பிள்ளையார் பாட்டைக் கண்டுபிடியுங்கள்! (Post No.5677)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 19 November 2018

GMT Time uploaded in London –8-21 am
Post No. 5677

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் மூதாட்டி அவ்வையார் எழுதிய பிள்ளையார் பாட்டு இந்தக் கட்டத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறது. அதைக் கண்டு பிடித்து தினமும் படித்தால் நிறைய பணம் கிடைக்குமாம். லக்ஷ்மீ கடாக்ஷம் உண்டு என்று அவ்வையாரே பாடலில் சொல்கிறார்.

ம் டா ண் மா ன் நு
சா ர் வா ர் யா
னி நோ க் கு கை ங்
மே கு க் ரா க் கா
ரு ல் னம் ள் பி து
தி பா ம் ம் ப்
பூ க் கொ ண் டு து பு
ப் பா ல் ர்

 

 

விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:–

வாக்கு உண்டாம்; நல்ல மனம் உண்டாம்; மாமலராள்

நோக்கு உண்டாம்; மேனி நுடங்காது; — பூக்கொண்டு

துப்பு ஆர் திருமேனி தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு

TAGS–அவ்வையார், பிள்ளையார் பாட்டு,  

வாக்கு உண்டாம்

  —   சுபம் —

 

வள்ளுவரின் சகோதரி அவ்வையார் (Post No.5590)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 25 October 2018

Time uploaded in London – 16-49

(British Summer Time)

Post No. 5590

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

அவ்வையார், திருவள்ளுவர் ஆகியோர் சகோதர, சகோதரிகள் என்றும், எழுவராகப் பிர்றந்தவர்கள் என்றும் 75 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான எல்லாப் புத்தகங்களிலும் உள்ளது. உண்மையோ பொய்யோ, அந்தக் காலத்தில் இந்தப் புத்தககங்கள் பள்ளிக்கூட சிலபஸிலும் இருந்தது.

ஏற்கனவே சில செய்திகளை இங்கு வெளியிட்டுள்ளேன். இப்பொழுது பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டுபிடித்த 100 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு புத்தகம் இதோ:–

புஸ்தகத்தின் பெயர் பன்னிரு புலவர் சரித்திர ஸாரம்

ஆசிரியர்- திவான் பஹாதூர் வி.கிருஷ்ணமாச்சாரியார்

ஆண்டு-1906

இத்தகைய செய்திகளை ஒளிக்காது, மறைக்காது எல்லோருக்குமளித்து , ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோரைக் கொண்டு, காய்தல் உவத்தலின்றி ஆராய்ந்து துணிபுகளை வெளியிடுவதே நனி சிறந்தது.

 

 

 

 

old articles

திருவள்ளுவர் யார் | Tamil and Vedas

tamilandvedas.com/tag…

Posts about திருவள்ளுவர் யார் written by Tamil and Vedas

திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532) | Tamil and …

tamilandvedas.com/2016/02/12…

–subham—

அவ்வையாரின் ஆத்திச் சூடி பொன்மொழிகள் (Post No.5478)

COMPILED by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 27 September 2018

 

Time uploaded in London – 7-27 am (British Summer Time)

 

Post No. 5478

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

அக்டோபர் 2018 காலண்டர்

விளம்பி-புரட்டாசி/ஐப்பசி

அவ்வையாரின் ஆத்திச் சூடி பொன்மொழிகள்

பண்டிகை நாட்கள்:- அக்டோபர் 2 காந்தி ஜயந்தி ,  8 மஹாளய அமாவாசை,9  நவராத்ரி ஆரம்பம், 18 ஸரஸ்வதி பூஜை,  19 விஜய தஸமி/ துர்கா பூஜை

 

அமாவாஸை- அக்டோபர் 8; பௌர்ணமி- 24;

ஏகாதஸி விரத நாட்கள்-அக்டோபர்  5, 20; முஹூர்த்த நாட்கள்- அக்டோபர் 9, 28, 31

 

அக்டோபர் 1 திங்கட் கிழமை

அறம் செய விரும்பு

1.DESIRE TO DO VIRTUE / DESIRE TO DO CHARITY.

 

அக்டோபர் 2 செவ்வய்க் கிழமை

ஆறுவது சினம்

2.ANGER SHOULD BE SUBDUED.

