படியும்மைப் பள்ளி எழுப்பப் பால்

போன்ற வண்ணத்துன் பாஞ்சசன்னியமீடான சங்கும்,

பெரிய முரசும்,பல்லாண்டிசைப்பரும், மங்கள தீபமும்

பிடிக்கக் கொடியும் மேல் படர்ந்த விதானமும் கேட்கும்

அடியார்க்கு அளித்தருள வேண்டிய கோதை வாழியே

 அதி காலை உன் சன்னிதி வாயிலில் நின்று 

அடி வானம் சிவக்கும் முன் நீவீர் பள்ளி எழ

ஆன்றோர் வகுத்த முறையிலே முழங்க

சங்கும் அறைய பறையும், பல்லாண்டு

இசைப்பாரும் , கொடியும் விதானமும்

இரந்து கேட்ட அடியார்க்கு தேவையற்றதோ

இவையெலாம் திருப்பாவையொன்றே போதும்

பள்ளியவரெழ திரு வைகுந்தத்திலும் ஒலிக்கும்

பட்டர்பிரான் கோதை மொழிந்த சங்கத்தமிழ்

மாலை முப்பதும் முத்தாரமாக அவளும்

அவருக்குகந்த முத்தாரமாயானாளே

நாராயணன்

Xxxx

மார்கழித்திங்கள் 27

ஆதிபுருடனையணுகா அவனை வெறுப்பவரையும்

ஆட்கோண்டு வெல்லும் தேசுடையோன் புகழ் பாடி

அருள் பெற்ற அடியார் கள் மேலும் விரும்பிய பரிசுகளாக

அணியும் ஆபரணங்களாய் தோள்வளையும், கம்மலும்

கர்ணப்பூவும் கால் சிலம்பும் உடுக்கப் புத்தாடையும்

பெருகும் நெய் கசியும் பாற்சோறும் பெற்று அவனோடு

கூடிய குடும்பியாய் கொண்டாடி குலத்தோரோங்க ஆதி

புருடனான கோவிந்தனை வேண்டிய கோதை வாழியே

நாராயணன்

கூட வாழ்வோருடன் மார்கழி நோன்பு காத்து

கோவிந்தன் அருள் பெற வீடு வீடாய் சென்று

குலத்தோர்களைக் கூட்டி வைத்து எட்டாத

குலசேகரன் படி வாயில் நின்று கிட்டாத

குணசேகரன் கீர்த்திமைப் பாடிக் கட்டிய

பாமாலையில் பைய்த்துயின்ற பரமனெழுந்து

பாவையர் வந்த காரியம் ஆராய்ந்தருள

பன்னோருடன் பரமனனுபவம் பகிர்ந்த

பட்டர் பிரான் கோதை வாழியே

 நாராயணன்

To be continued………………………..

ஆட்டுப்பால் ஆகாது; முருங்கைக்காயும் ஆகாது என்கிறார் அம்பலவாணர் (Post.11,656)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,656

Date uploaded in London – –  11 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

65. உணவில் விலக்கு

அம்பலவாணர் எழுதிய அறப்பளீசுர சதகத்தில் மேலும் இரண்டு பாடல்களை எடுத்துக்கொள்வோம்.

முதல் பாடலில் விலக்க வேண்டிய உணவு வகைகள் என்ன என்ன என்று சொல்கிறார்.

எந்த உணவுகளை விலக்க வேண்டும் என்று சொன்னவர் காரணத்தை விளம்பவில்லை. இவை பழைய நூலில் உள்ளவை என்று சொல்லி தப்பித்துக் கொள்கிறார். விளக்கில்லாத இடங்களில் சாப்பிடக்கூடாது, பழைய, கெட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் மஹாத்மா காந்திக்குப் பிடித்த ஆட்டுப்பாலை ஏன் வேண்டாம் என்று சொல்கிறார் ? என்று தெரியவில்லை. வெங்காயம், உள்ளிப்பூண்டு , முருங்கைக் காய், காளான் முதலியவற்றை ஆன்மீக நாட்டம் உடையோர் சேர்ப்பதில்லை ; வேறு சில காய்களையும் விலக்கியமைக்கு நமக்கு விளக்கம் தேவைப்படுகிறது

Xxx

இரண்டாம்  பாடலில் ஒவ்வொரு பொருளுக்கும் உள்ள குற்றங்களை சொல்கிறார்

கங்கை நதிக்கு வெள்ளப்பெருக்கின்போது வரும் நுரை குற்றம்.

