கள் குடித்த குரங்கைத் தேள் கொட்ட, பேயும் பிடித்தால்!!! (Post No.10,742)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,742

Date uploaded in London – –     14 MARCH   2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; 

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கள் குடித்த குரங்கைத் தேள் கொட்ட, பேயும் பிடித்தால் அது போடும் ஆட்டம், அடடா!

ச.நாகராஜன்

அருமையான சில சுபாஷிதங்கள் இதோ:

கேசிதஞாநதோ நஷ்டா: கேசின்னஷ்டா: ப்ரமாதத: |

கேசித் ஞானாவலேபேன கேசின்னஷ்டைஸ்து நாஷிதா: ||

சிலர் அறியாமையினால் நஷ்டம் அடைகின்றனர். சிலர் தங்கள் தவறுகளால் அழிவை அடைகின்றனர். சிலர் தாங்கள் அறிவு கொண்டிருக்கிறோம் என்ற கர்வத்தினால் நாசமடைகின்றனர். சிலரோ தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டவர்களாலேயே அழிகின்றனர்.

Some perished because of ignorance, some met with destruction due to (their mistakes), some perished due to the pride of knowledge. But some were destroyed by those who themselves were ruined.

அவ்யாகரணமதீதம் பின்னத்ரோண்யா தரங்கிணீதரணம் |

பேஷஜமபத்யஸஹிதம் த்ர்யமிதமக்ருதம் வரம் ந க்ருதம் ||

இலக்கணம் அறியாமல் கல்வி கற்றல், ஓட்டைப் படகினில் ஆற்றைக் கடத்தல், அபத்யமான உணவைச் சாப்பிட்டவாறே மருந்தை எடுத்துக் கொள்ளல் இந்த மூன்றும் செய்வதை விட செய்யாமல் இருப்பதே மேல்.

Learning without grammar, crossing river in a broken boat and taking medicine with improper diet, these three things are better not done than done.

உதாரஸ்ய த்ருணம் வித்தம் சூரஸ்ய மரணம் த்ருணம் |

விரக்தஸ்ய த்ருணம் பார்யா நி:ஸ்ப்ருஹஸ்ய த்ருணம் ஜகத் ||

உதார குணமுள்ளவர்களுக்கு பணம் புல்லுக்குச் சமானம். சூரர்களுக்கோ மரணம் புல்லுக்குச் சமானம். அனைத்தையும் துறந்தவனுக்கு மனைவி புல்லுக்குச் சமானம்.  ஆசையற்றவனுக்கு உலகம் புல்லுக்குச் சமானம்.

Money is worthless like a straw for a generous person. Death has no significance for a brave. Wife is as good as straw for a person free from attachment. The world is worthless for one who is free from desire.

கபிரபி காபிஷாயனமதமத்தோ வ்ருஸ்சிகேன சந்தஷ்ட: |

அபி ச பிஷாசக்ரஸ்த: கிம் ப்ரூமோ வைக்ருதம் தஸ்ய ||

ஏற்கனவே அவன் ஒரு குரங்கைப் போல இருப்பவன். மேலும் அவன் கள்ளை வேறு குடித்திருக்கிறான். அதே சமயம் அவனை ஒரு தேள் வேறு கொட்டி இருக்கிறது. அத்தோடு அவனை ஒரு பேய் வேறு பிடித்து விட்டது. இந்த நிலையில் அவனது செயல்களை எப்படி விவரிப்பது?

(Already he is) a monkey. Moreover, he got intoxicated with wine. (Then) he was bit by a scorpion (and in addition to that) he was possessed by a spirit. How to describe his feats (in this situation)?

யௌவனம் தனஸம்பத்தி: ப்ரபுத்வமவிவேகிதா |

ஏகைகமப்யனர்தாய கிமு யத்ர சதுஷ்டயம் ||

இளமை, செல்வ வளம், அதிகாரம் மற்றும் விவேகமற்றிருப்பது ஆகிய இந்த நான்கில் ஒன்று இருந்தாலும் அது நாசத்திற்கு வழி வகுக்கும். இந்த நான்கும் சேர்ந்து இருந்தாலோ என்னத்தைச் சொல்வது?

Any one of (the following) youth, riches, authority and recklessness can lead to peril, what to say if all the four are combined together?

(English Translation  by Saroja Bhate)

Tags- கள் , தேள், ஆட்டம், பேய்,   குரங்கு,

தமிழ்ப் பெண்ணின் மஹத்தான 2 கண்டுபிடிப்புகள் – 2 (Post No.10,741)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,741

Date uploaded in London – –    13 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ்ப் பெண்ணின் மஹத்தான 2 கண்டுபிடிப்புகள் – Part 2

ஆக மாறோக்கத்து நப்பசலையார்  சொன்ன கிரஹணம் எது என்பதைக் காண்போம்.; அத்தோடு தமிழன் மட்டுமே உலகம் உருண்டை என்பதைச் சொன்னானா என்றும் அடுத்த பகுதியில் காண்போம் ………………..

இரண்டாவது பகுதி……………..

சம்ஸ்க்ருத நூல்களான ஆர்ய படீயம் , பிருஹத் சம்ஹிதா ஆகியவற்றில் பழைய  விஷயங்கள் இருந்தாலும் இன்று நமக்கு கிடைத்துள்ள நூல்களின் காலம் 5 அல்லது 6- ஆ ம் நூற்றாண்டு என்றே கருடத்ப்படுகிறது. மேலும் குப்தர் கால வராஹ அவதார சிலைகளில் கூட மூக்கின் மேல் பூமி உருண்டை இல்லை. ஆனால் கிரேக்கர்களோ இதற்கு முன்னர் பூமி உருண்டை என்று சொன்னதாக என்சைக்ளோபீடியாக்கள் காட்டுகின்றன. 2000 ஆண்டுப் பழமையான் சங்க இலக்கியத்தில் உள்ள சொற்கள் பூமி உருண்டை என்று சொல்லுவதால், இந்தியாவில்  தமிழர்களே இதை முதலில் சொன்னதாக பெருமை பேசலாம்.

முதல் பகுதியில் ‘பருதி ஞாலம்’ (Round Earth) என்று நப்பசலை என்ற பெண்மணி பாடியிருப்பதைக் கண்டோம். அவர் சொன்ன கிரஹணம் மஹாபாரத ஜயத்ரதன் கொல்லப்பட்ட நாளில் ஏற்பட்ட சூரிய கிரஹணமாகவே இருக்கவேண்டும். கிருஷ்ண என்றால் கருப்பு நிறம் ;அவரது செய்யுளிலும் கண் மை போன்ற கருப்பு நிறம் கொண்ட ‘அஞ்சன வண்ணன்’ இருக்கிறது. அவர் பாராட்டிய ஆள் பெயரும் திரு கண்ணன் = ஸ்ரீ கிருஷ்ணன். அவர் காப்பாற்றியது ராமர் உதித்த சூரிய குலத்தைச் சேர்ந்த சோழ  மன்னன்.

மகாபாரதத்திலும் சூரியன் (கிரஹணம்) மூலமாக கிருஷ்ணன் அர்ஜுனனைக் காப்பாற்றி அரியணையில் அமர்த்தினான். அன்று அவன் ஜெயத்ரதனைக் கொல்லாவிடில் உயிர்துறப்பேன் என்று சபதம் செய்திருந்தான். இந்த சிலேடை நயம் தோன்ற மிஸ். நப்பசலை பாடியது வியப்புக்குரியது.

ஏனாதி திருக்கண்ணன் = மஹாபாரத கண்ணன்

சோழ  குல  மன்னர் = சூரிய வம்சத்தவர்

அவர்களைக் காப்பாற்றியது சூரிய (கிரஹணம்)

.

சங்க கால ஏனாதி திருக்கண்ணன் உருவம் நமக்குத் தெரியாது. ஒருவேளை அவரும் கண்ண பரமாத்மா போல ‘காக்கா கருப்பாக’ இருந்திருப்பார் போலும்!

xxx

உலகம் உருண்டை (Earth is Round)

இதில் ஒரு வியப்பான விஷயம் உள்ளது. தமிழ் இலக்கியத்தில் முதல் முதலில் உலகம் உருண்டை என்று வந்தாலும் அந்த சொற்கள் அனைத்தும் சம்ஸ்க்ருத மூலம் உடையதாக உள்ளன.

முதல் பகுதியில் பருதி = வட்டம் கண்டோம். அது பெரி, பரி Peri, Pari என்று ஐரோப்பிய மற்றும் சம்ஸ்க்ருதத்தில் இருப்பதைக் காட்டினேன்.

இது தவிர சங்க இலக்கியத்தில் வட்டம் என்பதற்கு ‘மண்டிலம்’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் பயன்படுகிறது. பல பாடல்களில் ஆதித்ய மண்டலம் என்று சூரியனைக் குறிக்கவே பயன்படுகிறது ஒரு சில பாடல்களில் சந்திரன், வட்ட வடிவ கண்ணாடியைக் குறிக்கப் பயன்படுகிறது ஆனால் 4, 5 பாடல்களில் பூமியைக் குறிக்கப்பயன்படுகிறது . கீழே  காண்க :-

முதலில் ஏனைய சொற்களைக் காண்போம்

வட்டம் – ஸ்பியர் sPHERE- ஸ்பரி – பரி

வட்டம் – சர்க்கிள் Circle – சக்ர – சகடம் Sakata (சங்க இலக்கியத்திலும் சகடம்/வண்டி உண்டு)

வட்டம் – GLOBE குளோப் – கோளம்

வட்டம் = ROLL உருள் – ரோல்

வட்டம் – ROUND உருண்டை – ரவுண்ட்

வட்டம் – RATHA/ ROTATE ரதம் – ரொட்டேட் – ரோட்டரி

வட்டம் – WHEEL  வலம் = வீல்

ஒரு சொல் ஆங்கிலத்தில் இருந்தால் அதன் மூலம் லதீன் அல்லது கிரேக்கம் அல்லது பழைய ஜெர்மானிய மொழியில் இருக்கும். இவை அனைத்தும் சம்ஸ்க்ருதத்தில் இருந்து பிறந்தவை. நமது மொழியின் பெயரைச் சொல்லாமல் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் என்பர் வெள்ளைக்காரர்கள். மேற்கூறிய எல்லா தமிழ் சொற்களும் ஆங்கிலத்தில் இருப்பதால் அவை தூய தமிழ்ச் சொற்கள் ஆகாது. ஆனால் நான் சொல்லுவது போல உலகின் பழங்கால மொழிகள் அனைத்தும் தமிழ் மற்றும் சம்ஸ்க்ருத மொழியில் இருந்தே வந்தன என்பதை ஒப்புக்கொண்டால் இந்தப் புதிருக்கு விடைகாணலாம் . ஆங்கிலத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்கள்  உள ; ஹோமர் கால கிரேக்கத்தில் பல தமிழ்ச் சொற்கள் உள்ளன. இவை எல்லாம் நமது மேற்கத்திய குடியேற்றத்தைக் (Westward Migration from India)  காட்டும்.

