
Post No. 8326
Date uploaded in London – 11 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘ஒள’ என்ற எழுத்தில் சொற்களை துவக்கலாம் என்று தொல்காப்பியர் சொன்னபோதிலும் பழந்தமிழர்கள் அந்த விதியைத் தூக்கி எறிந்துவிட்டனர். சங்க இலக்கியத்தின் 18 நூல்களில் ‘ஒள’ வில் துவங்கும் சொற்கள் கிடையாது.
திருவள்ளுவரும் ‘ஒள’ எழுத்தை அவமானப்படுத்தி, தொல்காப்பியருக்கு ‘பெப்பே’ சொல்லிவிட்டார். 2660 வரிகளில் ‘ஒள’ என்ற சொல்லே கிடையாது. சங்க நூல்களை தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் ஐந்தாம் நுற்றாண்டுவாக்கில் பாடற் அடிக்குறிப்பில் ‘ஒளவையார்’ என்று எழுதிவைத்தனர். ‘ஒள’ இல்லாமலும் ‘அவ்’வையார் என்று எழுதமுடியும்.
‘ஒள’ தேவை இல்லாத எழுத்து என்று எல்லோருக்கும் தெரியும். ஆயினும் இந்த எழுத்துக் கோளாறுகள், பெருமை மிகு, தெய்வ மிகு, அருள் மிகு, சிறப்பு மிகு அவ்வைப் பாட்டியைப் பாதிக்கவில்லை. சங்க காலம் முதல் இன்று வரை ஆறு அவ்வையார்கள் இருந்தனர் என்பது ஒரு ஆராய்ச்சி .
தமிழ் நாட்டிலும் வட நாட்டிலும் ஒரே பெயரில் பல மன்னர்களும் புலவர்களும் இருந்தது உண்மை; ஆயினும் நாம் பிறநாடுகள் போல எண்கள் போட்டு எட்டாவது ஜார்ஜ் , எகிப்தின் 11ஆவது ராம்செஸ் மன்னர், 23வது ஜான் போப் , 16ஆவது கிரிகரி போப்பாண்டவர் என்று அழைக்கத் தவறிவிட்டோம் .

இந்திரன் என்று ரிக்வேதத்தில் ஆயிரத்துக்கு மேலான தடவை வருகிறது; அதை வெள்ளைக்கார அயோக்கியர்கள் ஒரே ‘’ஆள் என்று நினைத்துக் குழம்பிப்போய் உளறிவிட்டனர். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் போன்றோர் இந்தப் பிழையை சுட்டிக் காட்டியுள்ளனர்.
தமிழில் ஆறு அவ்வையார்கள் புஸ்தகம் பற்றிய மதிப்புரையை நான் லண்டனிலிருந்து வெளியிட்ட பத்திரிக்கையில் 2003ம் ஆண்டில் வெளியிட்டேன். ‘இந்து’ நாளேடு வெளியிட்ட மதிப்புரை இதோ:-




தமிழில், ஆறு அவ்வையார்கள், ‘ஒள’
70 போப்பாண்டவர் படுகொலை (Post No …
tamilandvedas.com › 2020/01/31 › 7…
31 Jan 2020 – … (Protestant) பிரிவை. உருவாக்கினார் போப்பாண்டவர் ‘பாவ மன்னிப்புச் சீட்டு’. விற்றதே tamilandvedas.com, swamiindology.blogspot.com இதற்கு காரணம்.
