Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழா கவனி, தமிழகம் ஒப்பற்றது! பா.கண்ணன், தில்லி
அன்பார்ந்த ஞானமயம் தமிழ் நெஞ்சங்களுக்குத் தில்லியிலிருந்து கண்ணன் வணக்கம் பல.
தமிழ் மொழி மீது இணையிலாப் பற்று கொண்ட நம் “முண்டாசுக் கவிஞர்” பாரதியாரின் நினைவு நூற்றாண்டைப் போற்றும் வகையில் இக் கட்டுரையை எழுத முனைகிறேன்..
சமீபத்தில் செந்தமிழ்ச் செல்வர் திரு. பெரியசாமித் தூரன், பாரதியின் எண்ணங்கள், எழுத்துக்கள், பேச்சுக்கள் ஆகியவற்றைத் தொகுத்தளித்துள்ள இரு புத்தகங்களில் ஒன்றான “பாரதியும் தமிழகமும்” என்ற புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. மற்றொன்று “பாரதியும் உலகமும்” என்பது. அதிலுள்ள ஒரு அத்தியாயம் ” தமிழ் பாஷைக்கு உள்ள குறைகள்” என்பதாகும். சுவாரசியமிக்க அதன் சாராம்சத்தையே இங்குத் தரவிருக்கிறேன்.
தூரன் அவர்கள் இந்நூலில் பாரதியார் தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஆற்றிய இணையற்ற சேவையை எடுத்துக்காட்ட முனைந்துள்ளார். தாழ்வு உணர்ச்சியில் மூழ்கி, வீழ்ந்துக் கிடந்த தமிழர்களை, அவர்களின் பெருமையை உணர்ந்து வீறுகொண்டு எழுவதற்கு பாரதி ஓங்கி குரல் கொடுத்தது நன்றாகப் புலப்படுகிறது. அதனால் அல்லவோ தமிழர்கள்
தங்கள் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் சிலிர்த்தெழுந்து முழு வீச்சில் விடுதலை இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
தமிழர் கும்பகர்ணனைப் போல் தூங்கிக் கொண்டிருந்தனர். கையாலாகாத்தனமும், வருமுன் காப்பது எப்படி என்றுத் தெரியாமலும், வருவதைச் சமாளிப்பது எப்படி எனச் சோர்வுற்று, குனிந்த தலை நிமிராமல் உறங்கிக் கொண்டிருந்தனர். தமிழகத்தின் அருமைப் பெருமைகளை உணராதது போல், தமிழ் மொழியின் உயர்வையும் அறிந்துக் கொள்ளவில்லை. அந்நிய மொழியின் ஆதிக்கத்தில் மகுடி நாதத்துக்குக் கட்டுண்டிருக்கும் நாகம் போல் கிடந்தனர். அன்றாட நடை, உடை பாவனை, பழக்க வழக்கங்களில் ஆங்கில மோகம் இழையோடிற்று. அவர்களை எப்படி எழுப்புவது, தமிழ் எங்கே? என்று அங்கலாய்ந்துப் போகிறார் கவிஞர்.
இப்படிப்பட்டச் சூழ்நிலையில் ஆங்கில மோகத்தில் உழன்று அதற்கேற்ப பி.ஏ.படித்துத் தேர்ச்சிப் பெற்ற ஓர் இளைஞனை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் பாரதி. அவனுக்கும், அவன் சந்திக்கும் ஒரு புலவனுக்கும் இடையேநடக்கும் வாதப் பிரதிவாதம் நம்மைச் சிந்திக்கவும், செயலாற்றவும் வைக்கிறது. தன்னையே அந்தப் புலவனாக உருவகப் படுத்திக் கொள்கிறார் பாரதி…. உரையாடல் இப்படி ஆரம்பமாகி முன்னேறுகிறது…..
இளைஞன் : ஐயா, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத மொழி உண்டென்றால் அது தமிழ் தான்! அது அழிந்தால்தான் நம் நாடு பிழைக்கும்
புலவர்: அப்பனே, தமிழின் மேல் உனக்கு ஏன் அப்படியோர் வன்மம், வெறுப்பு? அது என்ன செய்தது?
“நவீன நாகரிகத்தின் போக்கைப் பற்றி உமக்குத் தெரியாது போலிருக்கிறது, பாவம் அய்யா, நீங்கள்!. பரிணாம வளர்ச்சியில் காட்டு மனிதன் உபயோகித்தக் காட்டுமிராண்டி பாஷை தமிழ். இப்போதோ உலகம் விஞ்ஞான ஆராய்ச்சியால் பல்வேறு துறைகளில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அத்தகைய அரிய உத்திகளை உமது பண்டைக்காலத்துத் தமிழிலே கொண்டு நுழைப்பதுப் பிரம்மப் பிரயத்தனமாய் இருக்கிறது. ‘நாம்’ நாகரிகப் பாதையில் பயணிக்க வேண்டுமானால் தமிழ் மொழியை முழுவதும் கைவிட வேண்டியது மிகமிக அவசியம்”.
“ஆமாம், ‘நாம்’ என்று யாரைச் சேர்த்துச் சொல்கிறாய்? உன்னைப் பார்த்தால் தான் ‘அப்பாவி’ போல் தோன்றுகிறது! ஏதோ எல்லா விஷயங்களையும் கரைத்துக் குடித்த மேதாவி என்ற எண்ணத்தில் மிதக்கிறாய் போலிருக்கிறது. உன்னைப் போன்று ஆங்கிலம் படிக்காத ஜனங்கள் உள்ளூர் மொழியானத் தமிழில் தானே பேச முடியும். காலங்காலமாய் அவர்கள் பேசி வரும் தமிழ் பாஷை அவர்களின் உயிருடன் ஒன்றிவிட்டது. மனிதர்களின் அறிவு வளர்ச்சிக்கு பாஷை என்பது ஒரு கைக்கண்ணாடி போன்றது. நாட்டு மக்களின் அறிவுத் திறன் உயர அதற்குத் தகுந்தாற்போல் அந்நாட்டின் மொழியும் தேர்ச்சிப் பெறுகிறது. அந்நிய ஆதிக்கத்தினால் சுணங்கிப் போயிருக்கும் தமிழர்களால் வேற்றுத் தேசத்தவர்களுக்கு இணையாக முன்னேற முடியவில்லை என்பது உண்மை தான். அதற்குப் பாஷையை மட்டுமே குற்றம் காண்பது எவ்விதத்தில் நியாயம்? ‘ஆடத்தெரியாத நாட்டியக்காரி மேடை கோணல் என்றாளாம்’ என்பது போலல்லவோ கதைக்கிறாய்!”
