Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Gnanamayam Channel in London has arranged a week long Bharati Memorial Centenary lectures via Zoom and Facebook.com. Many singers also participated in it. On 11th September 2021, the main event took place. Everyone enjoyed the 2 hours 15 minutes programme. Young and old from different parts of the world took part in it.
11-9-2021 IN SPECIAL BROADCAST FOR GREAT POET BHARATI
PLEASE JOIN US TODAY 11-9-2021 IN SPECIAL BROADCAST TO REMEMBER AND PAY RESPECT TO THE GREATEST TAMIL POET BHARATI . IT IS 100 YEARS SINCE HE DIED. TO COMMEMORATE BHARATI’S 100th DEATH ANNIVERSARY, GNANAMAYAM CHANNEL IS DOING A SPECIAL BROADCAST FROM LONDON.
USUAL TIME- LONDON TIME 2 PM ;INDIAN TIME 6-30 PM
USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM
IF U HAVE OUR ZOOM, PLEASE USE OUR MONDAY ZOOM LINK.
SPEECHES BY DEDICATED TAMIL SCHOLARS AND SONGS BY DEVOTED SINGERS ARE BROADCAST.
FOLLOWING IS OUR PROGRAMME.
Prayer Mrs Sasikala Janakiraman
Talks by
MR SUBRAMANIAN SITARAMAN, MUMBAI
வாராது வந்த மாமணி
MR S NAGARAJAN, BENGALURU
பார் போற்றும் மகாகவி பாரதியார்!
DR NARAYANAN KANNAN, CHENNAI (with Shobika Murukesan)
xxx
பேச்சு.
கலைஞானச்சுடர். ஸ்ரீமதி. சுபாஷினி.
இயக்குனர், தேஜஸ்வராலயா கலைக்கூடம்.
ஆசிரியர், கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி.
திரு. இளைய தம்பி ஜெயந்திரன்.
விரிவுரையாளர், சைவசிந்தாந்த துறை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.
பாரதியார் பாடல்கள்.
செல்வி. கார்த்திகா கார்த்தீஸ்வரன்.
செல்வி. அபிலாஷிகா கணேசமூர்த்தி.
செல்வி. தேஜஸ்வினி பிரணவன்
செல்வி. ஜெகார்த்திகா கணேசமூர்த்தி.
xxxx
BHARATI SONGS SUNG BY SINGERS FROM DUBAI, SINGAPORE, SRI LANKA, AUSTRALIA AND INDIA
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாரெங்கும் பாரதியின் சிந்தனை! ஞான மயம் சார்பில் பாரதி நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சி சிறப்புற நடத்தப்பட்ட போது 11-9-2021 சனிக் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பான ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். (இந்த உரை மூன்று பகுதிகளாக வெளியிடப்படுகிறது.)
பார் போற்றும் மகாகவி பாரதியார்! – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். பாரதி நினைவு நூற்றாண்டு தினமானது இதோ இப்போது இன்று உலகளாவிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது.
எது கவிதை? இதற்கான இலக்கணத்தை நூற்றுக் கணக்கான அறிஞர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிக்ள் சொல்லி விட்டனர்.
இவர்கள் சொன்ன இலக்கணத்தின் படி இது தான் கவிதை என்பதோடு இதற்கு அப்பாலும் கவிதை இருக்கிறது என்பது தான் உண்மை!
எதார்த்தத்தைச் சொல்வது கவிதை என்பது ஒரு கட்சி; கற்பனையை அழகுறச் சொல்வது கவிதை என்பது இன்னொரு கட்சி. எதார்த்தம் தான் கவிதை என்றால்.
“பாக்காவது கமுகம் பழம் பருப்பாவது துவரை
மேற்காவது கிழக்கே நின்று பார்த்தால் அது தெரியும்
நாற்காதமும் முக்காதமும் நடந்தால் அது எழு காதம்
ராக்கா உண்மை சொன்னேன் இனி ரட்சிப்பயோ அல்லது பட்சிப்பயோ”
என்ற இதுவும் கவிதை தானே என்கிறார் பேராசிரியர் முத்துசிவன் தனது அசோகவனம் என்ற புத்தகத்தில் கவிதை என்ற கட்டுரையில்.
வெறும் யதார்த்தம் மட்டும் கவிதை ஆகாது.
இது போலவே வெறும் கற்பனை மட்டும் கவிதை ஆகாது.
நிலவு போன்ற முகம், வீனஸ் போன்ற தேவதை என்று சொல்லிக் கொண்டே போவது மட்டும் கவிதை அல்ல.
பின்னர் கவிதை என்பது தான் என்ன?
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கூறுகிறார்:-
உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்துரைப்பது கவிதை
கவிதைக்கான அழகான இலக்கணம் தான் இது!
ஆனால் கம்பனோ கவிதையில் ஒளி வேண்டும் என்கிறான்.
கோதாவரி ஆற்றின் பிரவாகத்தைப் பார்த்த அவனுக்கு அதை கவிதையுடன் ஒப்பிடத் தோன்றுகிறது.
புவியினுக்கு அணியாய் அமைவது சான்றோரின் கவி. அது ஆன்ற பொருளைத் தரும்.
