DECEMBER 2020 London Swaminathan Articles, Index-97 (Post No.10097)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,097

Date uploaded in London – 15 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 10000 PLUS POSTS.

DECEMBER 2020 INDEX

TAMIL WORDS IN ENGLISH -38;1/12;8988

TAMIL WORDS IN ENGLISH -39;2/12;8990

TAMIL WORDS IN ENGLISH -40;3/12;8994

TAMIL WORDS IN ENGLISH -41;4/12;8996

TAMIL WORDS IN ENGLISH -42;5/12;9001

TAMIL WORDS IN ENGLISH -43;6/12(LAST PART) 9005

XXX

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-1;9016;9/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-2;9019;10/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-3;9026;12/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-4;9036;14/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-5;9042;16/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-6;9036;17/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-7;9049;18/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-8;9056;20/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-9;9059;21/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-10;9069;23/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO11;9073;24/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO12;9076;25/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO13;9079;26/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO14;9081;27/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO15;9084;28/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO16;9093;31 DECEMBER 2020

XXX

7-12-2020 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH;9011B, 8/12

14-12-2020 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH;9039A, 15/12

21-12-2020 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH;9064A, 22/12

28-12-2020 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH;9087A, 29/12

XXX

INDEX 35 FOR LONDON SWAMINATHAN ENGLISH AND TAMIL ARTICLES;9002; 5/12

NAMASKAR FROM LONDON 6-12-2020 ;7/12

HINDU SPEAKER FROM SOUTH AFRICA IN GNANAMAYAM BROADCAST;9012;8/12

INDEX 36 FOR LONDON SWAMINATHAN ENGLISH AND TAMIL ARTICLES;9015; 9/12

INDEX 37 FOR LONDON SWAMINATHAN ENGLISH AND TAMIL ARTICLES;9024; 11/12

INDEX 38 FOR LONDON SWAMINATHAN ENGLISH AND TAMIL ARTICLES;9032; 13/12

INDEX 39 FOR LONDON SWAMINATHAN ENGLISH AND TAMIL ARTICLES;9043; 16/12

INDEX 40 FOR LONDON SWAMINATHAN ENGLISH AND TAMIL ARTICLES;9050; 18/12

INDEX 41 FOR LONDON SWAMINATHAN ENGLISH AND TAMIL ARTICLES;9077; 25/12 (April 2016 Index)

XXX

OBITUARY TO SRI R NANJAPPA 9052-B; 19/12

1173 VEDAS DISAPPEARED; ONLY SEVEN REMAIN; PLEASE SAVE IT- KANCHI SHANKARACHARYA ;9053;19/12

OLDEST SANSKRIT WORD IN INSCRIPTION;9063;22/12

XXX

30-11-2020 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH;8987B, DECEMBER 1,2020

HINDU LONDON CALLING 30-11-2020;8987A;1/12

LONDON(HINDUS) CALLING 13,14 DECEMBER 20; 9039 c;15/12

LONDON (TAMILS) CALLING 20-12-20;9065a;22/12

LONDON (HINDUS CALLING) CALLING 21-12-20;9065b;22/12

LONDON (TAMILS) CALLING 27-12-20;9065b;30/12

LONDON (HINDUS ) CALLING 28-12-20;9091a;30/12

XXX

JANUARY 2021 GOOD THOUGHTS CALENDAR ;9088; 30/12

(quotes on knowledge and wisdom)

XXXXX

TAMIL ARTICLES

உலக இந்து சமய செய்தி மடல் 30-11-2020 ;8987பி; 1/12

உலக இந்து சமய செய்தி மடல் 7-12-2020 ;9011 ஏ ; 8/12

அஸ்ஸாமிலிரு ந்து ஒரு அதிசயச் செய்தி 8991;3/12

ராஜ புருஷன் ஆநய :ராஜாவா, வேலை ஆளா?8997;4/12

பாரதியார் பற்றி 150+ கட்டுரைகள்; 9022;11/12

வேதத்தில் பெரிய புராணத்தில் குங்கிலிய மர்மம் -1;9027;12/12

வேதத்தில் பெரிய புராணத்தில் குங்கிலிய மர்மம் -2;9031;13/12

உலக இந்து சமய செய்தி மடல் 14-12-2020 ;9039பி; 15/12

உலக இந்து சமய செய்தி மடல் 21-12-2020; 9064பி;22/12

; 22/12

உலக இந்து சமய செய்தி மடல் 28-12-2020;9087 b 29/12

மல்லி விலை என்ன? 9000; 5/12

சுக்குமி, ளகுதி, ப்பிலி கதை ;9068;23/12

குரங்கு அணிந்த நகைகள்- கம்பனும் புறநானூற்றுப் புலவனும் ;9072;24/12

ஜனவரி 2021 நற்சிந்தனை காலண்டர்-அறிவு, விவேகம் பற்றிய பொன்மொழிகள் ; 30/12

XXX

சீனிவாசன் கட்டுரைகள்

Written by Kattukuty S Srinivasan

மன்னாதி மன்னர் (மொக்க) ஜோக்ஸ் ;8986; 1/12

மன்னாதி மன்னர் (மொக்க) ஜோக்ஸ்-2 ;8993; 3/12

ஊத்திச்சூடியும் சில இடக்கு மடக்கு விஷயங்களும்,9018;10/12

அடடா தப்பாப் போச்சே -2; 8999; 5/12

வள்ளுவர் வாசுகியைக் கூப்பிட்டா வாளி அப்படியே நிற்கும் !

இப்ப கூப்பிட்டா…. 9004; 6/12

மங்களம் தரும் அ ங்கா ரகன் -1; 9010;8/12

இசையும் இசையின் கதையும் -1 9028; 12/12

இசையும் இசையின் கதையும் -2 9030; 13/12

பல்லுப் போச்சு ! வாழ்க்கையும் போச்சு 9035;14/12

அடங்காத ஆத்திச் சூடியும், 9038; 15-12

சவுபாக்கியம்  அருளும் சுக்கிரன் -1; 9041, 16/12

சவுபாக்கியம்  அருளும் சுக்கிரன் -2; 9045, 17/12

மனைவியிடமிருந்து தப்பிப்பதெப்படி?- 9048; 18/12

டீல ஒரு ஈ இருக்கும்; காப்பில ….???? இருக்கும் ;9060;21/12

அ -க்கு அடுத்து ஆ வருவதேன்?9062;22/12

வேண்டியதும் வேண்டாததும் ; நவீன ஞான மொழிகள் -14;9067;23/12

பெண்களே யோசியுங்கள் எனக்குப் பிடித்த கவிதைகள்-4; 9075;25/12

புத்தி தரும் புதன், 29/12; 9086;

One Tree can make One Lakh Match Sticks. One Negative Thought…… (9071) 24/12

–subham—

 tags- December 2020, Index 97,

வெளிநாட்டில் தமிழ் கற்பது தேவையா? (Post No.10096)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,096

Date uploaded in London – 15 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Written by London Swaminathan for a magazine recently; (Former BBC Broadcaster, University Tamil Tutor & Dinamani Senior Sub Editor)

ஆங்கில  மொழியோ வேறு ஐரோப்பிய மொழியோ பேசும் நாட்டில் வாழும் நாமும் நம் குழந்தைகளும் தமிழ் மொழி கற்பது அவசியமா? வீட்டில் தமிழ் பேசுவது தேவையா? தமிழ் பண்பாட்டைக்  காப்பதற்காக நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ‘டிக்கெட்’ வாங்கிப் போக வேண்டுமா ? தமிழ் மொழியைக் கற்கும் நேரத்தில்  வேறு மொழியையோ, புதிய தொழில்களையோ  கற்றால் பணமும் சம்பாதிக்கலாம், புதிய வேலைகளையும் செய்யலாமே! — இவ்வாறு பல வாதப் பிரதிவாதங்கள் நடப்பதை நாம் அறிவோம்.

London University Tamil Department (SOAS)- dr Stuart Blacckburn, Dr John Marrin the Centre, London Swaminathan (Far right) Dr Singvi, High Commissioner (far left). Year 1996

முதலில் ஒரு சுவையான செய்தியைச் சொல்லிவிடுகிறேன். இந்தக் கட்டுரையாளர் 43 ஆண்டுகளுக்கு தமிழ் தொடர்பான வேலைகளை மட்டுமே செய்திருக்கிறார். வேடிக்கை என்னவென்றால் வேறு வேலைகளுக்கு மனுப்போட்டும் கிடைக்கவில்லை!! ஆனால் தமிழ் வேலைகள் மட்டும் தேடித் தேடி வந்தன.(பத்திரிகை ஆசிரியர், பல்கலைக்கழக ஆசிரியர், பி.பி.சி ஒலிபரப்பாளர் ,தமிழ் சங்க மானேஜர், தமிழ் மொழி பெயர்ப்பாளர்…… என்று) சுருக்கமாகச் சொன்னால் எனக்கும் என் குடும்பத்துக்கும், ‘தமிழ் சோறு போட்டது’. அதுவும் லண்டனில்!!

இது எல்லோர் வாழ்விலும் நடக்க முடியாதல்லவா? ஆகவே பொதுவாக விவாதிப்போம் .

ஒருவர் பிறந்த நாட்டையும், பிறந்த மதத்தையும், பேசும் மொழியையும், சேர்த்த புட் பால் (Foot Ball Club)  அணியையும், கிரிக்கெட் அணியையும் ஆதரிப்பதை எல்லா கலாசாரங்களிலும் பார்க்கிறோம் . நாம் மட்டும் ஏன் நமது மொழியையும் பண்பாட்டையும் விடவேண்டும்?

அது சரி, ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி ,கீட்ஸ் முதலிய உலகப் புகழ் பெற்றவர்கள் இருக்கிறார்கள். தமிழில் என்ன இருக்கிறது? என்று சிலர் நினைக்கலாம்.

தமிழ் ஒரு கடல். இன்று நாம் படிக்கத் தொடங்கி 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் எல்லாவற்றையும் படித்து முடிக்க முடியாது. அதில் பெரும்பகுதி ஆங்கில இலக்கியம்  தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவை! தமிழ் பண்பாடோ மற்றவர்கள் முழு அளவு ஆடையின்றி நாகரீகம் இல்லாமல் திரிந்த காலத்தில் இந்தோனேஷியாவரை கொடிகட்டிப் பறந்து இருக்கிறது.

மேலும், எல்லா மரங்களுக்கும் வேர் இருப்பது போல ஒவ்வொருவருக்கும்- ஒவ்வொரு சமுதாயத்துக்கும் – ஒரு வேர் இருக்க வேண்டும். அதற் காகவும் நம் மூலத்தை (மூலம்= வேர்)ப் பிடித்துக் கொண்டு இருக்கவேண்டும்.