“ஐயா, சாமி! போகாத ஊருக்கு ஏன் வழி தேடிக் கொண்டிருக்கிறீர்? விஷயத்துக்கு, வாரும்! ஐரோப்பிய விஞ்ஞானிகள் மனிதகுலத்துக்குத் தேவைப்படும் பற்பல புது இயந்திரங்களையும், புதியக் கருத்துக்களையும் கண்டுப்பிடித்துக் கொண்டி ருக்கிறார்கள். அதுக்கெல்லாம் தமிழில் பெயரும் கிடையாது ஒரு மண்ணும் இல்லை! என்ன அவலம்! இதற்கு என்ன சொல்கிறீர், மகானுபாவரே?”
“ஆகா, சாதுரியமாகப் பேசுவதாக நினைப்போ? நீ சொல்லும் கருத்துக்கள் எல்லாம் மக்களிடையே அறிமுகமாகி, வழக்கத்தில் வந்த பிறகல்லவா தமிழில் இடம் பெறும்? அந்நிய ஆதிக்கத்தில் நம்மவற்குப் படிப்பறிவு கிடைப்பதே குதிரைக் கொம்பாய் இருக்கிறதே! அறிவு சுருங்கிப் போயிருக்கிறார்கள். ஆனாலும்,தந்தி மூலம் அனுப்பும் செய்திகளுக்கு வார்த்தைகளை அமைத்துக் கொள்ளவில்லையா? ஆடை அணியாத அநாகரீக மக்களின் பாஷையில் பட்டுத்துணிக்குப் பெயர் இல்லை யென்றால் அவர்களின் மொழியைக் குற்றம் சொல்ல முடியுமா? அதற்குக் காலம் பிடிக்கும். கண்களில் கோளாறு என்றால் மருந்தினால் சரி செய்துக் கொள்ளாமல் அதற்குப் பதில் ஓர் அயல்நாட்டுக் கண்ணைப் பொருத்திக்கொள்வேன் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?”
“ஐயா, நிறுத்தும்! ஏன் இப்படிக் கதை அளக்கிறீர்? தமிழ் பாஷைக்கு இயற்கையிலேயே நவீன விஷயங்களைக் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் இல்லை என்பதே உண்மை. விஞ்ஞானம் எதற்கு, கவிதையை எடுத்துக் கொள்ளுங்கள். பிரபல கவிகள் பிரபு டென்னிசன், மில்டன் எங்கே, ஆங்கிலப் புலமையற்ற உங்கள் தமிழ்ப் புலவர்கள் எங்கே,ஒப்பிடவே முடியாதே?” பாவம், அவனுக்கு எங்கே தெரியும், அந்தப் புலவருக்கும் ஆங்கிலக் கவிஞன் பி.சி.ஷெல்லிக்கும் இடையேயுள்ள கவிதை ரசனை?
இப்போது நிஜமாகவே புலவருக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்து விட்டது. “அப்பனே! ஏன் இப்படி ஒரு புரிதலுமின்றி உளறுகிறாய்? தற்போதையச் சூழ்நிலையில் நம் மக்களின் உடல், மனம் எல்லாம் துவண்டுப் போய்க் கிடக்கிறது. மரம் ஒன்றில் பற்றியுள்ள நோயைத் தீர்த்தப் பிறகுதானே அதன் பழம் ருசிக்கச் செய்யும்? முதலில் அதைச் செய்ய வேண்டும். தமிழ்ப் புலவர்களான இளங்கோ அடிகள், கம்பர், திருத்தக்க தேவர் ஆகியோரது அருமையானப் பாடல்களைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்க ஞாயமே இல்லையே!”
“சும்மா தமிழ், தமிழ் என்று இந்தப் ‘பெனிடிக்டரி வெர்ஸ்’ எல்லாம் என்னிடம் பாடிக் காட்டாதீர்கள். கம்பன்,டம்பன் எல்லாம் கொஞ்சம் காலேஜில் படித்திருக்கிறேன் நானும்!”
“அவர்கள் சொல்லிக் கொடுத்து, நீ அறிந்துக் கொண்டதைத் தான் கண்கூடாகப் பார்க்கிறேனே! அதனால் தான் உனக்குத் தமிழ், தமிழ் பேசும் மக்கள் மீது இப்படியொரு காட்டம்! நீ போற்றும் ஆங்கிலக் கவிஞர்களுள் அலெக்சாண்டர் போப் மற்றும் பல வித்துவான்கள் தமிழ்ப் புலவர்களின் கவித் திறமைகளைப் பற்றி வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள் என்பதாவது தெரியுமா?”
இந்தப் பித்தனிடம் வாய் கொடுக்காமல் இருப்பதே நல்லது என்று இளைஞன் நினைத்துவிட்டான், போலும். மௌனியாகி விட்டான். அதற்காகப் புலவரும் ஓயவில்லை.
“கம்பனைப் பற்றிப் படித்திருக்கிறேன் என்கிறாயே, கம்பராமாயணத்தின் மகிமையை அறிவாயோ? சொல்கிறேன், கேள்… சீதா தேவி அசோகவனத்தில் வைக்கப் பட்டிருந்த சமயம், ராமபிரானைப் பற்றியபழைய நினைவுகளில் மூழ்கி வருத்தப்படுவதாகச் சில பாடல்களைக் கம்பர் இயற்றியிருக்கிறார். அவற்றுள் ஒன்றை விளக்கிக் கூறுகிறேன், கேள். அரியாசனம் ஏறி, ராஜ்ஜியப் பாரத்தை ஏற்றுக் கொள் என்று கட்டளை இடப்பட்டச் சமயத்திலும், அயோத்தியை விட்டு காட்டுக்குச் செல் என்றுச் சொல்லப்பட்ட போதும், ஒரே மாதிரி மலர்ந்த முகத்துடன் விளங்கினான் என்பதை ஜானகி நினைத்துப் பார்க்கிறாளாம்.
அந்தப் பாடல் இதோ…. மெய்த் திருப்பதம் மேவு’ என்ற போதினும், ‘இந்திருத் துறந்து ஏகு’ என்ற போதினும், சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள். 20 (சுந்தர காண்டம். காட்சிப் படலம்)
அப்பனே! இதில் ஓசை, சொல் நயம், பொருள் இன்பம் எல்லாம் பொதிந்திருப்பதைக் காணலாம். இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே. இதுபோல் இன்னும் பல பாடல்கள் நூல் பூராவும் விரவிக் கிடக்கின்றன. மேலும் ஒன்று, கேளப்பா! ( இது அந்தப் புலவன் குறிப்பிடாததுதான். இருந்தாலும் அந்த இளைஞனுக்கு உறைக்கும் “வண்ணம்” மறைமுகமாகச் சொல்லியிருக்கலாம் எனும் அனுமானத்தில் இந்த இடைச் செருகலை நேயர்களின் ரசனைக்காக முன் வைக்கிறேன்).
கவி புனையும் கம்பரிடம் தமிழ்ச் சொற்கள் ஓடி வந்து எம்மையும் கவிதையில் சேர்த்து விடு, சேர்த்து விடு என்று கெஞ்சுமாம். இவ்வாறு ஒரு நாட்டுப்புற வழக்கு உண்டு. கம்பரின் கவிதையில் சொற்சேர்க்கை உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. இடத்திற்கும், சூழலுக்கும், காலத்திற்கும் தக்கவாறு சொற்கள் கவிதையில் அமைந்த விதம் படித்து இன்பம் அடைவதற்கு உரியது, நண்பரே!