தேவர் தம் உணவுக்கொத்த சுவைப் புலங்களில் படிந்ததாக இருக்கும்
அவியகத் துறைகள் தாங்கி இருக்கும், அதில் ஒளி இருக்கும் (சவி – ஒளி)
தண்ணென குளிர்ந்த ஒழுக்கம் நிரம்பி இருக்கும்.
(கோதாவரியைப் போல) அகன்ற பிரவாகம் போலப் பெருக்கெடுத்து ஓடி இன்பம் தரும் இது கம்பனின் வாக்கு.
வெய்யோனொளி தன் மேனியின் விரிஜோதியின் மறையப் பொய்யோவெனும் இடையாளுடன் இளையானொடும் போனான் மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்.
ஆஹா, இது அல்லவா கவிதை! இதை இயற்றியவன் கவிச் சக்கரவர்த்தி அல்லவா! ஆம் கம்பன் இயற்றியது தான் இது. இது தான் கவிதை!
இந்த இலக்கணத்திற்கெல்லாம் உட்பட்டு இதற்கு அப்பாலும் சென்று கவிதை படைத்த ஒரு அற்புதக் கவிஞன் தான் மகாகவி பாரதி!
காலத்தை வென்ற கவி மஹாகவி பாரதி தனக்குத் தொழிலே கவிதை தான் என்கிறான்!
நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்
இது தான் பாரதியின் தொழில்.
கம்பன் இசைத்த கவியெலாம் நான் என்பது தான் ‘கவிதைத் தொழில் மன்னனின்’ – நம் பாரதியின் – சுய சரிதைச் சுருக்கம்!
காலத்திற்குத் தக்கபடி பாழும் கலியில் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் அனைவரையும் மேலேற்றி, குருடரை எல்லாம் குருடு நீக்கி விழி கொடுத்துப் பதவி பெற வைப்பது கவிதை என்கிறான் அவன்.
கவிதையே தொழிலாகக் கொண்ட கவிஞன் கவிதா சக்தி பற்றி தரும் விளக்கம் இது தான்:-
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்
இந்த கவிதா வரிகளில் கம்பனின் சவி என்னும் ஒளியை பாரதி முன் நிறுத்துகிறான். வாக்கினிலே ஒளி வந்து வெள்ளம் போல கலையும் கவிதையும் பெருகுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் விழி பெற்று உன்னதமான நிலையை எய்துவர். அமிழ்தம் நிகர் தமிழின் சுவை கண்டார் தேவர் ஆகிடுவர்.
என்ன அழகிய வார்த்தைகள்! கவிதையின் மகத்தான் சக்தியை பளீரென்று சொல்கிறார் பாரதியார்.
இது தான் கவிதை! இதைத் தாண்டியும் இருப்பது கவிதை!
எது ஆன்மாவை உயரத்தில் ஏற்றுகிறதோ அது கவிதை! எது ஆன்மாவைப் போல அழியாமல் இருக்கிறதோ அது கவிதை! எது இறைவனின் விளக்க முடியா விந்தையை விளக்க முயன்று ஒளிர்கிறதோ அது கவிதை!
இது தான் கவிதையா! இது கவிதை; இதற்கு அப்பாலும் உள்ள விளக்கத்தைக் கொண்டிருப்பதும் கவிதை! விண்டுரைக்க முடியா விந்தையே கவிதை!
ஆனால் இந்தக் கவிதைக்கான இலக்கணத்தை அனுபவிக்க ஒரு எளிய வழி உண்டு.
அது பாரதியாரின் கவிதைகளைப் படிப்பது தான்; அனுபவிப்பது தான்; உணர்வது தான். அப்போது தேனின் சுவை என்ன என்பதை சொற்களால் விளக்க முயன்று தோற்றுப் போன ஒருவன் ஒரு துளி தேனை அருந்தியவுடன் விளக்கமே தேவையில்லை என்று சொல்வது போல பாரதியின் கவிதைகளைப் படித்து அனுபவிப்பவன் கவிதா இலக்கணத்தை நன்கு அறிந்து கொள்வான்.
****
சரி, ஒரு கவிஞன் அப்படி என்ன தான் செய்து விட முடியும்.? குடந்தை வேலன் என்னும் ஒரு கவிஞர் விடை தருகிறார். யார் இந்தக் குடந்தை வேலன் என்பதை இன்று வரை அறிய முயன்று வருகிறேன். தெரியவில்லை. இவர் பாடிய கவிதைச் சித்தன் கும்மாளத்தில் சில பகுதிகள் இதோ:
கவிதைச் சித்தன் கும்மாளம்!