சிறு பிள்ளை ஆக இருக்கும்போது விளையாட்டில் கவனம்; இளம் வயதில் வாழ்க்கைத் துணையில் கவனம்; வயதானபோது உடல் நலனில் கவனம்- இப்படி வாழ்நாள் ஓடிவிடுகிறது. இடையே அலுப்பு சலிப்பு தட்டும். அப்போது ஏதாவது ஒரு பொழுது போக்கு தேவைப்படுகிறது அதற்கும் தமிழில் ஆடல், பாடல் என்று நிறைய இருக்கின்றன. பயனுள்ள விஷயங்களை அறிய தமிழில் எல்லாத் துறைகளிலும் கடல் அளவு செய்திகள் இருக்கின்றன. அற்புதங்கள் செய்ய வேண்டுமானாலும் கூட 18 சித்தர்கள் வழிகாட்டுவார்கள்.

பல திகில் திரைப்படங்களில் சங்கேத மொழியில் செய்தி அனுப்பி வில்லனை மடக்குவதை பார்த்திருப்பீர்கள்; நமக்கோ சங்கேத மொழியே தேவை இல்லை. நமக்குள் ரகசியமாக செய்திகளைப் பரிமாறிக்கொள்ள தமிழ் உதவும். அதாவது ஆங்கிலம் போன்ற மொழி புழங்கும் இடங்களில்!

வேலை வாய்ப்புக்கும் தமிழ் உதவும். நேரடியாக இல்லாவிடினும் மறைமுகமாக . இதன் மூலம் கற்கும் கலைகள் நமக்கு பல இடங்களில் சிறப்பான வரவேற்பைத் தருகிறது. சொல்லுவது புரிகிறதா?

தமிழ் இட்டிலி , தோசை, வடை, பொங்கல், சாம்பார், ரசம் பிடிக்காத வெள்ளைக்காரர்கூட இல்லையே. அந்தக் காலத்திலேயே தமிழ் மிளகு ரசமும், கட்டுமரமும் ஆக்ஸ்போர்ட் அகராதியில் நுழைந்துவிட்டதே!.

ஒவ்வொரு ஆண்டும் நான் லண்டன் பல்கலைக் கழகத்தில், தமிழ் வகுப்பில்,  எல்லோரையும்  அறிமுகம் செய்துகொள்ளும்படி சொல்லிவிட்டு ஏன் தமிழ் படிக்க வந்தீர்கள்? என்றும் சொல்லும்படி கேட்பேன். பெரும்பாலோர் தமிழ் பேசும் ஒருவரைக் கல்யாணம் கட்டியதால் தமிழ் தேவைப்பட்டது என்பர். இன்னும் சிலர் மாமியார், மாமனார் பேசுவது (திட்டுவது??) புரியவில்லை என்பதற்காக வந்தேன் என்பர். இன்னும் சிலர் தமிழ் சினிமா, கலை மூலம் ஈர்க்கப்பட்டதாகச் சொல்லுவார்கள். பலர் தமிழ் நாடு, இலங்கை தொடர்பான ஆராய்ச்சியில் உதவும் என்று  எண்ணி வந்ததாக இயம்புவர். ஒரு வெள்ளைக்காரர் துணிச்சலாக ஆண்டு தோறும் இட்லி, தோசை சாப்பிடுவதற்காகவே தமிழ் நாட்டுக்குச் செல்வதாகவும் ஹோட்டல்காரக்ளுடன் நன்கு உரையாட தமிழ் படிப்பதாகவும் சொன்னார். அது பொய்யல்ல என்பது அவர் பல ஆண்டுகளுக்கு என்னிடம் தமிழ் படித்ததிலிருந்து தெரிந்தது. இட்டிலி தோசைக்கு அவ்வளவு மஹிமை!

குறைந்தது தமிழ் திரைப்படங்களில் வரும் நகைச் சுவை காட்சிகளையும் பாடல்களையும் ரசிப்பதற்காகவாது தமிழ் கற்க வேண்டும்.

ஆயினும் பழம் பெருமை மட்டும் பேசுவதோடு நில்லாமல் ஆங்கிலம், இந்தி போல பிறமொழிச் சொற்களையும், நமது மொழியின் அடிப்படை கெடாத அளவுக்கு, ஏற்க வேண்டும். ‘தமிழ் வாழ்க’ என்று உரத்த குரலில் தமிழர்கள் கோஷமிடுவது காதில் கேட்கிறது. உலகிலுள்ள புகழ் பெற்ற பிற மொழி இலக்கியங்களோ, அறிவியல் விஷயங்களோ இன்னும் தமிழில் கால்வாசி கூட மொழிபெயர்க்கப்படவில்லை. வெளிநாட்டில் வாழும் நமக்குக் கிடைக்கும் வசதிகள் தமிழ் மொழி வழங்கும் இடங்களில் கிடைப்பதில்லை. அந்த மொழிபெயர்ப்புப் பணியையும் நம்மில் சிலர் செய்யலாம். அதனால்தான் பாரதியும் ‘சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்’ என்றார் . அத்தோடு ‘பிறநாட்டு சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்றார் மேலும் ஒருபடி போய் ‘இறவாத புது நூல்கள் இயற்றல் வேண்டும்’ என்றார் .இந்த மூன்று பணிகளில் முடிந்ததை நாம் செய்யலாமே.

முயற்சி திருவினை ஆக்கும்!

–subham–

tags –வெளிநாட்டில், தமிழ், கற்பது, தேவை, 

நாராயண தீர்த்தர்! (Post No.10095)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,095

Date uploaded in London – 15 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 13-9-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம்.

நாராயண தீர்த்தர்!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

நாம ஏவ சித்தாந்தா – நாமமே சித்தாந்தம் என்ற நாம மகிமை சித்தாந்தத்தை வலியுறுத்தி ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள், ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராள், திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் உள்ளிட்ட பல மகான்கள், அந்த சித்தாந்தத்தைப் பரப்பிய காலம் நாம சங்கீர்த்தனத்தின் பொற்காலம்.

இந்தப் பொற்காலத்தில் அவதரித்தவர் ஸ்ரீ நாராயண தீர்த்தர்.

காஷ்மீரிலிருந்து கன்யா குமரி வரை அனைவரும் இசைத்து ஆனந்தப்படும் கிருஷ்ண லீலா தரங்கிணி நூலை இயற்றியவர் ஸ்ரீ நாராயண தீர்த்தரே. இந்த நூலை, அனைவரும் பரவசப்படும் விதமாக நாட்டியமாக வடித்து நூற்றுக் கணக்கான நடனக் கலைஞர்கள் நாட்டியம் ஆடி அனைவரையும் பக்திப் பரவசப்படுத்துகின்றனர். அதே போல நூற்றுக் கணக்கான இசை மேதைகளும் தங்கள் குரல் வளத்தால் கிருஷ்ண லீலைகளை செவி குளிரப் பாடுகின்றனர்.

தெலுங்கு பிராமண வகுப்பைச் சேர்ந்த தல்ல வஜ்ஜல என்ற குடும்பம் ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் பானக நரசிம்மர் உறைந்து அருள் பாலிக்கும் மங்களகிரியின் அருகில் அமைந்துள்ள காஜா என்ற கிராமத்தில் வசித்து வந்தது. அங்கு நீலகண்ட சாஸ்திரி, பார்வதி அம்மாள் தம்பதியருக்கு மகனாக அவதரித்தார் ஸ்ரீ நாராயண தீர்த்தர். இவர்  பிறந்த ஆண்டு 1665. ஜீவ சமாதி எய்திய ஆண்டு 1745.

இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் கோவிந்த சாஸ்திரி. இவர் இளம் வயதிலேயே ஸ்ரீ கிருஷ்ணர் மீது எல்லையற்ற பக்தி கொண்டிருந்தார். சம்ஸ்கிருதத்தில் வல்லமை பெற்ற இவருக்கு இசை கை வந்த கலையாயிற்று, சாஸ்திரங்களிம் மிகுந்த தேர்ச்சி பெற்றார். அந்தக் கால நடைமுறைப்படி இவருக்கு இளம் வயதிலேயே திருமணமும் நடை பெற்றது.

ஒரு சமயம் தனது மாமனார் வீட்டிற்குச் செல்வதற்காகப் புறப்பட்ட இவர் கிருஷ்ணா நதியைத் தாண்ட வேண்டியிருந்தது. அப்போது ஆற்றின் வெள்ளப் பெருக்குச் சுழலில் மாட்டிக் கொண்டார். வெள்ளத்தில் மூழ்கி உயிர் போய் விடும் என்ற தருணத்தில் இவர் ஆபத் சந்யாசம் மேற்கொண்டார். அந்த மந்திரங்களைச் சொல்லி சந்யாசம் மேற்கொள்ளவே, வெள்ளச் சுழலிலிருந்து மீண்டார், சந்யாசி ஆனார். தனது மனைவியை அவர் பார்த்த போது, அவரது தெய்வீக முகத்தைக் கண்டு மனைவி நடந்ததை உணர்ந்து கொண்டார். தெய்வீக லீலையை உணர்ந்து கொண்ட குடும்பத்தினர் அவரது சந்யாச தர்மத்தை ஏற்றுக் கொண்டனர். தீர்த்தர், இந்திர சரஸ்வதி, பூரி ஆகிய பெயர்களை சந்யாச நாமத்தில் கொண்டவர்கள் அத்வைத சம்பிரதாயத்தைப் பின்பற்றும் ஆசாரியர்கள் ஆவர்.  காசிக்கு யாத்திரை மேற்கொண்ட கோவிந்தர், அங்கு சிவராமாநந்த தீர்த்தர் என்பவரைக் குருவாகக் கொண்டார். அவர் முறையாக அவருக்கு சந்யாச ஆஸ்ரம தீக்ஷையைச் செய்து வைக்க அவர் நாராயண தீர்த்தர் என்ற நாமத்தை மேற்கொண்டார். அந்தப் பெயராலேயே உலகெங்கும் அறியப்பட்டார்.