கம்பர் வண்ணம் என்ற சொல்லை வேறுவேறு பொருள்களில் கையாண்டு ஒரு கவிதையைப் புனைந்துள்ளார். இச்சொல்லை வைத்தே பாதி இராமாயணக் கதையைக் கூறி முடித்து விடுவதாக அறிஞர்கள் கூறுவர். அப்பாடல் வருமாறு:
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனிஇந்த உலகுக் கெல்லாம் உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவது உண்டோ மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ண லேஉன் கைவண்ணம் அங்குக் கண்டேன் கால்வண்ணம் இங்குக் கண்டேன்
(கம்ப. பால காண்டம், மிதிலைக்காட்சிப் படலம், 24.)
(இவ்வண்ணம் = இப்படி; நிகழ்ந்த வண்ணம் = நிகழ்ந்தபடி; உய்வண்ணம் = நற்கதி பெறும் வழி; துயர்வண்ணம் = துன்பம்; மைவண்ணம் = கருநிறம்; மழைவண்ணம் = மேக நிறத்தை ஒத்த கரிய நிறம்; கைவண்ணம் =கையின் திறமை; கால் வண்ணம் = காலின் திறம்)
இராமனுடைய திருவடி பட்ட அளவில் கல்லாகக் கிடந்த அகலிகை உயிர் பெற்ற பெண்ணாக மாறுகிறாள்; சாப விமோசனம் பெறுகிறாள். அதனைக் கண்ட விசுவாமித்திர முனிவர் இராமனைப் புகழ்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. “கரிய நிறத்தை உடைய இராமனே! இனி இந்த உலகிற்குத் துன்பம் உண்டோ? நின் வில் ஆற்றலால் தாடகை என்ற அரக்கி மாண்டாள். உன் கைத்திறமையை அங்குப் பார்த்தோம். உன் பாதம் பட்டவுடன் அகலிகை உயிர் பெற்று எழுந்தாள். உன் காலின் திறமையை இங்குப் பார்த்தோம்” என்று விசுவாமித்திரர் இராமனைப் புகழும் பாடலில் வண்ணம் என்ற ஒரு சொல் நிறம், திறம் (திறமை) என்னும் இரு பொருளில் திரும்பத் திரும்ப வந்து கவிதையைச் சிறப்படையச் செய்துள்ளதைப் படித்து மகிழலாம். கம்பரின் வர்ணனையைப் படிக்கையில் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் உனக்கு ஞாபகம் வரவில்லை என்பது துரதிருஷ்ட வசமானது!
சாப்பிட்ட ஓரு மாம்பழம் அழுகிய நிலையில் இருந்தால் அவ்வகை மாங்கனியே உண்ண அருகதை அற்றது என ஒதுக்கிவிடுவாயோ? தமிழ் பாஷையும், தமிழ் மக்களும் தாழ்மையுற்றிருக்கும் நிலை அறிந்தும் ஒரு மொழியையே குற்றம் கூறுவது எவ்விதத்தில் நியாயம்? கோபாலகிருஷ்ண கோகலே, பால கங்காதர திலகர் ஆகியோரின் வழிகாட்டுதலில் நம் பாரத தேசம் அந்நியரின் பிடியிலிருந்துச் சுதந்திரம் பெற்று, அனைத்துச் செல்வங்களையும் அடைந்த பிறகு, நம் தமிழ் மொழிக்கு கிடைக்கும் மேன்மையைப் பார்க்கத்தான் போகிறாய். அப்போது ஆச்சரியப்பட்டுப் போவாய் என்பது சர்வ நிச்சயம்!” என்று மடைதிறந்த வெள்ளம் போல் சீறிப் பாய்ந்தார்.
அதுதான் எத்தனை நிதர்சனமான உண்மை! அதைத்தான் கண்கூடாகப் பார்க்கிறோமே!
அந்தப் புலவர் உரைத்த அறிவுரையெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல் வீண்தானோ? ஆங்கில மோகம் பீடிக்கப்பட்ட இளைஞனோ எதற்கும் கவலைப்படாமல்,’இழந்த சொர்க்கம்’, ‘மீண்ட சொர்க்கம்’ கனவுகளில் ஆழ்ந்து தனி ஆளாக மனதில் ஆங்கிலக் கவிதைகளை அறுவடை (THE SOLITARY REAPER) செய்து கொண்டிருந்தான் !
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம் யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை ஒன்றும் புகழ்ச்சியில்லை!” என்ற பாரதியின் முழக்கம் நம் காதுகளில் ரீங்காரமிட்ட வண்ணம் உள்ளது!
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 24-10-2021 அன்று ஒளிபரப்பான உரை!
திருமயிலை கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயம்!
மட்டு இட்ட புன்னை அம் கானல் மட மயிலைக்
கட்டு இட்டம் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டு இட்ட பண்பின் உருத்திர பல் கணத்தார்க்கு
அட்டு இட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்!
திருஞானசம்பந்தர் திருவடி போற்றி!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன். ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது சென்னை மாநகரின் மையத்தில் அமைந்துள்ள திருமயிலைத் திருத்தலம் ஆகும். மூலவர் திரு நாமம் : ஸ்ரீ கபாலீஸ்வரர்
அம்பிகையின் திரு நாமம் : கற்பகாம்பாள் அல்லது கற்பகவல்லி
ஸ்தல விருக்ஷம் : புன்னை மரம்
தலத்தின் பெயர்கள் : திருமயிலை, கபாலீச்சரம்
தீர்த்தம் : பிரசித்தி பெற்ற கபாலி தீர்த்தம்
‘கயிலையே மயிலை’, ‘மயிலையே கயிலை’ என்று கயிலாயத்திற்கு நிகரான இந்தத் தலத்தைப் பற்றிய சிறப்பு மிக்க வரலாறுகள் பல உண்டு.
முன்னொரு காலத்தில் பார்வதி தேவி சிவபிரானிடம் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும் படி வேண்ட அவரும் அப்படி உபதேசிக்க ஆரம்பித்தார். இடையில் அங்கு மயில் ஒன்று அழகாக நடனம் ஆடவே அதன் அழகில் மயங்கினாள் அம்பிகை. உமாதேவி இப்படி வேடிக்கை பார்ப்பதைக் கண்ட சிவபிரான், உபதேச நேரத்தில் கவனத்தைச் சிதற விட்ட காரணத்தினால் அவளை ‘மயிலாகப் பிற’ என தண்டிக்கவே அம்பிகையும் அப்படியே மாறினாள். தனக்கு விமோசனம் தந்து அருள் பாலிக்குமாறு அம்பிகை வேண்ட, சிவபிரான் மயிலையில் அம்பிகையை மயில் வடிவில் மானுடர்கள் வழிபட்டு வர விமோசனம் ஏற்படும் என்று அருளினார். அம்பிகையும் இந்தத் தலத்தில் எழுந்தருள விமோசனமும் பெற்றாள். மயில் வடிவில் அம்பிகை இறைவனை பூஜித்ததால் இந்தத் தலம் திருமயிலை என்ற பெயரைப் பெற்றது. அம்பிகைக்கு இங்கு புன்னை மரத்தடியில் சிவபிரான் தரிசனம் தந்தார். மயிலை பற்றிய இன்னொரு வரலாறும் உண்டு.