எழுதியவர் குடந்தைவேலன்
கல்லொடு கல்லினைத் தட்டிக் களைத்திடுங்
கற்றறி மூடர்களே – ஒரு
சொல்லொடு சொல்லினைத் தட்டி நெருப்பொடு
சூளை கிளப்பிடுவோம்
ஆனையைப் பானையில் மூடி வைப்போமந்த
அண்டப் பெருவெளியும் – மிகக்
கூனிக் குறுகியெம் சொல்லெனும் மாயக்
குடுக்கையில் நின்றாடும்
வெண்ணெயை வைத்திட்டு நெய்க்கு அலைந்திடு
வீணர்களே வாரும் – இந்த
மண்ணில் இருக்குது விண்ணுலகம் எங்கள்
மந்திரத்தில் பாரும்
வானத்தில் வில்லை வளைத்திடுவோம் அந்த
மண்ணைச் சுருட்டிடுவோம் பர
மோனத்தை ஞானத்தளையில் பிடித்தே
மூப்பில் ஆழ்த்திடுவோம்
வேதக்குயவன் வனைந்திட்ட மட்குடம்
வீழ்ந்தே உடைந்ததடா –யாம்
நாதக்குழம்பில் புனைந்திட்ட சொற்கடம்
ஞானம் முழங்குதடா
(சொற்கடம் என்பதை சொற்கள் தம் எனப் பிரிக்க வேண்டும்)
என்ன ஒரு அருமையான கவிதை! இது தான் கவிதை செய்யும் ஜாலம்! இந்த ஜாலத்தைத் தான் மஹாகவி பன்முகப் பரிமாணத்துடன் தன் கவிதைகள் மூலம் செய்தார் என்று சுருங்கச் சொல்லி விடலாம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Q & A – SAMSKRITA, KARAM, KAVASAM HYMNS IN TAMIL , KRISHNA’S NAME MEANING (Post.10082)
Sanskrit question 11-9-.2021
S.N.
To:swami_48@yahoo.com
Fri, Sep 10 at 4:12 PM
Namaskaram Sir,
Please let me know what is the correct pronunciation of Sanskrit, is it SAMASKIRUTHAM OR SAMSKRUTHAM?
As far as I know it is Samskrutham. But in Tamil nadu, Sanskrit is pronounced as SAMASKIRUTHAM. Every language is unique in its own right. Sama means, equal. Sanskrit is not equal to any other creation. Krutham means creation. . Please, you have a wealth of knowledge about Hinduism. What is your opinion?
Thank you with regards
S
My reply on 10-9-2021
தமிழில் சரியான வடிவம் — ஸம்ஸ்க்ருதம்
கிரந்த ‘ஸ’ பயன்படுத்த விரும்பாதோர் – சம்ஸ்கிருதம் அல்லது சமச்கிருதம் என்று எழுதுவார்கள்.
ஜெயலலிதா , ஸ்டாலின் என்று எழுதுவோர் உண்மையில் ‘ஸம்ஸ்க்ருதம்‘ என்று எழுதுவதே சரி.
ஆங்கிலத்தில் வெள்ளைக்காரர்கள் தவறாகSANSKRIT என்று எழுதியது நிலைத்துவிட்டது.
ஆனால் ஸம்ஸ்ருத துறைகள் உள்ள பல்கலைக்கழகங்கள் SAMSKRIT என்றே எழுதுகின்றன. இதுவே சரி
SAMSKRITA BHARATI IS AN EDUCATIONAL INSTITUTION . THEY WRITE SAMSKRITA
MEANING OF SAMSKRUTHAM = WELL CONSTRUCTED; PERFECTLY STRUCTURED
XXXX
FROM N.M 11-9-2021
பாபநாசம் சிவம் அவர்கள் எழுதிய ‘வடமொழிச் சொற்கடல் ‘ என்ற நூலை அவரது மகள் ருக்மிணி ரமணி தொகுத்து வெளியிட்டுள்ளார். லண்டனில் சுவாமிநாதன் அந்நூல் பற்றிப் பேசியுள்ளார். அந்நூலைப்பெறுதல் சாத்தியமா?
நஞ்சு , முழம் , யானைத் துதிக்கை, ஓலைக் கொ த்தின் திரள், ஒளி செய்வது, உஷ்ணம், இடு மருந்து ,
விலையேற்றம், நூற்றெ ட்டு உபநிடதங்களுள் ஒன்று , செயல், விஷம், அகரம்
from 1935 Anantha Vikatan dictionary.
For the book, please go to my article where i have given the address of rukmini ramani, his daughter .
SWAMI
XXXX
KAVASAM HYMNS IN TAMIL
V K
To:Santhanam Swaminathan
Wed, Aug 25 at 12:42 PM
சுவாமி நமஸ்காரம் காஞ்சிபுரத்தில் இருந்து xxxxx .விநாயகர் , சிவ, சக்தி கவசம் பற்றிய தங்கள் கட்டுரையை இப்போ தான் படித்தேன் . தாங்கள் அதனை யாராவது மறுமுறை பாதிப்பு போட்டால் நன்றாயிருக்கும் என சொல்லி இருந்தீர்கள் ..நான் தயார்..எனக்கு இதில் ஒரு ரூபாய் கூட வேண்டாம் நான் செலவு செய்து கொள்கிறேன் யாரை அணுக வேண்டும் ..காப்பி ரிட் பிரச்சனையை வரக்கூடாது அல்லவா? அதனால்தான் ..தங்கள் வழி காட்டவும் ..நன்றி xxxxxx காஞ்சிபுரம்
இராமசாமிப் புலவர் சொல்லும் கவச அற்புதங்கள்2
Yahoo/Inbox
S R
நமஸ்காரம் இந்த புத்தகம் கூகுளில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. இந்த பதிப்பகம் பற்றிய தகவலும் இல்லை. இதை தாங்கள் படிவம் எடுத்து கொஞ்சம் கொஞ்சகமாக பதிவிட முடியுமா?