 

அக்டோபர் 3 புதன் கிழமை

இயல்வது கரவேல்

3.DO NOT CONCEAL YOUR MEANS/ DO NOT REFUSE HELP WHERE IT IS PRACTICABLE.

 

அக்டோபர் 4 வியாழக் கிழமை

ஈவது விலக்கேல்

4.DO NOT PREVENT GIVING ALMS.

 

அக்டோபர் 5 வெள்ளிக் கிழமை

உடையது விளம்பேல்

5.DO NOT BOAST OF YOUR POSSESSIONS/ DO NOT SPEAK IN PRAISE OF YOUR GREATNESS.

 

அக்டோபர் 6 சனிக் கிழமை

ஊக்கமது கைவிடேல்

6.DO NOT LOSE YOUR COURAGE/ CEASE NOT TO PERSEVERE

 

அக்டோபர் 7 ஞாயிற்றுக் கிழமை

எண் எழுத்து இகழேல்

7.DO NOT DESPISE NUMBERS AND LETTERS/ DO NOT NEGLECT THE STUDY OF ARITHMETIC AND GRAMMAR

 

அக்டோபர் 8 திங்கட் கிழமை

ஏற்பது இகழ்ச்சி

8.BEGGING IS DISGRACEFUL

அக்டோபர் 9 செவ்வய்க் கிழமை

ஐயமிட்டு உண்

9.GIVE ALMS AND THEN EAT

 

அக்டோபர் 10 புதன் கிழமை

ஒப்புரவு ஒழுகு

10.CONDUCT YOURSELF CONSISTENTLY/ FOLLOW ESTABLISHED CUSTOMS

 

 

அக்டோபர் 11 வியாழக் கிழமை

ஓதுவது ஒழியேல்

11.CEASE NOT TO LEARN/ DO NOT NEGLECT THE STUDY OF THE VEDAS

 

அக்டோபர் 12 வெள்ளிக் கிழமை

ஔவியம் பேசேல்

12.DO NOT SPEAK ENVIOUSLY

 

அக்டோபர் 13 சனிக் கிழமை

கண்டு ஒன்று சொல்லேல்

13.DO NOT SAY ONE THING AFTER SEEING ANOTHER/ DO NOT SAY ONE THING TO A MAN’S FACE AND ANOTHER BEHIND HIS BACK

 

அக்டோபர் 14 ஞாயிற்றுக் கிழமை

ஙப் போல் வளை

14.BE UNITED TO YOUR RELATIVES LIKE THE LETTER OR BEND LIKE ‘NGA’

THERE ARE FOUR DIFFERENT READINGS FOR THIS SAYING.

LIKE THE SHAPE OF THE LETTER ’ ங ‘ SURROUND AND PROTECT YOUR RELATIVES.

DRAW UP YOUR FORCES ENCOMPASSING THE ENEMY IN THE FORM OF LETTER ‘ ங ‘

 

STAND LIKE THE LETTER ங ‘ ‘ AND FIGHT I.E. AS THE CONSONANT ‘ ங ‘ TAKES AN INTERMEDIATE POSITION IN WORDS TAKE A STAND BETWEEN THE VAN AND REAR OF YOUR ARMY AND FIGHT.

 

BUILD THE ENTRANCE OF THE FORT IN WINDINGS LIKE THE LETTER ங ‘ ‘

 

 

அக்டோபர் 15 திங்கட் கிழமை

சனி நீராடு

15.BATHE ON SATURDAY (WITH OIL)’ BATHE THE BODY IN SPRING WATER, FIRST BATHING THE DEFILED MIND IN TRUTH.

 

அக்டோபர் 16 செவ்வய்க் கிழமை

ஞயம்பட உரை

16.SPEAK SO AS TO GIVE PLEASURE

 

அக்டோபர் 17 புதன் கிழமை

இடம்பட வீடு இடேல்

17.DO NOT BUILD TOO LARGE A HOUSE

 

அக்டோபர் 18 வியாழக் கிழமை

இணக்கம் அறிந்து இணங்கு

18.BE FRIENDLY ON EXPERIENCING FRIENDSHIP

 

அக்டோபர் 19 வெள்ளிக் கிழமை

தந்தை தாய் பேண்

19.PROTECT YOUR FATHER AND MOTHER

 