ஆதி காலத்தில் பிரம்மாவிற்கு ஐந்து தலைகள் உண்டு. ஒரு சமயம் பிரம்மா தானும் சிவனுக்கு நிகரானவன் என்று கர்வம் கொண்டார். இந்த ஆணவத்தை அழிக்கத் திருவுள்ளம் கொண்ட சிவபிரான் அவரது ஒரு தலையைக் கிள்ளி கையில் ஏந்திக் கொண்டார். அவரது கபாலம் கையில் இருக்கவே, இவர் கபாலீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டார். தலத்தின் பெயரும் கபாலீஸ்வரம் என்ற திருப்பெயரைப் பெற்றது.
இத்தலத்தில் வாழ்ந்து வந்த சிவனடியாரான சிவநேசருக்குப் பெண்ணாகப் பிறந்த பூம்பாவை என்பவள் திருஞானசம்பந்தரின் மீது அளவற்ற பக்தி கொண்டவள். ஒரு நாள் பூம்பாவை தோட்டத்தில் மலர்களைப் பறித்துக் கொண்டிருந்த போது விஷப்பாம்பு ஒன்று அவளைத் தீண்ட அவள் இறந்தாள். சிவநேசர் அவளது அஸ்தியை ஒரு குடத்திலிட்டுப் பாதுகாத்து வந்தார். அந்தத் தலத்திற்கு எழுந்தருளிய திருஞானசம்பந்தர், ‘பூம்பாவை எங்கே’ என்று சிவநேசரைக் கேட்க, பூம்பாவையின் அஸ்தி இருந்த குடத்தை அவரிடம் காண்பித்து வருந்திப் புலம்பியவாறே நடந்ததை விவரித்தார் சிவநேசர். உடனே திருஞானசம்பந்தர் மயிலையில் நடக்கும் ஒவ்வொரு திருவிழாவையும் விவரித்து ஒரு பதிகம் பாடி, இப்படிப்பட்ட திருவிழாக்களைக் காணாமல் ‘போதியோ பூம்பாவாய்’ என்று பாடினார். என்ன ஆச்சரியம், பூம்பாவை உயிருடன் எழுந்தாள். அனைவரும் வியந்தனர், மகிழ்ந்தனர். பூம்பாவையை ஏற்றுக் கொள்ளும்படி சிவநேசர் வேண்ட அவள் தனக்கு மகள் முறை ஆகிறாள் என்று கூறி அருள் பாலித்தார் சம்பந்தர். இக்கோவிலில் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு ஒரு சிறு கோயில் இருக்கிறது. கோவிலில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் பூம்பாவையின் வரலாறு சுண்ணத்தினால் ஆன சிலைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
பூம்பாவை உயிர் பெற்ற நிகழ்ச்சி ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோத்ஸவத்தின் எட்டாம் நாள் காலையில் நடக்கிறது. சம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் மற்றும் உற்சவ மூர்த்திகள் கபாலி தீர்த்தத்திற்கு எழுந்தருள அங்கு சம்பந்தரின் பதிகம் பாடப் பட பூம்பாவை உயிர் பெற்று எழுகிறாள். இதைப் பார்ப்போருக்கு ஆயுள் தீர்க்கம் என்பது ஐதீகம். இதே நாளில் 63 நாயன்மார்களும் வீதியுலா செல்வது காணக் கண்கொள்ளாக் காட்சியாகும்.
பெரிய கோவிலான இது முதலில் கடற்கரைக்கு அருகே அமைந்திருந்தது. போர்த்துக்கீசியர் படையெடுப்பால் தகர்க்கப்பட்ட இது பின்னர் பல்லவர் காலத்தில் சிறப்புற இப்போது இருக்கும் இடத்தில் அமைக்கப்பட்டது, அம்பிகைக்கும் சிவபிரானுக்கும் தனி சந்நிதிகள் உள்ளன. மேற்கு கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். கபாலீஸ்வரர் சுயம்புவாக மேற்கு நோக்கி இருந்து தரிசனம் தருகிறார். சுவாமி சந்நிதி நுழைவு வாயிலின் முன் உள்ள மண்டபத்தில் இடது புறம் தெற்கு நோக்கி இருந்து அம்பிகை அருள் பாலிக்கிறாள். கர்பக்ருஹத்தைச் சுற்றி வரும் போது பைரவர், வீரபத்திரர், தேவார மூவர் உள்ளிட்ட 63 நாயன்மார்களைக் காணலாம்.இங்குள்ள கணபதி நர்த்தன கணபதியாகக் காட்சி தருவது ஒரு சிறப்பாகும்.
இத்தலத்தில் திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடி அருளியுள்ளார். வாயிலார் நாயனார் அவதரித்த தலம் இது.
இங்கு தெற்கு பிரகாரத்தில் முருகப்பிரான் ஆறு தலைகள், பன்னிரு கரங்கள் கொண்டு மயில் மீது வீற்றிருக்கிறார். இத்தலத்தில் அருணகிரிநாதர் 10 திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளியுள்ளார்.அவருக்கு ஒரு சிலையும் இங்கு உள்ளது. உலா, கலம்பகம், அந்தாதி உட்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கியங்கள் இத்தலத்தின் சிறப்பைப் பற்றி அழகுற விளக்குகின்றன.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கற்பகாம்பாளும் ஸ்ரீ கபாலீஸ்வரரும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். திருஞானசம்பந்தரின் அருள் வாக்கு இது:
சரோஜா பட் தொகுத்த சுபாஷித சதகம் என்ற நூலிலிருந்து சில சுபாஷிதங்களைப் பார்த்தோம். இதோ இன்னும் ஐந்து சுபாஷிதங்கள் :-
துங்கத்வமிதரா நாத்ரௌ நேதம் சிந்த்யாவகாததா |
அல்லுங்கணீயதாதேதுர்பயம் தன்மனஸ்வினி ||
ஒரு மலையானது உயரத்தை மட்டும் கொண்டுள்ளது (ஆழத்தை அல்ல) கடலோ ஆழத்தை மட்டும் கொண்டுள்ளது (உயரத்தை அல்ல). ஆனால் வெல்ல முடியாத இந்த இரு அம்சங்களும் ஒரு புத்திசாலியிடம் இருக்கிறது.
A mountain has height, not the other one (i.e depth). It (i.e. height) is not there in the sea but depth is there. Both (these properties) which are the cause of being insurmountable exist in an intelligent person.