xxxx

பாகவதத்தில்

அகநாநானூறு 59-ம் பாடலில் கண்ணன்- கோபியர்- யமுனை/தொழுனை நதி குறிப்பு கிடைக்கிறது. இதற்குப் பின்னர்தான் பாகவத புராணம் வந்தது என்பது வெள்ளைக்காரன் முடிவு. இதனால் பாகவத புராணத்தில் வரும் பிரம்மாண்ட, ஜகத் அண்ட,  அண்ட கோச என்பன சங்க இலக்கியத்துக்கும் பிற்பட்டவை  என்று பலரும் கருதுவர் ; பாகவதத்தில் அண்ட = முட்டைவடிவ இருக்கிறது; ஆனால் கிருஷ்ண பக்தி கி.மு 200 ஐ ஒட்டிய காலத்திலேயே பரவியது, , அகஸ்தோக்ளிஸ் வெளியிட்ட பலராமன்- கிருஷ்ணன் உருவ நாணயத்தாலும் விதிஷாவில் உள்ள ஹெலியோடோரஸ் கருட தூபியாலும் தெரிகிறது

xxx

தமிழ் இலக்கிய சான்றுகள்

அகநானூறு 104-5, புறநானூறு  30-3, 367-1;குறுந்தொகை 300-7

முந்நீர் மண்டிலம் ,அகநானூறு 104-5, மதுரை மருதன் இளநாகனார் (கடல் சூழ்ந்த வட்ட வடிவ பூமி)

பரிப்புச் சூழ்ந்த மண்டிலம் , புறம்  30-3

நாகத்தன்ன பாகார்  மண்டிலம் ,புறம்  367-1

,கடல் சூழ் மண்டிலம் பெறினும் ,குறுந்தொகை 300-7(கடல் சூழ்ந்த வட்ட வடிவ பூமி)

குறைந்தது 4 இடங்களில் வட்ட வடிவ பூமி பற்றி 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியம் பேசுகிறது.

முடிவுரை –

பூமி உருண்டை என்பதை தமிழ் இலக்கியமே (இந்தியாவில்) உறுதி செய்கிறது  மஹாபாரத  சூர்ய  கிரஹணத்தையே நப்பசலை குறிப்பிடுகிறார். வட்ட வடிவம் பற்றிய எல்லா தமிழ் சொற்களும் சம்ஸ்க்ருதத் தொடர்புடையன. இவற்றில் பூமியை வட்டம் என்று வருணிக்கும் மண்டிலம், பரிதி என்பதும் அடக்கம்.

–subham–

tags- மண்டிலம், பூமி, வட்டம் , பருதி , நப்பசலையார்

காம தகனம் எனும் மதனோற்சவம் (Post No.10,740)

IF U DONT SEE FOUR ATTACHMENTS, PLEASE GO TO MY OTHER BLOG swamiindology.blogspot.com

WRITTEN BY B .KANNAN, DELHI
Post No. 10,740
Date uploaded in London – – 13 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

காம தகனம் எனும் மதனோற்சவம்
Written By B.Kannan, Delhi

அன்புடைய தமிழ் உள்ளங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.

இப்பதிவில் தமிழ், சம்ஸ்க்ருதம், மொழிகளில் காமதகன நிகழ்வு எப்படி யெல்லாம் கவிஞர்களால் விவரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்………

பழங்காலத் தமிழர்களின் சிறப்புமிக்கப் பண்டிகைகளுள் ஒன்றாக காமன் பண்டிகை இருந்துள்ளது என்பதைப் பழந்தமிழ் நூல்கள் பலவும் குறிப்பிடு கின்றன. மந்திர மகோததி எனும் சம்ஸ்க்ருத ஸ்தோத்திரப் பாடல்மாறனை இப்படி அடையாளம் காட்டுகிறது.

”மலர்க் கணைகளைத் தன் வசம் வைத்திருப்பவனும், உலகத்து உயிரினங் களின் மகிழ்ச்சிக்குக் காரணக் கர்த்தாவாக இருப்பவனும், அன்புள்ளங்களின் மனதை அலைக்கழிப்பவனும், உலகின் கண்களாக விளங்கும் பூரண மன நிறைவு, அன்பு (நேசம்) ஆகிய இரண்டையும் தாராளமாய் அள்ளித் தருபவ னுமான, ஹே, மதனா, உன்னை மனதார வணங்குகிறேன்.”

தமிழ்ச் சங்க நூல் அகநானூற்றில்” கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை வைத்து கொங்கு நாட் டில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது எனத் தெரிகிறது.அங்கு ஒலி எழுப்புகின்ற மணிகளைக் கோர்த்து இடுப்பில் கட்டிக்கொண்டுத்தெருக்களில் ஆடிப்பாடி இவ்விழாவைக் கொண்டாடினர். உறையூரிலும்திருவரங்கத்திலும் “மூன்று பக்கம் நீர் சூழ்ந்து நிலம் துருத்திக்கொண்டிருக்கும் மேட்டில்மகளிர் தன் துணையைத் தழுவிக் கொண்டிருப்பர். அங்கு வில்லேந்திய மன்மதன், மனைவி ரதியுடன் விளையாடுவது போன்ற காமாண்டிக் கூத்து நிகழும் (கலித்தொகை 35:13-14).

மன்மதனை சிவன் எரித்த கதை இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் ஆண்டுதோறும் மாசி மாதம் அமாவாசை முடிந்து மூன்றா வது நாள் தொடங்கி வளர்பிறையில் 15 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் காமன் பண்டிகை, காம தகனம்,காமன் கூத்து, காமாண்டி என்றும் கிராமப் புறங்களில் அழைக்கப்படுகிறது. இதன் கரு, நாட்டார் வழக்குமுறையில் பாடல், ஒப்பாரி, வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், லாவணி (இரு குழுக்கள் வாதம் செய்வது போல் பாடல் பாடி நடத்தும் கலை நிகழ்ச்சி) மூலமும், ஓவியம், சிற்பம், சிலைகள் வாயிலாகவும் அதிகப் பிரசித்தி அடைந்தது. அதே சமயம் வெவ்வேறு மாவட்டங்களுக்கிடையே நிலவிய மாறன் பிறப்பு, மற்றும் கதைசொல்லும் நடைவேறுபட்டதைக் கீழ்கண்ட நாட்டுப்புறப் பாடல் மூலம் அறிய முடிகிறது.

(நன்றி சென்னைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி நூல்)

“மால்மகன் மதனெங்குதொரு புராணம்
மலர்வேதன் மகனெங்குதொரு புராணம்
மால்வண்ணன் மகனெங்குதொரு புராணம்
தர்மன் மகனெங்குதொரு புராணம்
சால்கண்ணன் மகனெங்குதொரு புராணம்
சங்கல்பன் மகனெங்குதொரு புராணம்.”

முக்கியமாக, கந்தபுராணத்தில் இடம்பெறும் சம்பவங்களே இதன் பின் புலமாக விளங்குகிறது.

மன்மதனுக்குக் கோயில் கட்டி வழிபடும் வழக்கமும் ஆதியில் தமிழகத்தில் இருந்திருக்கிறது. மன்மதன் கோயில் காமட்டிக் கோயில் என்று சிற்றூர் மக் களால் குறிப்பிடப்படுகிறது. இதற்கு முன்புறமிருக்கும் திடலில் இவ்விழா நடைபெறும்.பந்தலின் நடுவே நடப்பட்டகம்பு ஒன்றில் மேல் வைக்கோல் பிரி சுற்றப்பட்டு, அதன் தலையில் வரட்டி வைத்துக் கட்டப்படும். மாவிலை, வேப்பிலை, குங்குமம், திருநீறு வைத்து அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் உருவம் காமதேவன் மன்மதனை உருவகப்படுத்தும். முன்பே பந்தலில் நடப் பட்டுள்ள ஆலங்கிளையின் அடியில் பரமசிவன் உட்கார்ந்து தபசில் ஆழ்ந் திருப்பார்.

அருகில் சொக்கப்பனை போன்ற அமைப்பில் ஒரு கூம்பு வடிவத்தில் கட்டப் பட்டுள்ளத் துவரை மிளார்களின் நடுவே மன்மதன் உருவம் வரையப்பட் டுள்ள படம் வைக்கப்பட்டிருக்கும். பரமசிவன் தபசிருக்கும் ஆலங்கிளைக்கும் மன்மதன் படம் உள்ள கூம்புக்கும் இடையே இரட்டைவாணம் கோர்த்தக் கயிறு கட்டப்பட்டிருக்கும். தீபாராதனை முடிந்ததும் சகடையில் அல்லது வெள்ளை நிற யானை மீதமர்ந்து ரதி மன்மதன் சுதைச் சிற்பங்கள், எதிரே ரதி மன்மதன் வேடமிட்டவர்கள் கைகளில் வில்லேந்தி முன்னே நடக்க ஊர் வலம் வந்து. பந்தலுக்குத் திரும்பும் மன்மதன் தபசிருக்கும் சிவனைநோக்கி மலர் அம்பு எய்யும் விதமாக, அவன் படம் இருக்கும் பக்கத்தில் தொங்கும் இரட்டைவாணம் பற்ற வைக்கப்படும். உடனே அது சீறியபடி சிவனை நோக் கிப் போகும். மறுமுனையை அடைந்ததும் இரட்டை வாணத்தின் மறுபகுதி தானாகவே பற்றிக் கொண்டு மன்மதனை நோக்கிச் சீறிப்பாயும். சிவன் நெற் றிக் கண்ணைத் திறந்து காமனை எரிப்பதாக அர்த்தம். காமன் படத்தின் மீது கற்பூரத்தைக் கொளுத்துவார்கள். படம் பற்றியெரிய அதைத்தாங்கி நின்ற துவரை மிளாறும் சடசடவென எரியும் அதிர்வேட்டு முழங்கி காமதகனம் முடிந்ததை ஊருக்கு அறிவிக்கும்.