அக்டோபர் 20 சனிக் கிழமை

நன்றி மறவேல்

20.FORGET NOT A BENEFIT

 

அக்டோபர் 21 ஞாயிற்றுக் கிழமை

பருவத்தே பயிர் செய்

21.SOW IN DUE SEASON

அக்டோபர் 22 திங்கட் கிழமை

மன்று பறித்து உண்ணேல்

22.DO NOT LIVE BY LAND WRESTED FROM YOUR NEIGHBOUR/ DO NOT GAIN A LIVELIHOOD BY MEANS OF BRIBES TAKEN IN A COURT OF JUSTICE

 

அக்டோபர் 23 செவ்வய்க் கிழமை

இயல்பு அலாதன செயேல்

23.DO NO IMPROPER ACTION/ DO NOT WANDER ABOUT DELUDED BY THE SENSES

 

அக்டோபர் 24 புதன் கிழமை

அரவம் ஆட்டேல்

24.DO NOT PLAY WITH A SNAKE/  DO NOT SPEAK VAINLY

 

அக்டோபர் 25 வியாழக் கிழமை

இலவம் பஞ்சில் துயில்

25.SLEEP ON A MATTRESS OF SILK COTTON

அக்டோபர் 26 வெள்ளிக் கிழமை

வஞ்சகம் பேசேல்

26.DO NOT SPEAK DECEITFULLY

 

அக்டோபர் 27 சனிக் கிழமை

அழகு அலாதன செயேல்

27.DO NO DISGRACEFUL ACTION

 

அக்டோபர் 28 ஞாயிற்றுக் கிழமை

இளமையில் கல்

28.LEARN FROM CHILDHOOD

 

அக்டோபர் 29 திங்கட் கிழமை

காப்பது விரதம்

29.FORGET NOT YOUR DUTY (CHARITABLE ACTIONS ARE INTENDED)

 

அக்டோபர் 30 செவ்வய்க் கிழமை

அனந்தல் ஆடேல்

30.DO NOT SLEEP TOO LONG

அக்டோபர் 31 புதன் கிழமை

கடிவது மற

31.AVOID UNKIND WORDS

 

—SUBHAM–

உடையது விளம்பேல்! வல்லமை பேசேல்! (Post No.4374)

Written by London Swaminathan 

 

Date: 7 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-49 am

 

 

Post No. 4374

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தற்புகழ்ச்சி என்பது ஒரு நோயாகும்; நம்மில் பெரும்பாலோர்க்கு இந்த நோய் உண்டு; யாராவது ஒருவர் பேசா மடந்தையாக இருந்தாலோ, அல்லது உங்களைப் பாராமல் இருக்கும் பாராமுகமாக இருந்தாலோ, அவரிடம் போய், ‘அட இந்த சட்டை நன்றாக இருக்கிறதே, இந்தப் புடவை நன்றாக இருக்கிறதே! எங்கே வாங்கினீர்கள்?’ என்று கேளுங்கள்; அவர்கள் முகத்தில் ஆயிரம் செந்தாமரைகள் பூக்கும்; அவர்கள் பேச்சில் மதுரை மல்லிகை மணம் வீசும்; சுவிட்சைத் (switch) தட்டிவிட்டீர்கள்; இனி ஆஃF  (off) செய்ய மெடியாது. ‘அட! முன்னைவிட நீங்கள் இளஞர் ஆகி விட்டீர்களே; பத்து வயது குறைந்தது போல இருக்கிறீர்கள்’ என்று சொல்லுங்கள்; உங்களுக்கு திருநெல்வேலி லாலா கடை அல்வா வாங்கிக் கொடுப்பார். புகழ்ச்சிக்கு மயங்காதோர் உண்டோ?

 

 

இதெல்லாம் கூடத் தடவறில்லை; ஆனால் ஒருவர் தானாக முன்வந்து, தனது சாதனைகளைச் சொல்லுவது அறிவுடைமை அன்று; அது பேதைமையின் முற்றிய தோற்றம் ஆகும்.

 

இதனால்தான் அவ்வையாரும்

 

உடையது விளம்பேல் ( உனக்குள்ள சிறப்பினை நீயே புகழ்ந்து கூறாதே)

வல்லமை பேசேல் (உனது திறமையை நீயே புகழ்ந்து பேசாதே) என்று ஆத்திச் சூடியில் அழகுபடப் பகர்ந்தார்.