*
பராபந்தேல்பமேவாக்ஞா: காமம் வ்யக்ரா பவந்தி ச |
மஹாரம்பா: க்ருததியஸ்திஷ்டந்தி ச நிராகுலா: ||
அல்ப புத்தியுள்ளவர்கள் சிறிய விஷயங்களை எடுத்துக் கொண்டு அதிலேயே மூழ்கி விடுகிறார்கள். ஆனால் உறுதியுள்ளவர்கள் பெரிய விஷயங்களை எடுத்துக் கொண்டு உறுதி குலையாமல் இருக்கிறார்கள்!
Ignorant people undertake small matters and are completely engrossed in them. Those who are determined embark upon giant undertakings and remain unperturbed.
வெட்டப்பட்டாலும் கூட ஒரு மரம் மீண்டும் வளர்கிறது. தேய்ந்தாலும் கூட சந்திரன் மீண்டும் வளர்கிறது. இப்படி நினைத்து, மகான்கள் இடையூறுகளால் ஒரு போதும் தளர்வதில்லை.
A tree grows (again) even when it is cut. The moon grows even after getting reduced. Thinking thus, the saintly ones are never tormented by difficulties.
*
யத்யதிஷ்டதரம் தத்ததேயம் குணவதே கில |
அத ஏவ கலோ தோஷான் சாதுப்ய: சம்ப்ரபச்சதி ||
எது அதிகமதிகம் விரும்பப்படுகிறதோ அதுவே புண்யவான்களுக்கு உண்மையில் தரப்பட வேண்டும். அதனால் தான் துஷ்டர்கள் நல்லவரிடம் தோஷங்களைச் சுமத்துகிறார்கள்.
Whatever is more and more desirable is indeed to be given to the virtuous people. That is why a wicked person assigns faults to the good.
அன்யதேஹவிலசத்பரிதாபாத் சஜ்ஜனோ த்ரவதி நோ நவநீதம் ||
நல்லோரின் இதயம் வெண்ணெயைப் போன்றது என்று கவிஞர்கள் வர்ணிக்கின்றனர். அது தவறு. ஒரு நல்லவனின் இதயமானது இன்னொருவனின் உள்ளம் சுடும் போதே உருகி விடுகிறது. ஆனால் வெண்ணெய் அப்படி அல்ல; அதை சூட்டில் வைத்தால் மட்டுமே தான் அது உருகுகிறது.
Poets describe the heart of a good man as butter. This is false. A good man’s (heart) melts by the heat scorching in the body of another man, but not the butter (which melts only when it is heated).
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை அக்டோபர் 24-ம் தேதி 2021
ஆம் ஆண்டு
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./காணலாம்.
XXXX
இந்துக்கள் மீது தாக்குதல் வங்கதேசத்தில் குற்றவாளி கைது
வங்கதேசத்தில் கடந்த 13ம் தேதி துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. அப்போது குரான் நூல் அவமதிக்கப்பட்டதாக வதந்தியை இஸ்லாமிய தீவிரவாதிகள் பரப்பினர்; இதனால் அங்கு வன்முறை வெடித்தது. இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 70க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள், இந்துக்கள் வசிக்கும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 6 இந்துக்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக பதற்றமான சூழல் நிலவி வந்தது., வங்கதேசம் முழுவதும் வன்முறை வெடிப்பதற்கு காரணமான இக்பால் உசைன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். காக்ஸ் பசார் கடற்கடை பகுதியில் இருந்து இக்பால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். குமில்லாவில் துர்கை சிலையின் காலடியில் இக்பால் உசைன் தான் குரான் நகலை வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
Xxxx
திருப்பதியில் ரூ.3 கோடியை தாண்டி உண்டியல் வசூல்
திருப்பதியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் உண்டியல் வருவாய் லட்சக்கணக்கில் இருந்தது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதனால் உண்டியல் வருவாயும் கணிசமாக உயர்ந்து வந்தது.
தற்போது திருமலையில் உள்ள பாலாஜி வெங்கடேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
உண்டியல் வருவாய் கடந்த ஒரு வாரத்தில் 3 நாட்கள் ரூ.3. கோடியை தாண்டி வசூலாகியுள்ளது.
திருமலையில் உள்ள பாலாஜி வெங்கடேஸ்வரர் கோவிலில் நவம்பர், டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டது. இலவச தரிசன டோக்கன் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
Xxxx
ஹிந்து அறநிலையத்துறை கல்லூரிகளில் ஹிந்துக்களுக்கு மட்டுமே வேலை: அரசு முடிவு
ஹிந்து அறநிலையத்துறையின் நிதியின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், பணியிடங்களுக்கு ஹிந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு தமிழக மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சென்னை கொளத்தூரில் இயங்கும் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், காவலர், தூய்மைப்பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த அக்.,13ல் விளம்பரம் வெளியிட்ட விளம்பரத்தில், சம்பந்தப்பட்ட பணிகளுக்கு ஹிந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மற்ற மதத்தினர் யாரும் கலந்து கொள்ள தகுதி இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து சென்னையை சேர்ந்த சுஹைல் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:ஹிந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது, இந்திய அரசியல் சட்டப்பிரிவு 16 மற்றும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது. இந்த அறிவிப்பாணையை ரத்து செய்துவிட்டு எல்லா மதத்தினரும் விண்ணப்பிக்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியிட ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணி நியமன நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ், ஹிந்து அறநிலையத்துறை நிதி மூலம் நடத்தப்படும் கல்லூரிகளில் ஹிந்துக்கள் மட்டுமே நியமிக்க முடியும். ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ஹிந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று விதி உள்ளது என தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கு குறித்து தமிழக அரசும், ஹிந்து சமய அறநிலையத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார். உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்த விளக்கத்திற்கு மக்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
xxxxx
கோவில் நிதியில் கல்லுாரி: அரசுக்கு அதிகாரம் உண்டா?
ஹிந்து சமய அறநிலைய துறை சார்பில், தமிழகத்தில், நான்கு கலை அறிவியல் கல்லுாரிகள், இந்த ஆண்டே திறக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளில் அரசு தீவிரமாக உள்ளது.
சென்னை, கொளத்துாரில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் அமைக்கப்படும் கலை அறிவியல் கல்லுாரியில், நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.பிற புதிய கல்லுாரிகளிலும் இதே நிலை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழியர் நியமனமும் நடந்து வருகிறது.
இது குறித்து, ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது: இதில் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. அறநிலைய துறைக்கு கல்லுாரி துவக்க சட்டப்படி அதிகாரம் கிடையாது.. அறநிலைய துறை சட்டப்படி, ஒரு கோவில் நிர்வாகம் கல்லுாரி அமைக்க வேண்டும் என்றால், அந்த கோவில் அறங்காவலர் தான் முடிவு செய்ய வேண்டும். கோவில் உபரி நிதியில் இருந்து கல்லுாரி துவங்க வேண்டும் என்றால், உபரி நிதியை குறிப்பிட்டு, ஹிந்து சமய அறநிலைய துறை கமிஷனருக்கு விண்ணப்ப கடிதம் எழுதி, அனுமதி கோர வேண்டும்.