ரதிதேவியின் சொல்லொன்னா சோகங்களைச் சுமந்தக் காதல் சொட்டும் பாடல்களை மன்மதன் மற்றும் ரதி என இரு குழுவாகப் பிரிந்து பாடுவார் கள்..பிறகு ரதி, சிவனிடம் அழுது புலம்புவதும் மன்மதனை மீண்டும் உயிப் பிக்க வேண்டுவதுமான ஒப்பாரி வடிவில் வெகு உருக்கமாய் இருக்கும். பாடல்கள் கொட்டு முழக்குடன் மூன்று நாட்கள் தொடரும். இவ்வகையானப் பாட்டுகள் அடங்கியப் புத்தகமே, மதுரை ஶ்ரீமத் பழநிக்
குமாருசாமிப் புலவர் இயற்றிய மன்மதன் லாவணி நூல் (1923)

அதற்குப் பின் மன்மதனுக்கு சிவன் மீண்டும் உயிர்க் கொடுத்து விட்டதாகக் கூறி அவனுக்கு மலர்ப் பந்தல் அமைக்கப்படும். காமதேவன்உருவபொம்மை எரித்த இடத்தில், காமன் உயிர்ப் பெற்றதற்கு அடையாளமாக மண் லிங்கம் எடுக்கப்பட்டு பச்சை மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து வழிபடுகிறார்கள். சிலர் பச்சைப் பப்பாளிச் செடியையும் நடுவர். மன்மதன் உயிரோடு மீண்டும் வந்துவிட்டதைக் கொண்டாடும் வகையில் பெண்கள் அனைவரும் மாவிளக்கு வைத்து வழிபடுவார்கள்.

கடைசி நாள் அன்று எரிந்த கட்சி, எரியாத கட்சி என்று போட்டிப் பாட்டுக் கச்சேரி நடக்கும். ஒருவர்” மன்மதன் சிவபெருமான் முன் நிற்க மாட்டாமல் எரிந்து சாம்பலாயினான். அவன் மீண்டும் பிழைத்து எழுந்திருந்திருக்க மாட்டான்” என்று பாட்டுக் கட்டுவார். மற்றொருவர்” மன்மதனுடைய செய லினால்தான் சிவபெருமான் உமையவளை மணந்து கொண்டார் என்பதால் காதலுக்கு ஒரு போதும் தோல்வியில்லை, வெற்றிதான்” என்று எதிர்ப் பாட்டு பாடுவார் கேட்கிற ரசிகர்களும் ஆளுக்கொரு பக்கம் ஆதரவு தரு வார்கள். முடிவில் மன்மதன் எரிந்து போகவில்லை என்ற முடிவை அனை வரும் ஏற்று மன்மதனைப் புகழ்ந்துப் பாடுவர். பெருத்த கோலாகலத்துடன், எரிந்தகட்சி, எரியாத கட்சித் தர்க்கப் பாடல், ரதி மன்மதன் தேர் ஊர்வலம் ஆகியவற்றுடன் பண்டிகை இனிதே முடிவடையும்.

அரியலூர்–தஞ்சை நெடுஞ்சாலையில் திருமானூரிலிருந்து சுமார் 20 கி.மீ .தொலைவில், ஏலக்குறிச்சி,பெரியமறை மாதூர் கடந்து அமைந்துள்ளது ஶ்ரீ பாலாம்பிகை உடனுறை ஶ்ரீசௌந்தரேஸ்வரர் திருநல்லூர்.,காமரசவல்லி ஆலயம். மகேசனின் அருளால் மன்மதன் உயிர்த்தெழுந்தத் தலம்.காவிரி வடகரை மயிலாடுதுறை வட்டத்தில், தேவாரப் பாடல் பெற்ற 26-வது சிவாலயம். ஶ்ரீ ஞானாம்பிகை சமேத வீரட்டேஸ்வரர் திருநல்லூர் கோவி லாகும். இங்குதான் காமன் ஈசனால் எரிக்கப்பட்டான் என்கிறது தலபுராணம். இவ்விரண்டுத் தலங்களிலும் காமதகன சம்பவம் மாசி பௌர்ணமி நாளில் வெகு விமரிசையாக நடந்தேறுகிறது.

அடுத்து, சம்ஸ்க்ருத இலக்கியத்தில் மதனோற்சவத்தைப் பற்றி பார்ப்போம்…
—————————————————————————————————————-

100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம் – 3 (Post No.10,739)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,739

Date uploaded in London – –     13 MARCH   2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; 

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மார்ச் 2022 ஹெல்த்கேர் மாத இதழில் வெளி வந்துள்ள கட்டுரை

100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம் – 3 

ச.நாகராஜன்

(56 முதல் 85 முடிய)

56. எவரையும் புண்படுத்தாமல் இன்னொருவரைப் போல நடித்துக் காண்பித்தல், அவர் செய்யும் செய்கைகளைச் செய்து காண்பித்தல் மூளையின் பல பகுதிகளை இயக்குகிறது.  மூளை புதிதாக ஒரு நிலையை எதிர்கொள்ள ஒருவரைத் தயாராக்கவும் இது உதவுகிறது,

,57. மூளையில் உள்ள முக்கியமான ஹார்மோன்களை வெளி விடுவதற்கு உதவுவது செக்ஸ் உறவு தான். உணர்ச்சி பூர்வமான அறிவு, சமூக இணைப்பு இவற்றைத் தருவதுடன் மன அழுத்தத்தை நீக்க வல்லது செக்ஸ் உறவு. சிலருக்கு இது தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. பாஸிடிவாக சிந்திக்கும் திறனையும் நல்குகிறது.

58. மூளைக்குத் தேவையான மெலடானின் (Melatonin) ஆழ்ந்த உறக்கத்தைத் தர வல்லது. துரதிர்ஷ்டவசமாக நீல ஒளியில் இருந்தால் தூக்கம் வரும் என்று சொல்லப்படுகிறது. இது உண்மையல்ல. மாலை நேரத்தின் ஆரம்பத்தில் டி.வி. போன் ஆகியவற்றையும் இரவில் கம்ப்யூட்டரையும் உபயோகிக்காமல் இருந்தால் அது மூளைக்கு நல்லது. கணினியில் திரையை மூடி வைக்கும் பழக்கத்தை ஆரம்பித்தால், அது நலம்.

59. ஒமேகா 3 கொழுப்புச் சத்து மீன் உள்ளிட்ட மாமிசத்தில் உள்ளது. Docosahexaenoic acid, or DHA என்பது மூளைக்கும் கண்களின் ரெடினாவிற்கும் தேவையான ஒன்று. மூளையில் 60 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. இந்தக்  கொழுப்பில் 25 சதவிகிதம் DHA தான். 

60. தேங்காய் எண்ணெய் நியூரான்களைப் புதுப்பிக்க வல்லது. கெடோன் பாடீஸ் (Ketone Bodies or ketoacids) தேங்காய் எண்ணெயில் உள்ளது. கொழுப்பை ஆற்றலாக சக்தியாக மாற்ற வல்லது இதுவே. இது அபரிமிதமாக தேங்காய் எண்ணெயில் உள்ளது. வயிற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேங்காய் எண்ணெயை நமது உணவுப் பொருள்களுடன் கலந்து பயன்படுத்துவது நல்லது.

61. விடமின் D : விடமின் D உடலுக்கு – குறிப்பாக மூளை நரம்புகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. சூரிய வெளிச்சத்தில் முறையாக இருந்து சூரிய ஆற்றலைப் பெறலாம். சூரிய ஒளி தேவையான அளவுக்கு இந்த விடமினை நல்குகிறது.

62. உங்கள் குடல் நாளத்தில் உள்ள பாக்டீரியாக்கள் உங்கள் உடலுடன் ஒன்றி இயங்குபவை. வெளியில் வாங்கும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும், குளிர் பானங்களையும் அதிகமாக உட்கொள்ள ஆரம்பித்தீர்களானால்  அருமையான ஆரோக்கியம் தரும் இந்த பாக்டீரியாக்கள் அழிந்து படும். ஆகவே இனிப்பையும் ப்ராசஸ்ட் ஃபுட் எனப்படும் வெளியில் வாங்கும் பதப்படுத்தப்படும் உணவு வகைகளையும் தவிருங்கள்.

63. விடமின் B12 குறைந்திருந்தால் நினைவாற்றல் குறையும். மனத்தின் ஆற்றல் குறையும். அதாவது மூளை ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம். பால், முட்டை, மாமிசம் ஆகியவற்றில்  B 12 நிறையவே கிடைக்கும்.

64. மாமிசம், வெண்ணெய், சீஸ், க்ரீம், ஐஸ் க்ரீம் போன்றவை சாச்சுரேடட் கொழுப்பு வகைகளை அதிகம் கொண்டவை. அவை நினைவாற்றலைக் குறைத்து மறதியை அதிகப்படுத்தும். ஆகவே இவை தவிர்க்கப்பட வேண்டியவை.

65. க்ரீன் டீ : இதில் பாலிபெனால் எனப்படும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது உங்கள் மூளை செல்கள் சேதமாவதிலிருந்து தடுப்பவை. ஆகவே இதை வழக்கமாக அருந்தி வரலாம். இது நினைவாற்றலையும் கூடவே எதிலும் எச்சரிக்கையுடன் இருக்கும் மன ஆற்றலையும் கூட்டும்.

66. பழ ரஸம்: க்ரேப் ஜூஸ் அருந்துவது நல்லது. சரியான அளவு – பெண்ணுக்கு ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ், ஆணுக்கு இரண்டு கிளாஸ்! இரத்தத்தை மூளைக்குக் கொண்டு செல்லும் ரெஸ்வெரட்ரால் (Resveratrol) இதில் அதிகம் உள்ளது. அல்ஜெமிர் எனப்படும் மறதி நோயைத் தடுப்பது இது. புதிய திராட்சைப் பழம், கடலையும் கூட இதே சக்தியைத் தர வல்லவை. 