வள்ளுவனும் சொன்னான்:

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை (குறள் 439)

 

பொருள்: தன்னையே புகழாதே; பயனில்லாத செயலைச் செய்யாதே என்பது வள்ளுவன் வாக்கு.

மனு நீதி நவில்வது

 

மனு, தனது மானவ தர்ம சாஸ்திரத்தில், இதைவிட அழகாகாக, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே செப்பிவிட்டார்:-

 

“யாராவது உன்னைப் புகழ்ந்தால் அதை விஷம் போல ஒதுக்கு; யாராவது உன்னைக் குறைகூறினால் அதை அமிர்தம் போலக் கருது (மனு நீதி 2-162)

 

யாராவது குறைகூறி அதை நீ கேட்டால் சந்தோஷமாக உறங்கலாம்; சந்தோஷமாக விழித் தெழலாம்; சந்தோஷமாக நடமாடலாம்; குறை சொன்னவனுக்குத்தான் அழிவு (உனக்கல்ல)- மனு நீதி நூல் 2-16

 

 

கூரம் பாயினும் வீரியம் பேசேல்

–கொன்றை வேந்தன்

(கூர் அம்பாயினும் வீரியம் பேசக் கூடாது; அதாவது உன் கைகளில் கூரிய அம்பு இருந்து, எதிரி கைகளில் ஆயுதம் ஒன்றில்லாவிடினும் செருக்கு கொண்டு அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று புகழ்ந்து கொள்ளாதே)

 

குமரகுருபரரும் நீதி நெறி விளக்கத்தில் உரைப்பார்:

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் – தன்னை

வியவாமை யன்றே வியப்பாவ தின்பம்

நயவாமை யன்றே நலம்

 

பொருள்:

தன்னைப் பிறர் மதிக்க வேண்டும் என்று தன்னைத் தானே புகழ்ந்து பேசுதல் தண்ணீரை ஊற்றி விளக்கு எரிப்பதற்குச் சமம் ஆகும்;  இன்பத்தை விரும்பாமல் இருபப்பதல்லவோ இன்பம்;  அது போல தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமல் இருப்பதன்றோ நன்மதிப்பு!

அவ்வையார் கதை

அவ்வையாரிடம் ஒரு சிறுவன் சென்றான்; ஒரு கையில் மண்ணை எடுத்துக் கொண்டான்;  பாட்டி என் கையில் எவ்வளவு மண் இருக்கிறது? என்று சொல் பார்ப்போம் என்றான்; அவ்வையார் பதில் சொல்ல முடியாமல், மனதில் மணல் துளிகளை எண்ணிக் கொண்டிருந்தார்;  விடை தெரியவில்லை. அட பாட்டி, இது கூடத் தெரியவில்லையா? என் கையில் இருப்பது ‘பிடி மண்’ என்றான். முருகப் பெருமானோ சுட்ட பழம் வேன்டுமா, சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு அவ்வைப் பாட்டியை திணறடித்தான்; கீழே விழுந்த நாவற் பழங்களை மணல் போக ஊதிக் கொடுத்தால் அது சுட்ட  பழம் என்று அறிவுறுத்தினான்.

 

இதனால்தான் அறநெறிச்சாரத்தில் முனைப்பாடியார் என்பாரும் சொன்னார்:–

 

பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா

அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்

சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்

கச்சாணி யன்னதோர் சொல்

பொருள்:

அலர்கதிர் ஞாயிற்றை — பரந்த கிரணங்களை உடைய சூரியனையும்

கைக்குடையும் காக்கும்— கையிலுள்ள சிறிய குடையும் மறைத்துவிடும்.

பலகற்றோம் யாமென்று- ஆதாலால் யாம் பல விஷயங்களைக் கற்றுவிட்டோம் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளக் கூடாது.

 

பலகற்றார்க்

கச்சாணி யன்னதோர் சொல்–  பல நூல்களையும் ஆராய்ந்து அறிந்தவர்க்கும்  அச்சாணி போன்ற ஒரு சொல்

சில கற்றார் கண்ணும் உளவாம்-  சில நூல்களை மட்டுமே பயின்றோரிடத்தும் உண்டு.