 ஒரு சமயம் அவருக்குத் தீராத வயிற்று வலி ஏற்பட்டது. அவரது கனவிலே வெங்கடேசப் பெருமாள் அவரது குரு வடிவில் தோன்றி அவரை பூபதிராஜபுரம் என்ற ஊருக்குச் செல்லுமாறும் அங்கு வயிற்றுவலி தீர்ந்து விடும் என்று கூறி அருள் பாலித்தார். கால்நடையாக யாத்திரையை மேற்கொண்ட அவர் திருவையாறு வந்து பஞ்சநதேஸ்வரரையும் தர்மஸம்வர்த்தனியையும்  தரிசித்தார். அங்கு ஒரு வில்வ விருக்ஷத்தின் கீழ் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் நடு காவேரியை அடைந்தார். அங்கு வலி இன்னும் தீவிரமானது. அவரது கனவில் மீண்டும் தோன்றிய வெங்கடேச பெருமாள் அவரிடம், காலையில் அவர்  பார்க்கும் முதல் பொருளைப் பின் தொடர்ந்து செல்லுமாறு கூறி அருள் பாலித்தார். காலையில் விழித்த நாராயணதீர்த்தர் கண்களில் ஒரு பன்றி தென்பட்டது. அவர் பன்றியைப் பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தார். பன்றியானது வேகமாக ஓட ஆரம்பித்தது. அது நேராக பூபதிராஜபுரத்தை அடைந்து அங்குள்ள வெங்கடேசர் ஆலயத்தினுள் புகுந்தது, மறைந்தது.  வராக அவதாரம் எடுத்த மஹாவிஷ்ணுவே தன்னை ஆட்கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்த நாராயண தீர்த்தர், விழிகளில் நீர் பெருக தியானத்தில் அமர்ந்தார். நெடுநாள் அவரை வாட்டிய வயிற்றுவலி ஒரு கணத்தில் அங்கே தீர்ந்தது. அவரது தியானத்தில் கிருஷ்ண தரிசனமும் ஏராளமான திவ்ய காட்சிகளும் தென்படலாயின. பூபதிராஜபுரம் இப்படி பன்றி என்ற வராகத்தின் வருகையால் வரகூர் என்ற பெயரைப் பெற்றது.

அவர் கண்ட தெய்வீகக் காட்சிகள் மளமளவென்று அவரது நா வழியாக பொங்கிப் பிரவாகமெடுத்து வரலாயின. கிருஷ்ணலீலா தரங்கிணி என்ற அபூர்வ நூல் பிறந்தது. இந்த நூல் ஒரு இசை நூலாகவும் நாட்டியத்திற்கு ஏற்புடையதான ஒரு நாட்டிய நூலாகவும் அமைந்தது. இதை நாராயண தீர்த்தர் தாமே வடிவமைத்து அங்கு அரங்கேற்றியதாக வரலாறு கூறுகிறது. ஒவ்வொரு கீதத்தையும் வெங்கடேசருக்கு அர்ப்பணிக்க அவர் தலை அசைத்து அதை அங்கீகரிக்கவே அனைவரும் பெரு மகிழ்ச்சிக்குள்ளாயினர். இன்னொரு கூற்றின் படி ஆஞ்சநேயர் எவற்றை எல்லாம் அங்கீகரித்தாரோ அவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை அவரே நிராகரித்து விட்டதாகவும் ஒரு செய்தி உண்டு.

கிருஷ்ண லீலா தரங்கிணி ஆன்மீகக் கருத்துகளைத் தன்னுள் கொண்ட ஒரு அற்புதமான காவியமாகும். உபநிடதக் கருத்துக்களை ஆங்காங்கே அவர் பதித்துள்ளார். தனது குருவின் பெயரான சிவானந்த தீர்த்தரை அவர் எட்டாவது தரங்கத்தில் அமையும் தேவதேவம் என்ற கீர்த்தனையின் இறுதியில் குறிப்பிடுகிறார். வழக்கமாக கடைசி சரணங்களில் தனது  முத்திரையை சிவராம தீர்த்தர் என்றும் நாராயண தீர்த்தர் என்றும் வரநாராயண தீர்த்தர் என்றும் தீரநாராயண தீர்த்தர் என்றும் அவர் பதித்துள்ளார்.

கணபதி துதியைத் தொடர்ந்து தேவகி-வசுதேவர் கல்யாணத்தில் ஆரம்பித்து க்ருஷ்ணர் ருக்மிணியை மணம் முடிப்பது வரை இந்த காவியத்தில் பல காட்சிகளை நாம் காணலாம். சம்ஸ்கிருதத்தில் உயரிய பாண்டித்தியம் கொண்டிருப்பதால் அவரது இந்த காவியத்தில் காவிய ரஸனையைக் காணலாம். சிலேடை உள்ளிட்ட பல அணிகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

ஜய ஜய ஸ்வாமிம் ஜய ஜய என்று கம்பீரமாக ஆரம்பிக்கிறது இந்த நூல்.

கிருஷ்ண லீலை என்னும் அலைகள் என்பதே கிருஷ்ண லீலா தரங்கிணி என்பதற்கான பொருளாகும். ஸ்ரீமத் பாகவதத்தின் தசம ஸ்கந்தத்தின் சுருக்கமே இது.  அதில் ஒன்று முதல் 58ஆம் அத்தியாயம் முடிய உள்ள பகுதிகளை இதில் காணலாம். இதில் வசனமும் உண்டு, கவிதையும் உண்டு, நாடகமும் உண்டு. ஆக இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றையும் தரும் அபூர்வ நூல் இது. இதில் அமைந்துள்ள ஜதிகளும் சொல்கட்டுகளும், இவரே அதில் லயித்து ஆடிப்பாடி நடித்ததை அடிப்படையாகக் கொண்டு இருப்பதைச் சுட்டிக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஜெயதேவர் இயற்றிய கீதகோவிந்தத்தின் பால் பெரிதும் ஈடுபாடு கொண்டவர் நாராயணதீர்த்தர். கீத கோவிந்தத்தில் 12 சர்க்கங்கள் அமைந்துள்ளது போலவே கிருஷ்ணலீலா தரங்கிணியிலும் 12 தரங்கங்கள் அமைந்துள்ளன. யக்ஷகான அடிப்படையில் அமைந்துள்ள இந்த காவிய நூலானது  145 கீர்த்தனைகளையும், 267 செய்யுள்களையும் 30 கத்யங்கள் – அதாவது வசன பகுதிகளையும், 30 தருக்களையும் அதாவது விவரண கீதங்களையும் கொண்டுள்ளது.  குறைந்தபக்ஷம் 41 ராகங்களை இதில் காணலாம். த்ரிபுட, ஆதி, ரூபக, சாபு, சம்பா, மத்ய, விளம்ப, ஏகா, அட உள்ளிட்ட தாளங்களை நாராயண தீர்த்தர் பயன்படுத்தினார். சம்ஸ்க்ருத யாப்பிலக்கணத்தில் வல்லுநர் என்பதால்  அரிய விருத்த வகைகளான அனுஷ்டுப், ஆர்யா, இந்த்ரவஜ்ரா, புஜங்கப்ரயாதம், சார்தூலவிக்ரிதம், வசந்த திலகா, ப்ரித்வி உள்ளிட்ட பல சந்த வகைகளை – விருத்த வகைகளை அவர் பயன்படுத்தியுள்ளார். இந்த சந்த வகை பற்றி யூடியூபில் டிகாராம் கௌசிக் உள்ளிட்ட அறிஞர்கள் விளக்கியுள்ளதைப் பார்த்து மகிழலாம். https://m.youtube.com/watch?v=FTJ617guES4

கடினமான பதங்களைப் பயன்படுத்துவதை தீர்த்தர் தவிர்த்தார். அவருடைய கத்யங்கள் மிக அழகானவை.

கிருஷ்ணலீலா தரங்கிணி மட்டுமல்லாமல் பாரிஜாத அபஹர்ணம், ஹரிபக்தி சுண்டர்னவம் உள்ளிட்ட பதினைந்து நூல்களையும் அவர் படைத்துள்ளார்.

நெடுங்காலம் வரகூரில் இருந்த நாராயண தீர்த்தர் பின்னர் திருப்பூந்துருத்தியை அடைந்தார். அங்கு ஒரு மாமரத்தின் அடியில் அமர்ந்து மாசி மாத சுக்ல பக்ஷ அஷ்டமி திதியில், கார்த்திகை நக்ஷத்திரத்தில் ஜீவ சமாதி எய்தினார்.

நாராயணதீர்த்தரால் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் உள்ளிட்ட மகான்கள் உத்வேகம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்தது. வரகூரில் இன்றளவும் ஜன்மாஷ்டமி அன்று கிருஷ்ணலீலாதரங்கிணியில் உள்ள கீர்த்தனைகள் இசைக்கப்படுகின்றன. அதே போல அவர் ஜீவ சமாதி எய்திய திருப்பூந்துருத்தியில் தியாகராஜ ஆராதனை போலவே அவரது ஆராதனையும் வெகு விமரிசையாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அவரது கிருஷ்ணலீலாதரங்கிணியை இணையதளத்திலிருந்து சம்ஸ்கிருதம், தெலுங்கு ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தரவிரக்கம் – டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

பஜனை சம்பிரதாயத்தில் ஈடுபாடு கொண்டோர் யூடியூபில் கிருஷ்ண லீலா தரங்கிணியின் ஆனந்த அலைகளைச் செவி மடுத்து இன்புறலாம்.

அவரது க்ஷேமம் குரு கோபால என்ற கீதத்தின் வரிகளை மட்டும் இங்கு பார்ப்போம்:

Raga:  Mohanam

Tala:    
Triputi

Pallavi (refrain):

क्षेमं कुरु गोपाल   संततं मम  க்ஷேமம் குரு கோபால சந்ததம் மம

क्षेमं कुरु गोपाल||                க்ஷேமம் குரு கோபால |

Anupallavi

कामं तवपाद-कमल भ्रमरी भवतु      காமம் தவபாத-கமல ப்ரமரி பவது

श्रीमन् मम मानसं मधुसूदन      (क्षेमं….)   ஸ்ரீமன் மம மானஸம் மதுசூதன |

Charanam

अक्षीणकरुणानिधे आनन्दघन प्रक्षीण-दोषवारिधे அக்ஷீணகருணாநிதே ஆனந்ததன ப்ரக்ஷீன-தோஷ வாரிதே

शिक्षितासुरगण रक्षितनिजजन  சிக்ஷிதாசுரகண ரக்ஷிதநிஜஜன

कुक्षिस्थितानेक-कोटि-लोक-पालन  (क्षेमं….)  குக்ஷிஸ்திதானேக கோடி லோக பாலன

प्रह्लाद-भय-विदूर परमयोगि-पावन भुवनाधार   ப்ரஹ்லாத பய விதூர பரமயோகி-பாவன புவனாதார

मोहरहित-बोध-मौनि-मानस-हंस    மோஹரஹித – போத-மௌனி மானஸ ஹம்ஸ

सारस जित-वैरि-संघात महोदार      சாரஸ ஜித வைரி சந்தாத மஹோதர
(क्षेमं….)