அனுமதி அளிப்பதற்கு முன், அறநிலைய துறை கமிஷனர், இது தொடர்பான அறிவிப்பை பிரதான பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிட வேண்டும். அதில், கோவில் அறங்காவலர் கோரியிருப்பதை குறிப்பிட்டு, இதில் பக்தர்களுக்கு ஏதும் ஆட்சேபனை இருந்தால், ஒரு மாத காலத்துக்குள், அறநிலைய துறைக்கு தெரிவிக்க வேண்டும் என, கோர வேண்டும்.
ஒருவேளை, பக்தர் யாரிடமிருந்தாவது ஆட்சேபனை இருக்குமானால், அது தொடர்பான பிரச்னைகளை தீர்க்க வேண்டும். இவற்றை முடித்துத் தான் அனுமதி அளிக்க வேண்டும். அப்படியொரு அனுமதி இல்லாமல், எந்த கோவில் சார்பாகவும், கல்வி நிறுவனங்களை துவங்க முடியாது. இவற்றை பின்பற்றாமல் கோவில் பணத்தை எடுத்து செலவு செய்து, கல்லுாரி தொடங்கினால், அது, இந்திய தண்டனைச் சட்டப்படி, பத்து ஆண்டுகள் சிறை தண்டனைக்குரிய குற்றமாகும்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு, மயிலாப்பூர், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் நிறைய இடங்கள் உள்ளன. அங்கு, கல்லுாரியை துவங்கவில்லை. ஆனால், முதல்வர் தொகுதியில் கல்லுாரி துவங்க வேண்டும் என்ப தற்காக, கோவிலுக்கு சொந்தமான இடமே இல்லாத, தனியார் இடத்தில் துவங்க போவதாக அறிவித்துள்ளனர்.
அறங்காவலர்கள் மட்டுமே கல்லுாரி அல்லது பள்ளி அமைக்க முடியும் என்ற நிலையில், அரசு உத்தரவிட்டு, கல்லுாரி தொடங்குவது சட்ட விரோதம். உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது. நான்கு கோவில்கள் வாயிலாக அமைக்கப்படும் கல்லுாரிகளுக்கான ஒப்புதல் அரசாணையை, உயர் கல்வி துறை, முறையான விசாரணை இல்லாமல் வெளியிட்டுள்ளது.
பழநி கோவிலுக்கான செயல் அலுவலர் பதவியை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, 2020 செப்டம்பரில் ரத்து செய்து விட்டது. அரசு மேல்முறையீட்டையும், சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. இதனால், இப்போதும் அந்த கோவிலுக்கு செயல் அலுவலர் இல்லை; அறங்காவலர்களும் இல்லை. இப்படி தான் நான்கு கோவில்களின் நிலையும் உள்ளது. அப்படி இருக்கும்போது, எந்த அறங்காவலரை கொண்டு, கல்லுாரி துவங்க அனுமதி வாங்கினர்?
திருச்செந்துார் கோவிலில் இருந்து, 90 கி.மீ., தொலைவில் உள்ள விளாத்திகுளத்தில், கல்லுாரி அமைக்கின்றனர். தி.மு.க., — எம்.பி., கனிமொழியின் துாத்துக்குடி தொகுதிக்குள் வரும் விளாத்திகுளத்தில் கல்லுாரி அமைய வேண்டும் என்பதற்காக, அப்படி செய்கின்றனர்– என்று ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறினார்
இது தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தியின் சுருக்கம் ஆகும்
xxxxx
திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவில் குடமுழுக்கு இன்று நடந்தது
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதசாமி கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவில் முழுவதும் ரூ. 5 கோடி மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.
இன்று 24-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை குடமுழுக்கு நடந்தது . இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Xxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Compiled from popular newspapers of India
Read by NITHYA SOWMY
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.
Even if you miss our live broadcast on SUNDAYS
you can always visit us on FACEBOOK.COM– slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’
Read by NITHYA SOWMY
Xxxx
Jamaat-e-Islami leader pleads guilty to attack on Durga Puja pandal in Bangladesh
Jamaat-e-Islami leader Kamaluddin Abbasi has pleaded guilty to his involvement in an attack on a Durga puja mandap in Bangladesh’s Hajiganj earlier this month.
He made confession on Thursday evening in the court of Chandpur Senior Judicial Magistrate Mohammad Kamaluddin.
In his statement, he also revealed the names of the other persons involved in the incident, said Milan Mahmud, superintendent of Chandpur Police.
A group of the militants attacked the Hajiganj Bazar temple after 8 p.m. on October 13. When the police tried to control the situation, there was a clash with the attackers.
A total of five people were killed in the ensuing violence.
CCTV footage of the attack showed Abbasi leading the violence.
About 5,000 unidentified persons have been accused in 10 cases of the nationwide violence, and the police have arrested 29 people so far.
According to Mahmud, an operation is underway to nab the other perpetrators.
Xxx
HINDUS ONLY ARE ELIGIBLE FOR TEMPLE POSTS- SAYS TAMILNADU GOVERMENT
The TAMIL NADU State government on Friday maintained that only persons professing Hindu religion are entitled for appointment to the posts in the Hindu Religious and Charitable Endowments (HR&CE) department and the institutions run by it as per the relevant Act.
It was submitted before the Madras High Court when a petition challenging the notification of the department calling for walk-in interview for teaching and non-teaching posts at Arulmigu Kapaleeswarar Arts and Science College, came up for hearing.
The appointment is being done only for the particular college, sponsored by the Mylapore Kapaleeswarar temple administration, said Advocate General R Shanmugasundaram. The condition of eligibility of persons professing Hindu religion is made because Section 10 of HR&CE Act mandates it. He said walk-in interview was already held and appointment orders were issued for some.
Petitioner’s counsel, S Doraisamy, contended Section 10 of the Act can be applied for recruiting employees of the department and not for educational institutions run by it. Justice C Saravanan adjourned the matter for two weeks and directed the State to submit the counter-affidavit.
XXXX
TCS to manage Ram temple trust funds
The management of the Ram Temple Trust funds that have crossed Rs 3,000 crore, has now been entrusted to corporate giant, Tata Consultancy Services (TCS), which is developing a digital accounting software.
Ram temple Trust General Secretary Champat Rai confirmed the takeover. Sources said that the decision was taken at the behest of Rashtriya Swayamsevak Sangh (RSS), which had summoned three key Trust members to Mumbai four months ago for a closed-door meeting over the controversial land deals.
TCS has set up its account’s office at Ramghat near Ram Janmabhoomi and is scheduled to complete developing the software by December and begin digitisation and management of Trust accounts.
IT experts from the Tata Group recently gave a powerpoint presentation of the software to temple construction committee chairman, Nripendra Mishra.