67. எப்போதும் உடலில் நீர் அருந்தி, உடலை தாகம் ஏற்படுத்தி வற்ற விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் டீ ஹைட்ரேட் நிலையை அடைந்தால் மூளைச் செயல்பாடுகள் குறைய ஆரம்பிக்கும்.

68. கறி மசால் பொருள்கள் (Spices) : Cumin மற்றும் cilantro  ஆகிய கறி மசால் பொருள்கள் நினைவாற்றலைக் கூட்டுபவை என ஆய்வுகள் கூறுகின்றன. இதை உரிய அளவில் மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

69. பச்சைக் கீரை வகைகள், பக்கவாதம், அல்ஜெமிர், பார்க்கின்ஸன் ஆகிய மூளையைப் பாதிக்கும் நோய்களிலிருந்து காக்கும். ஆகவே நல்ல புதிதாக, இலைகளுடன் உள்ள கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

70. பருப்பு வகைகள் மூளைக்கு ஊட்டச் சத்தை அளிப்பவை. பூசணி விதைகளில் உள்ள Zinc  நினைவாற்றலைக் கூட்டும். பருப்பு வகைகளில் உள்ள விடமின் E மூளைச் செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.

71. கார்போஹைட்ரேட் உணவு வகைகள் உடலுக்குச் சக்தி தருபவை. ஆகவே முழு கோதுமை ப்ரெட், ஓட் போன்றவற்றை உணவில் சேர்த்துக்  கொள்வது நல்லது.

72. காபி அருந்துவது குறுகிய கால நினைவாற்றலைக் (Short term memory) கூட்டும். 8 அவுன்ஸ் காபி அருந்துவது காப்பியில் உள்ள போதுமான காபினை (Coffeine) உங்களுக்கு நல்கும்.

73. ஆப்பிள் : நியூரோபாதுகாப்பை நல்குவது ஆப்பிளில் உள்ள ஒரு வகை வேதிப் பொருளான க்வெர்சிடின் (Querceting). மறதியைத் தவிர்ப்பது இது. இந்த வேதிப் பொருள் ஆப்பிளின் தோலில் தான் அதிகம் உள்ளது. ஆகவே தோலுடன் ஆப்பிளைச் சாப்பிட வேண்டும்.

74. சாக்லட் : நல்ல சாக்லட்டில் உள்ள ஃப்லவொனால் (Flavonols),  குறுகிய கால நினவாற்றலை அதிகரிக்கும்.

75. சூயிங் கம் : இதை விளையாட்டாக அனைவரும் வாயில் போட்டு மென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் இது ஒரே நிலையைக் கொண்டிருக்கவும் (Mood stablity and alertness) எச்சரிக்கையுடன் இருக்கவும் உதவுகிறது. 

76. முட்டையும் சிக்கனும் : எது முதலில் தோன்றியது முட்டையா கோழியா என்ற ஆராய்ச்சியில் இறங்க வேண்டாம். இவை நினைவாற்றலைக் கூட்டுபவை. மூளைத் திறனை அதிகரிப்பவை.

77. கொழுப்புப் பொருள்கள் : அதிக அளவில் இல்லாமல் அளவோடு கொழுப்புப் பொருள்களை உண்பது நீண்ட கால நினவாற்றலைத் தரும். ஜீரணிக்கும் சமயம், கொழுப்பு பொருள்களிலிருந்து வெளிப்படும் ஹார்மோனுக்கு இந்த சக்தி உண்டு.

78. க்ளுகோஸ் : அளவோடு சாப்பிட்டால் எதுவும் அமிர்தமே. 25 கிராம் என்ற அளவில் உட்கொள்ளும் போது, இது எச்சரிக்கை தன்மையையும் நினைவாற்றலையும் ஊக்குவிக்கிறது.

79. பால் :  தினமும் பால் அருந்துபவர்கள் நினைவாற்றலையும், மூளைத்திறனையும் கொண்டிருப்பர் என்கிறது ஆய்வு. தினமும் ஒரு கிளாஸ் பாலை அருந்த வேண்டும்.

80. ஜங்க் உணவு வகைகள் : இவை உடலைப் பாழ்படுத்தும். மூளையை இருட்டடிப்பு செய்யும். உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டியவை ஜங்க் ஃபுட்.

81. மீன் எண்ணெய் : இது மூளை உறைப் பொருளாக உதவுகிறது. இதில் உள்ள EPA மற்றும் DHA என்பவை உணர்ச்சி மையத்தை வலிமைப் படுத்துகிறது.கவன சக்தியை அதிகரிக்கிறது.

82. மல்டி விடமின் : பல்வேறு வகையான விடமின் மாத்திரைகளைச் சாப்பிட பிடிக்கவில்லை எனில் எல்லாம் கலந்த மல்டி விடமின் மாத்திரைகளை டாக்டர் பரிந்துரையில் குறிப்பிட்டபடி அன்றாடம் எடுத்துக் கொள்ளலாம்.

83. சாப்பிடும் அளவைக் குறையுங்கள் : அதிகமாக உணவை எடுத்துக் கொள்வது மூளைக்கு இரத்த ஓட்டத்தைத் தடை செய்து குறைவாக்கி ஜீரண மண்டலத்திற்கு அதிக ரத்த ஓட்டத்தைத் தருகிறது. ஆகவே உணவின் அளவைக் குறைப்பதன் மூலம் மூளை ஆற்றலைக் கூட்ட வழி வகுத்தவர்கள் ஆவீர்கள். சோதனைச் சாலைகளில் குறைவாக கலோரிகள் உள்ள உணவை எலிகளுக்குச் சோதனை அடிப்படையில் தந்த போது இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

84. காலை உணவு : காலை உணவை ஏற்க மறுத்த சிறுவர்கள் அதைச் சாப்பிட ஆரம்பித்த பின்னர் கணிதத்தில் திறமை உள்ளவர்களாவதை ஆய்வுகள் உறுதிப் படுத்தியுள்ளன. ஒரு நாளில் மிக முக்கியமான உணவு காலை உணவே. ஒவ்வொரு நாளில் செயலாற்றலுக்கும் எரிபொருளாக இருந்து உங்களை இயக்க வைப்பது காலை உணவே தான்.

85. மது வேண்டாம். மூளையைப் பாழ்படுத்தி உடல் இயக்கத்தைத் தடுப்பது அதிக மது அருந்துவதே. இதன் தீய விளைவுகளைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையே இல்லை.

*** 

tags- 100 வழிகள,  மூளை

தமிழ்ப் பெண்ணின் மஹத்தான 2 கண்டுபிடிப்புகள் – part 1(Post No.10,738)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,738

Date uploaded in London – –    12 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புறநானூற்றில் மிஸ் MISS நப்பசலை எழுதிய கவிதை எண்.174

அவளுடைய முழுப்பெயர் மாறோக்கத்து நப்பசலை .

அவர் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய 2 அதிசய கண்டுபிடிப்புகளை சொல்கிறார். அதுவும் கூட முதல்  ஐந்தே வரிகளில் சொல்கிறார். அது மட்டுமல்ல; அதில் சிலேடை (இரு பொருள் PUN) வைத்துப் பாடுகிறார். பெரிய அறிவாளி ஆக இருக்க வேண்டும்!!!

பின்னணி என்ன?

சோழ மன்னன் , பகைவரிடம் தோற்றுப்போய்,முள்ளூர் மலையில் ஒளிந்து கொண்டிருந்தான். அதனால் அந்நாடு வருந்தியது. சோழிய ஏனாதி திருக்கண்ணன் அம்  மன்னனுக்கு உதவி  செய்து மீண்டும் அவனை அரியணையில் அமர்த்தினான். அவனைப் பாராட்டி நப்பசலை பாடிய பாடல் இது .

அணங்குடை  அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்

சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது

இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து

இடும்பைகொள் பருவரல் தீரக் கடுந்திறல் 

அஞ்சன உருவன்  தந்து நிறுத்தாங்கு

…………………………. புறம். 174

பொருள்

மற்றவரை வருத்தும், அச்சம் பொருந்திய அசுரர் , ஞாயிற்றை எடுத்துக்கொண்டு போய் மறைத்தனர். தொலைவில் விளங்கக்கூடிய அந்த ஞாயிற்றைக் காணாததால் இருள் உலகதத்தாரின் கண்ணை மறைக்க, வட்டமான  உலகத்தின் நோய் / துன்பம் நீங்குமாறு , மிகுந்த வன்மை உடைய  ‘மை’ போன்ற கரிய நிறம் கொண்ட மேனியனான திருமால் , அந்த ஞாயிற்றைக்  கொண்டுவந்து,  இந்த உலகத்தின் இருள் நீங்குவதற்காக வா னத்தில் நிறுத்தினான் . அது போல………

இங்கு மிகப்பழங்கால சூரிய கிரஹணம் (SOLAR ECLIPSE)  பற்றிய அருமையான விஞ்ஞான உண்மை வெளிப்படுகிறது. இரண்டாவது இந்த பூமி வட்டமானது (EARTH IS ROUND)  என்பதை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் பெண்மணி சொல்கிறார் (பருதி ஞாலம்=ROUND EARTH)

ஆனால் பருதி என்பது சம்ஸ்க்ருதம். சூரியனுடனும் இந்தச் சொல் சில பாடல்களில் வருகிறது கோவிலில் காட்டும் ‘பரி வட்டம்’, ஐரோப்பிய மொழிகளில் வட்டத்தின் சுற்றளவைக் குறிக்க பயன்படும் PERI  METER பெரி மீட்டர் முதலிய நூற்றுக்கணக்கான சொற்கள் சம்ஸ்க்ருதத்தில் இருந்து பிறந்தவை. மேலும் இவர் சொல்லும் சூரிய கிரஹணக் கதை ரிக் வேதத்திலும் மகாபாரதத்திலும் புராணத்திலும் வரும் கதையாகும் .

அதை முதலில் பார்த்துவிட்டு சிலேடைச் (PUN) சுவைக்கு வருவோம் .