अजित-विजय-गोपाल अनन्तलील रञ्जित-पदकमल அஜித விஜய கோபால அனந்தலீல ரஞ்சித பதகமல

विजय-द्वारकापुरी-विमल कमला-लोल விஜய த்வாரகாபுரி விமல கமலா லோல

निजनारायणतीर्थ निर्मलानन्द-बाल  (क्षेमं….) நிஜநாராயணதீர்த நிர்மலானனந்த பால (க்ஷேமம்)

நாம சங்கீர்த்தனத்தின் மஹிமையை உணர்த்தி கிருஷ்ண லீலைகளை கிருஷ்ணலீலா தரங்கிணியாக வடித்துத் தந்த நாராயணதீர்த்தரின் பெருமை சூரிய சந்திரர் உள்ளவரை நிலைத்திருக்கும். அவர் காவியம் கிருஷ்ணரின் புகழ் உள்ளவரை ஊழி ஊழி காலம் நிலைத்திருக்கும். நன்றி, வணக்கம்.

*** Tags-   நாராயண தீர்த்தர் , க்ஷேமம் குரு கோபால, கிருஷ்ணலீலா தரங்கிணி

Tamil and English Words 2700 Years Ago- Part 63 (Post No.10094)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,094

Date uploaded in London – 14 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON 9TH  DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ஆங்கில சொற்கள் – பகுதி -63

Tamil and English Words 2700 Years Ago- Part 63

பாணினி சூத்திர எண்கள்:–

6-2-59

Raja is used by Panini.

Raja becomes

A -rasa -n in Tamil. No Tamil word can begin with R or L in Tamil.

Raja becomes Royal, Regent, Regnal and Regal in English; we have seen the word before.

ராஜா – அரசன் – ராயல் – ரீகல்- ரீஜெண்ட்  ரெக் னல்

Xxxxx

6-2-60

Prathyenas

Next to succeed, ward

Also meant Prathnithi = representative

Prath = repre. ,,,th,,,,nithi

We can see the sound echoing Prathyenas

பிரத்யேனஸ் = வாரிசு = பிரதிநிதி = ரெ -ப்ர-சென்ட்

Xxxx

6-2-62

Grama silpini says Panini

கிராம= காவ்ன் = காம் = ஹாம் ; பர்மிங்ஹாம்; பக்கிங்ஹாம் ; ஈஸ்ட் ஹேம் /ஹாம் (லண்டனின் கிழக்குப் பகுதி)

Grama becomes ham or gham in Europe

We have Birmingham, Nottingham, East Ham in London. Only a few examples from 100s of Ham or Gham towns.

Silpini means worker

Silp becomes Sculpt . Later applied only to wooden or stone sculpture workers.

Silp/ini becomes Sirp/i in Tamil.

கிராம சில்பினி ; சில்பினி = தொழிலாளி; பிற்காலத்தில் சிற்பி

Xxxx

6-2-79

Upamaanam = simile

Uvamai is used by the Tamils throughout their ancient literature.

Xxx

6-2-88

Panini used maalaa for Garland

Tamils use the word until this day.

உபமானம் = உவமை (ப=வ)

தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியம் முழுதும் உளது

Xxxx

6-2-95

Kumaaryaam vayasi

VRuddha Kumari — Aged unmarried woman

Jarat kumaari = Aging woman who is not Married

V / Age = vayas, = Ayas = aayul.

வயஸ்  என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் எப்படியெல்லாம் உருமாறுகிறது என்று பாருங்கள் :-

வயஸ் = வயது ; மனஸ் = மனது என்பது போல .

வயஜ் = ஆங்கிலத்தில் வ+ ஏஜ்

Age ஏஜ் = ஆய்ஸ் = ஆயுள் age

Xxxx

6-2-98

Sabhaa used by Panini here means Assembly

Until this day Indians use this word in Lok Sabha, Rajya Sabha.

In Tamil Nadu it becomes Avai

Sa , as initial letter , is banned in Tamil .

சபா – ரிக் வேதத்திலும் உளது.

ஸபா = அவை  ; ச என்ற எழுத்துக்கு தொல்காப்பியர் தடை போட்டுவிட்டதால் அவை எல்லாம் அ

என்னும் எழுத்தை முதலில் பெறும் ; சபை = அவை (ப=வ)

சட்ட மேலவை, லோக்சபா, ராஜ்யசபை

Xxx

6-2-120

Veeera is used by Panini

Veera = hero

வீர , சூர என்ற இரண்டும் வேதத்தில் உளது

இது ஆங்கிலம் முதலிய ஐரோப்பிய மொழிகளில் ஹீரோ ஆகிறது .

எஸ்  என்றா எழுத்து ஹ – வாக மாறும் என்பது ஆம் அறிந்ததே

சிந்து = ஹிந்து ; சூர = ஹீரோ = வீர ??

Xxxx

6-2-25

Bahu = vehu,

பஹு = வெகு (ப=வ)

!xxxx

6-2-180

Antha = End

அந்தம் = முடிவு;

ஆதியோடு அந்தமாக ; வேதாந்தம்= வேத+ அந்தம்

Xxx

6-2-190

Purushan =Person

புருஷன் = பெர்சன் = பேர் ; எத்தனை பேர் ?= how many  persons?

Xxx

6-2-197

Tri pada = Tri pod

த்ரி பாத = முக்காலி

XXX

TO BE CONTINUED……..

tags- tamil in Panini-63

பிரெஞ்சு நாவல் ஆசிரியர் அலெக்ஸாண்டர் தூமா(ஸ்) -Post No.10093

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,093

Date uploaded in London – 14 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிரெஞ்சு நாவல் ஆசிரியர் அலெக்ஸாண்டர் தூமா(ஸ்)

அலெக்ஸாண்டர் தூமா(ஸ் ) ALEXANDRE DUMAS 19-ம் நூற்றாண்டின் பிரபல பிரெஞ்சு நாடக ஆசிரியர், நாவல் ஆசிரியர். அவர் எழுதிய இரண்டு துணிகர நாவல்களைப் பலரும் படித்திருப்பார்கள் – த்ரீ மஸ்கிடீர்ஸ் THREE MUSKETEERS /மூன்று துப்பாக்கி வீரர்கள் ; THE COUNT OF MONTE CRISTO தி கவுன்ட் ஆப் மா ண்டி கிறிஸ்டோ

தூமா,  பிரான்ஸ் நாட்டில் கிராப்புறத்தில் பிறந்தார். தந்தை ஒரு ராணுவ அதிகாரி; தாய் சத்திரத்தை நடத்தும் ஒரு பெண்மணி.அவருடைய தந்தை நெப்போலியன் போனபர்ட் படையில் பணிபுரிந்தார். சண்டையில் உயிரிழந்தார். இதனால் குடும்பம் வறுமையில் வாடியது. பிழைப்பு தேடி தூமா , தலைநகர் பாரிசுக்கு வந்தார். அப்போதுதான் எழுதத் துவங்கினார்.

27 வயதில் மூன்றாவது ஹென்றி Henry III என்ற வரலாற்று நாடகத்தை எழுதி மேடை ஏற்றினார். அப்போது அவருக்குப் பெயரும் புகழும் கிடைத்தது. அந்த உத்வேகத்தில் தொடர்ந்து, இடைவிடாது புதிய கதைகள், நாடகங்கள், நாவல்களை எழுதி வந்தார். எப்போதாவது ஒய்வு வேண்டுமென்றால் கிராப்புறத்திற்குச் சென்று ஓய்வு எடுப்பார்.

பிரான்ஸ் நாட்டின் முழு வரலாற்றையும் எழுத வேண்டும் எனது அவருடைய ஆசை. அதன் காரணமாக எழுந்ததுதான் முன்னர் குறிப்பிட்ட இரண்டு நாவல்கள் .

நாவல் , கதைகள் எழுதுவதில் எவ்வளவு வேகம் இருந்ததோ அவ்வளவு வேகம் செலவு செய்வதிலும் இருந்தது. இதனால் எவ்வளவு பணம் வந்தாலும் கடன்காரனானாகி விடுவார். மீண்டும் உழைத்து கடனை அடைப்பார்.

தூமாவுக்கும் அவருடைய காதலிக்கும் பிறந்த மகனின் பெயரும் அலெக்சாண்டர்தான் . அவரும் தந்தை போலவே நாவல் எழுதி புகழ் பெற்றார். அவர் எழுதிய கமீய் Camille என்ற சோகமான காதல்கதை அவரைப் புகழ் பெற வைத்தது. அது 1852-ம் ஆண்டிலேயே பிரான்சில் நடித்து காண்பிக்கப்பட்டது.

தூமா பிறந்த தேதி – ஜூலை 24, 1802

இறந்த தேதி – டிசம்பர் 5, 1870

வாழ்ந்த ஆண்டுகள் – 68

எழுதிய நாவல்கள், நாடகங்கள் –

1829 – HENRY III

1830- CHRISTINE

1831 – NAPOLEON BONAPARTE

1831 – ANTONY

1832 – THE TOWER OF NESLE

1836- KEAN

1844 – THE THREE MUSKETEERS

1844 – THE COUNT OF MONTE CRISTO

1845 – TWENTY YEARS AFTER

1850- THE BLACK TULIP

***

எனது பிளாக்கில் 2015 அக்டோபர் 9ம் தேதி எழுதியது இதோ:-

அலெக்ஸாண்டர் துமா என்பவர் பிரபல பிரெஞ்சு நாவலாசிரியர். மார்செய் நகரத்தின் பிரபல டாக்டர் ஜிஸ்டால், அவரை விருந்துக்கு அழைத்தார். விருந்து எல்லாம் சுகமாக முடிந்தவுடன் தன்னுடைய ஆல்பத்தைக் காட்டினார் டாக்டர்.

“ஓய், நாவலாசிரியரே! நீரோ எழுத்துச் சித்தர்! எழுத்துத் தச்சர்! எங்கே பார்க்கலாம், உமது கை வல்லமையை? என் ஆல்பத்தில் ஏதாவது எழுதுங்கள் பார்க்கலாம்”– என்றார் டாக்டர் ஜிஸ்டால்.

நாவலாசிரியர் துமா, பேனாவை எடுத்தார், எழுதினார்:

“டாக்டர் ஜிஸ்டால் ஊருக்கு வந்தார்

நோய்களை ஒழிக்க மிகவும் முயன்றார்;

மருத்துவ மனைகளுக்கு வேலையே இல்லை!!

—இதை எழுதிக் கொண்டிருக்கையில் டாக்டர் குறுக்கிட்டார். “எழுத்தாளரே உமது புத்தியைக்காட்டிவிட்டீரே! உங்கள் வர்க்கமே சோறு கண்ட இடம் சொர்க்கம் என்னுமினம். நான் விருந்து கொடுத்தவுடன், என்னை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து தள்ளுகிறீர்களே!”