XXXX
GRAND FAREWELL TO NAVARATRI IDOLS IN KERALA BEFORE RETURNING TO TAMIL NADU
A farewell function to the Navaratri idols was organised by the Travancore Navaratri Festival Trust with support from the Union Ministry of Culture on Sunday, Oct 17.
A grand farewell was accorded to the procession carrying Navratri idols in the capital THIRUVANANTHAPURAM on Sunday. The three idols brought from Tamil Nadu were being worshipped in the capital during the nine days of the Navaratri ritual.
On Sunday morning, the administrator of the Navaratri Trust Raja Raja Varma handed over the royal sword to Sudarsanakumar, manager of Kumarakovil, marking the start of the return journey. The idol of goddess Saraswati and the sword were then taken to Killipalam where the idols of Kumaraswamy and Munnoottinanka joined the procession.
The police band gave a stunning ceremonial performance and gave a guard of honour to the idols. The procession then moved to Neyyattinkara and reached the Sree Krishna Temple there by noon.
The idol of Saraswathi Devi will be installed at the Thevarakettu. The idol of Kumaraswami will be taken to the Velimala temple later.
The idol of Munnootinanka will be placed at Kalkulam Mahadeva temple in the night and taken to the Suchindram temple the next day.
XXXX
Fabindia brands Diwali collection “Jashn-e-Riwaaz”, backtracks after major backlash
Earlier this week, traditional clothing brand Fabindia attracted major backlash from Hindus from all walks of life after just days ahead of Diwali, they launched an ad campaign for their new collection which was branded ‘Jashn-e-Riwaaz’, with the accompanying image showing 4 women, all without bindis.
This misadventure didn’t sit well with most Hindus who took to social media to voice their protest at the appropriation and erasure of a Hindu religious festival. The hashtag #BoycottFabindia started to trend in no time and was trending for two days.
It has also been revealed that in 2019, FabIndia had appointed Zeno Group as its digital advertising partner, headed by Managing Director Rekha Rao Gulrays who is also the co-founder of Katha Kathan, an organization routinely promoting Urdu literature.
Rekha Rao also has an affinity for using her Twitter account for cracking Hinduphobic cow-urine jokes
After the massive backlash, Fabindia deleted the tweet promoting “Jashn-e-Riwaaz” as its collection for the festival of love and light.
Xxxx
FOLLOWING NEWS IS BRIEFLY REPORTED; FULL VERSION IS GIVEN HERE
The horrific anti-Hindu pogrom launched in Bangladesh from the eight day of Durga Puja onwards, has proven to be the proverbial straw that broke the camel’s back. Hindu response to such persecution and targeted violence in the past has been sporadic and localized protests, and loads of apathy. But that finally seems to be changing.
Protests by Bangladeshi Hindus accompanied to rallying cries of Joy Sri Ram, Har Har Mahadev were the first sign that we were not going to take things lying down anymore. This was followed by more protests in West Bengal, Assam, other parts of Bharat and internationally such as in USA and UK.
Yesterday, ISKCON organized a coordinated series of protests at 740 ISKCON temples across 170 countries. ISKCON devotees performed Harinam Sankirtan ( congregational chanting of the holy name) to condemn the violence in Bangladesh.
At one such protest, holding banners that said, ‘Protect our temples in Bangladesh’ and ‘Stop violence against Hindus’ several devotees gathered at the ISKCON temple in Pune, Maharashtra on Saturday morning and protested against the attacks and killings of Hindu minorities in Bangladesh.
Radheshyam Das, President of ISKCON Pune temple in Maharashtra, Bharat said, “ISKCON has been working for world peace for the last many years in different countries. We work for social causes. ISKCON performed services for the people even in Bangladesh during the Covid crisis. We are protesting peacefully against the attacks in Bangladesh. World leaders should stand with us.”
“The ISKCON temple in Bangladesh was demolished. Some ISKCON devotees were also killed in attacks in the last few days. Women were also attacked. Forceful conversions of Hindus are being done. We demand that the Bangladesh government rebuild the temples demolished by the anti-social elements. Also, amendments should be made in the Bangladeshi law for protection of Hindu women and minority communities. We demand the United Nations and the Indian government take up steps for protection of Hindus and minorities in Bangladesh,” said Shwetdeep Das alias Sanjay Bhosale, vice president of ISKCON.
Members of the Rashtriya Swayamsevak Sangh (RSS) and Vishwa Hindu Parishad (VHP) also took part in the protests.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண் பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திருநெல்வேலியிலிருந்து மாதந்தோறும் வெளியாகும் ஹெல்த்கேர் பத்திரிகையில் அக்டோபர் 2021 இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை!
நூறு ஆண்டு ஆயுளை ஆரோக்கியத்துடன் தரும் அதர்வ நிதி!
ச.நாகராஜன்
நவீன அல்லோபதி மருத்துவம் உலகை ஆண்டு வரும் இந்தக் காலத்தில் அது சமாளிக்க முடியாமல் திணறும் கொரானா போன்ற பிரச்சினைகளைக் கண்டு திகைக்கிறோம்.
நாளுக்கு ஒரு நாள் மாறுபட்ட கருத்துக்களையும் அறிக்கைகளையும் மருத்துவ ஆய்வுகள் வெளியிடுவதால் எது உண்மை எது பொய் என்று தெரியாமல் விழிக்கிறோம்.
வியாதிகளுக்குப் புதுப் பெயர்கள் கொடுக்கப்படுகின்றன, மருந்துகள் மாற்றப்படுகின்றன!
நம்மைப் பாதிக்க வரும் இயற்கைச் சீற்றங்களுக்கு – புயல்களுக்குப் புதுப் புது பெயர்கள் சூட்டுவது போல (சூட்டி மகிழ்வது போலவோ?!!) வைரஸுகளுக்கும் புதுப் புதுப் பெயர்கள் தரப்படுகின்றன. கோவிட், நிபா…..
இந்த நிலையில் தான் மேலை நாட்டு மருத்துவ முறை பற்றி ஆய்வு செய்து விமரிசித்த ஐயான் கென்னடியை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
நவீன மருத்துவமானது ஒரு எதிர்மறை அணுகுமுறையையே கடைப்பிடித்து வருகிறது. அது வியாதிகளின் நிவாரணம் பற்றியே முதலிடம் கொடுத்து வருகிறது. மனிதனின் ஆரோக்கியத்தை நிலை நிறுத்தி அதைப் பாதுகாத்து நீடித்து இருப்பதற்கு அது முதலிடம் கொடுக்கவில்லை.
இது தான் உண்மை.