மூன்று சூரிய கிரஹணங்கள் பழைய சம்ஸ்க்ருத நூல்களில் உள ; அவையாவன :-

1. அனுமன் சூரியனை விழுங்கிய கதை ; (அகஸ்தியர் கடலை குடித்தார் என்றால் அவர்தான் முதல் முதலில் , பிராமணன் கடலைக் கடக்கக்கூடாது என்று மனு நீதி நூல் சொன்னதையும் மீறி முதல் முதலில் சமுத்திரத்தைக் கடந்தார் ; தென் கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று 1500 ஆண்டுகளுக்கு கொடிகட்டிப் பறந்த பிரமமாண்டமான ஹிந்து சாம்ராஜ்யத்தை மலேசியா, சிங்கப்பூர், லாவோஸ், வியட்நாம் , தாய்லந்து , இந்தோனேஷியா , பிலிப்பைன்ஸ் நாடுகளில் நிறுவினார் என்று பொருள்.) அது போல அனுமன் பிறந்த போது ஒரு சூரிய கிரஹணம் ஏற்பட்டது என்பதை இப்படிச் சொல்வர்.

இரண்டாவது கதை மஹா பாரதத்தில் உள்ள பிரசித்தமான கதை:

சக்ர வியூஹத்தில் சிக்கிய அபிமன்யுவை 13-வது நாள் போரில் கவுரவர்கள் கொல்கின்றனர். இதற்குப் பழிவாங்குவதற்காக சிந்து-சரஸ்வதி நாகரீக பகுதியை ஆண்ட ஜயத்ரதனை மறுநாள் மாலை சூரிய அஸ்தமனத்துக்குள் வெட்டிக் கொல்வேன் என்று அர்ஜுனன் சூளுரை செய்கிறான். மறுநாள் சூரிய அஸ்தமனம் நெருங்கிவிட்டது. அர்ஜுனன், ஜயத்ரதனை நெருங்கக் கூட முடியவில்லை. ஆனால் கிருஷ்ணனுடன் ஒரு ரஹஸ்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. மறுநாள் சூரிய கிரஹணம். இது பாண்டவர்களில்  மிகப்பெரிய வானியல் நிபுணர்களான (Great Astronomers Nakula- Sahadeva)  நகுல- சகதேவன் போன்றோருக்கே தெரியும். சூரிய கிரஹணத்தில் சூரியன் மறைந்துவிட்டான் என்பதை அறியாத கவுரவர்கள் அஸ்தமனம் ஆகிவிட்டது என்று எண்ணி ஆயுதங்களைக்  கீழே போடுகின்றனர். கிருஷ்ணனுக்கு அது கிரஹணம் என்றும் எந்த முழு சூரிய கிரகணமும் 7 நிமிடங்களுக்கு மேல் நீடிக்க முடியாது என்றும் தெரியும் . சில நிமிடங்களுக்கு பின்னர் அர்ஜுனனனுக்கு சிக்னல் SIGNAL தருகிறார். அவன் அம்பால்  ஜயத்ரதன் தலையை சீவி எறிகிறான். இதை சூரிய கிரஹணம் என்று சொல்லாமல் கிருஷ்ண பரமாத்மா, தனது சுதர்சன சக்கரத்தால் சூரியனை மறைத்தார் என்று கிருஷ்ண பக்கதர்கள் செப்புவர். சூரிய சந்திரர்களைப் ராகு, கேது பாம்புகள் விழுங்குவதுதான் கிரஹணம் என்று பாமர மக்களுக்குச் சொல்லும் கதை போன்றதே இதுவும்.!

சூரிய கிரஹணம் அமாவாசையிலும் சந்திர கிரஹணம் பவுர்ணமியிலும்தான் வரும் என்பது இந்துக்களுக்குத் தெரியும். மஹாபாரத யுத்தம் அமாவாசையில் துவங்கியது ; 18 நாள் நடந்தது . பின்னர் எப்படி நடுவில் ஒரு அமாவாசை சாத்தியம் என்று பலர் நினைக்கலாம். மகாபாரத யுத்தம் 18 நாட்களே நீடித்தது உண்மைதான். ஆனால் யுத்தம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் நடந்தது (Alternate days)  .

மூன்றாவது குறிப்பு உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் வருகிறது. சப்த  ரிஷிக்களில் ஒருவரான அத்ரி மக ரிஷி மிகப்பெரிய வான சாஸ்திரி. அவர் சூரியனை மறைவிடத்தில் இருந்து பிடித்து வந்து வானத்தில் நிலைநாட்டியதை பல வேத காலப் புலவர்களும் குறிப்பிடுவர். உண்மையில் அவருக்கும் சூரிய கிரஹணம் பற்றியும் அதன் காலம் எவ்வளவு நீடிக்கும் என்பதும்   நன்கு தெரியும் . அவர் வானத்தில் சூரியனை மீண்டும் நிறுத்தினார் என்ற வரி வேதத்தில் அடிக்கடி வருகிறது இதையும் மனதிற்கொண்டு நப்பசலை பாடி இருக்கலாம்

ஆக நப்பசலை சொன்ன கிரஹணம் எது என்பதைக் காண்போம்.; அத்தோடு தமிழன் மட்டுமே உலகம் உருண்டை என்பதைச் சொன்னானா என்றும் அடுத்த பகுதியில் காண்போம் ………………..

தொடரும்………….

tags- மாறோக்கத்து நப்பசலை,சூரிய ,கிரஹணம், உலகம் உருண்டை, அணங்குடை  அவுணர்

DID TAMIL HINDUS DISCOVER EARTH IS ROUND? -part 2 (Post No.10,737)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,737

Date uploaded in London – –    12 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

“The earth is round like a wheel, produced by the Creator t the end of darkness. It consists of five elements, in the midst of it is the Meru of the gods “.

-Paulisa Siddhanta

Paulus of Greece , fouth century CE

“Vruttaa chakravadavanistamasya pare vinirmitaa dhaatraa

Panchamahaabhutamayii tanmadhye merurmaraanaama”

Though the above sloka is attributed to Paulus of Greece by Bhatta Utpala, the concept of Meru, the concept of Pancha Bhuta, the concept of God creating Earth are all in the Vedas.

Continued from yesterday………………………

Anyway let us look at a few more Sanskrit words in 2000 year old Sangam Tamil Literature :-

1.MANDILAM (Round / Circle). Found in Sangam Tamil

Sanskrit word  Mandalam/ Mandilam occurs in many places in Sangam Tamil literature which is 2000 year old. But only in a few places it is associated with earth.

There are other words for Round:

2.Round/Rotary/ Rotate = Ratha

These are related to Tamil word (r)Urundu,  ( r) Urundai,

Urul = Roll (if you reverse Ratha, you get Ther; even in Tamil literature they always say URUL perum THER= Rolling Chariot)

This Urundai is associated with Earth and Universe even by Manikka vasagar in his Tiru Vasagam (See Tiru Anda Pakuthi)

This Urul (U/roll), Urundai(r/ound) , Rotate(Ratha) and Wheel (valam) are also Sanskrit words, but used in Sangam Tamil literature.

Here I wanted to emphasize my theory. Linguists would say that any word find in European languages is Sanskrit. They are shy to use the word Sanskrit, so they would say IE or Proto IE (Indo-European). If we accept their arguments all Tamil words – Mandilam, Urul, Urundai, Valam etc are IE. But I say all the ancient languages (Greek, Latin, Hebrew) came from Sanskrit and Tamil. I have shown it in 150 articles so far.

Let us continue…………….

3.Andam = Egg (Brahma+andam, Akila+andam etc)

4.Kolam = Globe

5.Oval = Ovum (Tamil Aval/pounded rice, which is oval shaped)

6.Wheel = Valam in Tamil (found in Sangam Tamil literature)

7.Circle = Chakra

8.Cakata = Vandi/ Cart (found in  Sangam)Tamil Literature

If you look at these words deeply, you can see all are linked to Sanskrit or Tamil. All are associated with round shape and earth.

Bhagavatha Purana is the mainstay of Krishna Bhaktas where we have the full life history of Krishna. In Mahabharata, we see adult statesman Krishna.

Bhagavatha in Sanskrit have all these ANDA/egg with Brahmandam etc.

Though Bhagavatha is dated around Gupta period by foreigners, I would place it in Pre Sangam period. I will cite only 3 references just to cut it short.

1.Sangam Tamil book Akananuru has reference to Krishna and Gopis and river Yamuna (Thozunai in Tamil Akam verse 59)

2. A Greek called himself Parama Bhagavata (Great Bhakta of Lord Krishna/Vishnu) in 113 BCE (see Heliodorus Pillar in Besnagar)

3.Balarama and Krishna are in coin of Agathocles (see my article 1323 of Oct.2014 and earlier Dr Nagaswamy’s articles)

So we know Krishna cult was all over India around 200 BCE.

That means Anda, Brahmanda are as old as Bhagavata purana. But yet I would give the credits to Tamils because Sangam Literature dating is beyond doubt, beyond debate.

Based on the ‘Tamil’ words PARUTHI (see my first part of this article), MANDILAM and URUL/URUNDAI, I would confirm that Tamils knew Earth is Round at least from Sangam Period.

Here are the references:–

Akam 59-4 Krishna, Gopis and River Yamuna

Mandilam in Tamil linked to Earth:-

In most of the places it is used with Sun. At least in 4 places Tamil poets use Round/Mandilam with Earth. I have highlighted them below:-

Aka – 11-1, 31-1, 104-5, 122-11, 260-1, 263-2, 277-1, 363-3, 367-1, 378-14, 381-5, 71-13; 269-17;nedu.161;pari- 17-32, 21-2313-8; Pura.8-6, 30-3,367-1, 175-9;madu.190, 390

Kuru. 300-7 (by Siraikkudi Anthaiyar, Earth is mentioned)

Narrinai 67-1, 69-1;Perum. 442;Kali. 7-7, 25-1, 71-1, 141-12;

Kurinji 216

Xxxx

Conclusion

Sanskrit books from the period of Brhat Samhita of Varaha Mihira clearly say that Earth is Round. But Tamil Sangam books are dated earlier than Varahamihira. They are crystal clear in saying that the Earth is Round. So Hindus knew it at least for 2000 years. There may be earlier references.

xxxxx

Sanskrit references

Meaning of the Sanskrit Word ANDA in  Srimad Bhagavatam (SB): 