நிலவுக்கு அதிலுள்ள களங்கம் குற்றம் ;

தவ சீலர்களுக்கு கோபமே குற்றம் ; உடனே நமக்கு  துர்வாசர் நினைப்பு வருகிறது. கோபத்தினால் வரக்கூடிய தீங்குகள் பற்றி முன்னரே சதகத்தில் கண்டோம். .குணமென்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது (குறள் 29)

பேரரசர்கள் ஆராயாமல் முடிவு செய்வது மன்னர்களின் தோஷம். உடனே நமக்கு கோவலனைக் கொன்ற பாண்டிய மன்னன் நினைவுக்கு வரும்

xxxx

விஷம்- விடம் , பாஷை- பாடை என்று  ஆவது போல தோஷம் என்ற சொல்  தோடம் ஆகியுள்ளது.

xxxxxx

கைவிலைக் குக்கொளும் பால் அசப் பால், வரும்

     காராக் கறந்த வெண்பால்

  காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழச்சோறு

     காந்திக் கரிந்த சோறு,

செவ்வையில் சிறுக்கீரை, பீர்க்கத்தி, வெள்ளுப்பு,

     தென்னை வெல்லம் லாவகம்,

  சீரிலா வெள்ளுள்ளி, ஈருள்ளி, இங்குவொடு

     சிறப்பில்வெண் கத்த ரிக்காய்,

எவ்வம்இல் சிவன்கோயில் நிர்மாலி யம் கிரணம்,

     இலகுசுட ரில்லா தவூண்,

  இவையெலாம் சீலமுடை யோர்களுக் காகா

     எனப்பழைய நூலுரை செயும்

ஐவகைப் புலன்வென்ற முனிவர்விண் ணவர்போற்றும்

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஐவகைப்புலன் வென்ற முனிவர் விண்ணவர் போற்றும்

அமலனே – ஐந்து புலன்களையும் வென்ற முனிவரும் வானவரும் வாழ்த்தும்

தூயவனே!, அருமை ……. தேவனே!, கைவிலைக்குக் கொளும் பால் –

விலைக்கு வாங்கும் பாலும், அசப்பால் – ஆட்டுப்பாலும், வரும் கார் ஆகறந்த வெண்பால் – வரும் காரா பசுவினிடம் கறந்த வெண்மையான பாலும்,

காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழஞ்சோறு, காந்திக் கரிந்தசோறு,

செவ்வை இல் சிறுக்கீரை, பீர்க்கு, அத்தி, வெள்உப்பு, தென்னை வெல்லம்,

மலாவகம் – பிண்ணாக்கும், சீர்இலா வெள் உள்ளி – சிறப்பில்லாத

வெள்ளைப் பூண்டு, ஈர்உள்ளி – (சிறப்பில்லாத) வெங்காயமும், இங்குவொடு

– பெருங்காயத்துடன், சிறப்பு இல் வெண் கத்தரிக்காய் – சிறப்பில்லாத

வெள்ளைக் கத்தரிக்காயும், எவ்வம் இல் சிவன்கோயில் நிர்மாலியம் –

குற்றம் அற்ற சிவபெருமான் திருக்கோயிலினின்றும் கழிக்கப்பட்ட

பொருளும், கிரணம், இலகுசுடர் இல்லாத ஊண் – சூரியன் ஒளியும்,

விளங்கும் விளக்கு இல்லாத காலத்து உணவும், இவை யெலாம் சீலம்

உடையோர்க்கு ஆகா – இவை யாவும் ஒழுக்கமுடையோர்க்குத் தகாதவை,

எனப் பழைய நூல் உரைசெயும் – என்று பழைமையான நூல்கள் கூறும்.