நன்றி! வணக்கம்
Xxxxx
REPLY
I HAVE SENT ALL THE KAVASA HYMNS TO A GENTLEMAN. HE IS GETTING READY TO PRINT IT. I WILL POST THE DETAILS IN MY BLOG, WHEN THE WORK IS READY FOR DISTRIBUTION. NO BOOK HAS WORD BY WORD MEANING EXCEPT THIS KAVASA BOOK.
30 Mar 2014 — Krishna’s Names in the Bhagavad Gita · krishna green. Compiled by London Swaminathan Post No.944 Date: 30th March 2014.
XXXX
CURSE VERSE IN THE RIG VEDA
P. C.
To:Santhanam Swaminathan
Sat, Sep 11 at 8:47 AM
Dear Swami, please accept my respects.
I just recently I checked your blog again and read your articles on the Rig Veda and the curses. I find this highly interesting, there are ample examples of the use of symbology in the western world since the Babylonian/Egyptian times right up til today, that can can be directly traced back to Veda. Many of those symbols can be connected to the symbology of the different animals mentioned in your recent articles.
Another one is what they call obelisks, those are nothing more than Shiva lingams standing in the Yoni (the Vescia Pices). This is very obvious looking at the Washington monument from above, or the Vatican, or the City of London etc. etc. Five obelisks were rised is Stockholm after the killing of Olof Palme, just at the place he was killed and along the path the murderer allegedly followed him after his visit to a movie theatre.
I’m my mind there is no doubt that the world has come to be directly ruled by rakshasas after the beginning of Kali-yuga. After briefly looking into the Surya Siddhanta (haven’t had the opportunity yet to look at it in detail) my main takeaway was that outside the rim of Antarctica there is a realm populated by demons. (yes, Jambhudvipa and Bhu-mandala is located on a plane and we have an ice wall surrounding what we call earth. Check the UN flag). There are also the subterranean realms according to the Bhagavata, might be there is a connection there as well. An interface where they can access our realm if you like. Surya siddhanta was spoken to Maya Danava by the Sun-God.
From what can derived from the Bhagavata in regards to Maya Danava it is clear that the two main characteristics of the modes of nature that he represents (the energy imprint if you so like) are 1. Illusions and 2. Technology (he is not called the Architect for no reason). Architect… relate that to the masons. So it seems that the rakshasas ruling humanity have a strong connection to Maya Danava, he seems to provide the knowledge of magic and technology they use to rule earth. In my mind, the explosive technological development we have seen the recent millennia has not been developed here but transferred from outside into human society. A trade in other words. E.g. the pyramids seems to me to be technological constructions for either control/enslavement or communication purposes, or both. The Aztecs performed blood rituals and sacrifices on pyramids, they had astute astronomical knowledge and a lot of gold.
Now coming to think of it, the pyramids might have been built using technology coming from MD.
The energy represented by the rakshasas and Maya Danava are different, the rakshasas are into blood sacrifices (think wars and terror events, or plain satanic blood rituals by the “elite”), which is more of a perverted Kali-worship thing. At the same time they worship “satan” who to me seems to represent Aja-Ekapada, the one-legged goat, one of the fierce atmospheric Rudras (Shiva in other words). My nakshatra is Puruva Bhadrapada (pada 2) and Aja Ekapada is the ruling deity of that nakshatra so I have a strong connection to Him, but not in the way they have. Vaisnavanam yatha Sambhu. “Lord Shiva is the greatest vaisnava” We also have the examples in the Bhagavata where Maya Danava is at odds with Lord Shiva who’s one name is Tripurari, after taking down the three aerial cities created by MD.
The conclusion would be that humans live in a society completely controlled by rakshasas since not long after the start of Kali-yuga. The sad thing is that even pious persons and devotees are unable to fathom the extent of the control the rakshasas have at present, even trusting them. And thus become easy victims of the massive euthanasia campaign going on at present in the world.
Non the less, Bhagavata 12.03.51: kaler doṣa-nidhe rājann asti hy eko mahān guṇaḥ kīrtanād eva kṛṣṇasya mukta-saṅgaḥ paraṁ vrajet
Hope this meets you in good health.
Mvh / Best regards,
P.C.
MY REPLY
DEAR P.C
THANKS FOR INTERESTING DETAILS.
U R ALWAYS WELCOME TO ADD IT IN COMMENT BOX IN BOTH MY BLOGS.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
‘திக்குகள் எட்டும் சிதறி’ என்னும் பாரதியாரின் பாடல் ரிக் வேதத்தில் ‘மருத்’ MARUTS என்னும் காற்று தேவதைகளின் துதிகள் போல இருக்கின்றன. பாரதியார் காசியில் தங்கிய காலத்தில் வேதத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும். மருத் என்ற சொல்லில் இருந்து மாருதி ( வாயுதேவன் மகன் அனுமன் மாருதி என்ற சொல் வந்தது)
எடுத்துக் காட்டாக
எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலனமில்லாமல்,
மதியி லிருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலைவந் திடநீ செயல்வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறுவய
திவையுந் தர நீ கடவாயே.