TAGS:–அவ்வையார், மனுநீதி, தற்புகழ்ச்சி, உடையது, வியவற்க

சுபம், சுபம்—

சாக்ரடீசும் அவ்வையாரும்!

GREECE - CIRCA 1998: A postage stamp printed in the Greece shows bust of ancient Greek Tragedian Sophocles, circa 1998

GREECE – CIRCA 1998: A postage stamp printed in the Greece shows bust of ancient Greek Tragedian Sophocles, circa 1998

Article No.1985

Compiled by London swaminathan

Date 10th July 2015

Time uploaded in London: காலை 8-21

((தமிழன்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்: மற்றவர் கட்டுரைகளை எடுக்கையில் அவர்தம் பெயரையும், அவருடைய பிளாக்–கின் பெயரையும் அப்படியே வெளியிடுங்கள். என் கட்டுரைகளில், படங்கள் என்னுடையதல்ல. அதைப் பயன்படுத்துவோர் சட்டபூர்வ வழக்குகளைச் சந்திக்க நேரிடும்.))

சாக்ரடீஸ் என்பவர் புகழ்பெற்ற கிரேக்க ஞானி; தத்துவ வித்தகர். அவருக்கு வாய்த்த மனைவியோ சரியான அடங்காபிடாரி; ராக்ஷஸி. அவ்வையார் புகழ்பெற்ற தமிழ் கவிஞர், அறிஞர், இறையன்பர். சங்க காலம் முதல் தற்காலம் வரை ஆறு அவ்வையார்கள் இருந்தனர்; சிலர் மூவர் என்பர். மொழியியல் அடிப்படையில் கட்டாயம் முவர் அல்லது அதற்கு மேலும் இருந்திருக்கலாம் என்பது எனது கணிப்பு. ஆனால் எந்த அவ்வையார் படியதாக இருந்தாலும் சரி அவை அத்தனையும் ஆனி முத்து; தமிழர்களின் சொத்து. ஆத்திச் சூடி பாடிய கடைசி அவ்வையாரா, அதியமானைக் கண்ட சங்க கால அவ்வையாரா என்று ஆராய வேண்டிய அவசியமில்லை.

அதிசயம் என்னவென்றால் அவ்வையாரும் சாக்ரடீசும் ஒரே கருத்தைச் சொல்லியுள்ளனர்.

ஒருமுறை சாக்ரடீஸ் தத்துவச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவரது மனைவியோ ஞான சூன்யம். மேல் மாடியில் இருந்து எட்டிப் பார்த்து, பேச்சை நிறுத்தச் சொல்லி இடி முழக்கம் செய்தார். சாக்ரடீஸோ நிறுத்தவில்லை. ஒரு வாளி தண்ணீரை மேலேயிருந்து கொட்டினார். யார் தலையில்? சாக்ரடீஸ் தலையில்! அவர் அசரவில்லை; அவர் சொன்னார்:

“அன்பர்களே! இவ்வளவு நேரம் இடிமுழங்கியது; இப்பொழுது மழை பெய்கிறது!”

சாக்ரடீஸின் மனைவியை பற்றி நன்கு அறிந்தவர் ஒருவர் சாக்ரடீஸிடம் சென்று திருமணம் செய்துகொள்வது பற்றி தங்கள் கருத்து என்னவோ? என்று கேட்டார்.

அவர் சொன்னார்:

எந்த முடிவு எடுத்தாலும் இறுதியில் வருத்தப்படுவாய்!

இன்னொரு முறை அவர் சொன்னார்:

“நல்ல மனைவி கிடைத்தால் நன்கு மகிழ்ச்சியாக வாழலாம்; கெட்ட மனைவி கிடைத்தாலோ தத்துவ வித்தகர் ஆகலாம்.”

Adhiyaman_wiki

Avvaiyar with Athiyaman; picture from wikipedia

அவ்வையாரும் இதையே சொல்கிறார்:

பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால்

எத்தாலும் கூடி வாழலாம்; — சற்றேனும் ஏறுமாறாக

இருப்பாளே யாமாகில்

கூறாமல் சந்யாசம் கொள்

 

பொருள்: கணவனுக்கேற்ற பதிவிரதையாக இருந்தால், எவ்வளவு கஷ்டம் வந்தலும் அவளை விட்டு விடாதே. அவள் பிடாரியாக இருந்தாலோ, அவளிடம் போகிறேன் என்று சொல்லக்கூட வேண்டாம். பேசாமல் போய் சந்யாசம் வாங்கிக் கொள்.