ஐயான் கென்னடி (லீத் சொற்பொழிவுகள் 1980) தனது சொற்பொழிவில் கூறினார் இப்படி:-
“நவீன மருத்துவம் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.உடல்நலக் குறைவு அல்லது வியாதி – இது தான் நவீன மருத்துவத்தின் மையக் கவலையாக உள்ளது. நவீன மருத்துவம் பற்றிய ஒரு புதிய மாடலை திருப்பவும் உருவாக்க எண்ணுவோமேயானால் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து அதற்கான வழிமுறைகளைக் காணும் ஒன்றையே தேர்ந்தெடுப்போம். ஆனால் இப்போது நம்மிடம் இருப்பது அதற்கு நேர் எதிரிடையான ஒன்று. அது உடைந்த சிறு சிறு துண்டுகளைப் பொறுக்க விரும்புவதைப் போல உள்ள ஒன்று தான். அது வியாதியைப் பற்றியே நினைக்கிறது, ஆரோக்கியத்தை அல்ல! ஒரு கணம் நினைத்துப் பார்த்தாலேயே போதும், இந்த முட்டாள்தனம் நமக்குப் புரிந்து விடும்.”
[Ian Kenndedy (Leith Lectures 1980) said :”Modern medicine has taken the wrong path. Illness or disease has become the central concern of modern medicine. If we start all over again to design a model for modern medicine, most of us, I am sure, would opt for a design which concerned itself far, far more with the pursuit and preservation of health, of well being. What we have instead is the very opposite : a system of medicine which reacts, which responds, which wants to pick up the broken pieces – a form of medicine, in short concerned with illness not health. A moment’s thought demonstrates the folly of this.”]
சரி, இதற்கு மாற்று ஏதாவது இருக்கிறதா என்று கேட்கும் போது தான் ஆயுர்வேதம் நம் முன்னே தலை நிமிர்ந்து நிற்கிறது.
ஆயுர்வேதம் இந்தியப் பண்பாட்டின் ஆணிவேரான வேதங்களின் அங்கங்களுள் ஒன்று. அது ஒரு ஆணோ, பெண்ணோ நூறு வயது எப்படி ஆரோக்கியமாக நிறைவாழ்வு வாழ முடியும், வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான வழிமுறைகளைக் காண்பிக்கிறது.
அதர்வ வேதத்தில் காணப்படும் ஆயுர்வேத நெறிமுறைகள் அதர்வ நிதி என அழைக்கப்படுகிறது.
தேய்ந்து குறைந்து போகும் இதர செல்வங்களை விட நிஜமான செல்வம் ஆரோக்கியம் என்னும் செல்வம் அல்லவா. அது தானே உண்மையான நிதி –
அதர்வ நிதி!
அதர்வன் என்ற சொல் புத்திகூர்மையுடன் தொடர்பு கொண்ட ஒரு சொல்லாகும். வசிஷ்டர் என்ற பெரும் முனிவரே அதர்வ வேதத்தை நன்கு அறிந்த மகா முனிவர் ஆவார். இவரையே காளிதாஸன் அதர்வ நிதியின் களஞ்சியமாகக் குறிப்பிடுகிறான். ரிக், யஜூர், சாமம் ஆகிய மூன்று வேதங்கள் மனிதனின் வாழ்க்கை லக்ஷியத்தையும் அவனது எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளைக் கூறுகின்றன. ஆனால் அதர்வண வேதமோ இந்த வாழ்க்கையிலேயே இப்போது உயிரோடு இருக்கும் போதே எதிரிகளிடமிருந்து தன்னை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றியும் அரசர்கள், அவர்களது நீதி, வழிமுறைகள் ஆகியவை பற்றியும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பது பற்றியும் எடுத்துரைக்கிறது. ஆனால் அதே சமயம் மனிதன் காண வேண்டிய மெய்ப்பொருள் எது என்ற தத்துவத்தையும் கூடவே அது சுட்டிக் காட்டி விளக்குகிறது.
அதர்வ வேதமே ஆயுர்வேத வைத்தியத்திற்கான ஆதார நூல். ஜுரங்களைப் போக்குவது எப்படி, தொழுநோயைத் தீர்ப்பது எப்படி, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களை உடனடியாகப் போக்குவது எப்படி, இருமல், தலையில் வழுக்கை விழுதல், கண் சமபந்தமான வியாதிகள் உடலில் ஆண்மைச் சக்தி குறைதல், எலும்பு முறிதல், பல்வேறு காயங்கள், விஷக்கடி,
உள்ளிட்டவற்றிற்கான தீர்வுகள் யாவை என்பன போன்றவற்றை ஆயுர்வேதம் தருகிறது. அற்புதமான எளிய அதிகச் செலவில்லாத, உடனுக்குடன் பயன் தரும் வழிமுறைகளை அது அற்புதமாக விவரிக்கிறது.
உடலை அக்கு வேறு ஆணி வேறாகப் பகுத்துப் பிரித்து ஆராய்ந்து அது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் அதன் செயலையும், செயல் திறனையும் நன்கு விளக்குகிறது. இந்த வகையில் உலகின் முதல் மருத்துவ நூலாக அதர்வண வேதமே – அது தந்துள்ள ஆயுர் வேதமே திகழ்கிறது.
கருப்பை, கருவின் தோற்றம், உடல் தூய்மை என்பன பற்றியெல்லாம் ஆயுர்வேதத்தில் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
வேத ரிஷிகள் இயற்கை வைத்தியத்தையே முதன்மையாகக் கொண்டிருந்தனர். நீர், காற்று, சூரிய ஒளி, பூமி ஆகியவற்றைப் பயன்படுத்தி நூறு சதவிகித ஆரோக்கிய வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆயுர்வேதத்தில் மட்டுமே உள்ளது.
உடலின் எந்த பாகத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள், ஆயுர்வேதத்தை அணுகுங்கள், அது தெள்ளத் தெளிவாக அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைக்கிறது.
பற்களா? – மேல் வரிசை, கீழ் வரிசை, ஈறு, பல் இடுக்குகள் என நுட்பமாக அதில் காணலாம். இதே போல இதயம், கணையம், கல்லீரல், நுரையீரல், ஜனன உறுப்புகள், தசை, எலும்பு, இரத்தம் என எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் – அது பற்றித் தெளிவாக அது தகவல்களைத் தருகிறது.
துரதிர்ஷ்டவசமாக முகலாயப் படை எடுப்பாலும் பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு உட்பட்டதாலும் சிறுகச் சிறுக அதன் மஹிமை நமது நாட்டில் குறைக்கப்பட்டது; அதன் அருமை பெருமை மறைக்கப்பட்டது.
இன்றைய அல்லோபதி டாக்டர்கள் தங்கள் மருத்துவத்துடன் இதையும் சற்று நுணுகி ஆராய்ந்து இதன் அருமை பெருமைகளையும் அறிந்து, ஆயுர்வேத சிகிச்சை முறைகளையும் தங்கள் வழிமுறைகளில் இணைத்துக் கொண்டால் சில ஆண்டுகளிலேயே நமது டாக்டர்களினாலேயே ஆயுர்வேதம் ஒரு புத்துயிரைப் பெறும்; அனைவருக்கு எளிய, இனிய சிகிச்சையைத் தந்து செலவைக் குறைத்து, நீடித்த ஆரோக்கியமான வாழ்வைத் தரும். இதில் ஐயமில்லை. சிந்திப்போம், செயல்படுவோம்!