என்று பாரதியார் பாடுகிறார் . நான்கு வேதங்களிலும் உள்ள காயத்ரீ மந்திரத்தில் எல்லோரும் அனுதினம் வேண்டுவது ‘மனதில் ஒளி உண்டாகுக; அதாவது ஞான ஒளி உண்டாகுக’ என்பதே. அதை இந்தப்பாட்டின் மூன்றாவது வரியில் காண்கிறோம். ‘கனக்கும் செல்வம், நூறு வயது’ என்ற வரிகள் ரிக் வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகிறது. பிராமணர்கள் தினமும் சொல்லும் ‘பஸ்யேம சரதஸ் சதம்’ என்ற யஜுர் வேத மந்திரத்திலும் வருகிறது
எல்லா இந்துக்களுக்கும் ‘ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் சவிதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹீ’ என்ற காயத்ரி மந்திரம் தெரியும். இதை அவர் அழகிய தமிழில்
“செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்—அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” —
என்று மொழி பெயர்த்தார். சம்ஸ்கிருதம் தெரியாதவர்களும் இந்தத் தமிழ் மந்திரத்தைச் சொன்னால் அறிவு தெளிவு பெறும். நினைத்ததெல்லாம் கைகூடும்.
பாரதியார் பாடல்களில் வேத உபநிஷத் வரிகள் அப்படியே மொழி பெயர்க்கப்பட்டதை முந்தைய கட்டுரைகளில் (கீழே இணைப்புகளைக் காண்க) கொடுத்தேன். இங்கு மருத் பற்றிய வரிகளை மட்டும் ஒப்பு நோக்குவோம்
அவரே ‘தமிழில் பழ மறையைப் பாடுவோம்’ என்றும் ‘வேதம் என்று வாழ்க என்று கொட்டு முரசே’ என்றும் பாடுவதாலும் பழைய மறையை மொழி பெயர்த்ததை சொல்லாமல் சொல்லுகிறார் .
பாரதியாரின் மழை , புயற் காற்று பாடல்களில் ‘மருத்’ துதிகளின் தாக்கத்தைக் காணலாம்:-
போர் வீரர்களைப் போலும், தீரர்களைப் போலும் போராடுகிறார்கள். எல்லாப் பிராணிகளும் மருத் தேவர்களைக் கண்டு அஞ்சுகின்றனர் .
1-85-10
மருத்துகள் தங்கள் பலத்தால் கிணறுகளை மேலே உயர்த்தினார்கள்; மலையைப் பிளந்தார்கள்;
1-85-11
கனலாகச் சென்ற மேகத்தை இங்கே செலுத்தினார்கள்; நீர் ஊற்றைப் பொழிந்தார்கள்
1-86-10
எங்கும் பரவிய இருளை அகற்றுங்கள்;
1-87-1
பகை அழிப்பவர்கள் ; மிகுந்த பலம் வாய்ந்தவர்கள்; பலவித சப்தம்/ தீம் தரிகிட தாளம் / உண்டாக்குவோர்;
1-87-2
பறவை போல மேகங்கள் எங்கும் செல்வது உங்களால்தான்.மேகத்தோடு மேகம் மோதி மழை கொட்டுகிறது.
1-87-3
கணவன் பிரிந்து சென்ற பின்னர் நடுங்கும் மனைவி போல பூமி நடுங்குகிறது.
1-87-6
மருத்துக்கள் சூரிய கிரணங்களுடன் சேர்ந்து மனிதர்களுக்கு நன்மை செய்ய மழையைக் கொட்டுகிறார்கள்
1-88-1
நீங்கள் முழங்கும் கீதங்கள் ! மின்னல் என்னும் ஈட்டி உடையோர்; பறக்கும் குதிரைகள் ; பறவைகள் போல பறந்து வந்து உணவு கொடுங்கள் / தானியம் விளையட்டும்
1-88-2
தேர் சக்கரத்தால் பூமியை அடிக்கிறார்கள்; தங்கம் போல பளபளக்கும் ஆயுதம்/ மின்னல் ஏந்தி வந்து பகைவர்களை/ வறட்சி கொல்லுங்கள்
1-88-3
உங்கள் உடல் உறுப்புகளில் ராஜ்யத்தை வெல்லும் ஆயுதங்கள் உண்டு
1-88-5
தங்கச் சக்கர தேரும் இரும்பு ஆயுதமும் கொண்டு பகையை வெல்லுகிறீர்கள்
XXX
அகஸ்தியர் பாடிய பாடல்களில் சில மந்திரங்களைக் காண்போம்
1-166-4
உங்கள் குதிரைகள் தங்கள் திறத்தால் உலகங்களை சுற்றுகின்றன, உங்கள் வருகையால் எல்லா உலகங்களும் மலைகளும் கலங்குகின்றன. போரில் ஈட்டியால் குத்தப்படுவது போல மழை பொழிந்து தள்ளுகிறீர்கள் .
1-166-10
உங்களுடைய ஆயுதங்களின் தாரைகள் கூர்மையாக இருக்கின்றன.