Anda SB means Srimad Bhagavatam and NOT Satapata Brahmanam in ISKCON dictionary)

  aṇḍa—universes    

Compound Sanskrit Words Containing: anda

  aṇḍa-golayo—and the globe of the universe    SB 5.20.43
  aṇḍa-ja—one born from an egg    SB 5.18.32
  aṇḍa-ja-indram—Garuḍa, the king of all the birds, who are born from eggs    SB 8.10.57
  aṇḍa-kaāha—the covering of the universe (consisting of seven layers    SB 5.17.1
  aṇḍa-kaāha-bhittim—the strong coverings of the universe    Antya 1.164
  aṇḍa-kaāham—the covering of the universe    SB 7.8.15
  aṇḍa-kośa—the whole universe    SB 7.14.36
  aṇḍa-kośasya—of the universe    SB 2.8.16
  aṇḍa-kośa—the universe, which resembles a big egg    SB 5.26.38
  aṇḍa-kośa—egg-shaped universe    SB 6.16.37
  aṇḍa-kośe—within the universal shell    SB 2.1.25
  aṇḍa-kośāt—from the egg    SB 3.26.53
  aṇḍa-koi-koibhi—millions of such universes    SB 6.16.37
  aṇḍa-madhya-gata—situated in the center of the universe    SB 5.20.43

  aṇḍa-rāśaya—huge combination of universes.    SB 3.11.41

  hiraya-aṇḍa-samudbhava—his material body was created from Hiraṇyagarbha.    SB 5.20.44  āṇḍa-kośa—the universe    SB 3.11.40
  āṇḍa-kośa—egg    SB 3.20.15
  āṇḍa-kośe—within the global universe    SB 3.6.6

xxxx

Meaning of MANDALA

Sanskrit dictionary

Maṇḍala (मण्डल).—a. [maṇḍ-kalac] Round, circular; मण्डलाग्रा बृसीश्चैव गृहान्याः पृष्ठतो ययुः (maṇḍalāgrā bsīścaiva ghānyā pṛṣṭhato yayu) Rām.5.18.12.

-laḥ 1 circular array of troops.

2) A dog.

3) A kind of snake.

-lam 1 A circular orb, globe, wheel, ring, circumference, anything round or circular; न्यग्रोधं च सुमण्डलम् (nyagrodha ca sumaṇḍalam) Mb.12.169. 12; करालफणमण्डलम् (karālaphaamaṇḍalam) R.12.98; आदर्शमण्डलनिभानि समुल्लसन्ति (ādarśamaṇḍalanibhāni samullasanti) Ki. 5.41; स्फुरत्प्रभामण्डलया चकाशे (sphuratprabhāmaṇḍalayā cakāśe) Ku.1.24; so रेणुमण्डल, छाया- मण्डल, चापमण्डल, मुखमण्डल, स्तनमण्डल (reumaṇḍala, chāyā– maṇḍala, cāpamaṇḍala, mukhamaṇḍala, stanamaṇḍala) &c.

2) The charmed circle (drawn by a conjurer); मण्डले पन्नगो रुद्धो मन्त्रैरिव महाविषः (maṇḍale pannago ruddho mantrairiva mahāvia) Rām.2.12.5; जानन्ति तन्त्रयुक्तिं यथास्थितं मण्डलमभि- लिखन्ति (jānanti tantrayukti yathāsthita maṇḍalamabhi- likhanti) Mu.2.1.

3) A disc, especially of the sun or moon; तेनातपत्रामलमण्डलेन (tenātapatrāmalamaṇḍalena) R.16.27; अपर्वणि ग्रहकलुषेन्दुमण्डला (aparvai grahakaluendumaṇḍalā) (vibhāvarī) M.4.15; दिनमणिमण्डलमण्डन भवखण्डन ए (dinamaimaṇḍalamaṇḍana bhavakhaṇḍana e) Gīt.1.

4) The halo round the sun or moon.

5) The path or orbit of a heavenly body.

6) A multitude, group, collection, assemblage, troop, company; एवं मिलितेन कुमारमण्डलेन (eva militena kumāramaṇḍalena) Dk.; अखिलं चारिमण्डलम् (akhila cārimaṇḍalam) R.4.4.

7) Society, association.

8) A great circle.

9) The visible horizon.

1) A district or province.

11) A surrounding district or territory.

12) (In politics) The circle of a king’s near and distant neighbours; मण्डलचरितम् (maṇḍalacaritam) Kau. A. 1.1.1; सततसुकृती भूयाद् भूपः प्रसादितमण्डलः (satatasuktī bhūyād bhūpa prasāditamaṇḍala) Ve.6.44; उपगतोऽपि च मण्डलनाभिताम् (upagato’pi ca maṇḍalanābhitām) &c. R.9.15.

And many more.

–subham—

 tags- Earth , Round, Mandilam, Sangam Tamil, Discovery

வினா – உத்தரம் : சித்திர கவி பாடல்! – 2 (Post No.10,736)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,736
Date uploaded in London – – 12 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

த,மிழ் என்னும் விந்தை

வினா – உத்தரம் : சித்திர கவி பாடல்! – 2
ச.நாகராஜன்

வினா – உத்தரம் என்பதை 8-2-1939இல் வெளியாகிய தனது ‘சித்திர கவி விளக்கம்’ என்ற புத்தகத்தில் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் (பரிதிமால் கலைஞர்) மூன்று பாடல்களைத் தந்து விளக்குகிறார்.

அந்தப் பாடல்கள் வருமாறு:

1.திருவேகம்பம்!

பூமகள்யார் போவானை யேவுவா னென்னுரைக்கும்
நாமம் பொருசரத்திற் கென்னென்பர் – தாமழகின்
பேரென் பிறைசூடும் பெம்மா னுவந்துறையுஞ்
சேர்வென் திருவேகம் பம்

இதன் பொருள் :-

பூமகள் யார்? = செந்தாமரைப் பூவில் உறைபவள் யார்?
போவானை – ஒரு இடத்திற்குச் செல்லுபவனை
ஏவுவான் என் உரைக்கும் – அவனுக்கு ஆணையிடுவோன் என்ன என்று கூறுவான்?
பொரு சரத்திற்கு நாமம் என் என்பர் – போரில் விடும் பாணத்திற்கு என்ன பெயர் சொல்வர்?
அழகின் பேர் என்? – அழகினை உணர்த்தும் பெயர் என்ன?
பிறை சூடும் பெம்மான் – பிறைச் சந்திரனைத் தனது முடியில் சூடும் சிவபிரான்
உவந்து உறையும் சேர்வு என்?- விரும்பி எழுந்தருளி இருக்கும் தலம் எது?
திருவேகம்பம் – திருவேகம்பம் ஆகும்.

இப்போது கேள்வியையும் பதிலையும் காண்போம்

பூமகள் யார்? – திரு (லக்ஷ்மி தேவி)
போவானை ஏவுவான் என் உரைக்கும் – ஏகு
பொரு சரத்திற்கு நாமம் என் என்பர் – அம்பு
அழகின் பேர் என் – அம்
பிறை சூடும் பெம்மான் உவந்து உறையும் சேர்வு என்?- திருவேகம்பம் (என்னும் திருத்தலம்)
திரு+ஏகு+அம்பு+அம் = திருவேகம்பம்
இப்படி வினாவும் உத்தரமும் ஒரே பாடலில் அமைகிறது.

  1. நிலையாமை கடைப்பிடிபுண்ணியஞ் செய்!

இன்னொரு பாடல்! இது அறநெறிச் சாரம் நூலில் வரும் பாடலாகும்.

நீத்தொழிந்த வாறைந் தடக்கிப்பின் னிச்சயமே
வாய்ந்தமைந்த வாயில்பெண் ணானையே – கூர்த்தகு
வாளேறோ டோசை விளைநில மிவ்வல்லாற்
கேளா யுடன்வருவ தில்

இப்பாடலின் பொருள்:
நீத்தொழிந்த ஆறு – நிலை
ஐந்தடக்கி – ஆமை
வாயில் – கடை’
பெண்ணானை – பிடி
வாளேறு – புண்
ஓசை – இயம்
விளை நிலம் – செய்
இந்தப் பொருள் கொண்டுள்ள சொற்களைச் சேர்த்தால் வருவது
‘நிலையாமை கடைப்பிடிபுண்ணியஞ் செய்’ என்பதாகும்.

கூர்த்தகு என்பதை கூத்தற்கு என்ற பாடத்தைக் கொண்டு
‘கூத்தற்கு வாளேறோடோசை விளை நிலம்’ என்று கொண்டு
சிவ புண்ணியஞ் செய் என்றும் பொருள் கூறுவர்.
கூத்தன் – சிவ பிரான்

  1. நல்வினை முயல்!

இன்னொரு அறநெறிச்சாரம் பாடல் இது:

நல்வினை நாற்கால் விலங்கு நவைசேரும்’
கொல்வினை யஞ்சி குயக்கலம் – மெல்ல
வுறுதியு மல்லவு நாட்பேர் மரப்பேர்
இறுதியி லின்ப நெறி

பொருள் விளங்காத பாடலாக இருக்கிறதே என்று மலைக்க வேண்டாம்.

நாற்கால் விலங்கு என்றால் முயல்
குயக்கலம் என்றால் அகல்.
நாட்பேர் சோதி என்றால் நாள் = நக்ஷத்திரம் சுவாதி
மரப்பேர் – தேறு (தேற்றாமரம்)
அதாவது,
நல்வினை முயல்
நவை சேரும் கொல்வினை அஞ்சி அகல்
மெல்ல உறுதியும் அல்லவும் சோதி
இறுதியில் இன்ப நெறி தேறு
(உறுதியும் அல்லவும் சோதித்து பின்னர் உண்மையை இறுதியில் தேறிக் காண்)
என்ற பொருளைத் தருகிறது இந்தப் பாடல்.

இப்படி வினாவை விடுத்து பதிலையும் தன்னுள்ளேயே அடக்கும் வினா உத்தரப் பாடல்கள்
தமிழில் ஏராளம் உள்ளன.
தொகுத்து அனைத்தையும் படித்தால் அதன் சுவையே தனி தான்!


tags- வினா – உத்தரம் 2 சித்திர கவி பாடல்- 2

DID TAMIL HINDUS DISCOVER EARTH IS ROUND ? – part 1(Post No.10,735)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,735

Date uploaded in London – –    11 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

I received the following question on 24-2-2022

R….. M….. G ……

To:swami_48@yahoo.com

Thu, Feb 24 at 9:27 PM

Namaskaram! Abivadanam!

Came across your blog today, while searching for ‘Astrology in Tamil Literatures”.  With many other interests such as Tamil, Music, Cricket, Sanatana Dharma, and so on, Jothidam is one that is close to me.  More interested in finding reasons, logic, mathematical calculation behind the astrological concepts and rules than the predictions. 