நாவாலசிரியர் சொன்னார்; “அட! ஏன் அவசரப்படுகிறீர்கள்; நான் இன்னும் எழுதியே முடிக்கவில்லையே”- என்று சொல்லிக் கொண்டே கடைசி வரியை எழுதி முத்தாய்ப்பு (முத்தான ஆப்பு) வைத்தார்:

“ஊரின் இடு(சுடு)காடு பெரிதாகிவிட்டது!”

முழுக்கவிதையையும் படியுங்கள்:—-

“டாக்டர் ஜிஸ்டால் ஊருக்கு வந்தார்

நோய்களை ஒழிக்க மிகவும் முயன்றார்;

மருத்துவ மனைகளுக்கு வேலையே இல்லை!!

“ஊரின் இடு(சுடு)காடு பெரிதாகிவிட்டது!”

–subham—

Tags –  பிரெஞ்சு, நாவல், ஆசிரியர், அலெக்ஸாண்டர் தூமா(ஸ்), Alexandre Dumas

பார் போற்றும் மகாகவி பாரதியார்! – 3 (Post No.10092)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,092

Date uploaded in London – 14 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பாரெங்கும் பாரதியின் சிந்தனை! ஞான மயம் சார்பில் பாரதி நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சி சிறப்புற நடத்தப்பட்ட போது 11-9-2021 சனிக் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பான ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். (இந்த உரை மூன்று பகுதிகளாக வெளியிடப்படுகிறது.)

பார் போற்றும் மகாகவி பாரதியார்! – 3

பாரதியார் பற்றிய சிறந்த நூல்கள், கட்டுரைகள், வானொலி உரைகள் ஆகியவற்றைப் பற்றிய அறிமுகம் தர வேண்டுமென்று ஒரு எண்ணம் உதிக்கவே 60 புத்தகங்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளை எழுதினேன்.22-8-2015இல் (கட்டுரை எண் 2091) சகுந்தலா பாரதி எழுதிய என் தந்தை என்ற நூலைப் பற்றி முதலில் எழுதி 27-8-2019இல் (கட்டுரை எண் 6939) 60வது புத்தகமாக சேக்கிழார் அடிப்பொடி திரு T.N.ராமச்சந்திரன் எழுதிய வழி வழி பாரதி பற்றி எழுதினேன். நேரம் கருதி அந்த அறுபது புத்தகங்களில் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.                                                 என் தந்தை

பாரதியாரின் புதல்வி சகுந்தலா பாரதி எழுதிய அருமையான நூல் இது. 1974ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளி வந்த நூல்.

பாரதி நினைவுகள்

பாரதி பற்றிய இந்த நூலை எழுதியவர் யதுகிரி அம்மாள்.  1954 செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.                                                                  

என் கணவர் :-

இது புத்தகம் அல்ல. வானொலி உரை. மகாகவி பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மா பாரதி 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் இந்தத் தலைப்பில் ஒரு உரையாற்றினார்.

நான் கண்ட நால்வர்

 1959ஆம் ஆண்டு பிரபஞ்ச ஜோதி பிரசுராலயத்தால் வெளியிடப்பட்ட இந்த அருமையான நூலை எழுதியவர் தமிழ் உலகம் நன்கு அறிந்த அறிஞர் வெ.சாமிநாத சர்மா (1895-1978) ஆவார்.

பாரதி புதையல் மூன்றாம் தொகுதி

மிக மிக அருமையான இந்த நூலை பாரதி பக்தர் ரா.அ.பத்மநாபன் தொகுத்து 1975ஆம் ஆண்டு பாரதி தினத்தன்று வெளியிட்டிருக்கிறார்.

பாரதி புதையில் மூன்று தொகுதிகளையும் ஒன்றாய் இணைத்து பாரதி புதையல் பெருந்திரட்டு என்ற நூலாய் அவர் வெளியிட்டார். அதில் 204ஆம் பக்கத்தில் வீர்யம் என்ற கட்டுரையின் முன் குறிப்பாக எனது தந்தையார் பெயரையும் அவர் குறிப்பிடுகிறார். எனது தந்தையார் தினமணி வெ.சந்தானம் 1940களில் ஜயபாரதி பத்திரிகையில் வேலை பார்த்து வந்த போது பாரதியாரின் கவிதைகளைத் தேடிப் பிடித்து வெளியிடுவது வழக்கம். அவரை அன்புடன் இப்போது நினைவு கூர்கிறேன்.

பாரதியார் பிறந்த நாள்

அரவிந்த ஆசிரமம் அமுதன்

இது ஒரு புத்தகம் அல்ல. வானொலி உரை. அரவிந்த ஆசிரமத்தைச் சேர்ந்த அமுதன் அவர்களை புதுவை வானொலி நிலையத்தார் அழைத்து மஹாகவி பாரதியார் பற்றி உரை ஒன்றை நிகழ்த்துமாறு வேண்டினார்கள்.

பாரதியார் பிறந்த தினத்தன்று 11-12-1968ஆம் தேதி இது ஒலிபரப்பப்பட்டது.

மஹாகவி பாரதியார் – வ.ரா. எழுதிய நூல்

Subramania Bharati  –  Patriot and Poet

அருமையான இந்த ஆங்கில நூலை எழுதியவர் பி.மஹாதேவன். 1957இல் வெளி வந்தது இது.

கண்ணன் என் கவி

பாரதி இயலில் பாரதி ஆர்வலர்கள் படிக்க வேண்டிய முக்கியமான ஒரு புத்தகம் கு.ப.ராஜகோபாலன், பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) ஆகியோர் எழுதிய ‘கண்ணன் என் கவி’ என்ற புத்தகம். இந்த நூலை மணிக்கொடி எழுத்தாளர்கள் எழுதியது ஒரு சிறப்பு அம்சம் என்றால் இதில் பாரதியார் உலக மகாகவியாக நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது இன்னொரு சிறப்பு அம்சம்.

பாரதியார் கவி நயம் – 31 அறிஞர்கள் எழுதிய 34 கட்டுரைகளின் தொகுப்பு – தொகுப்பாளர் ரா.அ..பத்மநாபன்

பாரதி நான் கண்டதும் கேட்டதும்

பாரதியைச் சந்திக்கும் பேறு பெற்ற பி.ஸ்ரீ எழுதிய நூல் இது.

பாரதி பிறந்தார் – கல்கி எழுதிய நூல்

தினமணி சுடரில் வெளியான பல கட்டுரைத் தொகுப்புகள்

பாரதியை ஒட்டிய நினைவுகள் – பெ.நா.அப்புஸ்வாமி

தினமணி சுடரில் 1980,1981,1982 வெளி வந்த கட்டுரைகள்

இப்படி மகாகவியைப் பற்றி நூற்றுக் கணக்கில் நூல்கள் மற்றும்  கட்டுரைகள், துணுக்குகள் அவ்வப்பொழுது ஏராளமான பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன.

மகாகவி ஒரு மாபெரும் கடல். அந்தக் கடலில் மூழ்கி முத்துக்களையும் பவழங்களையும் அரிய பொருள்களையும் எடுத்துக் கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஒதுக்கி பாரதியைக் கற்போர் தேசபக்தியில் சிறந்து விளங்குவர்; தெய்வ பக்தியில் சிறந்து விளங்குவர்; மொழிப் பற்றில் சிறந்து விளங்குவர். வாழ்க்கையை வாழ்வாங்கு வாழும் வாழ்வியலில் சிறந்து விளங்குவர்.

பாரதி 100!

மஹாகவி பாரதி அமராரான நாள் செப்டம்பர் 11, 1921 ஆம் ஆண்டு அவர் மறைந்து 100 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.அவரது சிறப்பியல்புகள் எத்தனையோ. அவற்றில் 100ஐ இங்கு காண்போம். அவருக்கு நமது சிரம் தாழ்ந்த அஞ்சலியைச் செலுத்துவோம். தேச பக்தியிலும் தெய்வ பக்தியிலும் சிறந்துயர்வோம்.

1. சிறந்த சம்ஸ்கிருத விற்பன்னர்

2. பல்மொழி அறிந்தவர்

3. பள்ளி ஆசிரியர்

4. சிறந்த பத்திரிகாசிரியர்.

5. சிறந்த பதிப்பாளர்

6. கார்ட்டூனை அறிமுகப்படுத்தியவர்

7.சிறந்த கவிஞர்

8. சிறந்த கணவர்

9. சிறந்த தகப்பன்

10. சிறந்த கதாசிரியர்

11. சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்.

12. சிறந்த புதுக் கவிதை இயற்றிய புதுமையாளர்

13.சிறந்த சொற்பொழிவாளர்

14. சிறந்த மேலை இலக்கிய விற்பன்னர்.

15. மஹாத்மாவை இனம் கண்டவர், அவரைச் சந்தித்து அவரது இயக்கத்திற்கும் ஆசி கூறினார்.

16. திலகரைப் போற்றியவர்

17. தேசபக்தர்களைப் போற்றியவர்

18.வ.உ.சிக்கு நெருக்கமானவர்

19.நிவேதிதாவைக் குருவாகக் கொண்டவர்

20. அரவிந்தருடன் நெருங்கிப் பழகியவர்.

21. தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தியவர்

22.சிறந்த இசை விற்பன்னர்

23. சிறந்த பாடகர்

24. தேவார திவ்ய பிரபந்த விற்பன்னர்

24. சங்க இலக்கிய விற்பன்னர்

25. கம்பனில் ஈடுபாடு கொண்டவர்

26. வேதம் புகழ்ந்தவர்

27.ரஷிய புரட்சியை வரவேற்றவர்.

28.பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து பாடியவர்

29.பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள் படும் பாட்டைக் கண்டு வருந்தியவர்

30. உலக நிகழ்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்தவர்

31. தீர்க்கதரிசி

32. வெள்ளையரை விரட்ட குரல் கொடுத்தவர்

33. ஜாதிகள் இல்லையென்றவர்

34. ஆதி திராவிடரான கனகலிங்கம் என்பவருக்கு பூணூல் போட்டு புரட்சி செய்தவர்

35. வானியல் நிபுணர்

36. தேசீய ஒற்றுமை போதித்தவர்

37. பெண் விடுதலை கேட்டவர்

38. சிறந்த மொழிபெயர்ப்பாளர்

39. காங்கிரஸ் மஹாசபையின் வரலாற்றை எழுதிய வரலாற்று ஆசிரியர்

40. புதிய தமிழ்நடையை உருவாக்கியவர்

41. பலரால் பாராட்டப் பெற்றவர் .பிரான்ஸ் நாட்டு அறிஞர் பாரதியாரது பாடலை மொழிபெயர்த்தார்.                                               42. தமிழறிஞர் உ.வே.சாமிநாதையரைப் பாராட்டியவர்

43.காங்கிரஸ் கூட்டங்களில் கலந்து கொண்ட செயல்வீரர்

44. பகைமை பாராட்டாதவர்

45. ராஜதந்திர நோக்குடையவர்

46. அஞ்சாநெஞ்சர்; பிரிட்டிஷ் அடக்குமுறைக்குப் பயப்படாதவர்.                 47. தபஸ்வி – மந்திரச் சொல் வேண்டித் தவம் புரிந்தவர்.