பழைய முறத்தால் அடி!

சாக்ரடீஸ் மனைவி போலவே ஒரு கொடுமைக்காரியை மனைவியாகப் பெற்ற ஒரு சாதுவின் வீட்டுக்கு அவ்வையார் போனார். பாவம், அவர்தான் அவ்வையாரை சாப்பிட அழைத்தார். அவ்வையை வாசல் திண்ணையில் அமரவைத்துவிட்டு உள்ளே சென்று மனைவியின் முகத்தை நன்கு துடைத்து, பொட்டு வைத்து அலங்கரித்து, தலையில் உள்ள ஈரும் பேனும் எடுத்துவிட்டு, தலைவாரிவிட்டு, மெதுவாக அவ்வையாருக்கு அமுது இடும்படி  கொஞ்சும் மொழியில் கெஞ்சினார். அவளோ எடுத்தால் அருகிலிருந்த பழைய முறத்தை! புடைத்தாள் நைய அவனை. பேயாட்டம் ஆடினாள்; வசை மொழிகளை வாரி இரைத்தாள். அவன் வெளியே ஓடிவந்தான்; அப்பொழுதும் அந்த நீலாம்பரி முறத்தைக் கையில் ஓங்கியவாறு ஓடி வந்தாள்: அவ்வையாருக்கு ஒரு புறம் சிரிப்பு; மறுபுறம் அனுதாபம். அவனுக்கோ ஒரே பதைபதைப்பு.

அவ்வையார் பாடினார்:

இருந்து முகம் திருத்தி, ஈரோடு பேன் வாங்கி

விருந்து வந்தது என்று விளம்ப – வருந்திமிக

ஆடினாள், பாடினாள்; ஆடிப் பழமுறத்தால்

சாடினாள் ஓடோடத்தான்.

அவ்வையாருக்கு பிரம்மா மீதே கோபம் வந்து விட்டது. இப்படி நல்ல சாதுவுக்கு இவ்வளவு மோசமான மனைவியா என்று. இது பெண்ணா? பேயா? வறண்ட மரம் போன்ற பெண்ணை இந்த மகனை முடிச்சுப்போடச் செய்தானே என்று நினைத்து பிரம்மா மட்டும் என் முன்னே வரட்டும் நான்கு தலைகளையும் திருகிவிடுகிறேன் என்றார்.

உடனே பாடினார்:

அற்றதலை போக அறாத தலை நான்கினையும்

பற்றித் திருகிப் பறியேனோ? – வற்றும்

மரம் அனையாட்கு இந்த மகனை வகுத்த

பிரமனையான் காணப்பெறின்.

அற்றதலை= ஏற்கனவே பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை சிவன் கிள்ளி எறிந்த கதை புராணத்தில் உள்ளது.

-சுபம்-

swami_48@yahoo.com

இந்தியப் பெண்கள் உலக மஹா அறிவாளிகள்! – பகுதி-1

tamil kili

எழுதியவர் சந்தானம்/லண்டன் சுவாமிநாதன்

ஒரு நாட்டின் நாகரீக வளர்ச்சியையும், அறிவு முதிர்ச்சியையும் அந்த நாட்டின் பெண்களை வைத்து எளிதில் கண்டு பிடித்து விடலாம். பழங்கால இந்தியாவின் பெண்கள் உலகிலேயே மிகப்பெரிய அறிவாளிகள். வேத காலத்தில் மட்டும் 27 பெண் கவிஞர்களும் அதற்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னால் சங்கத் தமிழில் 27 க்கும் மேலான பெண் கவிஞர்களும் இருந்தனர். இதை எண்ணிப் பார்க்கும்போது மிகவும் வியப்பாக இருக்கிறது. கிரேக்கம், சீனம், ஹீப்ரூ, லத்தீன் மொழிகளில் இப்படிப்பட்ட பெண் கவிஞர்கள் இல்லை. ஒன்றிரண்டு பெயருக்கு இருக்கிறார்கள். அவர்களும்  காலத்தால் பிற்பட்டவர்கள்.