So far, my understanding of the logic between circle/sphere 360 degree and the rasi chakram, 12 rasis, each 30 degree for rasi, etc. were established.

Now, trying to find the literary evidence that we, Hindu(Indians), know that Earth was a sphere before Aristotle of 350 BCE or  by Pythagoras 600 BCE. 

Would request yourself with vast knowledge to assist in finding the literature related to this.

Request your blessing to continue this project successfully!

MGR ………………………

……………… Florida

+678 …………………………….

Xxxx

MY ANSWER

The encyclopaedias give the credit of discovering the ROUND shape of earth to the Greeks. But I don’t agree with them for the following reasons:

All the words or most of the words for “round” are from Sanskrit or Tamil. But the question is whether they use the word in the context of the Shape of Earth.

Yes they have been doing it for at least for 2000 years.

But do we have such evidence in the Vedas? So far I couldn’t find any  direct evidence, but indirect evidence is there.

Before going deeper into Linguistics, which many of you don’t understand, I will give two AMAZING DETAILS from Sangam Tamil poem composed by a WOMAN POET!

Her name is  Miss  Maokkaththu Nappsalai

Verse No 174 in Purananuru (old part of 2000 year old Sangam Tamil Literature)

xxx

SOLAR ECLIPSE IN TAMIL LITERATURE

This woman poet Miss Nappsalai wanted to praise a chieftain who helped the hiding Choza king to ascend the throne again. The chieftain’s name is Malaiyaman Choziya Enathi Thiruk kannan.

There are three famous Solar Eclipse Episodes in Hindu Literature; They are

1.Anjaneya swallowing or devouring Sun (This is about the solar eclipse that occurred during his birth).

2.The Solar Eclipse in Mahabharata where by Krishna cheated Jayathdratha and made him to die.

3.The oldest and oft repeated Solar Eclipse in the Rig Veda which is attributed to the seer ATRI.

The Tamil poem (Puram.174) says

“The demons hid the sun; because the sun was not there, this ROUND SHAPED EARTH suffered. But to mitigate the sufferings of the people, the BLACK SKINNED man, who was as black as collyrium, came and raised the sun to the sky”

This simile is used by Miss Nappsalai to say that you also re installed the Solar king on the throne who was hiding in your mountain (like the Black Sinned one).

First let us enjoy the pun in this Tamil verse. Sun was raised to sky by black skiined; here Sun King (Surya Kula/Solar Dynasty is the Choza dynasty) is enthroned by you.

Mahabharata Story

In Mahabharata, Arjuna vowed to defeat the king Jayadratha before sun set on the 14th day in the 18 day war. Jayadratha was the king of Indus Valley. He fought so vehemently that  Arjuna couldn’t reach him at all before sun set ; it  was nearly  sunset. Krishna, the Black Skinned, person caused a temporary darkness, and the Kaurava Army blew the trumpets signalling the battle of the day was over. But it was not ; Krishna signalled to Arjuna when he removed the temporary darkness. Arjuna shot his arrow in such a way that the head of Jayadratha fell on the lap of Vridhashrava who also exploded into pieces (that is another story, irrelevant here)

This story was explained by me as Solar Eclipse, which Krishna knew in advance through Nakula- Sahadeva who were great astronomers.

When I wrote it in this blog several years ago, one wise man in London phoned me and questioned me how is it possible to get another Amavasai (solar eclipse can happen only on Amavasai/New moon day) when the very war started on Amavasai day. Then I clarified to him the war was fought for 18 days but not continuously; they declared alternate day as holiday, to clear the rubbish and dead bodies.

Now let us apply this episode to Tamil Woman’s Pura Nanuru verse.

In Mahabharata dark skinned Krishna created darkness  through his Sudarsana Chakra (Solar disc= solar eclipse)

In Choza country Tiru Kannan= Sri Krishna helped the hiding choza to ascend the throne.

Tamil woman Miss Nappasalai was so clever to use the pun on the word Krishna/Black. She even added dark skinned, as dark as collyrium in woman’s eyes!

xxx

Scientist Tamil Woman

The same Miss Nappasalai gives another scientific truth in the verse. She described the earth enveloped by darkness as ‘Paruthi Ngaalam’=  Round Earth . So 2000 years ago even a woman was able to include it in her verse.

Two scientific facts at one verse in the first five lines!!!!

Now to linguistcs:

‘Paruthi = Round’ is not a Tamil word; it is a Sanskrit word.

Even other Sangam poets use it for Paruthi Njaayiru= Round Sun.

Paruthi= Round is ‘Pari’ in Sanskrit and ‘Peri’ in European languages. We have temple ‘Pari Vattam’ in Tamil and Peri meter in English and European languages. There are scores of Sanskrit words with Pari as prefix. We have in English “sPHERE” which is used to describe the earth as Northern hemis’’phere’’ and Sothern hemis’’phere’’. You can see Pari there.

So Purananuru’s ‘Paruthi’ is used in all languages. Mis Nappasalai linked it with Earth.

Though we have earth in the story of Varaha Avatar which shows round shaped earth on the nose of Varaha/Boar Vishnu, those statues were dated vey late like 8th century CE. The early Gupta Varaha Avatar Statue of Udayagiri Caves don’t show earth on the nose of Boar/Varaha Vishnu. But how come suddenly they put round earth on later day sculptures? There must be some reason for it.

Anyway let us look at one a few more Sanskrit words in 2000 year old Sangam Tamil Literature :-

1.MANDILAM (Round / Circle). Found in Sangam Tamil

To  be continued……………..

tags- Round shape, globe, earth, discovery

வரலாறு தெரிந்தவன் தமிழன் !!! (Post No.10,734)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,734

Date uploaded in London – –    11 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

“பணைகெழு  பெருந்திறற் பல்வேன் மன்னர்

கரைபொரு  திரங்கும் கனையிரு முந்நீர்த்

திரையிடு மணலினும் பலரே  யுரை செல 

மலர்தலை  யுலக  மாண்டு கழிந்தோரே

-234/237 மதுரைக் காஞ்சி

xxx

இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்

உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றித்

தாமே ஆண்ட ஏமம் காவலர்

இடுதிரை மணலினும் பலரே

–புற நானூறு 363, ஐயாதிச் சிறுவெண் தேரையார்

xxxx

தமிழர்களின் வரலாற்று உணர்வு அபாரமானது!! 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அவனுக்கு எவ்வளவு வரலாறு தெரிந்து இருந்தது என்பதைப் புற நானூற்று வரிகளும் மதுரைக் காஞ்சி வரிகளும் நிரூபிக்கின்றன. திருவள்ளுவர் ஒரு அற்புதமான உவமை மூலம் தனது புள்ளிவிவர இயல் (Statistical Knowledge) அறிவை வெளிப்படுத்துகிறார்.

வெள்ளைக்காரன் உளறல் வாயன் . அவனுக்குத் தமிழ் தெரிந்தால் சம்ஸ்க்ருதம் தெரியாது. சம்ஸ்க்ருதம் தெரிந்தால் தமிழ் தெரியாது. இதனால்தான் கால்டுவெல் உளறலுக்கு திராவிட ஒப்பிலக்கண நூலை வெளியிட்டோரே, அடிக்குறிப்பில் இவர் சம்ஸ்க்ருதம் பற்றிச் சொன்னது தவறு என்று சேர்க்க வேண்டியதாயிற்று. அதாவது “நான் ஒரு முட்டாளுங்க” (Film Song by Comedian Chandrababu) என்று குன்றின் மீது ஏறி கால்டுவெல் அறிவிக்கிறார்.

இந்துக்களுக்கு கொஞ்சமும் வரலாற்று உணர்வே (Historical Sense)  இல்லை; நல்லவேளை காஷ்மீரி பிராஹ்மணன் கல்ஹணன் என்பவன் வரலாற்று உணர்வோடு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜ தரங்கணி (Raja Tarangini by Kalhana) நூலை எழுதினான் என்று  வெள்ளைக்காரர்கள்  செப்பினார்கள். அதிலும் அவர் எழுதிய ராஜதரங்கிணியில் (ராஜ வம்ச நதி River of Kings ) முதல் நாலு அத்தியாயங்கள் வரலாறு  இல்லை என்று உளறினார்கள் . அவர்களுக்குப் புரியாத, தெரியாத எல்லாம் தப்பு!

அது  மட்டுமல்ல; சிந்து சமவெளியில் மன்னர் இல்லை, புத்தருக்கு முன்னர் மன்னர் இல்லை என்றெல்லாம் எழுதிக்குவித்தனர். அனால் புராணத்தில் 150-க்கும் மேலான மன்னர் பெயர்கள் (ஒரே வம்சத்தில் மட்டும் ) உள்ளதை பட்டியல் போட்டுள்ளனர். அதைக்கேட்டு வியந்த ரோமானிய , கிரேக்க எழுத்தாளர்களான பிளினி, அரியன்( Pliny , Arrian) ஆகியோர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதுகையில் “இவர்கள் 6000 ஆண்டு வரலாறைச் சொல்கிறார்கள்; அதற்குச் சான்றாக 153 மன்னர் பட்டியலையும் சொல்கிறார்கள்” என்று எழுதிவைத்துள்ளனர்.

புராண மன்னர் பட்டியலை இதுவரை எந்த வரலாற்று Syllabus சிலபஸிலும் சேர்க்கவில்லை! ஆனால் புராணம் உலக விந்தைகளில் உண்டு. உலகெங்கிலும் எல்லா கலாசாரங்களிலும் புராணம் உண்டு என்றாலும் இந்து மத புராணங்கள், அதற்கான இலக்கண வரம்புக்குள், எழுதப்பட்டுள்ளன. அதை பஞ்ச லக்ஷணம் என்பர். அந்த 5 அம்சங்களில் ஒன்று பூகோளம்/புவி இயல் இரண்டாவது வரலாறு /வம்சாவளி. உலகில் இப்படி 5 அம்சங்களுடன் எழுதப்பட்ட புராணம் வேறு எந்த பண்பாட்டிலும் இல்லை .

தமயந்தி, திரவுபதி, இந்துமதி ஸ்வயம்வரம் நிகழ்ச்சிகளுக்கு 56 தேச மன்னர்கள் வந்தார்கள் என்று படிக்கிறோம். காளிதாசன் தனது ரகு வம்சத்தில் பாண்டிய மன்னரும் இந்துமதி  ஸ்வயம்வரம் நிகழ்ச்சிக்கு வந்தார் என்று 4, 5 பாடல்களில் வருணிக்கிறார். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே , தமிழனையும் ,அகஸ்தியனையும் தொடர்புபடுத்தும் பாடல்கள் அவை.!