48. கொடையாளி – செல்வந்தர் இல்லை என்றாலும் தனக்குக் கிடைத்ததை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டவர்.

49. வந்தேமாதரம் மந்திரத்தைப் பரப்பியவர்

50. படிப்பாளி

51. விருந்தினரை உபசரிப்பவர்

52. புதிய ஆத்திசூடி பாடி காலத்திற்கேற்றபடி புதிய நெறி கண்டவர்

53. வீதி தோறும் இரண்டொரு பள்ளி என்ற லட்சியத்தை முன் வைத்த சிறந்த கல்வியாளர்

54. விஞ்ஞான ஆர்வலர்

55. சக்தி உபாசகர்

56. கண்ணபிரான் பக்தியில் திளைத்தவர்

57. கற்பனையின் சிகரத்தில் ஏறி பல நல்ல கனவு கண்டவர்

58. நடைமுறை வேதாந்தி

59. மகாபாரதத்தின்  முக்கிய கட்டத்தை விடுதலையை மனதில் எண்ணி பாஞ்சாலி சபதம் காவியம் இயற்றியவர்.

60. வேதாந்தமாக விரித்துரைக்க ஒரு குயில்பாட்டு கண்டவர்

61. நடுநிலையாளர் சிறந்த நடுநிலை தலையங்கங்களையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.

62. சிறந்த ஹிந்து

63. பல இடங்களுக்கும் பயணம் செய்து வாழ்க்கையின் பல அம்சங்களையும் அலசிய பயணி

64. சிறந்த சித்தர்

65. நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரைப் போட்டிக்கு அழைக்க நினைத்தவர்.

66. தன் சுயசரிதையைக் கவிதை வடிவில் யாத்தவர்.

67. சர்வ மதம் சமரஸம் கண்டவர்

68. அனைத்துக் கலைகளையும் ரசிக்கும் சிறந்த ரசிகர்.

69. இயற்கை ஆர்வலர்

70.நேரம் பயனுள்ளதாகக் கழிய விரும்பியவர்.

71. கட்டுரைகளில் சரளமான நையாண்டி நடையைக் கையாண்ட நையாண்டி வல்லுநர்

72. மதமாற்றம் கண்டு பொங்கியவர். தனது அருமை நண்பர் சுரேந்திர நாத் ஆர்யா மதம் மாறியது கண்டு வருந்தி நொந்து கண்ணீர் சிந்தினார்.

73. அழகிய கையெழுத்தைக் கொண்டவர்

74. நன்கு உடை அணிபவர்

75. நண்பர்களை அரவணைத்தவர் – சுமார் 35க்கும் மேலான சீடர்களைப் புதுவையில் கொண்டிருந்தார்.

76. புதிய பாரதம் அமைக்க எண்ணியவர்

77. வெளிதேச வாசம் வெறுத்தவர்

புதுவை வெள்ளைக்காரர் வசம் ஆகும் என்ற ஒரு நிலை வந்த போது பிரான்ஸில் குடியேறலாமா என்ற பேச்சு எழுந்தது. ஆனால் பாரதியார் அப்படி பிரான்ஸுக்குச் செல்ல விரும்பவில்லை. வெளிதேச வாசத்தை அவர் வெறுத்தார். சிறந்த சுதேசி.

78. மாதாமணி வாசகம் வெளியிட்டவர்

79. ஆங்கில பத்திரிகாசிரியர்

தமிழ் பத்திரிகை ஆசிரியர் என்பதோடு பால பாரதம் என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கும் ஆசிரியராக ஆனார்.

80.தெய்வ அருள் பெற்றவர்

‘மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள் மனோன்மணி என் மாசக்தி வையத்தேவி’ என எழுதினார். அனைத்தும் சக்தி அருளினாலேயே நடக்கிறது என்று நம்பினார். அந்த சக்தியின் அனுக்ரஹத்தையும் பெற்றார்.

81.மரணம் வென்றவர்

காலா என் காலருகே வாடா, உன்னை சற்றே எட்டி மிதிக்கிறேன் என்றவர். சாகா வரம் அருள்வாய் -ராமா என்று பாடியவர்.பார் மீது நான் சாகாதிருப்பேன் என்று அறிவித்தவர். உண்மை தான்! தனது சாகா வரம் பெற்ற பாடல்களினால் இன்றும் வாழ்கிறார். என்றும் வாழ்வார்.

82. சகல உயிர்களையும் நேசித்தவர்

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று முழங்கியவர்.

83.வ.வே.சு. ஐயரால் பெரிதும் போற்றப்பட்டவர் சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்! ஆஹா, இதற்கு அக்ஷர லக்ஷம் கொடுக்கலாமே என்றார் அவர்.

84.விவேகானந்தரின் பக்தர்

85.ரமணரை தரிசித்த கவிஞர்

திருவண்ணாமலை சென்ற போது பகவான் ரமணரை தரிசித்தார்.

86.நாடக ஆசிரியர்

87. தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்த நினைத்தவர்

88. பிரெஞ்சு தேசீய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்தவர்.

பிரெஞ்சு தேசிய கீதமான லா மார்ஸ்லே என்ற கீதத்தை   “ அன்னை நன்னாட்டின் மக்காள் ஏகுவம் மன்னு புகழ் நாள் இதுவே“ என்று தமிழில் மொழிபெயர்த்தார்.

ஆக வந்தேமாதரம் என்ற பாரதத்தின் தேசீய கீதத்தையும் பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதத்தையும் தமிழில் தந்ததால் இரு தேசங்களின் தேசீய கீதங்களையும் தமிழாக்கிய பெருமையைப் பெறுகிறார்.

89. பாரதி பட்டத்தை பதினோரு வயதிலேயே பெற்றவர்.

இவரை மட்டம் தட்ட நினைத்த காந்தி மத நாதர் தந்த ஈற்றடியான, ‘பாரதி சின்னப் பயல்’ என்பதை ‘காந்திமதி நாதனைப் பார்; அதி சின்னப் பயல்’ என எழுதி அனைவரையும் இள வயதிலேயே  வியக்க வைத்தவர். இவரது கவிதா திறமையைக் கண்ட அறிஞர்கள் இவருக்கு பதினோரு வயதிலேயே – 1893ஆம் ஆண்டிலேயே – இவருக்கு பாரதி பட்டம் அளித்தனர்.

90. புதிய கவிதா பாரம்பரியத்தை உருவாக்கியவர்

91 பழையதையும் புதியதையும் இணைக்கும் பாலமாக இருந்தவர்

92. உலக அறிஞர்களின் தத்துவங்களைப் பாராட்டியவர்

லாவோட்சு, விட்மன், புத்தர் என உலக அறிஞர்கள் மற்றும் மகான்களின் தத்துவங்களை ஆங்காங்கே கட்டுரையில் தந்தவர். அரவிந்தர், தாகூர், காந்திஜி உள்ளிட்டோரின் சிறப்பான கருத்துக்களையும் தமிழில் தந்தவர்.

93. புராணங்களைப் போற்றியவர்!

94. ஆங்கில கவிதை, கட்டுரை, நூல் எழுதியவர்

ஆங்கிலக் கவிதைகளை எழுதியுள்ளார். தனது கும்மிப் பாடலைத் தானே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். The Fox with the golden Tail என்ற ஆங்கில நூலை வெளியிட்டுள்ளார்.

95. சிறை சென்ற தியாகி

1918 நவம்பர் 20ஆம் தேதி புதுவையிலிருந்து குதிரை வண்டியில் குடும்பத்துடன் புறப்பட்ட பாரதியார் பிரெஞ்சு எல்லையைக் கடந்தவுடன் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டார். கடலூர் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நவம்பர் 20 முதல் டிசம்பர் 14 முடிய சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

96. ஏராளமான அதிசய அனுபவங்களைப் பெற்றவர்

வாழ்க்கையில் நம்ப முடியாத அதீத உளவியல் அனுபவங்களையும் அதிசய அனுபவங்களையும் பெற்றவர். கோவிந்தசாமி புகழ் என்ற கவிதையில். “ஒரு நாள் இறந்த எந்தை தன்னுருவம் காட்டினான், பின்னர் என்னைத் தரணிமிசை பெற்றவளின் வடிவம் உற்றான்’ என்று கூறி இறந்த தந்தையையும் தாயையும் கோவிந்த சாமி காட்டத் தான் பார்த்ததைக் கூறுகிறார். திருவனந்தபுரம் சென்ற போது மிருகக் காட்சிச் சாலையில் காவலாளி தடுத்த போதும் ஒரு சிங்கத்தின் அருகில் சென்று அதைத் தொட்டு, ‘அன்பு கொண்டோரை நீங்கள் ஒன்றும் செய்ய மாட்டீர்கள் என்பதை கர்ஜனை மூலம் தெரிவியுங்கள்’ என்று சொல்ல சிங்கம் கர்ஜித்தது. இப்படி ஏராளமான அனுபவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

97.  சிறந்த பொன்மொழிகளையும் புது சூத்திரங்களையும் தந்தவர்.

98.கீதையின் பால் பற்று கொண்டவர். அதற்கு உரை எழுதியவர்.  பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்; பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான் என்று கீதையை  இரண்டே வரிகளில் சித்தரித்தவர்.

99. நல்ல புத்தகத்திற்கு முன்னுரை தந்தவர்.

100. சிறந்த மனிதர்

மன்னுக்கு இதம் செய்பவர் மனிதர். அதாவது உலகிற்கு இதம் செய்பவர் என்ற அர்த்தத்திற்கு இலக்கணமாக வாழ்ந்த சிறந்த  வியக்க வைக்கும் மனிதர் மகாகவி பாரதியார்.  இறுதியாக, இதோ எனது அஞ்சலி:-

பாரதிரப் பாடிய பாரதியைப் பணிமின்

பாரதி பாரதியே தான் என்ற எனது அஞ்சலியை பாரதிக்குச் சமர்ப்பிக்கிறேன்.