Xxxx

PLEASE READ MY OLD ARTICLE ABOUT FOOD TABOOS

வெங்காயம் சாப்பிடுபவன் பிராமணன் இல்லை- மநு …

https://tamilandvedas.com › வெ…

27 Oct 2018 — அசோக மாமன்னன் கூட முழுக்க ‘வெஜிட்டேரியன்’ ஆகாமல் அரண்மனையில் வெட்டப்படும் …

    66. நற்பொருளிற் குற்றம்

பேரான கங்கா நதிக்கும் அதன் மேல்வரும்

     பேனமே தோட மாகும்!

  பெருகிவளர் வெண்மதிக் குள்ளுள் களங்கமே

     பெரிதான தோட மாகும்!

சீராம் தபோ தனர்க் கொருவர்மேல் வருகின்ற

     சீற்றமே தோட மாகும்!

  தீதில்முடி மன்னவர் விசாரித்தி டாதொன்று

     செய்வதவர் மேல்தோ டமாம்!

தாராள மாமிகத் தந்துளோர் தாராமை

     தான்இரப் போர்தோ டமாம்!

  சாரமுள நற்கருப் பஞ்சாறு கைப்பதவர்

     தாலம்செய் தோட மாகும்!

ஆராயும் ஒருநான் மறைக்கும்எட்டாதொளிரும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆராயும் ஒரு நான்மறைக்கும் எட்டாது ஒளிரும் அண்ணலே

– ஆராய்ச்சி செய்யப்படுகிற ஒப்பற்ற நான்கு மறைகளுக்கும் கிடையாத

பெரியோனே!, அருமை ……. தேவனே!.

பேரான கங்கா நதிக்கும் அதன்மேல்

வரும் பேனமே தோடம் ஆகும் – புகழ்பெற்ற கங்கையாற்றுக்கும் அதன்மேல் வருகின்ற நுரை ஒன்றே குற்றம் எனப்படும், பெருகிவளர் வெண்மதிக்கு

உள்உள் களங்கமே பெரிதுஆன தோடம் ஆகும் – மிக வளர்ச்சியுடைய

வெள்ளைத் திங்களுக்கு அதனுள் இருக்கின்ற கறுப்பே பெரிய குற்றம்

எனப்படும், சீர்ஆம் தபோதனர்க்கு ஒருவர்மேல் வருகின்ற சீற்றமே தோடம்

ஆகும் – கீர்த்திமிக்க தவத்தினர்க்கு மற்றவர்மேல் உண்டாகும் சினமே

குற்றம் எனப்படும், தீதுஇல் முடிமன்னர் விசாரித்திடாது ஒன்று செய்வது

அவர் தோடம் ஆகும் – குற்றமற்ற பேரரசர்கள் ஆராயாமல் ஒன்றைச்

செய்வது அவர்க்குக் குற்றம் எனப்படும், தாராளமா மிகத்தந்து உளோர்

தாராமைதான் இரப்போர் தோடம் ஆம் – அளவின்றி (முன்)

கொடுத்தவர்கள் (பின்) கொடாமை இரவலரின் (ஊழ்வினைக்) குற்றம்

எனப்படும், சாரம் உள நல் கருப்பஞ்சாறு கைப்பது அவர் தாலம்செய்

தோடம் ஆகும் – சிறப்புடைய நல்ல கருப்பஞ்சாறு கசப்பது

(பருகுவோருடைய) நாவின் குற்றம் எனப்படும்..

–subham–

 tags–உணவில் விலக்கு,அம்பலவாணர் , அறப்பளீசுர சதகம், ஆட்டுப்பால், முருங்கை , காளான் , வெங்காயம், பூண்டு , கூடாது , ஆகாது