 

1.கிரேக்க நாட்டில் ஹோமர் என்ற கவிஞர் எழுதிய ‘இலியட்’டும் ‘ஆடிசி’யும்தான் முதல் நூல்கள். இதே காலத்தியது பிருஹத் ஆரண்யக உபநிஷத் (கி.மு.எட்டாம் நூற்றாண்டு). இதில் வரும் கார்க்கி வாசக்னவி என்ற பெண்தான் உலகின் முதல் தத்துவ ஞானி.. ஜனகன் என்ற மன்னன் உலக தத்துவ அறிஞர் மகாநாட்டைக் கூட்டினான். அதற்கு ஏராளமான தத்துவ வித்தகர்கள் நாடு முழுவதில் இருந்தும் வந்திருந்தார்கள். ஜனகன் ஒரு சில கேள்விகளை எழுப்பி அவைகளுக்கு விடை கூறுவோர்,  மாட்டின் கொம்பின் கட்டப்பட்டுள்ள ஆயிரம் பொற்காசுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தான். எல்லோருக்கும் பயங்கர ஆசை. ஆனால் மிகப்பெரிய அறிவாளி யாக்ஞவல்கியர் தானே அறிவாளி என்று சொல்லி சிஷ்யர்களைப் பர்த்து பொற்காசுகளுடம் மாடுகளை ஓட்டிச் சொல்ல உத்தரவிட்டார்.

 

சபையில் ஒரே மௌனம். திடீரென்று ஒரு பெண் குரல், ‘’நிறுத்துங்கள். நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்’’ என்று தடுத்தாள், கேள்விக் கணைகளைத் தொடுத்தாள். யாக்ஞவல்கியரின் ஆசையைக் கெடுத்தாள். இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் அப்போதே ஒரு பெண் ‘அசெம்பிளி’க்கு (அறிஞர் குழாம்) வர முடிந்தது. கண்ணகி, திரவுபதி போல சபையில் கேள்வி கேட்கவும் முடிந்தது. உலகில் இந்தப் பெண்மணிக்கு ஈடு இணையானவர் இன்றுவரை இல்லை.

 

2.இதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் தமிழ் நாட்டில் வாழ்ந்த அவ்வையாரும் இது போல மன்னர்களைக் கேள்வி கேட்கவும், தட்டிக்கழிக்கவும் வல்லவராகத் திகழ்ந்தார்.. மாபெரும் சக்திவாய்ந்த சோழ, சேர ,பாண்டிய மன்னர்கள் மூவரும் அதிசயமாக, ஒற்றுமையாக, ஒரு சேர இருந்ததைக் கண்டவுடன் அவருக்கு பெரு மகிழ்ச்சி. ராஜசூய யக்ஞம் செய்த பெருநற்கிள்ளியின் அவையில் இந்தக் காட்சியைக் கண்டார். பேரானந்ததம் கொண்டார். அதே அவ்வையார் இன்னொரு மன்னரின் அவைக்குப் போனபோது, ‘’அடே மன்னா! உன்னுடைய ஆயுதங்கள் அனைத்தும் பளபள என்று இருக்கின்றன. நீ சண்டை போடப் போகிறாயே அந்த மன்னனுடைய வாள், ஈட்டி முதலியன பழையதாக கூர் மழுங்கி இருக்கின்றன’’ என்றார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அவனுக்கு அறிவுரை வழங்கினார். உனக்கோ போர் என்றால் என்ன என்றே தெரியாது, அனுபவம் இல்லாத பேர்வழி. அவனோ பல போர்க்களங்களைக் கண்டவன், ஜாக்கிரதை!!! என்று சொல்லாமல் சொன்னார்.

tamil aru

3.ஆதிகாலத்தில் வேதம் படிக்க பிராமணச் சிறுவர்கள் போனவுடன், குரு முதலில் கேட்கும் கேள்வி, உன் குலம் என்ன, கோத்திரம் என்ன? என்பதாகும். இப்போதும் கேட்கிறோம். வேறுவிதத்தில்; நர்சரி பள்ளிக்குப் போனவுடன், மனுவை நிரப்புவதும், நன்கொடை, கல்விக் கட்டணம் கட்டுவதும்தான் முதல் வேலை. பல பள்ளிக்கூடங்களில் தந்தை தாயாருக்கும் இன் டர்வியூ—எங்கள் லண்டனைப் போல!! வேத காலத்தில் ஒரு பையனுக்கு அப்பா யார் என்று தெரியாது. அவன் அம்மா அஞ்சவில்லை. பிள்ளைக்குப் படிக்க ஆசை இருக்கிறது. போனால் என்ன என்று அனுப்பிவிட்டாள்.