பாரதியாரின் புகழுக்கு முடிவில்லை. அவரது சிறப்பியல்புகளை 100 என்ற எண்ணுக்குள் கட்டுப்படுத்த முடியாது. இந்த எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவர் அவர். பாரதியார் திரு நாமம் வாழ்க. தேச பக்தியும் தெய்வ பக்தியும் வெல்க! வந்தேமாதரம்!! பாரத் மாதா கீ ஜெய்!!! இந்த நல் வாய்ப்பை எனக்குத் தந்த திரு சந்தானம் சுவாமிநாதன் அவர்களுக்கும் சிவ ஸ்ரீ கல்யாண்ஜி அவர்களுக்கும், ஞானமயம் குழுவினருக்கும் செவி மடுத்த அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைக் கூறி அமைகின்றேன்.

நன்றி. வணக்கம்.

tags- பாரதியார்! – 3

LONDON CALLING GNANAMAYAM 13 -09- 2021 (Post No.10091)

Mr Yogeswaran, Germany
Mridangam player Mr Arvinda Mukunda kumar

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,091

Date uploaded in London – 13 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

13-9-2021 MONDAY PROGRAMME as broadcast

WHERE – FACEBOOK.COM/GNANAMAYAM

WHEN – 2 PM LONDON TIME; 6-30 PM INDIAN TIME

IF U HAVE OUR MONDAY ZOOM LINK, PLEASE USE IT.

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -7  MTS

PRAYER –  Mr Yogeswaran

BHARATI CONCERT BY MR YOGESWARAN, GERMANY

(accompanied on Mridangam by Sri Aravind Mukunda Kumar) – 30 minutes

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT  NARAYANA THEERTHAR – 15 mts

Song  BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

DR N KANNAN’S TALK from Chennai—ON BHARATI 15 MTS

DR RAJE SRINIVASAN, SINGAPORE

Because of our Bharati Memorial lectures it would be extended more than our usual time of one hour.

Songs sung by singers from Dubai, Malaysia, Sri Lanka, India and London.

Dr Raje Srinivasan, Singapore

SUBHAM-

TAGS broadcast1392021

LONDON CALLING THAMIL MUZAKKAM 12 -09- 2021 (Post No.10090)

KAUSHIKA AND GAUTHAM

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,090

Date uploaded in London – 13 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

12-9-2021 SUNDAY PROGRAMME as broadcast

WHERE – FACEBOOK.COM/GNANAMAYAM

WHEN – 2 PM LONDON TIME; 6-30 PM INDIAN TIME

IF U HAVE OUR SUNDAY ZOOM LINK, PLEASE USE IT.

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer – Mrs Nithya Sowmy

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON  Ganesh Shrine in DHANDEESWARAR TEMPLE, CHENNAI– 10 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND GROUP–  10 mts

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS

NITHYA SOWMY

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY BRAHANNAYAKI SATHYANARAYANAN

–25 MINUTES

Bharatiyar songs BY MRS UMA PRASAD, DUBAI, MR.BALAJI ,LONDON,

XXXX

SPECIAL PROGRAMME -MAHA KAVI BHARATI’S 100th MEMORIAL ANNIVERSARY

TALKS BY DR TENKASI GANESAN -15 MTS

TALK BY DR DURAIMUTHU SUBRAHMANIAM, MALAYSIA

Talk by Mrs Vijayalakshmi Sivasubrahmanian, Chennai

BHARATI SONGS SUNG BY SINGERS IN DUBAI,SINGAPORE, SRILANKA, UK AND INDIA

KARAOKE BHARATI SONG BY MRS NITHYA SOWMY

CHILDREN SONG BY KAUSHIKA AND GAUTHAM (Nithya’s Students)

–subham–

tags – broadcast1292021

டார்ஜான் கதைகளைப் படைத்த அமெரிக்க கதாசிரியர் எட்கர் ரைஸ் பர்ரோஸ் (Post 10089)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,089

Date uploaded in London – 13 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இப்போது ஏராளமான சித்திரப் படைக்கதைகளும் அதில் வரும் கற்பனைக் கதாபாத்திரங்களும் சிறுவர் மற்றும் இளைஞர்களிடையே பிரபலமாகிவிட்டது. SPIDER MAN /ஸ்பைடர் மென், SUPER MAN /சூப்பர்மேன், PHANTOM/ பேண்ட்டம் முதலிய கற்பனை உருவங்களை அறியாதோர் எவருமிலர். அந்த கதாபாத்திரங்களை வைத்து உருவாக்கும் பொம்மைகளும் கோடிக்கணக்கில் விற்பனையாகின்றன. அவற்றைப் பொறித்த ஆடைகளை அணிந்து கொண்டு தங்கள் குழந்தைகள் செய்யும் சாகஸங்களைக் கண்டு, மகிழ்ந்து, பெற்றோர்கள் அவர்களைப் புகைப்படம் எடுக்கின்றனர். ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லோரும் அறிந்த கார்ட்டூன் கதாபாத்திரம் TARZAN டார்ஜான் ஒருவன்தான்.

இந்த டார்ஜான் என்னும் கார்ட்டூன் ஆளை உருவாக்கிய அமெரிக்க விசித்திரக் கதை எழுத்தாளர் EDGAR RICE BURROUGHS எட்கர் ரைஸ் பர்ரோஸ் ஆவார். அவருடைய கதையே சுவையான கதை.

பர்ரோஸ் , அமெரிக்காவில் சிகாகோ நகரில் பிறந்தார். அவருடைய தந்தை ராணுவத்தில் மேஜர் பதவியில் இருந்த பெரிய அதிகாரி. ராணுவத்தில் எவ்வளவு கட்டுப்பா டு உண்டோ அவ்வளவு கட்டுப்பாட்டையும் வீட்டிலும் எதிர்பார்ப்பவர். கட்டு திட்டங்களுக்கு இடையே வளர்ந்த பர்ரோஸ் , சிகாகோவில் (சரியான உச்சரிப்பு ஷிகாகோ) ஹார்வர்ட் பள்ளியில் ரோமானிய ,கிரேக்க வரலாற்றைப் படித்தார். அதில் வரும் வீரர், வீராங்கனைகளை போற்றி மகிழ்ந்தார்.

பள்ளிப்படிப்பு முடித்தவுடன் அவருடைய சகோதரர் வைத்திருந்த மாட்டுப் பண்ணைக்கு (Cattle Ranch) பர்ரோஸ் அனுப்பப்பட்டார். ஆங்கில திரைப்படங்களில் வைல்ட் வெஸ்ட் WILD WEST  படங்களை பார்த்தவர்களுக்குத் தெரியும்; இருவர் பேசிக்கொண்டே இருப்பார்கள். கொஞ்சம் காரசாரமாக வாக்குவாதம் வந்தால் ஒருவர் தன் துப்பாக்கியை உருவி ‘டுமீல்’ என்று சுட்டுவிடுவான். அவ்வளளவு கரடு முரடான வாழ்க்கையுடையது அமெரிக்காவின் மேற்குப்பகுதி மாட்டுப் பண்ணைகள். அவர்களை COWBOSY ‘கவ் பாய்’ என்று அழைப்பர் .அங்கே இரண்டு ஆண்டுகளுக்கு இருந்த பின்னர் புகழ்பெற்ற ராணுவ அகாடமியில் பர்ரோஸ் சேர்ந்தார்.

அங்கே அவரை சரியான சோம்பேறிப்பயல் இவன் என்று சொல்லி பள்ளியிலிருந்து வெளியேற்றி விட்டனர் . பின்னர் மிச்சிகன் மிலிட்டரி அகாடமியில் பயிற்சி பெற்று அமெரிக்க ராணுவத்தில் பர்ரோஸ் சேர்ந்தார். அவரை அப்பாச்சி APACHEES  என்றழைக்கப்படும் அமெரிக்க பழங்குடி மக்களை சுட்டுத்தள்ள அரிசோனா மாநிலத்துக்கு அனுப்பப்பட்டார். பின்னர் சிகாகோவுக்குத் திரும்பிவந்து பேனா , பென்சில் , காகிதம் விற்கும் தொழிலில் இறங்கினார். பின்னர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார்.

36 வயதானபோது அவருக்கு திடீரென்று எழுதத் துவங்கினார். விஞ்ஞான புனைக்கதைகளை SCIENCE FICTION வெளியிடும் ‘ஆல் ஸ்டோரி வீக்லி’ ALL STORY WEEKLY பத்திரிகைக்கு கதைகளை அனுப்பினார்.அப்போது அவர் படைத்த கற்பனைக் கதாபாத்திரம் டார்ஜான் என்னும் காட்டு மக்கள் வீரன் ஆவான். 39 வயதில் முதல் டார்ஜான் புஸ்தகம் வெளியானது.

டார்ஜான் யார் ?

ஒரு ஆங்கிலப் பிரபு தன்னுடைய மகனை  ஆப்பிரிக்காவின் இருண்ட, அடர்ந்த காடுகளில் விட்டுவிட்டு வந்து விடுகிறார். அந்தச் சிறுவனை மனிதக் குரங்குகள் (APES) வளர்க்கின்றன. அவன்தான் டார்ஜான். அவன் தனது சாகசங்களால் காட்டு ராஜா ஆகிவிடுகிறான். குரங்கு போலவே மரத்துக்கு மரம் தாவி சாகசங்களை புரிவான். தீமையை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவான். இப்படி அவர் எழுதிய டார்ஜான்  கதைகள் , நாவல்கள் இரண்டரைக்  கோடி பிரதிகள் விற்பனையாகி அவரைப் புகழ் பெற வைத்தது. அவர் எழுதிய PLANET MARS பிளானட் மார்ஸ் செவ்வாய் கிரக கதைகளும் பெரிதும் வாசிக்கப்பட்டன. பழங்கால கிரேக்கத்தில் வாழ்ந்ததாக கிரேக்க புராணங்கள் கூறும் ஹெர்குலீஸ், யூலிசிஸ் (ஆடிசியஸ்) போன்றவர்களை மனதில் கொண்டு அவர் உருவாக்கிய கற்பனைக் கதாப்பாத்திரம் டார்ஜான். தற்காலத்தில் அவரை மிஞ்சும் ஏராளமான கார்ட்டூன் வீரர்கள் வந்துவிட்டனர்!!

எட்கர் ரைஸ் பர்ரோஸ்

பிறந்த தேதி – செப்டம்பர் 1, 1875

இறந்த தேதி – மார்ச் 19, 1950

வாழ்ந்த ஆண்டுகள் 74

பர்ரோஸ் எழுதிய கதைகள், நாவல்கள் :–

1914- TARZAN OF THE APES

1915 THE RETURN OF TARZAN

1917 – THE SON OF TARZAN

1917 – A PRINCESS OF MARS

1918 – THE GODS OF MARS

1922- AT THE EARTH’S CORE

1924 – THE LAND THAT TIME FORGOT

1928 – TARZAN, LORD OF THE JUNGLE

1939 – CARSON OF VENUS

1946 – ESCAPE ON VENUS.