1-167-10
மருத்துக்களே ! அருகிலோ தொலைவிலோ உங்களை விட எவனும் பலத்தின் எல்லையை அடையவில்லை; நீங்கள் தீரத்திலும், திண்மையிலும் உயர்ந்து, பகைவர்களைக் கடல் போல வெல்கிறீர்கள்
1-168- 4
பிரகாசிக்கும் கண்கள் உள்ள மருத்துக்கள் (மின்னல், இடி) திறமான மலைகளையும் ஆட்டினார்கள்
1-168-5
மின்னல் ஆயுதம் உடைய மருத்துக்களே !தாடை களின் நடுவில் நாக்கு இருக்கிறது. உங்களை யார் அப்படி நாக்கு போல ஆட் டுகிறான்?
XXXX
வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்….. என்று துவங்கும் ஊழிக் கூத்து பாடலிலும் சில வரிகள் அப்படியே மருத் தேவர்களைப் பற்றியதே. ரிக் வேதத்தில் இந்திரன் பற்றிய பாடல்களிலும் இதைக் காணலாம்
29 May 2016 — ‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் — அவன் … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Contact : swami_48@yahoo.com.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புற்று நோயைக் கண்டுபிடிக்க உதவும் உலோகம் ரூபீடியம்
இதுவரை இந்த ‘பிளாக்’கில் 37 மூலகங்களின் (Element தனிமம்) கதைகளைக் கேட்டீர்கள். இன்று 38ஆவது தனிமத்தின் கதையைக் காண்போம்.
ருபீடியம் RUBIDIUM ஒரு உலோகம். இது பொட்டாசியம் போல கார வகையைச் (ALKALI METAL) சேர்ந்த உலோகம்.
இது பற்றிய சுவையான விஷயங்கள் : இது மூளையில் (Brain Tumours) ஏற்படும் கட்டி மற்றும் புற்று நோயைக் கண்டுபிடிக்க உதவுகிறது. நேரத்தைத் துல்லியமாகக் காட்டும் அணுசக்திக் கடிகாரங்களிலும் (Atomic clocks) பயன்படுகிறது. நாம் காணும் வாண வேடிக்கைகளில் ஊதா நிற ஒளி (purple) உண்டாக்குவதும் ருபீடிய உப்புகள தான் !
. லத்தீன் மொழியில் ருபிடியஸ் என்றால் ஆழ்ந்த சிவப்பு வர்ணம் என்று பொருள். இதனால்தான் மாணிக்கக் கற்களையும் ஆங்கிலத்தில் ரூபி Ruby என்று அழைக்கிறோம். சரியான உச்சரிப்பு ரூபிடியம்.
இந்த உலோகத்தை வெட்ட வெளியிலோ தண்ணீரிலோ வைத்திருக்க முடியாது. ஏனெனில் அது தீப்பிடித்து எரிந்துவிடும் அல்லது தண்ணீரில் அதிவேகமாகச் செயல்பட்டு தீயை உண்டாக்கும். ஆகையால் இதை எண்ணைக்கு அடியில் வைத்திருப்பார்கள்
மற்றோர் சிறப்பு என்னவென்றால் ரூபீடிய -வெள்ளி அயோடைட் என்னும் உப்பு மின்சாரத்தை எளிதில் கடத்தும்.
நாம் சாப்பிடும் உணவில் சோயா மொச்சை, ஆப்பிள், தேநீர், காப்பி ஆகியவற்றில் குறிப்பிடத் தக்க அளவுக்கு ருபிடியம் இருக்கிறது ஆயினும் இதற்கு உடலில் வேலை எதுவும் இல்லை.
***
மருத்துவத்தில்
பொட்டாசியம் போலவே இதையும் நமது உடல் எளிதில் கிரகித்து விடுகிறது. இது சிறிது கதிரியக்கம் உடையது . இதனால் இதை உடலில் செலுத்தினால் அது எங்கே செல்கிறது என்று அறியலாம். குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்கள் இதை வலிந்து இழுக்கின்றன.
இதை வைத்து அங்கே புற்றுநோயோ வேறு வகை கட்டியோ இருக்கிறதா என்று அறியமுடியும் . ஆயினும் இந்த உலோகத்தின் உப்புகள் விஷத் தன்மை உடையவை.
பெர்லின் அகாடமியில் ஜெர்மன் விஞ்ஞானியான ராபர்ட் வில்லியம் புன்சென் மற்றும் குஸ்தாவ் ராபர்ட் கிச்சாப் ஆகிய இருவரும் இதன் கண்டுபிடிப்பை 1861-ல் அறிவித்தனர்.
டயாலிசிஸ்(Dialysis) சிகிச்சைக்கு செல்லுவோர் மனத் தொய்வை அடைகின்றனர். அவர்களுக்கு மனக்கவலை நீங்க ருபிடிய மருந்துகள் உதவுகின்றன.
ருபிடியம் பூமியின் மேற்பரப்பில் மற்ற பொருள்களுடன் கலந்து இருக்கிறது; இதற்கு அதிக உபயோகம் இல்லாததாலும் உற்பத்திக்கு அதிக செலவு பிடிப்பதாலும் ஆராய்ச்சிக்குத் தேவையான அளவுக்கே இது உற்பத்தி ஆகிறது
கண்ணாடித் தொழிலிலும் , வெப்ப சக்தியை மின்சார சக்தியாக மாற்றும் சாதனங்களிலும் பயன்தருகிறது. ருபிடியம்- ஸ்ட்ரான்ஷியம் கலப்பு தாது இருக்கும் பாறைகளின் வயதைக் (Dating the rocks) கண்டு பிடிப்பது எளிதாகிறது. ஆகையால் அந்த விஷயத்திலும் இது நமக்கு உதவுகிறது. போட்டோ செல்களிலும், விண்கலத்தைக் கொண்டு செல்லும் ராக்கெட் என்ஜின்களிலும் இதை பயன்படுத்துகிறார்கள்.