 

ஆசார்யர் ( ஆசிரியர்) கேட்ட முதல் கேள்வி, ‘’டேய், பையா, உன் குலம் என்ன கோத்திரம் என்ன, சொல்லு?

பையன் கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் ‘’சார், அப்பா பெயர் எல்லாம் தெரியாது. அம்மா பெயர் ஜாபாலா. அதை மட்டும்தான் அம்மா சொல்லச் சொன்னாள்.’’

‘’அடடா! என்ன தைரியமாக உண்மை பேசுகிறாய். வேதம் படிப்பவனுக்கு சத்தியமே அடைக்கலம். இன்று முதல் நீ என் மாணவன். உன் பெயர் சத்யகாம ஜாபாலா’’ (உண்மை விரும்பி=சத்யகாமன்) என்றார் குரு. இதுவும் உபநிஷத்தில் உள்ள கதை. ஜாபாலாவின் அறிவுக்கும் துணிவுக்கும் நிகரான ஒரு பெண் எந்த நாட்டு இலக்கியத்திலும் இல்லை.

3.திரவுபதியின் புடவையை உருவி அவளை அவமானப்படுத்த துரியோதனன் தம்பி துச்சாதனன் இழுத்து வந்தபோது அந்த சபையில் அவள் எழுப்பிய கேள்விகளும் சட்டப் பிரச்சினைகளும் உலகில் எந்த நாட்டுப் பார்லிமெண்டிலும் நடந்தது இல்லை. அப்படிப்பட்ட மஹா அறிவு, மஹா துணிச்சல்.

 

கண்ணகியும் மிக சக்தி வாய்ந்த பாண்டிய மன்னனைப் பார்த்து, ‘’தேரா மன்னா, செப்புவதுடையேல்’’ என்று விளிக்கிறாள். ‘’டேய், முட்டாள்’’ என்று சொல்லுவதற்குச் சமம் இது. பின்னர் தனது குலம் கோத்திரம் முதலியவற்றை உத்தரகுருவை ஆண்ட சிபியின் காலத்தில் இருந்து அக்கு வேறு ஆணி வேராகப் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டு, பிள்ளையார் கோவிலில் சதிர்த் தேங்காய் உடைப்பதைப் போல சிலம்பை மன்னன் முன்னால் போட்டு உடைக்கிறாள். உண்மை ‘’முத்து முத்தாக’’ வந்தது! இப்படி இந்தக் காலத்தில் செய்தால், முதல்வரோ, பிரதமரோ அவருடைய குண்டர்களோ (*ஸாரி, தொண்டர்கள்) என்ன செய்வார்கள் என்று சொல்லத் தேவை இல்லை.

 

4.உலகின் முதல் இலக்கண ஆசிரியன் பாணினி. அவன் சம்ஸ்கிருதத்துக்கு எழுதிய பாணீணீயத்தைக் கண்டு கம்ப்யூட்டர் உலகமே வியக்கிறது. அப்படிப்பட்ட பாணிணி 2700 ஆண்டுகளுக்கு முன் பெண் ஆசிரியைகள் இருந்ததை நமக்குத் தெரிவிக்கிறான்.

 

5.வேதகால, சங்க கால பெண் புலவர்கள் சாமி, மன்னன் என்று மட்டும் அலையவில்லை. எல்லாப் பொருள் குறித்தும் பாடினர். சீதை, தமயந்தி, நளாயினி, அகல்யை, மண்டோதரி, திரவுபதி ஆகியோரின் வாழ்க்கைச் சரிதம் படிப்பவர்களுக்கு அவர்களின் அறிவின் வீச்சு தெரியும்.

tamil penkal

இரண்டாம் பகுதியில் வேத கால ,சங்க கால பெண் புலவர் பட்டியலுடன் பெண்கள் குறித்து மனு கொடுக்கும் எச்சரிக்கையும் வரும். படிக்கத் தவறாதீர்கள்—- தொடரும்…….

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)

Pictures are taken from World Tamil Conference Souvenir,thanks.Contact swami_48@yahoo.com