–SUBHAM–

tags – டார்ஜான்,   அமெரிக்க கதாசிரியர், எட்கர் ரைஸ் பர்ரோஸ், Edgar Rice Burroughs

சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில் (Post No.10088)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,088

Date uploaded in London – –   13 September   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 12-9-2021 அன்று ஒளிபரப்பான உரை!

ஸ்ரீ கருணாம்பிகை சமேத தண்டீஸ்வரர் கோவில், வேத ஸ்ரேணி!

முத்தினை மணியைப் பொன்னை முழுமுதல் பவளம் ஏய்க்கும்   

கொத்தினை வயிரமாலைக் கொழுந்தினை அமரர் சூடும்            

வித்தினை வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற                     

அத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே!

திருநாவுக்கரசர் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது சென்னை மாநகரில் வேளச்சேரி என்று இன்று அறியப்படும் வேதஸ்ரேணியில் உள்ள தண்டீஸ்வரர் ஆலயம் ஆகும். இது கிண்டிக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

மூலவர் திரு நாமம் : ஸ்ரீ தண்டீஸ்வரர்

அம்பிகையின் திரு நாமம் : கருணாம்பிகை    

ஸ்தல விருக்ஷம் : வில்வம்  

மிகப் பழம் பெரும் தலமான இதைப் பற்றிப் புராண வரலாறு ஒன்று உண்டு. திரேதா யுகத்தில்  சோமுகாசுரன் என்ற அசுரன் தனது தவ வலிமையால் தேவர்களை வென்று பிரம்ம லோகம் சென்றான்.  அங்கு பிரம்மாவும் நான்கு வேதங்களும் மட்டுமே வாசம் செய்தனர். சோமுகாசுரன் வருவதை அறிந்த பிரம்மா வேதங்களைப் புத்தக வடிவமாக மாற்றி விட்டு தான் மட்டும் மறைந்திருந்து என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கலானார். பிரம்ம லோகத்தில் யாரும் இல்லாததைக் கண்ட அசுரன் கோபம் கொண்டு வேத புத்தகங்களை எடுத்துக் கொண்டு சமுத்திரத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டான். இதைக் கண்ணுற்ற பிரம்மா ஈஸ்வரனிடம் சென்று இதை முறையிட வேதங்களை மீட்கும் பணியை விஷ்ணுவிடம் ஈஸ்வரன் ஒப்படைத்தார். மஹாவிஷ்ணு மச்சாவதாரம் எடுத்து சோமுகாசுரனை வதம் செய்தார். வேதங்களை மீட்டு அவற்றை பிரம்மாவிடம் ஒப்படைத்தார். வேதங்கள் பிரம்மாவிடம், “ஐயனே! எங்களுக்கு அசுர தோஷம் நீங்க அருள்க” என்று வேண்டின. பிரம்மா, “பூலோகத்தில் தாரக வனம் என்ற இடத்தில் ஸ்வயம்புவாகக் காட்சி அளிக்கும் ஈஸ்வரனை தியானித்து பூஜித்தால் உங்களது அசுர தோஷம் நீங்கும்” என்று கூறி அருள் பாலித்தார்.

வேதங்களும் தாரக வனம் சென்று ஈஸ்வரனை பூஜிக்க ஈஸ்வரன் வேதங்களின் முன் தோன்றி அசுர தோஷத்தை நீக்கி அருளினார். வேதங்கள் ஈஸ்வரனை தியானித்து பூஜித்து வந்த ஸ்தலமே வேத ஸ்ரேணி என்ற பெயரைப் பெற்றது. காலப் போக்கில் இந்தப் பெயர் மருவி இப்போது வேளச்சேரி என்று அழைக்கப்படுகிறது.

அடுத்து இன்னொரு வரலாறும் உண்டு. துவாபர யுகத்தில் மிருகண்டு முனிவருக்குப் புத்திரராக அவதரித்த மார்க்கண்டேய மஹரிஷிக்கு 16 வயது வரை மட்டுமே ஆயுள் உண்டு என்பதை அறிந்த மிருகண்டு முனிவர் மிகவும் வருத்தமுற மார்க்கண்டேயர் தான் திருக்கடையூர் சென்று சிவனை வழிபடப்போவதாகத் தெரிவித்தார். அங்கு சென்று வழிபட சிவன் யமன் தன் பாசக்கயிற்றை வீசும் போது மார்க்கண்டேயர் சிவனைத் தழுவிக் கொண்டார். சிவன் யமனைத் தன் காலால் உதைத்து அவனது தண்டத்தைப் பறித்துக் கொண்டார். தண்டத்தை இழந்த யமன் மிகவும் வருத்தமுற்று கைலாயம் நோக்கிச் செல்லலானான். அவனை இடைமறித்த நாரத மஹரிஷி, “அங்கே செல்ல அவசியமில்லை. இங்கே வேதஸ்ரேணியில் ஸ்வயம்புவாக எழுந்தருளி இருக்கும் சிவபிரானை வழிபட்டால் உமக்குப் பிராயச்சித்தம் கிடைக்கும்” என்று அருளுரை கூறினார். யமனும் அப்படியே இங்கு வழிபட்டான். அவன் ஒரு குளத்தை அமைத்து அதிலிருந்து நீர் எடுத்து சிவபிரானுக்கு மனமுருகப் பிரார்த்திக்க மனம் மிக மகிழ்ந்தார் சிவ பிரான். அவனது தண்டத்தை அவனுக்குத் தந்து அருளி தண்டீஸ்வரர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். யமன் வழிபட்ட தீர்த்தமே யமதீர்த்தம் என்ற பெயரைப் பெற்றது. ஆலயத்திற்கு வெளியே இது அழகுற இன்றும் தெள்ளிய நீருடன் அமைந்துள்ளது.

   கலியுகத்தில் இந்த ஆலயத்தைச் சோழ மன்னர்கள் நன்கு பரிபாலித்து வந்தனர். 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த அப்பைய தீக்ஷிதர் ஆரணிக்கு அடுத்துள்ள அடையபலம் என்ற ஊரில் அவதரித்தார். அவர் பல தலங்களுக்கும் யாத்திரை செய்து வரும் போது வேதஸ்ரேணிக்கு வந்தார். அம்மையின்றி அப்பன் மட்டும் தனியே இருப்பதைக் கண்ட அவர் இங்கேயே தங்கி, அம்மையை பிரதிஷ்டை செய்ய எண்ணி ஒரு யாகம் செய்தார்; ஒரு தீர்த்தத்தையும் உருவாக்கினார். அது அப்பைய தீர்த்தம் என்ற பெயரைப் பெற்றது. இந்தக் குளமானது இன்று ஐஐடி (IIT) காம்பஸில் உள்ளது. இது அப்ளாங்குளம் என்று பெயர் மருவி இப்போது கூறப்படுகிறது.

அப்பைய தீக்ஷிதருக்கு அம்பிகையின் கருணைக் கடாக்ஷம் கிடைத்ததால் அம்பிகை கருணாம்பிகை என்ற பெயரைப் பெற்றாள். இப்போது இந்த ஆலயம் ஸ்ரீ கருணாம்பிகை சமேத தண்டீஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. காஞ்சி மஹாபெரியவாள் சென்னையில் சிறிது காலம் இருந்த போது திருவான்மியூருக்கு வந்து தரிசித்து பின்னர் காலணி இல்லாமல் இங்கு வந்து தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டார். இங்கு லிங்கம் ஸ்வயம்புவாக அதாவது மாணிக்கக் கல் வடிவில் தோன்றி அருள் பாலிக்கிறார். மகர சங்கராந்தி நன்னாளில் சூரிய ஒளி அதிகாலையில் லிங்கத்தின் மீது பட்டு வழிபடும் படி ஆலய அமைப்பு அமைக்கப்பட்டது. இன்று கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் இந்த ஒளி விழுவதைத் தடுக்கின்றன.

இங்கு தெற்கில் அமைந்துள்ள ராஜ கோபுரம் வழியாக உள்ளே சென்று இறைவனை பக்தர்கள் இப்போது தரிசிக்கின்றனர்.  கிழக்கு கோபுரம் தனியே வாயிலுடன் அமைந்துள்ளது. தண்டீஸ்வரர் கிழக்கு நோக்கி இருந்து அருள் பாலிக்கிறார். அம்பாளோ ராஜகோபுரத்தில் நுழையும் போதே நேரடியாகக் காட்சி தந்து அருள் பாலிக்கிறாள். கர்பக்ருஹத்தை அடுத்து உள்ளது இடைக்கழி மண்டபம். அதனை அடுத்து முன் மண்டபமும் இருக்க அங்கு துவாரபாலகர்களைத் தரிசிக்கலாம். முன் மண்டபத்தில் ஈஸ்வரனுக்கு வலப்பக்கம் விநாயகரும் இடப்பக்கம் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானும் காட்சி அளிக்கின்றனர்.

தமிழ் நாட்டில் ஸ்ரீ சக்ரம் அமைந்துள்ள ஆலயங்களில் இந்த ஆலயமும் ஒன்றாகும். அம்பிகையின் கர்பக்ருஹத்தில் அம்பிகையின் பாதத்தில் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வெளி பிரகாரத்தில் வில்வ விருக்ஷத்தின் அடியில் வைத்தீஸ்வரர், அதற்கு அப்பால் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர், நவகிரகங்கள் உள்ளிட்ட சந்நிதிகள் உள்ளன.

இந்த ஆலயத்தில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. அவை சோழ மன்னர்கள் இந்த ஆலயத்தை எப்படி கண்ணே போல் காத்து வந்தனர் என்பதைத் தெரிவிக்கிறது. இங்கு தம்பதியினரின் அறுபதாம் கல்யாணம் சிறப்பாகக் கொண்டாடப்படுவது ஒரு குறிப்பிடத்தகுந்த விஷயமாகும்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கருணாம்பிகையும் தண்டீஸ்வரரும்  அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.   

                      திருஞானசம்பந்தரின் அருள் வாக்கு இது:                                                            

இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்                                      

நயம் வந்து ஓத வல்லார் தமை நண்ணினால்                       

  நியமம் தான் நினைவார்க்கு இனியான் நெற்றி                              

நயனன் நாமம் நமச்சிவாயவே       

 நன்றி வணக்கம்!              

***

tags–சென்னை, வேளச்சேரி ,தண்டீஸ்வரர் கோவில் ,