இதன் ரசாயனக் குறியீடு Rb
அணு எண் -37
உருகு நிலை – 39 டிகிரி சி
கொதி நிலை – 688 டிகிரி சி
இது ஒரு மென்மையான, வெள்ளை நிற உலோகம். குறைந்த வெப்ப நிலையில் கூட ஆக்சிஜனுடன் கலந்து எரியத் தொடங்கிவிடும்; ஆகையால் எண்ணை அல்லது கிரீசுக்குள் வைத்திருப்பார்கள். ருபிடியம்- 85, ருபிடியம் -87 என்று இரண்டு ஐசடோப்புகள் உண்டு. இவற்றில் இரண்டாவது ஐசடோப் கதிரியக்கம் கொண்டது .
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தொண்டைமண்டல சதகம் பாடல் 63
பொன் விளைந்த களத்தூர் – பெயர் வரக் காரணம் என்ன?
ச.நாகராஜன்
பொன் விளைந்த களத்தூர் என்று தொண்டை நாட்டில் உள்ள ஊருக்கு அந்தப் பெயர் வரக் காரணம் என்ன?
ஒரு பழம் பெரும் பாடல் அந்தக் காரணத்தைக் கூறுகிறது.
பொன்னெல்லை யெல்லாம் பொதிப்பொதியாப் பூசுரர்க்குச்
செந்நெல்லே போலச் சிறந்தளித்தான் – பள்ளகத்தின்
சீரார் மணியைவிலை செய்யானுஞ் செய்யகளத்
தூரானுஞ் செய்கரும மொன்று என்பதனாற் காண்க
வசையிலா வன் பயன் குன்றும்
இசையிலா யாக்கை பொறுத்த நிலம் (குறள் 239)
புகழ் பெறாமல் வாழ்க்கையைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்தால் வசையற்ற வளமான பயனாகிய விளைச்சல் இல்லாமல் நிலம் குன்றி விடும் என்பதை உணர்ந்து கொடுத்து வாழ்ந்தோரே வாழ்ந்தோர். தன்னிடம் இருந்த பொன்னை எல்லாம் பொதி பொதியாகச் செந்நெல் என்று கருதி சிறப்பாக அனைவருக்கும் அளித்தான் ஒருவன். ஆகவே அவன் ஊரில் உள்ள நிலமானது நெல்லையெல்லாம் பொன்னாகவே விளையுமாறு பொன்னையே விளைத்து அளித்தது. அதனால் அந்த ஊரின் பெயரும் பொன் விளைந்த களத்தூர் என்று ஆனது.
இப்படிப்பட்ட ஊரைக் கொண்டது தொண்டை மண்டலம் என்று தொண்டை மண்டல சதகம் பாடல் எண் 63இல் கூறுகிறது.
பாடல் இதோ:-
நன்றாய் விளைந்ததை வேதியர்க்கோந்தந்த நன்மையினாற்
பொன்றான் விளைந்திட நெற்போலவேயதைப் போரடித்துல்
குன்றாக் குவிந்ததை நெற்பரிமாற்றங் கொடுந்தளித்தாள்
மன்றார் களந்தைக் குடிதாங்கியுந் தொண்டை மண்டலமே
களத்தூரில் குடி தாங்கி முதலியார் என்று ஒரு சிறந்த வள்ளல் வாழ்ந்து வந்தார். தனது வயலில் விளைந்த நெல்லை எல்லாம் நன்கு வேதம் கற்று ஓதும் அந்தணர்க்கு வாரி வாரி வழங்கி வந்தார். இதனால் ஒரு ஆண்டு அவர் நிலங்களில் எல்லாம் நெற்பயிர் பொன் நெல்லாக விளைந்தது. அதைக் கண்ணுற்ற அவர் அந்த பொன் நெல்லையும் சாதாரண நெல்லாகக் கருதி படி படியாக அளந்து அனைவருக்கும் கொடுத்தார். இப்படிப்பட்ட குடி தாங்கி முதலியார் வாழ்ந்ததும் தொண்டை மண்டலத்திலே தான் என்கிறது தொண்டை மண்டலம் சதகம்!
பொன் விளைந்த களத்தூர் செங்கல்பட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
இதைப் பற்றிய இன்னொரு வரலாறும் உண்டு.
களத்தூர் என்ற ஊரில் உள்ளது பழம் பெரும் சிவன் கோவில் ஒன்று. அந்தக் கோவிலில் சிவனுக்கு சார்த்தப்பட்ட மாலையை ஒரு நாள் அர்ச்சகர் வீட்டுக்குக் கொண்டு வர அர்ச்சகரின் மனைவி அந்த மாலையைத் தான் போட்டு அழகு பார்த்தாள். அந்த நேரம் பார்த்து அரண்மனைச் சேவகன் வர தான் அணிந்திருந்த மாலையை அவசரம் அவசரமாக அவள் கழட்டிக் கொடுத்து அனுப்பினாள்.