பிரதம மந்திரி பதவிவகித்த திருமதி இந்திராகாந்தி 1971-ம் ஆண்டில்  ஒருநாள் இரவில் திடீரென்று ஒரு அவசர சட்டம் அறிவித்தார். இந்தியாவிலுள்ள 560 மன்னர் சமஸ்தானங்களுக்கும் இனி ராஜ மான்யம் (Privy purse) கிடையாது என்றார். அதாவது வெள்ளைக்காரன் நாட்டைவிட்டுப் போகும்போது இந்தியாவில் 560 ராஜாக்கள்!! அவர்களுக்கு அவன் போட்ட ரொட்டித்துண்டு  ராஜ மான்யம் (Privy purse) .56 அல்லது 560-ஐ 153ஆல் பெருக்குங்கள். அதுதான் 2000 ஆண்டுளுக்கு முன்னர் உள்ள பட்டியல்!

இது எல்லாம் தமிழர்களுக்குத் தெரியும்! எப்போது?? 2000 ஆண்டுகளுக்கு முன்னரே!! பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனைப் போற்றி மாங்குடி மருதனார் பாடியது ‘மதுரைக் காஞ்சி என்னும் நூல். 18 சங்க இலக்கிய நூல்களில் மிகவும் அதிகமான அடிகளைக் கொண்ட நூல். அதில் இதுவரை இருந்த மன்னர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகையில்

பணைகெழு  பெருந்திறற் பல்வேன் மன்னர்

கரைபொரு  திரங்கும் கனையிரு முந்நீர்த்

திரையிடு மணலினும் பலரே  யுரை செல 

மலர்தலை  யுலக  மாண்டு கழிந்தோரே

-234/237 மதுரைக் காஞ்சி

பொருள்

அகன்ற இடம் பொருந்திய இந்த உலகத்தை ஆண்டு மாண்டுபோன மன்னர்களின் எண்ணிக்கை, கரையை மோதி முழங்கும் கரிய கடலின் அலைகள் குவிக்கின்ற மணலைவிடப் பலர் ஆவர்

சுருங்கச் சொன்னால் மன்னர் எண்ணிக்கை, கடல் மணல் துகள் எண்ணிக்கையை வீட அதிகம்! எப்போது நெடுஞ்செழியன் ஆண்ட காலத்திலேயே !

இதற்கும் முன்னர் புறநானூற்றில் பல பழம்பாடல் என்று அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட பாடல்களிலும் இந்த வரிகள் உள்ளன!

இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்

உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றித்

தாமே ஆண்ட ஏமம் காவலர்

இடுதிரை மணலினும் பலரே

–புற நானூறு 363, ஐயாதிச் சிறுவெண் தேரையார்

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் புலவர் பாடிய பாடல் இது

கரிய கடலால் சூழப்பட்ட இப்பெரிய இடத்தையுடைய மண்ணுலகத்தை– வேல மரத்தின் இலை அளவு இடமும் மற்றவர்க்கு விடாதபடி— தாமே ஆண்ட மன்னர்களின் எண்ணிக்கை கடல் அலைகள் ஒதுக்கும் மணலை விடப் பலர் ஆகும்.

இதோ இன்னும் ஒரு பாடல்:-

சேற்றுவளர் தாமரை பயந்தஒண்கேழ்

நூற்றிதழ் அலரின் நி ரை கண்டன்ன

வேற்றுமை இல்லாத  விழுத்திணைப் பிறந்து

வீற்றிருந்தோரை எண்ணுங்காலை

–புறம் 27, முதுகண்ணன் சாத்தனார்

நம்மாழ்வாரும் (800 CE) ஒரு பாசுரத்தில் பாரத நாட்டை ஆண்டு போன மன்னர்களின் எண்ணிக்கை கடல் மணல் துகள்களுக்குச் சமம் என்கிறார். பல ஆயிரம் , பல ஆயிரம் மன்னர்களைக் கண்டது பாரதம்!

 நினைப்பான் புகின்கடல் எக்கலின் நுண்மணலில் பலர்

எனைத்தோர் உகன்களும் இவ் உலகு ஆண்டு கழிந்தவர்

மனைப்பால் மருங்குற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்

பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமினோ

–பாடல் 3010

பொருள்:-

பல யுகங்கள் இவ்வுலகத்தை எல்லாம் ஆண்டு இறந்து போன அரசர்கள் மிகப்பலர். நினைக்கப்புகுந்தால் கடல் மணல்திட்டிலே உள்ள நுண்மையான மணலைக் காட்டிலும் அவர்கள் பலர் ஆவர். அவர்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்த வீடுகள் இருந்த இடமும் தெரியாமல் அழிந்தார்களே அன்றி, வேறு ஒன்றையும் பார்த்தோம் இல்லை. ஆதலால் பனைமரம் போன்ற பெரிய கால்களை உடைய மதயானையைக் கொன்ற கண்ணபிரானது திருவடிகளை வணங்குங்கள்.

xxxx

வள்ளுவன் வாய்மொழி

வள்ளுவன்  திருக்குறளில் வரும் அருமையான உவமையையும் இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தம் ஆகும் .

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:-22)

பொருள்-

பற்றுகளைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரையில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது.

வள்ளுவன் பெரிய புள்ளிவிவர (Statistician)  இயல் நிபுணன்; ஆகையால் அவனுக்கு ‘டக்’ என்று மனதில் பட்டது இந்த உவமை. Super Fast Computers சூப்பர் பாஸ்ட் கம்பியூட்டர்களைக் கொண்டும் கூட 10,000 ஆண்டுகளில் இறந்து போன ஆட்களின் எண்ணிக்கையைச் சொல்ல முடியாது. அது போலத்தான் ஆதி சங்கரர், ரமண மகரிஷி , ராம கிருஷ்ண பரம ஹம்சர், காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் போன்றோரின் பெருமையை எடுத்துக்கூற முனைவது அல்லது முயல்வது ஆகும்.

அதாவது எண்ணிக்கை என்பதற்கு மணல் துகளையும், இறந்தோரின் எண்ணிக்கையையும் ஒப்பிடுவது அவர்களது ஆழ்ந்த ஞானத்தைக் காட்டுகிறது

—-SUBHAM—

tags- வரலாறு, தமிழன் , கடல், மணல் துகள் ,எண்ணிக்கை இருங்கடல்

வினா – உத்தரம் : சித்திர கவி பாடல்! – 1 (Post No.10,733)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,733
Date uploaded in London – – 11 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை
வினா – உத்தரம் : சித்திர கவி பாடல்! – 1
ச.நாகராஜன்

சித்திர கவியில் வினா – உத்தரம் என்பது ஒரு வகை.
பாடலிலேயே வினாவும் அதற்கான பதிலும் – அதாவது உத்தரமும் – அமைந்திருப்பதால் இது வினா-உத்தரம் என்று அழைக்கப்படுகிறது.
இராமச்சந்திரக் கவிராயர் சித்திர கவி பாடுவதில் வல்லவர்.
அவர் திருவேங்கடநாதன் என்ற பிரபுவின் மீது பாடிய ஒரு பாடல் இது.

இரவல னேயுனக் கில்லாத தென்ன விதயமென்ன
பரவுண வேது சுவையற்ற தென்னசொற் பான்மையென்ன
தரவுரை செய்திட வென்றா னதற்கொன்றுஞ் சாற்றிலன் யான்
வரதிரு வேங்கட னாதாவென் றேன்பொன் வழங்கினனே

இந்தப் பாடலைச் சொன்னவுடன் திருவேங்கடநாதன் என்ற அந்த பிரபு பொன்னை வழங்கினார்.
அப்படி என்ன இருக்கிறது பாடலில்? பார்ப்போம்.

பொருள்:
இரவலனே – யாசகனே
உனக்கு இல்லாதது என்ன – உனக்கு இல்லாதது என்ன
இதயம் என்ன – உனது மனம் எத்தகையது
பர உணவு ஏது = மேன்மையாகிய உணவுக்கு ஆகாரம் ஏது?
சுவையற்றது என்ன – உணவுக்குச் சுவையற்ற உறுப்பு யாது?
சொல் பான்மை என்ன – நீ சொல்வதற்குரிய தன்மை யாது?
தர – நான் கொடுக்கும்படி
உரை செய்திட – சொல்லக் கூடியவை
என்றான் – எவை என்று வினவினான்
அதற்கு – அந்தக் கேள்விக்கு
யான் ஒன்றும் சாற்றிலன் – நான் ஒன்றுமே பதில் சொல்லவில்லை (என்றாலும் கூட)
வர திருவேங்கடநாதா – வர திருவேங்கடநாதா என்று மட்டும் சொன்னேன்
பொன் வழங்கினனே – நான் சொல்லிய அதன் பொருளை உணர்ந்து எனக்குப் பொன் வழங்கினானே

இந்தப் பாடலில் வினாவும் உத்தரமும் அடங்கியுள்ள விதத்தைப் பார்ப்போம்.

வினா உத்தரம்

உனக்கு இல்லாதது என்ன – திரு (செல்வம்)
இதயமென்ன – வேம் (புழுங்கும்)
உணவேது – கடன் (கடன் பட்ட பொருளினால் வாங்கிய உணவுப் பொருள்)
சுவையற்றதென்ன – நா (நாக்கு)
சொற்பான்மை என்ன – தா (கொடு)

பணம் இல்லாமல் புழுங்குகிறேன். கடன் பட்டு வாங்கிய பொருளையே உண்ணுகிறேன். சுவையற்ற நாக்கு உள்ளது. எனது சொல் ஒன்றே ஒன்று தான் – கொடு!

அவ்வளவு தான்! பொருளை உணர்ந்த திருவேங்கடநாதன் பொன்னை இராமச்சந்திரகவிராயருக்குத் தந்தார்.
தமிழுக்கு அழகிய இந்த வினா- உத்தரம் என்ற வகையிலான சித்திரக் கவி கிடைத்தது.


tags – இராமச்சந்திரக் கவிராயர் ,சித்திர கவி,திருவேங்கடநாதன்