அரசன் அந்த மாலையை வாங்கிய போது அவன் கண்ணில் பட்டது மாலையில் இருந்த நீண்ட ஒரு கேசம் தான்.
வெகுண்ட அரசன் அர்ச்சகரை அழைத்துக் காரணம் கேட்க அவர் அலறிப் போய் அது சிவலிங்கத்தில் இருந்த கேசத்திலிருந்து வந்ததே என்று கூறி விட்டார்.
“நாளை நாம் வந்து சிவலிங்கத்தில் உள்ள கேசத்தைப் பார்க்கிறோம். அது இல்லையேல் உம் தலை உடலில் இருக்காது” என்றான் மன்னன்.
அர்ச்சகர் இரவு முழுவதும் தூங்காமல் தான் வணங்கி வந்த சிவனைத் தொழுத வண்ணம் இருந்தார். “கவலைப்படாதே” என்ற அசரரி ஒலி அவருக்குக் கேட்டது.
மறுநாள் காலை மன்னன் கோவிலுக்கு வந்தான். என்ன ஆச்சரியம்! சிவலிங்கத்தின் மேற்பாகத்தின் முன்புறத்தில் சிகை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதனால் அவர் முன்குடுமீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார்.
மன்னன் மகிழ்ந்தான். அர்ச்சகரோ சிவ பிரானின் அருளை நினைத்து உளம் நெகிழ்ந்து உருகினார்.
அரசனோ முன்னிலும் பூஜைகள் சிறந்து நடக்க ஏராளமான பொன்னையும் பொருளையும் கொடுத்தான்.இன்றும் பொன் விளைந்த களத்தூரில் உள்ள முன்குடுமீஸ்வரரை அனைவரும் தரிசித்து அருள் பெறலாம்!
இன்னொரு வரலாறும் கூறப்படுகிறது. ஸ்ரீ தேசிகன் ஒரு முறை யாத்திரையாக இந்த ஊருக்கு வந்தார். அவர் தன்னுடன் ஹயக்ரீவரின் விக்ரஹத்தைக் கொண்டு செல்வது வழக்கம். அன்று இரவு அங்குள்ள நிலத்தில் குதிரை ஒன்று மேய்ந்தது. அது மேய்ந்த இடமெல்லாம் பொன்னாக நெற்கதிர்கள் விளைந்தது. ஆகவே இந்த ஊர் பொன் விளைந்த களத்தூர் என்ற பெயரைப் பெற்றது.
இப்படி பொன் விளைந்த களத்தூர் கூற்றுவ நாயனார் பிறந்த ஊர். தொண்டைமண்டல சதகத்தை இயற்றிய படிக்காசுப் புலவர் பிறந்த ஊரும் இது தான். நள வெண்பாவை இயற்றிப் புகழ் பெற்ற புகழேந்திப் புலவர் பிறந்த ஊர் இது தான். இன்னும் அந்தகக் கவி வீரராகவ முதலியார், நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்த சேலம் வீரராகவாச்சாரியார் இன்னும் பல பெரியோர் பிறந்ததும் பொன் விளைந்த களத்தூரே தான்!
STATUE OF BHARATI IN MADURAI SETUPATI HIGH SCHOOL.
PLEASE JOIN US TODAY 11-9-2021 IN SPECIAL BROADCAST TO REMEMBER AND PAY RESPECT TO THE GREATEST TAMIL POET BHARATI . IT IS 100 YEARS SINCE HE DIED. TO COMMEMORATE BHARATI’S 100th DEATH ANNIVERSARY, GNANAMAYAM CHANNEL IS DOING A SPECIAL BROADCAST FROM LONDON.
USUAL TIME- LONDON TIME 2 PM ;INDIAN TIME 6-30 PM
USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM
IF U HAVE OUR ZOOM, PLEASE USE OUR MONDAY ZOOM LINK.
SPEECHES BY DEDICATED TAMIL SCHOLARS AND SONGS BY DEVOTED SINGERS ARE BROADCAST.
FOLLOWING IS OUR TENTATIVE PROGRAMME.
MR SUBRAMANIAN SITARAMAN, MUMBAI
MR S NAGARAJAN, BENGALURU
DR NARAYANAN KANNAN, CHENNAI (with Shobika Murukesan)
DR SUBASHINI FROM SRI LANKA (with her students)
BHARATI SONGS SUNG BY SINGERS FROM DUBAI, SINGAPORE, SRI LANKA, AUSTRALIA AND INDIA
IF IT EXCEEDS 2 HOURS WE WILL CONTINUE BHARATI COMMEMORATION EVENT ON SUNDAY AND MONDAY AFTER OUR REGULAR ONE HOUR BROADCAST
OLD PARTICIPANTS MAY USE MONDAY ZOOM LINK FOR TODY SATURDAY. OTHERS MAY WATCH OUR PROGRAMMES LIVE BY VISITING FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME AND 6-30 PM INDIAN TIME
PLEASE DO JOIN US TO PAY RESPECTS TO THE GREATEST TAMIL POET OF MODERN ERA.